PDA

View Full Version : கலாட்டா மேரேஜ்- நகைச்சுவை தொடர் (பாகம்-1)



மதுரை மைந்தன்
11-04-2009, 03:46 AM
சங்கரன் மனைவி வீணாவைக் கூப்பிட்டு: வீணா பிள்ளை வீட்டுக்காரா நம்ம வனஜாவைப் பார்க்கரதுக்கு இன்னிக்கு சாயங்காலம் வரா. அவளை 6 மணிக்ககு முன்னாலே வந்து ரெடியாகச் சொல்லு

வீணா: ஆமாம் நான் சொல்லி உங்க பொண்ணு கேட்டுடப் போறா நீங்களே சொல்லிடுங்கோ

சங்கரன்: வனஜா உன்னை பார்க்க பிள்ளையாத்துக் காரா 6 மணிக்கு வறா. சாயங்காலம் 5 மணிக்கே ஆபிஸிலிருந்து வந்து ரெடியாயிடு.

வனஜா: ஓ டாட் இன்னிக்கு சாயங்காலம் 4 மணியிலிருந்து எனக்கு டென்னிஸ் மாட்ச் இருக்கு. நான் வர லேட்டாகலாம். நீங்களும் அம்மாவும் பிள்ளையை பார்த்து ஓ.கே சொன்னா எனக்கும் ஓ.கே தான்.

சங்கரன் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்.

சாயங்காலம் 6 மணிக்கு கோபாலன் அவரது மனைவி லட்சுமி பையன் சுரேஷ் ஆகியோர் சங்கரன் விட்டை அடைகிறார்கள்.

சங்கரன் அவர்களை வரவேற்று அமரச் சொல்கிறார்.

சங்கரன்: எங்க பொண்ணு வனஜா ஆபீஸிலிருந்து இப்போ வந்துடுவா. இன்னிக்கு சாயங்காலம் ஒரு டென்னிஸ் மாட்சில விளையாடறா. அவ டென்னிஸ்ல சாம்பியன். வனஜா எங்களோட ஒரே பெண். நாங்க அவளை ஒரு பையன் மாதிரி வளர்க்கிறோம். ஹா ஹா ஹா

கோபாலன்: என்ன ஆச்சரியம். சுரேஷ் எங்களோட ஒரே பையன். நாங்க அவனை ஒரு பொண்ணு மாதிரி வளர்க்கிறோம்.ஹா ஹா ஹா

வீணா: ஓ அப்படியா அப்போ மாப்பிள்ளைக்கு சமைக்க தெரியுமா? கோலம் போடத் தெரியுமா?

லட்சுமி: ஓ அவன் நூறு பேருக்கு சமைப்பான். நம்ம ஊர் சாப்பாட தவிர நார்த் இண்டியன் சமையலும் தெரியும். நான் கூட அப்பப்ப சமையல்ல என் சந்தேகங்களை அவன் கிட்ட கேட்டு தெரிஞ்சுப்பேன்.

சங்கரன்: அப்போ சுரேஷ் அவ்வை ஷண்முகி ஆகலாம். ஹா ஹா ஹா

வீணா சங்கரனிடம்: தத்து பித்துனு பேசாதிங்கோ. அவ்வை ஷண்முகில கமல் டைவர்ஸ் ஆனதற்கப்பறம் தான் அவ்வை ஷண்முகி ஆறார். இங்க இப்போதான் கல்யாணப் பேச்சு ஆரம்பமாறது.

சங்கரன்: நான் சும்மா தமாஸ் பண்ணினேன். நெருப்புனா வாய் வெந்துடாது. ஹா ஹா ஹா

லட்சுமி: நீங்க உங்க பொண்ணை ஒரு பையன் மாதிரி வளர்க்கிறோம்னு சொன்னேள். எப்படினு கொஞசம் சொல்ல முடியுமா?

சங்கரன்: அவ கராத்தேல பிளாக் பெல்ட் சாம்பியன். ஸ்போர்ட்ஸ்ல சாம்பியன். ஒரு பையன் மாதிரி தலையை க்ராப் பண்ணியிருக்கா. எப்பவும் பாண்ட் ஷர்ட் தான் போடுவா. பின்னாலே இருந்து பார்த்தேள்னா ஒரு பையன்னு தான் நினைப்பேள். ஹா ஹா ஹா

லட்சுமி: சுரேஷ் சின்ன பையனா இருக்கும்போது நவராத்திரி சமயத்தில அவனுக்கு பாவாடை சட்டை போட்டு கையில குங்கும சிமிழைக் கொடுத்து எங்க காலனி விட்டு பெண்களை அழைச்சுட்டு வரச் சொல்வோம்.

