PDA

View Full Version : கலையும் கரு



பா.ராஜேஷ்
03-04-2009, 07:26 AM
முடிவெடுத்து விட்டாயோ என்
முகம் பார்க்கும் முன்னரே!
முள்ளாக நான் மாறினேனோ!

மழலை மொழியை கேட்கும்
பொறுமையை நீ இழந்ததேனோ!

நான் கேட்பதெல்லாம் உன் குரல் மட்டுமே!
என் அவலக் குரல் உனக்கு கேட்காமல் போனதேனோ!

எனக்கோ உன் முகம் பார்க்க விருப்பு
உனக்கோ என்னை பார்க்க வெறுப்பு

பெயர் கூட கமல் என்றாய்
நான் கமலாவானதில் என் தவறென்ன

பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டுமாமே
நான் என்ன மாபாவியா!?

நீயும் பெண்ணாயிருந்து என்னை
புண்ணாக்குவது ஏனோ?

புரிந்தது உன் எண்ணம்- பூமியில் பெண்
படும் தொல்லைகள் நான் கொள்ளாமலிருக்கத்தானே
பாசத்தோடு அனுப்புகிறாயோ பாசறைக்கு!
நன்றிகள் பல உனக்கு!

இன்னொரு கருவிலாவது உனக்கு மகனாய்
பிறக்கும் ஆசை எனக்கு!

ஆதி
03-04-2009, 07:37 AM
மிக பாரமான கவிதை.. மனதையும் பாரமாக்கிவிட்டது..

கலையும் கருவுக்காக சிந்த கண்ணீர் துளிகளை தவிர என்னிடம் வேறொன்றுமில்லை..

வாழ்த்துக்கள் பா.ராஜேஷ்..

பா.ராஜேஷ்
03-04-2009, 07:50 AM
நன்றி ஆதி.
எனக்கு வந்த ஒரு மின் அஞ்சலின் தாக்கமாக தோன்றியதுதான் இந்த கவிதை.

அமரன்
03-04-2009, 08:12 AM
ஆண்டாட்டு காலமதாய் ஆண்டவர்கள் தலையால் தண்ணி குடித்தாலும் கொடுத்தாலும் நிறுத்தமுடியாத கொடூர பெண்ணுயிர்த்தாகம் இந்தப் பாதகம்.

தொப்புள் கொடியில் மொட்டாகக் காத்திருக்கும் ஒரு அரும்பைக் கருக்கும் மா பாதகத்துடன் தொடர்புடைய அத்தனைபேரும் கடுமையாகத் தண்டிக்கப்படல் வேண்டும்.

நெஞ்சைப் பிசையும் கரு.

samuthraselvam
03-04-2009, 10:31 AM
நீயும் பெண்ணாயிருந்து என்னை
புண்ணாக்குவது ஏனோ?

புரிந்தது உன் எண்ணம்- பூமியில் பெண்
படும் தொல்லைகள் நான் கொள்ளாமலிருக்கத்தானே
பாசத்தோடு அனுப்புகிறாயோ பாசறைக்கு!
நன்றிகள் பல உனக்கு!

இன்னொரு கருவிலாவது உனக்கு மகனாய்
பிறக்கும் ஆசை எனக்கு!

இந்த வரிகளை தேற்றுதலாக நினைத்துக் கொள்ள வேண்டும். இன்றும் இதைப் போல் கொடுமைகள் கிராமங்களில் நடக்கலாம். ஆனால் முன்பு போல் இப்போது இல்லை இந்திக் கொடுமை..

கவிதை அப்படியே கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது...

பா.ராஜேஷ்
03-04-2009, 10:59 AM
நன்றி அமரன், சமுத்ரசெல்வம். இப்போது இந்த கொடுமை குறைந்திருக்கிறது என்பது உண்மைதான். அரசின் செயல்பாடு இதற்கு முக்கிய காரணம்.