PDA

View Full Version : தண்ணீரில் கண்டம் - நகைச்சுவை சிறுகதைமதுரை மைந்தன்
07-04-2009, 11:21 AM
" நாலு ஜோசியாளும் ஒரே மாதிரி சொல்லி இருக்காளே" என்று வேதனைப் பட்டார் பரமசிவம்.

" என்னாச்சு ஒரே டென்ஷனா தனக்குள்ளேயே பேசிண்டிருக்கேளே" என்று கேட்ட வண்ணம் சமயலறையிலிருந்து வெளி வந்தாள் அவரது மனைவி கமலா.

" நம்ம பையன் கண்ணன் ஜாதகத்தை நாலு ஜோசியாளிடம் காட்டினா எலலோரும் ஒரே மாதிரி அவனுக்கு தண்ணீரில கண்டம் என்கிறா. இப்போ என்ன பண்றது"

இதைக் கேட்டக் கொண்டு அங்கு வந்த கண்ணன் சிரித்து " என்ன எனக்கு தண்ணீர்ல கண்டமா? இப்போ தான் மாநில நீச்சல் போட்டிக்கு செலக்ட் ஆயிருக்கேன். எனக்கு எப்படி கண்டம் வரும்" என்றான்.

" அதான அவனுக்கு தண்ணிர்ல கண்டம்னா ஸ்விம்மிங்கு போகாதேனு சொல்லுங்கோ. அதை விட்டுட்டு கவலைப் படடிண்டிருந்தா என்ன பிரயோசனம்" என்றாள் கமலா.

" ஸ்விம்மிங்கு போகாதது மட்டுமில்லை மெரீன் இஞசினியரிங் கோர்ஸ்லயும் சேரக்கூடாது" என்றார் பரமசிவம்.

" அப்பா நான் மெரின் இஞசினியர் ஆனா கப்பல்ல வேலை செய்வேன். கப்பல் கடல்ல மிதக்கிறதுங்கதற்காக நான் அந்த வேலையை விட முடியுமா?. கை நிறைய சம்பளம் உலகத்தை சுற்றி வரும் வாயப்பு இதெல்லாத்தையும் விடச் சொல்றேளா?. கப்பல்ல போறவா எல்லோரக்கும் நீச்சல் தெரிஞ்சிருக்க வேண்டிய அவசியமில்லை" என்றான் கண்ணன்.

"போடா உனக்கென்ன தெரியும். நீ மெரின் இஞசினியர் ஆனா நாங்க ஆறு மாசம் வயத்தில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கணும் நீ கப்பல்ல இருக்கற போது. பேசாம ஐடி படிச்சிட்டு இங்கே மதுரைல ஒரு வேலை பாத்துக்கோ. வைகைல தண்ணி இல்லாதது நாம பண்ணின புண்ணியம்" என்றார் பரமசிவம்.

" ஐயோ அப்பா ஏன் இப்படி என் ஆசைல மண்ணை வாரி போடறேள். என்னோட ஜாதகத்தை கொடுங்கோ. எனக்கு தெரிஞ்ச ஜோசியரிடம் காட்டி கேட்கிறேன். அவரும் எனக்கு தண்ணீர்ல கண்டம் இருக்குன்னு சொன்னா நீங்க சொல்ற மாதிரி மதரைல வேலை தேடிக்கிறேன்" என்று சொல்லி ஜாதகத்துடன் ஜோசியரை பார்க்க சென்றான் கண்ணன்.

" ஜோசியர் அய்யா இது தான் என்னோட ஜாதகம். நல்லா பாத்து சொல்லுங்க எனக்கு கண்ணீர்ல தண்டம் இருக்கானு" என்றான் கண்ணன்.

" என்னது கண்ணீர்ல தண்டமா?" என்று வியந்தார் ஜோசியர்.

" சாரி நான் தப்பா சொல்லிட்டேன். எனக்கு தண்ணீர்ல கண்டம் இருக்கானு பார்த்து சொல்லுங்க" என்றான் கண்ணன்.

சரியான மாங்கா மடையன் நம்ம கிட்ட அகப்பட்டான்னு மகிழ்ந்த ஜோசியர் " தண்ணீர்ல கண்டம் பார்க்க நிறைய செலவாகுமே" என்றார்.

