PDA

View Full Version : சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகன்!!

Pages : [1] 2

தாமரை
14-04-2009, 01:12 PM
நம்ம சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்களுக்காக இந்தத் திரி..

பல சுவையான விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்வோமாக.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் சென்ற வருடப் போட்டியில் நூலிழையில் வெற்றிக்கனியை தவறவிட்டது ஞாபகம் இருக்கலாம்.

சரி சரி

இந்த வருஷம் எப்படி இருக்கும் என்று பார்ப்போமா?

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விபரம் இங்கே

http://www.chennaisuperkings.com/Players/PlayersHome.aspx

துவக்க ஆட்டக்காரர்கள்

1. மேத்தீவ் ஹெய்டன்

இந்த வருடம் அனைத்து போட்டிகளிலும் விளையாடப் போகிறார் ஹெய்டன். வெல்டன் என்று சொல்ல வைப்பார் என்று எண்ணுகிறேன்.

உறுதியான துவக்கம் என்பது அனைத்து வகைப் போட்டிகளிலும் முக்கியமானது. ரன் வேகத்தை மட்டுப்படுத்த முக்கிய பந்துவீச்சாளர்களின் ஓவர்களைக் கபளீகரம் செய்யும் வாய்ப்பு முதல் நான்கு வீரர்களுக்கு உண்டு. இவரது துவக்கம் அணிக்கு உறுதியைத் தரும்.

2. பார்த்தீவ் படேல் / முரளி விஜய் / வித்யூத் சிவராமகிருஷ்ணன்

பார்த்தீவ் படேல் அல்லது முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்கலாம். பார்த்தீவ் படேல் சென்ற வருடம் ஹெய்டனும் சற்று நன்றாகவே விளையாடினார். சிவராமகிருஷ்ணனும் ஒரு ஆட்டத்தில் சோபித்தார், இருந்தாலும் இந்த இடம் பார்த்தீவ் படேலுக்கு கிடைக்கக் கூடும்.
அபினவ் முகுந்த் சென்ற வருட ரஞ்சிப் போட்டிகளில் நன்கு விளையாடி இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை

3. சுரேஷ் ரெய்னா

சென்ற வருடம் கலக்கிய கலக்கல் மறந்திருக்காது.

4. அல்பி மோர்கல்

இவரும் அனைத்து போட்டிகளிலும் ஆட வாய்ப்பு உள்ளவர். இவருடைய ஆல்ரவுண்டர்த்தனம் அதுவும் தென்னாப்பிரிக்காவில் மிகவும் உதவும்.

5. ஆண்ட்ரு ஃபிளிண்டாஃப் / ஜேக்கப் ஓரம்.

முதல் ஏழெட்டு ஆட்டங்களுக்கு ஃபிளிண்டாஃபும் அதன் பின் ஜேக்கப் ஓரமும் விளையாடலாம். ஓரம் ஓரவஞ்சனை செய்து விட்டால் இந்த இடத்தில் ஒரு மட்டையாளர் (பெய்லி) சேர்க்கப்படலாம்.

6. பத்ரிநாத்

சென்ற வருடத்தில் மின்னிய இன்னொரு நல்ல பேட்ஸ்மென். இந்த வருடமும் கலக்குவார்.

7. தோனி

எதாவது சொல்லணுமா என்ன?

8. மன்பிரீத் கோனி

இவர் சென்ற வருடம் கலக்கினார். இந்த வருடம் உறுதியான இடம் பிடிப்பார்.

9. பாலாஜி / ஜோகிந்தர்சர்மா / பழனி அமர்நாத்

பாலாஜிக்கு அதிக வாய்ப்புண்டு.. மற்றபடி ஜோகிந்தர் ஷர்மா அல்லது பழனி அமர்நாத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம். .பழனி அமர்நாத் சென்ற வருடம் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை.

10. முரளிதரன் / சுதீப் தியாகி / அஸ்வின்

முரளிதரன் இரண்டு நல்ல ஆல்ரவுண்டர்கள் இல்லாத பொழுது களமிறக்கப்படலாம். அஸ்வின் தோனியின் கணக்கில் எங்கே இருக்கிறார் என்று புரியவில்லை. சுழல் பந்து வீச்சு அவசியம், முரளீதரன் இல்லை என்றால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். சுதீப் தியாகி பற்றிய நல்ல கணிப்புகள் உள்ளன. சென்ற வருடம் உடல்நிலை (ஸ்டிரெஸ் ஃப்ராக்சர்) காரணமாக விளையாடவில்லை. இம்முறை வாய்ப்பு கிடைக்கும்.

11. மக்கையா ந்டினி / திலன் துஷாரா

ஆடப்போவது ஆப்பிரிக்காவில் என்பதால் ந்டினி கண்டிப்பாக இடம் பிடிப்பார், இவரும் தொடர் முழுவதற்கும் ஆடுவார். அவரால் சரியாக சோபிக்க முடியவில்லை அல்லது அவர் காயம் பட்டான் திலன் துஷாரா இடம் பெறுவார்.

ஆரம்பகட்ட போட்டிகளில் வெற்றிகள் குவிக்கப்பட்டு செமிஃபைனல் இடம் உறுதியானால் மிச்சமிருக்கும் அனைவருக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம். அனிருத் ஸ்ரீகாந்த் எப்படியாவது ஓரிரு வாய்ப்புகள் பெறுவார் என்று நினைக்கிறேன். இம்முறையாவது அவர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டால் அது அவருடைய எதிர்காலத்தைப் பாதிக்கும். சென்ற ஐபிஎல் லில் ஒரு ஆட்டத்தில் வாய்ப்புக் கிடைத்ததில் 7 பந்துகளைச் சந்தித்து ஒரே ஒரு ரன் எடுத்தார், அவர் ஆறு பந்துகள் திணறி 7 ஆவது பந்தில் ஆட்டமிழந்த முறைதான் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் செய்தது. அளவு குறைவாக வீசப்பட்டு ஆஃப்சைடில் எழும்பி வந்த பந்தை முன்னோக்கி வந்து புல் செய்ய முயன்று அது மட்டையின் விளிம்பில் பட்டு கவர் பாயிண்ட் திசையில் பிடி கொடுத்தார். அந்தப் ஷாட் ஆடக்கூடிய நிலையில் அவர் இல்லை.

இம்முறை வாய்ப்பி கிடைக்குமா?

இது என்னுடைய ஆரம்பக் கணிப்பு.

தோனியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் அவர் எப்பொழுது இறங்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். எனவே அவர் மூன்றாமிடத்திலிருந்து ஏழாமிடம் வரை எப்போது வேண்டுமானாலும் களமிறங்கலாம்.

சூப்பர் கிங்க்ஸ் அனைத்து வீரர்களையும் தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. எனவே யாருக்கு வேண்டுமானாலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம்.

இந்த வருடம் இரண்டு ஆல்ரவுண்டர்களைச் சேர்ப்பதால் யாராவது பந்து வீச்சில் வலுவின்றி இருந்தால் சமாளிக்கலாம் என்பது எண்ணம்.

பேட்டிங்கில் வலுவாக இருப்பதால் (கோனி கூட விளாசுகிறாராம்) 4 பௌலர்கள் 2 ஆல்ரவுண்டர்கள் என்று அமைத்துக் கொள்வது நல்லது என நினைக்கிறேன். அல்லது ஒரு பௌலர் குறைக்கப்பட்டு ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் அதாவது ஐன்ஸ்டீன், விராஜ் கட்பே போல ஒருவர் சேர்க்கப்பட வாய்ப்பும் உண்டு. நிரூபிக்கப் பட்ட பேட்டிங் ஆல்ரவுண்டர்கள் (ஜெயசூர்யா, சேவக், யுவராஜ் சிங், யூசுஃப் பதான் போன்றவர்கள்) சென்னை கிங்க்ஸ் அணியில் இல்லாமல் இருப்பது ஒரு சின்னக் குறை, அது இதுபோன்ற அருமையான ஒரு வாய்ப்பை இழக்க வைக்கிறது.

அலசல்கள் தொடரும்.

மதி
14-04-2009, 01:36 PM
தொடரட்டும்.. தொடரட்டும்...

mania
14-04-2009, 02:52 PM
நல்ல கணிப்பு. ஆனால் நான்கு ப்ளேயர்ஸே ஆடலாம் என்று பார்க்கும்போது, முரளி அல்லது நிடினி என்று முதல் சில பந்தயங்களுக்கு சிக்கல் வரலாம். மார்க்கல் ஹேடன் ஃப்ளிண்டாஃப் மூன்று இடங்கள் நிச்சயம்.
அன்புடன்
மணியா

aren
14-04-2009, 03:28 PM
நல்ல கணிப்பு. ஆனால் நான்கு ப்ளேயர்ஸே ஆடலாம் என்று பார்க்கும்போது, முரளி அல்லது நிடினி என்று முதல் சில பந்தயங்களுக்கு சிக்கல் வரலாம். மார்க்கல் ஹேடன் ஃப்ளிண்டாஃப் மூன்று இடங்கள் நிச்சயம்.
அன்புடன்
மணியா

தலை,

சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்களா?

நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும்.

தாமரை
14-04-2009, 03:35 PM
நல்ல கணிப்பு. ஆனால் நான்கு ப்ளேயர்ஸே ஆடலாம் என்று பார்க்கும்போது, முரளி அல்லது நிடினி என்று முதல் சில பந்தயங்களுக்கு சிக்கல் வரலாம். மார்க்கல் ஹேடன் ஃப்ளிண்டாஃப் மூன்று இடங்கள் நிச்சயம்.
அன்புடன்
மணியா

என்ன தலை,

கவனமா படிக்கலையா

10. முரளிதரன் / சுதீப் தியாகி / அஸ்வின்

முரளிதரன் இரண்டு நல்ல ஆல்ரவுண்டர்கள் இல்லாத பொழுது களமிறக்கப்படலாம். அஸ்வின் தோனியின் கணக்கில் எங்கே இருக்கிறார் என்று புரியவில்லை. சுழல் பந்து வீச்சு அவசியம், முரளீதரன் இல்லை என்றால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். சுதீப் தியாகி பற்றிய நல்ல கணிப்புகள் உள்ளன. சென்ற வருடம் உடல்நிலை (ஸ்டிரெஸ் ஃப்ராக்சர்) காரணமாக விளையாடவில்லை. இம்முறை வாய்ப்பு கிடைக்கும்.

11. மக்கையா ந்டினி / திலன் துஷாரா

ஆடப்போவது ஆப்பிரிக்காவில் என்பதால் நிடினி கண்டிப்பாக இடம் பிடிப்பார்,. இவரும் தொடர் முழுவதற்கும் ஆடுவார். அவரால் சரியாக சோபிக்க முடியவில்லை அல்லது அவர் காயம் பட்டான் திலன் துஷாரா இடம் பெறுவார்

சொல்லி இருக்கேனே... முதல் சில ஆட்டங்களில் முரளி இல்லாமல் இருக்கலாம். எந்த பந்து வீச்சாளர் சோபிக்க வில்லையோ அவருக்கு பதிலாக முரளி களமிறங்கலாம் என்பது என் கணிப்பு

தாமரை
14-04-2009, 04:23 PM
முதல் போட்டி : மும்பை இண்டியன்ஸ்

உத்தேச அணி

சனத் ஜெயசூர்யா
சச்சின் டெண்டுல்கர்
சிகார் தவான்
அஜிங்கா ரஹானே
ட்வைன் பிராவோ / மொஹம்மது அஷ்ரஃபுல்
லூக் ராஞ்சி / யோகேஷ் டகாவலே
ஜாகீர்கான்
தவால் குல்கர்னி
தில்ஹரா ஃபெர்ணாண்டோ / லதீஷ் மலிங்கா
ஹர்பஜன் சிங்
கைல் மில்ஸ் / அபிஷேக் நாயர்

http://www.mumbaiindians.com/IPL_PlayerList.aspx

மும்பை அணியின் பந்து வீச்சு நன்றாக இருக்கும்.

ஜாகீர்கான், தில்ஹரா / மலிங்கா பந்து வீச்சை ஆரம்பிக்க
தவால் குல்கர்னி, கைல் மில்ஸ், ஹர்பஜன் சிங் ஆகியோர் தொடர ஜெயசூர்யா இரண்டு ஓவர்கள் வரை வீச..

நல்ல தாக்குதல்தான். ஆனால் பேட்டிங்?

ஜெயசூர்யா, சச்சின் ஆரம்ப அடித்தளம் அமைத்தால் வெற்றிக்கனி உறுதி.

சிகார் தவானைப் பற்றிச் சொல்லணும்னா.. அவர் அவுட்டானா சிங்கிள் டிஜிட் இல்லையென்றால் அம்பது.. இப்படித்தான் போனவருஷம் ஆடி இருக்கார். ஆகையால் அவரை எவ்வளவு சீக்கிரம் அவுட் செய்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது. ரஹானே ஒரு நல்ல ஹிட்டர். போன வருடம் அவருக்கு அதிக அதிர்ஷ்டம் இல்லை. இவ்வருடம் ரஞ்சி டிராஃபியில் நன்கு கலக்கி இருக்கிறார்.

பிராவோ, முதல் ஏழு ஆட்டங்கள் ஆடுவார்.

வெற்றி வாய்ப்பு

சென்னை சூப்பர் கிங்க்ஸ் 4 : 1 மும்பை இண்டியன்ஸ்.

தொடரும் அலசல்கள்

அறிஞர்
14-04-2009, 06:37 PM
ஒவ்வொரு அணி பற்றியும் அலசல் அருமை....
ஐபிஎல் அணி அலசல் என தலைப்பை மாற்றிவிடலாமே..

"பொத்தனூர்"பிரபு
14-04-2009, 10:55 PM
மும்பை இண்டியன்ஸ்- க்கே என் ஆதரவு

"பொத்தனூர்"பிரபு
14-04-2009, 10:56 PM
ஒவ்வொரு அணி பற்றியும் அலசல் அருமை....
ஐபிஎல் அணி அலசல் என தலைப்பை மாற்றிவிடலாமே..

ஆமாங்க

"பொத்தனூர்"பிரபு
14-04-2009, 11:30 PM
1.Sanath Jayasuriya------ 1
2.Sachin Tendulkar(Captain)
3.Saurabh Tiwary
4. Jean-Paul Duminy -------- 2
5. Dwayne Bravo --------- 3
6.Shikhar Dhawan
7. Yogesh Takawale (http://content.cricinfo.com/ipl2009/content/player/35357.html) (wk)
8.Abhishek Nayar
9.Harbhajan Singh
10.Dhaval Kulkarni
11.Zaheer Khan

மும்பை அணி இப்படி இருக்குமா??

"பொத்தனூர்"பிரபு
14-04-2009, 11:31 PM
Lasith Malinga / Kyle Mills ஒருவர் வர வாய்ப்பு உள்ளது

aren
15-04-2009, 01:39 AM
எனிவே ஜெயித்தாலும் தோற்றாலும் அவங்களோட சம்பளம் ஒன்னும் குறையாது. அதனால் ஜெயித்தால் இவ்வளவு பணம் தோற்றால் இவ்வளவு பணம்தான் என்று நிர்ணயித்திருந்தால் நம் மக்கள் இன்னும் உயிரைக்கொடுத்து ஆடுவார்கள்.

தாமரை
15-04-2009, 04:04 AM
ஒவ்வொரு அணி பற்றியும் அலசல் அருமை....
ஐபிஎல் அணி அலசல் என தலைப்பை மாற்றிவிடலாமே..

அப்படி அல்ல.. இந்தத் திரி சென்னை சூப்பர் கிங்க்ஸை பற்றியும் அவர்கள் விளையாடும் போட்டிகளைப் பற்றியும் அலசுவது என்பதால் அப்படி. நடுநிலையான அலசல் அல்ல.

அதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகன் என்பதே பொருத்தமாய் இருக்கும். 56 லீக் போட்டிகளையும் கவர் செய்வதற்கு என்னிடம் நேரம் இல்லையே!

நேசம்
15-04-2009, 04:30 AM
தென்னாப்பிரிக்கா அணியை சேர்ந்த டுமினி நிச்சயம் அணியில் இடம் பெறுவார்.ஏனென்றால் அவர் சச்சின் தேர்வாகும்..

mania
15-04-2009, 04:51 AM
அப்படி அல்ல.. இந்தத் திரி சென்னை சூப்பர் கிங்க்ஸை பற்றியும் அவர்கள் விளையாடும் போட்டிகளைப் பற்றியும் அலசுவது என்பதால் அப்படி. நடுநிலையான அலசல் அல்ல.

அதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகன் என்பதே பொருத்தமாய் இருக்கும். 56 லீக் போட்டிகளையும் கவர் செய்வதற்கு என்னிடம் நேரம் இல்லையே!

ஒரு ஸ்பெஷல் நன்றி தாமரைக்கு....:D:D அறிஞர் வேண்டுமென்றால் ஒரு டீமை எடுத்து பிச்சு பிச்சு அலசி ஆராய்ந்து (மாமுல் வேலைதானே....!!!:rolleyes:) எழுதட்டும்....ஹி...ஹி...ஹி...
சந்தோஷத்துடன்
மணியா,.......:D:D

mania
15-04-2009, 04:55 AM
என்ன தலை,

கவனமா படிக்கலையா

10. முரளிதரன் / சுதீப் தியாகி / அஸ்வின்

முரளிதரன் இரண்டு நல்ல ஆல்ரவுண்டர்கள் இல்லாத பொழுது களமிறக்கப்படலாம். அஸ்வின் தோனியின் கணக்கில் எங்கே இருக்கிறார் என்று புரியவில்லை. சுழல் பந்து வீச்சு அவசியம், முரளீதரன் இல்லை என்றால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். சுதீப் தியாகி பற்றிய நல்ல கணிப்புகள் உள்ளன. சென்ற வருடம் உடல்நிலை (ஸ்டிரெஸ் ஃப்ராக்சர்) காரணமாக விளையாடவில்லை. இம்முறை வாய்ப்பு கிடைக்கும்.

11. மக்கையா ந்டினி / திலன் துஷாரா

ஆடப்போவது ஆப்பிரிக்காவில் என்பதால் நிடினி கண்டிப்பாக இடம் பிடிப்பார்,. இவரும் தொடர் முழுவதற்கும் ஆடுவார். அவரால் சரியாக சோபிக்க முடியவில்லை அல்லது அவர் காயம் பட்டான் திலன் துஷாரா இடம் பெறுவார்

சொல்லி இருக்கேனே... முதல் சில ஆட்டங்களில் முரளி இல்லாமல் இருக்கலாம். எந்த பந்து வீச்சாளர் சோபிக்க வில்லையோ அவருக்கு பதிலாக முரளி களமிறங்கலாம் என்பது என் கணிப்பு

ஒத்துக்கொள்கிறேன்......:icon_03:
அன்புடன்
மணியா...:D

தாமரை
15-04-2009, 05:02 AM
1.Sanath Jayasuriya------ 1
2.Sachin Tendulkar(Captain)
3.Saurabh Tiwary
4. Jean-Paul Duminy -------- 2
5. Dwayne Bravo --------- 3
6.Shikhar Dhawan
7. Yogesh Takawale (http://content.cricinfo.com/ipl2009/content/player/35357.html) (wk)
8.Abhishek Nayar
9.Harbhajan Singh
10.Dhaval Kulkarni
11.Zaheer Khan

மும்பை அணி இப்படி இருக்குமா??

டும்னியைக் கவனிக்காமல் விட்டுட்டேனே..

ஓபனிங்

ஹெய்டனுடன் ஆடும் துவக்க ஆட்டக்காரர் யாரென்றாலும் அவருக்கு ஒரு மெண்டல் ஃபிரீடம் அதாவது மனாழுத்தமின்மை உண்டு. அவர்கள் விக்கெட் விழுந்தாலும் அவர்களுக்குப் பின்னால் ஆட நிறைய மட்டையாளர்கள் உண்டு என்ற சுதந்திரம் அவர்களை நன்கு பிரகாசிக்க வைக்கும். ஹெய்டனுடன் ஆடும் துவக்க ஆட்டக்காரர்கள், உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளவர்கள். எனவே அது இன்னொரு உந்து சக்தி.

மூன்றாவதாக களமிறங்குவது சுரேஷ்ரெய்னா..இவர் தொடர்ச்சியாக நன்கு அடித்து ஆடி ரன்களைக் குவிப்பவர். நியூசிலாந்தில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் இவரின் ஸ்டிரைக் ரேட் 148. அதாவது 100 பந்துகளில் 148 ரன்கள் குவிப்பு. எனவே முதல் விக்கெட் விழுந்தாலும் ரன்ரேட் குறையாமல் இருக்கும்.

நான்காவது இடத்தில் அல்பி மோர்கல் களமிறங்க வாய்ப்பு உள்ளது. தோனி, ஃபிளிண்டாஃப் அல்பி மோர்கல் மூவரும் 4,5,6 என்ற மூன்று இடங்களில் வரலாம். மூவருமே நன்கு அடித்து ஆடக் கூடிய மட்டையாளர்கள்.

பத்ரிநாத் தோனி சுரேஷ்ரெய்னா மூவருமே திடீர் சரிவிலிருந்து அணியைக் காப்பாற்றி ஆட்டத்தை தொகுத்து ஆடக்கூடிய திறமை பெற்றவர்க்ள். ஆக முதல் 7 இடங்களில் சர்வதேசத் தரம் வாய்ந்த பேட்டிங் என்பது மற்ற அணிகளுக்கு அமையாத ஒரு வரப்பிரசாதம்.

பார்த்திவ் படேல் தோனி என இரு விக்கெட் கீப்பர்கள் உண்டு. படேல் சென்ற வருடம் ரஞ்சிக் கோப்பையில் பிரஹாசித்து இருக்கிறார். எனவே கூடுதல் மன உறுதியுடன் ஆடுவார் என எதிர்பார்க்கலாம்.

எட்டாவது போட்டிக்கு மேல் ஃபிளிண்டாஃப் சென்றால் அந்த இடத்தில் ஜேக்கப் ஓரம் வருவார். இதனால் அணி சற்றே பலவீனம் அடைந்தாலும் யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பது போல பேட்டிங்கில் மற்ற அணிகளை விட சற்று உயர்ந்தே இருக்கும்.

பந்துவீச்சில் மோர்கல், ஃபிளிண்டாஃப்(ஓரம்), மன்பிரீத் கோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். மக்கையா நிடினி தென்னாப்பிரிக்கா என்பதால் நன்கு பிரஹாசிப்பார் என எண்ணுகிறேன். நிடினி ஒரு ரிதமிக் பௌலர். அதாவது ஆரம்பப் போட்டிகளில் அவரால் பிராஹாசிக்க முடியாது. ஆனால் தற்போது தான் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டிகள் நடந்தன, அந்த ரிதம் கண்டிப்பாக இருக்கும் என நம்புகிறேன். இவர் இல்லாவிட்டால் முரளிதரன் களமிறங்கக் கூடும்.

ஓரம் மிகச்சிறந்த பௌலர் இல்லையென்றாலும் 20/20 போட்டிகளில் உபயோகமானவர். மிச்சமிருக்கும் ஒரு இடத்திற்குத்தான் அடிதடி.

சுதீப் தியாகி, பாலாஜி, ஜோகிந்தர் சர்மா, பழனி அமர்நாத், அஸ்வின் என பலர் இருந்தாலும் பாலாஜி மற்றும் சுதீப் தியாகிக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். ஸ்பின்னர் அவசியம் ஆனால் முரளிதரன் இல்லை என்றால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

ஏழு பேட்ஸ்மேன்கள் - ஆறு பந்து வீச்சாளர்கள் - இரண்டு விக்கெட் காப்பாளர்கள்.. இதைத்தான் லக்ஸரி என்பார்கள்.

அதிலும் கோனி மற்றும் முரளிதரன்/அஸ்வின் கடைசி ஓவர்களில் தடாலடியாய் அடிக்க முயலும் சாத்தியக் கூறும் உண்டு. அதனால் சூப்பர்கிங்ஸ் இரண்டாவதாக பேட்டிங் செய்தால் 9வது விக்கெட் விழும் வரை எதிரணியால் ரிலாக்ஸ் ஆக முடியாது.

பந்துவீச்சில் சறுக்கினால் பேட்டிங்கிலும் சமாளிக்கலாம், பேட்டிங்கில் சறுக்கினால் பந்துவீச்சிலும் சமாளிக்கலாம் என்பது மிகப் பெரிய தன்னம்பிக்கையைத் தருவதாகும். இது ஓவர் கான்ஃபிடண்ட் ஆகாமல் இருக்க வேண்டியது மாத்திரம் மிக முக்கியம்.

------------------------------------------------------------

மும்பையின் பந்து வீச்சைக் கவனிப்போம்.

ஜாகிர்கான் மிக முக்கியமான பந்து வீச்சாளர். இவரின் நான்கு ஓவர்கள்
அதிக பட்சம் 30 - 2 என்ற விதத்தில் அமையக் கூடும். இவர் இறுதிக் கட்டத்தில் பந்து வீசினால் இது 35 - 3 எனவும் மாறக்கூடும்.

பிராவோ நல்ல பந்து வீச்சாளர்தான் என்றாலும் 4 ஓவர்களில் 35 ரன்கள் வரைக் கிடைக்கக் கூடும். இவரும் ஜாகீர் கானும் செர்த்து 4 விக்கெட்கள் வரை எடுக்கலாம்.

கைல் மில்ஸ் ஆடினால் மும்பைக்கு நல்லது, அவருக்கு பதில் அபிஷேக் நாயரையோ அல்லது இலங்கை பந்து வீச்சாளரையோ பயன்படுத்தும் பட்சத்தில் மும்பை அணி பந்து வீச்சில் இளைக்கக் கூடும்.
ஹர்பஜன் சிங் நல்ல ஸ்பின்னர்தான். ஆனால் தென்னாப்பிரிக்காவில் இவர் எவ்வளவு சிக்கனமாகப் பந்து வீச முடியும் என்பது கேள்விக் குறி.

தவால் குல்கர்னி சென்ற வருடம் நன்றாகவே பந்து வீசினார். இருந்தாலும் இவர் சிக்கனமாக இருப்பது கஷ்டம்.

ஜெய்சூர்யா / டெண்டுல்கர் இவர்கள் மொத்தமாய் மூன்று ஓவர்கள் வீசலாம்.

பேட்டிங்கில் மும்பையின் ஓபனிங் அசத்தலாக இருக்கிறது. லூக் ரோஞ்சிக்குப் பதிலாக யோகேஷ் டகாவலேயும், சிகார் தவான் அல்லது ரஹானே வுக்குப் பதிலாக டும்னியும் வருவதற்கு வாய்ப்பு அதிகம். பிரபு சொன்னபடி ஒரு பந்து வீச்சாளரைக் குறைத்து விட்டால்

சனத் ஜெயசூர்யா
சச்சின் டெண்டுல்கர்
சிகார் தவான்
டும்னி
அஜிங்கா ரஹானே
ட்வைன் பிராவோ / மொஹம்மது அஷ்ரஃபுல்
யோகேஷ் டகாவலே
ஜாகீர்கான்
தவால் குல்கர்னி
கைல்மில்ஸ் / லதீஷ் மலிங்கா / தில்ஹரா ஃபெர்ணாண்டோ
ஹர்பஜன் சிங்

இப்படி ஒரு அணி அமையும். சிகார் தவான் முதல் விக்கெட் முதல் 4 ஓவர்களுக்குள் விழுந்து விட்டால் மூன்றாவதாக களமிறங்கலாம். இல்லாவிட்டால் டும்னி அல்லது ரஹானே மூன்றாவதாக களமிறங்குவர்.

மும்பை அணியின் வெற்றிக்கு : தெண்டுல்கர் ஜெயசூர்யா டும்னி பேட்டிங்
ஜாகிர்கான், கைல்மில்ஸ் பந்து வீச்சு மிக மிக முக்கியம்

சென்னை அணியின் வெற்றிக்கு மோர்கல் / ஃபிளிண்டாஃப் / நிட்னி பந்துவீச்சு, எதாவ்து மூன்று பேட்ஸ்மேன்களின் கைவரிசை முக்கியம்.

தலைமை...

டெண்டுல்கரின் தலைமைப் பாணி...

டெண்டுல்கர் கொஞ்சம் பர்ஃபெக்ஷனிஸ்ட், எந்த வீரர் தவறு செய்தாலும் இவர் பாதிக்கப்படுவார், நடந்தது நடந்துவிட்டது அடுத்தது என்ன என்ற மனநிலைக்கு இவர் வர சற்று நேரமாகும்.

அடுத்ததாக இவர் மனதில் உள்ள திட்டங்களை உரிய வீரருக்கு புரிய வைப்பது. தெண்டுல்கர் பல நுணுக்கங்கள் தெரிந்தவர். அவருடைய எதிர்பார்ப்புகள் பந்து வீச்சாளர்கள் அல்லது தடுப்பாளர்களுக்கு நன்கு புரியும்படி எடுத்துச் சொல்லும் திறமை சற்றுக் குறைவு. அவர் போட்ட திட்டம் சரியாக இருந்தாலும் அதை பந்து வீச்சாளர்கள் புரிந்து கொள்ளாததால் அவர் எதிர்பார்த்த விளைவுகள் ஏற்படாமல் போகலாம்.

ஆகவே முதலில் பேட்டிங் எடுப்பது தெண்டுல்கரைப் பொறுத்த வரை நல்லது. இரண்டாவதாக பேட்டிங் செய்தால் அவருக்கு கடினம். 20 ஓவர்களை மூளையில் ஆடி இருப்பதால் சற்று களைத்திருப்பார்.

டெண்டுல்கரின் முக்கிய பிளஸ் பாயிண்ட் அவரது பேட்டிங் தான். ஒரு நல்ல துவக்கம் கொடுத்தால் அணிக்கு அவர் இருக்கும் உணர்வே மிகப் பெரிய தெம்பாக இருக்கும். அந்த மனநிலையை முதலில் பேட் செய்வதால் அவரால் ஏற்படுத்த முடியும். அது வீரர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும். நல்ல பலனையும் கொடுக்கும்.

தெண்டுல்கர் சிரித்த முகத்துடன் இருப்பது அவரது அணிக்கு மிகப் பெரிய பலமாக அமையும்.

இவரது வியூகங்களை அணிக்கு புரியும்படி இவர் செய்வதில்தான் அணியின் வெற்றி அடங்கிக் கிடக்கிறது.

தோனி :

இவரோட தலைமையைப் பற்றி மிகப் பெரிய கட்டுரையே எழுதியாகி விட்டது, தலையில் மை போடற வரைக்கும் இவர் தான் தலை என்பதை மையால் அடிகோடு போட்டாச்சு..

aren
15-04-2009, 05:12 AM
சென்னை டீமில் அபினவ் முகுந்த் என்பவரும் ஏ.பி. கார்த்திக் என்பவரும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதில் அபினவ் முகுந்த் நன்றாக அடித்து ஆடக்கூடியவர். அவரை ஹேடனுடன் தொடக்க ஆட்டக்காரராக களத்தில் இறக்குவார்கள் என்று நினைக்கிறேன்.

தாமரை
15-04-2009, 05:36 AM
சென்னை டீமில் அபினவ் முகுந்த் என்பவரும் ஏ.பி. கார்த்திக் என்பவரும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதில் அபினவ் முகுந்த் நன்றாக அடித்து ஆடக்கூடியவர். அவரை ஹேடனுடன் தொடக்க ஆட்டக்காரராக களத்தில் இறக்குவார்கள் என்று நினைக்கிறேன்.

2. பார்த்தீவ் படேல் / முரளி விஜய் / வித்யூத் சிவராமகிருஷ்ணன்

பார்த்தீவ் படேல் அல்லது முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்கலாம். பார்த்தீவ் படேல் சென்ற வருடம் ஹெய்டனும் சற்று நன்றாகவே விளையாடினார். சிவராமகிருஷ்ணனும் ஒரு ஆட்டத்தில் சோபித்தார், இருந்தாலும் இந்த இடம் பார்த்தீவ் படேலுக்கு கிடைக்கக் கூடும்.
அபினவ் முகுந்த் சென்ற வருட ரஞ்சிப் போட்டிகளில் நன்கு விளையாடி இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை

அதையும் கவர் செய்திருக்கிறேன் ஆரென் :D :D :D..

mania
15-04-2009, 05:49 AM
13ம் தேதி ஆடிய ப்ராக்டிஸ் போட்டியின் விவரம்.(நன்றி சென்னை சூப்பர் கிங்ஸ் சைட்)
அன்புடன்
மணியா...

Tuesday, Apr 14 2009

Durban: The Chennai Super Kings, thanks to half-centuries by opener Parthiv Patel (51, 36b, 6 x 4) and Suresh Raina (70, 41b, 8 x 4, 1 x 6), defeated Nashua Dolphins by 41 runs in a Twenty20 practice match here yesterday.

The game was played under lights at the magnificient Kingsmead stadium and it was a just the sample of things to come.

Super Kings won the toss and decided to bat first. Opener Matthew Hayden started with a couple of biggies but then fell to an easy drive on the off-side with the team score on 10.

Suresh Raina and Parthiv Patel then shared a large stand, averaging 10 runs an over. While Parthiv relied on deflections and smart nudges, Raina showed his potential with powrfully struck drives and also a huge six.

