PDA

View Full Version : கிரிக்கெட் மேனியா!!! சரியா???



ஆ.ஜெயஸ்ரீ
01-04-2009, 06:11 AM
கிரிக்கெட் என்பது ஒரு நாட்டின் கௌரவமாக நம் இந்தியர்களால் மதிக்க படுவது சரியா? விளையாட்டு ரசிகர்கள் இதற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் மற்ற விளையாட்டுகளின் முன்னேற்றம் குறைவது கண் கூடு. ஒலிம்பிக் பதக்கம் வாங்கியவர்களை விட எந்த விதத்தில் கிரிக்கெட் விளையாடுபவர்கள் உயர்வு என தெரியவில்லை. கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பத்து சதவீதம் மற்ற விளையாட்டுகளுக்கும் செலுத்தினால் ஒலிம்பிக் மட்டுமல்ல அணைத்து போட்டிகளிலும் இந்தியா முதலிடம் பெறும் என்பது உறுதி.

xavier_raja
01-04-2009, 06:20 AM
கௌரவம் என்றெல்லாம் ஒன்றுமில்லை.. எல்லாம் பணம் பண்ணும் (படுத்தும்) பாடு. மற்ற விளையாட்டுகளில் இதுபோன்று இல்லை, இதில்தான் கோடி கோடியாக கொடுகிறது. இதுபற்றி முன்னரே விவாதித்தாமாதிரி ஞாபாகம்..

பரஞ்சோதி
01-04-2009, 06:53 AM
சகோதரி, சொல்லும் கருத்து மிகச்சரியே, இதையே பல ஆண்டுகளாக பல வல்லுநர்கள் சொல்லியும் யாரும் காதில் போட்டுக்கலை.

அரசாங்கமும் கிரிக்கெட்டை வைத்து அரசியல் செய்கிறது, தொழிலதிபர்கள் பணம் குவிக்கிறாங்க.

மக்கள் இதை பார்த்து ஏமாந்து, வரியாக பணத்தை இழக்கிறாங்க.

பாரதி
01-04-2009, 07:08 AM
பி.சி.சி.ஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுத்துறை இந்திய அரசால் நடத்தப்படுவதல்ல. பரஞ்சோதி கூறியது போல மக்களை வைத்து கோடிக்கணக்கில் பணத்தை திரட்ட பல தொழிலதிபர்கள் செய்யும் முயற்சி என்பது சரிதான். இதுவும் ஒரு போதைதான் - மக்களுக்கு என்று தெளியுமோ?

மன்மதன்
01-04-2009, 08:02 AM
இதுவும் ஒரு போதைதான் - மக்களுக்கு என்று தெளியுமோ?

சரி..சரி..அடுத்த டெஸ்ட் எப்போ ?? ஸ்கோர் கொடுக்க மறந்துடாதீங்க பாஸ்..:rolleyes::D

தாமரை
01-04-2009, 08:12 AM
அரசாங்கமும் கிரிக்கெட்டை வைத்து அரசியல் செய்கிறது, தொழிலதிபர்கள் பணம் குவிக்கிறாங்க.

மக்கள் இதை பார்த்து ஏமாந்து, வரியாக பணத்தை இழக்கிறாங்க.

அடிப்படைக் கேள்வி..

விளையாட்டுக்கள் மக்களைக் கவரணுமா? இல்லை மக்கள் விளையாட்டை வளர்க்கணுமா?

பரஞ்சோதி
01-04-2009, 08:18 AM
நானும் அடிப்படையில் ஒரு கிரிக்கெட் வீரன் தான், எனக்கும் இந்நிலையை கண்டால் கடுப்படிக்கவே செய்கிறது.

நம் நாட்டில் 1983ம் ஆண்டுக்கு பின்னர் புதிய மாயையில் மக்கள் விழுந்து விட்டார்கள்.

கிராமங்களில் நான் சின்ன வயதில் ஆடிய விளையாட்டுகள் எல்லாம் அழிந்து போயின. கிரிக்கெட்டை பார்க்க மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன்னர் அமர்வதால் படிப்பு, உற்பத்தி, திறமைகள், உடல் நலம் எல்லாம் பாதிக்குது.

