PDA

View Full Version : என் செல்லமே!



இன்பக்கவி
05-04-2009, 08:25 AM
தினமும்
கனவில்
உன்னோடு
தான் வாழ்கிறேன்....

என்னை பாடாய்
படுத்துகிறாய்....
நீ.....

உன்னை
கொஞ்சி கொஞ்சி
மகிழ்கிறேன்....

உன்
இனிய பேச்சால்
என் அகம்

மகிழ வைக்கிறாய்......
உன்
செல்ல முத்தம்
தேனாய் இனிக்கிறது....

இப்படியே
இறந்து விடவா
என் செல்லமே!!!!

கனவிலாவது
உன் தாயாக...
இருக்க முடிகிறதே!!!!!

உன்னை
பத்து மாதம்
சுமக்க ஆசை
தான் எனக்கு.....

உன்
பிஞ்சு கால்
என்னை உதைக்கும்
அந்த ஒரு நொடி
போதும் செல்லம்

இந்த மலடி
பட்ட காயத்திற்கு
பெரிய மருந்து....

உன்னால்
நான் மயக்கம்
அடைவது எப்போது....

உன் வருகைக்காய்
நான் தேதி
கிழிப்பது எப்போது?????

உனக்காய்
ஆயிரம் பெயர்கள்...
தயாராக.... இருக்கு.....

நான்
தாயாகும்
நாள் எப்போது........

என் துயர
தீயை
உன் எச்சினால்
துடைத்திடு....

என் வாழ்வை
முழுமையாக்க
என் செல்லமே!
சீக்கிரம்
என் கருவில்
வந்திடு.....

பாரதி
05-04-2009, 03:30 PM
தாய்மையின் ஏக்கத்தை தளிர்தமிழ் வார்த்தைகளால் கொடுத்த விதம் நன்று.

உங்களுக்கு இனிய பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகட்டும்.

பா.ராஜேஷ்
06-04-2009, 04:57 AM
அருமை. தாய்மையின் ஏக்கம் அழகாக புரியும் படி எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள்!

அமரன்
06-04-2009, 07:23 AM
தாய்மை ஏங்குகிறது..
மனவறை ஏறிய
கனதிகளை தாங்கமாட்டாமல்
கருவறையில் தாங்க
தாய்மை ஏங்குகிறது.

கவிதை நெஞ்சைத் தொடுகிறது.

மலடி என்று சொல்பவர்கள்
சொற்களை பிசரவிப்பதில் மலடிகள்!

இன்பக்கவி
07-04-2009, 04:00 PM
தாய்மை ஏங்குகிறது..
மனவறை ஏறிய
கனதிகளை தாங்கமாட்டாமல்
கருவறையில் தாங்க
தாய்மை ஏங்குகிறது.

கவிதை நெஞ்சைத் தொடுகிறது.

மலடி என்று சொல்பவர்கள்
சொற்களை பிசரவிப்பதில் மலடிகள்!


மிக்க நன்றிகள்