The pair put on 120 runs for the second wicket before Parthiv fell to Arun Karthik who was “loaned” to the Dolphins for just this game.

The others struggled against the spinners with the older ball and the slowness of the pitch restricted their expansive drives.

George Bailey struck a few lusty blows as the Super Kings eventually made 180 for seven in their quota of 20 overs.

For the Dolphins, Abbott was outstanding with the ball. He was sharp with a high arm action that provided steep bounce and late movement.

A target in excess of 180 was going to be a tough ask against the Super Kings although they fell short by at least 20 runs of the target they had set.

When Dolphins batted, Miller and Arun Karthik were very severe after the top half caved in. Suresh Kumar flattered to deceive after striking Muralitharan for a big six.

Commenting on the game, VB Chandrasekar, director for cricketing operations, said: “Kartik showed terrific eye-hand co-ordination and at the end of the day, we have managed to find a batsman who can play the cameo with gusto.

“He has great deal of confidence playing the hook, pull and the sweep against the spinners. He impressed the discerning and I was happy for it.

“The Super Kings bowlers had an easy day with Tyagi and Goni impressing with the pace and lift off the deck. Joginder looked the best with the difficult length and the late movement. Overall, it was a good outing for the boys.”

SCORE-BOARD

Chennai Super Kings innings:

Parthiv Patel st Barnes b Karthick 51 (36b, 6 x 4)

Matthew Hayden c Miller b Sewola 9 (6b, 2 x 4)

Suresh Raina c Miller b Sewola c Mlongo b Delport 70 (41b, 8 x 4, 2 x 6)

S Badrinath c Delport b Mlongo 3 (6b)

George Bailey c Karthick b Imraan Khan 19 (12b, 2 x 6)

Abhinav Mukund c Barnes b Imraan Khan 5 (7b)

R Ashwin (not out) 6 (5b)

Joginder Sharma b Mlongo 1 (5b)

Manpreet Gony (not out) 7 (3b, 1 x 4)

Extras: 9

Total (for 7 wkts, 20 overs): 180.

Fall of wickets: 1-10 (Hayden), 2-130 (Patel), 3-136 (Raina), 4-144 (Badrinath), 5-160 (Mukund), 6-167 (Bailey), 7-170 (Joginder).

Bowling: K Abbot 4-0-23-0; Sewola 3-0-42-1 (1nb); Mlongo 4-0-36-1 (1w); Suresh Kumar 2-0-19-0 (2w); Delport 2-0-16-1; Arun Karthick 2-0-14-1; Imraan Khan 2-0-11-3; A Amla 1-0-14-0 (2w).

Nashua Dolphins innings:

Imraan Khan c Badrinath b Tyagi 2 (10b)

A Amla c Patel b Joginder 13 (11b, 2 x 4)

C Delport c Raina b Joginder 19 (17b, 3 x 4)

Suresh Kumar c Bailey b Ashwin 15 (15b, 1 x 6)

G Addicott st Patel b Muralitharan 5 (6b, 1 x 4)

Arun Karthick c Tyagi b Gony 30 (26b, 1 x 4, 3 x 6)

D Miller b Muralitharan 16 (13b, 1 x 4, 1 x 6)

B Barnes c Bailey b Muralitharan 2 (7b)

K Abbott (run out – Patel) 12 (14b, 2 x 4)

S Mlongo st Patel b Ashwin 1 (3b)

M Sewola (not out) 1 (2b)

Extras: 23

Total (all out ): 139

Fall of wickets: 1-4 (Khan), 2-31 (Amla), 3-42 (Delport), 4-59 (Addicott), 5-61 (Kumar), 6-95 (Miller), 7-100 (Barnes), 8-136 (Abbott), 9-136 (Karthick), 10-139 (Mlongo).

Bowling: Manpreet Gony 4-0-22-1 (1nb, 1w); Sudeep Tyagi 4-0-32-1 (5w); Joginder Sharma 4-0-23-2 (1w); Muttiah Muralitharan 4-0-32-3 (2w); R Ashwin 3.3-0-26-2.

பரஞ்சோதி
15-04-2009, 06:25 AM
அருமையான அலசல்.

அனைவரும் அருமையாக சொல்லியிருக்கீங்க.

சென்ற ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்க பார்த்திவ் பட்டேலும் ஒரு சிறிய காரணம். அவர் ரன்களை குவித்தார், ஆனால் அதிவேகத்தில் குவிக்கலை.

மேலும் விக்கெட் கீப்பிங்கில் படு மோசமாக செயல்பட்டார். விக்கெட் கீப்பர் கையில் பந்து இருக்கையில் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க ஓடுகையில் சோம்பேறியாக செயல்பட்டார், கிளவுஸை வேகமாக கழட்டி, நேருக்கு நேராக இருந்த ஸ்டெம்டை அடிக்க இயலவில்லை. நான் பார்த்தவகையில் இறுதி போட்டியில் மட்டுமே 3 முறை அவ்வாறாக கோட்டை விட்டார். அதே போல் தான் மற்ற போட்டிகளிலும் செயல்பட்டார்.

இம்முறை தோனியே கீப்பர் பணியை செய்தால், பார்த்திவ் பட்டேலுக்கு பதில் ஒரு ஆல்ரவுண்டரை களம் இறக்கலாம்.

தாமரை
15-04-2009, 06:36 AM
இப்ப என்ன சொல்லறது?

சரி இப்படிச் சொல்லலாம்

பத்ரிநாத்திற்கு பேக்கப் ஒரு ஆள் இருக்கு, :D

தாமரை
15-04-2009, 06:41 AM
அருமையான அலசல்.

அனைவரும் அருமையாக சொல்லியிருக்கீங்க.

சென்ற ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்க பார்த்திவ் பட்டேலும் ஒரு சிறிய காரணம். அவர் ரன்களை குவித்தார், ஆனால் அதிவேகத்தில் குவிக்கலை.

மேலும் விக்கெட் கீப்பிங்கில் படு மோசமாக செயல்பட்டார். விக்கெட் கீப்பர் கையில் பந்து இருக்கையில் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க ஓடுகையில் சோம்பேறியாக செயல்பட்டார், கிளவுஸை வேகமாக கழட்டி, நேருக்கு நேராக இருந்த ஸ்டெம்டை அடிக்க இயலவில்லை. நான் பார்த்தவகையில் இறுதி போட்டியில் மட்டுமே 3 முறை அவ்வாறாக கோட்டை விட்டார். அதே போல் தான் மற்ற போட்டிகளிலும் செயல்பட்டார்.

இம்முறை தோனியே கீப்பர் பணியை செய்தால், பார்த்திவ் பட்டேலுக்கு பதில் ஒரு ஆல்ரவுண்டரை களம் இறக்கலாம்.

இன்னுமொரு ஆல்ரவுண்டரா?

பரஞ்சோதி
15-04-2009, 06:47 AM
தோனி :

இவரோட தலைமையைப் பற்றி மிகப் பெரிய கட்டுரையே எழுதியாகி விட்டது, தலையில் மை போடற வரைக்கும் இவர் தான் தலை என்பதை மையால் அடிகோடு போட்டாச்சு..

ஹி ஹி

வார்த்தை ஜாலத்தில் மயங்கிட்டேன் தல.

கலக்கியிருக்கீங்கப்பூ.

தாமரை
15-04-2009, 06:56 AM
அருமையான அலசல்.

இம்முறை தோனியே கீப்பர் பணியை செய்தால், பார்த்திவ் பட்டேலுக்கு பதில் ஒரு ஆல்ரவுண்டரை களம் இறக்கலாம்.

இன்னுமொரு ஆல்ரவுண்டரா? ஓபனிங் பேட்ஸ்மேன் முக்கியத்தேவை. அதனால் பார்த்தீவ் இல்லையென்றால் இன்னொரு ஓபனிங் பேட்ஸ்மேன் தான் முக்கியத் தேவை..

பரஞ்சோதி
15-04-2009, 07:03 AM
எனக்கு தெரிஞ்சு ஹெய்டனுடன் முரளி விஜய் இறங்கலாம்.

என்னுடைய அணி

1) ஹைடன்
2) முரளி விஜய்
3) சுரேஷ் ரெய்னா
4) பத்ரிநாத்
5) பிளிண்டாப்
6) தோனி
7) மோர்கல்
8) ஜேக்கப் ஓரம்
9) கோனி
10) முரளி
11) நிடினி

ஜேக்கப் ஓரத்தை ஓரம் கட்டக்கூடாது.

தாமரை
15-04-2009, 08:03 AM

4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே என்ற கட்டுப்பாடு இருப்பதால் தான் பிரச்சனை பரம்ஸ்

உங்க கணக்குப்படி போட்டா ராயல் சேல்ஞர்ஸைப் பாருங்க

1. பீட்டர்சன்
2. நேதன் பிராக்கன்
3. மார்ர்க்பௌச்சர்
4. ஜாக்குவஸ் கல்லீஸ்
5. ராஸ் டெய்லர்
6. ஜெஸ்ஸி ரைடர்
7. டேல் ஸ்டெய்ன்
8. ராபின் உத்தப்பா
9. ராகுல் திராவிட்
10. பிரவீன் குமார்
11. ரோலஃப் வான் டர் மெர்வே
12. காம்ரூன் வைட்

அணி எப்படி இருக்கு ?

mania
15-04-2009, 08:49 AM
:D:D:D ஆடவே வேண்டாம்....சும்மா பெவிலியன்லே உக்கார்ந்து எழுதி கொடுத்திட்டு வந்திடலாம்....:rolleyes::D:D:D அம்மாடி.....!!!!
அன்புடன்
மணியா...:D:D

நேசம்
15-04-2009, 08:55 AM
விரர்களை வைத்து எடை போட முடியாது.கடந்த முறை டிராவிட் அணி மீது பெரிய ஈர்ப்பு அதன் விரர்கள் காரணமாக இருந்தது.ஆனால் படுதோல்வியடைந்தது.யாரும் எதிர்பார்க்காத ராயல் அணி வெற்றி பெற்றது.ஒருநாள் போட்டி போன்று கணிப்புகள் இதில் எடுபாடது

தாமரை
15-04-2009, 09:26 AM
:D:D:D ஆடவே வேண்டாம்....சும்மா பெவிலியன்லே உக்கார்ந்து எழுதி கொடுத்திட்டு வந்திடலாம்....:rolleyes::D:D:D அம்மாடி.....!!!!
அன்புடன்
மணியா...:D:D

அணியைப் பத்திச் சொல்றீங்களா இல்லை என் அலசலைப் பத்திச் சொல்றீங்களா தலை..

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?

ஆசிஃப் தடை செய்யப்பட்டதும், டெல்லி அணி As if எந்த மாற்றமும் நிகழாமல் As is இருக்க ஆசிஃபிற்கு பதிலாக ஆஷிஸ் நெஹ்ராவை வாங்கினார்கள். As if ஆசிஃப் போனாலும் As is ஆஷிஸ் இருப்பதாகச் சொல்லலாமில்லையா..

ஆனாலும் நேரா போடுவாரா நேஹ்ரா? என்பது மிகப் பெரிய சிக்கல்.

அதுக்கு குடுத்த வீரர் சிகார் தவான். சிகாருக்கு பதிலா லோக்கல் டேலண்ட் கிடைக்கலை. டேவிட் வார்னரை எடுத்தாங்க.

பால் காலிங் வுட், ஓவிஸ் ஷா, டேனியல் வெட்டோரி, மெக்ராத், தில்சன்,டிவில்லியர்ஸ், மஹாரூஃப், மெக்டொனால்ட் இப்படி ஒரு பெரிய கும்பலே இருக்கு.

காலிங் வுட்
டி வில்லியர்ஸ்
மெக்கிராத்
வெட்டோரி

ஆரம்ப ஆட்டங்களில் இந்த நாலு பேரும் ஆடலாம்..

லோகல் டேலண்ட் தான் கொஞ்சம் அலசணும்

1. சேவாக்
2. கம்பீர்
3. டி வில்லியர்ஸ்
4. காலிங் வுட் / டேவிட் வார்னர்
5. மனோஜ் திவாரி / ஓவிஸ்ஷா,
6. தினேஷ் கார்த்திக்
7. மெக்ராத் / மஹாரூஃப்
8. வெட்டோரி / அமித் மிஸ்ரா
9. யோ மஹேஷ்
10. பிரதீப் சங்வான்
11 ஆஷிஸ் நெஹ்ரா

டெல்லி அணியைப் பொறுத்த வரை ஒரு முழுமை அடையாத அணியாக இருக்கிறது. டெல்லி அணி வெல்வதாக இருந்தால் அது தனிப்பட்ட வீரர்களின் சாதனைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே இந்த வருடம் அரை இறுதிக்கு டெல்லி அணி வருவது சந்தேகம்தான்.

mania
15-04-2009, 09:33 AM
நான் சொன்ன அம்மாடி அணிக்குத்தான். ஆனாலும் உன் எழுத்து வண்மையை இந்த பதிவில் காண்கிறேன்....அம்மாடி....அம்மாடி.....:aktion033::aktion033::aktion033:
அன்புடன்
மணியா:D

தாமரை
15-04-2009, 09:35 AM
விரர்களை வைத்து எடை போட முடியாது.கடந்த முறை டிராவிட் அணி மீது பெரிய ஈர்ப்பு அதன் விரர்கள் காரணமாக இருந்தது.ஆனால் படுதோல்வியடைந்தது.யாரும் எதிர்பார்க்காத ராயல் அணி வெற்றி பெற்றது.ஒருநாள் போட்டி போன்று கணிப்புகள் இதில் எடுபாடது

ராயல் சேலஞ்சர்ஸ் தோற்கப் போவது உறுதி என்பது ஆரம்பத்திலேயே தெரிந்த ஒன்று,

யூசுஃப் பதான், ஷான் வாட்ஸன் போன்றோரைப் பற்றிய தகவல்கள் இல்லாததும் ராஜஸ்தான் ராயல்ஸை குறைத்து மதிப்பிட வைத்தன, ஷேன் வார்னே வின் கேப்டன்ஸி பற்றி அதிகம் தெரியாது.

எல்லோரும் தவறாக எடை போட்டது டெக்கான் சார்ஜர்ஸ் பற்றிதான்.

aren
15-04-2009, 09:41 AM
இந்த முறை யார் வெல்வார்கள்.

நான் டெக்கான் ஜார்ஜர்ஸிற்கு என் ஓட்டைப் போடலாம் என்று நினைக்கிறேன்.

அமரன்
15-04-2009, 09:49 AM
வாக்குச்சாவடி அமைசிடுங்களேண்ணா.

mania
15-04-2009, 09:49 AM
இம்முறை யார் வெல்வார்கள் என்று கணிப்பது தற்போதைக்கு மிக கடினம் என்று நான் நினைக்கிறேன். எல்லோரும் ஓரிரு மேட்ஷ்கள் ஆடிய பிறகு ஓரளவுக்கு கணிக்கலாம்...!!!!
அன்புடன்
மணியா:D
(எதற்கும் நம் ஆஸ்தானம் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்....!!!!????):rolleyes::D

தாமரை
15-04-2009, 09:54 AM
இந்த முறை யார் வெல்வார்கள்.

நான் டெக்கான் ஜார்ஜர்ஸிற்கு என் ஓட்டைப் போடலாம் என்று நினைக்கிறேன்.

அவங்க பாக்கெட்ல ஏற்கனவே பெரிய ஓட்டை இருக்காமே ஆரென். இன்னும் நீங்க வேற ஓட்டைப் போடப் போறீங்களா?

:eek::eek::eek::eek::eek:

தாமரை
15-04-2009, 09:57 AM
இம்முறை யார் வெல்வார்கள் என்று கணிப்பது தற்போதைக்கு மிக கடினம் என்று நான் நினைக்கிறேன். எல்லோரும் ஓரிரு மேட்ஷ்கள் ஆடிய பிறகு ஓரளவுக்கு கணிக்கலாம்...!!!!
அன்புடன்
மணியா:D
(எதற்கும் நம் ஆஸ்தானம் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்....!!!!????):rolleyes::D

இந்தத் திரியில் யார் வெல்வார்கள் என்பது அலசலையே சென்னை சூப்பர் கிங்க்ஸின் வாய்ப்புகளை, வீர தீர சாகஸங்களை அலசறோம். அப்படியே மத்த அணிகளைப் பற்றிய சின்ன அலசல் செய்யறோம்.
யார் ஜெயிப்பாங்கற கேள்வி இங்கே வைக்க எனக்கு விருப்பமில்லை.

அந்த ஸ்தானமெல்லாம் என்ன சொல்லும்? இதைத்தான் :icon_ush::icon_ush::icon_ush:.

:rolleyes::rolleyes::rolleyes:

mania
15-04-2009, 10:03 AM

ஹா...ஹா...ஹா....தொழில் சுத்தம்.....:D:D:D
அன்புடன்
மணியா:D

பரஞ்சோதி
15-04-2009, 11:10 AM
4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே என்ற கட்டுப்பாடு இருப்பதால் தான் பிரச்சனை பரம்ஸ்

அடடா, முக்கியமான பாயிண்டை கோட்டை விட்டுவிட்டேன்.

நான் சென்ற ஆண்டே நினைத்தேன், இந்திய வீரர்களை அதுவும் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொஞ்சம் தவறு செய்து விட்டார்கள்.

சுரேஷ் ரெய்னாவுக்கு வாழ்வு கிடைச்சது, ஐபிஎல், சென்னை கிங்க்ஸால் தான். தோனி அதுவரை ரெய்னாவை ஓரம் கட்டி தான் வைச்சிருந்தார்.

இம்முறை ரெய்னாவின் பங்களிப்பு மேலும் உயரலாம்.

பரஞ்சோதி
15-04-2009, 11:11 AM
ஏனுங்கோ முரளி நம்ம ஊரு மாப்பிள்ளையாச்சே, அவரையும் வெளிநாட்டவராக நினைப்பது சரியல்ல :)

தாமரை
15-04-2009, 11:39 AM
ஏனுங்கோ முரளி நம்ம ஊரு மாப்பிள்ளையாச்சே, அவரையும் வெளிநாட்டவராக நினைப்பது சரியல்ல :)

அது கேரள வழக்கமாச்சே.

:lachen001::lachen001::lachen001:

தாமரை
16-04-2009, 05:01 AM
ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த வருஷம் எப்படின்னு பார்ப்போம்.

1.ஸ்வப்னில் அஸ்நோட்கர்
2.கிரீம் ஸ்மித்
3.யூசுஃப் பதான்
4.ரவீந்த்ர ஜெடெஜா
5.நீரஜ் படேல்
6.டிமிட்ரி மஸ்கரெனாஸ் / .ஷான் வாட்ஸன்
7.மஹேஷ் ராவட் / நமன் ஓஜா.
8.முனஃப் படேல் /
9.மோர்னே மோர்கள் / ஷான் டெய்ட் / ஷேன் ஹார்வுட்
10.ஷேன் வார்னே
11 சித்தார்த் திரிவேதி / காம்ரன் கான்

ஆஸ்திரேலியா வீரரா?
உங்க பேர் ஷான் அல்லது ஷேன்ல ஆரம்பிக்குதா?

உடனே ராஜஸ்தான் ராயல்ஸை தொடர்பு கொள்ளவும். உடனே உங்களுக்கு அணியில் இடம் கிடைக்கலாம். ஷேனும் ஷானும் இருந்தா ஷைன் (Shine - Sign) பண்ணு வார்னே, என்று வார்னே பற்றி சொல்லலாம்.

ராயல்ஸைப் பற்றிக் கண்டுக்காதவங்க போன வருஷம் லக்குன்னு சொல்லலாம். ஆனால் அணிவரிசையைப் பார்த்தா பக்குன்னு இருக்கு.

ராஜஸ்தான் ராயல்ஸ் சென்ற வருஷத்தை விட இந்த வருஷம் ரொம்ப ரொம்ப பலமா இருக்கு. ஃபிளிண்ட் ஆஃப் இருந்தால் கூட சென்னை கிங்க்ஸ் இவங்க கிட்ட கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும் குவார்ட்டர் போட்டுட்டு குப்புற படுக்கவேண்டியதுதான்.

ராயல்ஸ் இந்த வருடம் தோற்கணும்னா அவங்களை எதிர்க்கும் டீமுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கணும்.

மொஹம்மது கைஃப் லிஸ்ட்ல இல்ல பார்த்தீங்களா? அவரை வீட்டுக்கு அனுப்பற அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கு டீம்.

ஷேன் வாட்ஸன் / டிமிட்ரி இரண்டு பேரில் ஒருத்தர் ஆடணும். வாட்ஸன் இல்லாததால் டிமிட்ரி ஆடுவார். வாட்ஸன் வந்தா டிமிட்ரி வெளிய வரணும்.

ஸ்மித் கண்டிப்பா இடம் பிடிப்பார். வார்னே போக இன்னொரு இடம் மோர்னே மோர்களுக்கு போகலாம் இரண்டாவது ஷான் டெய்ட் மூன்றாவது சாய்ஸ் ஹெர்வுட்.

இந்திய வீரர்கள் ஏறத்தாழ தங்கள் இடங்களை தங்கள் திறமையால் பிடிச்சிருக்காங்க என்றுதான் சொல்லணும்.

ராயல்ஸ் ரோல்ஸ் - ரோல்ஸ் ராய்ஸ்

தாமரை
17-04-2009, 05:31 AM
ராயல்ஸைப் பத்திப் பாத்துட்டோம்..

ராயல் சேலஞ்ஜர்ஸைப் பத்தியும் பார்க்கலாமே

ராயல் சேலஞர்ஸை பொறுத்தவரை வெளிநாட்டு வீரர்கள் இம்முறை சரியாகவே அமைஞ்சிருக்காங்க. உள்நாட்டுக் குழப்பம்தான்.

பேட்டிங்கை தொடங்க

திராவிடும் உத்தப்பாவும் வரலாம். திராவிட் வெளிய வரும்பொழுது வாசிம் ஜாஃபர் பேட்டிங்கைத் துவக்கலாம்.

1. திராவிட் / வாசிம் ஜாஃபர்
2. ராபின் உத்தப்பா
3. ஜெஸ்ஸி ரைடர்
4. கெவின் பீட்டர்ஸன் / மார்க் டெய்லர்
5. ஜேக்குவஸ் கல்லீஸ்
6. மார்க் பௌச்சர் / ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி???
7. விராட் கோழி
8. பிரவீன் குமார்
9. புவனேஸ்வர் குமார்
10. டேல் ஸ்டெயின் ??? / வினய் குமார் ??
11. பாலச்சந்திர அகில் / சுழல் பந்து வீச்சாளர் (கும்ப்ளே, ஜோஷி.. )

ராயல் சேலஞர்ஸிடம் வெளிநாட்டு வீரர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். கேமரூன் வைட், ரோலொஃப் வான் டர் மெர்வ், ராஸ் டெய்லர், மார்க் பௌச்சர், தில்லான் டெ ஃப்ரீஸ், நேதன் பிராக்கென் போன்றோருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காமலேயே போகலாம். சுனில் ஜோஷி, கும்ப்ளே ஆகியோரும் விளையாடமலேயே போகலாம்.

மார்க் பௌச்சருக்கு பதில் ஜெஸ்ஸி ரைடரை ஆட வைப்பது மூலம் இரண்டு ஆல்ரவுண்டர்கள் அணியில் இடம் பெறுவார்கள். டேல் ஸ்டெய்னையும் விளையாட வைக்கலாம்.

சுழல் பந்து வீச்சாளர் தேவை என்ற பட்சத்தில் புதிய பந்து வீச்சாளர் யாரவது தளைத்தால் பரவாயில்லை. சுனில்ஜோஷி / அனில் கும்ப்ளே என்றால் அனில் கும்ப்ளே விளையாடுவாரா என்பது சந்தேகம். விளையாடினால் நல்லது.

இந்திய வீரர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் மிகப் பெரிய கவலை.திராவிட், உத்தப்பா, பிரவீன் குமார் மூன்று பேர் போக மீதி நான்கு இடங்களுக்கு ஆளைத் தேர்ந்தெடுப்பதற்குள், கேப்டனும் கோச்சும் பாவம். அதனால் என்னால் ஆன உதவியாக அணியை பரிந்துரைத்து இருக்கிறேன்.

ராயல் சேலஞர்ஸிற்கு முன்னால் இருப்பதும் ராயல் சேலஞ்ஜ்தான். விஜய் மல்லையா சென்ற ஆண்டு வெடித்தது ஞாபகம் இருக்கலாம். கோச்சைக் கடாசி, திராவிட்டை பதவி இறக்கி, மார்ட்டின் குரோவை விரட்டி...

உலக அளவில் இத்ஹு போன்ற உணர்ச்சி வசப்படுபவர்களின் அணிகள் அரையிறுதியைத் தாண்டுவதில்லை.

அரையிறுதிக்கு போராடும் அணிகளில் இது ஒன்றாக இருக்கும்.

முதலிரண்டு ஆட்டங்களில் வெற்றி என்பது மிக மிக அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே இந்த அணிக்கு உண்டு. அதன் பிறகு அணி எப்படி இணைந்து போராடுகிறது என்பதைப் பொறுத்துதான் வாய்ப்பு.

தாமரை
17-04-2009, 06:02 AM
அடுத்து கிங்க்ஸ். ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் போட்டியால் மோசமாக பாதிக்கபடுவது பஞ்சாப் கிங்க்ஸ் அப்படின்னு சொல்லலாம். ஷான் மார்ஸ் (இவரை எப்படி ஷேன் வார்னே தவறவிட்டார்னு தெரியலையே!!! :sprachlos020::sprachlos020::sprachlos020:) அப்புறம் ஜேம்ஸ் ஹோப்ஸ் இரண்டு பேருமே இல்லாம் போனதும்,ஸ்ரீசாந்தின் முதுகு வலியும், பிரெட் லீ இல்லாததும் அணியை சற்று பலவீனமாக்கி இருக்கு. சைமன் கடிச் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்காததால் அணியில் இடம் பெறுவார்,

வெளிநாட்டு வீரர்களில்

சங்ககாரா, ஜெயவர்த்தனே, ,சைமன் கடிச், ரவி பொபரா ஆகிய ஐந்து பேர் நல்லாத் தெரிஞ்சவங்க. லூக் போமர்ஸ்பேச் ஒரு பேட்ஸ் மேன். ஒருவேளை ஜெயவர்த்தனே ஜொலிக்காவிட்டால் இவர் ஆடக் கூடும். ஜெயவர்த்தனே, சைமன் கடிச் இருவரும் ஆட வாய்ப்பு இருக்கு

ஜெரோம் டெய்லர் ஃபிட்னஸ் பிர்ச்சனை இருப்பதால ஆடமாட்டார்..

உத்தேச அணி

1 சைமன் கடிச்
2. சங்கக்காரா
3. யுவராஜ் சிங்
4. ரவி பொபாரா
5. இர்ஃபான் பதான்
6. விஆர்வி. சிங்
7. தன்மய் ஸ்ரீவத்ஸவா
8. ஜெய்வர்த்தனே / யூசுஃப் அப்துல்லா..
9. பியூஷ் சாவ்லா / ரொமேஷ் பவார்
10. தருவார் கோழி (மட்டன் தரமாட்டார்)
11. ரந்தேப் போஸ்

ரொம்பவே கஷ்டமா இருக்கு, 7 இந்திய வீரர்களைத் தேர்ந்தெடுக்க, அதுவுமில்லாமபந்து வீச்சு பல்வீனமா இருக்கு. அதனால் இம்முறை அரையிறுதி வாய்ப்பு கிடைக்காது என்றே சொல்லலாம்.

:sprachlos020::sprachlos020::sprachlos020:

பஞ்சாபிற்கு இந்த வருஷம் அதிர்ஷ்டம் குறைவா இருக்குன்னு மட்டும் சொல்லலாம்,
,

தாமரை
17-04-2009, 06:49 AM
அடுத்து வருவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

பாகிஸ்தான் புறக்கணிப்பு,
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் மற்ற போட்டிகள் இது க்னைட் ரைடர்ஸை பாதிக்கத்தான் செய்கின்றன. கூடவே கோச் புக்கனன் வேற நாலு கேப்டன் அப்படின்னு வத்தி வச்சாரு..

இருந்தாலும் க்னைட் ரைடர்ஸ் அணி பலத்தைப் பார்ப்போம்.

பிரெண்டன் மெக்கல்லம் முழுசா கிடைக்கிறாரு
கிறிஸ்கெய்ல் முதல் இரண்டு வாரம் இருப்பாரு
ப்ராட் ஹாட்ஜ் முழுசா கிடைப்பாரு
மஷ்ரஃப் மொர்ட்டாஜா, அஜண்தா மெண்டிஸ் இரண்டு பேரும் இருக்காங்க..

அசோக் திண்டா, இஷாந்த் ஷர்மா, அஜீத் அகர்கர், சட்டீஸ்வர் பூஜாரா, சௌரவ் கங்கூலி, லஷ்மி ரதன் சுக்லா, முரளி கார்த்திக், சஞ்சய் பங்கர், ஆகாஷ் சோப்ரா இப்படி இந்திய வீரர்கள் இருக்காங்க.

1. பிரெண்டன் மெக்கல்லம்
2. கிறிஸ் கெய்ல் / ஆகாஷ் சோப்ரா / ???
3. சௌரவ் கங்கூலி
4. சட்டீஸ்வர் பூஜாரா
5. லஷ்மி ரத்தன் சுக்லா
6. மஷ்ரஃப் மொர்ட்டாஜா
7. பிராட் ஹாட்ஜ்
8. முரளி கார்த்திக் / அஜந்தா மெண்டிஸ்
9. இஷாந்த் ஷர்மா
10. அசோக் திண்டா
11. அஜித் அகர்கர் / சஞ்சய் பங்கர்

நல்ல முயற்சி செய்தால் அரை இறுதிக்கு வரும் வாய்ப்பு இருக்கு. ராயல் சேல்ஞ்ஜர்ஸா இல்லை கொல்கத்தாவா என்ற இழுபறி வரலாம்.

க்நைட் ரைடர்ஸ் - இக்னைட் செய்தா அரை இறுதி வரை வரலாம்.

ஸ்டார்ட்டிங் ட்ரபுள் இருக்கும்.

தாமரை
17-04-2009, 07:12 AM
இந்த வருஷம் கில்கிறிஸ்ட்டுக்கு பயங்கர சோதனையான வருஷம். நிறைய சோதனை முயற்சி செய்யவேண்டியதா இருக்கும்.

அஃப்ரிடி இல்லை. சைமண்ட்ஸ் இல்லை இப்படி இல்லைகளை வரிசைப் படுத்தாம இருக்கறதைப் பார்ப்போம்.

கிப்ஸ் இந்த வருஷம் தென்னாப்பிரிக்காவில் விளையாடுவதால் நல்லா விளையாடுவார் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு, ஸ்டார்ட்டிங் ட்ரபுளை சரிசெய்தார்னா பிரஹாசிப்பார்

ட்வைன் ஸ்மித் இன்னொரு ஆல் ரவுண்டர், முதலிரண்டு வாரம் கை கொடுப்பார், இவர் போன பின்னால் ஸ்காட் ஸ்டைரிஸ் இந்த இடத்தை நிரப்பக் கூடும். ரையான் ஹாரிஸ் பந்து வீச்சில் இடம் பெறிவார் என நினைக்கிறேன்.

இந்திய வீரர்களில் லஷ்மண், ரோஹித் ஷர்மா, வேணுகோபால் ராவ், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, கல்யாண கிருஷ்ணா, விஜயகுமார்

டீமை போட்டுப் பார்ப்பமே

1. கில்கிறிஸ்ட்
2. லஷ்மண்
3. ரோஹித் சர்மா
4. கிப்ஸ்
5. வேணுகோபால் ராவ்
6. ஸ்மித் / ஸ்காட் ஸ்டைரிஸ்
7. ரவி தேஜா /
8. ரையான் ஹாரிஸ் / சமிண்டா வாஸ் / ந்வான் ஜொய்ஸா
9. ஆர்.பி.சிங்
10. கல்யாண்கிருஷ்ணா / விஜய்குமார்
11. பிரக்யான் ஓஜா

அணி பார்க்க ஒரளவு நன்றாக இருந்தாலும் 20/20 களத்தில் சாதிக்குமா என்பது கேள்விக்குறிதான். எனவே இந்த வருடமும் அரையிறுதி வாய்ப்பைத் தவற விடலாம்.

இது வ்ரைப் பார்த்த அணிகளில்

சென்னை, ராஜஸ்தான், மும்பை இம்மூன்றும்

பெங்களூர் - டெல்லி - கல்கத்தா இம்மூன்றில் ஒன்றும் (வரிசைப்படி அதிக வாய்ப்பு) அரை இறுதிப் போட்டிக்கு வரலாம்.

ஹைதராபாத் இம்முறையும் இறுதியாய் வர வாய்ப்பு இருக்கிறது..

இது என்னுடைய ஆரம்ப கணிப்பு..

கணிப்பு என்பதால் சரியாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

இது சரியாக இருந்தால் நான் பெருமைப் படவும் போவதில்லை. என் பெருமையெல்லாம், சூப்பர் கிங்க்ஸ் என் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்வார்களா என்பதில்தான் இருக்கிறது. மற்றதெல்லாம் ஒரு அரட்டை மாதிரி...

