PDA

View Full Version : விடைக் கேட்கிறோம்!!!!



இன்பக்கவி
30-03-2009, 05:23 PM
இடம் விட்டு
இடம் நகர்கிறோம்
ஆனாலும்
எங்களை தூரத்துகிறான்
எமன்....

வயிற்றில்
குழந்தையை
கருவறையிலேயே
வைத்துக்கொள்ள
துடிக்கிறது மனம்

ஆனால்
எங்கள் கருவறையை
கூட விட்டுவைபபததிலை
வருகின்ற
குண்டுக்கள்.....

கண்ணே!!!
நான்
என்னடா செய்வது.....
உன் அழுக்குரல்
கூட எனக்கு
கேட்கும் முன்னே
நீ இல்லாமல் போகிறாயே.....

இம்மண்ணில்
வரக் கூட
இடம் இல்லையடா.......

இயற்கையும் கூட
எங்களை நிந்தனை
செய்தது.......
அதனால் தானோ
எங்கள் கண்ணீர்
மற்றவர்களுக்கு
தெரியாமல் போனதோ????

யானைக்கு மதம்
பிடித்தால் காட்டை
அழிக்குமாம்.......
அவனுக்கு
மதம் பிடித்ததால்
அழிகிறோம்
தமிழ் இனமான
நாங்கள்.........

எல்லோரின்
மௌனமும் தினமும்
எங்களை ஊனம்
ஆக்குகிறது......

என்று விடியும்
எங்கள் வாழ்வு.....
விடைக் கேட்கிறோம்
நாங்கள்
விடை தெரியாமல்
நீங்கள்.....

வசீகரன்
31-03-2009, 04:48 AM
கடவுள் என்று ஒருவன் இருந்திருந்தால் அவனிடம் கேட்டிருக்கலாம்......
அவனும் இல்லை....
இனி இந்த உலகில் சமத்துவம் அன்பு பண்பு இப்படியெல்லாம் பேச இனி
யாருக்கும் அருகதை இல்லை..... ஈழம்.....பாலஸ்தீனம் இன்னும் உலகின் விடியல் காணா தேசங்கள் எவ்வளவோ
தினம் தினம் செத்து மடியும் வாழ்வை இழந்து போராடும் உயிர்கள் எவ்வளவோ....

இங்கே இளைத்தவன் மடிகிறான் வலுத்தவன் ஜெயிக்கிறான் அவ்வளவுதான்
..............
நம்மை நாம் தான் காத்துக்கொள்ளவேண்டும்...............
உபதேசங்கள் கூறும் யாரும் இனி உதவப்போவதில்லை.................
இங்கே யார் வாழ்ந்தாலும் செத்தாலும் அது தினசரி ஒரு செய்திதான் எல்லாருக்கும்....
சிங்களன் கண்டனம் சொல்பனை பார்த்து கெக்கெக்கே.......
என்று விகாரமாக சிரிக்கிறான்
உலகசபை இந்தியா இனி யாரும் இலங்கை தமிழர்களுக்கு
உதவமாட்டார்கள்............

நம் விதி அழிவதுதான்...................

samuthraselvam
31-03-2009, 05:55 AM
விடை கிடைக்காத கேள்வி இது கவி.....

மனதின் வலியை கவிதையாக்கி படைத்திருக்கிறீர்கள்....

மனிதத்தின் வழி பிறந்தால் மனதின் வலி நிச்சயம் விலகும் ஓர் நாள்.......

இன்பக்கவி
07-04-2009, 04:02 PM
என் கண்ணீர் துளிகள்
அவர்களுடைய கண்ணீரை
துடைக்க போவது
இல்லை.........

இருந்தாலும் தினமும்
அவர்களுக்காக இங்கே
நிறைய இதயங்கள்
கண்ணீர் விட்டு
கொண்டுதான் இருக்கிறோம்....

இப்போதைக்கு எங்கள்
கண்ணீர் மட்டுமே
அவர்களுக்கு சமர்ப்பணம்......

நம் தமிழ் உறவுகளுக்கு
சமர்ப்பணம்......

பா.ராஜேஷ்
08-04-2009, 06:17 AM
விடை காண முடியாத வினாவாக நெடுங்காலம் நீடித்திருக்கும் பிரச்சனையை எப்போதுதான் முடிவுக்கு வரும்!? பதில் சொல்ல யாராலும் முடியாது. :(

அமரன்
08-04-2009, 06:48 AM
விடைகாண முடியாத வினாவில்லை ஈழத்தமிழன் பிரச்சினை. விடை கொடுக்க பின்னடிக்கப்படும் வினா.

தமது அரசியல் ஆதாயங்களுக்காகவும் சொந்த நலனுக்காகவும் விடையை இருட்டடிப்பு செய்து நீடிக்க வைக்கின்றன சில அரசுகள்.

வலியை வடித்து பாடிய உங்களுக்கு நன்றி.

வலிக்காமல் வாழ்க்கை இல்லை.
வலிகள்தான் வாழ்க்கை இல்லை.