PDA

View Full Version : நீ



sathyamani
03-04-2009, 10:21 AM
என்னவெல்லாமோ யோசித்து..
எழுத பேனா எடுத்தால்
நினைத்தது எல்லாம் மறந்து போக
நினைக்காமல்
நினைவுக்கு வருகிறாய்
மறந்து போன நீ

ஆதி
03-04-2009, 11:34 AM
நினைக்காமல் நீ
நினைவுக்கு வர
நிரம்பி போகிறது
மறந்து போன
உன் நினைவுகள்
என் காகிதமெங்கும்..

பலருக்கும் ஏற்படும் அனுபவத்தை அழகாக கவிதையில் வார்த்திருக்குறீர்கள், அழகிய குறுங்கவிதை சத்யாமணி, வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்..

பூமகள்
03-04-2009, 11:40 AM
அணு அணுவாய் அனுபவித்து ரசித்தீர்களோ...

இரு நிலைகளை இருவரும் விளக்குகிறீர்கள்..

நினைவலை அழிக்கும் எழுத்து நிலை..
நினைவலை நிரப்பும் எழுத்து நிலை..

நல்ல கவிதை..

இருவருக்கும் பாராட்டுகள்..

தகுந்த வடிவம் கொடுத்த ஆதிக்கு நன்றி... (எழுத்துப் பிழையை 'அனுபவம்' கவனத்தில் கொள்ளவும்..)

ஆதி
03-04-2009, 11:44 AM
//அணு அணுவாய் அனுபவித்து ரசித்தீர்களோ...
எழுத்துப் பிழையை 'அனுபவம்' கவனத்தில் கொள்ளவும்..//

நல்ல வேளை சாம்பவி இல்லை.. தப்பிச்சிட்டேன்..

மாற்றிட்டேங்க... சுட்டியமைக்கு நன்றி.. :)

அமரன்
03-04-2009, 11:47 AM
சத்தியமணியின் மன ஓசையை உணர்ந்த பிறகு என் மனதில் எழுந்த அலைகளை வரிகளாக்குவோம் என்றால் ஆதி அதுக்கு இடங்கொடுக்கவில்லை. பாராட்டுகள் இரு அற்புதக் கவிதை தந்த செந்தமிழோர்களுக்கும்.

என்ன அதிசயம்..
உன்
நினைவுகளின் மலிவினாலும்
நலிவடையவில்லை
என் கவிதைச் சந்தை.:lachen001:

ஓவியன்
05-10-2009, 04:36 AM
’இரண்டு மனம் வேண்டுமென்ற’ பாடல் வரிகள் தான் மனதில் நிழலாடுகிறது...

நல்ல கவி தந்த சத்தியமணிக்கும், அழகான பின்னூட்டம் தந்த நண்பர்களுக்கும் வாழ்த்துகள்..!! :)

aren
05-10-2009, 01:10 PM
மறந்தால்தானே நினைப்பதற்கு. அந்த நினைவுகள் என்று உங்களுடனேயே இருக்கும் அல்லவா?