PDA

View Full Version : கணிணி வெடித்து மென்பொருள் வல்லுனர் மரணம்மன்மதன்
04-04-2009, 01:06 PM
சென்னை வேளச்சேரியில் வித்தியாச முறையில் மென்பொருள்
வல்லுனர் உயிரிழந்தார்.

கணிணி வெடித்த நிலையில் இருக்க, கணிணி முன் அமர்ந்த நிலையில்
இவர் உயிரிழந்திருக்கிறார். இவரின் அறை தோழர் குளித்து
கொண்டிருக்கும் போது, கணிணி வெடித்த சத்தம் கேட்டு வந்து பார்த்த
பொழுது இந்த நிலையில் அவரின் நண்பர் இருந்திருக்க, காவல்
துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இதுவரை இது மாதிரியான நிகழ்வு நடந்ததில்லை என குறிப்பிடதக்கது.

செய்தி (http://timesofindia.indiatimes.com/Cities/Chennai-techie-dies-in-computer-blast/articleshow/4357502.cms)

தூயவன்
04-04-2009, 04:24 PM
ஆஹா உசாரை இருடா கைபுள்ளை.. ரொம்ப நேரமாய் நீயும் பக்கத்தில இருகாய்

praveen
05-04-2009, 06:57 AM
நானறிந்த வகையிலே, கம்ப்யூட்டர் வெடிக்க சான்ஸே இல்லை, கம்ப்யூட்டருக்கு உள்ளே அமைந்த SMPS ல் உள்ள பவர் கெப்பாசிட்டர்கள் மட்டுமே வெடிக்க கூடியவை, அதுவும் மூடிய SMPS க்குள் தான் வெடிக்கும், சத்தம் கேட்குமே தவிர வேறு எதுவும் உபயோகிப்பவருக்கு தீங்கு ஏற்படுத்தாது, இவர் சத்தம் கேட்ட அதிர்சியில் மாரடைப்பு(வயது குறைந்தவர் என்பதால் அதற்கும் சான்ஸ் இல்லை) ஏற்பட்டிக்கிறலாம்.

அந்த ரூம்-மேட்டை பிடித்து துருவி துருவி விசாரித்தால் உண்மை தெரியவரும்.

செல்போன் வெடித்திருக்கிறது, ஏன் லேப்டாப் கூட வெடித்திருக்கிறது, காரணம் அதிக அளவு அதன் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டதாலே இது நிகழ்திருக்கிறதே அன்றி, இம்மாதிரி கம்ப்யூட்டர் உபயோகிக்கும் போது வெடித்ததாக செய்தி கேள்விப்பட்டதில்லை.

ரேடியோ வெடிகுண்டு போல கம்ப்யூட்டர் வெடிகுண்டாக இருக்கலாம். முழு விசாரணை நடந்த பின் உண்மைகள் வெளிவரும்.

விகடன்
05-04-2009, 07:05 AM
நேற்றைய தினம் இதைப் படித்ததும் நானும் குழம்பிவிட்டேன் பிரவீன்.
கணினியில் சீ.ஆர் ரீ வகை கணினித்திரை வைத்திருந்தாலாவது அதில் கதோட்டுக் குழாயின் திழில் நுட்பத்திற்காக பெரிய அளவில் மின்னழுத்தத்தை வழங்க கொள்ளளவிகள் உள்ளன. அது வெடித்தாலும் புகைதான் பெருமளவில் வெளிவரும். இல்லை, கதோட்டு தொழில் நுட்பத்திற்காக வடிவமைக்கப்பட்டிருக்கு டியூப் வெடித்தால் பாதிப்பிற்கு சந்தர்ப்பமுள்ளது. ஆனால் உயிரை மாய்க்குமளவிற்கு எப்படி???

leomohan
05-04-2009, 09:10 AM
சென்னை வேளச்சேரியில் வித்தியாச முறையில் மென்பொருள்
வல்லுனர் உயிரிழந்தார்.

