PDA

View Full Version : இராவணனே!!!!



இன்பக்கவி
11-04-2009, 07:50 PM
இராவணன் அழியவில்லை
இன்னும் வாழ்கிறான்
பிணம்தின்ணியாய்
இரக்கம் அற்ற ஈனப் பிறவி....
எம் உடன்பிறப்புகளை
அழிக்கும் நாதாரி......

எம் பிஞ்சு குழந்தைகளின்
உருகுலைந்த
முகங்களை கண்டு
உருகுலைந்து
போனோம் நாங்கள்
துடிதுடித்தோம்......
பெற்றவள் நிலை
கண்டு கண்ணீர் விட்டோம்!!!!

இன்னுமா
அடங்கவில்லை
உன் கொலைவெறி!!!

உன்னால் அழிந்து
கொண்டு இருப்பது
எங்கள் இனமும்
எங்கள் மண்ணும்.....
இனி ஒரு
புல் பூண்டு கூட
முளைக்க போவது இல்லை....

பக்கத்து வீட்டில்
எழவு விழுந்தால்
எமக்கென!!!
என் வீட்டில்
விழும் வரை
கவலை இல்லை
என அமைதியாய்
இருக்கும்
பிற நாடுகள்
மறந்துவிடாதீர்கள்!!!!!!
எம் நிலை ஒரு நாள்
உமக்கும் வரலாம்...
அப்போது உணர்வீர்கள்
எங்கள் வேதனைகளை!!!!!

தமிழனை தமிழனே
அழிகிறான்....
தன்னுடைய அரசியல்
ஆதாயத்துக்காக...
ஆண்மை அற்ற
அரசியல் வாதி நீ!!!!!!
கிழட்டுபயல்கள்
ஆளும் அரசியல்!!!!
தமிழனின் கழுத்தை
அறுத்த கோடரி காம்பு.......

நச்சு வாயு போட்டு
எங்கள் இனத்தவரை
மயக்க நிலையில்
கொன்ற மாவீரர்கள்!!!!!!
மார்த்தட்டி கொள்ளுங்கள்
கையாலாக தனமான உங்கள்
வீரத்தை!!!!!!
புறமுதுகில் குத்திய
மாவீரர்கள்!!!!

குட்டகுட்ட
குனிகிறோம்
நாங்கள்....
நிமிர்ந்து நிறக்கும்
காலம்
வெகுத்தொலைவில்
இல்லை......

உன்னை அழிக்க
எங்கள் ராமன்
இருக்கிறார்
இராவணனே!!!!
நீ.......
அழியும் காலம்
வெகு தொலைவில்
இல்லை.....
அழிய போகிறது
உன் ஆணவம்.....

தளராத நம்பிக்கையோடு
நாங்கள்!!!!!!

அறிஞர்
11-04-2009, 08:09 PM
இராவணனை அழித்து கொண்டாடி மகிழ்ந்தனர் அன்று...
அது போன்ற நாளை எதிர்பார்க்கிறோம்.
(ஹிட்லர் மீண்டும் பிறந்துவிட்டார் என ஈமெயில் வந்தது)

ஆதி
12-04-2009, 07:51 AM
இராவணன ஏங்க திட்டுறீங்க.. இராவணன் மாதிரி நல்லவன் வேறுயாராவது ரமயணத்தில் இருந்த சொல்லுங்களேன்...

விகடன்
12-04-2009, 08:05 AM
இராவணனுடன் இவர்களை எல்லாம் எதற்கு ஒப்பிடுகிறீர்கள். இராவணன் எவ்வளவோ கண்ணியமானவன்.

இன்பக்கவி
12-04-2009, 10:14 AM
அந்த கொடூரமான இ-மெயில் பார்த்து மனம் துடித்தது...
அதன் பாதிப்பில் எழுதிய கவிதை இது....
இராவணனுக்கு காமம் கண்ணை மறித்தது...அழிந்தான்
இவனுக்கு இன வெறி அழிய போகிறான்

விகடன்
12-04-2009, 10:35 AM
உங்கள் மனிதநேயத்திற்கும், தமிழின உணர்ச்சிக்கும் தலைவணங்குகின்றேன்.