கண்ணன் பர்ஸை திறந்து 50 ரூபாய் நோட்டை நீட்டி " காரியம் நடக்குமா" என்றான். ஜோசியர் இல்லை என்று தலையாட்டினார். அடுத்தாற் போல் 100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களை காட்டின பிறகு " என்கிட்ட அதிக பட்சம் இவ்வளவு தான் இருக்கு"னு 1000 ரூபாய் நோட்டைக் காட்ட ஜோசியர் அதை வாங்கி கொண்டு " தண்ணீர்ல கண்டம்னா நீங்க ஆஸ்திரேலியாவுக்கு போவீங்க" என்றார் ஜோசியர்.

இதைக்கேட்டு பரவசமடைந்த கண்ணன் " எப்படி சொல்றீங்க?" என்று கேட்டான்.

" தண்ணீர்னா கடல். கடலல்ல இருக்கிற கண்டம் ஆஸ்திரேலியா. அங்கே தான் வேலைக்கு போவீங்க" என்றார் ஜோசியர்.

" எல்லா கண்டமும் கடல்ல தான் இருக்கு" என்றான் கண்ணன்.

" எல்லா கண்டமும் கடல்ல இருந்தாலும் நாலு பக்கமும் கடல் சூழ்ந்தது தான் ஆஸ்திரேலியா. இப்போ ஆசியாவை எடுத்தக்கிட்டீங்கனா மூணு பக்கம் தான் கடல் இருக்கு. நாலாவது பக்கம் தரை வழியா ஐரோப்பாவோட சேர்ந்திருக்கு. மற்ற கண்டங்களும் அப்படித் தான்" என்றார் ஜோசியர்.

சந்தோஷத்துடன் வீடு திரும்பிய கண்ணன் பெற்றோர்களிடம் விஷயத்தை கூற வேறு வழி இல்லாமல் அவனை மெரின் இஞ்சினியரிங் படிக்க மும்பைக்கு அனுப்பினார்கள். படிப்பு முடிந்து ஆஸ்திரேலியாவை நோக்கி செல்லும் கப்பலில் வேலையை துவக்கினான் கண்ணன.

வேலை நேரம் முடிந்து ஓய்வு எடுக்க தனது அறைக்கு திரும்பிய கண்ணன் தமிழ் சரித்திர புத்தகத்தை படிக்கலானான். அதில் கப்பல் அப்பொது செல்லும் பகுதியில் லமூரியா என்ற பழைய கண்டம் இருந்ததை பற்றி சுவாரஸ்யமாக படிக்கலானான்.

இப்போதும் அந்த கண்டம் இருக்கிறதா என்று பார்க்க கப்பலின் ஓரமாக வந்து கடலையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று அவனுக்கு தன் கண்களையெ நம்ப முடியவில்லை. கடலுக்கு அடியில் நிறைய பாறைகள் சிற்பங்களுடன் தென் பட்டன. தனது அறைக்கு ஓடி பைனாகுலரை எடுத்து வந்து பார்த்ததில் என்ன ஆச்சரியம்? பாறைகளில் தமிழ் எழத்துக்களும் தெரிந்தன.

" தண்ணீரில் கண்டம்" என்று ஆனந்தத்தில் அப்பாவுக்கு மொபைல் போனில் சொன்னான். " ஜோசியாள் சொன்னது சரியா போச்சு. பார்த்து ஜாக்கிரதையா இரு" என்றார் அப்பா. " தண்ணீரில் கண்டம்" " தண்ணீரில் கண்டம்" என்று உரக்க உரக்க அவன் கத்த முகத்தில் தண்ணிரை அடித்து அவனை எழப்பி விட்டான் அவனுடன் வேலை பார்க்கும் நண்பன்.

ரங்கராஜன்
07-04-2009, 11:57 AM
வாங்க மதுரை சார்

ரொம்ப நாள் கழித்து சிறுகதை போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள், அதில் கண்டம், இதில் கண்டம் என்று பொய் சொல்லி பல ஜோசியர்கள் சொந்தமாக பல அடுக்குமாடிகள் கட்டிவிட்டனர். இப்ப புதுசாக ஒரு கூட்டம் நியூமராலஜிஸ்டு பின்னாடி சுத்தினு இருக்கு சார், தி.நகரில் நியூ- நிபுனர் ஒருத்தர் இருக்கார் அவர் பெயர் என்ன தெரியுமா wwcc. white & white நீலகண்ட சிவா (அதுக்கு அப்புறமும் எதோ இன்ஸியல் வரும்), என்னத்த சொல்ல ................