ஸ்டார்ட் காமிரா ஆக்ஷன் சொல்லிடலாம்னு நினைக்கிறேன். நாளை மாலை முதல் போட்டி. அதுக்கு முதல் பெஞ்சில இடம் பிடிச்சு உட்கார்ந்து பார்க்கணும்..

:D :D :D

mania
17-04-2009, 07:26 AM
ஆமாம் ஆமாம்.....ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்.......)பின்ன என்ன நீ எழுதியதை எல்லாம் படிப்பதற்குள் நாலு மேட்ச் முடிந்துவிடும் போலிருக்கு):rolleyes::D:D
அன்புடன்
மணியா....:D:D

தாமரை
17-04-2009, 08:22 AM
ஆமாம் ஆமாம்.....ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்.......)பின்ன என்ன நீ எழுதியதை எல்லாம் படிப்பதற்குள் நாலு மேட்ச் முடிந்துவிடும் போலிருக்கு):rolleyes::D:D
அன்புடன்
மணியா....:D:D

இதுக்கே இப்படியா?

ஞாயிற்றுக்கிழமை கொள்ளை கொள்ளையா எழுதலாம்னு இருக்கனே அப்போ?

எனக்கென்னவோ சில அணிகள் நடக்கறது நடக்கும் என்ற மாதிரி ஆடும் என்கிற உணர்வு எழுவதைத் தடுக்க முடியலை.

வார்னே காம்ரான் கானைக் கண்டு பிடிச்ச மாதிரி, சுரேஷ் குமார், அஸ்வின், சுதீப் தியாகி மாதிரி இந்திய இளைஞர்கள் புதுசா எத்தனைப் பேர் வருவாங்க என்கிறதல தான் என் கவனம் இருக்கு.

வெளிநாட்டு வீரர்கள் 10 பேரை வச்சுக்கலாம் நாலு பேர்தான் ஆடலாம் என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம். காசு கொடுத்து சும்மா உட்கார வைக்கறது புடிக்கல.. புடிக்கல.. புடிக்கல...

அதை 6 பேராக் குறைக்கணும். அப்புறம், கென்யா, ஜிம்பாப்வே, நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், கனடா, யூ.ஏ.இ, சிங்கப்பூர், மலேசியா நெதர்லேண்ட்ஸ், நமீபியா, அமெரிக்கா குட்டியூண்டு நாடுகளில் இருந்து 2 பேரை எடுக்கணும் அதில ஒருத்தர் விளையாடணும் என்று சொல்லி இருந்தா.....கொஞ்சம் புண்ணியம் கிடைச்சிருக்கும்.

அப்புறம்.., டேலண்ட் டெவலப்மெண்ட்டுக்கு விஜய் டீவில சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஜூனியர்ஸ் என்ற போட்டி நடத்தி 12 வயசு வரையுள்ள குழந்தைகளை விளையாட வச்சு ஆர்வத்தை உண்டாக்கி இருக்காங்க.

சியர் லீடர்ஸ் அப்படின்னு ஒரு ப்ரோக்ராம் வச்சு அதிலும் சில குழந்தைகளை தேர்ந்தெடுத்து இருக்காங்க. இதை வெறும் பிராண்ட் பாப்புலாரிட்டி நிகழ்ச்சிகளா வச்சுக்காம, கிராமங்களில் இருக்கிற நல்ல திறமை உள்ளவங்களை அடையாளம் கண்டு வளர உபயோகிச்சா எவ்வளவு நல்லா இருக்கும்?

http://www.chennaisuperkings.com/media/PressReleasesContent.aspx?PID=18

வேற எந்த அணியும் இந்த மாதிரி செய்ததா தெரியலை. இதனால நாலு பேருக்கு நல்லது நடக்கும்னு நம்பலாம்.

மதி
17-04-2009, 08:47 AM
கலக்கலான அலசல்... நானும் நாளை மாலை நோக்கி ஆவலுடன் வெயிட்டிங்..
அசத்துவார்களா... சென்னை சூப்பர்கிங்ஸ் சூரப்புலிகள்..

அப்போ ஞாயிற்றுக்கிழமை இந்தத்திரி அதகளப்பட போகுது என்பதில் சந்தேகமில்லை.. :)

மதி
17-04-2009, 08:50 AM
நானும் சூப்பர் கிங்ஸ் ஜூனியர் நிகழ்ச்சி பார்த்தேன்.. ஸ்டெம்ப் சைஸுக்கு இருந்துட்டு... ஒவ்வொருத்தரும் பேட்டிங் ஆடறதும், பௌலிங் போடறதும், விழுந்து கேட்ச் பிடிக்கறதும் அப்பப்பா... சின்ன வயசில என்னைய பார்த்த மாதிரி இருந்தது. :)

aren
17-04-2009, 08:53 AM
சின்ன வயசில என்னைய பார்த்த மாதிரி இருந்தது. :)

என்னங்க இப்படியா ஜோக் அடிக்கிறது. ஒரு அளவு வரம்பே இல்லையா?

mania
17-04-2009, 08:58 AM
நானும் சூப்பர் கிங்ஸ் ஜூனியர் நிகழ்ச்சி பார்த்தேன்.. ஸ்டெம்ப் சைஸுக்கு இருந்துட்டு... ஒவ்வொருத்தரும் பேட்டிங் ஆடறதும், பௌலிங் போடறதும், விழுந்து கேட்ச் பிடிக்கறதும் அப்பப்பா... சின்ன வயசில என்னைய பார்த்த மாதிரி இருந்தது. :)

ஹா....ஹா....ஹா....இத்தத்தான் சைக்கிள் கேப்பில ஆட்டோன்றாங்களா....:rolleyes::D:Dம்ம்ம் நடத்து....இல்லை இல்லை ஓட்டு...:D:D
அன்புடன்
மணியா....:D

mania
17-04-2009, 08:59 AM
சத்தியமா நானும் ஆரெனும் பேசிக்கலை......:D:D:D
அன்புடன்
மணியா...

samuthraselvam
17-04-2009, 09:54 AM
நானும் சூப்பர் கிங்ஸ் ஜூனியர் நிகழ்ச்சி பார்த்தேன்.. ஸ்டெம்ப் சைஸுக்கு இருந்துட்டு... ஒவ்வொருத்தரும் பேட்டிங் ஆடறதும், பௌலிங் போடறதும், விழுந்து கேட்ச் பிடிக்கறதும் அப்பப்பா... சின்ன வயசில என்னைய பார்த்த மாதிரி இருந்தது. :)

என்ன பண்ணுறது வயசானதுக்கு அப்புறம் இப்படி நினைச்சு மட்டுமே சந்தோசப் பட்டுக்கனும்.....:aetsch013::aetsch013:

மதி
17-04-2009, 10:44 AM
என்ன பண்ணுறது வயசானதுக்கு அப்புறம் இப்படி நினைச்சு மட்டுமே சந்தோசப் பட்டுக்கனும்.....:aetsch013::aetsch013:
ஆமா.. பேரன் பேத்தி எடுத்ததுக்கு அப்புறமும்... வயசை மறைக்கணுமா என்ன??

மதி
17-04-2009, 10:45 AM
என்னங்க இப்படியா ஜோக் அடிக்கிறது. ஒரு அளவு வரம்பே இல்லையா?

ஹா....ஹா....ஹா....இத்தத்தான் சைக்கிள் கேப்பில ஆட்டோன்றாங்களா....:rolleyes::D:Dம்ம்ம் நடத்து....இல்லை இல்லை ஓட்டு...:D:D
அன்புடன்
மணியா....:D
நான் நம்ப மாட்டேன்... நீங்க பேசினதை ஒட்டு கேட்டவங்க சொன்னாங்களே...!

உண்மைய சொன்னா நம்பணும்... :icon_ush::icon_ush:

தாமரை
17-04-2009, 10:47 AM
இதையெல்லாம் விட திருச்சிக்கு முதல் லெவல் செலக்ஷனுக்கு சிறுவர்கள் வந்ததைக் காட்டினார்கள். நாள் முழுக்க செலக்ஷன் பிராசஸ். தேர்வானவங்க சந்தோஷமும், வாய்ப்பிழந்தவங்களின் சோகமும் மெகா சீரியலை மிஞ்சக் கூடியதா இருந்தது.

சும்மா செலக்ட பண்ணியதோட விடாம அவர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் கொடுத்து, நல்ல உணவு, சிறந்த உடற்பயிற்சி, விளையாட்டு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தல் என இறங்கினால்......எவ்வளவு நல்லா இருக்கும்?

மத்த விளையாட்டுகளுக்கு இந்த அளவு பணம் இல்லையே...அப்படின்னு ஒரு வருத்தம் மின்னலா தோணுது. இருக்கறதையாவது சரியா உபயோகிக்கணும்

தாமரை
17-04-2009, 10:54 AM
என்ன பண்ணுறது வயசானதுக்கு அப்புறம் இப்படி நினைச்சு மட்டுமே சந்தோசப் பட்டுக்கனும்.....:aetsch013::aetsch013:

ஆமா.. பேரன் பேத்தி எடுத்ததுக்கு அப்புறமும்... வயசை மறைக்கணுமா என்ன??

யாரோட வயசை? பேரன் பேத்தியோட வயசையா உங்க வயசையா?

மதி
17-04-2009, 10:58 AM
யாரோட வயசை? பேரன் பேத்தியோட வயசையா உங்க வயசையா?
இது என்ன கேள்வி...
என் வயசை தான்....:D:D:D:D

mania
17-04-2009, 11:14 AM
மதியை நினைக்கும் போது கல்யாண பரிசு தங்கவேலு ஞாபகம் தான் வருகிறது.....(இப்போத்தான் ஆட வரலை.....அந்த காலத்திலே நாந்தானே சாம்பியன்........!!!!!!:rolleyes::D:D)
அன்புடன்
மணியா.....

தாமரை
17-04-2009, 11:26 AM
இதுவரை நடந்த பயிற்சி ஆட்டங்களில் ஐபிஎல் லோட டாமினேஷன் நல்லாவே தெரியுது. அதுவும் சென்னை கிங்க்ஸோட இரண்டு மேட்சுகள். பாவம் ஒரு பிள்ளைப் பூச்சி டால்ஃபின்ஸ் கிடைச்சது. அதில விளையாட 11 பேர் கூட இல்லை.

அவங்களைப் பிடிச்சு அடிச்சு துவைச்சு பிழிஞ்செடுத்து.... ம்ம்

சுரேஷ்(ரேஸ்-ரெய்னா) ரெய்னா, மேதி(ஸி)வ் ஹெய்டன், பாப்பா(பார்த்திவ் படேல்) எல்லாம் பேட்டிங்கில் கலக்க...பாலாஜி, அஸ்வின், ஜோகிந்தர், முரளிதரன், சுதீப் தியாகி எல்லாம் பௌலிங்கில் கலக்க...

போன மேட்சில டால்பின்ஸ் 110(18 ஓவர்) அடிக்க சென்னை கிங்க்ஸ் 20 ஓவர் முழுக்க ஆடி 170 ரன் அடிச்சாங்களாம்.
http://www.chennaisuperkings.com/news/NewsContent.aspx?NewsID=137

அதை விடுங்க முதல் ஆட்டத்துக்கான பிட்ச் எப்ப்படின்னு தெரிஞ்சுகிட்டாதானே ஸ்ட்ரேட்டஜி போட முடியும். ..

இங்க போனமுறை கடைசியா 20/20 ல மோதினது பாகிஸ்தானும் நியூசிலாந்தும்.

இந்தப் பிட்சில் மித வேகப் பந்து வீச்சாளர்களும், சுழல் பந்து வீச்சாளர்களும் நன்கு பலனடைஞ்சிருக்காங்க. வேகத்தை விட லைன், லெந்த், ஸ்விங் அப்புறம் ஸ்பின் இதில கான்ஸண்ட்ரேட் செய்யணும்.. இதைப் பார்த்தா நிட்னியா முரளியா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியலை. அஸ்வின் நல்லா பந்து வீசுவதால் காற்று நிட்னி பக்கம் வீசுவதை தடுக்க முடியலை, பயிற்சி ஆட்டங்களில் தென்னாப்பிரிக்க வீரர்கள் கலந்துக்கலை.

ஸ்பின் அஸிஸ்டிங் என்பதால் மும்பையின் ஜெயசூர்யாவிற்கு கொஞ்சம் கொண்டாட்டம்தான்,

இங்க 170 ரன் எடுப்பது இரண்டு அணிகளுக்குமே ரொம்ப கஷ்டமான காரியமாத்தான் இருக்கும் என்று தோணுது.

வெற்றி இலக்கு இதுக்குள்ளதான் இருக்கும். சொல்லப் போனா 140 லிருந்து 160 வரைக்கும் இருக்கலாம்.

http://stats.cricinfo.com/statsguru/engine/ground/59068.html?class=3;team_view=bowl;template=results;type=aggregate;view=innings

சென்னை சூப்பர் கிங்க்ஸ் முதலாவது பேட்டிங் எடுப்பது நல்லதுன்னு நினைக்கிறேன். தோனி என்ன நினைக்கிறாரோ தெரியலையே!!!

இங்கு நடந்த முதல் போட்டியில "மேஸிவ்"" ஹெய்டன் எடுத்த ஓட்டங்கள் 4. ஆனா அதுக்குப் பின்னாடி எல்லாமே 50 க்கு மேலதான், டாப்ஸ்கோர் 71. கண்டிப்பா இதை தகர்த்து தன்னுடைய உயர்ந்த ஸ்கோரை இங்கு அடைவார்னு எதிர்பார்க்கலாம்.

மதி
17-04-2009, 11:38 AM
மதியை நினைக்கும் போது கல்யாண பரிசு தங்கவேலு ஞாபகம் தான் வருகிறது.....(இப்போத்தான் ஆட வரலை.....அந்த காலத்திலே நாந்தானே சாம்பியன்........!!!!!!:rolleyes::D:D)
அன்புடன்
மணியா.....
அவராவது மாலை வாங்கிட்டு வருவார்... இங்க வாயில முழம் போடற கதையால்ல இருக்கு..

நிலைமை சுத்த மோசம்..:icon_p::icon_p::icon_p::icon_b::icon_b::icon_b:

தாமரை
17-04-2009, 11:43 AM
இங்கு நடந்த மேட்சுகளில்

மக்கையா நிட்னி எடுத்த விக்கெட்டுகள்

Ntini 2 0 31 1 15.50
M Ntini 4 0 29 0 7.25 (1w)

JA Morkel 2 0 6 0 3.00
JA Morkel 2 0 12 2 6.00
JA Morkel c Farhad Reza b Abdur Razzak 41 28 29 3 2 141.37
JA Morkel c Snape b Flintoff 43 27 20 3 4 215.00

இதை வச்சுப் பார்த்தால் மேஸிவ் ஹெய்டன் மற்றும் மோர்கல் இருவருக்கும் இது அதிர்ஷ்ட மைதானம் எனத் தெரியுது,

நிட்னி இந்த ஆட்டத்திற்கு உண்டா இல்லையா என்பது இதைப் பார்த்தால் சந்தேகமா இருக்கு, அதே மாதிரி ஜோகிந்தர் சர்மா ஆட வாய்ப்பு இருக்கு...

ஃபிளிண்டாஃப் டீசண்டா இங்க ஆடி இருக்கார்.

இப்ப மறுபடி அணியைப் பார்ப்போம்

1. மேஸிவ் ஹெய்டன்
2. பாப்பா (பார்த்தீவ் படேல்)
3. சு"ரேஸ்" ரெய்னா
4. அல்பி மோர்கல்
5. ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப்
6. தோனி
7.. பத்ரிநாத்
8. கோனி
9. ஜோகிந்தர் ஷர்மா
10. முரளி / அஸ்வின்
11. பாலாஜி / மக்கையா

சுதீப் தியாகி, பழனி அமர்நாத், முரளி விஜய், சிவராம கிருஷ்ணன், அபினவ் முகுந்த், சுரேஷ் குமார் இவர்களுக்கு வாய்ப்பு இந்தப் போட்டியில் கிடைக்காதுன்னு தோணுது.

அஸ்வின் மற்றும் முரளி இரண்டு பேரும் ஆட சான்ஸ் மிகக் குறைச்சல்தான். ஆனாலும் இல்லவே இல்லை எனச் சொல்ல முடியாது.

தாமரை
17-04-2009, 11:44 AM
அவராவது மாலை வாங்கிட்டு வருவார்... இங்க வாயில முழம் போடற கதையால்ல இருக்கு..

நிலைமை சுத்த மோசம்..:icon_p::icon_p::icon_p::icon_b::icon_b::icon_b:

ஒருவேளை நீயே மாலை வாங்கி போட்டுகிட்டு எனக்கு கல்யாணமாயிடுச்சி.. எனக்கு கல்யாணமாயிடுச்சி அறிவிப்பியோ என்னமோ?:icon_rollout::icon_rollout::icon_rollout:

தாமரை
17-04-2009, 11:52 AM
ஜே பி டும்னி ஆடிய இரண்டு ஆட்டங்களில்,

31, 0 என ரன்னெடுத்து இருக்கிறார்.

ஜெயசூர்யா ஆடிய ஒரே ஆட்டத்தில் 0 ரன் எடுத்திருக்கிறார்..

:D :D :D

அப்பா இப்பதான் கொஞ்சம் மூச்சு வருது.

மதி
17-04-2009, 12:34 PM
ஒருவேளை நீயே மாலை வாங்கி போட்டுகிட்டு எனக்கு கல்யாணமாயிடுச்சி.. எனக்கு கல்யாணமாயிடுச்சி அறிவிப்பியோ என்னமோ?:icon_rollout::icon_rollout::icon_rollout:
நடக்கவும் வாய்ப்பிருக்கு...
ஆனா மாலை வாங்க கூட காசு கையில இல்லியே.. :traurig001::traurig001::traurig001:

தாமரை
17-04-2009, 12:40 PM
நடக்கவும் வாய்ப்பிருக்கு...
ஆனா மாலை வாங்க கூட காசு கையில இல்லியே.. :traurig001::traurig001::traurig001:

நீ என்ன ஃபாரம் மாலையா வாங்கப் போற?. ஒரு ரோஜா மாலை 100 ரூபாய்தான்,...

:lachen001::lachen001::lachen001:

மதி
17-04-2009, 12:52 PM
நீ என்ன ஃபாரம் மாலையா வாங்கப் போற?. ஒரு ரோஜா மாலை 100 ரூபாய்தான்,...

:lachen001::lachen001::lachen001:
அவ்வளவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ:eek::eek::eek::eek::eek:?
கட்டுப்படியாகாது சாமி.....:rolleyes::rolleyes:

தாமரை
17-04-2009, 01:13 PM
அவ்வளவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ:eek::eek::eek::eek::eek:?
கட்டுப்படியாகாது சாமி.....:rolleyes::rolleyes:

ஒரு நாள் அந்த மடிவாளா செக்போஸ்ட் பக்கம் நின்னீங்கன்னா கூட கலெக்ஷன் பண்ணிறலாம். :D:sprachlos020:

பாலகன்
17-04-2009, 01:20 PM
நல்ல தகவலை தந்த தாமரை அண்ணாவுக்கு நன்றிகள்

அன்புடன்

மதி
17-04-2009, 01:30 PM
ஒரு நாள் அந்த மடிவாளா செக்போஸ்ட் பக்கம் நின்னீங்கன்னா கூட கலெக்ஷன் பண்ணிறலாம். :D:sprachlos020:
ஆமா... அப்படியே கொஞ்சம் தள்ளிப்போய் நிம்ஹான்ஸ்ல ஒரு ஆள சேர்த்துட்டா 500 ரூபாய் தர்றாங்களாமே..
என்னை எங்க கொண்டு போய் சேர்க்க ஒரு கூட்டமே அலையுது..

பை த பை...

சென்னை சூப்பர்கிங்க்ஸ் திரியில் பைத்தியக்காரத்தனமாய் எழுதுவதற்கு மன்னிக்க...:lachen001::lachen001::lachen001:

தாமரை
18-04-2009, 03:08 AM
இப்ப மறுபடி அணியைப் பார்ப்போம்

1. மேஸிவ் ஹெய்டன்
2. பாப்பா (பார்த்தீவ் படேல்)
3. சு"ரேஸ்" ரெய்னா
4. அல்பி மோர்கல்
5. ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப்
6. தோனி
7.. பத்ரிநாத்
8. கோனி
9. ஜோகிந்தர் ஷர்மா
10. முரளி / அஸ்வின்
11. பாலாஜி / மக்கையா

இந்த வரிசையோடு திருப்தி அடைந்த மக்களுக்கு..

இப்போ இதுவே நான் கேப்டனாவோ கோச்சாவோ (குருவிப் பட "கோச்சா" அல்ல) இருந்தா... இன்னும் என்ன ஆப்ஷன் இருக்குன்னு பார்ப்பேன்.

மும்பை அணியை அடக்க முன்னால வரும் இரண்டு காளைகளையும் அடக்க வேணும். தெண்டுல்கர்.. ஜெயசூர்யா..

ஜெய்சூர்யாவுக்கு ஆரம்பத்தில அடித்து ஆட வாய்ப்பு தரக்கூடாதுன்னா, ஆஃப்ஸ்டம்பை லைனில் அவரது உடலுக்கு திரும்புகிற மாதிரி அவருக்கு அடித்து ஆட இடமில்லாத படி வீசணும்.

டெண்டுல்கரோட இலங்கை சுற்றுப்பயண "பயங்கரக் கனவு" எல்.பி.டபிள்யூ அவுட்கள். ஆன் சைடில் ஸ்ட்ராங்கான் டெண்டுல்கர் லெக்ஸ்டம்ப் லைனுக்கு இப்படி அவுட்டாக காரணம் யாரு திலன் துஷாரா..

இப்போ இவர் உள்ள வந்தா "மாப்பிள்ளை" முரளி வெளிய போகலாம். அவருக்கு பதிலா அஸ்வின் ஆடலாம்.. அப்போ இன்னொரு ஆள் வெளிய போகணும். அது பாலாஜி...

பாலாஜி ஜெயசூர்யாவுக்கு பலிகடா. ஏன்னா இவர் பந்து அங்கயும் இங்கயும் அலைபாயும். கொஞ்சம் இடம் கிடைச்சா ஜெய்சூர்யா கொழம்பு வச்சு கும்மி அடிச்சுடுவார்.

இந்தக் கோணத்தில என்னைத் தவிர வேற யாரு பார்ப்பாங்கண்ணு பார்ப்போம்.

ஹி ஹி..

தாமரை
18-04-2009, 03:14 AM
நல்ல பட்ட பேரா கிடைச்சா சொல்லுங்களேன்..

இப்போ "மேஸிவ்" ஹெய்டன், பாப்பா(பார்த்திவ் படேல்), "மாப்ளே"முரளி, "ரேஸ்" ரெய்னா "தி லயன் கிங்" தோனி..(அவரு முடி டி 20 வேர்ல்ட் கப் ஆடினப்ப இருந்த மாதிரி ஸ்டைலா இருந்தா இந்த பேருக்கு எவ்வளவு பொருத்தமா இருக்கும்?
"
இப்படி சில பேரு யோசிச்சு வச்சிருக்கேன். மக்களே நீங்களும் பேர் வைக்கலாமே!

தாமரை
18-04-2009, 04:27 AM
http://www.chennaisuperkings.com/news/NewsContent.aspx?NewsID=140

அஞ்சு பேரை ஆத்துக்கு அனுப்பிச்சிட்டாங்க..

அனிருத் ஸ்ரீகாந்த், நெப்போலியன் ஐன்ஸ்டீன், சுரேஷ்குமார், உங்கள் அபிமான அபினவ் முகுந்த் மற்றும் வித்யூத் சிவராம கிருஷ்ணன் ஐந்து பேரும் இதில் அடக்கம்.

பந்து வீச்சாளர்களுக்கு காயம் பட வாய்ப்பு அதிகம், அதுவுமில்லாமல் ஆடுகளத்துக்கு ஏத்த மாதிரி பந்துவீச்சாளர்களை மாற்றி ஆகணும். அதனால பந்து வீச்சாளர்களை அதிகமா வச்சிகிட்டோம் அப்படின்னு லாஜிக் சொல்லி இருக்கார் வி.பி. சந்திரசேகர்.

சரி இப்போ எத்தனை பேட்ஸ்மேன் ஆல்ரவுண்டர்கள் ரிசர்வ்ல இருக்காங்கன்னு பார்த்தா,

பேட்ஸ்மேன்கள்
முரளிவிஜய், அருண் கார்த்திக், ஜார்ஜ்பெய்லி

ஆல்ரவுண்டர்கள்
ஜேக்கப் ஓரம், ஷாதேப் ஜகதி, விராஜ் கடுப்..

பந்துவீச்சாளர்கள்
சுதீப் தியாகி, திலன் துஷார, நிடினி, பழனி அமர்நாத்..

ம்ம் ஓகேதான். என்ன இன்னும் ஒரு ஆளை நிறுத்தி இருக்கலாம். அது வித்யூதாவோ அல்லது அபினவ் ஆகவோ இருந்திருக்கலாம். ஆனால் ட்ரெய்னிங் கேம்பில எப்படி பர்ஃபார்ம் பண்ணினாங்கன்னு தெரியலை,

ஓபனிங் பார்ட்னர் ஹெய்டனுக்கு சரியா செட்டானா தூள் கிளப்பலாம்.

இதில இருந்து "மேஸிவ்"ஹெய்டனை எவ்வளவு மேஸிவ்வா நம்பறாங்க என்று புரியுது,

நான் பேர் வச்சதில உள்குத்து எத்வும் கிடையாது.. கிடையாது.. கிடையாது.

தாமரை
18-04-2009, 10:15 AM
சென்னை சூப்பர்கிங்க்ஸ் டாஸ் ஜெயிச்சாச்சு...

பௌலிங் பண்ணப் போறாங்க. தட்ப வெப்ப நிலை முதலில் பந்துவீச சாதகமா இருக்கு அப்படின்னு சொல்றாங்க..

லாஸ்ட் மினிட்ல ஒரு வீரரை மாத்தி இருக்கார்... யார் அது? யார் அது?

தாமரை
18-04-2009, 10:32 AM
இந்த வரிசையோடு திருப்தி அடைந்த மக்களுக்கு..

இப்போ இதுவே நான் கேப்டனாவோ கோச்சாவோ (குருவிப் பட "கோச்சா" அல்ல) இருந்தா... இன்னும் என்ன ஆப்ஷன் இருக்குன்னு பார்ப்பேன்.

மும்பை அணியை அடக்க முன்னால வரும் இரண்டு காளைகளையும் அடக்க வேணும். தெண்டுல்கர்.. ஜெயசூர்யா..

ஜெய்சூர்யாவுக்கு ஆரம்பத்தில அடித்து ஆட வாய்ப்பு தரக்கூடாதுன்னா, ஆஃப்ஸ்டம்பை லைனில் அவரது உடலுக்கு திரும்புகிற மாதிரி அவருக்கு அடித்து ஆட இடமில்லாத படி வீசணும்.

டெண்டுல்கரோட இலங்கை சுற்றுப்பயண "பயங்கரக் கனவு" எல்.பி.டபிள்யூ அவுட்கள். ஆன் சைடில் ஸ்ட்ராங்கான் டெண்டுல்கர் லெக்ஸ்டம்ப் லைனுக்கு இப்படி அவுட்டாக காரணம் யாரு திலன் துஷாரா..

இப்போ இவர் உள்ள வந்தா "மாப்பிள்ளை" முரளி வெளிய போகலாம். அவருக்கு பதிலா அஸ்வின் ஆடலாம்.. அப்போ இன்னொரு ஆள் வெளிய போகணும். அது பாலாஜி...

பாலாஜி ஜெயசூர்யாவுக்கு பலிகடா. ஏன்னா இவர் பந்து அங்கயும் இங்கயும் அலைபாயும். கொஞ்சம் இடம் கிடைச்சா ஜெய்சூர்யா கொழம்பு வச்சு கும்மி அடிச்சுடுவார்.

இந்தக் கோணத்தில என்னைத் தவிர வேற யாரு பார்ப்பாங்கண்ணு பார்ப்போம்.

ஹி ஹி..

சூப்பர்தானே... ஹி ஹி.. தோனி செஞ்ச கடைசி சேஞ்ச் இதுவா இருக்குமோ?

அல்பி மோர்கள் நேத்து ஆஸ்திரேலியாவோட ஆடினதால் ரெஸ்ட் கொடுத்து ஜேக்கப் ஓரம் ஆடறார் என்று நினைக்கிறேன்.

தாமரை
18-04-2009, 11:10 AM
மைதானத்தில் ஒரு கறுப்பு நாய் சுத்தி சுத்தி வருது, எனக்கென்ன டௌப்ட் அப்படின்னா, இதனால் மேட்ச் டிலே ஆகும். குறிப்பிட்ட நேரத்துக்குள்ள ஆட்டத்தை முடிக்கலன்னா கேப்டனுக்கு 20000 டாலர் அபராதம் என்று சொல்லி இருக்காங்க...

இப்போ இந்த டிலேவுக்கு யாருக்கு ஃபின் போடறது. தோனி ஓவர் ரேட் ஸ்லோவா இருந்திருந்தா உமக்கு மச்சம்யா... இதைக் காரணம் காட்டி எஸ்கேப்....

ஹி ஹி

இதுவே இந்தியாவில் ஒரு நாயினால் இப்படி மேட்ச் டிலே ஆகியிருந்தா உலகம் என்னென்ன பேசும் தெரியுமா?

கடைசியில நாய் ஒரு அழகான பொண்ணு வந்து கூப்பிட்டு கூட போகலையே...

:D :D :D

தாமரை
18-04-2009, 01:03 PM
டெண்டுல்கர் வழிகாட்டியும் சூப்பர்கிங்க்ஸ் பாடம் படிக்க தவறுகிறார்கள்.

புதுப்பந்து கொஞ்சம் அதிகமா பௌன்ஸ் ஆகுது, அதுக்கு முதலில் அட்ஜஸ்ட் செய்யாம அடிக்க ஆரம்பிச்சதில ஹெய்டன் மயிரிழையில் தப்பினார். பினால் ஷா கால் தடுமாறி விழுந்து காப்பாத்திட்டார்.

அபிஷேக் நாயரோட அதிரடி திருப்பு முனை, ஃபிளிண்டாஃப் யார்க்கர் செய்ய முயற்சி செய்து எல்லாம் ஃபுல்டாஸா போட்டு கொடுத்துட்டார்.

10 ஓவர் வரைக்கும் நின்னு ஆடி அதுக்கப்புறம் அடிக்க ஆரம்பிச்சாதான் ஜெயிக்க வாய்ப்பு.

இது ஜெயிக்க வேண்டிய மேட்ச். இதில் தோர்கிறார்கள் என்றால் அதுக்கு காரணம் ஓவர் கான்ஃபிடென்ஸ் என்று சொல்லலாம். ஹெய்டன் தவறவிட்ட டெண்டுல்கர் கேட்சுக்கு, அவருக்கு வாழ்வு கிடைச்சாச்சு. அவர் நிலைத்து ஆடினால் ஜெயிக்கலாம்.

சுட்டிபையன்
18-04-2009, 01:12 PM
ஒன்லைனில் போட்டியை பார்பதர்க்கு (http://cricbitz.blogspot.com/2009/04/ipl-new.html)

சுட்டிபையன்
18-04-2009, 01:16 PM
பிளின்டாப் மற்றும் கைடன் இருவரும் இருக்கும் வரை சென்னைக்கே வெற்றி வாய்ப்புக்கள் அதிகம்

தாமரை
18-04-2009, 01:25 PM
சென்னை சூப்பர் கிங்க்ஸ் பௌலிங்கில் அந்த ஒரு ஃபிளிண்டாஃப் ஓவரைத் தவிர எல்லா ஓவரும் நன்றாக இருந்தன. மொத்த எக்ஸ்ட்ராக்கள் 3. மும்பை அதுக்குள்ள 7 எக்ஸ்ட்ரா குடுத்தாச்சு..

ஸ்பின் பௌலிங்கை தோனி உபயோகப்படுத்தவே இல்லை. இது சரியா தவறா என்பது மேட்ச் முடிந்த பின்னால்தான் தெரியும்.

பாப்பாவுக்கு பதிலா அடுத்த மேட்சில முரளி விஜய் வந்துருவார்னு எதிர்பார்க்கலாம்.

தாமரை
18-04-2009, 01:39 PM
இன்னும் 10 ஓவர்களில் 96 ரன்கள் தேவை. ஹர்பஜன் அடிவாங்கினால் ஒழிய ஜெயிப்பது கடினம். இரண்டு நல்ல ஓவர்கள் தேவை,,,

ஜெயசூர்யாவும், ஹர்பஜனும் நெருக்கடிக்கு தள்ளிக் கொண்டு இருக்கின்றனர்.

மதி
18-04-2009, 01:47 PM
முடியாது போலிருக்கே...

அடிப்பேனா என்றிருக்கிறார்கள்...

மதி
18-04-2009, 01:47 PM
தோனியின் தோணி கரையேறுமா???