கவிதையில் குறை சொல்லவில்லை. ஒரு சிறு சந்தேகம். அவ்வளவுதான்.
அதாவது,
இராவணனுடன் ஒப்பிடவேனும் உங்கள் கவிதையின் கதாபாத்திரம் தகுதியானவனா?

ஆதி
12-04-2009, 04:11 PM
அந்த கொடூரமான இ-மெயில் பார்த்து மனம் துடித்தது...
அதன் பாதிப்பில் எழுதிய கவிதை இது....
இராவணனுக்கு காமம் கண்ணை மறித்தது...அழிந்தான்
இவனுக்கு இன வெறி அழிய போகிறான்

இராவணன் காமுகனா ? இராவணன் காமுகனாக இருந்திருந்தால், சீதை அசோக வனத்தில் கற்போடு இருந்திருக்க முடியாது, கடத்தும் போது கூட மண்ணோடு பெயர்த்து எடுத்து சென்றானே தவிர இழுத்து செல்லவில்லை.. சகோதரி.......

தாமரை
13-04-2009, 05:46 AM
இராவணன ஏங்க திட்டுறீங்க.. இராவணன் மாதிரி நல்லவன் வேறுயாராவது ரமயணத்தில் இருந்த சொல்லுங்களேன்...

இராவணனை பற்றி விவாதிக்க இந்தத் திரியை உபயோகிக்கவும்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7679

samuthraselvam
13-04-2009, 05:48 AM
இராவணன் காமுகனா ? இராவணன் காமுகனாக இருந்திருந்தால், சீதை அசோக வனத்தில் கற்போடு இருந்திருக்க முடியாது, கடத்தும் போது கூட மண்ணோடு பெயர்த்து எடுத்து சென்றானே தவிர இழுத்து செல்லவில்லை.. சகோதரி.......

இராவணனால் சீதையை தொடமுடியாது போனதிற்கு இலக்குமணன் கிழித்த கோடுதான் காரணம். மீறி தொட்டிருந்தால் அவன் அப்போதே பஸ்பம் ஆகி இருப்பான். அந்த சூழ்நிலையைப் பொறுத்தமட்டில் இராவணன் காமுகனே...!

ஆனால் இப்போதைய வெறியர்களை விட அந்த இராவணனை எவ்வளவோ மேல். அவன் ஒரு குடியை மட்டும் கெடுத்தான். இவர்களோ எண்ணிலடங்கா இதயங்களை இரக்கமற்று கொன்று குவித்துகொண்டு இருக்கிறான்.

சிவா.ஜி
13-04-2009, 06:05 AM
ஆனந்த விகடனில் மதன் கேள்வி பதில் பகுதியில் வந்த கேள்வியையும், அதற்கான மதனின் பதிலையும் பாருங்கள்.

ராஜபக்ஷேவை இன்னொரு ராவணன் என்கிறேன்... தாங்கள்?