கணிணி வெடித்த நிலையில் இருக்க, கணிணி முன் அமர்ந்த நிலையில்
இவர் உயிரிழந்திருக்கிறார். இவரின் அறை தோழர் குளித்து
கொண்டிருக்கும் போது, கணிணி வெடித்த சத்தம் கேட்டு வந்து பார்த்த
பொழுது இந்த நிலையில் அவரின் நண்பர் இருந்திருக்க, காவல்
துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இதுவரை இது மாதிரியான நிகழ்வு நடந்ததில்லை என குறிப்பிடதக்கது.

செய்தி (http://timesofindia.indiatimes.com/Cities/Chennai-techie-dies-in-computer-blast/articleshow/4357502.cms)

ஐயோ ஏம்பா இந்த மாதிரி செய்தியை போட்டு பீதி கிளப்பறீங்கள். ஒரு நாள் முழுக்க இந்த டப்பாவோடு வேலை செஞ்சாத்தானே எங்களுக்கு சோறே.

பா.ராஜேஷ்
05-04-2009, 09:10 AM
இவ்வாறு நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தோன்றவில்லை. இந்த செய்தி மிகை படுத்தப்பட்ட செய்தி போல்தான் தோன்றுகிறது.

பரஞ்சோதி
05-04-2009, 09:21 AM
என்ன நடந்திருக்குமுன்னு புரியலை.

கணினி வெடிக்கும் வாய்ப்புகள் குறைவு, அதிர்ச்சியில் மரணமடைய அவரது வயது நம்ப மறுக்கிறது.

என்னமோ போங்க, இனிமேல் நாலு அடி தள்ளி நின்னு தான் தட்டச்சு செய்யணும். இரவில் சீக்கிரமாக இழுத்து மூடணும்.

anna
05-04-2009, 10:01 AM
கண்டிப்பாக சான்ஸே இல்லை. சி.ஆர்.டி வகை மானிட்டர் வெடித்தால் கூட புகை தான் வருமே தவிர பயன்படுத்துவருக்கு எந்த பாதிப்பும் வராது. டவர் வெடிக்க வாய்ப்பே இல்லை.அப்படியெ நடந்தாலும் ஏதாவதி ஐ.சி தான் வெடிக்கும். அதுவும் உள்ளுக்குள்ளே தான் வெடிக்கும். ஆனால் உயிரை குடிக்காது. அது என்ன மனித வெடிகுண்டு மாதிரி கம்யூட்டர் வெடிகுண்டா? ஏதோ இந்த நண்பர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு இருக்கும். விபரீதம் ஏற்பட்டு இருக்கும். ஏதோ நாம எல்லாம் இந்த லைன்ல இருக்கிறதால நம்மகிட்ட கதை விட முடியாது அப்பு.

சூரியன்
05-04-2009, 11:07 AM
புது செய்தியா இருக்கு.
இதுக்கு முன்னாடி இந்த மாதிரி கேள்விப்பட்டதே இல்லை.

நேசம்
05-04-2009, 12:32 PM
கணீனி வெடித்து மரணம் என்று படித்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது.ஆனால் விவரமம் அறிந்தவர்கள் சொன்னதை கேட்டுதான் நிம்மதியாக இருந்தது.

ரங்கராஜன்
05-04-2009, 01:32 PM
எப்படி இறந்து இருந்தாலும், பாவம் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

கொஞ்ச நாளுக்கு முன் die hard 4 படம் வந்தது, அந்த படத்தில் முதல் பகுதியில் வில்லன்கள் ஒரு computer hacker ஐ சாட் செய்துக் கொண்டு இருக்கும் பொழுதே, command லே வைரஸை ஏற்றி அவனுடைய கணிணியை வெடிக்க செய்து விடுவார்கள். எனக்கு அந்த காட்சியை பார்த்ததில் இருந்து இது எப்படி சாத்தியமாகும், என்ற சந்தேகம் மட்டையை போட்டு குழப்பியது. எனக்கு தெரிந்த கணிணி வல்லுனரிடம் இந்த விஷயத்தை பற்றி கேட்டதற்கு. இது போல சாத்தியகூறு இல்லவே இல்லை என்று அடித்து கூறினார். முன்னதாகவே கணிணியில் வெடிக்கும் பாம்களை வைத்து விட்டு வேண்டுமானால் அதை command ல் வெடிக்க செய்ய முடியுமே தவிர, சாதாரணமாக ஒரு கணிணி வெடிக்க வாய்ப்பே இல்லை என்றார். அப்படி மீறி சர்க்யூட் வெடித்தாலும் புகை வரும் அவ்வளவு தான்........................ பிரவீன் சொன்னது போல எனக்கும் ரூம் மேட் மீது தான் சந்தேகம்.

