PDA

View Full Version : நானும் - நகையும்



செல்வா
31-03-2009, 09:32 AM
மலைகளில் பிறந்தேன்
மரங்களூடு வளர்ந்தேன்...

மாறும் சூழலுக்கேற்ப
விரிந்தும் ஒடுங்கியும்
நடந்தும் விரைந்தும் திரிகிறேன்...

கரையில் இருந்துகொண்டு
அடைபட்டுக் கிடப்பதாயும்
ஆமைபோல் நடப்பதாயும்
இகழ்வோரே...

"நான் அடைபட்டுக் கிடப்பதால் தான்
உன்னால் கரையில் வாழமுடிகிறது"
சொல்லாமலே செல்கிறேன்
நகைத்தபடியே ....

ஆதி
31-03-2009, 09:55 AM
மலைகளில் பிறந்தேன்
மரங்களூடு வளர்ந்தேன்...

கரையில் இருந்துகொண்டு
அடைபட்டுக் கிடப்பதாயும்
ஆமைபோல் நடப்பதாயும்
இகழ்வோரே...

"நான் அடைபட்டுக் கிடப்பதால் தான்
உன்னால் கரையில் வாழமுடிகிறது"
சொல்லாமலே செல்கிறேன்
நகைத்தபடியே ....

மரங்களூடு வளர்ந்தேன் அருமையான வர்ணனை டா..

கவிதையின் கரு எங்கெங்கோ கூட்டி செல்லுதுடா..

யாரையும் தீர்ப்பிடாதே எனும் வசனமும் ஞாபகத்துக்கு வருது..

அடைந்து இருப்பதுதான் நதிக்கு பெருமை - அதை
அண்டி வாழ்வதால்தான் உயருதுநம் வளமை..

வாழ்த்துக்கள் டா..

சிவா.ஜி
31-03-2009, 05:50 PM
நதியடக்கம் நமக்கெல்லாம் நல்லது. நாவடக்கம் அடக்கியவனுக்கு நல்லது. இங்கே நதி தன்னையும் அடக்கிக்கொண்டு தன் நாவையும் அடக்கிக்கொண்டு அமைதியாய் செல்கிறது.

செல்வரே....பின்னிட்டீங்க. வாழ்த்துகள்.

இளசு
31-03-2009, 09:55 PM
நதிகளே சமூக வளர்ச்சியின் தமனிகள்..
நதிகள் - கவிதைக் காட்டின் ஊக்கிகள்..

நதிகள் சொல்லும் பாடங்கள் அதிகம்..
செல்வா சொன்னதும் அதில் அடக்கம்..


பாராட்டுகள் செல்வா..

ஆதி, சிவா - பின்னூட்டங்கள் சுவை!

------------------------------------

ஆறு கரையில் அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம்..

---- நா. காமராசன்.

செல்வா
01-04-2009, 05:13 PM
அடைந்து இருப்பதுதான் நதிக்கு பெருமை - அதை
அண்டி வாழ்வதால்தான் உயருதுநம் வளமை..
வாழ்த்துக்கள் டா..
நன்றி ஆதி.


நதியடக்கம் நமக்கெல்லாம் நல்லது. நாவடக்கம் அடக்கியவனுக்கு நல்லது. இங்கே நதி தன்னையும் அடக்கிக்கொண்டு தன் நாவையும் அடக்கிக்கொண்டு அமைதியாய் செல்கிறது.
வாழ்த்துகள்.
சரியாப் புடிச்சிட்டீங்க .... சிவா அண்ணாவா... கொக்கா... :)
நன்றி அண்ணா...



பாராட்டுகள் செல்வா..

ஆறு கரையில் அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம்..

---- நா. காமராசன்.
நா. காமராசனா? நான் கண்ணதாசன் என்றே நினைத்திருந்தேன்....
பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா...