PDA

View Full Version : கிடைக்குமாsathyamani
10-04-2009, 10:56 AM
மெலிதாய் என் இடையுரசி
நீ நடந்துவந்த நடைபயணங்கள்

நெருக்கமாய் என் தோள் சாய்ந்து
நீ துயில் கொண்ட* பேருந்து பயணம்

இறுக்கமாய் என் கரம் பற்றி
நீ வலம் வந்த ஆலயபிரகாரம்

ஓர் மழைக்கால குளிரில்
என் மடியில் தஞ்சமடைந்த அந்த கண நேரம்

இவைஎல்லாம் இனிமேல் புதிதாய் கிடைக்குமா
வரபோகும் என் மனைவிக்கு

சத்யாமணி

ஆதவா
23-04-2009, 03:41 PM
என்னாதிது???

மக்களுக்கு உண்மை உரைத்துவிட்டதால் பதில் ஏதும் எழுதலையோ என்னவோ????

---------------

நறுக்கிய வரிகள்
பொறுக்கிய வார்த்தைகள்
முறைக்கும் காதல்

எல்லாமும் இணைந்து
குறும்புக் கவிதை!!!

கவலைப்படாதீர்கள்.. உங்களுக்கு அதைக்காட்டிலும் நல்ல மனைவி கிடைக்கும்!!!!

அன்புடன்
ஆதவா

அமரன்
07-05-2009, 09:25 PM
சொகுசு பங்களா..
தெரு முனையில்
திருஷ்டிப் பிள்ளையார்.

உயர் ரகக் கார்
குறுகிய பயணம்.

உன் பணக்கார மனைவிக்கு
எப்படிக் கிடைக்கும்
ஏழை எனக்குக் கிடைத்தவை
.

samuthraselvam
08-05-2009, 05:00 AM
சூப்பரான கவிதை சத்யா... ஆதவ் மற்றும் அமர் அண்ணாவின் கவிதைகளும் அற்புதம்..

காலமெல்லாம் காத்திருப்பேன் என்று கூறிவிட்டு
காத்திருக்கும் இடத்திற்கு கண நேரம் தாமதமாய் வந்தாலும்
எவ்வளவு நேரம் காத்திருப்பது எனக் கேட்கும் உன் செல்ல சிணுங்கல்....

காத்திருக்கும் போது கடித்துப் போட்ட புல்...

ஒரு திருவிழாவில் உன்மேல் துடைத்த மஞ்சளின் வாசம்....

உன் தலையில் இருந்து கீழே விழுந்த வாச ரோஜா...

திலகமிட்ட உன் நெற்றியில் என் இதழ் பதித்த முத்தம்....

உடைந்து விழுந்த உன் கண்ணாடி வளையல்களின் துண்டுகள்...

நீ குடித்த பழசாற்றின் மீதியில் நான் ருசித்த சுவை.....

உன் நினைவுகளே என் உணவுகள் ஆன அந்த நாட்கள்......

என் கையோடு உன் கை உரசி தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும்
நாம் நடந்த அந்த மலையோர கோயில்...

திரையரங்கத்தில் நான்கு விழிகளும் இரண்டான அந்த அரை இருட்டு....

விழியெல்லாம் உன் மொழி நிரப்பி ஏக்கத்தோடு பார்த்த உன் கடைசி பார்வை...

திருமணம் ஆன பின்பும் உன் பார்வையின் தாக்கத்தில் தெரிந்த "ஏனடா என்னை மீட்கவில்லை" என்ற கேள்வி...

இதெல்லாம் காலங்களையும் தாண்டி என் மனதில் வாழும்....

கடைசி வரை என் கண்களில் ஈரம் படரும் என் குற்ற உணர்ச்சியை நினைத்து...

அமரன்
08-05-2009, 08:00 AM
உணர்வு பூர்வமான துணைக்கவிதை லீலுமா. பாராட்டுகள்.

