PDA

View Full Version : தற்கொலைக்குறிப்பு



shibly591
02-04-2009, 01:31 PM
முன்குறிப்பு :- மிகவிரைவில் வெளிவரவிருக்கும் எனது நான்காவது நூலுக்கு
நான் இட்டிருக்கும் தலைப்பு "தற்கொலைக்குறிப்பு"..இத்தலைப்பை எனக்களித்த
நண்பர் ரிஷான் ஷெரீப் அவர்கட்கு கோடானு கோடி நன்றிகள்...மேலும்
இக்கவிதையையும் எனது நூலில் சேர்க்க எண்ணியுள்ளேன்..வாழ்க தமிழ்..

_____________________
தற்கொலைக்குறிப்பு
_____________________

நீண்டதோர் இரவின்
திடுக்கிடும் கணப்பொழுதில்
சடுதியாய் முடிவெடுத்தேன் செத்துப்போவதென.....!

சாகும் மூலங்கள் பற்றி
சிந்திக்க நேரமில்லை..
விடிந்தபின்னால்
தற்கொலை சாத்தியமில்லை

இதோ..
இப்போதே..
சாக வேண்டும்
வாழ்வின் கடைசி நுனிவரை
தித்திப்பேயில்லை என்றானபின்
வாழ்ந்தென்ன...! வீழ்ந்தென்ன..!

தூக்கமாத்திரைகள்..!?
வேண்டாம்
சிலவேளை உயிர்பிழைத்துவிடுவேன்..

தூக்குக்கயிறு..!?
ஐயோ...
துடிதுடித்துப்போவேன்..

தீக்குளிக்கலாமா..!?
ம்ஹீம்..
கர்ணகொடூரம்..

தண்டவாளம்..!?
எங்களுரில் எந்த நேரம் ரயில் வருமோ..
யாருக்கும் தெரியாது..

நஞ்சு..!?
தினந்தோறும் மனைவி கையால்
அதைத்தானே சாப்பிடுகிறேன்..

முடிவெடுக்கத்தெரிந்த எனக்கு
முயற்சிக்கத்துணிவில்லை..
தீமைகள் வழியும் உலகில்
கண்மூடி வாழவும் சம்மதமில்லை..

துயர்துடைக்கும் வழிமூலம்
சாவதொன்றே என்றால்
எல்லோரும் இங்கு சடலங்களே...

நான் மட்டும் சாவதனால்
தழைத்தோங்குமா சமுதாயம்..?
சிந்திக்கிறேன்..
சிந்திக்கிறேன்..
இன்னுமின்னும்
சிந்திக்கிறேன்..

நீண்டதோர் இரவின்
விடிதலுக்குப்பின்னராய்
தாமதமாய்ப்புரிந்து கொண்டேன்..
தற்கொலை அத்துணை எளிதில்லை என்பதை...!

--நிந்தவூர் ஷிப்லி--

பா.ராஜேஷ்
03-04-2009, 05:24 AM
தற்கொலை என்பது கோழைகளின் முடிவு. எதிர்த்து தன்னம்பிக்கையுடன் வாழ்வதே சிறந்தது என்பதை கூறும் அருமையான கவிதை. வாழ்த்துகள் நண்பரே!

samuthraselvam
03-04-2009, 06:43 AM
அருமையான கவிதை.....! தற்கொலை செய்யும் அளவுக்கு துணிவு உள்ளவர்கள் வாழ்வதற்கும் தகுதி உள்ளவர்களே...!
வெளிவரவிருக்கும் தங்களுடைய நான்காவது நூலுக்கு என் வாழ்த்துக்கள்...

ஆதி
03-04-2009, 07:27 AM
//நஞ்சு..!?
தினந்தோறும் மனைவி கையால்
அதைத்தானே சாப்பிடுகிறேன்..//

ஒரு சீரியஸான காட்சிக்கு நடுவே வரும் நகைச்சுவைப் போல் இந்த வரிகள்..


