PDA

View Full Version : இயந்திர வாழ்க்கை!!!!!



இன்பக்கவி
09-04-2009, 03:05 PM
காலை எழுந்ததும்
ஒலிக்கும் சேவல்
சத்தம் இங்கு இல்லை...

வெயில் வரும் வரை
தூங்கும் தூக்கமும்,
அம்மாவின் அதட்டல்
பேச்சு இங்கு இல்லை

ஆசையாய்
ஆட்டம் போட்ட
ஆலமர ஊஞ்சல்
இங்கு இல்லை....

எங்கு
திரும்பினாலும்
தெரியும்
பசுமை இங்கு
இல்லை.....

அம்மாவின்
கையால் பிடித்து
கொடுத்த
நீலாசோறு
நினைத்தாலும்
இங்கு இல்லை....

பொங்கல் தீபாவளி
கொண்டாட்டங்கள்
எல்லாம் அங்கு
போல
இங்கு இல்லை...

எங்கள்
அத்தனை
சந்தோசங்களையும்
இழந்து
பணம் தேடும்
இயந்திர வாழ்க்கை
தான் இங்கு...

நம் மண்ணை விட்டு
நாம் எங்கு
எதற்காக சென்றாலும்
அனாதை தான்.......


இளைஞனே!!!
உன் மண்ணிலேயே
பிழைக்க பார்....

அந்நிய நாட்டில்
அடிமை வாழ்க்கையில்
சிக்கி கொள்ள ஆசைபடாதே!!!!!

சிவா.ஜி
09-04-2009, 03:27 PM
இத்தனை இல்லைகளையும் இழந்துதான் பணம் தேட வந்திருக்கிறோம். எதையாவது ஒன்றை இழந்து ஒன்றைப் பெறுவதென்பது எப்போதுமிருப்பதுதானே.

தியாகங்கள் என்றைக்குமே மதிக்கப்படும்.

வாழ்த்துகள் கவிதா.

பாரதி
10-04-2009, 06:35 AM
சமீப காலமாக மின்னஞ்சல்களிலும், செய்தி ஊடகங்களிலும் அதிகமாக வரும் செய்திதான் - இப்போது உங்கள் பாணியில் கவிதை வடிவில்.
எந்த ஊரு என்றாலும் அது நம்ம ஊரைப்போலாகுமா என்ற இசைஞானியின் பாடலும் இத்துடன் நினைவுக்கு வருகிறது.

நீங்கள் கூறியது போல இல்லைகளில்தான் இருப்பு இங்கே. இல்லைகளைத்தேடினால் கையிருப்பு எங்கே..?

பா.ராஜேஷ்
10-04-2009, 06:52 AM
இல்லைகளைத்தேடினால் கையிருப்பு எங்கே..?

கையிருப்பிற்காக சில ஆண்டுகள் உழைத்து அவற்றை இந்தியாவிலேயே மூலதனம் செய்யலாமே! அதை விட்டு அங்கேயே தொடர்ந்து சேவை செய்வது சரியாக படவில்லை பாரதி.

Tamilmagal
10-04-2009, 08:18 AM
நல்ல கவிதை,
நம்மக்களின் வெளிநாட்டு வாழ்க்கைநிலைபற்றி சிந்திக்க வைக்கிறது!