இருவரும் இலங்கைக்கு அதிபதி. இருவர் பெயரும் 'ரா'வில் துவங்குகிறது. மற்றபடி, ராஜபக்ஷேவை ராவணனுடன் ஒப்பிடுவது அபசாரம்!
ராவணன் மகாவீரன். மூவுலகங்களை வென்றவன். பிரம்மனை நினைத்து 10 ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்து வரம் பெற்றவன். வேதங்களைக் கரைத்துக் குடித்தவன். சங்கீத மேதை. போரில் லட்சுமணனை இருமுறை தோற்கடித்தவன். போர்க்களத்தில் ராவணனின் வீரம் கண்டு ராமனே பிரமிக்கிறான். மிகவும் சிரமப்பட்டே ராவணனை ராமனால் தோற்கடிக்க முடிகிறது. 'என் பக்கம் போரிட்ட ஏராளமான பெரும் வீரர்களை வீழ்த்தி, அற்புதமாகப் போர் புரிந்தாய். நீ மகாவீரன் என்றாலும் கடுமையாகப் போர் புரிந்ததால், சற்றுக் களைப்பாகத் தெரிகிறாய். உன் மீது இனி நான் வில் அம்புகளை எய்யப் போவதில்லை. திரும்பிச் சென்று ஓய்வு எடுத்துக்கொண்டு புத்துணர்ச்சியோடு புதிய தேரில் ஏறி நாளை வா. இதே போல தரையில் நின்றுகொண்டு உன்னை வரவேற்பேன். நாளைய போரில் நான் யார் என்பது உனக்குப் புரியும்!' என்கிறான் ராமன். வாழ்க்கையிலேயே முதன்முறையாக ராவணன் மனதில் பயம் துளிர்விட்டது, ராமன் இப்படிச் சாவதானமாகப் பேசியபோதுதான் என்கிறார் வால்மீகி.
ராமன் வல்லவன், நல்லவன். ராவணன் வல்லவன் மட்டுமே. பிறர் மனைவியைக் கடத்தி வந்தவன் அவன். பெண் பித்து அவனைச் சீரழித்துவிட்டது. ஏராளமான பெண்கள் அவனைச் சபித்திருக்கிறார்கள். அவன் வீழ்ச்சிக்கு அந்தச் சாபங்களே காரணம்.
ஆனால், ராவணன் மற்ற நாடுகளிடம் ஆயுதஉதவி களைக் கேட்கவில்லை. தானே, தன் பலத்தைக் கொண்டு முன்னின்று போரிட்டான். தன் நாட்டில் வசித்த மக்களை அவன் இனப் படுகொலை செய்தது இல்லை.
ராவணனுடன் ஒப்பிட்டால் ராஜபக்ஷே ஒரு தூசி

எனவே இழிபிறவி ராஜபக்*ஷேவை உயர்ந்தவனான ராவணனுடன் ஒப்பிடுவது...பன்றியைக் கன்றுக்குட்டியுடன் ஒப்பிடுவதற்கு ஈடாகும்.

நேசம்
13-04-2009, 06:42 AM
நிச்சயம் ஒருநாள் இனவெறியர்களின் ஆணவம் அழியப்போகிறது.அந்த நம்பிக்கையில் தான் நாம் இருக்கிறோம்.இந்த வெறியர்கள் ராவணன் அல்ல நவின ஹிட்லர்கள்

praveen
13-04-2009, 06:56 AM
நானும் விகடனில் அந்த பதிலை படித்து பார்த்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி

ஆதி
13-04-2009, 08:06 AM
இராவணனால் சீதையை தொடமுடியாது போனதிற்கு இலக்குமணன் கிழித்த கோடுதான் காரணம். மீறி தொட்டிருந்தால் அவன் அப்போதே பஸ்பம் ஆகி இருப்பான். அந்த சூழ்நிலையைப் பொறுத்தமட்டில் இராவணன் காமுகனே...!

ஆனால் இப்போதைய வெறியர்களை விட அந்த இராவணனை எவ்வளவோ மேல். அவன் ஒரு குடியை மட்டும் கெடுத்தான். இவர்களோ எண்ணிலடங்கா இதயங்களை இரக்கமற்று கொன்று குவித்துகொண்டு இருக்கிறான்.

எனக்கு ஒரு சின்ன சந்தேக ராவணன் காமுகன் என்றால்.. இந்திரன் சொக்க தங்கமா.. தூக்கி வந்து தொடாமல் வைத்தவன் காமுகன்.. கௌதமன் வேடத்தில் சென்று தாய் அகலிகையை அள்ளியவன் இந்திரன்.. அவனுக்கு சாபம் இவனுக்கு மரணம்..

