PDA

View Full Version : கனவுகள் பற்றியெரியும் அதிகாலை



shibly591
10-04-2009, 11:14 AM
கனவுகள் பற்றியெரியும் அதிகாலை

கனவுகள் பூத்துக்குலுங்கும்
எழில் மிகு சாலையொன்றில்
எனது கண்களும்
மெது மெதுவாய் நடைபயில்கிறது..

சுதந்திரக்காற்றின்
சுவாசத்தில் லயித்து
சுற்றித்திரிகிறேன்
இங்கும் அங்குமாய்…

எத்தனை சுகந்தம்..
எத்தனை வசந்தம்..

அடையாள அட்டை தேவையில்லை
அவசர நிறுத்தம் தேவையில்லை
அதட்டும் கேள்விகள் அறவே இல்லை
பயந்த பதில்களும் இல்லவே இல்லை..

பயணத்தூக்கம் பிடுங்கியெறிந்து
பயணப்பொதிகள் சோதனையில்லை
செல்லும் வழியில் நிலையாய் நிற்கும்
“சென்றி”கள் கூட ஒன்றுமில்லை..

சுந்தேகப்பார்வையில்லை
சத்தமிடும் வார்த்தையில்லை
சுதந்திரத்தின் புண்ணியத்தில்
சின்னதொரு வலியுமில்லை..

மொழியோ இனமோ
மதமோ பேதமோ
பாகுபாடு ஏதுமில்லை
வேறுபாடுதானுமில்லை..

எங்கும் எப்படியும்
எவரும் எப்போதும்
வாழும் காலம் இதுதானே..
வாழ்க்கை என்பதும் அதுதானே..


ஏற்றத்தாழ்வு ஏதுமில்லா
ஏற்றமிகு உலகமொன்றை
தூக்கத்தின் இடைநடுவில்
துல்லியமாய் கண்டுகொண்டேன்..

என்ன பயன் !
என்ன பயன் !
கனவு என்றும் கனவுதானோ..?
காலை நானும் கண்விழித்து
காலைச்செய்தி கேட்கின்றேன்
குண்டுவெடிப்பும் படுகொலையும்
துலைப்புச்செய்தி சொல்கிறதே..

கண்ட கனவு பற்றியெரிய
மீண்டும் ஒரு துயர் நாளை
விதி எந்தன் வழி வரைய
கலங்குகிறேன்..
கதறுகிறேன்..
கனவு கண்ட அதே கண்களால்…!

- நிந்தவூர் ஷிப்லி -

இளசு
18-04-2009, 02:23 PM
உலகம்.. இயற்கை.. வளங்கள்.. உயிர்கள்!

இந்த இலகுவான சுழலை
எத்தனைச் சிக்கலாக்கிக் கொண்டான் மனிதன்..

அறிவியலால் பல ஆதாயங்கள்..
மன இயல்பால் பல சேதாரங்கள்..


பால், நிறம், மொழி, மதம், இனம் என எத்தனைக் காரணிகள்..
இம்மனிதர் வாழும் காலத்தில் மற்றவை அழித்தொழிக்க..

கனவு - இயற்கை தந்தது
நனவு - மனிதன் கண்டது..

கவிதை மிக நுணுக்கம்... செறிவு ஷிப்லி!