PDA

View Full Version : மின்னஞ்சல் கதை:6 சிகை அலங்கார நிலையத்தில்....

பாரதி
08-04-2009, 11:45 AM
சிகை அலங்கார நிலையத்தில்....

ஒரு நாள் ஒரு விவசாயி முடி திருத்துவதற்காக சிகை அலங்காரம் செய்யும் அந்தக்கடைக்கு சென்றிருந்தார். அலங்காரம் முடிந்ததும் அதற்கான கூலி எவ்வளவு என்று சிகை அலங்காரம் செய்பவரிடம் கேட்டார். அதற்கு அந்த சிகை அலங்கார நிபுணர் "நான் உங்களிடம் இருந்து பணம் எதுவும் வாங்க மாட்டேன். இந்த வாரம் முழுவதும் சமூகத்தில் உழைப்பவர்களுக்காக இலவசமாக முடி திருத்துவேன்" என்றார். விவசாயி அவரது பதிலில் நெகிழ்ந்தார்.

அடுத்த நாள் காலையில் அந்த சிகை அலங்கார நிபுணர் தனது கடையை திறக்கச் சென்ற போது - கடையின் வாசலில் "நன்றி" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அட்டையுடன் ஒரு கொத்து ரோஜா மலர்கள் இருந்தன.

சற்று நேரம் கழித்து ஒரு காவலர் அந்தக்கடைக்கு வந்தார். முடி திருத்தி முடிந்ததும் அதற்கான பணம் எதையும் பெற்றுக்கொள்ள மறுத்த சிகை அலங்கார நிபுணர் "நான் உங்களிடம் இருந்து பணம் எதுவும் வாங்க மாட்டேன். இந்த வாரம் முழுவதும் சமூகத்தில் உழைப்பவர்களுக்காக இலவசமாக முடி திருத்துவென முடிவெடுத்திருக்கிறேன்" என்றார். காவலர் அவரது பதிலைக் கேட்டு வியப்புடன் விடை பெற்றார்.

அடுத்த நாள் காலையில் அந்த சிகை அலங்கார நிபுணர் தனது கடையை திறக்க சென்ற போது - கடையின் வாசலில் "நன்றி" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அட்டையுடன் இனிப்புகள் நிரப்பப்பட்ட ஒரு பையும் இருந்தது.

அதற்கடுத்த நாளில் ஒரு ஆசிரியர் அந்தக்கடைக்கு வந்தார். முந்தைய தினங்களைப் போன்றே, சிகை திருத்தி முடிந்ததும் அதற்கான பணம் எதையும் பெற்றுக்கொள்ள மறுத்த சிகை அலங்கார நிபுணர் "நான் உங்களிடம் இருந்து பணம் எதுவும் வாங்க மாட்டேன். இந்த வாரம் முழுவதும் சமூகத்தில் உழைப்பவர்களுக்காக இலவசமாக முடி திருத்துவேன்" என்றார். ஆசிரியரும் அவரது பதிலில் அசந்து போனார்.

அடுத்த நாள் காலையில் அந்த சிகை அலங்கார நிபுணர் தனது கடையை திறக்க சென்ற போது - கடையின் வாசலில் "நன்றி" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அட்டையுடன் ஒரு டஜன் புத்தகங்கள் - தொழிலை மேம்படுத்துவது எப்படி? வெற்றி பெறுவது எப்படி - போன்ற புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அதற்கடுத்த நாளில் ஒரு மக்களவை உறுப்பினர் அந்தக்கடைக்கு வந்தார். வழக்கம் போலவே, முடி திருத்தி முடிந்ததும் அதற்கான பணம் எதையும் பெற்றுக்கொள்ள மறுத்த சிகை அலங்கார நிபுணர் "நான் உங்களிடம் இருந்து பணம் எதுவும் வாங்க மாட்டேன். இந்த வாரம் முழுவதும் சமூகத்தில் உழைப்பவர்களுக்காக இலவசமாக முடி திருத்துவேன்" என்றார். மக்களவை உறுப்பினருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.

அடுத்த நாள் காலையில் அந்த சிகை அலங்கார நிபுணர் தனது கடையை திறக்க சென்ற போது கடையின் வாசலில் ...................................

ஒரு டஜன் மக்களவை உறுப்பினர்கள் இலவசமாக முடி வெட்டிக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தனர்!

