PDA

View Full Version : கணினி வினா(டி) விடை.



நூர்
30-03-2009, 11:27 AM
சிஸ்டம் கிராஷ் ஆகி பைல்கள் தொலையக் கூடாது என்பதற்காக ஒரே பைலை C:, D:, E: என எல்லா டிரைவ்களிலும் பேக்கப் எடுத்து வருகிறேன். இப்போது இந்த டூப்ளிகேட் பைல்களை அழிக்க நான் விரும்புகிறேன். ஏதேனும் இதற்கான சாப்ட்வேர் குறித்து சொல்லவும். அல்லது வேறு வழிகளைக் கூறவும்.
-என்.ஜி. முருகன், ஊத்துக் கோட்டை

உங்கள் முயற்சியும் திட்டமும் நல்லதுதான். ஆனால் டிஸ்க் ஸ்பேஸ் சுருங்குகையில் டூப்ளிகேட் பைல்களை நீக்கவே விரும்புவோம். பைல்களைப் பாதுகாக்க வேறு வழிகளையும் நீங்கள் பின்பற்றலாம்.

இது குறித்து கம்ப்யூட்டர் மலரில் பல குறிப்புகள் தரப்பட்டுள்ளன. உங்களுக்கான இன்றைய கேள்விக்கான குறிப்பு. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் Double Killer என்ற இலவச சாப்ட்வேரை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டூப்ளிகேட் பைல்கள் எல்லாவற்றையும் அது கண்டுபிடித்து தரும். வேண்டியனவற்றை வைத்துவிட்டு தேவையற்றவற்றை நீங்கள் அழிக்கலாம். இந்த சாப்ட்வேரை www.download.com தளத்தில் இருந்து டவுண்லோடு செய்யுங்கள்.

எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். எக்ஸ்புளோரர் மூலம் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் பைல்களைப் பார்க்கையில் C:/windows போல்டரின் கீழ் Prefetch என்ற போல்டர் உள்ளது. அதிலுள்ள பைல்கள் தேவையற்றவை, வைரஸ் பைல்களால் உருவானவை என்று எண்ணி அழித்தேன். வழக்கம்போல் சிஸ்டம் ஒர்க் ஆனது. ஆனால் மீண்டும் அவை உருவாகியுள்ளன. என்ன வகை வைரஸ் இதனை ஏற்படுத்துகிறது? எப்படி நீக்கலாம்?
- தி. சிவசங்கரன், சென்னை

இவையெல்லாம் விண்டோஸ் இயக்கம் வேகமாகத் தொடங்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப் பட்ட சிஸ்டம் பைல்கள். விண்டோஸ் எக்ஸ்பிதான் அந்த பைல்களை உருவாக்குகிறது. எனவே அந்த பைல்கள் இருந்துவிட்டு போகட்டும். மீறி நீங்கள் அழித்தால் அந்த பைல்களை விண்டோஸ் எக்ஸ்பியே பழையபடி உருவாக்கிவிடும்.


எக்ஸெல் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். நாள், மாதம் குறித்து தகவல்கள் தந்துள்ளீர்கள். எனக்கு ஆண்டு, மாதம், தேதி ஆகியவற்றை கொடுத்தால் அதற்கான கிழமை என்னவென்று செல்லில் தெரிய வேண்டும். இதற்கான பார்முலா என்ன?


- கே. சுப்புலஷ்மி, கள்ளப்பாளையம்


2009-வது அண்டு 3-வது மாதம், 30-ம் தேதி என்ன கிழமை எனத் தெரிய வேண்டுமானால் ஏதாவது செல்லில் =DATE(2009,03,30) என்ற பார்முலாவைக் கொடுங்கள். கிடைக்கிற விடையை ரைட்-கிளிக் செய்து Format Cells கட்டளையைத் தேர்வு செய்யுங்கள். Number டேபைக் கிளிக் செய்து அதிலுள்ள Custom என்பதை Categoryயின்கீழ் தேர்வு செய்யுங்கள். Type என்பதில் dddd என டைப் செய்து OK செய்யுங்கள். கிழமை தெரியும்.
நன்றி:தினமலர்,கம்ப்யூட்டர்மலர்.30/03/2009

விகடன்
30-03-2009, 11:48 AM
இரட்டைச் சேமிப்பை அகற்றும் விடயம் மிகவும் பயனுள்ளதே.

எம்முடன் இதை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

நூர்
06-04-2009, 06:36 AM
கருத்திட்டமைக்கு நன்றி.
-----------------------------
நான் வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன். டிபால்ட்டாக Task Pane கிடைக்கிறது. இதனை மாற்ற முன்பு நீங்கள் எழுதியபடி Tools>Options கட்டளையைக் கொடுத்து Startup Task Pane என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டும் அது தெரிகிறது. ஏன்? இதனை முற்றிலுமாக நீக்க வழி என்ன?


–எஸ்.சின்ன ராஜ், கோயம்புத்தூர்

ஏன் மீண்டும் வருகிறது என்று புரியவில்லை. நீங்கள் செட் செய்த பின்னர் மீண்டும் அது வரக் கூடாது. இதனை நிரந்தரமாகத் தடுக்க ஒரு வழி உள்ளது. Start >Run கட்டளை கொடுத்து கிடைக்கும் பாக்ஸில் Regedit என்று டைப் செய்தால் ரெஜிஸ்ட்ரியை எடிட் செய்திட முடியும். இப்போது ரெஜிஸ்ட்ரி கிடைத்தவுடன்


HKEYCURRENTUSER/SOFTWARE/MICROSOFT/OFFICE/11.0/ COMMON/GENERAL என்ற கீயைத் தேடி அது இருக்குமிடம் கன்டு எடிட் செய்திடத் தயாராகுங்கள். இதன் வலது பக்கம் உள்ள பிரிவில் Do not dismiss File New Task Pane என்று இருப்பதைப் பார்க்கவும். அதில் இருமுறை கிளிக் செய்திடுங்கள். பின் அதற்கான மதிப்பு தரும் இடத்தில் 0 கொடுங்கள். இனி டாஸ்க் பேன் உங்களுக்குக் காட்டப்பட மாட்டாது.


நான் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு ஸ்லைட் பிரசன்டேஷன் தயாரித்தேன். இப்போது அருமையான சிறிய வீடியோ மூவி ஒன்று கிடைத்துள்ளது. இதனை அந்த பிரசன்டேஷனில் இணைத்தல் இன்னும் சிறப்பாக இருக்கும். எப்படி இணைப்பது என்று விளக்கவும்.


–கே.சுரேஷ் குமார், திண்டுக்கல்.

இதற்குப் பல வழிகள் உள்ளன சுரேஷ் குமார். உங்களுக்கு எது எளிதானது என்று பார்த்துப் பயன்படுத்தவும். Insert Movies and Sounds என்ற கட்டளை மூலம் இதனை நிறைவேற்றலாம். இதனைக் கொடுத்தவுடன் வீடியோவினைக் காட்ட விண்டோ ஒன்று காட்டப்படும்.

விண்டோவில் கிளிக் செய்தால் வீடியோ இயங்கும். இந்த பிரசன்டேஷனை எடுத்து செல்கையில் அந்த வீடியோ கிளிப்பினையும் அதே போல்டரில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும்.

அடுத்ததாக Insert Object என்ற கட்டளையைக் கொடுங்கள். கிடைக்கும் மெனுவில் Windows Media Player என்று இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். இவ்வழியிலும் வீடியோவினை இயக்கலாம். Insert Object கட்டளையைக் கொடுத்து அதில் Windows Media Player என்பதைத் தேர்வு செய்வது பவர்பாயிண்ட் தரும் இரண்டாவது வழியாகும்.

மீடியா பிளேயரை ரைட்-கிளிக் செய்து Properties என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஆப்ஜெக்டிற்கான கண்ட்ரோல்களை நீங்கள் கொண்டு வரலாம். Custom என்பதைக் கிளிக் செய்து வீடியோ பைலைத் தேர்வு செய்யலாம். வால்யூம் கண்ட்ரோல், ஸ்லைடர் பார் போன்றவற்றைக் கொண்டு வரவும், வீடியோவை பெரியதாக்கி முழுத் திறையில் வெளிப்படுத்தவும்,

அடையாளப்படுத்தப்பட்ட வீடியோ காட்சிக்கு தாவவும் இந்த Insert Object வழி யைப் பயன்படுத்தலாம். இந்த வழிகளில் இணைக்கப்படும் வீடியோ காட்சிகள் ரியல் வீடியோ மற்றும் குயிக் டைம் வீடியோக்களுக்கு உகந்தவை அல்ல.

ஆனால் இந்த வகை வீடியோ தான் இணைக்க வேண்டும் என்றால் Slide Show மெனுவின் கீழ் காணப்படும் Action Button வழியே சிறந்தது. பவர்பாயிண்டினுள் எந்த அப்ளிகேஷனையும் இயக்க Action Button உதவுமாதலால் அதைப் பயன்படுத்தி ரியல் வீடியோ அல்லது குயிக் டைம் பிளேயரை இயக்கிவிடலாம். Action Button கிளிக் செய்தால் பிளேயர் இயங்கி வீடியோ ஓட ஆரம்பிக்கும்.


நான் பேஜ் மேக்கர் மற்றும் வேர்ட் தொகுப்புகளைப் பயன்படுத்துகிறேன். பேஜ் மேக்கரில் இன்ஸெர்ட் கீயை அழுத்தினால் காப்பி செய்து வைத்திருக்கும் டெக்ஸ்ட் ஒட்டிக் கொள்கிறது. ஆனால் வேர்டில் ஒட்டுவதில்லையே ஏன்? வேர்டில் இந்த செயல்பாடு இல்லையா?


–கே. உதயகுமார், மதுரை


நீங்கள் சொல்வது சரிதான். நானும் இதே போன்ற சூழ்நிலையைச் சந்தித்து இருக்கிறேன். வேர்டில் இதற்கு தனியே ஒரு செட்டிங்ஸ் அமைத்தால் தான் இன்ஸெர்ட் கீ அழுத்துகையில் டெக்ஸ்ட் ஒட்டப்படும். முதலில் டூல்ஸ் (Tools) மெனு செல்லுங்கள்.

அதில் Options என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இப்போது பல டேப்கள் உள்ள விண்டோ கிடைக்கும். இதில் Edit டேபினைக் கிளிக் செய்திடவும். இங்கு "Use the INS Key for Paste" என்று இருக்கும்இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை இடவும்.

இனி ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடிவிடவும். அடுத்து இன்ஸெர்ட் கீ அழுத்தும் போதெல்லாம் காப்பி செய்து வைத்த டெக்ஸ்ட் ஒட்டிக் கொள்ளும்.


வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்று அமைத்தேன். இது டாகுமெண்ட்டின் இடது ஓரத்தில் அமைந்துள்ளது. இதனை நடுவில் கொண்டு வர முயற்சி எடுத்தால் சரியாக அமையவில்லை. எப்படிச் சரியாக நடுவில் கொண்டு வருவது?


–க. சுப்பிரமணியம், நெய்வேலி


எளிதாக இதனை மேற்கொள்ளலாம். டேபிளில் ரைட் கிளிக் செய்திடவும். வேர்டில் உடனே ஒரு காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். இந்த மெனுவில் Table Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டேபிள் ப்ராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

இதில் டேபிள் என்னும் டேப் தேர்ந்தெடுங்கள். பின் Center என்பதில் கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடுங்கள். உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்னவென்று நீங்கள் கூறவில்லை. உங்களுடையது விண்டோஸ் 97 ஆக இருந்தால் மேலே சொல்லப்பட்ட வழிகள் செயல்படாது.

கீழ்க்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும். டேபிளின் உள்ளாக கர்சரைக் கொண்டு செல்லவும். பின் Table menu விலிருந்து Table என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த மெனுவிலிருந்து டேபிள் செல்லின் உயரம் மற்றும் அகலத்தைத் (Cell Height and Width) தேர்ந்தெடுக்கவும்.

இப்போது செல்லின் அகலம் மற்றும் உயரம் செட் செய்திடும் டயலாக் பாக்ஸ் படுக்கை வரிசைக்கான டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் கிடைக்கும். இனி அங்கு இருக்கும் சென்டர் என்னும் ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


ஒரு பைலுக்கு பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டால் அதனைத் திறக்காமல் பிரிண்ட் செய்திட வழி உண்டா?

– என்.ஜி. முருகன், ஊத்துக் கோட்டை


எந்த பைலையும் திறந்து இயக்கத்திற்குக் கொண்டு வந்த பின்னரே அதனை அச்சிட முடியும். ஏதேனும் புரோகிராம் எழுதி அதனை அச்சிட முயற்சித்தாலும் அதற்கு பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டிருந்தால் புரோகிராம் முடங்கி நின்றுவிடும்.


நான் இன்டர்நெட் இணைப்பு பெற முடிவு செய்துள்ளேன். இதற்கான பணத்தை டெலிபோன் பில்லுடன் கட்ட வேண்டுமா? அல்லது தனியே கட்ட வேண்டுமா? மாதம் ஒரு முறையா? வருடம் ஒரு முறையா?


–ஆர். பாஸ்கரன், வத்தலக்குண்டு


நீங்கள் வாங்கும் இன்டர்நெட் இணைப்பைப் பொறுத்தது. இன்டர்நெட் இணைப்பிற்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டும். கால அடிப்படையில் (3 மாதம் – 100 மணி நேரம்) பெற்றால் முதலிலேயே கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் அதனைப் பயன்படுத்த வேண்டும்.

மீதமிருந்து இணைப்பை புதுப்பித்தால் ஏற்கனவே உங்கள் அக்கவுண்ட்டில் உள்ள பணம் சேர்ந்து கொள்ளும். டெலிபோன் வழி இணைப்பு எனில் இணைப்புக்கான பணத்தை தனியாக செலுத்திய பின்னர் டெலிபோன் பயன்படுத்துவது அதற்கான பில்லில் டெலிபோன் பயன்பாட்டுடன் இணைந்தே வரும்.

இப்போது தனியே இணைப்பின்றி டெலிபோன் எண்ணையே யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்துப் பயன்படுத்தலாம். இதற்கான கட்டணமும் டெலிபோன் பில்லுடன் தொலைபேசி அழைப்பு கட்டணமாக இணைந்தே வரும்.

நன்றி:தினமலர் கம்ப்யூட்டர்மலர்.06/04/09

நூர்
22-04-2009, 01:20 PM
என் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் செய்யப்படுகையில் அதன் விர்ச்சுவல் மெமரி மிகவும் குறைவு என்றும் அதனைச் சரி செய்வதற்காக சில வேலைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் செய்தி வருகிறது. ஆனால் ஒன்றும் நடை பெறுவதாகத் தெரியவில்லை. கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக செயல்படுகிறது. என்ன நடைபெறுகிறது என்று தெரியவில்லை.


–ஞா. திருவாசகம், கோயம்புத்தூர்


கம்ப்யூட்டரின் மெமரிக்கான இடம் நிறைந்து தொடர்ந்து இயங்க இடம் இல்லாத போது ஹார்ட் டிஸ்க் இடம் மெமரிக்காக எடுத்துக் கொள்ளப்படும். அதுவே விர்ச் சுவல் மெமரி ஆகும். இந்த இடம் கிடைக் கவில்லை என்றால் கம்ப்யூட்டர் மெதுவாகத் தான் இயங்கும்.

விண்டோஸ் தானாக அதன் ஹார்ட் டிஸ்க்கில் தேவையான இடத்தை ஒதுக்கி அமைத்துக் கொள்ளும். இதனைத்தான் பேஜிங் பைல் (Paging File) என்றும் கூறுவார்கள். உங்கள் கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க்கில் இடம் ஒதுக்கும் செயல்பாடு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆனால் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது. கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும். ஹார்ட் டிஸ்க்கில் இடம் மிச்சம் பிடிப்பதாக எண்ணிக் கொண்டு செயல்படாமல் இருக்க வேண்டாம். ஏனென்றால் இந்த இடம் இல்லை என்றால் கம்ப்யூட்டர் மெதுவாகத்தான் செயல்படும்.


Start பட்டனில் கிளிக் செய்து My Computer ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள Advanced என்ற டேப்பில் அடுத்து கிளிக் செய்திடவும்.

இங்கு Performance என்ற பிரிவில் Settings பட்டன் கிளிக் செய்திடவும். மீண்டும் இங்கு Advanced டேப்பில் கிளிக் செய்யவும். இதில் கீழாக உள்ள Change பட்டன் மீது அழுத்தவும். இங்கு உள்ள Customs Size என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.


இதில் உள்ள Initial மற்றும் Maximum சைஸ் பாக்ஸில் 2048 எனக் கொடுக்கவும். இது கம்ப்யூட்டரின் செயல்பாட்டிற்குத் தேவையான இடத்தைக் கொடுக்கும். பின் செட் பட்டனில் கிளிக் செய்து அதன் பின் மூன்று இடங்களில் OK என்டர் செய்து வெளியேறவும்.

உங்கள் கம்ப்யூட்டர் அது இயங்கத் தொடங்கும்போதே நிறைய புரோகிராம்களை இயக்கும் வகையில் செட் செய்திருந்தால் அவற்றில் தேவையானதை நீக்கவும். இதனால் ராம் மெமரி தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவது தடுக்கப்படும்.

வாசகர்களே, இது போன்ற சந்தேகங்களை எழுதுகையில் கம்ப்யூட்டர் தரும் பிழைச் செய்தியை அப்படியே தரவும்.
ஒரு CDRW பயன்படுத்தி வீட்டில் அலுவலகப் பணியை மேற்கொள்வதற்காக அலுவலகப் பைல்களைக் காப்பி செய்தேன்.

ஆனால் அதனைத் திறந்து பைல் எடிட் செய்தால் பைல் Read Only என்றும் மாற்றங்கள் அனுமதிக்கப்படமாட்டா என்று செய்தி கிடைக்கிறது. சிடி அழித்து எழுதும் தன்மை இருந்தும் ஏன் இது போன்ற செய்தி கிடைக்கிறது? இதற்கு என்ன செட் செய்திட வேண்டும்? வேறு வகை சிடி பயன்படுத்த வேண்டுமா?


–கே. எல். இராமாமிர்தம், காரைக்குடி


உங்களுடைய ஆதங்கம் புரிகிறது இராமாமிர்தம். சிடியோ அழித்து அழித்து எழுதும் தன்மை கொண்ட சாதாரண சிடியைக் காட்டிலும் சற்று விலை உயர்ந்தது. ஆனால் பைலை அழித்து எழுத முடியவில்லையே என்பதுதானே. நீங்கள் தேடி எடுத்த சிடி சரிதான். ஆனால் பைல் அழித்து எழுதும் பைலாக பதியப்படவில்லை.

RW என்பது Rewritable என்பதையே குறிக்கிறது. இந்த சிடியில் நீங்கள் நினைப்பது போல் பைலை அழித்து மீண்டும் அதிலேயே பழைய பிளாப்பியில் எழுதுவது போல் எளிதான வேலை அல்ல. இங்கு அந்த பைலின் புதிய காப்பி ஒன்றை அதே இடத்தில் சிடியில் பதியலாம்.

நீங்கள் பயன்படுத்தும் சிடி பர்னிங் சாப்ட்வேர் இதனை உங்களுக்கு செய்து கொடுக்கும். நீங்கள் விரும்பினால் சிடி முழுவதையும் அழித்து துடைத்து புதியதாக மாற்றும். அப்போது எடிட் செய்யக் கூடிய பைலாக உங்கள் பைல்களை காப்பி செய்திடுங்கள்.

நீங்கள் ஏன் தற்போது அதிகப் பயன்பாட்டில் இருக்கும் யு.எஸ்.பி. டிரைவ் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. வெகு எளிதாக கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி.போர்ட்டில் செருகி பைல்களை காப்பி செய்து பரிமாறிக் கொள்ளலாமே. எடுத்துச் செல்வதும் எளிது. இங்கு பைல் பர்னிங் பிரச்சினை எதுவும் கிடையாது.


எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் மூன்று ஒர்க்புக் முடிந்த பின்னர் நான்காவது ஒர்க்புக் தேவைப்படுகையில் இன்ஸெர்ட் அழுத்தி பின் ஒர்க்ஷீட் பிரிவில் கிளிக் செய்திட வேண்டியுள்ளது. மவுஸ் அல்லது கீ போர்டு மூலம் இதனை எளிதாக மேற்கொள்ள முடியாதா?

–சி. கமலம், மதுரை


பொதுவாக எக்ஸெல் பயன்படுத்துபவர்கள் பலர் இது போன்ற வழியில் தான் செல்கின்றனர். புதியதாக கூடுதலாக ஒர்க் புக் தேவை என்றால் Shift + F11 அழுத்துங்கள். கூடுதல் ஒர்க்புக் கிடைக்கும். இதே பணியை இன்னொரு கீ தொகுப்பும் செய்திடும். அது ஆல்ட் + ஷிப்ட் + எப் 1 (Alt + Shift + F1 ) இரண்டு ஷார்ட் கட் கீகள் உண்டு.


எக்ஸெல் ஒர்க் புக்கில் ரோக்களையும் காலங்களையும் தேர்ந்தெடுத்து ஹை லைட் செய்திட விரும்புகிறேன். ஷிப்ட் அழுத்தி ஆரோ கீகளை அழுத்தாமல் ஏதேனும் வழிகள் உண்டா?


–கா.ஆரோக்கியசாமி, பசுமலை, மதுரை


நெட்டு வரிசைகளையும் படுக்கை வரிசைகளையும் ஜஸ்ட் இரண்டே இரண்டு கீகளைப் பயன்படுத்தி ஹைலைட் செய்திடும் வசதி எக்ஸெல் தொகுப்பில் உண்டு. ஹைலைட் செய்யப்பட வேண்டிய நெட்டு வரிசை (காலம்) யில் ஒரு செல்லில் கர்சரை வைத்துக்கொள்ளுங்கள்.

பின் Ctrl + Spacebar கீகளை அழுத்தினால் அந்த நெட்டு வரிசை முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். அதே போல Shift+ Spacebar கீகளை அழுத்தினால் அந்த படுக்கை வரிசை முழுவதும் ஹைலைட் ஆகும். அடுத்து தொடர்ந்து வரிசைகளை ஹைலைட் செய்திட ஷிப்ட் கீயை இணைத்து ஆரோ கீகளைப் பயன்படுத்தலாம்.

நன்றி: தினமலர்,கம்ப்யூட்டர்மலர்.ஏப்ரல்,20, 2009

நூர்
04-05-2009, 11:32 AM
பிரிண்ட் ஸ்கிரீன் பயன்படுத்தித் திரைக் காட்சிகளை படங்களாக மாற்றிப் பயன்படுத்த விரும்பி முயற்சித்தேன். ஆனால் அடுத்தடுத்து காட்சிகளைப் படங்களாகப் பதியமுடியவில்லை.
இரண்டாவது முறை பிரிண்ட் ஸ்கிரீன் பட்டனை அழுத்துகையில் முதலில் எடுத்தது மறைந்து போய்விடுகிறது. தொடர்ந்து பல காட்சிகளை பிரிண்ட் ஸ்கிரீன் மூலம் எடுக்க என்ன வழி?

–எம். பிரதீப் குமார், மதுரை

ஸ்கிரீன் பிரிண்ட் எடுக்க விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்துள்ள சாப்ட்வேர் மூலம் கிளிப் போர்டில் ஒரு படத்தை மட்டுமே சேவ் செய்து வைக்க முடியும். ஏனென்றால் கிளிப் போர்டில் ஒரு படத்தை மட்டுமே ஒரு முறை சேவ் செய்திட முடியும்.

எனவே அடுத்தடுத்து படங்களை பிரிண்ட் ஸ்கிரீன் மூலம் எடுத்துக் கொள்ள விரும்பினால் அதற்கு வேறு தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். இதில் சிறந்த சாப்ட்வேர் ஒன்றினை அண்மையில் நான் இறக்கிப் பதிந்து பயன்படுத்தினேன். இதன் பெயர் Gadwin Print Screen என்பதாகும்.

இதனை http://www.gadwin.com/printscreen என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இதனை இறக்கி இன்ஸ்டால் செய்துவிட்டால் ஒரு சின்ன ஸ்கிரீனில் கேமரா இருப்பது போன்ற ஐகான் ஒன்று நோட்டிபிகேஷன் ஏரியாவில் இருக்கும்.

இதனை ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். டெஸ்டினேஷன் ஐகானில் இடது பக்கம் கிளிக் செய்திடவும். போல்டர் இல்லை என்று சொல்லி ஒன்றை உருவாக்கவா என்று கேட்கும். யெஸ் அழுத்தவும். அடுத்து Copy captured area to File என்றுஉள்ள இடத்தில் டிக் அடையாளம் அமைக்கவும். பின் அருகே தானாக பெயர் இடும் ஆப்ஷன் இருக்கும்.

அதிலும் கிளிக் செய்திடவும். அல்லது நீங்களாக பைலுக்கு ஒரு பெயர் கொடுக்கவும். இதன் மூலம் ஒரே வகை ஸ்கிரீன் ஷாட்களை குழுவாக அமைக்க முடியும். இதனை மூடி வைத்து பின் ஸ்கிரீன் பிரிண்ட் பட்டனை தொடர்ந்து அழுத்த அழுத்த படங்கள் உருவாகி உங்களுக்கு அதன் டைரக்டரியில் காத்திருக்கும்.

நன்றி: தினமலர்,கம்ப்யூட்டர்மலர்.04/05/09

நூர்
11-05-2009, 09:44 AM
சென்ற இரு இதழ்களுக்கு முன் Pinned Mode வைத்திடுங்கள் என்று எழுதியிருந்தீர்கள். இது எதனைக் குறிக்கிறது? விளக்கவும்.


–கா. சுப்புலஷ்மி, திருப்பூர்



கம்ப்யூட்டர் உலகில் Pinned என்பது பின் எடுத்து குத்தி வைப்பதனைக் குறிக்காது. ஒரு விண்டோவிற்குள்ளாக ஒரே இடத்தில் எளிதாக எடுத்து இயக்கும் வகையில் நாம் அமைத்திருப்பதனை இது குறிக்கும்.

இதில் புரோகிராம்கள், வெப்சைட்டுகள், அப்ளிகேஷன்கள் என எதனை வேண்டுமானாலும் பின் செய்து வைக்கலாம். எடுத்துக் காட்டாக நான் பயன்படுத்தும் விஸ்டா கம்ப்யூட்டரில் கீழ்க்கண்ட ஸ்டார்ட் மெனு காட்சியினை எடுத்துக் காட்டுகிறேன்.


இந்த மெனுவில் முதல் பாதியில் பின் செய்யப்படும் புரோகிராம்களைக் காணலாம். போட் டோ ஷாப், இல்லஸ்ட் ரேட்டர் மற்றும் ட்ரீம் வீவரை நான் தினந்தோறும் பயன்படுத்துவதால் அவற்றை பின் செய்து வைத்திருக்கிறேன்.

எந்த நேரத்திலும் இங்கிருந்து அவற்றை இயக்க முடியும். கீழ் பகுதியில் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்கள் பட்டியல் உள்ளது. நீங்கள் பயன்படுத்துவதற்கேற்ப இந்த பட்டியல் தானாக மாறும். எப்படி உங்களுக்கு வேண்டிய புரோகிராம்களை பின் அப் செய்வது என்று பார்ப்போமா! பின் அப் செய்ய வேண்டிய புரோகிராம் ஐகான் மீது,

அது டெஸ்க் டாப்பில் இருந்தாலும் அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். எழும் மெனுவில் Pin to Start Menu என இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்தால் உடனே இந்த ஸ்டார்ட் மெனுவில் அது பின் அப் புரோகிராமாக அமைந்திடும்.


நான் அடிக்கடி வேர்டில் டேபிள் உருவாக்கி பயன்படுத்த வேண்டியுள்ளது. டேபிளைத் தயாரிக்கையில் முதல் வரியில் அமைத்துவிட்டால் பின் டேபிளுக்கு மேலாக எந்த தலைப்பும் அடிக்க முடியவில்லை. முதல் ரோவில் அமைத்து பின் அதனை அழித்தும் அமைக்க முடியவில்லை. இதற்கு என்ன வழி?

–க. நல்லசிவம், துடியலூர்



இத்தனை நாளும் என்ன செய்தீர்கள் நல்லசிவம்? எந்த வரிசைக்கு மேலாக தலைப்பு அமைக்க வேண்டுமோ அதன் முதல் செல்லில் முதல் எழுத்துக்கு முன் கர்சரை வைத்துக் கொண்டு கண்ட்ரோல் மற்றும் என்டர் தட்டுங்கள். இப்போது கர்சர் மேலே சென்றிருக்கும். பின் உங்கள் இஷ்டம் போல மேலே இடம் அமைத்து தலைப்பும் அமைக்கலாம்.

நான் மைக்ரோசாப்ட் வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன். திடீரென ஒரு நாள் டூல்பாரினைக் காண முடியவில்லை. ரூலருக்கு மேல் ஒன்றும் இல்லை. பல நாள் இது போல் இருந்த பின் சிஸ்டம் டிஸ்க் பயன்படுத்திப் பார்த்தேன். அப்போதும் ஒன்றும் சரியாகவில்லை. ஆனால் பேஜ் மேக்கர் போன்ற புரோகிராம்கள் சரியாக இயங்குகின்றன. ஏன் இந்தக் கோளாறு? சரி செய்திட என்ன செய்ய வேண்டும்?



கா. சூரிய பிரகாசம், புதுச்சேரி



பிரச்சினை உங்களிடம் தான். நீங்களே உங்களை அறியாமல் ஏதோ செட்டிங்ஸ் அமைத்தி இதனை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். வேர்ட் எப்போதும் எந்த எந்த டூல்பார்களை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள் என்ற தேர்வை உங்களிடமே விட்டுவிடுகிறது. அதே போல அனைத்து டூல் பார்களையும் கூட வேண்டாம் என்று நீங்கள் அமைக்கலாம்.

இவ்வாறு மறைப்பதற்கான தேர்வை நீங்கள் உங்களை அறியாமல் எடுத்திருக்கலாம். அல்லது வேர்ட் தொகுப்பில் முழுத்திரையும் (full screen) காட்டும் வகையில் நீங்கள் செட் செய்திருக்கலாம். இந்த வகைத் தேர்வில் அனைத்து டூல்பார்களும் மறைந்து போகும்.

அப்படியானால் Alt + V அழுத்தவும். இப்போது View மெனு கிடைக்கும். இதில் U அழுத்தவும். உடனே நார்மல் வியூ கிடைக்கும். இந்நிலையிலேயே வேர்ட் தொகுப்பை மூடவும். இனி மீண்டும் வேர்ட் இயக்குகையில் full screen க்குச் செல்லாது. பின் View மெனு அழுத்தி அதில் டூல் பாரினையும் அழுத்தி உங்களுக்கு என்ன என்ன டூல் வேண்டுமோ அவற்றை டிக் செய்து பெறவும்.

நன்றி: தினமலர்:கம்ப்யூட்டர் மலர்மே 11,2009

நூர்
21-05-2009, 05:27 AM
என்னுடைய டெஸ்க் டாப்பில் உள்ள ஐகான்களுக்குப் பின்னால் பெயரை அடுத்து நல்ல சாலிட் கலரில் கட்டம் தெரிகிறது. இது என் வால் பேப்பரின் அழகைக் கெடுக்கிறது. இதனை மாற்றமுடியாதா?
இதனை எப்படி தீர்க்கலாம் என்பதனைச் சற்று விரிவாகவே பார்ப்போம்.



நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வு காணலாம். My Computer ல் ரைட் கிளிக் செய்து மெனுவினைப் பெறவும். இதில் Properties கட்டதில் கிளிக் செய்து அந்த விண்டோவினைப் பெறவும். இந்த விண்டோவில் Advanced டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் கீழ் Performance என்னும் பிரிவில் செட்டிங்ஸ் பட்டன் இருக்கும். அதன் மீது கிளிக் செய்திடவும். இனி Performance Options விண்டோ கிடைக்கும்.


இங்கு Visual Options டேப்பின் கீழாக உள்ள Custom ரேடியோ பட்டனை அழுத்தவும். இங்கு நிறைய செக் பாக்ஸ்களைக் காணலாம். இதில் "Use drop shadows for icon labels on the desktop" என உள்ள இடத்தில் டிக் இருந்தால் அதனை எடுத்துவிடவும். பின் Applly மற்றும் Oஓ கிளிக் செய்து வெளியறவும். இனி உங்கள் மனதைத் தொடும் வால் பேப்பரை நன்றாகப் பார்க்கலாம்.

நூர்
21-05-2009, 05:37 AM
சிறிய எண்களுக்கான ரோமன் எண்ணை நாம் அமைத்துவிடலாம். அதுவே பெரிய எண்ணாக இருந்தால் கண்டுபிடிக்க கம்ப்யூட்டரில் எந்த மொழியில் புரோகிராம் உள்ளது?



–கே. ஷண்முகம், சென்னை



இதற்கென புரோகிராமினை அமைக்க வேண்டியதில்லை. எம்.எஸ்.எக்ஸெல் போதும். இதற்கான பார்முலா =roman(NUMBER,FORM). இந்த பார்முலாவினை ஒரு செல்லில் கொடுக்கவும். கொடுத்து அதற்கான எண்களை அமைக்க வேண்டும். இதில் NUMBER என்பது நீங்கள் எந்த எண்ணுக்குத் தேடுகிறீர்களோ அந்த எண். என்ன பார்மட் தேவை என்பதை அடுத்தபடியாகத் தர வேண்டும். இதனை கொடுக்காமல் விட்டாலும் விடை கிடைக்கும். எடுத்துக் காட்டாக =roman(1999,1) என்ற பார்முலா MLMVLIV என்ற விடையைக் கொடுக்கும். =roman(1999,0) எனக் கொடுத்தால் MCMXCIX என்ற விடை கிடைக்கும். இரண்டாவது எண் கூடுதலாக இருப்பின் விடை சிம்பிளாகக் கிடைக்கும். . =roman(2006,0) என்பதன் விடை MMVI.
நன்றி: தினமலர்.

நூர்
25-05-2009, 10:41 AM
நான் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் ஏ.வி.ஜி. இலவச ஆண்டி வைரஸ் தொகுப்பு 7.5 னைப் பதிந்து பயன்படுத்தி வருகிறேன். சமீப காலமாக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குகையில் என்னுடைய இலவச ஆண்டி வைரஸ் பதிப்ப்பிற்கான சப்போர்ட் விரைவில் முடிந்துவிடும் என்று செய்தி கிடைக்கிறது. அப்படி என்றால் தொடர்ந்து இந்த ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டியதிருக்குமா?


–என்.சுந்தரேசன், திருவண்ணாமலை


நீங்கள் பயன்படுத்துவது ஏ.வி.ஜி. வழங்கிய பழைய ஆண்டி வைரஸ் தொகுப்பு. இதற்குப் பதிலாக புதிய இலவசத் தொகுப்பு இப்போது அதன் தளத்தில் கிடைக்கிறது. ஏ.வி.ஜி. நிறுவனம் கட்டணம் செலுத்திப் பெறும் புரோகிராம்களில் கூடுதல் வசதிகளை அளித்து வருகிறது. ஆனால் அதற்காக இலவச புரோகிராம் பயன்படுத்துபவர்களிடம் கட்டாயப்படுத்தி கட்டணம் பெறுவதில்லை. புதிய இலவச புரோகிராமினை www.grisoft.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதனைப் பதிந்து அவ்வப்போது தானாக அப்டேட் செய்திடும்படி செட் செய்து கொள்ளலாம். செட் செய்த பின் இந்த ஆண்டி வைரஸ் புரோகிராமினை இயக்கினால் அதுவே உங்களுக்கு ஆட்டோமேடிக் அப்டேட் செய்திட வழி காட்டும்.

என் கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் மெனுவினை ஸ்குரோல் செய்திடும்படி என் நண்பர் அமைத்துக் கொடுத்தார். இதனால் பல கட்டங்களாகக் காட்டப்படாமல் அது ஸ்குரோல் ஆகி மறையும். இப்போது பழைய படி நான் வைத்திருந்தது போல கட்டங்களாக அமைக்க ஆசைப்படுகிறேன். ஆனால் எப்படி அமைப்பது என்று தெரியவில்லை. படிப்படியாக வழி காட்டவும்.


–ச. யோகேஷ், நாகமலைப் புதுக்கோட்டை


இது போல உங்கள் கம்ப்யூட்டர்களில் நண்பர்கள் செட்டிங்ஸை மாற்றுகையில் அனுமதிக்காதீர்கள். அல்லது மீண்டும் பழையபடி எப்படிக் கொண்டு வருவது எனக் கேட்டுக் கொண்டு அனுமதியுங்கள். அதே போல நீங்களும் அடுத்தவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் இது போன்ற செட்டிங்ஸ்களை மாற்றாதீர்கள்.

சரி, இனி விஷயத்திற்கு வருவோம். பழையபடி நீங்கள் விரும்பும் வகையில் ஸ்டார்ட் மெனு செயல்பாட்டினை அமைப்போம். டாஸ்க்பாரில் காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்திடுவோம். பின் கிடைக்கும் மெனுவில் Properties என்னும் பிரிவில் இடது கிளிக் செய்திடவும். அடுத்து ஸ்டார்ட் மெனு டேப்பில் கிளிக் செய்து Customize பட்டனைத் தட்டவும். இங்கு Advanced டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு ஸ்குரோல் செய்து ஆப்ஷன்ஸ் லிஸ்ட்டின் நடுவே செல்லவும். இங்கு Scroll Programs என்னும் பாக்ஸில் கிளிக் செய்து அதில் உள்ள டிக் அடையாளத்தை அகற்றவும். பின் இந்த மாற்றங்களை சேவ் செய்திட இரண்டு விண்டோக்களிலும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் விரும்பியபடி ஸ்டார்ட் மெனு இயங்கும்.

வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன். என் நண்பர் பைலை சேவ் செய்கையில் எந்த பெயரும் இல்லாமல் சேவ் செய்திட முடியும் என்கிறார். ஆனால் தனக்கு வழி தெரியவில்லை என்று சொல்கிறார். ஒருவர் செய்ததைப் பார்த்ததாகவும் கூறுகிறார். இது உண்மையா? அப்படியானால் எப்படி சேவ் செய்திட முடியும்?


–கி. கிருஷ்ணமூர்த்தி, வத்தலக்குண்டு


பைலுக்கு ஒரு பெயர் கொடுக்காமல் சேவ் செய்திட முடியாது. ஆனால் கொடுக்கும் பெயர் மற்றவருக்குத் தெரியாமல் இருக்கச் செய்யலாம். அதாவது ஸ்கிரீனில் காட்டப்படமாட்டாது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு 255 என டைப் செய்திடுங்கள். எதுவுமே டைப் செய்யப்படாமல் காலி ஸ்பேஸ் உருவாகும். பைலும் சேவ் ஆகும். இந்த பைலைத் திறக்க இதே போல மீண்டும் டைப் செய்திட வேண்டும். இதனை மறந்துவிட்டால் பைல் அவ்வளவுதான்.

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மாணவர்களின் பெயர்கள், பாட பெயர்கள், வாங்கிய மதிப்பெண்கள் என பல காலங்களில் வைத்துள்ளேன். இவற்றை அப்படியே வேர்டில் ஒரு டேபிளாக அமைத்திட விரும்புகிறேன். டேபிள் அமைத்து ஒவ்வொன்றாக காப்பி செய்திடாமல் வேறு வழி உள்ளதா?


–என்.எஸ். மணியம், புதுச்சேரி


எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் நீங்கள் அமைத்துள்ள தகவல்கள் அடங்கியுள்ள நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளை அப்படியே செலக்ட் செய்திடவும். அதன் பின் வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் திறக்கவும்; அல்லது உருவாக்கவும். இதில் எடிட் (Edit) மெனு சென்று பேஸ்ட் ஸ்பெஷல் (Paste Special)என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அதில் கிடைக்கும் மெனுவில் Microsoft Office Excel Worksheet Object என்பதனைத் தேர்ந்தெடுத்து ஓகே செய்திடவும். மிக அழகாக டேபிள் அட்டவணைக் கட்டங்கள் போல தகவல்கள் அமைக்கப்பட்டுவிடும். இது போல பல வகைகளில் இந்த இரண்டு புரோகிராம்களும் இணைந்து செயல்படும்.

நான் அடிக்கடி என் நண்பர்களுக்கு படங்களை வேர்ட் அல்லது பிரசன்டேஷன் பைல்களில் பதிந்து அனுப்புகிறேன். ஏனென்றால் படங்களுக்கான தலைப்புகளை அமைக்க இவை உதவுகின்றன. ஆனால் பைல் சைஸ் மிகப் பெரிதாக அமைந்துவிடுகிறது. இவற்றை எப்படி கம்ப்ரஸ் அல்லது ஷ்ரிங்க் செய்வது?


–ஆர். சியாமளா, கோயம்புத்தூர்


வேர்ட் அல்லது பவர்பாய்ண்ட்டில் உள்ள ஒரு படத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Show Picture Toolbar என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் Compress Pictures என்னும் ஐகானில் கிளிக் செய்திடவும். அதன் பின் All pictures in document என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் Web/Screen என்பதைத் தேர்ந்தெடுக் கவும். பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும். படங்களின் அளவு சுருங்கிவிடும்.

என்னுடைய கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கும்போதெல்லாம் "Your computer might be at risk" என்று ஒரு செய்தி திரையில் காட்டப்படுகிறது. இதனை எப்படி நிறுத்துவது? நான் ஆட்டோமேடிக் அப்டேட் செய்வதை நிறுத்திவிட்டேன். ஏனென்றால் அதனை இயக்கினால் என்னுடைய 21 ஜிபி ஹார்ட் டிஸ்க் பயன்படுத்தப்படுகிறது. என்னுடைய கம்ப்யூட்டர் மிக நன்றாக எனக்கான பணிகளுக்காக இயங்குவதால் எனக்கு எந்த அப்டேட் பைல்களும் தேவையில்லை. என்னுடைய பாலிசி இதில் என்னவென்றால் ஒரு குதிரை நன்றாக ஓடுகிறதா? அப்படியானால் தேவையற்ற புல்லைப் போடாதே என்பதுதான்.


–கே. கருணாகரன், சிவகாசி


உங்களுக்கு வரும் இந்த மெசேஜை ஆப் செய்துவிடலாம். ஆனால் ஆட்டோமேடிக் அப்டேட்டை முடக்கிவைப்பது முற்றிலும் தவறான முடிவு கருணாகரன். இதை ஏன் தொடக்கத்திலேயே கூறுகிறேன் என்றால் உங்களுக்கு ஆப் செய்திடும் வழியைக் கூறினால் இதே போல் மற்றவர்களும்க் மேற்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். ஓகே. உங்கள் கம்ப்யூட்டர் மிக நன்றாக இயங்கிக் கொண்டிருக் கிறதா? அப்படி என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உள்ளே பிரச்சினை இருக்கலாம். அது தற்சமயத்திற்கு வெளிப்படை யாகத் தெரியாமல் இருக்கலாம். ஆட்டோமேடிக் அப்டேட் என்பது உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏற்படும் பிரச்சினைகளை உங்களுக்குத் தெரியாமல் தீர்த்து வைத்திடத்தான் தரப்பட்டுள்ளது.


இதனை செட் செய்திட Start>> Control Panel>> Security Center எனச் செல்லவும். இங்கு இடது பக்கம் உள்ள ‘Change the way Security Center alerts me’ என்பதில் கிளிக் செய்திடவும். அங்கு Automatic Updates என்ற செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தைன் மீது கிளிக் செய்து அதனை நீக்கவும்.

பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும். இத்துடன் பயர்வால் மற்றும் வைரஸ் பாதுகாப்பு குறித்தவற்றையும் இதே விண்டோவில் ஆப் செய்துவிடலாம். ஆனால் மீண்டும் எச்சரிக்கிறேன். இது உங்கள் கம்ப்யூட்டரை முற்றிலும் பாதுகாப்பற்றதாக மாற்றிவிடும். மேலும் அது போல் மாறிவருவது உங்களுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கப்பட மாட்டாது. ஆட்டோமேடிக் அப்டேட் இல்லை என்றாலும் நீங்களாக மைக்ரோசாப்ட் தளம் சென்று அப்டேட்களை டவுண்லோட் செய்து இணைத்துக் கொள்வதே நல்லது.
நன்றி:தினமலர்.

நூர்
01-06-2009, 10:59 AM
வேர்ட் தொகுப்பு குறித்த நோட்ஸ்களில் நார்மல் டெம்ப்ளேட் என்று அடிக்கடி படிக்கிறேன். இது எதனைக் குறிக்கிறது? இதனால் என்ன நன்மை?
–செ.விஜயகுமார், விழுப்புரம்

வேர்ட் தொகுப்பில் நார்மல் டெம்ப்ளேட் என்பது அத்தொகுப்பிலேயே வடிவமைக்கப்பட்ட டாகுமெண்ட் ஒன்றின் கட்டமைப்பாகும். ஒரு புதிய டாகுமெண்ட்டைத் தொடங்குகையில் இதுவே உங்களுக்குப் பணிபுரிய கிடைக்கும். மார்ஜின், எழுத்து வகை, ஸ்டைல் போன்றவை இதில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதனை மாற்றுவதற்கும் இதிலேயே வசதிகள் தரப்பட்டிருக்கும்.

நீங்கள் இந்த நார்மல் டெம்ப்ளேட்டினை மாற்றினால் அதன் பின் அமைக்கப்படும் அனைத்து டாகுமெண்ட்களும் அதே வடிவமைப்பில் உருவாக்கப்படும். Normal.dot என்பது இந்த டெம்ப்ளேட் பைலின் பெயர். இது Template எனப்படும் போல்டரில் இருக்கும்.

எந்த டைரக்டரியில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தீர் களோ அந்த டைரக்டரியில் இதனைக் காணலாம். இந்த பைலை நீங்கள் அழித்துவிட்டால் அடுத்த முறை வேர்ட் தொடங்கும்போது ஏற்கனவே இருந்த செட்டிங்ஸ் அடிப்படையில் புதிய நார்மல் டெம்ப்ளேட் ஒன்றை அது தானாக உருவாக்கிக் கொள்ளும்.

என் நண்பரின் கம்ப்யூட்டரில் வேர்ட் தொகுப்பு தொடங்குவது வித்தியாசமாக இருக்கிறது. இதனை ஒருவர் செட் செய்ததாக நண்பர் கூறுகிறார். எப்படி செட் செய்வது? அதில் எத்தனை வகைகள் உள்ளன?

–கா. நல்லதம்பி, திண்டுக்கல்

வேர்ட் தொடங்குவதனை நாம் விரும்பியபடி அமைக்கலாம். அதற்கான வழிகளும் எளிதுதான். வேர்ட் தொகுப்பின் அடிப்படை இயக்க பைலின் பெயர் Winword.exe ஆகும். இது புரோகிராம் பைல்ஸ் போல்டரில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் இன்ஸ்டால் செய்த இடத்தில் இருக்கும்.

இந்த பைலுக்கு ஒரு கட்டளை வரி ஷார்ட் கட் ஐகான் வழி கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஷார்ட் கட் ஐகான் டெஸ்க் டாப் அல்லது குயிக் லாஞ்ச் பாரில் இருக்கும். இந்த ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். பின் ப்ராபர்ட்டீஸ் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஷார்ட் கட் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் கமாண்ட் லைன் பாக்ஸ் கிடைக்கும்.

இதில் வேர்ட் பைல் திறந்திட அதன் பாத் உடன் கட்டளை வரி இருக்கும். வழக்கமாக இது "C:\Program Files\Microsoft Office\ Office\Winword.exe"என இருக்கும். சில கம்ப்யூட்டர்களில் இது வேறாக இருக்கலாம். இந்த வரியின் இறுதியில் கீழே தரப்பட்டுள்ள ஸ்விட்ச்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை அமைக்கலாம்.


1. எந்த ஸ்விட்சும் அமைக்கப்படாவிட்டால் வேர்ட் புதிய டாகுமெண்ட் ஒன்றுடன் தொடங்கும். ஏற்கனவே தொடங்கப்பட்டு எடிட் செய்யப்பட்ட பைல்கள் இருப்பின் அவை பட்டியலிடப்படும்.



2./n என்ற ஸ்விட்ச்சை இணைத்தால் வேர்ட் புதிய காலி டாகுமெண்ட் இல்லாமல் தொடங்கப்படும்.


3. /w என்ற ஸ்விட்ச் புதிய காலி டாகுமெண்ட் ஒன்றுடன் வேர்ட் தொடங்கும்.


4./ttemplatename என்ற ஸ்விட்சில் நீங்கள் தயார் செய்த டெம்ப்ளேட் பைலின் பெயரை templatename என்ற இடத்தில் அமைத்தால் அந்த டெம்ப்ளேட்டிற்கு ஏற்றபடி புதிய டாகுமெண்ட் அமைக்கப்படும்.


5. /a என்ற ஸ்விட்ச் வேர்ட் தொகுப்பினைத் தொடங்கி ஆட் இன் தொகுப்புகள் மற்றும் நார்மல் டெம்ப்ளேட் பைல்களுடன் இயங்குவது தடுக்கப்படும். இந்த ஸ்விட்ச் இணைக்கப்பட்ட பின் உருவாக்கப்படும் பைல்களை படிக்கவும் எடிட் செய்திடவும் முடியாது.


6. /m என்ற ஸ்விட்ச் ஆட்டோ எக்ஸிகியூட்டபிள் மேக்ரோக்கள் இன்றி வேர்ட் தொடங்கிட வழி வகுக்கும்.


7. /mmacroname என்ற ஸ்விட்ச் மேக்ரோ நேம் என்ற இடத்தில் தரப்பட்டுள்ள மேக்ரோவின் பெயரில் உள்ள மேக்ரோ பைலை இயக்கும். மற்ற மேக்ரோ இயங்குவதனைத் தடுக்கும்.



டாகுமெண்ட் அமைக்கையில் ஏற்கனவே அமைக்கப்பட்டு கிடைக்கும் டிபால்ட் மார்ஜினை எப்படி மாற்றி அமைப்பது? அதே போல எழுத்து வகையினையும் நான் விரும்பியபடி அமைப்பதற்கும் வழி சொல்லவும்.



–சி. ஏழுமலை, கண்டமனூர்



File மெனுவில் Page Setup தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Margin என்ற டேப்பின் மீது கிளிக் செய்திடவும். பின் உங்களின் விருப்பப்படி மார்ஜின் செட் செய்திடவும். அதன் பின் அதே திரையில் உள்ள Default என்பதில் கிளிக் செய்திடவும்.

உடனே வேர்ட் ஓர் எச்சரிக்கை செய்தியினை வழங்கும். இந்த மாற்றம் இனிமேல் அமைக்கப்படும் வேர்ட் டாகுமெண்ட்களைப் பாதிக்கும் என்றுசொல்லும். சரி என இசைவினைக் கொடுத்தால் புதிய மார்ஜின் அமலுக்கு வரும்.



டிபால்ட் எழுத்தைப் பொறுத்தவரை Format மெனு சென்று அதில் Font என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் நீங்கள் எந்த எழுத்துவகை எப்படி இருக்க வேண்டும் (அளவு, சாய்வு, போல்டு) என விரும்புகிறீர்களோ அதை எல்லாம் அமைக்கவும். அதன்பின் Default பட்டனை அழுத்தவும். வேர்ட் தரும் எச்சரிக்கையினை தள்ளிவிட்டு ஓகே அழுத்தி வெளியே வரவும். இனி நீங்கள் அமைத்த மார்ஜின் மற்றும் எழுத்து வகை புதியதாக அமைக்கப்படும் டாகுமெண்ட்களில் அமையும்.



வேர்டில் பேஜ் நம்பர், ஹெடர், புட்டர், புட் நோட் மற்றும் எண்ட் நோட் ஆகியவற்றில் உள்ள டிபால்ட் எழுத்து வகையினை எப்படி மாற்றுவது? பார்மட் மெனுவில் இதற்கான இடம் இல்லையே? நான் வேர்ட் 2000 பயன்படுத்தி வருகிறேன்.
–எஸ். ரமேஷ் பாபு, புதுச்சேரி

இவை எல்லாம் Style (ஸ்டைல்) சம்பந்தப் பட்டவையாகும். இவற்றில் எதனை வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால் மாற்றங்களை Template பைலில் மாற்ற வேண்டும். நீங்கள் வழக்கமாக நார்மல் டெம்ப்ளேட்டினைப் பயன்படுத்துவதாக இருந்தால் கீழ்க்கண்டவாறு செயல்படவும்.


நீங்கள் வேர்ட் 2000 பயன்படுத்துவதாக எழுதி இருக்கிறீர்கள்.

1. Format மெனுவில் இருந்து Style என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.

2. List பாக்ஸில் All Styles என்பதனைக் கிளிக் செய்திடவும்.

3. Style பாக்ஸில் எந்த ஸ்டைலுக்கு நீங்கள் மாற விரும்புகிறீர்கள் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. இதில் Modify என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Format என்பதில் கிளிக் செய்து ஸ்டைலில் எதனை மாற்ற வேண்டுமோ (Font, Paragraph) அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

5. பின் நீங்கள் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்தவும். அதன் பின் ஓகே கிளிக் செய்திடவும்.

6. அடுத்து Add to Template என்ற செக்பாக்ஸில் கிளிக் செய்திடவும். நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் டெம்ப்ளேட் பைலில் சேர்க்கப்பட்டு டிபால்ட்டாக இருக்க வேண்டும் என்று விரும்பினால்தான் இந்த டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். அப்படி செக் செய்யவில்லை என்றால் நீங்கள் ஏற்படுத்திய இந்த மாற்றங்கள் எல்லாம் அப்போதைய டாகுமெண்ட்டில் மட்டுமே அமையும்.

7. இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதே மாற்றங்களை எக்ஸ்பி / 2003 தொகுப்புகளில் எப்படி ஏற்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. Format மெனுவில் இருந்து Styles and Formattingஎன்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.


2. வலது பக்கம் உள்ள டாஸ்க் பேனில் �ஷா லிஸ்ட்டில் ஆல் ஸ்டைல்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.



3. எந்த வகை ஸ்டைல் வேண்டுமோ அதில் ரைட் கிளிக் செய்திடவும். அதன் பின் Modify என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.


4. இதில் Format என்பதில் கிளிக் செய்து ஸ்டைலில் எதனை மாற்ற வேண்டுமோ (Font, Paragraph) அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

5. பின் நீங்கள் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்தவும். அதன் பின் ஓகே கிளிக் செய்திடவும். ஓகே கிளிக் செய்திடவும்.

6. அடுத்து Add to Templateஎன்ற செக்பாக்ஸில் கிளிக் செய்திடவும். நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் டெம்ப்ளேட் பைலில் சேர்க்கப்பட்டு டிபால்ட்டாக இருக்க வேண்டும் என்று விரும்பினால்தான் இந்த டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். அப்படி செக் செய்யவில்லை என்றால் நீங்கள் ஏற்படுத்திய இந்த மாற்றங்கள் எல்லாம் அப்போதைய டாகுமெண்ட்டில் மட்டுமே அமையும்.

7. இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

ஆட்டோ டெக்ஸ்ட் என்பது என்ன? வேர்டில் இது எதற்கு பயன்படுகிறது?
–எஸ். வினயா, காரைக்கால்

நாம் வேர்ட் தொகுப்பில் அடிக்கடி பயன்படுத்தும் டெக்ஸ்ட், படம், டேபிள், கிராபிக்ஸ், பீல்ட் ஆகியவற்றை ஸ்டோர் செய்து தேவைப்படும்போது டெக்ஸ்ட்டில் செருகலாகப் பயன்படுத்துவதே ஆட்டோ டெக்ஸ்ட். வேர்ட் தொகுப்பு பல்வேறு ஆட்டோ டெக்ஸ்ட் அமைப்புடன் தரப்படுகிறது. Insert மெனு சென்று அதில் Auto Text பிரிவில் இவை என்னவென்று பார்க்கலாம்.

அல்லது Auto Text Toolbar செலக்ட் செய்து All Entries என்பதைத் தேர்ந்தெடுத்து இவற்றைப் பார்க்கலாம். இவை மட்டுமின்றி நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சில சொற்கள், சொற் கோவைகள், படங்கள் ஆகியவற்றையும் ஆட்டோ டெக்ஸ்ட்டில் இணைக்கலாம். அதற்கு கீழ்க்காணும் வகையில் செயல்பட வேண்டும்.

வழி 1:



1. Tools மெனுவில் இருந்து AutoCorrect அல்லது AutoCorrect Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் விண்டோவில் AutoText என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

2. நீங்கள் விரும்பும் Auto Text என்ட்ரியை AutoText entries hereஎன்ற பாக்ஸில் டைப் செய்திடவும். பின் Add என்பதில் கிளிக் செய்திடவும்.

3. Show AutoComplete tip என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும்.

4. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

நீங்கள் கொடுத்த ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரியில் உள்ள சொல்லில் நான்கு அல்லது ஐந்து எழுத்துக்களை நீங்கள் டாகுமெண்ட்டில் டைப் செய்தவுடன் வேர்ட் ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரியில் உள்ளதைக் காட்டும். அது உங்களுக்குத் தேவை என எண்ணினால் உடனே என்டர் தட்ட நீங்கள் கொடுத்த டெக்ஸ்ட் கிடைக்கும். ஆட்டோ கம்ப்ளீட் ஆப் செய்யப்பட்டிருந்தால் ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரீஸ் களை ஆட்டோ டெக்ஸ்ட் டூல் பார் மூலம் இணைக்கலாம்.
வழி 2:

1. View மெனுவில் இருந்து Toolbars என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதிலிருந்து AutoText என்பதில் கிளிக் செய்திடவும். இதில் AutoText toolbarஎன்பதை இயக்கவும்.

2. அடுத்து நீங்கள் விரும்பும் AutoText என்ட்ரிக்கான டெக்ஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும். பின் AutoText toolbarல் உள்ள New பட்டனில் கிளிக் செய்திடவும்.

3. இதற்கு ஒரு ஷார்ட்கட் பெயர் ஒன்றை உருவாக்கவும்.

4.இந்த ஷார்ட் கட்டினைப் பயன்படுத்தி டெக்ஸ்ட் அமைத்திட இந்த ஷார்ட் கட் என்ட்ரியை டைப் செய்திடவும். உடன் F3அழுத்தவும்.

வேர்ட் இந்த ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரிகளை அந்த கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துக் கொள்கிறது. எனவே புதியதாக அமைக்கப்பட்ட ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரி அந்தக் கம்ப்யூட்டரில் தான் பயன்படுத்த முடியும். நெட்வொர்க்கில் கூட அடுத்த கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியாது.
நன்றி:தினமலர் கம்ப்யூட்டர்மலர்.01/06/09

நூர்
01-06-2009, 10:59 AM
நன்றி.

நூர்
08-06-2009, 09:53 AM
கேள்வி: ஐ.எஸ்.பி. என்று அடிக்கடி எழுதுகிறீர்கள்.இதன் முழு விரிவாக்கம் என்ன? இன்டர்நெட்டில் இது எதனைக் குறிக்கிறது?

–எஸ். தில்லைநாயகம், சிதம்பரம்


பதில்: ஐ.எஸ்.பி. என்பது Internet Service Provider என்பதன் சுருக்கம். உங்களிடம் கட்டணம் பெற்றுக் கொண்டு இன்டர்நெட் இணைப்பை உங்களுக்குத் தரும் நிறுவனமே அவ்வாறு அழைக்கப்படுகிறது. நீங்கள் டயல் செய்து உங்கள் கம்ப்யூட்டர் வழியாக இன்டர்நெட் இணைப்பைப் பெறுகையில் இணைப்பைப் பெற்றுத் தரும் நிறுவனம் அது. அந்நிறுவனத்தின் சர்வர் வழியாகத்தான் இணைய வலையில் இணைகிறீர்கள்.


கேள்வி: சில வேளைகளில் புரோகிராம்களை மூடுகையில் பெரிய அளவில் டெக்ஸ்ட் கிளிப் போர்டில் இருக்கிறது. அதனை வைத்துக் கொள்ளவா? என்ற கேள்வி கேட்கப் படுகிறது. புரோகிராமினையே மூடுகையில் ஏன் இந்தக் கேள்வி? அப்படியே கிளிப் போர்டில் பைல் அல்லது டெக்ஸ்ட் இருந்தால் என்ன கெட்டுவிடப் போகிறது?

கே.கருணாநிதி, காரைக்கால்


பதில்: நீங்கள் எந்த புரோகிராமினைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் அதில் கட் அல்லது காப்பி கட்டளையைப் பயன் படுத்துகையில் அவ்வாறு செய்யப் படும் டெக்ஸ்ட் அல்லது படம் அல்லது எந்த ஒரு ஆப்ஜெக்ட்டும் விண்டோஸ் இயக்கத் தின் கிளிப் போர்டில் வைக்கப் படும். புரோகிராம் மூடப்பட்டாலும் அது அங்கேயேதான் தங்கும். நீங்கள் வேறு புரோகிராமினைத் திறந்து அங்கும் கிளிப் போர்டில் உள்ள டெக்ஸ்ட்டை ஒட்டிக் கொள்ளலாம்.


இந்த கிளிப் போர்டில் ஒட்டப்படும் பிட் ராம் மெமரியில் இடம் எடுத்துக் கொள்கிறது. இதில் ஒட்டுவதற்கான கட்டளை எல்லாம் கொடுக்க வேண்டியதில்லை. கிளிப் போர்டுக்குச் செல்லும் அனைத்தும் ராம் மெமரியில் தான் இருக்கும்.


எனவே மிக அதிகமான அளவிலான படம் ஒன்றை காப்பி செய்தால் அது அதே அளவில் ராம் மெமரியை எடுத்துக் கொள்ளும். ராம் மெமரி என்பது நம் கம்ப்யூட்டர் இயங்கத் தேவையானத் தற்காலிக சமாச்சாரங்கள் தங்கி இயக்கப்படும் இடமாகும். இதில் அதிகமான இடத்தை ஒன்று எடுத்துக் கொண்டால் கம்ப்யூட்டர் இயக்கம் மெதுவாகும்.


எடுத்துக்காட்டாக 32 எம்பி ராம் மெமரி இருக்கையில், நான் 10 எம்பி பட பைல் ஒன்றை கிளிப் போர்டுக்கு காப்பி செய்தால் அதனை அழிக்கும் வரை தொடர்ந்து அந்த இடம் காலி செய்யப்படாமல் இருக்கும். எனவே தான் ஒரு புரோகிராமினை மூடுகையில் உங்களுக்கு அந்த எச்சரிக்கை கிடைக்கிறது. எனவே அந்த எச்சரிக்கை கிடைக்கையில் அது வேண்டாம் என நம் விருப்பத்தினைத் தெரிவித்துவிடலாம். கிளிப் போர்டு காலி ஆவதுடன் ராம் மெமரியும் ரிலீஸ் ஆகும். அல்லது ஏதேனும் ஒரு சிறிய எழுத்தைக் காப்பி செய்தால் பெரிய பட பைல் எடுத்துக் கொண்டிருக்கும் இடம் காலி செய்யப்பட்டு சிறிய அளவிலேயே கிளிப் போர்டும் ராம் மெமரியும் பயன் படுத்தப்படும்.


நீங்கள் Clipboard Viewer Edit Delete என்று சென்றும் அதில் உள்ளவற்றைக் காலி செய்திடலாம். கிளிப் போர்டு வியூவர் செல்வதற்கு Start, Programs, Accessories, System Tools எனச் செல்லவும்.
நன்றி:தினமலர் கம்ப்யூட்டர்மலர் 08/06/09

பாலகன்
08-06-2009, 12:05 PM
மிக மிக பயனுள்ள செய்திகளை நமக்காக தொகுத்து அளித்து வரும் நூர் அவர்களுக்கு என் நன்றி

நேசம்
09-06-2009, 08:39 AM
சிரமம் பார்க்கமால் பதிந்து வரும் நூருக்கு நன்றி

அமரன்
15-06-2009, 09:08 AM
நண்பர்களே!

வினா விடையாக அமைந்த பயனுள்ள இத்திரியை மேலும் பயனுள்ளதாக்க உங்கள் வினாக்களையும் கேளுங்கள். வினாடியில் விடை கிடைக்க ஏதுவாக இருக்க திரியின் தலைப்பையும் கட்டமைப்பும் மாற்றியுள்ளேன்.

நூர்
15-06-2009, 10:13 AM
கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
ஆகா! அருமையான தலைப்பு வைத்ததற்கும் நன்றி.
----------------------------------------------------------

விஸ்டா சிஸ்டம் என் கம்ப்யூட்டரில் உள்ளது. குயிக் லாஞ்ச் பாரில் புரோகிராம் ஐகான்களை எப்படி இணைப்பது என்றே தெரியவில்லை. பல முறை முயற்சி செய்தும் முடியவில்லை. சற்று விளக்கவும்.


– ஆர். ஞான சேகரன், கோயம்புத்தூர்


நீங்கள் என்ன செய்தீர்கள். எப்படி முயற்சித்தீர்கள் என்று கடிதத்தில் எழுதவே இல்லையே. சரி. பொதுவான விளக்கத்தைத் தருகிறேன். விஸ்டா இயக்கத்தினை பயன்படுத்துபவர்களுக்கு முதலில் வரும் பல சிக்கல்களில் இதுவும் ஒன்று. வீட்டில் எக்ஸ்பி பயன்படுத்தி வரும் நான் அலுவலகத்தில் விஸ்டாவிற்குச் செல்கையில் தடுமாறியிருக்கிறேன்.


முதலில் குயிக் லாஞ்ச் பார் என்ன என்பதுகுறித்து பார்க்கலாம். இது ஸ்டார்ட் பட்டன் அருகே அதன் வலது பக்கத்தில் அமைக்கப்படும் புரோகிராம்களின் ஐகான்கள் வரிசை.இவை மினி ஐகான்கள் போலத் தோற்றமளிக்கும். பார்ப்பதற்கு சித்திரக் குள்ளர்கள் போல வேடிக்கையாகத் தோற்றமளிக்கும். இவ்வாறு இவற்றை அமைப்பதன் காரணம் என்ன? நீங்கள் ஏதேனும் புரோகிராமினை இயக்க டெஸ்க்டாப் பெற்று அதில் உள்ள புரோகிராமின் ஐகான் மீது டபுள் கிளிக் செய்வீர்கள்.

இல்லை என்றால் ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று புரோகிராமின் பிரிவு சென்று அதன் இ.எக்ஸ்.இ. பைல் மீது கிளிக் செய்வீர்கள். இந்த சிரமம் எதுவும் இல்லாமல் ஒரே கிளிக்கில் புரோகிராமினைத் திறக்கும் ஐகான்களே இவை. அப்படியானால் நாம் அனைத்து புரோகிராமின் ஐகான்களையும் இங்கு வைக்கலாமா? வைக்கலாம் தான்; ஆனால் ஏன்? நாம் அடிக்கடி பயன்படுத்தும் அல்லது ரெகுலராகப் பயன்படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை மட்டும் வைத்தால் போதும். சரி, எப்படி இங்கு வைப்பது?


1. ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்திடவும்.


2. பின் ஆல் புரோகிராம்ஸ் லிஸ்ட் சென்று நீங்கள் குயிக் லாஞ்ச் பாரில் வைத்துப் பயன்படுத்த விரும்பும் புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கவும்.


3.பின் அதில் ரைட் கிளிக் செய்து Add to Quick Launch என்பதில் கிளிக் செய்திடவும். இதன்பின் இந்த புரோகிராமின் ஐகான் குயிக் லாஞ்ச் பாரில் சேர்ந்துவிடும். தேவைப்படும்போது இதன் மீது ஒரு முறை கிளிக் செய்தால் அது இயக்கப்படும்.

இந்த வழி பிடிக்கவில்லை என்றால் இன்னொரு வழியும் உள்ளது. புரோகிராமின் மீது ரைட் கிளிக் செய்து அப்படியே இழுத்து வந்து குயிக் லாஞ்ச் பாரின் மீது கொண்டு வந்து விட்டுவிட வேண்டியதுதான்.

ஐகானை குயிக் லாஞ்ச் ஏரியாவில் வைத்த நீங்கள் விரும்பவில்லை என்றால் அந்த புரோகிராமினை நீக்குவது எப்படி என்றும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? குயிக் லாஞ்ச் பாரில் உள்ள ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் டெலீட் மீது கிளிக் செய்திட ஐகான் மறைந்து போகும்.

என் கம்ப்யூட்டரில் மட்டும் நான் திறந்து வைத்துள்ள புரோகிராமின் விண்டோவினை இயக்க, அப்போது இயங்கும் அனைத்து புரோகிராம் விண்டோக்களையும் மூட வேண்டியுள்ளது. மற்ற கம்ப்யூட்டரில் உள்ளது போல திறந்திருக்கும் புரோகிராம்களைக் கீழாகக் காட்டும் நீள பட்டை இல்லை. ஒவ்வொரு முறையும் இது தீராத பிரச்சினையாக உள்ளது. இதனை எப்படித் தீர்க்கலாம்?


– கே. எஸ். பாண்டியன், மதுரை


உங்களின் நீண்ட கடிதத்திலிருந்து கம்ப்யூட்டரின் டாஸ்க் பார் அனைத்து விண்டோக்களுக்கும் மேலாக இல்லை என்று தெரிகிறது. இந்த டாஸ்க் பார் அனைத்து விண்டோக்களுக்கும் மேல் இருந்தால் தான் நாம் விரும்பும் புரோகிராம்களை தேவைப்பட்ட போதெல்லாம் திறந்து இயக்க முடியும். பின் மினிமைஸ் செய்து வைக்க முடியும்.


உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள். கீழே கொடுத்துள்ள குறிப்புகள் விஸ்டா மற்றும் எக்ஸ்பி ஆகிய இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பயன்படுத்தலாம்.


1. ஸ்டார்ட் மெனுக்கு அடுத்தபடியாக உள்ள டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். எழுந்து வரும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.


2. இப்போதுகிடைக்கும் விண்டோவில் இரண்டு டேப்கள் இருக்கும். இவை டாஸ்க் பார் மற்றும் ஸ்டார்ட் மெனு ஆகிய பிரிவுகளாகும். இதில் டாஸ்க் பாரினைக் கிளிக் செய்தால் இரு பிரிவுகள் கிடைக்கும். முதல் பிரிவில் உள்ள ஐந்து வசதிகளில் நடுவில் Keep the taskbar on the other windows என்று ஒரு வரி இருக்கும்.

இதன் முன் உள்ள கட்டத்தில் உங்கள் கம்ப்யூட்டரில் டிக் அடையாளம் இருக்காது. மவுஸின் கர்சரைக் கொண்டு டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் மற்ற வரிகளையும் படித்துப் பார்த்து உங்கள் விருப்பத்திற்கேற்ப டிக் அடையாளங்களை ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இனி டாஸ்க் பார் மற்ற விண்டோக்களின் மேலாக இருக்கும். நீங்கள் திறந்து இயக்கும் அனைத்து புரோகிராம்களின் டேப்களும் அவற்றின் ஐகான்களுடன் காட்டப்படும். நீங்கள் செயல்பட விரும்பும் புரோகிராமினைத் இந்த டேப்பில் கிளிக் செய்து விண்டோவைப் பெற்று இயங்கலாம்.

நான் பெரிய அளவில் வேர்ட் டாகுமெண்ட் பைல் ஒன்று வைத்திருக்கிறேன். இதிலிருந்து கருத்துக்களை எடுத்து அவ்வப்போது மெயிலிங் லிஸ்ட்டில் எனது கடிதங்களை அனுப்புகிறேன். ஒவ்வொரு முறை வேர்ட் டாகுமெண்ட்டைத் திறக்கும்போதும் அதற்கு முன்னர் எந்த இடத்தில் எடிட் செய்து டெக்ஸ்ட் எடுத்தோம் என்று அறிய முடியவில்லை. இதற்கு ஆல்ட் பைண்ட் போட்டுப் பார்த்தாலும் சரியாகப் பெற முடியவில்லை. வேறு வழி உள்ளதா?


–என். கண்ணபிரான், திருப்பரங்குன்றம்


ஆஹா! டிப்ஸ்களைச் சரியாகக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வது இல்லையா? பலமுறை இதற்கான தீர்வினைத் தந்திருக்கிறோம். வேர்ட் டாகுமெண்ட்டைத் திறந்தவுடன் கண்ட்ரோல் + எப்5 அழுத்துங்கள். முந்தைய முறை டாகுமெண்ட்டை மூடியபோது எந்த இடத்தில் எடிட் செய்து மூடினீர்களோ அந்த இடத்தில் கர்சர் சென்று நிற்கும். எனவே டாகுமெண்ட்டை மூடுகையில் எந்த இடம் வரை படித்து எடிட் செய்திருக்கிறீர்களோ அந்த இடத்தில் இருந்தவாறே மூடவும். அப்போதுதான் மீண்டும் திறந்து கண்ட்ரோல் + எப்5 அழுத்தும்போது கர்சர் அதே இடத்திற்குச் செல்லும்.

எனக்கு சிஸ்டம் கொடுக்கையில் அதில் சிடி பர்னிங் சாப்ட்வேர் பதிந்து கொடுத்தார்கள். என்ன காரணத்தினாலோ அது இப்போது என் சிஸ்டத்தில் இல்லை. இலவச சிடி பர்னிங் புரோகிராம் ஏதேனும் இணையத்தில் கிடைக்குமா? அல்லது வேறு முறையில் இலவசமாகப் பெறலாமா?


–கா. சிவலிங்கம், மேலூர்


உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தியுள்ள சிடி/டிவிடி ரைட்டருடன் ஒரு சிடி தரப்பட்டிருக்குமே? அது இல்லையா? அது எந்த நிறுவனத்தின் சிடி ரைட்டர் என்று பார்த்து அதே சிடி/டிவிடி ரைட்டரை வைத்திருப்பவர்களிடம் சிடி பர்னிங் சிடி கேட்டு வாங்கி இன்ஸ்டால் செய்திடவும். பொதுவாக இந்த நிறுவனங்கள் நீரோ சிடி பர்னிங் சாப்ட்வேர் தொகுப்பினை இது போல சிடி/டிவிடி ரைட்டர்களுடன் தருகின்றனர்.

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடம் இது கிடைக்கும். இருப்பினும் நீங்கள் கேட்டுக் கொண்ட பின் இணையம் முழுவதும் தேடினேன். இலவசமாக டவுண்லோட் செய்திடும் வகையில் சிடி பர்னிங் சாப்ட்வேர் கிடைப் பது அரிதாகவே இருந்தது. இறுதியில் சிடிபர்னிங் எக்ஸ்பி (CD BurningXP) என்னும் அருமையான புரோகிராம் ஒன்று கிடைப்பதை அறிந்தேன்.

உங்களுக்காக டவுண் லோட் செய்து பயன்படுத்திப் பார்த்தேன். மிக நன்றாக செயல்படுகிறது. பெயரைப் பார்த்தவுடன் இது எக்ஸ்பி சிஸ்டத்துடன் மட்டுமே செயல்படும் என்று எண்ணாதீர்கள். விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா தொகுப்புகளுடன் செயல்படுகிறது. இதனைப் பெற http://cdburnerxp.se/en/home என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

நன்றி:தினமலர் கம்ப்யூட்டர்மலர்.ஜூன்,15, 2009

நூர்
22-06-2009, 05:59 AM
கேள்வி: என்னுடைய ஜேபெக் பட பைல்களெல்லாம் கம்ப்யூட்டரில் உள்ள வெப் பிரவுசரில் திறக் கப்படுகின்றன. அதற்குப் பதிலாக என் னுடைய படங்கள் அனைத்தும் அடோப் போட்டோ ஷாப் அல்லது பெயிண்ட் புரோகிராமில் திறக்கப்பட வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? எதனால் இந்த பிரச்சினை வருகிறது?

–எ. கண்ணன், சென்னை

பைலின் பெயரில் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று எழுந்து வரும். அதில் Open with என்று இருக்கும் பகுதியில் கிளிக் செய்தால் அந்த பைல் திறப்பதற்கான புரோகிராம் கள் பட்டியலிடப்படும். இதில் நீங்கள் விரும் பும் புரோகிராமினைக் கிளிக் செய்தால் அந்த புரோகிராமில் அந்த பைல் திறக்கப்படும்.

இதே மெனுவில் Always use this program to open this type of file என்ற ஆப்ஷனும் தரப்படும். இந்த ஆப்ஷனில் தேர்ந்தெடுக் கப்படும் புரோகிராம் தான் அடுத்து மாற்றாத வரை உங்கள் கம்ப்யூட்டரில் அந்த பார்மட் பைல்களைத் திறக்கும்.

கேள்வி: மானிட்டர் ஸ்கிரீனில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை டாஸ்க் பாரிலிருந்த படியே திறப்பது எப்படி? அவை அனைத்தையும் ஸ்கிரீன் இடத்தைப் பிரித்து அமைப்பது எப்படி?


–கா. தமிழ் அரசன், புதுச்சேரி


பதில்: பலருக்கு இது குழப்பமான சூழ்நிலைதான். ஒரே நேரத்தில் வேர்ட், எக்ஸெல் மற்றும் இமெயில் புரோகிராம் ஒன்றினை இயக்க வேண்டியதிருக்கும். ஒவ்வொன்றாக டாஸ்க் பாரிலிருந்து கிளிக் செய்து பார்த்துப் பின் மீண்டும் அதனை மினிமைஸ் செய்து,

அதன்பின் அடுத்த புரோகிராமினைக் கிளிக் செய்து அதில் வேலை முடிந்த பின் அதனை மீண்டும் டாஸ்க்பாருக் குள் அடக்கி என சர்க்கஸ் வேலை செய்து கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மேலே தமிழ் அரசன் கூறிய கேள்வி எழுகிறது.


முதலில் எந்த எந்த பைல்களைத் திறந்து ஒரே ஸ்கிரீனில் வைத்து இயக்க வேண்டும் என்பதை முடிவு செய்திடவும். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு அந்த பைல்களின் ஐகான் களை டாஸ்க் பாரில் கிளிக் செய்திடவும்.

இதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது அவை அனைத்தும் செலக்ட் செய்யப்படும். இனி இவற்றில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்திடவும். எழுந்து வரும் மெனுவில் இரண்டில் ஒன்று என ஆப்ஷன் கிடைக்கும். அதாவது விண்டோக்களை மேலும் கீழுமாக அடுக்கிக் காட்டவா? அல்லது அருகே அருகே அமைத்துக்காட்டவா என்று கம்ப்யூட்டர் கேட்கிறது.

நீங்கள் விரும்பும்படி ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். உடனே நீங்கள் திறந்து செயல்படுத்த விரும்பும் விண்டோக் கள் அனைத்தும் நீங்கள் தேர்ந்தெடுத்தபடி திறக்கப்பட்டு உங்கள் செயல்பாட்டிற்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கும்.

கேள்வி: நீங்கள் மவுஸ் கர்சர் குறித்துச் சொல்லும் டிப்ஸ்களை எல்லாம் கடைப்பிடித்துப் பார்த்துவிட்டேன். இன் னும் மவுஸ் மற்றும் அதன் கர்சர் என் கட்டுப் பாட்டில் வரவில்லை. என்ன காரணம்? புதிய வழி ஒன்று கூறவும்.


–எஸ். மாலதி, மடிப்பாக்கம்


பதில்: மவுஸைப் பொறுத்தவரை அது வேலை செய்வதில் திடீரென ஸ்டிரைக் செய்தால் அது பல வழிகளில் தொந்தரவாக இருக்கும். நாம் விரும்பிய இடத்தில் பாய்ண்ட்டர் சென்று அமராது. அல்லது ஸ்குரோல் வீல் நாம் விரும்பிய பணியை மேற்கொள்ளாது.

எப்படி இருந் தாலும் நம் கம்ப்யூட்டர் செயல்பாடு மவுஸை நம்பி இருப்பதால் இது நம்மை முடமாக்கிவிடும். இந்த சூழ்நிலையைச் சரி செய்திட நமக்குச் சில வழிகள் உள்ளன.

முதலில் மவுஸின் ஸ்பீடை எப்படி சரி செய்வது எனப் பார்ப்போம். Start, Control Panel சென்று மவுஸ் ஐகானில் கிளிக் செய்திடவும். உங்களுடைய கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருந்தால் மவுஸ் ஐகானில் நேரடியாகவே கிளிக் செய்திடலாம்.

கேடகிரி வியூவில் இருந்தால் அதனை கிளாசிக் வியூவிற்கு மாற்றலாம். அல்லது கேடகிரி வியூவில் Printers and Other Hardware சென்று பின் அதில் Mouse என்பதில் கிளிக் செய்திடலாம்.

பின்னர் Pointer Options என்ற டேப் பில் கிளிக் செய்திடவும். இதில் மவுஸ் கர்சர் குறித்து பல ஏரியாக்கள் கிடைக்கும். முதலாவதாக Motion என்ற தலைப்பில் மவுஸின் கர்சர் ஸ்பீட் குறித்த ஒன்று நாம் காண வேண்டும்.

இதன் கீழாக "Enhance Pointer Precision" என்று ஒரு ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். அதில் டிக் அடையாளம் இருப்பின் அதனை எடுத்துவிடவும். அதன் பின் மவுஸின் கர்சர் எப்படி வேகமாகச் செயல்படுகிறது என்பதனைக் காணலாம். சரியா! இனி நீங்கள் இந்த மவுஸால் எரிச்சல் அடையாமல் இயங்கலாம்.

கேள்வி: நான் ஒரு சோனி லேப் டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வருகிறேன். இதில் விண்டோஸ் எக்ஸ்பி உள்ளது. 60 ஜிபி அளவிலான ஹார்ட் டிஸ்க் இயங்குகிறது. இதனை சி மற்றும் டி என இரண்டு டிரைவ்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டால் ஆகும் அனைத்து புரோகிராம்களையும் சி டிரைவிலேயே வைத்து பயன்படுத்துகிறேன். அவற்றின் பைல்களும் அதிலேயே உள்ளன. சிறிது நாட்களாக சி டிரைவில் ஸ்பேஸ் இல்லை என மெசேஜ் வருகிறது. இன்ஸ்டால் செய்துள்ள புரோகிராம்களுக்கு வேறு காப்பி இல்லை. என்ன செய்யலாம்?


–ச. முருகானந்தம், சென்னை


பதில்: ஒரே ஒரு நல்ல எளிய வழி சொல்லட்டுமா! உங்கள் My Documents போல்டரை அப்படியே ஈ டிரைவிற்கு மாற்றி விடுங்கள். பின் பைல்கள் எங்கு சேவ் ஆகும் என்று கேட்காதீர்கள்.

நீங்கள் மாற்றிவிட்டால் விண்டோஸ் எக்ஸ்பி மாறுதலில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செட்டிங்ஸ் மாற்றிக் கொண்டு பைல்களை சேவ் செய்திடும். Start பட்டனில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் My Documents பெறுங்கள். இந்த மெனுவில் Properties தேர்ந்தெடுங்கள். இதில் Move என்னும் பட்டனிருப்பதைக் காணலாம்.

இங்கு D டிரைவினைத் தேர்ந்தெடுங்கள். இதற்கு My Documents போல்டர் ஐகான் அருகே உள்ள சிறிய + அடையாளத்தில் கிளிக் செய்து பின் லோக்கல் டிஸ்க் டி என்பதைத் தேர்ந்தெடுங்கள். பின் Oஓ கிளிக் செய்து வெளியேறவும். இனி பைல்கள் தானாக காப்பி செய்யப்படும்.

உங்கள் போல்டர் சற்றுப் பெரியதாக இருந் தால் இதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்ளப் படும். அந்த நேரத்தில் அதில் உள்ள எந்த பைலையும் எடுத்துப் பயன்படுத்த வேண்டாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் மெனுவிற்கான செட்டிங்ஸை மாற்றினேன். பல கட்டங்களில் வருவதற்குப் பதிலாக ஸ்குரோல் ஆகும்படி அமைத்தேன். இப்போது மீண்டும் பழையபடியே வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் எப்படி அமைப்பது என்று தெரியவில்லை. உதவவும்.


–கு. மயில்சாமி, வத்தலக்குண்டு


பதில்: டாஸ்க்பாரில் காலியாக உள்ள ஓர் இடத் தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties கட்டத்தில் லெப்ட் கிளிக் செய்திடவும். பின் Start மெனு டேப்பில் கிளிக் செய்திடுங்கள்.

கிடைக்கும் மெனுவில் Customize என்னும் பட்டனில் தட் டவும். பின் கிடைக்கும் விண்டோவில் Advanced என்னும் டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள ஆப்ஷன்ஸ் லிஸ்ட்டில் ஸ்குரோல் செய்து கீழாக வரவும்.Scroll Programs என்னும் இடத்தில் கிளிக் செய்து அதில் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். அடுத்து இரண்டு விண்டோக்களிலும் OK கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: என் வேர்ட் தொகுப்பில் (எம்.எஸ். ஆபீஸ் 2003) பல ஆட்டோ கரெக்ட் என்ட்ரிகளை ஏற்படுத்தி வைத்துள்ளேன். என் அலுவலகப் பணிகளுக்காக நூற்றுக்கும் மேலாக ஏற்படுத்தியுள்ளேன். சில என்ட்ரிகள் 20 சொற்கள் வரை கூட உள்ளன. இதனை எப்படி அப்படியே என் நோட்புக் கம்ப்யூட்டரில் கொண்டு செல்வது? முடியுமா?


–தா. உலகநாதன், கொரட்டூர்


பதில்: இவை அனைத்தையும் ஒரு கம்ப் யூட்டரிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. சிறிது சுற்றி வளைத்து செய்திடும் வேலை. விண்டோஸ் சிஸ்டம் பைல்கள் வரை சென்று இந்த மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

எந்தக் கம்ப்யூட்டருக்கு இவற்றை மாற்றுகிறீர்களோ அந்த கம்ப்யூட்டரில் உள்ள அத்தனை ஆட்டோ என்ட்ரிகளும் அழிந்து புதிய லிஸ்ட் மட்டுமே அதில் மாற்றத்திற்குப் பிறகு கிடைக்கும். பரவாயில்லையா? இந்த செட் செய்திடும் வேலை யை இங்கு நீளமாக விளக்க இடம் பற்றாது. பிரெய்ன்பெல் (Brainbell) வெப்சைட் ஒன்று இதற்கென உள்ளது. அங்கு சென்று இந்த விளக் கத்தினைப் பெறவும்.

செல்ல வேண்டிய இணைய தள முகவரி www.snipurl.com/3ieos

கேள்வி: டிஜிட்டல் போட்டோ பிரேம் ஒன்று வாங்கி வந்தேன். இதில் மெமரி எஸ்.டி. கார்ட் பயன்படுத்தலாம். அதற்கான கார்டும் உள்ளது. என் கம்ப்யூட்டரில் உள்ள என் திருமண போட் டோக்களை கார்டில் பதிக்க முயற் சித்த போது காப்பி செய்திட முடியவில்லை. டிஜிட்டல் பிரேம் கார்டில் உள்ள படங்களை மட்டுமே படிக்கிறது. இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது?

–ஆர். சிதம்பரம், போடி


பதில்: இதில் சிக்கலே இல்லை சிதம்பரம். எஸ்.டி. மெமரி கார்டுகளில் பதிவானவற்றை நாம் அறியாமலேயே அழித்துவிடக் கூடாது என் பதற்காக சிறிய ஸ்விட்ச் ஒன்று தரப்பட்டிருக் கும்.

நீங்கள் எழுதியதிலிருந்து இந்த ஸ்விட்ச் இழுத்து பைல்களைப் பாதுகாக்கும் வகையில் உள்ளது என்று தெரிகிறது. இந்த சிறிய ஸ்விட்ச் சினை கார்டின் இடது புறம் இருக்கும். கார்டில் தங்க கலரில் இணைப்புக்கான கனெக்டர்கள் தந்திருப்பார்கள்.

அதனை மேலாக வைத்துப் பார்த்து மேலே கூறியபடி ஸ்விட்சைக் கண்டு பிடிக்கவும். பின் இந்த ஸ்விட்சை இழுத்துவிட்டுப் பின் காப்பி செய்திட முயற்சிக்கவும். காப்பி ஆகும் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி:தினமலர் கம்ப்யூட்டர்மலர் 22/06/09

நூர்
29-06-2009, 09:21 AM
என்னுடைய டெஸ்க் டாப்பில் அனைத்து ஐகான்களும் பெரிய அளவில் அமைந்துள்ளன. இவற்றைச் சுருக்கி அமைப்பது எப்படி?

–சி. பீட்டர் சகாயராஜ், காரைக்கால்


உங்கள் ஐகானின் அளவையும் அதன் கீழ் உள்ள எழுத்துக்களின் அளவையும் தாராளமாகச் சிறியதாக்கலாம். டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் Appearance டேப்பில் கிளிக் செய்திடவும். பின் Effects என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Advanced Appearance விண்டோ திறக்கப்படும்.

இங்கு Icon என்று உள்ள இடத்திற்கு ஸ்குரோல் செய்திடவும். இந்த இடத்தில் ஐகானின் சைஸ் மற்றும் எழுத்தின் அளவினை உங்களால் மாற்ற முடியும். மாற்றங்களை ஏற்படுத்தி விட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து Display Properties விண்டோ கிடைக்கும்.

இதில் அப்ளை என்றுள்ள இடத்தில் கிளிக் செய்திடவும். உங்கள் டெஸ்க்டாப் ஸ்கிரீன் சிறிது நொடிகளுக்கு வண்ணத்தை இழந்து கிரேயாக மாறும். பின் மறுபடியும் பழைய வண்ணத்தில் திரை காட்டப்படும். இப்போது நீங்கள் செட் செய்தபடி ஐகான்களும் டெக்ஸ்ட்டும் மாறி இருப்பதனைக் காணலாம்.

இந்த தோற்றம் உங்களுக்கு நிறைவைத் தருவதாகத் தெரிந்தால் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இல்லை என்றால் மீண்டும் Effects என்பதில் கிளிக் செய்து மாற்றங்களை ஏற்படுத்தவும். உங்களிடம் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருந்தால் கீழ்க்கண்டபடி செயல்படவும்.

டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Personalize என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் Window Colour and Appearance டேப்பில் கிளிக் செய்திடவும்.

Advanced பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு ஐகானின் அளவையும் டெக்ஸ்ட் அளவையும் சரி செய்திடலாம். உங்கள் திரைத் தோற்றம் இதனால் கூடுதல் அழகுடன் தோற்றமளிப்பதனைப் பார்த்து ரசிக்கவும்.


சில வேளைகளில் கம்ப்யூட்டரில் பிரச்சினை ஏற்பட்டு கிடைக்கும் மெசேஜில் rundll32.exe என்ற பைல் குறித்து செய்தி வருகிறது. ஆனால் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தவுடன் பிரச்சினை சரியாகிவிடுகிறது. இந்த பைல் என்ன மாதிரியான டெம்பரரி பைல் என்று விளக்கவும்.

ஆர். சுகுணா ராணி, சென்னை


விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு பைல் தான் . எனவே இந்த பைல் இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து உங்களுக்கு எர்ரர் மெசேஜ் கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த பைல் குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.


இந்த பைல் உங்கள் கம்ப்யூட்டரில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். இது ராம் மெமரியில் தங்கி இருந்து மற்ற பைல்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்த பைல் பெயர் பிரச்சினை குறித்த எர்ரர் மெசேஜில் அடிபடுவது இயற்கையே.


கம்ப்யூட்டர் இயங்க அடிப்படையான டி.எல்.எல். பைல்கள் இந்த ரன் டி.எல்.எல். 32 பைல் வழியாக இயங்குகின்றன. ஒரு டி.எல்.எல். பைலை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ. அல்லது காம் பைல்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல். பைல்கள் இயங்காது.

விண்டோஸ் சிஸ்டத்திற்கு இவற்றை இயக்க இன்னொரு பைல் தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe பைல். 32 பிட் டி.எல்.எல். பைல்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரில் rundll32.exe என்ற பைல் கெட்டுப்போய் விட்டதென்று மெசேஜ் கொடுத்து சரியான rundll32.exe பைல் வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும்.

இதில் கிளிக் செய்தால் பைல் இறங்கும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் பாப் அப் மெசேஜ்களைப் பார்த்தால் சற்று கவனமாகச் செயல்படவும்.


நான் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் பல ஸ்கிரீன் சேவர்களை வைத்திருக்கிறேன். இதனால் டிஸ்க்கில் இவை பிடிக்கும் இடம் அதிகமாகிறது. இவற்றை அழித்து ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைக் காப்பது எப்படி என்று வழி காட்டவும்.

–என். திருவாசகம், மேட்டுப்பாளையம்


நல்லதொரு ஸ்கிரீன் சேவரைப் பார்த்தால் உடனே அதனைக் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வந்து அழகு பார்க்கும் பழக்கம் இருந்தால் இந்த நிலைதான் ஏற்படும். இவை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக் கொள்ளும் இடம் மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகம் தான்.இவற்றை நீக்க முடிவு செய்ததைப் பாராட்டுகிறேன்.

அநேகமாக அனைத்து ஸ்கிரீன் சேவரையும் நீக்க விரும்ப மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். எவற்றை நீக்க வேண்டும் எனக் குறிப்பில் வைத்துக் கொள்ளவும்.


இவற்றை நீக்குவதற்கு அவை எந்த வகையில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன என்பதனைப் பொறுத்து இரண்டு வழிகள் உள்ளன.


ஸ்கிரீன் சேவர் புரோகிராமினை ஒரு டிஸ்க் அல்லது இணையத்திலிருந்து இன்ஸ்டால் செய்திருந்தால் அந்த புரோகிராமினை முறையாக அன் இன்ஸ்டால் செய்தால் டிஸ்க்கில் நிறைய இடம் கிடைக்கும். அதற்குப் பதிலாக பைல்களை இன்ஸ்டால் செய்த டைரக்டரியிலிருந்து டெலீட் செய்தால் கொஞ்சம் இடமே கிடைக்கும்.


Start மெனு சென்று My Computer கிளிக் செய்து Control Panel திறக்கவும். இந்த விண்டோவில் Add/Remove Programs கிளிக் செய்து திறக்கவும். கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அனைத்து புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும்.


இதில் ஸ்கிரீன் சேவர் புரோகிராம் எங்குள்ளது என்று பார்த்து அதனைத் தேர்வு செய்து பின் Change /Remove கிளிக் செய்தால் ஸ்கிரீன் சேவர் புரோகிராம் அன் இன்ஸ்டால் ஆகும். ஒரு கலக்ஷன் ஆக இல்லாமல் தனியே இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் விண்டோஸ் எக்ஸ்புளோரர் வழி சி டிரைவ் செல்லவும். விண்டோவில் சி டிரைவ் காட்டப்படும்.

இதில் டூல் பாரில் உள்ள Search ஐகானைக் கிளிக் செய்திடவும். இதில் All Files and Folders என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். All or part of the File Name என்பதில் *. scr எனத் தரவும். இதில் நீங்கள் எத்தனை ஸ்கிரீன் சேவர் பைல்கள் வைத்துள்ளீர்கள் என்பதனைப் பொறுத்து நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்து ஸ்கிரீன் சேவர் பைல்களும் பட்டியலிடப்படும்.

தேவையற்றதைத் தேர்ந்தெடுத்து Shift அழுத்தியவாறே Delete பட்டனையும் அழுத்தவும். அழிக்கப்படும் ஸ்கிரீன் சேவர் பைல் அனைத்தும் ரீ சைக்கிள் பின் கூடச் செல்லாமல் நீக்கப்படும். ஹார்ட் டிஸ்க்கில் இடமும் கிடைக்கும்.


நான் என்னுடைய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென என் மானிட்டர் ஸ்கிரீன் காலியான ஒரு தோற்றத்தைத் தருகிறது. எந்த பட்டனை கீ போர்டில் தட்டினாலும் தோற்றம் வரவில்லை. ஆனால் கம்ப்யூட்டரை ஆப் செய்து மீண்டும் ரீ ஸ்டார்ட் செய்தால் ஸ்கிரீன் கிடைக்கிறது. இதில் என்ன குறை உள்ளது? என்ன செய்ய வேண்டும்?

–செ. மஹேந்திர சிங், சென்னை


நீங்கள் எழுதியதைப் பார்க்கையில் உங்கள் கம்ப்யூட்டரில் வீடியோ எர்ரர் இருப்பதைப் போல் தெரிகிறது. இதற்கு முதல் உதவி போல சில நடவடிக்கைகளை நீங்கள் எடுத்துப் பார்க்கலாம்.


ஸ்கிரீன் காலியான தோற்றத்திற்கு வந்தவுடன் Windows+ கீ கீகளை அழுத்தவும். உடன் Run Command கட்டம் கிடைக்கும். ஆனால் உங்கள் ஸ்கிரின் தான் தெரியவில்லையே; எப்படி பார்க்க முடியும். ஆனால் எனக்குத் தெரியும், அங்கு ரன் விண்டோ அதில் கர்சருடன் இருக்கிறது என்று. எனவே கவனமாக cmd என டைப் செய்திடவும். இப்போது Command Prompt எனப்படும் டாஸ் விண்டோ கிடைக்கும். இது உங்களுக்குத் தெரியவரும்.

இது ஒரு சிறிய கருப்பு கட்டமாக இருக்கும். உடனே Alt + Enter கீகளைத் தட்டவும். உடன் இந்த கட்டம் முழு திரையிலும் தெரியும். இந்த டிஸ்பிளேயில் டெக்ஸ்ட் மட்டுமே காட்டப்படும். உங்கள் வீடியோ கார்டில் சிறிய பிரச்சினை மட்டுமே இருந்தால் இப்போது உங்கள் வழக்கமான டெஸ்க் டாப் விண்டோ கிடைக்க வேண்டும்.

அதற்கு Exit என டைப் செய்து என்டர் அழுத்தவும். இதுவும் வேலை செய்யவில்லை என்றால் எதற்கும் இதே போல ஒன்று அல்லது இரண்டு முறை முயற்சிக்கவும். அதிலும் சரியாகவில்லை என்றால் கம்ப்யூட்டர் டெக்னீஷியனைக் கூப்பிடவும்.


நாம் ஆசையுடன் தகவல்களைத் தேடும் சில தளங்களில் சர்ச் இஞ்சின் இல்லாததால் நாம் தேடும் தகவல்களை உடனடியாகப் பெற முடியவில்லை. தேடுவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. இதற்கு ஏதேனும்ஷார்ட் கட் உள்ளதா?

–ஆ. பாண்டிய ராஜன், மதுரை


தகவல் தேடுதலில் சர்ச் இஞ்சின் ஒரு தளத்தில் இல்லை என்றால் நமக்கு ஏமாற்றம் வரத்தான் செய்திடும். வேகத்தில் பறக்கிற நமக்கு சர்ச் இஞ்சின் இல்லாமல் தகவல்களை அங்கும் இங்குமாய்த் தேட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகையில் இது என்ன சோதனை என்று சற்று எரிச்சல் அடைவோம். இதற்கு ஷார்ட் கட் இல்லை. ஆனால் சுற்றிவரும் சிறிய வழி ஒன்று உள்ளது.


இந்த வழியினை ஓர் எடுத்துக் காட்டுடன் கூறுகிறேன். தற்போது வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் (Swine Flu) குறித்து தகவல் சேர்க்கிறீர்கள். அமெரிக்காவின் இம்பீரியல் ஹாஸ்பிடல்ஸ் (Imperial Hospitals) என்ற மருத்துவமனையின் தளம் செல்கிறீர்கள். அங்கு இதற்கென்று தனி பக்கம் ஒதுக்கி பல பக்கங்களில் தகவல்களைத் தந்துள்ளனர்.

ஆனால் நீங்களோ இதற்கான வைரஸ் குறித்த தகவல்கள் உடனே வேண்டும் என எண்ணி அதில் சர்ச் இஞ்சினைத் தேடுகிறீர்கள். அங்கு சர்ச் இஞ்சின் இல்லை. எரிச்சல் மேலிட என்ன செய்யலாம்? ஒவ்வொரு பக்கமாகச் சென்று பார்க்க முடியுமா? அல்லது மெனுக்களில் எங்கேனும் வழி உள்ளதா என்று கவனிக்க முடியுமா?

இதற்கான சுருக்க வழியைப் பார்ப்போம். அதிர்ஷ்ட வசமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிரபலாமான சர்ச் இஞ்சின்களில் குறிப்பிட்ட தகவலைக் குறிப்பிட்ட வெப் சைட்டில் மட்டும் தேடித் தா என்று கட்டளை அமைக்கும் வசதி உள்ளது. இங்கு நீங்கள் Swine Flu Virus என்று தேடுகிறீர்கள்.

தேடும் தளத்தின் முகவரி www.imperialhospitals.com. . இப்போது உங்கள் பிடித்தமான சர்ச் இஞ்சின் சென்று அதன் கட்டத்தில் "Swine Flu Virus site : www.imperialhospitals.com"


என மேற்கோள் குறிகள் இல்லாமல் டைப் செய்து என்டர் தட்டவும். இங்கு கொடுத்துள்ள வரியில் இருந்து தேடும் சங்கதியையும் தேட வேண்டிய தளத்தின் முகவரியையும் அமைத்துள்ளோம் என்று தெரிகிறதல்லவா?

இது போல எந்த ஒரு பொருளையும் ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டும் தேடுமாறு கட்டளை அமைக்கலாம். இதனால் குறிப்பிட்ட அந்த தளத்தில் சர்ச் இஞ்சின் இல்லாத குறை தீருகிறது. நம் தேடலும் முழுமையடைகிறது. நான் இந்த தேடல் வழியைப் பல சர்ச் இஞ்சின்களில் பயன்படுத்திப் பார்த்துவிட்டேன். நன்றாக வேலை செய்கிறது.


பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைட் �ஷாவினை மவுஸைக் கொண்டு ஸ்லைடுக்குச் சென்று கிளிக் செய்து தொடங்காமல் ஏதேனும் ஒரு கீயைத் தட்டி முதல் ஸ்லைடில் இருந்து தொடங்க முடியுமா? அதே போல செல க்ட் செய்யப்பட்ட ஸ்லைடில் இருந்து காட்ட முடியுமா?


–கே. நவீன் குமார், சென்னை


ஆம், நீங்கள் கேட்கும் ஒரு கீ தட்டி தொடங்கும் வசதி பிரசன்டேஷன் ஸ்லைட் காட்சிக்கு உள்ளது. எப்5 கீயை தட் டுங்கள். பிரசன்டேஷன் முதல் ஸ்லைடில் இருந்து தொடங்கும். நீங்கள் கேட்ட அடுத்த வசதி பவர்பாய்ண்ட் 2007ல் இருக்கிறது. அப்போது செலக்ட் செய்த ஸ்லைடில் இருந்து தொடங்க Shift + F5 என்ற கீகளை அழுத்தவும். இதனால் தேவையில்லாமல் மவுஸை சுழல் விட்டு கரக்ட் பட்டன் மற்றும் மெனுவிற்கு எல்லாம் செல்ல வேண்டியதில்லை.


ஆங்கிலச் சொற்கள் அடிக்கடி நம்மைக் குழப்பும் வகையில் பல இருக்கின்றன. (எடுத்துக்காட்டு affect, effect, their, they’re) இது போன்ற எழுத்துக்களில் உள்ள சிறிய வித்தியாசத்தால் நம்மைக் குழப்பும் சொற்களுக்கான தெளிவான பொருள் தரும் இன்டர்நெட் வெப்சைட் உள்ளதா?

+2 மாணவர்கள், நா.ச.மே.பள்ளி, தேனி


நல்ல முயற்சி என் அன்பு மாணவர்களே. இன்டர்நெட் உங்களின் சந்தேகத்தைத் தீர்க்கும் என்ற நம்பிக்கை கொண்டு இந்த கேள்வியைக் கேட்ட உங்களைப் பாராட்டத்தான் வேண்டும். உங்களின் கேள்விக்கு நேரான பதில் அளிக்கும் வகையில் ஓர் தளம் இருக்கத்தான் செய்கிறது. அதன் முகவரி http://www.confusingwords.com/index.php ஆகும்.

இந்த தளத்தில் டன் கணக்கில் சொற்கள் உள்ளன. இங்கு சென்று உங்களுக்குச் சந்தேகம் வந்துள்ள சொல் ஒன்றை டைப் செய்திடவும். எடுத்துக் காட்டாக நான் நீங்கள் தந்துள்ள affect என்னும் சொல்லை டைப் செய்தேன். உடனே அதற்கான பொருள் விளக்கம் தரப்பட்டது. அதனுடன் effect என்ற சொல்லுக்கும் விளக்கம் தரப்பட்டது.

இப்படியே ஒவ்வொரு சொல்லும் எப்படி எந்த பொருளில் பயன்படுத்தப்படுகின்றன என்ற விளக்கம் தரப்படுகிறது. இரண்டு சொற்கள்தான் என்றில்லை. சிறிய வேறுபாட்டில் எழுத்துக்களைக் கொண்ட அனைத்து சொற்களுமே விளக்கத்துடன் தரப்படுகின்றன.


அத்துடன் Notes என்ற பிரிவில் இந்த சொற்களின் பொருள் வேறுபாட்டினை எப்படி நினைவில் வைத்துக் கொள்வது என்ற விளக்கமும் தரப்படுகிறது. இன்டர்நெட் ஓர் அறிவுச் சுரங்கம். அவசியம் நீங்கள் உங்கள் சந்தேகத்திற்கான விடைகளை இதில் தேடி அறியலாம். நீங்களே தேடுவதால் உங்கள் மனதிலும் ஆழமாகப் பதியும்.

நன்றி:தினமலர்,கம்ப்யூட்டர்மலர் 29/06/09

itsjai
03-07-2009, 05:51 PM
நல்ல முயற்சி நண்பரே. பல பயனுள்ள தகவல்கள் ஒரே திரியில் பார்ப்பது அருமை. தொடருங்கள்.

நூர்
06-07-2009, 05:52 AM
ஆன் ஸ்கிரீன் கீ போர்டு என்பது என்ன? இதனைக் கொண்டிருந்தால் வழக்கமான கீ போர்டு தேவையில்லையா? இதற்கான சாப்ட்வேர் எங்கு கிடைக்கும்?

–என். கிருஷ்ணமூர்த்தி, கொரட்டூர்

நம் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் நாம் அமைத்து இயக்கும் கீ போர்டு தான் ஆன் ஸ்கிரீன் கீ போர்டு என அழைக்கப்படுகிறது. இதற்குத் தனியான சாப்ட்வேர் தேவையில்லை. நம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே இது கிடைக்கிறது.

விண்டோ கீ அல்லது ஸ்டார்ட் அழுத்தி வரும் மெனுவில் ரன் அழுத்தவும். கிடைக்கும் பாக்ஸில் osk (On Screen Key board என்பதன் சுருக்கம்) என டைப் செய்தால் நமக்கு ஆன் ஸ்கிரீன் கீ போர்டு கிடைக்கும். இது நம் வழக்கமாகப் பயன்படுத்தும் Qwerty கீ போர்டுதான்.

இதன் மூலம் கீ கள் பயன்பாட்டினைப் பெற மவுஸின் கர்சரால் அந்த அந்த கீகளைக் கிளிக் செய்திட வேண்டும். ஆனால் வழக்கமான கீ போர்டில் இயங்கும் அளவிற்கு வேகமாக இயக்க முடியுமா என்பது சந்தேகமே. திரையில் இயக்கிய ஆன் ஸ்கிரீன் போர்டினை நீங்களாகத்தான் வழக்கமாக விண்டோவினை குளோஸ் செய்வது போல குளோஸ் செய்திட வேண்டும்.


இந்த ஆன் ஸ்கிரீன் கீ போர்டு என்பதுவும் ஒரு புரோகிராம் விண்டோவாகச் செயல்படும். இதில் தோன்றும் கீ போர்டில் எத்தனை கீகள் இருக்க வேண்டும் என நீங்கள் முடிவு செய்திடலாம். மூன்று (101,102 மற்றும் 106) ஆப்ஷன்கள் தரப்படுகின்றன.

செட்டிங்ஸ் பிரிவின் மூலம் இதன் கீகளை அழுத்துகையில் ஒலி எழ வேண்டுமா என செட் செய்திடலாம். இந்த கீ போர்டில் ஒவ்வொரு கீயையும் பெற கிளிக் செய்திட வேண்டுமா அல்லது அதன் மீது கர்சரைக் கொண்டு சென்றால் போதுமா? என்று முடிவெடுக்கலாம். பாண்ட் எது வேண்டும் எனவும் முடிவெடுக்கலாம்.


மவுஸ் கர்சரா? பாய்ண்ட்டரா? சரியான தொழில் நுட்பச் சொல் எது?


–கே. தமிழரசன், மதுரை


சற்று தலை சாய்த்தவாறு சின்ன அம்புக் குறியாய் நகர்வது மவுஸ் கர்சர். ஆனால் ஒரு சிலர் டாஸ் இயக்கத்தில் பளிச் பளிச் என மின்னும் கட்டளைப் புள்ளிதான் கர்சர் என்று வாதிடுவார்கள். உங்கள் கடிதத்தில் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பந்தயம் கட்டி உள்ளதாக எழுதி உள்ளீர்கள். இதற்கெல்லமா பந்தயம்? தீர்ப்பு சொல்லவா? தற்போதைய பழக்கப்படி இரண்டும் ஒன்றுதான். கர்சர் என்றும் சொல்லலாம்; பாய்ண்ட்டர் என்றும் சொல்லலாம்.

சரி, சில கூடுதல் குறிப்புகள் கொடுக்கிறேன். இந்த கர்சரின் வேறு சில அவதாரங்களையும் பார்ப்போம். இந்த கர்சர் (பாய்ண்ட்டர்) ஏதேனும் ஒரு லிங்க் அருகே செல்கையில் சிறிய கை சின்னமாக மாறும். விண்டோஸ் ஏதேனும் நாம் கட்டளையிட்ட செயல்பாட்டினை மேற்கொள்கையில் ஒரு சிறிய அனிமேஷன் கர்சராக மாறும்.

ஏதேனும் வேர்ட் ப்ராசசிங் புரோகிராமில் இமெயில் எழுதுகையில் அல்லது வெப் பக்கத்தில் சுழலுகையில் கர்சர் ஆங்கில ஐ எழுத்து போலத் தோற்றமளிக்கும். இவை பொதுவானவை. ஒரு சில சாப்ட்வேர் புரோகிராம்கள் குறிப்பிட்ட செயல்பாடுகளை மேற்கொள்கையில் இந்த கர்சர் சில தோற்றங்களைப் பெறும் வகையில் அமைத்திருப்பார்கள்.


என்னுடைய கம்ப்யூட்டரை நான் மட்டுமே பயன்படுத்துகிறேன். எனவே யூசர் லாக் இன் தேவையில்லையே! இதனை எப்படி வராமல் தடுப்பது?


–எஸ்.கே. சின்ன ராஜ், சிவகிரி


பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த லாக் இன் திரை தோன்றும்படி செய்திடலாம். இருப்பினும் நேரத்தை மிச்சம் செய்திடும் நோக்கில் உங்கள் கேள்வி இருப்பதனால் இதனைத் தவிர்க்கும் வழியை உங்களுக்குக் கூறுகிறேன்.


விண்டோஸ் எக்ஸ்பியில் Start சென்று Run தேர்ந்தெடுக்கவும். விஸ்டாவில் Start சென்று Search Bar இல் டைப் செய்திடவும்.

இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் Control user passwords2 என டைப் செய்திடவும். இதில் Users என்னும் டேப்பைத் தட்டிச் செல்லவும். இதில் Users must enter a user name.... என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் Apply என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

இப்போது உங்கள் அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட் கேட்கப்படும். உங்களிடம் இந்த பாஸ்வேர்ட் இருந்தால் டைப் செய்து Confirm செய்திடவும். பாஸ்வேர்ட் இல்லை என்றால் ஜஸ்ட் ஓகே கிளிக் செய்திடவும். விண்டோ தானாக மூடப்படும். அல்லது ஓகே கிளிக் செய்தால் விண்டோ மூடப்படும்.

அடுத்த முறை கம்ப்யூட்டரை பூட் செய்கையில் நேரடியாக எந்த யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுக்காமல் சிஸ்டத்திற்குள் செல்லலாம்.


விண்டோஸ் எக்ஸ்பி என் கம்ப்யூட்டரில் இருக்கிறது. பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். எது எதற்கோ பல டிப்ஸ் வழங்குகிறீர்கள். இந்த பைல் காப்பி செய்வதற்குப் பதிலாக ஷார்ட் கட் வழி உள்ளதா? காப்பி கொடுத்துவிட்டு அது காட்டும் பைல்கள் பறந்து பறந்து செல்லும் காட்சி போர் அடிக்கிறது.

மேலும் இன்னும் எத்தனை நிமிடங்கள் காப்பி ஆக எடுத்துக் கொள்ளும் எனக் காட்டப்படும் நிமிடக் கணக்கும் சரியாக இருப்பதில்லை. இதனைச் சரி செய்திட, வேகமாக பைல் காப்பி அல்லது மூவ் செய்திட ஏதேனும் வழி உள்ளதா?


ஆர். சதீஷ், கோயம்புத்தூர்


சென்ற வாரம் தான் உங்களின் இந்தக் கேள்விக்கான பதில் கூறும் புரோகிராம் ஒன்றைப் பார்த்து இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறேன். அது குறித்து எழுதலாம் என்று யோசித்ததில் உங்களுடைய கடிதம் வந்துள்ளது. (என்ன பொருத்தம்!)


ஆம், பல வேளைகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் சலிப்பு இந்த காப்பி அல்லது மூவ் கட்டளையினால் ஏற்படுவதுதான். கட்டளை கொடுத்த பின் அந்த பைல் ஐகான்கள் ஒரு போல்டரிலிருந்து இன்னொன்றுக்குச் செல்வதனைப் பார்த்துக் கொண்டே இருப்பது ஒரு விதத்தில் துன்பம் தான்.

உடனே இந்த செயல் ஏன் ஏற்படக் கூடாது என்று தான் விரும்புவோம். இந்த விருப்பத்தினைப் போக்கும் புரோகிராம் தான் TeraCopy . இது ஒரு மிகச் சிறந்த வியக்க வைக்கும் புரோகிராம்.இதனை இலவசமாக http://www.codesector.com/files/teracopy.exe என்ற முகவரியில் உள்ள தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதனை டவுண்லோட் செய்து உங்கள் சிஸ்டத்தில் பதிந்து கொள்ளவும்.

இன்னொரு வழியில் விண்டோஸ் சிஸ்டத்தின் காப்பி மற்றும் மூவ் புரோகிராம் நீக்கும் வகையிலும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இது பதியப்பட்டவுடன் அந்த விண்டோவினை மூடிவிடவும்.

அடுத்து நீங்கள் காப்பி செய்ய வேண்டிய அல்லது மூவ் செய்ய வேண்டிய போல்டர் ஒன்றில் ரைட் கிளிக் செய்து எங்கு நகர்த்த வேண்டுமோ அங்கு அப்படியே இழுத்துச் செல்லவும். அப்போது மெனு ஒன்று கிடைக்கும். அதில் "TeraCopy here" என்பதனை செலக்ட் செய்திடவும். உடனே அந்த புரோகிராம் திறக்கப்பட்டு ஒவ்வொரு பைலும் எப்படி காப்பி ஆகிறது என்பதைக் காட்டும்.

இந்த புரோகிராம் இன்னொரு அதிசயமான வசதி ஒன்றைக் காட்டுகிறது. இதன் மூலம் போல்டரிலிருந்து பைல்கள் காப்பி அல்லது நகர்த்தப்படுகையில் அந்த செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். இது நமக்குப் பல வழிகளில் உதவுகிறது.

நம் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதாகத் தோன்றினால் இந்த காப்பி செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து ராம் மெமரியில் இடம் பிடித்து இயங்கிக் கொண்டிருக்கும் பைல்களைக் காலி செய்து இடம் தரலாம். அல்லது ஏதேனும் ஒரு பைலில் பணியாற்றி பின் காப்பி செயல்பாட்டினைத் தொடரலாம்.

காப்பி அல்லது மூவ் செய்வதில் ஏதேனும் ஒரு பைலில் பிரச்சினை ஏற்பட்டால் டெரா காப்பி அதனை காப்பி செய்திடும் வேலையை மீண்டும் மீண்டும் தொடர முயற்சிக்கும்.

அப்போதும் காப்பி ஆகவில்லை என்றால் அதனை ஸ்கிப் செய்துவிட்டு அடுத்த பைலைக் காப்பி செய்திடும் பணியினை மேற்கொள்ளும். இது போன்ற பிழைச் செதியினைத் தரும் பைல்களை பின் நாளில் காப்பி செய்திடலாம்.


இன்டர் நெட் வெப் சைட்டிலிருந்து பல ஐகான்களை ஒரு கொத்தாகக் காப்பி செய்தேன். இவற்றை எனக்குப் பிரியமான ஷார்ட்கட் மற்றும் போல்டர்களின் ஐகான்களாக அமைக்க விரும்புகிறேன். எப்படி மாற்றுவது என விளக்கவும்.


–டி. ப்ரியா குமார் , காரைக்கால்


இது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல. எந்த ஷார்ட் கட் அல்லது போல்டருக்கு இந்த ஐகான்களை அமைக்க விரும்புகிறீர்களோ அந்த போல்டரில் ரைட் கிளிக் செய்திடவும். பின் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.

இதில் Customize டேப்பில் கிளிக் செய்திடவும். பின் இதில் உள்ள Change Icon பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். ஷார்ட் கட் ஐகானை மாற்ற Shortcuts tab – – இல் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Icon என்பதில் கிளிக் செய்திடுக.

இனி ஒரு விண்டோ காட்டப்படும். இதில் மாற்றுவதற்கு ஏதுவாக நிறைய ஐகான்கள் கிடைக்கும். வழக்கமான ஐகான்கள் System32 \SHELL32.dll என்ற போல்டரில் இருக்கும்.

ஆனால் நீங்கள் விரும்பும் போல்டரிலிருந்தும் நீங்கள் டவுண்லோட் செய்து வைத்திருக்கும் ஐகான்களிலிருந்தும் செலக்ட் செய்திடலாம். பிரவுஸ் என்பதில் கிளிக் செய்து நீங்கள் டவுண்லோட் செய்த ஐகான்கள் உள்ள போல்டரைத் திறந்து அதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இனி நீங்கள் தேர்ந்தெடுத்த ஐகான் அந்த போல்டருக்கானதாகக் கிடைக்கும்.


பூலியன் ஆப்பரேட்டர்களைக் கையாண்டால் இன்டர்நெட்டில் தேடுதல் எளிதாகும் என்று படித்தேன். இந்த சொல் எதனைக் குறிக்கிறது? மிகவும் சிக்கலானது என்றால் தர வேண்டாம்.


–எஸ். நிர்மலா பிரகாஷ், பொள்ளாச்சி


அது என்ன சிக்கலானது என்றால் தர வேண்டாம் என்று ஒரு தள்ளுபடியுடன் கேள்வி அனுப்பி இருக்கிறீர்கள். சில வேளைகளில் நாம் மிக எளிதாகக் கையாளும் சில விஷயங்களுக்கு டெக்னிக்கலான பெயர்களைக் கொடுத்து அவை என்ன என்று கேட்டால் அது தெரியாதே என்று தான் சொல்வோம். அது போல் தான் இதுவும். இருந்தாலும் இதனை அனைவரும் அறிந்து கொண்டால் தேடல் விஷயம் சர்ச் இஞ்சினில் எளிதாகும்.


ஒரு விஷயம் குறித்து சர்ச் இஞ்சினில் தேடுகிறீர்கள். ஒவ்வொரு முறையும் லட்சக் கணக்கில் அல்லது பல்லாயிரக் கணக்கில் தளங்கள் உள்ளதாக பட்டியல் வெளியாகிறது. நீங்கள் முதல் 10 அல்லது 20 தளங்களை மட்டும் கண்டு தகவல்களைப் பெறுகிறீர்கள்.

இவற்றிலும் தேடிய அளவிற்குத் தகவல்கள் இல்லாத போது தேடல் முடிவுகள் சரியில்லையோ என்று அலுத்துக் கொள்கிறீர்கள். இந்த வேளையில் தான் பூலியன் ஆப்பரேட்டர் உதவுகிறது. தேடுதலைச் சரியாக்கி வரையறை செய்திட உதவும் குறியீடுகளே பூலியன் ஆப்பரேட்டர்கள்.


மேற்கோள் குறிகள் (“ ”) முதலாவதாக ஆங்கிலத்தில் Quotes என அழைக்கப்படும் மேற்கோள் குறிகள். இதனை அமைத்துத் தேடலை இயக்குவதன் மூலம் நீங்கள் தேடுவதனைச் சரியாக மேற்கொண்டு தேவைப்படுவதனை மட்டும் அறிய முடியும்.

