PDA

View Full Version : பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ப. சிதம்பரம் மீது சூ வீச்சுpraveen
07-04-2009, 10:10 AM
இந்திய உள்துறை அமைச்சர், ப.சிதம்பரம் தில்லியில் பயங்கரவாதம் குறித்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசிய போது, செய்தி சேகரிக்க வந்த சீக்கிய மதத்தை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் சிதம்பரம் மீது ஷூவை வீசி எறிந்தார். உடனே ஷூ வீசியவர் கைது செய்யப்பட்டார்.1984ம் ஆண்டு சீக்கியர்கள் மீதான தாக்குதல் குறித்து கேள்வி கேட்கும் போது இந்த செயல் நடந்துள்ளது. பத்திரிக்கையாளர் பெயர் ஜர்னெயில் சிங், அவர் டைனிக் ஜாகரன் என்ற பத்திரிகை சார்பில் செய்தி சேகரிக்க வந்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னரும் சிதம்பரம் தொடர்ந்து பேசினார். "நடந்த இந்த சம்பவத்தால் எனது கவனம் சிதறவில்லை. ஒரு நபரின் செய்கையால் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு பாதிக்கப்படக்கூடாது . அனைவரும் அமைதியாக அமருங்கள் . நான் அந்த நபரை மன்னிக்கிறேன்". இவ்வாறு கூறிய சிதம்பரம் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

விகடன்
07-04-2009, 10:29 AM
சீக்கியர் மன்னிக்கிறேன் என்று சொல்லிய சிதம்பரத்தின் உரைக்கு பதிலாக அந்த சீக்கிய இனத்தவர் " தான் செய்யதை இட்டு துளியேனும் வருத்தப்படவில்லை. இது எம் இனத்தின் பொருட்டு தான் செய்ததாக எண்ணி பெருமைப்படுகிறேன்" என்ற தொனியில் சொன்னதாகவும் தகவல் வருகிறதே பிரவீன்.

நேசம்
07-04-2009, 10:32 AM
மன்னித்து விட்டேன் என்று கூறியது சிதம்பரத்தின் பெருந்தன்மை.(அப்படிதான் சொல்லி ஆகனும்).அந்த செயலை செய்த சீக்கியரின் மனது இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும்

கா.ரமேஷ்
07-04-2009, 10:49 AM
ஒருவர் இன துரோகி மற்றொறுவர் இன பற்றாளர்.இருவருக்கும் ஒன்றும் வித்தியாசமில்லை....ஓட்டுக்காக மன்னித்துவிட்டேன் என்றிருப்பார்......

ஆதி
07-04-2009, 11:12 AM
சூ எறிந்ததால் ??!! நடந்தவைகள் மாறிவிட்டனவா ?

http://timesofindia.indiatimes.com/videoshow/4369632.cms

நாய்க்கு பிஸ்கட் போடுவது போல் எறிரார்..

அவரின் நோக்கம் சிதம்பரத்தை அடிப்பதில்லை.. காங்கிரஸை அவமானப்படுத்துவது..

மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தானே..

உன் இனத்தின் முன் இந்தியாவையே தலைகவிழ வைக்க என்ன செய்யனுமோ அதை செய் அதை விட பெரிய விடையம் வேறென்ன.. இந்தியாவே உன் இனத்தின் மீது கோவப்படும் படி செய்து உன் இனமே தலைகவிழும்படி செய்வது சரியல்லவே..

எறிந்தவர்க்கு 2 லட்சம் தர்ராங்கலாம்.. சீக்கிய அமைப்பு ஏதோ அறிவிச்சிருக்கு.. இது எல்லாம் தேவையா ?

இதனால் சீக்கியர் பெருமைக்கு பங்கம் வருமே தவிர.. பெருமை கூடாது!!

உனக்கு பிறர் எதை செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ அதை பிறருக்கு நீ செய்யாதே...

xavier_raja
07-04-2009, 11:20 AM
அப்படியாப்பட்ட புஷ் மேலய சூ எறிஞ்சாங்க.. சிதம்பரம் எம்மாத்திரம்.

