PDA

View Full Version : லச்சுமி மெஸ்

umakarthick
30-03-2009, 02:10 PM
கல்லூரியில் முதல் வருடம் ஹாஸ்டலில் இருந்தேன், லைனில் நின்று தட்டு ஒன்றும் கிளாசும் வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு நிப்பேன்..வீட்டில் அம்மா செய்த ஆப்பாயில் உடைந்து விட்டால் தட்டை தூக்கி எறிந்து சண்டை போட்டு பணம் வாங்கி புரோட்டா சாப்பிடும் நான் இப்படி தட்டோடு சாப்பாட்டுக்கு நிற்பது என் தன்மானத்திற்கு(அப்படின்னா???) அவமானமாயிருந்தது ..

அதனால் 2 வருடம் ஹாஸ்டல் விட்டு வெளியேறி காலேக் பக்கம் ரூம் எடுத்து தங்கினோம்..அங்கே தான் இந்த மெஸ் கான்செப்ட் எனக்கு அறிமுகமாச்சு..500 ரூ டெபாசிட் கொடுத்துட்டு அக்கவுண்ட் ஆரம்பித்து சாப்பிடலாம்..ஒவ்வொரு மாதமும் பணம் கொடுத்து விட வேண்டும்..

எங்க ரூமருகே இருந்த லச்சுமி மெஸ்ஸில் அக்கவுன்ட் வைத்தேன் நான் மட்டும் ..நாம பேசிக்கா சோம்பேறியாச்சா பக்கத்து மெஸ்ஸிலே சேர்ந்து விட்டேன் மற்றவர்கள் தூரத்தில் இருந்த மெஸ்களில் சேற எங்க ரூம் லைப் ஆரம்பமானது..

லச்சுமி மெஸ்ஸை ஒரு குடும்பமே சேர்ந்து நடத்திக்கொண்டிருந்தது , ஒரு தாத்தா அவருக்கு காது கேக்காது ,ஆப்பாயில் கேட்டால் ஆம்பிளேட் கொண்டு வருவார்..அவரின் மனைவி பாட்டியம்மா அப்புறம் ஒரு வயதான் அக்கா அவ்ங்களோட 2 மகன்ஸ் அப்புறம் அதில் மணமான ஒரு மகனின் அழகான மனைவி..சீக்கிரத்திலே எல்லாரும் என்னுடன் பழகி விட்டார்கள்..அதிலும் அந்த அக்காவின் கணவர் இறந்திருப்பார் போல எப்போதும் சோகமாவே இருக்கும்..

கிட்டத்தட்ட எனக்கொரு குடும்பமே கிடைத்த மாதிரி இருந்தது ..வீட்டிலிருந்த பிரிந்த இருந்த எனக்கு இது ஒரு பெரிய வடிகாலாகவே இருந்தது..நான் அவர்களுடன் பழகுவதை என் ரூம் பசங்க எல்லாரும் கிண்டலடிப்பார்கள்..நான் கண்டுக்கவே மாட்டேன்..ஞாயிறு மட்டும் ல்ச்சுமி மெஸ்ஸில் கூட்டம் அலைமோதும் காரணம் சிக்கன் குழம்பு..அந்த சாப்பாடும் சிக்கன் குழம்பும் சாப்பிட்டு அப்புறம் தயிறு அதுக்கு மேல ஆபாயில் பழம் என உள்ளே தள்ளிக்கொண்டே இருப்போம்..

இளமையின் மிடுக்கில் சிகரட் ,கிரிக்கெட் பார்த்து கொண்டே 5 டீ, பசங்களை கூப்பிட்டு வந்து சாப்பிட வைத்து , ஆப்பாயில் யார் அதிகம் சாப்பிடுகிறார்கள் என போட்டி ..இவ்வாறாக மெஸ் பில் மாதம் 2000 தாண்டும்..