எடுத்துக் காட்டாக "dead sea" என்றுகொடுத்தால் மிகச் சரியாக இந்த இரண்டு சொற்களும் உள்ள தளங்கள் மட்டுமே கிடைக்கும். குறியீடுகள் இல்லாமல் கொடுத்தால் dead மற்றும் sea ஆகிய சொற்கள் உள்ள அனைத்துமே பட்டியலிடப்படும்.

அடுத்த ஆப்பரேட்டர் ‘and’ . இதனைப் பயன்படுத்தி "doctors and lawyers" எனக் கொடுத்தால் இந்த சொற்கள் இரண்டும் உள்ள தளங்கள் மட்டுமே கிடைக்கும்.

அடுத்ததாக not. இதனைப் பயன்படுத்தினால் தேவையற்ற தளங்கள் விலக்கப்படும். எடுத்துக் காட்டாக "milk not butter" எனக் கொடுத்தால் milk மட்டுமே கொண்டு ஞதttஞுணூ இல்லாத தளங்கள் கிடைக்கும்.

இன்னொரு ஆப்பரேட்டர் ‘or’. இதனைப் பயன்படுத்தினால், எடுத்துக் காட்டாக, ‘owls or crows’ என டைப் செய்து தேடினால் இந்த சொற்களில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டும் உள்ள தளங்கள் கிடைக்கும். இப்போது தீர்ந்ததா பூலியன் ஆப்பரேட்டர் குறித்த சந்தேகம்.


சேப் மோடில் சிடி டிரைவை இயக்க முடியாது என்று கூறுகிறார்கள். அது ஏன்? அதனை இயக்க முடியாவிட்டால் பல வேலைகள் நின்று போய்விடுமே?

–இரா. செயச் சந்திரன், மேட்டுப் பாளையம்


சேப் மோட் (Safe Mode) என்பது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பராமரிப்பு பணிக்காக தயார் செய்கையில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் நிலை. பஸ் அல்லது வேறு வாகனத்தை பராமரிக்க தயார் செய்தால் அதில் பயணிகள், கண்டக்டர் எல்லாம் இல்லாமல் தானே எடுத்துச் செல்கிறோம்.

அது போலத்தான் இதுவும். சேப் மோடில் மிகக் குறைந்த அளவிலேயே கம்ப்யூட்டர் இயங்குவதற்கான டிரைவர்கள் லோட் செய்யப்படும். அதனால் சிடி ராம், பிரிண்டர்கள் மற்றும் தேவையற்ற சில இணைப்புகளுக்கான டிரைவர்கள் ஏற்றப்பட மாட்டாது.

இந்த மோடில் நாம் நமக்கு சிஸ்டத்தில் பிரச்சினை ஏற்படும்போதுதான் இயங்குகிறோம். எடுத்துக் காட்டாக ஒரு வீடியோ கார்ட் ஒன்றை இணைக்கிறீர்கள். ஆனால் குஷியில் வேறு ஒரு தொடர்பில்லாத டிரைவர் ஒன்றை லோட் செய்துவிடுகிறீர்கள். இதனால் வீடியோ டிஸ்பிளே ஆகாது. சேப் மோடில் சென்றால் இதனை அறிந்து சரி செய்துவிடலாம்.


அதே போல் புரோகிராம்களை இயக்குகையில் இல்லீகல் ஆப்பரேசன் (Illegal Operation) என்று எர்ரர் மெசேஜ் வரும் புரோகிராம்களின் இயக்கத்தினை இந்த மோடில் சரி செய்துவிடலாம்.

சேப் மோடினைப் பெற விண்டோஸ் தொடங்கும்போதே எப்8 கீயை விட்டுவிட்டு அழுத்தினால் சிஸ்டம் சேப் மோடில் போகவா என்று கேட்கும். உடனே ஆம் எனக் கொடுத்து சேப் மோட் பெறவும்.

நன்றி:தினமலர்,கம்ப்யூட்டர்மலர்.06/07/09

நூர்
13-07-2009, 01:56 AM
பிங் என்று ஒரு சர்ச் இஞ்சின் உள்ளதாக என் நண்பர் தெரிவித்தார். புதியதாக இருப்பதால் பயன்படுத்தத் தயக்கமாக உள்ளது. இது பாதுகாப்பானதா? கூடுதல் விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

–எஸ். மலைச்சாமி, தேனி



பிங் (BING) என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்ச் இஞ்சின். இதன் மூலம் தேடுதல் மட்டுமின்றி ஏதேனும் ஒரு பொருளை நீங்கள் இணையத்தின் மூலம் வாங்க முயற்சிக்கையில் இந்த தளம் உங்களுக்கு உதவும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

இது உண்மை யிலேயே செயல்படுத்தப்படும் என்றால் பல்வேறு சாதனங்கள் மற்றும் சாப்ட்வேர் புரோகிராம்கள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளையும் தகவல் குறிப்புகளையும் தரும் ebay.com மற்றும் yatra.com ஆகிய தளங்களுக்கு நிச்சயம் இது ஒரு போட்டியாக விளங்கும்.



பிங் என்றால் ஒரு குவியல் என்று பொருள். அதாவது இதன் மூலம் தேடலைத் தொடர்ந்தால் உங்களுக்குக் குவியலாகத் தகவல்கள் கிடைக்கும் என்று பொருள்.


மொபைல் போனில் வருங்காலத்தில் ஆர்.எப்.ஐ.டி. சிப் இருக்கும் என்றும் அதன் மூலம் மொபைல் பல பயன்பாடுகளுக்கு உள்ளாகும் என்று படித்தேன். எனக்குப் புரியவில்லை. விளக்கவும்.

–என். தீபக் செல்வன், சென்னை

ஆம், 2010 ஆம் ஆண்டின் பின் பகுதியில் இந்த மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. எரிக்சன் நிறுவனத்தின் துணைத் தலைவர் அண்மையில் ஒரு கருத்தரங்கத்தில் இது குறித்துப் பேசியுள் ளார்.

சுருக்கமாக இது குறித்துக் கூறு கிறேன். மொபைல் போனில் ஆர். எப். ஐ.டி.சிப் ஒன்று வைக்கப் படும். இதன் மூலம் இரு வழி தொலை தொடர்பு சாத் தியமாகும். சிம் கார்டிலேயே இது பத்திரமாக வைக்கப்படலாம்.

அல்லது தனியாகவும் இருக்கலாம். இதன் மூலம் உங்கள் மொபைல் போனுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். மேலும் இதனைக் கொண்டு செட் செய்து மொபைல் போனையே உங்கள் கார் மற்றும் வீட்டின் சாவியாக அமைத்துக் கொள்ளலாம்.

இதனையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சாவியாகப்பயன்படுத்தும்படியும் செட் செய்திடலாம். கிரெடிட் கார்டாகவும் பயன்படுத்தலாம். இதனால் இதன் மூலம் பணம் எடுத்தவர்கள் இருக்கும் இடத்தின் அடையாளத்தை எளிதாகக் கண்டு கொள்ளலாம்.

இதனைச் செயல்படுத்த மொபைல் போன் தயாரிப்பாளர், மொபைல் சேவை வழங்குபவர், ஜி.பி.எஸ். செயல்வழி நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து இயங்க வேண்டும்.


எனது கம்ப்யூட்டரில் .chm என்ற எக்ஸ்டென்ஷன் கொண்ட பல பைல்கள் உள்ளன. இவை எதற்கான பைல்கள்?


–சு. மீனாட்சி செல்வன், மேலூர்


Compiled Html Manual Format என்ற பைல்களின் எக்ஸ்டென்கள்தான் .chm ஆகும். விண்டோஸ் மற்றும் சில அப்ளிகேஷன்களின் ஹெல்ப் பைல்கள்தான் இவை.


ஏதாவது இணைய தளத்தை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் பார்க்கும் பொழுது டூல்பட்டன்கள், மெனுக்கள் போன்றவற்றை தற்காலிகமாக மறைக்க முடியுமா?


–கி. அய்யப்பன், திண்டுக்கல்

முடியும். F11 கீயை அழுத்துங்கள். முழுத் திரையில் அந்த இணையப் பக்கம் காட்சியளிக்கும். மீண்டும் F11 கீயை அழுத்தினால் பழைய நிலைக்கு மாறிவிடும்.


இன்டர்நெட் பிரவுசரில் ஒரு விண்டோவை மேக்ஸிமைஸ் செய்திட எந்த கீகளை அழுத்த வேண்டும்?


–என்.சுகவனம், மயிலாடும்பாறை


Alt + Space + X என்ற கீகளை அழுத்தினால் நீங்கள் விரும்பியது கிடைக்கும்.


Alt + Space + N அழுத்தினால் அதுவே மினிமைஸ் ஆகும்.


ஒரு புதிய போல்டரை உருவாக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் ரைட் கிளிக் செய்து மெனு பெற்று நியூ அழுத்தி பின் போல்டரைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டியுள்ளது. இன்டர்நெட்டிலிருந்து டவுண்லோட் செய்கையில் இது நேரம் எடுக்கிறது. ஏதேனும் சுருக்கமான வழிகளில் இவற்றை உருவாக்கி அமைக்க முடியுமா?


–என். சிவபாலன், ஒத்தக்கடை

ஒரு போல்டரில் இருக்கையில் புதிய போல்டர் ஒன்றை உருவாக்க விரும்புகிறீர்களா? வலது கிளிக் செய்து new / folder என்பதை எல்லாம் ஒவ்வொன்றாகக் கிளிக் செய்திட வேண்டியதில்லை. நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பினைப் பயன்படுத்துபவராக இருந்தால் ஆல்ட் (Alt) கீயை அழுத்திக் கொண்டு பின் F, W, F என்ற கீகளை வரிசையாக அழுத்துங்கள்.

புதிய போல்டர் உருவாகும். விண்டோஸ் 98 அல்லது விண்டோஸ் மி பயன்படுத்துபவராக இருந்தால் ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு பின் F,N,F என்ற கீகளை வரிசையாக அழுத்துங்கள். இன்னும் நிறைய புதிய போல்டர்கள் வேண்டுமென்றால் இதே போல தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருங்கள்.

புதிய போல்டர்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். அவற்றை உருவாக்கிய பின் உங்கள் வசதிக்கேற்ப அவற்றிற்குப் புதிய பெயர்களை இடலாம்.


ரெப்ரெஷ் ரேட் என்பது சரியாக எதனைக் குறிக்கிறது? கம்ப்யூட்டர் ரெப்ரெஷ் செய்வதா? அல்லது மானிட்டர் ரெப்ரெஷ் செய்வதா? அல்லது இரண்டுமா? மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட்டினை எதனைக் கொண்டு அளக்கிறார்கள்?


– கே.சபீனா, புதுச்சேரி

கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை ரெப்ரெஷ் ரேட் என்பது உங்கள் மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட் தான். இதில் நமக்குக் காட்சியாகக் கிடைக்கும் டிஸ்பிளே ஒரு நொடியில் எத்தனை முறை ஒளியூட்டப்படுகிறது (Illuminating) என்பதனையே ரெப்ரெஷ் ரேட் குறிக்கிறது. இது பிரேம் ரேட் (Frame Rate) என்பது போல் இருக்கிறது என்று நீங்கள் எண்ணினாலும் இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.



பிரேம் ரேட் என்பது ஒரு டிஸ்பிளே ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு எத்தனை முறை மாறுகிறது என்பதைக் குறிக்கிறது. ஆனால் ரெப்ரெஷ் ரேட் என்பது அந்த பிரேம்களில் காட்சிகள் எத்தனை முறை ஒரு நொடியில் ஒளியூட்டப்படுகின்றன என்பதனைக் குறிப்பதாகும்.

உங்கள் மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட்டினை எப்படிக் கண்டறிவது? டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து Properties என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். அடுத்து Settings டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.



அதில் கிடைக்கும் Advanced பட்டனைக் கிளிக் செய் திடவும். கிடைக்கும் புதிய விண்டோவில் Monitor என்னும் டேப்பினை கிளிக் செய்திடவும். பின் Monitor settings என்னும் ஏரியாவில் உங்கள் மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட்டினைக் காணலாம். அதில் ஒரு கீழ் விரியும் மெனுவிற்கான பட்டி தெரியும். இதில் உள்ள அம்புக் குறியினை அழுத்தினால் பல ரெப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவரும்.



60,70, 72, 75 மற்றும் 85 என இவை தரப்பட்டிருக்கும். இவற்றின் அலகு Hertz ஆகும். பெரிய 17 அல்லது 19 அங்குல மானிட்டர் என்றால் ரெப்ரெஷ் ரேட் 85 ஆகக் கொள்ளலாம். மானிட்டர் அளவு குறைய குறைய இதனையும் குறைத்துக் கொள்ளலாம்.


எக்ஸெல் தொகுப்பில் உள்ள ஒரு செல்லில் = அடையாளத்துடன் ஒரு டேட்டாவை அமைக்க விரும்பினால் எக்ஸெல் அதனை பார்முலாவாகத்தான் எடுத்துக் கொள்கிறது. இதனைத் தவிர்க்கும் வழியை முன்பு படித்தேன். நினைவில் இல்லை. பல வகை பார்மட்டிங் செய்து பார்த்துவிட்டேன். ஒன்றும் பலனளிக்கவில்லை. விளக்கத்துடன் தர கேட்டுக் கொள்கிறேன்.


–கே. மல்லிகா, சென்னை

இதற்கு பார்மட்டிங் டூல் எதுவும் இல்லை. செல்லில் = அடையாளம் இட்டால் அது பார்முலாவாகத்தான் எக்ஸெல் எடுத்துக் கொள்ளும். இதனையே டேட்டாவாக செல்லில் அமைக்க வேண்டும் என்றால் அதற்கு முன் ஒரு அப்பாஸ்ட்ரபி என அழைக்கப்படும் (') குறியீட்டினை அமைத்து பின் = அமைக்க வேண்டும்.

எக்ஸெல் இப்போது பார்முலாவாக = அடையாளத்தை எடுத்துக் கொள்ளாது. உடனே அபாஸ்ட்ரபி குறியீடு நம் டேட்டாவின் தன்மையை மாற்றிவிடுமே என்ற பயம் வேண்டாம். இதனை எக்ஸெல் கண்டுகொள் ளாது. முதல் கேரக்டராக அது அமைக்கப் படுகையில் அதன் மதிப்பையே எடுத்துக் கொள்ளாது.


பபர் என்பதனை அடிக்கடி கேட்கிறோம். இது கம்ப்யூட்டரில் எந்த பகுதியினைக் குறிக்கிறது. இதனால் பயன் என்ன என்று விளக்கவும். ஏனென்றால் சில நேரங்களில் சிடியில் பைல்களை எழுதுகையில் பபர் பிரச்சினை என்று செய்தி வருகிறது.


–எஸ். நமச்சிவாயம், விழுப்புரம்

பபர் என்பது ஒரு மெமரி ஏரியா. உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் தனக்குத் தொடர்ந்து சீராக கம்ப்யூட்டரிலிருந்து டேட்டா வந்து கொண்டே இருக்க வேண்டும் என எண்ணும் நிலையில் இந்த மெமரியினைப் பயன்படுத்திக் கொள்கிறது.

சிடி ரைட்டரைப் பயன்படுத்துகையில் இந்த பிரச்சினை அடிக்கடி ஏற்படும். நீங்கள் சிடி ரைட்டரில் அமைத்துள்ள எழுதும் வேகத்திற்கு ஏற்ப டேட்டா சிடி ரைட்டருக்குச் செல்ல வேண்டும். அபடிச் செல்லவில்லை என்றால் பபர் ரன் எர்ரர் என்ற பிழைச் செய்தி காட்டப்படும். ஆனால் இப்போது வரும் சிடி/டிவிடி ரைட்டர்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் வகையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதே போல இன்டர்நெட்டிலிருந்தவாறே ஒரு பாடலைக் கேட்க முயற்சிக்கையில் அல்லது வீடியோ படக் காட்சி ஒன்றைப் பார்க்க முயற்சிக்கையில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்த சர்வரிலிருந்து டேட்டா தொடர்ந்து வந்து கொண்டே இருக்க வேண்டும். அதனை உங்கள் கம்ப்யூட்டர் பபர் மெமரி பெற்று இயக்கும்.

எடுத்துக் காட்டாக ஒரு ஆடியோ பாடல் பைல் ஒன்றைப் பெற்று பாடலைக் கேட்க செயல்படுகிறீர்கள். அப்போது அந்த ஆடியோ பைல் டேட்டா தொடர்ந்து கம்ப்யூட்டரில் பெற்று இயக்கப்பட வேண்டும். அப்போதுதானே பாட்டைத் தொடர்ந்து கேட்க முடியும்.

இடையே டேட்டா கிடைக்காவிட்டால் பாடல் ஒலிப்பது நின்று விடும். இந்த இடத்தில் தான் உங்களுக்கு பபர் மெமரி உதவிடுகிறது. டேட்டாவைப் பெற்று உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆடியோ இயக்கும் புரோகிராமிற்கு டேட்டாவினைத் தருகிறது. எனவே நீங்கள் கேட்கும் இசை உங்கள் கம்ப்யூட்டருக்கு ஓரிரு விநாடிகள் முன்பே தரப்பட்டு பபர் அதனை வைத்துச் சீராக வழங்குகிறது.

இதனால் சற்று தாமதமாக டேட்டா பபருக்கு வந்தாலும் பிரச்சினை இன்றி பாட்டு தொடர்ந்து கிடைக்கிறது. கிடைப்பதில் வேகக் குறைவு இருந்தாலும்,கிடைத்ததை பபர் மெமரி கொள்ள முடியவில்லை என்றாலும் பபர் பிரச்சினை எனக் காட்டப்படும்.


யு–ட்யூப் வீடியோ காட்சிகளை என் ஐ பாட் சாதனத்திற்கு டவுண்லோட் செய்து காண விரும்புகிறேன். ஆனால் பார்மட் பிரச்சினை ஏற்படுகிறது. எம்பி 4 பார்மட்டில் வேண்டும். இதற்குத் தீர்வு தரும் புரோகிராம்களைக் கூறவும்.


–செ. மன்னர் பாண்டியன், மதுரை

ஏதேனும் யு–ட்யூப் வீடியோவினை வீடியோவாகவோ அல்லது ஆடியோ பைலாகவோ ஐ பாட் சாதனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் முதலில் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின்னர் ஐ பாடுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

இதில் என்ன முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் ஐ–பாட் என்ன பார்மட்டை இயக்க முடியும் என்பதனை அறிந்து அந்த பார்மட்டில் சம்பந்தப்பட்ட வீடியோ அல்லது ஆடியோ பைலை அமைக்க வேண்டும். இன்டர்நெட் சைட்டுகளில் கிடைக்கும் பல ஆன்லைன் யு–ட்யூப் டவுண்லோடர் புரோகிராம்கள் flv பார்மட்டில் மட்டுமே இவற்றை டவுண் லோட் செய்திடும் வசதியைக் கொண்டிருக்கின்றன. இந்த வெப்சைட்டுகளைத் தவிர்க்கவும்.



உங்களுக்குத் தேவையான பார்மட்டில் இவற்றை டவுண்லோட் செய்திடும் வசதியினை ஒரு சில தளங்கள் தருகின்றன. அவற்றுள் மிகச் சிறந்த ஒன்றாக நான் கருதுவது http://vixy.net ஆகும்.



இங்கு சென்று நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும் யு–ட்யூப் வீடியோவிற்கான யு.ஆர்.எல். முகவரியினை இதில் தர வேண்டும். கீழ்க்காணும் பார்மட் ஆப்ஷன்கள் உங்களுக்கு வழங்கப்படும்.


l AVI for Windows (DivX + MP3)


l MOV for Mac (MPEG4 + MP3)


l MP4 for iPod/PSP (MPEG4 + AAC)


l 3GP for Mobile (MPEG4 + AAC)


l MP3 (audio only)


உங்களுக்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் உடனே வீடியோ அல்லது ஆடியோ பைல் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்மட்டில் உருவாக்கப்படும். இது முற்றிலும் இலவசமாகத் தரப்படு்கிறது.

நன்றி.தினமலர் கம்ப்யூட்டர்மலர்.திங்கள் ,ஜூலை,13, 2009
.

நூர்
20-07-2009, 06:03 AM
கேள்வி: இன்டர்நெட் பயன்பாட்டில் எஸ்.எஸ்.எல். என்பது மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. இதனைப் பெற என்ன செய்ய வேண்டும்? இதன் பொருள் என்ன? எப்படி நம்மை இது பாதுக்காக்கிறது?

–கே. நிர்மலா, கோயம்புத்தூர்


பதில்: Secure Socket Layers என்பதன் சுருக்கமே SSL இது இன்டர்நெட் தளத்தின் பாதுகாப்பினை அளிக்கிறது. நீங்கள் இது போன்ற பாதுகாப்பான ஒரு தளத்தில் நுழைகையில் அது சில விநாடிகளுக்கு உங்கள் தளத்துடன் உரையாடுகிறது. இந்த உரையாடலின் போது சுருக்கப்பட்ட தகவலை அனுப்புகிறது. இதனை அந்த தளமும் உங்கள் பிரவுசர் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இந்த உரையாடல் சரியாக செட் செய்யப்பட்டுவிட்டால் பின் அந்த தளம் வழக்கமான தளமாகச் செயல்படும். ஆனால் இடையே பரிமாறப்படும் தகவல்கள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டே நடைபெறும். இதனால் மூன்றாவது நபர் குறுக்கே புகுந்து இந்த தகவல் பரிமாற்றத்தினை எந்த வகையிலும் பெற முடியாது.

இதனால் தான் பாதுகாப்பான சர்வர்களுடன் நடைபெறும் தகவல் பரிமாற்றம் மிகவும் மெதுவாகவே நடைபெறுகிறது. இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். தகவல் பரிமாற்றத்தின் போதுதான் தகவல்களுக்கு என்கிரிப்ஷன் முறையில் பாதுகாப்பு கிடைக்கிறது. அந்த தகவல் சர்வரில் பதிந்து இருக்கையில் அதனை எடுக்க முயற்சிப்பவரின் முயற்சிகளை வேறு வழியில் தான் பாதுகாக்க வேண்டும்.

செக்யூர் சைட், பாதுகாப்பான தளம், என்பதனை அதன் முகவரியில் உள்ள https:// என்ற சொல்லில் உள்ள இறுதி எழுத்தைக் கொண்டு (s) ) அறியலாம். நீங்கள் இதனைப் பெற்று உங்கள் கம்ப்யூட்டரில் எதுவும் செய்திட முடியாது.


கேள்வி: எல்.சி.டி. மானிட்டர் ஒன்றை நான் என் கம்ப்யூட்டருடன் பயன்படுத்துகிறேன். அவ்வப்போது சிக்னல் டைமிங் மாற்ற வேண்டும் என மெசேஜ் வருகிறது. இது கம்ப்யூட்டர் தரும் மெசேஜா? அல்லது மானிட்டர் சம்பந்தப்பட் டதா? என்ன செய்திட வேண் டும் என ஆலோசனை கூறவும்.


–டி.எஸ். ஸ்ரீதேவி குமார், மதுரை


பதில்: விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கேம்ஸ் விளையாடுகையில் உங்கள் மானிட்டர் எல்.சி.டி. மானிட்டர் என்றால் Attention: Signal frequency is out of range ... change signal timing என்று வரும். இதைத்தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

உங்கள் மானிட்டரை சப்போர்ட் செய்திடும் சாதனம் அதனைக் காட்டிக் கொடுக்கிறது என்று பொருள். இது எதைக் குறிக்கிறது என்று மலைப்பாக இருக்கிறதா! உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்ட் குறிப்பிட்ட ரெப்ரெஷ் ரேட்டில் இயங்குகிறது; ஆனால் உங்கள் மானிட்டரால் இயலவில்லை. உங்கள் மானிட்டர் செட்டிங்ஸ் செக் செய்து அதன் ரேட்டினைக் குறைக்கவும்.

டெஸ்க் டாப் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் Settings என்னும் டேப்பிற்குச் செல்லவும். இதில் Advanced பட்டனில் கிளிக் செய்து அதில் Monitor டேப்பை எடுக்கவும். அது அதிகமாக (எ.க 85 Hz அல்லது அதிகமாக) இருந்தால் அதனை 60 Hz ஆக மாற்றவும்.

இந்த ரேட்டில் அனைத்து மானிட்டர்களும் சரியாகச் செயல் படும். நீங்கள் இந்த விண் டோவில் இருக்கையில் அது கிரே கலரில் மாற வில்லை என்றால் "Hide modes that this monitor cannot display"என்று இருக்கும் இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். இதனால் நீங்கள் செட் செய்த ரேட் மாறாது.


கேள்வி: மேக் அபி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை வைத்திருந்தேன். ஆனால் தற்போது அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும் இனி சப்போர்ட் கிடையாது எனவும் செய்தி வருகிறது. வேண்டும் என்றால் கட்டணம் கட்ட வேண்டும் என்று இதனை விற்பனை செய்தவர் கூறுகிறார். என்னுடைய சந்தேகம் ஏற்கனவே மேக் அபி வைத்த இடத்தில் இலவச சாப்ட்வேர் தொகுப்பினை (ஏவிஜி) பதியலாமா என்பதுதான். விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


–கா. சிவக்குமார், விருதுநகர்


பதில்: ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பிற்கு எப்போது வேண்டுமானாலும் மாறிக் கொள்ளலாம். மேக் அபியுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் என்பது நீங்கள் செலுத்திய பணத்திற்கானதுதான். ஆனால் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பிற்கு மாறுவதற்கு முன் சிலவற்றை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

மேக் அபி தொகுப்பு தந்த அனைத்து வசதிகளும் இலவச ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பில் கிடைக்காது. மேலும் மேக் அபி தொகுப்புடன் சில செட்டிங்ஸ் ஏற்படுத்தி இருப்பீர்கள். எந்த புரோகிராமினை அனுமதிப்பது, எந்த தளத்தை அனுமதிக்கக் கூடாது என்பதெல்லாம் ஏவிஜி இலவச தொகுப்பு அப்படியே ஏற்றுக் கொள்ளாது.

மேக் அபி நிறுவனத்துடன் அடுத்த ஆண்டுக்கான பணத்தையும் கட்டுகிறேன் என்று ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்தால் அதனை முறையாகத் தெரிவித்து ரத்து செய்திடுங்கள். ஏவிஜி தொகுப்பினை இன்ஸ்டால் செய்திடும் முன் மேக் அபி தொகுப் பை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள். இதற்குச் சரியான வழியைச் சொல்கி றேன். முதலில் இலவச ஏவிஜி தொகுப்பினை இன்டர்நெட் மூலம் டவுண்லோட் செய்து டெஸ்க்டாப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இன்டர்நெட் இணைப்பை கட் செய்திடுங்கள். பின் மேக் அபி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள். பின் ஏவிஜி தொகுப்பை இன்ஸ்டால் செய்திடவும்.


கேள்வி: எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் ஒன்றை என் கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்துகிறேன். அதில் போல்டருக்குள் பல புதிய போல்டர்கள் உருவாக்கப் பட்டுள்ளன. நான் நிச்சயமாய் இவற்றை ஏற்படுத்தவில்லை. இன்டர்நெட்டிலிருந்தும் பைல்களை அமைக்கவில்லை.

எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கில் இது 12 ஜிபி ஹார்ட் டிஸ்க் இடத்தை எடுத்துக் கொண்டுள்ளதாக கணக்கு காட்டுகிறது. போல்டர்களை அழிக்க முயன்றால் அதனை ஒருவர் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் தரப்படுகிறது. என் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் செட்டிங் எதுவும் மாற்ற வேண்டுமா? இதற்கான தீர்வைத் தரவும்.


–என். நீதிவாணன், சென்னை


பதில்: இது ஒரு வைரஸ் அல்லது வோர்ம் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராமால் ஏற்பட்டுள்ளது. பிளாஷ் டிரைவ் அல்லது இன்டர்நெட் தொடர்பில் இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வந்திருக்கும். அந்த வைரஸை நீக்க வேண்டும். வைரஸை நீக்காமல் போல்டர்களை அழிக்க சில வாரங்களுக்கு முன் கம்ப்யூட்டர் மலரில் குறிப்பிட்ட அன்லாக்கர் என்ற புரோகிராமினைப் பயன்படுத்தவும்.

பின் நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்து வைரஸை நீக்கவும். இணையத்தில் இருந்தவாறே வைரஸ் நீக்கும் செயலையும் மேற்கொள்ளலாம். அதற்கு இரண்டு தளங்கள் சிறப்பாக உதவுகின்றன. அவற்றின் முகவரிகள்: http://housecall.trendmicro.com , www.bitdefender/com/scan8/ie.html


கேள்வி: பல பாடல்களை நான் எம்பி3 பைல்களாகப் பதிவு செய்து வைத்து ரசித்து வருகிறேன். இந்த பாடல்களில் இருந்து பாடுபவரின் ஒலியை மட்டும் நீக்க முடியும் என்று கேள்விப் பட்டேன். இணையத்தில் பலமுறை தேடியும் அப்படி ஒரு புரோகிராம் கிடைக்கவில்லை. எங்கு கிடைக்கும்?


–கே.எல். சீதா உத்தம்குமார், புதுச்சேரி


பதில்: நல்ல முயற்சிதான். அந்த இடத்தில் உங்கள் குரலைப் பதிய விருப்பமா! இதுபோல பல வாசகர்கள் இசைக்கருவியிலிருந்து வரும் இசையை நீக்க முடியுமா என்றும் கேட்டுள்ளனர். AV Music Morpher என்ற புரோகிராமினைப் பெற்று பயன்படுத்திப் பார்க்கவும்.


கேள்வி: என்னு டைய லேப் டாப் கம்ப்யூட்டரில் விசிடிக் களைப் பயன்படுத்த முடியவில்லை. விசிடிகளை லோட் செய்தவுடன் அதில் உள்ள பைல்களை டேட்டா (DAT) பைல் களாகக் காட்டுகிறது. பைல் எக்ஸ்டென்ஷனை AVI என மாற்றினேன். வி.எல்.சி. பிளேயரில் பிளே செய்தால் வீடியோ தன்மை மிக மோசமாக உள்ளது. இந்தக் குறையை எப்படி சரி செய்வது?


–எஸ்.பாரதி செல்வன், செங்கல்பட்டு


பதில்: AVI என எக்ஸ்டன்ஷன் மாற்றுவதால் வீடியோ தன்மை கெட்டுப் போகாது. வீடியோவினை பிளே செய்திட மீடியா பிளேயர் கிளாசிக் என்பதனைப் பயன்படுத்தவும். வி.எல்.சி. பிளேயரும் இதனை நன்கு இயக்கும். ஆனால் நீங்கள் எழுதியதிலிருந்து அதில் Codec பிரச்சினைகள் இருக்கிறது என்று தெரிகிறது. எனவே மீண்டும் வி.எல்.சி. பிளேயரை இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.


கேள்வி: எம்.டி.எஸ்.ஓ. என்பது என்ன? மொபைல் போன் பயன்பாட்டில் இதன் வேலை மிகவும் முக்கியமானதா?


–இரா. இளங்குமரன், உதகமண்டலம்


பதில்: Mobile Telephone Switching Office என்பதன் சுருக்கமே எம்.டி.எஸ்.ஓ. நீங்கள் இன்னொரு ஊரில் இருந்து மொபைல் போனைப் பயன்படுத்துகையில் அங்குள்ள இந்த டவர் உங்களின் தனி எண்ணை தன் டேட்டா பேஸ் மூலம் சரி பார்த்து உங்கள் அழைப்பினை அடுத்த எம்.டி.எஸ்.ஓ.விற்கு அனுப்பி வைக்கிறது.

ஏதேனும் ஒரு டவர் இதனை அனுப்பவில்லை என்றால் அழைப்பு அவ்வளவுதான். கட் ஆகும். அழைப்பு கிடைக்கும்போது ரோமிங் கட்டணம் உங்கள் அக்கவுண்ட்டில் சேரும். எனவே உங்களுக்கும் உங்கள் மொபைல் சேவை நிறுவனத்திற்கும் இது முக்கியமான பணியை மேற்கொள்கிறது.


கேள்வி: ஹார்ட்வேர், சாப்ட்வேர், ஹூயுமன் வேர் எனக் கேள்விப் பட்டிருக்கிறோம். நீங்களும் விளக்கம் அளித்துள்ளீர்கள். வேப்பர்வேர் (Vaporware) என்பது எதனைக் குறிக்கிறது?


ஆர். நாராயணன், பி.இ. மாணவர்கள் சார்பாக


பதில்: கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் உங்களுக்குத் தெரிந்திருக்குமே. ஏனென்றால் இது இண்டஸ்ட்ரியில் புழங்கும் ஒரு சொல். ஏதேனும் ஒரு சாப்ட்வேர் அல்லது வேறு சாதனம் ஒன்றை டெவலப் செய்வதாக அறிவித்து பின் அதன் முழுமையான நிலை வராமலே இருந்துவிடுவதுதான் வேப்பர்வேர்.

எடுத்துக் காட்டு ஒன்று சொல்லட்டுமா! டெலிவிஷன் வழியே ஒரு சாதனத்தை (The Phantom game console) இணைத்து கேம்ஸ் பிரியர்கள் கேம்ஸ் தொகுப்புகளை டவுண் லோட் செய்திட சிஸ்டம் தயார் செய்வதாக அறிவிக்கப்பட்டு வேலையும் நடந்தது. இன்னும் இது வரவில்லை.


கேள்வி: வேர்ட் தொகுப்பில் டைப் செய்கையில் சொற்களுக்கு ஹைபன் அமையவில்லை. நானாக டைப் செய்திட வேண்டியதுள்ளது. இதனை எப்படி அமைக்கலாம்?


–ஆர். ரேவதி, தாம்பரம்


பதில்: வேர்டில் இதற்கான செட்டிங் அமைக்க வேண்டும்.Tools மெனு சென்று Language என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் சிறிய மெனு கட்டத்தில் Hyphenation என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மீண்டும் ஒரு சிறிய கட்டம் கிடைக்கும். இதில் Automatically Hyphenate Document என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அதே கட்டத்தில் இன்னும் என்ன என்ன ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன என்றும் பார்த்து வைத்துக் கொள்ளவும்.


கேள்வி: இன்டர்நெட்டிலிருந்து டெக்ஸ்ட் காப்பி செய்கையில் படங்கள் உள்ளன. இவற்றைத் தனியே பெயிண்ட் புரோகிராமில் பைலாக பதியுமாறு முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். வேர்ட் தொகுப் பிலேயே பதியலாமே? வீண் வேலை எதற்கு? என்ன காரணம்?


–ஆர். பார்த்தசாரதி, பொள்ளாச்சி


பதில்: வெகுநாட்களுக்கு முன்னால் எழுதிய கட்டுரை என்று நினைக்கிறேன். சரி, காரணங்களைச் சொல்லிவிடுகிறேன். எல்லாரிடமும் வேர்ட் தொகுப்பு இருப்பதில்லை. அடுத்து பெயிண்ட் புரோகிராம் மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்படுகிறது. மேலும் பெயிண்ட் புரோகிராமில் தேவையான அளவு எளிதாக எடிட் செய்து அமைக்கலாம்.

பெயிண்ட் புரோகிராமில் படத்தை சேவ் செய்திடுகையில் அது பட பைலாக சேவ் செய்யப்படுகிறது. ஆனால் வேர்ட் புரோகிராமில் பதியும் போது படம் வேர்ட் பார்மட்டுக்குத் தகுந்தபடி மாற்றம் செய்யப்பட்டு பதியப்படுகிறது. இதனால் படத்தின் தன்மை சற்று குறையலாம். பின் இதனை தனி பைலாக மாற்றுகையில் பைலின் அளவு பெயிண்ட்டில் நேரடியாக அமைப்பதைக் காட்டிலும் அதிகமாகலாம். மற்றபடி உங்களுக்கு எது எளிதோ அந்த வழியையே பின்பற்றலாம்.

நன்றி.தினமலர் கம்ப்யூட்டர்மலர்.20/07/09

நூர்
20-07-2009, 06:04 AM
என்னை உற்சாக படுத்திய அனைவருக்கும் நன்றி.

நூர்
27-07-2009, 06:16 AM
ஆஸ்பத்திரி ஒன்றில் பணி புரிகிறேன். அடிக்கடி டிகிரி சிம்பல் டைப் செய்திட வேண்டியுள்ளது.

ஒவ்வொரு முறை கேரக்டர் மேப் சென்று அந்த சிம்பலை எடுத்து காப்பி செய்தால் பேஸ்ட் ஆகிறது. சில வேளைகளில் சிரமம் தருகிறது. வேறு வழி உள்ளதா? கேரக்டர் மேப் வழியைச் சரியாகப் பயன்படுத்துவது எப்படி?

–சி.எஸ். கலை மாணிக்கம், அருப்புக் கோட்டை


உங்களுடைய நீண்ட கடிதத்திலிருந்து இந்த அடையாளத்தினை நீங்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டி இருப்பது தெரிகிறது. கம்ப்யூட்டர் உதவாமல் சிரமம் வைக்கிற்தே என்று நீங்கள் வருந்த வேண்டாம். டிகிரி சிம்பல் (�) அடையாளம் டாகுமெண்ட்டில் கொண்டு வர ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன.

இவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன். முதலாவதாக கீ போர்டு ஷார்ட் கட் கீகள். ஆல்ட் கீயினை அழுத்திக் கொண்டு நம் லாக் கீ போர்டில் 0176 என்று அழுத்தவும். டிகிரி அடையாளம் சரியாக அமைந்துவிடும். இது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் அனைத்து புரோகிராம்களிலும் செயல்படும். எண்களை டைப் செய்திட நம் லாக் கீ ஆன் செய்து அந்த கீகளையே பயன்படுத்தவும்.

எழுத்துக் களுக்கு மேலாக உள்ள எண்களுக்கான கீகளைப் பயன்படுத்தினால் இது செயல்படாது. இரண்டாவது வழி: வேர்ட் மெனுவில் இன்ஸெர்ட் (Insert) மெனு சென்று சிம்பல் (Symbol) என்பதை செலக்ட் செய்திடவும். கிடைக்கும் சிம்பல் டயலாக் பாக்ஸில் டிகிரியைத் தேர்ந்தெடுத்து டபுள் கிளிக் செய்திடவும்.

மூன்றாவதாக ஆட்டோ கரெக்ட் வழியாகவும் இதனை மேற்கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்பதாலும், சிரமம் எதுவுமின்றி இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாலும் இதனையே நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். இரண்டாவது வழியில் குறிப்பிட்ட டயலாக் பாக்ஸில் ஆட்டோ கரெக்ட் என்பதில் கிளிக் செய்தால் ஆட்டோ கரெக்ட் பாக்ஸ் கிடைக்கும்.

அதில் Replace என்ற பாக்ஸில் Degreesymbol என டைப் செய்திடவும். with என்று உள்ள பாக்ஸில் மேலே சொன்னபடி ஆல்ட் +0176 டைப் செய்தால் டிகிரி சிம்பல் அங்கு உட்கார்ந்துவிடும். இனி Add என்பதில் கிளிக் செய்து விட்டு வெளியே வரவும். அடுத்து நீங்கள் என்று டைப் செய்தால் போதும். வேர்ட் உடனே நீங்கள் விரும்பும் டிகிரி சிம்பலைத் தந்துவிடும்.

இது எளிதாகவும் நீங்கள் விரும்பும்படியும் இருந்தாலும்கேரக்டர் மேப்பில் என்ன பிரச்சினை உங்களுக்கு இருக்கும் என்பதையும் பார்ப்போம்.

கேரக்டர் மேப்பைப் பெற்று அந்த சிம்பலை செலக்ட் செய்த பின் அதில் டபுள் கிளிக் செய்தால் அது முதலில் கிளிப் போர்டுக்குத்தான் செல்லும். பின் குறிப்பிட்ட இடத்தில் பேஸ்ட் கட்டளை கொடுத்தால் சிம்பல் பேஸ்ட் செய்யப்படும். இதனை வரிசையாக நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.


எம்பி3 பிளேயர் போல எம்பி4 பிளேயர் உண்டா? எம்.பி.4 என்பது எம்.பி.3 யின் அட்வான்ஸ்டு வெர்ஷனா? குழப்பமாக உள்ளது; விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


–என். சுந்தரேசன், காரைக்குடி


தொழில் நுட்பத்தின் வேகம் சில நேரங்களில் நம்மை மிரளவைக்கிறது. அதன் வெளிப்பாடே நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி. எம்பி4 என்பதைச் சுருக்கமாகச் சொன்னால் அது கம்ப்ரஸ்டு வீடியோ பைல் எனலாம். இந்த பார்மட்டின் முக்கிய நோக்கம் என்னவென்றால் வீடியோ பைல்களைச் சுருக்கிப் பதிவதுதான்.

அப்போதுதான் இந்த வகை பைல்களை எளிதாக எங்கும் எடுத்துச் சென்று சிரமமின்றிப் பயன்படுத்த முடியும். ஏனென்றால் வீடியோ பைல்கள் அளவில் பெரியவை. எனவே தான் அவற்றைச் சுருக்கி விரியும் தொழில் நுட்பம் ஒன்றால் சிறிய அளவில் ஆக்கிவிடுகின்றனர். அதைத்தான் எம்பி4 என அழைக்கின்றனர்.


எம்பி 4 பைல்களும் எம்பி 3 பைல்களைப் போன்றவையே. எம்பி3 பைல்களும் அதில் உள்ள ஆடியோ சுருக்கப்பட்டு அதன் தன்மை கெடாமல் கிடைக்கின்றன. இந்த வகை பைல்களுடன் வீடியோவும் இணைகையில் எம்பி4 பார்மட் கிடைக்கிறது. எம்பி4 என்பதை MPEG4 AVC எனவும் அழைக்கின்றனர். இது Advanced Video Coding என்பதன் சுருக்கமாகும். இன்னும் கொஞ்சம் விளக்கம் அளிக்கட்டுமா!

எம்பி4 பைல்கள் பெரும்பாலும் வீடியோக்களுடன் தொடர்புடையதால் எம்பி3 மியூசிக் மற்றும் ஆடியோ பைல்களைக் காட்டிலும் சிறிது சிக்கல் நிறைந்தவை ஆகும். இருப்பினும் சில ஸ்பெஷல் கோடிங் மூலம் அவை சுருக்கப்படுகின்றன. பல வகைகளில் இவை சுருக்கப்பட்டு விரிக்கப்படுகின்றன.

இதனையே ஆங்கிலத்தில் compression and decompression என்கிறார்கள். அல்லது சுருக்கமாக codec என்றும் அழைக்கின்றனர். எம்பி3 மற்றும் எம்பி4 ஆகிய இரண்டு வகை பார்மட்டுகளையும் எளிதில் நகல் எடுக்கலாம் என்பதால் பைரசிக்கு இவை தப்புவதில்லை. எனவே இவற்றை உருவாக்குபவர்களுக்கு இவை பாதுகாப்பான வர்த்தகத்தைத் தருவது இல்லை.



வேப்பர் வேர் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சில கட்டுரைகளில் Aband onware என்று படித்திருக் கிறேன். அது எதனைக் குறிப்பிடுகிறது?

–டாக்டர் எஸ். குமரன், சென்னை


சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி அதனை விற்பனை செய்யாமலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்காமலும் இருந்தால் அதனை Abandonware என்று அழைக்கிறார்கள். பெரும்பாலான கம்ப்யூட்டர் கேம்ஸ் புரோகிராம்களை இந்த பட்டியலில் சேர்க்கலாம்.

இந்த சொல்லை கூகுள் சர்ச் இஞ்சினில் டைப் செய்து கிடைக்கும் பட்டியலில் இவை எப்படிப்பட்டவை என்று பாருங்கள். பழைய கேம்ஸ், பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் என்று நம் நினைவில் மட்டுமே உள்ளவற்றை அங்கு காணலாம். இவை பெரும்பாலும் தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்காது. அல்லது "Compatibility Mode" என்னும் வகையில் இவற்றை இயக்க வேண்டும்.


நான் ஒவ்வொரு புரோகிராமில் பைல் ஒன்றைத் திறந்து வைத்துப் பயன்படுத்துகையில் சிஸ்டம் ட்ரேயில் ஒரு சிறிய ஐகான் உருவாகுகிறது. ஆனால் அப்புறம் சில நேரம் கழித்து திறக்கும் பைல்களுக்கு அது போல உருவாவதே இல்லை. இதனால் கம்ப்யூட்டர் இயக்கம் பாதிக்கப்படுவது இல்லை என்றாலும் ஏன் இப்படி ஏற்படுகிறது என்று தெரிய வில்லை. தீர்வு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.


–என். நிர்மலா முத்துராஜ், கோயம்புத்தூர்


புதியதாய் திறக்கும் பைல்களுக்கு ஐகான் பட்டன்கள் அமைக்கப்படுவதில்லை என்பதுவே உங்கள் கலக்கத்திற்குக் காரணம். அவை திறக்கப்படுகின்றன; ஆனால் உங்களுக்குக் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்பட முடியவில்லை என்பதே உண்மை.

டாஸ்க் பார் நிரம்பியவுடன் அடுத்து வரும் பைல் பட்டன்களுக்கு இடம் விடுவதற்காக டாஸ்க் பார் தன்னைச் சுருக்கி வளைத்துக் கொள்கிறது என்பதே உண்மை. டாஸ்க் பாரின் ஓப்பன் விண்டோ ஏரியாவின் அருகே அம்புக் குறியினைக் காணலாம். அதில் கிளிக் செய்தால் அனைத்து பைல்களுக்கான பட்டன் களையும் காணலாம்.


இது போன்ற சூழ்நிலை ஏற்படக் கூடாது என்றால் உங்கள் டாஸ்க் பாரினை டபுள் டெக்கர் பஸ்ஸாக மாற்றிவிடுங்கள். டாஸ்க் பார் மீதாக உங்கள் கர்சரைக் கொண்டு செல்லவும். மேலும் கீழுமாக இரண்டு அம்புக் குறிகள் உள்ள அடையாளக் குறியாக உங்கள் கர்சர் மாறும். உடனே அதனைச் சற்று மேலே இழுத்துவிடுங்கள். இனி சரியாகிவிடும். பைல்கள் பட்டன்கள் தங்க பெரிய வீடு கிடைக்கும்.



வேர்டில் டெக்ஸ்ட்டை ஹைலைட் செய்வது எதற்காக? அவ்வாறு செய்கையில் எத்தனை வண்ணங்களில் அதனை அமைக்கலாம். அதற்கான வழிகள் என்ன?


–எஸ்.இரவீந்திரன், மதுரை


பதினைந்து விதமான வண்ணங்களில்வேர்ட் டெக்ஸ்ட்டை ஹைலைட் செய்திடலாம். வேர்டில் தரப்படும் ஹைலைட் டூல் மிக முக்கியமானதாகும். இதன் மூலம் நம் டாகுமெண்ட் டில் அதனைப் படிப்பவர்களின் அதிக கவனத்தைப் பெற வேண்டிய டெக்ஸ்ட்டை மற்றவற்றிடமிருந்து மாறுபட்டு அமைக்கலாம்.

இது ஒரு ஹைலைட் பேனாவால் சாதாரணமாக நாம் என்ன செய்வோமோ அதனையே செய்கிறது. இதனுடைய டிபால்ட் கலர் மஞ்சள். மொத்தம் ஒரு வரிசைக்கு ஐந்து வண்ணங்களாக மூன்று வரிசைகளில் 15 வண்ணங்கள் தரப்படுகின்றன. இதனைக் கிளிக் செய் தால் பென்சில் இருப்பது போல ஒரு பிரஷ் கர்சர் கிடைக்கும். அதனைக் கொண்டு எந்த டெக்ஸ்ட்டை ஹை லைட் செய்திட வேண்டுமோ அதனை ஹைலைட் செய்திடலாம்.


இந்த ஹைலைட் டூலிலேயே இன்னொரு ஆப்ஷன் இருக்கும். இதனை தேர்ந் தெடுத்தால் ஹைலைட் டூல் கலர் அடிக்காது. ஏற்கனவே அமைத்ததை நீக்க வேண்டும் என எண்ணினாலும் இதனைப் பயன்படுத்தலாம். புதிய டெக்ஸ்ட்டினை ஹைலைட் செய்திட புதிய வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தால் பழைய ஹைலைட் செய்திட்ட டெக்ஸ்ட் அதே பழைய வண்ணத் திலேயே இருக்கும்.

நன்றி.தினமலர் 27/07/09

சிவா.ஜி
27-07-2009, 06:30 AM
பயனுள்ள பதில்களைத் தொகுத்து வழங்கும் உங்கள் சேவைக்கு நன்றி நூர்.

puppy
27-07-2009, 06:46 AM
பாராட்ட வேண்டிய பதிவு இது....பாராட்டுகள் நூர்.....தொடரட்டும்
உங்கள் பணி

இளசு இந்த பக்கம் எல்லாம் வர மாட்டாரே?????????

நூர்
03-08-2009, 02:32 AM
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
-----------------------------------

இப்போது எந்த பிரவுசர் குறித்து படித்தாலும் பிரைவேட் பிரவுசிங் என்பது குறித்து எழுதப்படுகிறது. இதனால் என்ன பயன்? இதுவரை நாம் பிரைவேட்டாக பிரவுசிங் செய்திடவில்லையா? இது உண்மையிலேயே நல்லது என்றால் அதனை எப்படி செட் செய்வது?

– டாக்டர் என். லீலா ஈஸ்வரன், கோயம்புத்தூர்


நாம் இன்டர்நெட்டில் இப்போதெல்லாம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள முடிகிறது. ட்ரெயின், பஸ் டிக்கட் வாங்குவது, எலக்ட்ரிசிட்டி, டெலிபோன் பில் கட்டுவது, பொருட்கள் வாங்குவது என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இந்த தளங்களுக்குச் செல்கையில் பிரவுசர்கள் நீங்கள் எந்த தளங்களைப் பார்த்தீர்கள் என்று பட்டியலிட்டுக் கொண்டு வைத்துக் கொண்டு பின் நாளில் அந்த தளத்தின் முதல் சொல்லை டைப் செய்திடத் தொடங்கினாலே தளத்தின் முகவரியைத் தந்துவிடும். முழுமையான முகவரியை டைப் செய்திடாமலேயே நமக்குத் தள முகவரி கிடைக்கும்.


இதில் என்ன ஆபத்து எனில் அந்த கம்ப்யூட்டரைக் கையாளும் மற்றவர்களுக்கும் இந்த பட்டியல் கிடைக்கும். நீங்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தளங்களைப் பார்த்தீர்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியவேண்டுமா என்ன? அப்படியானால் இதற்கு வழி என்ன? என்று கண்டறிய முயற்சிக்கையில் ஏற்பட்ட தீர்வு தான் பிரைவேட் பிரவுசிங். இந்த சொற்களை பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறது. இதன் தற்போதைய பதிப்பில் இது தரப்படுகிறது.


Tools சென்று கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Start Private Browsing என்று ஒரு பிரிவு இருக்கும். இதைக் கிளிக் செய்தால் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த டேப்களெல்லாம் மறைந்து இப்போதிருந்து பிரைவேட் பிரவுசிங் ஆரம்பிக்கிறது.

பயர்பாக்ஸ் நீங்கள் பார்க்கும் தளங்களை குறித்து எந்த பதிவினையும் ஏற்படுத்தாது. ஆனால் நீங்கள் ஏற்படுத்தும் புக் மார்க் போன்றவை பதியபப்படும் என்று அறிவிப்பு வரும். இதில் ஓர் எச்சரிக்கையும் உண்டு. பயர்பாக்ஸ்தான் பதிந்து கொள்ளாது.எனவே நீங்கள் இன்டர்நெட்டில் எந்த எந்த தளங்களைப் பார்த்தீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது.

ஆனால் உங்களுக்கு இணைய சேவை தரும் நிறுவனத்திற்குத் தெரியும். எனவே உங்களுக்கு ஊதியம்கொடுத்து வேலைக்கு வைத்திருப்பவர் நினைத்தால் அவரும் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம் என்று ஓர் எச்சரிக்கை வரும்.


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இதனை InPrivate Browsing என அழைக்கின்றனர். இது என்ன செய்கிறது என்றால் அப்போது நீங்கள் செல்லும் தளங்களின் பட்டியலை பதிய வைத்துக் கொண்டு உங்கள் பிரவுசிங் பணி முடித்து பிரவுசரை முடிக்கையில் அனைத்தையும் அழித்துவிடுகிறது. இரண்டு தொகுப்புகளிலும் இதனை பெற ஒரு ஷார்ட் கட் கீ தொகுப்பு உண்டு. அது Ctrl + Shft + P ஆகும்.



ப்ளக் இன் புரோகிராம் என்று குறிப்பிடப்படுவது எந்த வகையைச் சேர்ந்தது? இது ஒரு வகை பைலா?

–என். நாகேஸ்வரன், மதுரை


ப்ளக் இன் என்பது ஒரு சிறிய புரோகிராம். இது உங்கள் பிரவுசருடன் இணைந்து செயலாற்றும் வகையில் வடிமைக்கப்பட்டிருக்கும். சில வடிவில் இருக்கும் வெப் மீடியாவினை இயக்க இந்த ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்படும்.

எடுத்துக் காட்டாக சில வெப் தளங்கள் நீங்கள் கேம்ஸ் விளையாட ஷாக்வேவ் தரும் வசதியினைப் பயன்படுத்துகின்றன. எனவே நீங்கள் இந்த கேம்ஸ் விளையாட வேண்டும் என்றால் ஷாக் வேவ் ப்ளக் இன் கட்டாயம் தேவை.

அப்படியானால் அனைத்து ப்ளக் இன் புரோகிராம்கள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டுமா என்று எண்ண வேண்டாம்.


நீங்கள் குறிப்பிட்ட கேம்ஸ் அல்லது வேறு வகை வெப் மீடியாவினைத் திறக்க எண்ணுகையில் அந்த தளமே உங்கள் கம்ப்யூட்டரைத் தேடிப் பார்த்து இந்த ப்ளக் இன் இல்லை.

சற்றுப் பொறுக்கவும்; நானே தேடிப் பதிந்து கொள்கிறேன் என்று அறிவித்துவிட்டு அந்த ப்ளக் இன் புரோகிராமினைப் பதிந்துவிடும். ஆனால் இப்போது வரும் பெரும்பாலான பிரவுசர்கள் அனைத்து ப்ளக் இன் புரோகிராம்களையும் உள்ளடக்கியே வருகின்றன.


நான் என்னுடைய அல்லது பொதுவாக ஒரு கம்ப்யூட்டரைக் காலையில் இயக்க தொடங்கினால் அலுவலக நேரம் முடியும் வரை அதனை அணைக்காமல் இருக்கலாமா? அது கம்ப்யூட்டருக்கு நல்லதா? அல்லது தொடர்ந்து அணைக்காமலேயே வைத்துவிடலாமா?


–எஸ். கே. கண்ணன், புதுச்சேரி


என்னடா இந்த பட்டிமன்றக் கேள்வி சில மாதங்களாகக் காணோமே என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் கண்ணன். இருப்பினும் மீண்டும் ஒரு முறை இங்கு இது குறித்துக் கூறுகிறேன்.

ஏன் பட்டிமன்றம் என்று குறிப்பிட்டேன் என்றால் இரண்டு வகையான கருத்து இப்படியும் அப்படியும் நிலவுகிறது. கம்ப்யூட்டரை வெகுநேரம் வேலை முடியும் வரை அப்படியே விட்டுவிடலாம்; தீங்கு ஒன்றும் நேராது என்று ஒரு கோஷ்டி.

இல்லை விடக்கூடாது; அவ்வப்போது வேலை இல்லை என்றால் அணைத்து ஓய்வு கொடுங்கள். பின்பு தேவைப்படும்போது மீண்டும் இயக்கிக் கொள்ளலாம் என்றுஒரு கோஷ்டி கூறுகிறது. இவர்கள் கூறும் காரணங்களைப் பார்ப் போமா?

கம்ப்யூட்டரில் உள்ள எலக்ட்ரானிக் பாகங்கள் அடிக்கடி ஆப் செய்து ஆன் செய்திடாமல் வைத்தால் தான் வெகு நாட்களுக்கு நன்றாக வேலை செய்திடும். முதல் முதலில் கம்ப்யூட்டரை ஆன் செய்கையில் ஒரு எலக்ட்ரிக் பம்பிங் இருக்கும்.

அடிக்கடி செய்தால் இந்த லேசான அதிர்ச்சியை கம்ப்யூட்டர் அடிக்கடி பெற வேண்டுமே. மேலும் அடிக்கடி ஆப் செய்து ஆன் செய்தால் கம்ப்யூட்டர் பூட் செய்திட எடுக்கும் நீண்ட நேரத்தை அடிக்கடி சந்திக்க வேண்டும். இது வீணான நேரம் தானே. இதனை ஏன் அடிக்கடி கொள்ள வேண்டும்?


வேலையில்லையா, உடனே ஆப் செய்துவிடு என்று கூறுபவர்கள் ஹார்ட் டிஸ்க் நீண்ட நாட்கள் உழைக்க அது வேலையில் இல்லாத் நேரத்தில் ஓய்வெடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

தொடர்ந்து ஹார்ட் டிரைவின் மோட்டார் ஓடிக் கொண்டிருப்பது அதன் பாகங்களைத் தேயவைக்காதா? என்ற கேள்வியை இவர்கள் எழுப்புகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ஏனென்றால் ஹார்ட் டிஸ்க் தயாரிப்பவர்கள் இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமலா தயாரித்திருப்பார்கள் என்று பலரும் சொல்கின்றனர். மேலும் ஹீட், டஸ்ட் அதிகம் பெறும் வாய்ப்பு அது தொடர்ந்து ஓடினால் அதிகமாகிறது. எனவே அவ்வப்போது ஆப் செய்திடுங்கள் என்று உரத்த குரலில் இவர்கள் கூறுகின்றனர்.


சரி, என்ன செய்யலாம்? நான் பகலில் வேலை இருக்கும்போது அப்படியே தொடர்ந்து ஓடவிடுகிறேன். இரவில் ஆப் செய்து விடுகிறேன். இடையே வேலை இல்லை என்றால் ஆப் செய்துவிடுகிறேன்.

சும்மா இருக்கையில் ஏன் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். 133 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்திற்கு மேல் செயல்படும் எந்த ப்ராசசர் சிப்பிற்கும் அதன் வெப்பத்தினைத் தவிர்க்க ஒரு சிறிய விசிறி தேவைப்படுகிறது.

ஆனால் இந்த விசிறிகள் மட்டும் போதாது. எனவே வேலை இருக்கும்போது இயக்கிவிட்டு, வேலை இல்லையா, கம்ப்யூட்டரை அணைத்துவிட்டுப் பின் தேவைப்படுகையில் இயக்கவும்.



கம்ப்யூட்டருக்கு அருகில் சிகரெட் பிடிக்கலாமா? அதிலிருந்து வரும் புகை கம்ப்யூட்டருக்குக் கெடுதலா? எந்த பகுதியைப் பாதிக்கும்?


– எஸ். நித்யா, செஞ்சி


கம்ப்யூட்டர் பரவத் தொடங்கிய 1980 மற்றும் தொடர்ந்த ஆண்டுகளில் கம்ப்யூட்டர்கள் தூசி இல்லாத ஏர் கண்டிஷனிங் அறைகளில் வைத்து மட்டுமே இயக்கப்பட்டன.

மூடிய குளிரூட்டப்பட்ட அறைக் கதவுகளில் தயவு செய்து காலணிகளைக் கழட்டிவிட்டு நுழையுங்கள் என்றெல்லாம் அறிவிப்புகள் இருந்தன. கம்ப்யூட்டர் இருந்த அறை எல்லாம் ஆராய்ச்சி செய்திடும் பெரிய லேபரட்டரிகளாகக் கருதப்பட்டன.

ஆனால் இப்போது மானிட்டர் மீது ஸ்நாக்ஸ், டேபிளில் காபி, அருகே சிகரெட் சாம்பலைத் தட்ட ஆஷ் ட்ரே என கம்ப்யூட்டர் மேஜை அமர்க்களப்படுகிறது.


சிகரெட் புகை கம்ப்யூட்டருக்குள் நுழைந்தால் கெடுதல் விளைவிக்கலாம். குறிப்பாக ஹார்ட் டிஸ்க்குள் நுழைந்தால் அதிலுள்ள சிறு துகள்கள் டிஸ்க்கின் ஹெட் மற்றும் ப்ளாட்டர்களுக்கு இடையே சென்று நிச்சயம் அதன் இயக்கத்தினை நிறுத்தும்.

சிகரெட் புகையில் இருக்கும் கெமிக்கல்ஸ் உங்கள் மானிட்டரின் திரைக்குத் தீங்குவிளைவிக்கும். கீ போர்டு பிரவுண் கலர் கலந்த மஞ்சள் நிறத்தை சிகரெட் புகையிலிருந்து பெறும்.

இந்த புகை சிடி/டிவிடி ரைட்டர்களின் துல்லிய ஆப்டிக்ஸ் செயல்பாட்டிற்கு நிச்சயம் ஊறு விளைவிக்கும். ஆக கம்ப்யூட்டருக்கு எப்படி இருந்தாலும் பாதிப்பு இருக்கும். சரி, சிகரெட் பிடிக்கும் நபருக்கு இதைக் காட்டிலும் பாதிப்பு இருக்குமே.

கம்ப்யூட்டர் போனால் இன்னொன்று வாங்கிக் கொள்ளலாம். உடம்பு,இதயம் போனால் வாங்க முடியாது. எனவே கம்ப்யூட்டரைச் சுற்றி இல்லாமல் எந்த இடத்திலும் சிகரெட்டைப் பயன்படுத்தாமல் இருப்போம்.



என் கம்ப்யூட்டர்களில் பலவகை பைல்களைத் திறந்து பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய டாஸ்க் பாரில் பல ஐகான்கள் இருக்கின்றன. எந்த ஐகான் எந்த புரோகிராமினுடையது என்று எப்படி அறிவது?


–என். ரங்க பாஷ்யம், மேட்டுப் பாளையம்


பொதுவாக டாஸ்க் பாரில் ஐகானோடு அந்த பைலின் பெயர் இருக்குமே. அல்லது கர்சரை அந்த ஐகான் உள்ள இடத்தில் கொண்டு சென்றால் சிறிய மஞ்சள் கட்டத்தில் அந்த புரோகிராமின் பெயர் மற்றும் பைலின் பெயர் கிடைக்கும்.

அல்லது ஆல்ட் +டேப் கீகளைத் தட்டுங்கள். திறந்திருக்கும் பைல்களுக்கான புரோகிராம் ஐகான்கள் வரிசையாகத் திரையின் நடுவில் காட்டப்படும். அதன் கீழாகவே குறிப்பிட்ட ஐகானின் அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் பைலின் பெயர் இருக்கும்.


இன்னொரு தேவையான டிப்ஸ் சொல்லட்டுமா? ஆல்ட் +டேப் பயன்படுத்தித் திறந்து வைக்கப்பட்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களின் வழியே செல்கையில் அடுத்தடுத்துத்தான் செல்ல வேண்டும். பின்னால் செல்ல முடியாது.

இடது பக்கம் இருக்கும் ஐகானுக்கு மீண்டும் வர வேண்டும் என்றால் முழு வரிசையும் சென்று தான் மீண்டும் பெற வேண்டும் என நாம் பழகி உள்ளோம். இதற்கும் ஒரு வழி உள்ளது; ஐகான் வரிசையில் பின்னோக்கி வர ஆல்ட்+ஷிப்ட் +டேப் அழுத்தவும்.


பல வேளைகளில் நீங்கள் கன்பிகர் என்ற சொல்லைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் (Configure) எழுதுகிறீர்கள். இதன் சரியான பொருள் என்ன? கம்ப்யூட்டரின் எந்த வேலையை இது குறிக்கிறது?

–கே.நமசிவாயம், பெருங்களத்தூர்


அடிக்கடி பந்தை உதைப்பது போலப் பயன்படுத்தப்படும் சொல் என இன்னொரு வாசகர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆம், உண்மையே. நாம் பல முறை இதனைப் பயன்படுத்தி உள்ளோம்.

இது உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர், மெமரி, சாதனங்கள் மற்றும் சாப்ட்வேரினை அமைப்பது, நிறுவுவது மற்றும் இணைப்பதனைக் குறிக்கிறது. இது உங்கள் சாப்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம், பயன்பாடுகள் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைந்த ஒரு வேலையையும் குறிக்கும்.

உங்கள் சாப்ட்வேர் தொகுப்பை உங்கள் தேவைக்கேற்றபடி சில வசதிகளுக்கு மாற்றினாலும் அது கான்பிகர் தான்.


உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா! கம்ப்யூட்டரில் உருவாகும் பல பிரச்சினைகள் இந்த கான்பிகர் வேலையைச் சரியாகச் செய்யாததுதான்.

எப்போது ஒரு அப்ளிகேஷன் புரோகிராமை இன்ஸ்டால் செய்தாலும் அல்லது ஒரு துணை சாதனத்தை இணைத்தாலும் அதன் ரீட் மி (Read Me) பைலைப் படித்து அவற்றை எப்படி கான்பிகர் செய்திட வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஒன்றை நம் தேவைகளுக்கேற்பவும், நம் சிஸ்டத்தின் செயல்பாடுகளுக்கேற்பவும் அமைப்பதே கான்பிகர் செய்தல்.


விண்டோஸ் எக்ஸ்புளோரருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும் என்ன வேறுபாடு? ஒன்று போலத்தானே இருக்கிறது. பின் ஏன் இரண்டு?


–கே. நல்லமாயன், உசிலம்பட்டி


சரியான சந்தேகம். இரண்டும் பைல்களைக் காட்டுவதில் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. ஒரே புரோகிராமின் இரண்டு ஸ்பிளிட் பெர்சனாலிட்டி என்று கூடச் சொல்லலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்திட உதவுகிறது. விண்டோஸ் எக்ஸ்புளோரர் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ், போல்டர்கள் மற்றும் பைல்களைத் தேடி எடுக்க உதவுகிறது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அட்ரஸ் பாரில் C:\My Documents என கம்ப்யூட்டரின் டைரக்டரியை டைப் செய்திடுங்கள். அங்கேயே மை டாகுமெண்ட்ஸ் டைரக்டரியைப் பார்க்கலாம். அதே போல விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் இன்டர்நெட் பக்கங்களையும் காணலாம்.


"Send To" மெனு என்பது என்ன செய்கிறது? எதற்காக இந்தப் பிரிவு தரப்படுகிறது? ஒரு சில மெனுக்களில் மட்டுமே இது கிடைக்கிறது, ஏன்? இதன் பயன்கள் குறித்து கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


–சை.சிக்கந்தர் பாட்சா, தேவாரம்


ஒரு சின்ன மெனு குறித்து எத்தனை கேள்விகளை அடுக்கி உள்ளீர்கள். (ஒரு சில மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது) விண்டோஸ் எக்ஸ்புளோரர் அல்லது மை கம்ப்யூட்டரில் நீங்கள் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் உள்ள ஆப்ஷன்களில் இதுவும் ஒன்று.

இந்த "Send To" ஆப்ஷனை நீங்கள் அப்போது எடுத்துக் கொண்டிருக்கும் பைலை நீங்கள் திட்டமிடும் இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லலாம். இதில் என்னவென்றால் வித்தியாசமான இன்னொரு ஆப்ஷனும் இந்த "Send To"ஆப்ஷனில் கிடைக்கும்.

அது desktop (shortcut) ஆகும். நீங்கள் அப்போது வைத்திருக்கும் பைலுக்கு ஷார்ட் கட் ஒன்றை இதன் மூலம் உருவாக்க முடியும். இதனைப் பயன்படுத்தி ஒரு பைலை கம்ப்யூட்டருக்குள் மட்டுமின்றி ஒரு பிளாப்பி மற்றும் ஒரு பிளாஷ் டிரைவிற்கும் கொண்டு செல்ல முடியும்.

இமெயில் பெறுபவர் ஒருவருக்கும் அனுப்ப இதனைப் பயன்படுத்தலாம். இதில் என்ன வேடிக்கை என்றால் இத்தனை வசதிகள் உள்ள இந்த வசதியை அவ்வளாவாக யாரும் பயன்படுத்துவதில்லை.


என்னுடைய ஸ்டார்ட் மெனுவில் My Recent Documents என்ற போல்டர் இல்லை. இதனை எப்படி இதில் கொண்டு வருவது? நானும் பல வழிகளை மேற்கொண்டு பார்த்துவிட்டேன். உதவவும்.


–செ. மங்களாம்பிகா, கோயம்புத்தூர்.


இதற்கு தீர்வு மிக எளிது. கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றுங்கள்.


1. Start பட்டனில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். ஸ்டார்ட் மெனு ஏற்கனவே மேலே இருந்தால் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். அதில் Properties மட்டுமே கிடைக்கும்.


2. Properties மெனுவில் ஸ்டார்ட் மெனு டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Customize என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள Advanced என்ற பட்டனை அழுத்தவும்.


3.இங்கு Recent Documents என்ற இடத்தில் உள்ள "List my most recently opened documents" என்பதனை அடுத்திருக்கும் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

4.பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி அடுத்த முறை ஸ்டார்ட் மெனு திறந்தால் My Recent Documents என்ற பிரிவு கிடைக்கும். இதே போல இந்த பிரிவு தேவையில்லை என்று கருதுபவர்கள் மேலே சொன்ன வழி சென்று என்ற இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம்.


ஒவ்வொரு முறை ஒரு குறிப்பிட்ட புரோகிராமினைப் பயன்படுத்துகையில் ஒரு பாப் அப் விண்டோ எழுந்துவந்து இதில் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கான ரிபோர்ட்டை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அனுப்பவா? என்று கேட்கிறது.

வேண்டாம் என்று கிளிக் செய்து அடுத்த முறை அந்த புரோகிராமினை ஸ்டார்ட் செய்கையில் சரியாகத் தொடங்குகிறது. ஆனால் ஓரிரு நாட்களில் மீண்டும் ரிப்போர்ட் தரவா பல்லவி தொடர்கிறது. இதற்குக் காரணம் வைரஸா? அல்லது புரோகிராமினை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? இத்தகைய பாப் அப் எர்ரர் செய்தி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?


விண்டோஸ் எக்ஸ்பி தரும் இந்த பாப் அப் விண்டோ எர்ரர் செய்தியினை நீங்கள் விரும்பவில்லை என்றால் தடுத்துவிடலாம். டெஸ்க் டாப்பில் உள்ள My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் "Properties தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் System Properties விண்டோவில் Advanced என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் "Error Reporting" என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இதில் உங்களுக்கு சில ஆப்ஷன்ஸ் கிடைக்கும். எர்ரர் ரிபோர்ட்டிங் என்பதனை இயங்காமல் செய்துவிடலாம். Disable error reporting என்பதனை இயக்கலாம்.

அவ்வாறு செய்துவிட்டால் கிராஷ் ஆகும் புரோகிராம் அப்படியே கிராஷ் ஆகிவிடுமே ஒழிய எர்ரர் ரிப்போர்டிங் எல்லாம் கொடுக்காது. எந்தவிதமான ரிபோர்ட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் செல்லாது.


இன்னொரு ஆப்ஷனும் உள்ளது. But Notify Me When Critical Errors Occur என்பதையும் இயக்கலாம். இது மிக மோசமான பொதுவான பிரச்சினைகள் குறித்து மட்டும் ரிப்போர்ட் செய்திடும்.

ஆனால் இந்த எர்ரர் ரிப்போர்டிங் நல்லதுதானே. ஏனென்றால் விண்டோஸ் தானாகவே ரிப்போர்ட் தயாரிக்கும் போது நம்மால் எடுத்து அனுப்ப இயலாத சில சிஸ்டம் விஷயங்களைத் தெளிவாக அனுப்பும்.

அதனைப் படித்து அறியும் மைக்ரோசாப்ட் நிறுவன ஆய்வாளர்கள் எதில் பிரச்சினை இருக்கிறது என்று கண்டறிந்து அந்த பிரச்சினை பொதுவானது அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினுடையது என்றால் அதற்கான தீர்வினைக் கண்டறிய முயற்சித்து தங்களுடைய பேட்ச் பைலில் இணைத்துத் தருவார்கள்.



புதியதாக வால் பேப்பர் ஒன்றை என் கம்ப்யூட்டரில் அமைத்தேன். ஆனால் அதை மாற்ற வேண்டுமானால் என்ன செய்திட வேண்டும்?

– சி. பூங்குழலி, திருவான்மியூர்


உங்கள் டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். அதில் Properties தேர்ந்தெடுத்து Desktop என்பதைத் தேர்ந்தெடுங்கள். அதில் வால் பேப்பர் பயன்படுத்த என படங்கள் பட்டியல் ஒன்று கிடைக்கும்.

அதில் எந்த பேக் கிரவுண்ட் வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். அது டெஸ்க்டாப்பில் எப்படி காட்டப்படும் என்பதற்கு ஒரு முன் தோற்றம் கிடைக்கும். பின் அந்த காட்சி திரையில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மூன்று ஆப்ஷன்கள் (Center, Tile, or Stretch) கிடைக்கும். இதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இதில் உள்ள Browse என்ற பட்டனில் கிளிக் செய்தால் உடனே விண்டோஸ் எக்ஸ்புளோரர் கிடைக்கும். இதன்மூலம் கம்ப்யூட்டரில் நீங்கள் சேர்த்து வைத்துள்ள படங்களைத் தேடிப் பார்த்து உங்களுக்குப் பிடித்த பட பைலைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

நன்றி.தினமலர்.03/08/09

நூர்
03-08-2009, 02:33 AM
என்னுடைய கம்ப்யூட்டரில் திடீரென்று மை கம்ப்யூட்டர் ஐகான் காணாமல் போய்விட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. நானாக அதனை அழிக்கவில்லை. இதை எப்படி மீண்டும் கொண்டுவருவது என்று உதவவும்.

–செ. கந்தசாமி, நத்தம்


தானாக My Computer ஐகான் போயிருக்க வழியில்லை. நீங்களாக உங்களை அறியாமலேயே நீக்கியிருக்கலாம். அல்லது ஏதேனும் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில் அல்லது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறும்போது இது நீக்கப்பட்டிருக்கலாம். கவலைப்பட வேண்டாம். இதனை மீட்டுவிடலாம்.

டெஸ்க்டாப் சென்று காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில், Desktop பட்டன் மீது கிளிக் செய்து அதன்பின் Customize Desktop என்பதில் கிளிக் செய்திடவும்.

இப்போது கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பினைத் தட்டவும். இங்கு கிடைக்கும் நீள விண்டோவில் முக்கியமான ஐகான்கள் வரிசையாகப் பட்டியலிடப்படும். அதில் எது வேண்டுமோ அதனைக் கிளிக் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில் ஐகான் கிடைத்துவிடும்.

உங்களுடைய சிஸ்டம் விஸ்டா என்றால் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து Personalize என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அதன் பின் Change Desktop Icons என்பதில் கிளிக் செய்திடவும்.

இங்கிருந்து உங்களுக்குத் தேவையான டெஸ்க்டாப் ஐகானைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு செல்லலாம். இதே வழியில் உங்களுக்குத் தேவையில்லாத ஐகானத் திரையிலிருந்தும் நீக்கலாம்.


புரோகிராம் அல்லது கண்ட்ரோல் பேனலில் மாற்றம் ஒன்றை மேற்கொள்கையில் அப்ளை பட்டனைக் கிளிக் செய்துதான் ஓகே பட்டனைக் கிளிக் செய்திட வேண்டுமா? அல்லது ஓகே பட்டனை நேரடியாகக் கிளிக் செய்திடலாமா?


– நா.வ.பெருமாள், திருமங்கலம்


ஓகே கிளிக் செய்தால் நீங்கள் புரோகிராமில் மேற்கொண்ட மாற்றங்கள் செயல்பாட்டிற்கு வரும். எனவே அப்ளை பட்டனில் கிளிக் செய்திட வேண்டியதில்லை. அப்ளை பட்டன் பிரச்சினை எங்கு வருகிறது என்று பார்ப்போமா! நீங்கள் டெஸ்க்டாப் தீம், கலர் மாற்றம்,

ஸ்கிரீன் ரெசல்யூசன், ஆகியவற்றில் மாற்றம் செய்து அந்த மாற்றத்தை நீங்கள் முதலில் பார்க்க வேண்டும் என எண்ணினால் அப்ளை பட்டனில் கிளிக் செய்தால் நீங்கள் ஏற்படுத்திய மாற்றத்தைப் பார்க்கலாம். இதில் உங்களுக்குச் சம்மதம் இல்லை என்றால் மீண்டும் மாற்றி, அப்ளை கிளிக் செய்து, அனைத்தும் முடிந்த பின்னர் ஓகே கிளிக் செய்திடலாம்.

சிலர் அனைத்து மாற்றங்களுக்கும் அப்ளை கிளிக் செய்த பின்னரே ஓகே கிளிக் செய்தால் பாதுகாப்பானது என்று எண்ணுகிறார்கள். அப்படியும் செய்திடலாம். அதில் தவறேதும் இல்லை.



செகண்ட் ஹேண்ட் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கினேன். அதில் நாகரிகமில்லாத படம் ஒன்று வால் பேப்பராக வந்து உட்கார்ந்திருந்தது. இப்போது என் வால் பேப்பராக எதுவும் இல்லை என்றாலும் அந்த பைலை எப்படி நீக்குவது. டெஸ்க் டாப்பில் கிளிக் செய்து வால் பேப்பர் இடத்தில் பார்த்தால் டெலீட் பட்டன் இல்லை. தயவு செய்து இதற்கு ஒரு வழி கூறவும்.


– பெயர் தரவில்லை, ஊர்– சென்னை


டெஸ்க்டாப் / டிஸ்பிளே ப்ராப்பர்ட்டீஸ் சென்று பார்த்தால் வால் பேப்பருக்கான அனைத்து படங்களும் இருக்கும். ஆனால் நீங்கள் சொல்வது போல அவற்றை அங்கு வைத்து நீக்க முடியாது.

வேறு வழியில் நீக்கலாம். வழக்கமாக வால் பேப்பர் போல்டர் C:\WINDOWS\Web\WALLPAPER என்ற இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். அங்கு அந்த போல்டர் இல்லை என்றால் சர்ச் கட்டம் சென்று அங்கு WALLPAPER என டைப் செய்து தேடினால் எங்கிருக்கிறது என்று காட்டப்படும். பின் அந்த போல்டர் இருக்குமிடம் செல்லவும்.

அந்த போல்டர் சென்ற பின் வியூவினை கூட umbnail என்பதற்கு மாற்றவும். ஏனென்றால் உங்களுக்குப் படமாகத்தான் தெரியும். அதன் பெயர் தெரியாது அல்லவா? படமாக இந்த பைல்கள் தெரியும்போது நீங்கள் விரும்பாத படம் அங்கே இருக்கும்.

அதனைத் தேர்ந்தெடுத்து கீ போர்டில் உள்ள டெலீட் பட்டனை ஷிப்ட் அழுத்தியவாறு அழுத்தவும். அந்த பட பைல் ரீசைக்கிள் பின் தொட்டிக்குப் போகாமல் முற்றிலுமாக நீக்கப்படும்.



என்னுடைய நிறுவனம் பள்ளிகளுக்கான நோட்ஸ் நூல்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். நாங்கள் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் நிறைய சிம்பல்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு சிம்பலுக்கும் இன்ஸெர்ட் மெனு சென்று பின் சிம்பல் பாக்ஸ் தேர்ந்தெடுத்து பின் மீண்டும் இன்ஸெர்ட் அழுத்தி அதன் பின் மீண்டும் வேர்ட் சென்று பார்ப்பதில் அதிக நேரம் செலவாகிறது. இதற்கு வேறு வழி உள்ளதா?


–சி. புஷ்பலதா, சிவகாசி


நல்ல கேள்வி. அனுபவம் தான் அதிக சந்தேகங்களையும் கேள்விகளையும் தரும் என்பது சரிதான். ஓகே, உங்களுக்கான தீர்வுக்கு பல வழிகளில் முயன்ற பின் கீழ்க்காணும் வழி தான் எங்களுக்குத் தெரிந்தது.


முதலில் நீங்கள் பயன்படுத்த வேண்டிய சிம்பல்கள் என்னவென்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். வேர்ட் டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு இன்ஸெர்ட் சென்று சிம்பல் பாக்ஸ் திறந்து பின் அங்குள்ள சிம்பல்களை இன்ஸெர்ட் செய்திடத் தொடங்குங்கள்.

முதல் சிம்பலை இன்ஸெர்ட் செய்தவுடன் சிம்பல் பாக்ஸ் அப்படியே டாகுமெண்ட் மீது இருப்பதனைப் பார்க்கலாம். இதனால் அனைத்துசிம்பல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக உங்களால் இன்ஸெர்ட் செய்திட முடியும்.

இவை அனைத்தையும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஓர் இடத்தில் கொண்டு வந்தால் பின் அதிலிருந்து கட் செய்து தேவையான இடத்திற்குக் கொண்டு செல்வது குறைவான நேரத்தையே எடுக்கும் அல்லவா? உங்களிடம் வேர்ட் 2007 இருந்தால் கூடுதலாக வசதி உண்டு. சிம்பல் பாக்ஸ் திறந்திருக்கும்போதே டாகுமெண்ட்டையும் எடிட் செய்திடலாம்.



ஒரு போல்டரை மினிமைஸ் செய்த பின்னர் அது டாஸ்க் பாரில் இருக்கும் போது அதில் பைலை காப்பி செய்வது எப்படி?


–தினேஷ் குமார், கோயம்புத்தூர்


பைலை அப்படியே இழுத்து வந்து அந்த போல்டரின் மீது மவுஸின் பட்டனிலிருந்து அழுத்தத்தை எடுக்காமல் வைத்திருக்கவும். போல்டர் தானாகத் திறந்திடும். இப்போது அந்த விண்டோவில் பைலைப் போட்டுவிடலாம்.



புரோகிராம்களைத் திறக்க ஷார்ட் கட் ஐகான்களை அமைத்துத் திறக்கிறோம். ஆனால் கம்ப் யூட்டரில் அந்த புரோகிராம் பைல்கள் உள்ள போல்டர் எங்கே இருக்கிறது என்று பார்க்க டிரைவ் டிரைவாகத் தேட வேண்டியுள்ளது. இதற்கும் ஒரு ஷார்ட் கட் ஐகான் அமைத்திட முடியுமா?


–கே. ஆர். செம்பகராணி, ஓய்வு பெற்ற ஆசிரியை, பரவை, மதுரை


ஏற்கனவே உள்ள ஷார்ட் கட் ஐகானில் அதற்கான கீ உள்ளது, மேடம். குறிப்பிட்ட ஐகான் மீது ரைட் கிளிக் செய்து ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் ஷார்ட் கட் டேபிற்குக் கீழாக Find Target என்று ஒரு கட்டம் இருக்கும்.

நீங்கள் விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துபவராக இருந்தால் ‘Open File Location’ என்று இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராம் பைல்கள் இருக்கும் போல்டரை உங்களுக்காகத் திறக்கும். அதில் மெயின் இ.எக்ஸ்.இ. பைல் உட்பட அனைத்து பைல்களும் இருப்பதனைக் காணலாம்.



இலவச இமெயில் தரும் இன்டர்நெட் வெப்சைட்களில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தால் எந்த யூசர் பெயரும் உடனே நமக்குக் கிடைப்பதில்லை. ஒவ்வொன்றாகப் போட்டு பார்க்க வேண்டியதுள்ளது. இறுதியில் அது தரும் பெயரில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இதற்கு வேறு வழியே இல்லையா?


ஏனென்றால் அது கொடுக்கும் யூசர் நேமைப் பயன்படுத்தினால் நமக்கு அது மறந்து போகிறது.


–அருமை பாக்கியராஜ் , புதுச்சேரி


வேறு வழியில்லை. சில பெயர்களில் பல மாணவர்கள் ஒரு பள்ளியில் இருக்கலாம். ஆனால் இணைய தளம் தரும் அக்கவுண்ட்டில் ஒரு பெயரில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும்.

இல்லை என்றால் கடிதங்கள் முகவரி மாறிப் போய்விடுமே. எனவே வித்தியாசமான முறையில் உங்கள் யூசர் நேம் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அந்த தளம் கொடுக்கும் பெயர்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.


உங்கள் கேள்வியைப் படித்தவுடன் இணைய தளம் ஒன்று நினைவிற்கு வருகிறது. இது எந்த அளவிற்கு உங்களுக்கு உதவியாய் இருக்கும் என்று தெரியாது. வித்தியாசமான முறையில் இயங்குவதால் அது குறித்து உங்களுக்குத் தகவல் தருகிறேன்.

அந்த தளத்தின் பெயர் http://namechk.com என்பதாகும். இந்த தளம் சென்று உங்களுக்குப் பிடித்தமான யூசர் நேம் சில தளங்களில் கிடைக்குமா என்பதனை அறிந்து கொள்ளலாம். பெயரை டைப் செய்து செக் என்ற இடத்தில் கிளிக் செய்தால் அது 122 வெப்சைட்டுகளுக்குச் சென்று அங்கு உங்கள் பெயரை யூசர் நேமாகப் பயன் படுத்த முடியுமா என்று பார்த்து பதில் அளிக்கிறது.

முதலில் பிரபலமான வெப்சைட்டுகளில் மட்டும் உங்கள் பெயருக்கு இடம் இருக்குமா என்று காட்டுகிறது. நீங்கள் அனைத்தும் அறிய ஆவலாய் இருந்தால் அதற்கான பட்டனில் கிளிக் செய்தால் 122 தளங்கள் பெயரும் எதில் உங்கள் பெயருக்கு இடம் உள்ளது என்றும் காட்டும்.

சோசியல் நெட்வொர்க்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு இந்த வெப்சைட் உதவியாய் இருக்கும். குறிப்பிட்ட பெயர் எந்த தளங்களில் கிடைக்கிறதோ அவற்றில் லாக் இன் செய்து அங்கு உள்ள நண்பர்களைச் சந்திக்கலாமே.



விண்டோஸ் எக்ஸ்புளோரரில் டிரைவ் மற்றும் பைல்களைப் பார்க்கையில் சில போல்டர்களின் முன் + அடையாளமும் சிலவற்றின் முன் – (மைனஸ்) அடையாளமும் உள்ளது. ஏன் இந்த வேறுபாடு? இது எதனைக் குறிக்கிறது?


– வி.கீதா லட்சுமி, சின்னமனூர்


போல்டருக்குள் சில போல்டர்கள் இருந்தால் அதன் முன் + அடையாளம் இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் இன்னும் சில சப் போல்டர்களைப் பார்க்கலாம் என்று பொருள்.

அப்படி கிளிக் செய்து அதில் இருக்கும் போல்டர்கள் விரிக்கப்பட்டால் அந்த + அடையாளம் மைனஸ் அடையாளமாக மாறிவிடும். அதாவது உள்ளே இருக்கும் போல்டர்களை விரித்து விட்டேன். இனிமேல் உள்ளே எதுவும் இல்லை என்று பொருள்.

அப்படி விரித்து வெளிவந்த போல்டர்களில் உள்ளே போல்டர்கள் இருப்பின் அதன் முன்னும் + அடையாளத்தைக் காணலாம்.



ஆடியோ அல்லது வீடியோ பைல்கள், பெரும்பாலும் வீடியோ பைல்களை பிளே செய்திட முயற் சிக்கையில் கோடக் (CODEC) ஒன்றை டவுண் லோட் செய்தால் தான் இதனைப் பிளே செய்திட முடியும் என்று செய்தி வருகிறது. ஆனால் மற்ற பாடல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் பிளே ஆகின்றன. என்ன பிரச்சினை? தீர்வு என்ன?


–ஆர். ரெங்க ராஜன், மேட்டுப் பாளையம்


கோடெக் என்பது Coder Decoder அல்லது Compressor Decompressor ஆகிய இரண்டையும் குறிக்கும் சுருக்குச் சொல். இவற்றில் ஆடியோ, வீடியோ மற்றும் டெக்ஸ்ட் கோடக் உள்ளன.

இவை ஆடியோ, வீடியோ மற்றும் டெக்ஸ்ட் சப் டைட்டிலிங் ஆகியவற்றை ஒருங்கிணைக்கத் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் டவுண் லோட் செய்த வீடியோ கிளிப்களுக்குத்தான் இது போன்ற கோடக் தேவைப்படும்.



ஓப்பன் சோர்ஸ் என்ற சொற்களை அடிக்கடி சில புரோகிராம்கள் மற்றும் பிரவுசர்களுக்குப் பயன்படுத்துகிறீர்கள். இந்த அடைமொழியை ஏன் தருகிறீர்கள். இலவசமாகக் கிடைப்பவை எல்லாம் ஓப்பன் சோர்ஸ் என அழைக்கலாமா?


–கா. பொன்ராஜ், காரைக்கால்


அடிப்படையில் எந்த ஒரு புரோகிராமிற்கான சோர்ஸ் கோடினை (புரோகிராம் வரிகள்) அதனை எழுதியவர் மற்றவர் பார்க்கும்படியாகவும், படித்துத் திருத்தக் கூடிய வகையிலும் தருகிறாரோ அவை மட்டுமே ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் என அழைக்கப்படுகின்றன.

சோர்ஸ் என்பது மூல ஆதாரம். இந்த புரோகிராமின் மூல ஆதாரங்களை யாரும் கண்டு கொள்ளலாம் என்பதே இதன் அடிப்படை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் (விண்டோஸ் மற்றும் ஆபீஸ்) சோர்ஸ் கோட் எவருக்கும் கிடைக்காது.

ஆனால் ஓப்பன் ஆபீஸ், லினக்ஸ் சிஸ்டம், மொஸில்லா பிரவுசர் ஆகியவற்றின் சோர்ஸ் கோடினை யார் வேண்டுமானாலும் இணையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அதனால் தான் புரோகிராம் டெவலப்பர்கள் இந்த சாப்ட்வேர்களில் இயங்கக் கூடிய வகையில் துணை புரோகிராம்களையும் ஆட் ஆன் தொகுப்புகளையும் எழுதி மக்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.


இதில் என்ன லாபம் உள்ளது என்று எண்ணுகிறீர்களா? ஓப்பனாக சோர்ஸ் கோட் தருவதால் ஏற்கனவே உள்ள புரோகிராம்களுக்கு மேம்பாட்டிற்கான சிறிய புரோகிராம்களை நூற்றுக் கணக்கில் ஆயிரக் கணக்கில் புரோகிராமர்கள் பாடுபட்டு உருவாக்கி இலவசமாகத் தருகின்றனர்.

ஒரு நிறுவனம் இவர்களை வேலைக்கு நியமித்து அவற்றை எழுத வைப்பது என்றால் அதிகம் செலவாகுமே. மேலும் இந்த ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் பயன்படுத்த இலவசமே. ஆனால் அவற்றை சப்போர்ட் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் பெரும்பாலும் இலவசமே. ஆனால் இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்கள் அனைத்தும் ஓப்பன் சோர்ஸ் அல்ல. விண்டோஸ் ஓப்பன் சோர்ஸ் ஆக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? சான்ஸே இல்லை சார்.



கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லும் படங்களை நாம் வேர்ட் டாகுமெண்ட்டில் ஒட்டுகையில் கண்ட்ரோல் +வி அல்லது பாப் அப் மெனுவில் பேஸ்ட் கட்டளையைக் கிளிக் செய்து ஒட்டுகிறோம். ஏன் இன்ஸெர்ட் கீயினைப் பயன்படுத்த முடியவில்லை?


–சின்னஞ்சிறு கோபு, சீனிவாசபுரம்


இன்ஸெர்ட் கீயினையும் பயன்படுத்திக் கிளிப் போர்டில் உள்ளதை ஒட்டலாம். இதற்கு சின்ன செட்டிங்ஸ் செய்திட வேண்டும். அதற்கு முன் அந்த கீ குறித்தும் சில முன் தகவல்களைப் பார்ப்போம்.

கீ போர்டில் உள்ள இன்ஸெர்ட் கீ என்னும் டாகிள் கீக்கு இரண்டு வகையான செயல்பாடு உண்டு. ஒரு நிலையில் நாம் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட் மேலாக டைப் செய்தால் டைப் செய்திடும் டெக்ஸ்ட்டை இடையில் புகுத்தும். ஏற்கனவே இருப்பதை அழிக்காது.


இன்னொரு நிலையில் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட் மேலாக டைப் செய்திடும் டெக்ஸ்ட்டை அமைத்திடும். இந்த கீக்கு இன்னொரு செயல்பாட்டையும் செட் செய்திடலாம்.

நாம் காப்பி செய்திடும் டெக்ஸ்ட் அல்லது படம் எதுவானாலும் அது கிளிப் போர்டில் காப்பி ஆகி நாம் விரும்பும் இடத்தில் ஒட்டுவதற்காகக் காத்திருக்கிறது. இதனை கர்சர் உள்ள இடத்தில் ஒட்டிட Ctrl+V கீகளை அழுத்துகிறோம்; அல்லது Paste கட்டளை கொடுக்கிறோம். ஆனால் இந்த செயல்பாட்டை Insert கீ அழுத்தி மேற்கொள்ளலாம்.

இதற்கு Tools மெனு சென்று Options தேர்ந்தெடுக்கவும். பின் டேப்களுடன் கிடைக்கும் விண்டோவில் Edit டேபில் கிளிக் செய்திடவும். அதில் Use the Ins key for paste என்று இருக்கும் இடத்தில் ஒரு டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் எதையேனும் காப்பி செய்து வைத்தால் அதனை விருப்பப்பட்ட இடத்தில் ஒட்ட Insert கீயினை அழுத்தினால் போதும்.



டிரைவர் பைல் கரப்ட் ஆனது என்றும், புதிய டிரைவர் பைலை அந்த தளங்களிலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் என்றும் எழுதுகிறீர்கள். டிரைவர் பைல் என்ன செய்கிறது? இது அவசியம் தேவையா?


–எஸ். கிருஷ்ணன், காஞ்சிபுரம்


அடிப்படையில் டிரைவர் பைல் என்பது ஹார்ட்வேர் சாதனம் ஒன்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் கம்ப்யூட்டருக்குச் சொல்லும் புரோகிராம் ஆகும்.

எனவே இது ஏதாவது காரணத்தால் கெட்டுப் போய்விட்டால் மீண்டும் அந்த பைலை இன்ஸ்டால் செய்தால் தான் குறிப்பிட்ட அந்த சாதனம் இயங்கும். அந்த சாதனத்தைப் பயன்படுத்தி புதிய வசதிகள் அளிக்க அதனைத் தயாரித்த நிறுவனம் முன்வருகையில் அதற்கான டிரைவர் பைலைப் புதுப்பித்து வழங்கும்.

எனவே அதனை டவுண்லோட் செய்து பதிய வேண்டும். கீ போர்டு, மவுஸ் மற்றும் பிரிண்டர் போன்ற சாதனங்களுக்கான டிரைவர்கள் வழக்கமாகக் கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்படும். வேறு புதிய சாதனங்கள் வாங்குகையில் இந்த டிரைவர் பைல்கள் பதிந்து சிடி உடன் வழங்கப்படும்.

சிடியைப் பயன்படுத்தி இன்ஸ்டால் செய்தவுடன் அதனைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பின் நாளில் பைல் கரப்ட் ஆன பின்னர் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் இன்ஸ்டால் செய்கையில், ஹார்ட் டிஸ்க் பார்மட் செய்கையில் இது தேவைப்படலாம்.

நிறுவனங்களின் வெப்சைட்டுகளில் புதிய டிரைவர்கள் கிடைப்பது சிக்கலாக இருந்தால் www.windrivers.com, www.driverguide.com ஆகிய தளங்களில் முயற்சித்துப் பார்க்கவும்.


வெப்சைட்டுகளைப் பார்வையிட முயற்சிக்கையில் பலவாறாக அவை சில விளம்பரங்களை அனிமேஷனுடன் தருகின்றன. மேலும் மியூசிக் என்ற பெயரில் கேட்க முடியாத அளவிற்குஇரைச்சல் வருகிறது. வற்றை எப்படி நிறுத்திப் பார்ப்பது?

– சா. மருது பாண்டியன், திருநகர்.


தலைவலி தரும் அளவிற்கு இரைச்சல் என்ற பெயரில் மியூசிக் இருந்தால் கம்ப்யூட்டரில் வால்யூமை மியூட் செய்து நிறுத்திவிடலாம். அல்லது வசதி இருந்தால் உங்கள் ஸ்பீக்கரை ஆப் செய்து வைக்கலாம்.

ஆனால் அனிமேஷனை நிறுத்தும் வழி? வெப்சைட் முழுவதும் இறங்கும் வரை காத்திருக்கவும். இறங்கியவுடன் பிரவுசரில் ஸ்டாப் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து அனிமேஷன் மற்றும் மியூசிக் வருவது நின்றுவிடும்.

தேவையான தகவல்களை மட்டும் படித்துத் தேவையானால் டெக்ஸ்ட்டினை காப்பி செய்து எடுத்துக் கொள்ளலாம்.



வெப்சைட்டிலிருந்து புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து அதனைப் பதிந்து இயக்கிவருகிறேன். டவுண்லோட் செய்த அந்த புரோகிராம் பைலை இன்னும் கம்ப்யூட்டரில் வைத்திருக்க வேண்டுமா?


–க. முருகேசன், திருப்பூர்


டவுண்லோட் செய்த புரோகிராம் பைல் எத்தகையது என்று நீங்கள் குறிப்பிடவில்லை. பொதுவாக அது ஒரு ஸிப் பைலாக இருக்கும். அதனைக் கிளிக் செய்து கிடைத்த டயலாக் பாக்ஸில் தரப்பட்ட ஆப்ஷன்களைப் பின்பற்றி புரோகிராமினைப் பதிந்திருப்பீர்கள்.

அடுத்து இந்த டவுண்லோட் செய்த புரோகிராம் தேவையில்லை. எனவே நீக்கிவிடலாம். சில புரோகிராம்கள் ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக இருக்கும். இதிலும் இரண்டு வகை உண்டு. சில இ.எக்ஸ்.இ. பைலை இயக்கினால் அது விரிந்து பல பைல்களை ஒரு தொகுப்பாகப் பதிந்து கொள்ளும்.

இதில் அந்த புரோகிராமிற்கான இ.எக்ஸ்.இ.பைல் இருக்கும். எனவே டவுண்லோட் செய்த இந்த வகை பைலும் தேவை இருக்காது. ஆனால் நேரடியாக இயங்கும் இ.எக்ஸ்.இ. பைல் எனில் அது கட்டாயம் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும். அதனைக் கிளிக் செய்துதான் நமக்கு அந்த புரோகிராம் கிடைக்கும்.



பொதுவாக இந்த பைல்களை நாம் மீண்டும் டவுண்லோட் செய்திடலாம் என்றாலும் 20% பைல்கள் தளங்களிலிருந்து எடுக்கப்பட்டு விடுகின்றன. அல்லது அப்டேட் செய்யப்படுகின்றன. எனவே இது போல பைல்களை தனி டைரக்டரியில் சேவ் செய்து புரோகிராம்களைப் பதியவும்.

பின் அந்த பைல்கள் அனைத்தையும், உங்களுக்கு ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால் சிடி, டிவிடி, ஸிப் டிரைவ் போன்றவற்றில் பதிந்து வைக்கலாம்.


இன்டர்நெட்டைக் கண்ட்ரோல் செய்வது யார்? ஐ.நா. சபை போல ஏதாவது குழு உள்ளதா? எந்த நாட்டிற்கு இதில் அதிக அதிகாரம் உண்டு?


–கா. சிவக்கொழுந்து, திண்டுக்கல்


இன்டர்நெட் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இன்டர்நெட் தனி ஒருவருக்குச் சொந்தமில்லை. என்ன இது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் என்று நினைக்கிறீர்களா? ஆம், எந்த ஒரு தனி நாட்டிற்கும் இது சொந்தமில்லை.

இன்டர்நெட்டை The World Wide Web Consortium என்ற அமைப்பு தான் கண்ட்ரோல் செய்கிறது. இதனை ஙி3இ என்றும் அழைப்பார்கள். இது பன்னாட்டளவிலான ஓர் அமைப்பு. இந்த அமைப்பில் பல உட்பிரிவுகள் உள்ளன. இவை இன்டர்நெட்டின் ஒவ்வொரு பிரிவு குறித்தும் கவனம் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றன.

இவை ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் நாடு ஒன்றில் கூடி இன்டர்நெட் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் விவாதிப்பார்கள். அங்கு பல முடிவுகள் எடுக்கப்படும்.

மேலும் அவ்வப்போது சில முடிவுகளும் எடுக்கப்பட்டு அனைவருக்கும் அறிவிக்கப்படும். HTTP, FTP, HTML, PHP மற்றும் அகுக என்றெல்லாம் இன்டர்நெட் வெப்சைட் குறித்து பேசுகிறோம் அல்லவா? இவற்றை வரையறை செய்வது இதுதான். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சுருக்கமான பெயர் தரப்படுகிறது அல்லவா! அவற்றை முடிவு செய்வதும் இந்த அமைப்புதான். இணையப் பெயர்கள் எப்படி இருக்க வேண்டும்

(இந்தியாவிற்கு in ) என்று வரையறை செய்வதில் இருந்து இன்டர்நெட் டிராபிக் எப்படி இருக்க வேண்டும் என அனைத்தையும் இந்த அமைப்பு முடிவெடுத்துச் செயல்படுத்துகிறது. இதற்கு இன்டர்நெட் தொடர்பான பல நிறுவனங்கள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்த அமைப்பு ஜனநாயக ரீதியாக, எந்த ஒரு நாட்டையும் சாராமல், முடிவெடுப்பதனால்தான் உலகின் அனைத்து குடிமக்களும் இன்டர்நெட்டைப் பயன்படுத்த முடிகிறது.

நன்றி.தினமலர் .ஆகஸ்ட் 10,2009

நூர்
17-08-2009, 06:02 AM
கேள்வி: எனக்கு மட்டும் இடது பக்கம் ரூலர் வேர்டில் கிடைக்கவில்லை. நீங்கள் முன்பு எழுதிய டிப்ஸ்படி வியூ சென்று ரூலர் செலக்ட் செய்தேன். பிரிண்ட் லே அவுட் வியூவும் செலக்ட் செய்தேன்.

அங்குலத்தைக் கூட சென்டிமீட்டருக்கு மாற்றும் வேலையையும் மேற்கொன்டேன். ஆனால் என்ன செய்தாலும் இடது பக்க ரூலர் கிடைக்கவில்லை. வழி காட்டவும்.


–எஸ்.முருகேசன், எழுமலை


பதில்: இந்த பிரச்சினை ரூலரில் இல்லை. உங்கள் வேர்ட் டாகுமெண்ட் செட்டிங்ஸ் பொறுத்தது. இடது பக்க ரூலர் பிரிண்ட் லே அவுட் வியூவில் மட்டுமே கிடைக்கும். நீங்கள் செலக்ட் செய்ததாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

தவறு செட்டிங்ஸில்தான். டாகுமெண்ட்டைத் திறந்து டூல்ஸ் கிளிக் செய்து மெனுவில் ஆப்ஷன்ஸ் கிளிக் செய்திடவும். விண்டோ ஒன்று பல டேப்களுடன் விரியும். இதில் வியூ டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் பல ஆப்ஷன்கள் நான்கு பிரிவாகத் தரப்பட்டிருக்கும்.

இதில் மூன்றாவதாக பிரிண்ட் அண்ட் வெப் லே அவுட் ஆப்ஷன்ஸ் என்ற பிரிவு இருக்கும். அதில் ஆறாவதாக வெர்டிகல் ரூலர் (பிரிண்ட் வியூ ஒன்லி) என்றிருப்பதற்கு எதிரே சிறிய டிக் அடையாளம் செய்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: ஒரு இணைய தளத்திற்கும் அதன் யு.ஆர்.எல்.க்கும் என்ன வித்தியாசம்? விண்டோஸ் எக்ஸ்பியின் எஸ்.பி.3 யின் யு.ஆர்.எல்.ஐ எப்படிக் கண்டுபிடிப்பது?


–பா.நரசிம்மன், பள்ளிக்கரணை


பதில்: ஓர் இணைய தளம் எந்த சர்வரில் உள்ளது என்பதை அந்த சர்வரின் பெயர், தன்மையைக் காட்டுவதே அதன் யு.ஆர்.எல். இணைய தளம் என்பது ஒரு வீடு என்றால் அதன் அஞ்சல் முகவரி தான் யு.ஆர்.எல். விண்டோஸ் எக்ஸ்பியின் எஸ்.பி.3 யின் யு.ஆர்.எல். ஐக் கண்டுபிடிப்பது என்று சொல்வதைக் காட்டிலும் இந்த பேட்ச் பைல் எந்த தளத்தில் உள்ளது என்று அறிவது என்று சொல்லலாம்.

இது மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்து வழங்குவதால் என்ற தளத்திற்குச் சென்று அங்கிருந்து தேடிப் பெறலாம். அல்லது ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் என்று கொடுத்தால் இந்த பைல் இருக்கும் தளங்களின் முகவரிகள் (யு.ஆர்.எல்.) பட்டியலிடப்படும். அவற்றின் மீது கிளிக் செய்து பெறலாம்.

கேள்வி: நான் கேப்ஸ் லாக் கீயினை அழுத்துகையில் பீப் என்ற ஒலி கேட்கும் படி அமைத்திருந்தேன். என் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய ஒருவர் தனக்கு அது இடைஞ்சலாக இருக்கிறது என்று ஓசை வராமல் செட் செய்து விட்டார். மீண்டும் இதனை எப்படி அமைப்பது?


–மு.நமசிவாயம், மேலூர்


பதில்: இதனை டாகிள் கீ ஒலி என்று கூறுவார்கள். டாகிள் கீ என்பது ஒரே கீ எதிர்மறையான இரு செயல்பாடுகளுக்கு மாறி மாறி அழுத்தும்போது செயல்பட வைக்கும்.

எடுத்துக் காட்டாக கேப்ஸ் லாக் கீயை அழுத்தினால் அனைத்தும் கேபிடல் எழுத்துக்களாகக் கிடைக்கும். மீண்டும் அ� த கீயை அழுத்தினால் அந்த செயல்பாடு நின்றுவிடும். கம்ப்யூட்டர் கீ போர்டில் இதே போல நம்லாக் கீ, ஸ்குரோல் லாக் கீ ஆகி யவைகள் உள்ளன.

இவற்றை அழுத்து கையில் பீப் ஒலி நம்மை எச்சரிப்பதற்காக ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஒலி வேண்டாம் எனில் இதனைத் தொடர்ந்து பத்து விநாடிகள் அழுத்தியவாறு இருந்தால் போதும். இந்த செயல்பாடு தடைபடும். பீப் ஒலி கேட்காது.

இனி உங்கள் கேள்விக்கு வரும். மீண்டும் இந்த ஒலியை அமைக்க மீண்டும் ஏதேனும் ஒரு கீயினை தொடர்ந்து பத்து விநாடிகள் அழுத்தவும். திரையில் ஓர் ஆப்ஷன் பாக்ஸ் கிடைக்கும். இப்படி அழுத்தினால் மூன்று வகை செயல்பாட்டிற்கான கட்டம் இது. எந்த செயல்பாடு வேண்டுமோ அதற்கேற்ப அழுத்தவும் என்று செய்தி காட்டப்படும். முதல் ஆப்ஷனை அழுத்தி ஓகே கிளிக் செய்தால் மீண்டும் ஒலி கிடைக்கும்.

நன்றி.தினமலர்.ஆகஸ்ட் 17,2009

நூர்
17-08-2009, 06:02 AM
கேள்வி: இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கின்ற என் மகனுக்கு லேப்டாப் ஒன்று வாங்கிக் கொடுத்தேன். அதனை சார்ஜ் செய்வதற்காக இரவு முழுவதும் கனெக்ஷன் கொடுத்து வைக்கிறான். பேட்டரி இருக்கும் பக்கம் சூடாகிறது. இது சரியா?


–என்.ஆதிநாராயணன், தேனி


பதில்: முற்றிலும் தவறு. லேப் டாப் கம்ப்யூட்டர்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் இந்நாளில் மேலும் சில தகவல்களைக் கூற விரும்புகிறேன். வெகுநேரம் லேப்டாப் கம்ப்யூட்டரை சார்ஜ் செய்தால் நிறைய பவர் கிடைக்கும் என எண்ணுகின்றனர். இது தவறு.

தேவைக்கும் அதிகமான நேரம் கனெக்ட் செய்யப்பட்டு இருந்தால் அதிக சூடாகும் வாய்ப்பு, ஏன், பேட்டரி வெடிக்கும் வாய்ப்பு கூட ஏற்படலாம். இத்துடன் இன்னும் சில முன் எச்சரிக்கைகளைப் பார்க்கலாம். கவன மில்லாமல் லேப் டாப் கம்ப்யூட்டரைக் கையாள்வது தவறு.

தவறான முனைகளில் இணைப்பு கொடுத்து பேட்டரியை இணைப்பது தவறு. வேலை இல்லாத போதும் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்யாமல் இருக்கக் கூடாது. பேட்டரி கம்பார்ட்மெண்ட்டில் இஷ்டத்திற்கு ஸ்குரூ டிரைவர் போன்றவற்றைப் பயன்படுத்துவது; அல்லது வேறு பொருட்களை வைப்பது தவறு. கம்ப்யூட்டரை வடிவமைத்த நிறுவனம் பரிந்துரைக்காத பேட்டரிகளைப் பயன்படுத்தக் கூடாது.

அதிக சூடு தென்படுகிறது என்று தெரிந்த பின்னும் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்யாமல் வைத்திருக்கக் கூடாது. லேப்டாப்புடன் வராத வேறு ஒரு சார்ஜரைப் பயன்படுத்துவது கூடாது. மேலே சொல்லப்பட்ட பல எச்சரிக்கைகள் மொபைல் போனுக்கும் பொருந்தும்.


கேள்வி: சிடி அல்லது டிவிடியில் டேட்டா எழுதி முடித்த பின்னர் ஐ.எஸ்.ஓ. இமேஜ் உருவாக்கவா என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதனை எப்போதும் கேன்சல் செய்து வேலையை முடிக்கிறோம். உண்மையிலேயே அது எதனைக் குறிக்கிறது? அதனால் என்ன லாபம்? –என். மஹேஸ்வரன், மதுரை


பதில்: நல்ல கேள்வி. முதலில் ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஒரு .டிண்ணி பைல். இது டிஸ்க் ஒன்றின் இமேஜ் அல்லது ஆப்டிகல் டிஸ்க் இமேஜைக் குறிக்கிறது. அடிப்படையில், ஏற்கனவே உள்ள ஒரு பைலின் அசலான காப்பியை இது குறிக்கிறது.

அதனால் தான் பெரும்பாலும் சிடி அல்லது டிவிடியில் டேட்டா எழுதும் வேலையைச் சார்ந்து இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு மியூசிக் சிடியாக பைலைக் காப்பி செய்தாலும் அந்த வேலையில் ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் ஒன்றை உருவாக்குகிறீர்கள் என்று பொருள்.

ஒரு சிடியில் எதனை (டேட்டா, ஆடியோ, வீடியோ, கிராபிக்ஸ், படங்கள் போன்ற எதுவாயினும்) காப்பி செய்தாலும் அங்கு ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் உருவாக்கப்படுகிறது.


இதனை உருவாக்கும் வேலையை எந்த சிடி பர்னிங் சாப்ட்வேர் மூலமாகவும் செய்திடலாம். கம்ப்யூட்டருடன் வந்த சிடி பர்னிங் சாப்ட்வேர் அல்லது டிவிடி ரைட்டருடன் கொடுக்கப்பட்ட சாப்ட்வேர் எதன் மூலமும் இதனை உருவாக்கலாம்.

எனவே நீங்கள் ஏற்கனவே சிடி அல்லது டிவிடி ஒன்றை உருவாக்கி இருந்தால் அதில், ஐ.எஸ்.ஓ. இமேஜ் என அறியாமலேயே, அதனை உருவாக்கி யிருக்கிறீர்கள்.


கேள்வி: நான் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்றும் என் பிள்ளைகள் அனைவரும் இதனையே பயன்படுத்துவதால் புக்மார்க் பட்டியலில் நிறைய தளங்கள் மார்க் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஏதேனும் ஒன்று வேண்டும் என்றால் நேரம் எடுத்துத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இதற்கு வேறு வழி உண்டா?–ஆ. சிவப்பிரகாசம், புதுச்சேரி


பதில்: எல்லாருக்கும் இந்த கதைதான். இதற்கான வழி உண்டு.


புக்மார்க் மெனுவினை கிளிக் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் நீங்கள் பார்க்க விரும்பும் புக் மார்க்கின் முதல் எழுத்தை அடிக்கவும். உடனே லிஸ்ட்டில் அந்த எழுத்தில் தொடங்கும் முதல் புக் மார்க் ஹைலைட் செய்யப்படும்.

அது நீங்கள் தேடும் புக் மார்க் இல்லை என்றால், மீண்டும் அதே எழுத்திற்கான கீயினை அழுத்தவும். அதே எழுத்தில் தொடங்கும் அடுத்த புக்மார்க்கிற்கு எடுத்துச் செல்லப் படுவீர்கள். இப்படியே உங்களுக்கு வேண்டிய தளத்திற்கான புக் மார்க் வரும்வரை தட்ட வேண்டியதுதான்.


கேள்வி: கூகுள் சர்ச் என்னும் தேடும் தளத்திற்குச் சென்றால், தேடும் சொல் டைப் செய்ய வேண்டிய கட்டத்திற்குக் கீழே Google Search மற்றும் I’m Feeling Lucky என இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. இதில் I’m Feeling Lucky என்பதில் கிளிக் செய்தால் ஒரே ஒரு தளமே கிடைக்கிறது. இது எதற்காக? –ஆர். தனலஷ்மி, திருநகர், மதுரை

பதில்: கூகுள் சர்ச் என்பதில் வழக்கமாக கிளிக் செய்வோம். உடனே நீங்கள் தேடும் பொருள் அல்லது சொல் குறித்த தளங்களின் பட்டியல் கிடைக்கும். இதில் எப்போதும் நாம் தேடும் பொருள் குறித்துத் தகவல் தரும் ஹோம் பேஜ் கிடைக்கும்.

எடுத்துக் காட்டாக தினமலர் என்று நீங்கள் டைப் செய்திருந்தால் முதல் தளமாக தினமலர் பத்திரிக்கையின் ஹோம் பேஜ் கிடைக்கும். பின் தினமலரின் மற்ற தகவல்கள் விவரங்களுடன் அதே ஹோம் பேஜ் முகவரிக்கான தளங்கள் பட்டியலிடப்படும்.

தொடர்ந்து தினமலர் குறித்து மற்ற தளங்கள் தரும் தகவல்களும் அவற்றிற்கான தளப் பெயர்களும் பட்டியலிடப்படும். ஆனால் I’m Feeling Lucky என்பதில் கிளிக் செய்தால் முதலில் குறிப்பிட்ட தினமலரின் ஹோ ம் பேஜ் மட்டும் கிடைக்கும்.

அந்த தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இதனைக் கிளிக் செய்தால், நாம் ஏற்கனவே அந்த தளத்திற்குச் சென்றிருந்தால் அதனை அறிந்து பயன்படுத்தலாம். ஆனால் முன்பு அதற்குச் செல்லாமல் இருந்தால் மற்ற தளங்கள் குறித்து அறியாமல் இருப்போம்.


கேள்வி: இன்டர்நெட் சைட்களில் படங்கள் கிடைக்கும்போது அவற்றை எப்படி நம் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்வது? பட பைலின் அளவை எப்படி குறைத்து சேவ் செய்திடலாம்?–அ.யசோதா, திருமங்கலம்


பதில்: வெகு எளிது. அந்த படத்தின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Save Image as என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் Save as டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் டைரக்டரி மற்றும் போல்டரைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம்.

பைலின் அளவு குறைய வேண்டும் என்றால் அதன் பார்மட்டை மாற்ற வேண்டும். இதற்கு மீண்டும் அதனை படங்க ளைக் கையாளும் பெயிண்ட், அடோப் போட்டோ ஷாப் போன்ற புரோகிராம்களில் திறந்து எடிட் செய்திடலாம். வெப்சைட்டில் உள்ள படங்களை டவுண்லோட் செய்திடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் படங்களை மட்டுமே உங்கள் கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியும்.

டவுண்லோட் செய்ய முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்தால் அந்த படம் உள்ள இடம் முழுமையாக மானிட்டர் ஸ்கிரீனில் இருக்கையில் பிரிண்ட் ஸ்கிரீன் கீ அழுத்தவும். இது கிளிப் போர்டில் படத்துடன் கூடிய தளத்தைப் படமாக எடுத்து பதிவு செய்திடும். பின் இதனை மேலே கூறிய இமேஜ் எடிட்டரில் பேஸ்ட் செய்து படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து புதிய பைலாக, தேவையான பார்மட்டில் சேவ் செய்திடலாம்.


கேள்வி: ஆங்கிலத்தில் கேப்பிடல் லெட்டர் களை அடிக்கும் போது வேர்டில் சிறிய அளவில் கேப்பிடல் லெட்டர்களை அமைக்க முடியுமா? அதற்கான வழி என்ன? –செ. கந்தசாமி, சிவகாசி


பதில்: முதலில் உங்கள் டெக்ஸ்ட்டை டைப் செய்திடுங்கள். பின் எந்த சொல்லைச் சிறிய கேப்பிடல் லெட்டர்களில் அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுங்கள். மெனு பாரில் Format கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் மேலாக உள்ள Font தேர்ந்தெடுக்கவும்.

பின் கிடைக்கும் பாண்ட் டயலாக் பாக்ஸில் வலது பக்கம் உள்ள பிரிவுகளில் Small Caps என இருக்கும். இதனை டிக் செய்திடவும். பின் OK கிளிக் செய்து வெளியேறவும். சிறிய கேப்பிடல் லெட்டர் களில் தேர்ந்தெடுத்த சொல் இருக்கும். மற்ற பெரிய எழுத்துக்களுடன் இதனை ஒப்பிட்டால் அழகாக சிறியதாக இருப்பது தெரியவரும்.


கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தி வருகிறேன். இதில் பாரங்கள் பில் அப் செய்திடுகையில், பிளாக்குகள் எழுதுகையில் சொற்களில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட்டால் சில கம்ப்யூட்டரில் உள்ள பயர்பாக்ஸ் தொகுப்பு அதனைக் காட்டுகிறது. ஆனால் எனக்கு அது போல் இல்லை. அதனை எப்படி ஏற்படுத்துவது? நான்பயர்பாக்ஸ் 3.5 பயன்படுத்துகிறேன். –எஸ். யஷ்வந்தன், சென்னை


பதில்: நல்ல சந்தேகம். இதில் நிதர்சனமான உண்மை என்னவென்றால் பயர்பாக்ஸ் பிரவுசரில் தான் ஸ்பெல் செக் இணைந்தே தரப்படுகிறது. பயர்பாக்ஸ் இன்ஸ்டால் செய்யப்படுகையில் இதுவும் இன்ஸ்டால் செய்யப் படுகிறது. டிபால்ட்டாக இயக்கப் பட்டு செயல்படுகிறது.

உங்கள் கம்ப்யூட்டரில் மட்டும் ஏன் இல்லை என்று தெரியவில்லை. யாராவது மாற்றி இருக்கலாம். மீண்டும் அதனைக் கொண்டு வர பயர்பாக்ஸ் தொகுப்பை இயக்கி Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும்.

பின் மேலாக உள்ள ஐகான் டேப்களில் Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.பின் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் General என்ற டேப்பில் கிளிக் செய்தால், "Check my Spelling as I Type" என்ற ஆப்ஷன் கிடைக்கும்.

இதன் முன் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தி வெளியேறவும். இனி பயர்பாக்ஸ் பிரவுசரில் நீங்கள் அமைக்கும் சொற்களில் எழுத்துப் பிழை ஏற்படுகையில் சிகப்பு கோடு கீழாகத் தெரியும்.


கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பினைப் பயன்படுத்தி வருகிறேன். இதற்கு பல அப்டேட்கள் உள்ளன. இதனைப் பதியும்போது அப்டேட் இருந்தால் தானாக அப்டேட் செய்திடும்படி பதிந்து கொடுத்தார்கள். இதனால் ஏதேனும் புதிய அப்டேட் என் கம்ப்யூட்டரில் பதியப்பட்டதா என்று தெரியவில்லை. எப்படி தெரிந்து கொள்வது? –டி. திவ்ய கீர்த்தி, சென்னை


பதில்: பயர்பாக்ஸ் பிரவுசர் பதியப்படுகையில் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் அப்டேட்களைத் தானாகத் தேடிப் பார்த்து இன்ஸ்டால் செய்யபப்டும் வகையில் தான் அமைக்கப் பட்டிருக்கும். அதனால் எந்த அப்டேட் வரை இன்ஸ்டால் செய்யப்பட்டது என நமக்குத் தெரியாது.