ஆதி
07-04-2009, 11:22 AM
அப்படியாப்பட்ட புஷ் மேலய சூ எறிஞ்சாங்க.. சிதம்பரம் எம்மாத்திரம்.

யாரா இருந்தா என்னாங்க.. சூ எறிவது சரியா ?

சூ எறிந்ததால் தாழ்ச்சி யாருக்கு.. எறிந்தவரின் இனத்துக்கே தவிர எறியப்பட்டவர்க்கு அல்ல..

praveen
07-04-2009, 11:56 AM
நாய்க்கு பிஸ்கட் போடுவது போல் எறிரார்..

அவரின் நோக்கம் சிதம்பரத்தை அடிப்பதில்லை.. காங்கிரஸை அவமானப்படுத்துவது..

.

நான் செய்தியை படித்த மாத்திரத்தில் பதிந்தேன், படத்தை பார்க்கவில்லை, உங்கள் பதிவில் தான் பார்த்தேன். உங்கள் கூற்று சரியே.

ஜஸ்ட் இந்தா புத்தகம் என்பது போல தூக்கி போடுகிறார். ஜார்ஜ் புஷ் க்கு போல இந்த ஒன்று, அடுத்து இரண்டு என்பது போல இல்லை.

தூயவன்
07-04-2009, 12:00 PM
ஆகா அப்பிடினா விரைவில் இன்றொரு அனிமேஷன் கேம் இன்ரநெட்ல வரப்போகுதா ?? ஐ ஜாலி .. யாரவது எனக்கு முன்னம் கண்டா ப்ளீஸ் லிங் குடுங்க..:icon_rollout::icon_rollout:

புஷ் கேம் விளையாடி விளையாடி அலுத்துப் போச்சு :frown::icon_p:

ரங்கராஜன்
07-04-2009, 12:09 PM
நானும் அந்த காட்சியை பார்த்தேன், இதில் இனம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, ஷூ எறிந்தவர் தனிப்பட்ட மனிதன், அவனுடைய செயலுக்கு அவனே சிதம்பரம் மன்னித்து விட்டதாக சொன்னவுடன், அவனைடைய செயலுக்கு அவனே வருந்தியதாக செய்தியில் சொன்னார்கள். இதில் அந்த ஒட்டு மொத்த இனத்தையும் சாடுவதும், இழுப்பதும் தவறு. சில தனி மனிதனின் செயல்களால் பாவம் அவன் சேர்ந்த சமூகமும் அவமானப்பட வேண்டியுள்ளது.

கா.ரமேஷ்
07-04-2009, 12:33 PM
நானும் அந்த காட்சியை பார்த்தேன், இதில் இனம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, ஷூ எறிந்தவர் தனிப்பட்ட மனிதன், அவனுடைய செயலுக்கு அவனே சிதம்பரம் மன்னித்து விட்டதாக சொன்னவுடன், அவனைடைய செயலுக்கு அவனே வருந்தியதாக செய்தியில் சொன்னார்கள். இதில் அந்த ஒட்டு மொத்த இனத்தையும் சாடுவதும், இழுப்பதும் தவறு. சில தனி மனிதனின் செயல்களால் பாவம் அவன் சேர்ந்த சமூகமும் அவமானப்பட வேண்டியுள்ளது.

மன்னிப்பு கேட்கமாட்டேன் : ஜர்னெயில் சிங்

டைனிக்ஜாகரன் என்ற பத்திரிகைய*ை சேர்ந்த பத்திரிகையாளர் ஜர்னெயில் சிங் எனது நடத்தைக்காக நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை . எனது அனுகுமுறை தவறாக *இருந்திருக்கலாம் . ஆனால் நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். இவ்வாறு ஜர்னெயில் சிங் கூறினார். ----- இதுதான் உண்மை.தயவுசெய்து எல்லா செய்திகளையும் கேளுங்கள்.இது தனிமனிதருகிடையேயான பகையெ இல்லை என தோன்றுகிறது.

