PDA

View Full Version : ஒருங்குறியாக மாற்ற மென்பொருள்பாரதி
08-04-2009, 04:38 PM
அன்பு நண்பர்களே,

பொதுவாக திஸ்கி, டேப் அல்லது டாம் (TSCII / TAB / TAM )போன்றவற்றில் இருந்து ஒருங்குறி(Unicode)யாக மாற்றுவதற்கு நம் மன்றத்தில் இருக்கும் கன்வெர்ட்டர், அல்லது சுரதாவின் பொங்குதமிழ்.... போன்று சில மென்பொருட்களை
பயன்படுத்தி மாற்றி வருகிறோம் அல்லவா. இவை மிகவும் பயனுடையவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இவற்றைக்கொண்டு நாம் பகுதி பகுதியாகத்தான் மாற்ற இயலும்.
அவ்வாறன்றி ... ஒரு இணையத்தளம் முழுமையையும் - உதாரணமாக நமது திஸ்கி தமிழ்மன்றம் போன்று - மாற்ற மென்பொருள் ஏதேனும் இருக்கிறதா...?

பழைய திஸ்கி மன்றத்தில் இருந்து மிகுந்த சிரமத்திற்கிடையில் நமது நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒருங்குறியாக மாற்றி வருகிறார்கள். அந்த சிரமத்தை குறைக்க வழியேதும் உண்டா..?

சில தினங்களுக்கு முன் http://www.higopi.com/adhiyaman-for-websites-1.0.html என்ற தளத்தில் அதியமான் என்ற மென்பொருள் குறித்த கீழ்க்கண்ட தகவலைப்படித்தேன்.

(ஆங்கிலத்தில் தருவதற்கு பொறுத்தருள்க)

=============================================================
Adhiyaman for websites 1.0 [/URL] (http://www.higopi.com/pdf/adhiyaman-for-websites-1.0.pdf) [URL="http://www.higopi.com/component/option,com_mailto/link,aHR0cDovL3d3dy5oaWdvcGkuY29tL2FkaGl5YW1hbi1mb3Itd2Vic2l0ZXMtMS4wLmh0bWw=/tmpl,component/"] Are you the website owner/administrator of a website with various Tamil encodings (like TAB/TAM/TSCII) ? Always wondering how you can completely convert your website to Unicode Tamil? Then here is your easiest solution called "Adhiyaman for websites" a tool you can use for free.

This tool is used for converting the entire website (or a particular directory and its sub directories) which has content based on various Tamil encodings (like TAB/TAM/TSCII) to Unicode Tamil. If you are a web master or owner of a website which is based on various Tamil encodings (like TAB/TAM/TSCII) and would like to convert all your content from TAB/TAM/TSCII to Unicode Tamil, this is the tool for you. This tool need to be uploaded to your website and need to be run from there. This tool will convert the files in your web server. This is not a tool for converting your client side HTML files.

Please spread a word about this tool to your friends who are the owner/administrators of websites with various Tamil encodings (like TAB/TAM/TSCII). If you want to report any bugs in this tool, please mail me your bug with details.
=============================================================

இந்த மென்பொருள் நமக்கு உதவுமா என்று சோதிக்குமாறு அன்புடன் நிர்வாகியை வேண்டுகிறேன்.

இந்த மென்பொருள் போன்றோ... அல்லது மொத்தமாக ஒரு இணையதளத்தை ஒருங்குறியாக்குவதற்கோ ஏதேனும் வழி இருக்கிறதா அல்லது மென்பொருள் இருக்கிறதா என்பதை அறிந்த உறவுகள் விளக்கமாய் இங்கே கூறுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி.

விகடன்
09-04-2009, 08:59 AM
மென்பொருளை பதிவிறக்க சரியான தள முகவரி இதுவாகத்தானிருக்க (http://www.higopi.com/index.php?option=com_jdownloads&Itemid=4&task=summary) வேண்டும். தள நிர்வாகிகளால் மட்டுந்தான் பரிசோதிக்க முடியுமெனவும் எண்ணுகிறேன்.

இராசகுமாரன்
11-04-2009, 07:59 AM
நண்பரே,

நமது தளத்தின் மாற்றத்தில் அக்கரை கொண்டு, இதை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி..!

பொதுவாக, இணையப் பக்கங்கள் இரண்டு வகைப் படும். ஒன்று Static webpages, மற்றொன்று Dynamic webpages. Static webpage-ல் main content அதனுள் தட்டச்சு செய்யப் பட்டிருக்கும், தானாக அவை மாறாது. Dynamic webpage-ல் அதன் main content வேறு இடத்திலிருந்து (பொதுவாக database-ல் இருந்து) அவ்வப்போது கொடுக்கப் படும் கட்டளைக்கு ஏற்ற படி கொண்டு வரப் படுகிறது.

இந்த மென்பொருள் static webpage-க்கு மட்டுமே பொருந்தும். நமது தளம் போன்ற Dynamic web contents உள்ள தளங்களுக்கு பொருந்தாது.

இந்த மென்பொருளை ஏற்கனவே முன்பு static webpage-ல் சோதித்து பார்த்துள்ளேன், அதில் கூட இது எனக்கு ஒழுங்காக வேலை செய்ய வில்லை.

உங்களுக்கு நேரமிருந்தால் நீங்கள் சோதித்துப் பார்க்க, இதோ ஒரு சில Static TSCII webpages இந்த சுட்டியில் உள்ளது.

http://www.geocities.com/athens/5180/tscguide.html

இதை விட சிறந்த மென்பொருளை suratha yarlvaanan முன்பே உருவாக்கியுள்ளார். அதன் பெயர் "அடங்காதமிழ்" அது முழு database-ஐ ஒருங்குறியாக்கும் தன்மையுடையது. ஆனால், முழு database-ம் ஒரே குறியீட்டில் இருக்க வேண்டும், நாம் ஏற்கனவே பாதி ஒருங்குறியில் உள்ளோம், பாதி பழையவை திஸ்கியில் உள்ளதால், நமது தளத்தை இதன் மூலம் மாற்ற முடியவில்லை.

பாரதி
11-04-2009, 08:59 AM
தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே.