PDA

View Full Version : சீமானை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் ஆணைகா.ரமேஷ்
17-04-2009, 10:07 AM
இயக்குனர் சீமானை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது தமிழக அரசு தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து சீமானின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், சீமானை விடுதலை செய்யுமாறும், அவர் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்யுமாறும் உத்தரவிட்டார்.


-http://seemaan.wordpress.com/2009/04/17/release/

http://www.dinamalar.com/latestnews.asp#16147

பூமகள்
17-04-2009, 10:25 AM
சீமான் ஒரு தமிழர் நலன் நாடும் எழுச்சி மிக்கப் பேச்சாளர்..

அவரின் உரைகளை நேரில் கண்டு, கேட்டு இருக்கிறேன்.. கனல் தெறிக்கும் பேச்சும், ஈழ விடுதலை மீதான தாகமும் நிறைந்தவர்..

பேச்சுகள் கொஞ்சம் அதிக உணர்ச்சியோடு இருந்ததாலா சிறையிலடைக்கப்பட்டார்?? என்ன பேசினார் என்று நானறியேன்..

ஆனால், வெளிவருவது குறித்து மகிழ்ச்சி..

செய்திக்கு நன்றிகள் சகோதரர் ரமேஷ்.

கா.ரமேஷ்
17-04-2009, 10:43 AM
சீமான் ஒரு தமிழர் நலன் நாடும் எழுச்சி மிக்கப் பேச்சாளர்..

அவரின் உரைகளை நேரில் கண்டு, கேட்டு இருக்கிறேன்.. கனல் தெறிக்கும் பேச்சும், ஈழ விடுதலை மீதான தாகமும் நிறைந்தவர்..

பேச்சுகள் கொஞ்சம் அதிக உணர்ச்சியோடு இருந்ததாலா சிறையிலடைக்கப்பட்டார்?? என்ன பேசினார் என்று நானறியேன்..

ஆனால், வெளிவருவது குறித்து மகிழ்ச்சி..

செய்திக்கு நன்றிகள் சகோதரர் ரமேஷ்.

தமிழ் உணர்வாளர் மட்டுமல்லாது ஈழ விடுதலை விரும்பியான அண்ணன் சீமான் அவரது பேச்சு சுதந்திரத்தை முடக்க செய்த அரசியல் சூழ்சியே தவிர வேரொன்றும் இல்லை... அவர் மீது பாண்டிசேரி வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது... அதிலும் நல்ல செய்திகள் வரும் என எதிர்பார்ப்போம் சகோதரி...

மன்மதன்
17-04-2009, 01:42 PM
நல்ல செய்தி...!!

அமரன்
21-04-2009, 11:18 AM
காவல்துறையும் சட்டத்தின் பிரதிநிதிகளே. அவர்களை சட்டத்துக்கு அமைவாக செயல்பட இனியாவது அரசியல் வாதிகள் அனுமதிக்க வேண்டும்.

சிவா.ஜி
21-04-2009, 12:30 PM
உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த உயர்நீதிமன்றத்துக்கு நன்றி.

கா.ரமேஷ்
28-04-2009, 05:48 AM
புதுவை சிறையிலிருந்து சீமான் விடுதலை
புதுச்சேரி மத்திய சிறையில் இருந்து திரைப்பட இயக்குநர் சீமான் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சீமானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது. புதுச்சேரி வழக்கில் புதுச்சேரி நீதிமன்றமும் ஜாமீன் வழங்கியது. இந்த இரண்டு வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்ததால் சிறையில் இருந்து சீமான் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

சீமான் விடுதலை செய்யப்பட்டப் பிறகு தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தலைமையில் தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் அவரை அரியாங்குப்பம் பகுதிக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சீமான் மரியாதை செலுத்தினார். அப்போது பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது குறித்து அவர் மேலும் கூறியது: எங்களுக்கு எதிரி காங்கிரஸ்தான். அதனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளேன்.

பாளையங்கோட்டையில்தான் நான் கைது செய்யப்பட்டேன். மே 1-ம் தேதி அங்கிருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவேன். இந்த இடம் சிவகங்கை தொகுதியில் வருகிறது. (காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் போட்டியிடும் தொகுதி).

மேலும் விருதுநகர் தொகுதியிலும் என்னுடைய பிரசாரம் இருக்கும். (மதிமுக பொதுச்செயலர் வைகோ அங்கு போட்டியிடுகிறார்). புதுச்சேரியிலும் என்னுடைய பிரசாரம் இருக்கும். (இங்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுகிறார்). தமிழ் ஈழத்தை யார் ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக என்னுடைய பிரசாரம் இருக்கும் என்றார் சீமான்.

ஊர்வலத்தில் வந்த சீமான் கறுப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்தார். அதில் புலி உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்யப் போவதாக திரைப்பட இயக்குநர் சீமான் கூறினார்.

ஊர்வலத்தில் வந்தவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். மேலும் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்றும் அவர்கள் குரல் கொடுத்தனர்.