ஆனால் இதனைத் தெரிந்து கொள்ள பயர்பாக்ஸ் வழி ஒன்று தந்துள்ளது. பயர்பாக்ஸ் தொகுப்பை இயக்கி Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக் கவும். பின் மேலாக உள்ள ஐகான் டேப்களில் Advanced என்ப தனைத் தேர்ந் தெடுக்கவும்.

இதில் Update என்ப தில் கிளிக் செய்தால் கீழாக Show Update History என்று இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரில் எந்த அப்டேட் எப்போது மேற்கொள்ளப் பட்டது. அது வெற்றிகரமாக பதியப்பட்டதா; பதியப்பட முடியாமல் போனதா; அதற்கு என்ன காரணம் எனத் தரப்பட்டிருக்கும்.

இதனைப் பார்த்து அறிந்து கொண்டு பதியப்படாமல் போன அப்டேட்களை நீங்களாக பயர்பாக்ஸ் தளம் சென்று தேடி எடுத்து அப்டேட் செய்திடலாம்.

கேள்வி: அடிக்கடி பீட்டா வெர்ஷன் என்று சாப்ட்வேர் மற்றும் பிரவுசர் குறித்து எழுதப் படுகிறது. இது எதனைக் குறிக்கிறது? இலவச மாகத் தரப்படும் சாப்ட்வேர், பீட்டா வெர்ஷனா? இதனைத் தொடர்ந்து பயன்படுத்த முடியுமா? –என். கல்யாணி, மதுரவாயல்


பதில்: சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கு கையில் முதலில் அதனை ஆல்பா டெஸ்டிங் என்று ஒரு சோதனையை அதனை உருவாக்கியவர்கள் மேற்கொள்வார்கள். இதில் அந்த சாப்ட்வேர் வெற்றி பெற்றவுடன், அதனை அதிகார பூர்வமாக வெளியிடும்

முன், அதனைப் பயன்படுத்து பவர்களுக்குத் தந்து பயன்படுத்திப் பார்க்கச் சொல்வார்கள். இதுதான் பீட்டா வெர்ஷன் எனப்படுவது. பயன்படுத்துபவர்கள் பல்வேறு ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்களில், பல்வேறு சாப்ட்வேர் அப்ளிகேஷன்களுடன் பயன்படுத்திப் பார்க்கும் போது,

சாப்ட்வேர் தொகுப்பை உருவாக்கியவர்களே எதிர்பாராத சில பிரச்சினைகள் ஏற்படும். பீட்டா வெர்ஷனைப் பயன்படுத்துபவர்கள் இந்த பிரச்சினைகளை சாப்ட்வேரை உருவாக்கியவர்களுக்கு தெரிவிக்கலாம். பின் அந்த பிரச்சினைகள் அனைத்தும் நீக்கப்பட்டு முழுமையான சாப்ட்வேர் தொகுப்பாக, அதிகாரபூர்வமாக அந்நிறுவனத்தால் வெளியிடப்படும்.


பீட்டா வெர்ஷன் இலவசமாக டவுண்லோட் செய்திடும் வகையில் வழங்கப்படும். டவுண்லோட் செய்யப்படும் தளத்திலேயே அதற்கான வழிமுறைகள் கிடைக்கும். மேலும் பிரச்சினைகள் ஏற்படுகையில் அது குறித்த தகவல்களை எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்ற தகவலும் கிடைக்கும். பீட்டா வெர்ஷனைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் – சிக்கல் எதுவும் இல்லாமலிருந்தால்.


கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். இதன் ஹெல்ப் பக்கத்தில் கிடைக்கும் உதவிக் குறிப்புகள் அனைத்தும் மிகச் சிறிய எழுத்து அளவில் உள்ளன. என்ன செய்தும் இவற்றை பெரிதாக அமைக்க முடிவதில்லை. காப்பி செய்து வேர்டில் பேஸ்ட் செய்து பின் பெரிதாக ஆக்க வேண்டியுள்ளது. தோன்றும் போதே அதனைப் பெரிதாக ஆக்க முடியாதா? –ஸ்ரீகுமார், சிறுசேரி, சென்னை


பதில்: எழுத்தின் அளவை மாற்றலாம். ஆனால் அதற்கான செட்டிங்ஸ் என்று எக்ஸ்பி எதனையும் தரவில்லை. எப்படி மாற்றலாம் என்பதை இங்கு காண்போம்.

எக்ஸ்பி சிஸ்டத்தில் ஹெல்ப் பைல்கள் எச்.டி.எம்.எல். வழியில் உருவாக்கப் பட்டவை. Cascading Style Sheets என்ற வகையில் அமைக்கப்பட்டவை. இவற்றைக் காண்பதற்கு நாம் வெப் சைட் பேஜ்களைப் பார்க்கும் வகையினை மாற்ற வேண்டும்.

இதற்கு கண்ட்ரோல் பேனல் திறக்கவும். இதில் Internet Options என்று உள்ளதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் ஜெனரல் என்று உள்ள டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Accessibility என்று ஒரு பிரிவு கிடைக்கும்.

இங்கு Ignore font sizes specified on Web pages என இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே செய்து வெளியே வரவும். இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் View / Text Size என்ற பிரிவில் உங்களுக்குத் தேவையான டெக்ஸ்ட் சைஸ் அமைத்திடவும்.

நீங்கள் ஏற்கனவே அமைத்ததன்படி பைலில் உள்ள டெக்ஸ்ட் சைஸ் இருக்கும். அதனை உருவாக்கி அமைத்த டெக்ஸ்ட் சைஸ் மாற்றப்படும்.


கேள்வி: இணைய தளங்களை அவற்றின் பெயர் இல்லாமல், அதற்கான எண் கிளஸ்டர் மூலம் தேடிப் பெறுவது நல்லது என்று கூறுகிறார் என் நண்பர். அது போல சில தளங்களுக்கு வைத்து விளையாட்டு காட்டுகிறார். நானும் அது போல செய்திட வேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும்?சு. கிருஷ்ணதாஸ், பொள்ளாச்சி


பதில்: நீங்களே சொல்லி விட்டீர்கள் விளையாட்டு காட்டுகிறார் என்று. இந்த விளையாட்டு தேவையா? எண்களில் தான் ஒரு தள முகவரி அமைகிறது. இதனை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் தான் அதனைப் பெயரில் நினைவில் வைத்துக் கொள்கிறோம்.

டொமைன் நேம் சர்வர் என்ற சர்வர் தரும் வசதியின் மூலம் இந்த பெயர் முகவரி, அதற்கான எண் முகவரியாக மாற்றப்பட்டு நமக்கு தளம் எளிதாகக் கிடைக்கிறது. நீங்கள் மறுபடியும் எண்களில் தளத்தின் பெயரை அமைத்திட விரும்பு கிறீர்கள். சரி, இதில் கூடுதலாக சில தகவல்களைத் தர முடியும் என்பதால் கீழே உள்ளதைப் படியுங்கள்.


எண் வடிவ முகவரியைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.


நீங்கள் எழுத்துக்களினால் ஆன முகவரியினை அமைத்து தேடிப் பிடித்துப் பார்க்கையில், பிரவுசரின் இடது அடிப்பாகத்தில் அந்த முகவரிக்கான எண்கள் தெரியும். அதனை அப்படியே எழுதி வைத்து மீண்டும் முகவரிக்காக பயன்படுத்தலாம். அல்லது நேரடியாகவே கண்டுபிடிக்கலாம்.

முதலில் இணையத் தொடர்பை ஏற்படுத்துங்கள். பின்னர் Start பட்டன் அழுத்தி கிடைக்கும் மெனுவில் Run பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் Run விண்டோவில் cmd என டைப் செய்திடவும். இனி உங்களுக்கு டாஸ் பிராம்ப்ட் கருப்பு கட்டத்தில் கிடைக்கும்.

அதில் tracert என டைப் செய்து (trace routeஎன்பதின் சுருக்கம்) இடம் விடாமல் நீங்கள் எண் காணவிரும்பும் முகவரியினைத் தவறில்லாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். உடனே முதல் வரியிலேயே அடைப்புக் குறிக்குள் எண் கிடைக்கும்.

ஆனால் அந்த சர்வரை அடைய என்ன சர்வர்கள் வழியாக ரூட் செல்கிறது என்று வேகமாகக் காட்டப்பட்டு இறுதியிலும் அந்த இணைய தளத்திற்கான முகவரி எண்களில் கிடைக்கும்.

இதனைக் குறித்து வைத்துப் பயன் படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தினால் பிரவுசர் தன் ஹிஸ்டரியில் குறித்து வைத்து நீங்கள் முகவரியை டைப் செய்யத் தொடங்கியவுடன் அந்த தளம் ஹிஸ்டரியிலிருந்து எடுத்துக் காட்டப்படும்.

அதனைக் கிளிக் செய்தாலே போதும். எதற்காக எண்கள், சொற்கள் என ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட வேண்டும்.

நன்றி.தினமலர்.திங்கள் ,ஆகஸ்ட்,24, 2009

நூர்
31-08-2009, 10:08 AM
கேள்வி: போல்டர் ஒன்றை பாஸ்வேர்ட் கொடுத்து மற்றவர்கள் அதனைத் திறக்க முடியாமல் பாதுகாக்க முடியுமா? எங்கள் அலுவலகத்தில் பலர் ஒரு கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறோம். அதற்கான வழிகளைக் கூறவும்.


–என். ரவீந்திரன், மேலப்புதூர்

பதில்: விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பிலேயே போல்டர் ஒன்றைப் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாக்க இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கென சில இலவசமாக டவுண்லோட் செய்து பயன் படுத்தும் புரோகிராம்களும் உள்ளன.


1. உங்கள் அலுவலகக் கம்ப்யூட்டரில் உங்களுக்கென யூசர் அக்கவுண்ட்டுடன் பாஸ்வேர்ட் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதன் பைல் சிஸ்டம் என்.டி.எப்.எஸ். (NTFS) என்று எண்ணுகிறேன்.


2. இனி எந்த போல்டருக்குப் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டுமோ அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின் "Properties" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Alt அழுத்திய வாறே டபுள் கிளிக் செய்திடவும்.

3. கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Make this Folder Private என்று உள்ள பாக்ஸினைத் தேர்ந்தெடுக்கவும்.

4. பின் Apply என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய அக்கவுண்ட்டுக்கு பாஸ்வேர்ட் இல்லை என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். பாஸ்வேர்ட் ஒன்றை தரப்போகிறீர் களா? என்று கேட்கப்படும்.

உங்கள் போல்டரை நீங்கள் பிரைவேட் ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த பாஸ்வேர்டினைக் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கம்ப்யூட்டரில் உங்கள் அக்கவுண்ட்டில் நுழைகையிலும் அதே பாஸ்வேர்டினைக் கொடுக்க வேண்டியதிருக்கும்.

5. பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்று இருக்கும் பட்டனில் கிளிக் செய்து பாஸ்வேர்ட் விண்டோவினை மூடவும்.

6. பின் Properties டயலாக் பாக்ஸில் OK கிளிக் செய்திடவும்.

7. இனி உங்கள் பாஸ்வேர்ட் இல்லாமல் இந்த போல்டரை யாரும் திறக்க முடியாது. இரண்டாவதாக ஒரு வழி: இந்த போல்டர் ஸிப் செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக பாஸ்வேர்ட் ஒன்றினைக் கொடுக்க முடியாது.

இதற்கு ஸிப் செய்யப்பட்ட போல்டர் மீது இருமுறை கிளிக் செய்திடவும். மேலாக உள்ள மெனுவில் பைல் தேர்ந்தெடுத்து, பின் ‘Add a Password’ என்பதில் கிளிக் செய்திடவும். பாஸ்வேர்ட் பாக்ஸில் பாஸ்வேர்ட் ஒன்றை டைப் செய்திடவும்.

மீண்டும் Confirm Password பாக்ஸிலும் இதனை டைப் செய்திடவும். இனி இந்த போல்டரை நீங்கள் மட்டுமே பாஸ்வேர்ட் பயன்படுத்திப் பார்க்க முடியும்.

கேள்வி: பண்டிகைக் காலங்களில் பரிசாகத்தரக் கூடிய மொபைல்கள் குறித்த கட்டுரை நல்ல வழி நடத்தலுடன் இருந்தது. நான் சிறந்த மல்ட்டிமீடியா போன் ஒன்றை ரூ.4,000க்குள் வாங்க விரும்புகிறேன். சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லவும்.

–என். சுகந்தி, கோயம்புத்தூர்

பதில்: மார்க்கட்டில் நிறைய இருக்கின்றன. என்றாலும் ஒரு சில போன்கள் குறித்து இங்கு தருகிறேன். இவற்றை நன்றாக ஆய்வு செய்து பார்த்து வாங்கவும்.


1. மோட்டாரோலா டபிள்யூ 230: கேண்டி பார் செட், அலைவரிசைகளை நன்கு பெற்றுத் தரும் எப்.எம். ரேடியோ, 2 ஜிபி கார்ட் வரை மெமரி, எம்பி 3 பிளேயர் என வசதிகள் கொண்ட ஓர் மல்ட்டிமீடியா அடிப்படை செட். மார்க்கட் விலை ரூ. 2,911.


2. சாம்சங் குரு E1410: கேண்டி பார் செட், குறைந்த எடை, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 2 ஜிபி வரை மெமரி, நல்ல ஒலி தரும் மியூசிக் பிளேயர், ஆப்பரா மினி பிரவுசர், AD2P புளுடூத், யு.எஸ்.பி, மொபைல் ட்ரேக்கர் மற்றும் நல்ல பேட்டரி. மார்க்கட் விலை ரூ. 3,000


3. எல்.ஜி. கேஜி 195: கேண்டி பார் செட், 70 கிராம் எடை, விஜிஏ கேமரா,நல்ல நெட்வொர்க் இணைப்பு, AD2P புளுடூத், யு.எஸ்.பி, எம்.பெக் 4, 3ஜிபி, எம்பி3, வேவ் பார்மட் சப்போர்ட், டைம் குறித்து ரெகார்ட் செய்திடும் வசதியுடன் எப்.எம். ரேடியோ, அனைத்து வக வழக்கமான வசதிகள் என இந்த போன் உள்ளது. மார்க்கட் விலை ரூ.3,549.


கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டர் சில வேளைகளில் சேப் மோடில் உள்ளது போலத் தோற்றமளிக்கிறது. இதனை எப்படி மீண்டும் சரி செய்வது?
–என். கிருஷ்ண குமார், பரவை

பதில்: கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடிய பின் அல்லது சேப் மோடில் சில மணித்துளிகள் இயக்கிய பின் நம் திரையில் உள்ள ஐகான்கள் மற்றும் கலர் பேட்டர்ன் மாறியது போலத் தோற்றமளிக்கும்.

ஏன் இந்த மாற்றம்? உங்களுடைய மானிட்டரின் ரெசல்யூசன் மற்றும் கலர் பிட் பேட்டர்ன் உயர்ந்த அளவில் வைக்கப்பட்டிருந்தால், அவை மானிட்டர் மற்றும் கம்ப்யூட்டரின் திறனை அதிகம் உறிஞ்சும்.

சில கம்ப்யூட்டர் கேம்ஸ் இவற்றை மிகவும் குறைவான செட்டிங்ஸில் தானே அமைத்துவிடும். அப்போதுதான் கம்ப்யூட்டரின் முழுத் திறனைப் பயன்படுத்தி வேகமாக இயங்க முடியும்.

சில கேம்ஸ்களில் இந்த மாற்றம் உங்களைக் கேட்டுத்தான் நடைபெறும்; சிலவற்றில் கேட்காமலேயே நடைபெறும். கேம்ஸ் முடிந்த பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றும் வகையில் இவை அமைந்திருக்காது. அதனால் தான் இந்த மாறுதலான சூழ்நிலை.


உங்களுடைய டாஸ்க் பாரின் வலது மூலையில் மானிட்டர் அல்லது கிராபிக்ஸ் கார்டுக்கான ஐகான் இருந்தால், அதன் மீது ரைட்கிளிக் செய்து அதிலேயே பழைய நிலைக்கு மாற்றிவிடலாம். கேம்ஸ் கலர் சிஸ்டத்தினை 256 கலர் திட்டத்திற்கு மாற்றி இருக்கலாம்.

அதனை "High Colour" (16 bit) அல்லது "True Colour (32 Bit)" என்பதற்கு மாற்றவும். இல்லை என்றால் டெஸ்க் டாப் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Settings செலக்ட் செய்திடவும். அதில் தேவையான ரெசல்யூசன் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.


கேள்வி: என் வெப் பிரவுசரை எப்போது திறந்தாலும் அதன் திரை சிறியதாக உள்ளது. ஒவ்வொரு முறையும் திரையின் மேலாக வலது புறம் சென்று மேக்ஸிமைஸ் பட்டனை அழுத்த வேண்டியுள்ளது. செட்டிங்ஸ் மாற்றத்தின் மூலம் இதனை எப்படி மாற்றலாம்?

-சித. முருகேசன், பள்ளத்தூர்

பதில்: ஒவ்வொரு முறை மேக்ஸிமைஸ் பட்டனை அழுத்திப் பின் இன்டர்நெட் பிரவுசிங் செய்வது என்பது மிகவும் எரிச்சல் ஊட்டும் விஷயம்தான். எனக்கும் இது போல் முன்பு நேர்ந்தது. சரி செய்த பின் அந்த பிரச்சினை இல்லை. அதற்கான வழியைச் சொல்கிறேன்.


இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் விரும்புவதைக் காட்டிலும் அது சிறியதாகக் கூட இருக்கலாம். மேக்ஸிமைஸ் பட்டனை அழுத்த வேண்டாம். இனி மவுஸின் கர்சரை நான்கு முனைகளுக்கும் கொண்டு செல்லுங்கள்.

கர்சரை ஓரமாக வைத்து இழுங்கள். திரையளவு விரியும். உங்களுக்குத் தேவையான அளவு, திரை முழுவதும் திரை விரிந்த பின்னர் அப்படியே விட்டுவிடவும். இதனை இரு புறமும் செய்திடலாம். பின் விண்டோவை மூடவும். இனி மீண்டும் பிரவுசரைத் திறந்தால் அது திரை முழுவதுமான விண்டோவினைக் கொண்டிருக்கும்.


ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோவில் நீங்கள் பிரவுஸ் செய்வதாக இருந்தால், பிரவுசிங் முடித்து மூடும் கடைசி விண்டோ நீங்கள் விரும்பும் அளவில் இருக்க வேண்டும். ஏனென்றால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நீங்கள் அதனை மூடுகையில் எந்த அளவில் விண்டோவினை வைத்திருந்தீர்களோ, அந்த அளவிலேயே அடுத்து திறக்கும்போது விண்டோவினைக் காட்டும்.


கேள்வி: பைல் மற்றும் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பது போல சிடி ஒன்றுக்கு முழுமையாக பாஸ்வேர்ட் கொடுக்க முடியுமா? அதாவது பாஸ்வேர்ட் இல்லாமல் அந்த சிடிக்குள் நுழைய முடியாதபடி அமைக்க முடியுமா?


–எம். வசந்தன், டி.புதுப்பட்டி


பதில்: சிடியில் பதிவு செய்கிற பைல்களுக்குத்தான் பாஸ்வேர்ட் கொடுக்க முடியும். மொத்தமாக சிடி ஒன்றுக்குப் பாஸ்வேர்ட் கொடுக்கும் வசதியை விண்டோஸ் தரவில்லை. CryptCD என்று ஒரு சாப்ட்வேர் தொகுப்பு இந்த வேலையைச் செய்வதாகப் படித்திருக்கிறேன். இதனை www.cryptcd.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்று பயன்படுத்திப் பார்க்கவும். இது இலவசம்தான்.


கேள்வி: ஸ்டார்ட் மெனுவில் அதிக எண்ணிக்கையில் புரோகிராம்களை வைத்துப் பயன்படுத்த எண்ணுகிறேன். புரோகிராம்களின் எண்ணிக்கையை அதிகமாக செட் செய்திட என்ன செய்ய வேண்டும்?

–டாக்டர் கா. மஞ்சுளா, மேட்டுப்பாளையம்


பதில்: நல்ல யோசனை தான். இதனால் நாம் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை எளிதாக எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனில் இருந்தாலும் இயக்கலாம். இதோ அதற்கான வழி.

Start பட்டனில் ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும். அங்கு ஸ்டார்ட் மெனு டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Customize பட்டன் கிளிக் செய்யப்பட்டு அந்த பிரிவு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கிடைக்கும் விண்டோவில் ஜெனரல் டேப்பில் கிளிக் செய்திடவும்.

இங்கு உள்ள பெட்டியின் நடுப்பாகத்தைக் கவனிக்கவும். இங்கு தான் ஸ்டார்ட் மெனுவில் எத்தனை புரோகிராம்கள் வைத்துக் கொள்ளலாம் என குறைக்கவோ அதிகரிக்கவோ முடியும். இது 0 விலிருந்து 30 வரை செல்கிறது. எத்தனைக்கெத்தனை அதிகமாக உள்ளதோ அந்த புரோகிராம்களை வேகமாகப் பெற்று இயக்க முடியும்.

நன்றி.தினமலர் 31/08/09

நூர்
31-08-2009, 10:08 AM
கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு பேஜ் பிரேக் உருவாக்குவது எப்படி? பின் தேவை இல்லை என்றால் அதனை நீக்குவது எப்படி?


–சி. கமலேஷ் குமார், திருப்பரங்குன்றம்


பதில்: எந்த இடத்தில் பேஜ் பிரேக் வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று வைத்து, பின் கண்ட்ரோல் + என்டர் தட்டுங்கள். பேஜ் பிரேக் கிடைக்கும்.

இதனை மெனு பார் வழியாகவும் மேற்கொள்ளலாம். இன்ஸெர்ட் மெனு சென்று அதில் முதலாவதாகக் கிடைக்கும் பிரேக் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். சிறிய பாக்ஸ் ஒன்றுகிடைக்கும். அதில் பிரேக் டைப்ஸ் மற்றும் செக்ஷன் பிரேக் டைப்ஸ் என்ற இரண்டு வகை பிரேக் பிரிவுகள் இருக்கும்.

உங்களுக்கு எந்த வகை பிரேக் வேண்டுமோ அதற்கான ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்திடலாம். இங்கு சென்றால் அனைத்து வகை பிரேக் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

இனி இதனை நீக்கும் வழியைப் பார்க்கலாம். டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு, பேஜ் பிரேக் உங்கள் டாகுமெண்ட்டில் புள்ளிகள் வைத்த பெரிய நீண்ட கோடாகக் காட்சி அளிக்கும்.

டாகுமெண்ட் நார்மல் வியூவில் இருக்க வேண்டும். இதற்கு வியூ மெனுவில் நார்மல் தேர்ந்தெடுக்கவும். இந்த வியூவில் தான் பேஜ் பிரேக் கோடாகத் தெரியும். பேஜ் பிரேக் உள்ள இடத்திற்குச் செல்லவும். அங்கு கர்சரை வைத்து டெலீட் பட்டன் அழுத்தினால் பேஜ் பிரேக் நீக்கப்படும்.

அல்லது அம்புக் குறி கர்சரை பேஜ் பிரேக் கோட்டில் இடது மூலைக்குக் கொண்டு சென்று கிளிக் செய்தால் பேஜ் பிரேக் கோடு தேர்ந்தெடுக்கப்படும். பின் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் அழுத்தி இதனை நீக்கலாம்.

கேள்வி: எனக்கு ஒரு டெக்ஸ்ட் வந்துள்ளது. அதனை வேர்டில் டைப் செய்திட வேண்டும். அதில் கேள்விக் குறி தலைகீழாக டைப் செய்திட வேண்டியுள்ளது.

அதே போல ஆக்சென்ட் கிரேவ் என்று எழுதி அந்த சிம்பல் போடச் சொல்லி அருகே இன்ஸ்ட்ரக்ஷன் தரப்பட்டுள்ளது. விங்டிங்ஸ் சிம்பல் பயன்படுத்த முடியவில்லை. இதனை எப்படி டைப் செய்வது?


–சீ. உத்தமராஜ், சென்னை(தொலபேசி மூலம்)

பதில்: உங்களுக்கு தொலை பேசியில் தீர்வு வழங்கப் பட்டது என்றாலும் அனைவரும் அறியும் வகையில் இன்னும் சில தகவல்களையும் இங்கு தருகிறேன். ஆங்கில எழுத்துக்களின் மேலாக இடது புறம் சாய்வாக ஒரு சிறு குறியை இடுவதனை ஆக்ஸென்ட் கிரேவ் ( Accent Grave) என்கின்றனர்.

இந்த அடையாளம் கீ போர்டில் உள்ள முதல் கீயில் இருக்கும். ஓர் எழுத்தின் மேலாக இதனை அமைக்க கண்ட்ரோல்+இந்த ஆக்ஸென்ட் கிரேவ் குறியீடு+அந்த எழுத்தினை அழுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக இவ்வாறு (�), அமையும்.

இதே போல அபாஸ்ட்ரபி (�) கேரட் சிம்பல் (ஜி), டில்டே(ஜீ), கோலன் (ஜ்) ஆகியவற்றையும் அமைக்கலாம். நீங்கள் கேட்ட தலைகீழ் கேள்விக் குறி அமைக்க ஆல்ட்+ கண்ட்ரோல்+ஷிப்ட்+? (லூ)அழுத்தவும்.


கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் பக்க எண்களை எளிதாக இன்ஸெர்ட் மெனு மூலம் அமைத்து விடுகிறோம். ஆனால் அவற்றை நீக்க முடியவில்லையே. இதற்கான வழி என்ன? வழி தெரியாததால் பக்க எண்களை இப்போது அமைப்பதே இல்லை.


– என். ரீனா தேவி, பொள்ளாச்சி

பதில்: பக்க எண்களை வேர்ட் டாகுமெண்ட்டில் இருந்து நீக்குவது, நீங்கள் அவற்றை எப்படி அமைத்தீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளது. 1. வியூ மெனு சென்று ஹெடர்ஸ் அண்ட் புட்டர்ஸ் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.

ஏதாவது ஒரு ஹெடர் அல்லது புட்டருக்குச் செல்லவும். அதில் உள்ள பக்க எண் மீது டபுள் கிளிக் செய்திடுங்கள். எண் தேர்ந்தெடுக்கப்படும்.


2. நீங்கள் இன்ஸெர்ட் மெனு சென்று பக்க எண் கொடுத்திருந்தால், ஹெடர் அல்லது புட்டர் பிரேம் முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒரு படம் அல்லது கிராபிக்ஸ் தேர்ந்தெடுப்பதைப் போன்றது. அதன் பின் டெலீட் அல்லது பேக்ஸ்பேஸ் அழுத்தவும். பக்க எண்கள் நீக்கப்படும்.


கேள்வி: ஏதேனும் ஒரு டூல்பாரை மெனு பாரில் நிலையாக வைத்துக் கொள்ள முடியுமா? அதற்கு என்ன செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்?


–எஸ்.சித்தார்த்த சீலன், புதுச்சேரி

பதில்: இது ஒரு நல்ல கேள்வி. அடிக்கடி ஒரு டூல்பாரை நீங்கள் பயன்படுத்தி வந்தால் அந்த டூல்பாரினை மெனு பாரில் வைப்பது நல்லது. ஒவ்வொரு முறையும் மெனுவில் கிளிக் செய்து டூல்பாரைத் தேடி இயக்கும் நேரம் மிச்சமாகும். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.


எடுத்துக்காட்டாக, நீங்கள் தயாரிக்கும் டாகுமெண்ட்களில் வேர்ட் கவுண்ட் பயன்பாட்டினை அடிக்கடி பயன்படுத்த வேண்டிய திருக்கலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் சொற்களுடன் கட்டுரைகள் மற்றும் சிறிய குறிப்புகளைத் தயார் செய்திட இது அவசியமாகும்.
வேர்ட் கவுண்ட் வசதியினை இரு வகைகளில் பெறலாம்.


ஏதேனும் ஒரு டூல்பாரில் ரைட் கிளிக் செய்தால் விரியும் மெனுவில் இதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலாம். அப்போது வேர்ட் கவுண்ட் டூல் பார் நீள் சதுர கட்டமாகக் கிடைக்கும். அடுத்து டூல்ஸ் என்பதில் கிளிக் செய்து அதில் வேர்ட் கவுண்ட் என்பதில் கிளிக் செய்து, டெக்ஸ்ட் டைத் தேர்ந்தெடுத்து சொற்களை எண்ணிச் சொல்லுமாறு செய்திடலாம்.

இப்போது கிடைக்கும் இந்த வேர்ட் கவுண்ட் டூல்பாரினை அப்படியே இழுத்து வந்து மேலாக உள்ள மெனுபாரில் வைத்துவிட்டால் இதுவும் ஒரு மெனுவாக அப்படியே அமைந்துவிடும். அடுத்த முறை தேவைப்படுகையில் இதிலேயே நேரடியாகக் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.


கேள்வி: சாப்ட்வேர் அல்லது பிரவுசர் புரோகிராம்கள் வரும்போது அதன் பின்னே இரண்டு அல்லது மூன்று எண்கள் கொண்ட தொடர் தரப்படுகிறது. இவை எதனைக் குறிக்கின்றன? இவை தெரியாத புரோகிராம்களின் நம்பர் அறிய என்ன செய்ய வேண்டும்?


–டிசில்வா மார்கரெட், புதுச்சேரி

பதில்: புரோகிராம் பெயருக்குப் பின் உள்ள எண்கள், அந்த புரோகிராமின் பதிப்பு எண்ணைக் குறிக்கின்றன. அப்படி எண் இல்லாத ஒரு புரோகிராமின் பதிப்பு எண்ணைத் தெரிய ஹெல்ப் மெனு அழுத்தி அதில் என்பதில் கிளிக் செய்தால் புரோகிராம் தயாரிப்பு குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கப்பெறும்.

அதில் பதிப்பு எண் இருக்கும். சரி, இவை எதனைக் குறிக்கின்றன என்று பார்க்கலாம். எடுத்துக் காட்டாக புரோகிராம் ஒன்றின் எண் 6.1.2 என இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் (6) அந்த புரோகிராமின் பதிப்புகளில் மிகப் பெரிய அளவில் வேறுபாடு கொண்ட பதிப்பின் எண்ணாகும். நிச்சயமாக அதன் பதிப்பு 5 – லிருந்து பதிப்பு 6 பல வழிகளில் வேறுபட்டிருக்கும்.


அதிகமான மாறுதல்கள் இருந்தால் தான் இந்த எண் மாற்றப்படும். (1) என்ற இரண்டாவது இடத்தில் இருக்கும் எண் சிறிய அப்டேட் மாற்றங்கள் கொண்ட அடுத்த பதிப்பைக் குறிக்கிறது.

மூன்றாவதாக உள்ள (2) என்பது அண்மையில் மேற்கொண்ட புரோகிராம் பக் (Bug) ஒன்றிற்கான திருத்தங்கள் அடங்கிய பதிப்பு எண்ணாகும்.

எனவே இங்கு எடுத்துக் காட்டுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் 6.1.2 பதிப்பு எண்ணுடைய புரோகிராமில், அண்மைக் காலத்தில் இரண்டு பிழைகள் (Bugs) கண்டறியப்பட்டு இது இரண்டாவதாகத் திருத்தப்பட்டது என்று சொல்கிறது.

6.1 பதிப்பு இதுவரை இரண்டு பிழைகளைச் சரி செய்துள்ளது என்று பொருள். சில புரோகிராம்கள் எண்களுக்குப் பதிலாக எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன.


கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட்டுக்கு அடிக்கோடிடுகையில் டபுள் லைனாக கோடு அமைய ஷிப்ட் அழுத்தி அன்டர்லைன் ஐகானை அழுத்தினேன். வழக்கம்போல் ஒற்றைக் கோடுதான் கிடைத்தது. ஆனால் நீங்கள் முன்பு ஒருமுறை ஷிப்ட் அழுத்தினால் அது இரட்டைக் கோடாகக் கிடைக்கும் என்று டிப்ஸ் கொடுத்திருந்தீர்கள். விளக்கம் தரவும்.


–கா. நல்லதம்பி, தேவாரம்

பதில்: முகவரியில் தெரு மாறி வீடு தேடுவது போல உள்ளது உங்களின் கேள்வி. ஷிப்ட் அழுத்தி அடிக்கோடு இரண்டாகக் கிடைப்பது எக்ஸெல் தொகுப்பில். நீங்கள் அதனைச் சோதனை செய்து பார்த்தது வேர்ட் தொகுப்பில். இரட்டைக் கோடு கிடைக்க வேர்டில் கீழ்க்கண்டபடி செயல்படவும்.

டாகுமெண்ட்டில் நீங்கள் கோடிட விரும்பும் டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ளவும். பின் Format மெனு கிளிக் செய்து அதில் Font என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.

கிடைக்கும் விண்டோவில் Font என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் விண்டோவில் Underline Style List என்பதன் கீழாகப் பல ஸ்டைல் கோடுகள் கிடைக்கும்.


உங்களுக்குத் தேவையான ஸ்டைலைத் தேர்ந்தெடுத்துப் பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். டெக்ஸ்ட்டின் கீழ் உங்களுக்குப் பிடித்த ஸ்டைலில் அடிக்கோடு கிடைக்கும்.

அதே விண்டோவில் Underline Color list என்று ஒரு லிஸ்ட் இருக்கும். அதில் தேவைப்படும் வண்ணத்தை செலக்ட் செய்தால், அந்த வண்ணத்தில் கோடுகள் கிடைக்கும்.


எக்ஸெல் தொகுப்பில் அடிக்கோடிட, இதே போல கோடிட வேண்டிய டெக்ஸ்டைத் தேர்ந்தெடுத்து, பின் அன்டர்லைன் பட்டனை ஷிப்ட் கீயுடன் அழுத்தினால் அது டபுள் அன்டர்லைனாக மாறும். இதே போல ஷிப்ட் கீயை அழுத்தினால் Align Left செயல்பாடு Align Right ஆக மாறும். Increase Decimal செயல்பாடு Decrease Decimal ஆக மாறும்.


கேள்வி: மல்ட்டி மீடியா மொபைல் போன் ஒன்றை வாங்க விரும்புகிறேன். விபரங்கள் மற்றும் விலையினை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் எந்த எந்த போன்களைப் பார்த்த பின்னர் நான் ஒரு போனை முடிவு செய்திட வேண்டும் என முக்கியமான பத்து போன்களின் பெயர் மற்றும் மாடல்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.


–கா. தினேஷ் ராஜா, சென்னை

பதில்: நல்ல கேள்வி. எனக்குத் தெரிந்த வரை சென்னை மொபைல் மார்க்கட்டில் விற்பனை யாகும் சில மல்ட்டி மீடியா போன்களின் பட்டியலைத் தருகிறேன்.

இவற்றின் செயல்பாடு குறித்து அறிந்து உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் வாங்கிக் கொள்ளவும். இவற்றின் விலை பல நிலைகளில் இருக்கும்; திறனும் அது போலவே.

நோக்கியா 5130 எக்ஸ்பிரஸ் மியூசிக், நோக்கியா என் 79, நோக்கியா என் 86, நோக்கியா என் 97, சோனி எரிக்சன் சி 510, சோனி எரிக்சன் டபிள்யூ 595, சோனி எரிக்சன் டபிள்யூ 995, சாம்சங் ஜெட், பிளாக் பெரி கர்வ் 8900, ஆப்பிள் ஐ போன் 3ஜி ஆகியவை சிறந்த மல்ட்டிமீடியா போன்களாகும்.

விரைவில் வர இருக்கும் சில போன்கள் எனக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம். ஆப்பிள் ஐ போன் 3ஜி எஸ், சாம்சங் ஆம்னியா எச்.டி., சோனி எரிக்சன் சேஷியோ மற்றும் நோக்கியா 5530 எக்ஸ்பிரஸ் மியூசிக்.

ந்ன்றி.தினமலர்.
செப்டம்பர் 06,2009,

நூர்
14-09-2009, 07:06 PM
கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?


–எஸ். சம்பந்த மூர்த்தி, விவசாயக் கல்லூரி, ஒத்தக்கடை

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும்.

இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.

எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில்Tools>Options செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.

இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும்.

அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.


கேள்வி: இன்டர்நெட் வெப்சைட்டிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை எடிட் செய்திடும் புரோகிராம் ஒன்றை இறக்கினேன். எத்தனை முறை இன்ஸ்டால் செய்தாலும் அது முழுவதுமாக இன்ஸ்டால் ஆக மறுக்கிறது. என்ன காரணமாக இருக்கும்?

–வி.முனியப்பன், திருப்பூர்

பதில்: அந்த சாப்ட்வேர் பெயரை நீங்கள் குறிப்பிடவில்லையே. பொதுவாக இது போன்ற பிரச்சினை ஒரு சிலருக்கு ஏற்படும். அதற்கான காரணங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக் கைகளையும் இங்கு சுருக்கமாகக் கூறுகிறேன்.

1.முதலில் ஒரு சாப்ட்வேர் புரோகிராமிற்கான பைல்களை வெப் சைட்டிலிருந்து டவுண்லோட் செய்திடும் முன், அந்த தளத்தில் தரப்பட்டிருக்கும் தகவல்களை நன்றாகப் படிக்கவும்.

அதில் அந்த பைலை எப்படி இயக்கி இன்ஸ்டால் செய்திட வேண்டும்; எந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் இடம் தேவைப்படும்; இன்ஸ்டால் செய்திடும் முன் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட வேண்டுமா? வேறு எந்த புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்ற தகவல்கள் எல்லாம் தரப்பட்டிருக்கும்.

2. மேலும் அது முற்றிலும் இலவசமான புரோகிராமா? அல்லது குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டும் இயங்குமா? என்ற தகவலும் தரப்பட்டிருக்கும்.


3. சில தளங்களில் அந்த புரோகிராமினைப் பயன்படுத்தியவர்களின் குறிப்புகளும் இருக்கும். இவை அனைத்தையும் படித்தபின்னரே, அந்த புரோகிராம் வேண்டுமா என்பதனையும், அந்த புரோகிராம் இன்ஸ்டால் செய்திட கம்ப்யூட்டரில் இடம் உள்ளதா என்பதனையும் முடிவு செய்து, பின் டவுண்லோட் செய்திடலாம்.

பொதுவாக அந்த புரோகிராம் கேட்கும் காலி டிஸ்க் இடத்தைக் காட்டிலும் குறைந்த பட்சம் இரு மடங்கு இடம் இருந்தாலே பதிய வேண்டும்.


கேள்வி: வேர்டில் பொதுவாக ஒரு சொல் அல்லது குறிப்பிட்ட டெக்ஸ்ட் வரிகளைத் தேர்ந்தெடுத்தபின், அதில் மவுஸ் கர்சரைக் கொண்டு அழுத்தி அப்படியே இழுத்துச் சென்று இன்னொரு இடத்தில் விடலாம்.

என் அலுவல கத்தில் நான் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் இதனை மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் வீட்டில் முடிகிறது. இரண்டிலும் வேர்ட் 2003 தான் உள்ளது.


–என்.பிரிய தர்ஷிணி, கோயம்புத்தூர்

பதில்: அலுவலகக் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் தொகுப்பில் இந்த வசதி வேண்டாம் என செட் செய்யப்பட்டுள்ளது. கவலைப்பட வேண்டாம். மிக எளிதாக மாற்றிவிடலாம். கீழ்க்கண்டபடி செயல்படவும்.

1. டூல்ஸ் (Tools) மெனு சென்று ஆப்ஷன்ஸ் (Options) செலக்ட் செய்திடவும்.


2. கிடைக்கும் விண்டோவில் எடிட் (Edit) டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

3. இந்த விண்டோவில் (Drag and Drop Text Editing) ட்ராக் அண்ட் ட்ராப் டெக்ஸ்ட் எடிட்டிங் என்று ஒரு வரி இருக்கும். அதன் முன்னே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்றை மவுஸ் கிளிக் செய்வதன் மூலம் ஏற்படுத்தவும்.

4.ஓகே கிளிக் செய்து ஆப்ஷன்ஸ் பாக்ஸை மூடவும்.
இனி நீங்கள் விரும்பியபடி டெக்ஸ்ட் செலக்ட் செய்து, அதன் மேல் மவுஸால் அழுத்தியவாறே, இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்று பேஸ்ட் செய்திடலாம்.


கேள்வி: வேர்டில் பயன்படுத்தப்படும் டெம்ப்ளேட் பைல்கள் எந்த டைரக்டரியில் சேவ் செய்து வைக்கப்பட்டிருக்கும்? இந்த டைரக்டரியை மாற்றலாமா?


–என். கணேஷ், மேலூர்

பதில்: புதிய, உங்களுக்குப் பிடித்த வகையில் டெம்ப்ளேட் பைல்களை உருவாக்கி சேவ் செய்து வைத்துப் பயன்படுத்தலாம். ஆனால் டெம்ப்ளேட் பைல்கள் இருக்கும் டைரக்டரியை மாற்றுவது அவ்வளவு நல்லதல்ல.

வேர்ட் டிபால்ட் முறையில் அந்த குறிப்பிட்ட டைரக்டரியில் தான் தேடும்; சேவ் செய்திடும். இருப்பினும் இந்த டெம்ப்ளேட்கள் எங்கு உள்ளன என்று அறியும் வழியைச் சொல்கிறேன்.

1. வேர்ட் தொகுப்பைத் திறந்து கொண்டு அதில் Tools மெனுவில் Options தேர்ந்தெடுக் கவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கும்.

2. இதில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் File Types List என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.இந்த லிஸ்ட்டில் User Templates என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அது எந்த டைரக்டரியில் டெம்ப்ளேட் சேவ் செய்யப்படுகிறது என்று காட்டும். அதனைக் குறித்துக் கொள்ளவும்.


கேள்வி: நான் இப்போது பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன். சில வேலைகளுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் சரியாக வருகிறது என்று தெரிகிறது. இனி அதனையும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாமா? இதனால் பிரச்சினை வராதா?


–டி.தேவநேசன், காரைக்கால்


பதில்: ஒரு கம்ப்யூட்டரில் எத்தனை பிரவுசர் வேண்டுமானாலும் வைத்துப் பயன் படுத்தலாம். இதனால் பிரச்சினை ஏற்படாது. ஆனால் ஒரு பிரவுசர் தான் உங்கள் கம்ப்யூட்டரில் மாறா நிலையில் (Default) இருக்கும்.

அதாவது இன்டர்நெட் முகவரியுடன் கூடிய லிங்க்கில் கிளிக் செய்தால் அந்த பிரவுசர் மூலம் தான் அந்த தளம் திறக்கப்படும். இரண்டு பிரவுசர் வைத்துக் கொள்வது நல்லதும் கூட. ஏதாவது ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டால் இன்னொன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பயர்பாக்ஸில் நீங்கள் வைத்துள்ள புக்மார்க் அடையாளங்களை மாற்றிக் கொள்வதற்கும் வசதி தரப்பட்டுள்ளது. (சென்ற இதழைப் பார்க்கவும்.) எனவே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினை நீங்கள் பதிந்து வைத்து இயக்கலாம்.


கேள்வி: அடிக்கடி பைல்கள் இருக்கும் இடம் தெரியாமல் தேட வேண்டியதுள்ளது. எந்த வகைகளில் எல்லாம் ஒரு பைலை கம்ப்யூட்டரில் தேடி அறியலாம் என்பதற்கு விளக்கம் தரவும். ஏற்கனவே கூறியிருந்தால்,மீண்டும் கேட்பதற்கு மன்னிக்கவும்.


டி. ஆறுமுகத் தேவன், மதுரை

பதில்: உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். தவறே இல்லை ஆறுமுகம். இதோ விளக்கமான பதிலைத் தருகிறேன்.
பைல் தேடுவதற்கான மெனுவினை முதலில் பெற வேண்டும்.

இதற்கு Start பட்டன் அழுத்தி Search என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பாக்ஸில் What do you want to search for? என்று கொடுக்கப்பட்டுள்ள பிரிவில் For File or Folders என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே Search by any or all of the criteria below என்று காட்டப்பட்டு பல பிரிவுகள் கீழே தரப்படும்.இனி இந்தப் பிரிவுகளைப் பார்ப்போம்.

1. முதல் வகையாக பைலின் முழுப் பெயர் தெரியாத வகையினைக் காணலாம். உங்களுக்கு இந்த பைலின் பெயர் தெரியாது. ஆனால் என்ன வகை பைல் என்று தெரியும். அது


*.doc, Excel *.xls, Acrobat *.pdf, *.ppt மற்றும் *.exe என என்னவாக வேண்டு மானாலும் இருக்கலாம். பைலை வகைப் படுத்தித் தேடலாம். இந்த தேடலை முதல் பிரிவில் தரவும்.


2. பெயரும் தெரியவில்லை; என்ன வகையில் சேவ் செய்தோம் எனவும் தெரியவில்லை. அது *.doc அல்லது *.txt என்பது மறந்துவிட்டது. ஆனால் பைலில் உள்ள ஒரு வாசகம் ஞாபகத்தில் உள்ளது என்றால் அதனை வைத்தும் தேடலாம். இதனை இரண்டாவது பிரிவில் தந்து தேடலாம்.


3. மேற்காணும் வகையில் உள்ள பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு குறிப்பிட்ட டிரைவில் தான் உள்ளது என நீங்கள் உறுதியாக நம்பினால் அந்த டிரைவை மட்டும் கொடுத்து தேடலாம். இதனை Look in என்ற பிரிவில் டிரைவ் எழுத்தைத் தந்து தேடலாம்.

எழுத்தைக் டைப் செய்வதற்குப் பதிலாக அதில் உள்ள சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்தால் வரிசையாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காட்டப்படும். அதனைத் தேர்ந்தெடுத்தும் தேடலாம்.


4. இதே வரிசையில் மேலும் சில தேடல் வகைகளை இங்கு பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் அதனைப் பயன்படுத்தி இருப்பது நினைவில் இருந்தால் அந்த தேதியைக் கொடுத்தும் தேடலாம்.

இப்படி பல வகைகளில் தேடினால் நிச்சயம் ஒரு வகையில் நமக்கு பைல் கிடைக்கும்.


கேள்வி: என்னுடைய போட்டோ மற்றும் படங்கள் (ஜேபெக் பைல்கள்) எப்போது வெப் பிரவுசரிலேயே திறக்கின்றன. போட்டோக் களுக்கான புரோகிராம்களில் இவற்றைத் திறக்குமாறு செய்திட என்ன செய்ய வேண்டும்?


–சி.கந்தசுவாமி, திருவண்ணாமலை


பதில்: உங்கள் பிரச்சினையை பைல் அசோசியேஷன் (File Association) பிரச்சினை என்று சொல்வார்கள். பலவாறான பைல்கள் இது போன்ற வேறு புரோகிராம்களில், ஏன் சில வேளைகளில் தவறான புரோகிராம்களிலும் திறக்கப்படும். இதனை எளிதாக சரி செய்திடலாம்.


1.விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். ஸ்டார்ட் (Start) பட்டனில் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் எக்ஸ்புளோர் (Explore) என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்தால் கிடைக்கும். இங்கே நீங்கள் தொடர்பு தவறாக உள்ள டைப் பைல் ஒன்றைக் கண்டறிந்து அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும்.

இனி உங்களுக்குக் கிடைக்கும் மெனுவில் Oணீஞுண ஙிடிtட என்றசொற்களுடன் இப்போது அந்த பைல் திறக்கப்படும் புரோகிராமின் பெயர் இருக்கும். இதனை மாற்ற வேண்டும் என்றால் கீழே உள்ள Open With என்பதில் கிளிக் செய்தால், அந்த பைல் திறக்கப்படக் கூடிய புரோகிராம்களின் பட்டியல் இருக்கும். இதில் நீங்கள் விரும்பிய புரோகிராம் கிடைத்தால், அதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

தற்போது இருக்கும் புரோகிராமினை விடுத்து வேறு ஒரு புதிய புரோகிராம் ஒன்றில் இது திறக்கப்பட வேண்டும் என விரும்பினால், Open With என்று இருப்பதில் கிளிக் செய்தால் வேறு அப்ளிகேஷன் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றிலிருந்து நீங்கள் விரும்பும் புரோகிராமின் பெயரைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலம்.

புரோகிராமின் பெயரைத் தேர்ந்தெடுத்தபின், புரோகிராம்கள் பட்டியலின் கீழாக " Always use this program to open this type of file" என்று ஓர் வரி இருக்கும். அதில் டிக் அடையாளம் ஏற்படுத்திப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதில் நீங்கள் விரும்பும் புரோகிராமினைத் தேர்ந்தெடுக் கலாம். அதுவே மீண்டும் மாற்றாதவரை அத்தகைய பைல்களைத் திறக்கும் புரோகிராமாக அமையும்.



கேள்வி: விஸார்ட் ஒன்று கிடைக்கும்; அதில் இது போல தேர்ந்தெடுங்கள் –– என்று எழுதுகிறீர்கள். விஸார்ட் என்பது எதனைக் குறிக்கிறது?


–சீ. சுமலதா, பெருங்களத்தூர்

பதில்: பொதுவாக Wizard என்றால் மந்திரவாதி, சூனியக்காரன் என்று பொருள். அதனை மனதில் வைத்துக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த சொல் கம்ப்யூட்டர் அறிவியலில் வேறு பொருளைத் தந்தாலும் கிட்டத்தட்ட ஒரு மந்திரவாதி போலத்தான் இதுவும் செயல்படுகிறது.

தெருவோரம் கூட்டம் சேர்க்கும் செப்படி வித்தைக்காரன் அப்படிச் செய்,அதைப் பார்த்தாயா! இப்படிப் போடு, கண்ணை மூடு என்றெல்லாம் சொல்வது போல, விண்டோஸ் இயக்கத்தில் கிடைக்கும் விஸார்ட் தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டு, அதற்கான ஆப்ஷன்களையும் (விருப்பங்கள்) கேட்டு, அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி வேலையை முடிக்கும்.

புரோகிராம் இன்ஸ்டலேசன், புரோகிராமில் முதலில் பைல் உருவாக்கும் நிலை போன்றவற்றில் நம்மை வழி நடத்தும் டயலாக் பாக்ஸே விஸார்ட் எனப்படுவது. இது எப்போதும் நமது நண்பனே.


கேள்வி: எனக்கு வரும் இமெயில்களில் உள்ள சில இணைய தளங்களின் முகவரிகள் லிங்க்காக இல்லாமல் டெக்ஸ்ட்டாக இருக்கின்றன. இதனால் இவற்றில் கிளிக் செய்து இணைய தளத்தைப் பெற முடியவில்லை. இது எதனால் ஏற்படுகிறது. தீர்வு என்ன?

–சி. கணேஷ் குமார், வத்தலக்குண்டு

பதில்: பொதுவாக அனைத்து இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் இணைய முகவரியினை லிங்க்காகத்தான் தரும் வகையில் செயல்படும். நீங்கள் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராம் எது என்று நீங்கள் குறிப்பிடவில்லை.

உங்கள் புரோகிராம் அப்படிப்பட்டதாக இருப்பின் அதனை மாற்றும் வழி அதன் மெனுக்களில் இருக்கும். இல்லை எனில் முகவரியினை காப்பி செய்து பிரவுசரில் பேஸ்ட் செய்து தளத்தைக் காண வேண்டியதுதான்.

நன்றி.தினமலர்.செப்டம்பர் 13,2009,

நூர்
14-09-2009, 07:06 PM
கேள்வி: பலவகையான அட்ரஸ் புக்குகள் விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ளதாகவும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே ஒன்று உள்ளதாகவும் கூறுகிறார்கள். இது குறித்து விளக்கவும்.

– சி.நாராயண மூர்த்தி, கண்டமனூர்


பதில் : விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக ஒரு விண்டோஸ் அட்ரஸ் புக் உள்ளது. இதனை Start, All Programs, Accessories, Address Book என வரிசையாகச் சென்று பெறலாம்.

இதில் நமக்குத் தேவைப்படும் நபர்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள், இமெயில் முகவரிகள் எனப் பல வகையான தகவல் களைப் போட்டு வைக்கலாம்.

இதில் குரூப், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என வகை வகையாகப் பிரித்தும் போட்டு வைக்கலாம். இதுவும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் உள்ள அட்ரஸ் புக்கும் வேறு வேறு.


கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் பாரா முதல் வரி இடைவெளியை (பாரா இன்டென்ட்) அப்படியே வைத்து கீ போர்டில் உள்ள கீகள் வழியாக டெக்ஸ்ட்டை அப்படியே தள்ளி அமைக்கலாமா?அதற்கான வழிகளைக் கூறவும்.

–சி. பவித்ரா, சின்னமனூர்


பதில்: உங்கள் கேள்வி சரியே. கீ போர்டின் உதவியுடனும் இதனை அமைக்கலாம். டெக்ஸ்ட் அமைப்பதில் முதல் வெளி எனப்படும் இன்டென்ட் அமைக்கிறோம் அல்லவா? இதனை கீ போர்டு மூலமும் மாற்றி அமைக்கலாம்.

எடுத்துக் காட்டாக பத்தி ஒன்றில் தொடக்க வரி அரை அங்குலம் தள்ளியும் மற்ற வரிகள் முதல் இடத்திலும் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பத்தியில் கர்சரை வைத்து கண்ட்ரோல் + எம் கீகளை அழுத்துங்கள்.

இப்போது அந்த பத்தி அப்படியே வலது புறமாக அரை அங்குலம் நகர்த்தப்படும். பாரா தொடக்க இன்டெண்ட் மாறாது.

இதனை வேண்டாம் என்று கருதினால் கண்ட்ரோல்+ ஷிப்ட் + எம் கீகளை அழுத்தினால் பழைய நிலைக்கு வந்துவிடும். இனி கண்ட்ரோல் + ட்டி (Ctrl + T) அழுத்துங்கள் . பாராவின் முதல்வரி எங்கு தொடங்குகிறதோ அந்த இடத்திற்கு மீத வரிகள் அனைத்தும் வந்துவிடும்.

இதனை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்ற (Ctrl + T + Shift) என்ற கீகளை அழுத்துங்கள்.


கேள்வி: கூகுள் இணைய தளத்தில் உள்ள காலண்டர் வசதியை எப்படி பெற்று பயன்படுத்தலாம்?

–என். சதீஷ் குமார், கோயம்புத்தூர்


பதில்: கூகுல் தரும் பல வசதிகளில் இது ஓர் அருமையான வசதி ஆகும். இதனை இலவசமாகவே அமைத்துக் கொள்ளலாம்.

இதனை www.google.com/calendar என்ற தளத்தில் பெறலாம். இதில் நாம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளை டைப் செய்தால் அது தானாகவே அந்த தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்து கொண்டு நமக்கு நினைவூட்டும்.

எடுத்துக்காட்டாக office meeting edding at 13.30 Hrs என டைப் செய்தால் குறிப்பிட்ட நாளிற்கானதாக அது எடுத்துக் கொள்ளப்படும். பின் இதனைப் பார்க்கும் உரிமை உங்களுக்கு மட்டுமா அல்லது குறிப்பிட்ட நண்பர்கள் குழுவிற்காக அல்லது அனைத்து நபர்களுக்குமா என்பதனையும் நாம் வரையறை செய்திடலாம்.

இது யாஹூ காலண்டர் சேவையைப் போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் இரண்டு காலண்டர்களுக்கிடையே நிகழ்வுகளை மாற்றிக் கொள்ளும் வசதியினைடு கூகுள் தந்துள்ளது.


கேள்வி: சில வேளைகளில் ஐந்துக்கும் மேற்பட்ட புரோகிராம்களைத் திறந்து வேலை பார்க்கிறேன். அப்போது ஒரு சில புரோகிராம்களை மட்டும் மூட வேண்டியுள்ளது. ஒரே முயற்சியில் அவற்றை மூட முடியுமா? அல்லது ஒவ்வொன்றாகத்தான் மூட வேண்டுமா?


– எஸ். பவன்தாஸ், விழுப்புரம்

பதில்: ஒவ்வொன்றாக மூட வேண்டியதில்லை. கண்ட்ரோல் கீ அழுத்திக் கொள்ளுங்கள். பின் மூட வேண்டிய புரோகிராம்களை, டாஸ்க்பாரில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே மவுஸால் ரைட் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் மெனுவில் குளோஸ் (Close) பட்டனை அழுத்தவும். இதே முறையைப் பயன்படுத்தி இந்த புரோகிராம்களை மினிமைஸ், மேக்ஸிமைஸ், ரெஸ்டோர், காஸ்கேட் ஆகிய வேலைகளையும் மேற்கொள்ளலாம்.


கேள்வி: நான் முதலில் பயன்படுத்திய கம்ப்யூட்டரில் பல்வேறு (ஸ்கைப், கூகுள் டாக், யாஹூ ஐ.எம்.) புரோகிராம்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் என் நண்பர்களுடன் ஹெட் செட் பயன்படுத்தி பேசி வந்தேன். ஆனால் புதிய கம்ப்யூட்டரில் எந்த புரோகிராமிலும் பேச முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?


–சீ. ஸ்ரீனிவாஸ் தங்கதுரை, திண்டிவனம்


பதில்: மிகப் பெரிய கடிதம் எழுதி உள்ளீர்கள். நீங்கள் எழுதியதிலிருந்து உங்கள் மைக் அல்லது ஹெட்செட்டிலிருந்து செல்லும் வயர் சரியாகப் பொருத்தப்படவில்லை என்று தெரிகிறது.

மைக் சரியாக உங்கள் சிஸ்டத்தில் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திடவும். பொதுவாக இது இளஞ்சிகப்பு வண்ணத்தில் இருக்கும். அடுத்து உங்கள் மைக்ரோபோன் மியூட் (Mute) செய்யப் படாமல் உள்ளதா என்று டெஸ்ட் செய்திடவும். இதற்கு உங்கள் டாஸ்க் பாரில் உள்ள ஸ்பீக்கர் ஐகானில் கிளிக் செய்திடவும்.

அப்போது வால்யூம் கண்ட்ரோல் என்ற கண்ட்ரோல் பாக்ஸ் கிடைக்கும். இதில் இறுதியாக லைன் இன் (Line In) என்று இருப்பதன் கீழாக Mute என்று இருக்கும் இடத்தில் உள்ள சிறு கட்டத்தில் டிக் அடையாளம் இருந்தால் எடுத்து விடவும். அநேகமாக இனி உங்கள் மைக் செயல்படத் தொடங்கும் என எண்ணுகிறேன்.


கேள்வி: பைல்களை எப்படி ட்ராக் அண்ட் ட்ராப் மூலம் ஒரு டைரக்டரியிலிருந்து இன்னொரு டைரக்டரிக்கு மாற்ற முடியும்?

–ஆர்.கே. செல்வராஜ் பிள்ளை, இராஜபாளையம்


பதில்: முதலில் எந்த பைலை மாற்ற வேண்டுமோ அந்த டைரக்டரி அல்லது போல்டரை விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் திறந்து கொள்ளுங்கள். பின் அந்த பைலைத் தேர்ந்தெடுக்கவும்.

இனி மீண்டும் இன்னொரு முறை விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளவும். இப்போது அந்த பைலை எந்த போல்டர் அல்லது டைரக்டரிக்கு மாற்ற வேண்டுமோ அதனைத் திறக்கவும்.

இப்போது இரண்டு விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவினையும் ரெஸ்டோர் டவுண் (Restore Down ) செய்திடவும். இதனை விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள மூன்று கட்டங்களில், நடுவில் உள்ள இரண்டு சதுரங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக உள்ள கட்டத்தின் மேல் கிளிக் செய்து மேற்கொள்ளலாம்.

இப்போது உங்கள் மானிட்டர் திரையில் பைல் இருக்கும் இடமும், அது செல்ல வேண்டிய இடமும் தெரியும். இனி தேர்ந்தெடுத்த பைலின் மீது மவுஸின் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்துச் சென்று, அது இருக்க வேண்டிய இன்னொரு விண்டோஸ் எக்ஸ்புளோரரில் உள்ள டைரக்டரி அல்லது போல்டரில் விடவும்.

சிறிய மெனு ஒன்று தெரியும். காப்பி/மூவ் செய்திடவா என்று கேட்கும். உங்களுக்கு எது விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுத்து விடுங்கள். பைல் இடம் மாறிவிடும்.


கேள்வி: என் அலுவலகத்தில் அக்கவுண்ட் மெய்ன்டெய்ன் செய்திட எக்ஸெல் ஒர்க் புக் பயன்படுத்து கிறோம். ஒவ்வொரு முறை ரூபாய் மற்றும் இரண்டு தசம ஸ்தானத்தில் பைசா டைப் செய்கையில் புள்ளி அடிக்க வேண்டியுள்ளது. இதனைக் கம்ப்யூட்டரே டைப் செய்திடும் வகையில் மாற்ற முடியுமா?

–என். கன்னையா, திண்டுக்கல்


பதில்: தாராளமாக செட் செய்திடலாம். ஆனால் செட் செய்த பின் நீங்கள் வெறும் ரூபாய் மட்டும் டைப் செய்திடக் கூடாது. ஏனென்றால் நீங்கள் 123 ரூபாய் என்பதை 123 என டைப் செய்தால், நீங்கள் செட் செய்தபடி,

எக்ஸெல் 1.23 (ஒரு ரூபாய் இருபத்து மூன்று பைசா) என எடுத்துக்கொள்ளும். எனவே 123 ரூபாய் என்றால் 12300 என டைப் செய்திட வேண்டும். சரியா! இனி இதற்கான செட்டிங்ஸ் குறித்துப் பார்க்கலாம்.


எக்ஸெல் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். டூல்ஸ் (Tools) கிளிக் செய்து அதில் கிடைக்கும் பிரிவுகளில் ஆப்ஷன்ஸ் (Options) தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

கிடைக்கும் விண்டோவில் எடிட் (Edit) டேப் கிளிக் செய்திடவும். இதில் செட்டிங்ஸ் (Settings) என்று இருப்பதில் நான்காவதாக உள்ள பிக்ஸெட் டெசிமல் பிளேசஸ் (Fixe Decimal Places) என்று இருப்பதைக் காணவும்.

இதில் ஒரு சிறிய டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அருகில் உள்ள சிறிய கட்டம் இப்போது உயிர் பெற்று அதில் 2 எனத் தெரியும். இதனை அப்படியே விட்டுவிடலாம்.

வேறு எண் இருந்தால் அதனை 2 என மாற்றவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இதனை மாற்றாதவரை நீங்கள் எந்த எண் டைப் செய்தாலும் அதன் கடைசி இரண்டு இலக்கங்கள் இரண்டு தசம ஸ்தானங்களாக எடுத்துக் கொள்ளப்படும்.


கேள்வி: ஒரு பைலின் ப்ராபர்ட்டீஸ் பார்ப்பது எப்படி? இதில் அந்த பைலின் பெயர் மற்றும் வகை தவிர வேறு என்ன என்ன தகவல் கிடைக்கும்?

–கே. கமலேஷ் குமார், செக்கானூரணி


பதில்: ஒரு பைலின் ப்ராபர்ட்டீஸ் பார்க்க இரு வழிகள் உள்ளன. பைலை அதன் டைரக்டரி சென்று அதன் பெயரில் அல்லது டெஸ்க்டாப்பில் அதன் ஐகானில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.

பின் அதன் மீது ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும். இந்த மெனுவில் கீழாக ப்ராப்பர்ட்டீஸ் என்று ஒரு பிரிவு இருக்கும்.

இதில் கிளிக் செய்தால் ப்ராபர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இதில் பைலின் பெயர், அதன் வகை, அது எந்த புரோகிராமில் திறக்கும்படி செட் செய்யப்பட்டுள்ளது, அருகேயே அந்த புரோகிராமினை மாற்றுவதற்கு வசதி தரப்பட்டிருக்கும்.

இதனை அடுத்துள்ள பிரிவில் அந்த பைல் கம்ப்யூட்டரில் உள்ள டைரக்டரி, அந்த பைலின் அளவு, அது டிஸ்க்கில் எடுத்துக் கொள்ளும் இட அளவு தரப்பட்டிருக்கும்.


மூன்றாவது பிரிவில் அது என்று உருவாக்கப்பட்டது, என்று திருத்தப்பட்டது, என்று காணப்பட்டது என்று காட்டப்படும். இறுதியான பிரிவில் அந்த பைல் எந்த வகையில் பதியப்பட்டுள்ளது என்று காட்டப்படும்.

அதைப் பார்க்க மட்டும் தான், திருத்தப்படக்கூடாது என்றால் Read only என்றும், திருத்தப்படலாம் என்றால் Hidden என்றும் தரப்பட்டிருக்கும். இந்த இடங்களில் பைலின் தன்மையை மாற்றலாம்.

இதனுடன் மேலும் சில மாற்றங்களை பைலின் பண்புகளில் மேற்கொள்ள வேண்டும் என்றால் Advanced என்ற பிரிவில் கிளிக் செய்து மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.


ப்ராப்பர்ட்டீஸ் விண்டோவினைப் பெற இன்னொரு வழியும் உள்ளது. பைலைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஆல்ட்+என்டர் கீகளை அழுத்தவும்.


கேள்வி: நான் என் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்தவுடன் அது தானாக ஆப் ஆகிவிடுகிறது. முதலில் ஆன் செய்தபோதுஅழுத்திய ஸ்விட்சை ஆப் செய்திட வேண்டிய நிலை ஏற்படவில்லை.

ஆனால் மானிட்டரில் அதுவரை இளம் பச்சையாக எரிந்து கொண்டிருந்த சிறிய இன்டிகேட்டர் விளக்கு தீ சிகப்பாக மாறிவிடுகிறது. இது எதனைக் குறிக்கிறது? மானிட்டர் ஆப் ஆகிறதா? அல்லது ஆப் செய்திட வேண்டுமா?

–கா. அழகிய மணவாளன், திருவண்ணாமலை


பதில்: கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தொடங்கும் பல வாசகர்கள் இது குறித்து அவ்வப்போது கேட்கும் கேள்வி இது. இப்போதைய கம்ப்யூட்டர்களில் ஷட் டவுண் செய்தாலே போதும். சிபியுவிற்குச் செல்லும் மின்சாரம் நிறுத்தப்படும். முன்பெல்லாம் சிபியுவின் ஸ்விட்சை ஆப் செய்திட வேண்டும்.

ஆனால் மானிட்டரின் விளக்கு நிறம் மாறுவது எதனைக் காட்டுகிறது? பச்சையிலிருந்து இளஞ்சிகப்பு நிறத்திற்கு மாறினால், மானிட்டருக்கு வந்து கொண்டிருக்கிற தகவல்கள் நின்றுவிட்டன என்று பொருள்.

சிபியு ஆப் செய்யப்பட்டுவிட்டதால் தகவல் வராது அல்லவா? ஆனால் பவர் மானிட்டருக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று பொருள். திரை ஒளியூட்டப் படவில்லை.

இதற்கு செல்லும் மின்சக்தியை நிறுத்த வேண்டும் என்றால், மானிட்டரின் ஸ்விட்சை (பெரும்பாலும் அழுத்தும் வகையில் இருக்கும்) அழுத்தினால் போதும்.

சில பழைய வகை மானிட்டர்களில் திரை நீல நிறத்தில் அல்லது பல வண்ணங்களில் கோடுகள் உள்ள தொகுதி தெரியும். மற்ற சாதனங்களையும் பாருங்கள்.

சில ஆப்டிகல் மவுஸ்களில் மின்சக்தி வந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் சிறிய அளவில் விளக்கு எரியும். இதே போல் சில ஸ்கேனர்கள், பிரிண்டர்கள் மற்றும் கீ போர்டுகளில் கூட இதே போல் சிறிய எல்.இ.டி. விளக்கு எரியலாம்.

இவை எரிவதால் பிரச்சினை எதுவும் இல்லை என்றாலும், மொத்தமாக இவை அனைத்திற்கும் ஒரு ஸ்விட்ச் வைத்துக் கொண்டு, இவற்றிற்கு வரும் மின்சாரத்தை நிறுத்திவிடலாம்.

நன்றி.தினமலர்.செப்டம்பர் 20,2009

நூர்
28-09-2009, 10:06 AM
கேள்வி : எங்கள் ஊரில் கம்ப்யூட்டர் செய்து கொடுப்பவரிடம் புதிய அதிக திறன் கொண்ட கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி, அதில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு ஒன்றையும் பெற்றுள்ளேன்.

மற்ற என் நண்பர்கள் இதற்கு புராடக்ட் கீ வாங்கினாயா என்று கேட்கிறார்கள். அது தேவை இல்லை என எனக்குக் கம்ப்யூட்டர் கொடுத்தவர் கூறுகிறார். இது எதனைக் குறிக்கிறது? அவசியம் தேவையா?


–கா. ஆறுமுகம், திண்டுக்கல்

பதில்: தங்களின் சாப்ட்வேர் தொகுப்பு திருடப்பட்டு பயன் படுத்தப்படாமல் இருக்க, சாப்ட்வேர் நிறுவனங்கள் பயன்படுத்தும் பல வழிகளில் இந்த புராடக்ட் கீயும் ஒன்று. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கு இந்த புராடக்ட் கீயினை வழங்கு கிறது.

ஒவ்வொரு சாப்ட்வேர் தொகுப் பிற்கும் ஒரு கீ ஒன்றை உருவாக்கி அதனைச் சரியாகக் கொடுத்தாலே அத்தொகுப்பு இயங்கும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பணம் கொடுத்து வாங்குகையில் பொதுவான ஒரு கீ அதில் அச்சடிக்கப்பட்டுத் தரப்படும். இதனை சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படுகையில் பயன்படுத்த வேண்டும்.


அதன்பின் அந்த தொகுப்பைப் பயன்படுத்த நாம் மேற் கொள்ளும் முதல் முயற்சியில், புராடக்ட் கீ கேட்கும். அப்போது சாப்ட்வேர் வழங்கிய நிறுவனத்தின் இணைய தளத்தில் சென்று அதனைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது இமெயில் மூலம் பெறலாம்.

அல்லது கட்டணமின்றி பயன்படுத்தக் கூடிய தொலைபேசி எண் தந்திருப்பார்கள். அதனைத் தொடர்பு கொண்டு நம் சிடி எண்ணைத் தந்தால் புராடக்ட் கீ தருவார்கள். பொதுவாக இந்த கீ பல எண்கள் மற்றும் எழுத்துகள் கொண்டதாக இருக்கும். எனவே கவனமுடன் கேட்டு வாங்கி சிஸ்டத்தில் அமைக்க வேண்டும்.

உங்களுக்கு கம்ப்யூட்டர் கொடுத்த நபர் அல்லது நிறுவனத்தில் பணிபுரிபவர் ஏற்கனவே இந்த வேலையை எல்லாம் செய்து முடித்து உங்களுக்கு எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினைப் பதிந்து தந்திருப்பார். இருப்பினும் அவரிடம் சிடிக்கான கீயினைப் பெறுவது நல்லது. பின் நாளில் புதிய கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பைப் பதிக்கை யில் உதவும். அல்லது பதியப் பட்ட ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்த பின் பதிக்கையிலும் தேவைப்படும்.


கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 ஐ தொடர்ந்து இன்னும் நான் பயன்படுத்தி வருகிறேன். வெகுநாட்களாக இந்த சந்தேகம் என்னிடம் உள்ளது.

ஏன் அதனை மூடும்போது அடுத்த முறை இதனைத் திறக்கையில் அனைத்து டேப்களையும் திறக்கவா என்று ஒரு கேள்வி வருகிறது? இது எர்ரர் செய்தியா? எர்ரர் என்றால் இதனை எப்படி சந்திப்பது?

–எஸ். நாகேந்திரன், திருப்பூர்

பதில்: புதிதாய் இயக்கத்தில் உள்ள பிரவுசர்கள் அனைத்துமே டேப் பிரவுசிங் எனப்படும் வசதியைத் தருகின்றன. இப்படி பல டேப்களைத் திறந்து, அவற்றின் ஒவ்வொன்றிலும் ஓர் இணைய தளத்தினைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு மூடுகிறோம்.

சில வேளைகளில் நம்மை அறியாமல் மூடுவதற்கான எக்ஸ் அடையாளத் தை அழுத்திவிடுவோம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நம்மை எச்சரிக்கை செய்வதற்காக இந்த ஏற்பாடு உள்ளது. அனைத்து டேப்களையும் சேவ் செய்து பின் அடுத்த முறைத் திறக்கையில் அந்த டேப்களில் உள்ள தளங்களையும் இது திறக்கும்.


இப்படிப்பட்ட செய்தி வருவது உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால், அதனை நிறுத்தும் வகையில் செட் செய்துவிடலாம். முதலில் "Tools" தேர்ந்தெடுத்து அதில் "Internet Options" பட்டன் அழுத்தவும். பின்னர் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும்.

இதில் "General" என்ற டேபை அழுத்தவும். இதில் நான்காவதாக உள்ள "Tabs" என்ற பிரிவில் கிடைக்கும் "Settings" என்ற பட்டனை அழுத்தவும். இப்போது "Tabbed Browsing Settings" என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

இதில் "Warn me when closing multiple tabs" என்ற வரிக்கு முன்னால் உள்ள சிறிய கட்டத்தில் இருக்கும் டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கர்சரை வைத்து அழுத்தி எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த எச்சரிக்கை கிடைக்காது.


கேள்வி: இணைய தளம் ஒன்றில் என் பெயரைப் பதிந்த போது நான் கொடுத்த பாஸ்வேர்ட் Weak Password என செய்தி தரப்பட்டது. பாஸ்வேர்டில் எப்படி Weak உண்டு. ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி உருவாக்க முடியும்?

–என்.சிவகுமார், திருமங்கலம்


பதில்: Weak Password என்பது சுலபமாக மற்றவர்கள் அடையாளம் காணக் கூடியதாகும். எடுத்துக் காட்டாக, உங்கள் பிறந்த நாள், திருமண நாள், மனைவியின் பெயர், ஊரின் பெயர், qwerty, 1234 என்றெல்லாம் கொடுத்தால் எளிதாக ஒருவர் கண்டு கொள்ளலாமே.

எனவே தான் யாரும் கண்டறியாத வகையில் பாஸ்வேர்டை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ramukavis என உங்கள் பெயரை வலமிருந்து இடதாக அமைத்தால் கூட ஒரு சிலர் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். எனவே தான் பாஸ் வேர்டில் எண்களும், எழுத்துக் களும், பிற குறியீடுகளும் கொண்டு அமைத்தால் அது ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எனக் கூறுகிறார்கள். அவ்வாறு அமைக்கும்படி கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்த அனைத்து இதழ்களும் அறிவுறுத்துகின்றன.


உங்கள் கேள்வியைப் படிக்கும் போது நேற்று நான் இணையத்தில் படித்த குறிப்பு நினைவிற்கு வந்தது. அண்மையில் 28 ஆயிரம் பாஸ்வேர்ட்களை மாதிரிக்கு எடுத்து ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இதில் 16% பேர் தங்கள் பெயரின் முதல் சொல்லையே பாஸ்வேர்டாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

14% பேர் மிக எளிமையாக 1234 போன்ற பாஸ்வேர்டினைக் கொண்டுள்ளனர். 5% பேர் டிவியில் நடத்தப்படும் சீரியல் தலைப்புகள், அதில் வரும் கதா பாத்திரங்களின் பெயர்களைக் கொண்டு அமைத்துள்ளனர். மொத்தத்தில் 42% பேர் மிக எளிதான,

யாரும் கண்டு கொள்ளக் கூடிய பாஸ்வேர்ட் களையே பயன்படுத்துகின்றனர் என்பது தெரிய வந்தது. 66% பேர் தங்கள் பாஸ்வேர்ட்களை மாற்றுவதே இல்லை என்றும் தெரிகிறது. இவை அனைத்துமே சரியல்லை. வங்கிக் கணக்கு போன்றவற்றில் மிகக் கடுமையான, யாரும் அணுக முடியாத பாஸ்வேர்ட் களை வைத்திருப்பதே நல்லது.


கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி என் சிஸ்டத்தில் உள்ளது. இதில் மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்து பின் டிரைவ் ஐகானைத் தேர்ந்தெடுத்து, பைல்களைப் பார்ப்பது வழக்கம்.

ஆனால் மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்தவுடன், டிரைவ் ஐகான்கள் மற்றும் அவை கொண்ட திரை கிடைக்க தாமதமாகிறது. இதனை வேகமாகக் கிடைக்கும்படி செய்திட முடியுமா?

–ஜி. விக்னேஷ், சென்னை

பதில்: உங்கள் சந்தேகம் சரியானதுதான். வேகமாக நம் வேலையை முடிக்க வேண்டும் என எண்ணி மை கம்ப்யூட்டரைக் கிளிக் செய்தால், நமக்கு வர வேண் டிய முதல் திரை தாமதமாக வந்தால் ஏமாற்றமாகத்தான் இருக்கும்.

இது ஏன் ஏற்படு கிறது என்றும், இதனை எப்படி சரி செய்திடலாம் என்றும் பார்க்கலாம்.

பிரவுஸ் செய்து பைல்களைத் தேடுவதற்காக, மை கம்ப்யூட்டர் ஐகானைக் கிளிக் செய்தவுடன், விண்டோஸ் எக்ஸ்பி உடனே அதன் நெட்வொர்க் பைல் களையும், கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள பிரிண்டர்களையும் தேடி அறிந்து கொள்ள முயற் சிக்கும். இதனால் தான் அந்த திரையில் உடன் கிடைக்க வேண்டிய ஐகான்கள் வர சற்று தாமதமாகிறது.

முதல் தோற்றத்தில் டிபால்ட்டாக உள்ள விண்டோஸ் ஐகான் கிடைக்கும். பின் சற்று நேரத்தில் மற்ற ஐகான்கள் கிடைக்கும். இதனைத் தவிர்க்கக் கீழ்க்காணும்படி செட் செய்திடவும்.

1. முதலில் My Computer ஐகானில் டபுள் கிளிக் செய்து அதனைத் திறக்கவும்.

2.பின் Tools மெனுவில் கிளிக் செய்து, அந்த மெனுவில் Folder Options என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.

3. Folder Options என்பதன் கீழ் View என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.

4. அதில் உள்ள முதல் பாக்ஸில் "Automatically search for network folders and printers" என்று இருக்கும் இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடவும்.

அதன் பின் Apply என்பதில் கிளிக் செய்து, OK யில் என்டர் தட்டி வெளியேறவும். இதன்பின் உங்கள் மை கம்ப்யூட்டர் திரை தோன்றுவது மிக வேகமாக நடைபெறும்.


கேள்வி: ஷார்ட் கட் கீகள் ஆபீஸ் 2007 தொகுப்பில் உள்ளனவா? ரிப்பன் இன்டர்பேஸ் இதில் உள்ளதால் இந்த சந்தேகம் எழுகிறது. ஏனென்றால் நான் வேர்ட் 2003 பயன்படுத்தி வந்த போது நிறைய ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறேன். அவை இங்கு பயன்படுமா?

–கே. செல்வகுமாரி, மதுரை

பதில்: ஆபீஸ் 2007 தொகுப் பிலும் நிறைய ஷார்ட் கட் கீ தொகுப்புகள் பயன்பாட்டில் உள்ளன என்று கேட்டால் நீங்கள் நிச்சயம் சந்தோஷப்படுவீர்கள். ஏறத்தாழ நீங்கள் வேர்ட் 2003ல் பயன்படுத்திய பெரும்பாலான ஷார்ட் கட் கீகள் இதிலும் பயன்படும்.

எடுத்துக் காட்டாக கண்ட்ரோல் + ஐ அழுத்தினால் எழுத்துகள் சாய்வாக அமையும்; கண்ட்ரோல் + யு அழுத்தினால் அடிக்கோடு கிடைக்கும். அதே போல வேர்ட் 2003ல் இருந்தது போல மெனு கட்டளைகளை ஆல்ட் கீயுடன் அதற்கான எழுத்திற்கான கீயுடன் அழுத்தி நிறைவேற்றலாம்.

எடுத்துக் காட்டாக Alt + F அழுத்தினால் பைல் மெனு கிடைக்கும். அதே போல புதிய தொகுப்பில் ரிப்பன் தரும் கட்டளைகளை Alt+R அழுத்திப் பெறலாம்.

ஆபீஸ் 2007ல் ஆபீஸ் ரிப்பனுக்கு வலது பக்கமாக உள்ள குயிக் அக்செஸ் டூல்பாரில் கிடைக்கும் ஷார்ட் கட் ஐகான் களை நாம் எண்களுக்கான கீகளை அழுத்திப் பெறலாம். டேப் ஏதாவது ஒன்றினைத் தேர்ந்தெடுத்த பின்னர், ரிப்பனில் லேபில்கள் தோன்றும். இவற்றின் மூலம் பல்வேறு கட்டளைகளை இயக்கலாம்.


சில கட்டளைகளை இயக்க, ஒன்றுக்கு மேற்பட்ட கீகளை இயக்க வேண்டியதிருக்கும். அப்போது லேபிலில் ஒன்றுக்கு மேற்பட்ட கீகள் காட்டப்படும். எடுத்துக்காட்டாக, தேர்ந்தெடுக் கப்பட்ட டெக்ஸ்ட் ஒன்றின் எழுத்து அளவைக் கூட்ட Alt கீ அழுத்திய பின்னர் ஏ கீயைஅழுத்த வேண்டும்.

இப்போது ஹோம் டேப் கிடைக்கும். அடுத்து எப் கீ அழுத்திப் பின் ஜி கீ அழுத்தவும். இப்போது பாண்ட் அளவு உயரும். ஆபீஸ் 2007 ஷார்ட் கட் கீ தொகுப்புகள் குறித்த விளக்கத்தினை கீழ்க்காணும் மைக் ரோசாப்ட் தளத்தில் காணலாம்.

www.tinyurl.com/ 36tbh8. . இந்த தளத்தில் 20 நிமிடங்கள் விளக்கப் படம் கிடைக்கும். இதனை இன்டர் நெட் எக்ஸ்புளோரரில் பார்க்கவும். பயர்பாக்ஸில் இதன் ஆடியோ சரியாகக் கேட்பதில்லை.ஷார்ட் கட் கீ தொகுப்புகள் குறித்த மாற்றங்களை அறிய www.tinyurl. com/2qaftz என்ற தளத்திற்குச் செல்லவும்.


கேள்வி: நான் புதிதாகப் பெற்ற கம்ப்யூட்டரில் விண்டோஸ் விஸ்டா உள்ளது. எக்ஸ்பி சிஸ்டம் ஷட் டவுண் செய்திட முன்பு நீங்கள் கொடுத்த ஷார்ட் கட் கீயினை அமைத்திருந்தேன். விஸ்டாவிற்கு எப்படி அமைப்பது என்று உதவவும்.

–சீ. தனுஷ்கோடி, சென்னை


பதில்: உங்களைப் போல பல வாசகர்கள் கேட்டுள்ளனர். கம்ப்யூட்டர் மலரில் எக்ஸ்பிக்கு மட்டும் தந்துவிட்டு, விஸ்டா விற்குத் தரவில்லையே என்று குற்றம் சாட்டியவர்களும் பலர் உள்ளனர். இதோ அந்த வழி: முதலில் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் New என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Shortcut ஆப்ஷனில் கிளிக் செய்க. பின் New Shortcut விஸார்ட் கிடைக்கும் வரை காத்திருக்கவும்.

இந்த விஸார்டில் உங்கள் புதிய ஷார்ட் கட் எங்கிருந்து உருவாக்க வேண்டும் எனக் காட்டுமாறு ஒரு நீள விண்டோ கிடைக்கும். இதில் shutdown s t 01 என டைப் செய்திடவும். அடுத்து Next பட்டனில் கிளிக் செய்து இந்த வேலையை முடிக்கவும்.


இவ்வாறு ஷார்ட்கட் உருவாக்கும் வேலையை முடித்தபின்னர், டெஸ்க்டாப் ஸ்கிரீனில் புதியதொரு ஐகானை நீங்கள் பார்க்கலாம். இல்லை என்றால் நீங்கள் டைப் செய்த சொற்கள் மற்றும் எழுத்துகளில் ஏதேனும் விடுதல் அல்லது அதிகப்படியான ஸ்பேஸ் விட்டிருக்கலாம். மீண்டும் சரியாகச் செயல்படவும்.


கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் நம் சொற்களில் உள்ள பிழைகளைத் திருத்த, அதுவே சிகப்பு கோடுகளைக் காட்டி, திருத்தச் சொல்கிறது. ரைட் கிளிக் செய்து திருத்துகிறோம்.

ஆனால் அக்ரோனிம் (Acronym) எனப்படும் சுருக்குச் சொற்களை நான் என் பாட சம்பந்தமாக, அதிகம் பயன்படுத்துகையில் அதனை ஏன் தவறாகக் காட்டுகிறது என்று புரியவில்லை. இந்த மாதிரி சொற்களை வேர்ட் பிழை என்று காட்டாமல் இருக்க முடியுமா?

–சி. அழகம்மை, காரைக்குடி

பதில்: வேர்ட் டாகுமெண்ட்டை எடிட் செய்கையில், குறிப்பாக உங்களைப் போன்ற மாணவியர்கள் எடிட் செய்கையில் சரியான சொற்களுக்கு சிகப்பு கோடுகள் வந்தால், சற்று எரிச்சலாகத்தான் இருக்கும். அதற்கான மருந்து வேர்ட் தொகுப்பில் சில மாற்றங்கள் செய்வதில் இருக்கிறது.


எப்படி இந்த மாற்றங்களை மேற்கொள்வது என்று பார்ப்போமா? அதற்கு முன் உங்களுக்கு உதவும் வகையில் சில ஆலோசனையும் கூறுகிறேன்.
முதலில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சுருக்குச் சொல் இருந்தால் அதனை உங்கள் கம்ப்யூட்டரில் தரப்பட்டுள்ள Custom Dictionary சேர்க்கச் சொல்லிவிடலாம்.

அந்த சொல்லின் மீதாக ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Add to Dictionary என்பதில் கிளிக் செய்தால், அந்த சொல் டிக்ஷனரியில் சேர்க்கப்பட்டுவிடும். பின் அந்த குறிப்பிட்ட சொல்லின் கீழ் சிகப்புக் கோடு வராது. இந்த வகையில் நீங்கள் அடிக்கடி உங்கள் பாடத்திற்கெனப் பயன்படுத்தும் சொற்களை டிக்ஷனரியில் சேர்த்துவிடலாம்.

ஆனால் இது போல நிறைய வெவ்வேறு சுருக்குச் சொற்களை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் அதற்கு வேறு வழி உள்ளது. டூல்ஸ் கிளிக் செய்து பின் கிடைக்கும் மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். பின் பல டேப்களுடன் ஒரு விண்டோ கிடைக்கும். இதில் Spelling and Grammar என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.

இந்த விண்டோவில் ஐந்தாவதாக Ignore words in Upper Case என்று இருக்கும். இதன் முன் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனிமேல் உங்கள் சுருக்குச் சொற்களின் கீழே, ஆசிரியர் போடுவது போல சிகப்புக் கோடுகள் கிடைக்காது.


இதுவே ஆபீஸ் 2007 தொகுப்பாக இருந்தால், Office பட்டன், பின் Prgograms Office Button என வரிசையாகக் கிளிக் செய்து அதில் proofing கேடகிரியைத் தேர்ந்தெடுக்கவும். இதிலும் Ignore words in Upper Case என்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


கேள்வி: நான் விரும்பும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம் ஒன்றை ஸ்டார்ட் மெனுவில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன். இதனை எப்படி இணைப்பது?

–ஆர்.கே. கலா ராணி, திண்டிவனம்

பதில்: முதலில் உங்கள் புரோகிராம் இருக்கும் இடத்திற்கு ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் பட்டன்களை அழுத்திச் செல்லுங்கள். பின் அந்த புரோகிராம் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Pin to Start menu என்பதில் கிளிக் செய்திடவும்.

பின் இதனை முடித்து வந்து ஸ்டார்ட் மெனுவைக் காணவும். நீங்கள் விரும்பிய புரோகிராம் அதன் பட்டியலில் ஒன்றாக இருக்கும். இப்படி எந்த புரோகிராமினையும் கொண்டு வரலாம். கொண்டு வந்த புரோகி ராமினை நீக்குவதைப் பார்ப் போமா! மீண்டும் நீக்க வேண் டிய புரோகிராமினை ஆல் புரோகிராம் லிஸ்ட்டில் கண்டறிந்து,

அதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில்Unpin from Start menu என்பதில் கிளிக் செய்தால், புரோகிராம் ஸ்டார்ட் மெனு பட்டியலில் இருந்து நீக்கப்படும். ஆனால் கவலை எதுவும் பட வேண்டாம். கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த இடத்தில் புரோகிராம் அப்படியே இருக்கும்.

நன்றி.தினமலர்.செப்டம்பர் 27,2009.

நூர்
28-09-2009, 10:06 AM
கேள்வி: கம்ப்யூட்டர் வாங்குவது குறித்து எழுதுகை யில் கம்ப்யூட்டர் ப்ராசசர் டூயல் கோர் (Dual Core) ஆக இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதில் டூயல் கோர் என்பது என்ன? அது எதனைக் குறிக்கிறது?

–கா.செந்தமிழ்ச் செல்வி, சின்னமனூர்

பதில்: நல்ல கேள்வி. பல மாணவர்கள் இதனை தொலைபேசி வழியாகவும் கேட்டுள்ளனர். எனவே சற்று விரிவான பதிலைத் தருகிறேன்.

இன்டெல், 2007 களில் இந்த டூயல் கோர் குறித்து பிரபலமாக விளம்பரம் செய்தது. இந்த ப்ராசசரினால் ஒரு கம்ப்யூட்டரின் திறன் பல மடங்கு பெருகு வதாகவும் அறிவித்திருந்தது. முன்பு கம்ப்யூட்டர் ஒன்றில் ஒரே ஒரு ப்ராசசர் தான் இருக்கும். அதுவே கம்ப்யூட்டர் மேற் கொள்ளும் அனைத்து வேலை களையும் கவனித்து வந்தது.

இதற்குப் பதிலாக இரண்டு ப்ராசசரை ஒரே சிப்பில் இணைத்து இன்டெல் கொண்டு வந்தது. இதனால் கம்ப்யூட்டரின் திறன் இரு மடங்கு ஆனது. வேகமும் கூடியது. கம்ப்யூட்டரில் நீங்கள் இயக்கும் ஒவ்வொரு அப்ளி கேஷனும் ஒரு ப்ராசஸ் (Process) என அழைக்கப் படுகிறது.

வழக்கமான பழைய ப்ராசசரில் ஒரு செயல்பாடு ஒரு இழை செயல்பாடாகச் சென்று கொண்டே இருக்கும். இப்போது இரு ப்ராசசர் இருப்பதனால் இந்த செயல்பாடு சற்று வேகமாகவும் எளிதாகவும் மேற்கொள்ளப் படுகிறது.

இங்கு இன்டெல் என்று நான் கூறியது உங்களுக்குத் தெரிந்த ஒன்றைக் கூறுவதற்காகத் தான். ஏ.எம்.டி. நிறுவனமும் பல டூயல் கோர் ப்ராசசர்களை வெளியிட்டுள்ளது.


கேள்வி: ஒர்க் புக் ஒன்றைத் தயார் செய்த போது, அன்றாட கணக்கு வழக்குகளை தேதிவாரியாக அறிய, தேதியை அமைக்க வேண்டி தேதி தெரியவேண்டிய செல்லில் =now என டைப் செய்தேன். ஆனால் ஒவ்வொரு முறை திறந்தவுடன் அன்றைய நாள் தான் காட்டப்படுகிறது.

கணக்கு வழக்குகளை மேற்கொண்ட நாள் காட்டப்பட வில்லை. இதனால் குழப்பம் ஏற்படுகிறது. இப்போது எழுத்தில் அமைத்து வருகிறோம். ஏன் இந்த தவறு ஏற்படுகிறது?

–கா.உதயமூர்த்தி, விருதுநகர்

பதில்: பார்முலா கொடுக்கும் முன் அது எந்த விளைவை ஏற்படுத்தும் எனத் தெரிந்து கொடுக்க வேண்டும், நீங்கள் கொடுத்த பார்முலா ஒர்க் ஷீட்டைத் திறக்கும் நாளினைக் கம்ப்யூட்டரி லிருந்து பெற்றுக் காட்டும்.

இதற்குப் பதிலாக நீங்கள் தேதி அமைத்தது மாறாமல் இருக்க வேண்டும் என்றால் கண்ட் ரோல் + செமிகோலன் கீகளை அழுத்துங்கள். அப்படியே அதனை சேவ் செய்து பின் ஒரு நாளில் திறந்து பாருங்கள். என்று சேவ் செய்தீர்களோ அந்த நாளின் தேதி மாறாமல் இருக்கும். சரியா!


கேள்வி: என்னுடைய ஸ்கிரீன் மற்றும் சிஸ்டம் பைல்களில் காட்டப்படும் டெக்ஸ்ட் மற்றும் ஐகான் ஆகியவற்றைப் பெரிதாகப் பார்க்க விரும்பு கிறேன். இதற்கான செட்டிங்ஸ் எங்கு உள்ளது?

–எஸ். செல்வகுமார், மதுரை


பதில்: உங்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி என எழுதி உள்ளீர்கள். அதில் Start அழுத்திப் பின் Control Panel செல்லவும். இதில் Classic View இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.

பின் Display ஐகானில் டபுள் கிளிக் செய்திடுங்கள். பின் கிடைக்கும் விண்டோவில் Settings என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். பின் அந்த விண்டோவில் உள்ள Advanced என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.

அதன்பின் கிடைக்கும் விண்டோவில் General என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் எத்தனை ஈ.க.ஐ. அளவில் ஐகான்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிளிக் செய்தால் Normal, Large, Custom என மூன்று ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.

இதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் உங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்தவுடன், கம்ப்யூட்டரை நீங்கள் ரீஸ்டார்ட் செய்திடச் சொல்லி செய்தி கிடைக்கும். யெஸ் கொடுத்தால், கம்ப்யூட்டர் ரீபூட் செய்யப்படும். இப்போது ஐகான்கள் மற்றும் படங்கள் எல்லாம் பெரிதாகக் கிடைக்கும்.

இனி நீங்கள் எழுத்தின் அளவையும் மாற்ற விரும்பினால், முன்பு செய்ததைப் போல டிஸ்பிளே ஐகான் வரை செல்லவும். அதன்பின் அப்பியரன்ஸ் டேபில் கிளிக் செய்து பாண்ட் சைஸ் ட்ராப் டவுண் கட்டத்தினைப் பெறவும்.

இங்கு நார்மல், லார்ஜ் மற்றும் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்ற மூன்று அளவுகள் கிடைக்கும். பின் ஓகே பட்டன் கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் விருப்பப்படி எல்லாமே புதிய மாற்றங்களுடன் இருக்கும்.


கேள்வி: இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்ற வகையில் மவுஸ் ஒன்றின் செயல்பாட்டினை மாற்ற முடியும் என்று என் நண்பன் கூறுகிறார். இதனை எப்படி மாற்றுவது? நீங்கள் சொல்ல முடியுமா?

–கா. அருணாச்சலம், கோயம்புத்தூர்


பதில்: விண்டோஸ் 98 தொகுப்பிலிருந்து இந்த வசதியை மைக்ரோசாப்ட் தந்து வருகிறது. நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவதாகக் கூறி உள்ளதால் அதற்கேற்ற செட்டிங்ஸ் பார்க்கலாம்.

Start பட்டன் அழுத்தி Control Panel செல்லவும். இது Category View –வில் இருப் பதனை உறுதி செய்திடவும். இந்த வியூவில் Printers and Other Hardwares என்று ஒரு இடம் இருக்கும். அங்கே பிரிண்டர் மற்றும் மவுஸ் இணைந்து இருப்பது போல ஐகான் தென்படும்.

இதில் கிளிக் செய்தால், கிடைக்கும் விண்டோவில் மவுஸ் ஐகான் மீது மீண்டும் டபுள் கிளிக் செய்திடவும். இப்போது Mouse Properties என்று ஒரு சிறிய விண்டோ கிடைக்கும். இதில் முதல் டேப் Button என்று இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்தால், அதில் மவுஸ் பட்டன்களை செட் செய்திடலாம்.

முதல் பிரிவில் Button Configuration என்று இருக்கும் இடத்தில் பிரைமரி / செகண்டரி கீகளை மாற்ற Switch Primary and Secondary Buttons என்று இருக்கும். இதில் சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்தி வெளியேறவும். இனி வழக்கமாக அனைவரும் மவுஸில் வலது கை வைத்து இயக்குவதனை இடது கையால் ஏற்படுத்தலாம்.

இதுவரை இடதுபட்டனில் என்ன என்ன செயல்பாடு மேற்கொண்டீர்களோ அவற்றை எல்லாம் வலது பட்டனிலும், வலது பட்டனில் மேற்கொண்ட தனை இடது பட்டனிலும் மேற் கொள்ளலாம்.


கேள்வி: பவர்பாய்ண்ட் பிரசன் டேஷன் அடிக்கடி பயன்படுத்து கிறேன். வெகு நாட்களாக ஒரு குழப்பம் உள்ளது. என் உடன் பணி புரிபவர்களும் இதனைத் தீர்க்க முடிவதில்லை.

அதாவது புல்லட் பாய்ண்ட்டுடன் டெக்ஸ்ட் அமைக்கும்போது, புல்லட் சைஸுக்கும், டெக்ஸ்ட் சைஸு க்கும் ஒத்துப் போகவில்லை. இவை இரண்டை யும் ஒருங்கி ணைக்கும் வகையில் அமைக்க முடிவதில்லை. இது ஏன்? தீர்வு உள்ளதா?

–என்.சிதம்பரமூர்த்தி, பொள்ளாச்சி


பதில்: நல்ல கேள்வி. வெகுநாட்களாக எனக்கும் இந்த பிரச்சினை இருந்து வருகையில் ஒரு மாணவர் எனக்கு இதற்கான வழி சொன்னார். வழியையும் மாணவரையும் இன்னும் நினைவு வைத்திருக்கிறேன். இங்கு புல்லட் அல்லது நம்பர் ஆகிய இரண்டில் ஒன்றை அட்ஜஸ்ட் செய்வ தற்கான வழியைக் கண்டறிய வேண்டும்.

எனவே புல்லட் அண்ட் நம்பரிங் என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே Format மெனு சென்று அங்கு Bullets and Numbering என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் நீங்கள் எதனைத் திருத்தி அமைக்க இருக்கிறீர் களோ அந்த பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.

இதில் புல்லட்டட், நம்பர்டு என்ற இரண்டு பிரிவுகள் இருக்கும். எடுத்துக் காட்டுக்கு புல்லட்டட் என்ற பிரிவைத் தேர்ந்தெடுக் கவும். வரிசை யாகப் பல புல்லட்கள் வகை கள் இருக்கும். இவற்றிற்குக் கீழாக சைஸ், கலர், % ஆப் டெக்ஸ்ட் என்று இருக்கும்.

இதில் சைஸ் என்பதை நமக்கு ஏற்கனவே இருக்கும் சைஸி னை அதிகரிக்க வேண்டுமா அல்லது குறைக்க வேண்டுமா என்பதைப் பொறுத்து மாற்றவும். இதனை 25 முதல் 400 வரை வைக்கலாம் என்று எண்ணுகிறேன். மாற்றியபின் ஓகே கிளிக் செய்து வெளியே செல்லவும்.

இனி மீண்டும் டெக்ஸ்ட் மற்றும் புல்லட் அல்லது நம்பர் மற்றும் டெக்ஸ்ட் வைத்துப் பார்க்கவும். அளவு சரியாக இருந்தால் விட்டு விடவும். கூடவோ குறைவாக வோ இருந்தால், மீண்டும் அதற்கேற்ற வகையில் மாற்றவும்.


கேள்வி: என் நண்பரின் கம்ப்யூட்டரில் வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் டாகுமெண்ட்டைச் சுற்றி அதன் மார்ஜின் அளவில் கோடு போட்டு கட்டம் தெரிகிறது. ஆனால் என் கம்ப்யூட்டரில் இல்லை. எம்.எஸ்.ஆபீஸ் இன்ஸ்டலேஷனில் பிரச்சினை இருக்குமா? எப்படி நிவர்த்தி செய்யலாம்?

–கே.எஸ். மஹாலஷ்மி, சோழவந்தான்


பதில்: இன்ஸ்டலேஷனில் பிரச்சினை இல்லை. செட்டிங்ஸ் அதற்கேற்றபடி அமைக்கவில்லை. கீழே தரப்பட்டுள்ள வகையில் செட் செய்திடவும்.

டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின் View திறந்து Print Layout பிரிவில் கிளிக் செய்திடுங்கள். பின் மெனுவில் Tools பிரிவில் உள்ள Options மீது கிளிக் செய்து வரும் விண்டோவைக் காணவும். அதில் View என்ற டேப்பின் கீழாக Print and Web Layout options என்று இருக்கும் இடத்தில் Text Boundaries என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுத்து வெளியேறவும்.

இனி டாக்கு மெண்ட் சுற்றிலும் காம்ப வுண்ட் சுவர் எழுப்பியது போல மார்ஜின் கோடுகளுடன் காட்சி அளிக்கும்.


கேள்வி: பைல் வியூ பார்க்கையில் தம்ப் நெயில் படங்கள் ஏன் சிறிதாகவே அமைகின்றன. பாண்ட் செட்டிங் போல எப்போதும் அல்லது வேண்டுகின்ற போது பெரிதான அளவில் அமைக்க முடியுமா?

–கே. ஷ்யாம் சுந்தர், கோயம்புத்தூர்


பதில்:தம்ப் நெயில் படங்கள் சிஸ்டத்தில் அமைத்துள்ளபடி நமக்குக் கிடைக்கின்றன. இவற்றை செட்டிங்ஸ் மூலம் மாற்ற முடியாது. நாம் விரும்பும்போது மட்டும் பெரிய அளவில் பெறவும் முடியாது. இதற்கு ஒரு சுற்று வழி உண்டு.


மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் TweakUI என்னும் யுடிலிட்டி சாப்ட்வேர் தொகுப்பினை www.microsoft.com/windowsxp/ downloads/powertoys/xppowertoys .mspx என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து கொண்டு கம்ப்யூட்டரில் பதிக்கவும். பின்னர் இத்தொகுப்பை இயக்கவும்.

அதன் பின் விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்கி வியூ என்பதில் தம்ப்நெயில் என்பதை கிளிக் செய்தால் இங்கு இதன் அளவை மாற்றும் வசதி கிடைக்கும். 32 முதல் 256 பிக்ஸெல் வரை வேண்டும் அளவில் இதனை அமைக்கலாம்.

முதலில் எந்த அளவு எப்படி இருக்கும் என்பதனை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கையில் பட அளவு 96 பிக்ஸெல் அளவில் இருக்கும். 256 x 256 என்பது இதன் ஏழு மடங்கு பெரிதாகும். எனவே உங்களுடைய விருப்பத்திற்கேற்ற வகையில் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

நன்றி.தினமலர் 11/10/09

நூர்
20-10-2009, 06:48 PM
அக்டோபர் 19,2009

கேள்வி: என்னிடம் இன்டெல் கோர் 2 டூயோ சிப் கொண்ட பெர்சனல் கம்ப்யூட்டர் வைத்திருக் கிறேன். ராம் மெமரி 2 ஜிபி. ஹார்ட் டிஸ்க் 320 ஜிபி. இந்த ஹார்ட் டிஸ்க்கில் பேட் செக்டார் கள் சில உருவாகி உள்ளதாக ஹார்ட் டிஸ்க்கினை டிஸ்க் செக் செய்திடுகையில் தெரிந்தது.

இது என்னுடைய ஹார்ட் டிஸ்க்கிற்கு கெடுதல் விளைவிக்குமா? பேட் செக்டார் என்பது சரியாக எதனைக் குறிக்கிறது? எதனால் இது ஏற்படுகிறது?


–கி.மா. கல்யாணராமன், கோயம்புத்தூர்

பதில்: பேட் செக்டார் என்பது ஹார்ட் டிஸ்க்கில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ள மிகச் சிறிய இடம். அன்றாட கம்ப்யூட்டர் செயல் பாடுகளில் இதனால் எந்தவிதப் பிரச்சினை யும் ஏற்படாது.

நீங்கள் டிஸ்க்கை ஸ்கேன் செய்திடுகை யில் அந்த புரோ கிராம் இது போன்ற பாதிக்கப் பட்ட இடங்களை பேட் செக்டார் எனக் குறியிட்டு, மேற்கொண்டு அந்த இடத்தில் டேட்டா எதுவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினால் எழுதப்படாத வகையில் செய்கிறது.


எதனால் ஏற்படுகிறது? இந்த கேள்விக்குப் பல பதில்களைக் கூறலாம். ஹார்ட் டிஸ்க் தயாரிக்கப் படுகையிலேயே இது ஏற்பட்டிருக் கலாம்; அடிக்கடி பயன்படுத்து வதனால் உருவாகி இருக்கலாம்; அல்லது ஹார்ட் டிஸ்க் இயங்கிக் கொண்டிருக்கையில் திடீரென மின்சக்தி நிறுத்தப்பட்டதனால் ஏற்பட்டிருக்கலாம்.


இதனைச் சரி செய்திட முடியுமா? முயற்சிக்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஹார்ட் டிரைவில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும்.

வரும் விண்டோவில் Tools என்னும் டேப்பில் கிளிக் செய்தால் அதில் உள்ள மூன்று பிரிவுகளில் முதல் பிரிவில் Error Checking என்ற பிரிவில் உள்ள Check Now பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் சிறிய விண்டோவில் இரண்டாவதாக உள்ள Scan for and Attempt Recovery of Bad Sectors என்ற பிரிவில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.


கேள்வி: நான் யாஹுவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளேன். இப்போது அவ்வள வாகப் பயன்படுத்து வது இல்லை. மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.

ஆனால் யாஹூவில் என்னுடைய அக்கவுண்ட்டைத் திறந்து பார்த்தால், நிறைய தேவையற்ற, வேண்டாத மெயில்கள் வந்து இன்பாக்ஸை நிறைக்கின்றன. ஸ்பேம் பில்டரில் சில முகவரிகள் குறித்து கம்ப்ளைண்ட் ஏற்படுத் தினாலும், தேவையற்ற மெயில் கள் வருவது குறையவில்லை.

குறிப்பாக லாட்டரி அடித்துள் ளது, நைஜீரியாவில் பேங்க்கில் உள்ள பணம் என்பது போன்ற மெயில்கள் நிறைய வருகின்றன. என் கேள்வி எல்லாம், பாஸ்வேர்டை மாற்று வது போல யூசர் ஐடியையும் மாற்ற முடியுமா? இந்த வகை யில் பெஸ்ட் இமெயில் தருபவர் யார்? இலவசமாகத்தான்.

–நீ.அண்ணாத்துரை, சங்கரன்கோவில்


பதில்: தனி நபர்களை அடையாளம் காண்ப தற்காக யூசர் ஐ.டி. தரப்படுகிறது. இதுவரை இதனை மாற்றச் சொல்லி யாரும் கேட்கவில்லை. நீங்கள் வேண்டு மானால் இன்னொரு பெயரில் புதிய அக்கவுண்ட் ஏற்படுத்திக் கொள்ளுங்களேன்.

ஆனால் ஏற்கனவே ஏற்படுத்தியது வீணாகிப் போய்விடும். பெஸ்ட் இமெயில் (இலவ சமாகத்தான்) தருபவர் என எந்த இமெயில் சர்வீஸ் புரவைடரையும் கூற முடியாது. இதுவரை மிகவும் பாப்பு லரான இலவச இமெயில் புரவைடர் ஜிமெயில்தான்.

நமக்கு வரும் இமெயில்களைக் கொண்டு வைக்க மிகப் பெரிய அளவில் பாக்ஸ்களைத் தருகின்றனர். மேலும் நீங்கள் பயன்படுத்த, பயன்படுத்த அதன் அளவு உயர்ந்து கொண் டே போகும்.

இப்போது ஜிமெயில்களை உங்கள் கம்ப்யூட்டருக்கே கொண்டு வரும் பி.ஓ.பி3 (POP3) வசதியும் தரப்படுகிறது. மேலும் ஸ்பேம் மெயில் களை பில்டர் செய்திடும், நல்ல பில்டர் ஒன்று ஜிமெயில் தளத்தில் தரப்பட்டுள்ளது.


கேள்வி: என் கம்ப்யூட்டர் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்கு கிறது. கம்ப்யூட்டரை ஆன் செய்த வுடன் யாஹூ மெசஞ்சர் கட்டம் எழுந்து வருகிறது. இதனை ஒவ்வொரு முறையும் குளோஸ் செய்த பின்னரே, வேறு புரோகிராம்களை இயக்குகிறேன். இது எதனால் ஏற்படுகிறது? வைரஸ் எதுவும் வந்திருக்குமோ?

– வி.சம்பத் குமார், கோயம்புத்தூர்


பதில்: யாஹூ மெசஞ்சர் இன்ஸ்டால் செய்கையில், அந்த தொகுப்பை சிஸ்டம் இயங்கும் போதே இயக்குவா? என்ற கேள்விக்கு யெஸ் என்று பதில் கொடுத்திருப் பீர்கள். அது ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் பட்டியலில் சேர்ந்தி ருக்கும்.

ஸ்டார்ட் அப்பட்டியலில் இருக்கும் அனைத்து புரோகிராம்களும், விண்டோஸ் இயக்கம் தொடங்கும்போது தொடங்கப் படும். எனவே தான் நீங்கள் கம்ப்யூட்டரைத் தொடங்கு கையில் யாஹு மெசஞ்சர் கட்டம் கிடைக்கிறது.

இதனை நீக்க, ஸ்டார்ட் கீ அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில் ரன் பட்டன் அழுத்தவும். இதில் msconfig என டைப் செய்தால், ஒரு விண்டோ கிடைக்கும். இதில் ஸ்டார்ட் அப் என்று ஒரு டேப் இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் கிடைக்கும் சிறிய விண் டோவில், கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்போது இயக்கப்படும் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும்.

இதில் வரிசையாகச் சென்று யாஹு மெசஞ்சரைக் கண்டுபிடித்து, அதன் தொடக் கத்தில் உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

அதன்பின் அப்ளை கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். மீண்டும் விண்டோஸ் ரீஸ்டார்ட் செய்தால் தான் இது இயக்கத்திற்கு வரும். அல்லது அடுத்த முறை ஸ்டார்ட் செய்யும் போது இயங்கும். அதனால் யாஹு மெசஞ்சர் கட்டம் கிடைக்காது.

இந்த மாற்றங்களை மேற்கொள்கையில், நீங்கள் சில மாற்றங்களை மேற்கொண்டுள் ளீர்கள்; இதனால் வழக்கமாக இயங்கும் நிலையில் பிரச்சினை கிடைக்கலாம் என்றெல்லாம் எச்சரிக்கை செய்தி கிடைக்கும். அதனை அலட்சியப்படுத்தி ஓகே கிளிக் செய்திடவும். ஆனால் வேறு எந்தக் கட்டத்திலும் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட வேண்டாம்.


கேள்வி: அண்மையில் என்னுடைய கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் இடம் இல்லை என அடிக்கடி செய்தி வந்ததால், புதிய ஹார்ட் டிஸ்க் ஒன்றை நிறுவினேன். இப்போது எப்படி புரோகிராம்களை, அடோப் பேஜ் மேக்கர், அக்ரோபட் ரீடர், ஆபீஸ் ஆகியவற்றை எப்படி புதிய ஹார்ட் டிரைவிற்கு மாற்றுவது?

–டாக்டர் மா. தையல்நாயகி, திண்டுக்கல்

பதில்: புதிய ஹார்ட் டிரைவ் கூடுதலாக வாங்கி நல்ல வேலை செய்திருக்கிறீர்கள். இனி உங்கள் கேள்விகளைப் பார்ப்போம். புரோகிராம்களை அப்படியே மாற்ற முடியாது. முதலில் உங்கள் பைல்களை மாற்றுங்கள். குறிப்பாக WAV, BMP, JPEG, MP3 ஆகிய பைல்கள் அதிக அளவு கொண்டவை.

இவற்றை அப்படியே செலக்ட் செய்து புதிய டிஸ்க்கில் உள்ள போல்டர் அல்லது டைரக்டரிக்கு மாற்றவும். இரண்டு விண்டோக் களில் இவற்றைத் திறந்து அப்படியே கூடுமானவரை மொத்தமாக செலக்ட் செய்து மவுஸின் கர்சரை அழுத்தியவாறு இழுத்து விடவும்.

இவ்வாறு அனைத்தையும் மாற்றிய பின் உங்களுக்குப் பழைய ஹார்ட் டிஸ்க் இடம் நிறைய கிடைக்கும். மேலும் திடீரென பழைய ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆனால் இந்த பைல்கள் எல்லாம் பாதுகாக்கப்படும். இதற்குப் பிறகும் புதிய ஹார்ட் டிஸ்க்குகளில் புரோகிராம்களை நிறுவ வேண்டும் என எண்ணி னால், பழைய டிஸ்க்கிலிருந்து அவற்றை அன் இன்ஸ்டால் செய்து,பின் புதிய டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்திடவும்.


கேள்வி:என்னுடைய சாம்சங் செல்போனுக்குரிய பாஸ்வேர்டினை மறந்துவிட்டேன். இதை எப்படி கண்டுபிடிப்பது?

–டாக்டர் ஆர்.கோபாலகிருஷ்ணன், சுல்தான்பேட்டை


பதில்: எந்த வகை பாஸ்வேர்ட், எதற்காக அமைத்தது என்று நீங்கள் விளக்கம் தரவில்லை. செட்டிங்ஸ் மெனு கிடைக்க முயன்றால், டிபால்ட் செட்டிங்ஸ் அமைத்து இயக்க முடியுமா என்று பார்க்கவும். இல்லையேல் இதற்கான வாடிக்கையாளர் மையம் சென்று சாப்ட்வேர் மறுபடியும் இன்ஸ்டால் செய்திடவும்.


கேள்வி: இடோரா இமெயில் கிளையண்ட் பயன்படுத்தி வந்த நான், தற்போது தண்டர்பேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு வரும் இமெயில்களை அனுப்பியவர் களின் பெயர்களை இதன் அட்ரஸ் புக்கில் சேர்க்க வேண்டும். மீண்டும் டைப் செய்திடாமலேயே சேர்க்க வேண்டும். அதற்கான வழி என்ன?

–பெ.பாஸ்கரன், மதுரை

பதில்: மொஸில்லாவின் பயர் பாக்ஸிற்கு மாறியதால் தண்டர் பேர்டுக்கும் மாறிய தாக, உங்களின் நீண்ட கடிதத் தில் குறிப்பிட்டுள் ளீர்கள். எதனால் இந்த முடிவெடுத்துள்ளீர்கள் என இன்னொரு கடிதத்தில் கூறவும். சரி, உங்கள் பிரச்சினைக்கு வருவோம்.

தண்டர்பேர்ட் ஒரு சிறந்த இமெயில் கிளையண்ட் புரோகிராம் என்பதில் சந்தேகம் இல்லை. இதில் அட்ரஸ் புக்கினைக் கையாள்வது மிக மிக எளிது. ஆனால் பெயர் தவிர்த்து மற்ற தகவல்களை நீங்களாகத்தான் டைப் செய்திட வேண்டும்.


நீங்கள் யாருடைய இமெயில் முகவரியை அட்ரஸ் புக்கில் சேர்க்க விரும்பு கிறீர்களோ அந்த இமெயில் மெசேஜை முதலில் திறந்து கொள்ளவும். பின் From என்பதில் உள்ள முகவரியில் கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் சிறிய மெனுவில் Add to Address Book என்ற பிரிவில் கிளிக் செய்தால் விஸார்ட் ஒன்று கிடைக்கும்.

இதில் அவரின் இமெயில் முகவரி தரப்பட்டி ருக்கும். மற்ற தகவல்களான அவரின் பெயர், செல்லப் பெயர், எப்படி திரையில் காட்டப்பட வேண்டும், அவரின் போன் எண் போன்ற உங்களிடம் இருக்கும் தகவல்களைத் தரவும். அனைத்து கட்டங்களும் நிரப்பப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பின் ஓகே கிளிக் செய்தால் இந்த முகவரி அட்ரஸ் புக்கில் நிரப்பப்பட்டுவிடும்.


கேள்வி: விரைவில் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் 3ஜி சேவை மொபைல் போனில் வர இருக்கிறது என்கிறார்கள். ஆனால் 3ஜி போன் விலை யானை விலையாக உள்ளது. புதிய மொபைல் வாங்க இருக்கும் நான் இது போன்ற போனையே வாங்க இருக்கிறேன். பொறுத்துப் பார்த்து வாங்கலமா? விலை குறையுமா?

–ஆர். லஷ்மி முரளிதரன், சென்னை


பதில்: அருமையான கேள்வி. பல வாசகர்கள் மட்டுமல்ல, என் மனதிலும் இந்த எண்ண ஓட்டம் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இன்னும் இரண்டு மாதத்தில் 3ஜி சுனாமி நம் மொபைல் மார்க்கட்டைச் சூழ்ந்து கொள்ளப்போகிறது.

இப்போதே விநாடிக்கு ஒரு பைசா என்ற ஒரு புயல் அனைத்து நிறுவனங் களையும் ஆட்டிப் படைத்துக் கொண்டு, வாடிக்கை யாளர்களுக்குத் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது.


இன்னும் இரண்டொரு மாதங்களில் 3ஜி நிச்சயம் வர இருக்கிறது. ஒரு புறம் 3ஜி வசதி தரும் மொபைல் இணைப்பு சேவை நிறுவனங்கள் மக்களைக் கவர பல திட்டங்களுடன் போட்டியிடப் போகிறார்கள்.

மொபைல் போன் நிறுவனங்களும் 3ஜி தரக்கூடிய பல மொபைல் மாடல்களை அறிமுகப்படுத்து வார்கள். நிச்சயம் போட்டியில் இவற்றின் விலை தொடர்ந்து குறையும். எனவே நீங்கள் வாங்கப் போவது உங்களுக்கான இரண்டாவது போனாக இருக்கும் பட்சத்தில் இன்னும் நான்கு மாதங்கள் பொறுத்திருந்து பின் வாங்குவதே சிறந்தது.


கேள்வி: என்னுடைய ஹார்ட் டிஸ்க்கில் இடம் மிகவும் குறைவாக இருப்ப தாகச் செய்தி வருகிறது. இடம் குறைவாக இருப்பதனை எப்படி அறிவது?

–எஸ். நீதிராஜன், தேனி


பதில்: மிகவும் சுலபம். ஸ்டார்ட் அழுத்தி மை கம்ப்யூட்டர் அழுத்துங்கள். அல்லது டெஸ்க் டாப் விண்டோவில், மை கம்ப்யூட்டர் ஐகான் மீது டபுள் கிளிக் செய்திடவும்.

உடன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ் களுக்கான ஐகான்கள் கிடைக் கும். இதில் நீங்கள் எந்த டிரைவிற்கு செக் செய்திட விரும்புகிறீர்களோ, அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். அப்போது மெனு ஒன்று கிடைக்கும்.

இந்த மெனுவில் இறுதியாகக் கிடைக்கும் ப்ராபர்ட் டீஸ் பிரிவினைத் தேர்ந்தெடு த்தால் உடன் டிஸ்க் ஸ்பேஸ் குறித்து வட்ட வடிவில் ஒரு சார்ட் கிடைக்கும். இதில் ஏற்கனவே பயன்படுத்திய அளவு, மற்றும் இன்னும் பயன்படுத்தக் கூடிய அளவு நீலம் மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும்.

படத்திற்கும் மேலாக அளவுகளில் தரப்பட்டிருக்கும். அதற்கும் மேலாக அந்த டிரைவில் என்ன வகை பைல்கள் உள்ளன என்று காட்டப்பட்டிருக்கும். டிரைவின் மொத்த கொள்ளளவும் தரப்பட்டிருக்கும். இந்த விண்டோவில் மற்ற பிரிவுகளுக் கான டேப்களும் தரப்பட்டி ருக்கும்.

டிரைவில் உள்ள பைல்களைச் சுருக்கு வது, டிபிராக்மெண்ட் செய்வது போன்ற செயல்க ளுக்கான டேப்கள் இருக்கும். இவற்றைக் கிளிக் செய்து பார்ப்பதோடு நின்று விடுங்கள். ஏதாவது எசகு பிசகாக செட்டிங்ஸ் மாற்றி விட்டால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.


