PDA

View Full Version : ஏனிந்த நிலை.........



இன்பக்கவி
03-04-2009, 04:48 PM
திருமணம் தடையான
பெண்களுக்கு
"அதிர்ஷ்டம்"
இல்லாதவள்

திருமணம் ஆகாத
வயது போன
பெண்களுக்கு
"முதிர்க்கன்னி"

கணவனை பிரிந்து
வாழும் பெண்களுக்கு
"வாழாவெட்டி"....

குழந்தைபேறு
இல்லா பெண்களுக்கு
"மலடி"....

கணவனை இழந்த
பெண்களுக்கு
"கைம்பெண்"....(விதவை)

இதுதான் பெண்கள்
நிலை.....

இத்தனை குறையும்
உள்ள
ஆண்களுக்கு
என்ன
பெயர்......??????????

அமரன்
06-04-2009, 07:41 AM
உங்கள் கவிதையில் ஒவ்வொரு வகையினரையும் குறிப்பிடும் போது பெண்களைப் பயன்படுத்துவதை எப்படித் தவிர்க்க இயலவில்லையோ அப்படித்தான் இத்தனை வகை உள்ளவர்களை ஆண்கள் என்று சொல்வதைத் தவிர்க்க இயலவில்லை.

பல ஊர்களில் இந்த ரக ஆண்களை பெண் பாவம் செய்தவர்கள், பெண் சாபம் பெற்றவர்கள் என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

இதைவிடக் கொடுமை அவர்களுக்கு என்ன தேவை.

எல்லாருக்கும் பிரச்சினைகள் உண்டு. பிரமுகர்களின் பிரச்சினைகள் அதிகமாக வெளிப்பட்டு விடுகின்றன. பெண்கள் சமூகத்தில் முக்கிய பிரமுகர்கள்.

தினமொரு கவிதை என்று விளிக்கலாம் போலுள்ளது உங்கள் சேவையை.

பாராட்டுகள் கவிதா அவர்களே!

விகடன்
06-04-2009, 07:58 AM
இத்தனை குறைகளும் ஒன்று சேர்ந்த பெண்ணின் பெயரைச் சொல்லுங்கள் ஆணின் பெயரை சொல்கிறேன்.

விகடன்
06-04-2009, 08:01 AM
தனித்தனியே வேண்டுமாகில்...


"அதிர்ஷ்டம்" இல்லாதவள் - அதிஷ்டம் இல்லாதவன்
"மலடி"- மலடன்
"கைம்பெண்"....(விதவை) - தபுதாரன்

வாழாவெட்டி என்பது பொதுச் சொல். இது ஆணிற்கும் பொருந்தும்...

எஞ்சிய ஒன்றிற்கு தெரியவில்லை. வருவார்கள் உங்கள் கேள்விக்கு பதிலுரைக்க...

நேசம்
06-04-2009, 08:55 AM
இத்தைகைய குறை உள்ள ஆண்களை இந்த சமுகம் விமர்சிக்க தான்
செய்கிறது.பேச்சு வழக்கில் ஒவ்வொரு ஊருக்கு வேறுப்படுகிறது.அவ்வளவுதான் .விராடன் சொல்வது மன்ற உறவுகள் வந்து பதில் சொல்வார்கள்

ஆதி
06-04-2009, 08:56 AM
பெண்களை போல் ஆண்களுக்கும் இம்மாதிரியான பெயர்கள் உண்டு, ஆனால் ஆதிக்க இனம் என்பதால் அவ்வகை பெயர்கள் வழக்கொழிந்து போய்விட்டன..

//
இத்தனை குறையும்
உள்ள
ஆண்களுக்கு
என்ன
பெயர்......??????????//

வாழும்வெட்டிகள் :)


நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் - பாரதி


இவ்வகை பெயர்களால் பெண்களை சுட்டுவது இக்காலத்தில் வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன..

வாழ்த்துக்கள் கவிதா123..

samuthraselvam
06-04-2009, 09:40 AM
பெண்களை போல் ஆண்களுக்கும் இம்மாதிரியான பெயர்கள் உண்டு, ஆனால் ஆதிக்க இனம் என்பதால் அவ்வகை பெயர்கள் வழக்கொழிந்து போய்விட்டன..

//
இத்தனை குறையும்
உள்ள
ஆண்களுக்கு
என்ன
பெயர்......??????????//

வாழும்வெட்டிகள் :)


நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் - பாரதி


இவ்வகை பெயர்களால் பெண்களை சுட்டுவது இக்காலத்தில் வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன..

வாழ்த்துக்கள் கவிதா123..

அக்னி அண்ணா சொல்ல்வதுதான் மிகச் சரி...!

பாராட்டுக்கள் கவி... தங்களின் கவிதை ஏன் எப்போதும் ஒரு வலியுடனே இருக்கிறது?

நேசம்
06-04-2009, 12:17 PM
அக்னி அண்ணா சொல்ல்வதுதான் மிகச் சரி...!

இதில் எங்கே வந்தார் அக்னி அண்ணா.புரியமால் கேட்கிறென் சகோதரி.மத்தபடி தாமரை விளக்கேணனெய் எல்லாம் பயன்படுத்தவில்லை.

இன்பக்கவி
07-04-2009, 03:58 PM
அக்னி அண்ணா சொல்ல்வதுதான் மிகச் சரி...!

பாராட்டுக்கள் கவி... தங்களின் கவிதை ஏன் எப்போதும் ஒரு வலியுடனே இருக்கிறது?


வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை......

ஓவியா
07-04-2009, 04:39 PM
நல்ல கவிதை கவிதா, உணச்சிப்பூர்வமான கவிதை.

யோசித்து பார்த்தால் ஆண்களுக்கு இதுபோல் பெயர்கள் நடைமுறையில் இல்லைதான். சொற்க்கள் இருக்கலாம் ஆனால் அதை பயன்படுத்தி அவர்களை காயப்படுத்துவதுதான் கொடுமை.


முன்பு மன்றத்தில் ஒரு கவிதா இருந்தார் இப்பொழுது மன்ற ஆலோசகர் பட்டியலில் இருக்கிறார் அவர் கவிதையை ஆராய்வதில் வள்ளவர், நீங்கள் எழுதுவதில் வள்ளவராக திகழ வாழ்த்துக்கள்.

பா.ராஜேஷ்
08-04-2009, 06:26 AM
படிப்பறிவில்லா சமுதாயத்தின் பேச்சுகள் படித்தவர்களிடம் குறைவு. பண்பாடு வளர வளர இவை அனைத்தும் கூட மாறி விடும். பாராட்டுக்கள் கவி(தா) ..