தொடருங்கள் சார், வாழ்த்துக்கள்

xavier_raja
07-04-2009, 12:01 PM
நல்ல நகைச்சுவை சிறுகதை.. நண்பர்களே... யாரவது இந்த லேமுரிய கண்டத்தை பற்றி விளக்கி சொல்லமுடியுமா..

ஓவியா
07-04-2009, 01:40 PM
அஹாஹஹ் சமத்தா கதைய முடித்து கொடுத்துள்ளீர்கள்.

கடைசி வரிவரை மூச்சு விடாமல் படித்துவிட்டு சிரிப்பதா யோசிப்பதா என்று தெரியாமல் தடுமாறுகிறேன்.

நன்றி அண்ணா.

மதுரை மைந்தன்
07-04-2009, 04:35 PM
வாங்க மதுரை சார்

ரொம்ப நாள் கழித்து சிறுகதை போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள், அதில் கண்டம், இதில் கண்டம் என்று பொய் சொல்லி பல ஜோசியர்கள் சொந்தமாக பல அடுக்குமாடிகள் கட்டிவிட்டனர். இப்ப புதுசாக ஒரு கூட்டம் நியூமராலஜிஸ்டு பின்னாடி சுத்தினு இருக்கு சார், தி.நகரில் நியூ- நிபுனர் ஒருத்தர் இருக்கார் அவர் பெயர் என்ன தெரியுமா wwcc. white & white நீலகண்ட சிவா (அதுக்கு அப்புறமும் எதோ இன்ஸியல் வரும்), என்னத்த சொல்ல ................

தொடருங்கள் சார், வாழ்த்துக்கள்

உங்களுடய பாராட்டுக்களுக்கு நன்றி நண்பர் தக்ஸ்.

மதுரை மைந்தன்
07-04-2009, 04:48 PM
நல்ல நகைச்சுவை சிறுகதை.. நண்பர்களே... யாரவது இந்த லேமுரிய கண்டத்தை பற்றி விளக்கி சொல்லமுடியுமா..

எனக்கு தெரிந்த வரை லமூரிய கண்டம் எனபது ஆப்ரிக்க கடல் பகுதியிலுள்ள மடகாஸ்கர் முதல் தமிழ் நாடு இலங்கை மலேஷியா இந்தோனேஸியா ஆகியவைகளை உள்ளடக்கிய ஒரு கண்டமாக இருந்தது என்றும் தமிழ் இலக்கியங்கள் அங்கு தான்உருவானவை என்றும் அந்த கண்டத்தின் இனறைய பகுதிகளை தவிர மற்ற தரை பாகங்கள் கடலுக்கடியில் சென்று விட்டதாகவும் சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பூம்புகார் பட்டணம் அங்கு தான் இருந்தது என்றும் தமிழ் இலக்கியங்களை காப்பாற்றி தமிழ் நாட்டில் கொண்டு சேர்த்ததாகவும் கூறுகிறார்கள்.

தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.

மதுரை மைந்தன்
07-04-2009, 04:52 PM
அஹாஹஹ் சமத்தா கதைய முடித்து கொடுத்துள்ளீர்கள்.

கடைசி வரிவரை மூச்சு விடாமல் படித்துவிட்டு சிரிப்பதா யோசிப்பதா என்று தெரியாமல் தடுமாறுகிறேன்.

நன்றி அண்ணா.

நீங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் நகைச்சுவை கதை என்று போட்டேன். நீங்கள் சிரிக்காதது எனக்கு ஏமாற்றத்தை தருகிறது. இருப்பினும் என்னை மதித்து பின்னூட்டம் போட்டதற்கு நன்றி சகோதரி ஓவியா அவர்களே

ஓவியா
07-04-2009, 05:03 PM
நீங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் நகைச்சுவை கதை என்று போட்டேன். நீங்கள் சிரிக்காதது எனக்கு ஏமாற்றத்தை தருகிறது. இருப்பினும் என்னை மதித்து பின்னூட்டம் போட்டதற்கு நன்றி சகோதரி ஓவியா அவர்களே

அட சிரித்தேன் அண்ணா,

இல்லைனு சொல்லவில்லை உங்க வார்த்தை விளையாட்டை கண்டுதான் யோசித்தேன். :)


எனக்கு உங்க மேல எப்பொழுதுமே நல்ல மரியாதை இருக்கு :)

அன்புரசிகன்
07-04-2009, 06:18 PM
வார்த்தை ஜாலத்தினால் தண்ணீரில் கண்டம் என்பதை நல்லவழியில் எடுத்து நோக்கியுள்ளார்கள்...

