PDA

View Full Version : கூகுள் குழுமம்



அறிஞர்
07-04-2009, 08:16 PM
மன்ற உறவுகளே,

தமிழ் மன்றத்தில் நல்ல செய்திகளை பரிமாறிக்கொள்கிறோம். பலருக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

மின்னஞ்சலில் வரும் சுவையான பதிவுகளையும், ஆங்கில பதிவுகளையும் பகிர்ந்துக் கொள்ள விரும்பினால் மன்றத்தின் கூகுள் குழுமத்தில் இணைந்து (tamilmantram@googlegroups.com) பரிமாறிக் கொள்ளுங்கள். (tamilmantram@googlegroups.com)

மன்றத்திற்கும், கூகுள் குழுமத்திற்கு தொடர்பில்லாமல் இருக்கட்டும். அதில் பரிமாறப்படும் செய்திகளுக்கு மன்றம் பொறுப்பில்லை.

நல்லெண்ணத்தோடு அதை ஆரம்பித்துள்ளோம். நல்ல செய்திகளை நண்பர்களுக்குள் பரிமாறிக் கொள்ளுங்கள்.

அமரன்
07-04-2009, 08:22 PM
நல்ல தகவல்!

பயனுள்ள தகவல்களை பரிமாறிக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.

மன்றத்துடன் என்றும் தொடர்பிலிருக்கவும் உதவும்.

அதுக்காகக் குழுமமே கதி என்று இருந்திடாதீங்க.

என்றும் மன்றம் குன்றிலிட்ட தீபமாய்ச் சுடர அனைவர் ஒத்துழைப்பும் அவசியம்.

விகடன்
07-04-2009, 08:39 PM
தக்க நேரத்தில் நல்லதோர் திட்டம்.

சிவா.ஜி
07-04-2009, 09:38 PM
பகிர்வுகள் அதிகரிக்கும், பிணைப்புகள் பலமாகும். நல்ல முயற்சி அறிஞர்.

நேசம்
08-04-2009, 05:28 AM
நல்ல விசயம்.பாரட்டுகள் அறிஞர்,ஆங்கில பதிவுகளை பகிர்ந்து கொள்ளலாம்.இந்த கூகுள் குழுமத்துக்கு வரும் பதிவுகளை எப்படி பார்ப்பது.

அமரன்
08-04-2009, 07:23 AM
குழுமத்தில் இணைந்திடுங்கள் நேசம். புதிய பகிர்வுகளை மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெறுவீர்கள்.

ஆதி
08-04-2009, 07:59 AM
நல்ல விசயம்.பாரட்டுகள் அறிஞர்,ஆங்கில பதிவுகளை பகிர்ந்து கொள்ளலாம்.இந்த கூகுள் குழுமத்துக்கு வரும் பதிவுகளை எப்படி பார்ப்பது.

குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.. குழுமத்தில் வரும் பதிவுகளை காண ஜிமெயில் செல்ல வேண்டும் என்னும் அவசியமில்லை.. கூகுளில் ஜிமெயில் முகவரியில் லாகின் செய்து கொள்ளுங்கள்.. groups-ஐ சொடுக்கினால் தாங்கள் எந்தெந்த குழுமத்தில் இருக்குறீர்கள் என்று காண்பிக்கும்.. நம் குழுமத்திற்கு சென்று பதிவுகளை காணலாம்..

பரஞ்சோதி
08-04-2009, 11:23 AM
நன்றி அறிஞர். வாழ்த்துகள்.

ஆங்கில பதிவுகள் பதிய அது பயனுள்ளதாக இருக்கும், அதே நேரம் அங்கேயே இருந்திடாதீங்க.

இங்கே என்னால் கூகிள் குழுமங்களில் செல்ல முடியாது, ஆகையால் இமெயில் வாயிலாக தகவல்கள் அறிய முடியும்.

ஓவியன்
09-04-2009, 03:51 PM
கூகிளாண்டவர் இன்னும் நம் உறவை வலுப்படுத்தட்டும்...

Narathar
11-04-2009, 10:06 AM
புதிய முயற்சிக்கு நாரதரின் வாழ்த்துக்கள்