PDA

View Full Version : தற்சமயம் துவண்டு கிடக்கும் நடிகர் விஜய்க்காக சில யோசனைகள்..!பூமகள்
06-04-2009, 11:05 AM
முன் குறிப்பு:

இப்பதிவு எனக்கு மின்னஞ்சலில் கிட்டியது. நகைச்சுவையாக இருக்கவே இங்கு பதிக்கிறேன்.. இதில் வேறெதுவும் உள் கூத்து இல்லீங்கோ..!:icon_ush::icon_ush: :icon_rollout::icon_rollout:தற்சமயம் துவண்டு கிடக்கும் விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்.

யோசனை1:திருச்சி பிரஸ் மீட்டிங்கில் நான் கலந்து கொள்ளவே இல்லை. என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு நபரை வைத்து குறிப்பிட்ட சிலர்செய்த சதி இது. அதேபோல் வில்லு என்ற திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை, அதுவும் போலி தான் என அறிக்கை ஒன்றை விட்டால் ரசிகர்கள் உங்களை நம்பிவிடுவார்கள்.

யோசனை2:இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை ஒரு பிட்நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம் பார்க்கவருபவர்களுக்கு விநியோகிக்கலாம்.

யோசனை3:இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைக் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசாகார்” பரிசு என போட்டிவைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது.

யோசனை4:டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் போது கூடவே ஒரு சாரிடான் மாத்திரை, ஒரு பிரஸர் மாத்திரை மற்றும் ஒரு வாட்டர் பாக்கெட் சேர்த்து ஒரு பையில் போட்டு, 3டி படங்களுக்கு டிக்கெட்டுடன் கண்ணாடி கொடுப்பது போல கொடுக்கலாம்.

யோசனை5:திரையரங்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனித்தனியே கைடுகளை(Guide) நியமித்து ஒவ்வொரு சீன் முடிந்த பின்னும் அதில் என்ன வந்தது என்பதை படம் பார்ப்பவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம்.

யோசனை6:திரையரங்க வாயிலில் ஆம்புலண்சுடன் கூடிய மருத்துவக்குழுவை தயார்நிலையில் வைத்து படம் பார்த்து விட்டு வெளியே வரும் முதியவர்கள், இதய பலகீனமுள்ளவர்கள்ஆகியவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையளிக்கலாம். இப்படிசெய்தால் அவர்கள் இனி உங்கள் படத்திற்கு நம்பிவருவார்கள்.

யோசனை7:உங்கள் படங்களில் தற்போது காமெடி மிகக்குறைந்து, நீங்கள் சீரியஸாக பேசும் வசனங்கள் மற்றும் பஞ்ச்டைலாக்குகளுக்கு மக்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். அதனால் நல்ல காமெடி சீன் வைப்பது சிறந்தது.

யோசனை8:குறிப்பாக*நீங்கள் டாக்டர் பட்டம் வாங்கியதை காமெடி சீனாக படத்திலே வைத்தால் அதைப் பார்ப்பவர்கள் விழுந்து,விழுந்து சிரிப்பார்கள். அது மட்டுமின்றி சிறந்த காமெடிக்கான பிலிம்பேர் அவார்ட்டையும் அந்த சீனுக்கு வாங்கிவிடலாம்.

யோசனை9:டைட்டில் போடும் போது அதில் வரும் இளைய தளபதியை சிலர் தவறாக "இளைய தலைவலி" எனப் படித்து விடுகிறார்கள். எனவே வேறு பட்டத்திற்கு முயற்சி செய்யலாம். மசாலா புயல் பேரரசுவிடம் கன்சல்ட் செய்தால் அவர் நிச்சயம் ஐடியா கொடுப்பார்.

யோசனை10:குருவி,வில்லு போன்ற பேரடிகளைமறக்க கொஞ்ச நாளைக்கு வடிவேலு குரூப்பில் சேர்ந்து சிங்கமுத்து, முத்துக்காளைஆகியோரைப்போல காமெடிவேடங்களில் நடிக்கலாம். காமெடிக்காக நீங்கள் முயற்சி பண்ண வேண்டாம். நீங்கள்சாதாரணமாக நடித்தாலே மக்கள் சிரிப்பார்கள்.