அந்த மெஸ் குடும்பத்தில் புதிதாய் வந்திருந்த அந்த புதுபெண்ணும் சில நாட்களிலேயே மெஸ்ஸில் சாம்பார் ,சட்னி பறிமாற ஆரம்பித்து விட்டார்..அழகாக மஞ்சள் பூசி ஈரத்தலையோட அந்த பெண்ணை பார்க்க கொஞ்சம் கூட்டமே வந்தது

என் அக்காவிற்கு குழந்த பிறந்தசமயம் இந்த மெஸ்ஸிக்கு தான் போன் பண்ணி என் அம்மா சொன்னார்கள்..அப்போதெல்லாம் செல் போன் கிடையாது..

'தென்காசி கார்த்தி யாருப்ப்ப..உங்க அக்காவுக்கு குழந்தை பிறந்திருக்காம்'..சொல்லி விட்டு தாத்தா போய்ட்டாரு..சந்தோசத்தில் கண்ணில் கண்னீருடன் தாத்தா பின்னாடியே போய் 'தாத்தா என்ன குழந்தைன்னு சொன்னாங்களா??' ன்னு கேட்க ..அவர் அதை கேட்க வில்லை என சொல்ல ஆர்வம் தாளாமல் அன்று இரவே வீட்டில் சொல்லாமல் நான் ஊருக்கு கிளம்பியது இன்னும் நினைவிலிருக்கிறது..

2 ஆம் வருடத்தில் 4 அரியர் விழ இது வேலைக்காகாது என காலேக் கேம்பஸ் போய் எல்லா அரியரையும் கிளியர் பண்ணி மறுபடி 4 ஆம் வருடத்தில் ரூமுக்கே வர மறுபடியும் லச்சுமி மெஸ் ..அதே அன்பு என 4 வருடமும் ஓடிற்று..

கடைசியாக 2 வருடம் முன்பு காலேஜில் கான்வொக்கேசனுக்கு போன போது லச்சுமி மெஸ்ஸிக்கு போனேன்..எல்லாரையும் பார்த்து பேசினேன்..தாத்தாவுக்கு பார்வை ரொம்பவும் கம்மியாயிருந்தது..அதே சோகத்துடன் மெஸ் அக்கா..அவர்கள் பெயரை நான் ஏன் கடைசி வரை கேட்டுக்கொள்ள வில்லை என தெரியல..

அந்த மருமகள் இப்போது பழையவராயிருந்தார்..கர்ப்பமாயிருந்தார்..ஆனால் பசங்க 'அக்கா சாம்பார்..அக்கா ஆப்பாயில்' எனக்கேட்க்கும் போது குறுக்கும்மறுக்குமோடி வேலைப்பார்த்துக்கொண்டிருந்தார்..ஒரு மகன் சண்டையிட்டு தனியே போய் விட்டதாய் சொல்லி அக்கா வருத்தப்பட்டார்..

நான் சாப்பாடும் ஆப்பாயிலும் சாப்பிட்டு கிளம்பினேன்..இப்போது மறுபடி ஏப்ரல் 20 அம் தேதி கோவை செல்கிறேன்..மறுபடி லச்சுமி மெஸ் போகனும்

பரஞ்சோதி
31-03-2009, 01:24 PM
அருமையான நினைவலைகள்.

இப்பதிவில் பல விசயங்கள் சொல்லியிருக்கீங்க.

உழைப்பால் உயர்ந்த குடும்பம், கூட்டு குடும்பத்தின் அருமை அறியாமல் பிரிந்த மகன்.

இன்னும் சொல்லுங்க, காது கொடுத்து கேட்க ஆவலோடு இருக்கிறேன்.

அறிஞர்
31-03-2009, 01:39 PM
நல்ல மலரும் நினைவுகள்....
பலநேரம் பலவற்றை மறந்துவிடுவோம்....
மறக்காமல் போய் பார்த்துவிட்டு வந்து.. அடுத்த கதையை சொல்லுங்கள்..

சிவா.ஜி
31-03-2009, 03:41 PM
மிக அருமையான அனுபவங்கள். அதை ரொம்ப சுவாரசியமா கொடுத்திருக்கீங்க உமா கார்த்திக். ஒரு குடும்பத்துடன் பழகிய அனுபவத்தை உங்களுக்கு கொடுத்த அந்த லச்சுமி மெஸ் உண்மையிலேயே...உயர்ந்ததுதான்.

இன்னும் உங்கள் சுவையான அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

பூமகள்
01-04-2009, 02:49 AM
லட்சுமி மெஸ் பெருமையை நன்கு அறிய முடிந்தது...

இப்படி ஒரு மெஸ்ஸில் சாப்பிடவில்லையே என ஏங்க வைத்தது...

தொடர்ந்து அனுபவத்தை எழுதுங்கள் கார்த்திக். ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்... :)

umakarthick
01-04-2009, 04:02 PM
அருமையான நினைவலைகள்.

இப்பதிவில் பல விசயங்கள் சொல்லியிருக்கீங்க.

உழைப்பால் உயர்ந்த குடும்பம், கூட்டு குடும்பத்தின் அருமை அறியாமல் பிரிந்த மகன்.

இன்னும் சொல்லுங்க, காது கொடுத்து கேட்க ஆவலோடு இருக்கிறேன்.

கண்டிப்பா சொல்றேன்..அந்த புது மருமகளும் பறிமாற நிற்கும் போது மனம் ஏனோ வருந்தியது ..

umakarthick
01-04-2009, 04:04 PM
லட்சுமி மெஸ் பெருமையை நன்கு அறிய முடிந்தது...

இப்படி ஒரு மெஸ்ஸில் சாப்பிடவில்லையே என ஏங்க வைத்தது...

தொடர்ந்து அனுபவத்தை எழுதுங்கள் கார்த்திக். ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்... :)

பேச்சுலர் வாழ்வில் இந்த அனுபவங்கள் தவிர்க்க இயலாதது ..பில் கட்ட முடியாமல் தொடர்ந்து இழுத்தடித்தாலும் இவன் கட்டுவான் என நாம் கேட்பதையெல்லாம் இலையில் வைக்கின் அந்த ஓனர்களின் நம்பிக்கை கண்ணுக்கு தெரியாத ஒரு பாலத்தை உருவாக்கும் என்றால் மிகையாகாது

umakarthick
01-04-2009, 04:04 PM
நல்ல மலரும் நினைவுகள்....
பலநேரம் பலவற்றை மறந்துவிடுவோம்....
மறக்காமல் போய் பார்த்துவிட்டு வந்து.. அடுத்த கதையை சொல்லுங்கள்..

கண்டிப்பா

விகடன்
02-04-2009, 05:22 AM
"லச்சுமி மெஸ்" உடனான உறவை அழகாக சொல்லிவைத்துவிட்டீர்கள். நம்ம பெடியள் எல்லோரும் ஓரிடத்தில் கணக்கு வைக்கையில் நாம் பிறிதோரிடத்தில் கணக்குவைத்துவிட்டால் அவர்கள் அடிக்கும் கிண்டலின் அளவை நானுமறிவேன். ஏனெனில் கிண்டலடிக்கும் அணியிலொருவனாக நானுமிருந்திருக்கிறேன் :).

உங்கள் பதிவைப் படிக்கையில் எனது பல்கலைக்கழக வாழ்க்கையின் சில அத்தியாயங்களும் திருப்பப்பட்டிருந்தது. ஆனால் கணக்கு வைத்து சாப்பிட்டதில்லை. வாடிக்கையாளனாக இருந்திருக்கிறேன். அவ்வளவுதான்.

பா.ராஜேஷ்
02-04-2009, 05:48 AM
கல்லூரி பயிலும் களங்களில் நாமும் மற்ற நண்பர்களை போல் வீட்டில் இருந்தே வர இயலவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் விடுதியில் பயிலும் மாணவர்களுடன் இணைத்து இருப்பது ஒரு தனி மகிழ்ச்சியை வழங்கியது உண்மைதான். அதிலும் வெளியில் தங்கி மெஸ்ஸில் உண்பவர்களை பற்றி கேட்கவே வேண்டம். மாதம் ஒரு மெஸ் என மாறி மாறி அணைத்து மெஸ்களின் சிறப்பு பதார்த்தங்களை பற்றி ஒரு பட்டியலே வைத்திருப்பார்கள். இந்த ஞாபகம் அனைவர்க்கும் மீண்டும் அவர்களது பசுமை தினங்களை நினைவு படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
நன்றி. பாராட்டுக்கள்.

