PDA

View Full Version : வன்னிப்பகுதியில் ஒரு நாளில் 1000 மக்கள் கொல்லப்பட்டனர்.நதி
20-04-2009, 12:50 PM
எது நடக்கப் போகிறது என்று உலகத் தமிழினம் அஞ்சியதோ. அதை நடக்க விடாது தடுங்கள் என்று உலக சமூகத்திடம் கெஞ்சியதோ. அது நடந்தேறத் தொடங்கி விட்டது. வன்னிச் சண்டைகளில் இன்று மட்டும் ஆயிரம் வரையிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயப்படுத்தப்படுத்துள்ளனர். தாக்குதலின் கோரம் தாங்காது படையினரிடம் தஞ்சம் புகுந்த மக்களை அரணாக வைத்து படையினர் முன்னேறுவதாக செய்திகள் கசிகின்றன. மறுபுறத்தில் தம்மிடம் வந்த மக்கள் மீது மூன்று தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளதாக படையினர் தெரிவிக்கின்றனர்.

எப்படிப் பார்த்தாலும் மக்கள் அழிவு இன்னும் வீச்சம் பெற்று கதிகலங்க வைக்கும் இன்னொரு மிலேச்சத்தனம் அரங்கேறப்போகிறது. இப்பவாவது ஒன்றுபடுமா தமிழினம். ஓங்கிக் ஒலிக்குமா குரல். செவிமடுக்குமா உலகம்.

உண்ணா நோன்பிருக்கும் பல சொந்தங்களில் உயிர்கள் சட்டரீதியாகக் காக்கபடும் என்ற சிறு நம்பிக்கை கூட இச்செய்தி அவர்களுக்கு ஊட்டிய மேலதிக* உறுதிப்பாட்டில் தகர்ந்து போகிறது.

பூமகள்
20-04-2009, 01:00 PM
மிக வருத்தமான செய்தி...


மனக்கண்ணில் கூட கற்பனை செய்ய இயலாத அழிவை செய்து கொண்டிருப்போருக்கு எதிராக எழுமா தமிழினம்??

ரவுத்திரரோடு சேர்ந்து நானும் அதே ரவுத்திரத்துடன்....

நதி
20-04-2009, 01:23 PM
http://www.puthinam.com/full.php?2b34OOK4b3366Df04dctVo0da0eA4AK24d3SSmA2e0dg0MtHce02f1eW2cc4OcY4be

களத்திலிருந்து நேரடியாக என்ற ஒரு சொல் இதை இங்கே இணைக்க* காரணமானது. மற்றப்படி என்னால் உறுதிபடுத்த இயலாத இந்தப் புதினத்தை இணைப்பைக்கு மன்னியுங்கள்.

அமரன்
21-04-2009, 09:24 AM
http://www.youtube.com/watch?v=UjH4oFEdfAw

Tamilmagal
21-04-2009, 11:14 AM
தமிழினம் ஒன்றுபட்டு குரல்கொடுக்கும் போதும், போராட்டங்கள் நடத்தும் போதும், உண்ணா நோன்பிருக்கும்பொழுதுகூட செவிசாய்க்காமல் இருந்த இந்த உலகம், இனியாவது (தமிழர்கள் ஆயிரம் ஆயிரமாக கொண்றுகுவிக்கபடும்பொழுதாவது) தமிழர்கள்மீது இரக்கம் காட்டுமா, தமிழினத்தை திரும்பிபார்க்குமா......???

இன்பா
21-04-2009, 11:24 AM
மாநில அரசு சரியில்லை, மந்திய அரசு கேட்கவே தேவையில்லை, உலக நாடுகளும் கைவிட்டன. ஐநாவும் அமைதியாகிவிட்டது.

இனி யாரிடம் கேட்பேன் தாயே..?!

சக்தி கொடு
என் தமிழ் மக்களை
காத்திட சக்தி கொடு

அணுவை பிளந்திடும்
தந்திரம் சொல்லிக்கொடு
ஓளியை மிஞ்சிடும்
வானூர்தி கொடு

ஓர் அரக்கனை
இதயம் ஊணமானவனை
இன வெறியனை
பிணம் திண்பவனை
நான் அழிக்கிறேன். . .

கா.ரமேஷ்
22-04-2009, 05:40 AM
பிணம் திண்ணும் கழுகுகள் என்ன செய்யும்.... கழுகை ஊட்டி வளர்த்து உலாவ விட்ட நாய்களுக்கு சரியான பாடம் புகட்டுவது ஒன்றே தீர்வு....
இன்னொரு அதிர்ச்சியான உண்மை இரண்டாம் உலக போருக்கு பின்னால் அதிகமாக உயிபலியான மக்கள் தமிழின மக்கள்... யாரும் தமிழருக்கு உதவ வர போவதில்லை(மாறாக அரசியல் செய்வார்கள்) கடவுளை தவிற..!

நேசம்
22-04-2009, 06:33 AM
இந்தியா அரசின் உதவியுடன் இந்த இனப்படுகொலை நடக்கும் போது தமிழக அரசியல் வாதிகள் சுயநலத்துக்காக அரசியல் செய்கிறார்கள்.உண்மையில் அக்கறை இருந்தால் அவர்களது நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும்.இங்குள்ள இனைப்புகளை பார்க்க கூட மனசு வரவில்லை.

அமரன்
22-04-2009, 08:03 AM
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு நாம் முழுமையான ஆதரவுகளை வழங்குகின்றோம்: சீனா

ஸ்ரீலங்கா சொல்லுது வன்னியில் கொல்லப்பட்டோர் தொகை 17 தானாம். அப்ப மிச்சமெல்லாம் புலியோ. அதுக்கு வக்காலத்தாக சீனாவின் இந்த வியாக்கியானம். இனி கைப்புள்ள மொழியில சண்டை என்றால் சனங்கள் சாகத்தான் செய்வார்கள் என்பார்களோ.