ரங்கராஜன்
07-04-2009, 12:50 PM
மன்னிப்பு கேட்கமாட்டேன் : ஜர்னெயில் சிங்

டைனிக்ஜாகரன் என்ற பத்திரிகைய*ை சேர்ந்த பத்திரிகையாளர் ஜர்னெயில் சிங் எனது நடத்தைக்காக நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை . எனது அனுகுமுறை தவறாக *இருந்திருக்கலாம் . ஆனால் நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். இவ்வாறு ஜர்னெயில் சிங் கூறினார். ----- இதுதான் உண்மை.தயவுசெய்து எல்லா செய்திகளையும் கேளுங்கள்.இது தனிமனிதருகிடையேயான பகையெ இல்லை என தோன்றுகிறது.

நீங்கள் சொன்னவுடன் சன் நியூஸ் டிவியில் கேட்டு விட்டு இதை எழுதுகிறேன் நண்பரே, அவர் என்னுடைய இனத்திற்காக செய்கிறேன் என்றால் அது இனத்திற்கான செயலாக ஆகிவிட முடியுமா சொல்லுங்க............. இதில் இனத்தை தேவையில்லாமல் சேர்த்தால், புதிதாக இன பிரச்சனை தான் வருமே தவிர, இருக்கும் பிரச்சனை தீராது. பல இன, ஜாதி, மதப்பிரச்சனைகள் எல்லாம் செய்திகளை திரிப்பதினால் தான் வருகிறது என்பதை மறந்து விடக்கூடாது.

பரஞ்சோதி
07-04-2009, 01:07 PM
இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

ஷூ இருக்கிறவன் ஷூவை எறிவான், கை குண்டு இருக்கிறவன் கைகுண்டை எறிவான், ஆக இரண்டுமே ஒன்று தான். வன்முறை தான்.

தங்கள் எதிர்ப்பை ஷூ எறிவதை விட வேறு வழியில் காட்ட வேண்டும்.

சிதம்பரமோ, அல்லது புஷ்ஷோ ஷூ மேலே பட்டு விட்டால் அவர்களுக்கு புனிதத்தன்மை கிடைத்து விடுமா என்ன?

எது எப்படியோ, அகில இந்தியா முழுவதும், காங்கிரஸ் கட்சிக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைக்க தயாராக வேண்டும்.

அறிஞர்
07-04-2009, 09:19 PM
ப.சிதம்பரம் மீது பத்திரிகையாளர் செருப்பு வீச்சு; வீசியவர் விடுவிப்பு

புதுடெல்லி, ஏப்.7 :

http://www.vikatan.com/vc/cmspic/I_137.jpg

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது பத்திரிகையாளர் ஒருவர் செருப்பை வீசியதால், டெல்லியில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்தியிருந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் ப.சிதம்பரம் இன்று காலை பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கடந்த 1984-ம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜகதீஷ் டைட்டல் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர்கள் விளக்கமளிக்கக் கேட்டுக் கொண்டனர்.

ப.சிதம்பரத்தின் விளக்கத்தில் திருப்தியடையாத பத்திரிகையாளர்கள் மீண்டும் மீண்டும் டைட்லர் பற்றியே கேட்டுக் கோண்டிருந்தபோது, ஜர்னைல் சிங் என்ற பத்திரிகையாளர் திடீரென தனது ஷூவை கழட்டி ப.சிதம்பரத்தை நோக்கி வீசினார். ப.சிதம்பரம் சற்றே லாவகமாக ஒதுங்கியதால், அவர் மீது ஷூ படவில்லை.

தன்னை நோக்கி ஷூ வீசப்பட்டதைக் கண்ட ப.சிதம்பரம் சிறு புன்னகையோடு, 'எல்லோரும் அமைதியாக இருங்கள். பேட்டியைத் தொடரலாம்," என்றார்,

அதேநேரத்தில் ஷூ வீசிய பத்திரிகையாளரை, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் நிதானமாக வெளியே அழைத்து சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் அமைச்சர் ப.சிதம்பரமோ, அந்தப் பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம். அவரது செயலை தாம் மன்னித்துவிட்டதாக போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து, ஜர்னைல் சிங் விடுவிக்கப்பட்டார்.

