PDA

View Full Version : தினந்தோறும் எழுதுவேன்



நம்பிகோபாலன்
31-03-2009, 12:19 PM
உனக்காக
நான் எழுதுவதும்
உன்னை பற்றியே
எழுதுவதும்
மிகவும் பழகி போனதாக
தெரிந்தாலும்
ஒவ்வொரு முறையும்
உன்னை பற்றி
புதிதாக எழுதி
உன்னிடம்
பாராட்டாய் ஒரு முத்தம்
எதிர்பார்த்து காத்திருப்பேன்
நீயோ
ஆசைய பாரு
என் கன்னத்தை
தட்டி விட்டு செல்வாய்…
இந்த ஒரு தீண்டல்
போதுமடி
உன்னை பற்றி
தினந்தோறும் எழுதுவதற்க்கு….

ஆதி
31-03-2009, 12:37 PM
இந்த ஒரு தீண்டல்
போதுமடி
உன்னை பற்றி
தினந்தோறும் எழுதுவதற்க்கு….


பைனல் டச்.. நச்..

கடைசிவரிகள் பிரமாதம் நம்பி.. ரொம்ப நாளைக்கு அப்புரம் உங்களின் காதல் கவிதை.. அதுவும் மனசை அள்ளி செல்லும் விதத்தில்.. பாராட்டுக்கள்..

இது போன்ற தெள்ளமுதக் காதல் கவிதைகளை தொடர்ந்து கொடுங்கள்..

சிவா.ஜி
31-03-2009, 05:47 PM
நம்பிகோபாலனுக்கு தினம் ஒரு தீண்டல் கிடைக்கட்டும்......நமக்கு தினமொரு காதல் கவிதை கிடைக்கும்.

அருமையான கவிதை நம்பிகோபாலன். வாழ்த்துக்கள்.

samuthraselvam
01-04-2009, 08:17 AM
நம்பிகோபாலனுக்கு தினம் ஒரு தீண்டல் கிடைக்கட்டும்......நமக்கு தினமொரு காதல் கவிதை கிடைக்கும்.

அருமையான கவிதை நம்பிகோபாலன். வாழ்த்துக்கள்.

அண்ணாவின் ஆவலே என் ஆவா...

நம்பிகோபாலன்
01-04-2009, 11:48 AM
மிக்க நன்றி நண்பர்களே, நீண்ட இடைவெளிக்கு பின் எழுதுகிறேன் (ஒரு வித பயத்துடன்)..
என்னை உற்சாகப்படுதியதற்க்கு மிக்க நன்றி...