மதி
18-04-2009, 01:53 PM
ஓரமும் ஓரமா போயிட்டார்....

தாமரை
18-04-2009, 01:57 PM
தாமரை சொன்னா கேட்கணும்..

முதல் பேட்டிங் பண்ணச் சொன்னேன் கேட்கலை.

ஸ்பின் பௌலிங்கை யூஸ் பண்ணச் சொன்னேன் கேட்கலை.

சரி கொஞ்சம் பொறுமையா ஆடுங்கப்பா பால் பௌன்ஸ் ஆகுதுன்னேன் கேட்கலை..

140+ மேல டார்கெட் இருந்தா கஷ்டம்னேன்.. அள்ளிக் கொடுத்தாங்க..

சரி சரி அடுத்த மேட்சில பார்ப்போம்.

மதி
18-04-2009, 01:59 PM
அதான்... பத்ரியும் போயாச்சி....

பசிக்குது சாப்பிட போறேன்..

தாமரை
18-04-2009, 02:23 PM
இந்த மேட்சில் என்ன சரியா நடந்தது என்றும் என்ன தவறு என்றும் சொல்லுங்களேன். விவாதிக்கலாம்.

1. பார்த்திவ் படேல்

முதல் பால்ல ரன் அவுட் ஆகி இருக்கணும் தப்பிச்சார். அப்புறமும் அழகா எட்ஜ் வாங்கி அவுட் ஆனார். கீப்பிங்க்ல பெரிசா ஒண்ணும் செய்ய வாய்ப்பு கிடைக்கலை.
தெண்டுல்கர் - ஜெயசூர்யா ஆடியதைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு புது பால் எவ்வளவு ஸ்விங் ஆகும்னு தெரிஞ்சிருக்கணும்.

மார்க் 20. - ஃபெயில்

2. மேத்திவ் ஹெய்டன்

அழகான லட்டு மாதிரியான டெண்டுல்கரின் கேட்சைத் தவற விட்டார். இண்டியன்ஸ் 165 ஐ எட்ட ஒரு முனையில் தெண்டுல்கர் நின்று விளையாடியதே காரணம்.

பேட்டிங்கிலும் ஹர்பஜனிடம் தடுமாறினார். ரன்வேகத்தை அதிகப்படுத்த முடியலை

மார்க் 50

தாமரை
18-04-2009, 02:59 PM
3. சுரேஷ் ரெய்னா

ஃபீல்டிங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பேட்டிங்கிலும் செட் ஆகும் முன்பு அடித்து ஆடி விக்கெட்டை அள்ளிக் கொடுத்து விட்டார். இவரிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மார்க் 15 மட்டுமே.

4. ஃபிளிண்டாஃப்

முதல் இரண்டு ஓவர்கள் நன்றாக போட்டார். இவரின் மூணாவது ஓவர்தான் மேட்ச் மாறவே காரணம். அதில் முதல் நான்கு பால்கள் ஃபுல்டாஸ். ஐந்தாவது பால் எதிர்பார்த்த மாதிரி ஷார்ட் பிட்சா போட்டுக் கொடுத்தார்,

பேட்டிங்கிலும் எதிர்பார்த்ததில் பாதியையே சாதித்தார். எனவே இவருக்கு மார்க் 50.

5. பத்ரிநாத்

மார்க் போடற அளவுக்கு ஒண்ணும் செய்யலை. சான்ஸூம் இல்லை. ஃபீல்டு பண்ணினார் அதுக்கு வேணும்னா 10 மார்க் கொடுக்கலாம்,

6. தோனி

கடைசி நிமிஷத்தில் பேரை மாற்றியது எனது முன்கூட்டியே பிரிப்பேர் ஆகாம வந்திருக்கார் எனக் காட்டுது.. நானே இங்க நடந்த மேட்சுகளைப் பார்த்து ஃபர்ஸ்ட் பேட்டிங், ஸ்பின் மற்றும் ஸ்லோ பௌலுங் அப்படின்னு அனலைஸ் செய்யறப்போ, இவர்கள் செய்யாமலா இருந்திருப்பாங்க. ஓவர் காஸ்ட் ஃபாஸ்ட் பௌலருக்கு அஸிஸ்டண்டா இருக்கும்னு ஒரு காரணத்திற்கு ஃபீல்டிங்கை எடுத்தார்,

ஃபிளிண்டாஃப் ஓவர்களை கடைசி ஓவர்களுக்காக சேமித்தது கொஞ்சம் தப்பாயிடுச்சி. அஸ்வின் இருந்தும் ஒரு ஓவருக்கு கூட உபயோகப்படுத்தலை. பேட்டிங்கிலும் கடைசியில் ரன் வேகத்தைக் கூட்ட முடியாமல் அவதிப் பட்டார்.
எனவே மார்க் 35.

மன்பிரீத் கோனி

4 - 0 -32 -2 நல்ல பௌலிங்க்தான் மலிங்கா ஃபிகரைப் பார்க்காத வரை. தன்னுடைய காரியத்தைச் சரியா செய்தார். தெண்டுல்கரின் கேட்சை ஹெய்டன் பிடித்திருந்தால் இன்னும் நல்ல ஃபிகர் கிடைச்சிருக்கும். அதனால் 60 மார்க்

ஜேக்கப் ஓரம்

பௌலிங்கில் எதிர்பார்த்தமாதிரி 4-0-30-1. பேட்டிங்கில் ரன் ரேட்டுடன் போட்டியிட வேண்டி இருந்ததால் 8 ரன். ஒரு ரன் அவுட்டும் பண்ணினார்.
அதனால இவருக்கு 50 மார்க்.

ஜோகிந்தர் ஷர்மா

4-0-25-1 பேட்டிங்கிலும் 16 ரன்.. எதிர் பார்த்ததை விட அதிகம் செய்திருக்கார் அதனால 60 மார்க்.

திலன் துஷாரா

ஜெயசூர்யா விக்கெட்டை எடுத்தார், 4-0-32-1 ங்கறது ஆவரேஜ்தான், டெண்டுல்கர் விக்கெட்டை எடுக்கததால ஃபெயில் 30 மார்க்

அஸ்வின்

வாய்ப்பே கொடுக்காம தப்பு சொல்லக் கூடாது.

தாமரை
19-04-2009, 01:50 AM
ராயல்ஸ் சரி மாத்து வாங்கி இருக்கு. முக்கிய காரணம் திராவிட், கும்ப்ளே மற்றும் பிரவீண்குமார். தென்னாப்பிரிக்கா பிட்சு தென்னாப்பிரிக்கா பிட்சு அப்படின்னு கதை விட்டவங்க இப்போ ரெண்டு மேட்சை ஒரு பிட்ச் தாங்காம பிஞ்சு போய் கிடக்கறதைப் பார்த்து அடங்கணும்.

திராவிடுக்கு இருந்த மனக்குழப்பத்தை தன் ஆதரவு மூலம் மாற்றிய தோனிக்கு நன்றி சொல்லணும். இந்திய இலங்கை டெஸ்ட் போட்டிக்குப் பின்னால் இந்திய இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது திராவிடை எல்லோரும் தூக்கிடலாம்னு பார்க்க தோனி சப்போர்ட் பண்ணினார். அப்பவே தலைக்கு சொன்னேன், இது திராவிடுக்கு திருப்பு முனைன்னு. நியூசிலாந்து போட்டிகளின் போதும் சரி இப்பவும் சரி என் கணிப்பை சரியாக்கிய திராவிட் வாழ்க.

இங்கிலாந்துக்கு நன்றியும், இரண்டாம் டெஸ்ட் மேட்சும்!

தங்கள் சுற்றுப்பயணத்தை தீவிரவாத தாக்குதலுக்காக மாற்றிக் கொள்ளாமல்,
இந்தியாவிற்கு திரும்பி வந்து இரண்டு டெஸ்ட் மேட்சுகளை ஆடிய இங்கிலாந்து அணிக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.

முதல் டெஸ்ட் வியூகம் புரிந்ததுதான். அணி வீரர்கள் மீது தோனி கொண்ட நம்பிக்கை நன்கு தெரிந்தது.

இரண்டாம் போட்டிதான் பலரின் புருவங்களை உயர்த்தி விட்டிருக்கிறது. வெற்றிக்காக போராடவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்திருக்கிறது.

ஆனால் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் உண்டு.
இரண்டாம் நாள் தொடக்கத்தில் மிகச் சிறந்த் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் என்னைக் கேட்டார். என்ன நடக்கும் இந்தப் போட்டியில் என்று..

என் பதில் - இந்தியா முதல் இன்னிங்ஸில் 450+ ரன்கள் எடுக்கும். அடுத்ததாக இங்கிலாந்தை 250 ரன்களுக்குள் சுருட்டி ஃபாலோ ஆன் செய்ய வைக்க முயற்சி நடக்கும். அது பலிக்கவில்லையெனில் ஆட்டம் டிரா.

ஆனால் மூன்றாம் நாள் இங்கிலாந்து ஃபாலோ ஆனில் இருந்து தப்பி விட்டது. கிரிக்கெட் வல்லுனர்களின் கருத்தோ எப்படியும் இந்தியா வெற்றி பேறப் போராடும் என்பதுதான். பிட்ச் இந்திய பௌலர்களுக்குச் சாதகமாக இருக்குமென.
இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸில் 302 ரன்னிற்கு சுருண்ட போது சட்டென ஆட்டத்தில் உயிர்ப்பு வந்தது. சேவாக் அவுட் ஆனவுடன் அது காணாமல் போயிற்று.

நான்காம் நாள் ஆட்டத்தில் கம்பீர் - யுவராஜ் - லக்ஸ்மண் முயற்சியால் ஆட்டம் சற்று இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாக தோற்றம் ஏற்பட்டது.

ஆனால் - இந்த மிகப் பெரிய ஆனாலுக்கு காரணம் இருக்கிறது. பிட்ச் எப்படி இருக்கிறது என்பதைக் கணிப்பதிலும் 10 இங்கிலாந்து விக்கெட்டுகளை எடுக்கக் கூடிய திறமை இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அந்தப் பிட்சில் சாத்தியமா என்பதிலும், எது பாதுகாப்பான வெற்றி இலக்கு என்பதிலும் கருத்து வேறுபாடுகள்.

கம்பீர் - யுவராஜ் ஆட்டத்திலும், பீட்டர்சன், காலிங்வுட், ஸ்ட்ராஸ் ஆட்டத்திலும் இருந்த உறுதியைக் கொண்டே தோனி முடிவெடுத்தார்.
அவர் முன் இருந்த சாத்தியக்கூறுகள்

1. இந்தியா 300 ரன்களை இலக்காக கொடுத்து இங்கிலாந்தை ஆட விடலாம். முடிவில் இந்தியா வெற்றிபெற 10 சதவிகித வாய்ப்பு. தோல்வி பெற 10 சதவிகித வாய்ப்பு. 80 சதவிகிதம் டிரா ஆகலாம். வெற்றிபெற்றால் பாராட்டுதான். தோல்வி பெற்றால் தொடர் சமனாகும். டிரா ஆனால் உபயோகம் இல்லை.

2. இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்யலாம். ஆட்டம் டிரா என்பது 100 சதவிகிதம் உறுதி. இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் என்ன லாபம்?
இருக்கிறது. யுவராஜ் புதிதாக அணிக்கு வந்துள்ள வீரர். அவருக்கு பேட்டிங்கில் உறுதி வர இது ஒரு வாய்ப்பு. அவருடைய பேட்டிங் சிலாட் மிக முக்கியமான ஒன்று. அதற்கான ஒரு பயிற்சி கிடைக்கும்.

ஆக டிரா என்பது 80 சதவிகிதத்திற்கு மேல் உறுதியான முடிவு. 10 சதவிகித வாய்ப்பு தோற்க. அதனால் எடுக்கப் படும் முடிவு பயனளிப்பதாக இருத்தல் முக்கியம்.

அதைத்தான் தோனி செய்திருக்கிறார்.

கம்பீருக்கும் - யுவராஜூக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்தார். இதனால் அவர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்பட வாய்ப்பு கொடுத்தார்.
திராவிடை 5 ஆவ்து ஆட்டக்காரராக களமிறக்க பல வல்லுனர்கள் சொன்னபோதும் தோனி அசையவில்லை. அவருடைய இந்த நம்பிக்கை தரும் சப்போர்ட் திராவிட் மனதில் இருந்த அந்த கூட்டைத் தகர்த்து அவரை வெளிக்கொணர்ந்தது.

தன் ஆடாமல் குழுவுக்கு வெளியே இருந்து ஆட்டி வைக்கும் வல்லூறுகளால் காயப்பட்ட அவர் மனம் இதனால் சற்று உறுதி பெறும் என நம்புகிறேன். அடுத்த தொடரில் அது வெளிப்படும் என உறுதியாக நம்புகிறேன்.

ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறுவது மட்டும் தொலை நோக்கில்லை. அடுத்தடுத்து வரும் ஆட்டங்களிலும் தலைவன் தங்கள் மீது அக்கறை கொண்டவன் என உணர்ந்து முழுப்பங்களிக்க வீரர்களைத் தூண்டுவது இது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ர முடிவுகள் வீரர்கள் விஷயத்தில் வேண்டாம். ஊக்கம் கொடுத்தால் வீரர்கள் மின்னுவார்கள் என எடுத்துக் காட்டப் போகும் நிகழ்வு இது.

இது தோனியின் தொலைநோக்கிற்கு உதாரணமாக அமையப்போகும் டெஸ்ட். ஆக இரண்டாம் டெஸ்டில் தோனி எடுத்த முடிவு அணிக்கு நன்மை தருவதாகவே அமையும்.

தோனியை விமர்சிப்பவர்கள் இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்."

-------------------------------------------------------------------------------------------

சரிதானே தலை.

திராவிட் ரொம்ப மெதுவா விளையாடக் காரணம் அவங்க அப்பா அம்மா தான். அவங்க பேச்சை திராவிட் மீறமாட்டார். (குழப்பமா இருக்கா? இருங்க அலற ஸாரி தெளிய வச்சுடறேன்)

அதாங்க அவங்க அப்பா அம்மா DRAW IT அப்படின்னு பேர் வச்சதைச் சொன்னேன். அதனாலதான் அவர் நிதானமா ஆடி டெஸ்ட் போட்டிகளை டிரா பண்ணப் பார்த்தாரு. ஹிஹி..

அனில் கும்ப்ளே 5 விக்கெட்டுகள் அதுவும் டி20 ஆட்டங்களில் பெஸ்ட் எகானமி ரேட்ல எடுத்து அதுவும் தென்னாப்பிரிக்காவில் எடுத்து எல்லோரையும் யோசிக்க வச்சுட்டார். விஜய் மல்லையா போன வருஷம் பட்ட அடிக்கு இந்த வருஷம் இவங்க ரெண்டு பேரும் மருந்து போட முயற்சி செய்திருக்காங்க..

முதலிரண்டு ஆட்டங்களின் முடிவு மத்தவங்களுக்கு ஷாக்கா இருந்தாலும் எனக்கு இல்லை,

ஏன்னா பிட்ச் நான் எதிர்பார்த்த மாதிரியே விளையாடினதுதான். சரி அடுத்த பிட்ச் அனலைஸ்ல பிட்சு பிட்சு வைப்போம். இனி அனைத்து ஆட்டங்களிலும் "மாப்ளே" முரளி இருப்பார் என்று நம்பலாம்.

58 ரன்னில் சுருண்ட ராஜஸ்தானுக்கு ஆறுதல்கள். எல்லாம் விதிதான் நம்ம கையில இல்லை, டாஸ் தோத்தப்பவே மேட்ச் பாதி தோத்தாச்சு ராஜஸ்தான்.

ஆகாயத்தில் கோட்டை கட்டாம, இனிமேலாவது பூமியைப் பார்த்து ஆடினா (அதாவது பிட்சின் தன்மை) நல்லது..

aren
19-04-2009, 03:13 AM
பெங்களூர் ஆளுங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். எப்பொழுதுமே தோற்கும் அவர்கள் அணி இன்று வென்றிருக்கிறது.

தாமரை
19-04-2009, 04:32 AM
அதை விடுங்க ஆரென்... நேத்து நாலு இன்னிங்க்ஸ்லயே பிட்ச் நாறிடுச்சி.. இன்னிக்கு அதே பிட்சிலே இன்னும் நாலு இன்னிங்க்ஸாம்...டெல்லி டேர் டெவில்ஸூக்கு கொண்டாட்டம் தான்.

ஒரே பிட்சில் இப்படி தொடர்ச்சியாக மேட்சுகளை நடத்துவது தவறு என்பது என்பது இதிலிருந்து நல்லா தெரியுது இல்லையா.

சரி சென்னை கிங்க்ஸ் என்ன செய்யணும்னு பார்ப்போம்.

அல்பி மோர்கல் உள்ள வரவேண்டியது முக்கியம். பார்த்தீவ படேலுக்கு பதிலா முரளி விஜய் ஆட வரலாம். அதே மாதிரி முரளியும் உள்ளே வரவேண்டியது முக்கியம்..

பிட்சுகளின் தன்மையை அறிந்து அதற்கேற்ப ஆட்டத்தை அமைத்துக் கொள்வது அவசியம்...

மனம் தளர வேண்டிய அவசியமில்லை...

பரஞ்சோதி
19-04-2009, 09:02 AM
பார்த்திவ் பட்டேல் முதல் பந்தில் தப்பியதை சரியாக பயன்படுத்தவில்லை.

மேத்யூ ஹைடன் ஏதோ ஹர்பஜனை அடிக்க வேண்டும் போல் ஆடியது அணிக்காக அடியதாக தெரியவில்லை.

ரெய்னா உடனே அதிரடியில் இறங்கியது தவறு. விக்கெட்களை கை வசம் வைத்திருந்தால் கடைசி 6 ஓவரில் 60 ரன்கள் கூட அடிக்க முடியும். அதை ஏன் கணக்கில் வைக்கலைன்னு தெரியலை.

பிளிண்டாப் இறங்கிய இடத்தில் தோனி, அல்லது பத்ரிநாத் இறங்கியிருக்க வேண்டும்.

ஜொகிந்தர் சர்மாவை ஒரு ரன் எடுக்க சொல்லி, தோனி பவுண்டரிகளாக, சிக்ஸர்களாக அடித்திருக்க வேண்டும். காட்டான் போல் ஜொகிந்தர் மட்டையை வீசியது தவறு.

ஜொகிந்தர் இடத்தில் கோனி வந்திருக்க வேண்டும்.

தோனி தோல்வியை கண்டு கவலைப்படாமல் இருந்தது தான் ஆறுதல் கொடுக்குது :)

"பொத்தனூர்"பிரபு
19-04-2009, 09:11 AM
///
2. மேத்திவ் ஹெய்டன்

அழகான லட்டு மாதிரியான டெண்டுல்கரின் கேட்சைத் தவற விட்டார்
///

அந்த பந்தை லெக் சைடில் அடிக்க்க முயன்றார் சச்சின்
அதனால் பந்து விளிம்பில் பட்டு ஹைடனை நோக்கி வருவது ஹைடனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ,சச்சின் முதுகு மட்டுமே தெரிந்திருக்கும் , பந்து லெக்சைடில் செல்லும் என்று சற்று அசால்டாகவும் இருந்திருக்க்க்லாம்

"பொத்தனூர்"பிரபு
19-04-2009, 09:13 AM
////
அல்பி மோர்கல் உள்ள வரவேண்டியது முக்கியம். அதே மாதிரி முரளியும் உள்ளே வரவேண்டியது முக்கியம்..
/////

யாரை நீக்குவது??? ? ??? ??? ???? ????

தாமரை
19-04-2009, 05:43 PM
திலன் துஷாராவிற்கு பதிலாக முரளி வரலாம்.. ஓரத்திற்கு பதிலாக மோர்கல்..

பார்த்திவ் படேலுக்கு பதிலாக முரளி விஜய்.,...

அப்புறம் அஸ்வினை பந்துவீச்சுக்கு உபயோகப்படுத்த வேண்டும்

அப்புறம் பாலாஜி - ஜோகிந்தர் ஷர்மா இடத்திற்கேற்ப உபயோகிக்க வேந்தும்..

பிட்ச் ஸ்டடி முக்கியம்.. அந்த பிட்சில் யாருடைய பந்து வீச்சு நன்றாக இருந்தது.? எப்படிப்பட்ட பேட்ஸ்மேன்கள் ஆடியிருக்கிறார்கள்?... தட்ப வெப்ப நிலை எப்படி?

மழை வருமா? ஃபர்ஸ்ட் பேட்டிங்கா இல்லை செகண்ட் பேட்டிங்கா இப்படிப் பல் விஷயங்களை ஆராய்ட்சி செய்து திட்டங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

20/20 இளைஞர்களின் ஆட்டம் என்றவர்கள்.. இதுவரை நடந்த போட்டிகளைக் கூர்ந்து கவனித்தால் அனுபவம் எவ்வளவு முக்கியம் என்பதையும் உணரலாம்..

தாமரை
20-04-2009, 01:25 AM
போர்ட் எலிசபெத்தில் நடந்த ஒரே ஒரு மேட்சில்

http://content.cricinfo.com/ipl2009/engine/match/319112.html

டேல் ஸ்டெயின் கலக்கி இருக்கார். இந்த பிட்ச் ஃபாஸ்ட் பௌலிங்கிற்கு அஸிஸ்ட் செய்து இருக்கிறது.

எனவே முதலில் ஃபீல்டிங் எடுப்பதும் நல்ல ஃபாஸ்ட் பௌலர்களை களத்தில் இறக்குவதும் முக்கியம்.

சரி கடந்த சில ஒரு நாள் போட்டிகளையும் பார்ப்போம்

http://stats.cricinfo.com/statsguru/engine/ground/59159.html?class=2;template=results;type=aggregate;view=innings

டேல் ஸ்டெயின் மற்றும் பிரவீன் குமார் போன்றோரின் ஓவர்களைக் கவனமா ஆடணும். இறுதி 10 ஓவர்களில் ரன்களைக் குவிக்கணும். ஆரம்பத்தில் விக்கெட்டுகளைக் காப்பாற்றிக் கொள்ளுதல் முக்கியம்.

இந்தப் போட்டியில் நிடினி, மோர்கள் போன்றவர்களை களமிறக்குதல் அவசியம். ஜோகிந்தருக்கு அல்லது அஸ்வினுக்குப் பதில் பாலாஜியும் வரலாம்.

டெல்லி, ஹைதராபாத், மும்பை, பெங்களுர் அணிகள் முதல் சுற்றில் வென்றுள்ளன,

இன்னும் பதிமூணு சுத்து இருக்கு...

ஒரே பிட்சில் தொடர்ச்சியாக ஆடுவது தப்பு என்பதற்கு உதாரணமாக இந்த ஐபிஎல் போட்டிகள் இருக்கும்.

என்ன ஸ்கோர் இருந்தால் வெல்லலாம் என்று பார்ப்பதற்கு சரியான அளவிற்கு விவரங்கள் இல்லை. ஆனாலும் 160+ நல்ல ஸ்கோர் என்று சொல்லலாம்.

ஆட்டத்தின் பின் பாதியில் நன்கு அடித்து ஆடலாம்,

தாமரை
20-04-2009, 01:29 AM
ஆர்.பி.சிங், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, சச்சின், திராவிட், ஹெய்டன்.. கிப்ஸ்.. சேவக், ஃபிடல் எட்வர்ட்ஸ், ஓஜா... கோயல்

முதல் நான்கு போட்டிகளில் கலக்கியது யாருங்க அப்படின்னு கேட்டால் இவங்களைச் சொல்லலாம்.

பீட்டர்சன்னும், ஃபிளிண்டாஃபும் ஓகே என்றாலும் அவங்களுக்கு கொடுத்த காசுக்கு அது போதுமா அப்படின்னு பார்க்கணும்..

மற்றபடி இன்னும் என்னென்ன அதிசயங்கள் காத்திருக்கு என்று சொல்ல முடியாது.. புன்னகைக்கும் டெண்டுல்கர், கும்ப்ளே, திராவிட் ஒருபுறம்...

கங்கூலியின் தடுமாற்றம் இன்னொரு புறம்,...

சென்னை அணி ஸ்பின் இல்லாதது தவறு என உணர்ந்திருக்கும்..ஒரு ஸ்பின்னரை ஒரு ஓவருக்காவது முயற்சி செய்ய வேண்டும்.

aren
20-04-2009, 02:02 AM
அடுத்த சென்னை கிங்ஸ் ஆட்டத்தில் துஷாவிற்கு பதில் நிட்டினி உள்ளே வரலாம். ஆல்பி மோர்கல் ஓரமிற்கு பதிலாக உள்ளே வரலாம்.

இந்த இரண்டு மாற்றமே இருக்கும் என்று நினைக்கிறேன்.

அப்படி முரளியைக் கொண்டுவந்தால் நிட்டினி இடத்தில் கொண்டுவரலாம். அப்படியென்றால் அஸ்வினிற்கு பதில் பாலாஜியை இறக்கலாம்.

தாமரை
20-04-2009, 06:27 AM
சனத் ஜெயசூர்யா
சச்சின் டெண்டுல்கர்
சிகார் தவான்
டும்னி
அஜிங்கா ரஹானே --> அபிஷேக் நாயர்
ட்வைன் பிராவோ / மொஹம்மது அஷ்ரஃபுல்
யோகேஷ் டகாவலே
ஜாகீர்கான்
தவால் குல்கர்னி --> ஆர்.ஆர்.ராஜே
கைல்மில்ஸ் / லதீஷ் மலிங்கா / தில்ஹரா ஃபெர்ணாண்டோ
ஹர்பஜன் சிங்

இப்படி ஒரு அணி அமையும். சிகார் தவான் முதல் விக்கெட் முதல் 4 ஓவர்களுக்குள் விழுந்து விட்டால் மூன்றாவதாக களமிறங்கலாம். இல்லாவிட்டால் டும்னி அல்லது ரஹானே மூன்றாவதாக களமிறங்குவர்.

மும்பை அணியின் வெற்றிக்கு : தெண்டுல்கர் ஜெயசூர்யா டும்னி பேட்டிங்
ஜாகிர்கான், கைல்மில்ஸ் பந்து வீச்சு மிக மிக முக்கியம்
சென்னை அணியின் வெற்றிக்கு மோர்கல் / ஃபிளிண்டாஃப் / நிட்னி பந்துவீச்சு, எதாவ்து மூன்று பேட்ஸ்மேன்களின் கைவரிசை முக்கியம்.

தலைமை...

டெண்டுல்கரின் தலைமைப் பாணி...

டெண்டுல்கர் கொஞ்சம் பர்ஃபெக்ஷனிஸ்ட், எந்த வீரர் தவறு செய்தாலும் இவர் பாதிக்கப்படுவார், நடந்தது நடந்துவிட்டது அடுத்தது என்ன என்ற மனநிலைக்கு இவர் வர சற்று நேரமாகும்.

அடுத்ததாக இவர் மனதில் உள்ள திட்டங்களை உரிய வீரருக்கு புரிய வைப்பது. தெண்டுல்கர் பல நுணுக்கங்கள் தெரிந்தவர். அவருடைய எதிர்பார்ப்புகள் பந்து வீச்சாளர்கள் அல்லது தடுப்பாளர்களுக்கு நன்கு புரியும்படி எடுத்துச் சொல்லும் திறமை சற்றுக் குறைவு. அவர் போட்ட திட்டம் சரியாக இருந்தாலும் அதை பந்து வீச்சாளர்கள் புரிந்து கொள்ளாததால் அவர் எதிர்பார்த்த விளைவுகள் ஏற்படாமல் போகலாம்.

ஆகவே முதலில் பேட்டிங் எடுப்பது தெண்டுல்கரைப் பொறுத்த வரை நல்லது. இரண்டாவதாக பேட்டிங் செய்தால் அவருக்கு கடினம். 20 ஓவர்களை மூளையில் ஆடி இருப்பதால் சற்று களைத்திருப்பார்.

டெண்டுல்கரின் முக்கிய பிளஸ் பாயிண்ட் அவரது பேட்டிங் தான். ஒரு நல்ல துவக்கம் கொடுத்தால் அணிக்கு அவர் இருக்கும் உணர்வே மிகப் பெரிய தெம்பாக இருக்கும். அந்த மனநிலையை முதலில் பேட் செய்வதால் அவரால் ஏற்படுத்த முடியும். அது வீரர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும். நல்ல பலனையும் கொடுக்கும்.

தெண்டுல்கர் சிரித்த முகத்துடன் இருப்பது அவரது அணிக்கு மிகப் பெரிய பலமாக அமையும்.

இவரது வியூகங்களை அணிக்கு புரியும்படி இவர் செய்வதில்தான் அணியின் வெற்றி அடங்கிக் கிடக்கிறது.

தோனி :

இவரோட தலைமையைப் பற்றி மிகப் பெரிய கட்டுரையே எழுதியாகி விட்டது, தலையில் மை போடற வரைக்கும் இவர் தான் தலை என்பதை மையால் அடிகோடு போட்டாச்சு..

மும்பையைப் பற்றிக் கணித்ததில் அபிஷேக் நாயர் என் கணிப்பிலிருந்து விடுபட்டு விட்டார். இன்னொரு பந்துவீச்சாளர் ஆர். ஆர். ராஜே ஜொலிக்கவில்லை. அவர் அடுத்த மாட்சில் மாற்றப்படுவாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

:icon_b::icon_b::icon_b:

தாமரை
20-04-2009, 06:36 AM
ராயல்ஸைப் பத்திப் பாத்துட்டோம்..

ராயல் சேலஞ்ஜர்ஸைப் பத்தியும் பார்க்கலாமே

ராயல் சேலஞர்ஸை பொறுத்தவரை வெளிநாட்டு வீரர்கள் இம்முறை சரியாகவே அமைஞ்சிருக்காங்க. உள்நாட்டுக் குழப்பம்தான்.

பேட்டிங்கை தொடங்க

திராவிடும் உத்தப்பாவும் வரலாம். திராவிட் வெளிய வரும்பொழுது வாசிம் ஜாஃபர் பேட்டிங்கைத் துவக்கலாம்.

1. திராவிட் / வாசிம் ஜாஃபர்
2. ராபின் உத்தப்பா
3. ஜெஸ்ஸி ரைடர்
4. கெவின் பீட்டர்ஸன் / மார்க் டெய்லர்
5. ஜேக்குவஸ் கல்லீஸ்
6. மார்க் பௌச்சர் / ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி???
7. விராட் கோழி
8. பிரவீன் குமார்
9. புவனேஸ்வர் குமார்
10. டேல் ஸ்டெயின் ??? / வினய் குமார் ??
11. பாலச்சந்திர அகில் / சுழல் பந்து வீச்சாளர் (கும்ப்ளே, ஜோஷி.. )

ராயல் சேலஞர்ஸிடம் வெளிநாட்டு வீரர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். கேமரூன் வைட், ரோலொஃப் வான் டர் மெர்வ், ராஸ் டெய்லர், மார்க் பௌச்சர், தில்லான் டெ ஃப்ரீஸ், நேதன் பிராக்கென் போன்றோருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காமலேயே போகலாம். சுனில் ஜோஷி, கும்ப்ளே ஆகியோரும் விளையாடமலேயே போகலாம்.

மார்க் பௌச்சருக்கு பதில் ஜெஸ்ஸி ரைடரை ஆட வைப்பது மூலம் இரண்டு ஆல்ரவுண்டர்கள் அணியில் இடம் பெறுவார்கள். டேல் ஸ்டெய்னையும் விளையாட வைக்கலாம்.

சுழல் பந்து வீச்சாளர் தேவை என்ற பட்சத்தில் புதிய பந்து வீச்சாளர் யாரவது தளைத்தால் பரவாயில்லை. சுனில்ஜோஷி / அனில் கும்ப்ளே என்றால் அனில் கும்ப்ளே விளையாடுவாரா என்பது சந்தேகம். விளையாடினால் நல்லது.

இந்திய வீரர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் மிகப் பெரிய கவலை.திராவிட், உத்தப்பா, பிரவீன் குமார் மூன்று பேர் போக மீதி நான்கு இடங்களுக்கு ஆளைத் தேர்ந்தெடுப்பதற்குள், கேப்டனும் கோச்சும் பாவம். அதனால் என்னால் ஆன உதவியாக அணியை பரிந்துரைத்து இருக்கிறேன்.

ராயல் சேலஞர்ஸிற்கு முன்னால் இருப்பதும் ராயல் சேலஞ்ஜ்தான். விஜய் மல்லையா சென்ற ஆண்டு வெடித்தது ஞாபகம் இருக்கலாம். கோச்சைக் கடாசி, திராவிட்டை பதவி இறக்கி, மார்ட்டின் குரோவை விரட்டி...

உலக அளவில் இது போன்ற உணர்ச்சி வசப்படுபவர்களின் அணிகள் அரையிறுதியைத் தாண்டுவதில்லை.

அரையிறுதிக்கு போராடும் அணிகளில் இது ஒன்றாக இருக்கும்.

முதலிரண்டு ஆட்டங்களில் வெற்றி என்பது மிக மிக அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே இந்த அணிக்கு உண்டு. அதன் பிறகு அணி எப்படி இணைந்து போராடுகிறது என்பதைப் பொறுத்துதான் வாய்ப்பு.