சொன்னா நம்ப மாட்டியள். நேற்று தான் படம் ஒன்று பார்க்கும் போது இந்த லெமூரியா கண்டம் பற்றி ஏதோ வசனம் வர நினைத்தேன். அப்படி ஒன்று உள்ளதா???

பா.ராஜேஷ்
08-04-2009, 10:31 AM
ஹா ஹா ஹா... நல்ல நகைச்சுவை. நன்றி.. தாங்கள் அங்கிருப்பதால்தான் ஆஸ்திரேலியா பற்றி எழுத தோன்றியதோ!?

விகடன்
08-04-2009, 10:41 AM
சிரித்து சிரித்து படித்தேன். இறுதியில் குழம்பிவிட்டேன்.

"..........எழுப்பி விட்டான் அவனுடன் வேலை பார்க்கும் நண்பன்" என்று கூறினீர்களே. எங்கு வேலை பார்க்கும் நண்பன் என்று கூறவில்லையே???

மதுரை மைந்தன்
09-04-2009, 04:18 AM
வார்த்தை ஜாலத்தினால் தண்ணீரில் கண்டம் என்பதை நல்லவழியில் எடுத்து நோக்கியுள்ளார்கள்...

சொன்னா நம்ப மாட்டியள். நேற்று தான் படம் ஒன்று பார்க்கும் போது இந்த லெமூரியா கண்டம் பற்றி ஏதோ வசனம் வர நினைத்தேன். அப்படி ஒன்று உள்ளதா???

லமூரியா என்ற கண்டம் தமிழகத்தின் தென் பகுதியில் ஆப்ரிக்காவை சேர்ந்த மடகாஸ்கரிலிருந்து தொடங்கி தெற்கு தமிழகம் மற்றும் இலங்கை மலேசியா இந்தொனேஷியா ஆகியவற்றோடு சேர்த்து ஆஸ்திரேலிவையும் உள்ளடக்கியதாக கருதப் படுகிறது. இங்குள்ள ஆஸ்திரேலிய பழங்குடியினரிடம் தமிழர்களாகவும அவர்கள் பேசும் மொழி தமிழை சார்ந்ததாகவும் இருப்பதை நான் பார்த்தேன்.

லமூரிய கண்டத்து தமிழர்கள் நாகரீகத்திலும் வாழ்க்கை தரத்திலும் வெகுவாக முன்னேறி இருந்தனர். சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற தமிழின் அரிய இலக்கியங்கள் இங்கு தான் எழுதப் பட்டவை என்றும் லமூரியா கடலுக்கடியில் சென்று விட எஞ்சிய பகுதி மக்கள் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்ததாகவும் சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இன்று லமூரியா கண்டம் இருந்திருந்தால் தமிழர்கள் எப்படி இருந்திருப்போம் என்று கற்பனை செய்வது செய்வது சற்று கடினம் தான். முதலாவதாக மனித குலத்தில் லமூரியர்கள் மிகவும் மேம்பட்டவர்களாக இருப்பார்கள். லமூரிய தமிழர்கள் மற்ற எல்லா கண்டங்களையும் வென்று தமிழ் உலகெங்கும் ஒலிக்க செய்திருப்பார்கள். இமயம் வென்றான் என்பதைப் போல லமூரிய தமிழன் சந்திரனை வென்றான் செவ்வாய் கிரகத்தை வென்றான் என்றெல்லாம் சரித்திரம் சொல்லும்.

