PDA

View Full Version : ஒருவேளை என் காதல் பொய் காதலோ?



இன்பா
10-04-2009, 03:37 AM
என் காதல் பொய் காதலோ?

அன்று உன்னை
காண்டிராவிட்டால்
இன்று இன்னொருத்தியை
நீதான் என் உயிர்
நீ இல்லையேல்
நான் இல்லை
என்று சொல்லியிருப்பேன்

இன்று இவளை
கண்டிராவிட்டால்
நாளை வேறோருத்தியை
நீதான் என் உயிர்
நீ இல்லையேல்
நான் இல்லை
என்று சொல்வேனோ? :eek:

ஜாக்
10-04-2009, 05:23 PM
கவிதையிலும் குழப்பமா???:traurig001:

பேசாம உங்க பேரை...... சரி வேண்டாம்விடுங்க*

இன்பா
13-04-2009, 04:17 AM
கவிதையிலும் குழப்பமா???:traurig001:

பேசாம உங்க பேரை...... சரி வேண்டாம்விடுங்க*

குழப்பத்தின் விளைவாக
விளைந்தது கவிதை...!!! :)

ஆதி
13-04-2009, 10:08 AM
கண்டிராவிட்டால் அப்படித்தான் சொல்வீங்க.. கண்டுவிட்டீங்க இல்ல கண்டின்யூ பண்ணுங்க... :D :D :D

எண்ணவோட்டங்களை எல்லாம் கவிதைகளாக்கும் முயற்சியில் விளை(ழை)ந்துவிடும் கவிதைகள் இது.. நன்றாக இருக்கிறது.. நல்ல முயற்சி..

தொடருங்கள் கவிதை பயணத்தை.. வாழ்த்துக்கள்..

aren
13-04-2009, 10:45 AM
உண்மையைக் கவிதையாக வடித்திருக்கிறீர்கள்.

இந்த இரண்டாங்கெட்டாம் மனநினைப்பே பல பிரச்சனைகளுக்குக் காரணம்.

ஒன்றைவிட ஒன்று பெட்டராகத்தான் தெரியும் எப்பொழுதும், காதலும்தான்.

நேசம்
13-04-2009, 12:59 PM
காதல் வயப்பட்டால் இதை விட பெட்டர் என்னவாக இருக்க முடியும்.அதனால் கண்ட சொல்ல மாட்டாங்க... நான் உங்களை சொல்ல வில்லை.கவிதை எழுதும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகள் வரிப்புலி