PDA

View Full Version : சிவந்த வானம்.



ரங்கராஜன்
08-04-2009, 04:01 AM
jcgluflfguohi

samuthraselvam
08-04-2009, 06:56 AM
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கணவன், மனைவி ஆகியோருக்குள் இருக்கும் அன்யோநியமான காதல் மாறாது என்பதும், துன்பம் வந்த, அதாவது மனைவியின் காலை எடுத்தபின்னும் வேடிக்கையாய் பேசிக்கொள்ளும் அவர்களின் உறவு எப்போதும் மாறாது என்பதும் இக்கதையின் மூலம் தெரிகிறது.....

எங்க ஊரில் வெயிலுடன் மழை பெய்தால் காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் என்பார்கள்.

பாராட்டுக்கள் அண்ணா....!

பூமகள்
08-04-2009, 07:22 AM
ஏனோ கதை படித்ததும்.. கண்ணில் சில துளி நீர் கோர்வையாகியிருந்தது...

அன்யோன்யமான தம்பதிகளுக்கு இப்படியான கஷ்டங்கள் வரவே வேண்டாம் என மனம் ஏங்க வைத்தது..

உடல் நலனில் எத்தனை அக்கறை காட்ட வேண்டுமென்பதையும் சொல்லாமல் சொல்லும் கதை..

நல்ல கதை.... ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் இடராக... கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் தக்ஸ்..

கதை புரிதலிலேயே குழப்பம் விளைவிக்கிறது எழுத்துப் பிழைகள்..

பாராட்டுகள் தக்ஸ்..

--

உங்கள் கதைகள் வரிசையாக யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த வண்ணம் இருப்பதைப் பார்க்க மனம் மகிழ்ச்சியடைகிறது.. அங்கே என்னால் விமர்சனம் பதிக்க இயலவில்லை.. ஆகவே.. இங்கேயே பதிக்கிறேன்.. பாராட்டுகள் தக்ஸ்... :)

ரங்கராஜன்
08-04-2009, 10:11 AM
நன்றி பாசமலரே

என்னுடைய கதைகளை தொடர்ந்து படித்து ஊக்கம் அளித்து வருகிறாய், நன்றிகள் கோடி.

நன்றி பூமகள்

முதலில் என்னை மன்னித்துவிடுங்கள், கதையை நான் இரவு 1 மணிக்கு எழுதினேன் தூக்க கலக்கத்தில் எழுதிவிட்டேன், என்னுடைய அவசர புத்தியை நினைத்து அசிங்கமாக இருக்கிறது. நல்ல வேளை சிவா அண்ணாவின் கண்ணில் படுவதற்கு முன் நீங்க சொல்லிட்டீங்க. எழுத்து பிழைகளை மாற்றிவிட்டேன். இனிமேல் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கு நன்றி.

பா.ராஜேஷ்
08-04-2009, 10:39 AM
தங்கள் எழுத்திற்கு சிறிது இடைவெளி கிடைக்கும்போதே சிந்தித்தேன். இவ்வளவு அருமையான கதையை எழுதுவதற்காகத் தானிருக்குமென்று. கதை அருமை நண்பரே! அன்னியோன்ய தம்பதிகளை நினைக்கவே மிக நன்றாயிருக்கிறது.

ரங்கராஜன்
08-04-2009, 11:09 AM
தங்கள் எழுத்திற்கு சிறிது இடைவெளி கிடைக்கும்போதே சிந்தித்தேன். இவ்வளவு அருமையான கதையை எழுதுவதற்காகத் தானிருக்குமென்று. கதை அருமை நண்பரே! அன்னியோன்ய தம்பதிகளை நினைக்கவே மிக நன்றாயிருக்கிறது.

நன்றி ராஜேஷ், உங்களுக்கு கதை பிடித்து இருப்பதை எண்ணி மகிழ்கிறேன், கொஞ்சம் வேலை அதனால் தான் எழுத முடியவில்லை.............. விமர்சனத்திற்கு நன்றி நண்பரே

பாரதி
08-04-2009, 12:00 PM
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்ற சொல்லிற்கேற்ப ஒரு கதை. எத்தனை துன்பம் வந்தாலும் இன்னல் தீர்க்கும் விரலொன்றே போதும் என்ற சிவாவின் கையொப்பம் போல... அன்பு கொண்டோருக்கு வரும் துன்பமெல்லாம் பனித்துகள் போல் நீங்கி விடும் என்பது உண்மைதான்.

வாழ்த்துகிறேன் மூர்த்தி.

ரங்கராஜன்
08-04-2009, 12:44 PM
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்ற சொல்லிற்கேற்ப ஒரு கதை. எத்தனை துன்பம் வந்தாலும் இன்னல் தீர்க்கும் விரலொன்றே போதும் என்ற சிவாவின் கையொப்பம் போல... அன்பு கொண்டோருக்கு வரும் துன்பமெல்லாம் பனித்துகள் போல் நீங்கி விடும் என்பது உண்மைதான்.

வாழ்த்துகிறேன் மூர்த்தி.

நன்றி பாரதி அண்ணா

அன்பு என்ற ஒற்றை வார்த்தை போதும், உலகத்தை வெல்ல, நல்ல விமர்சனம் நன்றி அண்ணா

மதுரை மைந்தன்
09-04-2009, 10:17 AM
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞசில் உதிரம் கொட்டுதடி என்ற பாரதியின் பாடலை நினைவு படுத்தும் கதை. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
09-04-2009, 03:19 PM
அந்யோன்யமான தம்பதிகளை....அழகாக காட்டிவிட்டாய் தக்ஸ். உரையாடல்களில் அந்த சீண்டல்களில் தெரியும் அவர்களின் புரிதலும், நெருக்கமும் படிக்கப் படிக்க அருமையாக இருக்கிறது.

என்னதான் சிரிப்பும் கிண்டலுமாய் பேசினாலும்...இருவர் மனதிலும் ஓரமாய் உட்கார்ந்திருக்கும் வேதனையையும் உணரமுடிவதுதான் இந்தக் கதையின் பலம்.

வாழ்த்துகள் தக்ஸ்.