ப.சிதம்பரம் மீது ஷூ வீசிய பத்திரிகையாளர் ஜர்னல் சிங்கும், "நான் செய்தது தவறுதான். நான் நடந்து கொண்ட விதம் மிகவும் தவறானது. ஆனால், சரியான காரணத்தினால்தான் அப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது," என்றார்.

முன்னதாக, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரை அழைத்து சென்றபோது, சீக்கியர்களுக்கு நீதி கிடைக்க வழிவகுக்காத அரசைக் கண்டித்தே தாம் அப்படி நடந்துகொண்டதாக கூறினார்.
இந்த ஷூ வீச்சு சம்பவம் டெல்லியில் மட்டுமின்றி, நாடு முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த ஜர்னைல் சிங்?
கடந்த ஆறு ஆண்டுகளாக ராணுவ தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளராக 'டைனிக் ஜார்கன்' பத்திரிகையில் பணிபுரிந்து வருபவர்தான், ஜார்னைல் சிங்.

"இவர் மிகவும் அமைதியானவர். இப்படி இவர் நடந்து கொண்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது." - இது சக பத்திரிகை நண்பர்களின் ஸ்டேட்மென்ட்.

ஜார்னைல் சிங் மனைவி குர்மீத் கவுர், "என் கணவர் எந்தச் சூழலில் கோபம் கொள்ளாதவர். மனிதர்கள் சில நேரத்தில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள தவறிவிடுகின்றனர். இருப்பினும் அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார்," என்கிறார்.

பி.ஜே.பி. கண்டனம்!

ப.சிதம்பரம் மீது பத்திரிகையாளர் ஷூ வீசிய சம்பவத்துக்கு பி.ஜே.பி. கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சித்தார்த் நாத் சிங் டெல்லியில் கூறுகையில், "இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜனநாயக நாட்டில் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடம் தரக் கூடாது. சீக்கிய சமூகத்தினரிடையே உள்ள கோபத்தை காங்கிரஸ் தெரிந்து கொள்ள வேண்டும்," என்றார்.


நன்றி - விகடன்

இன்பா
08-04-2009, 03:32 AM
இது என்ன புது கலாச்சாரம் உருவாகியிருக்கிறது என்ற அதிர்ச்சி ஒருபக்கம்,

பல இணைய தளங்களில் இது பற்றி காரசாரமான வீவாதங்களும் போய் கொண்டிருக்கிறது, இது தமிழனை அவமானப்படித்திய செயல் என்றும், தமிழன் எப்போது ஒடுக்கப் படுகிறான் என்று பொருளில்லாமல் போய் கொண்டிருக்கிறது.

இல்லை, இது முழுவதுமாக காங். அரசின் மீது உள்ள கோபத்தை காட்டிய செயலே, செருப்பு வீசிய பிறகு சிதம்பரத்தின் வெளிப்பாடு நாகரீகமாக இருந்தது (வெறு வழி).

தனக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு சீக்கியனின் ஆத்திரம், இது நாகரீகமானது இல்லை என்றாலும் .........................

இங்கேயும் அநீதி இழைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது, அதற்கு நாம் செருப்பு எறிய வேண்டாம், இது தேர்தல் நேரம்... அல்லவா...? வேசதாரிகளை இனம் கண்டு ஒடுக்குவோம்.

aren
08-04-2009, 03:55 AM
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று கவுண்டமணி சார்பில் ப.சிதம்பரம் சொல்கிறாரா?

aren
08-04-2009, 03:56 AM
அழுகிய தக்காளி, அழுகிய முட்டை போன்ற ஆயுதங்களுடன் இப்பொழுது ஹூக்களும் இந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டன.

xavier_raja
08-04-2009, 04:27 AM
சூ வீசிய அந்த நபருக்கு அகாலிதளம் என்ற கட்சி தேர்தலில் நிற்க சீட் கொடுத்துள்ளது. அதைத்தவிர வேறொரு இயக்கம் அவருக்கு மூன்று லட்சம் பரிசு தொகை அறிவுத்துள்ளது. இதை என்னவென்று சொல்லுவது.