பெங்களூர் அணியில் எதிர்பாராதது கல்லீஸிற்கு பதிலாக ராஸ் டெய்லர் இறங்கியது.

அடுத்தது புவனேஸ்குமார் இடம்பெறாதது...

மற்றபடி கும்ப்ளே பற்றிச் ஆருடம் கணித்தது பலிச்சுடுத்து.

ஆனால் முதலிரண்டு ஆட்டம் பற்றிச்சொன்னதுல முதலாம் அணியை சுருட்டி வீசிட்டது பெங்களூரு. பிரவீன் குமார் / கும்ப்ளே / திராவிட் / பீட்டர்சன் கைங்கர்யத்தில். இரண்டாவது ஆட்டம் பார்க்கணும்.

இந்த ஆருடம் பலிக்கலை.:icon_p:

தாமரை
20-04-2009, 06:41 AM
ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த வருஷம் எப்படின்னு பார்ப்போம்.

1.ஸ்வப்னில் அஸ்நோட்கர்
2.கிரீம் ஸ்மித்
3.யூசுஃப் பதான்
4.ரவீந்த்ர ஜெடெஜா
5.நீரஜ் படேல்
6.டிமிட்ரி மஸ்கரெனாஸ் / .ஷான் வாட்ஸன்
7.மஹேஷ் ராவட் / நமன் ஓஜா.
8.முனஃப் படேல் /
9.மோர்னே மோர்கள் / ஷான் டெய்ட் / ஷேன் ஹார்வுட்
10.ஷேன் வார்னே
11 சித்தார்த் திரிவேதி / காம்ரன் கான்

ஆஸ்திரேலியா வீரரா?
உங்க பேர் ஷான் அல்லது ஷேன்ல ஆரம்பிக்குதா?

உடனே ராஜஸ்தான் ராயல்ஸை தொடர்பு கொள்ளவும். உடனே உங்களுக்கு அணியில் இடம் கிடைக்கலாம். ஷேனும் ஷானும் இருந்தா ஷைன் (Shine - Sign) பண்ணு வார்னே, என்று வார்னே பற்றி சொல்லலாம்.

ராயல்ஸைப் பற்றிக் கண்டுக்காதவங்க போன வருஷம் லக்குன்னு சொல்லலாம். ஆனால் அணிவரிசையைப் பார்த்தா பக்குன்னு இருக்கு.

ராஜஸ்தான் ராயல்ஸ் சென்ற வருஷத்தை விட இந்த வருஷம் ரொம்ப ரொம்ப பலமா இருக்கு. ஃபிளிண்ட் ஆஃப் இருந்தால் கூட சென்னை கிங்க்ஸ் இவங்க கிட்ட கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும் குவார்ட்டர் போட்டுட்டு குப்புற படுக்கவேண்டியதுதான்.

ராயல்ஸ் இந்த வருடம் தோற்கணும்னா அவங்களை எதிர்க்கும் டீமுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கணும்.

மொஹம்மது கைஃப் லிஸ்ட்ல இல்ல பார்த்தீங்களா? அவரை வீட்டுக்கு அனுப்பற அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கு டீம்.

ஷேன் வாட்ஸன் / டிமிட்ரி இரண்டு பேரில் ஒருத்தர் ஆடணும். வாட்ஸன் இல்லாததால் டிமிட்ரி ஆடுவார். வாட்ஸன் வந்தா டிமிட்ரி வெளிய வரணும்.

ஸ்மித் கண்டிப்பா இடம் பிடிப்பார். வார்னே போக இன்னொரு இடம் மோர்னே மோர்களுக்கு போகலாம் இரண்டாவது ஷான் டெய்ட் மூன்றாவது சாய்ஸ் ஹெர்வுட்.

இந்திய வீரர்கள் ஏறத்தாழ தங்கள் இடங்களை தங்கள் திறமையால் பிடிச்சிருக்காங்க என்றுதான் சொல்லணும்.

ராயல்ஸ் ரோல்ஸ் - ரோல்ஸ் ராய்ஸ்

ஒரே ஒரு பௌலர் விஷயத்தில் மிஸ்டேக்.. டைரன் ஹெண்டர்ஸன் வந்து ஆடினார்.

ராயல்ஸ் இந்த வருடம் தோற்கணும்னா அவங்களை எதிர்க்கும் டீமுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கணும்.

போன மேட்சில ராயல் சேலஞ்சர்ஸூக்கு இருந்தது நல்ல அதிர்ஷ்டமா? இல்லை கெட்ட அதிர்ஷ்டமா?

தாமரை
20-04-2009, 07:10 AM
அடுத்து கிங்க்ஸ். ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் போட்டியால் மோசமாக பாதிக்கபடுவது பஞ்சாப் கிங்க்ஸ் அப்படின்னு சொல்லலாம். ஷான் மார்ஸ் (இவரை எப்படி ஷேன் வார்னே தவறவிட்டார்னு தெரியலையே!!! :sprachlos020::sprachlos020::sprachlos020:) அப்புறம் ஜேம்ஸ் ஹோப்ஸ் இரண்டு பேருமே இல்லாம் போனதும்,ஸ்ரீசாந்தின் முதுகு வலியும், பிரெட் லீ இல்லாததும் அணியை சற்று பலவீனமாக்கி இருக்கு. சைமன் கடிச் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்காததால் அணியில் இடம் பெறுவார்,

வெளிநாட்டு வீரர்களில்

சங்ககாரா, ஜெயவர்த்தனே, ,சைமன் கடிச், ரவி பொபரா ஆகிய ஐந்து பேர் நல்லாத் தெரிஞ்சவங்க. லூக் போமர்ஸ்பேச் ஒரு பேட்ஸ் மேன். ஒருவேளை ஜெயவர்த்தனே ஜொலிக்காவிட்டால் இவர் ஆடக் கூடும். ஜெயவர்த்தனே, சைமன் கடிச் இருவரும் ஆட வாய்ப்பு இருக்கு

ஜெரோம் டெய்லர் ஃபிட்னஸ் பிர்ச்சனை இருப்பதால ஆடமாட்டார்..

உத்தேச அணி

1 சைமன் கடிச்
2. சங்கக்காரா[/B]
3. யுவராஜ் சிங்
4. ரவி பொபாரா
5. இர்ஃபான் பதான்
6. விஆர்வி. சிங்
7. தன்மய் ஸ்ரீவத்ஸவா 8. ஜெய்வர்த்தனே / யூசுஃப் அப்துல்லா..
9. பியூஷ் சாவ்லா / ரொமேஷ் பவார்
10. தருவார் கோழி (மட்டன் தரமாட்டார்)
11. ரந்தேப் போஸ்

ரொம்பவே கஷ்டமா இருக்கு, 7 இந்திய வீரர்களைத் தேர்ந்தெடுக்க, அதுவுமில்லாமபந்து வீச்சு பல்வீனமா இருக்கு. அதனால் இம்முறை அரையிறுதி வாய்ப்பு கிடைக்காது என்றே சொல்லலாம்.

:sprachlos020::sprachlos020::sprachlos020:

பஞ்சாபிற்கு இந்த வருஷம் அதிர்ஷ்டம் குறைவா இருக்குன்னு மட்டும் சொல்லலாம்,
,

கடிச் ஆடலை... தன்மய் ஸ்ரீவத்ஸவா ஆடலை, ரந்தேப் போஸ் ஆடலை..

அதுக்கு பதிலா கரன் கோயல் பட்டையைக் கிளப்பினார். யூசுஃப் அப்துல்லாவும், மாலிக்கும் களமிறக்கப்பட்டனர்.

அப்துல்லா, மாலிக், சாவ்லா மூணு பேரும் அடி வாங்கிட்டாங்க. காரணம் ஓவர்கள் குறைக்கப் பட்டது. இருந்தாலும் பஞ்சாப் விஷயத்தில் எதிர்பார்த்தே நடந்தது

தாமரை
20-04-2009, 07:15 AM
இந்த வருஷம் கில்கிறிஸ்ட்டுக்கு பயங்கர சோதனையான வருஷம். நிறைய சோதனை முயற்சி செய்யவேண்டியதா இருக்கும்.

அஃப்ரிடி இல்லை. சைமண்ட்ஸ் இல்லை இப்படி இல்லைகளை வரிசைப் படுத்தாம இருக்கறதைப் பார்ப்போம்.

கிப்ஸ் இந்த வருஷம் தென்னாப்பிரிக்காவில் விளையாடுவதால் நல்லா விளையாடுவார் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு, ஸ்டார்ட்டிங் ட்ரபுளை சரிசெய்தார்னா பிரஹாசிப்பார்

ட்வைன் ஸ்மித் இன்னொரு ஆல் ரவுண்டர், முதலிரண்டு வாரம் கை கொடுப்பார், இவர் போன பின்னால் ஸ்காட் ஸ்டைரிஸ் இந்த இடத்தை நிரப்பக் கூடும். ரையான் ஹாரிஸ் பந்து வீச்சில் இடம் பெறிவார் என நினைக்கிறேன்.

இந்திய வீரர்களில் லஷ்மண், ரோஹித் ஷர்மா, வேணுகோபால் ராவ், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, கல்யாண கிருஷ்ணா, விஜயகுமார்

டீமை போட்டுப் பார்ப்பமே

1. கில்கிறிஸ்ட்
2. லஷ்மண்
3. ரோஹித் சர்மா
4. கிப்ஸ்
5. வேணுகோபால் ராவ்
6. ஸ்மித் / ஸ்காட் ஸ்டைரிஸ்
7. ரவி தேஜா /
8. ரையான் ஹாரிஸ் / சமிண்டா வாஸ் / ந்வான் ஜொய்ஸா
9. ஆர்.பி.சிங்
10. கல்யாண்கிருஷ்ணா / விஜய்குமார்11. பிரக்யான் ஓஜா

அணி பார்க்க ஒரளவு நன்றாக இருந்தாலும் 20/20 களத்தில் சாதிக்குமா என்பது கேள்விக்குறிதான். எனவே இந்த வருடமும் அரையிறுதி வாய்ப்பைத் தவற விடலாம்.

இது வ்ரைப் பார்த்த அணிகளில்

சென்னை, ராஜஸ்தான், மும்பை இம்மூன்றும்

பெங்களூர் - டெல்லி - கல்கத்தா இம்மூன்றில் ஒன்றும் (வரிசைப்படி அதிக வாய்ப்பு) அரை இறுதிப் போட்டிக்கு வரலாம்.

ஹைதராபாத் இம்முறையும் இறுதியாய் வர வாய்ப்பு இருக்கிறது..

இது என்னுடைய ஆரம்ப கணிப்பு..

கணிப்பு என்பதால் சரியாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

இது சரியாக இருந்தால் நான் பெருமைப் படவும் போவதில்லை. என் பெருமையெல்லாம், சூப்பர் கிங்க்ஸ் என் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்வார்களா என்பதில்தான் இருக்கிறது. மற்றதெல்லாம் ஒரு அரட்டை மாதிரி...

ஸ்டார்ட் காமிரா ஆக்ஷன் சொல்லிடலாம்னு நினைக்கிறேன். நாளை மாலை முதல் போட்டி. அதுக்கு முதல் பெஞ்சில இடம் பிடிச்சு உட்கார்ந்து பார்க்கணும்..

:D :D :D

இதிலும் இரண்டு தவறுகள். ஃபிடல் எட்வர்ட்ஸ், நல்ல பந்து வீச்சு. ஹர்மீத் சிங்கும் நல்லா வீசினாங்க.

ஆர்.பி.சிங், ஒஜா இரண்டுபேரும், ஃபிடல் எட்வர்ட்ஸூம் சேர்ந்து அணிக்கு வெற்றி தேடித் தந்திருக்காங்க. ரிசல்ட்டைப் பொறுத்தவரை ராயல்ஸூக்கு அடுத்தபடி தப்புக் கணக்கு இவர்களைப் பொறுத்தவரை அதிகம் போட்டது போல் தெரிகிறது. காலம்தான் பதில் சொல்லணும்

அய்யா
20-04-2009, 08:16 AM
முதல் போட்டி
வெற்றி வாய்ப்பு

சென்னை சூப்பர் கிங்க்ஸ் 4 : 1 மும்பை இண்டியன்ஸ்.

தொடரும் அலசல்கள்

கிரிக்கெட், நிச்சயமற்ற முடிவுகளுக்கு பெயர்போனது என்று யாரோ சொன்னதாக நினைவு.

அய்யா
20-04-2009, 08:22 AM
பார்த்திவ் பட்டேல் முதல் பந்தில் தப்பியதை சரியாக பயன்படுத்தவில்லை.

மேத்யூ ஹைடன் ஏதோ ஹர்பஜனை அடிக்க வேண்டும் போல் ஆடியது அணிக்காக அடியதாக தெரியவில்லை.

ரெய்னா உடனே அதிரடியில் இறங்கியது தவறு. விக்கெட்களை கை வசம் வைத்திருந்தால் கடைசி 6 ஓவரில் 60 ரன்கள் கூட அடிக்க முடியும். அதை ஏன் கணக்கில் வைக்கலைன்னு தெரியலை.

பிளிண்டாப் இறங்கிய இடத்தில் தோனி, அல்லது பத்ரிநாத் இறங்கியிருக்க வேண்டும்.

ஜொகிந்தர் சர்மாவை ஒரு ரன் எடுக்க சொல்லி, தோனி பவுண்டரிகளாக, சிக்ஸர்களாக அடித்திருக்க வேண்டும். காட்டான் போல் ஜொகிந்தர் மட்டையை வீசியது தவறு.

ஜொகிந்தர் இடத்தில் கோனி வந்திருக்க வேண்டும்.

தோனி தோல்வியை கண்டு கவலைப்படாமல் இருந்தது தான் ஆறுதல் கொடுக்குது :)

நல்ல அலசல் அண்ணா!

பத்ரி அவுட் ஆனபோது, "ஆளுமைத்திறமும் அறிவும் மிக்க" தோனி ஏன் முனையை மாற்ற முயற்சி செய்யவில்லை என்பதும் கேள்விக்குரியது.

தாமரை
20-04-2009, 09:27 AM
சரி சரி... போன தோல்வியை மறந்து அடுத்த போட்டியை பார்ப்போம்..

ஆடுமிடம் போர்ட் எலிசபெத்.

டேஞ்சர் மச்சான் : டேல் ஸ்டெயின்

டாஸில் ஜெயித்தால் : பந்து வீச்சு

டார்கெட் ஸ்கோர் : 130 +

கள அறிக்கை : வேகப்பந்து வீச்சுக்கு கை கொடுக்கும் களம். முதல் 8 ஓவர் கவனமாக ஆடவேண்டும்.

முக்கிய விக்கெட்டுகள் : நிலைத்து ஆடத்தெரிந்த திராவிட், பீட்டர்சன் போன்றவர்கள். ராஸ் டைலர் தடுமாறலாம். ஜெஸ்ஸி ரைடர், பின் வரிசையில் வந்தால் ஆபத்து

சென்னை அணியில் ஆடவேண்டியவர்கள்

நிடினி, கோனி, மோர்கல், ஃபிளிண்டாஃப், பாலாஜி, ஹெய்டன், முரளிவிஜய், பத்ரிநாத், ரெய்னா, தோனி, சுதீப்தியாகி

பிளான்.. முரளிவிஜய், பத்ரிநாத் ஆகியோர் நின்று ஆடவேண்டும்.. பத்து ஓவர்கள் வரை விக்கெட்டுகளைக் காப்பாற்றிக் கொண்டு இரண்டாவது பத்து ஓவர்களில் படிப்படியாக ரன்னை உயர்த்த வேண்டும்,

டாஸ் ஜெயித்தால், முதலில் பந்து வீசவேண்டும். இது டேல்ஸ்டெயினை சற்று ஆபத்து குறைவானவராக மாற்றலாம்,

அடிக்க வேண்டியது : கும்ப்ளே, ரைடர், வினய்குமார், அகில் ஆகியோரின் பந்துவீச்சை.

சென்னை பந்துவீச்சில் நிடினி உபயோகமாக இருப்பார். கோனி நிடினி ஓபன் செய்ய, ஃபிளிண்டாஃப், அல்பி அடுத்து வர பாலாஜி 9 வது ஓவரை வீச ஆரம்பிக்கலாம். பிறகு ஃபிளிண்டாஃப், அல்பி மோர்கல் மற்றும் கடைசியாக நிடினி முடிக்கலாம்.

பாலாஜி தடுமாறும் பட்சத்தில் சுதீப் தியாகி ஒன்றிரண்டு ஓவர்கள் வீசலாம். ஸ்பீட் ஸ்விங் மற்றும் அக்யூரசி மிக முக்கியம்.

ஏப்ரலில் நடந்த ஒரு தினப் போட்டியில் சௌத் ஆஃப்ரிக்கா 300+ மேற்பட்ட ரன்களும் இரண்டாவது பேட் செய்த ஆஸ்திரேலியா 250+ ரன்களும் எடுத்துள்ளன. ஆனால் இதற்கு முன்பான போட்டிகளில் எல்லாம் பந்து வீச்சே அபாரமானதாக இருந்தது.

கல்லீஸ் விளையாட வாய்ப்பு உண்டு.

தாமரை
20-04-2009, 09:41 AM
நிடினி ஆடாத பட்சத்தில்

ஃபிளிண்டாஃப், ஓரம், மோர்கல் மூவரும் களமிறக்கப்பட்டால் என்ன ஆகும்?

கோனி, சுதீப் தியாகி இருவரையும் இறக்குவதால் 5 பௌலர்கள் ஆகிறார்கள். ஆனால்

ஹெய்டன், முரளிவிஜய், தோனி, பத்ரிநாத், ரெய்னா உடன் இன்னொரு பாட்ஸ்மேன் களமிறங்க வாய்ப்பு உண்டு.. அது ஜோகிந்தர்ஷர்மா ஆக இருக்கலாம். தியாகி தடுமாறும் பட்சத்தில் ஜோகி பந்துவீசலாம்.

இந்தப் பிட்சில் ஸ்பின்னிற்கு வேலையில்லை என்று கணிக்கிறேன்.

சென்ற போட்டியில் கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்ட பெயர் அல்பி மோர்கலுக்கு பதிலாக திலன் துஷாரா என்று வி.பி.சந்திரசேகரின் பிளாக் மூலம் தெரிய வருகிறது. எனவே திலன் துஷாராவுக்கு பதிலாக அல்பி மோர்கல் களமிறங்க வாய்ப்பு அதிகம் உள்ளது. பாலாஜி, தியாகி, ஜோகிந்தர் ஷர்மா, அஸ்வின் இவர்கள் நான்கு பேரில் யார் இருவர் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. ஜோகிந்தர் ஷர்மா, பாலாஜி என்கிறது வலப்பக்க மூளை, இல்லை தியாகி, ஜோகிந்தர் ஷர்மா தியாகி என்கிறது இடப்பக்க மூளை. தியாகியும் பாலாஜியும் என்கிறது சிறுமூளை.

இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.

தாமரை
20-04-2009, 12:30 PM
அடுத்து வருவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

பாகிஸ்தான் புறக்கணிப்பு,
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் மற்ற போட்டிகள் இது க்னைட் ரைடர்ஸை பாதிக்கத்தான் செய்கின்றன. கூடவே கோச் புக்கனன் வேற நாலு கேப்டன் அப்படின்னு வத்தி வச்சாரு..

இருந்தாலும் க்னைட் ரைடர்ஸ் அணி பலத்தைப் பார்ப்போம்.

பிரெண்டன் மெக்கல்லம் முழுசா கிடைக்கிறாரு
கிறிஸ்கெய்ல் முதல் இரண்டு வாரம் இருப்பாரு
ப்ராட் ஹாட்ஜ் முழுசா கிடைப்பாரு
மஷ்ரஃப் மொர்ட்டாஜா, அஜண்தா மெண்டிஸ் இரண்டு பேரும் இருக்காங்க..

அசோக் திண்டா, இஷாந்த் ஷர்மா, அஜீத் அகர்கர், சட்டீஸ்வர் பூஜாரா, சௌரவ் கங்கூலி, லஷ்மி ரதன் சுக்லா, முரளி கார்த்திக், சஞ்சய் பங்கர், ஆகாஷ் சோப்ரா இப்படி இந்திய வீரர்கள் இருக்காங்க.

1. பிரெண்டன் மெக்கல்லம்
2. கிறிஸ் கெய்ல் / ஆகாஷ் சோப்ரா / ???
3. சௌரவ் கங்கூலி
4. சட்டீஸ்வர் பூஜாரா
5. லஷ்மி ரத்தன் சுக்லா
]6. மஷ்ரஃப் மொர்ட்டாஜா
7. பிராட் ஹாட்ஜ்
8. முரளி கார்த்திக் / அஜந்தா மெண்டிஸ்
9. இஷாந்த் ஷர்மா
10. அசோக் திண்டா
11. அஜித் அகர்கர் / சஞ்சய் பங்கர்

நல்ல முயற்சி செய்தால் அரை இறுதிக்கு வரும் வாய்ப்பு இருக்கு. ராயல் சேல்ஞ்ஜர்ஸா இல்லை கொல்கத்தாவா என்ற இழுபறி வரலாம்.

க்நைட் ரைடர்ஸ் - இக்னைட் செய்தா அரை இறுதி வரை வரலாம்.

ஸ்டார்ட்டிங் ட்ரபுள் இருக்கும்.

சொன்ன மாதிரியே ஸ்டார்ட்டின் டிரபுள். லைன் அப்ல எதிர்பார்க்காம உள்ள வந்தவர் ஹென்ரிக்ஸ். எதிர்பார்த்து உள்ள வராதது சட்டீஸ்வர் பூஜாரா.

இன்னும் ஒரு அணியா இணையாதது நல்லாவே தெரியுது... போகப் போகத் தெரியும்.

தாமரை
20-04-2009, 12:43 PM
அணியைப் பத்திச் சொல்றீங்களா இல்லை என் அலசலைப் பத்திச் சொல்றீங்களா தலை..

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?

ஆசிஃப் தடை செய்யப்பட்டதும், டெல்லி அணி As if எந்த மாற்றமும் நிகழாமல் As is இருக்க ஆசிஃபிற்கு பதிலாக ஆஷிஸ் நெஹ்ராவை வாங்கினார்கள். As if ஆசிஃப் போனாலும் As is ஆஷிஸ் இருப்பதாகச் சொல்லலாமில்லையா..

ஆனாலும் நேரா போடுவாரா நேஹ்ரா? என்பது மிகப் பெரிய சிக்கல்.

அதுக்கு குடுத்த வீரர் சிகார் தவான். சிகாருக்கு பதிலா லோக்கல் டேலண்ட் கிடைக்கலை. டேவிட் வார்னரை எடுத்தாங்க.

பால் காலிங் வுட், ஓவிஸ் ஷா, டேனியல் வெட்டோரி, மெக்ராத், தில்சன்,டிவில்லியர்ஸ், மஹாரூஃப், மெக்டொனால்ட் இப்படி ஒரு பெரிய கும்பலே இருக்கு.

காலிங் வுட்
டி வில்லியர்ஸ்
மெக்கிராத்
வெட்டோரி

ஆரம்ப ஆட்டங்களில் இந்த நாலு பேரும் ஆடலாம்..

லோகல் டேலண்ட் தான் கொஞ்சம் அலசணும்

1. சேவாக்
2. கம்பீர்
3. டி வில்லியர்ஸ்
4. காலிங் வுட் / டேவிட் வார்னர்
5. மனோஜ் திவாரி / ஓவிஸ்ஷா,
6. தினேஷ் கார்த்திக்
7. மெக்ராத் / மஹாரூஃப்8. வெட்டோரி / அமித் மிஸ்ரா
9. யோ மஹேஷ்
10. பிரதீப் சங்வான்
11 ஆஷிஸ் நெஹ்ரா

டெல்லி அணியைப் பொறுத்த வரை ஒரு முழுமை அடையாத அணியாக இருக்கிறது. டெல்லி அணி வெல்வதாக இருந்தால் அது தனிப்பட்ட வீரர்களின் சாதனைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே இந்த வருடம் அரை இறுதிக்கு டெல்லி அணி வருவது சந்தேகம்தான்.

நேராப் போடுவாரா நேஹ்ரான்னு நன் சொன்னதை யாரோ வத்தி வச்சுட்டாங்க. அவருக்கு பதிலா மேக்ராத் மாதிரி தன் பந்துவீச்சை அமைத்துக் கொண்ட அவிஸ்கர் சால்வியை சேர்த்துகிட்டாங்க.

மெக்ராத்துக்கு பதிலா புதுமுகம் நன்னேஸ், அப்புறம் டேவிட்வார்னர்/ காலிங்வுட்டுக்கு பதிலா தில்சன் இவர்கள் விளையாடினாங்க.பந்து வீச்சைப் பொறுத்த வரை பிரகாசித்தது வெட்டோரிதான்.

சொன்ன மாதிரியே சேவாஜ் அடிச்சு ஆடி எளிதான வெற்றி. போகப் போகத் தெரியும்னு சொல்லலாம்...

பார்ப்போம்.. இந்த அணியில் அடுத்த ஆட்டத்தில் மாற்றம் இருக்கும்.

"பொத்தனூர்"பிரபு
20-04-2009, 02:22 PM
ஏனுங்க
சென்னை அணி
சென்னை அணி
சென்னை அணி
சென்னை அணி அப்புடீனு சொல்லுதிகளே அது எதுங்க ???

ஓ தோனி கேப்டனா இருக்காரே அந்த அணியா ???
ஏன் கேட்டேனா , மும்பையுடனான போட்டியில் பத்ரிநாத , அஸ்வின் என் இரண்டு தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள் அதிலும் சச்சின் 20 ஓவர் வரையிலும் களத்தில் இருந்ததாலோ என்னவோ சுழர்பந்து அஸ்வின் பந்துவீச அழைக்கபடவே இல்லை
2 மற்றும் 3 வது வீரராக வரும் பத்ரிநாத் - யை 7 வது வீரராக இறக்கி வீணாக்கிவிட்டார்கள்
இப்போ சொல்லுங்கோ எங்கே சென்னை அணி??

தாமரை
20-04-2009, 02:29 PM
சென்னை:

பார்த்திவ் படேல், ஹெய்டன், ரெய்னா, ஃபிளிண்டாஃப், தோனி, பாலாஜி, பத்ரிநாத், ஜோகிந்தர், அல்பி மோர்கள், முரளிதரன் கோனி

பெங்களூரு அணியில் ஜெஸ்ஸி ரைடருக்கு பதில் கல்லீஸ் உள்ள வந்திருக்கார்.

பெங்களூர் பந்து வீச இருக்கு..

டேல் ஸ்டெய்ன் ஜாக்கிரதை மக்கா!!!!

தாமரை
20-04-2009, 02:31 PM
ஏனுங்க
சென்னை அணி
சென்னை அணி
சென்னை அணி
சென்னை அணி அப்புடீனு சொல்லுதிகளே அது எதுங்க ???

ஓ தோனி கேப்டனா இருக்காரே அந்த அணியா ???
ஏன் கேட்டேனா , மும்பையுடனான போட்டியில் பத்ரிநாத , அஸ்வின் என் இரண்டு தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள் அதிலும் சச்சின் 20 ஓவர் வரையிலும் களத்தில் இருந்ததாலோ என்னவோ சுழர்பந்து அஸ்வின் பந்துவீச அழைக்கபடவே இல்லை
2 மற்றும் 3 வது வீரராக வரும் பத்ரிநாத் - யை 7 வது வீரராக இறக்கி வீணாக்கிவிட்டார்கள்
இப்போ சொல்லுங்கோ எங்கே சென்னை அணி??

வந்தாரை வாழவைப்பதுதானுங்கோ தமிழ்நாட்டுக் கலாச்சாரம்..

அப்படிச் செய்யலைன்னாதான் அது சென்னை அணி இல்லை. :rolleyes::rolleyes:

"பொத்தனூர்"பிரபு
20-04-2009, 02:34 PM
///
வந்தாரை வாழவைப்பதுதானுங்கோ தமிழ்நாட்டுக் கலாச்சாரம்..

அப்படிச் செய்யலைன்னாதான் அது சென்னை அணி இல்லை. :rolleyes::rolleyes:
///

அஹா அற்புதமா சமாளிச்சுட்டேள்

(நான் ஏதோ மாட்டிவிட்டேனு நினைத்தேன் ம்ம்ம்)

மதி
20-04-2009, 03:17 PM
10 ஓவர் முடிவில்ல்ல்ல்ல்ல்ல் 106 ஓட்டங்கள். மேஸிவ் ஹெய்டன்.... ஹ்ம்ம்ம்...

தாமரை
20-04-2009, 04:15 PM
ஏழரை நிமிஷ டைம் அவுட் சுத்த ஏழரை நாட்டுச் சனியா இருக்கும் போல இருக்கே. பாவம் பார்த்திவ். அவர் தயார் ஆவதற்குள் பந்து வீசிட்டாங்க. ஆடாம விட்டிருக்கலாம். அந்த பாலுக்கு பாலூத்தி செத்த பால் அப்படின்னு சொல்லி இருப்பாங்க. ஆனா பாப்பா பாவம் ஆடி அவுட் ஆயிடுச்சி....

பின்னாடியே ஹெய்டன் போக ஒரு 30 ரன் குறைஞ்சு போச்சு டோட்டலில் இருந்து.

180 நல்ல டார்கெட் தான்,, பிட்ச் இந்த மாறியிருப்பது கண்கூடாத் தெரியுது. வள்ளல் தனம் காட்டாம இருந்தா ஜெயிக்கலாம்.

என் நல்ல நேரம் டி.வி ல வெறும் ப்ளூ ஸ்கிரீந்தான் தெரியுது....:D:D :D :D

தாமரை
20-04-2009, 04:16 PM
///
வந்தாரை வாழவைப்பதுதானுங்கோ தமிழ்நாட்டுக் கலாச்சாரம்..

அப்படிச் செய்யலைன்னாதான் அது சென்னை அணி இல்லை. :rolleyes::rolleyes:
///

அஹா அற்புதமா சமாளிச்சுட்டேள்

(நான் ஏதோ மாட்டிவிட்டேனு நினைத்தேன் ம்ம்ம்)

மக்களைக் கேட்டுப் பாருங்க. சமாளிஃபிகேஷனில் பி.ஹெச்.டி பண்ணியிருக்கேனாக்கும் நான்...:cool::cool::cool:

தாமரை
20-04-2009, 05:09 PM
ம்ம் இன்னும் பாக்கி இருக்கறது திராவிடும் கோழியும்... அதற்கு பின்னால் நாலு பௌலர்கள் மட்டுமே..

எந்த அளவு ஸ்கோர் செய்து ரன்ரேட் வித்தியாசத்தை குறைக்கிறார்களே அந்த அளவிர்கு நல்லது.. ஏன்னா பிற்காலத்தில் உதவும்..

எப்படியோ சென்னை தன் திறமையில் பாதியைக் காட்டிடுச்சி.. மிச்சத்தை எப்பக் காட்டப்போறாங்களோ...

இதிலிருந்து என்ன தெரிய வருதுன்னா, இந்தபிட்ச் இந்த வருடம் மாற்றப்பட்டிருக்கு,,, போன ஒன் டே மேட்சுல முதன்முதலா 300+ ஸ்கோரைப் பார்த்தௌ.. இப்போ முதலில் பேட்டிங்கிற்குச் சாதகமா இருந்திட்டு அப்புறம் ஸ்லோ பௌலிங்கிற்கு சாதகமா இருக்கு,,

மதி
20-04-2009, 05:40 PM
ஜெயிச்சாச்சு....ஜெயிச்சாச்சு....

முரளியின் வித்தையில் சுருண்டது பெங்களூரணி

தாமரை
21-04-2009, 01:42 AM
ம்ம்ம் இனிமே தான் இருக்கு நிஜமான போட்டிகள்,,

முதல் போட்டியில் படுபயங்கர ஸ்ட்ராங்கா தெரிஞ்சாலும் பீட்டர்சன் திராவிட் தவிர நின்னு விளையாட ஆளில்லை என்பது பெங்களூருக்கு பரிதாபமான விஷயம்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்கிற மாதிரி ஸ்டார்ட்டிங் டிரபுள் பெங்களூருக்கு ரொம்பவே இருக்கிறது

துணு கிழிஞ்சா டெய்லர்கிட்ட போய் தச்சுக்கலாம், இங்க டெய்லரே கிழிஞ்சு கிடக்காரே என்னத்தைச் சொல்ல?

டி ட்வெண்டி எனக்கு டிக் ட்வெண்டி (பூச்சி மருந்து) அப்படிங்கறாரு கல்லீஸ்.. என்னதான் ரைடர் முதல் மேட்சில பேட்டிங்க்ல சொதப்பி இருந்தாலும் இன்னொரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கணும்..

இப்பவே இந்த கதின்னா பீட்டர்சன் போனா?

விஜய் மல்லையாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

ஐயா முதல்ல வெஸ்ட் இண்டீஸூக்கு ஸ்பான்ஸர் பண்ணினீங்க காலி பண்ணுனீங்க..

