PDA

View Full Version : சானியா - சாம்பியன்



அறிஞர்
14-04-2009, 03:21 PM
சர்வதேச மகளிர் டென்னிஸ் சானியா ஜோடி சாம்பியன்

புளோரிடா, ஏப். 14: அமெரிக்காவில் நடந்த சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - சியா ஜங் சுவாங் (சீன தைபெ) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

புளோரிடா நகரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா - சியா ஜங் சுவாங் ஜோடியுடன் குவெட்டா பெஷ்கே (செக் குடியரசு) - லிசா ரேமண்ட் (அமெரிக்கா) ஜோடி மோதியது.
முதல் செட்டை 6-3 என்று எளிதில் கைப்பற்றிய சானியா ஜோடி, 2வது செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து, 3வது மற்றும் கடைசி செட் பரபரப்பானது. இரண்டு ஜோடிகளுமே தங்களது சர்வீசில் புள்ளிகளைக் குவித்ததால் ஆட்டம் இழுபறியாக நீடித்தது.

கடுமையாகப் போராடிய சானியா - சுவாங் 6-3, 4-6, 10-7 என்ற கணக்கில் வென்று முதல் முறையாக கோப்பையை வென்றனர்.
இரட்டையர் பிரிவில் சானியா இதுவரை 8 முறை பட்டம் வென்றுள்ளார். அவர் கடைசியாக 2007ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஹெவனில் நடந்த போட்டியில் பட்டம் வென்றிருந்தார். இந்த ஆண்டு ஆஸி. ஓபனில் மகேஷ் பூபதியுடன் சேர்ந்து கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் முன்னேற்றம்: புளோரிடா போட்டியில் கோப்பையை வென்றதையடுத்து, இரட்டையர் தரவரிசையில் சானியா,9 இடம் முன்னேறி 59வது இடத்தைப் பிடித்துள்ளார். எனினும், ஒற்றையர் தரவரிசையில் சானியா, தொடர்ந்து 100வது இடத்தில் உள்ளார்.
நன்றி - தினகரன்