PDA

View Full Version : சில நேரங்களில் சில மனிதர்கள்



vairabharathy
15-04-2009, 12:19 PM
சில நேரங்களில் சில மனிதர்கள்

புறங்கூறுவோர் :

புpறரையே பேசும் 'பீழையோர் மனம்"
பிய்த்தெறியப்படவேண்டிய மாமிவ இனம்
புறங்கூறியே வாழ்வில் மடியும் - அவ்வுடல்
புறங்காட்டில் நாள் நரி வாயில் திணியும்....!

விதியை நம்புகிறவர்கள்; :

விதியினை நம்பும் வீணர்கள் - பத்து
விரல்களையிழந்த முடவர்கள் - ஆறாம்
மதியினை பெற்றிருப்பதேன்? - இவர்கள்
மண்ணில் மனிதராய்ப் பிறந்ததேன்?

வேலையற்ற வீணர்கள் :

தேநீரில் விழுந்த 'ஈ" யை விட - இங்கு
தினத்தந்தியில் விழுந்த விழிகளோ கோடி - நம்
காசினியை வீண் பேசுமிவர்கள் - என்
காலணி கூட தீண்டா குப்பைக்கூல சாதி !

முதலைக் கண்ணீர் :

புளித்தாலும் அத்திராட்சையைப் புசிக்க நினைப்பர்
புலம்பியழுதே தம் காரியம் முடிப்பர்
களிப்பேயில்லா புதிய படைப்புகள் - இவர்கள்
காரியக்கார கண் துடைப்புகள்

வாழ்க்கையறியா வயதில் சிலர் :

அரும்பு வயதிலே 'அவ்வன்பில்" திரியும்
அறிவையிழந்த சிறகுகள் - இந்தியா
இருக்கும் நிலை மறந்து
இவர்கள் கொடுந்தீயில் வளரும் விறகுகள் !

சில நேரங்களில் சில மனிதர்கள்
சேற்று மணலில் செய்த ஈரபொம்மைகள்.!

இளசு
18-04-2009, 02:19 PM
திண்ணப்பேச்சு வீரர்களையும்
தூங்கும் தம்பிகளையும்
சின்னப்பயல்களையும் - கண்டு
பட்டுக்கோட்டையார் பாடிய வேகம்
உங்கள் பாட்டிலும்!

பாராட்டுகள் வைரபாரதி!

( நீங்கள் பாரதிக்கும் வைரமுத்துவுக்கும் இரசிகரா?)