அப்புறம் இங்கிலாந்துக்கு ஸ்பான்ஸர் பண்ணுனீங்க... அவங்க இப்பதான் சுதாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க,,

இப்போ பெங்களூர் ராயல் சேலஞர்ஸ்.. கிரிக்கெட்டுக்கும் உங்களுக்கும் அப்படி ஒரு ஏழாம் பொருத்தமா இருக்கே.. ஒரு வேலை பேர் ராசி இல்லையோ? கிரேக்கிட் அப்படின்னு பேரை மாத்தி வச்சா சரி வருமோ?

செல்வா
21-04-2009, 02:43 AM

:D:D:D:D:D :icon_ush::icon_ush::icon_ush:

சிவா.ஜி
21-04-2009, 03:57 AM
சூப்பரா ஜெயிச்சுட்டாங்க சென்னை சூப்பர்கிங்ஸ். ஒரு மேட்ச்சுலகூட இந்த பெங்களூர ஜெயிக்கவிடக்கூடாது.

வாழ்த்துகள் சென்னை.

தாமரை
21-04-2009, 05:07 AM
சூப்பரா ஜெயிச்சுட்டாங்க சென்னை சூப்பர்கிங்ஸ். ஒரு மேட்ச்சுலகூட இந்த பெங்களூர ஜெயிக்கவிடக்கூடாது.

வாழ்த்துகள் சென்னை.

அது முடியாது சிவா.ஜி ஏற்கனவே பெங்களூர் - ராஜஸ்தானை ஜெயிச்சாச்சு..

தாமரை
21-04-2009, 06:06 AM
1. பார்த்திவ் படேல்

கீப்பிங் செய்யலை. பேட்டிங்கில் தட்டுத்தடுமாறி 30 ரன் அடிச்சார், ஒரே ஒரு நல்ல விஷயம் 10 ஓவர் வரைக்கும் மேஸிவிற்கு கம்பெனி கொடுத்தது.

33 மார்க்

2. மேஸிவ் ஹெய்டன்.

இவர் இன்னும் ரெண்டு ஓவர் விளையாடி இருந்தா ஸ்கோர் இருநூறை தாண்டி இருக்கும்.. இன்னிக்கு தாராளமா மார்க் போடலாம்..

90 மார்க்

3. சுரேஸ் ரெய்னா

இக்கட்டான நிலையில் உள்ள வந்தார் ரெய்னா.. இவர் அடிச்சு ஆடறதை விட அந்த நேரத்தில நிலைச்சு ஆடுறதுதான் முக்கியமா இருந்தது. சமயத்திற்கு தகுந்த மாதிரி ஆடினார். இவரோட ஃபீல்டிங் இன்னொரு பிளஸ் பாயிண்ட் அதனால்

50 மார்க்

4. தோனி

கீப்பர் கிளவ்ஸை பிடுங்கிக் கொண்டது.. (பார்த்தீவ் படேல் கிட்ட இருந்துதான்) முரளியை உள்ள கொண்டு வந்தது, இது தவிர இக்கட்டான சமயத்தில் மோர்கலையோ அல்லது ஃபிளிண்டாஃபையோ இறக்காமல் தானே களமிறங்கியது..

ஹெய்டன் ஆடும் பொழுது பார்த்திவ் அவுட்டானா.. அவருக்கு கம்பெனி கொடுக்க பத்ரியோ தோனியோ வர்ரது நல்லதுன்னு படறது.. ஸ்ட்ரைக் ரொடேஷன், அப்புறம் ஸ்டெபிலிட்டி அப்புறம் அக்ரெஷன் அப்படின்னு போக இவங்களால முடியும்.

இதுக்காக 50 மார்க்.

5. ஃபிளிண்டாஃப்

தோனி விழுந்தவுடன் வந்து அடித்து ஆடியது, மூணு நல்ல ஓவர்களை வீசி டெய்லரையே தைத்தது இதுக்குத்தானே ஃபிளிண்டாஃபைக் கொண்டு வந்ததே..

இவருக்கு மார்க் 75. (மேஸிவ் ஜொலிக்கிற வரைக்கும், ஃபிளிண்டாஃப் ஸ்பிளிட் ஆஃப் பண்ணிக்க வேண்டியது தான்.

6. அல்பி மோர்கல்

பேட்டிங்கில் கிடைச்ச வாய்ப்பு மூணே பந்துகள். பௌலிங்க்ல 2 ஓவர். கல்லீஸ் விக்கெட் பெரிய விக்கெட் இல்லைன்னாலும் அதை எடுக்காம ஜெயிக்க முடியாதே.
நல்ல அணியில் இருந்தா வாய்ப்புகள் குறைவாத்தான் இருக்கும்.

இன்னிக்கு மார்க் 60.

7. பத்ரிநாத்

பேட்டிங்கில் சான்ஸ் கிடைக்கலை, ஃபீல்டிங் தவறுகள் இல்லை. அதனால இந்த மேட்சில இவர் ஃப்ரீ பாஸ்.

8. ஜோகிந்தர் ஷர்மா

பேட்டிங்கில் வாய்ப்பு இல்லை. ஃபீல்டிங் சாதனை எதுவும் இல்லை. பௌலிங் 1 ஓவர் 10 ரப் கொடுத்து 1 விக்கெட். கோழியை அமுக்கி இருக்கார். பத்து ரன் அதிகம் தான் இருந்தாலும் பரவாயில்லை.

பாஸ் மார்க்

9. பாலாஜி

கொஞ்சம் இன்னும் ரிதம் வரணும். முதல் ஓவரில் இரண்டு லூஸ் பால். இரண்டாவது ஓவரில் மூணு லூஸ் பால் (அதில் ஒண்ணை மட்டும்தான் திராவிட் அடிச்சாரு).

சரின்னு கொஞ்சம் விட்டுட்டு அடுத்த ஓவர் கொடுத்தா அதில போட்ட ரெண்டு பாலும் லெக்சைட்ல்.. எப்படியோ திராவிட் அடிக்கப் போயி கேட்ச் கொடுத்திட்டாரு..

இப்படி விக்கெட் எடுக்கலாம்னு பிளான் பண்ணிப் போட்டாரா இல்லை சும்மாவா?

இந்த டௌட்டினால 45 மார்க்.

10, முரளிதரன்..

வந்தார் ஸ்பின்னினார். பின்னினார். 80 மார்க்

11. கோனி

ஓபனிங் ஓவர் அபாரம். அதன் பின்னால கொஞ்சம் டல்லான இரண்டாவது ஓவர்.மூணாவது ஓவரில் கொஞ்சம் ரிகவரி... முதல் விக்கெட்டினால

50 மார்க்

தாமரை
21-04-2009, 06:56 AM
அடுத்த மேட்ச் நடக்கப் போகும் டர்பன் வித்தியாச ஆடுகளம் அல்ல. அங்கும் இதே கதைதான் எதிர்பார்க்கிறோம். முதலில் பேட் செய்யும் அணிக்கு சாதகமாக் பிட்ச் இருக்கும். ஸ்பின் பௌலர்கள் சாதிப்பார்கள்.

முதல் மேட்ச் பஞ்சாப் மற்றும் கொல்கத்தாவிற்கு இடையில் டாஸை ஜெயித்தால் பஞ்சாப் ஜெயித்து விட்டது என்றே சொல்லலாம். இல்லாவிட்டால் போராட வேண்டி இருக்கும்.

இரண்டாவது மேட்ச் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு மத்தியில். இதிலும் அதே கதைதான். மும்பை டாஸ் ஜெயிச்சுட்டா 60 சதவிகித வெற்றி அவங்க கையில.

ஹர்பஜனா, வார்னேவா, யூச்ஃபா, ஜெயசூர்யாவா

யாரு கலக்கப் போற ஸ்பின்னர்?

அடுத்தபடி சென்னை களமிறங்கும்.. இரண்டு அணிகள் விளையாடும் பொழுது பிட்ச் எப்படி இருக்குன்னு நல்லாவே தெரிஞ்சுக்கலாம். அதைப் பொறுத்து டீமை அமைச்சுக்கலாம்.

இன்னிக்கு ராஜஸ்தான் மும்பை மேட்ச் கலக்கலா இருக்கும். பாருங்க மக்களே.

செல்வா
21-04-2009, 07:38 AM
இன்னும் உங்களை யாரும் வர்ணனையாளரா கூப்பிடலியா அண்ணா?

தாமரை
21-04-2009, 08:05 AM
இன்னும் உங்களை யாரும் வர்ணனையாளரா கூப்பிடலியா அண்ணா?

அண்ணி கூப்பிட்டு இருக்காங்களே... :D:D:D:D:D என்ன வர்ணனைன்னு சொல்லணுமா?:rolleyes::rolleyes::rolleyes:

மதி
21-04-2009, 08:12 AM
அபாரமான வர்ணனை... அசத்தல்.....
திக் திக்னு நேத்து மட்ச் பாத்துட்டு இருந்தேன். நல்ல வேளை ஜெயிச்சாங்க

தாமரை
21-04-2009, 08:21 AM
அந்தக் கொடுமையை ஏன் கேட்கறீங்க மதி.. காத்தடிச்சா கரண்ட் கட்டாகுது.. ஜெனரேட்டர் இருந்தும் கேபிளில் ஒண்ணும் வராதததால் நெட்டிலயே பார்க்க வேண்டியதா போச்சு...

"பொத்தனூர்"பிரபு
21-04-2009, 10:38 AM
பெங்களூரு: ""டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் ஐ.பி.எல்., போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் தோல்விக்கு புக்கானன் தான் காரணம். அவரது முட்டாள்தனமான "பார்முலா' அணியை வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்று விடும்,'' என்றார் வடேகர். "கோல்கட்டா நைட் ரைடர்ஸ்' அணி முதல் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நேற்று முன் தினம் எதிர்கொண்டது. இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் மோசமான தோல்வியை பதிவு செய்தது. இது குறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் வடேகர் கூறுகையில்,"" தனது முட்டாள்தனமான "பார்முலா' மூலம் நைட் ரைடர்ஸ் அணியை கடலுக்குள் தள்ளி விட்டார் புக்கானன். ஐ.பி.எல்., போன்ற மிகப் பெரிய தொடருக்கு ஒரு நாள் முன், அணியின் கேப்டனை தேர்வு செய்வது என்பது மிகப் பெரிய முட்டாள்தனம். இதன் மூலம் புக்கானன் அணியை பிளவு படுத்தி விட்டார். அணி வீரர்கள் குழப்பத்தில் இருந்ததை, ஆட்டத்தின் போது காண முடிந்தது,'' என்றார்.

அய்யா
21-04-2009, 10:49 AM
அலசல்களையும், முன் கூறலையும் ஜுஜூபி ஆக்கிவிட்டு ஐபிஎல் கலக்குகிறது.

தாமரை
21-04-2009, 10:55 AM
பெங்களூரு: ""டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் ஐ.பி.எல்., போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் தோல்விக்கு புக்கானன் தான் காரணம். அவரது முட்டாள்தனமான "பார்முலா' அணியை வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்று விடும்,'' என்றார் வடேகர். "கோல்கட்டா நைட் ரைடர்ஸ்' அணி முதல் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நேற்று முன் தினம் எதிர்கொண்டது. இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் மோசமான தோல்வியை பதிவு செய்தது. இது குறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் வடேகர் கூறுகையில்,"" தனது முட்டாள்தனமான "பார்முலா' மூலம் நைட் ரைடர்ஸ் அணியை கடலுக்குள் தள்ளி விட்டார் புக்கானன். ஐ.பி.எல்., போன்ற மிகப் பெரிய தொடருக்கு ஒரு நாள் முன், அணியின் கேப்டனை தேர்வு செய்வது என்பது மிகப் பெரிய முட்டாள்தனம். இதன் மூலம் புக்கானன் அணியை பிளவு படுத்தி விட்டார். அணி வீரர்கள் குழப்பத்தில் இருந்ததை, ஆட்டத்தின் போது காண முடிந்தது,'' என்றார்.

காசு செலவு பண்ணிப் பார்க்கிற ரசிகர்களுக்கு இருக்கிற அளவிற்கு அணி உணர்வு காசு வாங்கிகிட்டு ஆடற வீரர்களுக்கு இருக்காது. :D :D :D

எப்போ நாலு கேப்டன் என்று அறிவித்தாரோ அப்பவே எல்லா டேமேஜூம் பண்ணியாச்சு.

எனக்கு என்ன தோணுதுன்னா, புக்கனன் நம்ம ஊரு அரசியல் செய்திகளைப் படிச்சி குழம்பிப் போயிட்டார். கொல்கத்தா அணியை மூணாவது அணியா நினைச்சுட்டார். நல்லவேளை ஜெயிச்ச பின்னால கேப்டனை அறிவிப்பேன் என்று சொல்லாம போனாரே,, அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க...

ஒரு மேட்சை ஒரு நாளில் பிளான் பண்ண முடியாது. கேப்டனா இருக்கிறவர் இதற்காக நிறைய நேரம் செலவு பண்ணி, பல தகவல்களை கலெக்ட் பண்ணி, அப்புறம் கோச் கூட டிஸ்கஸ் பண்ணி, அப்புறம் அதை டீமுக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணி, அதில் எதாவது நல்ல விஷயங்கள் வெளிவந்தா கரெக்ட் பண்ணி..

இதெல்லாம் புரியாம ஆன் த ஃபீல்ட் வந்து எல்லாத்தையும் பாத்துக்கலாம் என்று சொல்றவங்களை மேஸ்திரின்னு தான் சொல்லணும். கேப்டன் என்ற வார்த்தை அதுக்குத் தகாது.

தாமரை
21-04-2009, 11:58 AM
பஞ்சாப் - கொல்கத்தா போட்டி.

முதல் ஓவரை அற்புதமா போட்டார் இஷாந்த் ஷர்மா. அப்படி இல்லைன்னா கரன் கோயலுக்கு இஷாந்த் ஷர்மாவை எப்படி ஃபேஸ் பண்றதுன்னு தெரியலைன்னு சொல்லலாம். அடுத்து வீசிய அசோக் திண்டா சமாளிச்சு வீசினார்.

கரன் கோயல் அவுட்டான பின்னால வந்த இர்ஃபான் பதான் அடிக்கறதுன்னா இப்படி அடிக்கணும் அப்படின்னு பாடம் எடுத்தார்.

ரன் வேகம் அதிகப்படவே கங்கூலி அழைக்கப்பட்டார். இதுவரை வேகமாவே வ்ந்த பந்துகளை ஆடிகிட்டிருந்த இர்ஃபானும், பொபராவும் கங்கூலியின் மிதவேகப் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டாக சங்கக்கார யுவராஜ்சிங் வந்தாங்க.

கங்கூலி முதல் ஓவரில் 1 ரன் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்தார், இரண்டாவது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

10 ஓவர் ட்ரேஜடிக் ஸாரி ஸ்ட்ரேட்டஜிக் (யாரோட ஸ்ட்ரேட்டஜி தெரியுமில்ல) டைம் அவுட்டுக்குப் பின்னால் சற்று லேட்டாவே மேட்ச் ஆரம்பிச்சது. மழை தூறினதால.

இதுவரைக்கும் பந்து வீசும் அணிக்கே சாதகமா இருந்த டைம் அவுட் இன்னிக்கு பேட்டிங்கிற்கு சாதகமா அமைஞ்சது. வந்தவுடனே கங்கூலியின் ஓவரில் 14 ரன் குவிக்க மெக்கல்லம் இன்னொரு தலையை (கிறிஸ் கெய்ல்) வந்து பந்தை வீசுங்கய்யான்னு சொன்னாரு. சொன்னதைச் சரியா புரிஞ்சுகிட்ட கெய்ல், பந்தைக் கன்னா பின்னான்னு வீச முதல் பால் யாராலையும் தொடக்கூட முடியாம பவுண்டரிக்குப் போச்சு.. மொத்தமா மூணு வைட் போட்டு என்னோட ராசி எண் 9. அதனால ஒவருக்கு ஒன்பது பால்தான் போடுவேன் அப்படிங்கற மாதிரி பெருமிதமா கெய்ல் ஓவரை முடிச்சார்.

மறுபடி கங்கூலி சுதாரிச்சு ஒரு ஓவர் போட, ஷர்மா வந்து 2 ரன் மட்டுமே கொடுத்து ஒரு நல்ல ஓவர் போட்டு தன்னுடைய கோட்டாவை முடிச்சுகிட்டார்.

சுக்லா சுக்லாம் பரதரம் அப்படின்னு என்னென்னவோ மந்திரம் சொல்லியிருப்பாரு போல.. சங்க்காராவுக்கு சன்கு ஊதினார் தன்னுடைய் மூணாவது ஓவரோட மொத பால்லயே..

இன்னும் 5 ஓவர் பாக்கி இருக்கு. பஞ்சாப் 117 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருக்கு. ஆடிக்கொண்டிருப்பது நமக்குத் தெரிஞ்ச கடைசி நல்ல ஜோடி..

ஜெயவர்த்தனே - யுவராஜ் அடிச்சா இன்னும் 5 ஓவர்ல 60 ரன் அடிக்கலாம். அல்லாங்காட்டியும் 40 ரன் உறுதி.. அதாவது ஸ்கோர் 155+ வரும்னு உறுதியா சொல்லலாம்.

இப்பிடி எழுதச் சொல்ல டபுக்குன்னு யுவராஜ் அவுட்டாகிட்டாரு... உள்ள வந்தார் தருவார் கோழி.. அவர் கோழியைத் தருவாரா இல்லை முட்டையைத்தான் தருவாரான்னு பார்ப்போம்

தாமரை
21-04-2009, 12:32 PM
சொன்ன மாதிரியே 158 ரன் சேர்த்தௌ பஞ்சாப். தருவார் கோழி ஒத்தை ரன்னுக்கு அவுட்டாக சாவ்லா 3 ரன் சேர்க்க, ஜெயவர்த்தனே கஷ்டப்பட்டு நம்ம இலக்கை தொட உதவி செஞ்சார்.

அடுத்து கொல்கத்தா இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கப் போகுது. இர்ஃபான் பதானுக்கு டெல்லியோட ஆடின மேட்சில பந்து நல்லா ஸ்விங் ஆச்சு.. இங்க எப்படியோ?

பியூஸ் சாவ்லா, யுவராஜ் சிங் ஸ்பின் போடுவாங்களா?

அப்துல்லா இந்த மேட்சிலாவது பிரஹாசிப்பாரா?

மாலிக் என்ன செய்யப் போகிறார்..

இப்படி பலப்பல கேள்விகள் பஞ்சாப் பக்கம்

தொடக்கம் புட்டுகிச்சின்னா, கொல்கத்தா நட்டுக்கும். அதனால ஒழுங்கா போடுங்கப்பு

தாமரை
21-04-2009, 12:46 PM
இன்னொரு சின்ன விஷயம்..

சென்னை முதல் ஆட்டத்தில் கொடுத்த உதிரிகள் - 3 (பை-1, லெக்பை-1, வைட்-1)
இரண்டாம் ஆட்டத்தில் கொடுத்த உதிரிகள் - 5 (வைட்-4, லெக்பை -1)

இதை எப்படி கடைசி வரை கடை பிடிக்கிறார்கள் அப்படின்னும் பாக்கணும்

மதி
21-04-2009, 01:00 PM
இதுவரைக்கும் நைட்ரைடர்ஸ் நல்லா தான் போய்கிட்டு இருக்கு. பார்க்கலாம்.

தாமரை
21-04-2009, 02:23 PM
பேரு பஞ்சாப்புக் கிங்கு
ஆனா பஞ்சமில்ல ஆப்புக்கு இங்கு..

என்னவோ பஞ்சாபோட ஜாதகம் சரியில்ல. ஜலதோசம்., அதாங்க தண்ணியில கண்டம் போல.. இவங்க ஆடி முடிச்சா வந்து கொட்டி இவங்களுக்கு தோத்த திருப்தி (ஜெயிக்கலைன்னா கூட போராடித் தோற்றோம் என்ற மன நிறைவு) கூட இல்லாம பண்ணிடுது.

டச்வொர்த் லூவிஸ் மெத்தேட்ல யார்கிட்ட நல்ல ஓபனிங் பௌலர் / ஓபனிங் பேட்ஸ்மேன் இருக்காங்களோ அவங்க ஜெயிப்பாங்க.. பஞ்சாப்புகிட்ட நல்ல பௌலர்கள் இல்லை..அதனால பாவம் பாவம் பாவம்.

மதி
21-04-2009, 02:49 PM
சரி.. ராயல்ஸுக்கும் இண்டியன்ஸுக்கும் இனி ஆட்டம் ஆரம்பம். வார்னே போராடி தான் ஜெயிக்கணும் போல.

பொறுத்திருந்து பார்ப்போம்.

தாமரை
21-04-2009, 04:26 PM
10:45 கட் ஆஃப் டைம். அதுக்க்குள்ள மேட் ஆரம்பிச்சா நல்லது ஆளுக்கு அஞ்சு ஓவர் ஆடலாம். 11 மணி ஆயிடுச்சின்னா ஆளுக்கு ஒரு பாயிண்ட் பங்கு போட்டுத் திங்க வேண்டியதுதான்.

தாமரை
22-04-2009, 01:16 PM
ராயல்ஸ் - மும்பை ஆட்டம் நடக்காமலே போனது,

இன்னிக்கு டெக்கான் சார்ஜர்ஸூம், பெங்களூரும் மோதப் போறாங்க.. முதல் மேட்ச் நடந்த அட்தே கேப்டவுன் பிட்ச்.. அதனால இரண்டாவதா பந்து வீசுபவர்களுக்கு ஸ்பின் கைகொடுக்கும்.

கும்ப்ளே இங்க இப்பதானே அஞ்சு விக்கெட் எடுத்து சாதனை செஞ்சார் அப்படின்னும், பிரவீன்குமார் கில்கிறிஸ்டையும், கிப்ஸையும் சீக்கிரமா தூக்கிட்டா வாய்ப்பு இருக்கு அப்படின்னும் ராயல் சேலஞர்ஸ் கணக்கு போடலாம்.

அதே மாதிரி ஆர்.பி. சிங், பிரக்யான், ஓஜா, ஃபிடல் எட்வர்ட்ஸ் இப்படி பந்து வீச்சும், கிப்ஸ், கில்கிறிஸ்ட், ரோஹித் ஷர்மா, வெணுகோபால்ராவ், ஸ்காட் ஸ்டரிஸ், லக்ஷ்மண் இவங்க பேட்டிங்கும் ஹைதராபாத்துக்கு பிளஸ்.

பீட்டர்சன், மற்றும் திராவிட் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லாத்து பெங்களூருக்கு வருத்தமான விஷயம். சென்ற ஆட்டத்தில் இடம்பெறாத ரைடர் திரும்பி வருவார், அப்புறம் கல்லீஸ் இருப்பார்.. மார்க் டெய்லர் ஓய்வு எடுக்கலாம் என்று நம்பலாம். டேல் ஸ்டெய்ன் இருப்பார். போன ஆட்டத்தில் சரியாக பந்து வீசாத ராஜேஷ் பிஷ்னாய்க்குப் பதில அகில், பரத் சிப்ளி அல்லது புபனேஸ்வர் இப்படி யாராவது வரலாம்.

அறிவு தேவதை டெக்கான் சார்ஜார்ஸ் ஜெயிப்பாங்கன்னு சொன்னாலும் அதிர்ஷ்ட தேவதை யார் பக்கம் என்பது போகப்போகத்தான் தெரியும்.

மழை வராமலிருக்க பிரார்த்தனைகள்.

தாமரை
22-04-2009, 03:27 PM
சில மாதங்களுக்கு முன் இந்திய இலங்கைத் தொடரில் டெண்டுல்கர் திலன் துஷார பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் தரப் பட்ட பொழுது,

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=404988&postcount=4

என்ற பதிவில் நான் சொன்ன கால்நகர்த்தலை முதல் நான்கைந்து பவுண்டரிகளில் கில்கிறிஸ்ட் அழகான செயல்விளைக்கம் காட்டி உள்ளார்.

பார்த்து மகிழுங்கள்

தாமரை
22-04-2009, 03:37 PM
உத்தப்பா ஸ்ரம்பிற்கு பின்னால் இருந்து பரவாயில்ல ஆக்கி, ஒந்தே ஒந்து என கன்னடத்தில் கத்துகிறார்....

கில்கிறிஸ்டின் அபார ஆட்டம் விராட் கோழியின் அபார கேட்சினால் முடிந்தது.. பீட்டர்சன் முதல் பந்தில் விக்கெட் எடுப்பதை வழக்கப் படுத்துகிறார்..

தாமரை
22-04-2009, 03:51 PM
ஆக்கே ஆ ஆக்கே ஆ என்கிறார் விராட் கோழியை நோக்கி உத்தப்பா..

ரோஹித் - வேணுகோபாலுக்கு சொல்கிறார்

அவுர் தீன் ஓவர் பாக்கி ஹை.. அராம்சே

பலமொழிகளும் விளையாடும் விளையாட்டு நல்லாத்தான் இருக்கு

மதி
22-04-2009, 04:19 PM
முதல் பந்திலேயே ரைடர் அவுட்.. தேறுவார்களா?

தாமரை
22-04-2009, 04:21 PM
ஜெஸ்ஸி ரைடர் பேரை Just - seen - ரைடர்அப்படின்னு மாத்திடலாம் போல இருக்கு,.

வர்ரதும் தெரியலை போறதும் தெரியலை....

மேக்கி நூடுல்ஸ் ஜோக்கை கங்கூலிகிட்ட இருந்து இவருக்கு மாத்துங்க ஓய்...!

தாமரை
22-04-2009, 06:00 PM
லட்சாதிபதியாக எளிய வழி...

பஜாஜ் 135 யோட விளம்பரத்தைப் பார்த்திருப்பீங்க... இந்த பைக்கை வாங்கின பின்னால் எந்த பைக்கை வாங்கினாலும் அதன் விலையை நாங்கள் தருகிறோம அப்படின்னு சொல்றாங்க..

உங்க முதலீடு முதல்ல அவங்க பைக்கை வாங்க வேண்டியது...

அப்புறம் இன்னொரு பைக்கை வாங்கி அவங்ககிட்ட ரீ இம்பர்ஸ் பண்ணிகிட்டு, அந்த பைக்கை வித்துடனும்.. இப்படி வாங்கி வாங்கி விக்க வேண்டியதுதான்...

பிஸினஸ் எப்படி இருக்கு?

தாமரை
23-04-2009, 01:57 AM
இன்று மாலை 4 மணிக்கு டெல்லி டேர்டெவில்ஸூடன் மோத இருக்கிறது சென்னை சூப்பர் கிங்க்ஸ்.

டெல்லியைப் பொறுத்தவரை போன மேட்சில டி-வில்லியர்ஸ், தில்சன்(தில்-Son-இதயமகன்), வெட்டோரி அப்புறம் நன்னேஸ் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக களமிறங்கினார்கள். அவிஸ்கர் சால்வி, பிரதீப் சங்வான், யோமஹேஷ் என பந்து வீச்சு இருந்தது. தில்சனை சேர்த்துக் கொண்டு பந்து வீச்சிற்கு உபயோகப்படுத்தவில்லை. தில்சனா அல்லது டேவிட் வார்னரா என்பது மற்றும் மாற்றமாக இருக்கலாம்.

பேட்டிங்கில் சேவாக்-கம்பீர்-டிவில்லியர்ஸ்-தினேஷ் கார்த்திக்-தில்சன்-மனோஜ் திவாரி-வெட்டோரி. டாப் ஹெவின்னு சொல்ற மாதிரி முதல் 4 பேட்ஸ்மேன்கள்தான் இங்க பெரிசா செய்ய முடியும். அதனால முதல் ஆறு ஒவர்களில் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவது அவசியம்.

பந்து வீச்சில் டெல்லி அவ்வளவு பலமில்லை. வெட்டோரி மட்டுமே வெகுவும் மிரட்டுகிறார். அவர் வருவதற்குள் 100 ரன் எடுத்திடணும்.

சென்னையைப் பொறுத்தவரை அணியில் மாற்றம் இருக்காது என நினைக்கிறேன்.பாலாஜி இம்முறை கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே கவனமா பந்து வீசணும்..

முரளி வெட்டோரிக்கு பதிலடி கொடுப்பார். டர்பன் பற்றித் தெரிந்ததுதான். ஃபர்ஸ்ட் பேட்டிங் நல்லது..

6 பௌலர்கள் தேவையா? ஜோகிந்தர் ஷர்மாவுக்கு பதிலா முரளிவிஜயை விளையாட வைக்கலாமா என்று தோனி சிந்திக்கணும். சுரேஷ்குமார் லேட் ஆர்டருக்கு தேவையான மாதிரி நல்லா விளாசினார் டிரெய்னிங்கில். ஆனா அவரைத்தான் ஊட்டுக்கு அனுப்பியாச்சே..

டர்பனிலும் மழைவரக்கூடாது பெங்களூரிலும் மழைவரக்கூடாது. இரண்டில எங்க மழை வந்தாலும் மேட்சைப் பார்க்க முடியாது....புதுப்பிட்ச் போடுவாங்களா? நேத்து துபாய்ல நடந்த ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மேட்சை பார்த்தீங்களா, 4 பிட்ச் இருந்தது. கேப் டவுனில பெங்களூர்-டெக்கான் சார்ஜர்ஸ் ஆடினது புதுப்பிட்சு... பழைய பிட்ச் பக்கத்தில இருந்தது பார்த்தீங்களா ரொம்பவே மோசமா இருந்தது பழைய பிட்ச்.

அதுக்கு அடுத்த மேட்ச் ராஜஸ்தான் ராயல்ஸூக்கும், கொல்கொத்தா நைட் ரைடர்ஸூக்கும்.. கேப் டௌனில.. ராயல்ஸூக்கு இன்னும் ஒரு ஸ்டார்ட்டே கிடைக்கலை,

ராஜஸ்தானுக்கு ஃபார்முக்கு வர இது ஒரு நல்ல சான்ஸ். கேப்டௌன் பிட்ச் நல்லா இருக்கு, இஷாந்த் ஷர்மா, அசோக்திண்டா, அஜித் அகர்கார், முரளிகார்த்திக் (அஜந்தா மெண்டீஸ்) ஹென்ரிக்ஸ், சுக்லா என பௌலிங் அட்டாக், ஒரு 10 ஓவராவது ரன்களை அள்ளிக் கொடுப்பதா இருக்கு. பேட்டிங்கில் கெய்ல், மெக்கல்லம், ஹாட்ஜ் மூணு பேரைத் தவிர இம்பேக்ட் பிளேய்ர்ஸ் யாருமில்லை. கங்கூலி, சுக்லா, ஹென்ரிக்ஸ் கொஞ்சம் ச்ப்போர்ட் தரலாமே ஒழிய வேற ஒண்ணும் செய்ய முடியாது. ஆக சூட்சமம் கெய்ல், மெக்கல்லம் இருவரையும் வெகு சீக்கிரமா அவுட் செய்வதில் இருக்கு..

ராஜஸ்தானின் கவலை பேட்ஸ்மேன்கள் கிளிக் ஆகறதில இருக்கு. ஸ்மித், அஸ்னோட்கர், பதான், ஜெடேஜா, டைரோன் ஹெண்டர்சன், மஸ்கரானாஸ், நீரஜ்படேல் வார்னே இப்படி கல்கத்தாவை விட கொஞ்சமே பெரியலைனப் இருந்தாலும் ஆடணுமில்லை..

பௌலிங்கைப் பொறுத்தவரை ராஜஸ்தான் முண்ணனியில் இருக்கு., இரண்டு அணியில் யாரு பேட்டிங்கில் கிளிக் ஆகறாங்களோ அவங்களுக்கு வெற்றி நிச்சயம்,

நான் எதிர் பார்க்கும் மேட்ச் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் மேட்ச் தான்.

பழைய கணிப்புப்படி ராஜஸ்தான், சென்னை, மும்பை செமிஃபைனல்ஸ் கட்டாயம் போகும்னு சொல்லி இருந்தேன்.. இப்போ அது டெக்கான் சார்ஜர்ஸ், சூப்பர்கிங்க்ஸ், இண்டியன் என மாறிப்போச்சி..

நாலாவது அணி இடத்திற்கு டெல்லி, க்நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ஆகியவை போராடும். ராயல் சேலஞ்ஜர்ஸ் பஞ்சாப் இரண்டுமே அவுட் ஆஃப் ஃபோகஸ்ல தெரியுது...

ஓவியன்
23-04-2009, 02:49 AM
சென்னையுடன் மோதலென்பதால் டெல்லி அணியில் இன்று நம்மவர் ஜோ.மகேஸ் பந்து வீச வருவாரென எதிர்பார்கின்றேன்...