லமூரிய கண்டத்தில் தமிழர்கள் நாகரீகமாக வாழ்ந்து வரும் வேளையில் மற்ற கண்டத்துக் காரர்கள் குகைப் பகுதிகளில் வாழ்ந்தும் மிருகங்களை வேட்டையாடுவதிலும் ஈடுபட்டு பின் தங்கி இருப்பர். உலகில் வளம் மிகுந்த கண்டமாக லமூரியா விளங்கும். வந்தாரை வாழ வைக்கும் கண்டமாகவும் உலகத்தில் பசி பிணி இவை இல்லாமலும் இருக்கும். கல்வி கலாச்சாரம் போன்றவற்றில் தலை சிறந்து விளங்கும்.

திருவள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறிகளைக் கடைப் பிடித்து மக்கள் ஒழுக்கமாகவும் கண்ணியமாவும் வாழ்வர். மக்கள் பணியே மகேசன் பணி என்று அரசாள்பவர்கள் மக்களை வழி நடத்துவார்கள். பெண்கள் மதிக்கப்பட்டு அவர்களது கல்வி மற்றும் சமுதாயத்தில் அவர்களுக்கு ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகள் வழங்கப்படும். சாதி மத பேதங்களின்றி அனைவரும் ஒரு சமுகத்தினராக இருப்பர்.

இப்படி சிந்தித்துக் கொண்டே போகலாம். லமூரியா கண்டம் இன்று இருந்திருந்தால் தங்களது உரிமைகளுக்காக கையளவு நிலத்தில் வதை பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக் கென்று ஒரு தனி கண்டம் இல்லை தனி உலகமே இருக்கும்.

நன்றி நண்பர் அன்பு ரசிகன் அவர்களே

மதுரை மைந்தன்
09-04-2009, 10:00 AM
ஹா ஹா ஹா... நல்ல நகைச்சுவை. நன்றி.. தாங்கள் அங்கிருப்பதால்தான் ஆஸ்திரேலியா பற்றி எழுத தோன்றியதோ!?

சரியாக சொன்னீர்கள் நண்பர் ராஜேஷ். நன்றி.

மதுரை மைந்தன்
09-04-2009, 10:04 AM
சிரித்து சிரித்து படித்தேன். இறுதியில் குழம்பிவிட்டேன்.

"..........எழுப்பி விட்டான் அவனுடன் வேலை பார்க்கும் நண்பன்" என்று கூறினீர்களே. எங்கு வேலை பார்க்கும் நண்பன் என்று கூறவில்லையே???

கண்ணன் கப்பலில் மெரைன் எஞசினியராக வேலை பார்க்கும் போது லமூரிய கண்டத்தைப் பற்றி படித்துக் கொண்டே உறங்கி கனவு காண்பதாக பொருள். அவனுடன் கப்பலில் வேலை பார்க்கும் நண்பன் அவனை எழுப்புகிறான்.

கதையை ரசித்து பின்னூட்டம் போட்டதற்கு மிக்க நன்றி நண்பரே

நேசம்
09-04-2009, 01:07 PM
நல்ல நகைச்சுவை.ஜோஸ்யர் கொடுக்கும் விளக்கம் அருமை.அப்புறம் அந்த கதையின் நாயகன் நிங்க இல்லையே

மதுரை மைந்தன்
09-04-2009, 06:33 PM
நல்ல நகைச்சுவை.ஜோஸ்யர் கொடுக்கும் விளக்கம் அருமை.அப்புறம் அந்த கதையின் நாயகன் நிங்க இல்லையே

நிச்சயமாக நான் இல்லை. உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி

ஐரேனிபுரம் பால்ராசய்யா
10-04-2009, 02:15 PM
எல்லோருக்கும் வருவதில்லை நகைச்சுவை. நகைச்சுவை நச்சென்று சிரிக்கும் படியாய் உள்ளது பாராட்டுக்கள்

மதுரை மைந்தன்
10-04-2009, 11:25 PM
எல்லோருக்கும் வருவதில்லை நகைச்சுவை. நகைச்சுவை நச்சென்று சிரிக்கும் படியாய் உள்ளது பாராட்டுக்கள்

எல்லோருக்கும் வருவதில்லை நகைச்சுவை என்பது எழுதுவதிலா அல்லது ரசிப்பதிலா?. நீங்கள் நனறாக ரசித்திருக்கிறிர்கள். உங்கள் வார்த்தைகள் என்னை நகைச்சுவை எழுத ஊக்குவிக்கினறன. நன்றி ஐயா.