-------------------------------------------------------------
நீதி:
அன்பு நண்பர்களே, சாதாரண குடிமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் வித்தியாசம் தெரிகிறதா...? இந்த வருடமாவது சற்று சிந்தித்து வாக்களியுங்கள்.
=============================================================
நன்றி: மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் கதை அனுப்பிய நண்பருக்கு.

xavier_raja
08-04-2009, 12:21 PM
அவருடைய கட்சி தொண்டர்கள் முடிவெட்டிக்கொள்ள வந்திருப்பார்கள்..
அவரால் முடிந்தது அவ்வளவுதான்.. (என் கணிப்பு தவறும் பட்சத்தில் அவர் இந்த கால அரசியல்வாதியாக இருக்க முடியாது)

பாரதி
08-04-2009, 12:27 PM
அவருடைய கட்சி தொண்டர்கள் முடிவெட்டிக்கொள்ள வந்திருப்பார்கள்..
அவரால் முடிந்தது அவ்வளவுதான்.. (என் கணிப்பு தவறும் பட்சத்தில் அவர் இந்த கால அரசியல்வாதியாக இருக்க முடியாது)

ஆஹா....!! நீங்கள் அரசியல்வாதியாக முழுத்தகுதி உடையவர்தான் ராஜா!:aetsch013: சரியாக கணித்ததால் முடிவையும் சேர்த்து விடுகிறேன். பின்னூட்டத்திற்கு நன்றி.

xavier_raja
08-04-2009, 12:29 PM
ஆஹா....!! நீங்கள் அரசியல்வாதியாக முழுத்தகுதி உடையவர்தான் ராஜா!:aetsch013: சரியாக கணித்ததால் முடிவையும் சேர்த்து விடுகிறேன். பின்னூட்டத்திற்கு நன்றி.

என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அரசியலில் இருக்கின்றார்.. அதனால்தான் அவர்களுடைய மனநிலைமையை கணிக்க முடிந்தது.. (அதுவும் இல்லாமல் இவர்கள் எப்பொழுது நல்லது செய்திருகிறார்கள்) :)

அன்புரசிகன்
08-04-2009, 01:58 PM
நகைச்சுவையாக உள்ளது அண்ணா... ஆனால் ஒரு விடையம்... அரசியல்வாதிகள் சாதாரண கடைக்கு வந்து சிகையை அலங்கரிப்பார்களா???? :D இலவசம் என்றால் அரசியல்வாதிகளும் வாயைத்திறப்பார்களா????

praveen
08-04-2009, 02:15 PM
நகைச்சுவையாக உள்ளது அண்ணா... ஆனால் ஒரு விடையம்... அரசியல்வாதிகள் சாதாரண கடைக்கு வந்து சிகையை அலங்கரிப்பார்களா???? :D இலவசம் என்றால் அரசியல்வாதிகளும் வாயைத்திறப்பார்களா????

இப்படியே போனால், அவர் சமூகத்தில் உழைப்பவருக்கு இலவசம் என்றாரே, எந்த அரசியல்வாதி சமூகத்திற்காக உழைக்கிறார், அவர்கள் எல்லோரும் சமூகத்தால் தானே பிழைக்கிறார்கள் என்று கேள்வி வரும்.

கதையை படித்துகொண்டே வரும் போது, அரசியல்வாதி வந்தவுடன் மறுநாள் என்ன கெடுதல் செய்தாரோ என்று பார்த்தால், ஒரளவு தான் செய்திருக்கிறார், என்று ஆறுதல் பெற்றேன்.

நன்றாக மொழிமாற்றி தந்திருக்கிறீர்கள், நன்றி பாரதி.

பாரதி
08-04-2009, 02:41 PM
என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அரசியலில் இருக்கின்றார்.. அதனால்தான் அவர்களுடைய மனநிலைமையை கணிக்க முடிந்தது.. (அதுவும் இல்லாமல் இவர்கள் எப்பொழுது நல்லது செய்திருகிறார்கள்) :)
ஆஹா... அப்படிப்போடுங்க அருவாள..! அவரு எங்க முடி வெட்டுறாருன்னு கேட்டீங்களா..?

.. அரசியல்வாதிகள் சாதாரண கடைக்கு வந்து சிகையை அலங்கரிப்பார்களா???? :D இலவசம் என்றால் அரசியல்வாதிகளும் வாயைத்திறப்பார்களா????
சாதாரண கடையா என்பது முக்கியமன்று. அவர்கள் சிகை திருத்த வேண்டுமெனில் அந்த நிலையத்திற்கு சென்றுதானே ஆகவேண்டும். வசமாக முன்னேறுவதற்கு இலவசமாக "கையூட்டு" என்ற அரிய அன்பளிப்பை கண்டுபிடித்ததில் முக்கிய பங்கு வகித்தவர்களே அவர்கள்தானே..?