கேள்வி: நோட்பேட் புரோகி ராமில் சில பைல்களை உருவாக் கினேன். இதனை பிரிண்ட் செய்கையில் மார்ஜின் மற்றும் பிறவற்றை எப்படி செட் செய்திடலாம்?

–டி. சிவநேசன், பழநி

பதில்: நோட்பேட் தொகுப்பு உங்கள் பிரிண்ட் வேலையில் சில மாற்றங்களை ஏற்படுத்த உங்களுக்கு உதவுகிறது.

நீங்கள் கேட்டபடி மார்ஜின் மற்றும் ஹெடர், புட்டர்களையும் மாற்றி அமைக்க உதவுகிறது. நோட்பேடினைத் திறந்து பைல், பேஜ் செட் அப் செல்லவும். இங்கு பேப்பர் அளவு மற்றும் மார்ஜின் அளவை செட் செய்திடலாம். இவை நமக்கு விளங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


ஆனால் அதற்குக் கீழாகப் பார்க்கையில் ஹெடரிலும் புட்டரிலும் "&f" / "Page &p" என அமைக்கப்பட்டிருக்கிறதே அது என்ன என்று நீங்கள் வியக்கலாம். முதலாவதாக ஹெடரில் தரப்பட்டி ருக்கும் குறியீடு, பைல் பெயரை டைப் செய்திட வழி தருகிறது. அடுத்ததாக புட்டரில் தரப்பட்டிருக்கும் குறியீடு பக்க எண்ணை பிரிண்ட் செய்திடத் தரப்பட்டுள்ளது.


உங்களுக்குச் சரியான குறியீடு தெரியும் என்றால் இவற்றையும் மாற்றலாம்; அல்லது இணைக்கலாம். "&d" – அன்றைய தேதியை அச்சிடும். "&t" – அப்போதைய நேரத்தை அச்சிடும். நேரத்தைக் கம்ப்யூட்டரிலிருந்து பெற்றுக் கொள்ளும். "&&" ஒரு அடை யாளத்தை அச்சிடும்.

இந்த ஹெடர் மற்றும் புட்டரில் அச்சடிப்பதை இடது, வலது அல்லது நடுவில் என அலைன் செய்திட வேண்டுமா? இதோ அதற்கான குறியீடுகள். இடதுபுறம் என்றால் "&l" . நடுவில் என்றால் "&c" வலது புறம் என்றால் "&r" எடுத்துக்காட்டாக &l &d &r &p எனக் கொடுத்தால் தேதி இடதுபக்கமும்,

பக்க எண் வலது பக்கமும் ஒதுக்கி அச்சடிக்கப்படும். இந்த ஹெடரில் உங்கள் சொற்களையும் டைப் செய்திடலாம்.
இவ்வளவு விஷயங்கள் நோட்பேடில் இருக்கிறது என்று இதுவரை தெரிய வில்லையே என்று நீங்கள் ஆச்சரியப் படுவது எனக்குப் புரிகிறது.


கேள்வி: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த அப்ளிகேஷனைத் திறந்தாலும் அதில் வலது பக்கம் ஒரு கட்டம் வருகிறது. இதில் Getting Started எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இதனை மூடவேண்டியுள்ளது. இது எதற்கு வருகிறது? ஏன் இந்த ஏற்பாடு என்று புரியவில்லை. விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

–கா. நமச்சிவாயம், பல்லடம்


பதில்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளின் அமைப்பி லேயே அது போல அமைக்கிறது. இதற்கு Startup Task Pane என்று பெயர். இது ஒரு வழிக்கு நல்லதுதான். இதன் மூலம் நமக்குத் தேவையான உதவி களைப் பெறலாம்.

நாம் முன்பு திறந்து பார்த்த பைல்களின் பட்டியல் இருக்கும். அதில் நமக்கு வேண்டிய பைல் மீது கிளிக் செய்து பைலைத் திறக்கலாம். இருப்பினும் நீங்கள் அதனை விரும்பாததால் அந்த Task Pane கட்டம் இல்லாமல் திறக்க ஒரு வழி சொல்கிறேன். வேர்டைத் திறந்து "Tools" பின் "Options" செல்லவும்.

கிடைக்கின்ற டேப்கள் நிறைந்த விண்டோவில் முதலாக உள்ள View என்னும் டேப்பைத் தேர்ந்தெடுத்து அதில் முதலாவதாக உள்ள Show என்பதன் கீழ் பார்க்கவும். இதிலும் முதலாவதாக Startup Task Pane என்று இருக்கும். இதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் வேர்டைத் திறக்கையில் வலது பக்கம் டாஸ்க் பேன் வராது. முழு பக்கமும் உங்கள் பயன்பாட்டிற்கே கிடைக்கும்.

நன்றி.தினமலர்.

நூர்
20-10-2009, 06:48 PM
கேள்வி: யு–ட்யூப் வீடியோவில் பார்மட் மாற்ற நீங்கள் காட்டிய கன்வெர்ட் ட்யூப் புரோகிராம், வேலை செய்யவில்லை. அதாவது எப்.எல்.வி. பார்மட் வீடியோ வினை ஏ.வி.ஐ. பார்மட்டுக்கு மாற்ற முடியவில்லை. இவ்வாறு மாற்றி அதனை டிவிடி அல்லது விசிடியாக பதிய வேண்டும். இதற்கான புரோகிராம் ஒன்றைக் கூறவும்.


பேரா. எம்.கே. நடராஜன்,

தர்பாரி மூத்தோர் இல்லம், கோவை


பதில்: யு–ட்யூப் வீடியோக் களை டவுண்லோட் செய்வதற் கும், டவுண்லோட் செய்த வற்றின் பார்மட்களை மாற்று வதற்கும் பல தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் உள்ளன. சில குறிப்பிட்ட பார்மட்டுகளை மட்டும் மாற்றும் தன்மை கொண்டவையாக வடிவமைக் கப்பட்டிருக்கலாம்.

இருப்பினும் உங்கள் தேவைக்குக் http://www.nchsoftware. com/prism/prismsetup.exe என்ற முகவரி யில் கிடைக்கும் பிரிசம் வீடியோ கன்வெர்டர் சாப்ட்வேர் என்ற புரோகிராம் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இது ஏ.வி.ஐ., எம்பி4, டபிள்யூ எம் வி, எம் ஓ வி, எம்பெக், எப்.எல்.வி. மற்றும் பல பார்மட்களிடையே மாற்றங்களைத் தருகிறது. இதன் இன்னொரு சிறப்பு என்ன வென்றால் நூற்றுக் கணக்கான பைல்களை மொத்தமாக பேட்ச் வீடியோ கன்வெர்டராக மாற்றுகிறது. மேலும் எந்த அளவில் பைல் வேண்டும் என்பதனை இதில் வரையறை செய்து கொள்ளலாம்.

பார்மட் மாற்றும் முன் சாம்பிள் பைலைப் பார்த்துப் பின் தேர்ந்தெடுக்கலாம்.

வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த முடியாத தனிநபர் பதிப்பு இலவசமாக இந்த தளத்தில் கிடைக்கிறது. மேலும் மேக் கம்ப்யூட்டருக்கான பதிப்பும் கிடைக்கிறது.

இன்னொரு புரோகிராம் உங்கள் தேவைக்கு மட்டும் என்றபடி கிடைக்கிறது. FLV to AVI Converter என்பது இதன் பெயர். http://www.download3000.com/download_18966 .html என்ற தளத்தில் இதனைப் பெறலாம்.

இந்த புரோகிராம் புதியதாக வந்துள்ள மேம்பட்ட ஒரு பிளாஷ் புரோகிராம் டூல். இது பிளாஷ் வீடியோ () மற்றும் அடோப் பிளாஷ் பைல்களை குறிப்பிட்ட கிராபிக் பார்மட் களுக்கு மாற்றுகிறது.


கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் நிறைய உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறோம். செய்திகள் அனுப்பும் வேலையில் இருப்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டாகுமெண்ட்டில் உள்ள சொற்கள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் எங்களுக்கும். வேர்டில் இதற்காக வேர்ட் கவுண்ட் வசதியைப் பயன்படுத்துகிறோம்.

சில வேளைகளில், டாகுமெண்ட் இருந்தும் வேர்ட் 0 எனக் கிடைக்கிறது. இந்த தவறு ஏன் நேர்கிறது என்று தெரியவில்லை. எப்படி இதனைச் சரி செய்திடலாம்?

–எம். ஸ்ரீநிவாசன், தாம்பரம்


பதில்: கம்ப்யூட்டரில் சில வேளைகளில் மட்டுமே தவறுகள் ஏற்படுகையில், அந்த தவறு நேர்வதற்கு முன் என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்பது பொதுவான தேவை.

அநேகமாக இந்த டாகுமெண்ட்டுக்கான சொல் கவுண்ட் கட்டளை கொடுக்கும் முன் நீங்கள் ஏதாவது ஒரு படம், கிராபிக்ஸ் செலக்ட் செய்திருக்கலாம். வேர்ட் கவுண்ட் செயல்பாடு எந்த டாகுமெண்ட்டும் செலக்ட் ஆகாத போது, ஏற்கனவே செலக்ட் செய்யப்பட்டு கிளிப் போர்டில் உள்ளதை எண்ணிப் பார்த்துச் சொல்லும்.

எனவே கர்சரை டாகுமெண்ட்டின் உள்ளாக வைத்து மீண்டும் வேர்ட் கவுண்ட் கட்டளை கொடுக்கவும்.


கேள்வி: என்னிடம் உள்ள கம்ப்யூட்டருடன் இன்டர்நெட் இணைப்பு இல்லாததால், எங்கள் ஊரில் இன்டர்நெட் இணைப்பு இன்னும் தரப்படாததால், ஆண்ட்டி வைரஸ் பேக்கேஜ் களை அப்டேட் செய்திட முடி வதில்லை. எனவே வைரஸ்கள் கம்ப்யூட்டரில் உள்ள எந்த வகை பைல்களைத் தாக்க முயற்சிக்கும் என்று சொன்னால் நான் கவனமாக இருப்பேன்.

–எஸ். மூர்த்தி, டி.கல்லுப்பட்டி


பதில்: உங்கள் ஊரில் நிச்சயம் இன்டர்நெட் வந்திருக்க வேண்டு மே. இல்லை என்றா லும் வயர்லெஸ் இன்டர்நெட் இணை ப்பிற்கு முயற்சி செய்தி டுங்கள். மேலும் இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால்,

வைரஸ்கள் வருவதில் 50% வாய்ப்புகள் குறைந்துவிடும். மற்றபடி நீங்கள் பயன்படுத்தும் பிளாப்பி டிஸ்க் மற்றும் சிடிக்கள் வழியாக வைரஸ் வரலாம். இருப்பினும் உங்கள் கேள்வி பொதுவான தன்மையையும் கொண்டுள் ளதால் இதோ பதில்.


வைரஸ்கள் பொதுவாக ஒரு பைலை இயக்கும் எக்ஸிகியூட் டபிள் கோட் என்பதனை எளிதாகக் கைப்பற்றி சேதத்தை ஏற்படுத்தும். புரோகிராம் பைல்கள் என்பதை மட்டுமே கைப்பற்றும் என்பது தவறு.

எடுத்துக் காட்டாக பிளாப்பி டிஸ்க்கில் உள்ள பூட் செக்டாரை எளிதில் கைப்பற்றி அதனைச் செயலிழக்க வைக்கும்.

அல்லது கம்ப்யூட்டர் அதனை இயக்குகை யில் கம்ப்யூட்டருக்குள் சென்று தாக்கும். குறிப்பாக ஹார்ட் டிஸ்க்கிலும் சிஸ்டம் ஏரியாவில் உள்ள எக்ஸிகியூட்டபிள் செக்டா ரைப் பாதிக்கும்.


இன்னொரு வைரஸ் டைப் ஒன்று பொதுவாக எங்கும் பார்க்கலாம். இவை மேக்ரோ வைரஸ் என அழைக்கப் படுகிறது. வேர்ட் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட் புரோகிராம்கள் மேக்ரோக்களை அதிகம் பயன்படுத்துவதால் இந்த வகை வைரஸ்கள் திருட்டுத்தனமாக இந்த புரோகிராம்களுக்குள் நுழைந்து கம்ப்யூட்டரின் இயக்கத்தைக் கெடுக்கும் வேலைகளில் இறங்கும்.

மேலும் ஜாவா ஸ்க்ரிப்ட் அதிகம் பயன்படுத்தும் எச்.டி.எம். எல்.பைல்களிலும் (ஒரு இயக்கத்தைத் தொடங்கி இயக்கும்) எக்ஸிகியூடபிள் கோட் இருப் பதால் அதனை யும் வைரஸ்கள் எளிதாகக் கைப்பற்றி செயல் படும்.

ஆனால் இவற்றை எப்படி ஒதுக்கி வைக்க முடியும். எனவே வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பு வழிகளை எப்படி யாவது அப்டேட் செய்திடப் பாருங்கள்.

உங்கள் ஊர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் என்னும் ஊரில் பொறியியல் பல்கலைக் கழகம் இயங்குகிறதே. அங்கிருந்து நிறைய மாணவர்கள் நம் இதழுக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறார்கள். அவர்களைச் சந்தித்து இன்டர்நெட் இணை ப்பு குறித்து விசாரிக்கவும்.


கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். இதில் சிஸ்டம் ஷட் டவுண் செய்திடுகையில் கிடைக்கும் விண்டோவில் எனக்கு Standby, Turn Off, Restart மட்டுமே கிடைக்கிறது. ஹைபர் னேட் கிடைக்க வில்லை. இதனை எப்படிப் பெறுவது?

–ச. தம்பிராஜ், பொள்ளாச்சி


பதில்: இல்லை; அது உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. ஆனால் மறைந்து இருக்கிறது. ஸ்டார்ட், டர்ன் ஆப் கம்ப்யூட்டர் கிளிக் செய்தால் கிடைக்கும் விண் டோவில் நீங்கள் குறிப்பிட்ட மூன்றும் கிடைக்கிறதல்லவா?

இப்போது ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு அந்த விண்டோவினைப் பார்க்கவும். இப்போது Standby என்பது Hibernate என மாறி இருக்கும்.
என்ன ஆகலையா? சரி, பரவாயில்லை. உங்கள் கம்ப்யூட்டரில் இன்னும் Hibernate செயல்பாட்டிற்குக் கொண்டு வரவில்லை போல் தெரிகிறது.

அதைக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம். ஸ்டார்ட் அழுத்தி கண்ட் ரோல் பேனல் பெறவும். கேடகிரிவியூவில் ‘Performance and Maintenance’ சென்று பின் ‘Power Options’ ’என்பதனைத் தேர்ந் தெடுக்கவும்.

இதில் Hibernate என்ற டேப்பைத் தேர்ந் தெடுக்கவும். பின் Enable Hibernation என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி ஹைபர் னேஷன் உங்களுக்குக் கிடைக்கும்.


கேள்வி: நான் என்னுடைய போல்டர் லாக்கர் பாஸ்வேர் டினை மறந்துவிட்டேன். இலவச பாஸ்வேர்ட் வியூவர் சாப்ட்வேர் ஒன்று கூறவும். மறந்ததைப் பெற.

–அ.ஷமியுத்தீன், கடலூர்


பதில்: பாஸ்வேர்ட் மறந்தால் ஒன்றும் செய்திட முடியாது. இதற்கான தேர்ட்பார்ட்டி சாப்ட்வேர்கள் எல்லாம் பயன்தரும் என்றும் உறுதி கூற முடியாது. போல்டரை மறந்துவிட வேண்டியதுதான்.

நன்றி.தினமலர்.அக்டோபர் 25,2009

நூர்
03-11-2009, 03:50 AM
கேள்வி: என்னுடைய ஹார்ட் டிஸ்க்கில் இடம் மிகவும் குறைவாக இருப்பதாகச் செய்தி வருகிறது. இடம் குறைவாக இருப்பதனை எப்படி அறிவது?


–எஸ். நீதிராஜன், தேனி

பதில்: மிகவும் சுலபம். ஸ்டார்ட் அழுத்தி மை கம்ப்யூட்டர் அழுத்துங்கள். அல்லது டெஸ்க் டாப் விண்டோவில், மை கம்ப்யூட்டர் ஐகான் மீது டபுள் கிளிக் செய்திடவும். உடன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ்களுக்கான ஐகான்கள் கிடைக்கும்.

இதில் நீங்கள் எந்த டிரைவிற்கு செக் செய்திட விரும்புகிறீர்களோ, அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். அப்போது மெனு ஒன்று கிடைக்கும். இந்த மெனுவில் இறுதியாகக் கிடைக்கும் ப்ராபர்ட்டீஸ் பிரிவினைத் தேர்ந்தெடுத்தால் உடன் டிஸ்க் ஸ்பேஸ் குறித்து வட்ட வடிவில் ஒரு சார்ட் கிடைக்கும்.

இதில் ஏற்கனவே பயன்படுத்திய அளவு, மற்றும் இன்னும் பயன்படுத்தக் கூடிய அளவு நீலம் மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும். படத்திற்கும் மேலாக அளவுகளில் தரப்பட்டிருக்கும். அதற்கும் மேலாக அந்த டிரைவில் என்ன வகை பைல்கள் உள்ளன என்று காட்டப் பட்டிருக்கும்.

டிரைவின் மொத்த கொள்ளளவும் தரப்பட்டிருக்கும். இந்த விண்டோவில் மற்ற பிரிவுகளுக்கான டேப்களும் தரப்பட்டிருக்கும். டிரைவில் உள்ள பைல்களைச் சுருக்குவது, டிபிராக்மெண்ட் செய்வது போன்ற செயல்களுக்கான டேப்கள் இருக்கும்.

இவற்றைக் கிளிக் செய்து பார்ப்பதோடு நின்றுவிடுங்கள். ஏதாவது எசகுபிசகாக செட்டிங்ஸ் மாற்றி விட்டால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.


கேள்வி:என்னுடைய சாம்சங் செல்போனுக்குரிய பாஸ்வேர்டினை மறந்துவிட்டேன். இதை எப்படி கண்டுபிடிப்பது?

–டாக்டர் ஆர்.கோபாலகிருஷ்ணன், சுல்தான்பேட்டை


பதில்: எந்த வகை பாஸ்வேர்ட், எதற்காக அமைத்தது என்று நீங்கள் விளக்கம் தரவில்லை. செட்டிங்ஸ் மெனு கிடைக்க முயன்றால், டிபால்ட் செட்டிங்ஸ் அமைத்து இயக்க முடியுமா என்று பார்க்கவும். இல்லையேல் இதற்கான வாடிக்கையாளர் மையம் சென்று சாப்ட்வேர் மறுபடியும் இன்ஸ்டால் செய்திடவும்.


கேள்வி: நான் ஆப்பரா பிரவுசர் குறித்து அண்மையில் நிறைய தெரிந்து கொண்டேன். இந்த தொகுப்பு மற்றவை போல இலவசமாகக் கிடைக்கிறதா? அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி என்ன?

–செ.ராமலிங்கம், மதுரை

பதில்: நல்ல முயற்சி. இலவசமாகக் கிடைக்கிறது. அண்மைக் காலத்திய பதிப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்துங்கள். இணைய தள முகவரி : http://www.opera.com/ download/


கேள்வி: ஆல்ட் கீ தனியாக எந்த செயல்பாட்டுக்கும் பயன்படாதா? ஒன்றுடன் இணைத்து மட்டும் தான் பயன்படுத்த முடியுமா? ஏன் இதனை ஆல்ட் கீ என அழைக்கிறோம்?

– கா. மணவாளன், சிங்கம்புணரி


பதில்: நல்ல கேள்விகள். இதனை ஆல்ட் (ALT) என அழைப்பதற்குக் காரணம் அது ALTERNATE என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கமாகும். இதன் பொருள் “இரண்டில் ஒன்று” என்பதாகும். இந்த கீயைப் பொதுவாக சில கீகளுடன் இணைந்தே பயன்படுத்துகிறோம். அப்படிப் பயன்படுத்தும் போது இணையும் கீயின் வழக்கமான செயல்பாட்டிற்குப் பதிலாக அந்த புரோகிராமின் தன்மைக்கேற்ப புதிய பயன்பாடு கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக F கீ அழுத்தினால் ஆங்கில எழுத்து F வரும். இதனை ஆல்ட் கீயுடன் இணைந்து அழுத்தினால் வேறு செயல்பாடு கிடைக்கும். சில இடங்களில் ஆல்ட் கீயைத் தனியே அழுத்திச் சில பயன் பாடுகளை மேற்கொள்ள லாம். எடுத்துக் காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 தொகுப்பில் பழைய பைல் மெனு இருப்பதில்லை.

ஆல்ட் கீ அழுத்தினால் இடது மேல் புறத்தில் பழைய மெனு கிடைப்பதனைப் பார்க்கலாம். ஆனால் இது போன்ற தனிச் செயல்பாடுகள் குறைவுதான்.


கேள்வி: வேர்டில் பேக்கப் பைல் என்றால் என்ன? இது எதற்கு பயன்படுகிறது?

–கரு.சின்னசாமி, செங்கல்பட்டு

பதில்: வேர்ட் போன்ற தொகுப்புகளில், டாகுமெண்ட் பைல்களின் பேக்கப் பைல்கள் உருவாகின்றன. நீங்கள் இறுதியாக சேவ் செய்திடுவதற்கு முன் வரை உள்ள பைல், பேக்கப் பைலாக சேவ் செய்து வைக்கப் படுகிறது.

ஏதேனும் ஒரு காரணத்தால் உங்களுடைய ஒரிஜினல் பைல் கெட்டுப் போய் அதனை மீட்க முடியாத போது இந்த பேக்கப் பைலைத் திறந்து தனியாக சேவ் செய்து மீண்டும் பயன்படுத்த முடியும்.


கேள்வி: நான் தீபாவளிக்கு ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கினேன். படங்களை நன்றாக எடுக்க முடிகிறது என்றாலும், சில ஐகான்கள் திரையில் தெரிகின்றன. இவை பலவகையான மோட் எனக் கூறுகின்றனர். இவை என்ன செயல்பாடுகளைக் கொண்டுள்ளன என்று விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

–கே. திருவாசகம், காரைக்குடி


பதில்: டிஜிட்டல் கேமராவில் தோன்றும் ஐகான்களின் இடம் ஒவ்வொரு கேமரா விலும் மாறுபடும் என்றாலும், இவை தெரிவிக்கும் செய்தி ஒன்றுதான். எனவே சுருக்கமாக அவற்றைப் பட்டியலிடுகிறேன்.

ஆட்டோமேடிக் (Automatic):
------------------------------
இது டிஜிட்டல் கேமராக்களில் தானாக செட் செய்யப்பட்டு வருவது. இது Auto எனச் சுருக்கமாக இருக்கலாம். இது தானாகவே கேமராவிற்கான பிளாஷ், போகஸ், எக்ஸ்போஷர் ஆகியவற்றை செட் செய்திடும். சாதாரணமான படங்கள் எடுக்க இதனைப் பின்பற்றினால் போதும். ஏதேனும் ஸ்பெஷல் எபக்ட் தேவை என்றால் மற்றவற்றை நாட வேண்டும்.

குளோஸ் அப் (Close up):
-----------------------
ஏதேனும் ஒரு பொருளை அல்லது நபரை மிகவும் நெருக்கமாகச் சென்று போட்டோ எடுக்க விரும்பினால், இதனைப் பயன்படுத் தலாம். இதனைப் பயன்படுத்துகையில் பிளாஷ் தானாக செட்டிங் அமைத்துக் கொள்ளாது. எனவே அதனை நீங்களே செட் செய்திட வேண்டியதிருக்கும்.


லேண்ட்ஸ்கேப் (Landscape):
---------------------------
மிகத் தொலைவாக ஒரு பொருளை அல்லது நபரை போட்டோ எடுக்க வேண்டும் என்றால் இதனைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். இந்த வகை படங்கள் எடுக்கையில் பிளாஷ் இயக்கப்படாமல் இருப்பது நல்லது. இந்த மோட் சில கேமராக்களில் 8 என்ற எண்ணாலும் காட்டப்படும்.


ஸ்போர்ட் மோட்(Sport mode):
----------------------------
நகரும் உருவங்களை அதிக அளவில் எடுக்கையில் இந்த மோட் உங்களுக்குப் பயன்படும். இந்த மோடைத் தேர்ந்தெடுக்கையில், கேமரா தன் ஷட்டர் ஸ்பீடை மிக வேகமான நிலையில் செட் செய்து கொள்ளும்.


நைட் மோட் (Night Mode):
----------------------------
மிகக் குறைந்த ஒளியில் படங்களை எடுக்கையில் இதனைப் பயன்படுத்தலாம். அல்லது இரவு ஒளியில் பயன்படுத்தலாம். இந்த மோடில் ஷட்டர் ஸ்பீட் மிக மிகக் குறைவாகத் தானாக செட் செய்யப்படும். பிளாஷ் தானாக இயங்கிக் கொள்ளும்.

இதற்கான ஐகான்கள் பொதுவாக ஒவ்வொரு கேமராவிற்கும் மாறுபடும்.
போர்ட்ரெய்ட் மோட் (Portrait Mode): இது பொதுவாக போட்டோ எடுக்கும் நபர்களின் முகங்களைக் குறி வைக்கையில் பயன்படுகிறது.

இதன் மூலம் போட்டோ ஒன்றில் உள்ள அதன் பின்புலம் சிதைவது தடுக்கப்படுகிறது. இவ்வகையில் போட்டோ எடுக்கையில் வழக்கமாக ரெட் ஐ ரிடக்ஷன் என்பது இயக்கப்படும். இல்லையேல் இயக்கிக் கொள்ள வேண்டும்.

வீடியோ மோட் (Video Mode):
--------------------------------
சிறிய அளவிலான வீடியோ படங்களை எடுக்க இந்த மோட் வகையைப் பயன்படுத்தலாம்.

மேனுவல் மோட் (Manual Mode):
----------------------------------
இதனை யும் நாம் அடிக்கடி பயன்படுத்தலாம். உங்கள் டிஜிட்டல் கேமராவின் முழு கண்ட்ரோல், இந்த வகையில் உங்களிடமே இருக்கும். அபர்ச்சர், ஷட்டர் ஸ்பீட் என அனைத்தும் நீங்களே செட் செய்திடலாம்.


கேள்வி: புரோகிராம்களுக்கு ஸ்கின்கள் இங்கு இலவசமாகக் கிடைக்கும்; தோற்றத்தை இதன் மூலம் மாற்றலாம் என்று நான் படித்துள்ளேன். இந்த ஸ்கின் என்பது என்ன? புரோகிராம்களில் இவை என்ன செய்திடும்?

–எஸ்.சுதர்சன ராஜன், பொள்ளாச்சி


பதில்: இங்கு குறிப்பிடப் படும் ஸ்கின்கள் ("Skin") மிருகங்களுடன் சம்பந்தப் பட்டவை அல்ல. ஒரு புரோகிரா மிற்கான யூச ர் இன்டர்பேஸ் என்று சொல்லப் படும் கட்டங் கள் மற்றும் பிறவற்றின் தோற்றங்களுக்கு அழகு தரும் சிறிய கிராபிக்ஸ் பைல்களாகும்.

இவற்றை தீம்ஸ் (Themes) எனவும் அழைப்பார்கள். இவற்றைத் தயாரித்து பல நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன. சில புரோகிராம்களில் இவை இணைந்தே கிடைக்கும். விண் ஆம்ப், ரியல் ஒன், விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற பிரபலமான மீடியா பிளேயர் கள் இந்த ஸ்கின்களை புரோகிராம்களுடன் வழங்கு கின்றன.

நம் விருப்பத்திற் கேற்ப இவற்றை மாற்றிக் கொள்ளலாம். அதாவது புரோகிராமின் தோற்றத்தை மாற்றலாம். பயர்பாக்ஸ், ஆப்பரா மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களும் இந்த ஸ்கின்களைக் கொண்டுள் ளன. மற்ற சாப்ட்வேர் தயாரிப் பவர்களும் இந்த பிரவுசர் களுக்கு ஸ்கின்களைத் தந்து வருகின்றன.

அவ்வப்போது இந்த ஸ்கின்களை மாற்றினால் நமக்கும், இவை ஒரே மாதிரி யான தோற்றம் இல்லாமல் மாற்றத்துடன் காட்சி அளிப்பது சற்று புத்துணர்வாக இருக்கும்.


கேள்வி: டிவிடிக்களில் டிவிடி மைனஸ் ஆர் என்றும், டிவிடி ப்ளஸ் ஆர் என்று சிலவும் உள்ளன. இரண்டிற்கும் விலையும் வேறுபடுகிறது. இதில் எது மிகச் சிறந்தது? ஏன் இந்த வேறுபாடு?

–சி. புஷ்பராணி, மதுராந்தகம்


பதில்: அவ்வளவாக ஒன்றும் வேறுபாடு இல்லை. இதில் டேட்டா எழுதும் விதம் தான் வேறுபடுகிறது. இந்த இரண்டில் டிவிடி மைனஸ் ஆர் என்ப து பழைய பார்மட்.

இப்போது வருகின்ற அனைத்து டிவிடி பிளேயர்களுடன் இயங்கும் வகையில் டிவிடி +ஆர் தயாரிக்கப்படுகிறது. ஆனால் பிளேயர்கள் பொதுவாக இரண்டு வகை டிவிடிக் களையும் இயக்கு கின்றன. இரண்டிலும் எழுதுகின்றன.

நன்றி.தினமலர்.நவம்பர் 01,2009

நூர்
03-11-2009, 03:50 AM
கேள்வி: பட பைல்களை உருவாக்கும்போதும் எடிட் செய்திடும்போதும் அதனை ஏன் ஜேபெக் பார்மட்டில் கொண்டு வர வேண்டும் என்று சொல்கின்றனர். இதன் சிறப்பு என்ன? அந்த பெயர் எதனைக் குறிக்கிறது?


–நா.ஸ்ரீனிவாசன், திருப்பூர்


பதில்: நல்ல கேள்வி. சுருக்கமாகப் பதில் தருகிறேன். Joint Photographic Experts Group என்பதன் சுருக்கம் தான் ஜேபெக் (JPEG) என்பது. ஜேபெக் பைல் என்று ஒன்றைக் குறிப்பிடுகையில் இந்த குரூப் வடிவமைத்த பார்மட்டில் உள்ள பட பைலைக் குறிப்பிடுகின்றோம்.

இவை டிஸ்க் இடத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக சுருக்கப்படுகின்றன. பொதுவாக இவை போட்டோக்களாக இருக்கும். சில வேளைகளில் உருவாக்கப்பட்ட படங்களாகவும் இருக்கும். சாதாரணமாக 250 கேபி அளவில் உள்ள ஒரு பி.எம்.பி. பார்மட்டில் உள்ள பட பைலை,

ஜேபெக் பார்மட்டுக்குக் கொண்டு வருகையில் அது 35 கேபி அளவில் சுருக்கப்பட்டுவிடும். இந்த வேலையில் படம் சார்ந்த தகவல்கள், அதன் தன்மையைக் கெடுக்காத வகையில் இழக்கப்படும்.


பொதுவாக படங்களை எடிட் செய்யக்கூடிய அனைத்து புரோகிராம்களும், ஜெபெக் பார்மட்டினைக் கையாளுவதாலும், இந்த பார்மட்டில் அமையும் பைல்களின் டிஸ்க் ஸ்பேஸ் அளவு மிகவும் குறைவாக இருப்பதாலும்

ஜெபெக் பார்மட்டிலேயே படங்கள் இருக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். படங்களின் தன்மை மிகவும் உயர் சிறப்பான நிலையில் இருக்க வேண்டும் எனில் பி.எம்.பி. போன்ற மற்ற பார்மட்கள் விரும்பப்படுகின்றன.


மேலும் இது குறித்த தகவல்கள் வேண்டும் என்றால் http://www.faqs.org/faqs/jpegfaq/part1/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


கேள்வி: இமெயில் பார்ப்பதற்கு அவுட்லுக் எக்ஸ்பிரஸ் பயன்படுத்துகிறோம். என் வீட்டில் மூன்று பேர் இதனைப் பயன்படுத்துகிறோம்.

அவ்வப்போது இமெயில் கடிதங்களை அழித்தாலும் அவை டிஸ்க்கில் ஸ்பேஸ் எடுத்துக் கொள்ளும். எனவே அவற்றை மொத்தமாக அழிக்க வேண்டும் என்று என் நண்பர்கள் கூறுகின்றனர். இதற்கு எப்படி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்?


–என். தனுஷ்கோடி, திருத்தணி


பதில்: இமெயில் செய்திகளை அழிக்கையில் எக்ஸ்பியில் உள்ள அவுட்லுக் எக்ஸ்பிரஸ், அவற்றை உடனே அழிக்காமல்


"Deleted Items"


என்ற போல்டரில் வைத்துக் கொள்கிறது. எனவே நாம் கடிதங்கள் வந்து தங்கும் இன்பாக்ஸில் உள்ள மெயில்களை மொத்தமாகக் காலி செய்திடுகையில், அவை இந்த டெலீட்டட் ஐட்டம்ஸ் போல்டரில் தங்கி ஹார்ட் டிஸ்க் இடத்தைப் பிடிக்கின்றன.

இதற்குப் பதிலாக, அவை அழிக்கப்படும்போதே இந்த போல்டருக்குச் செல்லாமல் முற்றிலுமாக நீக்கப்படுவதற்கான செட்டிங்ஸை அமைக்கலாம். இதற்கு முதலில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்பைத் திறந்து கொண்டு பின் Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும்.

இப்போது பல டேப்கள் அடங்கிய Options என்னும் விண்டோ கிடைக்கும். இதில் Maintenance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

இதன் கீழாக "Cleaning up Messages" என்ற வரியைத் தேர்ந்தெடுத்து "Empty messages from the ‘Deleted Items’ folder on exit" என்பதில் டிக் அடையாளத்தை உருவாக்கவும். இனி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனிமேல் நீங்கள் கடிதங்களை அழிக்கையில் அவை கம்ப்யூட்டரை விட்டே நீக்கப்படும்.


கேள்வி: அண்மையில் வேர்ட் குறித்த கட்டுரையில் எம்.ஆர்.யு. (MRU) என்று போட்டிருந்தது. இறுதி வரை அதன் முழு விரிவாக்கம் தரப்படவில்லை. நீங்கள் வாராவாரம் தரும் லிஸ்ட்டிலும் இது இல்லை. இந்த சுருக்குச் சொல் எதனைக் குறிக்கிறது?

–ஜே.பி. வள்ளிமுத்து, சிவகாசி


பதில்: சில சுருக்குச் சொற்கள் எப்போதாவது சில இடங்களில் மட்டுமே பயன்படுத்தப் படுவதால் நாம் அறியாமலே இருக்கிறோம். வேர்ட் புரோகிராம் மட்டுமல்ல,

மற்றவற்றிலும் (MRU) என்பது அண்மையில் பயன்படுத்திய பைல்களைக் (Most Recently Used) குறிக்கும். வேர்ட் புரோகிராம் திறந்தவுடன், பைல் மெனுவினைக் கிளிக் செய்தால் கீழ் பிரிவில் 1,2,3,4 எனப் பட்டியலிட்டு, நீங்கள் அண்மையில் உருவாக்கிய அல்லது எடிட் செய்த பைல்களின் பட்டியலைத் தரும்.

இந்த பட்டியலில் உள்ள பைல்களின் எண்ணிக்கையை 9 ஆக்கும் செட்டிங்ஸ் பற்றி சென்ற இதழில் டிப்ஸ் பட்டியலில் தரப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். வேர்ட் 2007 தொகுப்பில் இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகமாக்கலாம்.


கேள்வி: வேர்ட் புரோகிராமில் ஆரோ கீகளைப் பயன்படுத்துகையில் எப்படி சொற்கள் அளவில் வேகமாக நகர்த்துவது? சில வேளைகளில் பாரா பாராவாகத் தாவமுடியும் என்று சொல்கின்றனரே! விளக்கவும்.

–ஆ. கல்யாண சுந்தரம், சின்னாளபட்டி


பதில்: மிக எளிதான வேலை. ஆரோ கீயை அழுத்தினால், அநேகமாக அனைத்து வேர்ட் புராசசர்களிலும், கீயின் திசைக்கேற்ப ஒரு ஸ்பேஸ் கர்சர் நகரும். இதே செயல்பாட்டினை கண்ட்ரோல் கீயுடன் அழுத்தி ஆரோ கீயை அழுத்தினால் ஒரு சொல் திசைக்கேற்ப நகரும்.

மேல் கீழ் ஆரோ கீகளுடன் அழுத்தினால், பாரா பாராவாக அல்லது செக்ஷன் செக்ஷனாக நகரும்.

இத்துடன் ஷிப்ட் கீ மற்றும் கண்ட்ரோல் கீயைச் சேர்த்து ஆரோ கீயுடன் அழுத்தினால் அது நகரும் பகுதி முழுவதையும் தேர்ந்தெடுக்கும்.

எம்.எஸ்.வேர்ட், நோட்பேட், வேர்ட் பேட், ஓப்பன் ஆபீஸ் ரைட்டர் ஆகிய அனைத்திலும் இந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.


கேள்வி: என்னுடைய எக்ஸ்பி கம்ப்யூட்டரில் அமைத்துக் கொடுத்த ஸ்கிரீன் சேவர் பிடிக்கவில்லை. மற்றவர்கள் போல வேறு நல்ல ஸ்கிரீன் சேவரை அமைத்துக் கொள்ள விருப்பப்படுகிறேன். இதனை எப்படி மாற்றுவது?

–ச. உதயராஜன், திருத்தணி


பதில்: இதுவரை பார்த்து ரசித்த ஸ்கிரீன் சேவர், இன்னொரு அழகான ஸ்கிரீன் சேவர் காட்சியினைப் பார்த்தவுடன் பிடிக்காமல் போய்விட்டது. இல்லையா! மாற்றிவிடலாம். மிக எளிதாக மாற்றிவிடலாம்.

டெஸ்க்டாப் செல்லுங்கள். காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனு கட்டத்தில் கீழாக உள்ள Properties என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள்.

கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில் Screen Saver என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அங்கே இருக்கும் கட்டத்தில் பல ஸ்கிரீன் சேவர் பைல்களின் பெயர்கள் இருக்கும். இதில் எதனையேனும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

தேர்ந்தெடுத்தபின் Apply என்ற பட்டனில் கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அதில் உள்ள மற்றவற்றைப் பாருங்கள். ஸ்கிரீன் சேவர் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரில் வேலை எதுவும் செய்திடாமல் இருந்தால் தோன்ற வேண்டும் என்பதற்கு நிமிடக் கணக்கில் செட் செய்திட வழி தரப்பட்டிருக்கும்.

அதே போல நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஸ்கிரீன் சேவர் எப்படி தோற்றமளிக்கும் என்பதனைக் காண பிரிவியூ என்ற பிரிவு இருக்கும். இதனை எல்லாம் செயல்படுத்தி, அதனால் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள்.

சரி, எந்த ஸ்கிரீன் சேவரும் தேவை இல்லை என்றால் அதே ஆப்ஷன் கட்டத்தில் None என்று ஒரு சாய்ஸ் இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.


கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் பக்க எண்கள் அமைக்கையில் மூன்று சாய்ஸ் மட்டுமே கொடுக்கிறது. இந்த இடங்கள் போக நாம் அமைக்க நினைக்கும் இடத்தில் பக்க எண்ணை அமைக்க முடியுமா?

–எஸ். விஜய குமாரி, அரும்பாக்கம்


பதில்: தாராளமாக மிக எளிதாக அமைக்கலாம். எந்த ஒரு பக்கத்திலும், அல்லது அனைத்து பக்கத்திலும் நீங்கள் எந்த இடத்தில் பக்க எண் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகி றோமோ,

அந்த இடத்தில் கர்சரை வைத்துக் கொண்டு ஆல்ட்+ஷிப்ட் + ப்பி (Alt + Shift + P) அழுத்தவும். உடனே அந்த பக்க எண் அந்த இடத்தில் டெக்ஸ்ட்டாகப் பதியப்படும். ஒன்று நினைவில் கொள்ள வேண்டும்.

இன்ஸெர்ட் அழுத்தி பக்க எண்ணை அமைக்கையில் அது டாகுமெண்ட்டின் அனைத்து பக்கங்களிலும் அமைக்கப்படும். இந்த முறையில் எந்த பக்கத்தில் அல்லது பக்கங்களில் ஆல்ட்+ஷிப்ட்+ப்பி கொடுக்கிறோமோ அந்த பக்கங்களில் மட்டுமே அமைக்கப்படும்.

நன்றி தினமலர்
நவம்பர் 08,2009

நூர்
16-11-2009, 09:09 AM
கேள்வி: எனக்கு ஒரு பிரச்னை வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ளது. கண்ட்ரோல் கீ அழுத்தி மவுஸ் ரோலரை முன்பக்கமாகத் தள்ளினால் எழுத்தின் அளவு பெரிதாக மாறுகிறது.

ஆனால் மானிட்டரின் அளவை மீறிச் செல்வதினால் படிக்கும்போது பக்கவாட்டில் நகர்த்தி நகர்த்தி படிக்க வேண்டியுள்ளது. இதனைச் சரி செய்ய என்ன வழி?

–எஸ். இன்பராஜன், மேட்டுப்பாளையம்


பதில்: மவுஸின் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தும்போது இந்த பிரச்னை ஏற்படும். எழுத்துக்கள் பெரிதானாலும், டாகுமெண்ட் ஸ்கிரீன் அளவிற்குள் இருக்க வேண்டும் என்றால் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் அழுத்தியவாறே வலது சதுர பிராக்கட் கீயை அழுத்த வேண்டும்.

இப்போது எழுத்துக்கள் பெரிதாக மாறும். அதே நேரத்தில் வரிகள் அளவு கூடும்போது மடங்கி அடுத்த வரியாக உருவாகும்.


கேள்வி: விஸ்டா சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன். குறிப்பிட்ட வகை பைல்களை இந்த புரோகிராமில் தான் திறக்க வேண்டும் என தொடர்பு படுத்துவது எக்ஸ்பியில் எளிதாக இருந்தது. விஸ்டாவில் என்ன செய்தும் எப்படி என்று தெரியவில்லை. ஒருவேளை அந்த வசதி இல்லையோ? தெளிவுபடுத்தவும்.


–சி.அருமைசிங், புதுச்சேரி

பதில்: ஒரு சிரமமான வேலை குறித்த கேள்விதான். ஆனால் எளிதான பதிலைத் தருகிறேன். விஸ்டாவில் Start>Control Panel>Default Programs>Associate a file type or protocol with a program ச்ட் எனச் செல்லவும்.

சிறிது நேரம் பொறுமையாக இருக்கவும். அடுத்து பைல்களின் எக்ஸ்டென்ஷன் பெயர்களுடன் ஒரு லிஸ்ட் கிடைக்கும். இதில் நீங்கள் எந்த வகை பைலை எந்த புரோகிராமுடன் தொடர்பு படுத்த விரும்புகிறீர்கள் என இரண்டுக்கும் ஆப்ஷன் கிடைக்கும்.

இவற்றைத் தேர்ந்தெடுத்த பின் இந்த பட்டியலில் மேலாக உள்ள Change Program" என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் விரும்பும் புரோகிராம் பட்டியலில் இல்லை என்றால் என்ன செய்யலாம்? பிரவுஸ் செய்து அந்த புரோகிராமின் இ.எக்ஸ்.இ. பைலைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.


கேள்வி: என் அலுவலகப் பணியைத் தொடங்குகையில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட போல்டரைத் திறந்து அதில் உள்ள பைல்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியுள்ளது.

இந்த போல்டரை நான் சிஸ்டத்தில் லாக் ஆகும் போது திறக்கும்படி செய்திடலாமா?

-ஆர். செல்வநாயகி, திருப்பூர்

பதில்: முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அந்த போல்டரைத் திறக்கவும். பின் மெனுபாரில் உள்ள டூல்ஸ் என்பதில் போல்டர்ஸ் (Folders) என்பதில் கிளிக் செய்திடவும்.

இப்போது போல்டர் ஆப்ஷன்ஸ் (Folder Options) என்று ஒரு விண்டோ கிடைக்கும். இதில் வியூ என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். கீழாக உள்ள அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் (Advanced Settings) என்ற பாக்ஸில் Restore previous folder windows at log on என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி,

பின் அப்ளை, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் லாக் செய்திடுகையில் நீங்கள் விரும்பும் வகையில் குறிப்பிட்ட போல்டர் திறக்கப்பட்டே கிடைக்கும்.


கேள்வி: ஆங்கிலத்தில் பிளாக் என்றும் தமிழில் வலைமனை மற்றும் பிற சொற்களில் குறிப்பிடும் இது என்ன? இவற்றை இணையத்தில் சென்று தான் பார்க்க வேண்டுமா? பிளாக் அமைக்க வேண்டும் என்றால் கட்டணம் எங்கு செலுத்த வேண்டும்?


-ஆர். சேகர், வத்தலக்குண்டு

பதில்: உலகிற்கு உங்கள் எண்ணங்களைத் தயங்காமல் வெளிப்படுத்த ஓர் இடம் வேண்டுமா? அதற்கு வழி தருவதுதான் பிளாக் (Blog) தமிழில் அழகாக வலை மனை என்று சொல்கின்றனர்.

இன்டர்நெட்டில் இலவசமாக வெப்சைட்டே உருவாக்கி வைக்கலாம் என்ற நிலையில் பிளாக்குகள் அமைப்பதற்கா கட்டணம் தேவை? இல்லவே இல்லை. பல தளங்கள் இலவசமாக பிளாக்குகளை அமைத்து இயக்க இடம் தருவதுடன்,

அவற்றை அமைக்க பல டூல்ஸ்களையும் தருகின்றனர். Web Log என்ற இரண்டு சொற்களின் சுருக்குச் சொல் தான் Blog. இவற்றை அமைத்தால் அங்கு உங்கள் எண்ணங்களை எழுதலாம் (மற்றவர்கள் மனம் புண்படாமல்). படங்களை அப்லோட் செய்திடலாம்; உங்கள் பிளாக்குகளுக்கு வரும் நண்பர்கள் அது குறித்து கருத்து தெரிவிக்க இடம் உண்டு.

உங்களுக்கு வேறு இணைய தளங்கள் இருப்பின் அல்லது உங்களுக்கு விருப்பமான தளங்கள் இருப்பின் அதற்கான லிங்க்குகளைத் தரலாம்.
தற்போது பிளாக்குகள் செய்திகளைத் தரும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் சக்தி வாய்ந்த ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பல ஆன்மிகத் தளங்கள் உருவாக்கப்பட்டு, அலைபாயும் பல மனங்களுக்கு அமைதியைத் தந்து வருகின்றன. நீங்கள் விரும்பும் பொருள் வாரியாக உள்ள பிளாக்குகளைத் தேடிப் படிக்கலாம்.

கூகுளில் தேடிப் பெறலாம் என்றாலும் கீழ்க்காணும் தளங்கள் இவற்றைப் பட்டியலிட்டுத் தருகின்றன.
http://blogcatalog.com/


http://www.blog searchengine.com/


http://www.blogarama.com/


பலர் அவர்களின் தளங்களில் தமிழில் எழுதி வருகின்றனர். முதலில் சில தளங்களைப் பாருங்கள், படியுங்கள். பின் இந்த தளங்களை உருவாக்க உதவும் தளங்களுக்குச் சென்று உங்கள் பிளாக்குகளை உருவாக்குங்கள்.

அதுவரை உங்கள் பிளாக்குக்கு ஓர் அருமையான பெயரை மனதிற்குள் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.


கேள்வி: புதிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் வெளியாகும்போது அதனுடன் சில எண்கள் காட்டப்படுகின்றன. இவற்றின் பொருள் என்ன? இந்த எண் வரிசை எதனைக் குறிக்கிறது?

–எம். கருணாநிதி, பொள்ளாச்சி.


பதில்: எடுத்துக் காட்டாக ஒரு புரோகிராமின் புதிய பதிப்பு 6.1.2 என்ற எண்ணைக் கொண்டுள்ளதாக வைத்துக் கொள்வோம். 6 என்பது அந்த புரோகிராமின் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்ட புதிய பதிப்பு. முக்கிய மாற்றங்கள் இருந்தால் தான் அடுத்தடுத்து இந்த எண் மாறும்.

1 என்ற எண் ஒரு சிறிய மாற்றத்துடன் கூடிய அப்டேட் பைல் என்பதைக் குறிக்கிறது. ஒன்றிரண்டு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் இந்த எண் சுட்டிக்காட்டும்.

மூன்றாவதாக உள்ள 2 என்பது அந்த புரோகிராமில் உள்ள பிரச்னைகளைக் (Bugs) குறிக்கிறது. இரண்டு பிரச்னைகள் இந்த அப்டேட்டட் புரோகிராமில் தீர்க்கப்பட்டுள்ளன என்று காட்டப்படுகிறது.

சில புரோகிராம்கள் எழுத்துக்களையும் இணைக்கும். எழுத்துக்கள் மிக மிக முக்கியம் இல்லாத மாற்றங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும்.


கேள்வி: இன்டர்நெட் பிரவுசரில் பைல்களைத் திறக்க முடியுமா? அதனால் பைல்களுக்குப் பாதகம் ஏற்படுமா?

-கே.என். சிவராமன், சென்னை

பதில்: ஒரு சாதாரண பைல் ஒன்றை உருவாக்கித் திறந்து பார்த்திருக்கலாமே, சிவராமன். ஓகே. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்களில் நீங்கள் தாராளமாக பைலைத் திறக்கலாம்.

இணைய தளங்கள் மட்டுமின்றி பைல்களைத் திறக்கவும் இவை பயன்படுகின்றன. பைல் டைரக்டரியிலிருந்து அப்படியே பைலை இழுத்து வந்து பிரவுசரின் முகவரி விண்டோவில் போட்டுப் பாருங்கள்.

குறிப்பாக பட (ஜேபெக், டிப் போன்றவை) பைல்கள் அழகாகத் திறக்கப்படும். மற்றவற்றைத் திறக்க அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.


கேள்வி: டி.எல்.எல். பைல் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று பார்க்க காப்பி செய்து திறந்து பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. இதற்கு எந்த பாண்ட் வேண்டும்.
ஒரிஜினலைத்தான் படிக்க வேண்டுமா?

–எஸ். ரேணுகா சீனிவாசன், சென்னை.

பதில்: டி.எல்.எல். ஒரிஜினலைத் திறக்க பயம் இருப்பது குறித்து மகிழ்ச்சி. படிக்கலாம். வழக்கமான பாண்ட்கள் மூலம் இதனைப் படிக்க இயலாது. Quick view plus என்ற ஒரு சாப்ட்வேர் மூலம் இதனைப் படிக்கலாம். டவுண்லோட் செய்து முயற்சித்துப் பார்க்கவும்.


கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பெயர்கள் மற்றும் சொற்களாக உள்ள டேட்டாவினை டெக்ஸ்ட்டாக மாற்ற விரும்புகிறேன். எப்படி மாற்றலாம்?

–எஸ். கீர்த்திவாசன், பழநி


பதில்: நீங்கள் குறிப்பிடும் சொற்களை மாற்றலாம். ஆனால் அதில் சார்ட்டுகள், பார்முலாக்கள் மற்றும் பிற பார்மட்டிங்குகள் இருந்தால் அவை எல்லாம் காணாமல் போய்விடும். பரவாயில்லையா? நீங்கள் செய்ய வேண்டியது:


1) டேட்டா உள்ள எக்செல் பைலைத் திறந்து கொள்ளுங்கள்.

2) File=>Save As கட்டளையைக் கொடுங்கள்.

3) Save as type என்ற டிராப்-டவுன் லிஸ்ட்டை கிளிக் செய்து அங்கு உள்ள பிரிவுகளில் Formatted text அல்லது text அல்லது CSV என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். CSV என்பது Comma Separated value என்று பொருள்படும்.


4. பைலிற்கு ஏதாவது பெயரை டைப் செய்து விட்டு Save பட்டனை அழுத்துங்கள்.


கேள்வி: நான் உருவாக்கிய எக்ஸெல் ஒர்க் ஷீட்டில்,தொடர் வரிகள் வராமல் தனி வரி ஒன்று உருவாக்க எண்ணி, ஷிப்ட் என்டர் அழுத்தி செல் ஒன்றில் ஒரு லைன் பிரேக் உருவாக்க முயற்சித்தேன்.

ஆனால் செல்களுக்கு மேலாக கர்சர் சென்றது. செல்களில் எப்படி தகவல்களை வரிகளில் அமைப்பது? எந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும்?

–டி. உஷா ரவீந்திரன், சென்னை


பதில்: நீங்கள் வேர்டில் உள்ள வழக்கத்தை எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வேர்டில் இருப்பது போல லைன் பிரேக் ஏற்படுத்த ஷிப்ட் என்டர் எக்ஸெல் தொகுப்பில் பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

எக்ஸெல் தொகுப்பில் இது என்டர் கீயின் பயன்பாட்டிற்கு எதிரான செயல்பாட்டை மேற்கொள்ளும். அதாவது என்டர் அழுத்தினால் செல்லுக்குக் கீழே வரும் கர்சர் ஷிப்ட் + என்டர் அழுத்தினால் மேலே செல்லும். செல்லில் லைன் பிரேக் அமைத்திட AltEnter அழுத்தவும். விளக்கவும்.

நன்றி.தினமலர்.நவம்பர் 15,2009

நூர்
16-11-2009, 09:09 AM
கேள்வி : எனக்கு கூகுள் குரோம் பிரவுசர் தான் பிரியமாக உள்ளது. ஆனால் ஆட் ஆன் தொகுப்புகள் என்று வருகையில், பயர்பாக்ஸ் பிரவுசருக்கே அதிகம் உள்ளன. பயர்பாக்ஸ் ஸ்டைலில் குரோம் பிரவுசருக்கு ஆட் ஆன் கிடைக்குமா?

–சி.நாகலஷ்மி, சென்னை

பதில்: பயர்பாக்ஸ் பிரவுசருக்கு உள்ள ஒரு குறிப்பிட்ட ஆட் ஆன் தொகுப்பு போலத்தான் வேண்டும் என்றில்லாமல் கூகுள் குரோமிற்கான ஆட் ஆன தொகுப்பு வேண்டும் என்றால்,

குரோம் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட http://www.chromefans. org/chromeplugins/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அல்லது http://www.mychrome addons.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


கேள்வி: ஐ.இ. 8 வைத்துள்ளேன். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள அட்ரஸ் பார் வேறு என்ன சிறப்பான பணிகளுக்கு உதவும்?

–நா.குமாரசாமி, கோயம்புத்தூர்

பதில்: உங்கள் மிகப் பெரிய கேள்வியைச் சுருக்கி இந்த பதிலைத் தருகிறேன். மிகப் பெரிய வேலை எல்லாம் இல்லை.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அட்ரஸ் பாரில், சர்ச் பாக்ஸில் தேடுவது போல தேடித் தகவல்களைப் பெறலாம். இணைய தளங்களிலும் வெப் ஆக்சிலரேட்டர் போல புரோகிராம்களைப் பயன்படுத்தித் தேடலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐ இயக்கவும். ஆல்ட்+டி கீகளை அழுத்தினால் கர்சர் அட்ரஸ் பாக்ஸில் சென்று நிற்கும். அங்கு யு.ஆர்.எல். (இணைய முகவரி) யினை டைப் செய்வதற்குப் பதிலாக ஏதேனும் ஒரு சொல்லை டைப் செய்திடவும்.

நான் noodles என்று டைப் செய்தேன். உடனே உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் எது டிபால்ட் சர்ச் இஞ்சினாக செட் செய்யப்பட்டுள்ளதோ அது இயக்கப்பட்டு என்பதற்கான முன்னணி தளங்களைப் பட்டியலிடும்.

அதே டேப்பில் தகவல்கள் இடம் பெற வேண்டாம் என்று எண்ணினால், சொல்லை டைப் செய்துவிட்டு என்டர் தட்டுவதற்குப் பதிலாக, ஆல்ட் +என்டர் தட்டவும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் புதிய டேப் ஒன்றைத் திறந்து தகவல்களைக் காட்டும். இன்னொரு வழியிலும் தேடலாம். அட்ரஸ் பாரில் go noodles அல்லது find noodles என டைப் செய்தும் தேடலாம்.


கேள்வி: வேர்டில் ஒரு லைனை செலக்ட் செய்திட, அதன் இடது மார்ஜினில் கிளிக் செய்திட எழுதி இருந்தீர்கள். என்ன செய்தாலும் செலக்ட் ஆகவில்லை. விளக்கவும்.

–சி. ஜெயராமன், திண்டிவனம்


பதில்: நன்றாகக் கவனிக்கவும். இடது புறம் ரூலர் லைன் இருக்கிறதா? தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இடது மார்ஜின் தெரியும் அல்லவா?

எந்த வரியைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ, அந்த வரிக்கு இடது புறமாக மார்ஜினில் கர்சரைக் கொண்டு செல்லவும்.

அவ்வாறு கொண்டு செல்கையில் காணப்படும் அம்புக் குறி பொதுவாக இடது புறம் சாய்ந்திருக்கும். மார்ஜின் கோட்டின் ஓரத்தில் கொண்டு செல்கையில், ஒரு நிலையில் அது வலதுபுறமாகச் சாயும். அந்த இடத்தில் ஒரு கிளிக் செய்திடுங்கள்.

அந்த வரி தேர்ந்தெடுக்கப்படும். மிச்சக் குறிப்பையும் தருகிறேன். ஒரு பாராவினைத் தேர்ந்தெடுக்க அந்த பாராவில் எங்காவது ஒரு இடத்தில், கர்சரை வைத்து மூன்று முறை கிளிக் செய்திடவும்.

அல்லது மேலே சொன்ன மார்ஜின் இடத்தில் வைத்து இருமுறை கிளிக் செய்திடவும். அதே இடது மார்ஜினில் கர்சரை வைத்துக் கொண்டு மூன்று முறை கிளிக் செய்தால், முழு டாகுமெண்ட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.


கேள்வி: ஒர்க் ஷீட் ஒன்றின் செல்லில் எண்களை அமைக்கையில், அதனுடன் சிறிய குறிப்பு அல்லது அடையாளம் காட்டும் எழுத்துக்களை அமைக்கலாமா? எப்படி எனக் கூறவும்.

–சி.கே.பிரபு, திருப்பூர்


பதில்: செல்லில் டெக்ஸ்ட்டை எண்களுடன் இணைக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் அதற்கான செட்டிங்ஸை ஏற்படுத்த வேண்டும். முதலில் செல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

Format | Cells | Number எனத் தேர்ந்தெடுக்கவும். Category லிஸ்ட்டில் Custom என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Type லிஸ்ட்டில் General என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலே இருக்கும் சிறிய கட்டத்தில் General என்ற சொல்லை ஒன்றும் தொடாமல் அதன் அருகில் என்ன சொல் எண்கள் கட்டத்தில் இடம் பெற வேண்டுமோ அதனை மேற்கோள் குறிக்குள் டைப் செய்திடவும்.

எடுத்துக் காட்டாக General "at" என டைப் செய்தால் எண்களை அடுத்து ச்t என்ற சொல் செல்லில் இடம் பெறும். ஆனால் இது பார்முலா, கூட்டல்,கழித்தல் போன்ற செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுத்தாது.


கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கையில், ஹைபன் அல்லது டேஷ் அமைத்தால் உடனே அது ஒரு பெரிய கோடாக மாறிவிடுகிறது. இதனை அழிக்கவும் முடியவில்லை. இந்த தேவையற்றதைத் தடுப்பது எப்படி?

–சி.எஸ். மாரியப்பன், திண்டுக்கல்


பதில்: ஒரு கோட்டினை அமைக்கத் தொடர்ந்து இந்த ஹைபன் மற்றும் டேஷ் தொடர்ந்து இயக்க வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில், வேர்ட் தொகுப்பு மாறா நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தாமாக இயங்கும் பார்மட் சம்பந்தப்பட்டதாகும். இது நமக்கு வசதிதான் என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல என்பதால் பலருக்குப் பிடிப்பதில்லை (எனக்கும்தான்). தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும்.

பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள்.

அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் என்ற AutoFormat As You Type டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள்.

அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.


கேள்வி: என் சிறிய நிறுவனத்திற்காக அமைக்கப்படும் கடிதப் போக்குவரத்துகளில், என் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஒரு பொன்மொழி கீழாக டைப் செய்யப்படாமலேயே ஒவ்வொரு பக்கத்திலும் வர வேண்டும். அதனை எப்படி அமைக்கலாம்?

–ஆல்பர்ட் பிரகாசம், புதுச்சேரி


பதில்: டைப் செய்யாமல் எதுவும் தோன்றாது. ஒவ்வொரு பக்கத்திலும் டைப் செய்திடாமல், ஒருமுறை டைப் செய்து விட்டால் அனைத்து பக்கங்களிலும் வருமாறு செய்திடலாம்.

வேர்ட் தொகுப்பில் நீங்கள் தயாரிக்கும் டாகுமெண்ட்டைத் திறந்து, அதில் View => Header and Footer செல்லுங்கள். ஹெடர் தெரியும். அங்குள்ள டூல்பாக்ஸில் உள்ள Switch between Header and Footer டூலைக் கிளிக் செய்து புட்டருக்கு மாறிக் கொள்ளுங்கள்.

நீங்கள் விரும்பும் பொன்மொழியை டைப் செய்து கொள்ளுங்கள். Close என்ற டூல் பட்டனை அழுத்துங்கள். இனி அந்த டாகுமெண்ட்டின் அனைத்து பக்கங்களின் கீழாக, இந்தப் பொன்மொழி கிடைக்கும்.


கேள்வி: இன்டர்நெட் தளங்களுக்கு பெயர்களை வைக்கும் பழக்கம் முதலில் இருந்து வழக்கமானதால்தான் அதனையே விரும்புகிறோம். ஏதேனும் ஒரு முறையில் எண்களை நினைவில் இருக்கும்படி தொடர்ந்து வைத்திருக்கலாம் அல்லவா! ஏன் இதனைத் தொடங்கக் கூடாது?

–சி.என்.இந்திரா ராணி, மதுரை


பதில்: இந்த கேள்வியின் விபரீதத்தினை உணர்ந்து பதில் அளிக்க எடுத்துக் கொண்டேன். எப்படி எண்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்கள்,

இந்திரா ராணி. உங்கள் நண்பர்களுக்குள் 2436030 என்ற தொலைபேசியை வைத்திருப்பது யார் என்று கேட்டால் சற்று நேரம் விழிப்பீர்கள். அதே நேரத்தில் நண்பர் ராமசாமியைத் தெரியுமா என்று கேட்டால் உடனே அவரை நினைவிற்குக் கொண்டு வந்துவிடுவீர்கள்.

இதற்குக் காரணம் எண்களை நினைவில் வைப்பதைக் காட்டிலும் பெயரை நினைவில் வைப்பது எளிது. இது மனித இயல்பு. அதனால் தான் இன்டர்நெட் தளங்களின் பெயரை வடிவமைக்கையில்,

அதன் வல்லுநர்கள் எண்களைத் தவிர்த்தனர். எண்களை நினைவில் வைத்திருக்கும் பழக்கம் உள்ள ஒன்றை எண்ணிப் பாருங்கள். கிடைக்காது.


கேள்வி: மானிட்டரில் பல விண்டோக்களைத் திறந்து ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களில் வேலை செய்கையில், அவற்றை திரையில் அடுத்தடுத்து காட்டுவதற்கு எப்படி செட் செய்திட வேண்டும்?

–கே. உத்தம் குமார், அவினாசி


பதில்: புரோகிராம்களைத் திறந்த பின்னர், அவை டாஸ்க்பாரில் டேப்களாகக் காட்டப்படுவதனைக் காணலாம். நீங்கள் கேட்டுள்ளபடி செட் செய்திட, கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு எந்த விண்டோக்களை திரையில் ஒரே நேரத்தில் தோன்றும்படி வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அவற்றைக் கிளிக் செய்திடவும்.

கிளிக் செய்து தேர்ந்தெடுத்தபின், ஏதாவது ஒன்றின் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். இங்கே கிடைக்கும் மெனுவில் Horizontally, Tile Vertically என இரண்டு ஆப்ஷன் கிடைக்கும். விண்டோக்கள் நெட்டு வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா,

படுக்கை வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா என முடிவு செய்து தேவையானதைத் தேர்ந்தெடுத்தால், அந்த வழியில் விண்டோக்கள் அமையும்.


கேள்வி: நான் எட்டாவது படிக்கிறேன். இமெயில் அக்கவுண்ட் ஒன்று வைத்து நண்பர்களுடன் தொடர்பு கொண்டுள்ளேன். இமெயில் வந்தால் அதில் வைரஸ் வரும் என்று கூறுகின்றனர். உண்மையா? அப்படியானால் அப்படி வரும் இமெயில்களில் ஏதேனும் அடையாளம் இருக்குமா?

–என். சுதந்திரா, மேல்மருவத்தூர்

பதில்: வாழ்த்துக்கள். உங்களுக்கு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்து இந்த பழக்கத்தை அறிமுகப்படுத்திய பெற்றோர் அல்லது மூத்த சகோதரர்கள் துணையுடன் இதனை மேற்கொள்ளவும்.

உங்களுக்கு அறிமுகமில்லாத நண்பர்களிடமிருந்து, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பெயரில், அவசர உதவி கொடுத்தால் பணம் என்ற தலைப்பில், பேங்க் அக்கவுண்ட் குறித்து பெரிய வங்கிகளின் பெயரில் இமெயில்கள் வந்தால் தயவு செய்து திறக்க வேண்டாம்.

இந்த எச்சரிக்கை கொஞ்சம் தான். போகப் போக நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். இன்டர்நெட்டைப் பயன்படுத்தி கல்வியில் சிறப்பு பெற வாழ்த்துக்கள்.

நன்றி.தினமலர். நவம்பர் 22,2009

நூர்
30-11-2009, 04:48 PM
கேள்வி: வேர்ட் தொகுப்பில் சொற்களைத் தேடுகையில் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டம் மூலம் தேடுகிறோம். முதல் இடம் கண்ட பின்னர், தேடுதல் விடை அடுத்து எங்குள்ளது என்று அறிய முடியாமல் அந்த கட்டம் தடுக்கிறது.

அதை அடிக்கடி நகர்த்திப் பார்க்க வேண்டியுள்ளது. இதற்கு வேறு வழி உள்ளதா? கட்டத்தைச் சிறிதாக்க முடியுமா? அல்லது கட்டம் இல்லாமல் தேட முடியுமா?

–எஸ். சிவதாஸ், விருதுநகர்


பதில்: வேர்ட் தொகுப்பில் மட்டுமல்ல, எக்ஸெல் தொகுப்பிலும் இதே பிரச்னையை நீங்கள் சந்தித்திருக்கலாம். தீர்வைப் பார்ப்போமா! முதலில் நீங்கள் கண்ட்ரோல் + எப் கீ அழுத்தி, பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தைப் பெற்றிருப்பீர்கள். அல்லது மெனு பாரிலிருந்து பெற்றிருக்கலாம்.


நீங்கள் கூறியிருப்பது போல, முதல் விடையைக் கண்டவுடன், எஸ்கேப் கீயைத் தட்டுங்கள். பைண்ட் அண்ட் ரீபிளேஸ் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளும். அடுத்த விடை தெரிய ஷிப்ட் + எப்4 அழுத்துங்கள். அடுத்த விடை எங்குள்ளதோ அந்த சொல் தேர்ந்தெடுக்கப்பட்டுக் காட்டப்படும்.

இப்படியே அடுத்தடுத்து செல்லலாம். இறுதியில் தேடும் சொல் இல்லை என்றால், இறுதி செய்தி கிடைக்கும்.


கேள்வி: வேர்டில் சில வேளைகளில் பல டாகுமெண்ட்களைத் திறந்து வைத்துப் பணியாற்ற வேண்டியுள்ளது. அனைத்து டாகுமெண்ட்களையும் ஒரே திரையில் திறந்து, நம் தேவைக்கேற்றபடி அவற்றில் இடம் அமைத்து வேலை செய்திட முடியுமா?

–எஸ். அன்புச் செல்வி, பொள்ளாச்சி


பதில்: தாராளமாகச் செயல்படலாம். வேலை செய்திட விரும்பும் அனைத்து டாகுமெண்ட்களையும் திறந்து கொள்ளவும். அடுத்து மெனு பாரில் விண்டோ மெனுவில் அழுத்திக் கிடைக்கும் மெனுவில் அரேஞ்ச் ஆல் என்பதில் கிளிக் செய்திடவும்.

உங்கள் மானிட்டர் ஸ்கிரீன் இடம் அனைத்து டாகுமெண்ட்களுக்கும் இடம் அளிக்கும். நிறைய டாகுமெண்ட்கள் இருப்பின், ஒவ்வொன்றுக்கும் கொஞ்சமாவது இடம் கிடைக்கும்.


இனி எந்த டாகுமெண் ட்டிற்கு அதிக இடம் வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த விண்டோவில் உள்ள டாகுமெண்ட்டில் கர்சரைக் கொண்டு செல்லவும். இப்போது அந்த விண்டோ உயிர் பெறும். இனி கர்சரை அதன் பார்டரில் கொண்டு சென்று வைத்தால், அம்புக் குறி மாறுபடும்.

அப்படியே மவுஸை இழுத்தால் விண்டோ சற்றுப் பெரிதாகும். தேவையான அளவு பெரிதாக்கியவுடன் விட்டுவிட்டு தொடர்ந்து வேலை செய்திடவும். தேவையில்லாத டாகுமெண்ட் வின்டோவினை மட்டும் மூடவும் செய்திடலாம்.


கேள்வி: நான் தயாரித்து வைத்திருக்கும் பேவரிட்ஸ் தளங்களின் பட்டியலை பிரிண்ட் எடுக்க முடியுமா? அதற்கான வழிகள் என்ன?

–சீ. குமாரவேல் ராஜன், புதுச்சேரி


பதில்: முடியும், ஆனால் சில சுற்று வழிகளைக் கையாள வேண்டும். எளிதுதான். இங்கு அவற்றைப் பார்ப்போம். நேரடியாக பிரவுசரில் பேவரிட்ஸ் மெனுவில் கிளிக் செய்து அப்படியே பிரிண்ட் எடுக்க, எந்த பிரவுசரிலும் வசதி செய்து தரப்படவில்லை.

பிரிண்ட் செய்வதற்கு ஏற்றபடி ஒரு எச்.டி.எம்.எல். பைல் ஒன்றைத் தயார் செய்து அச்சடிக்கலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பைல் – இம்போர்ட்/எக்ஸ்போர்ட் (File>Import/Export) கிளிக் செய்திடவும்.

இப்போது இம்போர்ட்/ எக்ஸ்போர்ட் விஸார்ட் கிடைக்கும். இதில் Export to a File என்பதில் டிக் அடித்து, அதன்பின் Next என்பதில் கிளிக் செய்திடவும்.

அடுத்து கிடைக்கும் விண்டோவில் Favourites என்பதை செலக்ட் செய்து, பின் Next என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய பேவரிட் தளங்களை போல்டர்களில் பிரித்து வைத்து சேவ் செய்திருந்தால் Save All என்பதில் கிளிக் செய்திடவும்.

இதில் பேவரிட்ஸ் போல்டர் முழுவதையும் பிரிண்ட் செய்திடுமாறு செய்திடலாம். அல்லது குறிப்பிட்ட போல்டரை மட்டும் பிரிண்ட் செய்திடுமாறு தேர்ந்தெடுக்கலாம்.


இனி இந்த பைலை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு எக்ஸ்போர்ட் செய்திட சுட்டிக் காட்ட வேண்டும். பிரவுஸ் பட்டனை அழுத்தி உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் எங்கேனும் பதியலாம்.

டெஸ்க்டாப்பில் பதிந்தால் பின் தேடி எடுப்பது எளிது. தேர்ந்தெடுத்தபின் எக்ஸ்போர்ட் என்பதில் கிளிக் செய்துவிட்டால் பைல் ரெடியாகிவிடும். இப்போது இந்த பைலை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்? இது இருக்குமிடம் சென்று அதன் ஐகானில் டபுள் கிளிக் செய்திடவும்.

இந்த பைல் ஒரு எச்.டி.எம்.எல். பைல் என்பதால், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்கப்படும். ஒரு பக்கத்தில் பெயர்களும், அவற்றிற்கான லிங்க்குகளும் காட்டப்படும்.

கவலைப்பட வேண்டாம். அடுத்து இந்த பேவரிட்ஸ் முகவரிகளை பிரிண்ட் செய்வது குறித்துப் பார்க்கலாம்.


பைல் மெனு கிளிக் செய்து அதில் பிரின்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் ஆப்ஷன்ஸ் என்ற டேப் இருக்கும். இதனைக் கிளிக் செய்த பின் Print table of links என்ற பாக்ஸில் டிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்தபின் பிரிண்ட் என்ற பட்டனில் என்டர் செய்தால் உடன் இணைய முகவரிகள் அடங்கிய பட்டியல் பிரிண்ட் ஆகும்.


கேள்வி: கண்ட்ரோல் பேனல் சென்று ஆட்/ரிமூவ் புரோகிராம்ஸ் கிளிக் செய்த பின் கிடைக்கும் விண்டோவில் உள்ள இடது பக்க பிரிவில் Set Program access and defaults என்று உள்ளது. இது எதற்காக? இதனால் என்ன மாற்றங்களை மேற்கொள்ளலாம்?

-எஸ். வினோத் குமார், சென்னை


பதில்: விரிவான கட்டுரை எழுதக் கூடிய அளவிற்கான நல்ல கேள்வி. சுருக்கமாகத் தகவல்களைத் தருகிறேன். முதலில் இந்த வசதியைப் பயன்படுத்த, உங்கள் கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டராக லாக் இன் செய்திருக்க வேண்டும்.

அதன் பின் இந்த பிரிவில் கிளிக் செய்து விண்டோவினைப் பெறுங்கள். இதில் நான்கு ஆப்ஷன்ஸ் உங்களுக்குக் கிடைக்கும். அவை:


1.உங்கள் கம்ப்யூட்டரை முதன் முதலில் அதன் நிறுவனத்தில் செட் செய்தபோது அமைத்த செட்டிங்ஸை மீண்டும் திரும்பப் பெறலாம். இதற்கு Computer Manufacturer Choice என்ற இடத்தில் கிளிக் செய்திடலாம். இந்த ஆப்ஷன் உங்கள் கம்ப்யூட்டரைத் தயாரித்தவர் சர்வீஸ் பேக் 1 இன்ஸ்டால் செய்திருந்தால் தான் கிடைக்கும்.


2. இரண்டாவதாக, நீங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் வேலைகளுக்கேற்றபடி செட் செய்திட வேண்டும் என்றால், Microsoft Windows என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடலாம்.

இதன் மூலம் மைக்ரோசாப்ட் மட்டுமின்றி மற்ற நிறுவனங்களின் புரோகிராம்களையும் அணுகலாம். இவற்றை ஸ்டார்ட் மெனு, டெஸ்க்டாப் மற்றும் நீங்கள் விரும்பும் எந்த இடத்திலிருந்தும் அணுகலாம்.


அடுத்து மைக்ரோசாப்ட் இல்லாத நிறுவனங்களின் புரோகிராம்களை உங்கள் டிபால்ட் புரோகிராம்களாகத் தேர்ந்தெடுக்க Non Microsoft என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நான்காவதாக, இரண்டு நிறுவனங்களின் புரோகிராம்களை செட் செய்திட இதண்tணிட் என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். பலரும் இதனையே விரும்பி செலக்ட் செய்து டிபால்ட் புரோகிராம்களை அமைப்பார்கள்.

ஏனென்றால் இது பெரிய அளவில் ஆப்ஷன்களைத் தருகிறது. உங்கள் தேர்வுகள் அனைத்தையும் முடித்த பின் ஓகே கிளிக் செய்து மீண்டும் ரீஸ்டார்ட் செய்தால், நீங்கள் தேர்ந்தெடுத்த புரோகிராம்கள் டிபால்ட் புரோகிராம்களாக இயங்கத் தொடங்கும்.


கேள்வி: ஸ்விப் பைல் என்பது என்ன? என்னுடன் பணி புரிபவர்கள் இது பற்றி அடிக்கடி பேசிக் கொள்கிறார்கள். இதன் முழு விபரத்தினைச் சுருக்கமாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

–கு. மாரிசாமி, கோயமுத்தூர்


பதில்: உங்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது உங்கள் அலுவலகக் கம்ப்யூட்டரிலோ அடோப் பிளாஷ் புரோகிராம் இன்ஸ்டால் செய்யப்பட்டு பயன்படுத்தப் படுகிறதா? அவை தரும் பைல்களைத் தான் ஸ்விப் (Swiff) பைல் என அழைக்கிறார்கள்.

சரியாகச் சொல்வதென்றால் இவை .swf என்ற எக்ஸ்டென்ஷன் கொண்ட பைல்களாகும். இந்த வகை பைல்கள் கிராபிக்ஸ் பைல் பார்மட்டில் அடோப் பிளாஷ் புரோகிராமினால் அமைக்கப்படுகின்றன.

அனிமேஷன் எனப்படும் நகரும் வரைகலை, தகவல்களைக் கேட்டு வாங்கும் சிறிய ஆப்லெட் புரோகிராம்கள் ஆகியவற்றை அடோப் பிளாஷ் தயாரிக்கும்போது இந்த பார்மட் பைல்களில் உருவாக்கப்படுகின்றன.

டிவியில் வர்த்தக நிகழ்ச்சிகள் மற்றும் டிவிடிக்களில் மெனுக்கள் ஆகியவை தயாரிக்கும் போதும் இந்த பார்மட் பைல்கள் பயன்படுகின்றன.

இந்த மூன்று எழுத்துக்களை –SWF –Small Web Format அல்லது Shock Wave Flash என்று விரித்துப் படிப்பார்கள். இணைய தளங்களில் இவை பெரிய அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.


கேள்வி: பெர்சனல் பைல்கள் சிலவற்றை என் சிடியில் காப்பி செய்து சில வேளைகளில் அலுவலகக் கம்ப்யூட்டரில் பயன்படுத்துகிறேன். அவற்றை எடுத்துவிட்டாலும், My Recent Documents என்பதில் அவை தெரிகின்றன. இவற்றை மற்றவர் பார்க்காத வகையில் எப்படி நீக்கலாம்?

–என். கணேஷ், சென்னை


பதில்: அலுவலகக் கம்ப்யூட்டரில் சொந்த பைல்களைப் பயன்படுத்தலாமா என்பது உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும் உள்ள பிரச்னை. இருந்தாலும் உங்கள் பிரச்னைக்கு தீர்வினைத் தருகிறேன். மானிட்டர் ஸ்கீரினில் உள்ள டாஸ்க் பார் செல்லுங்கள். அங்கு எதுவும் இல்லாத இடத்தில் மவுஸ் ரைட் கிளிக் செய்திடுங்கள்.

கிடைக்கும் மெனுவில் புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள். "Taskbar and Start Menu Properties" என்னும் விண்டோ கிடைக்கும். இதில் " Start Menu" என்னும் டேபில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Customize என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் Customize Start Menu என்ற விண்டோ கிடைக்கும்.

இதில் Advanced என்ற டேபில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் கீழாக Recent Documents என்ற பிரிவு இருக்கும். அதில் List my recently opened documents என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

அதன் அருகே Clear List என்று உள்ள பெட்டியில் கிளிக் செய்திடவும். Recent Documents என்ற பிரிவில் உள்ள பைல்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டிருக்கும்.

நன்றி.தினமலர். நவம்பர் 29,2009.

நூர்
30-11-2009, 04:48 PM
கேள்வி: நான் கம்ப்யூட்டர் வாங்கும்போது மைக்ரோசாப்ட் ஆபீஸ் பதிந்து கொடுத்து அதற்கான டிஸ்க்கினையும் கொடுத்தார்கள். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. டிஸ்க்கை பார்மட் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதற்கான ஆக்டிவேஷன் கீக்கு பணம் செலுத்த வேண்டுமா?

–ஆ. திருமேனி, திருப்பூர்

பதில்: உங்களிடம் உள்ள ஒரிஜினல் டிஸ்க்கில் ஒரு இலவச தொலைபேசி எண் தரப்பட்டிருக்கும். அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினால், உங்களிடம் சில கேள்விகள் கேட்டு புதிய எண் தருவார்கள்.

அதனைக் கேட்டு வாங்கும்போதே தவறின்றி எழுதிக் கொள்ளுங்கள். அல்லது எழுதியபடியே கம்ப்யூட்டரில் ஆக்டிவேட் செய்து பாருங்கள். சரியாகிவிடும். இதில் உங்களுக்குக் கம்ப்யூட்டர் வழங்கிய நிறுவனத்தின் உதவியையும் கேட்கலாம்.


கேள்வி: என்னுடைய விண்டோ விஸ்டா அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டினை மறந்துவிட்டேன். என்ன செய்தாலும் நினைவிற்கு வரவில்லை. என்னுடைய பாஸ்வேர்டைத் திரும்பப் பெற ஏதேனும் வழி உள்ளதா?

–ஆர். அனுராதா, திண்டுக்கல்


பதில்: விண்டோஸ் சிஸ்டத்திற்கான பாஸ்வேர்ட் ரெகவரி சாப்ட்வேர் ஒன்றைப் பயன்படுத்தலாம். கீழ்க்காணும் தளங்களில் உள்ள டூலைப் பயன்படுத்தவும். முகவரி www.passwordchanger.com மற்றும் http://home.eunet.no/pnordahl/ntpassword.


கேள்வி: பிளாஷ் மெமரி என்பது எப்போது வந்தது? இதனை யார் கண்டுபிடித்தார்கள்? எந்த சிப்களில் இவை பயன்படுத்தப் படுகின்றன?

–வா. மீனா தங்கசாமி, சென்னை


பதில்: 1984 ஆம் ஆண்டு. இந்த பிளாஷ் டிரைவினை Dr.Fujio Masuoka. என்பவர் உலகுக்கு அறிமுகப் படுத்தினார். இதனை அவர் மட்டுமே கண்டுபிடித்தார் என்று கூற முடியாது.

ஏற்கனவே இருந்த ஒன்றின் மேம்பாடாக இது வெளியானது. இவர் தோஷிபா நிறுவனத்தைச் சேர்ந்தவர். இன்று இந்த பிளாஷ் மெமரி அனைத்திலும் உள்ளது. பென் டிரைவ், தம்ப் டிரைவ், எம்பி3/எம்பி4 பிளேயர், டிஜிட்டல் கேமரா, பி.டி.ஏ. என அடுக்கிக் கொண்டே போகலாம் .

சுருக்கமாகச் சொல்வதென்றால் கைகளில் எடுத்துச் சென்று டேட்டா ஸ்டோர் செய்திடும் வகையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான டிஜிட்டல் சாதனங்களில் இது பயன்படுகிறது.

இதில் இ.இ.ப்ராம் (EEPROM Electronically Erasable Programmable Read only Memory) சிப் ஒன்று இருக்கும். இரு கோடுகள் குறுக்கிடுகையில் செல்கள் ஏற்படும் இல்லையா! இது போல நூற்றுக்கணக்கான கோடி செல்கள் ஒரு பிளாஷ் மெமரியில் இருக்கும். இந்த செல்லில் ஒரு ட்ரான்சிஸ்டர் இருக்கும். இவைதான் டேட்டாவைத் தாங்குகின்றன.


கேள்வி: ரூ.13,000க்குள் மொபைல் போன் ஒன்றை வாங்க விரும்பி, பல போன்களைப் பார்த்த பின் இறுதியில் நோக்கியா 5630 மற்றும் சோனி எரிக்சன் டபிள்யூ 595 ஆகிய இரண்டு போனில் என் தேர்வு நிற்கிறது. இதில் எதனை வாங்கலாம் என்று அறிவுரை கூறவும்.

–டி. எஸ். ராஜேஷ், மதுரை


பதில்: இதில் அறிவுரை என்றெல்லாம் யார் கூறுவது? தெளிவுரை வேண்டுமானால் கூறுகிறேன். முதலில் நீங்கள் இந்த இரண்டில் எதனை எடுத்தாலும் அது தவறான தேர்வாக இருக்காது.

இரண்டுமே சிறந்த போன்கள். இசை மற்றும் இசை வெளிப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தால், சோனி எரிக்சன் போனை வாங்கலாம். நிறைய அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த திட்டமிட்டால், சிம்பியன் சிஸ்டம் உள்ள நோக்கியா போனைத் தேர்ந்தெடுக்கவும்.


கேள்வி: என் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் அளித்துள்ள இமெயில் அக்கவுண்ட்டைப் பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் அதனைத் திறந்து படித்து ப்ராசஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிறது. நல்ல மாற்று இமெயில் அக்கவுண்ட் ஒன்று எனக்கு சஜஸ்ட் செய்திடவும்.

–மா. கருணாநிதி, திண்டுக்கல்


பதில்: பயனுள்ள இமெயில் சேவையினை அளிக்க நிறைய இலவச இமெயில் தளங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானவை இரண்டு. அவை http://gmail. google.com

மற்றும் http://mail. yahoo.com. இவற்றில் என்ன ப்ளஸ் பாய்ண்ட் என்றால், உங்களின் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் அளித்திடும் இமெயில்களை இந்த மெயில் அக்கவுண்ட்டில் பெற்று படிக்கலாம். உங்களுடைய நண்பர்களுக்கு நீங்கள் அந்த இமெயிலை விட்டுவிட்டீர்கள் என அறிவிக்க வேண்டியதில்லை.


கேள்வி: நிறைய ஸ்பைவேர்கள் இருந்ததனால் என்னுடைய கம்ப்யூட்டரின் சி டிரைவினை ரீ பார்மட் செய்து எக்ஸ்பி இன்ஸ்டால் செய்தேன்.

மீண்டும் அதே பிரச்னை இருந்ததால், டி டிரைவில் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்தேன். இப்போது பூட் செய்திடுகையில் மூன்று ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இருப்பதாகக் காட்டப்படுகிறது.

1) ஈ டிரைவ் டியில் உள்ள சிஸ்டம்
2) பூட் ஆகாத விண்டோஸ் எக்ஸ்பி
3)ட்யூன் அப் பேக் அப் (இது ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒன்று)

இந்த குழப்பத்தினை எப்படி தீர்ப்பது? ஞணிணிt.டிணடி பைலில் தேவையற்றதை நீக்குவது எப்படி?

–கே.எல். ராமகிருஷ்ணன், தேவாரம்.


பதில்: ஸ்டார்ட் அழுத்தி ரன் பாக்ஸில் msconfig என டைப் செய்து என்டர் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் boot.ini டேப்பில் கிளிக் செய்திடவும்.

அடுத்து Check All Boot Paths என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது அந்த பைலில் உள்ள என்ட்ரிகள் சோதனை செய்யப்பட்டு, சரியற்ற என்ட்ரிகள் காட்டப்படும். அவற்றை நீக்கி, ஓகே கிளிக் செய்து, ரீஸ்டார்ட் செய்திடவும்.


கேள்வி: சில கட்டுரைகளில் ஸ்பைவேர் எனப் படிக்கிறேன். சிலவற்றில் வைரஸ் புரோகிராம் என்று எழுதுகிறார்கள். இரண்டும் ஒன்றா? வேறு வேறு என்றால் எப்படி நம் கம்ப்யூட்டரை இவற்றிலிருந்து பாதுகாப்பது?

–தி. பெருமாள், விருதுநகர்


பதில்: இரண்டும் நம் கம்ப்யூட்டரில் நுழைந்த அழையாத விருந்தினர்தான். கெடுதல் விளைவிக்கும் இவற்றை பொதுவாக "malware" எனவும் அழைக்கின்றனர்.

ஸ்பைவேர் தொகுப்பை சில வேளைகளில் adware எனவும் அழைக்கின்றனர். கெடுதல் விளைவிப்பதில் இரண்டிற்கும் சின்ன வேறுபாடு உள்ளது. ஸ்பைவேர் உங்களுக்குத் தெரியாமல் உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை உங்கள் கம்ப்யூட்டரி லிருந்து பெற்று அதனை அனுப்பியவருக்கு அனுப்பும்.

வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் தங்கி, தன்னைப் போன்ற இன்னொன்றை உருவாக்கி, தான் வந்த வழிமுறையில் இன்னொரு கம்ப்யூட்டருக்கு அனுப்பவும். வைரஸ்கள் அனைத்தும் கம்ப்யூட்டர்களில் பல நாச வேலைகளை மேற்கொள்ளும்.

டேட்டாக்களைத் திருடி அனுப்புவதுடன், கம்ப்யூட்டரின் இயக்கத்திலும் நாசம் விளைவிக்கும்.கம்ப்யூட்டரை இவற்றிலிருந்து பாதுகாக்க இரண்டு பாதுகாப்பு புரோகிராம்கள் தேவை. பயர்வால் இன்ஸ்டால் செய்திடுங்கள். நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றையும் இன்ஸ்டால் செய்திடவும்.


கேள்வி: எம்.எஸ்.எக்ஸெல் 2003ல் கரன்சி $ என்பதை கீண். என்று மாற்ற முடியுமா? அதற்கு செட் அப் செய்வது எப்படி?

-மா. தேன்மலர், கோயமுத்தூர்.

பதில்: நிச்சயமாய் முடியும். எந்த ஒர்க் ஷீட்டில் இந்த மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமோ, அதனைத் திறக்கவும்.

அடுத்து Format என்பதில் கிளிக் செய்து அதில் Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்துத் திறக்கவும். இனி Format Cells என்ற விண்டோ கிடைக்கும்.

இதில் கேடகிரி (Category) கட்டத்தில் தேர்ந்தெடுத்தால், அதன் வலது புறத்தில் பலவகையான கரன்சிக்கான அடையாளங்களைப் பார்க்கலாம். அங்கே Rs Urudu என இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் விருப்பம் நிறைவேறும்.


கேள்வி: கால்குலேட்டர், கேரக்டர் மேப், விண்டோஸ் கிளிப் போர்டு, கண்ட்ரோல் பேனல் ஆகியவற்றைத் திறக்க ரன் கட்டத்தில் என்ன டைப் செய்திட வேண்டும்?

–எஸ்.தினகரன், புதுச்சேரி


பதில்: இவற்றிற்கான பைல்களின் பெயரை டைப் செய்திட வேண்டும். முறையே Calc, charmap, clipbrd,control என டைப் செய்திடவும்.

நன்றி.தினமலர் டிசம்பர் 06,2009

நூர்
14-12-2009, 10:10 AM
டிசம்பர் 13,2009


கேள்வி: எண்ட் கீ ஒன்று தரப்பட்டுள்ளது. இது வரிகளில் ஓரத்திற்குச் செல்ல உதவுவதைக் காட்டிலும் வேறு எதற்காவது பயன்படுகிறதா?

–கே. ரங்கநாதன், விருதுநகர்


பதில்: நல்ல கேள்வி. இப்படி பல கீகள் நம் கீ போர்டில் உள்ளன. இவற்றை அறிந்து கொள்வது அவசியம். எண்ட் கீயைப் பொறுத்தவரை நீங்கள் பயன்படுத்தும் புரோகிராமிற்கு ஏற்ற வகையில் அது செயல்படும்.

இதனுடைய முக்கிய பயன்பாடு உங்களை டாகுமெண்ட்டின் பக்கம் ஒன்றில் டாப் பகுதியிலிருந்து, கீழ் பகுதிக்கு எடுத்துச் செல்ல உதவிடும். இதுவே இணையதளத்திலும் செயல்படும்.

எடுத்துக் காட்டாக, இணைய தளம் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வேண்டியது அந்தப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் உள்ளது. எண்ட் கீயினை அழுத்தினால் உங்கள் கர்சர் அங்கே இருக்கும்.

சிறிய டெக்ஸ்ட்டில் வரி ஒன்றின் இறுதி இடத்திற்கு எடுத்துச் செல்லும். இந்த கீ நம்பர் பேடிற்கு இடது பக்கம் உள்ள பேஜ் டவுண் கீக்கு அருகே இடது பக்கம் இருக்கும்.


கேள்வி: இமெயில் கடிதங்களில் பல சுருக்குச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இளைஞர்கள் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக சில சொற்கள்: LMFR, SLOS, GTG, BF, WAREZ, ASL, PAH, FOAF, JFGI ஐ இவை என்ன பொருள் தருகின்றன; எதனைச் சுருக்கமாகச் சொல்கின்றன என்று தெரியவில்லை. இதற்கென இணையத்தில் ஏதேனும் டிக்ஷனரி உள்ளதா?

-ந. வேலாயுதம், காரைக்குடி


பதில்: நல்ல கேள்வி. நீங்கள் கூறிய பின்னரே நான் இணையத்தில் அப்படி ஒரு டிக்ஷனரி உள்ளதா என்று தேடினேன். இதனை ஸ்லாங் (Slang) என அழைத்து, இதற்கான டிக்ஷனரியை ஸ்லாங் (Slang Dictionary) எனக் கூறுகின்றனர்.

அப்படி ஒரு டிக்ஷனரியை http://www.noslang. com/index.php என்னும் முகவரியில் உள்ள தளத்தில் பார்த்தேன். இதன் அடிப்படை என்னவென்றால் இந்த சுருக்குச் சொற்களை, இந்த டிக்ஷனரி ஸ்லாங் இல்லை என்று சொல்லி பொருளைத் தருகிறது.

ஸ்லாங் ட்ரான்ஸ்லேட்டர், ஸ்லாங் டிக்ஷனரி, நெட்ஸ்பீக் கைட், ஆட் ஸ்லாங், எப்.ஏ.க்யூ, பிளாக் மற்றும் சர்ச் என்ற பல டேப்களுடன் இந்த தளம் அமைந்துள்ளது.

இதனை இயக்கி உங்களுக்குத் தேவையான பிரிவைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் பொருள் காண விரும்பும் சொல்லை டைப் செய்து பதிலைப் பெறலாம். மிக சுவராஸ்யமான சங்கதிகள் எல்லாம் இதில் கிடைக்கின்றன. இன்டர்நெட்டில் பரிமாறிக் கொள்ளப் படும் சொற்களுக்கு இந்த தளம் அருமையான ஒரு வழிகாட்டி.


கேள்வி: கால்குலேட்டர், டாஸ் கமாண்ட் ப்ராம்ப்ட், பெயிண்ட் போன்ற நான் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களைத் திறக்க ரன் கட்டத்தில் கட்டளைகளை டைப் செய்து திறக்கிறேன். ஆனால் இந்த கட்டத்தைப் பெற ஸ்டார்ட் கிளிக் செய்து இதனைப் பெற வேண்டியுள்ளது. குயிக் லாஞ்ச் பாரில் இதனை வைத்து இயக்க முடியுமா?

–எஸ். பிரதீப் குமார், உத்தமபாளையம்


பதில்: ரன் பாக்ஸ் சுருக்கமான கீகளில் வேண்டும் என்றால், விண்டோஸ் கீயுடன் ஆர் கீயை அழுத்தினால் போதும். நான் அப்படித்தான் செய்வேன்.

ஆனால் உங்கள் கேள்வியைப் படித்த பின்னரே, இதுவும் நல்ல வழியாய் உள்ளதே என்று எண்ணி வழி தேடினேன். வழி கிடைத்தது. ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து எழும் கட்டத்தில் கீழாக உள்ள ரன் கட்டளை அருகே உள்ள ஐகான் அருகே உங்கள் மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள்.

அப்படியே அந்த ஐகான் மீது மவுஸ் கிளிக் செய்து இழுத்து வந்து குயிக் லாஞ்ச் பாரில் விட்டுவிடுங்கள். இப்போது ரன் ஐகான் குயிக் லாஞ்ச் பாரில் இருக்கும். இதன் அருகே மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால் -கீதண என்று கிடைக்கும்.

இதன் பெயரை மாற்ற வேண்டுமானால், ஐகான் மீது ரைட் கிளிக் செய்து ரீநேம் தேர்ந்தெடுத்து மாற்றலாம். இந்த ஐகானில் கிளிக் செய்தால் உடன் ரன் பாக்ஸ் கிடைக்கும். நீங்கள் திறக்க விரும்பும் புரோகிராமிற்கான கட்டளைச் சொல்லை டைப் செய்து என்டர் செய்திடலாம்.

இந்த ஐகான பின் நாளில் நீக்க வேண்டும் என்றாலும் மற்ற ஐகான்களை நீக்குவது போல நீக்கிவிடலாம்.



கேள்வி: தேவையற்ற பைல்களைக் கிளீன் செய்திடுகையில், தேவையான இரண்டு பைல்களையும் டெலீட் செய்து நீக்கிவிட்டேன். இந்த இரண்டு பைல்களையும் எப்படி மீட்கலாம்?


–என். ஜெயந்தி மனோகர், திண்டுக்கல்


பதில்: நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் மிகவும் குறைவு. எனவே நீண்ட பதில் தருகிறேன். முதலில் ரீசைக்கிள் பின்னைத் தேடவும். அதில் நீங்கள் அழித்த பைல் இருந்தால், அதனைத் தேர்தெடுத்து, ரைட் கிளிக் செய்திடவும்.

பின் Restore என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், பைல் எந்த போல்டரிலிருந்து வந்ததோ அந்த போல்டருக்கு அனுப்பப்படும். இந்த பைலை நீங்கள் விரும்பும் போல்டரில் வைத்திட வேண்டும் என விரும்பினால், Cut என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

இப்போது அந்த பைல் தற்காலிகமாக நீக்கப்படும். எந்த போல்டரில் வைத்திட விரும்புகிறீர்களோ, அந்த போல்டரைத் திறந்து ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Paste என்பதில் கிளிக் செய்திடவும்.

இந்த இரு பைல்களை அழித்த பின் அதிகமான எண்ணிக்கையில் பைல்களை அழித்திருந்தால், மற்ற பைல்களுக்கு இடம் அளிக்க, ரீசைக்கிள் பின் இந்த பைல்களை வெட்டியிருக்கும். அப்படிப்பட்ட நிலையில் இந்த பக்கங்களில் அடிக்கடி தரப்பட்ட பைல் மீட்பு புரோகிராம்களில் ஒன்றின் மூலம் மீட்க முயற்சிக்கவும்.


கேள்வி: நான் விஸ்டா பயன்படுத்துகிறேன். இதனை செட் செய்கையில், டிபிராக் புரோகிராம் தானாக, குறிப்பிட்ட எண்ணிக்கையில் கம்ப்யூட்டரை இயக்கினால் இயங்கும்படி அமைத்திருக்கிறார்கள். இது கம்ப்யூட்டரை மந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. இதனை நிறுத்தி நான் விரும்பும்போது மட்டும் இயங்குபடி அமைக்க முடியுமா?


–கே.டி. திருஞானம், வேளச்சேரி


பதில்: முடியும். விஸ்டா மட்டுமின்றி விண்டோஸ் 7 தொகுப்பிலும் இவ்வாறு டிபால்ட்டாக செட் செய்யப்பட்டுள்ளது. இந்த செட் அப்பை மாற்றலாம். முதலில் டெஸ்க்டாப்பில் உள்ள My Computer ஐகான் மீது டபுள் கிளிக் செய்திடவும்.

பின் அதில் உள்ள C ரைவில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Properties என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Tools என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.

இதில் Defragment Now என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். (என்ன சார், நான் கேட்பதற்கு நேர்மாறாகப் பதில் தருகிறீர்களே என்று மனதிற்குள்ளேயே சொல்லி திட்டாதீர்கள்) மேலும் கீழே செல்லவும்.

அங்கு Run on a Schedule தன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இதனால் எப்போதெல்லாம் டிபிராக் இயக்கப்பட வேண்டும் என்று குறித்து வைத்தவை அனைத்தும் நீக்கப்படும். இனி நீங்கள் விரும்பி இயக்கினால் மட்டுமே டிபிராக் செயல்படும். விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் இதே போல் மாற்றிவிடலாம்.


கேள்வி: மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. குறித்து திடீரென ஏன் இந்த நடவடிக்கை? இந்த எண் எதைக் குறிக்கிறது? இதனை எப்படி தெரிந்து கொள்வது?

–கா. மங்கையர்க்கரசி, திருவாடனை


பதில்: அனைத்து மொபைல் போன்களும் அதனை அடையாளம் காட்டும் எண்ணுடன் அமைக்கப்பட வேண்டும் என்பது பன்னாட்டுவிதி. ஆனால் பல போலி நிறுவனங்கள், குறிப்பாக சீன நிறுவனங்கள், இந்த எண் இல்லாமல் மொபைல் போனை வடிவமைத்து குறைந்த விலையில் விற்று வந்தனர்.

இது தேசிய அளவில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததால், அரசு இந்த தீவிர நடவடிக்கையை, தகுந்த காலக்கெடுவுடன் எச்சரிக்கை கொடுத்துத்தான் எடுத்தது.

இந்த எண் குறித்து மேலும் தகவல்கள் அறிய http://www.numberingplans.com/?page=analysis‚"=imeinr என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அதற்கு முன் உங்களின் மொபைல் போன் எண்ணைத் தெரிந்து கொள்ளவும்.

போனில் *#06# என எண்ணாக டைப் செய்து பட்டனை அழுத்தினால் உங்கள் போனின் தனி எண் கிடைக்கும். இல்லை என்றால் போனின் பேட்டரியைக் கழட்டினால் அதன் கீழாக இந்த எண் கிடைக்கும்.

இது 15 இலக்கங்கள் கொண்ட எண். இதனை மேலே சொன்ன இணைய தளத்தில் என்டர் செய்தால், எண்ணில் உள்ள ஹைபன் உட்பட, உங்கள் போன் தயாரிக்கப்பட்ட நாடு, நிறுவனம், போனின் மாடல் எண் ஆகியவை கிடைக்கும். இவை அனைத்தும் அந்த எண்ணில் உள்ளது.

நன்றி. தினமலர்.

நூர்
14-12-2009, 10:10 AM
டிசம்பர் 20,2009


கேள்வி: எங்கள் கம்ப்யூட்டர்களில் ஒன்று பழையது. அதில் இன்னும் ஆபீஸ் 97 தான் பயன்படுத்துகிறோம். எங்கள் தேவைக்கு இது போதும். இந்த சாப்ட்வேர்களைப் பயன்படுத்த, குறிப்பாக வேர்ட் மற்றும் எக்ஸெல், நூல்கள் இன்டர்நெட்டில் கிடைக்குமா? இலவசமாகக் குறிப்புகள் வேண்டும். தயவு செய்து கூறவும்.

–செ. முத்துராஜன், போடி


பதில்: தொடர்ந்து பழைய கம்ப்யூட்டரையும், முன்பு வந்த ஆபீஸ் தொகுப்பினையும் குறிப்பிட்ட சில வேலைகளுக்காகப் பயன்படுத்தி வரும் உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். உங்கள் கேள்விக்கான பதில் இதோ:
Microsoft excel 97 quick reference

http://www.parsian.net/set1252/pages/books. htm


http://www.emu.edu.tr/english/facilitie sservices/computercenter/bookslib/


Microsoft word 97 quick reference


http://www.parsian.net/set1252/pages/books .htm


http://www.emu.edu.t r/english/facilitiesservices/ computercenter/bookslib/


இந்த தளங்களில் நீங்கள் கேட்டபடி இலவசக் குறிப்புகள் கிடைக்கின்றன.
இந்த தளங்களில் வேறு பல கம்ப்யூட்டர் நூல்களும் கிடைக்கும். குறிப்பாகக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்கள் பயனடையும் வகையில் பல நூல்கள் உள்ளன.


கேள்வி: வேர்டில் தயாராகும் டாகுமெண்ட்களுக்குத் தானாக பேக் அப் காப்பி எடுக்கும் வகையில் எப்படி செட் செய்வது?

–சி. கனகசுந்தரம், திருப்பூர்


பதில்: வேர்டில் தயாராகும் டாகுமெண்ட்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் சேவ் செய்திடவும், அவற்றிற்கு பேக் அப் காப்பி ஒன்றை அமைக்கவும் வசதி உள்ளது. வேர்ட் தொகுப்பு டிபால்ட்டாக இதனை பத்து நிமிடங்களில் செய்திடும். ஆனால் இந்த நேரத்தினைக் குறைத்தோ, அதிகப்படுத்தியோ நீங்கள் செட் செய்திடலாம்.


டூல்ஸ் மெனுவிலிருந்து ஆப்ஷன்ஸ் என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். சிறிய டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்படும். இதில் சேவ் என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இதில் "Always create backup copy" என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும்.

அதன் பின் Save AutoRecover info every என்ற இடத்தில் டிக் அடையாளம் அமைத்து, அதன் எதிரே எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை டாகுமெண்ட் சேவ் செய்யப்படும் என்பதனையும் செட் செய்திடவும்.

இந்த ஏற்பாடு அனைவருக்கும் தேவையான ஒன்றுதான். ஏனென்றால் கம்ப்யூட்டர் கிராஷ் ஆவது அடிக்கடி நடைபெறுவதால், நாம் அதுவரை உருவாக்கிய டாகுமெண்ட்டை இழக்காமல் இருக்க கம்ப்யூட்டர் தானாக அமைக்கும் பேக் அப் காப்பி தேவை. இது wbk என்ற துணைப் பெயருடன் உருவாகும். இறுதியாக சேவ் செய்த மாற்றங்கள் வரை இந்த டாகுமெண்ட்டில் இருக்கும்.


கேள்வி: டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், பைல் விபரங்களுடன் ஒரு விண்டோ காட்டப்படுகிறது. அதில் ரன் என்றும் சேவ் என்றும் இரண்டு ஆப்ஷன்கள் தரப்படுகின்றன. இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

–ஆர். ப்ரியா ராணி, புதுச்சேரி


பதில்: இணையத்திலிருந்து பைல் ஒன்றை டவுண்லோட் செய்திடுகையில் மற்றும் என இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும். இரண்டுமே புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் செட் அப் செய்வதற்கான வழிகள்தான்.

ஒன்று உடனே இன்ஸ்டால் செய்திடும் வேலையை மேற்கொள்ளும். இன்னொன்று பின்னொரு நேரத்தில் இன்ஸ்டால் செய்திட, அதன் பைலை கம்ப்யூட்டரில் நீங்கள் காட்டும் இடத்தில் சேவ் செய்து வைக்கும்.

சேவ் (Save) என்பதைக் கிளிக் செய்தால் அந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதற்கான பைல் கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும்.

ரன் (Run) என்பதைக் கிளிக் செய்தால், அந்த புரோகிராமினை செட் அப் செய்திடும் பணி மேற்கொள்ளப்படும். பொதுவாகப் பலரும் பைலை கம்ப்யூட்டரில் சேவ் செய்து, பின் இயக்கி இன்ஸ்டால் செய்வதனையே விரும்புவார்கள்.

இதனை காப்பி செய்து மற்றவர்களுக்கு வழங்கலாம்; நமக்கும் தேவைப்படும் போது இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.


கேள்வி: ஒரே நேரத்தில் நான்கு தேடல்களை கூகுள் தளத்தில் நடத்த முடியும் என்றும், அதற்கான விடைகளும் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகும்? முடியும் என்றால் என்ன வழி?

–டி.கருப்பையா, சோழவந்தான்.


பதில்: முடியும். இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், உங்கள் பிரவுசரில் GoogleGoogleGoogleGoogle.com என டைப் செய்து என்டர் தட்டவும். திரையில் என்ன தெரிகிறது? நான்கு கூகுள் கட்டங்கள் தெரிகின்றனவா?

எல்லாமே உயிர்த் துடிப்புடன் உள்ளனவா? ஒவ்வொன்றிலும் ஒரு தேடல் சொல்லைக் கொடுத்துப் பாருங்கள். அதற்கான விடைகள் தனியே கொடுத்தால் எப்படிக் கிடைக்குமோ அப்படியே கிடைக்கும்.

இரட்டைக் குழந்தை பிறந்தால் சந்தோஷம் தான். அதற்கு மேல் என்றால் சமாளிக்க முடியுமா? அது போல் தான் இதுவும். இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள்.


கேள்வி: ஹை ஸ்கூல் குழந்தைகளுக்கு கணக்கு பாடம், குறிப்பாக அல்ஜிப்ரா அல்லது ஜியோமெட்ரி குறித்துக் கற்றுக் கொடுக்கும் தளம் உண்டா? பயனுள்ளதாகக் கூறவும்.

ஆ. திலகவள்ளி, பேரையூர்


பதில்: இவை குறித்து பல்வேறு தளங்கள் உள்ளன. கூகுள் தளத்தில் சென்று தேடல் கட்டம் மூலம் பார்க்கலாம். ஆனாலும் நான் அண்மையில் கண்ட ஜியோமெட்ரி குறித்த தளம் மிகவும் சிறப்பாக மாணவர்களுக்கு இக்கணிதப் பிரிவைக் கற்றுத் தருகிறது.

இதன் முகவரி http://www.ics.uci.edu/~eppstein/junkyard/topic.html ஷேப், ஏரியா, வால்யூம் போன்ற சொற்களுக்கான விளக்கம் தேடுகையில் இந்த தளம் குறுக்கே வந்தது. உள்ளே பார்த்தால், ஜியோமெட்ரி குறித்து டன் கணக்கில் தகவல்கள் இருந்தன.

ஏறத்தாழ அதனை மூட முடியாமல் 50 நிமிடங்களுக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரி ஜியோமெட்ரியில் எனக்கு ஆனா, ஆவன்னா கூட நினைவில் இல்லை என்பதுதான் உண்மை.


கேள்வி: Times New Roman என்ற எழுத்து வகை வேர்டில் நிரந்தர எழுத்தாக அமைந்துள்ளது. இதனை மாற்றி வேறு ஒரு எழுத்தினை அமைக்க முடியுமா?

–எஸ்.முருகேசன், திண்டுக்கல்


பதில்: தாராளமாக முடியும். வேர்ட் தொகுப்பை இயக்கி Format=>font கட்டளையை கிளிக் செய்யுங்கள். இனி இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களைப் பயன்படுத்தி விருப்பபட்ட பான்டைத் தேர்வு செய்து Default பட்டனை கிளிக் செய்யுங்கள். வேர்ட் கேட்கிற கேள்விக்கு Yes பட்டனை அழுத்தி ஒப்புதல் கொடுங்கள்.


கேள்வி: நான் எச் பி லேசர் பிரிண்டர் வைத்துள்ளேன். இதில் வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பிரிண்ட் எடுக்கையில் கீழே உள்ள பார்டர் மட்டும் அச்சாகவில்லை. எப்படிக் கொடுத்தாலும் அச்சாக மறுக்கிறது. ஏன் இந்தப் பிரச்னை? எப்படித் தீர்க்கலாம்?

–ஜி.தேவநாதன், அச்சரப்பாக்கம்


பதில்: இந்த பிரச்னை ஒரு சில பிரிண்டர்களில் உள்ளது. உங்களிடம் உள்ள பிரிண்டரின் மாடல் எண்ணை நீங்கள் தந்திருக்கலாம். பரவாயில்லை. இந்தப் பிரச்னையின் பொதுத்தன்மை யினை இங்கு விளக்குகிறேன்.

காகிதத்தின் கீழ் விளிம்பில் இருந்து 0.67 அங்குல அளவில் உள்ள பகுதியை dead zone எனப் பல லேசர் பிரிண்டர்கள் எடுத்துக் கொள்ளும்.

எனவே Bottom Margin அளவை அதிகரியுங்கள். File => Page Setup கட்டளை கொடுங்கள். Layout டேபை அழுத்துங்கள். Borders பட்டனையும் அடுத்து Option பட்டனையும் அழுத்துங்கள். Measure from என்ற டிராப்- டவுனில் இருந்து Text என்பதை தேர்வு செய்து OK செய்யுங்கள்.


கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பள்ளி மாணவர்களுக்கான பல பட்டியல்கள் தயாரிக்கிறோம். பல செல்கள் ஒன்றாக இருப்பதால், டேட்டாவினைத் தவறாக எடிட் செய்துவிடுகிறோம். சில டேட்டா என்டர் செய்த பின்னரே இது தெரிகிறது. இதனால் இரட்டிப்பு வேலை ஆகிறது? இதனைத் தவிர்க்க என்ன வழி?

–டி. ரமேஷ் குமார், பழநி


பதில்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் செயல்படுகையில் செல்களைத் தவறாக அடையாளம் கொண்டு தவறான தகவல்களை எடிட் செய்து ரீ பிளேஸ் செய்து விடுவது நீங்கள் மட்டுமல்ல; பலரும் செய்திடும் தவறு தான். நீங்கள் ஆசிரியர் என்பதால், இந்த தவறு உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. இதற்கான தீர்வு என்ன?


Undo பட்டனை அழுத்துவதுதான். அல்லது Ctrl + Z என்ற கீகளை அழுத்துவதுதான். இன்னொரு வழியும் உள்ளது. நீங்கள் இன்னும் செல்லில் இருந்து தவற்றை ஏற்படுத்திய மாற்றங்கள் இன்னும் முடியவில்லை என்றால் ஒரே பட்டன் அழுத்தலில் இதனைச் சரி செய்துவிடலாம்.

அது Esc கீயை அழுத்துவது. என்ன என்ன மாற்றங்கள் ஏற்படுத்தும் வழியில் இருந்தீர்களோ அவை அனைத்தும் நீக்கப்பட்டுவிடும். பழைய தகவல்கள் செல்களில் இருக்கும்.

நன்றி.தினமலர்.

நூர்
28-12-2009, 09:54 AM
டிசம்பர் 28,2009,

கேள்வி: வேர்டில் பல பக்கங்களில் நீளும் டேபிளில் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பு கட்டங்களில் உள்ள தலைப்புகளை, அடுத்த அனைத்து பக்கங்களிலும் அமைய என்ன கட்டளை கொடுக்க வேண்டும்?

– சி.கு. சாம்பசிவம், விழுப்புரம்

பதில்: முதலில் முதல் பக்கத்தில் டேபிள் தலைப்பு அமைத்த வரிசையினை செலக்ட் செய்திடவும். பின் Table மெனு செல்லவும்.

விரியும் மெனுவில் கிடைக்கும் பிரிவுகளில் Heading Rows Repeat choice என்ற பிரிவினைக் கிளிக் செய்திடவும்.

பழைய வேர்ட் தொகுப்பாக இருந்தால் Headings என்று மட்டுமே இருக்கும். இனி பார்த்தால் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பில் இந்த ஹெடர்கள் இருக்கும்.

நீங்கள் எத்தனை வரிசையினை சேர்த்தாலும் நீக்கினாலும் இது அப்படியே தான் இருக்கும். இந்த ஹெடர்களில் மாற்றம் செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டால் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பு வரிசையில் மட்டுமே மாற்ற முடியும்.


கேள்வி: உங்களுடைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த கட்டுரையில் பைல்களைக் காப்பி செய்திட டெரா காப்பி செய்திடுங்கள்; இதனால் நேரம் மிச்சமாகும். வேலை விரைவாக நடக்கும் என்று சொல்லியுள்ளீர்கள். இந்த டெரா காப்பி குறித்து கூடுதல் தகவல்களைத் தரவும்.

–ஆர். கலாவல்லி, நாகமலை புதுக்கோட்டை


பதில்: பெரிய பைல்களைக் காப்பி செய்திடுகையில் விண்டோஸ் சில வேளைகளில் இடையே நின்றுவிடும். பைல்கள் அடங்கிய முழு போல்டர்களைக் காப்பி செய்திடுகையில் இந்த பிரச்னை ஏற்பட்டால் எந்த பைல் வரை சரியாகக் காப்பி ஆனது என்று தெரியாது.

இந்தக் குறையை நீக்கவும், காப்பி செய்வதனை எளிதாகவும் விரைவாகவும் அமைக்க டெரா காப்பி (TeraCopy) புரோகிராம் உள்ளது. இதனை http://www.box.net/shared/o16me8egx3 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து காப்பி செய்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ளவும்.

அதன்பின் நீங்கள் எப்போது காப்பி மற்றும் பேஸ்ட் செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் இது தானாக இயங்க ஆரம்பிக்கும். இது காப்பி வேலையை மிக எளிதாகவும் வேகமாகவும் மேற்கொள்ளும். ஒரு பைலைக் காப்பி செய்கையில் இடையே நிறுத்திப் பின் மீண்டும் தொடரலாம்.

பல பைல்களைக் காப்பி செய்திடக் கட்டளை கொடுத்து, காப்பி செய்திடுகையில் ஒரு பைலைக் காப்பி செய்வதில் பிரச்னை ஏற்பட்டால், அதனை விடுத்து அடுத்த பைலுக்குச் செல்லும். பிரச்னை ஏற்பட்ட பைலைக் காட்டும். பின் பிரச்னையைச் சரி செய்து காப்பியைத் தொடரலாம்.


ஒரு பைலைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்தால் ஏற்படும் மெனுவில் டெரா காப்பி என்றொரு வரியும் ஆப்ஷனாகத் தென்படும். இதனுடன் வழக்கமான காப்பி பிரிவும் கிடைக்கும். இந்த டெரா காப்பி தேவை இல்லை என்றால் உடனே அதனை அன் இன்ஸ்டால் செய்துவிடலாம்.


கேள்வி: ஆர்வத்தில் இணையப் பக்கங்களுக்கான தளங்கள் பலவற்றிற்கு புக்மார்க்குகளை, பயர்பாக்ஸ் பிரவுசரில் ஏற்படுத்தி உள்ளேன். அவசரத்திற்குத் தேவையான தளத்தைத் தேடுவது கஷ்டமாக இருக்கிறது. இப்போது தேவைப்படாத புக்மார்க்குகளை எப்படி அழிப்பது?

–என்.சாய்ராம், பொள்ளாச்சி

பதில்: கவலையே வேண்டாம். எந்த புக்மார்க் தேவையில்லையோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் ரைட் கிளிக் செய்திடவும். உடனே ஒரு மெனு விரியும். இதில் டெலீட் பட்டன் தெரியும். அதனை அழுத்தவும். அழித்து நீக்கி விடவா? இல்லை என்றால் ஜஸ்ட் நீக்கிவிடவா என்று கேட்கப்படும். உடனே யெஸ் என்ற பட்டனில் அழுத்தினால் புக்மார்க் தள லிஸ்ட்டில் இருந்து அது நீக்கப்படும்.


கேள்வி: ஒரு ரௌட்டர் என்ன வேலை செய்கிறது? இன்டர்நெட் இணைப்பிற்கு அது அவசியம் தேவையா?

–எஸ்.ஜே. பரந்தாமன், திண்டிவனம்


பதில்: நெட்வொர்க் ஒன்றில் டேட்டா பரிமாற்றத்திற்கு ரௌட்டர் என்னும் சாதனம் ஒரு அவசியத் தேவையாகும். நெட்வொர்க் இயக்கத்தினைக் கண்காணித்து இது டேட்டாவினை வழங்கும். இன்டர்நெட் என்பது பல நெட்வொர்க்குகள் இணைந்த ஒரு பெரிய நெட்வொர்க். எனவே ரௌட்டர் இன்டர்நெட் இணைப்பிற்கு அவசியம் தேவை.


கேள்வி: வேர்ட் தொகுப்பில் ஹெடர் அண்ட் புட்டர் பற்றி அடிக்கடி படிக்கிறேன். இதனால் என்ன பயன்? இதனை எப்படி அமைப்பது?

–சீ. கார்த்திகேயன், திருத்தங்கல்


பதில்: டாகுமெண்ட் ஒன்றை பிரிண்ட் செய்கையில், ஒவ்வொரு பக்கத்திலும், அதன் தலைப்பிலும், கீழாகவும் அச்சிடப்படும் டெக்ஸ்ட் அமைக்க ஹெடர் அண்ட் புட்டர் பயன்படுகிறது. இதன் பெரும் வசதி என்னவென்றால்,

இவற்றை ஒருமுறை வடிவமைத்தால் போதும். வேர்ட் தானாக அதனை அனைத்து பக்கங்களிலும் அமைத்திடும். ஹெடர் அண்ட் புட்டரில் டெக்ஸ்ட் அமைக்கக் கீழ்க்காணும் வழிகளில் செட் செய்திட வேண்டும்.


1. வியூ (View) மெனுவில் ஹெடர் அண்ட் புட்டர் (Header and Footer) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஹெடர் அண்ட் புட்டர் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அப்போது கர்சர் இருக்கும் பக்கத்தில் ஹெடர் பாக்ஸ் ஒன்று காட்டப்படும்.


2. அந்த ஹெடர் கட்டத்தில், டாகுமெண்ட் தலைப்பில் வரவேண்டும் என நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டை டைப் செய்திடவும். வழக்கமாக ஒரு டெக்ஸ்ட்டை எப்படி டைப் செய்து பார்மட் செய்வோமோ அதே போல இந்த டெக்ஸ்ட்டையும் அமைக்கலாம்.


3. இதே போல புட்டர் பாக்ஸிலும் அமைக்கலாம்.