பாரதி
02-04-2009, 07:10 AM
நல்ல விவரிப்பு கார்த்திக். முக்கியமாக மெஸ் துவங்கும் காலத்தில் இணைபவர்களை அந்த மெஸ் நடத்துபவர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். நாங்கள் பணியில் இணைந்த சமயத்தில் வேலை பார்ப்பவர்கள் மட்டும் தனியாக ஒரு இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளில் குடியிருந்தோம். அப்போது அங்கே துவங்கப்பட்ட தாமோதரன் மெஸ் என்னுடைய நினைவில் இன்னும் இருக்கிறது.

ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக தங்கள் வீடுகளில் இருப்பது போல நினைத்து பரிமாறுவார்கள். ம்ம்.... இன்னும் விலாவாரியா சொல்லுங்க கார்த்திக்.

umakarthick
02-04-2009, 01:25 PM

இன்னும் விலாவாரியா சொன்ன பல பக்கங்களுக்கு போகும் ஆனால் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா சொல்றேன்

umakarthick
02-04-2009, 01:26 PM
கல்லூரி பயிலும் களங்களில் நாமும் மற்ற நண்பர்களை போல் வீட்டில் இருந்தே வர இயலவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் விடுதியில் பயிலும் மாணவர்களுடன் இணைத்து இருப்பது ஒரு தனி மகிழ்ச்சியை வழங்கியது உண்மைதான். அதிலும் வெளியில் தங்கி மெஸ்ஸில் உண்பவர்களை பற்றி கேட்கவே வேண்டம். மாதம் ஒரு மெஸ் என மாறி மாறி அணைத்து மெஸ்களின் சிறப்பு பதார்த்தங்களை பற்றி ஒரு பட்டியலே வைத்திருப்பார்கள். இந்த ஞாபகம் அனைவர்க்கும் மீண்டும் அவர்களது பசுமை தினங்களை நினைவு படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
நன்றி. பாராட்டுக்கள்.

டேஸ்காலர் பசங்களுக்கு எங்கள் அறைகளுக்கு வரும் போது எங்களுடன் மெஸ்ஸிக்கு வருவதையே விருபுவார்கள் அவர்கள் உணவை எங்களுக்கு கொடுத்து விடுவார்கள்

umakarthick
02-04-2009, 01:27 PM
"லச்சுமி மெஸ்" உடனான உறவை அழகாக சொல்லிவைத்துவிட்டீர்கள். நம்ம பெடியள் எல்லோரும் ஓரிடத்தில் கணக்கு வைக்கையில் நாம் பிறிதோரிடத்தில் கணக்குவைத்துவிட்டால் அவர்கள் அடிக்கும் கிண்டலின் அளவை நானுமறிவேன். ஏனெனில் கிண்டலடிக்கும் அணியிலொருவனாக நானுமிருந்திருக்கிறேன் :).

உங்கள் பதிவைப் படிக்கையில் எனது பல்கலைக்கழக வாழ்க்கையின் சில அத்தியாயங்களும் திருப்பப்பட்டிருந்தது. ஆனால் கணக்கு வைத்து சாப்பிட்டதில்லை. வாடிக்கையாளனாக இருந்திருக்கிறேன். அவ்வளவுதான்.

சரியா சொன்னீங்க நான் மட்டும் லட்சுமி மெஸ்ஸுக்கு போவதால் செமையா கிண்டல் பண்ணுவாங்க பசங்க ஆனால் எனக்கு என்னவோ அங்கே வீட்டில் சாப்பிடுவது போல ஒரு உணர்வு

தங்கவேல்
30-04-2009, 03:34 PM
லச்சுமி மெஸ் - மனதை வருடும் பதிவு கார்த்திக்... எனது கல்லூரி வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது...

umakarthick
03-06-2009, 01:08 PM
நன்றி தங்கவேல்