PDA

View Full Version : எங்கள் பிணக் குவியல்....



இன்பக்கவி
21-04-2009, 10:29 AM
இன்று செய்தி கண்டோம்...
செய்வது அறியவில்லை...
ஒரே நாளில்
1000 எங்கும் நிகழாது
இந்த கொடுமை.....

பாதுகாப்பு வளையம்
என்ற பேரில்
படுகுழியில்
எம் மக்கள்.....

இந்தியாவின்
சதி தொடங்கிற்று...
எல்லா நாடுகளின்
மௌனம் தொடர்கிறது....

எல்லாம் இழந்துவிட்டோம்...
இனி இல்லை
இழப்பதற்கு....

துக்கம்
தொண்டையை
அடைகிறது....

குமுறுகிறது
உள்ளம்
கண்டு கொள்ள
யாரும் இல்லை...

இன்று மக்களை
சிறை பிடித்து இருப்பதாக
தகவல்
இனி அவர்கள்
நிலை என்ன???

இந்த கொடுமைக்கு
எல்லாம் என்ன தான் விடை????

இரக்கம் அற்று
போன ஈனர்களே..
உங்கள் இதயம்அற்று
போனதோ......

எம் மக்கள்
உயிர்
எல்லாம் என்ன
உனக்கு
கிள்லு கீரையா???
இப்படி
கொத்து கொத்தய்
பறித்து போடுகிறாய்...

எம் மக்களின் மிரட்சியான
முகங்களை பார்த்து
எங்கள் மனம்
கதறுகிறது....

என்ன பாவம் செய்தோம்
பிஞ்சு குழந்தைகளின்
முகம் பார்த்தும்
உனக்கு மனம்
இறங்க வில்லையா?????

இன்னுமா
அடங்கவில்லை
உன் கொலைவெறி....

எதற்காக
இன்னும் அலைகிறாய்...
என் மக்கள் உயிர் குடித்தது
போதும்
நிறுத்து போரை.....

எங்கள் பிணக் குவியல்
மீது நடந்து
என்ன சாதிக்க போகிறாய்.....

கடைசி காட்ட போர்
என்று சொல்லி
எங்கள் இதயங்களை
நிம்மதி இழக்க
செய்து விட்டாய்....

கடைசி நேரம்
என்றோ
என் மனம் துடிக்கிறது....

இதயம்
உள்ளவர்கள்
எவரும் இல்லை...

கண்ணீர் வடிக்கிறோம்
என் நம்பிக்கையும்
இன்று
முழுவதும்
சூனியமாகிவிட்டது......

இறைவா...
உனக்கும் கண் இல்லையா??
ஓ??????
நீதான் கல் ஆயிற்றே?????
உன்னிடம்
சொல்லியும் பலன் இல்லை......

கவிதா123

praveen
21-04-2009, 10:39 AM
நீங்கள் உங்கள் மனக்குமுறலை கவிதை இயற்ற தெரிந்ததினால் கவிதையாக வடித்து விட்டீர்கள், நானெல்லாம் என்ன எழுதுவது?.

நாங்கள் தமிழ்நாட்டில் என்ன செய்வதென்று தெரியாமல் நடப்பதையெல்லாம் மெளன சாட்சியாக பார்த்து கொண்டிருக்கிறோம். குழந்தை குட்டி இருப்பதால், இப்படி "சட்டத்திற்கு பயந்து இலங்கை பிரச்சினையில் அரசை எதிர்க்காமல் உயிர் வாழ தான் வேண்டுமா" என்று திரைப்பட நடிகர் சத்யராஜ் சொன்னதே தான் சராசரி இந்தியத்தமிழன் நிலை.

இன்னும் என்னென்ன துயரம் அடுத்தடுத்து வரப்போகிறதோ என்ற பயம் தான் கவ்வுகிறது.

இன்பா
21-04-2009, 11:00 AM
தொலைகாட்சியில் காண்பித்தால் மக்கள் கொதித்திடுவார் போராட்டம் செய்வார்கள் ஆகவே தயாநிதி மாறா, இனி நீ ஈழத்தமிழ் பிரச்சனையை உன் தொலைக் காட்சியில் காண்பிக்காதே..! உனக்கு மந்திய சென்னையை தருகிறேன்.