இதை எல்லாம் விடுங்க..

//நீல மாமணிநிற நிருதர் வேந்தனை
மூல நாசம்பெற முடிக்கும் மொய்ப்பினாள்
மேலைநாள் உயிரொடும் பிறந்து தான் விளை
காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோய் அனாள்..//

மேலுள்ள பாட்டு சூர்பனகை அறிமுகத்தில் வரும் முதல் பாட்டு..

நல்லா கவனிச்சு பாருங்க.. கம்பன் சொல்றான்.. இவ யாரு தெரியுமா.. கரியமணி போன்ற மேனியை உடைய அரக்கர்களின் தலைவனான இராவணனின் குலத்தை அழிக்க வல்லவள்( இங்கேயே இராவணனின் அழிவை பற்றி குறிப்பு கொடுக்குறான் கம்பன்).. அதலால் இவள் எப்படிப்பட்டவள் தெரியுமா.. ஒரு உயிர் பிறக்கும் போதே அதனுடன் பிறந்து அந்த உயிரை கொல்ல காத்திருக்கும் கொடிய நோயிக்கு இணையானவள்.. என்கிறான்..

அதே படலத்தில் இராணமனை சூர்ப்பணகை பார்க்கிறாள்..

என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா னு கேட்கிறாள்.. அதுக்கு இராமன் ஏகப்பத்தினி விரதன் சொல்றான்..

//'இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும்
அமைதியின், உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின்,
சுமையுறு செல்வத்தோடும் தோன்றலை; துணையும் இன்றி,
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என்? தையல்!' என்றான்.//

உன்னுடைய ஒரு அண்ணன் இராவணன் இமயவர் தலைவனையும் ஏவி வேலை வாங்கும் வல்லமை உடையவ, மூவுலகையும் ஆள்பவன், இன்னொரு அண்ணன் குபேரன், பெரிய பணக்காரன், நானோ தபசி உன்னை எப்படி எனக்கு திருமணம் முடிக்க ஒப்புக் கொள்வார்கள் அப்படி னு கேட்கிறான்..

முடியாது என்று சொல்ல வேண்டிய இடத்தில், அந்த பெண்ணின் மோகத்தை இன்னும் தூண்டும் வகையில் பேசுவது யாருக்கும் அழகல்லவே..

இதற்கப்புரம் சீதையை பார்க்கிறாள் சூர்ப்பணகை.. அவளை அச்சுறுத்த நினைக்கிறாள்.. அப்போது இலக்குவன் அவள் மூக்கை அறுக்கிறான்( மூக்கை மட்டுமா அறுத்தான் ?).. இங்கு இருந்துதான் இராவணனுக்கு வினை துவங்குது..

கரனிடம் போகிறாள், கரனை இராமன் கொல்கிறான், பிறகு இராவணனிடம் ஓடுகிறாள்.. நடந்ததை திரித்து சொல்கிறாள்.. சீதையை உனக்காக கவர நினைத்தேன் அதற்காக அந்த தபசிகள் என் உறுப்புக்களை அறுத்துவிட்டனர் என்கிறாள்.. இப்ப கொதிக்கிற இராவணன் தங்கைக்காக பழிவாங்க போறான்.. எந்த பெண்ணுக்காக என் தங்கையின் உறுப்பை அறுத்தார்களோ அந்த பெண்ணை தூக்கி வருகிறான்.. இது பழிக்கு பழி.. தாமரையண்ணா சுட்டியிருக்கும் விவாத திரியில் இருப்பது மாதிரி இது கௌரவப் பிரச்சனை.. காமம் அல்ல..

இலக்குமன் செய்ததும் சரியல்லவே.. அரகி என்றாலும் பெண் என்னும் பட்சத்தில் அவள் உறுப்புகளை அறுப்பது நியாயமா ? இதுதான் தப முறையா ? உயர்ந்தோர் செயலா ?