4. அதன் பின் குளோஸ் கிளிக் செய்து, இந்த பாக்ஸ்களை மூடவும். இனி நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் ஒவ்வொரு பக்கத்திலும் மேலாகவும், கீழாகவும் அச்சடிக்கப்படும்.


கேள்வி: இன்றைய மொபைல் கேமராக்கள் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் பற்றிக் குறிப்பிடுகையில் மெகா பிக்ஸெல் என்று ஒரு அளவு தரப்படுகிறது. இது பற்றி விளக்கவும்.

–சி. என். நரசிம்மன், தேவாரம்


பதில்: Picture element என்பதன் சுருக்கமே பிக்ஸெல் (Pixel) என்று அழைக்கப்படுகிறது. படம் ஒன்று பல புள்ளிகளால் அமைக்கப்படுகிறது.

அந்த ஒரு டிஜிட்டல் புள்ளி தான் பிக்ஸெல். எனவே ஒரு படத்தில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில், படம் மிக நன்றாகச் சிறப்பாக இருக்கும்.

எனவே ஒரு டிஜிட்டல் படம் சார்பாக மெகா பிக்ஸெல் என்று கூறுகையில் அதில் அடங்கியுள்ள புள்ளிகளைக் குறிப்பிடுகிறோம். ஒரு மெகா பிக்ஸெல் என்பது பத்து லட்சம் சிறிய புள்ளிகளால் ஆன படம். எனவே டிஜிட்டல் கேமரா மற்றும் கேமராவிற்கு முக்கியத்துவம் கொடுத்து மொபைல் வாங்குகையில் உங்கள் பணத்திற்கேற்ப கூடுதலான மெகாபிக்ஸெல் திறன் கொண்டதாக வாங்கவும்.


கேள்வி: என் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பெயரில், அல்லது இமெயில் முகவரி பதிந்து வைத்த இன்டர்நெட் தளங்களிலிருந்து ஆடியோ, வீடியோ, பிரசன்டேஷன் மற்றும் டெக்ஸ்ட் பைல்கள் இணைப்பாகக் கொண்டு மெயில்கள் வருகின்றன. இவற்றை டவுண்ட்லோட் செய்திட பயமாகவும் உள்ளது.

அதே நேரத்தில் முக்கிய பைல்களை பெறாமலும் இருக்க முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு?


பதில்: கஷ்டம் தான். நம் மின்னஞ்சல் தொடர்புகள் பெருகி வரும் அதே வேளையில், ஸ்பைவேர்களும் மால்வேர்களும் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன. சந்தேகப்படும் இமெயில்களைத் திறக்க வேண்டாம்.

அவற்றின் சப்ஜெக்ட் கட்டத்தில் உள்ளதை எடுத்துவிட்டு, அதில் SCAN என்று டைப் செய்து scan@virustotal.com என்ற முகவரிக்கு மெயில் செய்திடவும். உடனே உங்களுக்குச் சில நொடிகளில் அதே மெயில் திரும்ப வரும்.

அறிக்கையாக வரும் இந்த மெயிலில், எத்தனை ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு மூலம் நீங்கள் அனுப்பிய மெயில், இணைப்பு பைல் ஆகியவை சோதனைக்குள்ளாக்கப்பட்டன என்ற விபரமும், அதன் முடிவும் காட்டப்படும்.

இதிலிருந்து உங்களுக்கு வந்த இமெயில் ஸ்பைவேர், வைரஸ், மால்வேர் உள்ளதா எனத் தெரியவரும். இதற்குக் கட்டணம் இல்லை.


கேள்வி: விஸ்டா தொகுப்பில் கம்ப்யூட்டரை இயக்குகிறேன். சில புரோகிராம்களை இயக்க கட்டளை கொடுத்தால், அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையுடன் மட்டுமே இயக்க முடியும் என்று செய்தி வருகிறது. நான் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் மட்டுமே வைத்து இயக்கிவந்தாலும் இந்த பிரச்னை வருகிறது. எங்கு சிக்கல் உள்ளது? எப்படி இதனைத் தீர்ப்பது?

–உ.மாரியப்பன், மதுரை


பதில்: இது போன்ற வேளைகளில் நமக்கு எரிச்சல்தான் வரும். இதன் அடிப்படைக் காரணம் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றில் கமாண்ட் ப்ராம்ப்ட், டாஸ்க் ஷெட்யூலர், ரெக் எடிட் போன்றவை இயக்கும் வழிகள் சரியாக அப்டேட் செய்யப்படாததே காரணம். இந்த பிரச்னையைத் தீர்க்க ஒரு வழி உள்ளது.

ஸ்டார்ட் பட்டன் அழுத்தி உங்களுக்கு உரிமை தர மறுக்கும் புரோகிராமினை இரண்டு அல்லது மூன்று முறை, ரன் பாக்ஸ் மூலம், இயக்கினால், அந்த புரோகிராம் ஸ்டார்ட் பட்டியலில் இடம் பெறும்.

அல்லது நேரடியாகவே அதனை ஸ்டார்ட் மெனுவில் கொண்டு வாருங்கள். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Run as என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும்.

இதன் பின் தரப்படும் சிறிய கட்டத்தில் Run as Administrator என்று இருக்கும் இடத்தில் உள்ள ரேடியோ பட்டனைக் கிளிக் செய்து ஓகே கொடுத்தால், அந்த புரோகிராம் அட்மினிஸ்ட்ரேட்டர் இயக்கும் புரோகிராமாகத்தானாகவே இயக்கப்படும். இங்கு நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டருக்கான பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும்.


கேள்வி: கம்ப்யூட்டர் பைலுக்கான ப்ராபர்ட்டீஸ் பிரிவில், பட பைல் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் மொபைல் போன் மூலம் எடுத்த போட்டோ பைலுக்கான ப்ராப்பர்ட்டீஸ் எப்படி பெறுவது. மொபைலில் இதற்கு வழி உள்ளதா?

–எஸ். ஆஷா, திருத்தணி

பதில்: மொபைலில் வழி இல்லை. அந்த பட பைலை கம்ப்யூட்டருக்கு மாற்றுங்கள். அது பைலாக ஸ்டோர் செய்யப்படும். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்டீஸ் தேர்ந்தெடுங்கள். கிடைக்கும் விண்டோவில் சம்மரி (Summary) என்பதில் கிளிக் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும் தகவல்களைக் காட்டிலும் கூடுதலாகவே தகவல்கள் கிடைக்கும்.

நன்றி.தினமலர்

நூர்
28-12-2009, 09:55 AM
கேள்வி: என் மகள் எனக்கு தந்த மொபைல் போனில் 5 எம்பி கேமரா உள்ளது என்று சொல்கின்றனர். 5 மெகா பிக்ஸெல் என்றால் அதன் ரெசல்யூசன் எவ்வளவு இருக்கும்? சரியாக இருக்குமா?

-கே.எஸ். சாம்பசிவம், சென்னை


பதில்: ஐந்து மெகா பிக்ஸெல் என்பது 2560 x 1920 என்ற பிக்ஸெல் ரெசல்யூசனைக் குறிக்கும். மொபைல் போன் அல்லது கேமரா தயாரிக்கும் நிறுவனத்தைப் பொறுத்து இதில் சற்று கூட குறைய இருக்கலாம்.


கேள்வி: ஜிமெயிலில் உள்ள நட்சத்திரக் குறி எதனைக் குறிக்கிறது? என்னுடைய இமெயில் அக்கவுன்ட்டில் அதனை நான் பயன்படுத்த முடியுமா?

–எஸ். உதயசந்திரன், பள்ளத்தூர்


பதில்: இந்த கேள்விக்கான பதிலைத் தொடங்கும் முன், ஜிமெயில் என்பது எதனைக் குறிக்கிறது என்று சொல்லிவிடுகிறேன்.

ஏனென்றால், ஜிமெயில் பற்றி தெரியாமல், அதனைப் பயன்படுத்துவது குறித்து அறியாமல் இன்னும் சிலர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். கூகுள் நிறுவனத்தின் இமெயில் கிளையண்ட் புரோகிராம் தான் ஜிமெயில் என்பதாகும். இதனை www.google.co.in என்ற தளத்தில் காணலாம்.

யாரும் எளிதாக இலவசமாக இதில் ஓர் அக்கவுன்ட் திறக்க முடியும். இது பல்வேறு சிறப்பான வசதிகளைத் தருவதாலும், அளவற்ற டிஸ்க் இடம் தருவதாலும், அநேகமாக இணையம் பயன்படுத்துவோரில் 80 சதவீதம் பேர் இதில் ஓர் அக்கவுன்ட் வைத்துள்ளனர்.


ஜிமெயிலின் ஒரு அம்சம் ஸ்டாரிங் என்னும் நட்சத்திரக் குறியீடு இடுவது. ஸ்டார் அடையாளம் ஒன்றை, இமெயில் பக்கத்தில் அமைப்பதன் மூலம், அந்த குறிப்பிட்ட இமெயில் மற்ற மெயில்களிடமிருந்து ஒரு வகையில் சிறப்பானது என்று அடையாளம் அமைக்கிறோம்.

ஒரு மெயிலை ஸ்டார் ஆக்க, வெள்ளை வண்ணத்தில், மெசேஜுக்கான செக் பாக்ஸுக்கு வலது பக்கத்தில் இருப்பதனைக் காணலாம். அதில் கிளிக் செய்தால், அந்த ஸ்டார் மஞ்சள் வண்ணத்தில் மாறி, மெசேஜுக்கு அருகே அமையும். இதன் பின் அந்த மெயில் தனி இடம் பெறுகிறது.


கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். கம்ப்யூட்டரை ஆப் செய்திடுகையில் சில வேளைகளில் "This application failed to initialize, because the window station is shutting down" என்னும் மெசேஜ் காட்டப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது? இதனை நிறுத்த முடியுமா?

–என். ஜெசிந்தா ராணி, காரைக்கால்


பதில்: இந்த செய்தி கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடும்போது மட்டுமே கிடைக்கும். உங்கள் கம்ப்யூட்டர் ஷட் டவுண் செய்திட செய்தியைப் பெற்றபோது, முக்கியமான புரோகிராம் ஒன்று இயங்கிக் கொண்டிருந்தால், இந்த செய்தி கிடைக்கும்.

கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்வதனால், இயங்கத் தொடங்கிய அந்த புரோகிராம் முடங்கிப் போனதால், இந்த செய்தி கிடைக்கிறது. இந்த செய்தி நீங்கள் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் இன்ஸ்டால் செய்து, பின் அது உங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடும்போதும் கிடைக்கும்.

எனவே நீங்கள் புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திடும்போதும், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடும்போதும், அனைத்து புரோகிராம்களும் மூடப்பட்டுவிட்டதா எனச் சோதனை செய்து மூட வேண்டும். வேறு வழியில் இதனை நிறுத்த முடியாது.


கேள்வி: யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ் ஒன்றை பார்மட் செய்திட முடியுமா? முடியும் என்றால் எவ்வாறு?

–டி.சிராஜுதீன், புதுச்சேரி


பதில்: பலர் வெகுநாட்களாகக் கேட்டு வரும் கேள்வி. நீங்கள் பிளாஷ் டிரைவ் ஒன்றை அதன் யு.எஸ்.பி. போர்ட்டில் செருகியவுடன், கம்ப்யூட்டர் சிஸ்டம் அதனை ஒரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிரைவாகப் புரிந்து கொண்டு அறிந்தேற்பு செய்திடும்.

எனவே அதனை எளிதாக பார்மட் செய்திடலாம். (நீங்கள் இன்னும் விண்டோஸ் 95 அல்லது 98 பயன்படுத்திக் கொண்டிருந்தால், பிளாஷ் டிரைவிற் கான டிரைவர்களை இன்ஸ்டால் செய்திடாமல் பார்மட் செய்திடமுடியாது).


பிளாஷ் டிரைவினை ரீபார்மட் செய்திட, மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் உங்கள் பிளாஷ் டிரைவிற்கான ஐகானைக் கண்டறியவும். பின் இந்த ஐகானில் ரைட் கிளிக் செய்து, அதில் கிடைக்கும் மெனுவில் பார்மட் என்பதனைக் கிளிக் செய்தால், டிரைவ் பார்மட் செய்யப்படும்.


கேள்வி: இன்டர்நெட் சைட்களில் உள்ள முக்கிய தகவல்கள் அடங்கிய பக்கங்களை பிரின்ட் எடுக்கையில் வலது பக்கம் உள்ள தகவல்கள் அச்சில் வர மறுக்கின்றன. எப்படி பிரின்ட் எடுத்தாலும் இதே கதிதான். இதற்கு எதனை மாற்றுவது?

–டி. பிரகாச மூர்த்தி, அவினாசி


பதில்: இணைய தளம் மற்றும் இமெயில் மெசேஜ் பிரின்ட் எடுக்கையில் இது போல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இணைய தளம் வடிவமைக்கும் பலர் இதனை உணர்ந்து, எந்தப் பக்கமும் அச்சில் வெட்டப்படாத வகையில் பார்த்துக் கொள்வார்கள்.

அது போன்ற தளங்களைப் பிரின்ட் எடுக்கையில், பேஜ் செட் அப்பில் போர்ட்ரெய்ட் செட் செய்து பிரின்ட் எடுக்கலாம். பிரின்ட் எடுக்கும் முன் பிரின்ட் பிரிவியூ செல்லவும்.

இதற்கு பிரவுசர்களில் வசதி உண்டு. அதில் தகவல்கள் வலது, இடது பக்கங்களில் கட் ஆவது தெரிந்தால், பேஜ் செட் அப் சென்று இதனை லேண்ட்ஸ்கேப் வகைக்கு மாற்றி, பிரிண்ட் பிரிவியூ பார்க்கவும். அநேகமாக இந்த வகையில் சரியாக அச்சாகும்.

இதிலும் சரியாக இல்லை என்றால், தகவல்களை காப்பி செய்து வேர்ட் போன்ற புரோகிராம் பக்கங்களில் பேஸ்ட் செய்து பிரிண்ட் எடுக்கவும். அத்துடன், அந்த தளத்தின் வெப் மாஸ்டருக்கு காரசாரமாக பிரச்சினையை எழுதி ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.


கேள்வி: ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்களை மேற்கொண்டால், சிக்கல்கள் ஏற்படும் என்று சொல்லியே எங்களுக்கு ரெஜிஸ்ட்ரி மாற்றங்கள் ஏற்படுத்துவதனைச் சொல்ல மறுக்கிறீர்கள்.

ரெஜிஸ்ட்ரியின் பேக் அப் காப்பி எடுப்பது எப்படி? பின் மீண்டும் அதனை கொண்டுவருவது எப்படி என்று விளக்கவும்.

–எஸ். கலாவல்லி, மதுரை


பதில்: முன்பு இது குறித்து தனிக் கட்டுரை ஒன்று இந்த பகுதியில் வெளியிடப்பட்டது. விஷயத்தைச் சுருக்கமாகக் கூறுகிறேன். Start அழுத்தி கீதண பாக்ஸ் செல்லவும்.

அதில் Regedit என டைப் செய்து என்டர் அழுத்தவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் File மெனு அழுத்தி, அந்த பிரிவில் Export என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது கிடைக்கும் பாக்ஸில் கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, ரெஜிஸ்ட்ரி பேக் அப் பைலுக்கு ஒரு பெயர் கொடுத்திடவும்.

இப்போது உங்கள் ரெஜிஸ்ட்ரி பைலுக்கான பேக் அப் ரெடி. இங்கு ஒரு சிறு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.

விண்டோஸ் எப்போதும் தான் ஷட் டவுண் ஆகும்போது ரெஜிஸ்ட்ரியை பேக் அப் செய்துவிட்டுத்தான் ஷட் டவுண் ஆகும். இதனையும் சிக்கல் ஏற்படுகையில் பயன்படுத்தலாம்.

அடுத்து எப்படி ரெஜிஸ்ட்ரி பேக் அப் பைலை மீண்டும் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

பொதுவாக விண்டோஸ் உங்கள் சிஸ்டத்தில் உள்ள ரெஜிஸ்ட்ரியை இயக்கத்திற்குக் கொண்டு வருகையில் ஏதேனும் பிரச்னை யைச் சந்தித்தால், தானாகவே பேக் அப் பைலை இயக்கத் திற்குக் கொண்டு வரும்.

எனவே நீங்கள் பேக் அப் செய்த ரெஜிஸ்ட்ரி பேக் அப்பிற்கு வேலை இருக்காது.

ஆனால் நீங்கள் தயாரித்த பேக் அப் பைலைத் தான் பயன்படுத்த வேண்டும் என எண்ணினால், ரெஜிஸ்ட்ரி எடிட்டரில், ரெஜிஸ்ட்ரி மெனுவில் கிளிக் செய்திடவும்.

பின் Import Regisry என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து நீங்கள் வைத்துள்ள உங்கள் பேக் அப் பைலைச் சுட்டிக் காட்டினால், அந்த ரெஜிஸ்ட்ரி பைல் இயக்கத்திற்குக் கொண்டு வரப்படும்.


கேள்வி: சிஸ்டம் அப் டைம் என்பது என்ன? அதனை எப்படி அறிவது?

–கே. கார்த்திகேயன், விழுப்புரம்

பதில்: சிஸ்டம் அப் டைம் (System Uptime) என்பது, இறுதியாக சிஸ்டம் ஆன் செய்து இயங்கத் தொடங்கியதிலிருந்து இப்போது வரை உள்ள கால நேரம். அதாவது கடைசியாக கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும் நேரம். இதனை எப்படி அறிவது?

உங்களுடைய சிஸ்டம் எக்ஸ்பி எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதில் Start பட்டன் அழுத்தி Run கட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். இதில் CMD என டைப் செய்து என்டர் அழுத்த கருப்பு திரையில் டாஸ் ப்ராம்ப்ட் என்று சொல்லப்படும் கட்டளைப் புள்ளி கிடைக்கும்.

இதில் Systeminfo என இடைவெளி விடாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். இப்போது உங்கள் சிஸ்டம் படிக்கப்பட்டு, சிஸ்டம் குறித்த தகவல்கள் கிடைக்கும். இதில் 11 ஆவது வரியில் System Uptime எனக் காட்டப்பட்டு அதன் எதிரே, இதுவரை உங்கள் கம்ப்யூட்டர் இறுதியாக ஆன் செய்ததிலிருந்து எவ்வளவு நேரம் ஓடியுள்ளது எனக் காட்டப்படும்.

நாட்கணக்கில் ஓடியிருந்தாலும் Days, Hours, Minutes, Seconds எனக் காட்டப்படும். மேலும் சிஸ்டம் குறித்த பல ருசிகரமான தகவல்கள் அதில் இருக்கும்.


கேள்வி: குழந்தைகள் கல்வி கற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில தளங்களின் முகவரிகளைத் தரவும்.

-கே. ஏ. சிற்சபேசன், காரைக்குடி

பதில்: இந்த பகுதியில் அடிக்கடி தரப்படுகிறதே. இன்னும் பயன்படுத்த வில்லையா! அதனா லென்ன! இதோ தருகிறேன்.
http://tux4kids. alioth.debian. org/tuxmath/download.php


http://crayonphysics.en. softonic.com/download


www.kiranreddys.com


http://ldd.lego.com/download


http://scratch.mit.edu/


இன்னும் நிறைய தளங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு இவற்றை அறிமுகப்படுத்தி உடனிருந்து அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று கோடி காட்டுங்கள். நம் குழந்தைகள் கோட்டையே கட்டிவிடுவார்கள். வழி காட்டி அவர்களை உற்சாகப்படுத்தினால் போதும்.

நன்றி.தினமலர்.11/01/10

குணமதி
28-12-2009, 10:40 AM
*****கேள்வி: வேர்டில் தயாராகும் டாகுமெண்ட்களுக்குத் தானாக பேக் அப் காப்பி எடுக்கும் வகையில் எப்படி செட் செய்வது?*****

இந்த வினாவிற்கு விடைதந்திருக்கிறீர்கள். நன்றி.

தானாக எடுக்கப்படும் "பேக் அப் காப்பி" எங்கே சேமிக்கப்படும்?
கணிப்பொறியில் எனக்கு மிகக் குறைவான அறிமுகம் தான்!

நூர்
28-12-2009, 03:25 PM
நன்றி. எனக்கும் அது தெரியவில்லை.நம் மன்ற நண்பர்கள் உதவுவார்கள்...

நூர்
04-01-2010, 10:59 AM
ஜனவரி 03,2010


கேள்வி: விர்ச்சுவல் மெமரி என்பது என்ன? இதுவும் ஒருவகை ராம் மெமரியா?

–கா.சிவராஜ் ரத்தினம், திருத்தணி

பதில்: ஆங்கிலத்தில் இதனை nonphysical memory என்று சொல்வார்கள். விண்டோஸ் தன் சிஸ்டத்தில் பிசிகல் மெமரி எனச் சொல்லப்படும் ராம் மெமரி போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றால்,

விர்ச்சுவல் மெமரியினைப் பயன்படுத்தும். வழக்கமான ராம் மெமரியில் போட்டுப் பயன்படுத்தும் டேட்டாவினை, உங்கள் ஹார்ட் டிரைவில் வைத்துப் பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக, உங்கள் கம்ப்யூட்டரில் 1 ஜிபி ராம் மெமரி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

நீங்கள் அது, இது என்று நிறைய அப்ளிகேஷன் சாப்ட்வேர்களை இயக்குகிறீர்கள். இவை எல்லாம் இயங்க எடுத்துக் கொள்ளும் மெமரி 1 ஜிபிக்கு மேல் செல்கையில், விண்டோஸ் மீதம் உள்ள டேட்டாவினை, ஹார்ட் டிரைவில் வைத்துப் பயன்படுத்தும்.

கவலைப்பட வேண்டாம்; வேலை முடிந்தவுடன், விண்டோஸ், ஹார்ட் டிரைவில் எடுத்த இடத்தைக் காலி செய்து உங்களுக்கு வழங்கிவிடும்.
அப்படியானால் கூடுதலாக ராம் மெமரி சிப்களை வாங்கி ஏன் இணைக்கச் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

ராம் மெமரி விரைவாகச் செயல்படும். விர்ச்சுவல் மெமரி அப்படி இல்லை. இப்போது புழக்கத்தில் உள்ள புரோகிராம்களுக்கு குறைந்தது 2 ஜிபி ராம் மெமரி வேண்டியதுள்ளது.


கேள்வி: இலவசமாக இணையத்தில் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை, அவற்றின் திறன் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டவும்.

– ஞா. ஜேசுதாசன், காரைக்குடி


பதில்: கொடுக்க வேண்டிய பதிலையும் வரையறை செய்துவிட்டீர்கள். அதற்காக நான் அனைத்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையும் சோதனை செய்திட்டு தர வரிசையிட முடியாது.

சென்ற ஆண்டில் அதிகம் டவுண்லோட் செய்த எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியலைத் தருகிறேன். தேடுதல் தளம் மூலம், இவை கிடைக்கும் தள முகவரி பெற்று, டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்.


இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் – அதிகம் டவுண்லோட் செய்யப்பட்டவை.


1. அவிரா ஆண்ட்டி வைரஸ் பெர்சனல் (Avira Anti Virus Personal)


2.அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் ஹோம் எடிஷன் (Avast Anti Virus Home Edition)


3.ஏ.வி.ஜி. 8.5 ப்ரீ ( AVG 8.5 Free)


4.மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி சொல்யூசன்ஸ் (Microsoft Securtity Solutions)


5.பி.சி. டூல்ஸ் ஆண்ட்டி வைரஸ் பிரீ எடிஷன் (PC Tools Anti Virus Free Edition)



கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இடையே சில செல்கள் காலியாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இந்த காலி செல்கள் சார்டிங் செய்திடுகையில் தொல்லை கொடுக்குமா?

-ஆ. சிவபரிமளா, திண்டுக்கல்


பதில்: காலியாக உள்ள செல்கள் தொல்லை கொடுக்காது. அவற்றுடன் இணைந்த செல்களை அசெண்டிங் அல்லது ‘by eight’ என எந்த வகை சார்டிங் மேற்கொண்டாலும், காலியான செல்கள் இறுதியில் காட்டப்படும்.


கேள்வி: பைட் என்பது ஒரே சொல்லா? இரு சொற்களின் சுருக்கமா?

–மா. சந்திர சேகரன், திருமங்கலம்


பதில்: பைட் என்பது‘by eight’ என்ற இரு சொற்களின் சுருக்கமாகும்.


கேள்வி: வேர்ட் 2010 சோதனைத் தொகுப்பை யார் வேண்டுமானாலும் டவுண்லோட் செய்து பயன் படுத்தலாமா? மைக்ரோசாப்ட் தளத்தின் எந்த பிரிவில் இது கிடைக்கிறது? அதன் முகவரி என்ன? இதனைப் பயன்படுத்திப் பார்க்க நம் கம்ப்யூட்டரில் என்ன தேவை? சற்று விளக்கமாகப் பதில் தரவும்.

–சி. ரஞ்சன் குமார், சென்னை


பதில்: யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். http://www.microsoft.com /office/2010/en/downloadofficeprofessionalplus/default.aspx என்ற முகவரிக்குச் சென்று, இதனை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் கேட்டுள்ள மற்ற தகவல்களையும், சார்ந்த விளக்கங்களையும் அடுத்த வாரம் கட்டுரையாகத் தருகிறேனே!


கேள்வி: மொபைல் போன்களில் திரை பற்றிக் குறிப்பிடுகையில் QVGA என்று குறிப்பிடுகின்றனர். இது எந்த அளவினை அல்லது தன்மையைக் குறிப்பிடுகிறது?

–ஆ. திருமாறன், ஸ்ரீவில்லிபுத்தூர்


பதில்: QVGA என்பது Quarter Video Graphics Array என்ற சொற்களின் சுருக்கம்.

இது 240x320 என்ற அளவில் பிக்ஸெல்களைக் கொண்டது. மொபைல் போன்களில் பலவற்றில் இந்த வகை டிஸ்பிளே திரையைக் காணலாம்.

இன்னொரு வகை டிஸ்பிளே திரையினை VGA (Video Graphics Array) என அழைப்பார்கள். இது 640 x 480 என்ற அளவில் பிக்ஸெல்களைக் கொண்டது.

வழக்கத்திற்கு மாறாகச் சற்று பெரிய திரையினைக் கொண்ட போன்களில் இந்த வகை டிஸ்பிளே பயன்படுத்தப்படும்.

இன்னும் சற்றுப் பெரிய திரை எனில் அதில் WVGA (Wide Video Graphics) டிஸ்பிளே 800 x 480 பிக்ஸெல்களாக இருக்கும். HTC HD என்ற போன் இந்த வகை டிஸ்பிளேயைப் பயன்படுத்துகிறது. இதன் ஸ்கிரீன் அளவு 3.8 அங்குலம். தற்போது இன்னொரு வகையும் சில போன்களில் பயன்படுத்தப்படுகிறது.

அது OLED Organic Light Emitting Diode என்ற வகையைச் சேர்ந்தது. நோக்கியா என் 85 இந்த வகை டிஸ்பிளே திரையைப் பயன்படுத்துகிறது. இன்னும் பலவகை டிஸ்பிளே அளவுகள் இருந்தாலும், மொபைல் போன்கள் பெரும்பாலும் இவற்றையே பயன்படுத்துகின்றன.


கேள்வி: ஸ்கிராம்ப்ளிங் என்பதும் ஸ்ட்ரீமிங் என்பதுவும் ஒரே தன்மையைக் குறிக்கிறதா? இதில் எது உயர்ந்தது?

–எஸ். டி.சுரேஷ் குமார், சென்னை


பதில்: இரண்டும் வெவ்வேறு. எனவே ஒப்பிட முடியாது. ஸ்கிராம்ப்ளிங் என்று நீங்கள் கேட்டிருப்பது Scrambling என்பதைத்தான் என்று நினைக்கிறேன்.

இது கம்ப்யூட்டரில் டேட்டாவினை அடுத்தவர் அறியாமல் இருக்கும் வகையில் குழப்பி, இன்னொருவருக்கு அனுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் செயல்.

இதில் குழப்பிய டேட்டாவினை மீண்டும் எப்படிப் பெறுவது என்பதனை அனுப்புபவரும், பெறுபவரும் தெரிந்திருக்க வேண்டும். இல்லையே டேட்டா மீண்டும் கிடைக்காது.

ஸ்ட்ரீமிங் (Streaming) என்பது எந்தவித வயர் இணைப்பு இன்றி ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை அதனை ஏற்றுக் கொள்ளும் சாதனத்திற்கு கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து அனுப்பப்படும் தொழில் நுட்பமாகும். எனவே இந்த சொல்லைப் பயன்படுத்துகையில் ஸ்ட்ரீமிங் ஆடியோ, வீடியோ எனச் சொல்வார்கள்.


கேள்வி: இன்டர்நெட் வெப்சைட்டுகளைப் பார்வையிடுகையில் சிலவற்றில் (Streaming) என்று காட்டப் படுகிறது. இதனைக் கிளிக் செய்தால் வைரஸ் ஏதேனும் வருமா?


–கே.சுந்தரமூர்த்தி, மேலூர்


பதில்: நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தில் வீடியோ காட்சியாக உங்களுக்குத் தகவல் தர ஏதேனும் வீடியோ பைல் ஒன்று அங்கு கிளிக் செய்திடுகையில் இயக்கப்படும்.

இதற்காகத்தான் Click to activate என்று லிங்க் தரப்படுகிறது. அங்கு பிளாஷ் அனிமேஷன் பைல் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். "Click to activate and use this control" போன்ற அறிவிப்பும் இருக்கலாம்.

அடோப் பிளாஷ் பிளேயர், ஆதர்வேர் பிளேயர், ஷாக்வேவ் பிளேயர், அடோப் ரீடர், சன் ஜாவா, ஆப்பிள் குயிக் டைம், ரியல்நெட்வொர்க் ரியல் பிளேயர் மற்றும் சில ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் ஆகிய புரோகிராம்களில் ஏதேனும் ஒன்று வெப்சைட்டில் பயன்படுத்தப்பட்டிருந்தால் நிச்சயம் இந்த செய்தி கிடைக்கும்.

இது அந்த வெப்சைட்டில் பதிக்கப்பட்ட இயங்கக்கூடிய பைலும் அதன் புரோகிராமும் ஆகும். இதனைக் கிளிக் செய்தால் மட்டுமே இதனுடன் இணைந்த புரோகிராம் இயங்கத் தொடங்கும். பல வேளைகளில் இதனை டவுண்லோட் செய்து இயக்க வேண்டியதிருக்கும்.


இதில் கிளிக் செய்தால் வைரஸ் வருமா? என்ற கேள்விக்கு வரலாம், வராமலும் இருக்கலாம் என்பதே பதில். உங்களுக்கு ஒரு இமெயில் வந்து அதிலிருந்து ஏதேனும் ஒரு வெப்சைட் போகச் சொல்லி அதில் இது போன்ற கிளிக் விவகாரங்கள் இருந்தால், ஒதுங்கிப் போவது நல்லது. வைரஸ் பைல் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வாய்ப்பு இருக்கும்.


கேள்வி: இலவச பயர்வால் ஒன்றை அமைக்க விரும்புகிறேன். இவை கிடைக்கும் தளங்களைத் தேடிய போது, பல முகவரிகள் கிடைத்தன. ஆனால் எது சிறந்தது என்று தெரியவில்லை. வழி காட்டவும்.

–ஆர். சிவகுமார், பொள்ளாச்சி


பதில்: கீழ்க்காணும் இரு தளங்களில் கிடைக்கும் இலவச பயர்வால்கள் பதிந்து இயக்க எளிதானவை. http://www.sunbeltsoftware.com/Kerio.cfm http://www.zonelabs .com/ store/content /company/products/znalm/fre eDownload.jsp முதலில் இலவசமாகக் கிடைக்கும் இந்த பயர்வால், சில நாட்களுக்குப் பின் அடிப்படை வசதிகளை மட்டுமே தரும். கட்டணம் செலுத்தினால் கூடுதல் வசதிகளுடனும் தொடர்ந்து கிடைக்கும்.

நன்றி தினமலர்

நூர்
18-01-2010, 12:58 PM
ஜனவரி 17,2010

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் பல டிப்ஸ்களைப் பயன்படுத்த, மெனு பார் சென்று பைல் கிளிக் செய்து பின் தேவையான பிரிவைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறீர்கள். பல வேளைகளில் மெனு பாரே காணாமல் போய்விடுகிறது. அப்போது என்ன செய்வது?

–டி.நமசிவாயம், புதூர், மதுரை


பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து, பின் மேலாகக் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். அங்கு கிடைக்கும் மெனுவில் favorites, status bar, command bar எனப் பல பிரிவுகள் கிடைக்கும்.

இதில் Menu bar என்பதற்கு முன் டிக் அடையாளம் உள்ளதா எனப் பார்க்கவும். இல்லை எனில் மவுஸைக் கொண்டு டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இனி மெனு பார் மேலாக உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.

அடிக்கடி காணாமல் போகிறது என்றால், வேறு ஒருவர் இதனைப் பயன்படுத்துகையில் டிக் அடையாளத்தை எடுத்துவிடுகிறார் என்று தெரிகிறது.


கேள்வி: எம்.எஸ். ஆபீஸ் 2010 பீட்டா தொகுப்பைப் பதித்து இயக்கிப் பார்க்க, கம்ப்யூட்டரின் ஹார்ட்வேரில் கட்டாயம் இருக்க வேண்டிய அம்சங்களைப் பற்றித் தரவில்லையே நீங்கள்? தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

– ஆர். கணேச மூர்த்தி, இராஜபாளையம்


பதில்: ஆம், விட்டுப் போயிற்று. இதோ கீழே தருகிறேன்.

1. வேகமாக இயங்கக் கூடிய இன்டர்நெட் இணைப்பு அவசியம்.


2. கீழே தரப்படும் குறைந்த பட்ச ஹார்ட்வேர் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும். 500 MHz 32 அல்லது 64 பிட் ப்ராசசர்; அதற்கும் மேலாக இருப்பது நல்லது.

சிஸ்டம் மெமரி 256 எம்.பி. டிஸ்க் ஸ்பேஸ் 3.5 ஜிபி. 1024 x 768 ரெசல்யூசன் அல்லது கூடுதலான ரெசல்யூசனுடன் கூடிய மானிட்டர். டிவிடி ஆர்/டபிள்யூ டிரைவ்.


3. ஆப்பரேட்டிங் சிஸ்டம் கீழ்க் குறித்துள்ளவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் – விண்டோஸ் எக்ஸ்பி + சர்வீஸ் பேக் 3 (32 பிட்), விண்டோஸ் விஸ்டா + சர்வீஸ் பேக் 1, விண்டோஸ் 7 – 32 அல்லது 64 பிட்.

டவுண்லோட் செய்த பின் இயக்கிப் பார்க்கையில் பிரச்னைகள் ஏற்பட்டால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.


கேள்வி: பயர்பாக்ஸ் தொகுப்பிற்கு தொடர்ந்து ஆட் ஆன் புரோகிராம்கள் உருவாக்கப்பட்டு கிடைப்பதாக எழுதி உள்ளீர்கள். தற்சமயம் எத்தனை தொகுப்புகள் அந்த வகையில் உள்ளன. சிறந்தனவற்றை எங்களுக்குத் தருவீர்களா?

–டி.கே. சுகந்தி சீனிவாசன், பொள்ளாச்சி


பதில்: பயர்பாக்ஸ் பிரவுசருக்கான தொகுப்புகள் பல உருவாக்கப்பட்டு இணைய தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. சென்ற மாதம் வரை இவற்றின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டிவிட்டது.

கம்ப்யூட்டர் மலரில் அவ்வப்போது பயனுள்ள ஆட் ஆன் தொகுப்புகள் குறித்த தகவல்கள் தரப்பட்டு வருகின்றன. இந்த இதழிலும் ஒரு புரோகிராம் குறித்து எழுதப்பட்டுள்ளது.


கேள்வி: என் வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள ஹெடரில் அன்றாடத் தேதி வரும்படி அமைக்க முடியுமா? எந்த தேதியில் டாகுமெண்ட் திறந்து பார்க்கிறோமோ, அந்த தேதி வர வேண்டும்.

–சி.ஆர். விஜயமாலா, சின்னமனூர்


பதில்: டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். ஹெடர் கிடைக்க வியூ மெனுவில் ஹெடர் அண்ட் புட்டர் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஹெடர் உங்களுக்குக் காட்டப்படும். இனி அதில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் இன்ஸெர்ட் மெனு சென்று அதில் பீல்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பின் கிடைக்கும் பட்டியலில் டேட் என்பதைத் தேர்ந்தெடுத்தால், உடனே எந்த பார்மட் என்பதனைத் தேர்ந்தெடுக்க ஒரு பட்டியல் தரப்படும். அதில் தேவையான பார்மட்டினைத் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும். இனி அந்த நாளின் தேதி நீங்கள் தேர்ந்தெடுத்த பார்மட்டில் கிடைக்கும்.


கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் வெர்ஷன் என்ற வகையில் நம் பைலில் பல பதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று சொல்கிறார்கள். இதனை எப்படி ஏற்படுத்தலாம்?

–கே.எல். சுதாகர், சென்னை


பதில்: இதுவரை கம்ப்யூட்டர் மலரில் சொல்லாத ஒரு தகவலைக் கேட்டுள்ளீர்கள். நன்றி. வேர்ட் டாகுமெண்ட்களைத் தயார் செய்கையில், டாகுமெண்ட் ஒன்றில் நாம் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கேற்ப அதன் வெவ்வேறு பதிப்புகளை (Versions) ஒரே பைலில் தயார் செய்து சேவ் செய்திடலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் நாம் எப்போது என்ன முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தினோம் என்று அறிந்து அவற்றை ஏற்றுக் கொள்ளலாம்.

இதற்கு மாற்றங்களை ஏற்படுத்திய பின் File மெனு சென்று Versions என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வெர்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். அதில் Save Nowஎன்பதைக் கிளிக் செய்திடவும்.

உடன் Save Version என்ற பாக்ஸ் காட்டப்பட்டு, அதில் அந்த வெர்ஷனுக்கான உங்கள் குறிப்புகளை நீங்கள் அமைக்கலாம். இதில் எடுத்துக்காட்டாக, நீங்கள் எதற்காக இந்த வெர்ஷனை, அந்த நிலையில் சேவ் செய்கிறீர்கள் என எழுதி வைக்கலாம்.

பின் குளோஸ் கிளிக் செய்து மூடினால், வேர்ட் அந்த வெர்ஷனை சேவ் செய்திடும். இது உங்கள் டாகுமெண்ட் அந்த நேரத்தில் எப்படி தோற்றமளிக்கிறது என்பதேயாகும். பின் மீண்டும் நீங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் இதில் ஏறாது. இதில் என்ன சிறப்பு என்றால் அனைத்து வெர்ஷன்களும் ஒரே பைலில் இருக்கும்.


கேள்வி: இன்டர்நெட் முழுவதையும் மொத்தமாக கிராஷ் செய்து அழித்திட முடியுமா?

–என். ரஞ்சன் தாஸ், சென்னை


பதில்: நல்ல கற்பனைதான்; அல்லது பயத்தில் விளைந்த எண்ணம்தான். இதற்குப் பதில் ஒரு பெரிய "முடியாது' என்பதுதான். இன்டர்நெட் என்பது பல்வேறு நெட்வொர்க்குகள் கூட்டாக இணைக்கப்பட்டதாகும்.

இதனை பல்வேறு அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், அரசுகள் நிர்வகிக்கின்றன. கட்டுப்படுத்துகின்றன. மேலும் இது தேவைக்கு அதிகமான நிலைகளில் நகல் செய்யப்பட்டும் அமைக்கப் பட்டுள்ளது.

அதாவது ஒரு நெட்வொர்க்கில் ஒரு பகுதி கிராஷ் ஆனாலும், பயனாளர்கள் அதில் உள்ளவற்றை நெட்வொர்க்கின் இன்னொரு பகுதியில் பெற முடியும். பெரிய அளவில் நில அதிர்ச்சி, மின்சக்தி அதிகமாகிச் சேதம் விளைவித்தல் போன்றவை ஏற்பட்டாலும், இன்டர்நெட் முழுமையும் அழியாது.

எடுத்துக் காட்டாக 2007 ஆம் ஆண்டின் முற்பகுதியில், பெரிய அளவில் தொடர் நில அதிர்ச்சி ஏற்பட்ட போது கடலுக்கடியில், இன்டர்நெட் இணைப்பு தரப் பதிக்கப்பட்ட கேபிள்கள் சேதத்தைச் சந்தித்தன.

இதனால் இன்டர்நெட் மற்றும் தொலைபேசி தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டு, பின் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு சரி செய்யப்பட்டன. எனவே இன்டர்நெட் முழுமையும் அழிந்துவிடுமோ என்ற பயம் அறவே வேண்டாம்.


கேள்வி: 404 என்னும் எர்ரர் செய்தி இன்டர்நெட் பிரவுசிங் போது ஏன் ஏற்படுகிறது? அப்போது நான் என்ன செய்திட வேண்டும்?

–கா. உஷா தேவி, தாம்பரம்


பதில்:இன்டர்நெட் தேடலில் நீங்கள் கொடுத்த முகவரியில் உள்ள தளத்தினைத் தேடிப் பெறாத நிலையில், உங்களின் சர்வர் உங்களுக்குத் தரும் செய்தி இது. "Page Not Found" என்று கூட வரலாம்.

பல வேளைகளில் இந்த செய்தியுடன் நீங்கள் என்ன செய்யலாம், அல்லது என்ன செய்திருக்கலாம் என்று குறிப்புகளும் தரப்படும்.

நீங்கள் முகவரியைச் சரியாக டைப் செய்தீர்களா? என்பது பொதுவான ஒரு தகவல். பொதுவாக அந்த முகவரியில் உள்ள தளம் சர்வரில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம்.

எனவே தேடும் முயற்சியைக் கைவிட லாம். அல்லது வேறு ஒரு பிரவுசரின் மூலம் அதனைப் பெற முயற்சிக்கலாம். ஆனால் அது அவ்வளவு மாறுதலான முடிவைத் தரும் என்று எதிர்பார்க்க முடியாது.


இருப்பினும் கூகுள் இதில் கை கொடுக்கலாம். பொதுவாக கூகுள் தான் இன்டெக்ஸ் செய்திடும் இணைய தளங்களை தன் கேஷ் மெமரியில் வைத்திருக்கும். எனவே மேலே நீங்கள் தந்திருக்கும் பிழைச் செய்தி கிடைத்தால் கூகுள் சர்ச் பாக்ஸ் பெற்று, அதில் cache எனக் கொடுத்து பின் நீங்கள் தந்துள்ள இணைய முகவரியைத் தரவும்.

உங்கள் இணைய முகவரியில், அந்த தளத்தின் அடிப்படை முகவரிக்குப் பின், அதன் பக்கங்களுக்கான முகவரி பெயர் இருப்பின், அதனை நீக்கி விட்டு தளத்தின் பெயரை மட்டும் அமைத்துத் தேடிப் பார்க்கவும். தளம் கிடைத்தால் பின் அதில் நீங்கள் தேடும் அந்த குறிப்பிட்ட பக்கத்தைத் தேடலாம்.


கேள்வி: என் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சில வேளைகளில் எண்கள் பெருக்கி அமைக்கும்போது பல தசம ஸ்தானங்களில் விடை கிடைக்கிறது. சில வேளைகளில் அது ரவுண்ட் ஆப் செய்யப்பட்டு கிடைக்கிறது. இதில் உள்ள லாஜிக் புரியவில்லை. விளக்கவும்.

– ஆர். சிவாஜி. விருதுநகர்


பதில்: சில எடுத்துக் காட்டுக்களை நீங்கள் தந்து கேட்டிருக்கலாம். பரவாயில்லை; நானே தருகிறேன். B2 செல்லில் 33.33333333 என்ற மதிப்பைத் தரவும். ஆ3யில் 33.333333333 எனத் தரவும்.

அதாவது முதலில் தந்ததைக் காட்டிலும் ஒரு இலக்கம் கூடுதலாக. அடுத்து செல் C2 ல் = B2*3 என பார்முலா அமைக்கவும். செல் C3 ல் =B3*3 என பார்முலா அமைக்கவும்.

இப்போது விடையாக C2 ல் 99.99999999 எனக் கிடைக்கும். C3 ல்100 எனக் கிடைக்கும். இது ஏன் இப்படி என்பதுதான் உங்கள் கேள்வி. எக்ஸெல் முதலில் ஒரு ஒர்க் ஷீட்டை உருவாக் குகையில் ஜெனரல் பார்மட்டை பின்பற்றுகிறது.

எண்கள் பத்து இலக்கங்களாக அமைக்கும் வகையில் உள்ளதே ஜெனரல் பார்மட். புள்ளிக்கு வலது அல்லது இடது பக்கம் என்றிராமல் மொத்தம் பத்து இலக்கங்கள் அமைக்கப்படும்.

இலக்கங்கள் 10க்கு மேல் கொண்ட தாக அமைக்கப்பட்டாலோ அல்லது கிடைக்கும் விடை 10 இலக்கங்களுக்கு மேல் இருந்தாலோ அது அடுத்த எண்ணுக்கு ரவுண்ட் ஆப் செய்யப்பட்டு காட்டப்படும். புள்ளிக்கு இடது பக்கம் அதிக இலக்கங்கள் இருந்தால், அதற்கேற்ற சயின்டிபிக் நொட்டேஷன் முறையில் எண் காட்டப்படும். இதனை நீங்கள் மாற்ற வேண்டும் என்றால் செல் பார்மட்டினை மாற்ற வேண்டும்.

நன்றி.தினமலர்

நூர்
25-01-2010, 04:08 AM
ஜனவரி 24,2010


கேள்வி: கம்ப்யூட்டர் கட்டமைப்பில் சவுண்ட் கார்டு, கிராபிக் கார்டு மற்றும் பல கார்டுகள் குறித்து அடிக்கடி எழுதுகிறீர்கள். இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன? அட் லீஸ்ட், சுருக்கமாகவாவது விளக்கம் தரவும்.

–சி.ஆனந்த் குமார், தாம்பரம்


பதில்: பெர்சனல் கம்ப்யூட்டர் வடிவமைப்பில் பலவகையான கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் சில அதன் கட்டமைப்பில் அடிப்படைப் பயனைத் தருவதாக அமைகின்றன.

சில, தேவைப் பட்டால் வாங்கி இணைத்துப் பயன் தருவதாக உள்ளன. பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் சவுண்ட் கார்ட், வீடியோ கார்ட் மற்றும் நெட்வொர்க் கார்ட் கூட இணைக்கப்பட்டே வரலாம்.

அல்லது இப்போது கிடைக்கும் நவீன கம்ப்யூட்டர்களில் இவை மதர்போர்டில் ஒருங்கிணைக்கப்பட்டே கிடைக்கின்றன. இவை குறித்து நீங்கள் கேட்டுக் கொண்டபடி இங்கு சுருக்கமாகத் தருகிறேன்.


வீடியோ கார்ட்: இதனை கிராபிக்ஸ் அடாப்டர், டிஸ்பிளே அடாப்டர் அல்லது வீடியோ அடாப்டர் என்றும் கூறுவார்கள். திரையில் தகவல்களைக் காட்ட பயன்படுத்தப்படும் சிறிய சர்க்யூட் போர்டு.

நீங்கள் உங்கள் மானிட்டர் திரைக்கென அமைத்திடும் ரெசல்யூசன், வண்ணங்களின் எண்ணிக்கை, மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட் ஆகிய அனைத்தும் வீடியோ கார்டின் திறன் மற்றும் மானிட்டரின் வரையறைகளைப் பொருத்து செட் செய்யப்படும்.


சவுண்ட் கார்ட்: பேசுவது அல்லது ஒலியை வாங்கிப் பதிய மைக்ரோபோன் இணைப்பு, ஸ்பீக்கர் மற்றும் ஹெட் போன் இணைப்பு அல்லது ஒலியை வெளியே தரத்தேவையான இணைப்பு வழி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் பெரும்பாலானவற்றில் MIDI கண்ட்ரோலர்கள் இருக்கும்.


நெட் வொர்க் இன்டர்பேஸ் கார்ட்: இதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக "NIC" எனவும் அழைப்பார்கள். இதனைக் கம்ப்யூட்டரில் இணைத்தால், நெட்வொர்க் ஒன்றுடன் கம்ப்யூட்டரை இதன் வழி இணைக்கலாம்.


பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில், அதன் விலையைக் குறைப்பதற்காக, இந்த கார்டுகளில் குறைவான திறன் கொண்டவற்றை இணைத்துத் தருவார்கள். உங்கள் கம்ப்யூட்டர் சிப்பின் திறன் பார்த்து, அவற்றின் இடத்தில் வேறு கூடுதல் திறனுள்ள கார்டுகளை வாங்கி, இணைத்துப் பயன்படுத்தி, கூடுதல் வசதிகளைப் பெறலாம்.


கேள்வி: நான் விண்டோஸ் விஸ்டா வைத்திருக்கிறேன். என் கம்ப்யூட்டரில் அதனுடன் வந்த பல கேம்ஸ்கள் (Solitaire, Free Cell and Minesweeper) இருக்கின்றன. இவை எனக்குத் தேவை இல்லை. சிஸ்டத்துடன் வந்ததனால் இவற்றை நீக்கலாமா? எப்படி நீக்கலாம்?

–கே.மஞ்சுளா, கோயம்புத்தூர்


பதில்: நீங்கள் குறிப்பிடும் கேம்ஸ்களை நீக்கலாம். அதனால் சிஸ்டம் இயங்கும் தன்மையில் எந்த மாற்றமும் இருக்காது. Start>Control Panel செல்லவும்.

பின் Programs and Features என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இதில் "Turn Windows Features On or Off" என்ற ஆப்ஷனைக் காணலாம். இதில் கிளிக் செய்தால் விண்டோ ஒன்று கிடைக்கும்.

இதில் உள்ள "Games" என்னும் பிரிவை விரிக்கவும். எந்த கேம்ஸ் எல்லாம் வேண்டாமோ அவற்றின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இந்த கேம்ஸ் அன் இன்ஸ்டால் ஆகிவிடும்.

பின் எப்போது இவை தேவையோ, அப்போது மீண்டும் இதே வழியாக அவற்றை இன்ஸ்டால் செய்திடலாம். என்ன இருந்தாலும் கேம்ஸ் இல்லாத ஒரு கம்ப்யூட்டரா என்று உங்கள் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் சண்டைக்கு வரலாம். எதற்கும் அவர்களையும் கேட்டுக் கொள்ளுங்கள்.


கேள்வி: கேப்ஸ் லாக் கீ நம்மை அறியாமல் அழுத்தப்படுகையில் சிறிய அளவில் ஒலி கேட்கும் வகையில் செட் செய்வது எப்படி என்பதைத் தயவு செய்து விளக்கவும்.

–கா. பிரமோத், சென்னை


பதில்: நீங்கள் கேட்கும் வசதி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ளது. கேப்ஸ் லாக் மட்டுமின்றி, Num Lock மற்றும் Scroll Lock key ஆகியவற்றையும் அழுத்துகையில் ஒலி ஏற்படும்.

இதனால் நாம் பெரிய டாகுமெண்ட்களை வேக வேகமாக டைப் செய்திடுகையில் நம்மை அறியாமல் இந்த கீகளை அழுத்துவது நமக்கு அறிவிக்கப்படுகிறது. இதனை எச்சரிக்கையாக நாம் எடுத்துக் கொண்டு செயல்படலாம்.

இந்த கீகளுக்கும், குறிப்பிட்ட இந்த வசதிக்கும் டாகிள் கீஸ் (Toggle Keys) என்று பெயர். இதனை இயக்க ஸ்டார்ட் பட்டன் அழுத்தி கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுத்து அதில் Accessibility Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது Accessibility Options என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உள்ள பிரிவுகளில் Toggle Keys என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு Use Toggle Keys என்று உள்ள இடத்தில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் அப்ளை மற்றும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


கேள்வி: கட், டெலீட், பேக் ஸ்பேஸ் இவற்றில் எதை அழுத்தினாலும் அது பின் நோக்கியோ அல்லது கர்சர் தேர்ந்தெடுத்தனையோ அழிக்கிறது. இதில் என்ன வேறுபாடு உள்ளது? விளக்கவும்.

– என்.எம். சங்கர நாராயணன், போரூர்.


பதில்: அடிப்படையில் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இவற்றின் செயல்பாடுகளில் சிறிய வேறுபாடு உள்ளது. இங்கு அதனைப் பார்க்கலாம். ஒரு டாகுமெண்ட், பிரசன்டேஷன், ஒர்க்ஷீட் என எந்த வகையாக இருந்தாலும் இதன் செயல்பாடு டெக்ஸ்ட்டை நீக்கும் வகையிலேயே இருக்கும்.

ஆனால் நீக்கப்பட்ட டெக்ஸ்ட்டை அல்லது ஆப்ஜெக்ட்டை சிஸ்டம் எப்படி செயல்படுத்துகிறது என்பதில் தான் வேறுபாடு உள்ளது. இவற்றில் கட்(CutCtrl+C) செய்கையில் நீக்கப்பட்ட டெக்ஸ்ட் கிளிப் போர்டுக்குச் செல்கிறது.

அங்கு வைக்கப்படுவதால் அதனை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் அணுகி, பெற்று பயன்படுத்தலாம். ஆனால் டெலீட் மற்றும் பேக்ஸ்பேஸ் (Delete/Backspace) பயன் படுத்துகையில் நீக்கப்படும் டெக்ஸ்ட் மறைந்து விடுகிறது.

இதனை உடனே அன் டூ (Undo Ctrl+z) செய்தால் மட்டுமே மீண்டும் கிடைக்கும். எனவே அழிப்பதனைத் தக்கவைத்துக் கொள்ள எண்ணினால், கட் செய்திடுங்கள். மீண்டும் அறவே வேண்டாம் என எண்ணினால் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்


கேள்வி: வேர்டில் உள்ள டேபிளில் காணப்படும் டேட்டாவினைக் கொண்டு, அதனை ஒரு சார்ட் ஆக மாற்றமுடியுமா? அதற்கான பார்முலா என்ன? புதிய வேர்ட் தொகுப்பில் மட்டுமே இதனை மேற்கொள்ள முடியுமா என்றும் தகவல் கொடுக்கவும்.

–என். வித்யா சேகர், பொள்ளாச்சி


பதில்: தாராளமாக மாற்றலாம். இதற்கு பார்முலா இல்லை. சில மெனுக்கள் சென்று மாற்றலாம். வேர்ட் 97 முதல் இந்த வசதி தரப்பட்டுள்ளது. வேர்டில் உள்ள நீங்கள் குறிப்பிடும் அட்டவணையில் எண்களில் டேட்டா தரப்பட்டிருக்க வேண்டும்.


1. முதலில் சம்பந்தப்பட்ட டேபிளைத் தேர்ந்தெடுக்கவும்.


2. இன்ஸெர்ட் (Insert) மெனு செல்லவும். இதில் ஆப்ஜெக்ட் (Object) என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஜெக்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.


3. இதில் ஆப்ஜெக்ட் டைப் (Object Types) என்பதில் ஒரு பட்டியல் காட்டப்படும். இந்த பட்டியலில் Microsoft Graph Chart என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். சில வேர்ட் தொகுப்புகளில் இது அந்த வேர்ட் தொகுப்பின் குறிப்பிட்ட பெயருடன் இருக்கலாம். எடுத்துக் காட்டாக Microsoft Graph 2000 Chart என இருக்கலாம்.


4. ஓகே கிளிக் செய்தவுடன் சார்ட் கிடைக்கும்.


5. இந்த சார்ட்டினை உங்கள் விருப்பத்திற் கேற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.


6. சார்ட்டுக்கு வெளியே கர்சரைக் கொண்டு வந்து தொடர்ந்து டாகுமெண்ட்டில் பணியாற்றலாம்.


கேள்வி : =rand(5,4) என்ற கட்டளை வேர்ட் தொகுப்பில் எதற்குப் பயன்படுகிறது? நான் இதனைத் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

–டாக்டர் வினீத் ராஜ், புதுச்சேரி


பதில்: இதனை நீங்கள் பயன்படுத்திப் பார்த்திருக் கலாமே. இது உங்களுக்கு டெக்ஸ்ட் அமைக்க பயன்படுகிறது. வேர்டில் ஏதேனும் ஒரு பயன் பாட்டினை சோதனை செய்திட திட்டமிடுகிறீர்கள். அதற்கு டெக்ஸ்ட் வேண்டும்.

இதற்காக டைப் செய்து கொண்டிருக்க முடியாது. எனவே வேர்டில் இந்த கட்டளையைப் பயன்படுத்தலாம். இதனை டாகுமெண்ட் ஒன்றில் முதல் வரியில் தொடக்கமாகத் தந்தால் The quick brown fox jumps over the lazy dog என்ற வாக்கியம் தரப்படும். இந்த வாக்கியத்தின் சிறப்பினை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

இது ஆங்கில மொழியின் அனைத்து எழுத்துகளும் உள்ள ஒரு வாக்கியம் ஆகும். நீங்கள் தந்துள்ள பார்முலாவில் உள்ள எண்களுக்கும் ஒரு வேலை தரப்படுகிறது. முதலில் தரப்பட்டுள்ள எண் பத்தியைக் குறிக்கிறது.

அடுத்த எண் அந்த பத்தியில் இந்த வாக்கியம் எத்தனை முறை காட்டப்படும் என்பது குறிக்கப்படுகிறது. இங்கு ஐந்து பத்திகளில், ஒவ்வொரு பத்தியிலும் தலா நான்கு முறை இந்த வாக்கியம் அமைக்கப்படும்.


கேள்வி: பயர்பாக்ஸ் அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களில் டேப் பயன்பாடு சிறப்பாக இருக்கிறது. இதில் ஒரு டேப்பில் உள்ள தளத்திலிருந்து இன்னொரு டேப்பிற்குச் செல்ல மவுஸ் கர்சரைத்தான் பயன்படுத்த வேண்டுமா? அல்லது ஷார்ட்கட் கீகள் உள்ளனவா?

–கா. தமிழ்ச் செல்வன், திருப்பூர்


பதில்: டேப்களை ஒன்றுக்கு மேல் திறந்த பின்னர், Ctrl + Tab அல்லது Ctrl + Shift + Tab பயன்படுத்தி டேப்களுக்கிடையே நீங்கள் மாறிக் கொள்ளலாம்.

நன்றி.தினமலர்

நூர்
01-02-2010, 05:10 AM
ஜனவரி 30,2010,

கேள்வி: =rand(5,4) என்ற கட்டளை வேர்ட் தொகுப்பில் எதற்குப் பயன்படுகிறது? நான் இதனைத் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

–டாக்டர் வினீத் ராஜ், புதுச்சேரி


பதில்: இதனை நீங்கள் பயன்படுத்திப் பார்த்திருக்கலாமே. இது உங்களுக்கு டெக்ஸ்ட் அமைக்க பயன்படுகிறது. வேர்டில் ஏதேனும் ஒரு பயன்பாட்டினை சோதனை செய்திட திட்டமிடுகிறீர்கள்.

அதற்கு டெக்ஸ்ட் வேண்டும். இதற்காக டைப் செய்து கொண்டிருக்க முடியாது. எனவே வேர்டில் இந்த கட்டளையைப் பயன்படுத்தலாம். இதனை டாகுமெண்ட் ஒன்றில் முதல் வரியில் தொடக்கமாகத் தந்தால் The quick brown fox jumps over the lazy dog என்ற வாக்கியம் தரப்படும்.

இந்த வாக்கியத்தின் சிறப்பினை நீங்கள் உணர்ந்திருப் பீர்கள் என்று எண்ணுகிறேன். இது ஆங்கில மொழியின் அனைத்து எழுத்துகளும் உள்ள ஒரு வாக்கியம் ஆகும். நீங்கள் தந்துள்ள பார்முலாவில் உள்ள எண்களுக்கும் ஒரு வேலை தரப்படுகிறது.

முதலில் தரப்பட்டுள்ள எண் பத்தியைக் குறிக்கிறது. அடுத்த எண் அந்த பத்தியில் இந்த வாக்கியம் எத்தனை முறை காட்டப்படும் என்பது குறிக்கப்படுகிறது. இங்கு ஐந்து பத்திகளில், ஒவ்வொரு பத்தியிலும் தலா நான்கு முறை இந்த வாக்கியம் அமைக்கப்படும்.


கேள்வி: விண்டோஸ் 7 தொகுப்பில் எக்ஸ்பி மோட் என்ற வசதி இருக்கும். அதன் மூலம் பழைய புரோகிராம்களை இயக்கலாம் என்று எழுதி இருந்தீர்கள். இதனை எப்படி இயக்குவது என்று விளக்கவும்.

–ஆர். கிருஷ்ண மூர்த்தி, சென்னை


பதில்: மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் சில ஆய்வுக் குறிப்புகளைக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளிலிருந்து அந்த தகவல் தரப்பட்டது. அண்மையில் மைக்ரோசாப்ட் தளத்தில் எக்ஸ்பி மோட் இயக்குவதற் கான பைல் டவுண்லோட் செய்வதற்குத் தரப்பட்டுள்ளது.

இதனை மைக்ரோசாப்ட் தளம் சென்று பெறலாம். இணைய தள முகவரி: http://www.microsoft. com/windows/virtualpc/download.aspx ஆனால் இதிலும் ஒரு சிக்கலைத் தந்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புரபஷனல் அல்லது அல்ட்டிமேட் பதிப்பு இருந்தால் மட்டுமே இந்த எக்ஸ்பி மோட் செயல்படும்.


கேள்வி: நான் வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் ஒன்றைத் தயார் செய்து மிகக் கவனமாக மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்தேன். ஆனால் மீண்டும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரைத் திறந்து பார்த்த போது அந்த பைல் இல்லை. ஏன், எந்த வேர்ட் பைலும் இல்லை. இது எதனால்? வைரஸ் வேலையாக இருக்குமா?

–எஸ்.கே. குமார், விருதுநகர்


பதில்: நிச்சயம் இருக்காது. இது பில்டர் (Filter) பிரச்னை என்று நினைக்கிறேன். இது பைல் பில்டர் (File Filter) ஆகும். நீங்கள் Open செலக்ட் செய்து கிளிக் செய்தால், பைல் Open டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது.

அங்கு தான் வேர்ட் பைல் எதுவும் இல்லை என்று சொல்கிறீர்கள். இந்த டயலாக் பாக்ஸில், இடது பக்கம் உள்ள பிரிவுகளில் கீழாக Files of Type என்று இருக்கும்.

அங்கு உள்ள ஆப்ஷன்களில் நீங்கள் Word Documents என்பதனை செலக்ட் செய்யாமல் வேறு எதோ ஒரு பிரிவினை செலக்ட் செய்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். All Files மற்றும் Word Documents என்றவற்றில் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்திருந்தால் தான் வேர்ட் டாகுமெண்ட் கிடைக்கும்.

மை டாகுமெண்ட்ஸ் போல்டரில், எம்.எஸ். ஆபீஸ் அப்ளிகேஷன் சாப்ட்வேரில் தயாராகும் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் சேவ் செய்யப்படும். அவற்றில் பைல்களை எளிதாகத் தேட இந்த பைல் பில்டர் தரப்படுகிறது. எனவே நீங்கள் மேலே கூறியுள்ளபடி பைல் செலக்ஷன் மேற்கொண்டீர்களா என்று கவனிக்கவும். சரியாக செலக்ஷன் செய்தால் நிச்சயம் உங்கள் பைல்கள் கிடைக்கும்.


கேள்வி: பெரிய நீளமான இமெயில் கடிதங்களைத் தயார் செய்கையில், அவற்றை இடையே சேவ் செய்திட முடியுமா? அதற்கு வழி உள்ளதா?

–ச.இசையரசி, கோயம்புத்தூர்


பதில்: தாராளமாக சேவ் செய்திடலாம். பொதுவாகப் பலரும் தங்கள் இமெயில் கடிதங்களை வேர்ட் அல்லது வேறு வேர்ட் ப்ராசசரில் தயார் செய்து, பின் கட் செய்து பேஸ்ட் செய்வதனைப் பார்த்திருக்கிறேன்.

ஆனாலும் பல இமெயில் கிளையண்ட்களில் இந்த சேவ் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. ஜிமெயிலில் நீங்கள் எந்த கடிதம் தயார் செய்தாலும் அது உடனே சேவ் செய்யப்படும். அதனை உடனே அனுப்பவில்லை என்றால், அது டிராப்ட் போல்டரில் இருக்கும்.

இதே போல அவுட்லுக், தண்டர்பேர்ட் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களில் வசதி உள்ளது. நீங்களே சேவ் செய்திடலாம். பைல் மெனு திறந்து சேவ் அல்லது சேவ் அஸ் (Save / Save As) தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். அவற்றிலும் ட்ராப்ட்ஸ் (ஈணூச்ஞூtண்) போல்டரில் சேவ் செய்யப்படும்.

பின் அந்த போல்டரிலிருந்து அதனைத் திறந்து பார்த்து அப்படியே அனுப்பலாம்.
ஜிமெயிலிலும் மெசேஜ் ஏரியாவிற்கு மேலாகவும் கீழாகவும், சேவ் நவ் (Save Now) என்று ஒரு பட்டன் தரப்பட்டிருக்கும். இதனை அழுத்தி சேவ் செய்தால், மெயில் ட்ராப்ட்ஸ் போல்டரில் சேவ் ஆகும்.


கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரில் அட்ரஸ் பாரில் யு.ஆர்.எல். டைப் செய்கையில், கீழாக சார்ந்த தள முகவரிகள் வருகின்றன. ஏன் ஆட்டோ பில் (Auto Fill) வசதி வருவதில்லை. என்னென்னமோ புரட்சி செய்திடும் பயர்பாக்ஸ், இந்த சின்ன விஷயத்தை ஏன் விட்டுவிட்டது?

–சி.ஆர்.ஸ்ரீனிவாசன், திருவண்ணாமலை


பதில்: சரியாகச் சொன்னீர்கள். நீங்கள் எழுப்பியிருக்கும் பிரச்னை மற்றும் நீங்கள் புரட்சி எனப் புகழ்ந்திருப்பதனையும் சேர்த்துக் கூறுகிறேன். முதலில் இந்த வசதியை பயர்பாக்ஸ் தந்து கொண்டிருந்தது. எங்கோ விட்டுவிட்டது.

ஆனால் இந்த வசதியை மீண்டும் பெறலாம். சின்ன கான்பிகரேஷன் வேலை செய்திட வேண்டும்.

முதலில் பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறக்கவும். பின் அட்ரஸ் பாரில் about:config என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது நீள் செவ்வகத்தில் ஓர் எச்சரிக்கை கிடைக்கும். இந்த வேலை மேற்கொண்டால் வாரண்டி இல்லை என்று எச்சரிக்கும். பரவாயில்லை; பயப்படாமல் I will be careful; I promise என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.

நீங்கள் இதன் மூலம் செல்லக் கூடிய ஏரியா சற்று ஆபத்தானதுதான். ஏதாவது ஏடா கூடமாக மாற்றிவிட்டால், பயர்பாக்ஸ் தீ பிடித்த வீடாகிவிடும். ஜஸ்ட் பார் ஜோக். என்டர் அழுத்தியவுடன் நீளமாக ஒரு பட்டியல் கிடைக்கும். பயந்துவிடாதீர்கள். இது அகர வரிசைப்படி இருப்பதால் browser.urlbar.autofill என்று இருக்கும் இடத்தைக் கண்டறியவும்.

இதனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் வேல்யூ False என்று இருக்கும். இதனை True என்று மாற்ற வேண்டும். இதற்கு False என்றுள்ள இடத்தில் கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்திடவும். வேல்யூ True என மாறிவிடும்.

வேறு எதுவும் செய்திடாமல் உங்கள் மாற்றத்தை சேவ் செய்து வெளியேறவும். மீண்டும் பயர்பாக்ஸ் பிரவுசரைத் தொடங்கவும். இனி நீங்கள் கேட்ட ஆட்டோ பில் எபக்ட் கிடைக்கும்.


கேள்வி: வெப்சைட் ஒன்றிலிருந்து தமிழ் டெக்ஸ்ட் காப்பி செய்து வேர்டில் பேஸ்ட் செய்தேன். ஒரே கட்டம் கட்டமாக எழுத்து தெரிகிறது. எத்தனை முறை, எந்த பிரவுசர் வழியாகச் செய்தாலும் இதே கட்டங்கள் தான். ஒரிஜினல் எழுத்துக்களை எப்படிப் பெறுவது?

–என். மாலதி, சென்னை


பதில்: உங்கள் நீண்ட கடிதத்திலிருந்து நீங்கள் வெப்சைட்டிலிருந்து காப்பி செய்த தமிழ் டெக்ஸ்ட் யூனிகோட் எழுத்துமுறையில் தயாரான டெக்ஸ்ட் எனத் தெரிகிறது. பேஸ்ட் செய்தவுடன் தெரிகிற கட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

பின் எழுத்துவகை தெரியும் கட்டம் அருகே இதன் பார்மட் குறித்த ஒரு கட்டம் இருக்கும். அதில் கிளிக் செய்து Clear Formattin என்பதனைத் தேர்ந்தெடுங்கள். இப்போது யூனிகோட் தமிழ் பாண்ட் லதா என்ற பெயரில் காட்டப்பட்டு டெக்ஸ்ட் நன்றாகப் படிக்கும் வகையில் தெரியும்.


கேள்வி: எம்.எஸ். அவுட்லுக் இமெயில் கிளையண்ட்டில் Ctrl + Shift + R எதற்குப் பயன்படுகிறது. இதனைப் பயன்படுத்தினால் எந்த வேறுபாடும் நடக்கவில்லை. விளக்கவும்.

–சி. நந்தகுமார், செங்கல்பட்டு


பதில்: ஒரு இமெயில் மெசேஜிற்கு பதில் அனுப்புகையில் Ctrl + Shift + R அழுத்தினால், அதே மெயிலுக்கான பதில் மெயில் அனுப்பும்போது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அந்த மெயிலை இந்த கட்டளை அனுப்பும். நீங்கள் அது போன்ற மெயில் எதனையும் பயன்படுத்தி இருக்கமாட்டீர்கள்.


கேள்வி:வேர்டில் தயாரிக்கப்பட்ட டாகுமெண்ட்டில் பாராக்களைப் பிரிக்காமல், அதாவது அடுத்த பக்கத்திற்குப் பாதியாகச் செல்லாமல், தானாக அமைக்க முடியுமா?

–சு. தெய்வேந்திரன், போடிநாயக்கனூர்


பதில்: இவ்வாறு பிரிக்கப்பட்ட பாராக்களை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அல்லது டாகுமெண்ட்டில் உள்ள அனைத்து பாராக்களையும் தேர்ந்தெடுங்கள். பின்னர் மவுஸின் கர்சரை பாராக்களுக்குள் எங்கேனும் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் "Paragraph" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Line and Page Breaks" என்று இருக்கும் டேப்பில் கிளிக் செய்திடவும். இப்போது காட்டப்படும் பிரிவுகளில் "Keep lines together" என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்பட்டுத்தி ஓகே கிளிக் செய்து விண்டோவினை மூடவும். இனி பத்திகள் பக்க பிரிவுக் கோட்டினால் பிரிக்கப்படமாட்டாது.


கேள்வி: ரெஜிஸ்ட்ரி குறித்து அறிய விரும்புகிறேன். ரெஜிஸ்ட்ரி பற்றி தெளிவாக, சாதாரண தொடக்க நிலையில் உள்ளவர்களுக்குப் புரியும் வகையில் எழுதப்பட்ட புத்தகங்கள் இன்டர்நெட்டில் இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்குமா?

–ஆ. மனோகரன், சின்னமனூர்


பதில்: நிறைய புத்தகங்கள் பி.டி.எப். பைலாக உள்ளன. உங்களுக்கு நான் www.winguides.com/registry மற்றும் www.major geeks.com /download.php? det=539 என்ற தளங்களில் காணப்படுபவற்றை பரிந்துரைக்கிறேன்.

நன்றி.தினமலர்.

நூர்
09-02-2010, 11:30 AM
பிப்ரவரி 07,2010
=============

கேள்வி: சீனாவின் சர்வர்களில் ஹேக்கர்கள் நுழைந்தது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அமைப்பில் உள்ள தவறினால் தான் என்று செய்து வருகிறதே. அப்படியானால் நம் கம்ப்யூட்டரைக் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்திடலாம்?

–கே. எஸ். சுகன்யா தேவி, கோயம்புத்தூர்


பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குப் பதிலாக வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்தலாம். அதிலும் நிச்சயம் ஹேக்கர்கள் பிரச்னை இருக்கும்.

எனவே மைக்ரோசாப்ட் இந்த பிரச்னையைத் தீர்க்க வெளியிட்டிருக்கும் பேட்ச் பைலை இன்ஸ்டால் செய்திடவும். நீங்கள் விண்டோஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு எந்த பதிப்பினைப் பயன்படுத்துபவராக இருந்தாலும்,

மைக்ரோசாப்ட் தந்துள்ள க்யுமுலேட்டிவ் செக்யூரிட்டி அப்டேட் (Cumulative Security Update) பேட்ச் பைலைப் பயன்படுத்த வேண்டும்.

இதற்கான விளக்கத்தினை http://support.microsoft. com/kb/978207 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத் தளத்தில் பார்க்கலாம்.

http://www.micro soft.com /technet/security/bulletin/MS10002.mspx என்ற முகவரி யிலும் இதற்கான விளக்கம் தெளிவாகவும் விரிவாகவும் தரப்பட்டுள்ளது.


கேள்வி: ஒவ்வொரு முறை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக ஜிமெயில் தளத்தினை அணுகுகையில் ""வெப்சைட் பக்கம் திறக்க முடியவில்லை'' என்று எர்ரர் செய்தி காட்டப்படுகிறது? ஜிமெயில் தளம் திறக்க மறுக்கிறது. இது எதனால்? நான் என்ன செய்ய வேண்டும்?

–நா. மஹேந்திரன், வி.சி.புரம், சாத்தூர்


பதில்: இது ஒரு பொதுவான சிறிய பிரச்சினை தான். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள கன்டென்ட் அட்வைஸரை செயல் இழக்கச் செய்திட செட் செய்திட வேண்டும். முதலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளுங்கள்.

பின் Tools>Internet Options எனச் செல்லவும். டூல் பார் இல்லை என்றால் ஆல்ட் கீயை அழுத்துங்கள். டூல்பார் கிடைக்கும். டயலாக் பாக்ஸின் மேலாக Content என ஒரு டேப் இருக்கும்.

கண்டென்ட் அட்வைஸர் அருகே டிக் செய்யப்பட்டு, அது செயல்படும்படி வைக்கப்பட்டிருந்தால், அதனை எடுத்துவிடுங்கள். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


அடுத்து உங்கள் பிரவுசரின் கேஷ் மெமரியைக் காலி செய்திட வேண்டும். Tools>Internet Options எனச் செல்லவும்.டயலாக் பாக்ஸின் மேலாக General என ஒரு டேப் இருக்கும்.

அதைத் தேர்ந்தெடுத்தால், Browsing History என்பதன் கீழாக அங்கு டெலீட் பைல்ஸ் (Delete Files) என ஒரு ஆப்ஷன் கிடைக்கும். பின் Preserve Favorites website data என்று இருப்பதில் டிக் செய்த பின்

Temporary Internet Files, Cookies History ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து Delete என்பதில் கிளிக் செய்திடவும்.


இறுதியாக இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடிவிட்டு மீண்டும் திறந்து பயன்படுத்தவும். இன்னும் பிரச்னை இருந்தால், கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பான சர்வரை https://mail.google.com என்ற முகவரியில் பெற்று பயன்படுத்தவும்.


கேள்வி: எம்.எஸ். வேர்ட் தொகுப்பில் அப்போதான நேரத்தையும், தேதி யையும் இன்ஸெர்ட் செய்திடப் பயன்படுத்த வேண்டிய ஷார்ட் கட் கீகள் எவை?

–கே.முத்துக்குமார், விழுப்புரம்


பதில்: Alt + Shift + D கொடுத்தால் உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டில் அன்றைய தேதி இடைச் செருகலாகும். Alt + Shift + T கொடுத்தால் அப்போதைய நேரம் செருகப்படும்.

இன்னும் ஒரு கூடுதல் தகவல் தரட்டுமா? பவர்பாய்ண்ட் ஸ்லைடில் Alt + Shift + D அல்லது Alt + Shift + T என்ற கீ தொகுப்புகளைக் கொடுத்தால், டைம் மற்றும் டேட் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் இருந்து நீங்கள் எதனை இடைச் செருக வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து கொள்ளலாம்.


இன்னொன்றும் சொல்லட்டுமா? எக்ஸெல் தொகுப்பில் Ctrl + ; (semicolon) கொடுத்தால் அன்றைய தேதி ஒர்க்ஷீட்டில் அமைக்கப்படும். Ctrl + Shift + : (colon) கொடுத்தால் அப்போதைய நேரம் செருகப்படும்.


கேள்வி: என் தோழியிடம் உரையாடிக் கொண்டிருந்த போது, கம்ப்யூட்டரில் புரோகிராம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது, எர்ரர் செய்தி கிடைத்ததாகவும், அந்த செய்தி ஒரு டயலாக் பாக்ஸில் காட்டப்பட்டதாகவும், உடனே அதனைச் சரி செய்ததாகவும் கூறினார். இந்த டயலாக் பாக்ஸ் என்பது என்ன?

–சி. ஜான்ஸி கிருபா ராணி, சென்னை

பதில்: முதலில் இந்த டயலாக் பாக்ஸ் என்ற சொல் தொடரைக் கேட்ட போது எனக்கும் இது என்ன என்று விளங்காமல் தான் இருந்தது. அப்புறம் படித்துத் தெளிவு பெற்ற போது, நம் அன்றாடக் கம்ப்யூட்டர் பணியில் அடிக்கடி கிடைப்பதுதான் எனத் தெரிந்தது.

டயலாக் பாக்ஸ் என்பது,கம்ப்யூட்டரில் உங்கள் செயலுக்கு மறுமொழியாக எதனையேனும் சிஸ்டம் அறிவிக்க எண்ணுகையில், அல்லது தர வேண்டும் என எண்ணுகையில் காட்டப்படும் பாக்ஸ்தான் அது. ஒரு வேலையினை நீங்கள் செய்திட வேண்டும் , அல்லது தொடங்கிட வேண்டும் என்பன போன்ற வேலைகளை இந்த டயலாக் பாக்ஸ் காட்டும்.

எடுத்துக் காட்டாக, ஒரு வெப்சைட்டில் நான் ரைட் கிளிக் செய்தேன். உடனே Function Disabled என்று ஒரு செய்தியுடன் ஒரு சிறிய பாக்ஸ் ஒன்று காட்டப்பட்டது. அதாவது இந்த வெப்சைட்டில் இந்த வேலை ஆகாது என்ற செய்தியை ஒரு டயலாக் பாக்ஸ் காட்டியது.

வேறு வழியில் சொல்லப்போனால், அங்கு ரைட் கிளிக் செய்ய முடியாது என்பதுதான். ஸ்டார்ட் கிளிக் செய்து ரன் தேர்ந்தெடுத்தால் வரும் டயலாக் பாக்ஸ், உங்களிடம் ரன் செயல்பாட்டிற்கான ஆப்ஜெக்டைப் பெற வரும். உங்கள் செயல்பாட்டில் ஏதேனும் எர்ரர் ஏற்பட்டாலும் அது டயலாக் பாக்ஸ் மூலம் காட்டப்படும்.


கேள்வி: ஆபீஸ் புரோகிராம்களில், பைல் மெனுவில் நான்கு பைல்களுக்குப் பதிலாகக் கூடுதலான எண்ணிக்கை யில் பைல்களைக் காட்டும்படி எப்படி அமைக்கலாம்?

–சீ. ஷண்முகநாதன், தேனி.


பதில்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து புரோகிராம்களும் நான்கு பைல்களையேகாட்டும். இதனைக் கூடுதலாக 9 பைல்களைக் காட்ட Tools–> Options –> General (Tab) Recently Used File list என்ற வழியில் சென்று எண்ணை 9 என உயர்த்தி இருப்பீர்கள்.

இப்போது அதே போல் சென்று Recently Used File list என்பதற்கு எதிரே உள்ள கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடுங்கள். இனி எந்த பைலும் காட்டப்படமாட்டது. ஆனால் இதில் கவனம் தேவை. இது மற்ற எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்களையும் பாதிக்கும்.


கேள்வி: டூயல் பூட் என்பது எதனைக் குறிக்கிறது? இரண்டு வகையில் ஒரு கம்ப்யூட்டரை ஏன் பூட் செய்திட வேண்டும். தேவையில்லையே?

–எஸ். சீதாராமன், புதுச்சேரி


பதில்: ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இயக்கும் வசதியையே டூயல் பூட் என்று அழைக்கிறோம். இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க விரும்புகிறீர்கள் என்று நீங்களே கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போது தீர்மானிக்கலாம்.

எடுத்துக் காட்டாக உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா என இரண்டு மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நிறுவிப் பயன்படுத் தலாம்.

இதனை நீங்களே பதிந்து இயக்கலாமா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் பதில் சொல்வேன். Boot loader என்ற புரோகிராம் மூலம் நீங்களே இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை பதிந்து இயக்கலாம். என்ன செய்யப் போகிறோம் என்பதனை நன்கு உணர்ந்து படித்து அறிந்து கொண்டு செய்வது நல்லது.

எதற்காக இந்த டூயல் பூட் வசதி? நல்ல கேள்விதான். வேலியில் போற ஓணான் கதையாக இது ஆகக்கூடாது அல்லவா! எனவே இதனையும் தெளிவு செய்து கொள்வது நல்லது. நீங்கள் ஏற்கனவே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி அதனுடன் நல்ல பரிச்சயம் கொண்டிருக்கிறீர்கள்.

அதுவே உங்களுக்குப் போதும். ஆனால் புதியதாக ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வருகிறது. அதற்கு உடனே மாறுவதற்குத் தயங்கலாம். ஆனாலும் அது எப்படி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்க்க ஆவல்.

இந்த வேளையில் தான் டூயல் பூட் உங்களுக்குப் பயனப்டுகிறது. எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பல ஆண்டுகள் பழகி இருக்கலாம். விஸ்டா பற்றிக் கேள்விப்பட்டு அதனையும் இயக்கிப் பார்க்க ஆவலாக இருக்கும். அதே நேரத்தில் எக்ஸ்பியையும் முழுமையாக விட்டுவிடக் கூடாது.

இரண்டையும் கம்ப்யூட்டரில் பதிய வைத்து டூயல் பூட் முறையில் இயக்கலாம். அப்ளிகேஷன் புரோகிராம்கள் எந்த சிஸ்டத்தில் சிறப்பாகவும் முழுமையாகவும் இயங்குகின்றன என்று கண்டறியலாம்.

கூடுதலாக விண்டோஸ் விஸ்டா மட்டுமின்றி, விண்டோஸ் இயக்கத்துடன் லினக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் பதித்து டூயல் பூட் முறையில் இயக்கலாம்.


கேள்வி: இன்டர்நெட் வெப்சைட்டில் பேக் கிரவுண்டில் தெரியும் டிசைன் மற்றும் இமேஜ் இல்லாமல் எப்படி பிரிண்ட் எடுப்பது?

–சீ, கண்ணபிரான், காரைக்கால்


பதில்: வெப்சைட்டிலிருந்து டெக்ஸ்ட் மட்டும் பிரிண்ட் எடுப்பது உங்கள் நோக்கம். பெரும்பாலான வெப்சைட்டுகளில் இந்த ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். இல்லை என்றால், டெக்ஸ்ட் மட்டும் செலக்ட் செய்து அதனை ஏதேனும் ஒரு வேர்ட் ப்ராசசரில் புதிய பைல் ஒன்றில் பேஸ்ட் செய்திடுங்கள்.

பின் அந்த பைலை பிரிண்ட் செய்திடலாம். அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் டூல்ஸ் அழுத்தி பின் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் செல்லவும்.

இங்கு அட்வான்ஸ்டு டேப் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் கீழாக பிரிண்டிங் என்ற பிரிவு இருக்கும். இங்கு "Print background colors and images" என இருக்கும்.

இதனைத் தேர்ந்தெடுக் காமல் (டிக் அடையாளம் எடுத்துவிட்டால்) விட்டுவிட்டால் நீங்கள் கேட்டபடி பிரிண்ட் செய்திடலாம். பயர்பாக்ஸ் எனில் பேஜ் செட் அப் பிரிவில் இந்த ஆப்ஷன் கிடைக்கும். அதிலும் டிக் அடையாளம் இல்லாமல் இருப்பதனை உறுதி செய்து பிரிண்ட் எடுக்கவும்.

நன்றி.தினமலர்.

நூர்
16-02-2010, 03:26 PM
பிப்ரவரி 14,2010

கேள்வி: கூகுள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 க்கு இனி இணைந்து இயங்காது என்று அறிவிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். இது உண்மையா?

–சுகன்யா தேவி, மதுரை


பதில்: ஆமாம். வருத்தம் தரும் உண்மையே. மார்ச் 1, 2010 முதல் கூகுள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 பிரவுசருக்குத் தரும் இணைவமைதியைத் தராது. எனவே இந்த பிரவுசரையே இன்னும் பயன்படுத்தி வருபவர்கள், மேம்படுத்தப்பட்ட பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் கூகுள் டாக்ஸ், கூகுள் சைட்ஸ் போன்ற கூகுள் தளங்கள் இதில் இயங்காது.

இது குறித்து கூகுள் அப்ளிகேஷன் மேனேஜர் ராஜன் ஷேத் தன் பிளாக்கில் எழுதுகையில் வேறு பல நிறுவனங்களும் இது போல இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 னுடனான தங்கள் உறவினை முறித்துக் கொண்டனர்.

கூகுள் இப்போதுதான் இந்த முடிவினை அமல்படுத்துகிறது என்றார். எனவே மார்ச் 1 தொடங்கி கூகுள் டாக்ஸ் மற்றும் கூகுள் சைட்ஸ் சரியாக இந்த பிரவுசரில் இயங்காது என்றார். இதனைத் தவிர்க்க, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, பயர்பாக்ஸ் 3, கூகுள் குரோம் 4 அல்லது சபாரி 3க்கு மாறிக் கொள்ள வேண்டும் என்றார்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6க்குப் பிறகு எத்தனையோ பிரவுசர்கள் வந்துவிட்டன. இலவச மாகவும் கிடைக்கின்றன. பின் ஏன் தயங்குகிறீர்கள், பயப்படுகிறீர்கள். நவீன வசதிகளைப் பயன்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.


கேள்வி: நான் எப்போதும் பயர்பாக்ஸ் பிரவுசரை பயன்படுத்தி வருகின்றேன். சில வேளைகளில் சில வெப்சைட் தளங்கள் இதில் திறக்க மறுக்கின்றன. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்கப்படுகின்றன. இது ஏன்? பயர்பாக்ஸ் பிரச்னயா? கம்ப்யூட்டர் பிரச்னையா?

–செ. வாசுநாதன், சென்னை


பதில்: நீங்கள் தொடர்ந்து பயர்பாக்ஸ் பயன்படுத்து பவராக இருந்தால், நிச்சயம் சில இணைய தளங்களுடன் இந்த பிரச்னையைச் சந்தித்திருக்கலாம். ஏனென்றால் சில இணைய தளங்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் மட்டுமே இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

அத்தகைய தளங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் இயங்காது. எனவே, அந்த தளங்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறந்து, அத்தளங்களில் கொடுத்துள்ள தொடர்பு முகவரிக்கு இந்த பிரச்னை குறித்து இமெயில் அனுப்புங்கள்.

அல்லது பயர்பாக்ஸ் பிரவுசரில், டூல்பாரில் ஹெல்ப் (Help) பட்டனை அழுத்தவும். அதன்பின் Report Broken Website என்பதில் கிளிக் செய்திடவும். உடைந்த(!) இணைய தளங்களில் சில வகைகள் இருக்கும். அவற்றில் சில குறித்து உங்களுக்கு இங்கு தருகிறேன்.

1. Browser Not Supported: இத்தகைய தளங்கள் அடிக்கடி கிடைப்பதில்லை. ஏனென்றால் பயர்பாக்ஸ் பிரவுசர் இப்போது ஒரு முதன்மை பிரவுசராக நமக்கு கிடைத்து வருகிறது. இருப்பினும் Report பட்டனை அழுத்தி முன்பு கூறியபடி ரிப்போர்ட் செயல்படவும்.

2. Plug in Not shown: இதனைத்தான் நான் முழுமையாக வெறுக்கிறேன். பயர்பாக்ஸில் உள்ள ப்ளக் இன் பைண்டர் பொதுவாகவே சரியான ப்ளக் இன் பார்த்து இன்ஸ்டால் செய்து கொள்ளும். இருப்பினும் சிலவற்றை அதனால் பெற்று இன்ஸ்டால் செய்திட முடியாது.

இதில் அதிகம் தொல்லை கொடுப்பது விண்டோஸ் மீடியா பிளேயர் 11 க்கான ப்ளக் இன் தான். எனவே இந்த செய்தி கிடைத்தால் அதற்குத்தானா என்று பார்த்து பெற்று இன்ஸ்டால் செய்திடவும்.

3. Other content missing; இது பொதுவாக ரிப்போர்ட் செய்யப்பட வேண்டிய ஒன்று. வெப்சைட் ஒன்றில் ஏதேனும் மெனு காட்டப்பட்டு அவை காலியாக இருந்தால் இந்த செய்தி கிடைக்கும். ரிப்போர்ட் பட்டன் அழுத்தி மேலே கூறியபடி தகவல் தர வேண்டியதுதான்.

4. Can’t Log in : உங்களுடைய அலுவலக இன்ட்ரா நெட் நெட்வொர்க்கினை, வீட்டிலிருந்த படி தொடர்பு கொள்ள முடிந்தால் இந்த தகவல் தரப்படலாம். பாஸ்வேர்ட் மறத்தல், தவறாக டைப் செய்தல் போன்ற தவற்றை நீங்கள் செய்திடவில்லை என்றால், மேலே சொன்னபடி ரிப்போர்ட் செய்திட வேண்டியது தான். மேலே சொன்னவைதான் சிக்கலான பிரச்னைகள். மற்றவை எல்லாம் சாதாரணமானவையே.


கேள்வி: நான் தொடர்ந்து பயன்படுத்திவரும் மவுஸில், மேலாக உள்ள ஸ்குரோல் வீல் திடீரெனச் சரியாக இயங்கவில்லை. இதனை எப்படி சரி செய்யலாம் என்று ஆலோசனை கூறமுடியுமா?

–ந. வெங்கட ரங்கன்,கோயமுத்தூர்


பதில்: நீங்கள் விண்டோஸ் இயக்கத் தொகுப்பின் எந்த பதிப்பு பயன்படுத்தினாலும், முதலில் மவுஸ் ப்ராப்பர்ட்டீஸ் (Mouse Properties) விண்டோ சென்று அதில் காட்டப்படும் விஷயங்களைப் பார்க்க வேண்டும். இதற்கு Start, Control Panel சென்று Printers and Other Hardware என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின் அங்குள்ள மவுஸ் (Mouse) லிங்க்கில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் 7 அல்லது விஸ்டா பயன்படுத்தினால் Start>Control Panel>Hardware and Sound சென்று தேர்ந்தெடுக்கவும். இங்கு "Devices and Printers" என்பதில் Mouse தேர்ந்தெடுத்தால் மவுஸ் ப்ராப்பர்ட்டீஸ்(Mouse Properties) பாக்ஸ் கிடைக்கும். இதில் வீல் (Wheel) என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

இங்கு ஒருமுறை உங்கள் மவுஸின் ஸ்குரோல் வீல் சுழலுகையில் எத்தனை வரிகள் கடக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். இதில் 100 வரை செல்லலாம் என்றாலும், மவுஸ் அதனை ஏற்றுச் செயல்படும் அளவில் வைப்பதே நல்லது. நான் 3 மட்டுமே வைத்துள்ளேன். இந்த எண்ணை மாற்றி, பின் மவுஸை ஸ்குரோல் வீலை இயக்கிப் பார்க்கவும். இப்போது சரியாகிவிட்டால் அப்ளை (Apply), பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இப்போதும் சரியாகவில்லை என்றால், மீண்டும் வீல் டேப் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் "One screen at a time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பழைய பதிப்புகளில் இது "One page at a time" என இருக்கும். இது நிச்சயம் உங்கள் பிரச்னைக்குத் தீர்வினைத் தரும். இப்போதும் சரியாகாமல் இருந்தால் என்ன செய்வது?

மவுஸுடன் ஏதேனும் சிடி கொடுத்திருந்தால், அதனைப் எடுத்து மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும். பொதுவாக விண்டோஸ் தொகுப்பில் இந்த மவுஸிற்கான டிரைவர் இருந்தாலும், லாஜிடெக் கொடுத்த சிடியைப் பயன்படுத்துவதும் நல்லதுதான். இன்னும் சரியாகவில்லை என்றால்? புது மவுஸ் வாங்கி பயன்படுத்த வேண்டியதுதான்.


கேள்வி: நான் பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். அதில் எப்போதும், ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்கையில், ஏற்கனவே டவுண்லோட் செய்யப்பட்ட பைல்கள் அனைத்தும் பட்டியலிடப்படுகிறது. ஆனால் அவை எங்கிருக்கிறது என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

-எஸ். அரவிந்த் குமார், சிவகாசி

பதில்: மிக எளிது, அரவிந்த் குமார். Tools கிளிக் செய்து அதில் Downloads என்பதனைத் தேர்ந்தெடுங்கள். அதன் பின் டவுண்லோட் செய்த எந்த புரோகிராம் பற்றி அறிய வேண்டுமோ, அதில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Open Containing Folder என்பதைத் தேர்ந்தெடுத்தால், பைல் இருக்கும் போல்டர் தேர்ந்தெடுக்கப்பட்டு, உங்கள் பைல் இருப்பதனைப் பார்க்கலாம்.


கேள்வி: swf என்ற து�ணைப் பெயருடன் சில பைல்கள் என் கம்ப்யூட்டரில் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் உள்ளன. சில நாட்களாகத்தான் இவை இங்கு தங்குகின்றன. இவை எவை? வைரஸாக இருக்குமோ?

–எஸ்.ப்ரியதர்ஷிணி, மேட்டுப்பாளையம்


பதில்: உங்கள் கம்ப்யூட்டரில் அடோப் பிளாஷ் புரோகிராம் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். அந்த புரோகிராம் உருவாக்கும் பைல்கள் தான் இவை. கிராபிக்ஸ் பைல் பார்மட்டில் இவை உருவாக்கபடுகின்றன.

அனிமேஷன் எனப்படும் நகரும் வரைகலை, கம்ப்யூட்டர் பயன்படுத்து பவருடன் ஏற்படுத்தப்படும் தகவல் பெறல் போன்றவற்றிற்கு இந்த பைல்கள் பயன்படும். டிவிடி மெனு மற்றும் டிவி வர்த்தக விளம்பரங்கள் ஆகியவற்றிற்கும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பைல் பெயரை ShockWave Flash அல்லது Small Web Format என விரித்துக் கூறுவார்கள். சிலர் இதன் எழுத்துக்களை மட்டும் S W F என உச்சரிப்பார்கள். ஒரு சிலர் ஸ்விப் ("swiff") பைல் எனவும் கூறுவார்கள். இன்டர்நெட்டில் இன்று வெக்டார் கிராபிக்ஸ் என்று சொல்கையில் இந்த பார்மட் தான் சக்கை போடு போடுகிறது.


கேள்வி: யு.எஸ்.பி. இனி ஸ்பீட் 3.0 ல் கிடைக்கும் என்றும், இது வேகமாக டேட்டாவினைப் பரிமாறும் என்றும் கூறப்படுகிறது. நீங்களே எழுதியுள்ளீர்கள். இந்த யு.எஸ்.பி. ஸ்பீடை எப்படி அறிந்து கொள்வது? எப்படி அளப்பது?

–கா. ஸ்டாலின், உதகமண்டலம்


பதில்: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி. டிரைவின் வேகத்தைக் காண My Computer ஐகானில் கிளிக் செய்திடவும். பின் அதில் Properties தேர்ந்தெடுக்கவும். அடுத்து Hardware என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின் Device Manager என்பதில் கிளிக் செய்திடவும். புதிய விண்டோ திறக்கப்படும்.

இங்கு கீழாகச் செல்லவும். அங்கு Universal Serial Bus Controllers என்று ஒரு இடத்தில் காணப்படும். இங்கு உள்ள + அடையாளத்தில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் யு.எஸ்.பி. குறித்த அனைத்து தகவல்களும் காட்டப்படும்.

இங்கு USB Enhanced Host Controller எனக் காட்டப்பட்டல் உங்களிடம் யு.எஸ்.பி. 2 வகை உள்ளது என்று பொருள். "Enhanced" என்பது ஸ்பீட் 1.0லிருந்து மேம்படுத்தப்பட்டது. அடுத்து யு.எஸ்.பி. 3 பரவலாகப் புழக்கத்தில் வரும்போது அது வேறு சொற்களுடன் குறிக்கப்படலாம்.

மற்றபடி அளப்பது என ஒன்றுமில்லை. முதலில் வந்தது 1.0, பின் 2; அதன் பின் 3. அவ்வளவே. டேட்டா எவ்வளவு பரிமாறப்படுகிறது என்பதே முக்கியம். இந்த வகை ஒவ்வொன்றுக்கும் ஒரு வேகம் உள்ளது. அதனை முன்பு கூறிய வழியில் அறியலாம்.
இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு யு.எஸ்.பி. போர்ட் வகை 2.0 என்றால், கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி. போர்ட்களும் அதே வகையைச் சேர்ந்தவகையாகவே இருக்கும். இருவேறு ஸ்பீட் உள்ள போர்ட்களுடன், பெர்சனல் கம்ப்யூட்டர் பொதுவாக வருவதில்லை.


நன்றி.தினமலர்.

நூர்
22-02-2010, 09:17 AM
பிப்ரவரி 21,2010

கேள்வி: சில வேளைகளில் என் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் மீடியா பிளேயர் இயங்க மறுக்கிறது. கோடக் இல்லை என்றெல்லாம் தகவல் தருகிறது. எதனால் இது ஏற்படுகிறது? இதற்கான தீர்வு தரவும்.

–கா. சுந்தர மூர்த்தி, சின்னமனூர்


பதில்: சில வேளைகளில் இந்த எர்ரர் மெசேஜ் காட்டப்படுவதாக எழுதி உள்ளீர்கள். இதிலிருந்து சில குறிப்பிட்ட பார்மட்டில் உள்ள வீடியோக்கள் இயங்கவில்லை என்று தெரிகிறது. இப்போது பல பார்மட்களில் வீடியோக்கள் கிடைக்கின்றன.

அவற்றில் Divx, FLV, MP4, MKV போன்றவை அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் விண்டோஸ் மீடியா பிளேயர் இவற்றில் சில பார்மட்களை இயக்காது. இதற்கான தீர்வாக வேறு எதுவும் செய்திட முடியாது.

வேறு ஒரு மீடியா பிளேயரை இறக்கி, இன்ஸ்டால் செய்திட வேண்டியதுதான். அந்த வகையில் வி.எல்.சி. மீடியா பிளேயர் ஒரு சிறந்த மீடியா பிளேயராகும். இதனை http://www.videolan.org/vlc என்ற முகவரி யிலிருந்து இலவசமாக இறக்கிப் பதியலாம்.

இது அவ்வப்போது மேம்படுத்தப்படுகிறது. சராசரியாக விநாடிக்கு 17 பேர் இதனை டவுண்லோட் செய்வதாக தகவல்கள் உள்ளன. எனவே இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்து இயக்கவும்.


கேள்வி: முன்பு ஐ.பி. அட்ரஸ் குறித்து விளக்கம் அளித்து அதனை எப்படி அறிவது என்றும் எழுதி இருந்தீர்கள். பிரவுசர் சிக்னேச்சர் ஒன்று இதனுடன் சொல்லப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது?

–என். கே. செல்லமுத்து, கோயம்புத்தூர்


பதில்: இன்டர்நெட்டில் இணையும் ஒரு கம்ப்யூட்டரின் தனி அடையாளம் தான் அதன் ஐ.பி. முகவரி. பிரவுசர் சிக்னேச்சர் என்பது, உங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் பிரவுசர் குறித்த அனைத்து தகவல்களையும் அடக்கியுள்ள தொகுப்பாகும்.

எடுத்துக்காட்டாக என் பிரவுசர் சிக்னேச்சரைத் தேடிய போது Mozilla/5.0 (Windows; U; Windows NT 5.1; enUS; rv:1.9.1.7) Gecko/20091221 Firefox/3.5.7 GTB6 எனக் கிடைத்தது. நீங்கள் ஒரு வெப்சைட்டில் உங்கள் கம்ப்யூட்டரை இணைக்கும் போது, இந்த பிரவுசர் சிக்னேச்சரை, உங்கள் பிரவுசர் அதற்கு அனுப்பும்.

இதில் பிரவுசரின் பெயர், அதன் பதிப்பு, ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்ற தகவல்களைக் காணலாம்.


கேள்வி: ஓப்பன் ஆபீஸ் என்பது மைக்ரோசாப்ட் தந்துள்ள ஆபீஸ் தொகுப்பிற்கு இணையானது என்று கூறுகிறார்கள். இது இலவசம் என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையா? இலவசம் எனில் சிடியாகக் கிடைக்குமா? யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

–என். செந்தில் நாயகம், மதுரை


பதில்: மைக்ரோசாப்ட் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து அப்ளிகேஷன்களும் அடங்கியதாக இயங்குவது ஓப்பன் ஆபீஸ் ஆகும். ஆபீஸ் டாகுமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட், பிரசன்டேஷன் மற்றும் பல வகையான பைல்களை உருவாக்கவும், பயன்படுத்தவும் இது வழி வகுக்கிறது.

இந்த அப்ளிகேஷன் தொகுப்பு உருவாக்கப் பயன்பட்ட புரோகிராம் வரிகளை யாரும் இன்டர்நெட்டிலிருந்து பெறலாம் என்பதால், பல புரோகிராமர்கள் இதனைச் செம்மைப் படுத்தியுள்ளனர். இந்த ஆபீஸ் தொகுப்பிற்கு பல பாராட்டுரைகள் உலகெங்கும் கிடைத்துள்ளன. இது முற்றிலும் இலவசமே.

ஆங்கிலத்தில் வரும் கம்ப்யூட்டர் இதழ்களுடன் வழங்கப்படும் சிடிக்களில் இந்த தொகுப்பு தரப்படுகிறது. ஆனால் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இன்டர் நெட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

டவுண்லோட் செய்திட நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரி http://download.openoffice.org/other.html


கேள்வி: மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போல ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்களைப் பயன்படுத்த ஏதுவான புரோகிராம்களில் ஒன்றைக் கூறவும். இலவசமாகக் கிடைக்கும் இன்டர்நெட் வெப்சைட் முகவரியையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

–என். கல்யாணி, திண்டிவனம்


பதில்: தண்டர்பேர்ட் என்னும் இமெயில் கிளையண்ட் புரோகிராம் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும். அவுட்லுக் எக்ஸ்பிரஸ் நிறைவேற்றும் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும்.

பி.ஓ.பி. மற்றும் ஐமேப் இமெயில் அக்கவுண்ட்களை இதில் மேற்கொள்ளலாம். இதனை மொஸில்லாவின் தளத்திலிருந்து மேற்கொள்ளலாம். இதன் முகவரியைச் சரியாகத் தருவதென்றால், கீழேயுள்ளவற்றை தவறின்றி டைப் செய்திடவும்.

http://www.mozilla.com/enUS/products/download. html? product=thunderbird2.0.0.14&os=win&lang=enUS


கேள்வி: நார்டன் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, எனக்கு கம்ப்யூட்டர் வழங்கிய கடைக்காரர் வழங்கியுள்ளார். தான் பணம் கொடுத்து வாங்கி எனக்கு இலவசமாகத் தந்துள்ளதாகக் கூறுகிறார்.

ஆனால் இது என் பெர்சனல் கம்ப்யூட்டர் செயல்படுவதனை மிகத் தாமதப்படுத்துவது போலத் தெரிகிறது. இதனையே என் நண்பர்களும் கூறுகின்றனர். மேலும் பணம் செலவழிக்காமல் பயன்படுத்தக் கூடிய நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஒன்று பற்றி தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

–கே. சுகுமாரன், கொடைரோடு


பதில்: ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் நார்டன் ஆண்ட்டி வைரஸ் மிகச் சிறந்த ஒன்றாகும். இருந்தாலும் நீங்கள் கூறும் குற்றச் சாட்டினை இன்னும் பல வாசகர்களும் எழுதி உள்ளனர்.

இதற்குப் பதிலாக எனில் ஏ.வி.ஜி. நிறுவனம் தரும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் பயன்படுத்தலாம். இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.

அண்மையில் வெளி வந்த பதிப்பில் ஆண்ட்டி ஸ்பைவேர் மற்றும் ஆண்ட்டி ரூட்கிட் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.

இவை தவிர இன்னும் சில வசதிகளும் உள்ளன. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.avg.com/ inen//downloadavgantivirusfree#tba2


கேள்வி: என்னுடைய பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கி ஓராண்டு கழிந்த நிலையில், அதில் உள்ள சிடி/டிவிடி ட்ரேயின் கதவு, எஜெக்ட் பட்டனை அழுத்தினால் திறக்க மறுக்கிறது. வாரண்டி முடிந்து விட்டதால், ரிப்பேர் செய்திட அதிகம் கேட்கும் வாய்ப்பு உள்ளது.

வந்து போகவே ரூ.300 கட்டாயம் என்கின்றனர். ஒவ்வொரு முறையும் மை கம்ப்யூட்டர் சென்று, சிடி ஐகானில் கிளிக் செய்து அதில் கிடைக்கும் எஜெக்ட் பிரிவில் என்டர் செய்து, ட்ரே மூடியைத் திறக்கிறேன். இதற்கு வேறு வழி உள்ளதா? தயவு செய்து உதவவும்.

–டி.புத்திசிகாமணி, மேலூர்


பதில்: இது போல சில சிக்கல்களில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். நீங்கள் எழுதியுள்ளபடி வந்து போக ரூ.300, பின் பழுது பார்க்க சில நூறு என்றால், நாம் பழுது பார்ப்பதைத் தள்ளித்தான் போடுவோம். சரி, பிரச்னைக்கு வருவோம். மை கம்ப்யூட்டரில் உள்ள எஜெக்ட் அழுத்தி உங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் உங்களை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

ஏனென்றால், பலருக்கு இது பற்றிக் கூடத் தெரியாது.
உங்கள் தேவையை மனதில் கொண்டு இணையத்தில் தேடியபோது அருமையான ஒரு புரோகிராம் குறித்த தகவல் கிடைத்தது.

அதன் பெயர், சொன்னால் நம்பமாட்டீர்கள், Eject CD. உங்களுக்காகவே அந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டது போல உள்ளது.

இதனைத் தரும் தளத்தின் பெயர் தான் சற்று நீளம். http://forums.overclockersclub.com /index.php?s= 6abe97fda39 274f8d93322c52dce 8902&act=attach&type= post&id= 9952 பிரவுசரில் சரியாக டைப் செய்து என்டர் தட்டவும்.(*அல்லது http://www.snapfiles.com/get/hotkeycd.html )



இந்த புரோகிராம் பைல் ஒரு ஸிப் பைலாகக் கிடைக்கிறது. இதனை விரித்து புரோகிராம் கிடைத்தவுடன் இயக்கி, ஸ்டார்ட் மெனு மீதாக பின் அப்பில் வைத்துக் கொள்ளவும் அல்லது குயிக் லாஞ்ச் பாரில் வைத்துக் கொள்ளலாம். இதில் சிங்கிள் கிளிக் செய்தால் போதும். சிடி ட்ரே தள்ளிக் கொண்டு வெளியே வரும்.


கேள்வி: நான் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்து கிறேன். இதன் மூலம் பைல்களை டவுண்லோட் செய்கையில் ஒரே நேரத்தில் இரண்டு தளங்களில் இருந்து மட்டுமே டவுண்லோட் செய்திட முடிகிறது. என்னிடம் அதிவேக இணைய இணைப்பு இருப்பதால், கூடுதலான தளங்களிலிருந்து டவுண்லோட் செய்திட முடியுமா? அதற்கான வழி என்ன?

–டி.தினேஷ் ராஜா, புதுச்சேரி


பதில்: உங்களுக்கு ஒன்று தெரியுமா தினேஷ்! இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் மட்டுமே, ஒரே நேரத்தில் இரண்டு தளங்களிலிருந்து பைல் டவுண்லோட் செய்திட அனுமதி அளிக்கிறது. நீங்கள் இன்னும் வேண்டும் என்கிறீர்கள். பரவாயில்லை.

பயர்பாக்ஸ் அட்ரஸ் பாரில் about:config என டைப் செய்திடுங்கள்.

அடுத்து உங்களுக்குக் கிடைக்கும் விண்டோவில் network.http.maxpersistentconnectionsperserver என்ற வரியில் டபுள் கிளிக் செய்திடுங்கள்.

இப்போது கிடைக்கும் பாக்ஸில் நீங்கள் எத்தனை தளங்களிலிருந்து ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்திட விரும்புகிறீர்கள் என்ற வேல்யு கொடுக்க வேண்டியதிருக்கும். கொடுக்கவும். ஒரேயடியாக மிக அதிகமாகக் கொடுத்தால், பிரச்னைக்குள்ளாகலாம். ஓகே கிளிக் செய்து, பயர்பாக்ஸை மீண்டும் இயக்கி, பின் டவுண்லோட் செய்து பார்க்கவும்.

நன்றி.தினமலர்.

நூர்
01-03-2010, 04:54 AM
பிப்ரவரி 28,2010

கேள்வி: கம்ப்யூட்டரில் டயலாக் பாக்ஸ், வேல்யூ பாக்ஸ், எர்ரர் மெசேஜ் பாக்ஸ் கேள்விப் பட்டுள்ளேன். அலர்ட் பாக்ஸ் என்பது என்ன? இதில் என்ன மெசேஜ் அல்லது அறிவிப்பு கிடைக்கும். நாம் பதிலளிக்க வேண்டியதிருக்குமா?

–ஆர். புவனேஸ்வரி, பொள்ளாச்சி


பதில்: நீங்கள் குறிப்பிட்ட பாக்ஸ் போலவே தான் இதுவும் கிடைக்கும்.

இதனை நீங்கள் பலமுறை ஸ்கிரீனில் பெற்றிருப்பீர்கள். கம்ப்யூட்டரில் வேலை மேற்கொண்டிருக்கையில் நீங்கள் மேற்கொள்ளப் போகும் பணியின் தன்மையை நீங்கள் உணர்ந்துதான் மேற்கொள்கிறீர்களா என்பதனை, இந்த அலர்ட் பாக்ஸ் உறுதிப்படுத்திக் கொள்ளும்.

எடுத்துக் காட்டாக, ஒரு பைலை அழிக்க முயற்சிக்கையில், இது நீக்கப்பட்டு ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லும். அந்த வேலையைத் தான் மேற்கொள்கிறீர்களா? என்று கேட்டு உங்களை யெஸ் அல்லது நோ விடை கேட்டு ஒரு பெட்டி கிடைக்கும்.

அதுதான் அலர்ட் பாக்ஸ். அதே போல ரீசைக்கிள் பின்னிலிருந்து பைலை நீக்குகையில் நிரந்தரமாக பைல் நீக்கப்படவுள்ளது. செய்திடவா? என்ற செய்தியுடன் ஒரு பாக்ஸ் கிடைக்கிறதே, அதுதான் அலர்ட் பாக்ஸ்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் என்டர் அழுத்தினால், அது கீழேயுள்ள செல்லுக்குச் செல்லாமல், மேலே உள்ள செல்லுக்குச் செல்கிறது. இதனை எப்படி மாற்றலாம்?

\–நீ. ஸ்ரீவதனா, கடலூர்


பதில்: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் என்டர் அழுத்துகையில் நீங்கள் விரும்பும் திசையில் கர்சர் செல்லும்படி மாற்றும் வழியை செட் செய்திடலாம். Tools மெனு சென்று அதில் Options தேர்ந்தெடுக்கவும்.

எக்ஸெல் இப்போது Options dialog box காட்டும். இதில் Edit என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தவும். இங்கு Move Selection after Enter என்பதனைக் காணவும்.

அங்கு கிடைக்கும் ட்ராப் டவுண் (Drop Down) மெனுவினைப் பெற்று அதில் ஈணிதீண என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்திடவும்.


கேள்வி: பைல்களின் பார்மட்டை மாற்ற புரோகிராம் களைப் பயன்படுத்தாமல் முடியுமா? ஏனென்றால் இன்டர்நெட்டில் கிடைக்கும் புரோகிராம்கள் எல்லாம் சில நாட்களில் பணம் டாலரில் கட்டச் சொல்கின்றனர்.

எனக்குப் பெரும்பாலும் பல வகை பைல்களை பி.டி.எப். ஆகவும், பி.டி.எப். லிருந்து அதன் சோர்ஸ் பைலாகவும் மாற்ற வேண்டியுள்ளது.

– டாக்டர் டி. வித்யா கார்த்திகா, மதுரை


பதில்: பாடுபட்டு சாப்ட்வேர் தயாரித்தவர்கள், அதனைப் பயன்படுத்துவோரிடமிருந்து கட்டணம் செலுத்துங்கள் என்று கேட்பதில் தவறில்லை. உங்களின் நிலையும் தேவையும் நன்றாகப் புரிகிறது.

பைல்களின் பார்மட் பல வேளைகளில் நமக்கு பிரச்னை கொடுக்கும். ஒரு பார்மட்டிலிருந்து இன்னொன்றுக்கு எளிதில் மாற்ற முடியாது. மாற்றினால் தான் அவற்றை இயக்க முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்போம்.

இதற்கான சாப்ட்வேர் புரோகிராம்களையோ, அதனை இயக்கக் கூடிய புரோகிராம்களையோ தேடி அலைவோம். இந்த சிக்கலைத் தீர்க்க http://www.cometdocs.com/ என்ற தளம் உதவுகிறது. இந்த பார்மட் மாற்றித் தரும் தளத்திற்கு முதலில் செல்லுங்கள்.

அங்கு சென்ற பின் பார்மட் மாற்ற வேண்டிய பைலை அந்த தளத்தில் அப்லோட் செய்துவிடவும். எந்த பார்மட் மாற்றம் தேவை எனக் குறிக்க வேண்டும். பின் பார்மட் மாற்றப்பட்ட பைல், உங்கள் கம்ப்யூட்டரில் எந்த டிரைவில் வந்து சேர வேண்டும் என்பதனை அமைத் திடுங்கள்.

பின் நீங்கள் குறிப்பிடும் இமெயிலுக்கு, பார்மட் மாற்றப்பட்ட பைல் அனுப்பப்படும்.
பொதுவாக பி.டி.எப். பைலை அதன் சோர்ஸ் (வேர்ட், பிரசன்டேஷன், எக்ஸெல்) பார்மட்டிற்கு மாற்றவே எண்ணுவோம்.

இந்த பார்மட் மாற்றும் புரோகிராம், பலவகையான BMP, JPG, GIF, XLS, html, PPS, SXI, SXM, PPT) பார்மட்களை பி.டி.எப். பார்மட்டுக்கும், அதிலிருந்து அதன் ஒரிஜினல் பார்மட்டுக்கும் மாற்றுகிறது.


கேள்வி: நான் தமிழ் பைபிள் தளம் ஒன்றில் பைபிள் வாசகங்களைப் பார்த்தேன். அது எழுத்துக்கள் மற்றும் எண்களாகவே தெரிகின்றன. அந்த தளத்திலேயே தமிழ் பைபிள் (Tamil Bible) என்று ஒரு பாண்ட் இருந்தது.

அதனை டவுண்லோட் செய்திட போட்டிருந்தது. செய்தேன். அந்த பாண்ட் என் கம்ப்யூட்டரில் டெஸ்க் டாப்பில் பைலாக உள்ளது. அதன் பின்னும் அந்த தளம் சென்றால், அப்படியே புரியாத வகையில் தான் உள்ளது. என்ன செய்திட வேண்டும் என விளக்கவும்.

–வி.சாமுண்டீஸ்வரி, சென்னை


பதில்: பைபிள் படிப்பதில் உள்ள உங்களின் பக்திக்கும் ஆர்வத்திற்கும் பாராட்டுக்கள்.

நீங்கள் எழுத்து வகை பைலை டவுண்லோட் செய்து டெஸ்க்டாப்பில் வைத்தால் மட்டும் போதாது.

அதனை விண்டோஸ் டைரக்டரி யில் உள்ள பாண்ட்ஸ் போல்டரில் போட்டு இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

முதலில் டெஸ்க்டாப்பில் உள்ள பைலைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல்+ சி (Ctrl+C) கொடுத்து காப்பி செய்து கொள்ளவும். உங்களுடைய சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி என்பதால்,

சி (C:) டிரைவில் விண்டோஸ் (Windows) என்பதில் கிளிக் செய்து, பின் பாண்ட்ஸ் (Fonts) என்னும் போல்டரில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து எழுத்து வகை பைல்களும் காட்டப்பட்டும்.

காலியாக உள்ள இடத்தில் கர்சரை வைத்து, ரைட் கிளிக் செய்து கிடைக் கும் மெனுவில் பேஸ்ட் (Paste) என்னும் பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் டெஸ்க் டாப்பில் வைத்துள்ள தமிழ் பைபிள் என்னும் பாண்ட் இங்கு தானாக இன்ஸ்டால் செய்யப்படும்.

இனி அந்த தளம் சென்று பாருங்கள். பைபிள் தமிழில் படிக்கக் கூடிய வகையில் கிடைக்கும்.


கேள்வி: என் நண்பர் எனக்கு தமிழ் என்டர் செய்வதற்குத் தேவையான புரோகிராம் பைல் கொடுத்துள்ளார். இதற்கு ஷார்ட் கட் கீ ஒன்றை அமைக்க என்ன செய்திட வேண்டும்? நன்றி.

–ஆ. முல்லை ராணி, அவனியாபுரம், மதுரை


பதில்: அந்த புரோகிராமிற்கான எக்ஸ்கியூட்டபிள் பைல், எந்த இடத்தில் உள்ளதோ, அங்கு சென்று அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும்.

பின் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் சிறிய விண்டோவில் மூன்று டேப்கள் இருக்கும்.

இதில் ஷார்ட் கட் என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் இரண்டாவது பிரிவில் ஷார்ட்கட் கீ என்று ஒரு வரி இருக்கும். இதன் அருகே இருக்கும் பாக்ஸில் உங்கள் கர்சரை நிறுத்தவும்.

இப்போது நீங்கள் எந்த கீகளை அழுத்தினால், இந்த புரோகிராம் இயக்கத்திற்கு வர வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த கீகளை இங்கு டைப் செய்திடவும்.

எடுத்துக் காட்டாக Ctrl+Shft+T என அமைக்கலாம். பின் அப்ளை (Apply) என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். அப்படியும் வராமல் இருந்தால்,

இந்த கீகள் வேறு ஒரு புரோகிராமிற்கு அல்லது செயல்பாட்டிற்கு ஏற்கனவே அமைக்கப் பட்டுவிட்டன என்று பொருள். மீண்டும் சென்று அங்கு வேறு கீ தொகுப்பினை உருவாக்கவும்.


கேள்வி: விர்ச்சுவல் கீ போர்டு என்பது என்ன? பணம் சார்ந்த விவகாரங்களுக்குக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் போது, அதனைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுவது ஏன்?

–என். கே. சாம்பசிவம், பெருங்களத்தூர்


பதில்: விர்ச்சுவல் கீ போர்டு என்பது புரோகிராம் ஒன்றினால் அல்லது இணைய தளங்களினால் திரையில் காட்டப்படும் கீ போர்டு.

கீ போர்டு மூலம் பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம்களை அமைத்தால், நம் கம்ப்யூட்டரில் நம் செயல்பாடுகளை வேவு பார்க்கவும்,

இது போல பாஸ்வேர்ட்களைத் திருடவும் அனுப்பப்பட்ட புரோகிராம் களால் அவற்றைத் திருட முடியாது. ஏனென்றால் கீ போர்டு இல்லாமல், மவுஸின் கர்சரைக் கொண்டு விர்ச்சுவல் கீ போர்டினை இயக்குகிறோம்.

மேலும் விர்ச்சுவல் கீ போர்டில், அவ்வப்போது கீகள் மாறி கிடைக்கும். எனவே விர்ச்சுவல் கீ போர்டு கிடைக்கும்போது அதனைப் பயன்படுத்துவதே நல்லது.


