PDA

View Full Version : "எனது முதல் கவிதை" ; மொட்டை ஆதரிக்குமாறு மலர்களிடம் விண்ணப்பம்

lakshmi_13994
08-04-2009, 03:05 PM
வணக்கம். என் பெயர் லட்சுமி. எனது முதல் கவிதையை தமிழ் மன்றத்திற்கு அளிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
"கிருமிகள்"
"மானுடப் பிறவியில் பெருகும் பணப் பேய்கள்
நாட்டை நாசமாக்கும் நச்சுக் கிருமிகள்...
வக்கிர குணம் கொண்ட வஞ்சகர்கள்
வையகத்தை அழிக்கவந்த வைரஸ்"

அறிஞர்
08-04-2009, 03:24 PM
பணப்பேய்களும், வஞ்சகர்களும்.... அழிவுக்கு வித்தாக இருக்கிறார்கள்.
இதை அழிக்க மாற்று சக்திகள் உருவாகவேண்டும்.

வாழ்த்துக்கள் லட்சுமி..

பரஞ்சோதி
08-04-2009, 03:36 PM
அருமையான கவிதை சகோதரி. வாழ்த்துகள்.

இன்னும் இன்னும் நிறைய கவிதைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

பாரதி
08-04-2009, 03:42 PM
நல்ல முயற்சி லட்சுமி!
உங்கள் முதல் கவிதையே மன்றத்தில்தானா...!!
இனிய வாழ்த்து.
தொடர்ந்து எழுதுங்கள்.

(நான் திருப்பதி செல்கிறேன் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்!!? :) )

samuthraselvam
09-04-2009, 06:42 AM
முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் லக்ஷ்மி... இன்னும் தொடர்ந்து பல பதிவுகள் கொடுக்க வாழ்த்துக்கள்....:icon_b:

(நான் திருப்பதி செல்கிறேன் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்!!? :) )

ஆனாலும் நம்ம குசும்புக்கு அளவே இல்லை அண்ணா...

மொட்டை ஆதரிக்கத்தான் அவர் சொன்னார்... மொட்டை அடிக்கத்தான் நீங்க போறீங்களோ...? பார்த்து திருப்பதி வெங்கடாசல பதியை மொட்டை அடிச்சிராதீங்க... வரும் போது லட்டு வாங்கிட்டு வாங்க..... லட்டு தின்னும் ஆவலுடன்:aetsch013:.....லீலுமா...:D:D

praveen
09-04-2009, 07:19 AM
பணப்பேய்களை பற்றி தான் அவ்வையார் முன்னாடியே பாடியிருக்கிறாரே.

பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்கும்
கேடு கெட்ட மானிடரே கேளீர், கூடு விட்டு
ஆவி தான் போயின்பின் யார் தான் அனுபவிப்பாரோ
பாவிகளாய் அந்த பணம்

அப்படி பணம் சேகரிப்பவர் யாருக்கு ஒப்பு என்று விளக்கியிருக்கிறீர்கள்.

முதல் கவிதைக்கு நன்றி

பா.ராஜேஷ்
09-04-2009, 08:47 AM
நல்ல முயற்சி சகோதரி. பாராட்டுக்கள்.

சிவா.ஜி
09-04-2009, 03:22 PM
முதல் கவிதையே சமூகப்பார்வையோடு வந்திருப்பதை பாராட்டுகிறேன் லட்சுமி தங்கையே. இன்னும் நிறைய கவிதைகளைப் படைத்து கவிதாயினி லட்சுமியாக வாழ்த்துகள்.

பாரதி
09-04-2009, 03:39 PM
ஆனாலும் நம்ம குசும்புக்கு அளவே இல்லை அண்ணா...

மொட்டை ஆதரிக்கத்தான் அவர் சொன்னார்... மொட்டை அடிக்கத்தான் நீங்க போறீங்களோ...? பார்த்து திருப்பதி வெங்கடாசல பதியை மொட்டை அடிச்சிராதீங்க... வரும் போது லட்டு வாங்கிட்டு வாங்க..... லட்டு தின்னும் ஆவலுடன்:aetsch013:.....லீலுமா...:D:D

ஓ..சரி..சரி... உங்களுக்கு குசும்பு அதிகம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா..!!

எனக்கு மொட்டை அடிக்கத்தெரியாதே..?:confused: மொட்டை அடிப்பதை பார்க்கவும் கஷ்டம். ஆகவே மொட்டை(யை) ஆதரிப்பதே நல்லது.

லட்டு வாங்கிட்டு அப்படியே நான் போறேன்.:p
உங்களுக்கு அல்வா அனுப்பி வைக்கிறேன்.:icon_rollout:

பணப்பேய்களை பற்றி தான் அவ்வையார் முன்னாடியே பாடியிருக்கிறாரே.

பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்கும்
கேடு கெட்ட மானிடரே கேளீர், கூடு விட்டு
ஆவி தான் போயின்பின் யார் தான் அனுபவிப்பாரோ
பாவிகளாய் அந்த பணம்

நன்றி பிரவீண்!

வசீகரன்
11-04-2009, 09:47 AM
நல்ல சமூக நோக்கு கொண்ட கவிதை லக்ஷ்மி அவர்களே...
உங்கள் முதல் முயற்சியே அருமை....! தொடருங்கள்.....
மேன்மேலும் இது போன்று நல்ல கவிதைகளை தாருங்கள்...!

பரஞ்சோதி
11-04-2009, 10:38 AM
எங்கே லட்சுமி சகோதரி.

அடுத்த கவிதையை கொடுக்க வாங்க.

ஆதவா
28-04-2009, 03:21 PM
வணக்கம். என் பெயர் லட்சுமி. எனது முதல் கவிதையை தமிழ் மன்றத்திற்கு அளிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
"கிருமிகள்"
"மானுடப் பிறவியில் பெருகும் பணப் பேய்கள்
நாட்டை நாசமாக்கும் நச்சுக் கிருமிகள்...
வக்கிர குணம் கொண்ட வஞ்சகர்கள்
வையகத்தை அழிக்கவந்த வைரஸ்"

உங்களது முதல் கவிதை முயற்சிக்கு என் முதல் வாழ்த்துகள்.

கவிதைகள் என்பது எண்ணங்களின் பிம்பங்கள். அதை உடையாமல் உருவாக்குவதில் ஒவ்வொரு கவிஞனும் தாயாக எண்ணப்படுகிறான். நீங்கள் கீழ்காணும் இந்த திரியை கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம். அதை ஒரு மாதிரியாகக் கொண்டு கவிதைகள் எழுத முன்வரலாம்.

எழுத எழுத எழுத்துக்கள் வசமாகும்.

வாழ்த்துக்கள்.

http://tamilmantram.com/vb/showthread.php?t=8497

கா.ரமேஷ்
29-04-2009, 04:42 AM
வாருங்கள் வரவேற்கிறோம்...! சமுதாய சிந்தனையோடு வந்திருக்கிறீர்கள் நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்..!