PDA

View Full Version : ஜிமெயில் மின்னஞ்சல் இப்போது தமிழில்!



பாரதி
31-03-2009, 04:54 AM
அன்பு நண்பர்களே,

ஜிமெயில் தொடர்ந்து நல்ல சேவைகளை வழங்கி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது ஜிமெயிலில் மின்னஞ்சல்களை நாம் நேரடியாக தமிழில் தட்டச்சி அனுப்பலாம். அதாவது எ-கலப்பை, என்,ஹெச். எம். ரைட்டர் போன்ற மென்பொருட்களின் உதவியின்றி நேரடியாக தமிழில் தட்டச்ச வழி செய்திருக்கிறது.

இந்திய மொழிகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றை பயன்படுத்த வசதி செய்யப்பட்டிருக்கிறது.

அதை பயன்படுத்த ஜிமெயிலில் செட்டிங்ஸ் - ஜெனரல் - எனேபிள் டிரான்ஸ்லிட்டரேஷன் என்பதில் " தமிழ் " என்பதை தேர்வு செய்து, செய்த மாற்றங்களை சேமித்து வைத்துக்கொள்ளவும்.

தமிழில் தட்டச்ச கண்ட்ரோல் + ஜி (Control + G) விசைகளை தட்டவும். இப்போது ஃபோனடிக் முறையில் நீங்கள் தமிழில் தட்டச்சலாம். மிகவும் எளிதாக இருக்கிறது.

விரும்பும் நண்பர்கள் பயன்படுத்திப்பாருங்கள். கூகிள் நிறுவனத்திற்கு நமது அன்பான நன்றிகள்.

வசீகரன்
31-03-2009, 05:00 AM
பயனுள்ள தகவல் நன்றி அண்ணா..............

பரஞ்சோதி
31-03-2009, 12:04 PM
ஆஹா! அருமையான செய்தி.

பல நேரங்களில் தமிழில் தட்டச்சு செய்ய முடியாமல் தவித்திருக்கிறேன்.

நன்றி அண்ணா.

sunson
02-04-2009, 02:04 PM
தமிழ் மன்ற நண்பர்களுக்கு மிகத் தேவையான உபயோகமானத் தகவல, நன்றி....

பாரதி
02-04-2009, 02:05 PM
நன்றி வசீகரன், பரஞ்சோதி. தமிழ் தட்டச்சு தெரியாத எனது பழைய நண்பர் ஒருவர் இப்போது தமிழில் மகிழ்ச்சியாக தட்டச்சுகிறார்! மிகவும் எளிமையாக இருப்பதும் உண்மை.

tkpraj
02-04-2009, 02:21 PM
நன்றி பாரதி
மிகவும் பயனுள்ள தகவல்

vimal100
12-04-2009, 05:53 AM
நன்றி நன்பரே
விமல் தமிழ்நாடு

விகடன்
12-04-2009, 06:40 AM
உலகில் எங்கிருந்தாலும் தமிழில் மடல் வரைய ஏதுவாக்கப்பட்டிருக்கிறது. இனிமேல் ஈ- கலப்பையினை காவித்திரிய வேண்டிய அவசியமில்லை.

வசதிகள் பல வந்தாலும் அதை அறிந்துகொள்ள இவ்வாறு யாராவது முயன்றால்த்தான் எங்களிற்கு வெளிச்சம்.
மிக்க நன்றி அண்ணா.