PDA

View Full Version : மகனே!!! வா!!

இன்பக்கவி
08-04-2009, 05:16 PM
என் மகனே!!!
உன்னை பிடிக்குமடா
எனக்கு...
அதனால் தான்
உன்னை பிரிய
மனம் இல்லை
எனக்கு...

உன் பள்ளிபருவத்தில்
நீ எனக்கு கொடுத்த
முதல் அன்பளிப்பு
புடவை!!
மறக்க முடியவில்லை.....

அம்மா நீ மகாராணி
உன்னை கண் கலங்காமல்
பார்ப்பேன் என்று
நீ சொல்லும் போது
உண்மையாய்
நான் மகாராணியானேன்!!!!

உன் ஒவ்வொர்
முன்னேற்றததிலும்
என்னை வந்து
கட்டிப்பிடித்து
ஆசி கேட்கும்
உன்னை தழுவி
முத்தம் தரும்
அந்த நிமிடங்கள்
இனி கிடைக்கபோவது
இல்லையாடா

ஆசையாசையாய்
உனக்கு பெண்
பார்த்து திருமணம்
முடித்து பிரம்மித்தேன்
என் மகனே!!!
நீ இவ்வளவு
பெரியவன் ஆனது
கூட இந்தபாவிக்கு
தெரியவில்லை...
இன்னும் என்கண்ணில்
குழந்தையாகவே நீ!!!!

வாமகளே!!!!
என்றேன்.....
அவளோ மாமி"யார்"
என்றாள்.....
நொடிந்து போனேன்...
அப்போதே உணர்ந்தேன்
மகனே!!! வா!!
நாம் தனிக்குடித்தனம்
போகலாம்.. என்றேன்...

சென்றோம் இருவரும்...
நீ உன்
மனைவியுடனும்...

நான் முதியோர்
இல்லத்திலும்...
தனித்தனியே
தனிக்குடித்தனம்....

மகனே!!!!
எங்கு இருந்தாலும்
மறக்காமல்
வந்து விடு
நீ வராமல்
என் உயிர்....
பிரியாது...

ரங்கராஜன்
08-04-2009, 05:38 PM
பொதுவாக நான் கவிதைகள் பக்கம் வருவது இல்லை, காரணம் அது எனக்கு வராது. ஆனால் ஏனோ இந்த தலைப்பு என்னை அறியாமல் இங்கு இழுத்து வந்து விட்டது என்னை, கவிதையின் வெற்றி தலைப்பிலே பாதி முடிவாகிறது என்று சொல்வார்கள். இந்த கவிதையின் பாதி வெற்றி தலைப்பிலும், மீதி கவிதையிலும் இருக்கிறது. அழகான கவிதை. வார்த்தைகள் தான் எளிமையே தவிர, சொல்லப்பட்ட வலி வலிமை தான். படித்து முடித்த பொழுது, முதியோர் இல்லத்தில் தனித்து விடப்பட்ட அந்த தாயாகவே உணர்ந்தேன். அருமையான கவிதை.

உங்களுக்கு அண்ணன் இருக்காங்களா?, குறிப்பா அண்ணி?, கண்டிப்பா அம்மா இருப்பாங்க. கவிதையின் வலியை வைத்து கேட்டேன், தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பெயருக்கு ஏற்றார் போல எல்லாரும் கேட்பார்கள், கவி+தா என்று.......... வாழ்த்துக்கள்

இன்பக்கவி
08-04-2009, 06:44 PM

வாழ்த்தியதற்கு நன்றி....எனக்கு அண்ணன் இல்லை, அதனால் அண்ணியும் இல்லை...

பாரதி
08-04-2009, 06:51 PM
கவிதை நன்று. உங்கள் எண்ணத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தாயை
தவிக்கவிடுபவர்களை சாடுதலாக இருந்தாலும், தாயின் வலியை உணர்த்துவதாக இருந்தாலும், கவிதை வரிகளில் மகனே வா என்றழைப்பது மகனையும் முதியோர் இல்லத்திற்கா..? மனைவியை பிரித்து தனிக்குடித்தனம் அழைப்பதும் சரியா..?

தொடர்ந்து உங்கள் கவிதைகளை வாசித்து வருகிறேன். வாழ்த்துகிறேன்.

இன்பக்கவி
09-04-2009, 01:55 PM

உங்கள் பாராட்டுக்கு நன்றி...
நான் மகனே வா!! என்று அழைப்பது.... நீங்கள் அந்த கடைசி வரிகளை ஒரு முறை... பொறுமையாக படித்தால் புரியும்...
அவள் மரண நேரத்திலும் மகன் வராமல் உயிர் போகாது என்று அழைப்பது போலத்தான் நான் எழுதியிருக்கிறேன்....
எனக்கு ரௌம்ப கவிதை எழுத தெரியாது... இப்போது தான் எழுதிவருகிறேன்....
பிழை இருந்தால் திருத்தி கொள்கிறேன்... நன்றி

பாரதி
09-04-2009, 02:14 PM
மகனே!!! வா!!
நாம் தனிக்குடித்தனம்
போகலாம்.. என்றேன்...

நீங்கள் கூறியபடி கடைசி வரிகள் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினாலும் மேற்குறிப்பிட்ட வரிகளால் சற்றே நான் குழப்பமடைந்தேன். உங்கள் விளக்கத்திற்கு பின் தெளிந்தேன்.

மன்றத்தில் என்னைப்போலவே பலரும் தொடர்ந்து கற்பவர்கள்தான் என்று எண்ணுகிறேன்.

ஆகவே உங்களுக்கு தயக்கம் எதுவும் தேவை இல்லை.

தொடர்ந்து எழுதுங்கள்.

விகடன்
09-04-2009, 02:34 PM
முதியோரில்லத்திலிருந்தாலும் தாய் தன் மகன்மேல் அதீத பாசம் வைத்திருப்பாள் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது உங்கள் கவிதை.
பாராட்டுக்கள்.
இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.

இன்பக்கவி
09-04-2009, 03:01 PM
மகனே!!! வா!!
நாம் தனிக்குடித்தனம்
போகலாம்.. என்றேன்...

நீங்கள் கூறியபடி கடைசி வரிகள் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினாலும் மேற்குறிப்பிட்ட வரிகளால் சற்றே நான் குழப்பமடைந்தேன். உங்கள் விளக்கத்திற்கு பின் தெளிந்தேன்.

மன்றத்தில் என்னைப்போலவே பலரும் தொடர்ந்து கற்பவர்கள்தான் என்று எண்ணுகிறேன்.

ஆகவே உங்களுக்கு தயக்கம் எதுவும் தேவை இல்லை.

தொடர்ந்து எழுதுங்கள்.

நீ தனியாக போ என்று சொல்ல முடியாத தாய் இப்படி சொல்வதாக.. எழுதினேன்...
வா! தனிக்குடித்தனம்... என்பது நீ தனியாக... நான் தனியாக... என்று சுட்சமமாக சொல்வது போல் எழுதினேன்... நன்றி.....