PDA

View Full Version : பிறந்தநாள்



நம்பிகோபாலன்
06-04-2009, 05:41 AM
எனக்கே நினைவில்லாத
என் பிறந்தநாள்
காலையில் தொடங்கிய
நமது பயணம்
முதலாக
கோவில்
எனக்காக கடவுளுக்கு
என் பெயரில் செய்த
அர்ச்சனை
அன்னதானம்
அங்கிருந்து
அனாதை ஆஷ்ரம்
குழந்தைகளுடன் விளையாட்டு
பிறகு
உணவு விடுதி
எனக்காக
எனக்கு பிடித்தவையே
நீ சொல்ல
இனிமையான பொழுது…
நீ இருந்த
ஒவ்வொரு பொழுதும்
வாழ்ந்திருக்கிறேன்…
மதிய வேளை
சினிமா
மாலை பொழுது
கடலோர அலையுடன்
உன் வாழ்த்தும்
நீ
எனக்காக அதுவரை
மறைத்து வைத்த
கடிகார பரிசும்
ஆகா…….
பிரியும் நேரம்
நம் இருவரின்
விழிகள் பேசிய
மெளனம்
என்றும் சொல்லும்
நம் காதலை…

கோவில்
அனாதை ஆஷ்ரம்
உணவு விடுதி
சினிமா
கடலோர அலைகள்
உன் கடிகாரம்
என்னை போல
இனிதே
காத்திருந்தது
இந்த வருடம்
நீ
வராமல் போன
என் பிறந்த நாள்.....

பரஞ்சோதி
06-04-2009, 06:28 AM
பிறந்த நாள் சோக நாளாகியது வேதனை தான்.

ஆனாலும், ஒருவருக்காக இத்தனை பேர் காத்திருப்பது சரியல்ல.