மன்மதன்
07-04-2009, 02:37 PM
எப்படி இறந்து இருந்தாலும், பாவம் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

கொஞ்ச நாளுக்கு முன் die hard 4 படம் வந்தது, .


Final Destination என்ற படத்திலும் மானிட்டரில் தண்ணீர் புகுந்து வெடிப்பது மாதிரி காட்டியிருப்பார்கள்..

அறிஞர்
07-04-2009, 03:02 PM
ஆதாரமான செய்தியை பார்த்தால் உண்மையாக தான் தெரிகிறது. ஆராய்ச்சி செய்து விட்டு என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்.

ரங்கராஜன்
07-04-2009, 04:01 PM
Final Destination என்ற படத்திலும் மானிட்டரில் தண்ணீர் புகுந்து வெடிப்பது மாதிரி காட்டியிருப்பார்கள்..

ஆமாம் மன்மதன் அண்ணா, அதை சொல்ல மறந்துவிட்டேன், FD முதல் பாகத்தில் அந்த ஆசிரியர் வீட்டில், அவர் குடிக்கும் கப்பில் இருந்து விழுந்து கணிணி வெடித்து அந்த cathode ray tubeன் கண்ணாடி உடைந்து அவர் கழுத்தில் குத்துமே அந்த சீன் தானே அண்ணா....................... அப்பா அந்த படம் பார்த்து விட்டு தரையில் நடக்கவே பயமாக இருந்தது.

xavier_raja
08-04-2009, 04:33 AM
இது மட்டும் உண்மை என்று நிருபிக்கபட்டால் நிச்சியம் கணினி முன் வேலை செய்பவர்கள் மத்தியில் ஓர் இனம் புரியாத பீதி கிளம்பும் என்பதில் ஐயமில்லை. இதற்கான சாத்திய கூறுகள் மிகமிக குறைவு என்றாலும்.. தீவிர விசாரணைக்கு பிறகுதான் உண்மை என்னவென்று தெரியவரும்.

இன்பா
08-04-2009, 04:55 AM
ப்ராசசர் ஹீட் ஷிங்க் ஃபேன் சரியாக இல்லை என்றால் கூட வெடிக்க சான்ஸ் இருக்கிறதாமே?

ஆனால் ப்ராசசர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சூடேறினால் கணினி சொல்லாமல்கொள்ளாமல் ஆஃப் ஆகிவிடுமாம். ஒரே குழப்பமாக இருக்கிறது.

praveen
08-04-2009, 05:29 AM
இது மட்டும் உண்மை என்று நிருபிக்கபட்டால் நிச்சியம் கணினி முன் வேலை செய்பவர்கள் மத்தியில் ஓர் இனம் புரியாத பீதி கிளம்பும் என்பதில் ஐயமில்லை.

அநியாயத்திற்கு பீதியை கிளப்புகிறார்களே, சரி திரியை மாற்றி பார்ப்போம்

கணிணி வெடித்து மென்பொருள் வல்லுனர் மரணம் என்பதன் மூலம் அவர் ஏதோ சிக்கலான மென் தொடரை தப்பும் தவறுமாக இயக்கி அதனால் கணினி டென்சனாகி இவனுக்கு வேலை செய்வதற்கு உயிரை விடலாம் என்று தற்கொலை செய்திருக்கிறது, போகும் போது வேறு கணினிக்கும் பாதிப்பு இருக்க கூடாது என்று அவரையும் அழைத்து சென்றிருக்கிறது.

எனவே (ஓவியன் மாதிரி) மென்பொருள் வல்லுநர்களே, சிக்கலான நிரல்களை கொடுத்து கம்ப்யூட்டரை வெடிக்க செய்யாதீர்கள் :).

aren
08-04-2009, 05:38 AM
கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கனும் போலிருக்கு