யோசனை11:உங்களைக் காமெடி செய்து வீடியோ வெளியிடும் அஜீத் ரசிகர்களுக்கு பதிலடியாக நீங்கள் உடனே ஒரு சாஃப்ட்வேர் குழுவை அமைத்து பதிலுக்கு பதில் வீடியோவிடலாம். கவனமாக இருக்கவும் அந்தக் குழுவில் அஜீத் ரசிகர்கள் இருந்தால் உங்களைத் தாளித்து விடுவார்கள்.
பின்குறிப்பு: இனிமேல்எந்தமாதிரிபடங்களைரீமேக்செய்யலாம்:
மகேஷ்பாபு போன்றவர்களின் தெலுங்கு படங்களை ரீமேக் செய்தால்இனி போனியாகாது.
* எம்ஜியார்நடித்த“ரிக்ஷாக்காரன்” படத்தை "திரிஷாக்காரன்" என்ற பெயரில் ரீமேக் செய்யலாம். மெரினாபீச்சில் திரிஷாவோடு "கடலோரம் வாங்குனேன் காப்பு, வில்லுக்கு வச்சிட்டாய்ங்கே ஆப்பு" எனஅருமையான டூயட்போட்டு அசத்திவிடலாம்
* பழைய ராமராஜன்படங்களை ரீமேக் செய்து "எங்கஊரு எருமக்காரன்" என்றபெயரில் நடிக்கலாம்.

அறிவிப்பு:அன்புநெஞ்சங்களே! இது வெறும் காமெடிக்கான பதிவுதானன்றி யார் மீதும் காண்டு காட்டும் பதிவு அல்ல. தயவு செய்து இதை வெறும் காமெடியாக மட்டுமே எடுத்துக் கொண்டு சிரித்துவிட்டு விட்டுவிடவும்..

ஆதி
06-04-2009, 11:16 AM
//யோசனை2:இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை ஒரு பிட்நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம் பார்க்கவருபவர்களுக்கு விநியோகிக்கலாம்.

யோசனை3:இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைக் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசாகார்” பரிசு என போட்டிவைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது.
//

:D :D :D

பகிர்ந்தமைக்கு நன்றி..

அன்புரசிகன்
06-04-2009, 11:23 AM
off the record ல் வரும் மற்ற நடிக நடிகைகளின் கூத்துக்களையும் பந்தாக்களையும் பார்த்தால் ஒரு திரைப்படத்தினையும் பார்க்காது விடவேண்டிவரும்.......

தேல்விப்படங்களுக்காக வாருவது சரியல்ல. மற்றவர்கள் புண்பட வைத்து சிரிப்பது அழகுமல்ல...

விகடன்
06-04-2009, 01:39 PM
வில்லுப்படத்தாலும் அன்றைய பிரஸ் மீட்டிங்காலும் உடைந்துபோன விஜய் இதை மட்டும் படித்தால் வாழ்க்கை வெறுத்துப்போய்விடுவார்.

பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போலத்தான் இருக்கிறது. காமடி காமடி என்று சொல்லியே கொலை செய்துவிட்டார்கள் இந்த மின்னஞ்சலால்.

என்பக்க கருத்து இதுதாங்க. விஜய் என்பவர் நடிப்பு என்ற பிஷ்ணஸ் செய்தார். அதில் இந்த முறை கொஞ்சம் நஷ்டமடைந்துவிட்டார். அவ்வளவுதான். :)

xavier_raja
06-04-2009, 02:14 PM
விஜயை முன்னுக்கு கொண்டு வர அவர் தந்தை செய்த தகுடு தத்தங்கள் முடிந்தாயிற்று. திறமை இல்லாமல் இதனை காலம் இருந்ததே மிகபெரிது. நல்ல நடிகர்களுக்கு வாழ்கை கொடுங்கப்பா.. (இதுவும் எனக்கு அவர் பேரில் உள்ள காண்டால் சொன்னதல்ல.. பொதுவாக சொன்னேன்) :)

அன்புரசிகன்
06-04-2009, 03:39 PM
சினிமாவில் திறமையானவர்களின் பெயர்களை கொஞ்சம் பட்டியலிடுங்களேன் xavier_raja....????!!!!