கேள்வி: என் கம்ப்யூட்டரில் உள்ள டேட் அண்ட் டைம் எப்படி திருத்தினாலும் 01 ஜனவரி 1999 என்றே காட்டுகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம்?

-இரா.வெங்கடேசன், அரியாங்குப்பம், புதுச்சேரி


பதில்: உங்களுடய மதர்போர்டில் இதற்கென உள்ள சிறிய வட்ட வடிவிலான சீமாஸ் பேட்டரி காலாவதியாகி, செயல் இழந்துவிட்டது. இதனை மாற்ற வேண்டும்.

நீங்கள் செட் செய்த நேரம் மற்றும் நாள், கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன் தொடர்ந்து அப்படியே இருக்க சிறிய அளவில் மின்சக்தி தேவை.

அதனை இந்த பேட்டரி தான் தருகிறது. இது செயல் இழந்து போனதால், கம்ப்யூட்டர் தொடங்கியவுடன் நீங்கள் குறிப்பிடும் நாளைக் காட்டுகிறது. மாற்றிவிட்டால் சரியாகிவிடும்.

நன்றி.தினமலர்.

நூர்
08-03-2010, 11:41 AM
மார்ச் 07,2010

கேள்வி: சாலிட் ஸ்டேட் டிரைவ் தற்போது புழக்கத்தில் உள்ளதா? அதன் விலை எந்த அளவிற்கு ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். இது கூடுதல் நன்மை தருமா?

–ஆர். தினேஷ் ராஜ், கோயம்புத்தூர்


பதில்: டேட்டா ஸ்டோரேஜ் பிரிவில் அண்மைக் காலத்திய கண்டுபிடிப்பு சாலிட் ஸ்டேட் டிரைவ். தற்போது ஒரு சில கம்ப்யூட்டர்களிலும், லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இது இடம் பெற்று வருகிறது.

விலை ஹார்ட் டிஸ்க்கைக் காட்டிலும் ஒரு பங்கு கூடுதலாக இருக்கும். அளவில் சிறியதாகவும், கொள்ளளவில் கூடுதலாகவும் உள்ள இந்த டிரைவில் நகரும் பாகங்கள் இல்லை என்பதால், தேய்மானம் இருக்காது.

அதனால் நீண்ட நாள் உழைக்கும். வர்த்தக ரீதியாகவும், ஜனரீதியாகவும் இந்த டிஸ்க் இடம் பிடிக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

அப்போது விலை குறையும். உங்களுக்கு இன்னொரு தகவல் சொல்லட்டுமா! தோஷிபா நிறுவனமும், ஜப்பான் கெய்யோ பல்கலைக் கழகமும் இணைந்து ஒரு ஸ்டாம்ப் சைஸில், சாலிட் ஸ்டேட் டிரைவ் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதனை மொபைல் போன்கள், நெட்புக் கம்ப்யூட்டர்கள்,மீடியா பிளேயர்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த வடிவமைப்பிற்கு வரும் 2012 ஆம் ஆண்டுக்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கின்றனர்.


கேள்வி: எனக்கு சில சொற்களின் எழுத்தளவை ஒரு பாய்ண்ட்டுக்கும் குறைவாக அதிகரிக்கவோ, குறைக்கவோ வேண்டும் எனில் என்ன செய்திட வேண்டும்?

–பாரிவள்ளல், சென்னை


பதில்: அதிகரிக்கவோ குறைக்கவோ வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்த பின், பாண்ட் விண்டோ சென்று எழுத்துருவின் பெயர் உள்ள கட்டம் அருகே, அதன் அளவு எண்களால் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் கர்சரைக் கொண்டு சென்று 12 என்பதை 12.5 என மாற்றவும். வேறு ஷார்ட் கட் இல்லை. Ctrl+] அழுத்தினால் நீங்கள் கூறுவது போல ஒரு பாய்ண்ட் பெரிதாகும்.


கேள்வி: நான் என்னுடைய பெயரில் இமெயில் அக்கவுண்ட் தொடங்கி, மெயில்களைப் பெற்று வருகிறேன். ஆனால் அட்டாச்டு பைல்களை டவுண்லோட் செய்தால், அவற்றைப் பின்னர் திறந்து பார்க்க எங்கே உள்ளது என்று தெரியவில்லை. மை டாகுமெண்ட்ஸில் அல்லது மை டவுண்லோடில் இல்லை. நான் தண்டர்பேர்ட் பயன்படுத்துகிறேன்.

–சி. கார்த்திக், மதுரை


பதில்: வழக்கமாக புதியவர்களுக்கு வரும் குழப்பமாகும். நீங்கள் அப்படியே டவுண்லோட் செய்து சேவ் செய்யக் கொடுத்தால், அது விண்டோஸ் டைரக்டரியில் உள்ள ஒரு டெம்பரரி டைரக்டரியில் சென்று அமர்ந்து கொள்ளும்.


இந்த டைரக்டரியைத் தேடி எங்கு இருக்கிறது என்று அறிவது சற்று சிரமமான காரியம் தான். ஆனால் தண்டர்பேர்டில், குறிப்பிட்ட இமெயிலைத் திறந்தால், அட்டாச்டு பைலின் வகையைப் பொறுத்து, அதற்கான ஐகான் ஒன்று கிடைக்கும். அதனைக் கிளிக் செய்தால் பைல் திறக்கப்படும்.


பின் நீங்கள் Save As என்று கொடுத்தால், அது எந்த டைரக்டரியில் உள்ளதோ அது காட்டப்படும்.


இதற்குப் பதிலாக, அட்டாச்டு பைலை டவுண்லோட் செய்கையில் கிடைக்கும் விண்டோவில் சேவ் என்பதற்குப் பதிலாக சேவ் அஸ் கொடுத்துப் பார்க்கவும். எந்த டைரக்டரியில் சேவ் செய்திட வேண்டும் என்பதனையும், பைலுக்கு என்ன பெயர் கொடுக்க வேண்டும் என்பதனை யும் நீங்களே முடிவு செய்திடலாம்.


கேள்வி: என் எக்ஸெல் 2007 ஒர்க் புக்கில் உள்ள செல் கட்டங்களின் பார்டர் கோடுகளை வண்ணத்தில் அமைக்க முடியுமா? எனக்கு வந்த ஒரு ஒர்க்புக்கில் அவ்வாறு இருந்தது? அதற்கான வழி என்ன?

–டாக்டர் எஸ். முத்துக்குமார், திருவண்ணாமலை


பதில்: தாராளமாக மாற்றலாம் டாக்டர். நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். Office பட்டனில் கிளிக் செய்திடவும். அதன்பின் Excel Option என்பதில் கிளிக் செய்யவும்.

எக்ஸெல் உடனே எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டும். இந்த பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும். Show Gridlines என்ற செக் பாக்ஸ் கிடைக்கும் வரை இதில் ஸ்குரோல் செய்து செல்லவும். இதனை தேர்ந்தெடுக் கவும்.

இதில் Gridline Colorஎன்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் உங்களுக்குப் பிரியமான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். இவ்வேளயில் Show Gridlines என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.

பின் ஓகே கிளிக் செய்திடவும். ஆபீஸ் 2007க்கு முந்தைய தொகுப்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், கீழ்க்காணும் செயல்முறைகளைப் பின்பற்றவும். Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும்.

Options dialog பாக்ஸ் கிடைக்கும். இங்குள்ள View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து அதே கட்டத்தில் Color ட்ராப் டவுண் பேலட்டைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.

இங்கு உங்களுக்குப் பிடித்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். Gridlines என்னும் செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


கேள்வி: விண்டோஸ் கிளிப் போர்டில் ஒரு ஐட்டம் மட்டுமே காப்பி செய்திட முடிகிறது. இந்த வரையறையை நீக்கி அதிக ஐட்டங்கள் காப்பி செய்து, பின் அதிலிருந்து தேவையானதை எடுத்து பேஸ்ட் செய்திட முடியுமா?

–ஆர். ராதா கணேஷ், செஞ்சி


பதில்: விண்டோஸ் கிளிப் போர்டின் வரையறையை மீற முடியாது. ஒரு நேரத்தில் ஒரு ஆப்ஜெக்டைத்தான் காப்பி செய்து வைத்துக் கொள்ளும். அடுத்த ஆப்ஜெக்ட் காப்பி செய்திடுகையில், முதலில் காப்பி செய்தது நீக்கப்படும்.

ஆனால் உங்கள் தேவையை நிறைவேற்ற பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அதில் ஒன்றை இங்கு பார்க்கலாம். அந்த புரோகிராமின் பெயர் Winklipper.. இந்த புரோகிராமினை http://sourceforge.net/projects/ winklipper/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

இது ஒருஸிப் பைலாகக் கிடைக்கும். இதனை விர்த்து ஒரு புரோகிராம் பைலாக வைத்துக் கொள்ளலாம். அல்லது யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் வைத்து இயக்கலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை.

இந்த புரோகிராமினை இயக்கியவுடன் இது விண்டோஸ் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு நீங்கள் காப்பி செய்வதனைக் கண்காணித்துக் கொண்டிருக்கும். சிஸ்டம் ட்ரேயில் உள்ள இதன் ஐகானைக் கிளிக் செய்து, விண் கிளிப்பரில் எத்தனை ஆப்ஜெக்ட் காப்பி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை முடிவு செய்து செட் செய்து கொள்ளுங்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்ஜெக்ட் காப்பி செய்யப்பட்டிருந்தால், இந்த ஐகானில் கிளிக் செய்திடவும். நீங்கள் காப்பி செய்த வரிசைப்படி அவை காட்டப்படும். உங்களுக்கு எது தேவையோ அதனைக் கிளிக் செய்தால், அது விண்டோஸ் கிளிப் போர்டுக்குச் செல்லும். பின் அதனை வழக்கம்போல பேஸ்ட் செய்திடலாம்.

இது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றில் செயல்படுகிறது.


கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். டிபிராக் செய்வதற்கு, விண்டோஸ் சிஸ்டத்துடன் வரும் புரோகிராமைக் காட்டிலும், பல கூடுதல் பயனுள்ள டிபிராக் புரோகிராம்கள் உள்ளதாகக் கேள்விப் பட்டேன். அவற்றில் ஒன்று குறித்து தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

–என். தேவராஜ், மே.நி.பள்ளி ஆசிரியர், காரைக்குடி.


பதில்: ஒன்றென்ன, பல கூறுகிறேன்.1.Defraggler: இந்த புரோகிராமினை http://www.defraggler.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

இது டிரைவ்களை மட்டுமின்றி, மிகச் சிறிய பைலைக் கூட டிபிராக் செய்து சரியான வரிசையில் பதிவு செய்திடும்.


2. அடுத்தது JK Defrag. இதனை http://www.kessels.com/ JK Defrag/ என்ற தளத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்.


3. Contig: இதனை பைல்களைத் தனித்தனியே டிபிராக் செய்திட மட்டும் பயன்படுத்தலாம். தள முகவரி: http://www.microsoft.com/technet/sysinternals/FileAndDisk/Contig.mspx


4. Auslogics Disk Defrag:: இந்த புரோகிராம் தனியே இயங்காது. விண்டோஸ் டிபிராக் செயல்பாட்டுடன் இணைந்து கூடுதல் வசதிகளைத் தரும்.

இதனை http://www.auslogics.com/diskdefrag என்ற தளத்தில் பெற்றுக் கொள்க.


5. SpeedDefrag: இந்த புரோகிராம், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து, இந்த புரோகிராமை மட்டும் கம்ப்யூட்டரின் மெமரியில் கொண்டு சென்று டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்கிறது. இதனை http://www.vcsoftwares.com/ Defrag.html என்ற முகவரியில் பெறலாம்.

நன்றி தினமலர்.

நூர்
15-03-2010, 05:44 AM
மார்ச் 14,2010

கேள்வி: படம் எதனையாவது காப்பி செய்து ஒட்ட முயற்சிக்கையில், அதன் மேலேயே காப்பி பேஸ்ட் ஆகிறது. ஏன் நாம் கர்சர் இருக்கும் இடத்தில் ஒட்ட மறுக்கிறது. இதனை ஒரே கீ செயல்பாட்டில் மற்ற டெக்ஸ்ட் ஒட்டுவது போல ஒட்ட முடியாதா?


–டி.சிவராஜ் குமார், கோவை


பதில்:பைல் ஒன்றில் படம் அல்லது வேறு ஏதேனும் ஆப்ஜெக்ட் ஒன்றின் காப்பியை இன்னொரு இடத்தில் அதே பைலில் பேஸ்ட் செய்திட விரும்புகிறீர்களா? என்ன செய்கிறீர்கள்?

முதலில் ஆப்ஜெக்டைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். கண்ட்ரோல்+சி (Ctrl+C)அழுத்தி காப்பி செய்கிறீர்கள். அல்லது எடிட்(Edit)மெனு சென்று அதில் காப்பி (Copy) கிளிக் செய்கிறீர்கள். பின் ஒட்ட வேண்டிய இடத்திற்குச் சென்று, கர்சரை வைத்து அங்கு பேஸ்ட் (Ctrl+V / Paste in Edit menu) கமாண்ட் கொடுக்கிறீர்கள். என்ன நடக்கிறது?

நீங்கள் காப்பி செய்த படத்தின் நகல், ஒரிஜினல் இருக்கும் இடத்திலேயே பேஸ்ட் செய்யப்படுகிறது. சரியாக அதன் மேல் பேஸ்ட் செய்யப்படாமல், இதோ இங்கு தான் காப்பி உள்ளது என்று காட்டும் வகையில் சிறிது இடம் விட்டு பேஸ்ட் செய்யப்படுகிறது.

இதன்பின் நாம் மவுஸின் கர்சரைக் கொண்டு அதனை இழுத்து வந்து பேஸ்ட் செய்திட வேண்டிய இடத்தில் அமைக்கிறோம். இந்த இழு பறி இல்லாமல் ஒரே கீ அழுத்தலில், ஒட்ட வேண்டிய இடத்திற்கு படத்தைக் கொண்டு வரும் வழி ஒன்று உள்ளது.


முதலில் காப்பி செய்ய வேண்டிய ஆப்ஜெக்ட் அல்லது படத்தை தேர்ந்தெடுக்கவும். அடுத்து கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொள்ளவும். பின் ஆப்ஜெக்ட் மீது கிளிக் செய்து அப்படியே எந்த இடத்தில் ஒட்ட வேண்டுமோ, அங்கு இழுத்து வந்து விடவும்.

பேஸ்ட் ஆகிவிடும். அய்யோ! ஒரிஜினல் அல்லவா இங்கு வந்துவிட்டது என்ற பதற்றம் வேண்டாம். நகல் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதுதான் பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஒரிஜினல் ஆப்ஜெக்ட் அந்த இடத்திலேயே அப்படியே இருக்கும்.


கேள்வி: நான் எக்ஸ்பி மற்றும் வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன். அதில் நெட்டு ரூலர் இல்லை. என்ன செட் செய்தாலும் கிடைக்கவில்லை. வியூ மெனு சென்று பலமுறை ரூலர் டிக் செய்து பார்த்துவிட்டேன். பார்மட் மெனுவில் ஏதாவது செய்திட வேண்டுமா? வழி காட்டவும்.

–என்.குமாரவேல், மேட்டுப் பாளையம்


பதில்: இந்த சூழ்நிலை பலருக்கு ஏற்படுகிறது. வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களில் இருந்து இதனை அறிந்திருக்கிறேன். இதற்கான பதிலும் சில மாதங்களுக்கு ஒருமுறை இந்த பகுதியில் வந்திருக்கிறது.

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். பிரிண்ட் லே அவுட் என்ற வகையில் தோற்றம் (View) அமைந்தால் மட்டுமே நெட்டு வாக்கிலான ரூலர் தெரியும். எனவே View மெனு சென்று Print Lay out பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

Vertical Ruler ட்டிங் Options விண்டோவில் தரப்பட்டுள்ளது. அதனையும் தேர்ந்தெடுக்க வேண்டும். Tools மெனு கிளிக் செய்து, Options பிரிவு தேர்ந்தெடுத்து கிடைக்கும் விண்டோவில் View டேப் செல்லவும்.

இந்த விண்டோவில் Print Lay outOptions என்று மூன்றாவதாக ஒரு பிரிவு காட்டப்படும். அதில் Vertical Ruler (Print View only) என்று இருப்பதைத் தேர்ந்தெடுத்து Oஓ கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் வேர்டில் பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால், வெர்டிகல் ரூலர் உங்களுக்குக் கிடைக்கும்.


கேள்வி: ஆண்ட்டி வைரஸ் இலவச புரோகிராம்கள் பலவற்றைப் பட்டியலிடுகிறீர்கள். நீங்கள் சோதனை செய்து பார்த்த புரோகிராம்களின் பட்டியலை, அவற்றின் நிறை குறைகளுடன் சுருக்கமாகத் தரவும்.

–சி. நல்லசிவம், சென்னை


பதில்: சரியான கேள்வி. பட்டியல் மட்டும் போட்டால் சரியல்ல; பழகிப் பார்த்து சொல்லுங்க என்று கேட்பது நியாயமான கேள்வி தான்.

என்னுடைய மற்றும் என் நண்பர்களின் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டு, நல்லவை என்று சொல்லப்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இங்கு பார்க்கலாம். அவை எதில் சிறப்பாக உள்ளன. எந்த எதிர்பார்ப்பினை செயல்படுத்துவதில் சுணக்கமாய் உள்ளன என்று பார்ப்போம்.


Avast Home Edition: இது மால்வேர் தொகுப்புகளைக் கண்டறிவதில் சிறப்பாய் இயங்குகிறது. இதனுடைய இன்டர்பேஸ் பயன்படுத்துபவர்களைச் சற்றுக் குழப்பமடையச் செய்திடும்.


AntiVirus Free Edition 8.5: பெர்சனல் கம்ப்யூட்டர்களில் வைரஸ்கள் பரவாமல் தடுப்பூசி போட்டது போல பாதுகாக்கும் தன்மை உடையது. ஸ்கேன் செய்யச் சொன்னால் கொஞ்சம் மெதுவாகச் செயல்படும். வைரஸ் பாய வருகிறது என்றால், அது எங்கிருந்து வந்தாலும் தடுத்து செய்தி தரும்.


Avira Anti Virus Personal:பாதித்துள்ள வைரஸ்களை மிகச் சிறப்பாகக் கண்டறியும் தன்மை கொண்டது. அவற்றைக் கம்ப்யூட்டரிலிருந்து களைவதிலும் தனித்தன்மை கொண்டது.

ஆனால் இதன் இன்டர்பேஸ் சற்று குழப்பமான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், முதன் முதலில் இதனைப் பயன்படுத்துபவர்கள் சற்று தடுமாறுவார்கள். ஸ்கேன் செய்வதில் வேகம் மற்றும் முழுமையான பாதுகாப்பு ஆகிய இரண்டு செயல்களுக்காகப் பன்னாட்டளவில் பெயர் பெற்றது.


Microsoft Security Essentials (Beta): தொற்றிக் கொண்ட வைரஸ்களைக் களைவதில் சிறப்பாகச் செயல்படுகிறது. சற்று வேகம் குறைவு எனலாம். சிறப்பான புரோகிராம் என்றுதான் சொல்ல வேண்டும்.


கேள்வி: வேர்டில் டேபிள் ஒன்று உருவாக்கினேன். அது சற்று நீளமாக இருக்கிறது. இதனால், அதில் உள்ள தகவல்கள் அர்த்தமில்லாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. இதனை எப்படி இரண்டு டேபிளாகப் பிரிப்பது?

–என். சந்திரக்குமார், கோயம்புத்தூர்


பதில்: வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் அமைப்பதில் நமக்குப் பல வசதிகள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று டேபிளைப் பிரிப்பது. நீங்கள் அமைத்திடும் டேபிள் மிகப் பெரிதாகச் செல்கிறதா? இதில் ஒரு பகுதியை டாகுமெண்ட்டின் இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல எண்ணுகிறீர்களா? கவலையே வேண்டாம்.


எந்த படுக்கை வரிசையிலிருந்து புதிய டேபிள் உருவாக்கப்பட வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அந்த வரிசையின் முதல் செல்லுக்குக் கர்சரைக் கொண்டு செல்லவும்.

பின் டேபிள் மெனு சென்று கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே அந்த வரிசையிலிருந்து புதிய டேபிள் ஒன்று தரப்படும். இந்த இரண்டு டேபிள்களையும் தனித்தனி டேபிள்களாகப் பயன்படுத்தலாம்.


கேள்வி: என்னிடம் உள்ள பி.டி.எப்.டாகுமெண்ட்டில் காப்பி செய்ய முயற்சிக்கையில் கர்சர் சிறிய கை போல ஆகிறது. நான் மவுஸ் கிளிக் செய்கையில் அது மூடி விரிகிறது. எப்படி டெக்ஸ்ட் செலக்ட் செய்து காப்பி செய்வது?

டி.இந்துமதி, பொள்ளாச்சி


பதில்: பி.டி.எப். டாகுமெண்ட் ரீடரில் காட்டப்படும் கை அடையாளம், உங்கள் டாகுமெண்ட்டைப் பிடித்து மேலும் கீழும் நகர்த்தத் தந்துள்ள வசதியாகும். டெக்ஸ்ட் காப்பி செய்திட, அந்த கர்சரை Select Text tool க மாற்ற வேண்டும். டூல்பாரில் கை ஐகானை அடுத்து பார்த்தால், டெக்ஸ்ட் கர்சர் கிடைக்கும்.

இதில் பாய்ண்ட்டர் ஆரோ தெரியும். இதுதான் உங்கள் டெக்ஸ்ட் டூல். இதனைத் தேர்ந்தெடுத்து பி.டி.எப். பக்கத்தில் உங்களுக்குத் தேவையான டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து பின் காப்பி செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி பி.டி.எப். டாகுமெண்ட்டில் உள்ள படங்களையும் செலக்ட் செய்திடலாம்.

அதற்கு "Copy Image" என்று இருப்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.உங்களுடைய அடோப் ரீடர் தொகுப்பு இந்த வசதியைக் கொண்டிருக்காவிட்டால், லேட்டஸ்ட் அப்டேட்டட் பதிப்பை இறக்கிப் பதியவும். இது முற்றிலும் இலவசமே. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய வெப்சைட் முகவரி:http://get.adobe.com/reader/

நன்றி,தினமலர்.

நூர்
22-03-2010, 09:54 AM
மார்ச் 21,2010

கேள்வி: எனக்கு வரும் இமெயில்களுடன் பல அட்டாச்டு பைல்கள் வருகின்றன. சிவலற்றை எந்த புரோகிராம்கள் கொண்டு திறக்க வேண்டும் எனத் தெரியவில்லை. வைரஸ்கள் வந்துவிடுமோ என்ற கவலையும் உள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்க வழி சொல்லவும்?

- சி.விக்னேஸ்வரன், திண்டுக்கல்.


பதில்: மின்னஞ்சல்களுடன் வரும் இணைக்கப்பட்ட பைல்களைத் திறக்கும் முன், அதனை யார் அனுப்பியது என்று பார்க்கவும். அறிமுகம் இல்லாதவர் அனுப்பினால், அஞ்சலில் உள்ள செய்தியைப் படித்துவிட்டு அழித்துவிடவும்.

தெரிந்த நண்பர் பெயரில் வந்தாலும், அதனை நீங்கள் எதிர்பார்க்க வில்லை என்றால், அவருக்கு ஒரு மெயில் அனுப்பி இது போல நீங்கள் அனுப்பினீர்களா? எதற்காக? என்று கேட்டுவிட்டு பின், திருப்தியான பதில் வந்தால் மட்டுமே திறக்கவும்.


.pps என்ற துணைப் பெயருடன் வரும் பைல்கள், பிரசன்டேஷன் பைல்கள் என்றாலும், இவற்றுடன் அதிக அளவில் வைரஸ்கள் வருவதால், கவனமாகச் செயல்படவும்.

அதே போல .exe , .scr அல்லது .pif என்ற துணைப்பெயர்களுடன் வரும் பைல்களையும் கவனமாகக் கையாளவும்.

சரியான நண்பர்களிடமிருந்து, தேவைப்படும் பைல் வந்த நிலையில் அதனைத் திறப்பதற்கான புரோகிராம் இல்லாததுவும் ஒரு சிக்கலே.

கீழே வழக்கமான துணைப் பெயர்களையும் அவை கொண்டுள்ள பைல்களைத் திறக்கக் கூடிய புரோகிராம்களையும் பட்டியலிட்டுள்ளேன்.

.doc மைக்ரோசாப்ட் வேர்ட்

.pps எம்.எஸ். பவர்பாய்ண்ட்

.xls எம்.எஸ். எக்ஸெல் ஒர்க்ஷீட்

.wpd கோரல் வேர்ட் பெர்பெக்ட்

.pdf அடோப் அக்ரோபட்

.jpg ஜேபெக் அல்லது கிராபிக் பைல்

.zip ஸிப் அல்லது சுருக்கப்பட்ட பைல்

.sit இதுவும் ஒரு வகை சுருக்கப்பட்ட பைல்

.scr விண்டோஸ் ஸ்கிரீன் சேவர்.

இதனைத் திறக்க வேண்டாம்.ஆபத்து 75% பைல்களில் இருக்கலாம்.

.pif புரோகிராம் இன்பர்மேஷன் பைல். இதனையும் திறக்க வேண்டாம்.

இந்த புரோகிராம்கள் உங்களிடம் இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டியதில்லை.

இந்த புரோகிராம்களைத் தயாரித்தவர்கள், ஆன்லைனில் இந்த புரோகிராம்களைத் தந்துள்ளனர். அவற்றைத் திறந்து பயன்படுத்தலாம். ஆனால் எடிட் செய்திட முடியாது.

கேள்வி: இன்டர்நெட் யாருக்கு அல்லது எந்த நாட்டுக்குச் சொந்தம்? ஐ.நா சபை இதில் எந்த அளவில் கட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளது.?

டி.இளவரசி, மதுரை


பதில்: இன்டர்நெட்டை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தனி ஒரு மனிதனோ அல்லது தனி அமைப்போ, இன்டர்நெட்டுக்கு உரிமை கொள்ள முடியாது.

பல நெட்வொர்க்குகள் இணைந்த ஒரு பெரிய நெட்வொர்க்கே இன்டர்நெட். இதில் எந்த ஒரு நெட்வொர்க் கழன்று கொண்டாலும், மற்றவை இணைந்தே செயல்படும்.

இந்த நெட்வொர்க் அனைத்தும் பல நிறுவனங்கள், அமைப்புகள், தனி நபர்கள், அரசுகள், பள்ளிகள், கல்லூரிகள் எனப் பலவகை அமைப்புகளுக்குச் சொந்தம். எனவே ஒருவர் இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது. ஐ.நா.சபையின் அதிகார வரம்பிற்குள் இது வராது.


இருப்பினும், இன்டர்நெட் இயங்கும் தன்மையினை ஒரு சில தன்னார்வ அமைப்புகள் வரையறை செய்கின்றன. எடுத்துக்காட்டாக இணைய தளங்களுக்குப் பெயர் வைத்தல்,

நாடுகளுக்கான குறியீட்டு எழுத்துக்களை அமைத்தல் போன்றவற்றை பன்னாட்டளாவிய அமைப்புகள் செயல்படுத்துகின்றன.

Internet Engineering Task Force, ICANN, InterNIC மற்றும் the Internet Architecture Board என இவற்றைக் கூறலாம். எனவே பயப்படாமல் இன்டர்நெட்டை வலம் வரவும்.

கேள்வி: பேக் அஸாங் சாப்ட்வேர் (Tag along software) என்ற சொல் தொடர் எதனைக் குறிக்கிறது? எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

- கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் சார்பாக, மேல்மருவத்தூர்.


பதில்: உங்கள் நீண்ட கடிதத்தில் எழுதியுள்ள பல கேள்விகள் நீண்ட நூல்களில் தர வேண்டிய தகவல்களைக் கேட்கின்றன. மேலே தனித்துத் தரப்பட்டுள்ள கேள்வி, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது பிளாஷ் பிளேயர் போன்ற புரோகிராம்களை இலவசமாக டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், அதற்கான லிங்க் அருகே,

மேக் அபி செக்யூரிட்டி ஸ்கேன் சாப்ட்வேர் தொகுப்பினையும் டவுண்லோட் செய்து கொள்ளலாம் என்று தகவலும் லிங்க்கும் தரப்பட்டிருக்கும்.

இது நமக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். இருப்பினும் தரப்பட்டிருப்பதனை எப்படி விலக்குவது என்று அறியாமல் அதனையும் சேர்த்து டவுண்லோட் செய்திடுவோம்.

ஆனால் நன்றாகப் பார்த்தால், அது இல்லாமல் தேவைப்படும் புரோகிராம் மட்டும் டவுண்லோட் செய்திடும் வசதி இருப்பதனை அறியலாம்.

இது போல உடன் தரப்படு சாப்ட்வேர் தொகுப்புதான் டேக் அலாங் சாப்ட்வேர் ஆகும்.

இந்த சொல் தொடர் இப்போதுதான் புழக்கத்தில் உள்ளது. இந்தக் கேள்வியைக் கேட்டதன் மூலம் அனைவரும் அறியும் வண்ணம் என்னிடம் இருந்து பதில் வாங்கிவிட்டீர்கள். நன்றி.

கேள்வி: கேஷ் மெமரி எனத் தனியே எதனைக் குறிப்பிடுகிறார்கள்? இதனால் என்ன பயன்?

- கா.கதிரவன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

பதில்: சில குறிப்பிட்ட பைல்களை அல்லது புரோகிராம்களை நீங்கள் தொடர்ந்து அடிக்கடி பயன்படுத்தி வந்தீர்களானால் கம்ப்யூட்டர் அதனைப் புரிந்து கொண்டு அவற்றை தற்காலிகமாகச் சேமித்து வைக்கிறது.

இவையே கேஷ் மெமரியாகும். இவை ராம் மெமரியிலோ அல்லது ஹார்ட் டிரைவிலோ எழுதப்படலாம். இதனால் என்ன பயன்? அடிக்கடி பயன்படுத்தப்படும் தகவல்கள் என்பதால் கேஷ் மெமரியில் இவ்வாறு சேமித்து வைக்கப்படும்

பைல்களை கம்ப்யூட்டர் இயக்குபவர் எளிதாகவும் வேகமாகவும் எடுத்துப் பயன்படுத்த முடிகிறது. ஹார்ட் டிஸ்க்கின் டிரைவைத் தேடி ஒவ்வொரு முறையும் சுழல வேண்டியதில்லை. இதனால் கம்ப்யூட்டர் செயல்படும் வேகமும் கூடுகிறது.

நன்றி.தினமலர்.

நூர்
29-03-2010, 05:56 AM
மார்ச் 28,2010

கேள்வி: பிரின்ட் பிரிவியூவில் நாம் அச்சில் எடுக்கப்போகும் டாகுமென்ட் அல்லது வேறு பைல் தெரிகிறது. அப்படியானால் பைல் பிரிவியூ என்பது என்ன? இதனை எந்த மெனுவில் பெறலாம்? “

. சிவசக்தி ராஜன், சென்னை


பதில்: File மெனு சென்று அதில் Open விண்டோவினைத் திறக்கவும். இந்த விண்டோ கிடைத்தவுடன் நீங்கள் அதில் காட்டப்படும் பைல்களின் பட்டியலைத்தானே பார்க்கிறீர்கள்.

இப்போது அந்த விண்டோவின் வலது பக்க ஓரத்தில் பாருங்கள். அதில் Views என்று ஒரு பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்து திறந்தால் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் Preview என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைப் பெறவும்.

இப்போது விண்டோ இரு பகுதியாகப் பிரிந்து காட்டப்படுவதனைப் பார்க்கலாம். ஒரு பக்கம் பைல் பட்டியலுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் பெயர் தேர்ந்தெடுத்த நிலையில் இருக்கும். வலது பக்கம் உள்ள கட்டத்தில் அந்த பைலின் உள்ளே என்ன இருக்கிறது என்பது காட்டப்படும்.

இதன் முதல் பக்கம் தெரிந்தாலும் அருகே உள்ள அம்புக் குறியை அழுத்தி கீழே சென்று பைலில் உள்ளதைப் பார்க்கலாம். இதுதான் பைல் பிரிவியூ. இந்த பைல் நீங்கள் தேடும் பைல் என்றால் உடனே அதனைக் கிளிக் செய்து திறந்து எடிட் செய்திடலாம்.

இதன் மூலம் நாம் பெயர் மறந்த பைல்களைத் தேடுவது எளிதாகும். ஒரு சிலர் பைலின் முதல் பக்கத்தில் இப்படித்தான் எழுதி இருந்தேன். அந்த பைல் வேண்டும் எனத் தேடுவார்கள். அவர்களுக்கு இந்த பைல் பிரிவியூ வழி கொடுக்கும்.

கேள்வி: என்னுடைய பாஸ்வேர்ட் ஸ்ட்ராங்கானது என்று எப்படி நம்புவது? ஒவ்வொருவரும் ஒரு மாதிரி சொல்கிறார்கள்..

–கா. சிவகடாட்சம், புதுச்சேரி


பதில்: நல்ல கேள்வி. அடுத்தவர்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு மாதிரியான பதிலைத்தான் சொல்வார்கள்.

மைக்ரோசாப்ட் உங்கள் உதவிக்கு இதில் வரும். உங்கள் பாஸ்வேர்ட் எந்த அளவில் ஸ்ட்ராங்கானது என்று அறிய வேண்டுமா?

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சேவையினை வழங்குகிறது. இதில் பாஸ்வேர்டினைத் தந்தால் அது ஹைஜாக் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக எந்த அளவிற்கு ஸ்ட்ராங்கானது என்று காட்டுகிறது.

இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://www.microsoft.com/pro tect/yourself/password/checker.mspx.

கேள்வி: நீங்கள் அவ்வப்போது Alt கீயுடன் சில எண்களை அழுத்தினால் கிடைக்கும் சில சிறப்பு குறீயீடுகள் குறித்து தகவல்களை அளித்துள்ளீர்கள். இவற்றை நினைவில் வைப்பது சிரமமாக உள்ளது. மேலும் அச்செடுத்து பட்டியலிட்டாலும் நாம் எதிர்பார்க்கும் குறியீடுகள் கிடைப்பதில்லை. இவை அனைத்தையும் பெற என்ன வழி உள்ளது?

–கே. என்.சியாமளா சுந்தர்,


பதில்: சிரமம் தான். எண்களையும் அதற்கான குறியீடுகளையும் நினைவில் வைப்பது சிரமம்தான். அதனால் தானே இன்டர்நெட் முகவரிகள் எண்களில் இருந்தாலும், நாம் சொற்களில் அவற்றை நினைவில் கொள்கிறோம்.

இங்கு அந்த வசதியும் இல்லை. ஆனால் இன்டர்நெட்டில் ஒரு தளம் உள்ளது. அங்கு இந்த ஆல்ட் கீயுடன் இணைத்து எண்களைத் தந்தால் என்ன என்ன குறியீடுகள் கிடைக்கும் என்ற அனைத்து தகவல்களும் தரப்பட்டுள்ளன.

அந்த தளத்தின் முகவரி : http://www.tedmontgomery.com/tutorial/altchrc.html

கேள்வி: என்னுடைய டாஸ்க்பாரில் இருந்த ÷ஷாடெஸ்க்டாப் ஐகான் திடீரென மறைந்து போய்விட்டது. இதனை எப்படி கொண்டுவருவது என்று தெரியவில்லை. புரோகிராம் பைல் சென்று மெனு வாங்கி கிரியேட் ஷார்ட் கட் ஏற்படுத்தலாம் என்றால், எந்த புரோகிராம் தேர்ந்தெடுப்பது என்றும் தெரியவில்லை. வழி காட்டவும்.


–ஸ்ரீவத்ஸன், கோயம்புத்தூர்


பதில்: இது போல பல வாசகர்கள் எழுதி உள்ளனர். என் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் மையத்தில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டு என்னிடம் விளக்கம் கேட்டனர்.

÷ஷா டெஸ்க் டாப் என்பது மற்றவற்றைப் போல ஒரு வழக்கமான புரோகிராம் அல்ல. எனவே அந்த புரோகிராம் டேப் பெற்று, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் ஷார்ட் கட் எல்லாம் அமைக்க முடியாது.

இதனைப் பெற நோட்பேடில் ஒரு சிறிய புரோகிராம் எழுதி, எங்கு இந்த ஐகான் இருக்க வேண்டுமோ அதற்கான போல்டரில் வைக்க வேண்டும். புரோகிராம் அமைக்கும் வழி பார்ப்போம். நோட்பேடைத் திறந்து கொள்ளுங்கள்.

இதற்கு Start பட்டன் அழுத்தி Run பாக்ஸில் notepad என டைப் செய்திடலாம். நோட்பேட் புரோகிராம் கிடைத்தவுடன் அதில் கீழே குறித்துள்ளபடி டைப் செய்திடவும்.
[Shell]

command=2

Iconfile=explorer.exe,3

[Taskbar], Command=ToggleDesktop

அடுத்து இந்த பைலை savedesktop.scf என்ற பெயரில் சேவ் செய்திடவும்.

உருவாக்கிய பைலை C:\Documents and Settings\username\Application Data \Microsoft\Internet Explorer\Quick Launch என்ற போல்டரில் பேஸ்ட் செய்திடவும்.

இதில் username என்பதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள யூசர் அக்கவுண்ட்டில் உள்ள யூசர் நேம் ஆக இருக்க வேண்டும். இனி ÷ஷா டெஸ்க்டாப் ஐகான் ஸ்டார்ட் பட்டனுக்கு அடுத்த இடத்தில் அமைந்திருப்பதனைக் காணலாம்.


உங்களுக்கு இந்த ஐகான் தான் வேண்டுமா? அல்லது டெஸ்க்டாப்பிற்குச் செல்வதற்கு எளிய வழி வேண்டுமா? விண்டோஸ் கீயுடன் D அல்லது M அழுத்தினால் விண்டோஸ் டெஸ்க் டாப் கிடைக்கும்.

மீண்டும் அதே கீகளை அழுத்த பழையபடி புரோகிராம்கள் இயங்கும் நிலையில் கிடைக்கும்.

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்டுத்துகிறேன். இதில் ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் என்ற பகுதியில் நான் பயன்படுத்திய லேட்டஸ்ட் பைல்கள் பட்டியலிடப்படுகின்றன. இவற்றில் மற்றவர்கள் பார்க்கக்கூடாத பைலை டெலீட் செய்தாலும் இதில் நிறைய பார்த்த பைல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இவற்றைத் தடை செய்திடும் வழி என்ன?

–டி. கணேஷ் ராம், பழநி


பதில்: மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் என்ற பிரிவில் எப்போதும் லேட்டஸ்ட்டாக நீங்கள் பார்த்த 15 பைல்கள் பட்டியலிடப்படும். இவற்றில் ஏதேனும் ஒரு பைலை நீக்க வேண்டும் எனில் அதில் ரைட் கிளிக் செய்து டெலீட் செய்திடலாம்.

ஆனாலும் இந்த பட்டியலில் உள்ள 15 பைல்கள் என்ற எண்ணிக்கை மாறாது. ஏனென்றால் இந்த பைல்களின் பெயர்கள் உங்களுடைய யூசர் புரபைல் (User Profile) என்னும் பகுதியில் ரீசண்ட் (Recent) என்ற பகுதியில் பதியப்பட்டிருக்கும்.

இவற்றை முழுவதுமாக நீக்க செய்ய வேண்டிய செயல்பாடுகளைக் காணலாம். உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி என்பதால், நீங்கள் சில ஆப்ஷன்களை இதில் மேற்கொள்ளலாம்.

ஸ்டார்ட் (Start) பட்டன் அழுத்தி ப்ராப்பர்ட்டீஸ் (Properties) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த மெனுவில் கஸ்டமைஸ் (Customize) என்பதில் கிளிக் செய்திடவும்.

இதில் அட்வான்ஸ்டு (Advanced) என்ற டேப்பில் பின்னர் கிளிக் செய்திடவும். இதில் கிளியர் லிஸ்ட் (Clear List) என்று உள்ளதில் கிளிக் செய்தால், ரீசண்ட் (Recent) என்னும் பிரிவில் பதியப்பட்டிருக்கும் பைல் பெயர்கள் எல்லாம் நீக்கப்படும்.

நீங்கள் பார்த்த பைல்கள் மற்றவர்களுக்குத் தெரியாது. இதே பிரிவில் ஸ்டார்ட் மெனுவில் இருந்து மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் ('My Recent Documents') என்ற பிரிவையும் மொத்தமாக நீக்கலாம்.'List My Most Recently Opened Documents' என்பதனை கிளியர் செய்தாலே போதும்.

நன்றி.தினமலர்

viveka
31-03-2010, 10:40 AM
நாம் இன்டர்நெட்டில் சில தளங்களுக்கு நுழையும் போது மெது ஈமெயல் ஐடிணை கொடுத்து லொக்இன் பன்னும்போது இது சேவாகிவிடுகின்றது. நாம் அதனை எவ்வாறு டிலீட் செய்யலாம். (How can I Detete email Id from webpage login box)

நூர்
05-04-2010, 06:00 AM
ஏப்ரல் 04,2010

கேள்வி: என் நண்பர் பல வேலைகளுக்கு ஷிப்ட் கீயைப் பயன்படுத்தி புதிய வகையில் மாற்றங்களை மேற்கொள்கிறார். இவற்றை எப்படி அறிவது?

–எம்.கே. சேஷாத்ரி, தாம்பரம்



பதில்: நண்பரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே. அது இன்னும் மனதில் நன்றாகப் பதியுமே. கீழே சில வழிகளைத் தந்துள்ளேன். உடனே கம்ப்யூட்டரில் செயல்படுத்திப் பார்க்கவும். அப்போதுதான் மனதில் நிற்கும்.


ஷிப்ட் கீயுடன் (Shift) சில செயல்பாடுகளை மேற்கொண்டால் அது கூடுதல் பயன்களைத் தரும். எடுத்துக் காட்டாகப் பைல் மெனு கிளிக் செய்தால் வழக்கம்போல சில செயல்பாடுகளுக்கான கட்டங்கள் பட்டியலிடப்படும்.

ஆனால் ஷிப்ட் கீயுடன் அதனைக் கிளிக் செய்தால் Close All, Save All, and Paste Picture என்ற கூடுதல் பயன்பாட்டுக் கட்டங்கள் கிடைக்கும்.

சில டூல் பட்டன்கள் ஷிப்ட் கீயுடன் இணையும் போது அதன் செயல்பாடுகள் மாறுதலாக இருக்கும். எடுத்துக் காட்டாக எக்ஸெல் தொகுப்பில் அடிக்கோடிடும் அன்டர்லைன் பட்டன் டபுள் அன்டர்லைன் கோடு தரும் பட்டனாக மாறும்.

Align Left செயல்பாடு Align Right ஆக மாறும். Increase Decimal செயல்பாடு Decrease Decimal ஆக மாறும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தை மீண்டும் ஆக்டிவேட் செய்திடும் சூழ்நிலை வருகையில், அதனைத் தவிர்க்கவே முடியாதா? தவிர்க்கும் வழிகள் உள்ளனவா?

ஏனென்றால் ஒவ்வொரு முறை அனைத்தையும் மீண்டும் இன்ஸ்டால் செய்வதற்கான சிடிக்களைத் தேடுவதும், இன்ஸ்டால் செய்வதும் அதிக நேரம் எடுக்கும் வேலையாக உள்ளது?

–வி.அருண்குமார், சிவகங்கை


–டாக்டர் கே. மாலதி, திருப்பூர்

பதில்: உங்களுடைய கடிதத்தில் உள்ள ஆதங்கம் புரிகிறது. ஆனால் வேறு வழியில்லை.

பல காரணங்களால் நாம் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை கம்ப்யூட்டரில் மீண்டும் ஆக்டிவேட் செய்திடும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

புதிய மதர்போர்டு இணைக்கையில், புதிய ஹார்ட் டிரைவுக்கு மாறுகையில், தொடர்ந்து சிஸ்டம் எர்ரர்கள் ஏற்படுகையில், நீங்களாகவே புதியதாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்க வேண்டும் என்று திட்டமிடுகையில்,

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நாம் மீண்டும் ஒருமுறை செயல்படுத்த வேண்டியுள்ளது. அப்போது நீங்கள் கூறியுள்ள அனைத்து டிரைவர் இன்ஸ்டலேஷன் மற்றும் சாப்ட்வேர் இன்ஸ்டலேஷன்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


ஆக்டிவேட் செய்கையில் இரண்டாவதாக நீங்கள் சொன்ன பல்வேறு இன்ஸ்டலேஷன்களை வேண்டுமானால் எளிதாக மேற்கொள்ள ஒரு வழி உள்ளது. முதல் முதல் நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பியினை ஆக்டிவேட் செய்திடுகையில், சிஸ்டம் wpa.dbl என்ற ஒரு பைலை உருவாக்கியிருக்கும். இது WINDOWS\ system32 folder என்ற போல்டரில் இருக்கும்.

மை கம்ப்யூட்டரில் சி டிரைவ் சென்று இந்த போல்டருக்குச் செல்லவும். பின் கீழாக ஸ்குரோல் செய்து போனால், இந்த பைலைக் காணலாம். இதனை பிளாப்பி அல்லது சிடியில் காப்பி செய்து வைக்கவும்.


அடுத்து விண்டோஸ் எக்ஸ்பியை ரீ இன்ஸ்டால் செய்திடுகையில் ஆக்டிவேஷன் ஸ்கிரீன் கிடைக்கும். அப்போது ஆக்டிவேட் செய்திடாமல், இன்ஸ்டலேஷனை மட்டும் முடிக்கவும். அடுத்து உங்கள் கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கவும். ஸ்டார்ட் அப் ஆகும்போது எப்8 கீயை தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தினால், இந்த மோட் கிடைக்கும்.


அடுத்து WINDOWS\system32 folder செல்லவும். ஏற்கனவே காப்பி செய்து வைத்திருக்கும் wpa.dbl என்ற பைலை இதில் காப்பி செய்திடவும். பின் ரீபூட் செய்திடவும். எக்ஸ்பி இயங்க ஆரம்பித்து வழக்கம்போல அனைத்து சாப்ட்வேர் தொகுப்பு களையும் உங்களுக்குத் தந்துவிடும்.

இதில் ஒரு சிறு எச்சரிக்கை தர விரும்புகிறேன். உங்களுடைய கம்ப்யூட்டரில் இருக்கும் பைல், மற்ற கம்ப்யூட்டர்களில் செயல்படாது.

கேள்வி: ஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்ற சொல்லை அடிக்கடி கேள்விப்படுகிறேன். பல ஆங்கிலக் கட்டுரைகளில் படிக்கிறேன். இது எதனைக் குறிக்கிறது?

– கி. இராசேந்திரன், விழுப்புரம்


பதில்: சிலர் இப்படி அலுத்துக் கொள்வார்கள் – போன வாரம் இரவில் விண்டோஸ் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, அவரே ஸ்லிப் ஸ்ட்ரீமிங் இருந்தால் கொஞ்சம் ஈஸியாக இருந்திருக்கும்.

சீக்கிரம் படுக்கைக்குப் போயிருக்கலாம் என்பார். விண்டோஸ் மிக ஈஸியாக இன்ஸ்டால் ஆகிவிடும். ஆனால் அதன் பின்னர், சர்வீஸ் பேக், லேட்டஸ்ட்டாக வந்த ஹாட் பிக்ஸ், அண்மையில் வந்த டிரைவர் தொகுப்புகள்.

என கணக்கிலடங்காத பின்னூட்டுகளை சிரமப்பட்டுத் தேடி இன்ஸ்டால் செய்திட வேண்டி இருக்கும். இல்லையேல் உங்கள் புரோகிராம்கள் இயங்காது. விண்டோஸ் முன்பு போலக் காட்சி அளிக்காது.


ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது இந்த அலைச்சலுக்கும் தேடலுக்கும் ஒரு முடிவு கட்டுகிறது. ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது ஒரு பூட்டபிள் சிடியில், நமக்குத் தேவையான லேட்டஸ்ட் டிரைவர் தொகுப்புகள், முழுமையான ஒரிஜினல் இன்ஸ்டலேஷன் பைல்கள், அப்போதைய சர்வீஸ் பேக் என அனைத்தையும் பதிந்து வைக்கும் செயல்பாடாகும்.

இந்த சிடியை வைத்துக் கொண்டால், விண்டோஸ் சிஸ்டம் தொகுப்பை ரீ இண்ஸ்டால் செய்வது முதல் அனைத்து வேலைகளையும் தானே மேற்கொண்டு விடும். இதனை எப்படி தயாரிப்பது?


இதற்கு முதலில் நமக்குத் தேவை விண்டோஸ் ஒரிஜினல் சிடி. இதனை முதலில் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் சி (C:/XP) டிரைவில் காப்பி செய்திடவும். உங்களுடைய சிஸ்டம் டிஸ்க்கில் லேட்டஸ்ட் சர்வீஸ் காப்பி இருந்தால் நல்லது.

இல்லையேல் மைக்ரோசாப்ட் தளம் சென்று அதனையும் காப்பி செய்து அந்த டிரைவில் தனியான போல்டரில்பேஸ்ட் செய்திடவும். மைக்ரோசாப்ட் தளத்தில் என்ன என்ன ஹாட் பிக்ஸ் பைல்கள் கிடைக்கின்றனவோ, அவை அனைத்தையும் காப்பி செய்து பேஸ்ட் செய்திடவும்.


விண்டோஸ் சிஸ்டம் சிடியில் இல்லாத டிரைவர்கள் ஏதேனும் உங்களுக்குத் தேவை என்றால், அவற்றின் தளங்களுக்குச் சென்று அவற்றையும் இதே போல அந்த இரண்டாவது போல்டரில் காப்பி/பேஸ்ட் செய்திடவும்.

இப்போது ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செயல்பாடு இந்த இரண்டு போல்டரையும் ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் மூலம் உருவாக்குவதன் மூலம் இணைக்கும்.

இதற்கு உதவக் கூடிய புரோகிராம் ஆட்டோ ஸ்ட்ரீமர் (AutoStreamer 1.0.33) என்பதாகும். இதனை http://www.neowin.net/search/ news?terms=autostream என்ற தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம். இதனை டவுண்லோட் செய்து ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செய்திடப் பயன்படுத்தவும்.

இந்த வேலைகளை எல்லாம் மேற்கொள்ள சிறிது சிரமம் என்றாலும், விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திடுகையில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை எல்லாம் சுலபமாக மேற்கொள்ளலாமே.

கேள்வி: ஒரு பைல் டைரக்டரியில் வரிசையாக இல்லாத ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை எப்படி ஸிப் பைலாக்குவது?

–பா. கிருத்திகா, ஆசிரியை, மதுரை


பதில்: உங்களுடைய கடிதத்தில் இமெயிலில் அனுப்ப பைல்களை சுருக்க வேண்டும் என எழுதி உள்ளீர்கள். பைல்கள் உள்ள டைரக்டரி அல்லது போல்டருக்குச் செல்லுங்கள். கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, சுருக்க வேண்டிய பைல்கள் ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுங்கள்.

ஸிப் செய்திட வேண்டிய அனைத்து பைல்களையும் தேர்ந்தெடுத்த பின்னர், இந்த பைல்களில் ஏதேனும் ஒன்றில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Send to என உள்ளதைக் கிளிக் செய்திடவும்.

அதன் பின் Compressed (zipped) folder என்பதைத் தேர்ந்தெடுக் கவும். மந்திரம் போட்டது போல, நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்கள் அனைத்தும் சுருக்கப்பட்டு, ஒரு ஸிப் பைலாகக் கிடைக்கும்.

விண்டோஸ் சிஸ்டம் இந்த ஸிப் பைலுக்குக் கொடுத்த பெயர் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பைலை செலக்ட் செய்து, எப்2 அழுத்தி, அதற்கு வேறு ஒரு பெயர் கொடுக்கவும்.


மேலே சொன்னது விண்டோஸ் சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள ஸிப் செய்திடும் வசதி. இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், விண் ஸிப் அல்லது விண் ஆர் ஏ ஆர் என்ற தர்ட் பார்ட்டி புரோகிராம்களை இலவசமாய் டவுண்லோட் செய்து இயக்கலாம். இந்த புரோகிராம்களில் இன்னும் பல ஆப்ஷன்கள் கிடைக்கும்.


கேள்வி: என் விண்டோஸ் போல்டரில் '$NtUninstallQ’’ என்று தொடங்கும் எக்கச் சக்க பைல்கள் உள்ளன. இவற்றை அழிக்கலாமா? அதனால் பிரச்னை வராதா?

– டாக்டர் ஏ. வெங்கட ரமணன், திருப்பூர்

பதில்: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்களுக்கு வரும் ஒரு கூடுதல் தலைவலி. நீங்கள் ஒரு அப்டேட் அல்லது பேட்ச் பைல் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அல்லது விண்டோஸ் தானாக இன்ஸ்டால் செய்கையில்,

விண்டோஸ், ஒருவேளை பின் நாளில் இதனை அன்இன்ஸ்டால் செய்திட எண்ணினால் உதவட்டுமே என்ற நோக்கில், டைரக்டரி ஒன்றை உருவாக்கி பைல்களைப் போட்டு வைக்கிறது. இன்னொரு வழியில் சொல்வது என்றால்,

உங்களுடைய அப்டேட் பைல்கள், கம்ப்யூட்டரைக் கெடுத்துவிட்டால், தப்பிக்கும் வழியாக இது அமையும். இந்த பைல்கள் உங்களுக்கு வேண்டுமா? நிச்சயமாய் தேவைப்படாது.

உங்கள் கடிதத்தில் உள்ள இந்த கேள்வியைப் படித்த பின் என் எக்ஸ்பி கம்ப்யூட்டரில் பார்த்தேன். 184 பைல்கள் 33 எம்பி இடத்தைப் பிடித்துக் கொண்டு இருந்தது. உடனே அவற்றை அழித்துவிட்டேன். ஆம், அழிக்கலாம். ஒன்றும் பிரச்னை இல்லை. நீக்கிய பின்னும், ஒவ்வொரு அப்டேட்டுக்குப் பின் இவை தோன்றும். தயக்கமில்லாமல் நீக்கிவிடலாம்.

நன்றி.தினமலர்

நூர்
08-04-2010, 05:46 AM
நாம் இன்டர்நெட்டில் சில தளங்களுக்கு நுழையும் போது மெது ஈமெயல் ஐடிணை கொடுத்து லொக்இன் பன்னும்போது இது சேவாகிவிடுகின்றது. நாம் அதனை எவ்வாறு டிலீட் செய்யலாம். (How can I Detete email Id from webpage login box)

நன்றி. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23276 இங்கு சென்று பாருங்கள்.

நூர்
12-04-2010, 11:53 AM
ஏப்ரல் 12,2010

கேள்வி: ஏறத்தாழ பதினைந்து பாஸ்வேர்ட்களை நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் எவ்வளவோ மாற்றங்களைக் கொண்டு வரும் நாம், இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர முடியாதா?

–சா. வளவன், திண்டிவனம்


பதில்: ஏன் இல்லை? இனிமேல் இந்த பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இவை திருடப்படுமோ, காணாமல் (நம் நினைவைவிட்டு) போய்விடுமோ என்ற கவலையே கொள்ள வேண்டியதில்லை.

உங்கள் கை விரல் ரேகையினை பாஸ்வேர்ட் ஆகக் கொண்டு, டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் அல்லது லேப் டாப் கம்ப்யூட்டரில் உள்ள விரல் ரேகை ஸ்கேனர் மூலம் உருவாகும் விரல் ரேகைகளை பாஸ்வேர்டாகப் பயன்படுத்தலாம்.

அடுத்ததாக, கீ போட்டு பின் பாஸ்வேர்ட் போட்டு பயன்படுத்தும் வசதி உருவாகி உள்ளது. நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் பிளாஷ் டிரைவ் போன்ற ஒரு சாதனம்,

அதற்கான தனி குறியீடுடன் கிடைக்கும். ஏதேனும் புரோகிராம் அதற்கான பாஸ்வேர்டைக் கேட்கையில், இந்த பிளாஷ் டிரைவினைச் செருகிப் பின் பாஸ்வேர்டை என்டர் செய்து பயன்படுத்த வேண்டும்.


இன்னொரு புதுவகை பாஸ்வேர்ட் பழக்கம் வர இருக்கிறது. தற்போது சில மொபைல் போன்களில் உள்ளதாக என் நண்பர்கள் கூறி உள்ளனர். ஒரு திரை உங்களுக்குக் காட்டப்படும். இதில் நீங்கள் பேட்டர்ன் அல்லது இமேஜ் ஒன்றை விரல்களால் வரைய வேண்டும்.

இது ஏற்கனவே சேவ் செய்யப்பட்ட இமேஜ் உடன் இணைந்து போனால், மொபைல் போனைப் பயன்படுத்தலாம். இல்லையேல் சிரமம் தான். மேலே சொன்ன அனைத்து வகை பாஸ்வேர்ட்களையும் வருங்காலக் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தக் கூடிய நாட்கள் அதிகம் இல்லை.

கேள்வி: கம்ப்யூட்டரில் உள்ள சில டாகுமெண்ட் பைல்களைத் திறந்து பார்க்க டிரைவிற்குச் சென்றால்,

டாகுமெண்ட் பெயருக்கு முன் டில்டே யுடன் ஒரு டாலர் (நு$) அடையாளம் உள்ளது. பைல் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்கள் இடத்தில் இவை உள்ளன. இந்த பைல்கள் எதனைக் குறிக்கின்றன?

–இரா. செந்தில் குமார், விருதுநகர்


பதில்: இது ஒரு தற்காலிக பைல்; நீங்கள் அந்த டாகுமெண்ட்டைப் பார்க்கையில் இது மறைத்து வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஒரு டாகுமெண்ட்டைத் தயாரித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் டைப் செய்தவை எல்லாம் சேவ் செய்யப்படுவதற்கு

முன், இந்த பைலில் தான் வைக்கப்படும். சில வேளைகளில் இந்த பைல் சிஸ்டத்திலேயே சில காலம் தங்கி இருக்கும். அல்லது நீங்கள் டாகுமெண்ட்டில் எடிட் செய்து கொண்டிருக்கையில் சிஸ்டம் கிராஷ் ஆனால்,

இந்த பைல் அப்படியே இருக்கும். ஒரிஜினல் பைலும் இருக்கும். இந்த தற்காலிக பைலை, அதற்கான ஒரிஜினல் பைலை சேவ் செய்து மூடிய நிலையில் அழித்துவிடலாம்.

கேள்வி: பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் காட்சி காட்டிக் கொண்டிருக்கையில், ரைட் மவுஸ் பட்டனில் தவறுதலாக அழுத்திவிட்டால், தேவையில்லாமல் மெனு காட்டப்படுகிறது. இதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வழி உள்ளதா?


–பேரா. சக்தி முருகன், சென்னை


பதில்: இது போன்று பல வேளைகளில் நானும் சிந்தித்துள்ளேன். நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் காட்சி விளக்கத்தில் இது போல மெனுக்கள் தோன்றி நம் உற்சாகத்தைக் கெடுக்கும். ஆனால் இதற்கு ஒரு தீர்வு உள்ளது.

இந்த மெனு தோன்றுவதை நிறுத்தி வைக்கலாம். Tools மெனு செல்லவும். அதில் Options என்ற சாய்ஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் விண்டோவில் View என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

பின்னர் காட்டப்படும் விண்டோவில் Slide show பிரிவிற்குச் செல்லவும். இங்கு 'Popup menu on right mouse click' என்ற ஆப்ஷன் கிடைக்கும். இங்கு உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

இனி ரைட் கிளிக் செய்தாலும் மெனு கிடைக்காது. மீண்டும் தேவைப்படும்போது டிக் அடையாளத்தை அமைக்கவும்.


உங்களிடம் பவர்பாய்ண்ட் 2007 இருந்தால், ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்து, பவர்பாய்ண்ட் ஆப்ஷன்ஸ் (Powerpoint Options) என்னும் பட்டன் மீது தட்டவும். இங்கு கிடைக்கும் பிரிவுகளில் அட்வான்ஸ்டு (Advanced) என்ற கேடகிரியைப் பெறவும்.

இதில் ஸ்லைட் ÷ஷா என்னும் பிரிவு கிடைக்கும். இங்கு 'Show menu on right mouse click' என்ற ஆப்ஷன் இருக்கும். இதில் மேலே சொன்னபடி டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இனி உங்களை எரிச்சலடையச் செய்திடும் மெனு வராது.

கேள்வி: என் எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் அதிக தகவல்கள் உள்ளன. இதனால் பிரிண்ட் எடுக்கையில் தகவல்கள் பிரித்து கிடைக்கின்றன. எனக்கு அத்தகவல்கள் மேற்புறம், பின் அதன் கீழ் உள்ளது என்ற வரிசையில் வேண்டும். வலது பக்கம் உள்ளது இறுதியில்தான் வேண்டும். இதனை செட் செய்திட முடியுமா?

–சி. பிரியங்கா, திருப்பூர்


பதில்: பல பக்கங்களை உடைய எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். இப்போது அவற்றை பிரிண்ட் எடுக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஒரு வரிசையில் மட்டுமே எடுக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். அவ்வாறு உங்கள் விருப்பப்படி அச்சடிக்க முடியுமா?


எக்ஸெல் தொகுப்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும் அச்சடிக்க வழி தருகிறது. நீங்கள் ஒர்க்ஷீட்டில் தந்துள்ள தகவல்கள் ஒரு பக்கத்தில் அச்சடிக்கும் வகையில் இல்லாமல் இருந்தால் எக்ஸெல் அதில் உள்ள தகவல்களை, நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசை எல்லைகளில் பிரித்து வைத்து, அடுத்த பக்கங்களாக அச்சிடுகிறது.

இந்த வரிசையினை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக, உங்கள் ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்கள் அதிக அகலத்திலும், அதிக உயரத்திலும் அமைந்திருப் பதாக வைத்துக் கொள்வோம்.

பிரிண்ட் ஆகும்போது இது நான்கு பக்கங்களில் அமையலாம். முதல் பக்கத்தில் அச்சிடப் படுவது எப்போதும் இடது பக்கத்தில் மேல் மூலையில் உள்ள செல்லாக இருக்கும்.

இப்போது நம் பிரச்னை, இரண்டாவது பக்கத்தில், கீழாக உள்ள தகவல்கள் பிரிண்ட் ஆகுமா? அல்லது வலது பக்கம் உள்ள கூடுதல் தகவல்கள் பிரிண்ட் ஆகுமா? என்பதுதான். இதனை நீங்கள் முடிவு செய்திடலாம்.


1. Page Setup பிரிவினை File மெனுவிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.இப்போது எக்ஸெல் Page Setup டயலாக் பாக்ஸைத் தரும்.


2. இதில் Sheet டேப் தேர்ந்தெடுங்கள்.


3. இதில் Page Orderஎன்னும் பிரிவில், எக்ஸெல் எந்த வரிசையில் தகவல்களை அச்சடிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். நீங்கள் இதில் உங்கள் விருப்பத்தினை அமைக்கையிலேயே, எக்ஸெல் உங்கள் பிரிண்டிங் எந்த வகையில் அமைந்திடும் எனக் காட்டும்.


4. விருப்பங்களை அமைத்த பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும்.
இனி நீங்கள் செட் செய்தபடி பிரிண்ட் கிடைக்கும்.


கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட் தயாரிக்கையில், ஒர்க் ஷீட்டின் செல் அகலம் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளன. என்னுடைய வேலைக்கு இவை சிறியதாக உள்ளன. எப்போது ஒரு ஒர்க் ஷீட்டைத் திறந்தாலும், இந்த அகலம் நான் விரும்பும் வகையில் அமைய வேண்டும். எப்படி இதனை செட் செய்வது?

–சி. நா. கதிரேசன், காரைக்குடி


பதில்: புதிய ஒர்க் ஷீட் ஒன்றைத் திறக்கையில் செல் அகலம் ஒரே மாதிரியான அளவிலேயே இருக்கும். இதனை உங்கள் விருப்பப்படி மாற்ற Format மெனு சென்று இணிடூதட்ண என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு துணை மெனுவினைக் காட்டும். இதில் Standard என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

உடன் Standard Width என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் எந்த அகலத்தில் செல்கள் அமைய வேண்டுமோ அதனை அமைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இவ்வாறு செய்தவுடன் உங்கள் ஒர்க் ஷீட்டின் செல்கள் அனைத்தும் நீங்கள் குறிப்பிட்ட அளவிற்கு அட்ஜஸ்ட் செய்யப்படும்.

ஆனால் இதற்கு முன் நீங்கள் ஏதேனும் ஒரு செல்லின் அகலத்தினை நீங்களாக மாற்றி வைத்திருந்தால், அது அப்படியே அதே அகலத்தில் இருக்கும்.

நன்றி,தினமலர் .

aravindhraju
13-04-2010, 03:19 AM
எனது கணினியில் ஒரு DVD இல் தகவல்களை சேமிக்க குறைந்தது 45 நிமிடத்திற்கு மேல் ஆகிறது .மற்றவர்களை போல் குறுகிய காலத்தில் சேமிக்க நான் என்ன செய்ய வேண்டும்.

நூர்
19-04-2010, 11:12 AM
எனது கணினியில் ஒரு DVD இல் தகவல்களை சேமிக்க குறைந்தது 45 நிமிடத்திற்கு மேல் ஆகிறது .மற்றவர்களை போல் குறுகிய காலத்தில் சேமிக்க நான் என்ன செய்ய வேண்டும்.

mp3,vcd யை விட அதிகமான நேரம் எடுத்துக்கொள்கிறது என்பது சரிதான்.


குறுகிய காலத்தில் சேமிக்கும் வழியை நம் நண்பர்கள் யாராவது சொல்வார்கள் என நினைக்கின்றேன்.

நூர்
19-04-2010, 11:25 AM
ஏப்ரல் 18,2010

கேள்வி: நான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தி வருகிறேன். சென்ற வாரம் என் கம்ப்யூட்டரில் சின்ன பிரச்னைய சரி செய்த மெக்கானிக், பிரச்னை இல்லாமல் இன்டர்நெட் பிரவுஸ் செய்திட மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தக் கூறினார். இதனை எங்கிருந்து பெறலாம்? இலவசமாகக் கிடைக்குமா?

–டி.முத்துராமலிங்கம், உசிலம்பட்டி


பதில்: நீங்கள் இன்னொரு பிரவுசரையும் பயன்படுத்துவது நல்லது தான். பயர்பாக்ஸ் பிரவுசரை www.mozilla.org என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான பிரவுசர் தொகுப்புகள் கிடைக்கின்றன. ஆனால் பயர்பாக்ஸ் பிரவுசர் முழுமையான 100% பாதுகாப்பு உள்ளது என்று உறுதி அளிக்க முடியாது. ஆனால் பிரவுசர் எதுவாக இருந்தாலும்,

இன்டர்நெட் இணைப்பின் மூலம் அதனை அவ்வப்போது அப்டேட் செய்திட வேண்டும். இவை தாமாகவே அப்டேட் செய்திடும் வசதி கொண்டவை. அதற்கான செட்டிங்ஸை மட்டும் சரியாக அமைத்திடுங்கள்.

கேள்வி: லேட்டஸ்ட் பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தேன். அதில் பிரச்னைகள் பல இருப்பதாகத் தெரிகிறது. பழைய பயர்பாக்ஸ் பிரவுசரே போதும் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். பழைய பதிப்பு எங்கு கிடைக்கும்?

–நா. சுந்தர மூர்த்தி, விருதுநகர்


பதில்: பிரச்னை பற்றி எழுதவில்லை. பயர்பாக்ஸ் பிரவுசரை அதன் தளம் மூலம் அப்டேட் செய்து பார்க்கலாமே. இருப்பினும் உங்கள் கேள்விக்கு விடை சொல்கிறேன்.

பயர்பாக்ஸ் இல்லாமல் வேறு ஒரு பிரவுசர் மூலம் http://ftp.mozilla.org/pub/mozilla.org/firefox/releases/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

அங்கு பயர்பாக்ஸ் பிரவுசரின் எந்த பதிப்பு வேண்டுமோ, அதில் கிளிக் செய்து அதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும்.

கேள்வி: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கப் படுகையில், சிறிது நேரம் விண்டோஸ் லோகோ காட்டப்பட்டு அப்படியே நிற்கிறது. அந்த நேரத்தில் என்ன நடைபெறுகிறது? அதனை நாம் தெரிந்து கொள்ள முடியுமா?

–ஜி.கிருஷ்ணவேணி, மதுரை


பதில்: இதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆவலை நான் பாராட்டுகிறேன். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இப்படி ஒவ்வொன்றையும் கேள்விக் குறியோடு நோக்கினால், நிச்சயம் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.

விண்டோஸ் லோகோ காட்டப்படுகையில், அதாவது கம்ப்யூட்டர் பூட் செய்யப்படுகையில், கம்ப்யூட்டரின் சாதனங்கள் இயங்கத் தேவையான டிரைவர் பைல்கள் அனைத்தும் இயங்கு தளத்திற்கு ஏற்றப்படுகின்றன. இந்த டிரைவர் பைல்கள் என்ன என்ன என்று சாதாரணமாகக் கம்ப்யூட்டரைப்

பயன்படுத்துபவருக்குத் தேவை இல்லை என்பதால், திரையில் விண்டோஸ் லோகோ காட்டப்படுகிறது.


லோகோ காட்டப்படுவதனை நிறுத்தி, அந்த பைல்கள் எவை என்று பார்க்க கீழே காட்டியுள்ளபடி செயல்படவும். Start அழுத்தி Run கட்டம் பெறவும்.

அதில் msconfig என டைப் செய்து என்டர் தட்டவும். உடன் Systems Configuration Utility டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் பூட் ஐ என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.


பின்னர் Operating Systems என்ற பிரிவில் இதற்கான என்ட்ரியைத் தேர்ந்தெடுத்த பின்னர், கீழாக உள்ள Boot Options பிரிவில் /குOகு என்ற ஸ்விட்சைக் கிளிக் செய்திடவும். இப்போது

multi(0)disk(0)rdisk(0)partition(5)\WINDOWS='XPProfessional'/noexecute= option/fastdetect என்ற என்ட்ரி multi(0)disk(0)rdisk(0 )partition(5)\WINDOWS='XPProfessional'/noexecu te=option/fastdetect /sos என மாறும்.


அடுத்து சிஸ்டம் கான்பிகரேஷன் யுடிலிட்டி பாக்ஸை ஓகே கிளிக் செய்து மூடுகையில் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடும்படி நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.

கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடுங்கள். இப்போது விண்டோஸ் லோகோ உங்கள் திரையில் தோன்றாது. அதற்குப் பதிலாக என்ன என்ன டிரைவர் பைல்கள் லோட் செய்யப்படுகின்றன என்று காட்டப்படும்.

கேள்வி: என் கம்ப்யூட்டருக்கு ஒரு பெரிய ஹார்ட் டிஸ்க் வாங்கிப் போடும்படி என் நண்பர் கூறுகிறார். அவர் என்ன கூறுகிறார் என்று அவரிடம் கேட்க தயக்கமாக இருக்கிறது. இதனைச் சற்று மிக மிக எளிதாக விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


–பெயர் அனுப்பாத வாசகர், திருப்பூர்

பதில்: தயக்கமெல்லாம் வேண்டாம் சார்.நமக்குத் தெரியாததை, தெரிந்தவர் களிடம் கேட்டுக் கற்றுக் கொள்வதில் என்ன தவறு? எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.


ஹார்ட் டிஸ்க் டிரைவ் என்பதை ஹார்ட் டிரைவ், ஹார்ட் டிஸ்க் என அழைக்கிறோம். இதில் நாம் அமைக்கும் தகவல்கள், பைல்கள், புரோகிராம்கள் என அனைத்தும் பதியப்பட்டு நமக்குக் கிடைக்கின்றன. இது நம் கம்ப்யூட்டரில் முக்கியமான சாதனமாகும். அப்படியானால், பிளாப்பி, சிடியில் தகவல்கள், பைல்கள் இல்லையா? என நீங்கள் கேட்கலாம்.

அவற்றிலும் நாம் டேட்டா என்னும் தகவல்களைப் பதிகிறோம். ஆனால் ஹார்ட் டிஸ்க் என்பது நிலையான ஒரு உறுப்பாக கம்ப்யூட்டரில் இணைக்கப் பட்டுள்ளது. உங்கள் கம்ப்யூட்டர் இயக்கத்தினை நீங்கள் நிறுத்திவிட்டால், உங்களின் டேட்டா முழுவதும் ஹார்ட் டிஸ்க்கில் பத்திரமாக இருக்கும்.

ஒரு ஹார்ட் டிரைவ் உள்ளே வட்ட வடிவில் பல டிஸ்க்குகள், சுழலும் ஸ்பிண்டில் மீது செருகப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். எலக்ட்ரிக் மோட்டார் ஒன்றினால் இது சுழன்று, அனைத்து டிஸ்க்குகளையும் சுழலச் செய்திடும். அப்போது அதில் பதியப்பட்டுள்ள தகவல்கள், அதற்கென உள்ள ஹெட் எனப்படும் சிறிய சாதனம் மூலம் படிக்கப்பட்டு நமக்குத் தரப்படும்.

அல்லது தரப்படும் தகவல்கள் பதியப்படும். எவ்வளவு வேகமாக இது சுழல்கிறதோ, அவ்வளவு வேகமாகக் கம்ப்யூட்டர் இயங்கும். தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
பெரிய ஹார்ட் டிஸ்க் என்று உங்கள் நண்பர் கூறுவது அதிகமாக டேட்டாக்களைக் கொள்ளக் கூடிய டிஸ்க்கினைத்தான்.

இது இயங்க முடியாமல் போனால், தகவல்கள் கிடைக்காது. கம்ப்யூட்டரும் இயங்காது. எனவே இந்த ஹார்ட் டிரைவ் நல்லதாக, நல்ல நிறுவனம் தயாரித்ததாக இருக்க வேண்டும்.

கேள்வி: கேப்சா (CAPCHA) டெஸ்ட் என்பது இன்டர்நெட்டில் நம்மை அடையாளம் காட்டும் ஒருவித சோதனை என்று முன்பு விளக்கம் தந்தீர்கள். கேப்சா என்பது ஒரு சொல்லா? அல்லது பல சொற்களின் கூட்டா?

–ஆர்.கே. ரவீந்திரன், கலசலிங்கம் பல்கலை, கிருஷ்ணன்கோவில்.


பதில்: நல்ல கேள்வி. நாம் அனுப்பும் தகவல்கள் மனிதர்களால் தரப்படுகிறதா? அல்லது கம்ப்யூட்டரால் தானாக அமைக்கப்படுகிறதா என்று அறியவே இந்த சோதனை.

இந்த பொருள் தரும் பல சொற்களின் முன்னெழுத்துச் சொல்லே இது. இதனை விரித்தால் CAPCHA Completely Automated Public Turing [test to tell] Computers and Humans Apart. என்று கிடைக்கும்.

கேள்வி: நான் புதிதாக இரண்டாவது ஹார்ட் டிஸ்க் ஒன்றை வாங்கியுள்ளேன். என்னுடைய கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து புரோகிராம்ளையும் இதற்கு மாற்றிக் கொள்ளலாமா?

–டி. புவனா, மதுரை


பதில்: புரோகிராம்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், போட்டோஷாப் போன்றவை என்று எண்ணுகிறேன். இவற்றை முதல் ஹார்ட் டிஸ்க்கின் சி டிரைவிலேயே வைத்திருக்கவும்.

அதில் உருவாக்கப்படும் பைல்களை புதிய ஹார்ட் டிஸ்க்கிற்குக் கொண்டு செல்லவும். இதனால் உங்கள் டேட்டா பைல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். சி டிரைவ் உள்ள டிஸ்க் கெட்டுப்போனால், டேட்டா பைல்களைப் பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.


புதிய ஹார்ட் டிஸ்க்கில் தான் புரோகிராம்கள் வைக்கப்பட வேண்டும் என எண்ணினால், அவற்றை சி டிரைவிலிருந்து அன் இன்ஸ்டால் செய்துவிட்டு, பின் புதிய டிரைவில் இன்ஸ்டால் செய்திட வேண்டும்.


கேள்வி: சமீபத்தில் விண்டோஸ் 7க்கு மாறி இருக்கிறேன். இதில் வேர்ட் போன்ற புரோகிராம்களில் வேலை செய்கையில் கர்சர் இருப்பது தெரியவில்லை. இதனை வேகமாக துடிக்கும்படி செய்திட முடியுமா?

–எஸ். ஹேமா ஷ்யாம், புதுச்சேரி


பதில்: வழக்கமான கர்சருடன் கொஞ்சம் பழக்கப்பட்டால் சரியாகிவிடுமே. இருப்பினும் உங்கள் கேள்விக்கான தீர்வு விண்டோஸ் 7 தொகுப்பில் இருப்பதால், அந்த வழிகளைக் கூறுகிறேன். Start அழுத்தி Search Box சென்று 'Keyboard' என டைப் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் பிரிவில் 'Keyboard' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களுடைய கீ போர்டு ப்ராப்பர்ட்டீஸ் பாப் அப் விண்டோ கிடைக்கும். இதில் கர்சர் பிளிங்க் ரேட் (blink rate) என இருக்கும் இடத்தில், உங்களுக்கு என்ன ஸ்பீட் வேண்டுமோ அதனை அமைக்கவும்.


இது விண்டோஸ் 7 தொகுப்பில் மட்டுமின்றி அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் அமைக்கலாம். கண்ட்ரோல் பேனலில் இந்த வசதி கிடைக்கும்.

கேள்வி: பழைய கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். அனைத்து சர்வீஸ் பேக்குகளையும் நிறுவி உள்ளேன். விண்டோஸ் பயர்வால் போதுமா? வேறு ஏதேனும் ஆண்ட்டி ஸ்பைவேர் பயன்படுத்தலாமா? இலவசமாகக் கிடைக்குமா?

–எஸ். பரந்தாமன், திருப்பூர்


பதில்: AdAware அல்லது Spybot search & Destroy ஆகிய இரண்டில் ஒன்றை இலவசமாக டவுண்லோட் செய்து இயக்கவும். ஸ்பைவேர் தொகுப்புகள் அழிக்கப்படும்.

நன்றி.தினமலர்.

நூர்
26-04-2010, 05:42 AM
ஏப்ரல் 25,2010
http://img.dinamalar.com/data/more_pic_gallery/cmalarnews_10929507018.jpg


கேள்வி: கம்ப்யூட்டரில் புதிய சாப்ட்வேர் பதிந்ததனால் நிறைய பிரச்னைகள் ஏற்பட்டது. அதனை முழுமையாக நீக்கவும் முடியவில்லை. எப்படி இதனை முன்பிருந்த நிலைக்குக் கொண்டு செல்வது?

–சி.ஆர். தாமோதரன், திருப்பூர்


பதில்: இந்த செயலை மேற்கொள்ளத்தான் விண்டோஸ் சிஸ்டத்தில் ரெஸ்டோர் (Restore) என்னும் வசதி உள்ளது.

இதனைப் பயன்படுத்த நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டராக லாக் இன் செய்திட வேண்டும். உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் ஒருவர் மட்டுமே பயன்படுத்தும்படி செட் செய்திருந்தால் இது பற்றிக் கவலைப் பட வேண்டாம்.


பின்பு Start > All programs> Accessories> System Tools> System Restore எனச் செல்லவும். இப்போது 'Welcome to System Restore' என்ற ஒரு திரை உங்களுக்குக் காட்டப்படும். இதன் இடது பக்கம் உள்ள உதவிக் குறிப்புகளைப் படிக்கவும்.

அடுத்து 'Select a Restore Point' என்ற பக்கத்தில் date option என்பதில் எந்த நாட்களில் இருந்த நிலைக்கு உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்லலாம் என்று காட்டப்படும். இதில் நீங்கள் இந்த செயலை மேற்கொள்ளும் நாளுக்கு மிக அருகே உள்ள ஒரு நாளைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து Next பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து 'Confirm Restore Point Selection' என்ற ஒரு திரை காட்டப்பட்டு உங்களை உறுதிப்படுத்த கேட்டுக் கொள்ளும். அடுத்து

உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் தேர்ந்தெடுத்த நாளில் இருந்த செட்டிங்ஸ் அமைப்புகளுக்கு தன்னை மாற்றிக் கொள்ளும். அந்த நாளுக்குப் பின், நீங்கள் இன்ஸ்டால் செய்த புரோகிராம்களின் சுவடு எதுவும் இருக்காது.


அடுத்து 'Restoration Complete' என்ற செய்தி உங்களுக்குக் காட்டப்படும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறி கம்ப்யூட்டரை இயக்கவும்.

கேள்வி: வேர்டில் நாம் எடுத்துக் காட்ட விரும்பும் சொற்களை ஹைலைட் செய்வது எப்படி?

-கா. சுப்ரமணியம், ஒத்தக்கடை


பதில்: வேர்டில் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். மேலே உள்ள மெனு பாரில் ab என்ற சிறிய எழுத்துக்களுடன் ஒரு கட்டம் தென்படும். இதுதான் ஹைலைட் செய்திடும் டூல். இதன் ஓரத்தில் ஒரு சிறிய தலைகீழ் அம்புக் குறி இருக்கும்.

இதில் கிளிக் செய்தால், எந்த வண்ணத்தில் ஹைலைட் செய்திட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். பின் இதில் கிளிக் செய்தால் ஹைலைட்டர் பேனா போன்ற ஒரு கர்சர் கிடைக்கும்.

வழக்கமான கர்சரும் அதன் இடத்தில் இருக்கும். இந்த ஹைலைட் கர்சரைக் கொண்டு, எந்த சொற்களை ஹைலைட் செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அவை ஹைலைட் செய்யப்படும். இந்த ஹைலைட் டூலை ஆப் செய்திட, எஸ்கேப் கீ அழுத்தலாம். அல்லது ab கட்டத்தில் மீண்டும் கிளிக் செய்திடலாம்.


ஹைலைட் செய்யப்பட்ட பகுதிகள் திரையில் தோன்றும் காட்சியில் மட்டும் இருக்காது. இந்த டாகுமெண்ட்டை அச்சடிக்கக் கொடுத்தால், உங்களிடம் கலர் பிரிண்டர் இருந்தால், இதே கலரில் சொற்கள் ஹைலைட் செய்யப்பட்டு அச்சாகும்.

கருப்பு வண்ண பிரிண்டர் எனில், ஹைலைட் செய்யப்பட்ட பகுதிகள் கிரே கலரில் வெளிறிப் போய் இருக்கும். எனவே நீங்கள் கருப்பு வெள்ளை பிரிண்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால்,

இந்த ஹைலைட் செய்த பகுதிகளை நீக்கிவிடுவது நல்லது. இதற்கு ஹைலைட் செய்த பகுதியைத் தேர்ந்தெடுத்து, முன்பு சொல்லப்பட்ட அந்த ab கட்டத்தில் கிளிக் செய்தால் போதும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் சில சொற்களுக்கு அதே பொருள் கொடுக்கும் Synonyms கிடைக்கவில்லை. இல்லை என்று காட்டுகிறது. அல்லது காட்டாமல் இருக்கிறது. இது எதனால்? இந்தக் குறையை எப்படி நீக்குவது? வேர்ட் பேக்கேஜை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா?

–டி. அய்யம்பெருமாள், சிவகாசி


பதில்: வேர்ட் தொகுப்பில் ஆங்கிலத்தில் டாகுமெண்ட் அமைக்கையில் நமக்குத் தரப்படும் ரைட்டிங் டூல்கள் ஸ்பெல் செக்கர் என்னும் எழுத்துப்பிழை திருத்தி, கிராமர் செக்கர் என்னும் இலக்கணப்பிழை காட்டி மற்றும் அதே பொருள் கொண்ட சொற்களைக் காட்டும் தெசாரஸ் ஆகியவை ஆகும்.

ஒரு சொல்லின் மீது ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில், Synonyms என்ற பிரிவின் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், அந்த சொல்லுக்கான பொருள் கொண்ட மற்ற சொற்கள் பட்டியலிடப்படும். அதிலிருந்து நாம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த வசதி சில நேரங்களில் கிடைக்காது. அதே பொருள் தரும் சொல் அதாவது Synonym இல்லை என்றால், கட்டம் காலியாக இருக்கும். அல்லது Thesaurus என்பது காட்டப்பட்டு அதில் கிளிக் செய்து வரும் கட்டத்தில் வேறு சொல் இல்லை என்ற செய்தி காட்டப்படும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் சொல் புல்லட் அல்லது நம்பர் லிஸ்ட்டில் இருந்தால் Synonym காட்டப்படமாட்டாது. சொல் எழுத்துப் பிழை அல்லது இலக்கணப் பிழையின் ஒரு பகுதியாக இருந்தால் கிடைக்காது. அல்லது ஹைப்பர் லிங்க் அமைப்பில் இருந்தாலும் கிடைக்காது.

கேள்வி: இணையப் பக்கங்களிலிருந்து டெக்ஸ்ட் காப்பி செய்து வேர்டில் டாகுமெண்ட்டாக மாற்றுவதற்கு பேஸ்ட் செய்தால், வெப் பார்மட்டிங் செய்தது மற்றும் லிங்க்குகள் எல்லாம் இடம் பெறுகின்றன. இவை இல்லாமல் காப்பி செய்வது எப்படி?

–பேரா. சி. கருணானந்தம், மதுரை


பதில்: எப்படி பேஸ்ட் செய்திடலாம் என்று சொல்கிறேன். முதலில் தேவையான வெப் பக்கத்தினை அல்லது டெக்ஸ்ட்டை காப்பி செய்திடுங்கள். பின் நோட்பேடினைத் திறந்து அதில் பேஸ்ட் செய்திடுங்கள்.

அப்போது நோட் பேட் அனைத்து பார்மட்டிங் மற்றும் லிங்குகளை நீக்கிடும். பின் இதனை காப்பி செய்து, வேர்ட் டாகுமெண்ட்டில் பேஸ்ட் செய்திடவும். இன்னொரு வழியும் உள்ளது.

இன்டர்நெட் பக்கத்திலிருந்து டெக்ஸ்ட்டை அப்படியே காப்பி செய்து வேர்டில் பேஸ்ட் செய்திடவும். பின்னர் அதனை செலக்ட் செய்திடுங்கள். அடுத்து கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தவும். அனைத்து டெக்ஸ்ட் பார்மட்டிங் அகற்றப்படும். ஹைப்பர் லிங்க்குகளை நீக்க கண்ட்ரோல்+ஷிப்ட்+ எப்9 அழுத்தவும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் ஸிப் பைல்கள் எல்லாம் போல்டர்களாகக் காட்டப் படுகின்றன. இதனைத் தடுக்க முடியுமா?

-ஆ. முல்லை வேந்தன், மதுரை


பதில்: தடுக்கலாம். ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில் ரன் பாக்ஸ் திறக்கவும். அதில் regsvr32 /u zipfldr.dll என டைப் செய்து என்டர் அழுத்தவும். உடன் dllunregisterserver in zipfldr.dll succeeded என்ற செய்தி கிடைக்கும். இனி நீங்கள் விரும்பியபடி போல்டர்களாகக் காட்டப்படாமல், பைல்களாகவே காட்டப்படும்.


கேள்வி: என் நண்பன் எனக்கு அனுப்பிய வேர்ட் டாகுமெண்ட்டில் பக்க எண் வழக்கம் போல் இல்லாமல், வேறு ஒரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு வேர்ட் மூன்று சாய்ஸ் தான் கொடுக்கிறது.

நண்பருக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது? மேலும் அதே டாகுமெண்ட்டில் அவர் அமைத்துள்ள கேப்பிடல் எழுத்துக்கள் வழக்கத்தைப் போல் அல்லாமல், சற்று அளவில் சிறியதாக அழகாக உள்ளது. இதனையும் விளக்கவும்.

–கி. சாத்தப்பன், காரைக்குடி


பதில்: பக்க எண்ணை வேர்ட் டாகுமெண்ட்டின் எந்த இடத்திலும் அமைக்கலாம். நீங்கள் எங்கு அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு செல்லவும். பின் ஆல்ட்+ஷிப்ட் + ப்பி (Alt + Shift + P) அழுத்தவும். உடனே பக்க எண் அந்த பக்கத்திற்கேற்ற வகையில் பதியப்படும்.


உங்களின் அடுத்த பிரச்னைக்கு வருவோம். உங்களைப் பொறுத்தவரை கேப்பிடல் லெட்டர்ஸும் வேண்டும்; ஆனால் இவ்வளவு பெரிய அளவில் இருக்கக்கூடாது.

அப்படியானால் மீண்டும் இதனைத் தேர்ந்தெடுத்து எழுத்தின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு வர வேண்டும். எந்த அளவு உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அந்த அளவில் வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் உங்களுக்கு இந்த தொல்லையை வழங்காமல் வேர்ட் ஒரு வழியைத் தந்துள்ளது. சொற்களைத் தேர்ந்தெடுத்து Ctrl + Shift + K என்ற கீகளை அழுத்துங்கள்.

காண்பதற்கு லட்சனமான அளவில் பெரிய எழுத்துக்களில் அந்த சொற்கள் கிடைக்கும். முதலில் மிகப் பெரிய கேப்பிடல் எழுத்துக்களை அமைத்துவிட்டுத்தான் பின் இதற்கு மாற வேண்டியதில்லை. சிறிய எழுத்துக்களில் உள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து Ctrl + Shift + K கீகளை அழுத்தினாலே அவை சிறிய கேபிடல் லெட்டர்களில் அமையும்.

கேள்வி: நம் மின்னஞ்சல் முகவரிகளில் எண்களை இணைத்து அமைத்தால், நமக்கு தேவையற்ற குப்பை மெயில்கள் வருவதனைத் தடுக்கலாம் என்பது சரியா?

–செந்தில்ராஜ், மதுரை

பதில்: மின்னஞ்சலுக்கான யூசர் ஐடியில் எண்கள் இருப்பதனால், அதற்கு பாதுகாப்பு ஓரளவிற்கு உண்டு. ஸ்பேம் மெயில் எனப்படும் வர்த்தக மெயில்களை அனுப்புபவர்கள், இமெயில் முகவரி களைப் பெற பல வழிகளைக் கையாளுகின்றனர். எனவே எண்களினால் நாம் தப்பமுடியுமா என்பது சந்தேகமே.

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்திடுகையில் பல நிகழ்வுகளில் நம் இமெயில் முகவரிகளை என்டர் செய்கிறோம்.


இந்த தளங்கள் என்னதான் பெரிய சிறந்த கட்டுக் கோப்பான நிறுவனங்களின் தளங்களாக இருந்தாலும், எப்படியாவது அதன் தளங்களில் உள்ள முகவரிகள் வெளியே கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

அவற்றை இந்த ஸ்பேம்மர்கள் பெற்று மெயில்களை அனுப்பி சிக்க வைத்திட முயற்சிக்கின்றனர். தற்போது டிக்ஷனரி அட்டாக் என்று ஒரு வழியை மேற்கு நாடுகளில் கையாள்கின்றனர். மேற்கு நாடுகளில் முதல் மற்றும் இரண்டாவது பெயர் என ஒருவர் பெயரில் இரு சொற்களில் பெயர்கள் இருக்கும்.

இந்த இரண்டு பெயர்களில் என்னவெல்லாம் வரக் கூடும் என பட்டியலிட்டு அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து புகழ் பெற்ற இலவச இமெயில் தளங்களின் பெயர்களோடு சேர்த்து இமெயில்களை அனுப்பு கின்றனர்.

இப்படி எத்தனையோ வழிகள் இருப்பதால் எண்களை இணைப்பதால் மட்டும் நாம் இந்த நாச வலையிலிருந்து தப்புவோம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு வேளை சிறிது நாட்கள் தள்ளிப் போடலாம்.

நன்றி.தினமலர்.

நூர்
03-05-2010, 09:39 AM
http://img.dinamalar.com/data/more_pic_gallery/cmalarnews_67333620787.jpg

மே 01,2010

கேள்வி: மியூசிக் சிடியிலிருந்து பாடல்களைப் பிரித்தெடுத்து பைலாகக் காப்பி செய்திட ஒரு நல்ல புரோகிராம் ஒன்றைக் கூறவும்.

–என். கமலா செல்வமணி, திருமங்கலம்


பதில்:சிடியிலிருந்து பாடல்களை எம்பி3 பைல்களாகப் பிரித்து எடுத்து, கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்த பல புரோகிராம்கள் உள்ளன. கூகுள் சர்ச் இஞ்சினில் தேடினால், இவை பட்டியலிடப்படும்.

இருப்பினும் ஒரு நல்ல புரோகிராம் என நீங்கள் கேட்டுள்ளதால், நான் அண்மையில் கண்ட புரோகிராம் ஒன்றைக் கூறுகிறேன். இதன் பெயர் Audiograbber. இதனை டவுண்லோட் செய்து இயக்கினால், சிடியில் உள்ள பாடல் பைல்களின் அனைத்து தகவல்களும் காட்டப்படும்.

இதன் மூலம் நீங்கள் விரும்பும் பாடல்களைப் பிரித்து, பதிந்து கொள்கையில், அதற்கான தகவல்களும் இணைக்கப்படும். பாடலைப் பிரித்து பதிவது மட்டுமின்றி, இதில் தரப்படும் பல்வேறு ஆப்ஷன்கள் மூலம், பாடல்களை நாம் பிரியப்படும் வகையில் எடிட் செய்திடலாம்.

தொடக்கம் மற்றும் முடிவில் உள்ள காலி இடத்தை நீக்கலாம். பதியப்படும் பார்மட்டை விருப்பப்படி மாற்றலாம். இந்த புரோகிராம் அண்மையில் வெளியான விண்டோஸ் 7 மற்றும் பிற 64 பிட் எடிஷன்கள் அனைத்திலும் இயங்குகிறது.

இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட செல்ல வேண்டிய இணையதள முகவரி: http://www.audiograbber.org/ download.html

இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கவில்லை என்றால்,

http://www.canadiancontent.net/tech/freeware/CD+Rippers/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் சிடியிலிருந்து பாடல்களைப் பிரிக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களின் பட்டியலைப் பெற்று, அவற்றைப் பயன்படுத்திப் பார்க்கவும்.

கேள்வி: சாப்ட்வேர் தொகுப்புகள், படங்கள், பாடல்கள், கேம்ஸ், இ–நூல்கள் போன்றவற்றை டவுண்லோட் செய்திட (கட்டணத்துடன் மற்றும் கட்டணமில்லாமல்) நல்ல சில தளங்களைக் கூறுங்கள்.

–எஸ். சரண்குமார், திண்டிவனம்


பதில்: கீழே சில தளங்களின் முகவரிகளைத் தருகிறேன். இந்த தளங்களுக்குச் சென்று உங்களுக்குத் தேவையானது கிடைக்கிறதா என்று பார்க்கவும்.

1. ftp://ftp.freenet.de/pub/filepilot/

2. ftp://193.43.36.131/Radio/MP3/

3. ftp://207.71.8.54:21/games/

4. ftp://194.44.214.3/pub/music/

5. ftp://202.118.66.15/pub/books


கேள்வி: பிரவுசரைத் திறக்காமல், ஒரு இணைய தளத்தை எப்படித் திறக்க முடியும்? என் நண்பன் திறக்க முடியும் என்றும், அதற்கான வழியினை மறந்துவிட்ட தாகவும் கூறுகிறார். உண்மையா?

–சி. குமரப்பன், காரைக்குடி


பதில்: உண்மைதான். எது? உங்கள் நண்பர் மறந்தது அல்ல, வெப்சைட்டை பிரவுசர் இல்லாமல் திறக்கலாம் என்பதே. 'Start | Run' செல்லுங்கள். நீங்கள் திறக்க விரும்பும் இணைய தள முகவரியை,

எடுத்துக்காட்டாக www.dinamalar.com, என்பதை ரன் பாக்ஸில் டைப் செய்து என்டர் தட்டுங்கள். என்ன நடக்கிறது எனப் பாருங்கள். உங்கள் நண்பர் வேண்டும் என்றே, உங்களிடமிருந்து இதனை மறைக்கிறார் என்று எண்ணுகிறேன். ஜஸ்ட் பார் எ ஜோக்!

கேள்வி: நம் மானிட்டரில் தெரியும் ஐகான்களின் அளவை மாற்ற முடியுமா? முடியும் என்றால் எவ்வாறு என விளக்கவும்.

–ஜே.பி. ஐஸ்வர்யா, ராஜபாளையம்


பதில்: முடியும். ஐகான்கள் 32x32 என்ற அளவிலான பிக்ஸெல்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவை 43x43 என்ற பிக்ஸெல் அளவில் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இந்த அளவுகளை அட்ஜஸ்ட் செய்து அமைக்க வேண்டும் என்றால்,

விண்டோஸ் டெஸ்க்டாப் சென்று, 'Properties | Appearance' டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் 'Item' கீழ்விரி மெனுவில், 'Icon' என்பதைத் தேர்ந்தெடுத்து ஐகான் அளவை மாற்றலாம். 'Icon spacing (horizontal)' / 'Icon spacing (vertical)' என்பதைத் தேர்ந்தெடுத்து ஐகான் எடுத்துக் கொள்ளும் இட அளவினை மாற்றலாம்.

கேள்வி: என்னுடைய பிரிண்டர் எந்த வேலை கொடுத்தாலும் நடுவில் நின்றுவிடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது?

–ஆர்.ஸ்ரீதரன், சென்னை


பதில்: நீங்கள் எழுதியுள்ள நீளமான கடிதத்தினைப் பார்த்தால், உங்கள் பிரிண்டரில் பேப்பர் ஜாம் ஆவது தெரிகிறது.

பேப்பர் உள்ளே, அதன் வகைப்படி வராமல் சிக்கிக் கொள்கிறது. பேப்பர் கிழிந்திருந் தாலோ, சிறிய அளவில் மடிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது சரியான முறையில் இல்லாமல் செருகப் பட்டிருந்தாலோ, பிரிண்டர் வேலையை ஏற்று, பாதி அச்சிட்ட பின்னர் நிற்கலாம்.


மேலும் ஈரம் செறிந்த இடத்தில் வைத்து பிரிண்டரை இயக்கினாலும், பிரிண்டர் இடையே நின்று போகலாம்.


தொடர்ந்து பேப்பர் ஜாம் பிரச்னையினால், பிரிண்டிங் வேலை நின்று போனால், பிரிண்டர் பழுது பார்க்கும் இடத்திற்கு எடுத்துச் சென்று, ஏதாவது சிறிய பகுதிகளை மாற்ற வேண்டுமா எனச் சோதனை செய்து மாற்றவும்.


பேப்பர் சிக்கிக் கொள்வதனைத் தடுக்க, நல்ல தரமான பேப்பரைப் பயன்படுத்தவும். பேப்பரை அதன் ட்ரேயில் சரியான முறையில் வைக்கவும். பலவகையான பேப்பர்களைக் கலந்து வைப்பதனைத் தவிர்க்கவும். சிறிய பேப்பர் துண்டுகள் இருந்தால், நல்ல பிரஷ் கொண்டு அவற்றை வெளியே எடுக்கவும்.


கேள்வி: ஐ.பி. முகவரி குறித்தும் அதனைத் தெரிந்து கொள்வது குறித்தும் நூல்களில் படித்திருக்கிறேன். இதில் ஐக என்பது சரியாக எதனைக் குறிக்கிறது?

–நீ. கந்தசாமி, கே.பாறைப்பட்டி


பதில்: கம்ப்யூட்டர் உலகிற்கு வெளியே IP என்பது Intellectual Property யைக் குறிக்கும். ஒருவரின் சிந்தனையில் உருவானது அவருக்கே சொந்தமாகும். அதுவே Intellectual Property என்பது.கம்ப்யூட்டர் உலகில் IP என்பது Internet Protocol என்பதன் சுருக்கமாகும்.

இதனை TCP ('Transmission Control Protocol') என்பதுடன் சேர்த்துக் கூறுவார்கள். இன்டர்நெட்டில் இரண்டு கம்ப்யூட்டர்கள் ஒன்றுக்கொன்று முன்னும் பின்னும் பேசிக் கொள்வதனை, அதாவது தகவல் களைப் பரிமாறிக் கொள்வதனை இவ்வாறு குறிக்கிறோம்.


இன்டர்நெட்டில் ஒவ்வொரு கம்ப்யூட்டரும் ஒவ்வொரு சர்வரும் (email servers, IP hosts) ஒரு முகவரியைக் கொண்டிருக்கின்றன. இந்த ஐ.பி. முகவரி ஒரு ரிட்டர்ன் போஸ்டல் அட்ரஸ் போல. சரியான இடத்திற்குப் போய்ச் சேரவில்லை என்றால்,

யார் இதனை அனுப்பினார்களோ, அந்த முகவரிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக எழுதப்படும் முகவரி. போய்ச் சேர்ந்துவிட்டால், சேர்ந்த இடத்தில் உள்ள கம்ப்யூட்டர் எந்த நாட்டில் உள்ள, எந்த சர்வீஸ் புரவைடரால், எந்த கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பப் பட்டது என்பதைக் காட்டும். இது நான்கு எண்கள், புள்ளிகளால் பிரித்து எழுதப்பட்டு (எடுத்துக்காட்டு: 69.44.18.176) அமைக்கப்படும்.


சில ரௌட்டர்களும், சாப்ட்வேர் தொகுப்புகளும் இந்த ஐ.பி. முகவரியினை மறைத்து அனுப்ப உதவி புரியும் வகையில் செயல்படுகின்றன.

கேள்வி: ஸ்டார்ட் மெனுவில் என் பேவரிட் தளங்களின் பட்டியலைக் கொண்டு வர முடியுமா? என் நண்பர் ஒருவரின் கம்ப்யூட்டரில் பார்த்தேன். வழி காட்டவும்.

–கு. மாரியப்பன், மதுரை


பதில்: கேள்வி - பதில் பகுதிக்கு வரும் பெரும்பாலான கடிதங்களில், என் நண்பர் வைத்திருக்கிறார், ஆபீஸில் அடுத்த சீட்டில் உள்ளவர் வைத்திருக்கிறார், எனக்கும் வேண்டும் என்ற வேண்டுகோள்கள் தான் நிறைய வருகின்றன.

யாரிடம் எது இருந்தாலும் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதில் தவறே இல்லை.

இனி இந்த நண்பரின் வேண்டுகோளுக்கு வருவோம். இவர் எப்படியோ! நான் நூற்றுக் கணக்கில் பேவரிட் தளங்களின் பட்டியல் வைத்திருக்கிறேன்.

பிரவுசரைத் திறந்துதான் இந்த பட்டியலைப் பெற்று, தளங்களுக்குச் சென்றிருக்கிறேன். இவரின் கேள்வியைப் படித்த பின்னர்தான், பிரவுசரைத் திறக்காமலேயே இந்த பட்டியலைப் பெற்று, தளங்களுக்குச் செல்லலாம் என்று தெரிந்து கொண்டேன்.


Start பட்டனில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties செல்லவும். இங்கு இரண்டு விதமான ஸ்டார்ட் மெனு இருப்பதனைக் காணலாம். Start Menu / Classic Start Menu என இரண்டு உள்ளன.

இதில் Customize என்பதில் கிளிக் செய்திடவும். பின் Advanced என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். அடுத்து Start Menu Items என்பதனைக் காணவும். அதில் உள்ள பட்டியலில் Favourites Menu என்பதில் செக் செய்து, பின் OK கிளிக் செய்து, Apply கிளிக் செய்து வெளியேறவும்.


நீங்கள் Classic Start Menu வைத்திருந்தால், Customize என்பதில் முதலில் லெப்ட் கிளிக் செய்திடவும்.பின் Advanced Start up Options என்ற பட்டியலைப் பார்க்கவும். இதில் Display Favourites என்பதில் செக் செய்திடவும். அடுத்து இரு இடங்களில் OK கிளிக் செய்து வெளியேறவும்.

நன்றி.தினமலர்.

gvchandran
10-05-2010, 11:15 PM
யூ டியப் தளத்தில் பழைய தமிழ் திடைப்பட பாடல்களை
பதிவு செய்ய வசதி உள்ளதா?
செய்முறை தரவும்

நூர்
11-05-2010, 11:18 AM
யூ டியப் தளத்தில் பழைய தமிழ் திடைப்பட பாடல்களை
பதிவு செய்ய வசதி உள்ளதா?
செய்முறை தரவும்

பதிவுசெய்ய என்றால், தரவேற்ற முடியுமா! என்று கேட்கிறீங்களா! அப்படி என்றால், எல்லா விடியோவையும் போல் அதுவும் முடியும் தானே.

அல்லது விடியோவை எப்படி தரவேற்றுவது, என கேட்கிறீங்களா!

விபரமாக கேளுங்கள் படத்துடன் விபரமாக ஒரு திரியில் பதிவிடுகிறேன்.

நன்றி.

நூர்
11-05-2010, 11:28 AM
மே 09,2010

http://img.dinamalar.com/data/more_pic_gallery/cmalarnews_96975344420.jpg

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பல பைல்களில் எங்கள் அலுவலகத்திற்குத் தேவையான ஒரு சில தகவல்களை சில ரோக்களில் மட்டுமே அமைக்கிறோம்.

இந்த பைலை பிரிண்ட் செய்கையில் அவை இடது மூலையில் அச்சிடுவதால், அச்சுப்படியை நம் இஷ்டப்படி கையாள முடியவில்லை. இதற்குப் பதிலாக அவற்றை நடுவில் வரும்படி அச்செடுக்க முடியுமா?

–டி.சாதிக் அலி, கோவை


பதில்: உங்களுடைய வேண்டுகோள், எப்படி ஒரு ஒர்க்ஷீட்டினை, தாளின் நடுவில் பிரிண்ட் செய்வது என்பதற்கான பதில். இல்லையா! முதலில் சம்பந்தப்பட்ட ஒர்க்ஷீட்டினைத் திறந்து கொள்ளுங்கள்.

பின் பேஜ் செட் அப் விண்டோவிற்குச் செல்லவும். இதற்கு File மெனு சென்று Page Setup தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுங்கள். அல்லது நீங்கள் பிரிண்ட் பிரிவியூ விண்டோவில் இருந்தால் Setup பட்டனில் கிளிக் செய்திடுங்கள். இனி Margins டேப்பினை அழுத்தவும். இதன் கீழாக Center on Page section பேஜ் பிரிவைக் காணவும்.

இதில் உங்களுக்கு இரண்டு விதமான விருப்பத்தினை மேற்கொள்ளும் வகையில் ஆப்ஷன்ஸ் கிடைக்கும். நெட்டுவாக்கிலும் படுக்கை வாக்கிலும் டேட்டாவினை மையப்படுத்தலாம். இவ்வாறு தேர்ந்தெடுத்தவுடன் அச்சில் இது எப்படி இருக்கும் என்பதனை பிரிவியூவில் காணலாம். இது சரியானது என எண்ணினால் ஓகே கொடுத்து வெளியேறவும்.

கேள்வி: விண்டோஸ் விஸ்டா கொண்டு என் கம்ப்யூட்டரை மூன்று ஆண்டுகளாக இயக்கி வருகிறேன். இதில் சிஸ்டம் நிலை குறித்த அறிக்கை ஒன்று கிடைக்கும் என்று கூறப்படுகிறது? இதனை எப்படிப் பெறுவது?

–சி. ராஜா சிங்கம், பொள்ளாச்சி


பதில்: விஸ்டா சிஸ்டத்திலேயே, அது இயங்கும் கம்ப்யூட்டரின் நிலை குறித்த ஹெல்த் ரிப்போர்ட் பெற வசதி தரப்பட்டுள்ளது. இந்த ரிப்போர்ட்டை பெற்றால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளே என்ன நடக்கிறது என்று காட்டுவதுடன், கம்ப்யூட்டரின் திறனை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்றும் காட்டுகிறது.

இந்த ரிப்போர்ட்டைப் பெற Start>ControlPanel> SystemandMaintenance >Performance Information and Tools என்று செல்லவும். இங்கு இடது புறத்தில் 'Advanced Tools'' என்று இருப்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கீழாகச் சென்று அங்கு Generate a System Health என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.

உடனே இயந்திரம் ஒன்று ஓடத் தொடங்குவது போல, சிஸ்டம் இயங்கத் தொடங்கி, ஓரிரு நிமிடங்களில், பாப் அப் விண்டோ ஒன்று எழுந்து வந்து, அதில் கம்ப்யூட்டர் இயக்கம் குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். இவை வரிசையாக பீல்டுகளாக இருக்கும்.

ஒவ்வொரு பீல்டையும் திறந்து வெள்ளம் போல தகவல்களைப் பெறலாம். இவற்றில் பல உங்களுக்குப் புரியாது என்றாலும், இவற்றைப் பொறுமையாக நீங்கள் ஆய்வு செய்து, கம்ப்யூட்டரை முழுமையான திறனுடன் இயக்க என்ன செய்திட வேண்டும் என முடிவெடுக்கலாம்.

கேள்வி: நான் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி தான் பயன்படுத்தி வருகிறேன். இதில் பைல் கம்ப்ரஸன் எப்படி பயன்படுத்துவது என்று விளக்கவும்.

–ஜே. சிந்தியா, மதுரை


பதில்: இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி என்று ஏன் எழுதி உள்ளீர்கள் என்று புரியவில்லை. உங்களைப் போல பலர் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி தான் பயன்படுத்தி வருகின்றனர். இதற்குப் பின் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு,

குறிப்பாக விண்டோஸ் 7 தொகுப்பிற்கான ஹார்ட்வேர் தேவை அனைத்தும் சற்று கூடுதலாகத் தேவைப்படுவதாலும், விண்டோஸ் எக்ஸ்பி சிறப்பாகச் செயல்படுவதாலும் அதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதில் தவறில்லை. சரி, இனி உங்களுக்கான பதில்.


விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவதால், நிச்சயம் உங்கள் பைல் வகை என்.டி.எப்.எஸ். ஆகத்தான் இருக்கும். நீங்கள் என்.டி.எப்.எஸ். வகை பைலைப் பயன்படுத்துவதாக இருந்தால், பைல் கம்ப்ரஸன் (பைலை இடத்தைச் சுருக்கி வைத்து பயன்படுத்துதல்) தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி, உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை மிச்சப்படுத்தலாம்.


மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்து, ஏதேனும் டிரைவ் அல்லது போல்டர் மீது டபுள் கிளிக் செய்திடவும். நீங்கள் சுருக்க நினைத்திடும் பைல் அல்லது போல்டர் மீது ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது ஆல்ட்+டபுள் கிளிக் கொடுக்கவும். கிடைக்கும் சிறிய விண்டோவில் ஜெனரல் (General) என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

பின்னர் Advanced என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே Compress contents to save disk space என்று இருக்கும் வரியின் முன் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை, மவுஸ் கிளிக் செய்து ஏற்படுத்தவும்.

பின்னர் ஓகே கிளிக் செய்க. அதன் பின்னர் ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸிலும் ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து Confirm Attribute Changes என்று ஒரு பாப் அப் பாக்ஸ் கிடைக்கும். அதில் நீங்கள் விரும்பும் ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்கவும்.


இங்கு ஒரு போனஸ் தகவல் தரட்டுமா! வழக்கமான போல்டர்களுக்கும், கம்ப்ரஸ் செய்யப்பட்ட போல்டர்களுக்கும் வேறுபாடு தெரியும் வகையில், அவற்றை வெவ்வேறு வண்ணங்களில் அமைக்கலாம்.

கண்ட்ரோல் பேனல் (Control Panel) செல்லவும். அங்கு போல்டர் ஆப்ஷன்ஸ் (Folder Options) திறக்கவும். வியூ (View) டேப்பில் கிளிக் செய்து 'Show encrypted or compressed NTFS files in colour' என்று இருக்கும் இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

இந்த பாக்ஸ் ஏற்கனவே டிக் அடையாளத்தைக் கொண்டிருந்தால், அப்படியே விட்டுவிடவும். உங்கள் கம்ப்ரஸ்டு போல்டர்கள், மற்ற போல்டர்களிடமிருந்து வித்தியாசமான வண்ணத்தினைக் கொண்டிருக்கும்.

கேள்வி: ஏற்கனவே திறந்திருக்கின்ற புரோகிராம் ஒன்றினை இரண்டாவது முறையாக, இன்னொரு நிகழ்வாகத் திறக்க, சுருக்கு வழி ஏதேனும் உள்ளதா?

–கா. ஜெயகாந்தன், திண்டுக்கல்

பதில்: பொதுவாக டாஸ்க் பாரில் உள்ள எந்த புரோகிராம் ஐகானிலும் கிளிக் செய்தால், அவை எத்தனை முறை வேண்டுமானாலும் திறக்கும்.

ஆனால் அவ்வாறு திறக்க முடியாமல், ஏற்கனவே திறக்கப்பட்டிருப்பதனையே காட்டும் வகையில் புரோகிராம் இருப்பின் மாற்ற முடியாது. விண்டோஸ் 7 தொகுப்பில் இதற்கென ஒரு வழி தரப்பட்டுள்ளது.

ஸ்டார்ட் மெனு சென்று, ஆல் புரோகிராம்ஸ் சென்று, பின்னர் புரோகிராமைத் தேடி கிளிக் செய்திடாமல், டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம் ஐகானில், ஷிப்ட் கீயை அழுத்தியபடியே கிளிக் செய்தால், புரோகிராம் இரண்டாவது முறையாகவும் கூடுதலாகத் திறக்கப்படும்.

கேள்வி: ஆரக்கிள் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதற்கான இலவச பெர்சனல் ஆரக்கிள் தொகுப்பினை டவுண்லோட் செய்து கொள்ள முகவரி தரவும். என் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில் இதனைப் பதிந்து இயக்க முடியுமா?

–ஆர். சுதா, சென்னை


பதில்: கற்றுக் கொள்ள என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் பற்றி கூடுதல் தகவல் இல்லை. இருப்பினும் உங்கள் கேள்விக்கான பதில்.

விண்டோஸ் எக்ஸ்பியில் ஆரக்கிள் தொகுப்பை நிறுவி இயக்கலாம். Personal Oracle என்பதை இலவசமாக டவுன்லோடு செய்ய முடியும். www.oracle.com/techno logy/software/index. html என்ற தளத்தில் சென்று பார்க்கவும்.

நன்றி.தினமலர்.

நூர்
17-05-2010, 05:52 AM
http://img.dinamalar.com/data/more_pic_gallery/cmalarnews_60186403990.jpg

மே 16,2010

கேள்வி: நீங்கள் தந்த டிப்ஸ் படி, ரன் கட்டத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திறந்து இயக்கினேன். இது எப்படி சாத்தியமாகிறது?

–எஸ். தினேஷ் குமார், சென்னை


பதில்: ரன் கட்டத்தில் எந்த எக்ஸ்கியூட்டபிள் (.exe) பைலையும் திறக்கலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. ரன் கட்டத்தில் iexplore k http://www.dinamalar.com எனக் கொடுத்து என்டர் தட்டிப் பாருங்கள். இதில் டு என்பது கியோஸ்க் மோட் என்பதனைக் குறிக்கும். அதாவது முழுத் திரையில் பக்கம் காட்டுவதற்கான கட்டளைச் சொல்.

கேள்வி: சிடி மற்றும் டிவிடிக்களை பர்ன் செய்வதற்கு, டிவிடி ரைட்டருடன் தரப்படும் சாப்ட்வேர் இல்லாமல், கூடுதல் வசதி கொண்ட, இலவச, தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் இருக்கிறதா? எங்கிருந்து டவுண்லோட் செய்திடலாம்?

–சி. புரு÷ஷாத்தமன், கோவை


பதில்: கூடுதல் வசதி, இலவசம், தர்ட் பார்ட்டி என கேட்டிருக்கிறீர்கள். ஏற்கனவே இந்த பகுதியில் எழுதப்பட்ட ஒரு சாப்ட்வேர் குறித்து தகவல் தருகிறேன். அதன் பெயர் CDBurnerXP. . இதன் ஏப்ரல் 26 தேதியிட்ட புதிய பதிப்பு 4.3.1.2101. இதனைத் தந்தவர் பெயர் Stefan Haglund.. இதன் பைல் அளவு 6.3 எம்.பி. மட்டுமே.

அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் இயங்கும். எல்லாவகை சிடி/டிவிடிக்களையும் இயக்கும். எக்கச் சக்க புதிய வசதிகள் உள்ளன. http://www.cdburnerxp .se/ என்ற முகவரியில் சென்று பார்த்து, கூடுதல் வசதிகள் குறித்து அறிந்து கொண்டு, இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.

கேள்வி: நான் டயல் அப் இன்டர்நெட் கனக்ஷன் வைத்திருந்த போது, கம்ப்யூட்டர் வழியாக பேக்ஸ் அனுப்பவும், பெறவும் முடிந்தது. ஆனால், பிராட்பேண்ட் இண்டர்நெட் இணைப்பிற்கு மாறியவுடன், என்னால் அவ்வாறு அனுப்ப முடியவில்லை. அனுப்ப முயற்சிக்கையில், டயலாக் பாக்ஸ் ஒன்று தோன்றி, டயல் டோன் கிடைக்கவில்லை என்ற செய்தி கிடைக்கிறது. இதனை எப்படி நிவர்த்தி செய்திடலாம்?

–கி. பூங்கோதை, சென்னை


பதில்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள பேக்ஸ் அனுப்பும் வசதி, உங்கள் டயல் அப் மோடத்தினை, ஒரு பேக்ஸ் மெஷின் போலப் பயன்படுத்தி பேக்ஸ்களை அனுப்பவும், பெறவும் வசதி செய்து கொடுக்கிறது. ஆனால் பிராட்பேண்ட் இணைப்புகான அஈகுஃ மோடத்தினை இந்த வசதிக்காகப் பயன்படுத்த முடியாது. இது முற்றிலும் வேறான தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது.


இருப்பினும், உங்களுக்குக் கம்ப்யூட்டர் வழியாக பேக்ஸ் அனுப்பிப் பெறும் வசதி, கட்டாயமாகத் தேவை என்றால், கடைகளில் இன்றும் கிடைக்கும் பேக்ஸ் மோடத்தினை (விலை ரூ.900க்குள் இருக்கலாம்) வாங்கிப் பயன்படுத்தலாம். டயல் அப் மோடம் போன் லைன் இணைப்பில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏ.டி.எஸ்.எல். மோடம் வேறு ஒரு லைனில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும்.


டெலிபோன் சாக்கட்டில் ஏ.டி.எஸ்.எல். பில்டர் பயன்படுத்தப்பட வேண்டும். மோடம் இந்த பில்டர் வழியாகத்தான் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு தனியாக இணைத்த பின்னர், கம்ப்யூட்டரை இயக்கி Start, All Programs, Accessories, Communications, Fax, மற்றும் Fax Console எனச் சென்று பேக்ஸ் அனுப்பவும்,


பெறவும் செய்திடலாம். Tools மெனு கிளிக் செய்து Configure Fax என்பதனைத் தேர்ந்தெடுத்தால், அதில் உங்களைப் பற்றிய தகவல்களையும், பேக்ஸ் இயங்குவதற்கான சில குறிப்புகளையும் தர வேண்டிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் தகவல்களை இணைத்த பின்னர் பேக்ஸ் அனுப்பலாம். பெறவும் செய்திடலாம்.

கேள்வி: ஆன்லைன் ரேடியோ பாடல்களை எம்பி3 யாக மாற்றி, என் போர்ட்டபிள் பிளேயரில் காரில் கேட்க, அடாசிட்டி (Audacity) புரோகிராமை டவுண்லோட் செய்தேன். விண்டோஸ் எக்ஸ்பியில் அடாசிட்டி இயங்குகையில் சவுண்ட் சோர்ஸ் ஆக எதனைத் தேர்ந்தெடுப்பது என ஒரு சாய்ஸ் இருந்தது.

ஸ்டீரியோ மிக்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்க ஒரு பாக்ஸ் கிடைத்தது. ஆனால் விஸ்டாவில் இந்த பாக்ஸ் கிடைக்கவில்லை. நான் டவுண்லோட் செய்தது, அண்மைக் காலத்தில் உள்ள அப்டேட்டட் அடாசிட்டி தான். காரணம் கூறி தெளிவு படுத்தவும்.

–சி. நிரஞ்சன் தாஸ், கோயம்புத்தூர்


பதில்: விண்டோஸ் விஸ்டாவில், டிஜிட்டல் ரைட்ஸ் என்ற காப்பி ரைட் உரிமை குறித்த பிரச்னைக்காக இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் நீங்கள் குறிப்பிட்ட ஆப்ஷன் நீக்கப்படவில்லை, மறைக்கப் பட்டிருக்கிறது. இதனை மீண்டும் பெற ஸ்டார்ட் பட்டன் அழுத்தி கண்ட்ரோல் பேனல் திறக்கவும்.

