PDA

View Full Version : உன் மனைவியாய்....இன்பக்கவி
03-04-2009, 07:23 AM
என் பொய்யான
கோபம் பிடிக்கும்
என்பாய்......

ஆயிரம் வார்த்தைப்
பேசும் உன்னிடம்
என் ஓர்
வார்த்தை
"ம்"
பிடிக்கும்... என்பாய்......

எனக்கு பிடிக்காத
வண்னத்தை
விளையாட்டாய்
பிடிக்கும் என்றால்
அந்த நிறத்தில்
உடை அணிவாய்...
நான் சொன்னதை
செய்ய பிடிக்கும்
என்பாய்...

நான் பார்த்தும்
பாராமல் நடக்கும்
அந்த ஒரு
நொடி கூட
இன்பம்
என்பாய்....

உன் இமை
மூடும்
நேரத்தில்
நான் மறையும்
அந்த ஒரு
நொடி கொடுமை
என்பாய்....

அன்பே இவை
எல்லாம் இப்போதும்
நான் செய்கிறேன்.....
ஆனால்
இன்று மட்டும்
பிடிக்காமல் போனது
எதனால்....

தூரத்தில் இருந்த
உறவு இன்று
உன் சொந்தமாய்
உன் வீட்டில்
உன் மனைவியாய்
இருந்தும் பிடிக்காமல்
போனது எதனால்......

பா.ராஜேஷ்
03-04-2009, 07:42 AM
நியாயமான கேள்விதான். யாரவது பதில் சொல்லுங்கப்பா! எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. யாரையும் காதலிக்கவும் இல்லை ( ஐயா! தப்பிச்சேன்)

அமரன்
03-04-2009, 08:00 AM
காதலித்து கை பிடித்தவர்களே. வந்து உங்கள் கைங்கரியத்தை காட்டுங்கோ. ஏதோ என்வரையில் சமாளிக்கிறேன்.

க.முவில வேலை வெட்டி இல்லாமல் உன்னையே சுற்றி வந்தப்போ சந்தோசித்தாய். க.பியில் கையில காசு தேவை என்பதை அடிக்கடி நினைவூட்டுகிறாய். என் இன்னொரு பொறுப்பை எனக்கு உணர்த்துகிறாய். அதை நான் சுமக்கையில் உன்பக்கம் கழுத்தை அதிகம் திருப்பினால் சுளுக்கி விடும் என்பது உனக்குத் தெரியாதா. அதான் உன்னை கவனிப்பது சற்றுக் குறைந்து விட்டது.

கவிதை பிசகின்றி உணர்வை வெளிப்படுத்துகிறது கவிதா123.

தொடர்ந்து உணர்வுகள் வெளிப்படட்டும்.

பாராட்டும் வாழ்த்தும் .

நதி
03-04-2009, 08:59 AM
என் பொய்யான
கோபம் பிடிக்கும்
என்பாய்............

கோபம் என்பதே பொய்.
இதில் பொய்க்கோபம் என்கிருந்து வரும்.
தொடக்கமே பொய்யுரைப்பு.
அந்தப் பொய்ய்னை நம்பியது யார் தப்பு.ஆயிரம் வார்த்தைப்
பேசும் உன்னிடம்
என் ஓர்
வார்த்தை
"ம்"
பிடிக்கும்... என்பாய்......

லொட லொட என
பேசிக்கொண்டிருந்தால்
யாருக்குத்தான் பிடிக்கும்.
இம்புட்டு அப்பாவியா நீங்க.எனக்கு பிடிக்காத
வண்னத்தை
விளையாட்டாய்
பிடிக்கும் என்றால்
அந்த நிறத்தில்
உடை அணிவாய்...
நான் சொன்னதை
செய்ய பிடிக்கும்
என்பாய்.........
காதல் ஒரு கண்ணாமூச்சி.
பிடிக்காததை பிடித்தாய் சொல்லி
நீங்க விளையாட
நீங்க விளையாடுறது தெரிஞ்சும்
தெரியாத மாதிரி
அவன் விளையாட
இதுல தோற்றுப் போனதாரு.
நான் பார்த்தும்
பாராமல் நடக்கும்
அந்த ஒரு
நொடி கூட
இன்பம்
என்பாய்....அருகில் நீங்க இருக்கும்போது
அடுத்த பக்கத்து அருகிலோ
சற்றே தொலைவிலோ
இன்னொரு அழகை ஆராதிக்கையில்
உங்கள் பாராமுகம்
பிடிக்கும் எனச் சொன்னதை
கரெக்டா தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே.
அன்பே இவை
எல்லாம் இப்போதும்
நான் செய்கிறேன்.....
ஆனால்
இன்று மட்டும்
பிடிக்காமல் போனது
எதனால்....

தூரத்தில் இருந்த
உறவு இன்று
உன் சொந்தமாய்
உன் வீட்டில்
உன் மனைவியாய்
இருந்தும் பிடிக்காமல்
போனது எதனால்......


ஹி....ஹி...
இதுக்குப் பதில் இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே.

samuthraselvam
03-04-2009, 10:01 AM
அடப்பாவமே கவி எவ்வளவு பீல் பண்ணி கவிதை எழுதி இருக்காங்க.. அதைப் பொய் இப்படி தமாஷு பண்ணிட்டீங்களே ரவுத்திரன்.. இது நியாமா?

கவி.... கூடவே இருக்கும் போதுதான் சுயரூபம் தெரியும். காதலிக்கும்போது நமது வருகைக்காக காத்து இருப்பாங்க..

இப்போ நாம காத்திருக்க வேண்டிய கட்டாயம். ம்ம்ம்ம்.. என்ன செய்யுறது? பெண்களுக்கு விதிக்கப்பட்டது அவ்வளவு தான். .
ஒரு வேளை காதலிக்கும்போது எப்படி அலைய வெச்சமோ அதே மாதிரி இப்பவும் அலைய வைக்க நமக்குத் தெரியலையோ என்னமோ? நமக்கு அந்த திறமை இல்லைன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்...

வசீகரன்
03-04-2009, 01:05 PM
காதலிக்கும்போது நமது வருகைக்காக காத்து இருப்பாங்க..

இப்போ நாம காத்திருக்க வேண்டிய கட்டாயம். ம்ம்ம்ம்.. என்ன செய்யுறது? பெண்களுக்கு விதிக்கப்பட்டது அவ்வளவு தான். .
ஒரு வேளை காதலிக்கும்போது எப்படி அலைய வெச்சமோ அதே மாதிரி இப்பவும் அலைய வைக்க நமக்குத் தெரியலையோ என்னமோ? நமக்கு அந்த திறமை இல்லைன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்...

ஹா...... ஹா.......... நண்பர்களே இந்தா வருது பாருங்க உண்மையெல்லாம்.......!!!

அப்பா நீங்கள்லாம் தேவலோகமா தெரிஞ்சீங்க.....
கல்யாணத்துக்கப்பறம் கூடவேதானே இருக்கீங்க..........

இன்பக்கவி
03-04-2009, 04:42 PM
ஐயோ.. எல்லோரும் என் கவிதையை காமெடி ஆக்கிடீங்களே!!!!

எல்லோரும் இப்படித்தான் உங்க மனைவியை பண்றீங்களோ!!!
அது தான் இந்த கொலைவெறி......