PDA

View Full Version : புதிய முறையில் கூகுள் தேடுதல்



நேசம்
07-04-2009, 11:52 AM
புதிய முறையில் கூகுள் தேடுதல்


சர்ச் இஞ்சின் என்னும் தேடுதல் சாதனத்தை வடிவமைத்து அதன் பயன்பாட்டை பல பரிமாணங்களில் தந்து புகழ் பெற்றிருக்கும் கூகுள் நிறுவனம் அண்மையில் தேடுதல் வகையில் இன்னும் இரண்டு வசதிகளை தந்து இருக்கிறது.

முதலாவதாக தேடும் பொருளை உணர்ந்து அது சார்ந்த தளங்களை சேர்த்து தருதல்.இதனால் தேடுதல் முடிவுகள் இன்னும் நெருக்கமாக நாம் எண்ணித் தேடும் பொருளைக் கொண்டுள்ளதாக இருக்கும்.இதனை ஆங்கிலத்தில் semantic wஎப் என கூகுள் குறிப்பிட்டுள்ளது. எ.கா. "principle of pysiச்ச்" என தேடினால் இந்த சர்ச் இஞ்சின் நமக்கு "angular momentum,: :speical relativity", "big bang: மற்றும் :quantum mechanicச்" போன்றவை இதனுடன் சேர்ந்த கோட்பாடுகள் என்பதை உணர்ந்து அவை குறிந்த தளங்களை தரும்.

கூகுள் சர்ச் இஞ்சின் மற்ற தளங்களை காட்டிலும் வேகமாக செயல் பட கூடியது. ஆனால் இது போன்ற கேள்விகள் சார்ந்த கோட்பாடுகள் உள்ளவற்றையும் தேடுதலுக்கு உட்படுத்தினால் நேரம் சற்று அதிகம் பிடிக்கும் என்பதால் அதற்கான தொழில் நுட்பத்தினை இன்னும் நுட்பமாக வடிவமைக்கும் முயற்சியில் கூகுள் வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவர் "barack obaம" என்று கொடுத்தால் உடனே அப்பெயர் சார்ந்த தளங்களை கொடுத்து விடும். ஆனால் என் கண் அறுவை கிசிக்கைக்கு பிறகு என்ன மருந்து சாப்பிட வேண்டும் ? என்ற கேள்வியை கேட்டால் அதனை புரிந்து கொண்டு செயல் படும் வகையில் சர்ச் இஞ்சின் நுண்ணிய தொழில் நுட்பத்தையும் பின் அதன் அடிப்படையில் வேகமாகத் தேடும் திறனைக் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய முயற்சியில் வெற்றி பெற்று இனனும் அதனை சீராக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது.

இரண்டாவதாக வந்துள்ள ஒரு வசதி தேடுதல் குறித்த விளக்கத்தை அதிகமாக தருவது.இப்போது முடிவுகள் தெரிவிக்கப்படுகையில் முதலில் ஒவ்வொரு முடிவும் நீல நிறத்தில் சற்று அழுத்தமான எழுத்துகளில் தளம் தரப்பட்டு பின் அது குறித்த விளக்கம் தரும் டெக்ஸ்ட் இனைக்கப்படுகிறது.இந்த டெக்ஸ்ட் இனைப்பை "snippet" எனக் கூறுகிறோம். இதன் முலம் அந்த தளம் கூறும் செய்தி என்ன அறிந்து கொள்கிறோம்.
இனி தேடுதல் கேள்விகளில் முன்று சொற்களுக்கு மேல் இருந்தால் இந்த விளக்க டெக்ஸ்ட்டில் அதிக வரிகள் இருக்கும்.தேடுதல் கேள்விகளின் பொருளை உணர்ந்து தளங்களை கூடுதல் விளக்கங்களூடன் தேடித் தருவதில் இன்னும் ஒரு சிக்கலுள்ளது.

ஒருபுறம் சர்ச் இஞ்சின் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான தளங்களை மட்டுமே தருவது என்ற நோக்கம் இருந்தாலும் தளங்களீன் காப்பி ரைட் உரிமையை மீறாமல் முடிவுகள் வழங்கப்பட வேண்டும். இவ்வகையில் கூகுள் மிகக் கவனமாகத் தன் தொழில் நுட்பம் அமைய வேண்டும் என முயற்சிகளை எடுப்பதாக அந்நிறுவனத்தின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த வகை தேடுதல் உலகின் 37 மொழிகளில் பயன்படுத்த படுகிறது.

நன்றி தினமலர்