நான் இப்படியேல்லாம் அறிக்கைகளும் சின்ன போராட்டங்களும் செய்யாவிடில் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள் சோனியா ஆகவே என் அறிக்கைகளையும் போராட்டங்களையும் கண்டுகொள்ளாதே...! நான் கேட்கும் துறைகளை கொடுத்தால் மட்டும் போதும்.

மக்களே எனக்கு வாக்களிப்பீர்களே ஆனால் 22" ப்ளாஸ்மா தொலைக்காட்சிப் பெட்டியும் என் தொலைக் காட்சியிலே வண்ண வண்ண நடங்களை காண்பிக்க செய்கிறேன். இலவசமாக என்னென்ன கொடுக்க முடியுமோ அனைத்தும் கொடுக்கிறேன். என்னை என் குடும்பத்தை சீறும் சிறப்புமாக வைத்துக் கொள்வீராக.

Tamilmagal
21-04-2009, 11:19 AM
இன்னும் என்னென்ன துயரம் அடுத்தடுத்து வரப்போகிறதோ என்ற பயம் தான் கவ்வுகிறது.

இப்போழுது இலங்கையில் தமிழர்கள் படும் துயரத்தைவிட இன்னும் துயரம் தமிழர்களுக்கு வரமுடியுமா???

சிவா.ஜி
21-04-2009, 12:27 PM
உள்ளம் குமுறுவதை தடுக்க முடியவில்லை. கொத்துக்கொத்தாய் செத்துவிழும் தொப்புள்கொடி உறவுகளைப் பார்த்து வேதனையோடு ஆத்திரம் எழுகிறது.

இந்த நிலை என்றுதான் மாறுமோ....சிங்களன் என்றுதான் மனிதனாவானோ....

அன்புரசிகன்
21-04-2009, 04:45 PM
இனியும் அழ கண்ணீர் இல்லை...
http://www.tamilkathir.com/uploads/images/videos/PUTHUVAI_ANNAA_INNI_ALA_KANNEERILLAI_TO_TAMILNAADU.flv
நன்றி - புதுவை - தமிழ்க்கதிர் இணையம்

இதுக்கு மேல் எதுவும் சொல்ல எனக்கு திரணி இல்லை... தினம் செய்திகளை படிக்கும் போது நெஞ்சுக்குள் ஒரு பாறை இருப்பது போல் ஒரு உணர்வு...

அமரன்
21-04-2009, 04:58 PM
பாறையும் நீர் வடிக்கும்
பாவியர் செயல் கண்டு.

பாவையும் அனல் கக்கும்
பாவை உன் கவி உண்டு.

என்னுடன் வாருங்கள்..
என்னால் உங்களுக்கு
இன்பத்தை தரமுடியாது.
பசியைப் போக்கமுடியாது
பட்டினையையும் சோகங்களையும்
மட்டுமே தரமுடியும்..
ஆனாலும்
என்னுடன் வாருங்கள்..
உங்களுக்குக் கிடைக்காத அனைத்தும்
உங்கள் சந்ததிக்குக் கிடைக்கும்.

உலகப் பிரசித்தமான மாவீரன் சொன்னது ~ அதில்
உலகளவு நம்பிக்கை உள்ளது..

போர்கள் ஓயலாம் ~ ஈழத்
தமிழனும் மனிதனாய் மதிக்கப்படும் வரை
போராட்டம் ஓயாது..

போராட்டத்தின்
வடிவம் மாறுபடலாம்...இப்போது
தூற்றப் படுபவர்கள்.. அப்போது
போற்றப்படும்படியாக கை கொடுக்கலாம்.

நம்பிக்கை வையுங்கள்..
விசைப்பலகையில்
நம்பிக் கை வையுங்கள்..

அன்புரசிகன்
21-04-2009, 06:51 PM
போராட்டத்தின்
வடிவம் மாறுபடலாம்...இப்போது
தூற்றப் படுபவர்கள்.. அப்போது
போற்றப்படும்படியாக கை கொடுக்கலாம்.

நம்பிக்கை இல்லையென்றால் கவலைகள் வந்திடாது....
இன்னும் உள்ளது சிறு கீற்றாய்...
நம்புவதை தவிர வேறு எந்த திரணி எம்மிடம்???