கிளாசிக் வியூ தேர்ந்தெடுத்து, கிடைக்கும் விண்டோவில் Sound என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். மீண்டும் Recording டேப்பில் கிளிக் செய்திடவும். அதன்பின் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Show Disabled Devices என்று உள்ள இடத்தில் லெப்ட் கிளிக் செய்திடவும். குறைந்தது இரண்டு ஐகான்களாவது காட்டப்படும்.

இதில் Stereo Mix என்று ஒன்று காட்டப்படும். இதில் ரைட் கிளிக் செய்து பின் Enable என்பதனைத் தேர்ந்தெடுத்து அதனை மாற்றி அமைக்கவும். மீண்டும் இதன் மீது லெப்ட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் இதனையே Default ஆக அமைக்கவும்.

இதன் மூலம் பாடல்களை நீங்கள் விரும்பும் வகையில் ரெகார்ட் செய்திட முடியும். இதனைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர, இந்த மாற்றங்களை மேற்கொண்ட பின்னர், கம்ப்யூட்டரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதிருக்கும்.

கேள்வி: என்னுடைய போட்டோக்கள் பலவற்றை ஸ்கேன் செய்து ஜேபெக் பைல்களாக மாற்றி, கம்ப்யூட்டரில் வைத்துள்ளேன். இவை நூற்றுக்கணக்கில்

இருந்ததனால், அவற்றை வரிசைப்படுத்த 1,2,3 என எண்கள் கொடுத்தேன். கம்ப்யூட்டரில் சரியான வரிசையில் இருந்த அவை, டிவிடியில் காப்பி செய்திடுகையில் வரிசை மாறி, 1.jpeg, 10.jpeg, 100.jpeg வரிசைப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை எப்படி 1,2,3 என வரிசைப்படுத்துவது?

–செ. ஹரிப்ரியா, திருப்பூர்


பதில்: இது ஏன் நடைபெறுகிறது என்றால், நமக்குத் தெரிந்த நம்பர் வரிசை, கம்ப்யூட்டருக்குத் தெரிவதில்லை. நாம் 1,2,3 என வரிசையாக எண்ணினால், கம்ப்யூட்டர் 0 வில் தொடங்குகிறது. எனவே இமேஜ் பைல்களை, 0001, 0002 என மாற்றி அமைக்க வேண்டும்.

இதில் உள்ள 0 களின் எண்ணிக்கை, உங்களிடம் உள்ள இமேஜ் பைல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக 9,999க்குள் உங்கள் இமேஜ் பைல்களின் எண்ணிக்கை இருந்தால், நான்கு இலக்கங்களில் எண்கள் 0 களுடன் அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள இமெஜ்களை இவ்வாறு எண்கள் அமைக்க Flash Renamer என்ற புரோகிராம் உங்களுக்கு உதவலாம்.

இதனை www.rlvision.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பெறலாம். பல ஆண்டுகள் எடுத்த போட்டோக்களை, எண்களிட்டு பாதுகாக்க வேண்டும் எனில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு போல்டரை உருவாக்கினால், உங்களுக்கும் தேடிப் பார்ப்பது எளிது. ஆனால் டிவிடியில் பதிந்து நண்பர்களுக்கும்,

உறவினர்களுக்கும் கொடுப்பதாக இருந்தால், Nero Photoshow என்ற புரோகிராம் உங்களுக்குப் பயன்படும். இந்த புரோகிராம் இமேஜ்களை மியூசிக் மற்றும் மியூசிக் இல்லாமல், ஒரு ஸ்லைட் ÷ஷாவாக மாற்றி அமைத்துத் தரும். இதனை கம்ப்யூட்டர் மற்றும் டிவிடி பிளேயரில் இயக்கிப் பார்க்கலாம்.

கேள்வி: நான் இமெயில் அனுப்புகையில் அட்டாச் செய்யப்படும் ஒரு பைல் 3 எம்பி என்ற அளவில் இருந்தால், அனுப்புவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுமா? அதே பைலை, அதே மெயில் வழியாக 10 பேருக்கு காப்பி செய்து அனுப்ப கூடுதல் நேரம் பிடிக்குமா?

–நி. அன்புச் செல்வி, வத்தலக்குண்டு


பதில்: நீங்கள் பலரின் மின்னஞ்சல் முகவரிகளை சிசி (CC) பீல்டில் காப்பி செய்து அனுப்பினாலும், அந்த மெயில் ஒரு முறைதான், உங்களுக்கு இமெயில் சேவையினை வழங்கும் சர்வருக்கு அனுப்பப்படும். எனவே ஒருவருக்கு அனுப்பும் அதே நேரம் தான், பலருக்கு காப்பி செய்தாலும் அனுப்ப ஆகும்.

ஆனால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள இமெயில் கிளையண்ட் புரோகிராம், உங்களுக்கு இமெயில் சேவையை வழங்கும் சர்வருக்கு, இந்த செய்தி இந்த அட்டாச்மெண்ட் பைலுடன், குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கும் காப்பி ஆக அனுப்பப்பட வேண்டும் என்ற குறிப்புடன் அனுப்பி வைக்கும்.

அதற்கிணங்க உங்கள் மெயில் சர்வரும் செயல்படும். ஆனால் பெரிய அளவிலான பைலை அட்டாச் செய்து அனுப்பினால், அதனை முதல்முறை ஒருவருக்கு அனுப்பினாலும் கூடுதல் நேரமே ஆகும். மேலும் அந்த பைலை அனுப்புகையில்,

அதன் அளவு குறித்து அனுப்பும் விதம் சார்ந்த குறிப்புகளும் அந்த பைலில் சேர்க்கப்படுவதால், அட்டாச்டு பைலின், சாதாரணமான அளவைக் காட்டிலும் அதன் அளவு 20% அதிகமாகும். இதுவே டயல் அப் கனக்ஷன் ஆக இருந்தால்,


நேரம் இன்னும் அதிகமாகும். எனவே நீங்கள் போட்டோக்கள் உள்ள பைல்களை அனுப்புவதாக இருந்தால் www.flickr.com போன்ற தளங்களில் அவற்றைப் பதிவு செய்து, உங்கள் அனுமதி பெற்றவர்கள் அதனைப் பெறும் வகையில் செயல்படலாம்.

போட்டோ இல்லாமல், பெரிய அளவிலான பைல் எனில் www.yousendit.com போன்ற இணைய தளங்களுக்கு அனுப்பி, அதனை டவுண்லோட் செய்வதற்கான லிங்க்கினை மட்டும், இமெயில் மூலமாகச் சம்பந்தப்பட்ட வர்களுக்கு அனுப்பலாம்.

நன்றி.தினமலர்.

நூர்
24-05-2010, 09:27 AM
http://img.dinamalar.com/data/uploads/E_1274528820.jpeg


கேள்வி: நான் எப்போது இன்டர்நெட் இணைப்பில் சென்றாலும், என்னுடைய கம்ப்யூட்டர் மெதுவாகச் செயல்படத் தொடங்குகிறது. டாஸ்க் மேனேஜர் மூலம் செக் செய்தால், அது செயல்பாட்டினை 100% எனக் காட்டுகிறது. இதற்குக் காரணம் என்ன?

–சி. உத்தம் குமார், உடுமலைப் பேட்டை


பதில்: இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களுக்கு எதிரான புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டு, அவை அப்டேட் செய்யப்பட்டுள்ளதனை உறுதி செய்திடுங்கள்.

மைக்ரோசாப்ட் நிறுவனமும், மலிசியஸ் சாப்ட்வேர் ரிமூவர் ஒன்றினை ஒவ்வொரு மாதமும் உங்கள் கம்ப்யூட்டருக்கு விண்டோஸ் அப்டேட் மூலமாக அனுப்புகிறது. இதுவும் பதியப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

இவை எல்லாம் ஒழுங்காக இருந்தால், இவற்றை இயக்கி, முழுமையாக உங்கள் கம்ப்யூட்டரைச் சோதனை செய்திடவும். இவை வைரஸ் மற்றும் கெடுதல் விளைவிக்கும் மற்ற புரோகிராம்களை நீக்கிவிடும்.


அடுத்து விண்டோஸ் ஹெல்ப் சிஸ்டத்தில் helpsvc.exe என்ற பைல் ஒன்று உள்ளது. இந்த உதவிடும் பைல் சில வேளைகளில் உபத்திரவம் கொடுக்கும் பைலாக மாறும். இதுதான் பிரச்னையைத் தருகிறதா என்று அறிய, டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் கிளிக் செய்து, Task ManagerI த் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும்


விண்டோவில் Processes என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து அங்குள்ள தலைப்புகளில் ‘CPU’ என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம் அப்போது இயங்கும் புரோகிராம்கள், எடுத்துக் கொள்ளும் ப்ராசசர் நேரம் காட்டப்படும்.

நேரத்தின் அடிப்படையில் இது பட்டியலிடப்படும். இந்த பட்டியலில் முதலாவதாக helpsvc.exe இருந்தால், உங்களுக்குப் பிரச்னைக்குக் காரணம் இதுதான் என அறியலாம்.

இதன் இயக்கத்தினை நிறுத்த, இதனைத் தேர்ந்தெடுத்து, அதன் மீது லெப்ட் கிளிக் செய்து மூடிவிடவும். இனி பிரச்னை வராது.
இது குறித்து மேலும் விபரங்கள் அறிய http://support.microsoft.c om/kb/839017/enus என்ற முகவரியில் உள்ள இணையதளத்தை அணுகவும்.

கேள்வி: மல்ட்டி மீடியாவிற்கென பல இணைய தளங்களில் டூல்கள் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். நீங்களும் அவ்வப்போது இமேஜஸ், மூவீஸ் என சிலவற்றிற்கான தளங்கள் குறித்து எழுதி உள்ளீர்கள். மற்ற மல்ட்டி மீடியா பிரிவிற்கான தள முகவரிகளை மட்டுமாவது தர முடியுமா?

– எஸ். நிரஞ்சன், விழுப்புரம்


பதில்: அருமையான ஸ்லைட் ÷ஷாக்களைத் தயாரிக்க http://animato.com.

வேகமாகச் செயலாற்றி போட்டோக்களைச் செம்மைப்படுத்த http://citrify.com எந்தப் பாடலையும் ரிங் டோன் அளவிற்கு கட் செய்து ட்ரிம் பண்ணித் தரும்

http://cutmp3.com, வேறுபட்ட இசை மற்றும் சமூக நிகழ்வுகளை இணைத்துத் தரும்

http://grooveshark.com, ஆடியோ புக்ஸ் அதிக அளவில்

டவுண்லோட் செய்திடத் தரும் http://librophile.com மற்றும் சென்ற வாரம் தந்த வீடியோ எடிட்டிங் டூல்ஸ்

கொண்ட http://pixorial.com. இன்னும் தேடினால் இவற்றைக் காட்டிலும் சிறந்த தளங்கள் கிடைக்கலாம். தேடுங்கள், தேடுங்கள், தேடலில் தான் நிறைய விஷயங்கள் தெளிவாகும்.

கேள்வி: நோட்பேட் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்கள். ஆனால் வேர்ட் பேட் குறித்து எழுதுவதில்லை. இரண்டும் ஒன்றுதானா? இல்லை எனில், வேர்ட் பேட் குறித்து அதிக தகவல்களைத் தரவும்.

–கா. மனோகரன், மதுரை


பதில்: இரண்டும் வெவ்வேறு எடிட்டிங் சாப்ட்வேர் புரோகிராம்கள். கம்ப்யூட்டர் மலரில் எழுதப்படும் குறிப்புகள் எல்லாம், வாசர்கள் அனுப்பும் கடிதங்களில் அதிகம்

கேட்கும் விஷயங்களின் அடிப்படையில் தரப்படுகின்றன. நோட்பேட் குறித்து பல கடிதங்கள் கிடைக்கின்றன. வேர்ட் பேட் குறித்து அவ்வளவாக யாரும் எழுதுவதில்லை. இனி இதோ பதில்.


நோட்பேட் என்பது அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் இணைக்கப்பட்டு தரப்படும் ஒரு எளிய டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம் ஆகும். இதில் TXT என முடியும் டெக்ஸ்ட் பைல்களை எடிட் செய்திடலாம்.

இதன் ஐகான் மடித்து வைக்கப்பட்ட பேப்பரில் சில வரிகள் எழுதப்பட்டவையாகக் காட்சி அளிக்கும். நோட்பேடில் அனைத்து வகையான பாண்ட்களையும் கையாள முடியாது. அதே போல பார்மட்டிங் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. மிக எளிதான சில நோட்ஸ் வரிகளை எழுதி வைக்க முடியும்.


நோட்பேடிலிருந்து சற்று மேம்படுத்தப்பட்ட வேர்ட் ப்ராசசராக வேர்ட் பேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வேர்ட் ப்ராசசர் அளவிற்கு, டெக்ஸ்ட் இதிலும் அமைக்க முடியாது. இந்த இரண்டும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்கினால் மட்டுமே கிடைக்கும்.


ஓப்பன் ஆபீஸ் டாட் ஓ.ஆர்.ஜி. (Open Office.org) என்ற இலவச வேர்ட் ப்ராசசிங் புரோகிராம் இலவசமாக நமக்குக் கிடைக்கும் ஒரு நல்ல அப்ளிகேஷன் புரோகிராம் ஆகும். வேர்ட் புரோகிராமில் மேலே சொன்னவை கிடைக்காத போது, அனைத்து வசதிகளையும் பெற, இதனைப் பயன்படுத்தலாம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும்போது வாட்டர் மார்க் உருவாக்க முடிகிறது. ஆனால் எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் இதனை எப்படி அமைப்பது என்று தெரியவில்லை. நண்பர்கள் அதற்கு வழியே இல்லை என்கின்றனர். ஏதேனும் வழி உள்ளதா?

–சி.முத்துராஜ், செஞ்சி


பதில்: உங்கள் நண்பர்கள் சொல்வது சரியே. எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வாட்டர் மார்க் ஒன்றினை ஏற்படுத்தி, அதனை அச்சில் கொண்டு வருவதற்கான வசதி இல்லை.

ஆனால் சுற்று வழி ஒன்றில் கொண்டு வரலாம். சிலர் Format | Sheet | Background என்று சென்று வாட்டர்மார்க் கொண்டு வருகின்றனர். ஆனால் இது உங்கள் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் பின்புறம் கிராபிக் ஒன்றை ஏற்படுத்தும்.

இது பிரிண்ட் பிரிவியூவில் தெரியாது. அச்சிலும் வராது. இதற்கு ஒரே வழி வேர்ட் தொகுப்பில் உள்ள வேர்ட் ஆர்ட் வழியாக வாட்டர்மார்க் ஒன்றை உருவாக்கலாம்.

இதன் கலரை Semi Transparent என அமைத்து, லைட் கிரே பில் கொடுத்து அந்த கிராபிக்ஸை, தேவைப்படும் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் எடுத்து ஒட்டலாம். ஆனால் இது சிறிது நேரம் எடுக்கும் செயல்.


சில பிரிண்டர்கள் இது போல வாட்டர்மார்க்கினை ஏற்படுத்தும் வசதிகளைக் கொண்டுள்ளன. எச்.பி. 5550 லேசர் ஜெட் பிரிண்டரில் இந்த வசதி உள்ளது. பிரிண்ட்

டயலாக் பாக்ஸில், ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து அதில் கிடைக்கும் டேப்களில் ஒன்றில் இந்த வசதி தரப்பட்டிருப்பதைக் காணலாம். இன்னொரு வழி, உங்களுக்குப் பழக்கமான இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் மூலம் வாட்டர்மார்க் ஒன்றைத் தயார் செய்து, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் ஹெடரில் ஒட்டி அமைக்கலாம்.


நேரடியாக வேண்டும் என்றால், இதற்கென கிடைக்கும் சில சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். http://www.fineprint.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் என்ற சாப்ட்வேர் கிடைக்கிறது. இந்த சாப்ட்வேர் எக்ஸெல் ஒர்க்ஷீட்டிற்கான வாட்டர் மார்க் உருவாக்கப் பயன்படுகிறது.

கேள்வி: விண்டோஸ் அப்டேட் செய்திடுகையில் எனக்கு பிரச்னை ஏற்பட்டது. அதனுடைய எர்ரர் குறியீடாக 0x80070020 கிடைத்தது. இதற்கு என்ன பொருள் என விளங்கவில்லை. மைக்ரோசாப்ட் தளத்திலும் இதற்கான விளக்கம் கிடைக்கவில்லை.

–சி. பாலசிங்கம், கோவை

பதில்: உங்கள் கம்ப்யூட்டருக்குத் தேவையான அப்டேட் பைல்களைத் தேடுகையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால், அதற்கான குறிப்பிட்ட பைல் ஒன்றை, அதனால் பெற முடியவில்லை என்று இந்த குறியீடு குறிக்கிறது. இது பரவலாக ஏற்படும் பிரச்னை தான்.

இதற்குக் காரணம் பைல் மைக்ரோசாப்ட் தளத்தில் இல்லை என்பதல்ல. உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர், இந்த அப்டேட் பைலைத் தடுக்கிறது. இதற்கான தீர்வு குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில்,

அப்டேட் செய்திடுகையில், ஆண்ட்டி வைரஸ் இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தச் சொல்கிறது. இதனால், நம் கம்ப்யூட்டர், வைரஸ்களினால் தாக்கப்படும் நிகழ்வு ஏற்படலாம்.

ஆனால், விண்டோஸ் அப்டேட்டுக்குத் தேவையான பைல்கள் இன்றி இருப்பதுவும் ஆபத்துதானே. இருப்பினும் முழுமையான முன்னெச்சரிக்கை வேண்டும் என்றால்,

ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் இயக்கத்தை முடக்கி, இணையத்திலிருந்து பைல்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், அனைத்திற்குமாக ஒரு பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

கூடவே ஒரு ரெஸ்டோர் பாய்ண்ட்டையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். இதனால் விண்டோஸ் அப்டேட் செய்திடுகையில் வைரஸ் நுழைந்து, இயக்கம் முடங்கிப் போனால், ரெஸ்டோர் பாய்ண்ட் மற்றும் பேக் அப் பைலைப் பயன்படுத்தி இயக்கத்தினை பழைய நிலைக்குக் கொண்டு வரலாம்.


இது குறித்து மேலதிகத் தகவல்கள் வேண்டுவோர் http://support.microsoft. com/kb/883825 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்தினை அணுகவும்.

நன்றி.தினமலர்.

நூர்
31-05-2010, 10:53 AM
கேள்வி: என்னுடைய நோட்புக் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி.போர்ட் இரண்டும் யு.எஸ்.பி. 2 வகை வேகம் கொண்டவை ஆகும். இது எனக்கு உறுதியாகத் தெரியும்.

ஆனால் அண்மையில் டிஜிட்டல் கேமரா ஒன்றினை, ஒரு போர்ட்டில் இணைத்த போது, ஒரு எச்சரிக்கை செய்தி கிடைத்தது. இணைக்கப்படும் சாதனம் நல்ல வேகத்தில் இயங்க வேண்டும் என்றால், யு.எஸ்.பி. 2 போர்ட்டில் இணைக்கவும்

என்று அதில் காட்டப்பட்டது. இது ஏன் தவறாகக் காட்டுகிறது என்று விளக்கவும். தீர்வையும் தரவும்.


பதில்: உங்கள் நோட்புக் கம்ப்யூட்டருக்கான BIOS செட்டிங்ஸை சிறிது மாற்றினால் சரியாகிவிடும். இதனைக் கீழே குறித்துள்ளபடி கவனமாக மேற்கொள்ள வேண்டும்.


நோட்புக் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, பின் உடனே இயக்கவும். அதன் முதல் டெஸ்ட் ஸ்கிரீன் தோன்றுகையில் எப்2 (F2) கீயை அழுத்தவும். இப்போது BIOS: செட் அப் ஸ்கிரீன் கிடைக்கும். இதில் தேதி, அப்போதைய நேரம் ஆகியவை காட்டப்படும். அப்போது எப்9 கீயினை அழுத்தவும்.

அழுத்துவதனால் பயாஸ் செட்டிங்ஸின் மாறா நிலை (Default) கிடைக்கும். உடனே உறுதியாக டிபால்ட் செட்டிங்ஸ் அமைக்கவா? என்ற எச்சரிக்கை செய்தி கிடைக்கும். யெஸ் என்பதை அழுத்தவும். மறுபடியும் எப்10 கீ அழுத்தி, மாற்றத்தை சேவ் செய்திடவும். மீண்டும் நோட்புக் கம்ப்யூட்டரை இயக்கவும்.

விண்டோஸ் மீண்டும் லோட் ஆகும்போது யு.எஸ்.பி. 2 போர்ட் மற்றும் இணைக்கப்படும் சாதனங்கள் அதற்கான வேகத்தில் இயங்கும். உங்களை பதற்றப்பட வைத்திடும் செய்திகள் வராது.

கேள்வி: நான் இன்னமும் விண்டோஸ் எக்ஸ்பி புரபஷனல் தொகுப்பு பயன்படுத்துகிறேன். அனைத்து அப்டேட்டுகளும் மேற்கொண்டுள்ளேன். ஆண்ட்டி வைரஸ் இயக்குகிறேன். என்னுடைய இன்டர்நெட் பிரவுசிங் வேகமாக இருக்க இன்னும் என்ன செய்திட வேண்டும்?

–ஆ. ராஜகோபால், சென்னை


பதில்: இன்டர்நெட் பிரவுசிங் அதிக வேகம் வேண்டும் என்று பல விஷயங்களை எழுதிய நீங்கள், எந்த வகை இணைப்பு என்று கூறவில்லை. இருப்பினும், உங்கள் சிஸ்டத்தில் சிறிய ட்யூனிங் செய்து, பிரவுசிங் வேகத்தினை அதிகப்படுத்தும் வழியைக் கூறுகிறேன். இதன் மூலம் 20% வேகம் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்.

ஸ்டார்ட் அழுத்தி ரன் கட்டத்தினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் gpedit.msc என்று டைப் செய்து என்டர் அழுத்தவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் Administrative Templates என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Network என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். இதில் Qos Packet Scheduler என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து Limit Reservable Bandwidth என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு உள்ள "Enabled" என்ற பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இப்போது பேண்ட்வித் அளவினை 0% ஆக அமைக்கவும். அடுத்து "Apply" கிளிக் செய்து, பின்னர் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கவும். இதனை அடுத்து, உங்கள் கம்ப்யூட்டரின் பிரவுசிங் வேகம் நிச்சயம் அதிகரிப்பதனை உணரலாம்.

இல்லை எனில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ் எக்ஸ்பி புரபஷனல் என்பதுதானா என்பதனைச் சோதனை செய்திடவும். இவ்வாறு மேற்கொண்ட மாற்றங்களை நீக்க வேண்டுமானால், மீண்டும் மேலே கூறியபடி சென்று Limit Reservable Bandwidth என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில் உள்ள சிடி ட்ரைவ், சிடிக்களைப் படிக்க மட்டுமா? அல்லது சிடிக்களில் டேட்டாவினை எழுதவும் செய்திடுமா? என்பதை எப்படி அறிவது?

–சி. ஜாஸ்மின் மல்லிகா, விழுப்புரம்


பதில்: எளிதாக அறியலாமே! நீங்கள் பழைய கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி இருப்பதாகவும், கம்ப்யூட்டருக்குப் புதியவர் என்றும் எழுதி இருக்கிறீர்கள். உங்கள் சிடி ட்ரைவினைப் பார்க்கவும். அதன் ட்ரேயின் முன்புறம் ஏதேனும் லோகோ ஒன்று இருக்கும். அதில் "CD Drive" என மட்டும் எழுதி இருந்தால், டேட்டா எழுதும் பர்னர்,

அதில் இல்லாமல் இருக்கலாம். CD/DVD RRW என எழுதி இருந்தால் அதில் பர்னர் கட்டாயம் இருக்கும். இது எளிதான ஒரு வழி.


இன்னொரு வழி உள்ளது. இதனையும் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் (Device Manager) டிவைஸ் மேனேஜரை அணுக வேண்டும். இங்கு செல்ல, டெஸ்க்டாப்பில் மை கம்ப்யூட்டர் (My Computer) ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கிடைக்கும் விண்டோவில் ஹார்ட்வேர் (Hardware) என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு டிவைஸ் மேனேஜர் (Device Manager) என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடனே உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களின் பட்டியல் கிடைக்கும்.

இதில் CD/DVD ROM என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது CDRW or DVDRW என அது விரிவடைந்தால், உங்கள் கம்ப்யூட்டரில் சிடி பர்னர் இருக்கிறது என்று பொருள். இல்லை என்றால் இல்லை. புதிய கம்ப்யூட்டர்களில் சிடி ட்ரைவ் பர்னருடன் தான் கிடைக்கிறது.உங்களிடம் பர்னர் இல்லை எனில், ஒன்றை வாங்கி இணைப்பதே நல்லது.

கேள்வி: விண்டோஸ் 7 தொகுப்பினைப் பதிந்தேன். இதில் எக்ஸ்புளோரர் விண்டோவில் "File, Edit, View, etc." என்று இருக்கும் மெனு இல்லை. இதனைப் பெற என்ன மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்?


பதில்: மைக்ரோசாப்ட், நாம் இவற்றை இனிமேல் பயன்படுத்த வேண்டாம் என்று எண்ணுகிறது என்று நினைக்கிறேன். விடலாமா? அவற்றைக் கொண்டு வரும் வழியைப் பார்ப்போம்.

ஸ்டார்ட் கிளிக் செய்து, அதன் சர்ச் பாக்ஸில், போல்டர் ஆப்ஷன்ஸ் (Folder Options) என டைப் செய்து என்டர் செய்திடவும். நீங்கள் வியூ (View) டேப்பில் இருப்பதனை அடுத்து உறுதிப்படுத்திக் கொள்ளவ்வும்.

அடுத்துள்ள அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் (Advanced Settings) ஏரியாவில், Always Show Menus என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் கிடைக்கும் விண்டோக்களில், நீங்கள் விரும்பிய "File, Edit, View, etc." இருப்பதனைக் காணலாம்.

கேள்வி: இமெயில்களில் சிக்னேச்சர் என்பது எதனைக் குறிக்கிறது? தண்டர்பேர்ட் பயன்படுத்தும் நான்,இதனை எப்படி உருவாக்குவது?

–ஜே. முத்தலீப், காரைக்கால்


பதில்: உங்கள் இமெயில் செய்திகள் அனைத்தின் கீழாக, தானாக அமைக்கப்படும் ஒன்றே உங்கள் இமெயில் சிக்னேச்சர். கடிதம் எழுதிக் கையெழுத்து போடுவதற்குப் பதிலாக, இவை தானாக ஒட்டிக் கொள்ளும். இது உங்கள் பெயர் மற்றும் பெற்ற பட்டங்களாக இருக்கலாம். அல்லது சிறு கவிதையாக இருக்கலாம். இதனை எப்படி தண்டர்பேர்டில் அமைப்பது எனப் பார்க்கலாம்.


முதலில் உங்கள் நோட்பேட் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். இதனைப் பெற Start, All Programs, Accessories, Notepad என்று சென்று திறக்கலாம். இது திறந்தவுடன் அங்கு சென்று, அதில் உங்கள் சிக்னேச்சராக என்ன இருக்க வேண்டும் என்பதனை டைப் செய்திடவும்.

நான் முதலில் எழுதியபடி இது எந்த டெக்ஸ்ட்டாக வேண்டுமானாலும் இருக்கலாம். அடுத்து File, Save As அழுத்தி, அதனை டெக்ஸ்ட் பைலாக சேவ் செய்திடவும். இதனை மை டாகுமெண்ட்ஸ் (My Documents) போல்டரில் சேவ் செய்திடவும். இதனை எந்த பெயரில் வேண்டும் என்றாலும், அதனை .tதுt பைலாகத்தான் சேவ் செய்திட வேண்டும். பின்னர், நோட்பேடினை குளோஸ் செய்திடவும்.


அடுத்து, உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமான, தண்டர்பேர்டினைத் திறக்கவும். இங்கு Tools, Account Settings என்று செல்லவும். உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் இருந்தால், எந்த அக்கவுண்ட்டில் இந்த சிக்னேச்சர் பைல் இணைய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த அக்கவுண்ட்டினைத் திறக்கவும்.

அங்கு Attach this signature என்று இருக்கும் பாக்ஸில் டிக் அடையாளத்தை அமைக்கவும். அடுத்து Choose பட்டனில் கிளிக் செய்திடவும். அங்கிருந்து உங்கள் சிக்னேச்சர் பைல் உள்ள போல்டர் சென்று, அந்த பைலைத் தேர்ந்தெடுக்கவும். பின் Open கிளிக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். ஒன்றுக்கு

மேற்பட்ட அக்கவுண்ட் இருந்தால், அதற்கேற்ப பல சிக்னேச்சர் பைல்களைத் தயாரித்து, செட் செய்திடலாம். ஒன்றைக் கவனித்தீர்களா! நம்மால் கடிதம் எழுத முடியாவிட்டால், மற்றவர்களை எழுதச் சொல்லி, நாம் கையெழுத்தை மட்டும் போடலாம். ஆனால் இங்கு கையெழுத்து மட்டும், கம்ப்யூட்டர் தானாக இணைத்துக் கொள்கிறது.

கேள்வி: கூகுள் சர்ச் இஞ்சினில் சொல் ஒன்றுக்கு பொருள் தர என்ன செய்திட வேண்டும் என எழுதி இருந்தீர்கள். அதன் சரியான பார்மட்டைக் கூறவும்.

– ஆ. சுப்புராஜ், ஆண்டிபட்டி


பதில்: சரியான பார்மட் என்று நீங்கள் கேட்பதிலிருந்து அதில் உங்களுக்கு சற்றுக் குழப்பம் இருப்பது தெரிகிறது. Define: (சொல்) அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக கிகா பைட் என்றால் என்னவென்று தெரியவேண்டும் என்றால், Define: Gigabyte என அமைக்க வேண்டும்.

நன்றி.தினமலர்.

நூர்
07-06-2010, 09:54 AM
http://img.dinamalar.com/data/uploads/E_1275819985.jpeg


கேள்வி: சில டாகுமெண்ட்களில் முக்கியமான சொற்களை மட்டும் தேர்ந்தெடுத்து வேறு வண்ணத்தில் வைத்திட முயற்சிக்கிறேன். இவை இடம் விட்டு இருப்பதால், ஒவ்வொரு முறையும் தனித்தனியே வண்ணம் மாற்ற வேண்டி உள்ளது. வேறு வழி இதற்கு உண்டா?

–நீ. மலர்விழி, மதுரை


பதில்: மிக மிக எளிய, உங்களுக்குத் தெரிந்த வழி உள்ளது. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் அடுத்தடுத்து இல்லாத பைல்களை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

தொடர்ந்து எனில், ஷிப்ட் அழுத்தி தேர்ந்தெடுக்கிறீர்கள். இடம் விட்டு என்றால், கண்ட்ரோல் கீ அழுத்தி பைல் மீது கிளிக் செய்து தேர்ந்தெடுக்கிறீர்கள் அல்லவா?

அதே போல கண்ட்ரோல் கீ அழுத்தி, சொற்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் மொத்தமாக ஒரே வேலையாக இவற்றின் நிறத்தை மாற்றலாம்.

கேள்வி: ஓப்பன் சோர்ஸ் சிஸ்டம் குறித்த தகவல்கள் நிறைய தருகிறீர்கள். விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் முக்கிய, பயனுள்ள ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்களின் பட்டியல் தருமாறு வேண்டிக் கொள்கிறேன்.

–ஆ. நல்லதம்பி, சின்னமனூர்


பதில்: விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் நல்ல, பயனுள்ள ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் கேட்டுள்ளீர்கள். இதோ அவற்றின் பெயர்களைத் தருகிறேன்.

நீங்களே இன்டர்நெட்டில் தேடி எடுத்து, டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள். பிடிக்கவில்லை என்றால் நீக்கிவிடுங்கள்.

File Zilla (பைல்களைக் கையாள, குறிப்பாக மொத்தமாக மாற்ற), Virtual Box (32 விர்ச்சுவல் சிபியுக்களைக் கையாளும்), Open Office.org (அனைவரும் அறிந்த ஆபீஸ் தொகுப்பிற்கு இணையானது),

Firefox (நாடறிந்த பிரவுசர்), Paint.Net (அவ்வளவாகப் பிரபலமாகாதது என்றாலும், ஒரு ஆர்ட்டி ஸ்ட்டுக்குத் தேவையானதை வழங்கும்), Media Player Classic (இதன் தோற்றத்தை வைத்து குறைவாக மதிப்பிட வேண்டாம். பலவகை மியூசிக் பார்மட்டுகளை, மிக எளிதாகக் கையாளும்),

PDF Creator (பிடிஎப் பைல்களை உருவாக்க உதவும்), 7Zip (மிக அருமையான ஒரு ஸிப் புரோகிராம். ஒரு மெகா பைட் பைலை வெறும் 64 கேபி அளவிற்கு மாற்றும் திறன் கொண்டது), Clamwin (சிஸ்டத்தை ட்யூன் செய்திட உதவும்)

கேள்வி: நான் ஒரு இங்க்ஜெட் பிரிண்டர் வாங்கினேன். அதில் இங்க் தீர்ந்துவிட்டது. இதில் நிறுவன இங்க் ஜெட் ரீபில் வாங்கலாமா? இதன் விலை அதிகமாக உள்ளது. இதற்குப் பதிலாக கடைகளில் மிகவும் விலை குறைவாக விற்பனை செய்யப்படும் பட்ஜெட் இங்க்கினை வாங்கிப் பயன்படுத்தலாமா?

–ஆர்.கே. ஸ்ரீனிவாசன், திருப்பூர்


பதில்: வாசகர்களிடம் இருந்து இந்த பிரச்னை குறித்து அடிக்கடி கடிதங்கள் வருகின்றன. பட்ஜெட் இங்க் வாங்கி, காசை மிச்சப்படுத்த என்னிடம் ஆலோசனை

கேட்டு இவை அனுப்பப்படுகின்றன. பொதுவாக, ரீபில் இங்க் வாங்கிப் பயன்படுத்துவதனை நான் ஏற்றுக் கொள்வதில்லை.

இங்க் கேட்ரிட்ஜுக்குள், மை வெளியேறும் நாஸில் எனப்படும் சிறிய துளை இல்லாமல் இருந்தால் (கேனன் பிரிண்டர் போல) இங்க் ரீபில் பயன்படுத்துவது குறித்து யோசிக்கலாம். அப்படியும் கூட அது அவ்வளவு பாதுகாப்பானது என்று சொல்ல மாட்டேன்.

ஏனென்றால் கடைகளில் கிடைக்கும் சாதாரண இங்க், நிறுவனம் வழங்கிய மையின் தரத்தில் நிச்சயம் இருக்காது.


நீங்கள் எச்.பி. பிரிண்டர் பயன்படுத்துவதாக இருந்தால், மை வெளியேறும் துளை, இங்க் கேட்ரிட்ஜுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருப் பதனைக் காணலாம். எனவே எச்.பி. நிறுவனம் தரும் இங்க் கேட்ரிட்ஜைத் தான் பயன்படுத்த வேண்டும்.

அப்போது அந்த துளையும் புதியதாகவே அமையும். இதனால் பிரச்னை எதுவும் ஏற்படாது. மாறாக இங்க் ரீபில் செய்து பயன்படுத்தினால், துளை பழையதாக இருந்து பிரச்னைகளைக் கொண்டு வரும்.

போட்டோக்களை பிரிண்ட் செய்திடுகையில் இந்த வித்தியாசம் தெரியவரும். அச்சு நன்றாக இருப்பதற்குத் தானே சொந்தமாக பிரிண்டர் வாங்குகிறீர்கள். பின் ஏன் சிறிது காசை மிச்சம் செய்வதற்காக, ரீபில் இங்க் பக்கம் செல்கிறீர்கள்.

கேள்வி: என் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை, இயக்கத் தெரிந்த அனைவரும் பயன்படுத்துகிறோம். ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த வால்பேப்பரை அமைக்கின்றனர். இதனால் பிரச்னை வருகிறது. மொத்தமாக நான்கு வால்பேப்பர்களைத் தேர்வு செய்து, மாறி மாறி வரும்படி செய்திட முடியுமா?

–ஆ. தேவசேனா, புதுச்சேரி


பதில்: இதென்ன, பாகப்பிரிவினைக்கு பஞ்சாயத்துக்கு அழைப்பது போல் இருக்கிறது. இருப்பினும் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் புரோகிராம் ஒன்று குறித்த தகவல்களைத் தருகிறேன்.

அந்த புரோகிராமின் பெயர் Wallpaper Master. இதன் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வால் பேப்பர்கள் அனைத்தையும், குறிப்பிட்ட கால இடை வெளியில் கம்ப்யூட்டரில் ஒரு சுற்றில் காட்டிக் கொண்டே இருக்கும்.

இந்த கால இடைவெளியை நீங்களே நிர்ணயம் செய்திடலாம். இந்த புரோகிராமின் மேம்படுத்தப்பட்ட பதிப்பினைப் பெற 20 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும்.

இருப்பினும் இலவச பதிப்பு ஒன்றும் கிடைக்கிறது. இதன் தள முகவரி

http://jamesgart.com/wallpaperchanger/. இந்த தளத்தில் கீழாக freeware என்று இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து,

அங்கு உள்ள டவுண்லோட் பட்டனில் கிளிக் செய்து, இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து கொள்ளவும்.

இன்ஸ்டால் செய்த பின், கம்ப்யூட்டரை இயக்குகையில் வால் பேப்பர் மாஸ்டர் இயங்கத் தொடங்கும். இதற்கான ஐ கானை டூல்பாரில் பார்க்கலாம். டூல்பாரில் ரைட் கிளிக் செய்து, வால் பேப்பர் மாஸ்டரை இயக்கவும்.

இதில் உள்ள Add Files என்பதில் கிளிக் செய்து, உங்கள் வீட்டில் உள்ளவர்கள் விரும்பும் வால்பேப்பர் இமேஜ்களைத் தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் கீ அழுத்தி, இந்த பைல்களைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு வால்பேப்பருக்கும், அதற்கான பொசிஷனையும் அமைக்கலாம்.

இதில் உள்ள கலர் டேப்பினைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு இமேஜுக்கும், அதன் பின்னணி நிறத்தையும் செட் செய்திடலாம்.


உடன் வால் பேப்பர் மாஸ்டர் இயங்கத் தொடங்கி, வால் பேப்பர் படங்களைக் காட்டும். உங்களுக்குப் பொறுமை இன்றி அடுத்த படத்தைக் காண வேண்டும் எனில், வால் பேப்பர் மாஸ்டர் ஐகானில், லெப்ட் கிளிக் செய்தால் அடுத்த வால் பேப்பருக்கு மாறும்.

கேள்வி: என் மகனுக்கு ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கிக் கொடுத்துள்ளேன். அவன் கம்ப்யூட்டரையும் சிறப்பாகப் பயன் படுத்துவான். போட்டோகிராபி குறித்துக் கற்றுக் கொள்ள, இன்டர்நெட்டில் ஏதேனும் தளம் உள்ளதா?

–சா. மகேந்திரன், தாம்பரம்


பதில்: உங்கள் மகனை அனைத்து துறைகளிலும், அவனாகவே உழைத்து முன்னுக்கு வர உறுதுணையாய் இருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

இன்டர்நெட்டில் இது குறித்த தளங்கள் நிறைய உள்ளன. இருப்பினும் நீங்கள் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில், நான் தர விரும்பும் தளம்

http://www.photonhead.com/beginners/ என்ற முகவரியில் உள்ளது.

இதில் நம் மூதாதையர் காலத்து கேமராவிலிருந்து, இன்றைய காலத்து டிஜிட்டல் கேமரா வரையிலான அனைத்து தகவல்களும் உள்ளன.

அடுத்து கேமரா மோட் என்ற பிரிவில் அனைத்து வகைகள் குறித்து விளக்கங்களைப் பெறலாம். போட்டோ எடுப்பது மட்டுமின்றி, அவற்றை எடிட் செய்வது குறித்தும் இதில் தகவல்களைப் பெறலாம்.

கேள்வி: மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் என்பது உண்மையிலேயே இலவசம் தானா? இதனை எங்கு பெறலாம்? இது என்ன வேலைகளை மேற்கொள்ளும்?

– ஆ. சிவத்தம்பி, திருத்தணி


பதில்: இது குறித்து ஒரு கட்டுரை எழுத எண்ணியிருந்தேன். ஆனால் உங்கள் கேள்வியில் இருந்த அவசரத்தை முன்னிட்டு தகவல்களைத் தருகிறேன்.

இதனைப் பெற http://www.microsoft.com/ Security_Essentials/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

வைரஸ், மால்வேர் மற்றும் ஸ்பைவேர் ஆகிய அனைத்தையும் தடுத்து பாதுகாப்பு தரும் இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து இலவசமாகக் கிடைக்கிறது என்ற செய்தி நிச்சயமாக ஆச்சரியமான உண்மைதான்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் என்று கூறுகிறது. அடிப்படையில் நல்ல பாதுகாப்பினை வழங்குகிறது. ஆனால் திடீர் திடீரென எழும் வைரஸ் பிரச்னைகளை இது தீர்க்குமா என்பது ஐயமே.

உங்களுடைய கம்ப்யூட்டரில் வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இல்லாமல், அதற்கென எதுவும் பணம் செலவழிக்கத் தயாராக இல்லை என்றால், இதனை அல்லது இது போன்ற பிற இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம்.

நன்றி.தினமலர்.

நூர்
15-06-2010, 05:49 AM
http://img.dinamalar.com/data/uploads/E_1276426547.jpeg


ஜூன் 14,2010

கேள்வி: என்னுடைய எக்ஸெல் ஒர்க்புக்குகளில், பல வகுப்பு மாணவர்களுக்கான ஒர்க் ஷீட்கள் நிறைய உள்ளன. அடுத்த ஒர்க் ஷீட்களுக்குச் செல்ல, கீழே உள்ள டேப் அழுத்தாமல், எந்த கீகளைப் பயன்படுத்திச் செல்ல முடியும்?

–நா. புகழேந்தி, திருவான்மியூர்


பதில்: கண்ட்ரோல் + பேஜ் டவுண் கீகளை அழுத்தினால், அடுத்த ஒர்க்ஷீட்டிற்குச் செல்லலாம். கண்ட்ரோல் +பேஜ் அப் அழுத்தினால், முந்தைய ஒர்க்ஷீட்டிற்குச் செல்லலாம்.

கேள்வி: எக்ஸெல் தொகுப்பில் சம் பார்முலா பயன்பாடுகளைச் சுருக்கமாகத் தரவும்.

–சி. வெற்றிவேந்தன், திண்டிவனம்

பதில்: SUM மிக எளிமையாகக் கையாளக் கூடிய பார்முலா. இந்த பார்முலாவில் எண்கள் அல்லது செல்களில் இருக்கும் மதிப்பைக் குறிக்க அந்த செல்களையே தரலாம்.

இதற்கான பார்முலா அமைப்பு SUM (numberl, number2, .,.) எடுத்துக் காட்டாக SUM (3, 2)என்பது 5 என்ற விடையைக் கொடுக்கும். இதே போல செல்களில் உள்ள மதிப்புகளைக் கூட்டிக் காண அந்த செல்களின் எண்களைத் தரலாம்.

எடுத்துக் காட்டாக செல் Al முதல் A30 வரை உள்ள மதிப்புகளைக் கூட்டிப் பெற =குக்M (அ1:அ30) என பார்முலா அமைக்க வேண்டும்.

கேள்வி: என் பேஸ்புக் தளத்தில் என் நண்பர்கள், செய்திகளுடன் சின்ன சின்ன பட அடையாளங்களை, க்ளாவர், ஹார்ட் போன்ற சீட்டுக் கட்டு படங்கள், சூரியன், மியூசிக் நோட்ஸ் என இவை பலவாறாக இருக்கின்றன. சிறியதாகவும் உள்ளன. இவற்றை எப்படி, எந்த கீ மூலம் அமைப்பது?

–சி. முத்துராஜ், மதுரை


பதில்: பார்ப்பதற்கு அழகாக, உங்களைக் கவர்ந்துள்ளதால் இந்த கேள்வி என்று நினைக்கிறேன். இவை எல்லாம் ஆல்ட் கோட் (Alt Code) =SUM (A1:A30) என்று கூறலாம். ஆல்ட் கீயுடன் நம்பர் ஒன்றை ஏற்படுத்தினால், இவை கிடைக்கும்.

ஒரு இலக்கம் என்று இல்லை; பல எண்கள் அமைந்த இலக்கமும் அமைக்கலாம். பேஸ்புக்கில் இவற்றை உங்கள் எண்ணங்களுக்குத் தகுந்த மாதிரி அமைக்கலாம். ஆல்ட் கீ அழுத்தியவாறு, சில எண்களை அமைத்துப் பாருங்கள்.

உங்களுக்கே தெரியவரும். ஆனால் இந்த எண்களை அமைக்கும்போது, நம்பர் பேடில் உள்ள எண்களுக்கான கீகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நம் லாக் கீ அழுத்திப் பின் இந்த கீகளை அழுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். எழுத்துக்களுக்கு மேலாக உள்ள எண் கீகளை பயன்படுத்தக் கூடாது.

கேள்வி: நான் எப்போது என் டெஸ்க் டாப்பிலேயே நடப்பு பைல்களை வைத்து இயக்குகிறேன். இதனால் என் டெஸ்க் டாப் குப்பையும் கூளமுமாகத்தான் இருக்கும். இது எனக்குப் பிடிக்கிறது. ஆனால் விண்டோஸ் அடிக்கடி இந்த குப்பையைக் கிளீன் செய்யவில்லையா என்று கேட்டு செய்தியைக் காட்டுகிறது. இதனை ஓரத்தில் கிளிக் செய்து அலட்சியப்படுத்தி விடுவேன். இந்த செய்தி கிடைக்காமல் இருக்க என்ன செய்திட வேண்டும்?

– சி. கலைமணி, கோவை


பதில்: உங்களுடைய உணர்வுகள் எனக்குப் புரிகிறது. நிஜமான டெஸ்க் டாப்பான மேஜையில் நான் இப்படித்தான் பொத்தகங்களையும், பைல்களையும், மொபைல் போனையும், பேனா பென்சில்கள் மற்றும் பேப்பர்களையும் குப்பையாக வைத்திருப்பேன்.

அடிக்கடி என் மனைவி என்னை இதக் கிளீன் பண்ணா என்ன? என்று கேட்கும் போது, ஒரு சிரிப்போடு சமாளிப்பேன். மனைவியை இப்படிக் கேட்காதே என்று சொல்ல முடியாது. ஆனால் கம்ப்யூட்டரைச் சொல்ல முடியும். எப்படி என்று பார்ப்போமா!


உங்கள் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.

கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties) தேர்ந்தெடுங்கள். டிஸ்பிளே ப்ராப்பர்ட்டீஸ் (Display Properties) திரை கிடைக்கும்.

இதில் டெக்ஸ்க்டாப் (Desktop) டேப்பினைத் தேர்ந்தெடுங்கள். அதில் கஸ்டமைஸ் டெஸ்க் டாப் (Customize Desktop) என்ற பட்டனைக் கிளிக் செய்திடுங்கள்.

அடுத்து டெஸ்க்டாப் ஐட்டம்ஸ் (Desktop Items) என்று ஒரு புதிய விண்டோ கிடைக்கும். இதில் "Run Desktop Cleanup Wizard every 60 days" என்று உள்ள இடத்தில் காணப்படும் கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடுங்கள்.

சிரித்துக் கொண்டே ஓகே கிளிக் செய்திடுங்கள். இனி எந்த எச்சரிக்கை செய்தியும் வராது.

கேள்வி: வேர்ட் தொகுப்பில் ஸ்பெல் செக்கர் உள்ளது. இதே போல பிரவுசர்களில் உள்ளதா? நாம் டைப் செய்வதைத் திருத்தித் தருமா? அதனை எப்படி இயக்குவது?

–கே. பொன்னம்பலம், மதுரை


பதில்: நல்ல கேள்வி. பல படிவங்கள், பதில்கள் என நாம் இணைய தளங்களில் நிரப்புகையில் தவறு ஏற்படக் கூடாது அல்லவா! ஆனால் இந்த நோக்கத்தில் பார்க்கையில் எனக்கு ஆச்சரியம் தான் வந்தது.

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசரில் மட்டும் தான், அதிலேயே ஸ்பெல் செக்கர் உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கு ஸ்பெல் செக்கர் இன்னும் தரப்படவில்லை. விரைவில் வரும் என நினைக்கிறேன்.


பயர்பாக்ஸில் இருப்பதை எப்படி இயக்குவது என்று பார்ப்போமா! பொதுவாக இந்த பிரவுசர் இன்ஸ்டால் செய்கையிலேயே, இதுவும் மாறா நிலையில் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிடும். இருப்பினும், இந்த வசதியை உங்களால் பயன்படுத்த முடியவில்லை என்றிருந்தால், அதனை எப்படி இயக்குவது என்று பார்க்கலாம்.


பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி Tools>Options>Advanced என்று செல்லவும். அங்கு கிடைக்கும் ஜெனரல் ("General") டேப்பினை தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள "Check my Spelling as I Type" என்று இருப்பதில் டிக் மார்க் அடையாளம் ஒன்றினை ஏற்படுத்தவும். பின் மீண்டும் பிரவுசருக்குத் திரும்பவும்.

இனி நீங்கள் ஏதேனும் பிழையுடன் ஒரு சொல்லை டைப் செய்தால், அந்த சொல்லின் கீழாக ஒரு சிகப்பு நெளிவு கோடு கிடைக்கும். இதில் ரைட் கிளிக் செய்தால், சரியான ஸ்பெல்லிங் கொண்டு பல சொற்கள் கிடைக்கும். இதில் உங்களுக்குத் தேவையான சொல்லைக் கிளிக் செய்தால், பிழை திருத்தப்பட்ட சொல் அமையும்.

கேள்வி: கம்ப்யூட்டர் பற்றிய கட்டுரைகளில் ரியல் டைம் என்ற சொல் அடிக்கடி இடம் பெறுகிறது. இந்த டைம் எதனைக் குறிக்கிறது? சாதாரண நேரத்திற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

–சா. கிள்ளிவளவன், திண்டிவனம்


பதில்: ரியல் டைம் (Real Time) என்பது அப்போது என்ன நடக்கிறதோ அதுதான். ஒரு நிகழ்ச்சி நடைபெறும் போது என்ன நேரமோ அதுதான் ரியல் டைம். ஒரு வீடியோ காட்சி உங்களுக்கு லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் கிடைத்து நீங்கள் பார்த்தால்,

அது ரியல் டைம். அதே போல வெப் கேமரா மூலமாக நீங்கள் பார்க்கும் காட்சி ரியல் டைம் காட்சி. ஒரு விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் போது அதனை லைவ் ரிலே என்று சொல்கிறார்கள் இல்லையா! எனவே அது ரியல் டைம். அப்போது

உங்கள் அபிமான வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், உங்களுக்கு ரத்த அழுத்தம் எகிறும். இதையே மறு நாள் ஹைலைட்ஸ் எனக் காட்டினால் அது ரியல் டைம் இல்லை. (என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்கு தெரியும் என்பதால், உங்கள் ரத்த அழுத்தமும் மாறாது)


கம்ப்யூட்டர் வழியே தகவல் பெற்று, உடனே அதற்கு நீங்கள் பதில் அளிக்கும் வகையில் செயல்களை மேற்கொண்டால், அது ரியல் டைம். இதைத்தான் Real time operating systems என்று கூறுவார்கள்.

சுருக்கமாக (RTOS).. கூகுள் இப்போது ரியல் டைம் சர்ச் மேற்கொள்வதாகக் கூறுகிறது. அதாவது கூகுள் தேடலை மேற்கொள்கையில் அது உலகில் அப்போது நடக்கும் விஷயங்களைத் தருகிறது. ஒரு தேடலை மேற்கொள்கையில் அது குறித்து அப்போது இன்டர்நெட்டில் வந்திருக்கும் செய்தி உங்களுக்கு ரியல் டைம் சர்ச்சில் கிடைக்கும்.


இந்த ரியல் டைம் விஷயத்தில் இன்னொரு தகவலையும் தரட்டுமா! இதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று ஹார்ட் ரியல் டைம் (hard real time). நீங்கள் கார் ஓட்டிக் கொண்டு போகும்போது, காருக்கு முன்னால் நடந்து போகும் ஒருவர் திடீரென நிற்கிறார். உடனே நீங்கள் பிரேக்கை சட் என்று அழுத்த வேண்டும்.

இது ஹார்ட் ரியல் டைம். இதில் சில விநாடிகள் கூட லேட் ஆகக் கூடாது. நீங்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறீர்கள். பயண நேரம் என்னவென்று அவ்வப்போது ரியல் டைமாக தருகிறார்கள். இது சாப்ட் ரியல் டைம் (soft real time) இதில் சில நிமிடங்கள் முன்னே பின்னே ஆனாலும் சிக்கல் இல்லை.

நன்றி.தினமலர்.

நூர்
21-06-2010, 07:51 AM
http://img.dinamalar.com/data/uploads/E_1277015289.jpeg


கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துகிறேன். இதில் உள்ள பாப் அப் பிளாக்கர், நன்றாகச் செயல்பட்டு பாப் அப் விண்டோவினைத் தடுக்கிறது. ஆனால் சில வேளைகளில் நல்ல தகவல் களைத் தாங்கி வரும் பாப் அப் விண்டோக்களும் தடை செய்யப்படுகின்றன. இந்த பிரச்னையை எப்படித் தீர்ப்பது?

– தி. மருத நாயகம், புதுச்சேரி


பதில்: பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களில், நீங்கள் அனுமதிக்கும் பாப் அப் செய்திகளுக்கான ஒயிட் லிஸ்ட் போன்ற ஒன்றைத் தயாரிக்கும் வசதி தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், எக்ஸ்பியில் பயன்படுத்துவதாக எழுதி இருக்கிறீர்கள்.

குறைந்தது சர்வீஸ் பேக் 2 வைத்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இன்டர்நெட் எக்ஸ்புளோரர்ல் Tools>>Pop Up Blocker என்று செல்லவும். இதில் Pop Up Blocker Settings என்று கிடைக்கும்.

இப்போது ஒரு சிறிய பாக்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் "Address of Web site to allow" என்று இருக்கும் இடத்தில்,

எந்த இணைய தளங்களில் இருந்து வரும் பாப் அப் விண்டோக்கள் தேவையோ, அவற்றின் முகவரிகளை டைப் செய்திடவும். பின் "Add" என்ற பட்டனில் கிளிக் செய்து வெளியேறவும்.

இனி அந்த தளத்திற்குச் சென்றால், இந்த தளம் தரும் பாப் அப் விண்டோக்கள் தடையின்றி வருவதனைக் காணலாம்.


மொஸில்லாவின் பயர்பாக்ஸ் தொகுப்பிலும் இந்த வசதி தரப்பட்டுள்ளது.


Tools/Options சென்று Content டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் "Block Popup Windows" என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால்,

"Exceptions..." என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் நீங்கள் விரும்பும் தளத்தின் முகவரியினை டைப் செய்து, அதன் பின் "Allow" பட்டனை அழுத்தவும். இது அந்த தளத்திற்கு பாப் அப் தடையை நீக்கிவிடும்.

கேள்வி: கண்ட்ரோல் பேனலில் கிடைக்கும் ஆட்/ரிமூவ் புரோகிராம்ஸ் என்பதில் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒருபுறம் Set Program Access and Defaults எனத் தரப்பட்டிருந்தது. இதன் பொருள் என்ன? இதனால் என்ன பயன்?

–ஆ. தனசேகரன், மதுரை


பதில்: உங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் சில வேலைகளுக்கான புரோகிராம்களை மாறா நிலையில் செட் செய்திட இந்த Set Program Access and Defaults வசதியினைப் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக, இணையத்தில் பிரவுஸ் செய்திட பயர்பாக்ஸ், இமெயில் பெற தண்டர்பேர்ட், போட்டோ பார்க்க பிக்சர் மேனேஜர், பாட்டு கேட்க விண் ஆம்ப் என ஒவ்வொரு வேலைக்கும் ஒரு புரோகிராமினை நீங்கள் விரும்பலாம்.

பாடல் பைல் ஒன்றைக் கிளிக் செய்தால், விண் ஆம்ப் இயக்கப்பட்டு அந்த பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என நீங்கள் விருப்பப்படலாம். இப்படி குறிப்பிட்ட புரோகிராம்களை, குறிப்பிட்ட பணிகளுக்கு செட் செய்த பின்னர், அந்த புரோகிராம்கள் டிபால்ட், அதாவது மாறா நிலையில் உள்ள, புரோகிராம்கள் என அழைக்கப்படும்.

அவ்வாறு அமைத்திட இந்த வசதியினைப் பயன்படுத்தலாம். ஆனால் ஓர் எச்சரிக்கை. இதனை மேற்கொள்ள நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டராகக் கம்ப்யூட்டரை அணுகி இருக்க வேண்டும்.

கேள்வி: இன் பிரைவேட் பிரவுசிங் என்று கேள்விப்படுகிறேன். இந்த வசதியினை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியுமா?

–செ. மலர்விழி, திருப்பூர்


பதில்: பிரைவேட் பிரவுசிங் என்பது குரோம் பிரவுசரில் முதலில் வழங்கப்பட்டது. குரோம் இதனை Incognito Mode என அழைத்தது. நாம் இணையத்தில் செல்கையில், எந்த இணையதளங்களுக்குச் செல்கிறோம்,

என்ன பைல்களை டவுண்லோட் செய்கிறோம் போன்ற தகவல்கள் ஆங்காங்கே சேமிக்கப்படுகின்றன. பெரும்பாலான தளங்கள் உங்கள் விருப்பங்கள், ஐபி முகவரி மற்றும் உங்களைப் பற்றிய குறிப்புகளை குக்கிகள் என்ற பைலில் எழுதி உங்கள் கம்ப்யூட்டரிலேயே பதிந்து வைக்கின்றன.

இதனால் அடுத்த முறை, நீங்கள் அந்த தளத்திற்குச் செல்கையில், குக்கிகள் பைலில் உள்ள தகவல்கள் படிக்கப்பட்டு, உங்களுக்கும் அந்த தளத்திற்குமான இணைப்பு விரைவில் நடைபெறுகிறது.

இவ்வாறு இல்லாமல் ஒரு பிரவுசர், உங்கள் தேடல்களைப் பற்றிய தகவல்கள் எதனையும் பதிந்து வைக்காது என்ற வழக்கத்தினை குரோம் அறிமுகப்படுத்தியது. அதுவே பிரைவேட் பிரவுசிங் என்பதாகும்.

இதை இன்டர்நெட் பிரவுசர் பதிப்பு 8 InPrivate Browsing என அழைக்கிறது. இந்த வகை பிரவுசிங் போது, பிரவுசர் எதனையும் பதிந்து கொள்ளாது. குக்கிகள் ஏற்படுத்தப்படமாட்டாது.

இதனால் இந்த வகை பிரவுசிங்கின் போது பார்த்த இணைய தளங்களின் முகவரிகளை, அடுத்த முறை டைப் செய்கையில், தானாக அது நிரப்பப்பட்டு காட்டப்படமாட்டாது.

இந்த வகையில் பிரவுஸ் செய்திட File – Edit – View – Favorites – Tools – என்று சென்று பின் இதில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் InPrivate Browsing என்பதில் கிளிக் செய்திடவும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள், அதில் உள்ள கண்ட்ரோல் பேனல் மூலமாக மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். நான் மாற்றங்கள் செய்யப்படக்கூடாது என்று எண்ணும் பிரிவுகளின் ஐகான்களை மறைக்க முடியுமா?

–சி. கரன்சந்திரன், கோயம்புத்தூர்


பதில்: கண்ட்ரோல் பேனலில் உள்ள ஒவ்வொரு ஐகானும் ஒவ்வொரு பைலைக் குறிக்கிறது. அதன் எக்ஸ்டென்ஸன் cpl ஆகும். நீங்கள் மறைக்க விரும்புகிற ஐகானிற்கான பைல் பெயரைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பின்பு C:\Windows\Control.ini பைலைத் திறந்து கொள்ளுங்கள்.[don’t load] எனத் தொடங்குகிற வரி அந்த பைலில் இருந்தால் அதன் அடியில் புதிய வெற்று வரியை உருவாக்குங்கள்.

இல்லையெனில் பைலின் இறுதிக்குச் சென்று புதிய வரியில் don’t load என டைப் செய்து என்டர் கீயை அழுத்துங்கள். மறைக்க விரும்புகிற பைலின் பெயரை டைப் செய்து அதை ஒட்டி = no என டைப் செய்யுங்கள்.

இனிப் பைலை பாதுகாத்து மூடுங்கள்.மேற்படி முறைக்குப் பதில் என்ற Tweak UI புரோகிராமை நிறுவி இயக்குங்கள். Control Panel டேபைக் கிளிக் செய்து வேண்டாத ஐகான்களுக்கான செக் பாக்ஸ்களில் டிக் அடையாளங்களை எடுத்துவிட்டு ஓகே செய்திடவும்.

கேள்வி: விண்டோஸ் இயக்கத்தில் தரப்பட்டுள்ள கிளிப் போர்டில் அப்போது உள்ள டெக்ஸ்ட் அல்லது காப்பி செய்யப்பட்டதைப் பார்க்க என்ன செய்திட வேண்டும்?

–தே. இளமதி, காரைக்குடி

பதில்: விண்டோஸ் கீ அல்லது ஸ்டார்ட் அழுத்தி, கிடைக்கும் மெனுவில் ரன் பாக்ஸைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் Clipbrd என டைப் செய்திடவும். உடனே கிளிப் போர்டு விண்டோ கிடைக்கும். அதில் நீங்கள் காப்பி செய்தவை காட்டப்படும்.

கேள்வி: வேர்ட் தொகுப்பில் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தின் மூலமாக, ஸ்பெஷல் கேரக்டர்களை அமைத்து எப்படி தேடுவது? தேடினால் கிடைக்குமா?

–சி. தியாகேசன், திண்டுக்கல்


பதில்: நல்ல கேள்வி. பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தில், சில ஸ்பெஷல் கேரக்டர்களை நாம் உருவாக்க முடியும். எடுத்துக் காட்டாக கேரட் சிம்பல். சிலவற்றை நாம் அமைக்க முடியாது.

எடுத்துக்காட்டு, நாமாக அமைக்கும் பேஜ் பிரேக். இந்த சிக்கலைத் தீர்த்து நமக்கு உதவிட, வேர்ட் அதன் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தில், இந்த ஸ்பெஷல் கேரக்டர்கள் பட்டியலையே தந்துள்ளது.


முதலில் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டம் பெறுங்கள். கண்ட்ரோல் + எப் அழுத்தினால் இது கிடைக்கும்.


இந்த கட்டத்தில் கீழே இருக்கும் கட்டங்களில் ஒன்றாக More என்ற பட்டன் இருக்கும். அதனை அழுத்தவும்.

கீழாக Clipbrd மற்றும் Special என்ற இரு கட்டங்கள் கிடைக்கும். இதில் Format என்ற பட்டனை அழுத்த மேல் நோக்கி ஒரு கட்டம் விரிவடையும்.

இதில் அனைத்து ஸ்பெஷல் கேரக்டர்கள் மற்றும் பார்மட் வசதிகள் இருக்கும். இவற்றின் வகையைப் பார்த்தால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? என்று நீங்கள் ஆச்சரிய மடைவீர்கள். இவற்றில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துத் தேடச் சொல்லலாம்.

கேள்வி: சிறுவர்களுக்குப் பயனுள்ள தளங்களின் முகவரிகளைக் கூறவும். வாரம் ஒன்று விளக்கமாகக் கூறவும்.


–கா. சிவப்பிரகாசம், பொள்ளாச்சி


பதில்: வாரம் ஒரு இணைய தளம் பகுதியில் அவ்வப்போது சிறுவர்களுக்கான தளங்கள் குறித்தும் எழுதுகிறோமே. இருப்பினும் உடனே நினைவிற்கு வரும் சில தளங்களின் முகவரிகளைத் தருகிறேன்.

www.creatingmusic.com

www.kidsclick.com

www.scivee.tv

http://familyfun.go.com/recipes/kids/

www.hoeworkspot.com

www.kids.gov.

www.starfall.com

குறிப்பிட்ட பொருள் குறித்து என்றால், ஏதேனும் சர்ச் இஞ்சின் மூலம் தேடிப் பார்த்து பயன் பெறுங்கள். பள்ளிக் கூடம் எல்லாம் திறந்தாச்சே. மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் தளங்களாக இருந்தால், ஓய்வு நேரம் முழுவதும், உங்கள் குழந்தைகள் இந்த தளங்களில் உட்கார்ந்து விடப் போகிறார்கள். கவனத்துடன் கண் காணிக்கவும்.


கேள்வி: டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கையில் முன் பகுதியில் எண்கள் தாமாக அமைக்கப்பட்டு டாகுமெண்ட் அமைத்தேன். பின் சில வரிகளுக்குப் பின்னால், வரிகளை அமைக்கும்போது, எண்களைக் கொடுத்தால், அது முந்தைய எண்களின் தொடர்ச்சியாக உள்ளது. என்ன செய்தாலும் மாற மறுக்கிறது. எப்படி இதனை மாற்றுவது?


–சி. கந்த செல்வன், பழநி


பதில்: இது ஒரு சிக்கலான சமாச்சாரம் தான். இதற்காக நாம் தானாக நம்பர் அமையும் வசதியை நிறுத்துவதும் கூடாது. புதிய எண் தொடங்க தீர்வும் உள்ளது.

எந்த இடத்தில் மீண்டும் 1 லிருந்து தொடங்க வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த இடத்தில் எண்ணுக்கு அடுத்தபடியாகக் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். பின் விரியும் மெனுவில் Restart Numbering என்ற பிரிவில் கிளிக் செய்து மூடவும். இவ்வாறு பட்டியலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புதிய எண்ணைத் தொடங்கலாம்.


நன்றி.தினமலர்.

நூர்
29-06-2010, 05:47 AM
கேள்வி: டாகுமெண்ட் தயாரிப்பில் ஈடுபடுகையில், அவ்வப்போது அவை தாமாகவே சேவ் செய்யப்படும் வழியை உருவாக்க முடியுமா? என்னிடம் யு.பி.எஸ். இல்லை.

–சி. நாகேந்திரன், அய்யம்பாளையம்


பதில்: மின்சார சப்ளை இல்லாமல், கம்ப்யூட்டர் நின்று போகும் நிலையில், நாமாக இறுதியாக சேவ் செய்த நிலையில் தான், டாகுமெண்ட்கள் கிடைக்கும். கண்ட்ரோல் + எஸ் அழுத்தி சேவ் செய்திட்டால் இதிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் டாகுமெண்ட் களைத் தயாரிக்கும் சுவராஸ்யத்தில் இதனை மறந்து போகிறோம். இது போன்ற சம்பவங்களிலிருந்து டாகுமெண்ட்டைக் காப்பாற்ற வேர்ட் தானாக சேவ் செய்திடும் வழி ஒன்றினைக் கொண்டுள்ளது.

இதனை செட் செய்திட Tools, Options சென்று Save டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைப் பார்க்கவும்.

‘ ‘Save AutoRecover info every’ என்னும் ஆப்ஷனுக்கு எதிரே உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதை உறுதி செய்திடவும். அதற்கு எதிராக ‘minutes’ என்னும் பாக்ஸ் இருப்பதைப் பார்க்கலாம்.

அதில் எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை நீங்கள் தயாரிக்கும் டாகுமெண்ட் சேவ் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ அதனை டைப் செய்திடவும். இதற்கு அதனுடன் தரப்பட்டிருக்கும் மேல் மற்றும் கீழ் அம்புக் குறிகளைப் பயன்படுத்தவும் செய்யலாம்.


கேள்வி: மானிட்டர் திரையில் தோன்றும் வெவ்வேறு பார்களைப் பற்றி சுருக்கமாக விளக்கவும். ஒன்றுக்கொன்று குழப்பமாக உள்ளது.

–ஆர். சுதாராணி, காட்டுமன்னார்கோவில்

பதில்: இதில் என்ன குழப்பம்? அடிக்கடி அனைத்தையும் பயன்படுத்தி வந்தால் பிரச்னையே இல்லை. உங்கள் மானிட்டர் திரையில் கீழாக நீளமாக நீலம் அல்லது சாம்பல் வண்ணத்தில் அமைந்துள்ளதுதான் டாஸ்க் பார்.

பொதுவாக இது கீழாகத்தான் அமைந்திருக்கும். இதனை திரையின் எந்தப் பக்கத்திலும் கொண்டு சென்று அமைக்கலாம்.

இதில் ஸ்டார்ட் பட்டன், சிஸ்டம் ட்ரே எனப் பல பிரிவுகளைக் காணலாம். இங்குதான் புரோகிராம் பட்டன்கள் அமர்கின்றன.

இதில் ஸ்டார்ட் பட்டனுக்கு அடுத்து குயிக் லாஞ்ச் டூல் பார் அமைகிறது. உடனடியாக புரோகிராம்களை ஒரே கிளிக்கில் இங்கு உள்ள ஐகான்களைக் கிளிக் செய்து பெற முடியும். அதனைத் தொடர்ந்தோ அல்லது கீழாகவோ நீங்கள் திறந்து இயக்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் டேப்கள் காட்டப்படும்.

வலது ஓரமாக இருப்பது சிஸ்டம் ட்ரே. இங்கு வால்யூம் ஐகான், நேரம், மற்றும் நீங்களாக செட் செய்த புரோகிராம்களின் ஐகான்கள் இடம் பெறும். இதற்கு மாறாக டூல் பார் என்பது புரோகிராம்களுக்குத் துணை புரியும் ஐகான்கள் கொண்ட சிறிய ஸ்ட்ரிப் ஆகும்.

இப்போதெல்லாம் இந்த டூல்பார்களில் எவை எவை வேண்டும் என நீங்கள் தீர்மானித்து மற்றவற்றைத் திரையில் தோன்றாமல் செய்துவிடலாம். அதே போல இந்த ஐகான்கள் அடங்கிய ஸ்ட்ரிப்பினை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று மற்ற டூல்பார்களுடன் ஒட்ட வைக்கலாம்.


கேள்வி: கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்போது, தானாக இயக்கப்படும் புரோகிராம்களை அறிய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எழுதி இருந்தீர்கள். எனக்குச் சில பிரச்னைகள் உள்ளன. மீண்டும் அதனைத் தர் முடியுமா?

–அ.மா. தேன்மொழி, காரைக்குடி, –சே. கமலேஷ் குமார், கோயம்புத்தூர்

பதில்: கம்ப்யூட்டர் மலரில் படித்தவுடன், அதனை நினைவு வைத்துக் கொள்ளும் வகையில் பதிந்து வைக்காமல் பலர், முன்பு எழுதியதனைக் கேட்கிறார்கள். அவற்றில் இந்த வேண்டுகோளும் ஒன்று. இது சற்று முக்கியமானதால் மீண்டும் தருகிறேன்.

சிஸ்டத்தில் இதனை செட் செய்திட முடியாது. இணையத்தில் கிடைக்கும் இலவச புரோகிராம் இதற்கானத் தீர்வினைத் தருகிறது.

இதனை http://www.nirsoft.net/utils/what_run_in_startup.html என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து, ஸிப் பைலாகக் கிடைப்பதால், விரித்துப் பதிந்து, பின் இயக்கவும்.

ஸ்டார்ட் அப் நடக்கும்போது உங்கள் கம்ப்யூட்டரில் இயக்கப்படும் புரோகிராம்கள், அவற்றின் தன்மை, கட்டளைச் சொற்கள், புரோகிராமின் பெயர், பைல் உருவாக்கப்பட்ட நாள், மாற்றம் ஏற்படுத்தப்பட்ட நாள், அந்த புரோகிராம் குறித்து ரெஜிஸ்ட்ரியில் உள்ள வரிகள் ஆகியவை காட்டப்படுகின்றன.

இவற்றில் எது தேவையற்றவையோ, அவற்றை நீக்கிடலாம். அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். நீங்கள் அழித்த பின்னரும் மீண்டும் ஒரு பைல் இயக்கப்படுகிறது என்றால், அதனை இந்த பயன்பாட்டின் மூலம் நீக்கிவிடலாம்.

இந்த புரோகிராமின் சிறப்பு, இதனை ஒரு யு.எஸ்.பியில் வைத்து இயக்கலாம். இதற்கான வழிமுறைகளை மேலே காட்டியுள்ள இணைய தளத்திலிருந்து பெறுங்கள்.

கேள்வி: நான் ரிலையன்ஸ் நெட் கனெக்ட் யு.எஸ்.பி. ஸ்டிக் ஒன்று வாங்கிப் பயன்படுத்தி வந்தேன். இப்போது அலுவலகத்தில் அதைக் காட்டிலும் வேகமாகப் பயன்படுத்தக் கூடிய ஸ்டிக் ஒன்று தந்துள்ளனர். இரண்டையும் பதிந்து பயன்படுத்த முடியுமா?

–சி. மதிராணி, கடலூர்

பதில்: தாரளமாகப் பயன்படுத்தலாம். இரண்டிற்கும் வேறு வேறு ஐகான்கள் தரப்படும். எனவே எந்த ஐகானுக்கு எந்த இன்டர்நெட் ஸ்டிக் என்று சரியாகப் பொருத்தி இணைப்பு பெற்று பயன்படுத்தலாம். மாற்றிக் கொடுத்தால், பிரச்னை ஒன்றும் நேராது. குறிப்பிட்ட ஸ்டிக் கம்ப்யூட்டரில் இணைக்கப் படவில்லை என்ற செய்தி கிடைக்கும்.


கேள்வி: நான் பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துகிறேன். அதன் ஹிஸ்டரி பட்டியலில் குறிப்பிட்ட நாட்கள், இணையத்தில் சென்ற தளங்கள் மட்டுமே காட்டப்படுகிறது. கூடுதலாகக் காட்டப்பட ஏதேனும் ஆட் ஆன் தொகுப்பு உள்ளதா?

–டி. தன்ராஜ் சேவியர், புதுச்சேரி

பதில்: இதற்கு ஆட் ஆன் தொகுப்பு தேவையில்லை. பயர்பாக்ஸ் பிரவுசரிலேயே இதற்கான செட்டிங்ஸை அமைத்துவிடலாம்.

1. பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து "Tools" கிளிக் செய்திடவும். இந்த பிரிவில் பின் “Oணீtடிணிணண்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

2. "Options" டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன் அதில் "Privacy" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3. இதில் உள்ள பிரிவுகளில் “ஏடிண்tணிணூதூ” என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு "Keep my history for at least" என்ற பிரிவில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இங்கு எத்தனை நாட்கள் நீங்கள் பார்த்த வெப்சைட்கள் நினைவில் வைத்துக் காட்டப்பட வேண்டும் என்பதனை என்டர் செய்திடவும்.

4. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் குறிப்பிட்ட நாட்களில் பார்த்த வெப்சைட் முகவரிகள் அனைத்தும் ஹிஸ்டரி பட்டியலில் காட்டப்படும்.


கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றைத் தயாரிக்கையில், அது தானாகவே, அடிக்கடி சேவ் செய்திடும் வகையில் அமைக்க என்ன செய்திட வேண்டும்?

–எஸ். ராஜேஷ், மதுரை

பதில்: எக்ஸெல் தொகுப்பில் டிபால்ட்டாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தானாக சேவ் செய்திடும் வசதி தரப்படும். இப்போதெல்லம், கிடைக்கும் மின்சார சப்ளையும், யு.பி.எஸ். சாதனமும் காலை வாரிவிடுவதால்,

இது போன்ற கேள்விகள் நிறைய கிடைக்கின்றன. கவலைப்பட வேண்டாம். எக்ஸெல் தொகுப்பைத் திறந்து கொண்டு, Options மெனு கிளிக் செய்து அதில் வரும் மெனுவில் Oணீtடிணிணண் என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

பின் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் குச்திஞு என்ற டேபில் கிளிக் செய்தால் வரும் சிறிய விண்டோவில் Save Auto recover in every என்று ஒரு வரியும் அதன் அருகே நிமிடங்களை செட் செய்திட எண்ணுடன் மேல் கீழ் அம்புக் குறிகளும் கிடைக்கும். இதில் 10 என்று இருப்பதை மாற்றுங்கள்.



கேள்வி: சர்ச் இஞ்சின்களில் கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் தவிர வெகுகாலமாக இயங்கி வரும், திறனுள்ள சர்ச் இஞ்சின் உள்ளதா? அதனைப் பயன்படுத்தலாமா?

–டி. சாமிராஜ், திருவண்ணாமலை

பதில்: சர்ச் இஞ்சின்கள் நிறைய உள்ளன. நீங்கள் கேட்டபடி வெகுகாலமாக, இன்றைக்கும் சிறப்பாக இயங்கும் சர்ச் இஞ்சின் என்றால் கோபர்னிக் டெஸ்க் டாப் சர்ச் சாதனத்தைக் கூறலாம்.

இதன் சிறப்பு, பலவகையான அவுட்லுக், அவுட்லுக் எக்ஸ்பிரஸ், இடோரா, தண்டர்பேர்ட் போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களின் இமெயில்களையும் தேடிக் தேடல் விடைகளைக் கொடுப்பதுதான்.

அதிகமான எண்ணிக்கையில் ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டுகளை வகைப்படுத்துகிறது. இன்டர்நெட் பிரவுசர் தொகுப்புகளின் புக்மார்க், பேவரிட்ஸ்

முகவரிகளையும் இன்டெக்ஸ் செய்கிறது. .doc, .pdf, .txt, rtf, .ppt போன்ற வழக்கமான அனைத்து பைல்களையும் தன் கையாளும் திறனுக்குள் கொண்டு சென்று பட்டியலிடுகிறது. இந்த புரோகிராம் தேவைப்படுபவர்கள் அணுக வேண்டிய தள முகவரி: http://www.copernic.com/en/products/desktopsearch/index.html

நன்றி.தினமலர் .

kavinele
04-07-2010, 08:01 AM
மிக்க நன்றி.

நூர்
21-07-2010, 09:57 AM
கேள்வி: ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் இலவச பதிப்பினை நான் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பயன்படுத்தி வருகிறேன்.

சென்ற வாரம் ஏவிஜி பதிப்பு 8 பற்றி படித்து, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகிறேன். ஆனால் அதன் பின்னர், என் கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்குகிறது. இதுதான் காரணமா? இதற்குத் தீர்வு என்ன?

–ச. பாஸ்கரன், சென்னை

பதில்: நன்றாகவே சிந்தித்து செயல்பட்டிருக்கிறீர்கள் என்பது தங்கள் நீண்ட கடிதத்தில் இருந்து தெரிகிறது. தங்களுடைய சந்தேகம் நூற்றுக்கு நூறு சரியே.

ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் பதிப்பு 8 இயங்குவதால், கம்ப்யூட்டரின் பொதுவான இயக்க வேகம் குறைகிறது. இந்த பதிப்பில் ஸ்பைவேர் பாதுகாப்பும் இணைந்துள்ள்து என்பதனைப் படித்த போது, நானும் இதனால் கவரப்பட்டேன்.

விண்டோஸ் எக்ஸ்பி + எஸ்பி 3 பேக் இயங்கிய கம்ப்யூட்டர் ஒன்றில் இன்ஸ்டால் செய்து இயக்கிப் பார்த்தோம். இந்த தொகுப்பு தயார் நிலையில் இயங்காமல் இருக்கையில் 34 எம்பி இடத்தை எடுத்துக் கொள்கிறது. முழுமையான ஸ்கேன் ஒன்றை இயக்குகையில், 80 எம்பி வரை இடம் தேவையாக உள்ளது.

மேலும் தன் சோதனையை முடிக்க, ஏவிஜி 7.5 பதிப்பைக் காட்டிலும் கூடுதலாக நேரம் எடுத்துக் கொள்கிறது. சில வாசகர்கள் இதனால் வெப் பிரவுசர்கள் மிகவும் குறைந்த வேகத்தில் செயல்படுவதாகவும் எழுதி உள்ளனர்.

அதற்குக் காரணம் இதில் உள்ள லிங்க் ஸ்கேனராகும் (Link Scanner) இதற்கு ஒரே தீர்வு தான் உள்ளது. ஏவிஜி பதிப்பு 8னை நீக்கிவிட்டு, பழைய பதிப்பு 7.5 ஐ நிறுவி இயக்கவும்.

* கேள்வி: நான் அவிரா இலவச ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்துகிறேன். இது என் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் என என் நண்பர் கூறுகிறார். அவர் வேறு ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்து கிறார்.

ஆனால் சில நேரங்களில் மட்டுமே ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை இயக்கத்திற்குக் கொண்டு வருகிறார். இது சரியா? சிஸ்டம் வேகத்தைக் கட்டுப் படுத்தாத ஆண்ட்டி வைரஸ் உள்ளதா?

–என். தேவசகாயம், புதுச்சேரி

பதில்: அவிரா, ஏவிஜி, காஸ்பெர்ஸ்கி, நார்டன், இசெட், அவாஸ்ட், கொமடோ என எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் பயன்படுத்தினாலும், அது உங்கள் சிஸ்டம் இயங்குவதன் வேகத்தினை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தத்தான் செய்திடும்.

ஆனால் இவை இல்லாமல் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது, ஆபத்தில் முடியும். நெட்வொர்க், இன்டர்நெட், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ் எனப் பல வழிகளில் நம் கம்ப்யூட்டருக்குள் ஸ்பைவேர், வைரஸ், ட்ரோஜன், வோர்ம்ஸ், பாட்ஸ் எனப் பலவகை வைரஸ்கள் வருகின்றன.

நீங்கள் குறிப்பிடும் நண்பர், இவற்றைப் பயன்படுத்துகையில் மட்டும், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை இயக்கத்திற்குக் கொண்டு வந்து பின் மூடும் பழக்கத்தினைக் கொண்டிருக்கலாம். ஆனால் இவ்வாறு எப்போதும் கவனமாக இருந்து இதனை மேற்கொள்ள முடியாது. எனவே கவலையற்ற கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு ஏதேனும் ஒரு ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை இயக்க நிலையில் வைத்திருப்பதே நல்லது.

சாலை ஓரங்களில், இருப்புப் பாதை அருகே உள்ள வீட்டில் வசிக்கும்போது, சத்தம் உள்ளதே எனத் தூங்காமலா இருக்கிறோம். நாளடைவில் பழகிவிடும். எனவே அட்ஜஸ்ட் செய்து பாதுகாப்பாகக் கம்ப்யூட்டரை இயக்குங்கள்.


* கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் சில வரிசைகளை ஹைலைட் செய்து காட்ட விரும்புகிறேன். இதற்கு என்ன வழி?

–கா. சுந்தர மூர்த்தி, நிலக்கோட்டை

பதில்: மிக எளிதான வழிகள் இருக்கின்றனவே. மவுஸ் மூலம் வழக்கமான முறையில் ஹைலைட் செய்திடலாம். மவுஸ் இல்லாமல் இரண்டு கீகளைப் பயன்படுத்தி நெட்டு வரிசையையும் படுக்கை வரிசையையும் ஹைலைட் செய்திடலாம்.

Ctrl + Spacebar அழுத்தினால் நீங்கள் எந்த செல்லில் இருக்கிறீர்களோ அந்த செல் ஹைலைட் ஆகும். Shift+ Spacebar கீகளை அழுத்தினால் எந்த செல்லில் இருக்கிறீர்களோ அந்த செல் இருக்கும் நெட்டு வரிசை ஹைலைட் ஆகும்.

பல வரிசைகளை இணைத்து ஹைலைட் செய்திட ஷிப்ட் மற்றும் ஆரோ(Shift + Arrow) கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.

* கேள்வி: நாம் காப்பி செய்யும் அனைத்தும் கிளிப் போர்டில் தான் காப்பியாகுமா? பெரிய படம் அல்லது இணைய தளப் பக்கத்தினைக் காப்பி செய்தால், முழுமையாகக் காப்பி ஆகுமா?

–இ.தனுஷ்கோடி, விருதுநகர்

பதில்:நாம் எதனைக் காப்பி செய்தாலும் அது கிளிப் போர்டில் தான் சென்று அமரும். ஒரு சிறிய எழுத்தானாலும், பெரிய படமானாலும், அருமையான கட்டுரை யானாலும், இணைய தளத்திலிருந்து காப்பி செய்யப்பட்ட படங்களும் டெக்ஸ்ட்டும் இணைந்த பகுதியானாலும் அது கிளிப் போர்டுக்குத் தான் செல்லும்.

வேர்டில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் ஏதேனும் ஒரு படம் அல்லது பெரிய அளவிலான டெக்ஸ்ட்டை காப்பி செய்துவிட்டு வேர்ட் தொகுப்பை மூடுங்கள். மூடும் போது “கிளிப் போர்டில் பெரிய அளவில் தகவல் உள்ளது;

அதனை வைத்திருக்கவா? அல்லது நீக்கிவிடவா?” என்று ஒரு செய்தி வரும். எனவே எது காப்பி செய்தாலும் அது கிளிப் போர்டில் தான் இருக்கும்.

* கேள்வி: அம்புக்குறி கீகளை அழுத்தாமல், மெயின் கீ போர்டில் உள்ள கீகளைப் பயன்படுத்தி எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், கர்சரை நான்கு புறமும் உள்ள செல்களுக்குக் கொண்டு செல்லலாம்?

–எம். கீர்த்திவாசன், விழுப்புரம்

பதில்:என்டர்(Enter) அழுத்த ஒரு செல் கீழாக இறங்குகிறது

* ஷிப்ட் + என்டர் (Shift + Enter) அழுத்த ஒரு செல் மேலாகச் செல்லும்

* டேப் (Tab) அழுத்த வலது பக்கம் ஒரு செல்லுக்கு கர்சரை நகர்த்தலாம்

* ஷிப்ட் + டேப் (Shift + Tab) அழுத்தினால் கர்சர் இடது பக்கம். ஒரு செல்லுக்கு நகரும்.

கீ போர்டின் மெயின் ஏரியாவை விட்டு கைகளை எடுக்காமல் பணியாற்ற விரும்புவோருக்கு இந்த பதில் உதவியாய் இருக்கும்.


* கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் சில வேளைகளில், டெக்ஸ்ட் செலக்ட் செய்திடுகையில், எழுத்து மற்றும் அதன் அளவு காட்டும் கட்டங்கள் காலியாகத் தெரிகின்றன. இது எப்போதாவது நடைபெறுகிறது. இதற்கான காரணம் என்ன? எதனைத் தவிர்க்க வேண்டும்?

–கா.இளவழகன், திருப்பூர்

பதில்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட் முழுவதும் ஒரே வகையான எழுத்து பயன்பட்டிருந்தால், அந்த எழுத்து மற்றும் அளவு காட்டப்படும். இடையே வேறு எழுத்துவகை இருப்பின், கட்டங்கள் காலியாகத்தான் இருக்கும். ஏனென்றால்,

இரண்டு எழுத்து வகையினை எப்படி வேர்ட் காட்ட முடியும்? இது ஒரு சிக்கல் இல்லை; எனவே இதற்கு தீர்வும் தேவையில்லை.


* கேள்வி: அண்மையில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் மேற்கொண்ட தீர்மானத்தின் படி, தமிழக அரசு யூனிகோட் குறியீட்டினை அரசு அதிகார பூர்வமாக ஏற்றுக் கொண்டதாகவும், அது குறித்து ஆணை வெளியிடப் பட்டுள்ளதாகவும் படித்தேன். இது எதற்காக?

–என். சந்தோஷ் குமார், பெங்களூர்

பதில்: கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டில் தமிழ் மொழிப் பயன்பாடு வெகுகாலமாக இருந்தாலும், பல எழுத்து வகைகளில் தமிழ் கையாளப்பட்டு வந்தது.

ஆங்கிலத்தில் ஏரியல் அல்லது வேறு எழுத்து வகையில் உருவாக்கப்பட்ட ஓர் ஆவணத்தை உலகின் எந்த மூலையில் இருக்கும் கம்ப்யூட்டரிலும் படித்து அறிய இயலும். ஆனால் தமிழில் உருவாக்கப் பட்டுள்ள ஆவணம் ஒன்றை அனுப்புகையில்,

அதனுடன் எந்த எழுத்துவகையில் அது அமைக்கப் பட்டதோ, அந்த எழுத்துவகைக்கான பாண்ட் பைலையும் சேர்த்தே அனுப்ப வேண்டியிருந்தது. அரசு அலுவலகங்களிலும் இந்த பரிதாபநிலை இருந்து வந்தது.

இப்போது அனைத்திற்கும் முடிவு செய்யப் பட்டுள்ளது. யூனிகோட் தமிழ், ஆங்கில எழுத்து வகைகளைப் போல அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் கிடைக்கும் ஒரு எழுத்து வகையாகும். இதனை அரசு ஆணை மூலம் அறிவித்ததனால், இனி அரசுடன் தொடர்பு கொள்கையில் இந்த எழுத்து வகையினை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அரசு தன் செயல்பாட்டிற்கு வாங்கும் சாப்ட்வேர் தொகுப்புகள், இதற்கு இணைவு உள்ளதாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் தமிழ் யூனிகோட் எழுத்துவகையில் ஆவணங்களை உருவாக்கும் வசதியினைக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது வரவேற்கத்தக்க ஒரு முடிவு.

உங்களுக்குத் தெரியுமா? நாளிதழ்களில் தமிழ் யூனிகோட் முறைக்கு, பல ஆண்டுகளுக்கு முன்பே மாறிய முதல் தமிழ் நாளிதழ் தினமலர்.

நன்றி தினமலர்.

நூர்
26-07-2010, 06:18 AM
http://img.dinamalar.com/data/uploads/E_1280117879.jpeg


கேள்வி : சில கீகளை மட்டும் ஏன் டாகிள் கீ என்று சொல்கிறோம். அதன் தன்மையை வைத்தா? அல்லது வேறு சிறப்பு பணி அந்த கீகளுக்கு உள்ளதா?

–எ.செந்தாமரை, திண்டிவனம்

பதில்: சில கீகளின் செயல்பாட்டினை வைத்து இந்த பெயர் அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கீ போர்டில் சில தனிப்பட்ட இயக்கங்களுக்கு என்று பல கீகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக ஆங்கிலத்தில் கேப்பிடல் எனப்படும் பெரிய எழுத்தில் அடிக்க கேப்ஸ் லாக்,

டெக்ஸ்ட் செருக இன்ஸெர்ட், ஸ்குரோல் லாக், நம்லாக் (Caps Lock, Insert, Scorll Lock, Num Lock) போன்றவற்றைச் சொல்லலாம்.

இவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் அந்த பயன் பாட்டை நிறுத்தவும் ஒரே கீ பயன்படுத்தப் படுகிறது. எடுத்துக் காட்டாக பெரிய எழுத்து வேண்டும் என்றால் Caps Lock கீயை அழுத்துகிறோம்.

பின்னர் வேண்டாம் என்றால் அதனையே மீண்டும் அழுத்துகிறோம். மேலே சொன்ன அனைத்து கீகளையும் இவ்வாறே செயல்படுத்துகிறோம். இந்த செயல்முறையில் பயன்படும் கீகளையே டாகிள் கீ (Toggle Key) என அழைக்கிறோம்.

கேள்வி: விண்டோஸ் 7 தொகுப்பில் உள்ள ஆன் ஸ்கிரீன் கீ போர்டினை எப்படிக் கொண்டுவந்து இயக்குவது? வழக்கமானவற்றில் இருந்து இது மாறுபட்டு இருப்பதாகப் படித்தேன். விளக்கவும்.

– ஆ. தமிழ்ச்செல்வி, மதுரை


பதில்: ஆம், விண்டோஸ் 7 இயக்கத்தில் இது சற்று மேம்படுத்தப்பட்டுக் கிடைக்கிறது. ஸ்டார்ட் அழுத்திப் பின் சர்ச் பாக்ஸில் ணிண்டு என டைப் செய்து என்டர் அழுத்த ஆன் ஸ்கிரீன் கீ போர்டு கிடைக்கும்.

இதில் வலது மூலையில் உள்ள பல கீகளில் பிரிண்ட் ஸ்கிரீன் கீயில் ஆப்ஷன்ஸ் என்பதனைக் கிளிக் செய்திடவும். இங்கு நியூமெரிக் கீ போர்டினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். ஒலியை இயக்கலாம், நிறுத்தலாம்.

விண்டோஸ் இயக்கம் தொடங்கும் போதே, இந்த கீ போர்டினையும் இயக்கத்திற்குக் கொண்டு வரும் வகையில் செட் செய்திடலாம். இன்னொன்று தெரியுமா! மவுஸ் கர்சரைக் கீகள் மீது கொண்டு சென்று கிளிக் செய்து டெக்ஸ்ட்டை அமைக்கலாம்.

கேள்வி: டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களைச் சற்றுப் பெரிதாக வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும் என்று திட்டமிடுகிறேன். இதற்கான வழிகளைத் தயவு செய்து கூறவும்.

–ஆ. மா. சிவக்கண்ணு, பொள்ளாச்சி


பதில்: கீழே தரப்பட்டுள்ள நடைமுறை மூலம், ஐகான்களைச் சிறிதாகவும், பெரிதாகவும் மாற்றலாம். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இதில் Appearance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். Item என்பதன் கீழ் கிடைக்கும் பட்டியலில் Icon என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

பின்னர் Size என்ற இடத்தில் கிடைக்கும் அம்புக் குறிகளைப் பயன்படுத்தி, ஐகான்களின் அளவைப் பெரிதாகவோ, சிறியதாகவோ அமைக்கலாம். மாற்றங்களை ஏற்படுத்தியபின், Apply என்பதில் கிளிக் செய்திடவும்.

இதே விண்டோவில் Font மற்றும் Size என்று இருப்பதனப் பார்க்கலாம்.
இன்னொரு மாற்றத்தையும் இதில் ஏற்படுத்தலாம். ஒவ்வொரு ஐகானுக்கிடையில் உள்ள தூரத்தினை மாற்றலாம்.

ஐகான்கள் திரையில் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தால், அவற்றை இன்னும் சற்று இடைவெளியில் அமைக்கலாம். Item என்பதன் கீழ் இரண்டு ஆப்ஷன்கள், Icon Spacing (Horizontal) மற்றும் Icon Spacing (Vertical), இருப்பதனைப் பார்க்கலாம்.

இவற்றைப் பயன்படுத்தி, ஐகான்கள் அமையும் இட வெளியை அமைக்கலாம்.
நீங்கள் விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 வைத்திருந்தால், மேலே சொன்ன வேலை எல்லாம் தேவையில்லை.

ஜஸ்ட், டெஸ்க் டாப் சென்று, கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறே, மவுஸின் ஸ்குரோல் வீலை உருட்டினால், படங்களும் எழுத்து அளவும் சிறிது, பெரிதாவதைக் காணலாம். அல்லது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், வியூ என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன் படுத்துகையில் கெஸ்ட் அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்தி என் வீட்டிற்கு வரும் நண்பர்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்த அனுமதித்தேன். இப்போது விண்டோஸ் 7 வைத்துள்ளேன். இதில் எப்படி கெஸ்ட் அக்கவுண்ட் உருவாக்குவது?

–கி. சியாமளா கிருஷ்ணன், சென்னை

பதில்: நல்ல கேள்வி. புது வீட்டில் குடி புகுந்தால் எழும் சந்தேகங்கள் போல இது உள்ளது. விண்டோஸ் 7ல் இந்த வசதி தரப்பட்டுள்ளது.

Start அழுத்தி, கிடைக்கும் சர்ச் பாக்ஸில் "Guest Account" என டைப் செய்திடவும். அதன் பின்னர் என்டர் அழுத்தவும்.

இப்போது Manage Accounts என்ற விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இதில் கிடைக்கும் Guest user என்ற ஐகானில் கிளிக் செய்திடவும்.

அடுத்த விண்டோவில் Turn On என்பதில் கிளிக் செய்திடவும். உடனேயே நீங்கள் விரும்பிய வகையில் கெஸ்ட் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு, அதனை நீங்கள், உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் பயன்படுத்த அனுமதிக்கலாம்.

இந்த அக்கவுண்ட் இருக்க வேண்டாம் எனில், மேலே கூறியதை மாற்றிச் செயல்படவும்.

கேள்வி: ஒருமுறை பயர்பாக்ஸ் தொகுப்பில் உள்ள ஸ்பெல் செக் வசதி குறித்து எழுதி இருந்தீர்கள். என் கம்ப்யூட்டரில் உள்ள பயர்பாக்ஸ் பிரவுசரில் இது செயல்படுகிறது. ஆனால் பல நண்பர்களின் கம்ப்யூட்டரில் இது செயல்படுவதில்லை. இது எதனால்? மாற்று வழி உண்டா?

–பேரா. சி.வேதராஜன், போரூர்


பதில்: நீங்களும், உங்கள் நண்பர்களும் பயன்படுத்தும் பயர்பாக்ஸ் பதிப்பு குறித்த தகவல்களைத் தரவில்லை. இருப்பினும் அண்மையில் பயர்பாக்ஸ் பிரவுசரில் ஸ்பெல் செக் வசதியினைத் தரும் ஆட் ஆன் தொகுப்பு ஒன்று குறித்து அறிய நேரிட்டது.

இதன் பெயர் Spellbound. இந்த ஆட் ஆன் தொகுப்பினை இணைத்துவிட்டால், படிவங்களில் நாம் தகவல்களை நிரப்புகையிலும், டெக்ஸ்ட் அமைக்கும்போதும் என அனைத்து இடங்களிலும் ஸ்பெல்லிங் செக் செய்து திருத்துகிறது.

தவற்றினைச் சுட்டிக் காட்டுகையில், வண்ணம் மற்றும் போல்டு வகை மாற்றிக் காட்டும் வகையில் இதனை செட் செய்திடலாம். இதனைப் பெற பயர்பாக்ஸ் பிரவுசரில் Tools>Addons எனச் சென்று Get Addons டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Browse All Addons என்பதில் கிளிக் செய்திடவும்.

இப்போது Mozilla Addons தளத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். சர்ச் பாக்ஸில் Spellbound என டைப் செய்து தேடினால் இது இருப்பது தெரியவரும். பின்னர் Add to Firefox என்பதில் கிளிக் செய்து, அது கேட்கும் தகவல்களைத் தந்து முடிக்கவும்.

கேள்வி: என் நிறுவனத்தில் பெரிய அளவில் ஒர்க்ஷீட் தயாரிக்கிறோம். இதில் குறிப்பிட்ட செல்லுக்கு அடிக்கடி சென்று கணக்கிட வேண்டியுள்ளது. திரையில் இது தெரியவில்லை என்பதால், அதற்குச் செல்ல அதிக நேரம் ஆகிறது. ஏதேனும் சுருக்கு வழி உள்ளதா?

–நா. கந்தசாமி, திருப்பூர்


பதில்:திரையில் காட்சி அளிக்காத ஒரு செல்லுக்குச் செல்ல என்ன செய்யலாம்? – இதுதான் உங்கள் கேள்வி, இல்லையா! இதற்கு Edit மெனு சென்று அதில் Go To அழுத்தலாம். அல்லது F5 கீ அழுத்தலாம்.

இப்போது Go To டயலாக் பாக்ஸ் கிடைக்கும். Reference என்ற சிறிய கட்டத்தில் செல்லின் அடையாள எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்தால் அந்த செல்லுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

நீங்கள் பயன்படுத்தும் செல்களை வரிசையாக Go To டயலாக் பாக்ஸ் நினைவில் வைத்திருக்கும். ஒரே செல்லை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் Go To பாக்ஸில் அதன் மீது டபுள் கிளிக் செய்தால் போதும். மீண்டும் மீண்டும் அதனை டைப் செய்திட வேண்டியதில்லை.

கேள்வி: மிக எளிதாக ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற, விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோ இரண்டு திறந்து பயன்படுத்துகிறேன். ஆனால் ஒன்றுக்குப் பின் ஒன்று அமைந்துவிடுவதனால், ஒவ்வொரு பைலை இழுத்துவிடுகையிலும் சிக்கல் ஏற்படுகிறது. வேறு சுருக்கமான வழிகளில் இதனை மேற்கொள்ள முடியுமா?

–என். ராஜேஷ் குமார், கோவை

பதில்: மானிட்டர் திரையின் நீள, அகலம் பொறுத்து இந்த பிரச்னை ஏற்படும். இதற்குத் தீர்வாக இணையத்தில் புரோகிராம் ஒன்று உள்ளது. FreeCommander என இதற்குப் பெயர்.

இதனை http://www.freecommander.com/fc_downl_en.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். fc_setup.zip என்ற பைல் கிடைக்கும். இதனை செட் அப் செய்து இந்த புரோகிராமைப் பதிந்து இயக்கலாம்.

இது விண்டோஸ் எக்ஸ்புளோரரின் இரண்டு விண்டோக்களை அடுத்தடுத்து பக்கமாகத் தருகிறது. இதனால் இரு வேறு டைரக்டரிகளில் உள்ள பைல்களை இழுத்து விடுவது எளிது.

இந்த புரோகிராமினை ஒரு பிளாஷ் ட்ரைவில் பதிந்து எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் கட்டாயம் இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

நன்றி.தினமலர்.

நூர்
02-08-2010, 10:23 AM
http://img.dinamalar.com/data/uploads/E_1280646249.jpeg

ஆகஸ்ட் 02,2010,

கேள்வி: இந்த கேள்வியை கம்ப்யூட்டர் மலர் பகுதிக்கு அனுப்பலாமா என்று தெரியவில்லை. ஆனால் கட்டாயம் பதிலளிக்க வேண்டுகிறேன். கருவுற்ற தாய்மார்கள் மொபைல் போனில் பேசுவதால், குழந்தைக்குப் பாதிப்பு இருக்குமா?

–ஆ.வேணி கிருஷ்ணன், சென்னை


பதில்: அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இது சாத்தியமே என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளின் மனநிலையில் மிகச் சிறிய அளவில் பாதிப்பு இருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தங்கள் குழந்தைகளின் நலன் கருதி, மொபைல் போனைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்கலாம். அல்லது ஸ்பீக்கர் போட்டு தள்ளிவைத்துப் பயன்படுத்தலாம். ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் பேசுவதனைத் தவிர்க்கலாம்.

கேள்வி: ஒரு பைல் அல்லது போல்டர் குறித்த ப்ராப்பர்ட்டீஸ் தெரிய என்ன ஷார்ட் கட் கீ அழுத்த வேண்டும்?

–எம். திருமுருகன், மதுரை


பதில்: அந்த பைல் அல்லது போல்டரைத் தேர்ந்தெடுத்து ஆல்ட்+என்டர் அழுத்தவும். உடன் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கிய திலிருந்து, ஏதேனும் இணைய தளம் சென்றால், அந்த பக்கத்தின் எழுத்துக்கள் மிகவும் சிறியனவாகக் காட்டப்படுகின்றன. இது எதனால் ஏற்படுகிறது? நான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பிரவுசர் பயன்படுத்துகிறேன்.

–டி.டி. வரதராஜன், சென்னை

பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, உங்கள் இணையப் பக்கத்தினைப் பெரிதாக்கி, எழுத்துக்களையும் பெரிதாக்கும் பார்க்க வழிகளைக் கொண்டுள்ளதே.

உங்கள் பிரச்னையை இரு வழிகளில் தீர்க்கலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் எழுத்து அளவைப் பெரிதாக்கலாம். இணைய உலா வருகையில், நீங்களாக ஸூம் செய்து பெரிதாக்கலாம். இவற்றில் இரண்டாவது ஆப்ஷன் மிக எளிதான ஒன்றாகும்.


இந்த இரண்டு வழிகளையும் இங்கு பார்க்கலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து, Tools கிளிக் செய்து, Internet Options தேர்ந்தெடுக்கவும்.

இதில் Appearance என்ற பிரிவில், Fonts என்பதில் கிளிக் செய்திடவும்.உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி, பெரிய அளவு ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்திடவும்.


அடுத்து ஸூம் செய்வது குறித்து பார்க்கலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளவும். பின்னர் கண்ட்ரோல் கீயினை அழுத்திப் பிடித்துக் கொள்ளவும். அடுத்து மவுஸின் ஸ்குரோல் வீலினை முன்னும் பின்னுமாக மெதுவாகச் சுழற்றினால்,

பக்கம் ஸூம் ஆகி, எழுத்துக்கள் பெரிதாவதனைக் காணலாம். அல்லது Control (Ctrl) பட்டனை அழுத்தியவாறு, ப்ளஸ் (+) அல்லது மைனஸ் (–) கீயினை அழுத்தலாம்.

இதற்கேற்ற வகையிலும், பக்கம் ஸூம் ஆகி எழுத்துக்கள், பெரிதாகவும், சிறியதாகவும் மாறுவதனைக் காணலாம்.

கேள்வி:இன்டர் நெட்டில் இலவசமாக நான் அனுப்பும் பைல்களை, வைரஸ் உள்ளதா என்று சோதித்தறிய தளம் உள்ளதா? அதற்கு எத்தனை நாள் காத்திருக்க வேண்டும்?

-எஸ். கமாலுதீன், கடலூர்

பதில்: இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும், இதில் சிறப்பாகச் செயல்படுவது http://www.virustotal. com என்ற முகவரியில் இருப்பதாகும். இந்த தளத்திற்கு நீங்கள் சந்தேகப்படும் பைலை அனுப்புங்கள்.

உங்கள் பைலை இந்த தளம் ஏறத்தாழ 40 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் சோதனை செய்து, அவற்றின் ரிப்போர்ட்களைக் காட்டுகிறது. அதிலிருந்து நீங்கள் அது வைரஸ் உள்ளதா என அறிந்து கொள்ளலாம். இதற்குக் கட்டணம் இல்லை. மேலும் உடனடியாக அறிந்து கொள்ளலாம்.

கேள்வி: ஸ்பேம் மெயில்கள் இந்தியாவில் தான் அதிகம் என்று படித்தேன். இது உண்மையா?

-டி.மாறன், மதுரை

பதில்: இந்த வகையில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. உலக அளவில் உருவாக்கப்படும் ஸ்பேம் மெயில்களில் 15.2% அமெரிக்காவிலிருந்து வருகின்றன. அடுத்த இடத்தில் இந்தியா 7.7% கொண்டு உள்ளது.

தொடக்கத்தில் ஸ்பேம் மெயில்கள் நாசம் விளைவிப்பதாகவோ, தொல்லை கொடுப்பதாகவோ இல்லாமல் இருந்தன. போனால் போகட்டும் என விட்டிருந்தோம். ஆனால் இப்போது இவை நம்மைச் சிக்க வைப்பதாகவே உள்ளன. குறிப்பாக பண ஆசை காட்டி ஏமாற்றும் மெயில்கள் ஏராளம்.

அண்மையில் தமிழ்நாட்டில் பல படித்தவர்கள் பல லட்சம் ஏமாந்த செய்தியை பத்திரிக்கை மற்றும் டிவி வழியாகத் தெரிந்து கொண்டிருப்பீர்களே. மெயில்கள் வழியாக வரும் விளம்பரங்களை நம்பாதீர்.

பணம் கிடைக்கும் என்று அறிவிக்கும் மெயில்களை அலட்சியப்படுத்துங்கள். உங்கள் நண்பரின் இமெயில் முகவரியிலிருந்து கூட இது போன்ற மெயில்கள் வந்தாலும் நம்ப வேண்டாம். உங்கள் நண்பரும் ஏமாந்திருக்கலாம்.

அல்லது அவருக்கே தெரியாமல், அவரின் மெயில் பாக்ஸிலிருந்து இது போன்ற மெயில் அனுப்பும் ஸ்பேம் மெயிலுக்கு அவர் இரையாகியிருக்கலாம்.

கேள்வி: வேர்டில் டாகுமெண்ட் எடிட் செய்வதற்காக டைப் செய்கையில், பல வேளைகளில், நான் டைப் செய்திடும் டெக்ஸ்ட் இடையே இடம் பிடிக்கிறது. சில வேளைகளில் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட்டை அழிக்கிறது. இதற்காக தனியே டைப் செய்து ஒட்ட வேண்டியதுள்ளது. இது எதனால்? வைரஸ் வேலையாக இருக்குமோ?

-நா. உ. மணி, தேவாரம்

பதில்: வைரஸ் இல்லை. டைப் செய்கையில், தற்செயலாக இன்ஸெர்ட் கீயினை அழுத்தி விடுகிறீர்கள். இதனை அழுத்துகையில் ஏற்கனவே இருந்த, இடைச் செருகலாக டெக்ஸ்ட் அமைக்கப்படும் வசதி மாறி விடுகிறது.

இதனால் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட் அழிக்கப்பட்டு புதிய டெக்ஸ்ட் அமைக்கப்படுகிறது. எனவே இது போல ஏற்படும் போது, மீண்டும் ஒரு முறை இன்ஸெர்ட் கீயினை அழுத்திவிடவும். கூடுமானவரை அடுத்த முறை இது போல அறியாமல் இன்ஸெர்ட் கீயினை அழுத்துவதைத் தவிர்க்கவும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். இதில் ஸ்டார்ட் மெனு மிகப் பெரிதாக எழுந்து வருவதற்குப் பதிலாகச் சிறியதாக வரும்படி அமைக்க முடியுமா? எனக்கு இது பிடிக்கவில்லை.

-கே. ஆஷா சந்தர், கோவை

பதில்: உங்களைப் போல பல வாசகர்கள் இதனைக் கேட்டுள்ளனர். சிலருக்கு இது போன்று பாப் அப் ஆகிவரும் கட்டங்கள் எல்லாம், சிறியதாக இருந்தால் தான் பிடிக்கிறது. (எனக்கும் தான்). விண்டோஸ் தான், தானாகத் தந்துள்ள அனைத்து விஷயங்களையும் சிறியதாக அமைத்துக் கொள்ளும் வழிகளைக் கொண்டுள்ளது.


உங்களுடைய டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதில் கிளிக் செய்திடவும். இனி Taskbar and Start menu Properties என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

இதில் இரண்டு டேப்கள் இருக்கும். ஸ்டார்ட் மெனு டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் Customize என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Customize Start menu என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

இதில் General என்ற டேப்பில் கிளிக் செய்து பின்னர் Small icons என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது மீண்டும் Taskbar and Start menu Properties என்ற பாக்ஸ் கிடைக்கும். Apply என்பதில் கிளிக் செய்து, பின் ஓகேயில் என்டர் தட்டி வெளியேறவும்.

உங்கள் விண்டோஸ் இயக்கத்தில் கிளாசிக் வியூ வைத்திருந்தால், மேலே சொன்ன அனைத்தையும் பின்பற்றவும். ஸ்டார்ட் மெனு ப்ராப்பர்ட்டீஸ் பாக்ஸில் Classic Start menu என்பதில் கிளிக் செய்து தொடரவும்.

இங்கு Customize கிளிக் செய்த பின், ஒரு வெள்ளை ஏரியா கிடைக்கும். இங்கு நீங்கள் கஸ்டமைஸ் செய்யக் கூடிய விஷயங்கள் குறித்த பட்டியல் ஒன்று கிடைக்கும். இங்கு Show Small Icons in Start menu என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் முன்பு கூறியது போல முடித்திடவும்.

நன்றி.தினமலர்.

leem762
02-09-2010, 08:47 AM
போல்டர் ஒன்றை பெயரின்றி உருவாக்குவது எப்படி?

நூர்
13-09-2010, 06:20 AM
http://img.dinamalar.com/data/uploads/E_1281250615.jpeg


ஆகஸ்ட் 09,2010

கேள்வி: விண்டோஸ் இயக்கத்துடன் வரும் நோட்பேட் தொகுப்பு இல்லாமல், வேறு நோட்பேட் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாமா?

– கா. நிர்மல் குமார், சென்னை


பதில்: நிச்சயம் பயன்படுத்தலாம். கூடுதல் வசதிகளுடன் கூடிய நோட்பேட் ++ என்ற புரோகிராம் கிடைக்கிறது. இது ஒரு இலவச புரோகிராம். http://notepadplusplus.org/ என்ற முகவரியில் இதனைப் பெற்றுக் கொள்ளலாம். தற்போதைய பதிப்பு எண் 5.7.

கேள்வி: கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். இதில் டவுண்லோட் செய்திடுகையில், எங்கு டவுண்லோட் செய்திட என்று கேட்காமல், புரோகிராம்கள் டவுண்லோட் செய்யப்படுகின்றன. டவுண்லோட் செய்யப்படும் இடத்தினைக் கேட்ட பின்னரே டவுண்லோட் செய்திடும் வகையில் இதனை எப்படி மாற்றுவது?

–சீ. க. இராசத் தமிழன், திண்டுக்கல்


பதில்: நல்ல ஐடியா. இதன் மூலம் நாம் டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தன்மைக் கேற்ப அவற்றை நாம் விரும்பும் ட்ரைவ்களில், போல்டர்களில் அவற்றைப் பதிவு செய்திடலாம். குரோம் பிரவுசரைத் திறந்து, அதன் வலது மூலையில் மேலாக இருக்கும் பைப் ரெஞ்ச் படத்தின் மீது கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Under the Hood என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் கீழாக Download location என்னும் இடத்திற்குச் செல்லவும்.

இங்கு உள்ள Browse பட்டனில் கிளிக் செய்து, நீங்கள் டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களை எங்கு பொதுவாக, சேவ் செய்திட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்த இடத்தை டவுண்லோட் செய்திடும் பைல்களுக்கேற்றபடி மாற்ற எண்ணினால், Ask where to save each file before downloading என்று இருக்கும் இடத்தில் உள்ள செக் பாக்ஸுக்கு எதிரில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

இனி நீங்கள் டவுண்லோட் செய்திட கட்டளை கொடுத்தவுடன்,மேலே பிரவுஸ் செய்து தேர்ந்தெடுத்த ட்ரைவ் அல்ல்து போல்டர் திறக்கப்பட்டு, சேவ் கட்டம் தோன்றும். வேறு இடத்தில் சேவ் செய்திடத் திட்டமிட்டால், நீங்கள் விரும்பும் இடத்தைத் தேர்வு செய்து சேவ் பட்டனை அழுத்தலாம்.

கேள்வி: விண்டோஸ் சர்வீஸ் பேக் 2க்கான சப்போர்ட் நின்றுவிட்டதாகவும், சர்வீஸ் பேக் 3 மட்டுமே இனி உதவி பெறும் என்று எச்சரிக்கை செய்திகளைப் படித்தேன். என் கம்ப்யூட்டரில் இந்த சர்வீஸ் பேக் 3 நிறுவப்பட்டுவிட்டதா என எப்படி அறிவது? இல்லை எனில் எப்படி அப்டேட் செய்வது? நான் ஒரிஜினல் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் அப்டேட் இயக்குகிறேன்.

–கா. கலா மூர்த்தி, ஆசிரியை, மதுரை


பதில்: ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட கடிதங்கள், பல தொலைபேசி அழைப்புகள் இந்த எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வந்துள்ளன. சற்று விரிவாகவே இதனைப் பார்ப்போம்.


அண்மையில் மேற்கொண்ட ஓர் ஆய்வு, விண்டோஸ் எக்ஸ்பி இயங்கும் கம்ப்யூட்டர்களில் 45% கம்ப்யூட்டர்கள் இன்னும் எஸ்.பி.3 அப்டேட்டைப் பெறவில்லை; எஸ்.பி.2 அப்டேட்டுடன் மட்டும் இயங்குவதாகத் தெரிவிக்கிறது.

எஸ்.பி.2க்கான சப்போர்ட் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தியால், பதற்றம் அடைய வேண்டிய தில்லை. சப்போர்ட் இல்லை என்றால், இந்த அப்டேட்டுக்குப் பின் தரப்படும் பாதுகாப்பு வளையங்கள் கிடைக்காது.

ஏற்கனவே எஸ்.பி.2 மூலம் தரப்பட்ட பாதுகாப்பு வளையங்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும்.
இனி நம் பிரச்னைக்கு வருவோம். எப்படி எஸ்.பி.3 அப்டேட் ஆகிவிட்டதா என அறிவது?

மிக எளிதான மற்றும் வேகமான வழி விண்டோஸ் கீயுடன் Pause/Break கீயை அழுத்துவதுதான். அல்லது மை கம்ப்யூட்டர் அழுத்தி அதில் மை ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இந்த இரண்டு வழிகளிலும்,

உங்கள் கம்ப்யூட்டரின் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இதில் ஜெனரல் டேப்பினைத் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் விண்டோவில், சர்வீஸ் பேக் எது உங்கள் கம்ப்யூட்டரில் அப்டேட் ஆகி இயங்குகிறது என்று காட்டப்படும். நீங்கள் தானாக அப்டேட் செய்திடும் வசதியினை இயக்கி வைத்திருந்தால், சர்வீஸ் பேக் 3 தானாக அப்டேட் ஆகியிருக்கும்.


இல்லை சர்வீஸ் பேக் 2 தான் உள்ளது என்றால், கீழ்க்காணும் நான்கு வழிகளில் ஒன்றைப் பின்பற்றி, எஸ்.பி. 3க்கு அப்டேட் ஆகவும். http://update.microsoft.com/ என்ற முகவரியில் உள்ள தளம் சென்று அங்கு காட்டப்படும் அப்டேட்டிற்கான வழிகளைப் பின்பற்றவும்.

இந்த தளம் செல்கையில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன் படுத்தவும். விண்டோஸ் மற்ற பிரவுசரை இந்த விஷயத்தில் ஏற்றுக் கொள்வதில்லை.


அடுத்து முன்பு குறிப்பிட்ட படி http://www.microsoft.com/downloads /details.aspx? FamilyId=5B33B5A85E76401FBE081E1555D4F3D4&displaylang=en என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

அங்கு Service Pack 3 Network Install என்ற பெயரில் ஒரு எக்ஸ்கியூட்டபிள் பைல் கிடைக்கும். இதன் பெயர் எப்படி இருந்தாலும், இதனை டவுண்லோட்செய்து, இயக்கினால், எஸ்பி 3 இன்ஸ்டால் செய்யப்படும்.

இந்த பைல் 300 எம்பி என்ற அளவில் உள்ளது. வேறு மொழிகளில் விண்டோஸ் பயன்படுத்துபவர்களுக்கான எஸ்.பி.3 அப்டேட் பைலையும் மைக்ரோசாப்ட் தருகிறது. இதற்கான தள முகவரி http://www.microsoft.com /downloads/details.aspx?familyid= D3F8F6AB84F140958709DF509B1BEE22&displaylang=en. இது 9 எம்பி என்ற அளவில் உள்ளது.


எந்த விண்டோஸ் கம்ப்யூட்டரி லும் இதனை மேற்கொள்ள, மைக்ரோசாப்ட் பைல் ஒன்றைத் தருகிறது. இதனை http://www.microsoft.com /downloads/details.aspx?FamilyId =2FCDE6CEB5FB44888C50FE22559D164E&displaylang=en என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இதனை பேக் அப் காப்பி போல வைத்துக் கொண்டு, எஸ்.பி.3 தேவைப்படும் எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம். மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து சிடியாகவே இதனைக் கட்டணம் செலுத்திப் பெறலாம்.

அதற்கான தள முகவரி https://om2.one.microsoft.com/opa /start.om?StoreID=D7A098F440344CCBA7859E890E6B4F5B&Locale Code=enus&NewTrans=1

கேள்வி: டெரா பைட் என்பது என்ன? இது எந்த அளவினைக் குறிக்கிறது?


–கா. சுந்தரம், திருப்பூர்


பதில்: டெரா (Tera) என்றால் ஒரு லட்சம் கோடி. 1 போட்டு 12 சைபர் போட்டுக் கொள்ளுங்கள். கிலோ என்றால் ஆயிரம் என்று உங்களுக்குத் தெரியும், இல்லையா! ஆயிரம் கிராம் ஒரு கிலோ கிராம் என்பது அன்றாட வழக்கு. மெகா (Mega) என்றால் பத்து லட்சம். கிகா என்றால் நூறு கோடி. 1 போட்டு 9 சைபர் போட்டுக் கொள்ளுங்கள்.

எனவே டெரா பைட் என்றால் ஒரு லட்சம் கோடி பைட்ஸ் டேட்டா ஸ்டோரேஜ் என்று உத்தேசமான கணக்கு என்று சொல்லலாம். மிகத் துல்லியமாகச் சொல்வது என்றால், இது 10,99,51,16,27,776 பைட்ஸ் ஆகும். இதற்கும் மேலாக உள்ள பீட்டா, எக்ஸா, ஸீட்டா மற்றும் யோட்டா பைட் குறித்து சில வாரங்களுக்கு முன் வந்த மலரைப் பார்க்கவும்.