அறிஞர்
07-04-2009, 03:27 PM
விஜயை முன்னுக்கு கொண்டு வர அவர் தந்தை செய்த தகுடு தத்தங்கள் முடிந்தாயிற்று. திறமை இல்லாமல் இதனை காலம் இருந்ததே மிகபெரிது. நல்ல நடிகர்களுக்கு வாழ்கை கொடுங்கப்பா.. (இதுவும் எனக்கு அவர் பேரில் உள்ள காண்டால் சொன்னதல்ல.. பொதுவாக சொன்னேன்) :)

சினிமாவில் திறமையானவர்களின் பெயர்களை கொஞ்சம் பட்டியலிடுங்களேன் xavier_raja....????!!!!

திரைக்கு வர அப்பா உதவினார் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் இவ்வளவு காலம் நீடிப்பது அப்பாவினால் அல்ல...
காதலுக்கு மரியாதைக்கு பிறகு ஓரளவு நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
சூர்யாவும் முதலில் நடிக்கவில்லை.. இப்ப நடிக்கிறார்.
விக்ரம் நல்ல நடிகர்...

மன்மதன்
07-04-2009, 03:49 PM
குருவி, வில்லு மாதிரி டைப் படத்தின் தோல்விகளுக்கு பதிலாக
ஒரு நல்ல படம் கொடுத்து ரிஸ்க் எடுக்கலாம்..!!

ஓவியா
07-04-2009, 03:49 PM
//தேல்விப்படங்களுக்காக வாருவது சரியல்ல. மற்றவர்கள் புண்பட வைத்து சிரிப்பது அழகுமல்ல...//

அன்பு இந்த கருத்தை நான் முற்றாக ஆதரிக்கிறேன், ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான். ஒரு மனுசன நிம்மதியா இருக்க விடமாட்டங்க இந்த வலைபதிவாளர்கள், ஏற்ற்கனவே நொந்திருக்கும் விஜய்க்கு இது இன்னும் வேதனையாக இருக்கும்.

என்னால் பதிவை ரசிக்க முடியவில்லை.

யாரோ எழுதியது அதனால் பூமகளை நான் குறைக்கூறவில்லை, எழுதியவருக்கு மட்டும் என் கண்டனம்.

ரங்கராஜன்
07-04-2009, 04:56 PM
சிரிக்க மட்டும்னு தலைப்பு போட்டு எனக்கும் மின்னஞ்சல் வந்தது, ஜாலியாக சிரித்து விட்டு அடுத்த மெயிலுக்கு போனேன், பூமகள் உங்களால் இன்னொரு முறை சிரித்து அடுத்த திரிக்கு போகப்போகிறேன்.....................வாழ்த்துக்கள் பூமகள்...... நன்றி

செல்வா
07-04-2009, 04:58 PM
ஏற்கனவே நொந்திருக்கும் விஜய்க்கு இது இன்னும் வேதனையாக இருக்கும்.

ஆமாங்க....
ஒரு காலத்தில வரிசையா உருப்படாத படங்களாவே நடிச்சிட்டு அப்புறமா ஏதோ கொஞ்சம் நல்ல நல்ல இயக்குனர்களால சில நல்ல படங்கள் நடிச்சு... அப்படியே அடிதடி ரகளை என்று மாறி இப்போ அரசியல் மற்றும் உச்ச நட்சத்திர மோகத்தால் தொடர்ந்து உதவாக்கரை படங்களா நடிச்சி தயரிப்பாளர்கள் முதல் சாதாரண இரசிகன் தலைவரை மிளகாய் அரைக்கிறவர் ரொம்ப தான் நொந்து போய் இருப்பாரு
அவர் நினைத்திருந்தால் ஆட்டோ கிராப் துவங்கி எத்தனையோ கதையம்சம் கொண்ட படங்கள் நடித்திருக்கலாம்.
தமிழ் நாட்டுல திரையில குடுக்கிற பில்டப்பெல்லாம் நிஜவாழ்க்கை கிடையாதுங்கிற மனநிலை வரத்துவங்கியாச்சு...
இன்னும் எம்.ஜி. இராமச்சந்திரன் கால கட்டத்திலேயே தமிழ் நாடு இருக்கிறதா நெனச்சிகிட்டு படம் நடிக்கிறவர என்ன சொல்றது.