கவிதை அருமை ஷிப்லி..

//நீண்டதோர் இரவின்
விடிதலுக்குப்பின்னராய்
தாமதமாய்ப்புரிந்து கொண்டேன்..
தற்கொலை அத்துணை எளிதில்லை என்பதை...!//

கடைசி வரிகள் சொல்ல வந்ததை துல்லியமாய் சொல்லி செல்கின்றன..

வாழ்த்துக்கள்..

அமரன்
03-04-2009, 08:18 AM
மனபலம் ஒன்றே எல்லாத்துக்கும் ஆதாரசுருதி. அந்தப்பலம் இருப்பவன் வாழ்ந்து பார்க்கலாம். எதுக்காக வீழ்ந்து போக வேண்டும். ஆரோக்கியமான கருவில் உதித்த கவிதை. பாராட்டுகள் ஷிப்லி. நான்காவது நூல் சிறப்பாக வெளிவந்து மென்மேலும் பல்நூல்கள் வெளிவர வாழ்த்துகள்.

பாரதி
03-04-2009, 11:22 AM
நான்காம் புத்தகத்திற்கு முன் கூட்டிய வாழ்த்து ஷிப்லி.

கவிதை நன்று.

வலிக்காமல் சாவது எப்படி என்று சிந்தித்த நேரத்தில் வந்துதித்த கவிதை போல் இருக்கிறது. எளிதோ கடினமோ, அந்தச்சிந்தனையை வேரறுத்தலே நல்லது.

"துயர் துடைக்கும் வழி மூலம்" - குறியீடாகத்தோன்றுகிறதே ஷிப்லி.

இன்னும் படைக்க வாழ்த்துகிறேன்.

ஆதவா
03-04-2009, 05:08 PM
நான்காவது நூலுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள் ஷிப்லி!

தற்கொலைகள் என்பது தமக்குத்தாமே கொடுத்துக் கொள்ளும் சுயநிந்தனை. தற்கொலை எனும் முடிவுக்கு எத்தனை சக்தி இருக்கிறதோ அத்தனை தூரம் மட்டுமே அவனால் சாகமுடியும்.

தற்கொலை என்பது தைரியமுள்ளவர்கள் செய்யும் கோழைத்தனம்.... நீளும் இரவினால் அச்சப்படுபவர்கள் தற்கொலையை செய்துகொள்ளுவதில்லை.. அல்லது தள்ளிவைக்கப்படுகிறது!

பெண்கள் தற்கொலை செய்து கொள்ளூம் பொழுது மறக்காமல் உள்ளாடைகளை அணிந்து கொள்ளுவார்களாம்..

பிரச்சனைகளிலிருந்து மீள நினைப்பவர்கள் செய்யும் தற்கொலையானது அப்பிரச்சனைகளை மேலும் ஒருமடங்கு வளர்த்துமேயன்றி குறைக்கவோ, அல்லது மீளச்செய்யவோ (அடுத்தவரை) உதவாது.

தற்கொலை செய்துகொள்பவர்கள் அதிகம், பானம் அருந்தி செய்துகொள்ளுகிறார்கள். அதற்கடுத்ததாக மின்விசிறியில் தூக்கு மாட்டுகிறார்கள்...

தீயிட்டு கொளுத்தியோ, நரம்பு வெட்டியோ, அல்லது வேறெந்த கொடூர முறைகளை தற்கொலைக்கான முதல் யோசனையாக எவரும் கொள்ளுவதில்லை!!!

நீங்கள் தற்கொலை செய்து கொள்ள விரும்பினீர்களென்றால் முதலில் உங்களுக்கான கடமைகளை முடித்துக் கொள்ளுங்கள்... அதற்கும் முன், உங்களது கடமைகள் மொத்தம் எத்தனை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்!!!

நல்ல கவிதை ஷிப்லி!!!!

ஆதவா////