ஒவ்வொருநாளும் ஏதாவது ஒரு வெற்றிச்செய்தியாவது வரும் என்று எண்ணி எண்ணி பலகாலமாய் ஏமாந்துவிட்டேன். இன்னும் நம்பிக்கையுடன்..........................................................................................

விகடன்
21-04-2009, 09:08 PM
நம் தேச செய்திகளை படிக்கவும் முடியவில்லை. படிக்காமலிருக்கவும் முடியவில்லை.
நெஞ்சத்தில் குமுறல்களும் பல கேள்விகளும் மட்டுமே எஞ்சியிருக்கின்றது.

கா.ரமேஷ்
22-04-2009, 05:42 AM
பிணம் திண்ணும் கழுகுகள் என்ன செய்யும்.... கழுகை ஊட்டி வளர்த்து உலாவ விட்ட நாய்களுக்கு சரியான பாடம் புகட்டுவது ஒன்றே தீர்வு....
இன்னொரு அதிர்ச்சியான உண்மை இரண்டாம் உலக போருக்கு பின்னால் அதிகமாக உயிபலியான மக்கள் தமிழின மக்கள்... யாரும் தமிழருக்கு உதவ வர போவதில்லை(மாறாக அரசியல் செய்வார்கள்) கடவுளை தவிற..!

அமரன்
22-04-2009, 06:45 AM
நம்பிக்கை இல்லையென்றால் கவலைகள் வந்திடாது....
இன்னும் உள்ளது சிறு கீற்றாய்...
நம்புவதை தவிர வேறு எந்த திரணி எம்மிடம்???

ஒவ்வொருநாளும் ஏதாவது ஒரு வெற்றிச்செய்தியாவது வரும் என்று எண்ணி எண்ணி பலகாலமாய் ஏமாந்துவிட்டேன். இன்னும் நம்பிக்கையுடன்..........................................................................................

அன்பு!
கடல்புலி, வான்புலி, நிலம் மீட்பு..
இந்த வளர்ச்சிகளில் மகிழ்ச்சி அடையலாம்.
இவை கூட அடிக்கற்களே அன்றி வெற்றிச் செய்தி அல்ல.

இயக்கத்தை மையபடுத்தி கதைக்கப்பட்ட ஈழப்பிரச்சினை மக்களை மையப்படுத்தி கதைக்கும் அளவுக்கு மாற்றம் கண்டுள்ளது. அதாவது போராட்டத்தின் வடிவம் மாறியுள்ளது. திசை திருப்பல்களுக்கு வளைந்து கொடாது தொடரல் அவசியம்.

மீண்டும் புலிகளை மையப்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்படக் கூடாது எனில் புலிகள் முழுமையாக அழிக்கப்படல் வேண்டும். (சாத்தியம்மில்லை எனில்) புலிகள் வனவாசம் புரிய வேண்டும். மிக முக்கியமாக சிங்களப் பௌத்தவாதிகளை சரியான முறையில் அடக்க வேண்டும்.

ஐம்பது ஆண்டுகாலப் பிரச்சினை இப்போது சர்வதேசமயப்படுத்தப்பட்டது. அத்துடன் ஈழத்தில் தமிழர் அரசியல் அந்தஸ்து, உரிமை போன்றவற்றிற்கு எதிர்க் கருத்தாளர்கள் சொற்பளவே. அதனால் வெற்றி பற்றிய நம்பிக்கை எனக்கு அதிகமாகி உள்ளது.

வசீகரன்
22-04-2009, 07:38 AM
தொலைகாட்சியில் காண்பித்தால் மக்கள் கொதித்திடுவார் போராட்டம் செய்வார்கள் ஆகவே தயாநிதி மாறா, இனி நீ ஈழத்தமிழ் பிரச்சனையை உன் தொலைக் காட்சியில் காண்பிக்காதே..! உனக்கு மந்திய சென்னையை தருகிறேன்.

மக்களே எனக்கு வாக்களிப்பீர்களே ஆனால் 22" ப்ளாஸ்மா தொலைக்காட்சிப் பெட்டியும் என் தொலைக் காட்சியிலே வண்ண வண்ண நடங்களை காண்பிக்க செய்கிறேன். இலவசமாக என்னென்ன கொடுக்க முடியுமோ அனைத்தும் கொடுக்கிறேன். என்னை என் குடும்பத்தை சீறும் சிறப்புமாக வைத்துக் கொள்வீராக.