ஓவியா
07-04-2009, 05:03 PM

:lachen001::lachen001:

அன்புரசிகன்
07-04-2009, 07:10 PM
திரைக்கு வர அப்பா உதவினார் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் இவ்வளவு காலம் நீடிப்பது அப்பாவினால் அல்ல...
காதலுக்கு மரியாதைக்கு பிறகு ஓரளவு நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
சூர்யாவும் முதலில் நடிக்கவில்லை.. இப்ப நடிக்கிறார்.
விக்ரம் நல்ல நடிகர்...
அதை தான் மனதில் நினைத்தது...

தொடர்ந்து தோல்விப்படங்களாக வெளியிட்ட விக்ரம் இன்று பிரகாசிக்கவில்லையா???

சிறந்த இயக்குனர்களை நம்பியிருக்கும் சூர்யா... தலை நிமிரமுடியாது துவண்ட தல... இப்படி எல்லோரும் எதற்கும் விதிவிலக்கல்ல...

காதலுக்கு மரியாதை கண்ணுக்குள் நிலவு துள்ளாத மனமும் துள்ளும் பிரியமானவளே பூவே உனக்காக போன்ற படங்களும் வெளிவந்ததை மறந்துவிட்டார்கள் போலும். இதற்கும் S.A.S ற்கும் என்ன சம்பந்தம். விஜய் இன் அப்பா என்ற ஒரு பந்தத்தினை தவிர..........................

நேசம்
08-04-2009, 05:51 AM
விஜய் ஒர் பேட்டியில் சொன்னதாக ஞாபகம்.அதில் தான் ரிஸ்க் எடுத்து நடிக்க விருப்பமில்லை.அது எனக்கு பொருந்தாது.அதனால் மக்கள் என்னிடம் இதை எதிர்ப்பார்க்கிறாங்களா அதற்கு ஏற்ப நடிப்பேன்.மக்கள் விஜயிடம் எதிர்ப்பர்ப்பது மசாலா படங்கள் தான். வில்லு குருவி படங்களில் எதோ சுவை குறைந்ததால் ஒடவில்லை. அப்பாவை வைத்து மட்டும் விஜய் வளரவில்லை.

விகடன்
08-04-2009, 05:59 AM
திரையுலகிற்கு வருவதற்கு தந்தையின் உதவி நூற்றுக்கு நூறு வீதமிருந்தது. அப்படி ஓர் உதவி இல்லாதிருந்திருந்தால் இன்று விஜய் என்றொரு சினிமா நடிகன் இருந்திருக்கமாட்டான். அதை மறைக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது.

ஆனால் திரையுலகில் நடிக்க வந்த ஒருவன் திறமையின்றி பிரகாசிக்கவும் முடியாது. திறமை இருப்பவர்களைத்தான் இரசிகர்கள் அங்கீகரிப்பார்கள். அந்தவகையில் இவ்வளவு காலமும் திரையுலகில் விஜய் இருக்கிறார் என்றால் அது அவரின் முயற்சியும் திறமையுமே அன்றி தந்தையின் அனுசரணை கிடையாது.

ஓவியன்
08-04-2009, 06:29 AM
சினிமா போன்ற பலரது பார்வையிலிருக்கும் துறைகளிலுள்ள ஒவ்வொருவரும் எத்தகைய விமர்சனங்களையும் எதிர்கொண்டேயாகவேண்டும்....

இதில் முன்னணி நடிகர்களான ரஜனி மற்றும் கமல் கூட விதி விலக்கல்லவே, ஆளவந்தான் மற்றும் குசேலன் படங்களைத் தொடர்ந்து வந்த விமர்சனங்கள் அதற்குச் சான்று. அதனால் இது போன்ற எதிர்மறையான நகைச்சுவைகளை இத்துறையில் இருப்பவர்கள் தம் தோல்விகளின் போது எதிர்கொண்டேயாகவேண்டும். அந்த எதிர்மறைப் பதிவுகளை வெற்றி கொள்ள வேண்டியது அவர்களது கையிலேயே தங்கியுள்ளது.

என்னைப் பொறுத்த வரை இரசிகர்கள் பற்றிய தனது எண்ணத்தினை திரு.விஜய் அவர்கள் மாற்றி கொள்ள வேண்டும்.

அதாவது இதனைத்தான் இரசிகர்கள் விரும்புவார்களென்ற அவரது எதிர்பார்பினை....

