PDA

View Full Version : மிகச் சிறந்த மனிதர் மன்மோகன் சிங்



அறிஞர்
03-04-2009, 01:23 PM
மிகச் சிறந்த மனிதர் மன்மோகன் சிங்
ஒபாமா புகழாரம்

லண்டன், ஏப்.3-
ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை முதல் முறையாக சந்தித்து பேசினார். உலக பொருளாதாரம், தீவிரவாதத்தை ஒழிப்பது, தட்பவெப்ப நிலை மாற்றம் போன்றவை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு பின் பேட்டியளித்த ஒபாமா கூறியதாவது:
மன்மோகன் சிங் அறிவாளி, மிகச் சிறந்த மனிதர், பிரதமர் பதவி வகிக்கும் பொருளாதார நிபுணர். பிரதமர் ஆவதற்கு முன்பே இந்தியாவை பொருளாதா முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்திச் சென்றுள்ளார். இது வியப்பை அளிக்கிறது. இந்திய பொருளாதார தாராளமயத்துக்கு மன்மோகன் சிங் காட்டிய வழிமுறைகளை, உலக நாடுகளுக்கு மேற்கோள் காட்டலாம் என நினைக்கிறேன்.

அமரன்
03-04-2009, 03:04 PM
ஒபேமாவின் இந்தக் கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. இத்தைகைய இத்தகைய மன்மோஹன்சிங்கால் இந்தியா இன்னும் பல வளர்ச்சிப் படிகளை கடக்கும்.

பரஞ்சோதி
03-04-2009, 06:48 PM
ஹி ஹி
இது ஒபாமாவின் கருத்து. அப்படி தானே இருக்கும்.

அமெரிக்காவின் கைப்பாவையாக மன்மோகன் சிறப்பாக செயல்படுகிறார்.

இந்தியாவுக்காக இவர் என்ன செய்தார் என்று எனக்கு புரியலை.

xavier_raja
04-04-2009, 05:39 AM
புஷ் ஐஸ் வச்சது பத்தாது, இப்போ ஒபாமா வேறயா.. மன்மோகன் சிங் அறிவாளி என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அதை அவர் சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்பதே... அவரை சுதந்திரமாக செயல்பட விட்டால் நன்றாக இருக்கும், இப்போதைக்கு அவர் சோனியாவின் கைப்பாவை.

இன்பா
04-04-2009, 05:47 AM
மன்மோகன் சிங் திறமையானவர், சிறந்த பொருளாதார வல்லுனர்.

ஆனால் சோனியா காந்தியின் கைப்பாவையக இருப்பதினால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் தானோ என்னவோ ஐகே குஜ்ரால், தேவேகவுடா வரிசையில் நினைக்கத் தோன்றுகிறது :)

அடுத்த முறை காங் வெற்றி பெற்றால்(ஆனால் வெற்றி பெறக்கூடாது என்று சாபமிடுகிரேன்) பெருமைக்குறிய சோனியா காந்தி அவர்கள் மன்மோக சிங்-கை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். ஆனால் அது நடுக்காது.

tkpraj
04-04-2009, 05:55 AM
ஒரு பொருளாதார நிபுணராக மன்மோகன் சிறந்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை
ஆனால் நம் பிரதமராக அவர் சிறப்பாக செயல்பட்டாரா என்பது சோனியாவுக்கே வெளிச்சம்.

ஆதி
06-04-2009, 10:10 AM
இதில் சோனியாவை உள்ளிழுக்க என்ன விடயமிருக்கு..

நல்லா ஒன்றை சோசிக்கனும்.. சோனியா நம்மூர்காரர் இல்லை, அவருடைய சிந்தனையும் செயலும் வேறுவிதமா இருக்கும், முக்கியமா பணம் சேர்க்கும் நினைப்பு, செருக்கு, இன்னும் இன்னும் நம்ம அரசியல்காரங்க கிட்ட இருக்கும் பல குணம் அவர்கிட்ட இருக்க வாய்ப்பே இல்ல..

அவர் ஒரு முறை ஆட்சிக்கு வரனும், அவரை சுயசுகந்திரத்துடன் நம்மவர்கள் ஆட்சி செய்யவிடனும், அப்ப இந்தியா முன்னேறும்..

நேசம்
06-04-2009, 12:22 PM
:)

அடுத்த முறை காங் வெற்றி பெற்றால்(ஆனால் வெற்றி பெறக்கூடாது என்று சாபமிடுகிரேன்) பெருமைக்குறிய சோனியா காந்தி அவர்கள் மன்மோக சிங்-கை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். ஆனால் அது நடுக்காது.

யாரும் வ*ந்தாலும் ஒண்ணூம் ஆகாது வ*ரிப்புலி.ம*ன்மோக*ன் சிங் எப்பொழுதுமே அமெரிக்காவின் ஆத*ர*வாள*ர்.அத*னால் சோனியா காந்தி இன்னும் சுக*ந்திர*மாக* செய*ல்ப*ட* விட்டால் ஒபாமா தான் ம*றைமுக*மாக* இந்தியாவை ஆட்சிபுரிவார்