ஒரே செய்தி இரண்டு முறை வந்திருக்கிறது.. நம் தளத்தில் வேறு ஒரு திரி ஏற்கனவே இருக்கிறது.. அதில் வந்த செய்தியை தான் நான் போட்டிருக்கிறேன்.

nambi
29-04-2010, 03:32 AM
இது என்ன புது கலாச்சாரம் உருவாகியிருக்கிறது என்ற அதிர்ச்சி ஒருபக்கம்,

பல இணைய தளங்களில் இது பற்றி காரசாரமான வீவாதங்களும் போய் கொண்டிருக்கிறது, இது தமிழனை அவமானப்படித்திய செயல் என்றும், தமிழன் எப்போது ஒடுக்கப் படுகிறான் என்று பொருளில்லாமல் போய் கொண்டிருக்கிறது.

இல்லை, இது முழுவதுமாக காங். அரசின் மீது உள்ள கோபத்தை காட்டிய செயலே, செருப்பு வீசிய பிறகு சிதம்பரத்தின் வெளிப்பாடு நாகரீகமாக இருந்தது (வெறு வழி).

தனக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு சீக்கியனின் ஆத்திரம், இது நாகரீகமானது இல்லை என்றாலும் .........................

இங்கேயும் அநீதி இழைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது, அதற்கு நாம் செருப்பு எறிய வேண்டாம், இது தேர்தல் நேரம்... அல்லவா...? வேசதாரிகளை இனம் கண்டு ஒடுக்குவோம்.

இது சீக்கியர்களின் காலிஸ்தானப் பிரச்சினைக்காக 1984 அன்று நடைபெற்ற செயல். அதுமட்டுமல்லாமல் ஜர்னைல் சிங் என்ற பத்திரிகையாளர் ப.சிதம்பரத்தின் மீது செருப்பு வீசியதிற்காக கொண்டாடப்பட்டார். அது அன்றைய காலிஸ்தானப்பிரச்சினை, அவர் எழுத்து காலிஸ்தானத்துக்கு (தனிநாடு கோரிக்கை) ஆதாரவாக அவருடைய பத்திரிகைகளில் பதியபட்டதால் விளைந்தது.

இன்னொருவர் பெயரும் ஜர்னைல்சிங் தான். ஆனால் ஜர்னைல் சிங் என்ற துணைப்பெயர் கொண்டவர் பிந்தரன்வாலே. அவரது முழுப்பெயர் ஜர்னைல்சிங் பிந்தரன்வாலே இவரே காலிஸ்தானத்தின் தலைவராக போற்றப்பட்டார், அனைறைய காலகட்டத்தில். செருப்பு நிகழ்ச்சிக்கு பின் பிந்தரன்வாலேவின் செயல் மிக தீவிரமாகவே இருந்தது. பத்திரிகையாளர் ஜர்னைல் சிங் காலிஸ்தானத்தையும். பிந்தரன்வாலேவையும் பற்றி தொடர்ந்து ஆதாரவாக எழுதி வந்தவர். இவையனைத்தும் இந்திராவின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தில் பிரபல கல்கி பத்திரிகை முன்னாள் ஆசிரியரும், கிழக்கு பதிப்பகத்தின் தலைமை ஆசிரியருமான ஆர் முத்துக்குமார் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின் (மூன்றே நாளில்) 4000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றியும் அதை காவல் துறையினர் (அன்றையபிரதமர் ராஜிவ்காந்தி வெளியிட்ட கருத்து உட்பட) கைகட்டி வேடிக்கைப் பார்த்தனர் என்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பிபிசி தமிழோசைத் தளவமும் இந்திராகாந்தியின் 25 வது நினைவுதினம் (கடந்த ஆண்டு 2009 நவம்பர் அன்று நிறைவுபெற்றதை நினைவுபடுத்தும் விதமாக) மற்றும் சீக்கியர் படுகொலை பற்றி இந்து பத்திரிகையின் நிருபர் வெளியிட்டுள்ள கருத்துரையை வெளியிட்டுள்ளது.
சூ வீசிய அந்த நபருக்கு அகாலிதளம் என்ற கட்சி தேர்தலில் நிற்க சீட் கொடுத்துள்ளது. அதைத்தவிர வேறொரு இயக்கம் அவருக்கு மூன்று லட்சம் பரிசு தொகை அறிவுத்துள்ளது. இதை என்னவென்று சொல்லுவது.