கதையை படித்துகொண்டே வரும் போது, அரசியல்வாதி வந்தவுடன் மறுநாள் என்ன கெடுதல் செய்தாரோ என்று பார்த்தால், ஒரளவு தான் செய்திருக்கிறார், என்று ஆறுதல் பெற்றேன்.
பாருங்க பிரவீண்... எப்படியோ... உங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய சமூக சேவையை செய்தவர்தானே....!:aetsch013: என்ன பண்ண..? இப்படி சொல்லி நாம் ஆறுதல் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.

விகடன்
08-04-2009, 02:52 PM
சரியாகச் சொன்னீர்கள் அண்ணா.
அதற்காக அரசியல்வாதிகள் இலவசமென்றால் பலவேஷம் எடுப்பார்கள் என்று சொல்லவில்லை. வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் உயர்ந்திருப்போர் பெரும்பாலும் இப்படியான கிழ்த்தரமான சிந்தனையைக் கொண்டிருப்போராகத்தானிருக்கின்றனர்.

அன்புரசிகன்
08-04-2009, 03:06 PM
அது என்னமோ உண்மை தான் விராடா....... இங்க ஒரு project manager ஏறத்தாள 50-70 000 UAED உழைப்பவர் தன் காருக்கு SALIK போடாமல் திரியுறான். கேட்டா ஏன் அநியாயக்காசை என்று... நேற்று தவறுதலா அவர் ஒரு toll gate ஐ தாண்டிவிட்டார். அடிச்சான் பாரு தண்டம். 500 + 4 திராம்ஸ்.......... RTA ஆ கொக்கா............. :D :D :D

(SALIK - துபாயில் அதிவேக வீதியில் பயணிக்க வீதி போக்குவரத்து அதிகாரசபையால் பணம் அறவிட காரில் ஒட்டப்படவேண்டிய ஒரு ஒட்டி)

பாரதி
08-04-2009, 03:09 PM
அரசியல்வாதிகள் இலவசமென்றால் பலவேஷம் எடுப்பார்கள் என்று சொல்லவில்லை. வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் உயர்ந்திருப்போர் பெரும்பாலும் இப்படியான கீழ்த்தரமான சிந்தனையைக் கொண்டிருப்போராகத்தானிருக்கின்றனர்.

அன்பு விராடன், இது மின்னஞ்சலில் எனக்கு கிடைக்கப்பெற்ற கதை. கதை பிடித்திருந்ததால் இங்கு தமிழாக்கி தந்தேன்.

இலவசம் என்று பேசும் போது வேறு பிரச்சினைகளும் எழ வாய்ப்பிருக்கிறது. எது இலவசம் என்பதில் தொடங்கி முடிவு காண்பதும் சிரமம்.

நீங்கள் பொருளாதார ரீதியாக உயர்ந்திருப்போரை பொதுவாக குறை கூறுவதை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. எனினும் "பெரும்பாலும்" என்று நீங்கள் கூறி இருப்பதால் அதைக்குறித்து மேற்கொண்டு சொல்வதற்கு என்னிடம் ஆதாரமில்லை.

பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி விராடன்.

பாரதி
08-04-2009, 03:13 PM
அது என்னமோ உண்மை தான் விராடா....... இங்க ஒரு project manager ஏறத்தாள 50-70 000 UAED உழைப்பவர் தன் காருக்கு SALIK போடாமல் திரியுறான். கேட்டா ஏன் அநியாயக்காசை என்று... நேற்று தவறுதலா அவர் ஒரு toll gate ஐ தாண்டிவிட்டார். அடிச்சான் பாரு தண்டம். 500 + 4 திராம்ஸ்.......... RTA ஆ கொக்கா............. :D :D :D

(SALIK - துபாயில் அதிவேக வீதியில் பயணிக்க வீதி போக்குவரத்து அதிகாரசபையால் பணம் அறவிட காரில் ஒட்டப்படவேண்டிய ஒரு ஒட்டி)

துபாயில் "சாலிக்" அட்டை ஒட்டாமல் இவ்வளவு காலம் வாகனம் ஓட்டியிருக்கிறாரா..!! பலே திறமைசாலிதான் போலும்.

ஒருவேளை அவரும் காரை வானூர்தி நிலையத்தில் விடும் திட்டம் வைத்திருக்கிறாரோ...!:aetsch013:

பா.ராஜேஷ்
09-04-2009, 06:24 AM
சிந்திக்க வேண்டிய விஷயம்தான். நன்றி பாரதி