கிரிக்கெட், கிரிக்கெட் என்று ஒரு பொய்யான மாயை உருவாக்கி மக்கள் மேல் போர்த்திட்டாங்க, ஏற்கனவே இருக்கிற நடிக நடிகையர் மாயை, கிரிக்கெட்டுடன் சேர, இன்னும் அதிகரித்து விட்டது.

பத்திரிகையாளர்களும், தொலைகாட்சி நிறுவனங்களும் இந்த மாயையை பரப்புவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டில் உயிரை கொடுத்து விளையாடினாலும் புகழும் இல்லை, பணமும் இல்லை என்ற நிலையை எப்படி மாற்றுவது?

பா.ராஜேஷ்
02-04-2009, 05:10 AM
இந்நிலையில் அரசாங்க பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ஐ.பி.எல் போட்டிகளை வெளி நாட்டில் வைத்து நேரடி மற்றும் மறைமுக வருவாய்க்கான வாய்ப்பை இந்தியர்களிடம் இருந்து பறித்து விட்டார்களே. போட்டிக்கு அதரவளிக்கா விட்டாலும் அதன் மூலம் எத்தனை இந்திய குடும்பங்கள் வாழ்கின்றன என்று எண்ணுகையில் அதன் மாயம் பெரிதாக படவில்லை.

பரஞ்சோதி
02-04-2009, 10:48 AM
ஐபிஎல் போட்டிகளை எப்போ தென் ஆப்பிரிக்காவுக்கு கடத்தினாங்களோ? அப்போவே இவங்க மக்களுக்காக நடத்தலை, பணத்துகாக நடத்துறாங்க என்பது புரிந்து விட்டது தானே.

அய்யா
02-04-2009, 05:39 PM
கிரிக்கெட் விளையாட்டல்ல..

அது ஒரு தொழில். இலாபம் கொழிக்கும் தொழில்!

அறிஞர்
02-04-2009, 08:32 PM
கிரிக்கெட் விளையாட்டல்ல..

அது ஒரு தொழில். இலாபம் கொழிக்கும் தொழில்!
அது ஒரு கம்பெனி போல் தான்....
கிட்டத்தட்ட 25 தொழிலாளிகள் வேலை பார்க்கும் தொழிற்சாலை...
பின்னணியில் கோடிகள் சம்பாதிப்பவர்கள் பலர்....

"பொத்தனூர்"பிரபு
11-04-2009, 03:41 PM
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிகெட் பார்ப்பேன் , விளையாடுவேன்
இதில் எனக்கு லாபம் மட்டுமே
கிரிக்கெட் பார்ப்பது விளையாடுவதின் போது மனம் ஒன்று படுவதாக நினைக்கிறேன்
மற்ற பிரச்சனைகள் குழப்பத்தில் இருந்து அந்த நேரங்களில் எனக்கு விடுதலை

மற்ற விளையாட்டுகளை வளர்க்க விரும்புகிறவர்கள் வளருங்கள்
உங்கள் வாரிசுகளுக்கு கற்றுகொடுங்கள் அதைவிட்டு கிரிகெட்டை குறை சொல்வது ஏன் என்று புரியவில்லை

aren
12-04-2009, 03:38 AM
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விளையாட்டு பிரபலமாக உள்ளது. தென் அமெரிக்காவில் காற்பந்து, அமெரிக்காவில் பேஸ்பால், கூடைப்பந்து, அமெரிக்க காற்பந்து ஆகியவை பிரபலமான விளையாட்டாகக் கருதப்படுகிறது.

ஆப்பிரிக்காவிலும் மத்திய ஆசியாவிலும் காற்பந்து பிரபலமாக விளங்குகிறது.

ஐரோப்பா முழுவதும் காற்பந்தின் ஆக்கிரமிப்பு இருக்கிறது.

அதுபோல இந்தியர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு பிடித்திருக்கிறது, ஆகையால் அது பிரபலமாக விளங்குகிறது.

கிரிக்கெட்டில் பணம் இப்பொழுதுதான் புழங்குகிறது. அதுவும் கடந்த பத்து வருடங்களாக மட்டுமே.