ஒரே செய்தி இரண்டு முறை வந்திருக்கிறது.. நம் தளத்தில் வேறு ஒரு திரி ஏற்கனவே இருக்கிறது.. அதில் வந்த செய்தியை தான் நான் போட்டிருக்கிறேன்.

அவர் அகாலிதள ஆதாரவாளர் தான். அப்போதைய சீக்கிய பிரச்சினை வேறு. அகாலிதளம் காங்கிரசுக்கு எதிராக உருவான பெரிய மாற்று கட்சி, பஞ்சாப்பில் காங்கிரசை ஒரங்கட்டி முதன்முதலில் ஆட்சி கட்டிலில் ஏறிய கட்சி. அதை உடைக்க முயன்வர் முன்னால் பஞ்சாப் (காங்கிரஸ்) முதலமைச்சர் ஜயில்சிங். (அப்போது அவர் குடியரசுத்தலைவர்). அதை உடைக்கும் வேலையை ஜயில்சிங் இந்திராவின் இரண்டாவது மகன் சஞ்சாய் காந்தியிடம் ஒப்படைத்தார். அவரால் (சஞ்சய் காந்தி) கண்டுபிடிக்கப் பட்டவரே பிந்தரன்வாலே.

இவரை அகாலித்தளத்தை உடைக்க காங்கிரசால் பயன்படுத்தப்பட்டார். ஆனால் காங்கிரசிற்கே எதிரியாகவும் பின்னாளில் ஆனார் பிந்தரன்வாலே. (அமெரிக்காவிற்கு எப்படி ஒசாமா பின்லேடன் ஆனாரோ அது போல) இந்த தகவல்கள் மாலைமலர் காலச்சுவடு என்ற வரலாற்றுத்தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று இந்திராவின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திராவின் படுகோலைக்காக பழிவாங்கும் முகமாக நடந்த அப்பாவி சீக்கியர்கள் 4000 பேர் படுகொலை, பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்கமிஷன்கள், (இது ஒரு கண்துடைப்பு என்றே கூறப்படுகிறது, 7 8 கமிசனுக்கு மேல் அமைக்கப்பட்டது, அதில் ஒன்று மிஸ்ரா கமிசன்) மற்றும் எப்படி? அந்த படுகொலைகள் நிறைவேற்றப்பட்டது? என்பது? பற்றி பிபிசியில் இந்து பத்திரிகை நிருபர் அளித்த ஒலிக்கோப்பை பிறகு எழுத்து வடிவமாக தனித்திரியாக பதிவிடுகிறேன். இது கூடுதல் தகவலுக்காக.
ஒலிக்கோப்புக்கு இங்கே சுட்டவும் பிபிசி தமிழோசை (http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/11/091103_indira25th.shtml)

ஆர் முத்துக்குமார் இந்திராவின் வாழ்க்கை வரலாறு-புத்தகத்தின் ஒரு பகுதி (http://india360degree.blogspot.com/2008/09/blog-post_17.html)

பொற்கோவிலில் ராணுவம் சுற்றி வளைப்பு மாலைமலர் காலச்சுவடுகள் தொடர் (http://www.maalaimalar.com/2009/02/16124052/histarical.html)

அக்னி
29-04-2010, 06:41 AM
நம்பி அவர்களே...

உங்களை அறிமுகம் செய்து கொள்க (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38)வில்
உங்களை அறிமுகம் செய்து கொண்டு, மன்றத்தோடு என்றும் இணைந்திருக்க,
அன்புடன் அழைக்கின்றேன்.