ஐயோ கடவுளே..... மக்கள் தமிழ்நாட்டு மக்கள்மட்டும்தான் தமிழர்களா.... தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தமிழர்கள் கிடையாதா....... ஏன் இந்த நேரத்தில் கலைஞர் ஜெயலலிதா வைகோ ராமதாஸ் தங்கபாலு
எல்லோரும் சேர்ந்து தேர்தலை புறக்கணிக்ககூடாதா......
அரசியல்வாதிகளே உங்கள் கால்களில் விழுந்து கேட்கிறோம்...... எல்லோரும் இந்த நேரத்தில் உண்மையாக நாம் இனத்தை காக்க ஒன்று பட்டு தேர்தல் புறக்கணிப்பு அறிவியுங்கள்..... அப்போதாவது சோனியா மண்மோகன் உள்பட தேர்தல் பிஸியில் உள்ள அனைத்து கோமகன்களும் தானாக தமிழ்நாட்டை நோக்கி
வருவார்களா பார்ப்போம்......
தயவுசெய்து இத்தனை நாள் உங்களை அரியணையில்
உட்கார வைத்து அழகுபார்த்த தமிழ்மக்கள் கண்ணீர்மல்க கேட்கிறோம். எம் மக்களை காப்பாற்றுங்கள்....... சாவின் விளிம்பில் நிற்க்கும் மக்களுக்காக இதை செய்வீர்களா........

அன்புரசிகன்
22-04-2009, 07:44 AM
ஐம்பது ஆண்டுகாலப் பிரச்சினை இப்போது சர்வதேசமயப்படுத்தப்பட்டது. அத்துடன் ஈழத்தில் தமிழர் அரசியல் அந்தஸ்து, உரிமை போன்றவற்றிற்கு எதிர்க் கருத்தாளர்கள் சொற்பளவே. அதனால் வெற்றி பற்றிய நம்பிக்கை எனக்கு அதிகமாகி உள்ளது.
நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை. களங்கள் மாறலாம். வெற்றிவாகை சூடலாம் என்பது சரி...அதை கொண்டாட நம் உறவுகள் சொந்த நாட்டில் இல்லையே............... புலத்தில் கொண்டாடி என்ன பயன்...???

பிண வாடையில் தான் வெற்றியை கொண்டாடவேண்டுமே..............
இன்னும் சில காலங்களில் இனமறியாத தொற்றுநோய்களுக்கு வட மாகாணமே உட்படலாம்.... அவ்வளவு உடலங்கள் கணக்கின்றி வீதியில் கிடப்பதாக அண்மையில் வெளியில் வந்தவர்கள் சொல்கிறார்கள்....

கடையே இல்லை. திறப்புவிழா பற்றி எங்கு விளம்பரப்படுத்துவது??? யாருக்கு இனிப்பு வழங்குவது...? இது தான் எனது ஆதங்கம்...

ஊகங்கள் வெளியிடலாம்... தற்போதய நிலையை நான் சொல்கிறேன்...காட்டிக்கொடுப்புக்களும் துரோகங்களும் தமிழனுக்கு கை வந்த கலை. அது உள்ளவரை நமக்கு உய்வு சற்று தொலைவில் தான்....

அமரன்
22-04-2009, 07:52 AM
அன்பு!
மாறிய களத்தில் இருக்கும் வீரர்களால் நிச்சயம் நீங்கள் சுட்டியவற்றையும் மாற்ற முடியும். என்னமோ ஒரு சக்தி இதை ஆழமாக நம்ப வைக்குது. அது விளிம்பு நிலையில் தோன்றிய ஏதோ ஒன்றாக இருக்கலாம். நிலத்திலும் மக்கள் மிஞ்சுவர். புலத்திலிருந்தும் மக்கள் நிலம் வருவர். சுவிஸ், பிரான்சு, இலண்டன் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ளவர்களின் வீசா அத்தைகயது. உங்கள் கடைசி வரிகளில் பொதிந்து கிடக்கும் உண்மை கவலையும் கவனமும் தர வல்லது.