தாமரை
23-04-2009, 03:25 AM
நன்னேஸ் - ற்கு பதிலாக மெக்கிராத்தை இறக்கிப் பார்க்கலாம் டெல்லி. இல்லைன்னா ஹெய்டன் பிளந்து கட்டிடுவாரு.. அப்புறம் நன்னே முன்னே பச்சா ஹை அப்படின்னு பாடவேண்டியதா இருக்கும்

யோ மஹேஷ்.... ஜோ மஹேஷ் அல்ல,,,

பிரதீப் சங்க்வான், அவிஸ்கர் சால்வி, யோ மஹேஷ், இவர்களில் ஒருவருக்கு பதிலாக ஆஷிஷ் நேஹ்ரா இறங்கலாம்.

mania
23-04-2009, 04:26 AM
நன்னேஸ் - ற்கு பதிலாக மெக்கிராத்தை இறக்கிப் பார்க்கலாம் டெல்லி. இல்லைன்னா ஹெய்டன்

யோ மஹேஷ்.... ஜோ மஹேஷ் அல்ல,,,

பிரதீப் சங்க்வான், அவிஸ்கர் சால்வி, யோ மஹேஷ், இவர்களில் ஒருவருக்கு பதிலாக ஆஷிஷ் நேஹ்ரா இறங்கலாம்.

கொஞ்சம் மாலை வரை உங்க ஐடியாக்களை ஓரம் (சியெஸ்கே ஓரம் இல்லை) கட்டி வைக்கிறீங்களா....??? எவனாவது கேட்டிட்டு டீமை மாத்திட போறாங்க....:rolleyes::rolleyes::D:D
சியெஸ்கே தீவிரவாதி
மணியா...:D:D

தாமரை
23-04-2009, 04:34 AM
கொஞ்சம் மாலை வரை உங்க ஐடியாக்களை ஓரம் (சியெஸ்கே ஓரம் இல்லை) கட்டி வைக்கிறீங்களா....??? எவனாவது கேட்டிட்டு டீமை மாத்திட போறாங்க....:rolleyes::rolleyes::D:D
சியெஸ்கே தீவிரவாதி
மணியா...:D:D

என்னுடைய ஐடியாவை வச்சு சாதிச்சவங்க ஒருத்தரைக் காட்டுங்க.. நான் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுடறேன்.

:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_ush::icon_ush::icon_ush::D:D:D

mania
23-04-2009, 04:38 AM
ட்ராவிட் எப்படி டெல்லிக்கு ஆடமுடியும் தாமரை....????உன் அலசல் பதிவில் பார்க்கவும்.... சேவாகுக்குக்கு பதிலா.....!!!!:rolleyes:
தாமரை பதிவிலே பிழை கண்ட
மணியா.....:D:D

mania
23-04-2009, 04:39 AM
என்னுடைய ஐடியாவை வச்சு சாதிச்சவங்க ஒருத்தரைக் காட்டுங்க.. நான் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுடறேன்.

:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_ush::icon_ush::icon_ush::D:D:D

:D:D:D:D

தாமரை
23-04-2009, 04:45 AM
ட்ராவிட் எப்படி டெல்லிக்கு ஆடமுடியும் தாமரை....????உன் அலசல் பதிவில் பார்க்கவும்.... சேவாகுக்குக்கு பதிலா.....!!!!:rolleyes:
தாமரை பதிவிலே பிழை கண்ட
மணியா.....:D:D

அப்பப்ப சொல்லிக்கொடுக்கும் போது தப்பா சொன்னா மாணவர்கள் அந்தத் தப்பைக் காண்டுபிடிச்சு சுட்டிக் காட்டவாவது கவனிப்பாங்க அப்படிங்கறது........

எங்க வாத்தியார் சொல்லித் தந்த பாடம்...

(எப்படியெல்லாம் சமாளிப்பது என்று புத்தகமே போடணும்... நல்லா விற்பனை ஆகும்னு நினைக்கிறேன் :lachen001::D:lachen001::D:aetsch013:)

ஓவியன்
23-04-2009, 04:48 AM
அப்புறம் நன்னே முன்னே பச்சா ஹை அப்படின்னு பாடவேண்டியதா இருக்கும்.

:confused::confused::confused::confused:

நமக்குத்தான் ஹிந்தி தெரியாதே அதுதான் இப்படி... :icon_rollout:

mania
23-04-2009, 04:50 AM
அப்பப்ப சொல்லிக்கொடுக்கும் போது தப்பா சொன்னா மாணவர்கள் அந்தத் தப்பைக் காண்டுபிடிச்சு சுட்டிக் காட்டவாவது கவனிப்பாங்க அப்படிங்கறது........

எங்க வாத்தியார் சொல்லித் தந்த பாடம்...

(எப்படியெல்லாம் சமாளிப்பது என்று புத்தகமே போடணும்... நல்லா விற்பனை ஆகும்னு நினைக்கிறேன் :lachen001::D:lachen001::D:aetsch013:)

இப்படி எல்லாத்துக்குமே ஒரு பதில் வைச்சிருந்தா என்ன தான் செய்ய.....!!!!?????:rolleyes:
நொந்து போன மாணவன்
மணியா....:D:D:D

தாமரை
23-04-2009, 04:56 AM
இப்படி எல்லாத்துக்குமே ஒரு பதில் வைச்சிருந்தா என்ன தான் செய்ய.....!!!!?????:rolleyes:
நொந்து போன மாணவன்
மணியா....:D:D:D

அப்போ விடை தெரியாத கேள்விகள் அப்படின்னு ஒரு திரி ஆரம்பிச்சி உங்களுக்கு விடை தெரியாத கேள்விகளை எல்லாம் கேட்டுப் பாருங்க...

ஒரு பதில் இல்லை,,, நிறைய பதில் சொல்லலாம்.

:cool::cool::cool::rolleyes::rolleyes::rolleyes:

விடை இல்லாத கேள்வியே கிடையாது தெரியுமா? தெரியாது அப்படின்னாவது பதில் சொல்லலாம்.:lachen001::lachen001::lachen001::lachen001:

மதி
23-04-2009, 04:57 AM
இப்படி எல்லாத்துக்குமே ஒரு பதில் வைச்சிருந்தா என்ன தான் செய்ய.....!!!!?????:rolleyes:
நொந்து போன மாணவன்
மணியா....:D:D:D
தல ..உங்க வீட்ல எப்படி...
சிஎஸ்கே விளையாடும் போது கேபிள் வருதா..? இங்க ஒருத்தர் வீட்ல அப்போ மட்டும் கேபிள் புட்டுக்குதாம்... :D:D:D:D

mania
23-04-2009, 05:08 AM
தல ..உங்க வீட்ல எப்படி...
சிஎஸ்கே விளையாடும் போது கேபிள் வருதா..? இங்க ஒருத்தர் வீட்ல அப்போ மட்டும் கேபிள் புட்டுக்குதாம்... :D:D:D:D

அன்று தாமரை புலம்பியதை கண்டு ஒரு மாதிரி மனதுக்குள்ளேயெ புன்னகைத்தேன்.:rolleyes::rolleyes: நேத்து எனக்கு புட்டுகிச்சு......வயிறு இல்லை கேபிள்.....இன்று கடையிலேயெ ஒரு ஆளை நிக்க வைச்சிட்டு வந்திருக்கிறேன்.....:D:D
அன்புடன்
மணியா....
(விடாமல் அலசி ஒரு சைட் கண்டுபிடித்து நெட்டிலேயே லைவ்வா பாத்துட்டேனே....!!!!!:D:D)
:

மதி
23-04-2009, 05:12 AM
(விடாமல் அலசி ஒரு சைட் கண்டுபிடித்து நெட்டிலேயே லைவ்வா பாத்துட்டேனே....!!!!!:D:D)
:
அந்த சைட் அட்ரஸ.. தனிமடல்ல அனுப்புங்க தலை. எப்பவாச்சும் உதவும்.
(இதில் எந்தவிதமான டபுள் மீனிங்கும் இல்லீங்கோ..)

சிவா.ஜி
23-04-2009, 05:14 AM
(விடாமல் அலசி ஒரு சைட் கண்டுபிடித்து நெட்டிலேயே லைவ்வா பாத்துட்டேனே....!!!!!:D:D)
:

அந்த சைட்டைப் பத்தி எனக்கும் சொன்னீங்கன்னா புண்ணியமா போகும் தல....

டி.வி இல்லாமல் புலம்பும்

சிவா.ஜி

SathyaThirunavukkarasu
23-04-2009, 06:37 AM
சிவாஜி அண்ணா www.cricinfo.com -ல் கூட live ஆ பார்க்கலாம்

mania
23-04-2009, 06:40 AM
அந்த சைட்டைப் பத்தி எனக்கும் சொன்னீங்கன்னா புண்ணியமா போகும் தல....

டி.வி இல்லாமல் புலம்பும்

சிவா.ஜி

http;//www.myp2p.eu/index.php?part=sports இதில் உலகத்தில் நடக்கும் எந்த முக்கியமான மேட்ச்களும் பார்க்கலாம் போலிருக்கு.
அன்புடன்
மணியா

தாமரை
23-04-2009, 10:32 AM
முதல் பந்தில் சோம்பேறித்தனம் மற்றும் அசட்டையின் காரணமாக, கம்பீர் விக்கெட்டை தானம் கொடுத்து சென்றார்,

தாமரை
23-04-2009, 10:40 AM
சேவாக்கும் சேவை சார்த்தி விட்டார். சொல்லப் போனால் சேவாக் ரொம்பவே தடுமாறினார்.. அவர் அடித்தது ஒரே ஒரு கான்ஃபிடண்ட் ஷாட்,..

தல பார்ட்டி உண்டா?

தாமரை
23-04-2009, 11:07 AM
திலகரத்னே 24 பந்துகள் 50 ரன்களை அடித்துவிட்டார். இந்த வேகத்தில் போனால் 200 ரன் எளிதில் எடுக்கலாம்,

சொல்ல சொல்ல அவுட்டாக்கி வாய்க்கு சர்க்கரை போட்ட மோர்கல் வாழ்க வாழ்க!!

"பொத்தனூர்"பிரபு
23-04-2009, 12:31 PM
189/5

SathyaThirunavukkarasu
23-04-2009, 01:03 PM
சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் சலைக்காமல் விளையாடி வருகின்றது ,வெற்றி நமக்குத்தான் 90/2 (hayden 57 run) 8 over

"பொத்தனூர்"பிரபு
23-04-2009, 01:06 PM
இன்று ஏப்ரல் 23
சென்னை கிங்ஸ்ம் டெல்லியும் மோதுகிறது

டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் 189 /5
டீ வில்லியர்ச் - 105 (54 பந்து) நாட் அவுட்
தில்சன் 50 (27பந்து)

சென்னை 90 / 2
பார்த்தீவ் - 16 (16)
ஹைடன் 57 (27பந்து)

தாமரை
23-04-2009, 01:14 PM
இதுவரைக்கும் நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு, டி வில்லியர்ஸூக்கு வாழ்வு கொடுத்த அல்பி மோர்கல் வின்னிங் ரன்னை அடிப்பார்,

இன்னிக்கு பௌலிங் ஹீரோக்கள் பாலாஜி மற்றும் பிரதீப் சங்வான். வெட்டோரிக்கு இன்னும் 3 ஓவர் இருக்கு, அதனால வெட்டோரியை அடிச்சு தான் ஆகணும். 11 வது ஓவரில் நிதானமா ஆடி பதிமூணாவது ஓவரில் அடிச்சி தூள்கிளப்பினா ஜெயம் சாத்தியம் அப்படின்னு பட்சி சொல்லுது,

"பொத்தனூர்"பிரபு
23-04-2009, 01:18 PM
தோனி - 5 (7) விட்டோரியிடம் வீழ்ந்தார்

தாமரை
23-04-2009, 01:35 PM
சங்க்வான் விட்டா சங்கூதிருவார் போல இருக்கு.. பாலாஜி - சங்க்வான் பந்து வீச்சில் அப்படி என்ன இருக்கு? நல்லவேளையா அவர் இன்னும் 5 பந்துதான் வீசமுடியும்

தாமரை
23-04-2009, 01:51 PM
நேஹ்ரா நேரா போட்டு ஃபிளிண்டாஃபுக்கு சென்டாஃப் கொடுத்துட்டாரு..

இன்னும் நாலு ஓவர் 34 ரன்.... அதிசயம் எதுவும் நடக்கலைன்னாதான் சென்னை ஜெயிக்க முடியும்...

இண்டரஸ்டிங்கான விஷயம் இந்த ஐபிஎல்லின் முதல் நோபாலை இன்று சங்வான் வீசினார். அதனால் கிடைத்த ஃபிரீஹிட்டை வைடாக வீசினார், ரெய்னா அதை அடிக்க முயற்சி செய்யாமல் இருந்தால் இன்னொரு எக்ஸ்ட்ரா கிடைத்திருக்கும்,, ஒழுங்கான ஃபிரீஹிட்டும் கிடைச்சிருக்கும்.

பவுண்டரி அடிக்காம ஜெயிக்க முடியாதுப்பா.. பீல்டரைப் பாத்து அடிக்காம சைக்கிள் கேப் கிடைச்சா ஆட்டோ ஓட்டுங்க.,..

"பொத்தனூர்"பிரபு
23-04-2009, 01:55 PM
///
பீல்டரைப் பாத்து அடிக்காம சைக்கிள் கேப் கிடைச்சா ஆட்டோ ஓட்டுங்க.,..
__________________
/

ஹ ஹா

தாமரை
23-04-2009, 02:00 PM
தல BP அதிகமாயிட்டதால டிவியை ஆஃப் பண்ணிட்டாராமே

தாமரை
23-04-2009, 02:02 PM
ஜோகிந்தர் ஷர்மா மோர்கல்..பாலாஜி, முரளிதரன், 6 பால் 15 ரன்,,,

முதல் பந்து 2 ரன்,,,
இரண்டாம் பந்து 2 ரன்
மூன்றாம் பந்து ஜோகிந்தர் ரன் அவுட்
3 பந்த் 11 ரன்...
பாலாஜி ரன் அவுட்...

இரண்ட் பந்தையும் சிக்சருக்கு அனுப்பினா தான் ஜெயிக்க விடலாம்

டெல்லி அடிச்சிருச்சி சொல்லி

டி வில்லியர்ஸின் அந்த ஒரு கேட்ச் மிஸ் பண்ணினது மேட்சையே மாத்திருச்சி..

சென்னை பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

இன்னும் சென்னை ஜெயிக்கும் என்று யாராவது நம்புறீங்களா

SathyaThirunavukkarasu
23-04-2009, 02:07 PM
வெற்றி கைநழுவிவிட்டது

"பொத்தனூர்"பிரபு
23-04-2009, 02:09 PM
முடிந்தது

மதி
23-04-2009, 02:13 PM
தல BP அதிகமாயிட்டதால டிவியை ஆஃப் பண்ணிட்டாராமே
என்னக் கொடுமை சரவணன் இது..??:eek::eek::eek:

தாமரை
23-04-2009, 02:58 PM
இதுவரை நடந்த மூணு போட்டிகளில் நான் பார்த்த இரண்டு போட்டிகளிலூமே சென்னை சூப்பர்கிங்க்ஸ் ஊத்திகிச்சி..

பாக்க முடியாம போன மேட்சில சூப்பரா ஜெயிச்சிடுச்சி...

சூரியன்
23-04-2009, 03:24 PM
இதுவரை நடந்த மூணு போட்டிகளில் நான் பார்த்த இரண்டு போட்டிகளிலூமே சென்னை சூப்பர்கிங்க்ஸ் ஊத்திகிச்சி..

பாக்க முடியாம போன மேட்சில சூப்பரா ஜெயிச்சிடுச்சி...

அப்ப நீங்க பாக்காம இருந்திருந்த சென்னை சூப்பர்கிங்ஸ் கண்டிப்பா ஜெயிச்சிருக்கும் அப்படித்தானே அண்ணா.

aren
23-04-2009, 05:09 PM
இதுவரை நடந்த மூணு போட்டிகளில் நான் பார்த்த இரண்டு போட்டிகளிலூமே சென்னை சூப்பர்கிங்க்ஸ் ஊத்திகிச்சி..

பாக்க முடியாம போன மேட்சில சூப்பரா ஜெயிச்சிடுச்சி...

இனிமேல் அனீருத் மட்டும் மேட்சைப் பார்க்கட்டும்.

mania
24-04-2009, 04:38 AM
இதுவரை நடந்த மூணு போட்டிகளில் நான் பார்த்த இரண்டு போட்டிகளிலூமே சென்னை சூப்பர்கிங்க்ஸ் ஊத்திகிச்சி..

பாக்க முடியாம போன மேட்சில சூப்பரா ஜெயிச்சிடுச்சி...

அதனாலென்ன ஒரு சூப்பர் மேட்ச் பாத்தோமே....!!!!!என்னை பொறுத்தவரை இது ஒரு செமி ஃபைனல் ஆட்டத்தின் ரிஹெர்ஸல் தானே....!!!!!:rolleyes::D:D
அன்புடன்
மணியா....:D
(அடுத்த ஆட்டம் பாத்தீங்களா.......அப்பப்பா......!!!!!)

தாமரை
24-04-2009, 04:56 AM

காம்ரன் கான் தனக்குள் இருக்கும் திறமைகளை காட்ட ஆரம்பிச்சிருக்கார்.

யூசுஃப் பதான் அடிதடி..

இஷாந்த் ஷர்மா, அன்ரீத் சிங் ஓபனிங் பௌலிங்..

கங்கூலியின் ஆட்டம்

கடைசியா சூப்பர் ஓவர்..

சூப்பர் ஓவரில் கல்கத்தா செய்த தவறு முதல் பந்தில் ஒற்றை ரன் குடுக்காமல் போனது..

ஆனாலும் சூப்பர் ஓவரில் ராஜஸ்தானுக்கு வெற்றி தேடித்தந்த மூவருமே இந்தியாவின் இளம்புயல்கள். கல்கத்தாவில் சரிந்தது பன்னாட்டு மாமலைகள்..

இதை நினைச்சுப் பார்க்கறப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு...

mania
24-04-2009, 05:05 AM

அதே அதே சபாபதே.....:D:D:D

தாமரை
24-04-2009, 05:48 AM
சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஏன் தோற்றுப் போகிறது?

கடந்த மூன்று ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் தோற்றுப் போயிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன என்று அனலைஸ் பண்ணலாமா

1. தாமரை இந்த ரெண்டு மேட்சையும் பார்த்தது, (ஹி ஹி)

இல்லைங்க அது இல்லை முக்கியக் காரணம்..

1. இரண்டு மேட்ச்களிலும் சென்னை, முதலில் பேட் செய்த எதிரணிக்கு சற்று அதிகமாகவே ரன்னை விட்டுக் கொடுத்துள்ளது.

2. மேத்தீவ் ஹெய்டனுக்கு பிறகு வரும் பேட்ஸ்மேன்களுக்கு ஆட்டத்தின் முழுமையான திட்டம் இல்லை..

3. பத்ரிநாத்தின் பேட்டிங் சிலாட்

4. ஒன் டவுன் பேட்ஸ்மேணால் பிரகாசிக்க இயலவில்லை

5. ஃபிளிண்டாஃப், அல்பிமோர்கல், ஜேக்கப் ஓரம் என ஆல்ரவுண்டர்களால் பந்து வீச்சில் பிரகாசிக்க இயலவில்லை, முதலாவதாக பந்து வீசும் போது நல்லா அடி வாங்கறாங்க.

6. தவற விடப்படும் கேட்சுகள்

7. அதீத அணிபல (Team Strenght) நம்பிக்கை. நான் செய்யாவிட்டாலும் செய்ய ஆளிருக்கிறது என..

8. ஸ்ட்ரேட்டஜிக் டைம் அவுட்

அஷ்ட கோணலா நிக்கிற இந்த எட்டும்தான் எனக்கு மனக்கண் முன்னால வந்து நிக்குது.. இன்னும் சில காரணங்கள் இருக்கலாம்.

அதாவது "இளமை - புதுமை" இன்மை, சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறி உள்ள பேட்ஸ்மேன்கள் இல்லாதது..

இதை அலசிப் பார்க்க யார் யார் வர்ரீங்க மக்கா?

தாமரை
24-04-2009, 04:46 PM
http://www.chennaisuperkings.com/Blog/Blog_ContestView.aspx?BlogID=173

ஹி ஹி ஹி...

ஆனா தோனியைப் பத்தி மட்டும் எழுதினா பிரசுரிக்க மாட்டாங்களாம், டீமைப் பத்தி மட்டும்தான் எழுதணுமாம்.

தாமரை
24-04-2009, 06:07 PM
ரவி பொபராவின் திறமையான ஆட்டம் பஞ்சாப்பிற்கு இன்று முதல் வெற்றிக்கனியைக் கொடுத்திருக்கு.

ராயல் சேலஞ்ஜர்ஸூக்கு நல்ல ஓட்டங்களை பெற உதவிய கல்லீஸ்.. அதே மாதிர் பஞ்சாப்பிற்கும் நல்ல ஓட்டங்களை பெற உதவினார், கடைசியா ரைடர் தன்னுடைய கணக்கைத் துவங்கி விட்டார்.

இருக்கறதில இந்த இரண்டு டீமும் இன்னும் பல படி முன்னேறனும். இன்னும் ஆரஞ்சுத் தொப்பி ஹெய்டனிடமும் ஊதாத் தொப்பி ஆர்.பி,சிங்கிடமும் தான் இருக்கு.

பெங்களூர் கம்முன்னு 0-1 என்றே ஆட்டத்தைத் துவக்கலாம் என்று தோணுது. கொஞ்சம் பந்துகளாவது அதிகமா கிடைக்குமே. இதுவரை ஆடிய நாலு ஆட்டங்களிலும் 0-1 தான் ஸ்கோர்.

இதில பீட்டர்சன் ஊருக்குப் போயிட்டா இன்னும் என்ன ஆகுமோ புரியலை,

தாமரை
25-04-2009, 04:27 AM
கொல்கொத்தா க்நைட் ரைடர்ஸ் உடனான போட்டிக்கு...

http://www.chennaisuperkings.com/Blog/Blog_ContestView.aspx?BlogID=181

தாமரை
25-04-2009, 05:47 AM
சென்னை சூப்பர் கிங்க்ஸ் சைட்டில் என்னுடைய கட்டுரைகளைப் படிக்க

http://www.chennaisuperkings.com/Blog/blog_ContestListing.aspx?AuthorID=41924

arun
25-04-2009, 06:24 AM
எல்லா அணிகளையும் பார்க்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் கொஞ்சம் பலமான அணி தான்

ஆனால் சென்ற முறை போல இல்லாமல் இந்த முறை பல வீரர்கள் சொதப்புகிறார்கள்

மிடில் ஆர்டரில் வரும் வீரர்கள் சொதப்பி வருவதே தோல்விக்கான முக்கியமான காரணம் என்று கருதுகிறேன்

இனிவரும் போட்டிகளில் பேட்டிங் ஆர்டரை மாற்றினால் வெற்றிகள் குவியும் என நம்புவோம்

mania
25-04-2009, 06:33 AM
http://www.chennaisuperkings.com/Blog/Blog_ContestView.aspx?BlogID=173

ஹி ஹி ஹி...

ஆனா தோனியைப் பத்தி மட்டும் எழுதினா பிரசுரிக்க மாட்டாங்களாம், டீமைப் பத்தி மட்டும்தான் எழுதணுமாம்.

யார் சொன்னா அப்படி.....:rolleyes: கொஞ்சம் பாராட்டி எழுதி பாருங்க....பிரசவம் ஆயிடும்......:D:D
அன்புடன்
மணியா....:D

mania
25-04-2009, 06:35 AM
பெங்களூர் கம்முன்னு 0-1 என்றே ஆட்டத்தைத் துவக்கலாம் என்று தோணுது. கொஞ்சம் பந்துகளாவது அதிகமா கிடைக்குமே. இதுவரை ஆடிய நாலு ஆட்டங்களிலும் 0-1 தான் ஸ்கோர்.

இதில பீட்டர்சன் ஊருக்குப் போயிட்டா இன்னும் என்ன ஆகுமோ புரியலை,

:D:D:D பீட்டர்சன் ஊருக்கு போனா ஒன்னும் ஆகாது....இன்னும் கொஞ்சம் ரன்ஸ் கூட கிடைக்கும்....:D:D:D
அன்புடன்
மணியா...

தாமரை
25-04-2009, 08:56 AM
:D:D:D பீட்டர்சன் ஊருக்கு போனா ஒன்னும் ஆகாது....இன்னும் கொஞ்சம் ரன்ஸ் கூட கிடைக்கும்....:D:D:D
அன்புடன்
மணியா...

பீட்டர்சன் போன பின்னாடி கேப்டன் கல்லீஸ்..

நிரந்தரமில்லாத தலைமை. இது வீக் பாய்ண்டு...

ஓவர் பெய்டா, ஓவர் சீஸ் ல இருந்து வந்து ஒரு ஓவர் கூட ஆடாம இருக்கறதெல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர். அந்தக் காசை லோகல் டேலண்ட் டெவலப்மெண்டுக்கு உபயோகிச்சா என்னவாம்?

SathyaThirunavukkarasu
25-04-2009, 05:11 PM
இன்று மழை குறுக்கிட்டதால் இதுவரை ஆட்டம் தொடங்கவில்லையே

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 10:59 AM
பெங்களூரும் டெல்லியும்
டாஸ் வென்ற பெங்களூரு பேட் செய்கிறது

இம்முறையும் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஒரு விட்கெட்

ரஜஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 2வது பந்தில் ரைடர் அவுட்
சென்னைக்கு எதிரான 2 வது போட்டியில் முதல் பந்தில் பிரவின் குமார் அவுட்
டெக்கானுக்கு எதிரான 3 வது போட்டியில் முதல் பந்திலேயே ரைடர் அவுட்
கிங்ஸ் 11 க்கு எதிரான 4 வது போட்டியி 2 வது ஓவரின் முதல் பந்தில் உத்தப்பா அவுட், அது அவருக்கு முதல் பந்து என்பது குறிப்பிடதக்கது

இப்போது டெல்லிக்கு எதிரான 5 வது போட்டியில் முதல் பந்தில் காலிஸ் அவுட்

என்ன கொடுமையிது ???
பாவம் பெங்களூரு
பேஸ்மெண்ட் வீக் (பாடிய்ம் வீக்குதான்)

தாமரை
27-04-2009, 04:41 AM
போற போக்கைப் பார்த்தால் ஒன்றிற்கு மேற்பட்ட ஆல்ரவுண்டர்கள் அவசியமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடிவதில்லை.

ஒன்றிற்கு மேற்பட்ட ஆல்ரவுண்டர்கள் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் போனவருஷம் கோப்பையை வாங்கலியான்னு கேட்கத் தோணும். ஒரு ஆல்ரவுண்டர் ஷேன் வாட்ஸன். இன்னொருத்தர் யாரு? யூசுப் பதானா? அவர் பேட்ஸ்மேனாக மட்டுமே இருந்தார், ஒரு ஓவர் போடுவார் ஒழுங்கா வந்தா அப்புறம் மறுபடி இன்னொரு ஓவர்.. அப்புறம் ஜடேஜா.. அவரும் அப்படித்தான் பேட்ஸ்மேனா மட்டும் விளையாடினார். வார்னே பௌலரா மாத்திரம் விளையாடினார். சான்ஸ் கிடைக்கும் போது அடிச்சு ஆட முயற்சி செய்தார்,

20 ஓவர்களையும் மிக நன்றாக வீசித்தான் ஆகணும். ஆனால் ஒரு பத்து ஓவர், அடிச்சு ஆடினா கூட ஜெயிச்சிடலாம் என்பதுதான் 20/20 பொறுத்த வரை உண்மை.

நல்ல பௌலர்கள் 5 பேர் மிக முக்கியம். ஆல்ரவுண்டரா இருந்தால் கூட அவர் மிகச்சிறந்த பௌலராய் இருப்பது மிக மிக முக்கியம்.

முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் ஒழுங்கா ஆடினாலே ஓரளவு நல்ல ஸ்கோர் வந்திடும். பின்னால் வரும் பேட்ஸ்மேன்கள் காட்டு விளாசு விளாசித்தான் ஆகணும். அதனால 7 பேட்ஸ்மேன்கள் என்பதெல்லாம் ரொம்பவே அதிகம். ஒண்ணு பேட்டிங் செய்ய வாய்ப்பே கிடைக்காது..இன்னொன்னு பேட்டிங் செய்த களைப்பில் பௌலிங் அடிவாங்கும்.

அதனால் நம்பர் 6 க்கு மட்டுமே ஒரே ஒரு ஆல்ரவுண்டரை வைத்துக் கொண்டு 5 முழுமையான நல்ல பௌலர்களை களமிறக்கினால் வாய்ப்புகள் அதிகம்.

முதல் பந்தில் கிளீன் போல்டாகி என் வாக்கை காப்பாற்றிய கல்லீஸூக்கு நன்றி-நன்றி-நன்றி

aren
27-04-2009, 05:12 AM
தாமரை அவர்கள் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். அப்படி ஆல்ரவுண்டராக இருப்பவர் நன்றாக பந்து வீசுபவராக இருக்கவேண்டும், அப்படியே கொஞ்சம் அடித்து ஆடுபவராகவும் இருக்கவெண்டும். இதில் ஃபிளிண்டாஃப் மற்றும் ஆல்பி மோர்கல் சரியாகவே இருப்பார்கள். ஃபிளிண்டாஃப் ஊருக்கு போய்விட்டதால் ஆல்பி மோர்கலை மட்டுமே நம்பினால் போதுமானது, ஜாகப் ஓரம் அவர்களையும் கூடவே களத்தில் இறக்கவேண்டாம். அப்படி இறக்கினால் அவரை ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அப்படியானால் சென்னை சூப்பர் கிங்ஸின் அடுத்த ஆட்டதின் வீரர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்:

1. பார்தீவ்
2. ஹேடன்
3. பத்ரிநாத்
4. ரைனா
5. தோனி
6. மோர்கல்
7. பாலாஜி
8. கோனி
9. முரளி
10. நிட்டனி
11. அஸ்வின் அல்லது ஜோகிந்தர் சர்மா

ரைனாவிற்கு பதில் பத்ரிநாத்தை முதல் விக்கெட் விழுந்தவுடன் களத்தில் இறக்கலாம். காரணம் பார்த்தீவ் மற்றும் ஹேடன் இருவரும் இடதுகை ஆட்டக்காரர்கள். ஆகையால் இடது கை ஆட்டக்காரரான ரைனாவிற்கு பதில் பத்ரிநாத்தை மூன்றாவது ஆளாக களத்தில் முதல் விக்கெட் விழுந்தவுடன் இறக்கலாம். வலது கை இடது கை என்று ரொடேட் செய்தால் ஃபீல்டிங் குழுவிற்கு கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும்.

அடுத்த ஆட்டத்தை வென்றேயாகவேண்டும் என்ற நெருக்கடியில் சென்னை அணி இருக்கிறது.

பார்க்கலாம் என்ன நடக்கப்போகிறதென்று.

தாமரை
27-04-2009, 05:24 AM
கவலைப்படாதீங்க ஆரென். இன்னிக்கு ஆட்டம் 4:30 மணிக்கு. அதனால் கண்டிப்பாக ஜெயித்துவிடுவார்கள். ஏனென்றால்.. ஏனென்றால்...

இன்னிக்கு என்னால் நேரடி ஒளிபரப்பு பார்க்க முடியாதே... :D :D :D

aren
27-04-2009, 05:25 AM
கவலைப்படாதீங்க ஆரென். இன்னிக்கு ஆட்டம் 4:30 மணிக்கு. அதனால் கண்டிப்பாக ஜெயித்துவிடுவார்கள். ஏனென்றால்.. ஏனென்றால்...

இன்னிக்கு என்னால் நேரடி ஒளிபரப்பு பார்க்க முடியாதே... :D :D :D

அப்படின்னா வெற்றி நமதே!!!

நீங்கள் நீடூடி வாழ வாழ்த்துக்கள்.

mania
27-04-2009, 05:51 AM
கவலைப்படாதீங்க ஆரென். இன்னிக்கு ஆட்டம் 4:30 மணிக்கு. அதனால் கண்டிப்பாக ஜெயித்துவிடுவார்கள். ஏனென்றால்.. ஏனென்றால்...

இன்னிக்கு என்னால் நேரடி ஒளிபரப்பு பார்க்க முடியாதே... :D :D :D

நான் கொடுத்திருக்கிற சைட்டிலே நெட்டிலேயே நேரடியா சூப்பரா பார்க்கலாமே.....!!!!
வெற்றி தோல்வியை பற்றி கவலை படாத
மணியா...:D:D

தாமரை
27-04-2009, 05:53 AM
நான் கொடுத்திருக்கிற சைட்டிலே நெட்டிலேயே நேரடியா சூப்பரா பார்க்கலாமே.....!!!!
வெற்றி தோல்வியை பற்றி கவலை படாத
மணியா...:D:D

நாங்க ஆஃபிஸ் வேலை பார்க்கும் போது வீடியோ பார்க்க மாட்டோமாக்கும்..

அதுவுமில்லாம மீட்டிங் இருக்கு..

mania
27-04-2009, 05:56 AM
நாங்க ஆஃபிஸ் வேலை பார்க்கும் போது வீடியோ பார்க்க மாட்டோமாக்கும்..

அதுவுமில்லாம மீட்டிங் இருக்கு..

:rolleyes::rolleyes::D:D:D

தாமரை
27-04-2009, 06:14 AM
இராயல் சேலஞ்ஜர்ஸ்..

ஊத்திகிட்ட (ஊ)உத்தப்பாவை திருப்பிப் போடணுமா?