இன்னொரு விடயத்தை கவனிக்குனும்.. இராமாயணத்தில் விஷ்னுவை கும்பிட்டவன் எல்லாம் தப்பே செய்தாலும் மன்னிக்கப்பட்டான்.. மற்றக் கடவுளை கும்பிட்டவன் எல்லாம் கொல்லப்பட்டான்..

இன்பா
13-04-2009, 09:02 AM
எப்பொழுது இராமனால் அவன் அழிக்கப்பட்டானோ
அப்போதே அவன் நற்கதி அடைந்துவிட்டான்

பெண்ணால் அழிந்தான் இராவணன்
மண்ணால் அழிவான் ராஜபக்ஷே

இன்பக்கவி
13-04-2009, 02:23 PM
இலங்கை என்றதும் இராவணன் தான் எல்லோருக்கும் நினைவில் வரும்...
அதுவும் இல்லாமல் தான் மனைவியை தவிர வேறு யாரையும் தொட முடியாது..
தொட்டால் மரணம்... அதனால் தான் சீதையை மணம் முடிக்க எண்ணினான்....இராவணன்..
இதையும் மறந்துவிட கூடாது...அப்படி ஒரு நிலை இல்லை என்றால்..
சீதையை இராவணன் விட்டு வைத்து இருக்கமாட்டான் என்று சொல்வார்கள்...
ராவணன் நல்லவனாகவே இருக்கட்டும்...
தவறுக்கு வருந்துகிறேன்......
இராவணன் நல்லவனா கெட்டவ னா என்பதை விட்டுவிட்டு அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு
விடை கிடைக்க நாம் இறைவனை வேண்டுவோம்.....

இராமாயண காலத்தில் இருந்து இந்தியா....இலங்கையை அழித்து கொண்டு தான் இருக்கு....

சிவா.ஜி
13-04-2009, 06:50 PM
இராமாயண காலத்தில் இருந்து இந்தியா....இலங்கையை அழித்து கொண்டு தான் இருக்கு....

வருந்துகிறேன் சகோதரி. இதற்குக்குக்காரணம் முழுக்க முழுக்க நேருக்குடும்பமே....ஏனென்றால் அவர்கள் இந்தியர்கள் அல்ல.

சிவா.ஜி
13-04-2009, 06:58 PM
தமிழனின் தலைவிதியை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர்த்து வேறு என்ன செய்ய முடியும்?

அமரன்
21-04-2009, 06:23 PM
தன் தாய், தந்தை, சகோதரன், மனைவி, மக்கள், சொந்தங்கள், மொழி, இனம், நாடு, ஊர்.... இப்படி ஒவ்வொன்றும் தாங்கொணாத் துயர்களைச் சுமக்கும் போது.. ஒவ்வொன்றின் மீதும் துன்பங்களைத் திணிக்கும் போது.. நரம்புகள் முறுக்கேறி ஆயுதங்கள் கையேறுவது வழமையானது. ஆயுதத்தை சரிவரப் பயன்படுத்த வேண்டியது அதி முக்கியமானது. உங்கள் கவிதை ஆயுதமும் மிகக் கூர்மையானது. ஏந்திய காரணம் நியாயமானது. கண்களில் நீர் உதிரவைக்கிறது.

கா.ரமேஷ்
22-04-2009, 05:55 AM
மனிதர்களோடு ஒப்பிட தகுதியானவன் இல்லை ராஜபக்சே ,இன்னும் சொல்லபோனால் மனிதனே கிடையாது. பைத்தியகாரன் கூட உணர்விழந்த நிலையிலும் கொலை செய்ய மாட்டான்... மனிதம் கொல்லும் உயிருள்ள பிணம் இது.

ஒப்பிடுதலை தவிர்த்து உணர்வுள்ள கவிதை........