சொல்லி விட்டு லட்சுமி சிரிக்கிறாள். சுரேஷ் தலையில் அடித்துக் கொள்கிறான்.

அதே சமயம் வனஜா கையில் டென்னிஸ் மட்டையுடன் அங்கு வருகிறாள். அவள் டைட் ஹாப் பாண்டும் டி ஷர்டும் அணிந்திருந்தாள் சேனியா மிர்சாவக்கு சவால் விடும்படி.

வனஜா: ஹாய் எவரி ஒன். நான் குளிச்சு டிரஸ் மாத்தி வறேன். சுரேஷ் நீ ரொம்ப அழகா இருக்கே.

சுரேஷ் வெட்கப் படுகிறான்.

சங்கரன்: அம்மா வனஜா குளிச்சுட்டு ஒரு பட்டுப் புடவையை கட்டிண்டு வா

வனஜா: ஐயோ எனக்கு புடவை கட்டிக்க தெரியாதே.

லட்சுமி: எப்படி புடவை கட்டிக்கணும்னு எங்க சுரேஷ்கு தெரியும். மடிசார் கட்டு தெலுங்க கட்டு மார்வாடி கட்டு னு எல்லா விதமான கட்டுகளும் அவனுக்கு தெரியும். சுரேஷ் நீ போய் வனஜாவக்கு புடவை கட்டி விடு.

வீணா: அதெல்லாம் கல்யாணத்தக்கப்பறம் வச்சுக்கட்டும் இப்போ நான் போய் கட்டி விடறேன்.

சங்கரன்: கல்யாணத்தக்கு அப்பறம் சுரேஷ் புடவையை அவிழ்க்கறதில தான் விருப்பமா இருப்பான்.ஹா ஹா ஹா

வீணா: தத்து பித்துனு அசிங்கமா பேசாதீங்கோ.

வீணா வனஜாவை உள்ளெ அழைத்து செல்கிறாள்.

சங்கரன்: சுரேஷ் இப்போ என்ன பண்றார்?

சுரேஷ்: அங்கிள் போண்டா சாப்பிட்டுக்கிட்டிருக்கேன்.

சங்கரன்: மாப்பிள்ளை தமாஷ் பண்றார். நீங்க என்ன படிச்சு எங்கே வேலை பார்க்கிறேள்?

கோபாலன்: சுரேஷ் பிசிக்ஸ்ல பி.எச.டி. வாஷிங்டன் யுனிவர்சிடில ஆராய்ச்சி பண்ண அழைப்பு வந்திருக்கு

சங்கரன்: என்ன ஆச்சரியம். வனஜா கம்ப்யூடர் சயன்ஸ் படிச்சு அவளுக்கும் வாஷிங்டன் யுனிவர்சிடில ஆராய்ச்சி பண்ண கூப்பிட்டிருக்கா. அப்போ வாஷிங்டனில் திருமணம் வச்சுக்கலாம். ஹா ஹா ஹா

தொடரும்....

அன்புரசிகன்
11-04-2009, 04:42 AM
அவரோட திறமைக்கு வொஷிங்டனில் வேறு கூப்பிட்டிருக்காங்களா??? அப்போ வொஷிங்டனில் திருமணம் என்று பெயர் வைச்சிருக்கலாம் :D :D

தொடருங்கள்...

மதுரை மைந்தன்
19-04-2009, 04:02 AM
அவரோட திறமைக்கு வொஷிங்டனில் வேறு கூப்பிட்டிருக்காங்களா??? அப்போ வொஷிங்டனில் திருமணம் என்று பெயர் வைச்சிருக்கலாம் :D :D

தொடருங்கள்...

மன்றத்தில் உங்கள் ஒரவருக்கே நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது. பாராட்டுக்கள். இக்கதையை வேறு யாரும் படிக்காததால் நான் இதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஆதவா
26-04-2009, 03:44 AM
இன்னும் நிச்சயமே ஆகலை. அதுக்குள்ள புடவை கட்டிவிடறதா சொல்றதும், அவிழ்ப்பான் என்று சொல்வது வசனத்தில் இடறலாக இருக்கிறது.

மற்றபடி துள்ளலாக இருக்கிரது... வனஜாவைப் போல!! :D

நீங்கள் இக்கதையை தொடர்ந்து எழுதியிருக்கலாமே???

அமரன்
07-05-2009, 08:24 PM
கதைப் படித்த போது உதடுகள் நீள்வதைத் தடுக்க இயலவில்லை. நீண்ட பயணம் என்று எதிர்பார்த்து வந்தால் இப்படி இடை நடுவில் பிரேக் டவுன் பண்ணீட்டேளே மதுரை. தொடருங்கோ.