PDA

View Full Version : பாரதீ ஓர் ஜோதி



vairabharathy
15-04-2009, 12:18 PM
பாரதீ ஓர் ஜோதி

பாட்டுக்குள் தீ வளர்த்த பாவலனே - நம்
பாருக்குள் மா மீசை கொண்ட காவலனே !
ஏட்டுக்குள் அன்றெழுதிய கவி மந்திரமே - இஃது
எந்நாளும் எங்களுக்குள் சக்தி தந்திடுமே !

செல்லம்மா துணை கொண்ட செந்தமிழா - எங்கள்
செங்குரதி சேற்றுக்குள் நீ செந்தாமரை ! - நீர்
இல்லா பிறப்பென்றொன்று உண்டாவெனில்
இனியொரு பிறவியெனக்கு வேண்டாமென்பேன் !

விடுதலைக்கு முன்னே நான் விளைந்திருக்கக்கூடாதா?
வீரபாரதியே உன்னோடு திரிந்திருக்கக்கூடாதா?
'சுடு" வெள்ளையனேயென மாய்ந்திருக்கக்கூடாதா? - இச்
சுதேசியின் மடிமீது வீழ்ந்திருக்கக் கூடாதா?

மனமெங்கும் உனை நிரப்பி வாழ்கிறேன்.
மண்ணில் உன் பேரொன்றே வாசிக்கிறேன் ! - உன்
இனமது நானென்று நம்புகிறேன் - உன்
இளமை வரிகளில் இன்பம் பொங்குகிறேன்.!


கார் மழை கைம்மாறு காணாது - உன்
கவி வரி பலநூறு இது போலாகும்...
பாரதி எனும் பேர் சொன்னால் போதும் - என்
பார்வைக்குள் ஒளி ஒன்பது கோளாகும் !

ஆதி
16-04-2009, 08:20 AM
இருக்கும்வரை எத்தனைப்பேர் மதித்தார்கள் - இவனை
இதயத்தில் எத்த்னைப்பேர் வைத்தார்கள்..

சிலந்திவலையைவிட நைந்தகூரையில் வாழ்ந்தான் - அவன்
சிலைகளோ பந்தலுக்கு அடியில்..

வீட்டுக்கு சேர்க்கஅவன் எழுதவில்லை - விடுதலை
நாட்டுக்கு கேட்டேஅவன் எழுதினான்..

சோற்றுக்கு வழியில்லாமல் போனான் - இன்று
பாட்டுக்கு ஒருபுலவன் ஆனான்

-------------------

அழகிய சொல்நடை, லயிக்க வைக்கும் சந்தசுவை, வரியமைப்பு.. தொடர்க நடை..

பாராட்டுக்கள் வைரபாரதி அவர்களே..

ஆதவா
23-04-2009, 03:38 PM
உங்கள் பெயர் காரணம் புரிகிறது..

பாரதி மட்டுமல்ல.. எத்தனையோ கலைஞர்கள் வாழும் காலங்களில் மதிக்கப்படாமல் இருந்திருக்கிறார்கள்..

பாரதிக்குச் சரியான பாடல்தான்.!!!!

அமரன்
25-04-2009, 10:00 AM
சொல்நயமும், லயலும் நிறைந்த கவிதை. கருவியமும் நல்ல திரவியம்.

இன்னொரு பாரதியைத் தந்த பாரதிக்கு நன்றி.