ராயல் சேலஞ்ஜர்ஸூக்கு ஆரம்பம் படு சேலஞ்ஜா இருக்கு, ஓபனிங் பேட்ஸ்மேன் அப்படின்னு சொல்லக் கூட யாருமில்ல..

"Just see" ரைடர் பாவம். அவருக்கு ஓபனிங் பிரச்சனையாவே இருக்கு. ஒரே ஒரு மேட்சில மட்டும் பஞ்சாப்போட 32 ரன் அடிச்சாரே தவிர மற்றபடி ... "முடி...ல"

கல்லீஸ் ஓபன் பண்ணறேன்னு சொல்லிட்டு முழுசா ஓபன் பண்ணி விட்டு ஆஃப் ஸ்டம்பை கோட்டை விட்டுட்டாரு.

பிரவீன்குமார் பிறரை வீணாக்காமா தன்னையே வீணாக்கிகிட்டாரு

இப்போதைக்கு ஓபனிங் பேர் அப்படின்னு ஒண்ணுமே இல்லாம இருக்கிற அணி ராயல் சேலஞர்ஸ்தான்.

கல்லீஸ் சரி பரவாயில்லை அப்படின்னு பார்த்தா பௌலிங்கில் வாரி வழங்கறார்.

கம்முன்னு உத்தப்பாவுக்கு பதில் வாசிம் ஜாஃபரையாவது, ஒரு ரெண்டு ஓவர் கட்டையப் போடுப்பா அப்படின்னு சொல்லிப் பார்க்கலாம்.

ஜாகீர்கானைக் கொடுத்து உத்தப்பாவை வாங்கினது ரொம்பவுமே நஷ்டம்தான்.

mania
27-04-2009, 06:25 AM
பீடர்சன்ன்னுக்கு பதிலா பீடரோட சன் ஆடியிருக்கலாமோ....???
சந்தேகத்துடன்
மணியா...:rolleyes::D:D

நேசம்
27-04-2009, 06:35 AM
போன வருடம் தொடர்ந்த ராசி(விஜய் மல்லையாவின்) இன்னும் ராயல் சேலஞ்சருக்கு தொடருது போலிருக்கு.ஏனென்றால் கடந்த முறை அடிப்பட்ட அணிகள் இந்த முறையை அசத்துகிறார்கள்.. பார்ப்போம் இனி பாக்கி ஆட்டங்களில் எப்படி விளையாடுகிறார்கள்

மதி
27-04-2009, 08:44 AM
எப்படியாவது சென்னை ஜெயிச்சா நல்லது தான். தாமரை அலுவலகத்திலேயே இருக்கவும்.

எல்லாம் சரி. fakeiplplayerனு ஒரு ஆள் எழுதற ப்ளாக் சூடு பறக்குதே.. என்ன காமெடி அது..? ஏதாச்சும் விளம்பர தந்திரமோ?

mania
27-04-2009, 09:45 AM
எப்படியாவது சென்னை ஜெயிச்சா நல்லது தான். தாமரை அலுவலகத்திலேயே இருக்கவும்.

எல்லாம் சரி. fakeiplplayerனு ஒரு ஆள் எழுதற ப்ளாக் சூடு பறக்குதே.. என்ன காமெடி அது..? ஏதாச்சும் விளம்பர தந்திரமோ?

விளம்பர தந்திரமா....:rolleyes::D:D சும்மா விளாசு விளாசுன்னு வாங்கறாங்க......சந்தடி சாக்கிலே கமெண்ட்னு
அவங்க அவங்க கன்னா பின்னான்னு எழுதறாங்க.....இப்போ யாருன்னு கண்டுபிடிச்சாச்சுன்னு சொல்றாங்க ....பார்ப்போம்.....ஏதோ கொஞ்சம் மேட்டரை கூட மறைச்சிட்டாங்க போல இன்னிக்கு....:rolleyes::D:D
அன்புடன்
மணியா....:D:D

தாமரை
27-04-2009, 10:17 AM
இந்த பிளாக் எழுதறவங்களையெல்லாம் கண்டுபிடிச்சிருவாங்க......... :) :D ;)

மதி
27-04-2009, 11:01 AM
இந்த பிளாக் எழுதறவங்களையெல்லாம் கண்டுபிடிச்சிருவாங்க......... :) :D ;)
ம்ம்....
ஆட்டம் விறுவிறுப்பா போகுது போல..

மதி
27-04-2009, 11:04 AM
ரெய்னா அவுட்.

மதி
27-04-2009, 11:18 AM
10 ஓவர் முடிவில் 88/2. தேறுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

தாமரை
27-04-2009, 11:40 AM
103 - 4. பத்தாவது ஓவருக்குப் பின்னால ஓஜா வந்து ஒரே ஓவர்ல இரண்டு விக்கெட் எடுத்து (தோணி, ஹெய்டன்) பதிமூணாவது ஓவர்ல பிரேக் போட்டுட்டாரு..

150 ரன் எடுக்கலாம் மொத்தமா... :D :D :D

தாமரை
27-04-2009, 12:09 PM
ஃபிளிண்டாஃபுக்கு செண்ட் ஆஃப் கொடுத்த பிறகு ஓரமாய் இருந்த ஓரம் ஓர வஞசனை செய்யாமல் அடித்து விளாசினார்.

இதனால் 165/6 என்ற ஸ்கோரை எட்ட முடிந்தது..

இந்த ஸ்கோரை ஞாபகம் இருக்கா? முதல் போட்டியில் மும்பை அணி எடுத்த ஸ்கோர் இது..அவங்க 165/7

சிவா.ஜி
27-04-2009, 12:26 PM
பாலாஜி 4 பந்துல 10 ரன் குடுத்திருக்காரு. அதுல ரெண்டு பௌண்டரி....என்ன ஆகுமோ?

மதி
27-04-2009, 12:33 PM
சென்னை 28 வசனம் தான் ஞாபகத்துக்கு வருது...

தோனி : "மச்சான்... 165 ரன் தான் அடிச்சிருக்கோம். லெக் சைட்ல போடாத.. ஆஃப் சைட்லேயே மெயிண்டேன் பண்ணு..."

கோனி : "டேய்..இவன் எப்படி போட்டாலும் அடிக்கறாண்டா..."

மதி
27-04-2009, 12:36 PM
தாமரை வீட்டுக்கு போய் மேட்ச் பார்க்க ஆரம்பிச்சாச்சா..? இந்த மாத்து விழுது

கா.ரமேஷ்
27-04-2009, 12:38 PM
கிழிகிறாங்க கில்லியும்,கிப்சும் 3 ஓவெர் - 48 ரன்

மதி
27-04-2009, 01:53 PM
அட போங்கப்பா....
சென்னையாம் சென்னை....

தோனியின் தோணி மூழ்க ஆரம்பிச்சாச்சோ..????

நேசம்
27-04-2009, 01:56 PM
டெக்கான் சார்ஜார் அணி 19.3 ஒவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்று விட்டது. கில்கிறிஸ்ட் 44 , கிப்ஸ் 69 நாட் அவுட், பிலாகியா 12 நாட் அவுட்

நேசம்
27-04-2009, 01:58 PM
அவரசப்பட்ட எப்படி மதி அண்ணா. பொறுத்து இருந்து பார்ப்போம்.(அது சரி தாமரை திரி ஆரம்ப்பிச்ச ராசியோ)

மதி
27-04-2009, 02:44 PM
அவரசப்பட்ட எப்படி மதி அண்ணா. பொறுத்து இருந்து பார்ப்போம்.(அது சரி தாமரை திரி ஆரம்ப்பிச்ச ராசியோ)
:D:D:D:D:D:D
எவ்ளோ நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது....?
:frown::frown::frown::frown::frown::frown:

தாமரை
28-04-2009, 04:08 AM
அட்டா இப்படி எல்லாம் சதி நடக்குதா?

என்னை ஏம்பா வையறீங்க?

கோனி ஒழுங்கா போடாட்டியும் எனக்கு திட்டு, மோர்கல் ஒழுங்கா அடிக்காட்டியும் எனக்குத் திட்டு..

பிட்ச் எப்படி இருக்கு என்பது ஆரம்பத்திலேயே தெரிஞ்சு போச்சே.. கில்லி வேணுகோபால்ராவ், ரோஹித் ஷர்மா இப்படி சுழல் பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தினாரே கவனிக்கலையா?

முதல் 5 ஓவர்ல 50+ ரன் அடிச்சீங்களே.. அப்பல்லாம் சந்தோஷமாத்தானே இருந்தீங்க?

இதுவரைக்கும் அஞ்சு மேட்ச் நடந்தது சென்னை - கல்கத்தா மேட்ச் மழையால் தடைபடாட்டி அட்லீஸ்ட் அவங்களையாவது ஜெயிச்சிருக்கலாம்..

இதுவரை யார்கிட்ட தோத்திருக்கோம் எப்படித் தோத்திருக்கோம்னு பாருங்க...

மும்பையோட ஆடின மேட்சில அதிரடி அபிஷேக் நாயர், வள்ளல் ஃபிளிண்டாஃப்.. ம(ல்)லிங்கா வோட பந்து வீச்சில் அனல் பறந்தது...

அடுத்து டெல்லியோட ஆடின மேட்சில டி-வில்லி-யர்ஸ், தில்சன் டி வில்லியர்ஸ் கேட்சை மிஸ் பண்ணாம இருந்து ஃபிளிண்டாஃபும், மோர்கல்லும் அள்ளிக் கொடுக்காம இருந்திருந்தா அதை ஜெயிச்சு இருக்கலாம்.

மூணாவதா ஹைதராபாத்...கில்லி கிழிச்சுட்டார்.. இந்த மேட்சில தான் புத்தி வந்து முதன் முதலா சுரேஷ் ரெய்னா, பந்து போடு அப்படின்னு சொன்னாரு கோனி..

SK Raina 4 0 18 2 4.50

நான் அதைப் பத்தி எழுதி எவ்வளவு காலமாச்சி (யுடிலிட்டி பிளேயர்கள் திரி பார்க்கவும்.. ராஜாவுக்கு என் மேல கோபம் கூட அதெப்படி ஜெயசூர்யாவையும் சுரேஷ் ரெய்னாவையும் ஒரே குரூப்ல சேர்க்கப் போச்சுன்னு..).

இப்படி மல்லி, வில்லி, கில்லி இவங்க அதிரடியில் மில்லி அடிச்சமாதிரி தள்ளாடுது சென்னை அணி.

ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும் பாடுற மாட்டை பாடித்தான் கறக்கணும்..

ரூட் அவேக்கனிங்.. அப்படின்னு சொல்லுவாங்க.. இதுதான் அது.. அதாவது ஏதோ லக்கு ஒண்ணு ரண்டு மேட்ச் கைநழுவிப் போச்சு,.. நாம சிங்கமில்ல அப்படின்னு மெதப்பில இருந்த காலம் போயி...

யாரா இருந்தா என்ன விளையாண்டா தான் ஜெயிக்க முடியும்.. அப்படிங்கற நிஜ உலகத்துக்கு இந்நேரம் சூப்பர் கிங்க்ஸ் வந்திருக்கணும்.

இதுவரை ஆடிய 5 ஆட்டங்கள் விடுங்க.. முதல் சுற்றில இன்னும் ரெண்டு போட்டி இருக்கு.

1. ராஜஸ்தான் ராயல்ஸ். 2. பஞ்சாப்

பஞ்சாப் இன்னிக்கு தேதியில 4 வது இடத்தில் இருக்கு... இவங்க இரண்டு பேரையும் ஜெயிச்சா முதல் ஏழு போட்டிகளில் 4 வது இடம் வரும். அதுக்கான பிட்ச் எது, யாரை குறிவைக்கணும் அணியை எப்படித் தயார் படுத்தணும் இப்படி யோசிக்கணும்..

முக்கியமா ஸ்பின் பௌலிங்க் ஆட பிராக்டீஸ் பண்ணனும்... முரளி இருக்கார்.. சிவராம கிருஷ்ணன் அங்கதான் இருக்கார்.. இன்னும் சில நல்ல பௌலர்களெல்லாம் இருக்காங்க.. வச்சு பிராக்டீஸ் பண்ண வேண்டியதுதானே..

இன்னும் 9 மேட்ச் இருக்கு.. அதுல ஜெயிக்க வேண்டியது 6 மேட்ச். இதைத் தெரிஞ்சு பிளான் பண்ணி ஆடினா.. உள்ளே போகலாம்..

நாம அஞ்சாவது இடத்தில இருக்கோம் என்று அசால்ட்டா இருந்திடக்கூடாது..
நாம அஞ்ச வேண்டிய இடத்தில இருக்கோம் அப்படின்னு பயப்படவும் கூடாது.

அடுத்த இரண்டு போட்டிகளையும் ஜெயிச்சே ஆகணும். இது மட்டும்தான் குறியா இருக்கணும்..

அடுத்த ரவுண்டு ஏழுபோட்டிகளைப் பற்றி இப்ப கவலைப் படத் தேவையில்லை.

தாமரை
28-04-2009, 04:15 AM
தாமரை வீட்டுக்கு போய் மேட்ச் பார்க்க ஆரம்பிச்சாச்சா..? இந்த மாத்து விழுது

ஹி ஹி பொறுக்காம கேண்டீன்ல போய் அங்கிருந்த டீவில பார்த்தேனே..
:lachen001::lachen001::eek::eek:

தாமரை
28-04-2009, 05:46 AM
சென்னையின் அடுத்த மேட்ச் ராய்ல்ஸோட சென்ஞ்சூரியன் கிரவுண்ட்ல..

இந்தமுறை நானே நினைச்சாலௌம் மேட்சைப் பார்க்க முடியாது. ஏன்னா பஸ்ல ஊருக்கு போய்கிட்டு இருப்பேன்.

இன்னிக்கு செஞ்சூரியன்ல ராயல்ஸ் டேர் டெவில்ஸோட ஆடறாங்க.. இதை நன்கு கவனித்து அதுக்குத் தகுந்த மாதிரி பிளான் பண்ணனும்.

அதுவுமில்லாம நம்ம மேட்சுக்கு முன்னால டெக்கான் சார்ஜர்ஸூம், டெல்லி டேர் டெவில்ஸூம் மோதறாங்க... இந்த மேட்சையும் பார்த்த பின்னால பௌலர்களை முடிவு செய்வது உத்தமம்.

நல்லா யோசிச்சுப் பாருங்க

6 பேட்ஸ் மேன் இருபது ஓவர் ஒழுங்கா ஆடினா அவங்களுக்கே பத்தாது.. இதில பத்ரிநாத் தேவையா? அதுக்கு பதிலா கோனி அடிக்க மாட்டாரா?

பத்ரிநாத்துக்கு பதிலா ஒருத்தர், ஜோகிந்தர் ஷர்மாவுக்கு பதிலா ஒருத்தர் அப்படின்னு இரண்டு ஸ்லாட்கள் இருக்கு.

ஜோகிந்தருக்கு பதிலா ஸ்பின் அப்படின்னா அஸ்வினை உள்ளக் கொண்டு வரலாம். வேகம் என்றால் சுதீப் தியாகி ரொம்பவே தியாகம் பண்ணிட்டு உட்கார்ந்திருக்கார்..

ஸ்பின் என்றால் பத்ரிநாத்துக்கு பதிலா விராஜ் கட்பே வை உபயோகப் படுத்தலாம். அப்போ ஒரு ஆஃப் ஸ்பின்னர், ஒரு லெஃப் ஆர்ம் ஸ்பின்னர், ஒரு லெக் ஸ்பின்னர், கூடவே சுரேஷ் ரெய்னா அப்படின்னு நாலு ஸ்லோ பௌலர்கள் கிடைப்பார்கள்.

அதே மாதிரி ஃபாஸ்ட் என்றால், பாலாஜி, கோனி, மோர்கல், ஓரம், தியாகி என்று ஐந்து வேகப் பந்து வீச்சாளர்கள் கிடைப்பார்கள். முரளிதரன் இருக்கார்.

பந்துவீச்சில் பலமா இருந்தாத்தான் ஜெயிக்க முடியும்.

யோசிப்பாங்களா சென்னை சூப்பர் கிங்க்ஸ்?

தாமரை
28-04-2009, 08:55 AM
http://www.chennaisuperkings.com/blog/Blog_ContestView.aspx?BlogID=256

என்னதான் எழுதினாலும் இந்த எடிட்டர்ஸ் நம்ம "பஞ்ச்"சை எல்லாம் வெட்டி எடுத்துட்டு தான் போடறாங்கப்பா..

இருக்கட்டும் இருக்கட்டும்..

xavier_raja
28-04-2009, 09:24 AM
இந்த வயசிலயும் தலைவர் (சச்சின தவிர வேறு யார்) ஆடினார் பாருங்க ஆட்டம்.. அவரால் மட்டுமே முடியும் காலத்திற்கேற்ப ஆட்டத்தினை மாற்றிக்கொள்ள... இதில் மருபெதும் உண்டா..?

தாமரை
28-04-2009, 12:25 PM
இந்த வயசிலயும் தலைவர் (சச்சின தவிர வேறு யார்) ஆடினார் பாருங்க ஆட்டம்.. அவரால் மட்டுமே முடியும் காலத்திற்கேற்ப ஆட்டத்தினை மாற்றிக்கொள்ள... இதில் மருபெதும் உண்டா..?

ஏனுங்க எங்க ஹெய்டனுக்கு என்ன குறைச்சல்.. அவருக்கும் அதே வயசுதான்.. இன்னாமா பொளந்து கட்டுறார் பார்த்தீங்க இல்ல..

அட உங்களோடவே ஒருத்தர் இருக்காரே .. ஜெயசூர்யா.. அவருக்கு வயசு 40. தெரியுமில்ல..

கில்லி அடிக்கிறாரே சொல்லி...

இன்னாமோப்பா வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...

உலகக் கோப்பை 20/20 போட்டிக்கு இந்திய அணியில் சச்சின் இல்லை..
அது இந்திய அணிக்கு மிகப் பெரிய நஷ்டம்தான்.

இந்திய பேட்ஸ்மேன்களில் சச்சின் மாதிரி சொல்லி அடிக்க யாருமில்ல இப்பன்னு ஒத்துக்கறேன்.

http://www.chennaisuperkings.com/Blog/Blog_ContestView.aspx?BlogID=264

இதை ஒரு வார்த்தை கூட எடிட் பண்ணாம போட்டுட்டாங்க தலை...

மதி
30-04-2009, 02:41 PM
யாராச்சும் சென்னை சூப்பர்(??)கிங்க்ஸ் அணிய சீக்கிரம் கிளம்பி வர சொல்லிடுங்களேன்.... செலவாவது மிச்சமாகும். இரண்டாம் ஓவரிலேயே ஆபத்பாந்தவனாய் இருந்த மேத்திவ் போயாச்சு.

என்னமோ தெரியல.. இன்னமும் பார்த்திவ் காலையே சுத்திக்கிட்டு இருக்காங்க. ஏதாச்சும் மந்திரம் போட்டாரான்னு தெரியல..

ம்ம்.. பார்க்கலாம்.. என்னத்த விளையாடறாங்கன்னு..

வெறுத்துப் போய் மேட்ச் பார்க்கும்
சென்னை சூப்பர்கிங்க்ஸ் ரசிகன்

மதி
30-04-2009, 02:45 PM
என்ன தான் சூடுபட்டாலும் திருந்தவே மாட்டாங்க.. கேட்டா இன்னமும் தோனிக்கு அந்தாளு மேல தான் நம்பிக்கையாம்..

வெட்டியா பந்த வேஸ்ட் பண்ணி வெற்றிகரமா அவுட்டாயாச்சு. வாழ்க பார்த்திவ்... வளர்க சென்னை சூப்பர்கிங்க்ஸ்...

பத்ரி.. இறங்கியிருக்கார்... அடுத்து என்ன காமெடி நடக்கப்போகுதோ?

தாமரை
30-04-2009, 04:55 PM
ஆயிரம் பேரு சொல்றீங்க ஆனா ஒண்ணு கவனிச்சீங்களா? முரளி விஜய் பற்றி ஒரு வார்த்தை கூட எங்கயுமே காணோம், வி,பி சந்திரசேகரும் சொல்றதில்ல, தோனியும் சொல்றதில்ல. அதை விடுங்க ட்ரெய்னிங் கேம்ல கூட அவர் இல்லை...

வித்யூத் சிவராமகிருஷ்ணனை வீட்டுக்கு அனுப்பினப்பவே பார்த்திவ் மட்டும்தான் என்று உறுதி ஆகிட்டது. அதிலயும் ட்ரெய்னிங் மேட்சில இவங்க புகழ்ந்த ஆல்ரவுண்டர் சுரேஷ் குமாரையும் அனுப்பிட்டாங்க...

ரசிகர்கள் மட்டும் தான் முரளி என்ற பேரைச் சொல்லிகிட்டு இருக்கோம்.. அதனால

அதனால இப்போதைக்கு பார்த்தீவை மாத்த சான்ஸ் இல்லை. இல்லை.. இல்லவே இல்லை..

இந்தக் கமெண்டை சென்னை ரசிகர்கள் பிளாக்ல எழுதினேன் வெட்டி எறிஞ்சிட்டாங்க...

ஆதவா
30-04-2009, 05:16 PM
இன்னிக்கும் பார்த்துட்டுனு இருக்கேன். சென்னை இன்னைக்கு ஜெயிக்கிறாப்ல இருக்கு!!! பார்ப்போம்!!

ரைனா ஆட்டம் கலக்கல்.. அதிலும் 18வது ஓவர் பின்னியெடுத்தாரு!!!!

61 / 3

மதி
01-05-2009, 03:14 AM
ஜெயிச்சுட்டாங்க.. ஆனாலும் பார்த்திவ மாத்தணும்

தாமரை
01-05-2009, 06:46 AM
நான் பார்க்காத மேட்சில ஜெயிச்சு என்னய்யா பிரயோசனம். தைரியமிருந்தா நான் பார்க்கறப்பவே ஜெயிச்சுக் காட்டச் சொல்லுங்க..ஹி ஹி..

பார்த்திவை மாத்தணும் பார்த்திவை மாத்தணும்னுதான் அவங்களும் சான்ஸ் கொடுத்து பார்க்கிறாங்க.. ஆனால் அவர் மாறுகிற மாதிரி தெரியலையே..

அவரை மாத்த வேணாம்.. தூக்கச் சொல்லுங்க.. ஹி ஹி

ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது... வார்னே புதுப்பசங்கள் மேல நம்பிக்கை வைக்கிற அளவுக்கு இல்லாட்டியும் தோனி கொஞ்சமாவது வைக்கணும். அன்னிக்கு அஸ்வினுக்கு ஒரு ஓவர் கூட தரலை.. இன்னிக்கு ஜகதிக்கு ஒரு ஓவர் கூட தரலியே...

அணியில் உள்ள புதுமுகங்களில் பலம் பலவீனம் தெரியலைன்னா, அப்புறம் ஒரு எமர்ஜென்சியை எப்படிச் சமாளிக்கறது?

aren
01-05-2009, 07:20 AM
அடுத்த ஆட்டத்தில் பார்த்தீவிற்கு பதில் முரளி விஜயைக் கொண்டுவரலாம். அதுபோல் ஓரமை ஓரம் கட்டிவிட்டு நிட்டனியைக் கொண்டுவரலாம்.

அப்படி நிட்டனி உள்ளே வரும்பொழுது இன்னொரு வேகப்பந்துவீச்சாளரை கழட்டிவிட்டு அதற்குபதில் அஸ்வினை உள்ளே கொண்டுவரலாம்.

ஏ.பி. கார்த்திக்கையும் கொஞ்சம் முயற்சி செய்தால் என்ன.

பாலாஜி விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளராக இருக்கிறார். இதுவரை இவர் பந்துவீச்சு பரவாயில்லை. இனிமேல் எப்படி விளையாடுகிறார் என்று பார்க்கலாம்.

பரஞ்சோதி
02-05-2009, 09:13 AM
ஆரென் அண்ணாவின் கருத்தே என் கருத்தும்.

இனிமேலாவது கிங்ஸ் மாதிரி ஆடணும், இல்லைன்னா தண்ணி போட்ட ராயல்ஸ் மாதிரி ஆயிடுவோம்.

பரஞ்சோதி
03-05-2009, 07:43 AM
என்ன தலைவரே!

நீங்க நேற்றைய ஆட்டம் பார்க்கலை போலிருக்குதே, இல்லை பார்த்துட்டு வெறுத்து கடைசி 5 ஓவரில் வெளியே போயிட்டீங்களா?

வென்ற அணிக்கு என் பாராட்டுகள். இனிமேலும் இதே போன்ற ஒருமித்த அணியாக விளையாடி வெற்றிகள் குவிங்கப்பா.

அன்புரசிகன்
03-05-2009, 08:55 AM
நேற்று 180 என்ற ஓட்டங்களை பெறவேண்டிய சென்னை அணி தேவையற்ற அவசர ஆட்டங்களால் 161ற்கு மட்டுக்கண்டது..

நேற்று ஜகாட்டியின் பந்து வீச்சு அபாரம்... இறுதி பந்துப்பரிமாற்றங்களில் மோர்கல் மற்றும் பாலாஜியின் பந்துவீச்சு அருமை...

தோனி தற்காலங்களில் துடுப்பாட்டத்தில் பெரிதாக பிரகாசிக்கவில்லை. ஆனால் தலைமைத்துவம் நன்றாகவே உள்ளது. பட்டேலை இடமாற்றிப்பார்க்கலாம்....

mania
04-05-2009, 04:45 AM
இம்முறை போட்டி ரொம்பவே பலமாக இருக்கிறது. பாயிண்ட்ஸ் டேபிள் ஒவ்வொரு நாளும் ஒரு கதை சொல்கிறது.....எல்லா மேட்ச்களுமே எந்த டீம் ஜெயிக்கும் என்று துல்லியமாக கணிக்க முடியாமல் இருக்கிறது....சரியான போட்டி......சபாஷ்.....
அன்புடன்
மணியா...:D:D

aren
04-05-2009, 04:58 AM
புக்கானானின் புதிய முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகின்றன. அதனால் இந்த வருடம் கல்கத்தா கல்தா ஆகிவிட்டது. அநியாயமாக நம்முடைய மாட்ச் அவர்களுடன் நடக்காமல் போய்விட்டது. இல்லையென்றால் நான்காம் இடத்தில் இன்று நாம் இருந்திருப்போம். பார்க்கலாம் அடுத்த ஆட்டங்களில் நம் மக்கள் எப்படி ஆடுகிறார்கள் என்று.

ஓரம் அவர்களை ஓரம் கட்டுவதைத்தவிற வேறு வழியில்லை. நிட்டனி உள்ளே வந்தேயாகவேண்டும்.

அதுபோல் அஸ்வினை உள்ளே எப்படி கொண்டுவரலாம் என்று பார்க்கவேண்டும்.

புதிதாக வந்துள்ள ஜகதியும் தியாகியும் நன்றாகவே பந்து வீசீனார்கள். அதே மாதிரி அடுத்துவரும் போட்டிகளிலும் பந்துவீச வேண்டும்.

பெங்களூர் அணி எழுந்துவிட்டது போலிருக்கே. பீட்டர்சன் போனவுடம் மக்களுக்கு சுறு சுறுப்பு வந்துவிட்டதோ?

aren
04-05-2009, 04:59 AM
தோனியால் ரன்களை குவிக்கமுடியவில்லையே. அவர் எப்படி ஆடுகிறார் என்று அனைவரும் யூகித்துவிட்டார்களோ? ஆடும் முறைய அவர் மாற்றவேண்டும்.

முரளி விஜய்க்கு பதில் தோனி தொடக்க ஆட்டக்காரராக உள்ளே இறங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

aren
04-05-2009, 05:04 AM
டெக்கான் சார்ஜர்ஸ் கடைசியாக நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துவிட்டதே? காரணம் லஷ்மனை கழித்துவிட்டதால் இருக்குமோ.

லஷ்மன் தோற்ற இரண்டு ஆட்டத்திலும் இடம் பெறவில்லை. லஷ்மனுடைய அதிர்ஷ்டம் கடந்த இரண்டு ஆட்டத்திற்கும் கிடைக்கவில்லையோ?

தாமரை
04-05-2009, 05:07 AM
அதெல்லாம் சரிங்க.. ஆனா ஆனா...ஒண்ணு சொல்லணும்.

எங்க டீமில இரண்டு மூணு டீமை பத்தியே எப்ப பார்த்தாலும் பேச்சு நடந்து கிட்டு இருந்துச்சி. அதனால ஒரு முடிவு பண்ணினோம்.

மொத்தம் எட்டு பேரு ஒண்ணு சேர்ந்தோம். போன புதன் கிழமை எட்டு சீட்டில எட்டு டீம் பேரையும் எழுதி குலுக்கல் முறையில் ஆளுக்கொரு சீட்டு எடுத்தோம்..

அதில எனக்கு கிடைச்ச அணி.... ராயல் சேலஞ்சர்ஸ்..

என் கைபட்ட பின்னாடி மூணு வெற்றிகளைக் குவிச்சுருச்சு... ஹி ஹி

சென்னை அணியில் முக்கியமான மாறுதல்- பத்ரிநாத் 4 ஆவது ஆட்டக்காரராக இறங்குவது..

அடுத்து ஜோகிந்தர் ஷர்மாவுக்கு பதிலா சுதீப் தியாகி வந்தது. கடைசியா, கோனிக்கு ஓய்வு கொடுத்து ஜகதி உள்ள வந்தது..

ஆனா இன்னும் தோனி முகத்தில பழைய புன்முறுவல் மிஸ்ஸிங். காரணம் அவரோட ஃபார்ம்.

இதுவரை ஆடின ஏழு போட்டிகளில்

இரண்டே இரண்டு பௌண்டரிகளும் 5 சிக்ஸரும் அடிச்சிருக்காரு..

பழைய மாதிரி அடிச்சு ஆட ஆரம்பிச்சா சரியாகும்..

mania
04-05-2009, 05:36 AM
எங்க டீமில இரண்டு மூணு டீமை பத்தியே எப்ப பார்த்தாலும் பேச்சு நடந்து கிட்டு இருந்துச்சி. அதனால ஒரு முடிவு பண்ணினோம்.

மொத்தம் எட்டு பேரு ஒண்ணு சேர்ந்தோம். போன புதன் கிழமை எட்டு சீட்டில எட்டு டீம் பேரையும் எழுதி குலுக்கல் முறையில் ஆளுக்கொரு சீட்டு எடுத்தோம்..

அதில எனக்கு கிடைச்ச அணி.... ராயல் சேலஞ்சர்ஸ்...

எட்டிலேயும் சென்னை பேரை எழுதியிருக்கவேண்டியதுதானே....:rolleyes::rolleyes::D:D எப்பவும் பீர் ஞாபகத்திலேயே இருந்தால் அப்படித்தான் வரும்....:rolleyes::D:D
சென்னை ரசிகன்
மணியா...:D:D

மதி
04-05-2009, 06:02 AM
எட்டிலேயும் சென்னை பேரை எழுதியிருக்கவேண்டியதுதானே....:rolleyes::rolleyes::D:D எப்பவும் பீர் ஞாபகத்திலேயே இருந்தால் அப்படித்தான் வரும்....:rolleyes::D:D
சென்னை ரசிகன்
மணியா...:D:D
இத படிச்சதும்.. குபீர்னு சிரிச்சுட்டேன்னா பாத்துக்கங்களேன்.. :D:D:D

mania
04-05-2009, 06:11 AM
இத படிச்சதும்.. குபீர்னு சிரிச்சுட்டேன்னா பாத்துக்கங்களேன்.. :D:D:D
உனக்கிருக்கு ஊருக்கு போன உடனே....:rolleyes::rolleyes::D:D:D
அன்புடன்
மணியா...:D

மதி
04-05-2009, 06:58 AM
வந்துட்டேனே.. நான் ஊருக்கு வந்துட்டேனே.. நம்ம சந்திப்பை பத்தி சீக்கிரமே எழுதிடறேன்.

mania
04-05-2009, 07:01 AM
வந்துட்டேனே.. நான் ஊருக்கு வந்துட்டேனே.. நம்ம சந்திப்பை பத்தி சீக்கிரமே எழுதிடறேன்.

கொஞ்சம் சென்சார் பண்ணி எழுது.....:rolleyes::rolleyes: அப்புறம் அதுக்கும் சேர்த்து ......:rolleyes::rolleyes:
கரிசனத்துடன்
மணியா...:D:D

தாமரை
04-05-2009, 07:05 AM
எட்டிலேயும் சென்னை பேரை எழுதியிருக்கவேண்டியதுதானே....:rolleyes::rolleyes::D:D எப்பவும் பீர் ஞாபகத்திலேயே இருந்தால் அப்படித்தான் வரும்....:rolleyes::D:D
சென்னை ரசிகன்
மணியா...:D:D

இன்னும் தெளியலையா?

8 சீட்டில் ஒண்ணை எடுக்கறதா இருந்தா ஒரே பேர் எழுதி போடலாம்..

எட்டு பேருக்கு எட்டு அணி... அதனால் எட்டும் எழுதியே ஆகணும். எட்டுதா?

நேசம்
04-05-2009, 07:12 AM
அப்ப தாமரை தெளிவாக தான் இருக்காரு