கா.ரமேஷ்
08-05-2009, 11:17 AM
எல்ல கவிதைகளுமே அருமையாக உள்ளது...
///////

என் இடைபிடித்து - தோளில்
தலை கவிழ்த்து நடந்துவரும் - என்
மனைவிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
இவையெல்லாம் எனக்கு
இன்னொருத்தியை ஞாபகபடுத்துகிறது என்பது...!

sathyamani
08-05-2009, 11:45 AM
நான் தான் பாதிக்கபட்டவன் என நினைத்தால் எனக்கு ஏகப்பட்ட தோழர்கள் நம் மன்றத்தில் அனைவரின் கவிதைகளும் அருமை

பென்ஸ்
08-05-2009, 02:58 PM
இனிப்பு உண்டவனுக்கு மிளகாய் கடி காரம்
கூழ் குடிப்பவனுக்கு கூட்டுதானே...!!!
இன்னும் மூனூ மாசத்துக்கு உங்க நிலமை இப்படிதாண் இருக்கும்...
அப்புறம்...

பாரதி
16-05-2009, 03:53 PM
நண்பர்களின் பின்னணிப்பாட்டினால் சத்யாவின் பாட்டும் நன்றாகவே இருக்கிறது. கிடைக்குமா என நீங்கள் கேள்வி கேட்பதால் மட்டும் தீர்வு வரப்போவதில்லையே சத்யா..?

ஆதி
18-05-2009, 12:51 PM
மீண்டும் நம் சந்திப்புகள்
நிகழ்ந்த போது
மௌனம் காத்தன இதழ்கள்
பேசிக் கொண்டன மனங்கள்
நீயும் நானும்
சொல்லாத காதலை..

இந்த கவிதையை வாசித்துவிட்டு
என் தோள்களில் சாய்ந்து கொண்டாய்..

உனக்கான என் எல்லா கவிதைகளையும்
வாசிக்க சொன்னாய்..

நான் வாசிக்க வாசிக்க
கொஞ்சம் கிறங்கினாய்
கொஞ்ச தழுவினாய்..
கண்ணீர்
இமைகளை விஞ்ச ததும்பினாய்..

ஒவ்வொரு கவிதைக்கும் பித்தம் உற்றாய்
காற்புள்ளி அரைப்புள்ளி இடைவெளிகளில் முத்தம் தந்தாய்..
காகிதங்களை திருப்புகையில் நெருக்கம் கொண்டாய்..

எழுத்துக்களில் மட்டுமல்ல
எழுத்துக்கும் எழுத்தும் இடையிலும் நீ இருக்கிறாய்
என்று வாசிக்கையில்
நம் இதழுக்கும் இதழுக்கும் இடையில் இடமில்லை..

அப்போது..
உன் இமைகள் இறங்கி
மீட்டிக் கொண்டிருந்தது ஒரு கவிதையை..
நம் இதழ்களுக்குள் சிக்க
மீட்க ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது
சில வார்த்தைகள்..

ஆதவா
18-05-2009, 02:51 PM
சூப்பரான கவிதை சத்யா... ஆதவ் மற்றும் அமர் அண்ணாவின் கவிதைகளும் அற்புதம்..

.

என்ன கொடுமைங்க.... நான் இங்க எங்க கவிதை எழுதினேன்!!!

ஆதவா
18-05-2009, 02:53 PM
ஆதி... உங்கள் கவிதையை சற்றெ தட்டினால்.... அற்புதமான கவிதையாக இருக்குமே!!! தனியாக வெளியிடலாமே!

செல்வா
18-05-2009, 04:49 PM
கொஞ்சகாலம் ஆச்சுப்பா இப்படி எசப்பாட்டு பாடக்கேட்டு... தாளம் தப்பாம் பாடுறாங்க பல பாட்டு எல்லாமே நல்லப் பாட்டுதான்
வாழ்த்துக்கள் மக்கா...