அத்துடன் உச்ச நட்சத்திரம் ஆகவேண்டுமென்பதெல்லாம் சரிதான், ஆனால் இப்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அதற்காக கொடுத்த விலைகளும் நடித்த வேடங்களும் எத்தனையென எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் இடத்துக்குப் போகவேண்டுமெனின் அவர் கொடுத்த விலைகளையும் கொடுக்க வேண்டியதுதானே வழமை. அதனை விடுத்து வெறும் அடி தடிப் படங்களை மட்டும் நம்பிப் பலனில்லை.

அத்துடன் நல்ல இயக்குனர்களையும் மதிக்கத் தொடங்க வேண்டும் இயக்குனர் கெளதம் மேனனிடம் சிவகாசி பட டிவிடியைக் கொடுத்து இதே போல எனக்கும் ஒரு கதை பண்ணுங்க என்று கேட்டது போன்ற எண்ணங்களையும் விட்டொழிக்க வேண்டும். ஏனென்றால் சினிமா என்பது கூட்டு முயற்சி ஒரு நடிகரால் மட்டும் கூட்டத்தினை திரையரங்குக்கு கொண்டு வந்திட முடியாது, இயக்குனர் அடங்கலாக எல்லோரது முயற்சிகளும் சீராக இருக்கும் நேரத்திலேயே திரையரங்குகளில் கூட்டம் கூடும்.

ஓவியன்
08-04-2009, 06:37 AM
காதலுக்கு மரியாதை கண்ணுக்குள் நிலவு துள்ளாத மனமும் துள்ளும் பிரியமானவளே பூவே உனக்காக போன்ற படங்களும் வெளிவந்ததை மறந்துவிட்டார்கள் போலும். இதற்கும் S.A.S ற்கும் என்ன சம்பந்தம். விஜய் இன் அப்பா என்ற ஒரு பந்தத்தினை தவிர..........................

அன்பு, நீங்கள் குறிப்பிட்ட விஜயின் அத்தனை படங்களும் தமிழ் சினிமாவின் மொழியில் கூறினால் ‘கிளாஸ்' படங்கள். ஆனால் இப்போது விஜய் ஓடி, ஓடி நடிக்கும் அத்தனை படங்களும் ‘மாஸ்' படங்கள்.

இந்த 'கிளாஸ்', 'மாஸ்' ஆக மாறிய பின்ணனி கூட தன் மகனை சூப்பர்ஸ்டாராக்கி வருங்கால அரசியலின் மையப்புள்ளியாக்கும் S.A.S இன் முயற்சிதான் என்பதே பலரது கருத்து...

மக்கள் விஜயிடம் எதிர்பார்ப்பதும் அதுதான் ‘மாஸ்' மட்டும் வேண்டாம், 'கிளாசும் வேண்டுமென்பதே....

இப்போதைய விஜயின் பின்னடைவுக்கும் இந்த 'மாஸ்' மோகமே காரணம்...

அன்புரசிகன்
08-04-2009, 06:59 AM

ஐயா நான் சொன்னது வில்லு நல்லபடம் என்றல்ல. தந்தையின் தயவால் தான் பிரகாசித்தார் என்ற கூற்றைத்தான் விமர்சித்தேன். மற்றப்படி அது அவரது தொழில் எது செய்தாலும் பாதிக்கப்படப்போவது அவரது வருமானம் தான். வேறேதுமல்ல...
திரைப்படத்தினை திரைப்படமாக பார்க்கப்படவேண்டும். கௌதம் பற்றி ஏதோ சொல்கிறீர்கள். இருக்கலாம். ஆனால் மற்றவர்களுடைய இமேஜை குறைக்கவே ஏராளம் கட்டுக்கதைகள் வருவது வழமை....

கிளாஸ' மாஸ் அவரவரது எடுகோள்கள். படம் பார்ப்பவர்களுக்கு அது புரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். அதற்காக அரசியலால் ஓடியது என்பதெல்லாம் சப்பைக்கட்டு.

பலரது கருத்தென்பது யார் யார்??? யார் அந்த பலர்??? அந்த பலரால் படத்தினை ஒதுக்கமுடிந்ததா??? திரையரங்கில் ஒருவரை வைத்து ஒரு மாதம் ஓட்டினார்களா என்ன???

நேசம்
08-04-2009, 07:02 AM
நான் நினைப்பது மக்கள் அதாவது அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது அவரிடம் மாஸ் படங்கள்.அதை இயக்குநர்கள் கொடுக்கும் விதத்தில் வெற்றி தோல்வி இருப்பதாக் நினைக்கிறென்.ஏனென்றால் சிவாகாசி,போக்கிரி படங்கள் நன்றாக ஒடியது இல்லையா..

ஓவியன்
08-04-2009, 07:07 AM
கௌதம் பற்றி ஏதோ சொல்கிறீர்கள். இருக்கலாம். ஆனால் மற்றவர்களுடைய இமேஜை குறைக்கவே ஏராளம் கட்டுக்கதைகள் வருவது வழமை....

அந்தத் தகவல் இயக்குனர் கெளதம் மேனனால் ஒரு பேட்டியில் கூறப்பட்டது, அதனை விஜயும் எங்கேயும் மறுக்கவில்லை மாறாக அதனை தன் வெற்றியாக இயக்குனர் பேரரசு இன்னொரு பேட்டியில் கூறிப் பெருமைப்பட்டார்...!! :lachen001:

அன்புரசிகன்
08-04-2009, 07:27 AM
நான் சொல்ல வந்ததை நீங்கள் புரியவில்லை ஓவியன். இதற்கு மேல் என்னால் முடியாது. :(

ஓவியன்
08-04-2009, 07:41 AM
நான் சொல்ல வந்ததை நீங்கள் புரியவில்லை ஓவியன். இதற்கு மேல் என்னால் முடியாது. :(

இல்லை அன்பு, நான் கூறிய அந்த தகவல் கட்டுக் கதை இல்லையென்பதற்காகவே மேற்படி பதிவினை நான் பதிவிட்டேன். மற்றும்படி விஜய் தந்தை துணையுடன் மட்டுமல்ல தன் திறமையாலேயே முன் வந்தவரென்ற உங்கள் கருத்து ஏற்புடையதே....

அமரன்
08-04-2009, 07:55 AM
நல்ல ஐடியாக்கள்தான் - தமாசுக்கு.

தகப்பன் இல்லாமல் மகனில்லை என்பது ஆணித்தரமான உண்மை.

விகடன்
08-04-2009, 01:50 PM
அன்பையும் ஓவியனையும் விஜய் சண்டைபிடிக்க விட்டுவிட்டார். விஜய் கில்லாடிதான்.
நல்ல வேளை ரத்மலானையில் இருவரும் இல்லை :D

அன்புரசிகன்
08-04-2009, 02:51 PM
நல்ல ஐடியாக்கள்தான் - தமாசுக்கு.

தகப்பன் இல்லாமல் மகனில்லை என்பது ஆணித்தரமான உண்மை.
இன்னொரு உண்மை. எப்போதும் தகப்பன் பெயர் சொல்ல நிச்சயம் ஒரு ஆண் மகன் தேவை...................... :lachen001:

அன்புரசிகன்
08-04-2009, 02:52 PM
அன்பையும் ஓவியனையும் விஜய் சண்டைபிடிக்க விட்டுவிட்டார். விஜய் கில்லாடிதான்.
நல்ல வேளை ரத்மலானையில் இருவரும் இல்லை :D
பார்ரா................

இன்பா
09-04-2009, 06:07 AM
நல்ல சிரிப்பு,

இந்த பதிவை நடிகர் விஜய் பார்க்க நேர்ந்தால், துக்கப் படுவார் என்பது உண்மை, பிரச்சனை ஒன்றும் இல்லை, துக்கத்துக்கு இறைவன் மிகப்பெரிய சக்தி கொடுத்திருக்கிறான், வலிமை, பக்குவம், சிந்தனை போன்ற நல்ல விசயங்களை கற்று கொடுக்கும், உத்வேகம் பிறக்கும்...

ஆகவே இந்த பதிவை அவர் காண்பது அவருக்கு நல்லதே..!

பா.ராஜேஷ்
09-04-2009, 07:39 AM
எத்தனையோ திறமை வாய்ந்த இளம் இயக்குனர்களை கண்டு அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் பிற மொழி படங்களை காப்பி அடிக்கும் போக்கை மாற்றினாலே அவருக்கு வெற்றிதான்.

nandabalan
11-04-2009, 02:55 AM
எனக்கும் விஜய் நடிப்பை கண்டால் சிரிப்பை தவிர வேறு எதுவும் வராது. ஒரே மாவு.