நன்றி.தினமலர்.

நூர்
13-09-2010, 10:01 AM
ஆகஸ்ட் 16,2010

கேள்வி: மொபைல் போன் குறித்து படிக்கும்போது ஜெயில் பிரேக்கிங் என்று படித்திருக்கிறேன். இதற்கும் சிறைச் சாலைக்கும் என்ன சம்பந்தம்?

–மா. இளவரசன், மதுரை


பதில்: ஒரு சம்பந்தமும் இல்லை. டிஜிட்டல் சாதனம் ஒன்றில், அதனை வடிவமைப்பவர், தான் விரும்பும் வகையில் சில வரையறைகளை அமைத்திருப்பார். சாதாரணப் பயன்பாட்டில், அவற்றை மீறிப் பயன்படுத்த முடியாது.

மீறினால் வரும் விளைவுகள் பல வேளைகளில் அந்த சாதனத்தையே முடக்கிவிடும்.


மொபைல் போனைப் பொறுத்தவரை ஐ–போன் தொடர்பாகத்தான் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. ஐ–போனை,மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனம் வழியாகத்தான் வாங்க வேண்டும்.

அப்போது அந்த நிறுவனத்தின் சேவையை மட்டுமே பயன்படுத்தும்படி, ஆப்பிள் நிறுவனம் அதனை வடிவமைத்துத் தருகிறது. அமெரிக்காவில் ஏ.டி. அன்ட் டி நிறுவனம் இதனை விற்பனை செய்வதால், இந்த நிறுவன சேவை மட்டுமே இதில் மேற்கொள்ள முடியும்.

அங்கிருந்து கொண்டு வரப்படும் போனில், நம் இந்திய நிறுவன சிம் கார்டைப் பயன்படுத்திப் பேச முடியாது. இதனால் சேவை வழங்கும் நிறுவனம், குறிப்பிட்ட கட்டணத்தைக் கட்டாயமாக, போன் வாங்குவோரின் தலையில் சுமத்திவிடும் வாய்ப்பு உண்டு.


இந்த தடையை உடைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளே ஜெயில் பிரேக்கிங் என அழைக்கப்படுகிறது. இதில் ஈடுபடுபவர்கள், இதற்கான சாப்ட்வேர் புரோகிராம்களை எழுதி, போனில் பதிந்து தருவார்கள். அதற்கான கட்டணத்தையும் உங்களிடமிருந்து வசூல் செய்திடுவார்கள்.

ஆனால் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தரும் அப்டேட்டுகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இல்லை என்றால், அந்த தடையையும் முறியடிக்க பணம் செலுத்தி ஜெயில் பிரேக்கிங் சாப்ட்வேரினைப் பெற வேண்டும்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா! அமெரிக்க அரசாங்கம் அண்மையில் சில பிரிவினர், இது போன்ற போன்களில் ஜெயில் பிரேக்கிங் முயற்சிகளை மேற்கொள்ள சட்ட ரீதியாக அனுமதி அளித்துள்ளது.

கேள்வி: என் சகோதரரின் கம்ப்யூட்டரில், யூசர் அக்கவுண்ட் இடத்தில், சினிமா நடிகைகளின் படத்தை வைத்து, அந்த கம்ப்யூட்டரை என்னைப் பயன்படுத்தும்படி கொடுத்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளார். இதனை எப்படி நீக்குவது? புதிய வேறு படத்தை எப்படி போடுவது?

– பெயர் தராத வாசகி, விழுப்புரம்

பதில்: ஸ்டார்ட் பட்டன் அழுத்துங்கள். செட்டிங்ஸ் பிரிவு சென்று கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில், யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவிற்குச் செல்லவும்.

எந்த அக்கவுண்ட்டிற்கான படத்தை மாற்ற வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Change the picture என்பதில் கிளிக் செய்திடவும்.

இனி நீங்கள் விரும்பும் படத்தினை, அது இருக்கும் ட்ரைவ், போல்டர் சென்று தேர்ந்தெடுத்து, கிளிக் செய்திடவும். படம் ஹைலைட் ஆன பின்னர், பட்டனை அழுத்தவும். கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடாமலேயே, புதிய படம் இருப்பதைக் காணலாம்.

கேள்வி: இணையதளம் ஒன்றைப் பார்க்கையில், அது குறித்த செய்தியினை, நண்பருக்கு இமெயிலில் அனுப்ப என்ன செய்திட வேண்டும். அதே போல இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வேறு ஒரு தளத்திற்கான லிங்க்கினை, மெயிலில் அனுப்ப என்ன செய்திட வேண்டும்?

–செ.மா. துரை அரசன், சென்னை


பதில்: நல்ல கேள்வி. பலர் இது போன்ற சந்தர்ப்பங்களைத் தாங்கள் பிரவுஸ் செய்திடுகையில் சந்தித்திருப்பார்கள். தங்கள் நண்பர்களுடன் நல்ல விஷயங்களை, தாங்கள் ரசித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது நல்ல ஒரு பண்பாடு.

இதனை இரு வழிகளில் மேற்கொள்ளலாம். இரண்டுமே எளிதுதான். முதலில் அந்த தளத்திற்கான முகவரியை காப்பி செய்து மெயில் செய்தியில் ஒட்டிவிடும் வழி.

இதற்கு உங்கள் வெப் பிரவுசரின் அட்ரஸ் பார் சென்று, அட்ரஸ் முழுவதையும் அப்படியே காப்பி செய்து, பின்னர் இமெயில் புரோகிராமினைத் திறக்கவும். மெசேஜ் விண்டோ ஒன்றைத் திறந்து அங்கே, செய்திக்கான இடத்தில் பேஸ்ட் செய்திடவும்.

இதன் பின் நீங்கள் சேர்க்க வேண்டிய செய்தியை சேர்க்கலாம். நீங்கள் பேஸ்ட் செய்துள்ள முகவரிக்கான லிங்க்கில் கிளிக் செய்து பார்க்கச் சொல்லலாம்.


அடுத்ததாக, நீங்கள் ஒரு இணைய தளத்தில் இருந்து, அதில் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஓர் இணையப் பக்கத்திற்கான லிங்க் தரப்பட்டிருந்தால், அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Copy Shortcut AÀ»x Copy Link Location என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது அந்த லிங்க்கிற்கான முகவரி காப்பி செய்யப்பட்டிருக்கும். பின்னர், முன்பு கூறியதைப் போல, இமெயில் புரோகிராம் திறந்து, மெசேஜ் விண்டோவில் பேஸ்ட் செய்திடவும். இணைய தளம் ஒன்றில், படம் அல்லது போட்டோவிற்கான லிங்க் இருந்தாலும் அதற்கும் இதே வழிகளைப் பின்பற்றலாம். அல்லது படத்திலேயே அதற்கான முகவரி பதிக்கப்பட்டிருந்தால், அதன்மீது ரைட் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.

கேள்வி: இமெயில் முகவரியில் பெயர் தெரியாமல் அமைக்க முடியுமா? ஆனால் பெயராக ஒரு எழுத்தேனும் அமைக்க வேண்டும் என என் நண்பர் கூறுகிறார்.

–டி. இம்மானுவேல், காரைக்கால்


பதில்: அதாவது ஏதோ ஒரு கேரக்டர் பெயரளவில் இருக்க வேண்டும். ஆனால் அது மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. இதுதானே நீங்கள் கேட்பது. செய்திடலாம்.

பெயர் அமைக்கும் இடத்தில் கர்சரை வைத்துக் கொண்டு, ஆல்ட் கீ அழுத்தி, நம்லாக் பேடில் உள்ள கீகள் வழியாக 0160 என டைப் செய்திடவும்.

இதனை இமெயில் முகவரியாக அமைக்க வேண்டும் எனில், மேலே சொன்ன படி டைப் செய்து, தொடர்ந்து @.gmail.com என டைப் செய்து அமைக்கலாமே. இந்த இடத்தில் எந்த சர்வரின் பெயரையும் வைத்துக் கொள்ளலாம்.

மீண்டும் உங்கள் இமெயில் முகவரியை அமைக்கும்போதும், பயன்படுத்தும் போதும் நினைவாக ஆல்ட்+0160 கொடுக்க வேண்டும்.

நன்றி.தினமலர்.

நூர்
13-09-2010, 10:16 AM
ஆகஸ்ட் 23,2010

கேள்வி: என்னுடைய இமெயிலில் ஒரு பகுதியை மட்டும் பிரிண்ட் செய்திட வேண்டியுள்ளது. இதனை எப்படி பிரிண்டருக்கு பிரிண்ட் செய்திடக் கொண்டு போவது?

–வினுகிருபா, வில்லியனூர்


பதில்: எந்த பகுதியைப் பிரிண்ட் செய்திட விருப்பமோ, அதனை முதலில் செலக்ட் செய்திடவும். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனு மூலம் காப்பி செய்திடவும்.

இப்போது கிளிப் போர்டுக்கு உங்கள் டெக்ஸ்ட் வந்துவிட்டது. இதனை வேர்ட் புரோகிராம் அல்லது பேஜ் மேக்கர் போன்ற புரோகிராம்களில் பைல் ஒன்றைத் திறந்து பேஸ்ட் செய்திடலாம். பின் அந்த பைலை பிரிண்ட் செய்திடலாம். அல்லது

ஏற்கனவே இருக்கும் டாகுமெண்ட்டில் இதனைப் புது பக்கமாக பேஸ்ட் செய்து, அந்தப் பக்கத்தினை மட்டும் பிரிண்ட் செய்திடலாம். பிரிண்ட் செய்த பின்னர் அந்த டெக்ஸ்ட் தனி பைலாகத் தேவை இல்லை என்றாலோ, அல்லது பைல் ஒன்றில் இடம் பெறுவது தேவை இல்லை என்று கருதினாலோ, அதனை நீக்கிவிடலாம்.

கேள்வி: இணைய பக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், கீழாகவும் மேலாகவும் வேகமாகச் செல்ல எந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும்?

–சி.மேரிபுஷ்பம், பொள்ளாச்சி


பதில்: பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகளையே இதற்கும் பயன்படுத்தலாம். விரல்களை அதிகம் நகர்த்தாமல் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள ஒரு வழி சொல்லட்டுமா! ஸ்பேஸ் பாரை அழுத்துங்கள், இணைய தளத்தில் ஒரு பக்கம் கீழாக எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

ஷிப்ட் கீயையும், ஸ்பேஸ் பாரையும் சேர்த்து அழுத்துங்கள். ஒரு பக்கம் மேலே எடுத்துச் செல்லப்படுவீர்கள். கம்ப்யூட்டர் நம் விருப்பப்படி நடக்கும் செல்லக் குழந்தை.

கேள்வி: கம்ப்யூட்டர் இயங்குவதில் கெர்னல் (kernel) என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இப்போது வரும் வைரஸ் பிரச்னைகளிலும் இது குறித்து எழுதப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது என்று விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

–கம்ப்யூட்டர். அறிவியல் மாணவர்கள் சார்பாக –டி. நமசிவாயம், சிவகாசி


பதில்: பலவகையான கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் கெர்னல் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். இது ஒரு கரு போன்றது. ஹார்ட்வேர் அளவில் நடக்கும் டேட்டா கையாளுதல் செயல்பாட்டிற்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பின் செயல்பாட்டிற்கும் இடையே ஒரு பாலமாக, இது இயங்கும்.

சிஸ்டத்தின் திறன்களை, ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் செயல்பாடு களுக்கெனத் திறமையாக நிர்வாகம் செய்வது கெர்னல் ஒன்றின் பொறுப்பு.

சிஸ்டத்தின் திறன் என்பது சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட், ராம் நினைவகம், கீ போர்டு, மானிட்டர்,டிஸ்க் ட்ரைவ் மற்றும் பிரிண்டர் போன்ற உள்ளீடு, வெளியீடு சாதனங்கள் ஆகியவை ஆகும்.

இவற்றிலிருந்து கிடைக்கும் வேண்டுகோள் கட்டளைகளை, அவற்றின் நிலை அறிந்து, பெற்று இயக்குவது இந்த கெர்னலின் பொறுப்பு.


விண்டோஸ் இயக்கத்தில் இது எப்படி இடம் பெற்றுள்ளது என்றும் பார்க்கலாம். 1985ல், அப்போதிருந்த எம்.எஸ். டாஸ் இயக்கத்தின் ஆட் ஆன் தொகுப்பாகத்தான் விண்டோஸ் வெளியானது.

விண்டோஸ் தன் இயக்கத்திற்கு, டாஸ் இயக்கத்தின் மீது சார்ந்து இருந்ததால், விண்டோஸ் 95 இயக்கத்திற்கு முன் வந்தவை, ஆப்பரேட்டிங் சுற்றுவட்டம் (என்விரான்மென்ட்) (கவனிக்க: ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லை) என அழைக்கப்பட்டது.

இப்படியே விண்டோஸ் இயக்கம் 1980 முதல் 2000 வரை இருந்தது. பின்னர் படிப்படியாக கெர்னலிலேயே பயன்பாட்டு செயல்பாடுகளும் தரப்பட்டு, முழுமையான கெர்னல் இயக்கத்தில் விண்டோஸ் பயனாளர் பயன்பாடு அமைந்தது.

அண்மைக் காலத்தில் இந்த கெர்னல் செயல்பாட்டில், விண்டோஸ் 7 உட்பட, அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பிழை இருப்பதாக அறியப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அவற்றைத் தீர்க்கும் பேட்ச் பைல்களைத் தருவதில் ஈடுபட்டுள்ளது.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரில் புக்மார்க்கு களுக்கான போல்டரை உருவாக்க முடியுமா? அப்படியானால், அவ்வாறு புதியதாக உருவாக்கிய போல்டரில் புதிய புக்மார்க்குகளை இøணைக்க முடியுமா?

–கா. அறிவரசன், மதுரை

பதில்: பயர்பாக்ஸ் பிரவுசரில் புக்மார்க் போல்டரை உருவாக்குவது மிக எளிது. அதேபோல நீங்கள் விரும்புவது போல அதனை மாற்றி அமைப்பதும் எளிது.

இணையத்தில் நாம் விரும்பும் தளங்கள் பல வகைப்படும். கல்வி, ஆராய்ச்சி, விளையாட்டு, பாடல்கள், தொழில் நுட்ப தளங்கள் என இவை பலவாரியாக இருக்கும். இவை அனைத்தையும் ஒரே போல்டரில் போட்டு வைத்தால் தேடிப் பெறுவது கடினம். இங்குதான் போல்டர்கள் நமக்கு உதவுகின்றன.


பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து கொள்ளவும். பின்னர் Bookmarks என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவில் Organize Bookmarks என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எங்கு நீங்கள் போல்டரை இணைக்க வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளவும்.

Bookmarks என்பதில் ஒரு முறை கிளிக் செய்தவுடன், நீங்கள் போல்டரைக் காண வேண்டும் என்றால், Bookmark Menu என்பதில் ஒருமுறை கிளிக் செய்திடவும். இங்கு ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் New Folder என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இதற்கு நீங்கள் அடையாளம் காணும் வண்ணம் பெயர் ஒன்றைக் கொடுக்கவும். அதன் பின் Add என்பதில் கிளிக் செய்திடவும். புதிய புக்மார்க் ஒன்றை, நீங்கள் உருவாக்கிய புதிய போல்டரில் இணைக்க வேண்டும் எனில், போல்டரில் ரைட் கிளிக் செய்து, New Bookmarkஎன்பதில் கிளிக் செய்திடவும்.

இதில் உள்ள Name பீல்டில் இணைய தளத்தின் பெயரை (எ.கா Dinamalar ) இடவும். பின்னர் Locationபீல்டில் இணைய தள முகவரியை (எ.கா http://www.dinamalar.com) டைப் செய்திடவும். Keyword என்னும் இடத்தில் நீங்கள் அடையாளம் காணக் கூடிய சிறிய சொல்லை இடலாம். (எ.கா.malar). இதன் பின் என்டர் தட்டவும்.

இப்போது நீங்கள் அந்த இணைய தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். Load this bookmark in the sidebar என்பதற்கு முன் உள்ள செக் பாக்ஸில் கிளிக் செய்தால், View – Sidebar – Bookmarksஎன்று செல்கையில் இந்த புக்மார்க் கிடைக்கும்.


ஏற்கனவே நீங்கள் புக்மார்க் செய்தவற்றின் பெயர்களை எப்படி போல்டருக்குக் கொண்டு வருவது என்று பார்க்கலாம். Bookmarks என்பதில் கிளிக் செய்து பின்னர் Organize Bookmarks என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி புக்மார்க்குகளை அப்படியே இழுத்துச் சென்று போல்டரில் விடலாம்.

ஒரே நேரத்தில் பல பழைய புக்மார்க்குகளைப் புதிய போல்டரில் கொண்டு சேர்க்க, கண்ட்ரோல் கீ அழுத்தியவாறே, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் போல்டருக்குக் கொண்டு செல்லவும்.

கேள்வி: வேர்ட் தொகுப்பில் மேலாக உள்ள டூல்பாரில் (பைல், எடிட்,வியூ போன்றவை இருப்பது) உள்ள மெனு பெயர்களில், சில எழுத்துக்களில் மட்டும் அடிக்கோடு இடப்பட்டுள்ளது ஏன்?

–ஆ. சந்த்ரு, விழுப்புரம்

பதில்: நீங்கள் குறிப்பிடுவது சரிதான். File என்பதில் F எழுத்திலும், Editஎன்பதில் E எழுத்திலும் அடிக்கோடு இடப்பட்டுள்ளது. அவை அந்த மெனுவின் ஷார்ட் கட் எழுத்தைக் குறிக்கின்றன.

Alt கீயுடன் இந்த எழுத்துக்களை அழுத்தினால், அந்த மெனுக்கள் விரியும். எடுத்துக்காட்டாக View என்ற மெனு பெற Alt+V அழுத்தினால் போதும்.

கேள்வி: பைல்களை அழிக்கும்போது, அவை ரீசைக்கிள் பின்னுக்குச் செல்கின்றன. வேண்டாம் எனில், ஷிப்ட் அழுத்தியவாறு டெலீட் கொடுத்தால், அங்கு செல்லாமல் அழிந்து போகின்றன. நான் அழிக்கும் பைல்கள், எனக்கு உறுதியாகத் தெரியும் பட்சத்தில், எப்போதும் அது ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என்று அமைக்க முடியுமா?

–கா. மேரி ரெஜினா, ஸ்ரீவில்லிப்புத்தூர்.

பதில்: அதாவது பைலை அழிக்கும்போது அது, அழிக்கப்பட்டே ஆக வேண்டும். ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என்று விரும்புகிறீர்கள். அதனாலென்ன! தாராளமாக செட் செய்திடலாம்.

ரீசைக்கிள் பின் ஐகான் டெஸ்க்டாப் திரையில் உள்ளதல்லவா? அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள்.

இப்போது ரீசைக்கிள் பின் ப்ராப்பர்ட்டீஸ் என்று ஒரு திரை காட்டப்பட்டு, அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க் பிரிவுகள் அனைத்தும், அவற்றின் எழுத்து மற்றும் பெயருடன் தெரியவரும்.

இதில் Use one setting for all drivesஎன்று ஒரு ரேடியோ பட்டனுடன் கூடிய வரி இருக்கும். இதனைத் தேர்ந்தெடுங்கள்.

இப்போது அதன் கீழாக, ஒரு சிறிய கட்டத்துடன், Do not move files to the Recycle Bin. Remove files immediately when deletedஎன்று இருக்கும்.

இதனைத் தேர்ந்தெடுக்க டிக் அடையாளம் அமைத்து ஓகே கொடுக்கவும். இனி ஜாலியாக பைல்களை அழிக்கவும். அது குப்பைத் தொட்டிக்குப் போகாது. ஆனால் எதற்கும் ஒருமுறைக்கு இருமுறை இந்த ஆப்ஷனை மேற்கொள்ளும் முன் யோசிக்கவும்.

நன்றி தினமலர்.

நூர்
17-09-2010, 02:10 PM
ஆகஸ்ட் 30,2010

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். இந்த சிஸ்டம் பூட் ஆகும்போது, பவர் பட்டனை அழுத்தியவுடன், மியூசிக் ஒலி கேட்கிறது. இதனை நிறுத்த முடியாதா?

–கா. முத்துசாமி, மதுரை

பதில்: நிறுத்திவிடலாம். அந்த அருமையான இசை ஒலி உங்களுக்குப் பிடிக்கவில்லையா? ஓகே. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை நீங்கள் வெளியிட வேண்டாம்.

இதனை நிறுத்த, Start பட்டன் அழுத்தி, சர்ச் பாக்ஸில் mmsys.cpl என டைப் செய்திடவும். இனி என்டர் தட்டவும். இப்போது சவுண்ட் டயலாக் விண்டோ கிடைக்கும். இதன் கீழாக ஒரு பாக்ஸ் Play windows Startup sound என்ற வரியுடன் இருக்கும்.

இந்த பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பின்னர் ஓகே அழுத்தி வெளியேறவும். இனி உங்கள் விண்டோஸ் திறக்கும்போது, கம்ப்யூட்டரில் சத்தம் கேட்காது.

பின்னொரு நாளில் அந்த மியூசிக் வேண்டும் என நீங்களோ, உங்கள் வீட்டில் உள்ளவர்களோ கேட்டால், மீண்டும் இதே போல் சென்று, பாக்ஸில் டிக் அடையாளத்தினை அமைத்துவிடவும்.

கேள்வி: கூகுள் மெயில் அக்கவுண்ட் வைத்துள்ளேன். மெயிலில் டெக்ஸ்ட்டில் பல பார்மட்டிங் வேலைகளை (அடிக்கோடு, அழுத்த எழுத்து) செய்திட முடிகிறது. ஆனால் கூகுள் டாக்கில் இதே போல் செய்திட முடிவதில்லையே? இதற்கு என்ன செய்திட வேண்டும்?

-சீ. நரேந்திரன், சென்னை

பதில்: உங்கள் டெக்ஸ்ட்டை போல்ட் செய்திட வேண்டுமென்றால், அந்த சொல்லுக்கு முன்னால் ஆஸ்டெரிஸ்க் என்னும் நட்சத்திரக் குறியீட்டினை அமைக்கவும்.

எ.கா. *dinamalar*சாய்வெழுத்து எனில், அண்டர் ஸ்கோர் என்னும் அடிக்கோடு இட வேண்டும். எ.கா. _dinamalar_ கூகுள் சேட் விண்டோவிலும் இதனை மேற்கொள்ளலாம்.

கேள்வி: பிளாஷ் ட்ரைவ்கள் எத்தனை நாட்களுக்கு வரும்? இதனை நம்பி, பேக் அப் ட்ரைவாகப் பயன்படுத்தலாமா?

-சி. தமிழரசி, மதுரை


பதில்: நல்ல கேள்வி. நாம் எதனை விலை கொடுத்து வாங்கினாலும், பல ஆண்டுகள் அது நன்றாக நமக்குப் பயன்படும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறோம்.

இந்த நம்பிக்கை பொய்த்துப் போகும்போது, வருத்தப்படுகிறோம். எந்தப் பொருளும் இயங்கா நிலையை நிச்சயம் அடையும். எனவே ஒன்றைப் பற்றி புரிந்து கொண்டு, எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது நல்லது.

ஒரு பிளாஷ் ட்ரைவ் அழியாத நினைவகமாகும். அதாவது மின் ஓட்டம் செலுத்தாத நிலையிலும், அதில் பதியப்பட்ட டேட்டா அப்படியே இருக்கும்.

இப்போதெல்லாம் 250 எம்பி என்ற அளவிலிருந்து 80 ஜிபி வரையிலான கொள்ளளவில், பிளாஷ் ட்ரைவ்கள் கிடைக்கின்றன.

பிளாஷ் ட்ரைவ்கள் இயங்காமல் போனால், அதிலுள்ள டேட்டாவினை மீண்டும் பெற முடியும் என்பது நமக்கு நம்பிக்கை தரும் செய்தியாகும்.

நீங்கள் உங்கள் பிளாஷ் ட்ரைவினை டேட்டாவினை பேக் அப் செய்திட மட்டும் பயன்படுத்தினால், அதனை உலர் சீதோஷ்ண நிலை உள்ள இடத்தில், அதன் மூடியைக் கொண்டு மூடி வைத்துவிடுவதே நல்லது.

இந்த வகையில் மூடி உள்ள பிளாஷ் ட்ரைவ் அதிக பாதுகாப்பினைத் தரும். மூடி இல்லாமல், பிளாஷ் ட்ரைவின் தலைப் பகுதியை வெளியே தள்ளி, உள்ளே இழுத்துப் பயன்படுத்தும் பிளாஷ் ட்ரைவ்களும் உள்ளன.

இவற்றில் தூசு, நீர் புகும் வாய்ப்புகள் இருப்பதால், பேக் அப் பயன்பாட்டிற்கு மூடி உள்ள பிளாஷ் ட்ரைவினையெ பயன்படுத்துவது நல்லது. குடும்ப போட்டோக்கள் போன்ற, மீண்டும் அமைக்க முடியாத டேட்டாக்களுக்கான பேக் அப் அமைப்பதாக இருந்தால், வெவ்வேறு ட்ரைவ்களில் வைத்துக் கொள்வது நல்லது.

கேள்வி: கீ போர்டைப் பயன்படுத்தி, மவுஸ் பாய்ண்ட்டரைக் கண்ட்ரோல் செய்வது எப்படி என விளக்கவும்.

–நா.கதிரேசன், விழுப்புரம்


பதில்:இடது புறம் உள்ள ஷிப்ட்+ஆல்ட்+நம்லாக் கீகளை முதலில் அழுத்தவும். இப்போது மவுஸ் கீஸ் என்ற விண்டோ கிடைக்கும். இதில் யெஸ் என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இதை அழுத்தியவுடன், மவுஸ் கீகள் இயங்கத் தொடங்கிவிடும்.

இப்போது கீ8 அழுத்தினால் கர்சர் மேலே செல்லும். கீ2 அழுத்தினால், கீழே செல்லும். 6 அழுத்தினால் வலது புறமும், 4 அழுத்தினால் இடது புறமும் செல்லும்.

எதன் மீதாவது கர்சரை வைத்து கிளிக் செய்திட வேண்டும் என்றால், கீ 5 அழுத்தவும். டபுள் கிளிக் செய்திட + கீ அழுத்தவும். ரைட் கிளிக் செய்திட – கீ (மைனஸ்) அழுத்தவும்.

எதனையாவது இழுக்க வேண்டும் என்றால், அந்த ஆப்ஜெக்ட் அல்லது ஐடெம் மீது கர்சரைக் கொண்டு சென்று என்டர் கீ அழுத்தவும். பின் அதனை விட்டுவிட டெலீட் கீ அழுத்தவும்.

மீண்டும் மவுஸ் கீகள் இயக்கத்தினை நிறுத்த, இடது ஷிப்ட்+ஆல்ட்+நம் லாக் கீகளை அழுத்தவும்.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பை பிரவுசராகப் பயன்படுத்துகிறேன். இரவில் இதனை மூடிவிட்டுப் பின் பகலில் திறக்கும்போது, நான் இறுதியாகப் பார்த்த வெப்சைட்கள் அந்த அந்த டேப்களில் கிடைக்குமா? இதனை எப்படி செட் செய்திட வேண்டும்?

-கா. பாக்யராஜ், கோவை


பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோவினைத் திறந்து கொள்ளவும். விண்டோவின் மேல் வலது புறத்தில் உள்ள டூல்ஸ் மீது கிளிக் செய்திடவும். அங்கு Reopen Last Browsing Session என்று இருப்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த டேப்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.

கேள்வி: ஆன்லைனில் ஆங்கிலம் தமிழ் அகராதி உள்ளதா? குழப்பம் இன்றி பொருள் தருமா?

–எ.மோனிகா ரமேஷ், திருமயம்


பதில்: குழப்பம் என எதனை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழ் எழுத்துவகையில் ஏற்படும் குழப்பத்தினை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

இப்போதெல்லாம், இத்தகைய நூல்கள் அனைத்தும் யூனிகோட் தமிழில் கிடைப்பதால், உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி அல்லது அதற்குப் பின் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருந்தால், குழப்பம் எதுவும் இருக்காது.

கீழே சில தள முகவரிகள் தருகிறேன். முயற்சிக்கவும்.


1.http://www.thozhiln utpam.com/chollagaraathi .htm
2. http://www.tamilvu.org/
l ibrary/o33/htm l/o 3300001.htm
3. http://www.tcwords.com
4. http://www.tamildict.com/deutsch.
php? menu=new&action=new
5. http://ta.wiktionary.org/wiki/ /


மேற்கண்டவற்றுள் எது உங்களுக்கு இலகுவாகவும் நீங்கள் விரும்பும் வகையிலும் உள்ளதோ, அதனையே பின்பற்றலாம்.

கீழ்க்காணும் தளத்தில், மொபைல் போனுக்கான ஆங்கிலம் தமிழ் அகராதி ஒன்று வெளியாக இருப்பதாக, விளம்பரம் தரப்பட்டுள்ளது.

இது வெளிவரும் பட்சத்தில், மொபைல் போனிலேயே அகராதியினை வைத்துக் கொள்ளலாம்.http://www.tamilcube. com/dictionary/mobile

கேள்வி: வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் அமைக்கையில், பக்க இடைவெளியில் சில பாரக்கள் பிரித்துக் காட்டப்படுகின்றன. இவற்றைச் சேர்ந்தவாறே அமைக்க முடியுமா? என்ன செட் செய்திட வேண்டும்?

–எஸ். பாஸ்கரன், காரைக்கால்


பதில்: நீங்கள் டைப் செய்து டாகுமெண்ட் அமைத்தவுடன் பக்க குறுக்குக் கோடு பாராக்களைப் பிரித்திருந்தால் அந்த பாராக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அல்லது அனைத்து பாராக்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

பின் இதில் மவுஸை வைத்து வலது பக்கம் கிளிக் செய்திடவும். விரியும் மெனுவில் “Paragraph” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது பல டேப்கள் அடங்கிய விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் “Line and Page Breaks”என்ற டேபைக் கிளிக் செய்திட வும்.

கிடைக்கும் பிரிவில்“Keep lines together” என்ற இடத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து விண்டோவினை மூடவும். இனி பாராக்கள் நீங்கள் கேட்ட படி ஒரே பக்கத்தில் அமையும்.

நன்றி.தினமலர்.

நூர்
17-09-2010, 02:46 PM
செப்டம்பர் 06,2010.


கேள்வி: என் நண்பர் தன்னுடைய வேர்டில் உருவான பைலை காப்பி செய்து அனுப்பினார். ஆனால் என் கம்ப்யூட்டரில் உள்ள வேர்டில் திறக்க மறுக்கிறது.

இது பழைய வேர்ட் 2003. நண்பரிடம் உள்ளது வேர்ட் 2007. என்ன தீர்வு? நண்பர் வெளிநாட்டுக்கு வேறு சென்றுவிட்டார்.

–கே.ஜானகிராமன், புதுச்சேரி

பதில்: நண்பர் வெளிநாடு போனால் என்ன! வேர்ட் 2007 உள்ள ஒரு கம்ப்யூட்டரில், நண்பர் கொடுத்த பைல்களைத் திறக்கவும்.

பின் அதே வேர்ட் தொகுப்பில் Save As கட்டளை கொடுத்து, பெயர் விண்டோ உள்ள இடத்தில் வலது பக்கம் உள்ள கீழ் அம்புக் குறியினை அழுத்தவும்.

அதில் வேர்ட் 2003 மற்றும் முந்தைய வேர்ட் பார்மட்டில் சேவ் செய்திட ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். இதில் “.doc” என்ற துணைப்பெயருடன் பைலை சேவ் செய்திட ஆப்ஷன் கிடைக்கும்.

இதனைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் புரிந்து கொள்ளும்படி ஒரு பெயர் கொடுத்து சேவ் செய்திடவும். பின் இந்த பைலை காப்பி செய்து, உங்கள் வீட்டுக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தவும்.

நீங்கள் நன்றாகக் கவனித்திருந்தால், வேர்ட் 2007 தொகுப்பில் சேவ் செய்யப்பட்ட பைலின் துணைப் பெயர் “.docx” என்று இருக்கும்.

கேள்வி: நான் பத்திரிக்கை ஒன்றுக்கு டாகுமெண்ட் தயாரித்து கொடுக்கிறேன். வழக்கமான ஐந்து பக்க டாகுமெண்ட்டில், இரண்டு மற்றும் மூன்றாம் பக்கங்களில் மட்டும் டெக்ஸ்ட் இரண்டு காலங்களில் வர வேண்டும்.

இதனை மட்டும் எப்படி செட் அப் செய்வது?

–சி.நாகராஜன், அருப்புக் கோட்டை


பதில்: டாகுமெண்ட்டைத் திறந்து, எந்த டெக்ஸ்ட்டை, காலம் பத்திகளில் அமைக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

Format மெனுவில் இருந்து Column என்பதைத் தேர்ந் தெடுக்கவும். இப்போது Column Dialog Box கிடைக்கும். Number of Columns பீல்டில்,

எத்தனை காலம் என்பதனைக் குறிப்பிடவும். அடுத்து Apply To பாக்ஸில், Selected Text என்பது தேர்ந்தெடுப்பதனை உறுதி செய்திடவும்.

பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் விரும்பிய டெக்ஸ்ட் விரும்பியபடி, காலம் பத்திகளில் அமைக்கப்பட்டிருக்கும்.

கேள்வி: இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் சில வேளைகளில் முழுத் திரையையும் அதற்கு மட்டும் பயன்படுத்த விரும்பி, உங்கள் டிப்ஸ் படி சில கீகளை அழுத்திப் பெறுகிறேன். ஆனால் கீழே இருக்கும் டாஸ்க் பாரினை மறைக்க என்ன செய்யலாம்? எனக்கு முழுத் திரையும் வேண்டும். என்னுடைய சிஸ்டம் எக்ஸ்பி.

–டி.ஆர். சோமு, விழுப்புரம்


பதில்: அதனையும் மறைக்கலாம். டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். எழுந்து வரும் மெனுப்பட்டியலில் Properties என்பதில் இடது கிளிக் செய்திடவும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

இதன் தலைப்பு Taskbar and Start Menu Properties என்று இருக்கும். இதில் இரண்டு டேப்கள் தரப்பட்டிருக்கும். இதில் Taskbar என்ற டேப்பை செலக்ட் செய்து கிளிக் செய்திடவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் ஐந்து விருப்பத் தேர்வுகள் கிடைக்கும்.

மூன்றாவதாக Keep the taskbar on top of windows என்று ஒன்றைப் பார்க்கலாம். இதன் முன் உள்ள பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு, பின்னர் Apply என்பதில் கிளிக் செய்திடவும்.

அதன் பின் OK கிளிக் செய்திடவும். இப்போது சென்று பாருங்கள். நீங்கள் டெஸ்க் டாப்பில் இருந்தால் தான், டாஸ்க்பார் உங்களுக்குத் தோற்றமளிக்கும். நீங்கள் பிரவுசரைப் பயன்படுத்தும் போதோ, கடிதம் எழுதும் போதோ, டாஸ்க்பார் தெரியாது.

கேள்வி: கிகி பைட் என்று ஒரு அளவு உள்ளதா? இது மிகவும் துல்லியமாக பைட்ஸ் அளவைக் கூறுவதாக என் உயர் அதிகாரி கூறுகிறார். சற்று தெளிவு படுத்தவும்.

–கா. தமிழ்ச் செல்வி, மதுரை


பதில்: உங்கள் கேள்வையைப் படித்த பலருக்கு, பெயர் எப்படி துல்லியம் இல்லாமல் இருக்கும்? அதென்ன கிகி பைட் என்ற கேள்விகளெல்லாம் மனதில் ஓடும்? இல்லையா? இதோ கீழே படியுங்கள்.

கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, கிலோ பைட், மெகா பைட், கிகா பைட், டெரா பைட் என்பது எல்லாம் நாம் அறிவோம். இவை முறையே, 1024 பைட்ஸ், 1024 கிலோ பைட்ஸ், 1024 மெகா பைட்ஸ் மற்றும் 1024 கிகா பைட்ஸ் என்ற அளவுகளைக் குறிக்கின்றன.

ஆனால் இது சரியான பெயர் இல்லையே! கிலோ என்பது 1000 என்ற எண்ணைத்தானே குறிக்கும். பின் எப்படி 1024க்கு கிலோ எனப் பெயர் சூட்டலாம் என்பது மனதில் ஏற்படும் கேள்வி.

இதனால் தான் இந்தப் பெயர்களெல்லாம் துல்லியமான பெயர் இல்லையே என்பது நம் சந்தேகம். இது உண்மைதான்.

ஹார்ட் டிஸ்க் விற்பவர்கள் எல்லாம், டிஸ்க்கினை 2ன் பவர் எண்ணில் கூறாமல், ஆயிரத்திலேயே கூறி வந்ததால், இந்த பெயர்கள் நிலைத்துவிட்டன.


இந்த குழப்பமான, சற்று சரியற்ற பெயர்களை மாற்றிச் சரியான ஒரு பெயரைக் கொடுக்க, எடை மற்றும் அளவுகளுக்கான பன்னாட்டு International Bureau of Weights and Measures அமைப்பு புதிய பெயர்களை உருவாக்கி வழங்கியுள்ளது.

1024 பைட்ஸ் அடங்கியது ஒரு கிபி பைட் (kibibyte (KiB), 1024 கிபி பைட்ஸ் ஒரு மெபி பைட் (a mebibyte (MiB), ), இதே போல கிகி பைட் (gibibyte) மற்றும் டெபிபைட்(tebibyte) உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். இந்த சிஸ்டம் பயன்படுத்தினால், கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை நாம் மாதம் ஒருமுறை கட்டாயம், டிபிராக் செய்திட வேண்டும் எனக் கூறுகிறார்களே, இது உண்மையா?

–ஆர். நம்பி ராகவன், கோயமுத்தூர்

பதில்: முற்றிலும் தவறு. கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினைக் கட்டாயமாக டிபிராக் செய்திட வேண்டுமா என்ற கேள்வி பல ஆண்டுகளாகப் பட்டிமன்றத்திற்கு உரியதாகவே இருந்து வருகிறது.

ஆனால் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத்தில், நீங்கள் ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்திடவே தேவையில்லை.

ஏனென்றால், சிஸ்டம் தானாகவே உங்கள் ஹார்ட் டிஸ்க்கினை, டிபிராக் செய்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் சிஸ்டத்தில் உள்ள Task Scheduler I கிளிக் செய்து பாருங்கள். இதில் ஒரு வேலையாக (Task) Scheduled Defrag என்று இருக்கும்.

அதில் Wednesday at 1:00 a.m என கிழமையும் நேரமும் குறிக்கப்பட்டிருக்கும். இந்த நேரத்தில் உங்கள் கம்ப்யூட்டர் இயக்கப்படாமல் இருந்தால், கம்ப்யூட்டர் தானாகவே அடுத்த முறை, இயக்கப்படுகையில் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்ளும்.

கேள்வி: சிஸ்டம் ட்ரே – நோட்டிபிகேஷன் ஏரியா இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

– டி.சியாமளா சுரேஷ், கூனூர்


பதில்: நம்மில் பலர் சிஸ்டம் ட்ரே (System Tray) என அழைக்கப்படும் இடத்தை, மைக்ரோசாப்ட் நோட்டிபிகேஷன் ஏரியா (Notification Area) என அழைக்கிறது.

Systray.exe என்ற பைல் இதற்குக் காரணம் என்பதால், இதனைப் பலரும் சிஸ்டம் ட்ரே என அழைக்கின்றனர். இது பின்னணியில் இயங்கி, நோட்டிபிகேஷன் ஏரியாவினை நிர்வகிக்கிறது என்பதே சரி.

கேள்வி: என் குடும்பத்தினரை டிஜிட்டல் கேமராவில் படம் எடுத்த போது, படம் பிடிக்கப்பட்டவர்கள் நன்றாக இருந்தாலும், பின்புலம் படு மோசமாக அமைந்துவிட்டது. இதனை எப்படி சரி செய்வது?

–சி.நாகராஜ், விக்கிரவாண்டி


பதில்: நீங்கள் படம் எடுத்த கேமராவில் இதனைச் சரி செய்திடும் வசதி இல்லை. படத்தை கம்ப்யூட்டருக்கு மாற்றவும். பின்னர், அடோப் போட்டோ ஷாப் சாப்ட்வேரில் இந்த படத்தைத் திறந்து, அதில் உள்ள டூல்கள் மூலம் பேக் கிரவுண்டில் உள்ளதை நீக்கி, நீங்கள் விரும்பும் பின்புலத்தை இணைக்கலாம்.

கேள்வி: நல்ல பழைய கர்நாடக சங்கீத பாடல்களைத் தரும் இணைய தள முகவரி ஒன்றைத் தரவும்.

–ஆ. காமாட்சி அம்மாள், சென்னை

பதில்: பல தளங்கள் உள்ளன. கூகுள் சாதனத்தில் தேடிப் பெறலாம். எனக்குப் பிடித்த, மிகப் பெரிய தளம் http://www.sangeethapriya .org/ என்ற முகவரியில் இயங்குகிறது.

நன்றி,தினமலர்.

நூர்
03-10-2010, 02:28 AM
செப்டம்பர் 13,2010

கேள்வி: ஆர்.ஏ.ஆர் (RAR) ) என்ற துணைப்பெயருடன் கொடுக்கப்படும் சுருக்கப்பட்ட பைல்களை ஏன் விண்டோஸ் அல்லது விண் ஸிப் கொண்டு திறக்க முடியவில்லை? இவற்றைத் திறக்க எந்த சாப்ட்வேர் தேவை?

--டி.முருகேசன், திண்டுக்கல்

பதில்: RAR துணைப்பெயருடன் உள்ள பைல்களும் ஸிப் பைல்களைப் போலச் சுருக்கித் தரப்படும் பைல்கள் தான். ஆனால் பைல்களைச் சுருக்குவதற்கு, விண்ஸிப் சாப்ட்வேர் பயன்படுத்தும் தொழில் நுட்பம் ஆர் ஏ ஆர் பைல்களில் பயன்படுத்தப் படுவதில்லை.

அதனால் தான் அவற்றை விண்டோஸ் அல்லது விண்ஸிப் கொண்டு திறக்க முடியவில்லை. இவற்றைத் திறக்க விண் ஆர்.ஏ.ஆர். சாப்ட்வேர் வேண்டும்.

இதனை http://www.rarlab.com/ என்ற இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி கிடைத்தாலும்,

தொடர்ந்து இதனை இலவசமாகவே பயன்படுத்தலாம். அல்லது 7Zip என்ற சாப்ட்வேர் மூலமாகவும் இந்த பைல்களை விரிக்கலாம். இந்த சாப்ட்வேர் தொகுப்பினை http://downloads. sourceforge.net/ sevenzip/7z457-x64.msi என்ற தளத்திலிருந்து இறக்கிப் பதிந்து கொள்ளுங்கள்.

அல்லது இணையத்தில் உள்ள சில தளங்களுக்கு, (எ.கா. http://www.wobzip .org/) சுருக்கப்பட்ட பைல்களை அனுப்பி, விரித்துப் பெறும் வசதியைத் தரும் தளங்களின் முகவரிகளுக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டுள்ள பயர்வால், சில வேளைகளில், நான் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில், யாரோ ஒருவர் என் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிப்பதாகக் காட்டி,

சில எண்களின் தொகுப்பினைக் காட்டுகிறது. இது யாருடைய இணைய அடையாள எண் என எப்படிக் கண்டறிவது? நான் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன்.

–கா. நமசிவாய கார்த்திக், கூடலூர்

பதில்: Start அழுத்திப் பின் Run பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும். இதில் cmd என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது டாஸ் திரை கிடைக்கும். இதில் உங்கள் கட்டளைக்காக ஒரு புள்ளி அல்லது சிறு கோடு துடித்துக் கொண்டிருப்பதனைக் காணலாம்.

அங்கு nslookup என்று டைப் செய்து தொடர்ந்து ஒரே ஒரு இடைவெளியிட்டு, உங்கள் பயர்வால் கொடுத்த எண்ணை டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது அதற்கான தளத்தின் பெயர் கிடைக்கும். பின் இந்த தளம் சென்று, நீங்கள் அனுமதிக்கக் கூடிய தளம்தானா என உறுதி செய்து கொள்ளலாம்.

கூடுதலாக ஒரு செய்தி சொல்லட்டுமா! இப்போது செய்ததைபின் நோக்கியும் செய்து பார்க்கலாம். nslookup என்று டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் இடைவெளியிட்டு, உங்களுக்குத் தெரிந்த ஓர் இணைய தள முகவரியை அமைத்து என்டர் தட்டவும்.

இப்போது அந்த இணைய முகவரிக்கான டிஜிட்டல் எண் கிடைக்கும். விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், “Command” (மேற்கோள் குறிகள் இல்லாமல்)என சர்ச் பாக்ஸில் டைப் செய்தால், டாஸ் பக்கம் கிடைக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கிய திலிருந்து, பிரவுஸிங் செய்கையில், இன்டர்நெட் பக்கங்களின் எழுத்து மிகவும் சிறியதாக உள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பிரவுசராகப் பயன்படுத்துகிறேன். வெப்சைட் காட்டப்படும் எழுத்தின் அளவி நிரந்தரமாக மாற்ற என்ன வழி?

-கா. சி. முருகானந்தம், மதுரை

பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8, இணையப் பக்கங்களை ஸூம் செய்து, பெரிய எழுத்துக்களில் பக்க எழுத்துக்களை அமைக்க வழி தருகிறது. இது நாமாக பக்க எழுத்துக்களை பெரிதாகவும் சிறிதாகவும், அவ்வப்போது அமைக்கும் வழி.

இதனுடனாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, நீங்கள் கேட்டுள்ளபடி, தானாகவே பெரிய எழுத்தாகக் காட்டச் செய்யும்படி அமைக்கவும் முடியும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் திறந்து இயக்கவும். Tools கிளிக் செய்து அதில் Internet Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

Appearance என்ற டேப்பின் கீழ் Fonts என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் விரும்பும் அளவில் பாண்ட் அளவைக் கிளிக் செய்து ஓகே தட்டி வெளியே வரவும்.

இனி நீங்கள் அமைத்த பெரிய அளவிலான எழுத்துடன், இணையப் பக்கங்கள் காட்டப்படும். ஸூம் செய்திடும் முறை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே,

மவுஸின் வீலை முன் புறமாக உருட்டினால், பக்க எழுத்துக்கள் பெரிதாகும். கீழாக உருட்டினால், சிறிதாகும்.

கேள்வி: என்னுடைய பேவரைட் தளப்பட்டியல் பெரிதாக உள்ளது. இதில் குறிப்பிட்ட தளத்தினை எளிதாகத் தேடிக் கண்டுபிடிக்கும் வகையில், அகரவரிசைப்படுத்த முடியுமா?

–சி.மாணிக்க வேல், மதுரை

பதில்: கம்ப்யூட்டரில் எந்தப் பட்டியலையும் அகரவரிசைப் படுத்த முடியும். நீங்கள் உங்கள் பிரவுசர் எது என்று கூறாததால், பெரும்பான்மையோர் பயன்படுத்தும் பிரவுசர்களில் இதனை எப்படி மேற்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

முதலாவதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஆகியவற்றில் இதனை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்க்கலாம்.

இந்த பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். பேவரைட்ஸ் என்பதில் கிளிக் செய்தால், அந்த மெனு விரிந்து கொடுக்கும். இதில் ஏதேனும் ஒரு போல்டர் அல்லது லிங்க்கில், ரைட் கிளிக் செய்திடவும்.

இதில் விரியும் மெனுவில் பல செயல்பாடுகளுக்கான பிரிவுகள் கிடைக்கும். இவற்றில் Sort by Name என்பதில் கிளிக் செய்திடுங்கள். உங்களுடைய Favourites தளங்கள் அனைத்தும் அகரவரிசைப்படுத்தப்படும்.

உங்களுடைய பிரவுசர் மொஸில்லா பயர்பாக்ஸ் என்றால்,

அதனை இயக்கி, View என்பதில் இடது கிளிக் செய்திடவும். அதன் பின் Sidebar, Bookmarks எனச் செல்லவும். Sidebar ஐக் கிளிக் செய்தால் Bookmarks மெனு கிடைக்கும்.

அதில் ரைட் கிளிக் செய்தால், மீண்டும் ஒரு மெனு கிடைக்கும். இதில் Sort by Name என ஒரு பிரிவு இருக்கும். இதில் லெப்ட் கிளிக் செய்திடவும்.

Bookmarks மெனுவினை விரித்து, அதன் இடது பக்கத்தில் உள்ள + அடையாளத்தில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் புக்மார்க்ஸ் அனைத்தும் அகரவரிசைப்படி அடுக்கப்பட்டிருக்கும்.


நீங்கள் கூகுள் குரோம் பிரவுசரினைப் பயன் படுத்துகிறீர்களா!

இங்கு சற்று வித்தியாசமான முறையில் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பிரவுசரை இயக்கிக் கொள்ளவும். வலது மூலையில் குழாய் ரிப்பேர் செய்திடும் சாதனப் படம் ஒன்று காட்டப்படும். அதனை லெப்ட் கிளிக் செய்திடவும்.

பின்னர், Bookmark Manager என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு புதிய டேப் திறக்கப்படும். இந்த டேப்பின் இடது பக்கம் சைட் பார் ஒன்று கிடைக்கும்.

இதில் உள்ள Bookmark Manager –ல் ரைட் கிளிக் செய்தால், Reorder Items என்று ஒரு பிரிவினைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்தால், புக்மார்க்ஸ் அனைத்தும் அகரவரிசைப் படுத்தப்பட்டிருப்பதனைக் காணலாம்.

கேள்வி: phishing என்று அடிக்கடி கேள்விப் படுவதன் சரியான பொருள் என்ன? எடுத்துக் காட்டுடன் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

– ஆர். சின்னப்பராஜ் சேவியர், புதுச்சேரி

பதில்: நல்ல கேள்வி. பலருக்கு இந்த பதில் பயன்படும். கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்களைத் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்க சிலர் செய்திடும் சில்மிஷத்திற்கு இந்த பெயர் வைத்திருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக உங்களுக்கு மின்னஞ்சல் கடிதம் ஒன்று வரும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்பைவேர்களை நாங்கள் இலவசமாகச் சோதனை செய்து எடுத்துத் தருகிறோம். அதுவும் இலவசம் என்று பிரபலமான மைக்ரோசாப்ட் அல்லது நார்டன் ஆண்டி வைரஸ் தளத்திலிருந்து செய்தி போன்று வரும்.

குறிக்கப்பட்டிருக்கும் இணைய தளத்தின் முகவரியும் அதே நிறுவனங்கள் முகவரிகளாகத் தெரியும். ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் அதில் கிளிக் செய்திடுகையில் நீங்கள் வேறு ஒரு தளத்திற்கு இழுத்துச் செல்லப் படுவீர்கள்.

அங்கு சென்றவுடன் உங்கள் கம்ப்யூட்டரை உங்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் அடிமைப்படுத்துவார்கள். உங்கள் மானிட்டரை கருப்பாக்கி மகிழ்வார்கள்.

இதற்குப் பல வழிகளைக் கையாளுவார்கள். இதற்குத்தான் phishing என்று பெயர். Fishing என்றால் மீன் பிடித்தல்; தூண்டில் போட்டு மீனைச் சிக்க வைப்போம். இங்கு கம்ப்யூட்டரில் உங்களுக்கு ஆசை காட்டி, உங்கள் கம்ப்யூட்டரைப் பிடிப்பதற்கு பெயர் phishing.

நன்றி,தினமலர்.

நூர்
03-10-2010, 02:42 AM
செப்டம்பர் 20,2010


கேள்வி: என்னுடைய பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகம் என்ன என்று தெரிந்து கொள்ள வழி உள்ளதா? ஒரு வழி காட்டவும்.

-எஸ். பியூலா ஜோசப், கோவை


பதில்: ஒன்றென்ன, பல வழிகள் உள்ளன. ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினைத் திறந்து Broadband internet speed test என்று கொடுத்தால், இணையத்தில் இதற்கென இயங்கும் பல தளங்களின் முகவரிகள் தரப்படும்.

இணைய தொடர்பில் இருக்கையில், இவற்றின் மீது கிளிக் செய்தால், உடனே அந்த தளம் திறக்கப்பட்டு, உங்கள் இன்டர்நெட் வேகம் குறித்த சோதனையை மேற்கொள்ளவா என உங்களிடம் கேட்டு, விடை பெற்றபின், சோதனையிடப்பட்டு,

பைல் அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகம் என்னவென்று காட்டப்படும். அதில் உள்ள மற்ற விளம்பரங்கள் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டாம்.

என்னைப் பொறுத்தவரை, இந்த வகையில் தீங்கில்லாத தளங்கள் இரண்டைக் கூறுகிறேன்.

அவற்றின் முகவரிகள்: www.speedtest.net/ மற்றும் http://testinternetspeed.org

கேள்வி: நான் சிறந்த முறையில் ஆண்ட்டி வைரஸ் எதிர்ப்பு தொகுப்பினை நிறுவி இயக்கி வருகிறேன். அதனை அவ்வப்போது அப்டேட் செய்கிறேன். இருப்பினும்

சென்ற வாரம் வைரஸ் பாதித்து, ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடும் அளவிற்குப் போய்விட்டது. இது எதனால்?

–டி. எஸ். ஆறுமுக ராஜன், சென்னை

பதில்: மிகச் சிறந்த பாதுகாப்பு என்று கம்ப்யூட்டரில் எதனையும் கூற முடியாது. மிகச் சிறந்த பயர்வால், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு, அவ்வப்போது அப்டேட் என இருந்தாலும், ஏதேனும் ஒரு வழியில் வைரஸ் புரோகிராம்கள்,

உங்கள் கம்ப்யூட்டருக்குள் வரும் வாய்ப்பு உண்டு. முதலில், நீங்கள் சிறந்த பாதுகாப்பு என்று எதனைச் சொல்கிறீர்கள்? விண்டோஸ் பயர்வால் மிகச் சிறந்தது இல்லை.

மற்ற நிறுவனங்கள் விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் மிகச் சிறந்த பயர்வால்களைத் தருகின்றன. கொமடோ (Comodo) தரும் பயர்வால், விண்டோஸ் பதிந்து தரும் பயர்வாலைக் காட்டிலும் சிறந்ததாகவே உள்ளது.

அவ்வப்போது, இது உள்ளே வருகிறது, அனுப்பவா? என்று கேட்பது எரிச்சலாக இருந்தாலும், பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

இது போலவே தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும். மிகச் சிறந்தது என்று எதனையும் கூற முடியவில்லை.

ஏனென்றால், வைரஸ் புரோகிராம் பரப்புபவர் கள், இந்த பாதுகாப்பு வழிகளை எல்லாம் மீறிச் செல்லும் புரோகிராம்களை எழுதும் வல்லமை படைத்தவர்களாக இருக்கின்றனர்.

அதற்காக, எந்த பாதுகாப்பு புரோகிராமும் இல்லாமல் இருக்கக் கூடாது. நீங்கள் குறிப்பிடும் பாதுகாப்பு புரோகிராம்கள் அனைத்துமே நன்றாகச் செயல்படுபவையே. தொடருங்கள்.

கேள்வி: சில நேரங்களில் சில இணைய தளங்களைப் பெற முடியாமல் போய்விடுகிறது. அவற்றை இதற்கு முன் மிக எளிதாகப் பெற்று இயக்கி இருக்கிறேன். என்ன காரணமாக இருக்கும்?

– எஸ். பிரதீப் குமார், கம்பம்

பதில்: இணையத்தில் இருக்கையில், ஒரு தளம் கிடைக்காமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. உங்களுடைய ரௌட்டர், கம்ப்யூட்டர், பிரவுசர் என எது வேண்டுமானாலும், பிரச்னையைக் கொண்டிருக்கலாம்.

எனவே முதல் சோதனையாக, வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்திப் பார்க்கவும்.
கம்ப்யூட்டரை ரீ பூட் செய்வது இன்னொரு நல்ல வழி. கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்தி, மோடம், ரௌட்டர் இணைப்புகளை நீக்கி, மீண்டும் இணைத்துப் பயன்படுத்திப் பார்க்கவும்.

அந்த தளத்தின் வழக்கமான முகவரி இல்லாமல், அதன் ஐ.பி. முகவரியினை எண்களில் தந்து பார்க்கவும்.

தளத்தின் முகவரியினை அதன் எண்களில் பெற, http://www.selfseo.com/ find_ip_address_of_a_website.php என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

இதற்குப் பின்னரும் அந்த தளம் கிடைக்கவில்லை என்றால், சற்று ரிலாக்ஸ் செய்திடவும். அந்த தளத்தில் தான் பிரச்னை. எனவே சில மணி நேரம் கழித்து முயற்சிக்கவும். இப்போதும் கிடைக்கவில்லை என்றால், இன்னொரு கம்ப்யூட்டர் மூலமாக முயற்சிக்கவும்.

கேள்வி: பைல் ஒன்றை டெலீட் செய்திட கட்டளை கொடுத்தேன். எப்போதும் இதை அழித்து ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பவா என்ற கேள்வி கேட்கப்படும்.

ஆனால் அந்த கேள்வி இல்லாமலேயே பைல் அழிக்கப்பட்டது. இது ஏன்?

–எஸ். ஆகாஷ், மதுரை

பதில்: எனக்கும் இது போல ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இதற்குக் காரணம் ரீசைக்கிள் பின் அமைப்பில் சின்ன மாற்றம் எப்போதாவது நம்மை அறியாமலேயே ஏற்பட்டிருக்கலாம்.

டெஸ்க் டாப் சென்று, ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது ரீசைக்கிள் பின் ப்ராப்பர்ட்டீஸ் பாக்ஸ் எழுந்து வரும். இதில் பல டேப்கள் இருக்கும். உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ் ஒவ்வொன்றுக்கும் ஒரு டேப் இருப்பதோடு, குளோபல் என்று ஒரு டேப் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும்.

இந்த பாக்ஸில் கீழாக டிஸ்பிளே டெலீட் கன்பர்மேஷன் டயலாக் என ஒரு வரி இருக்கும். அதில் உள்ள சிறிய கட்டத்தில், டிக் அடையாளம் ஏற்படுத்தி, ஓகே கிளிக் செய்து மூடவும். அவ்வளவுதான்.

அடுத்த முறை நீங்கள் கோப்பினை அழிக்க கட்டளை கொடுத்தாலும், என்ன அழித்து குப்பைத் தொட்டிக்கு அனுப்பட்டுமா? எனக் கேட்டு உங்களிடம் ஓகே கிடைத்த பிறகே, கோப்பு அழிக்கப்படும். என்ன ஓகேயா!

கேள்வி: என் கம்ப்யூட்டரில் டாஸ்க் பாரில், இன்டர்நெட் இணைப்பைக் காட்டும் ஐகான் இப்போது தெரிவதில்லை.

இதனால், சிஸ்டம் இன்டர்நெட்டுடன் கனெக்ட் ஆகி உள்ளதா, எவ்வளவு டேட்டா அனுப்பப்பட்டது, அதன் வேகம் போன்ற விபரங்களைக் காண இயலவில்லை. பழையபடி எப்படி மாற்றலாம்?

–க. திருமாறன், விருதுநகர்

பதில்: தகவல்களைத் தேடித் தரும் இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளதா என்ற தகவல் நமக்குக் காட்டப்படவில்லை என்றால், சிக்கல்தான். ஆனால் இதனை எளிதாகத் தீர்த்துவிடலாம்.

நீங்கள் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறீர்கள் என்று கூறவில்லை. அனைத்திற்கும் தீர்வினைப் பார்ப்போம்.


விண்டோஸ் எக்ஸ்பியில், ஸ்டார்ட் (Start) ஐகான் கிளிக் செய்திடுங்கள். இதில் செட்டிங்ஸ் (Settings) பிரிவு செல்லுங்கள். அதில் கண்ட்ரோல் பேனல்(Control Panel) தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுங்கள்.

கிடைக்கும் கண்ட்ரோல் பேனல் கட்டத்தில் காட்டப்படும் ஐகான்களில், Network Connections என்று உலக உருண்டை படத்துடன் உள்ள ஐகானில் கிளிக் செய்திடுங்கள்.

இப்போது நீங்கள் உங்கள் சிஸ்டத்தில் செட் செய்த, இன்டர்நெட் உட்பட அனைத்து நெட்வொர்க் இணைப்புகளுக்கான ஐகான்கள் காட்டப்படும். உங்களின் இன்டர்நெட் இணைப்பு ஐகானைத் தேர்ந்தெடுங்கள்.

இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் General டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Show icon in notification area when connected” என்ற வரியில் உள்ள சிறிய பாக்ஸில், டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி, பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இனி நோட்டிபிகேஷன் ஏரியாவில், ஐகான் காட்டப்படும்.

உங்கள் சிஸ்டம் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 எனில்:

விண்டோஸ் டாஸ்க்பாரில் ரைட் மவுஸ் பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இதில் Notification Area டேபில் கிளிக் செய்திடவும்.

இதில் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் show or hide Clock, Volume, Network and Power என்பதனைத் தேர்ந்தெடுங்கள். இதில் Network பாக்ஸில் டிக் அமைக்கவும்.

இதில் காட்டப்பட்டுள்ள மற்ற விஷயங்களைப் படித்துப் பார்த்து, நீங்கள் விரும்பினால், மேலும் சில மாற்றங்களை அமைக்கலாம். அடுத்து அப்ளை (Apply) கிளிக் செய்து, பின் OK கிளிக் செய்து வெளியேறவும்.

இன்டர்நெட் ஐகான் காட்டப்படாததனால், இணைய இணைப்பு கிடைக்காது என்று எண்ண வேண்டாம். அதே போல இணைய இணைப்பின் வேகம் அறிய,Free Internet Speed Test என்று ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் கொடுத்துக் கிடைக்கும் தளங்களின் மூலம், இணைய இணைப்பு வேகத்தை அறியலாம்.

கேள்வி: என் நண்பர்கள் சிலர், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில், குயிக் லாஞ்ச் பார் மூலம் அதிக பயன் பெறலாம் என்று கூறுகின்றனர். இது உண்மையா? இது குறித்து விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன்.

–ஆர். கே. விசுவாசம், காரைக்கால்

பதில்: வேகமாக செயல்பட என்று தான் குயிக் லாஞ்ச் பார் (Quick Launch Bar) என்று பெயரிட்டு விண்டோஸ் இதனை நமக்குத் தந்துள்ளது. நீங்கள் கம்ப்யூட்டரில் அதிக நேரம், பலவகையான பணிகளை மேற்கொள்வது தெரிகிறது. அதனால்தான் இந்தக் கேள்வி என்று நினைக்கிறேன்.

புரோகிராம், அப்ளிகேஷன், பைல் போன்றவற்றை, குறைவான நேரத்தில் இயக்கத்திற்குக் கொண்டு வர இந்த குயிக் லாஞ்ச் பார் பயன்படுகிறது. டெஸ்க்டாப் அல்லது ஸ்டார்ட் மெனு, ஆல் புரோகிராம்ஸ் செல்லாமல், மேலே

குறிப்பிட்டவற்றை இயக்க இது வழி தருகிறது. திரையின் கீழாக உள்ள, ஸ்டார்ட் பட்டைக்கு வலதுபுறமாக உள்ள, டாஸ்க் பாரில் இடது பக்கம் இந்த பார் அமைக்கப்படுகிறது. அது இல்லை என்றால், உடனே அமைத்துவிடலாம்.

முதலில், டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இப்போது ஆப்ஷன் மெனு ஒன்று கிடைக்கும். இதில் தரப்பட்டுள்ள ஆப்ஷன்களில் ஒன்றாக, Quick Launch Bar இருக்கும். இதில் கிளிக் செய்தால், ஒரு சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்தப்படும்.

இப்போது குயிக் லாஞ்ச் பார் கிடைக்கும். இதில் நாம் அதிகம் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஐகானை, டெஸ்க் டாப்பிலிருந்து இழுத்து இதில் விட்டுவிடலாம். இரண்டு இடங்களிலும் அந்த ஐகான் இருக்கும். குயிக் லாஞ்ச் பாரில் உள்ள ஐகானில் ஒரு கிளிக் செய்தாலே, அந்த புரோகிராம் இயக்கத்திற்கு வரும்.

நன்றி,தினமலர்.

நூர்
03-10-2010, 02:58 AM
செப்டம்பர் 27,2010

கேள்வி: Insert என்று ஒரு கீ இருக்கும். அதனை அழுத்தினால் டெக்ஸ்ட் மற்றும் படம் இடையே அமைக்கப்படும் என்று கூறுகிறார்கள். இந்த கீ, கீ போர்டில் எங்குள்ளது? அனைத்து கீ போர்டுகளிலும் இது இருக்குமா?

–சி. மு.காமராஜ், விழுப்புரம்

பதில்: Insert கீ Ins என்ற எழுத்துக்களோடு இருக்கும். Delete கீயை உங்கள் கீ போர்டில் கண்டுபிடியுங்கள். அதன் மேலாக இந்த கீ இருப்பதனைப் பார்க்கலாம்.

பொதுவாக ஒரே மாதிரியான அமைப்பையே அனைத்து கீ போர்டுகளிலும் பின்பற்றுகின்றனர். ஒரு சில கீ போர்டுகளில் மட்டும் இது வேறு இடத்தில் இருக்கலாம்.

லேப்டாப் கீ போர்டுகளில் இதன் இடம் மாறி இருக்கும். மேல் வலது மூலையில் இது இருக்கும். Del என எழுதப்பட்டுள்ள டெலீட் கீயை அடுத்து இது இடம் பெற்றிருக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 பதிந்து பயன்படுத்தி வருகிறேன். இதில் வால்யூம் கண்ட்ரோல் எப்படி? மியூசிக் பிளே செய்திடுகையில், கேம்ஸ் விளையாடினால்,

கேம்ஸ் தரும் ஒலி, மியூசிக்கை மிஞ்சுகிறது. தனியே இதனைத் தடுக்க, குறைக்க முடியுமா? கேம்ஸ் கண்ட்ரோலில் இது இல்லை.

–ஆ.பிருத்விராஜ், பழநி

பதில்: நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டம் இயக்குவதால், இதற்கான வழியை சிஸ்டமே கொண்டி ருக்கிறது. பொதுவாக, பெரும்பாலான கேம்ஸ் புரோகிராம்களில், அதன் முகப்பு பக்கத்திலேயே வால்யூம் கண்ட்ரோல்களுக்கு எந்த கீயை அழுத்த வேண்டும் எனத் தந்திருப்பார்கள்.

நீங்கள் அதனைக் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. இருப்பினும் விண்டோஸ் 7 தரும் வசதியினைப் பார்ப்போம். இதில் விண்டோஸ் சவுண்ட் மிக்சர் விண்டோவினைத் திறக்கவும். டாஸ்க் பாரில் வலது புறம் மூலையில் காணப்படும், ஸ்பீக்கர் ஐகானின் மீது டபுள் கிளிக் செய்து, இந்த வின்டோவைப் பெறவும்.

இந்த விண்டோவில் அப்போது திறந்திருக்கும் ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் தனித்தனியாக வால்யூம் செட் செய்வதற்கான வழி தரப்பட்டிருக்கும். இதன் மூலம் சிஸ்டம் தரும் ஒலி அளவை மட்டுமின்றி,

ஒவ்வொரு அப்ளிகேஷனுக்குமான, ஒலி அளவினையும் கட்டுப்படுத்தலாம். இதில் செட் செய்யப்பட்ட ஒலி அளவு, புரோகிராம்களை மூடித் திறந்த பின்னரும் இயங்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் டாஸ் விண்டோ கிடைக்குமா? எங்கு எந்த கட்டத்தில் கட்டளை இதற்கெனத் தர வேண்டும்?
டாஸ் கட்டளை மூலம், சில ட்ரைவ்களில், சில செயல்பாடுகளை மிக எளிதாக மேற்கொள்ளலாம். அதற்காகவே இதனைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

–நா. சிக்கந்தர் பாட்சா, காரைக்கால்

பதில்: இப்போதெல்லாம், டாஸ் விண்டோ மற்றும் கட்டளைகளை யாரும் அவ்வளவாகப் பயன்படுத்து வதில்லை. இருப்பினும் உங்களின் கேள்விக்கு, விண்டோஸ் 7 அருமையான ஒரு தீர்வினைக் கொண்டிருக்கிறது.

இதன் மூலம்,சில செயல்பாடு களுக்கு, நாம் பழைய டாஸ் கட்டளைகளை, அதன் அமைப்பை நினைவில் வைத்து, டைப் செய்து இயக்கத் தேவையில்லை. டாஸ் விண்டோ பெற்று எந்த டைரக்டரிக்குச் செல்ல வேண்டுமோ, அந்த போல்டர் இருக்கும் இடத்திற்கு, விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் செல்லவும்.

எடுத்துக் காட்டாக, புரோகிராம் பைல்ஸ் என்ற ட்ரைவிற்குச் செல்ல எண்ணுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம், அந்த போல்டருக்குச் செல்லவும்.

இப்போது ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எந்த போல்டரைத் திறக்க வேண்டுமோ, அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு ஓர் ஆப்ஷன் தரப்படும். டாஸ் கமாண்ட் விண்டோ இங்கு திறக்கப்பட வேண்டுமா என்று கேட்கப்படும். அதில் கிளிக் செய்திடுங்கள்.

டாஸ் இயக்கத்தின் கமாண்ட் ப்ராம்ப்ட், சரியாக அந்த ட்ரைவில் திறக்கப்படும். டைரக்டரி கட்டளை, பின்னர் அந்த போல்டருக்கான கட்டளை எல்லாம் தேவையில்லை. விண்டோஸ் 7 தரும் அருமையான சுருக்கு வழி இது.

கேள்வி: எனக்கு வரும் இமெயில்களில் உள்ள லிங்க்குகளில் உள்ள இணைய தளம் பார்க்க கிளிக் செய்தால், “locate link browser” என்று ஒரு பாப் அப் விண்டோ கிடைக்கிறது. இதனை எப்படி தடுப்பது? நான் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன்.

–டி. நான்சி, புதுச்சேரி,

– எம். சக்திவேல் ராஜா, கோயம்புத்தூர்

பதில்: இந்த கேள்வி மற்றும் சந்தேகத்தினைப் பல வாசகர்கள் கேட்டுள்ளனர். சற்று விரிவாகவே இதற்கான தீர்வினைப் பார்ப்போம். விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்களுக்கானது: Start கிளிக் செய்து அதில் My Computer மீது கிளிக் செய்திடவும். இதனை அடுத்து Tools, Folder Options எனச் செல்லவும்.

இதில் கிடைக்கும் விண்டோவில் File Types என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு வரிசையாக உள்ள வரிகளில் Extensions என்ற வரிசையில் URL: HyperText Transfer Protocol என்று இருப்பதில் ஒரு முறை கிளிக் செய்திடவும். இப்போது இது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

அடுத்து Advanced பட்டனில் கிளிக் செய்திடுக. பின்னர் Edit பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் Use DDE என்று உள்ள இடத்தில் கிடைக்கும் பாக்ஸில் டிக் அடையாளம் இருக்கும். அதனை நீக்கவும். இதில் என்பது செயல்பாட்டில் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.

இதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் என்பதில் உங்கள் பிரவுசர் பெயர் இருக்க வேண்டும். இது ஏற்கனவே அங்கு இருக்கும். இல்லை எனில் அருகே உள்ள பிரவுஸ் பட்டனைக் கிளிக் செய்து, பிரவுசருக்கான பைலைத் தேர்வு செய்திடவும். இருமுறை கிளிக் செய்து வெளியே வரவும்.

இனி உங்கள் பிரவுசரை மூடிப் பின்னர், இமெயில் கிளையண்ட் புரோகிராமினைத் திறந்து, அதில் உள்ள இமெயில்களில் உள்ள லிங்க் ஒன்றில் கிளிக் செய்து பார்க்கவும். இப்போது “locate link browser” என்ற பாப் அப் கிடைக்காது.

மேலே தரப்பட்டுள்ள செயல்பாடுகளை மீண்டும் ஒருமுறை மேற்கொள்ளவும். ஆனால் இந்த முறை HyperText Transfer Protocol with Privacy and FTP என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஏற்கனவே கூறியபடி மாற்றவும்.

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் பயன் தராது; மேற் கொள்ளவும் முடியாது. இவர்கள் தங்கள் ரெஜிஸ்ட்ரியில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் மேற்கொள்ளும் படியான செயல்பாடுகளை வாசகர்களுக்கு வழங்குவதில்லை. பல வேளைகளில் இதில் தவறுகள் ஏற்பட்டு, பின்னர் கம்ப்யூட்டர் இயக்கம் முடங்கிப் போகும் அளவிற்கு சென்று விடுகிறது. இருப்பினும் இங்கு இதற்கான தீர்வு நடவடிக்கைகளைத் தருகிறேன்.

முதலில் ரெஜிஸ்ட்ரி பைலை சேவ் செய்து வேறு ஒரு ட்ரைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு சர்ச் பீல்டில் regedit என்று டைப் செய்திடவும். என்டர் தட்டினால், கிடைக்கும் விண்டோவில் பைல் அடுத்து எக்ஸ்போர்ட் கிளிக் செய்திடவும்.

இனி எந்த ட்ரைவில் ரெஜிஸ்ட்ரி பைலை சேவ் செய்திட வேண்டுமோ அந்த ட்ரைவைத் தேர்ந்தெடுத்து, பைலுக்கு பெயர் கொடுத்து, சேவ் அழுத்தவும். ரெஜிஸ்ட்ரி பைல் சேவ் செய்யப்படும். ரெஜிஸ்ட்ரி பைல் கெட்டுப் போனால், இந்த பைலை மீண்டும் உரிய இடத்தில் பதிந்து பயன்படுத்தலாம்.

அடுத்து ஸ்டார்ட், ரன் கொடுத்து பின்னர் regedit என டைப் செய்திடவும். பின்னர், HKEY_CLASSES_ROOT\ HTTP\shell\open\ddeexec என்ற வரி இருக்கும் இடத்திற்குச் செல்லவும்.

இங்கு என்ற ரெஜிஸ்ட்ரி கீயினை டெலீட் செய்திடவும். அடுத்து கீழ்க்காணும் வரிகளிலும், ஒவ்வொன்றாக இந்த மாற்றத்தினை மேற்கொள்ளவும்.
HKEY_CLASSES_ROOT\HTTPS\shell\ open\ddeexec”
“HKEY_CLASSES_ROOT\FirefoxURL\shell\ open\ddeexec”
“HKEY_CLASSES_ROOT\FirefoxHTML\ shell\open\ddeexec”

பின் சேவ் செய்து வெளியேறவும். இனி பிரச்னை இருக்காது.

கேள்வி: எனக்கு வந்த ஒரு இமெயிலில் : } இப்படி ஒரு வித்தியாசமான அடையாளம் உள்ளது. இது எதற்காக? இமெயில் புரோகிராம் சேர்க்கிறதா? நண்பரிடம் இது குறித்து கேட்கவில்லை. தயவு செய்து விளக்கவும்.

–பெயர் தெரிவிக்காத வாசகர், திருமங்கலம்

பதில்: இது வித்தியாசமான அடையாளம் இல்லை நண்பரே. இதனை எமோட்டிகான் என்று சொல்வார்கள். எனக்குப் புரியுமோ என்ற எண்ணத்தில் அடைப்புக் குறிக்குள்ளும் என்ன என்ன கேரக்டர் என எழுதியதற்கு நன்றி.

ஆனால் பெயரை ஏன் எழுதவில்லை? உங்கள் தோழர் அல்லது தோழி சற்று வித்தியாசமான விஷயத்தை உங்களுக்கு கடிதமாக எழுதியிருக்க வேண்டும்.

அதனை படமாகத் தெரிவிக்க இந்த படத்தைப் பயன்படுத்தி இருக்கிறார். இதற்கு என்ன பொருள் தெரியுமா? "ஐயோ ஒரு மாதிரியா வெட்கமா இருக்கு' நான் என்னைச் சொல்லவில்லை. பொருளே அதுதான்.

இது போல வெவ்வெறு உணர்வுகளை வெளிப்படுத்த பல எமோட்டிகான்கள், கம்ப்யூட்டர் மற்றும் இணைய, இமெயில் உலகில் உள்ளன.

நன்றி,தினமலர்.

நூர்
26-10-2010, 10:58 AM
அக்டோபர் 04,2010

கேள்வி: கீ போர்டு மூலம், வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் அமைத்திட ப்ளஸ் அடையாளம் மற்றும் டேஷ் அடையாளம் அமைத்து உருவாக்கி வந்தேன். இப்போது அவ்வாறு வர மறுக்கிறது. இது எதனால்? மீண்டும் இந்த வசதியினை எப்படிக் கொண்டு வருவது?

எஸ்.கே.புஷ்பராஜன், திண்டிவனம்.

பதில்: மவுஸ் பயன்படுத்தாமல், கீ போர்டு மூலம் வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்க நீங்கள் குறிப்பிட்டுள்ள வசதி சிறப்பான ஒன்றாகும். இது உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கவில்லை என்றால், அதற்குக் கீழ்க்கண்டவை காரணமாக இருக்கலாம்.

அண்மைக் காலத்தில் வந்த வேர்ட் தொகுப்புகளில் ப்ளஸ் அடையாளம் அமைத்த பின்னர் ஒரு ஸ்பேஸ் விட்டால் மட்டுமே டேபிள் உருவாகும் வகையில் அமைத்துள்ளனர். எனவே இவ்வாறு ஸ்பேஸ் அமைத்துப் பார்த்து டேபிள் உருவாக்கிப் பார்க்கவும்.

இதன் பின்னரும் டேபிள் உருவாகவில்லை என்றால், இந்த வசதி உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் தொகுப்பில் இயக்கப்படவில்லை என்று பொருள். இதனை இயக்கக் கீழ்க்கண்டவாறு செட்டிங்ஸ் அமைக்கவும்.

வேர்ட் 2007க்கு முன் உள்ள தொகுப்பினை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால்:

1. வேர்ட் தொகுப்பில் Tools மெனு கிளிக் செய்து அதில் AutoCorrect அல்லது AutoCorrect Options தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

2. இந்த விண்டோவில் AutoFormat As You Type என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

3. இதில் Tables என்ற செக்பாக்ஸ் டிக் அடையாளம் கொண்டு இருப்பதனை உறுதி செய்திடவும்.

4. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்:

1.Office பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், Word Options என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.

2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்து, பின்னர், AutoCorrect Options என்பதில் கிளிக் செய்திடவும்.

3. இந்த விண்டோவில் AutoFormat As You Type என்ற டேப் தேர்ந்தெடுப்பதனை உறுதி செய்திடவும்.

4.இதில் Tables என்ற செக்பாக்ஸ் டிக் அடையாளம் கொண்டு இருப்பதனை உறுதி செய்திடவும்.

5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: வேர்ட் 2007 பயன்படுத்தி வருகிறேன். இதில் டாகுமெண்ட்களில் நீள் சதுரமாக, நெட்டு வாக்கில் டெக்ஸ்ட் செலக்ட் செய்வது எப்படி? டெக்ஸ்ட் செலக்ட் ஆனால் அதில் சொற்களை நீக்கலாமா? பார்மட்டிங் மாற்றலாமா?

சி.ரங்கசாமி,பொள்ளாச்சி.

பதில்: இந்த தொகுப்பிற்கு முன் வந்தவற்றில் பயன்படுத்தி வந்த அதே கீகளை, இப்போதும் பயன்படுத்தலாம். அதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த சொல்லில் இருந்து தொடங்க வேண்டுமோ, அங்கு மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள்.

பின் ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு கர்சரை வலது பக்கமாகவோ, கீழாகவோ நகற்றினால், நெட்டு வாக்கில் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுத்த பின்னர், இதனை வழக்கம்போல மற்ற டெக்ஸ்ட்களில் மாற்றம் மேற்கொள்வதனைப் போல் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை, வேறு ஒரு இடத்தில், காப்பி செய்திடலாம்; வெட்டி ஒட்டலாம்.

கேள்வி: பழைய ஆபீஸ் (ஆபீஸ் 2003) தொகுப்புகளில் உருவாக்கிய பைல்களின் பார்மட்டை மாற்றித்தான் ஆபீஸ் 2007ல் பயன்படுத்த வேண்டுமா? அப்படியே பயன்படுத்த முடியாதா? மாற்றினால் கூடுதல் பயன் கிடைக்குமா?

ஆர்.கே.லதா நாகராஜன், சிவகாசி.

பதில்: ஆபீஸ் 2007 தொகுப்பு, அதற்கு முந்தைய ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கப்பட்ட பைல்களை அப்படியே திறந்து பயன்படுத்த வழி வகுக்கும்.

இந்த வகைத் திறப்பினை ஆங்கிலத்தில் Compatibility Mode என்று கூறுவார்கள். ஆனால், புதிய தொகுப்பின் புதிய வசதிகளைப் பயன்படுத்த, பழைய பதிப்பின் டாகுமெண்ட்களை ஆபீஸ் 2007 பார்மட்டிற்கு மாற்றுவது நல்லது.

எடுத்துக்காட்டாக, எக்ஸெல் 2007 தொகுப்பில் 11 லட்சம் படுக்கை வரிசைகள் உண்டு. பழைய பதிப்புகளில் 65 ஆயிரம் தான் உண்டு. கூடுதல் பயன் பெற புதிய பார்மட்டுக்கு மாறியாக வேண்டும். பார்மட் மாற்றுவது ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களுக்கும் ஒரே வகை தான்.

எடுத்துக்காட்டாக, வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை எப்படி பார்மட் மாற்றுவது என்று கூறுகிறேன். பழைய டாகுமெண்ட் ஒன்றை, வேர்ட் 2007ல் திறந்து கொள்ளவும்.

திறக்கும்போதே, பைல் பெயருடன் [Compatibility Mode] என்று காட்டப்படும். இதன் பின்னர், பார்மட் மாற்ற கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.

டாகுமெண்ட்டைத் திறந்தவுடன், இடது பக்கம் மேலாக உள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் பட்டனை அழுத்தவும். மெனுவின் இடது பக்கம் உள்ள Convert என்பதில் கிளிக் செய்திடவும்.

பின் கிடைக்கும் வேர்ட் ஆபீஸ் டயலாக் பாக்ஸில் ஓகே கிளிக் செய்திடவும். ஓகே கிளிக் செய்தவுடன், டாகுமெண்ட் தானாகவே, ஆபீஸ் 2007 தொகுப்பிற்கு ஏற்ற வகையில் மாற்றப்படும்.

இங்கு வேர்ட் 2007 அப்ளிகேஷனுக் கேற்றபடி மாறும். மாறியவுடனேயே, மேலே தலைப்பில், பைலின் தலைப்பில் ஏற்கனவே ஒட்டிக் கொண்டிருந்த [Compatibility Mode] என்பது விலக்கப் பட்டிருப்பதனைக் காணலாம்.

கேள்வி: தேதி, எண், நேரம் ஆகியவற்றிற்கான பார்மட்டிங் வேலையை, எக்ஸெல் தொகுப்பில் எந்த ஷார்ட் கட் கீகள் மூலம் மேற்கொள்ள முடியும். எடுத்துக் காட்டுடன் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தி.அசோக்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி, மேலூர்.

பதில்: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் செல்களை பார்மட் செய்வதில் பல சுருக்கு வழிகள் தரப்பட்டுள்ளன. வழக்கமாக, செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், பார்மட் மெனு சென்று, தேவையான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மேற்கொள்வோம்.

இதனையே, ஒரு சில கீகளை அழுத்துவதன் மூலமும் மேற்கொள்ளலாம். இதனைத்தான் நீங்கள் கேட்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
Date: [Ctrl] + #
Number: [Ctrl] + !
Time: [Ctrl] + :
General: [Ctrl] +
இவற்றை முதலில் சோதனை செய்து பார்த்து, இவை தரும் விளைவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

செல் ஒன்றில் 123 என உள்ளீடு செய்திடவும். பின்னர், அந்த செல்லை செலக்ட் செய்து கொள்ளுங்கள். முதலில் [Ctrl]+# கீகளை அழுத்துங்கள். இவற்றை மட்டுமே அழுத்துங்கள். என்டர் அழுத்தக் கூடாது.

இப்போது செல்லில் உள்ள உள்ளீடு தேதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு 2-May-00 எனக் காட்டப்படும். அடுத்து [Ctrl]+! என்ற கீகளை அழுத்தினால், எக்ஸெல் அதனை எண் மதிப்பில் எடுத்துக் கொண்டு, இரண்டு தசம ஸ்தானங்களுக்கு 123.00 என மதிப்பைக் காட்டும். [Ctrl]+: ஆகிய கீகளை அழுத்தினால்,

எக்ஸெல் இதனை நேர மதிப்பாகக் கொண்டு, அப்போதைய சிஸ்டம் மதிப்பினைக் காட்டும். இதன் மூலம் பெரிய அளவில் நம் நேரம் மிச்சமாகாது என்றாலும், கீ போர்டின் மூலமே சில மாற்றங்களை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் துணையாக இருக்கும்.

கேள்வி: டாகுமெண்ட் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள டேபிளில், அதன் தலைப்புகள் ஒவ்வொரு பக்கத்திலும் கிடைக்க வழி தரப்பட்டுள்ளது. இதே போல எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் கிடைக்க என்ன கட்டளை தர வேண்டும்?

கா.பழனிவேல்,சின்னமனூர்.

பதில்: நெட்டு மற்றும் படுக்கை வரிசை இரண்டிற்கான தலைப்புகளையும், ஒவ்வொரு பக்கத்திலும் அமைக்கும் வசதியை எக்ஸெல் தருகிறது. முதலில் ஒர்க்ஷீட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர்,

1. “File” என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Page Setup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

2. பல டேப்கள் கொண்ட “Page Setup” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக் கும். இதில்“Sheet” என்ற டேபைக் கிளிக் செய்திடவும்.

3. ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு உள்ள படுக்கை வரிசை அச்சிடப்பட வேண்டும் என்றால் “Rows to repeat at top” என்பதற்கு அடுத்து உள்ள சிறிய ஸ்ப்ரட்ஷீட்டின் மீது கிளிக் செய்திடவும்.“Page Setup - Rows to repeat at top” என்னும் புளோட்டிங் டூல் பார் கிடைக்கும்.

எந்த படுக்கை வரிசையில் உள்ள தலைப்புகள் அச்சிடப்பட வேண்டுமோ அந்த வரிசையினைத் தேர்ந்தெடுக்கவும். வரிசையினைத் தேர்ந்தெடுத்து முடித்த பின்னர் டூல்பாரின் இறுதியில் உள்ள பட்டனைக் கிளிக் செய்திடவும். இதன் பின் அந்த வரிசை டயலாக் பாக்ஸில் தெரியும்.

4. இதே போல நெட்டு வரிசையில் உள்ள தலைப்புகளும் அச்சிடப்பட வேண்டும் என்றால் மீண்டும் ஸ்ப்ரட் ஷீட்டைப் பெற்று அதில் “Columns to repeat at left” என்பதற்கு அடுத்து உள்ள சிறிய ஸ்பிரட்ஷீட்டின் மீது கிளிக் செய்து முன்பு செய்தது போலவே தேர்ந்தெடுத்து அமைத்திடவும்.

இதில் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். நெட்டு வரிசை (column) மற்றும் படுக்கை வரிசை ( row) ஆகிய இரண்டினையும் கட்டாயம் அமைத்திட வேண்டும் என்பதில்லை. எது ஒன்று வேண்டும் என்றாலும் அதனை மட்டும் அமைத்திடலாம்.

5. இவற்றை எல்லாம் தேர்ந்தெடுத்த பின்னர் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடினால் தேர்ந்தெடுத்தபடி ஒர்க் ஷீட் அச்சிடப்படும்.

நன்றி.தினமலர்

நூர்
26-10-2010, 11:11 AM
அக்டோபர் 11,2010

கேள்வி: சமீபத்தில் என்னுடைய எக்ஸ்பி கம்ப்யூட்டரில் ஸ்கைப் பதிந்தேன். ஆனால் இன்டர்நெட்டில் இருக்கையில் அதனை இணைத்துப் பயன்படுத்த முடியவில்லை. கம்ப்யூட்டரில் மெக் அபி செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்பும் உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது? ஸ்கைப் இயங்காதா?

– என். சந்தோஷ் ராஜா, திருமங்கலம்

பதில்: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பயர்வால், ஸ்கைப் இன்டர்நெட்டுடன் இணைக்கப்படுவதனைத் தடுக்கிறது. பயர்வால் தொகுப்புகள் இந்த வகையில் இரண்டு வழிகளில் செயல்படுகின்றன.

தொடர்பு கொள்ள முயற்சிக்கும் சாப்ட்வேர் இயங்கும் தன்மை மற்றும் அந்த சாப்ட்வேர் தன்னைக் காட்டிக் கொள்ளும் தன்மை.

இந்த இரண்டும் பயர்வால் தொகுப்புடன் ஒத்துப் போகவில்லை என்றாலோ, அல்லது அதற்கு அனுமதி தரப்படவில்லை என்றாலோ, இது போல தொடர்பு கிடைக்காத நிலை உருவாக்கப்படும்.

உங்கள் மெக் அபி அதைத்தான் செய்கிறது. இதனை எளிதாகச் சரி செய்திடலாம். ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும். மெக் அபி செக்யூரிட்டி சென்டரைத் திறக்கவும். இடது புறமாக உள்ள, பெர்சனல் பயர்வால் ப்ளஸ் ஐகானில் கிளிக் செய்திடவும்.

இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்கள் பட்டியலிடப்படும். இதில் Skype.exe என்று உள்ள வரி அருகே கர்சரைக் கொண்டு வரவும். இதன் அருகே உள்ள டெக்ஸ்ட் மீது ரைட் கிளிக் செய்திடவும். அப்போது கிடைக்கும் மெனு பட்டியலில் Allow Full Access என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் இந்த விண்டோவினை மூடவும். இனி ஸ்கைப் தொகுப்பிற்கு இணைப்பு கிடைக்கும்.

கேள்வி: நான் ஒரு தணிக்கை நிறுவனம் நடத்தி வருகிறேன். இதில் என் வாடிக்கையாளர்களின் கணக்கு வழக்குகளை, கம்ப்யூட்டரில் போட்டு வைத்துள்ளேன்.

பழைய கம்ப்யூட்டரை டிஸ்போஸ் செய்திட முடிவு செய்துள்ளேன். அதில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை கழட்டி, சுத்தியலால் தட்டி உடைத்தால் மட்டுமே, அதில் உள்ள டேட்டா மற்றவர்கள் முயற்சிக்கையில் கிடைக்காது என்று சொல்கின்றனர். உண்மையா? வேறு வழிகள் உள்ளனவா?

–பி.மருதராஜன், மதுரை

பதில்: தயவு செய்து இந்த வழியைப் பின்பற்ற வேண்டாம். பழைய கம்ப்யூட்டரை வந்த விலைக்கு விற்பனை செய்கையில், ஹார்ட் டிஸ்க்கை கழட்டிக் கொண்டு, கொடுத்துவிடுங்கள். அதற்கு முன் அந்த ஹார்ட் டிஸ்க் இயங்கும் நிலையில் எரேசர் (Eraser) போன்ற புரோகிராம்கள் மூலம் அழித்துவிடலாம்.

இந்த புரோகிராமினை இயக்குகையில், எத்தனை முறை இதில் எழுதி அழிக்க (number of ‘passes’) எனக் கேட்கப்படும். மூன்று அல்லது நான்கு என கொடுத்து அழித்துவிடலாம்.

கழற்றி வைத்து சுத்தியலால் தட்டினால், சிறிய துகள்கள் எகிறி வெளியே வந்து உங்கள் கண், காது, மூக்குக்குள் நுழைய வாய்ப்புகள் உண்டு. ஏன் இந்த ரிஸ்க்?

கேள்வி: என் நண்பர்கள் குழுவிலிருந்து சில பைல்கள் அட்டாச் ஆகி வந்தன. அவற்றின் துணைப் பெயர்கள் .wmv மற்றும் .pps. ஆனால் இவற்றின் மீது டபுள் கிளிக் செய்தாலும் திறக்கவில்லை. இவை எந்த புரோகிராம் கொண்டு திறக்க வேண்டும். அவை எங்கு கிடைக்கும்?

–சி.கே. ரஞ்சித் குமார், நங்கநல்லூர்

பதில்: இவை உங்களிடம் இல்லாத புரோகிராம் கொண்டு அமைக்கப்பட்ட பைல்களாகும். இருப்பினும் இன்று எந்த புரோகிராமினையும் திறக்க உதவும் அப்ளிகேஷன்களை இலவசமாக இணையத்தில் வைத்தே திறக்கலாம்.

இணைப்பில் வந்த என்ற துணைப் பெயருடன் வந்த பைலை உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் விண்டோஸ் மீடியா பிளேயர் என்ற புரோகிராம் மூலம் திறக்கலாம். இது ஒரு வீடியோ கிளிப். முதலில் இணைப்பில் வந்துள்ள பைலை டவுண்லோட் செய்து
உங்கள் கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப்பில் வைக்கவும்.

பின்னர், அதன்மீது டபுள் கிளிக் செய்தால் தானாக இந்த பைல் திறக்கப்படும். இதற்கும் இயக்கப்படவில்லை என்றால், நீங்களாக விண்டோஸ் மீடியா பிளேயரைத் திறந்து, இந்த பைலின் ஐகானை இழுத்து அதில் விட்டாலே போதும். பைல் இயக்கப்படும். விண்டோஸ் மீடியா பிளேயர் இயங்கவில்லை என்றால்,

இதற்கு இணையான நிறைய புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் வி.எல்.சி. என்னும் புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும். துணைப் பெயர் கொண்ட பைல் மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட் என்னும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் உருவாக்கப்பட்டதாகும்.

எம்.எஸ். ஆபீஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இல்லை என்றால், இதற்கான இலவச வியூவர் தொகுப்பின் மூலம் நீங்கள் இதனைக் காணலாம். இணையத்தில் இதனைப் பெறலாம்.

கேள்வி: விஸ்டா ஹோம் பிரிமியம் சிஸ்டத்துடன் என் கம்ப்யூட்டர் இயங்குகிறது. மைக்ரோசாப்ட் டிஜிட்டல் மீடியா கீ போர்டு பயன்படுத்துகிறேன். இதில் திடீரென எஸ் கீ செயல்பட மறுக்கிறது. இதனை மற்ற கம்ப்யூட்டரில் இணைக்கும் போதும் அந்த கீ இயங்கவில்லை. ஷிப்ட் கீயுடனும், கண்ட்ரோல் கீயுடனும் சேர்த்து அழுத்திய போதும் இது இயங்கவில்லை. இதனை எப்படி சரி செய்திடலாம்?

–ஆர். முருகதாஸ், மதுரை

பதில்: கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் மிக அதிகமாக வெளியே உள்ள தூசியால் பாதிக்கப்படுவது கீ போர்டு தான். இதனை நாம் வெளியே மட்டும் ஒரு துணி கொண்டு சுத்தம் செய்தால் போதாது.

கீ போர்டு இணைப்புகளை நீக்கிவிட்டு, தனியே எடுத்து, அதனைப் பின்புறமாகக் கழற்றி, உள்ளே இருக்கும் தூசுகளை அறவே நீக்கி மறுபடியும் சரியாக அனைத்தையும் இணைத்துப் பார்க்கவும்.

நிச்சயமாய் எஸ் கீ இயங்கும். இன்னொரு வழியும் உள்ளது. மேலாக கீயினை மட்டும் பாதுகாப்பாக நீக்கியும் பார்க்கலாம். ஏதேனும் உணவுத் துகள், அல்லது வேறு ஒரு சிறிய துகள் இருக்கலாம். ஆனால் இது சற்று ரிஸ்க்கான சமாச்சாரம். கீ இணைப்பு உடைந்து போகலாம்.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 பயன்படுத்துகிறேன். இதில் பிரவுஸ் செய்கையில் டிபக்கர் (debugger) பயன்படுத்த வேண்டுமா? என்று கேள்வி கேட்டு ஒரு பாப் அப் பாக்ஸ் கிடைக்கிறது.

இதனைப் பயன்படுத்துவதா? வேண்டாமா? என்று தெரியவில்லை. சில நேரங்களில் Microsoft Visual Studio Debugger என ஒரு பாக்ஸ் கிடைக்கிறது. இதனைக் கேன்சல் செய்வதற்கும் பட்டன் இல்லை. என்ன செய்ய வேண்டும் என்று வழி காட்டவும்.

–எம். கோவிந்தராஜ், திண்டுக்கல்

பதில்:இந்த ஆப்ஷன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளப் பக்கத்தினை எடிட் செய்திடலாம். இது ஏன் நமக்குத் தரப்படுகிறது என எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் இதன் மூலம் இணையப் பக்கத்தினைச் சரி செய்தாலும், அது உள்ள சர்வரில் அதனை மேற்கொள்ள முடியாது.

எனவே இந்த ஆப்ஷனைத் தவிர்த்து விடவும். மேலும் இது போல ஆப்ஷன் வராமல் இருக்கக் கீழ்க்கண்டபடி செயல்படவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கவும். Tools கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Internet Options தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Advanced டேப் தேர்ந்தெடுக்கவும்.

இதில் ஸ்குரோல் செய்து கீழாக Browse செக்ஷன் செல்லவும். Disabel Script Debugging (Internet Explorer), Disable Script Debugging (Others) என்பதில் கிளிக் செக் செய்திடவும். இந்த வரிகள் முன் உள்ள பாக்ஸ்களில் டிக் அடையாளம் இருக்க வேண்டும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடி, மீண்டும் இயக்கவும்.

கேள்வி: கல்லூரி பயன்பாட்டிற்கென டெல் லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கிப் பயன்படுத்துகிறேன். இதில் விண்டோஸ் 7 மற்றும் மெக் அபி ஆண்ட்டி வைரஸ் இயங்குகிறது. இதில் இன்டர்நெட் பிரவுஸ் செய்கையில்,

சில நாட்களாக, இணையப் பக்கங்களின் மேலாக, விளம்பரங்கள் வருகின்றன. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் செட்டிங்குகளில் என்ன அமைப்பு மேற்கொண்டாலும், மீண்டும் மீண்டும் இவை வருகின்றன. இதனை எப்படி தடுக்கலாம்? ஸ்பை பாட் அமைத்து தடுக்க முயன்றால், மெக் அபி இயங்குவது தடைபடுமா?

–கே.டி. ஸ்நேகா சுரேஷ், கோவை


பதில்: நீங்கள் எழுதியுள்ளதிலிருந்து, இந்த விளம்பரங்கள் ரோல் ஓவர் என்று சொல்லப்படும் வகையில், தனி சிறிய விண்டோவாக, உங்கள் இணையப் பக்கங்களின் மேலே காட்டப் படுகின்றன. இதனை பாப் அப் பிளாக்கர் என்னும் இவற்றைத் தடை செய்திடும் வசதி மூலம் நிறுத்தலாம்.

இவை பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ளன. இவற்றை செட் செய்த பின்னரும் கிடைக்கிறது என்றால், உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு ஸ்பைவேர் வந்து தங்கி இருக்கலாம்.

இதனை ஸ்பை ஸ்பாட் அல்லது வேறு ஒரு ஸ்பை வேர் புரோகிராம் கொண்டு நீக்கலாம். இவற்றை இன்ஸ்டால் செய்து இயக்கினால், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இயங்குவதில் பிரச்னை ஏற்படாது. இரண்டு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பதிந்து, இரண்டை யும் ஒரே நேரத்தில் இயக்கினால்தான், பிரச்னை ஏற்படும்.

நன்றி.தினமலர்

நூர்
26-10-2010, 11:25 AM
அக்டோபர் 18,2010

http://img.dinamalar.com/data/uploads/E_1287396156.jpeg

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். இதில் இணைய தளத்திலிருந்து கிடைக்கும் டாகுமெண்ட் பைலை, பிரவுசரில் இருந்த படியே திறந்தால், அவற்றை சேவ் செய்திட முடியவில்லை. ஒரு சின்ன பாப் அப்பில், ""இந்த பைல் ரீட் ஒன்லி; எனவே சேவ் செய்திட முடியாது?'' என்று பிழைச் செய்தி கிடைக்கிறது. எப்படி சேவ் செய்திடலாம்.

–கா. சிவக்குமார், பழநி

பதில்: பிரவுசர் மூலம் ஒரு பைலை பிரவுசரில் திறக்கும்போது, அந்த பைல் டெம்பரரி (Temporary) போல்டரில் இறக்கப்பட்டு ரீட் ஒன்லி (Read Only) பைலாகத்தான் திறக்கப்படும்.

எனவே பைலை வேறு ஒரு போல்டருக்கு மாற்றி Save பட்டன் அழுத்தி சேவ் செய்திடலாம். அல்லது,வேறு ஒரு போல்டரில் சேவ் செய்து பின்னர் திறந்து படிக்கலாம். தேவை இல்லை என்றால் அழித்துவிடலாம்.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 பயன்படுத்துகிறேன். இதில் பிரவுஸ் செய்கையில் டிபக்கர் (debugger) பயன்படுத்த வேண்டுமா? என்று கேள்வி கேட்டு ஒரு பாப் அப் பாக்ஸ் கிடைக்கிறது.

இதனைப் பயன்படுத்துவதா? வேண்டாமா? என்று தெரியவில்லை. சில நேரங்களில் Microsoft Visual Studio Debugger என ஒரு பாக்ஸ் கிடைக்கிறது. இதனைக் கேன்சல் செய்வதற்கும் பட்டன் இல்லை. என்ன செய்ய வேண்டும் என்று வழி காட்டவும்.

–எம். கோவிந்தராஜ், திண்டுக்கல்

பதில்:இந்த ஆப்ஷன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளப் பக்கத்தினை எடிட் செய்திடலாம். இது ஏன் நமக்குத் தரப்படுகிறது என எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் இதன் மூலம் இணையப் பக்கத்தினைச் சரி செய்தாலும், அது உள்ள சர்வரில் அதனை மேற்கொள்ள முடியாது.

எனவே இந்த ஆப்ஷனைத் தவிர்த்து விடவும். மேலும் இது போல ஆப்ஷன் வராமல் இருக்கக் கீழ்க்கண்டபடி செயல்படவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கவும். Tools கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Internet Options தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Advanced டேப் தேர்ந்தெடுக்கவும்.

இதில் ஸ்குரோல் செய்து கீழாக Browse செக்ஷன் செல்லவும். Disabel Script Debugging (Internet Explorer), Disable Script Debugging (Others) என்பதில் கிளிக் செக் செய்திடவும். இந்த வரிகள் முன் உள்ள பாக்ஸ்களில் டிக் அடையாளம் இருக்க வேண்டும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடி, மீண்டும் இயக்கவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு வாழ்த்துக் கவிதையினை அழகாக அமைத்துள்ளேன். இதன் பின்புலத்தில், நானும் என் தோழியும் உள்ள படம், கிரே கலரில் பேக் கிரவுண்ட் போல, ரூபாய் நோட்டில் உள்ளது போல, ஒரு வாட்டர்மார்க்காக அமைய வேண்டும். இதனை எப்படி உருவாக்குவது?

–பெயர் வேண்டாம் என்ற விண்ணப்பத்துடன் திருப்பூர் வாசகர்

பதில்: பரவாயில்லை, கண்டிஷனுடன் பதில் கேட்கிறீர்கள். இது பலருக்கும் உதவும் என்பதால் சற்று விளக்கமாகவே தருகிறேன்.

முதலில் குறிப்பிட்ட வேர்ட் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் இணைக்க விரும்பும் இமேஜ் அல்லது போட்டோவினைத் தேர்ந்தெடுத்து இன்ஸெர்ட் செய்திடவும்.

இப்போது பிக்சர் டூல் பார் திறக்கப்படும். இல்லை என்றால், படத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று, ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில், பிக்சர் டூல்பார் என்பதில் கிளிக் செய்திடவும்.

திரையில் தனியே பிக்சர் டூல்பார் கிடைக்கும். இந்த டூல்பாரில் கலர் என்பதில் கிளிக் செய்க. இப்போது தரப்படும் கீழ் விரி மெனு ஆப்ஷன்களில், வாஷ் அவுட் என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் படம் வண்ணத்தில் இருந்தால், படம் கலரில் வாட்டர்மார்க் ஆக இருக்கும். அதற்குப் பதிலாக கருப்பு வெள்ளையில் இருக்க வேண்டும் என விரும்பினால், மீண்டும் பிக்சர் டூல் பார் சென்று, கலர் என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் கிரே ஸ்கேல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

மறுபடியும் வாஷ் அவுட் என்பதில் கிளிக் செய்திட வேண்டும். இந்த வாட்டர்மார்க்கில் ஏதேனும் உங்களுக்குப் பிடித்த சொற்களையும் அமைக்க வேண்டும் என்றால், படத்தின் மீது வலது கிளிக் செய்து, கிடைக்கும் விருப்பப் பட்டியலில், வேர்ட் ராப்பிங் என்பதனைத் தேர்ந்தெடுத்து டெக்ஸ்ட் அமைக்கவும்.

இப்போது படம் உங்கள் டாகுமென்ட்டில் நீங்கள் கேட்டபடி வாட்டர் மார்க்காக அமையும். உங்கள் டாகுமெண்ட் பல பக்கங்களில் அமைந்து, அவை ஒவ்வொன்றிலும் இந்தப் படம் வேண்டும் என்றால், மேலே குறிப்பிட்ட செயல்பாடுகள் அனைத்தையும், ஹெடர் அல்லது புட்டரில் அமைக்க வேண்டும்.

கேள்வி: போட்டோ ஷாப் புரோகிராம் மூலம், ஒரு சிறிய டெக்ஸ்ட் அடிப்படையிலான டிசைன் ஒன்று தயார் செய்து என் நண்பருக்கு அனுப்பினேன். அவர் அதில் எழுத்துக்கள் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார். எதனால் இப்படி ஏற்படுகிறது?

–ஆ. சியாமளா, மதுரை

பதில்: நீங்கள் பயன்படுத்திய பாண்ட் பைல் அவருடைய கம்ப்யூட்டரில் பாண்ட்ஸ் போல்டரில் இல்லாமல் இருக்கலாம். எனவே நீங்கள் பயன்படுத்திய எழுத்து வகைகளின் பட்டியலை எடுத்து, அந்த எழுத்து வகை கோப்புகள் அனைத்தும் அவரின் பாண்ட்ஸ் போல்டரில் உள்ளனவா என்று பார்க்கச் சொல்லுங்கள்.

நீங்கள் ஒரே ஒரு பாண்ட் வகையிலேயே முழு பைலும் தயாரித்திருந்தால், அந்த பாண்ட் பைலை அவருக்கு அனுப்பி, அவரின் பாண்ட்ஸ் போல்டரில் இன்ஸ்டால் செய்து பின்னர், போட்டோ ஷாப் பைலைப் பார்க்கச் சொல்லுங்கள். அல்லது அந்த பாண்ட்பைல்கள், இணையத்தில் கிடைக்கும். அவற்றை அவர் டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடலாம்.

கேள்வி: நான் பென்டியம் 2 சிப் கொண்ட கம்ப்யூட்டர் வைத்திருக்கிறேன். இதற்குப் பதிலாக இன்டெல் கோர் ஐ7 சிப்பினை இணைக்க விரும்புகிறேன். மதர்போர்டினை மாற்ற வேண்டுமா? இப்போதைய மதர்போர்டையே பயன்படுத்தலாமா?

–கி. சுஜாதா, திண்டுக்கல்

பதில்: ஐ7 சிப்பினை சப்போர்ட் செய்திடும் புதிய மதர்போர்டுக்கு மாற வேண்டும். பழைய மதர்போர்டு நீங்கள் குறிப்பிடும் சிப்பிற்கு உதவாது. ஒவ்வொன்றாக புதியதாக வாங்கி மாற்றுவதற்குப் பதிலாக, இப்போதைய கம்ப்யூட்டரை உபரி கம்ப்யூட்டராக வைத்துக் கொண்டு, புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கிக் கொள்ளுங்களேன். நீங்கள் கம்ப்யூட்டரை வைத்து டி.டி.பி. வேலை செய்வதாக எழுதி உள்ளீர்கள். அதுவே சிறந்த மாற்று வழி.

கேள்வி: ஷட் டவுண் செய்திடுகையில், ஷிப்ட் கீயை அழுத்திப் பிடித்தால், ஸ்டேண்ட் பை மோட், ஹைபர்னேட் மோடுக்குச் செல்லவில்லை. இதனை எப்படிக் கொண்டு வருவது?

–கா. அழகுராஜ், நத்தம் மேடு

பதில்: ஹைபர்னேஷன் செயல்பாட்டை இயக்க, கண்ட்ரோல் பேனல் செல்லவும். அதில் பவர் ஆப்ஷன்ஸ் போல்டரைத் திறக்கவும். இதில் கிடைக்கும் ஹைபர்னேட் டேப்பில், எனேபில் ஹைபர்னேஷன் என்னும் வரிக்கு எதிரே டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இனி உங்களுக்கு இந்த ஆப்ஷன் கிடைக்கும்.

கேள்வி: என் ஜிமெயில் காண்டாக்ட் முகவரிகளை பேக் அப் எடுத்துவைத்துப் பயன்படுத்த முடியுமா? பேக் அப் எடுப்பது எப்படி என டிப்ஸ் தரவும்.

–ஆ. மல்லிகா, அம்மா பேட்டை, வடக்கனேந்தல்

பதில்: முதலில் உங்கள் அக்கவுண்ட்டில் சென்று, பக்கத்தினைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர், அருகே தனியே தரப்பட்டிருக்கும் பிரிவில் காண்டாக்ட்ஸ் என்பதில் கிளிக் செய்திடுங்கள்.

இனி எக்ஸ்போர்ட் என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு ஒரு ஆப்ஷன் கேட்கப்படும். அனைத்து காண்டாக்ட்களுக்கும் பேக் அப் தேவையா? அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கா என்று, நீங்கள் விரும்பியபடி ஆப்ஷன் தேர்வு செய்திடவும்.

இதனைத் தேர்ந்தெடுத்த பின்னர், எக்ஸ்போர்ட் என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து சேவ் டு டிஸ்க் என்பதில் கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் ட்ரைவ் மற்றும் போல்டரைத் தேர்வு செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திட, காண்டாக்ட்ஸ் அனைத்தும் தேர்ந்தெடுத்தபடி பைலாக சேவ் ஆகும். இது சி.எஸ்.வி. பார்மட்டில் இருக்கும்.

கேள்வி: என் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகி, அனைத்து சோதனைகளும் முடிந்து, மானிட்டரில் டெஸ்க்டாப் காட்சி வந்தவுடன், மறுபடியும் ரீஸ்டார்ட் மோடுக்குச் செல்கிறது.

அப்போது ஒரு எர்ரர் மெசேஜ் வேகமாக வந்து செல்கிறது. அதில் டி.எல்.எல். பைல் ஒன்று மிஸ்ஸிங் என்று வருகிறது. சேப் மோடில் சென்று இயக்கினாலும் இதே கதைதான். ரீ பார்மட் செய்திட வேண்டுமா?

–டி.மீனாட்சி நாயகம், கூடலூர்

பதில்: உங்கள் விண்டோஸ் சிஸ்டத்திற்கான முக்கியமான டி.எல்.எல். பைல்கள் கெட்டுப் போயிருக்கலாம். எர்ரர் செய்தியில் எந்த டி.எல்.எல். பைல்கள் என்று காட்டப்பட்டால், அவற்றை சிஸ்டம் சிடிக்களில் இருந்து காப்பி செய்து, பின்னர் இயக்கிப் பார்க்கலாம்.

அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கியிருந்தால், உடன் ரெகவரி சிடி ஒன்று கொடுத்திருப்பார்கள். அதன் மூலம் சிஸ்டத்தினை இயக்கிப் பின்னர், ரெகவர் செய்திடுமாறு கட்டளை கொடுத்தால், பிழையான பைல்களின் பதிலுக்கான பைல்கள் தானாக காப்பி ஆகும்.

அல்லது அனைத்து சிஸ்டம் பைல்களையும் காப்பி செய்திடலாம். இவை எதுவும் பலனளிக்காத பட்சத்தில், ஹார்ட் டிஸ்க்கின் சி ட்ரைவினை ரீபார்மட் செய்திடலாம். விண்டோஸ் சிஸ்டத்தினை மீண்டும் பதித்திடலாம். அருகில் உள்ள டெக்னீஷியன் ஒருவரின் உதவியை நாடவும்.

நன்றி.தினமலர்

நூர்
26-10-2010, 11:45 AM
அக்டோபர் 25,2010


கேள்வி: மெகாபைட் என்ற அளவில் இருப்பதை கிகா பைட் என்ற அளவில் சொல்ல வேண்டும். இதற்கான பார்முலா ஏதேனும் உள்ளதா?

- ஆ. பிரகாஷ், விழுப்புரம்

பதில்: இதற்கான பார்முலா இருக்கிறது. இதனை நீங்களாகவே கணக்குப் போட்டு சொல்லலாம். இதில் ஒன்றும் பெரிய பார்முலா இல்லை. சாதாரண கணக்குதான்.

ஒரு ஜிபி என்பது 1024 எம்பி. எனவே ஒரு எம்பி என்பதனை ஜிபி அளவில் சொல்ல வேண்டுமானால், அதனை 1024 ஆல் வகுக்க வேண்டும்.

எடுத்துக் காட்டாக, ஒரு எம்பி யை எடுத்துக் கொள்வோம். 1 எம்பி = 1/1024 ஜிபி.

அதாவது, 0.0009765625 ஜிபி. இதனையே 16 எம்பிக்குக் கணக்கிட்டால், 16 x 0.0009765625 ஜிபி. இதனைக் கணக்கிட்டால் கிடைப்பது 16 எம்பி=0.015625 ஜிபி.

இதே போல் கிகாபைட் அளவினை, மெகா பைட்டில் சொல்லலாம். 4 கிகா பைட், 4 x 1024 =4096 எம்பி. கூகுள் தளம் சென்றால், இந்த மாற்று அளவினை அதுவே

கணக்கிட்டு எளிதாகத் தரும்.கூகுள் தேடல் தளம் சென்று, தேடல் கட்டத்தில் Convert 128 Mb to Gb என்று கொடுத்துப் பாருங்கள்.

கேள்வி: நான் தமிழை கம்ப்யூட்டரில் நன்கு பயன்படுத்தி வருகிறேன். சென்ற வாரம் என் நண்பர் அனுப்பிய ஒரு டாகுமெண்ட்டில், பாரா தலைப்பு தவிர மற்ற வரிகள் எல்லாம் நன்கு தெரிகின்றன. ஏன் இந்த குறைபாடு? ஸ்டைல் பார்மட்டிங்கினால் இது ஏற்படுகிறதா? என் நண்பர், அவருடைய கம்ப்யூட்டரில் நன்றாகத் தெரிவதாகவும், அந்த டாகுமெண்ட் தன் நண்பர் அனுப்பியதாகவும் கூறுகிறார். வழி சொல்லவும்.

- ஆ. செந்தமிழ்ச் செல்வன், மதுரை

பதில்: இதில் சிக்கலே இல்லை, செந்தமிழ். பாரா தலைப்பு மட்டும் தனியான ஒரு தமிழ் எழுத்து வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகை பாண்ட் உங்கள் கம்ப்யூட்டரில் இல்லாமல் இருக்கலாம்.

அந்த தெரியாத சொற்களில் கர்சரை நிறுத்துங்கள். இப்போது அது எந்த பாண்டில் அமைக்கப்பட்டது என, வேர்ட் உங்களுக்குக் காட்டும். அந்த பாண்ட் பைலை இணையம் அல்லது நண்பரின் கம்ப்யூட்டரிலிருந்து பெற்று, இன்ஸ்டால் செய்திட்டால், அவற்றையும் நீங்கள் படிக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் 98 மற்றும் எக்ஸ்பி சிஸ்டங்களில், கர்சர் தெரிந்த அளவிற்கு, விண்டோஸ் 7ல் நன்றாகத் தெரியவில்லை. செட்டிங்ஸ் சென்று எப்படி இதனை நாம் விரும்பும் வகையில் மாற்றலாம்?

- டி. கமலா, கோவை

பதில்: பொதுவாக சிஸ்டங்கள் மாற்றப்படுகையில், அனைத்தும் புதிய முறையில் தரப்படுவதால், இது போன்ற சில விஷயங்கள் நம்மை உறுத்தும். பழகினால் சரியாகிவிடும். இருப்பினும், நம் விருப்பப்படி கர்சர் இயக்கத்தினை மாற்றிக் கொள்ள வழிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.

முதலில் Start அழுத்தி Search Box சென்று “Keyboard” என டைப் செய்திடவும். அடுத்து, கண்ட்ரோல் பேனல் விண்டோ பெற்று “Keyboard” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்களுடைய கீ போர்டு ப்ராப்பர்ட்டீஸ் பாப் அப் விண்டோ கிடைக்கும்.

இந்த விண்டோவில் கர்சர் பிளிங்க் ரேட் (blink rate) என இருக்கும் இடத்தில், உங்களுக்கு என்ன ஸ்பீட் வேண்டுமோ அதனை அமைக்கவும். இந்த மாற்றத்தை, விண்டோஸ் தொகுப்புகளில், விண்டோஸ் 7 தொகுப்பில் மட்டுமின்றி அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் அமைக்கலாம். கண்ட்ரோல் பேனலில் இந்த வசதி கிடைக்கும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்புளோரரில் சிஸ்டம் பைல்களைத் தேடுகையில், அவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்ற செய்தி வருகிறது. நீங்கள் தரும் டிப்ஸ் மற்றும் ஆபத்துக் கால உதவிகளில், இவற்றை காப்பி எடுத்து வைக்கச் சொல்கிறீர்கள். எப்படி இவற்றைப் பெறுவது? எப்போதும் பெறக் கூடிய வகையில் அமைப்பது எப்படி?

- சி.கனகவேல், பழனி

கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்கள், சிஸ்டம் பைல்களைக் கையாண்டு அதில் எந்த பிரச்னையும் செய்துவிடக் கூடாது என்ற முன் எச்சரிக்கைக்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கட்டாயம் பார்க்க வேண்டும் என்றால், அதற்கான வழி இருக்கிறது.

அந்த வழி இதோ: Start பட்டன் அழுத்துங்கள். Control Panel ஐத் திறக்கவும். Folder Options என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் View டேப்பினைக் கிளிக் செய்திடவும்.

அதில் Show Hidden Files and Folders என்று இருக்கும் வரியின் முன் உள்ள ரேடியோ பட்டனில், மவுஸால் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். இனி சிஸ்டம் பைல்களை, மறைத்தபடியே வைத்திட Hide Protected Operating System Files என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இது எப்போதும் நல்லது. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் சிலவற்றை ஒரு சிடியில் பதிந்து என் உயர் அதிகாரியிடம் தர வேண்டியுள்ளது. இந்த பைல்கள் போல்டரில் அங்கும் இங்குமாக உள்ளது. இவற்றின் மொத்த அளவு எவ்வளவு இருக்கும் என எப்படி அறிவது?

- ஆ. காமராஜ், மதுரை

பதில்: இரண்டு வழிகள் உள்ளன. புதிய போல்டர் ஒன்றை உருவாக்குங்கள். மற்றவற்றில் இருந்து அடையாளம் காண, உங்கள் அதிகாரி பெயரையே அதற்கு சூட்டுங்கள். இப்போது அவருக்கு காப்பி செய்ய வேண்டிய பைல்களைத் தேர்ந்தெடுத்து, இந்த போல்டரில் இடுங்கள். பின்னர், அவை அனைத்தையும் தேர்ந்தெடுத்து, அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்தால், எத்தனை பைல்கள், அவற்றின் மொத்த அளவு எவ்வளவு என்று காட்டும்.

அல்லது அந்த பைல்களை, இருக்கும் ட்ரைவிலேயே, அதன் போல்டரில், கண்ட்ரோல் அழுத்தித் தேர்ந்தெடுத்து, பின்னர் அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து, ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்தும் பார்க்கலாம். மொத்த அளவு தெரிந்த பின்னர், ஒரு சிடி போதுமா, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சிடி வேண்டுமா என முடிவு செய்திடலாம்.

போல்டரில் போட்டு வைத்தால், சிடியில் காப்பி செய்திடுகையில் உதவும். காப்பி செய்த பின்னர், போல்டரையே அழித்துவிடலாம்.

கேள்வி: சற்று அதிக நேரம் கம்ப்யூட்டரிலிருந்து விலகிச் செல்ல எண்ணுகையில், அதனை ஷட் டவுண் செய்திடாமல், ஸ்லீப் மோடில் வைத்துவிட்டுச் செல்கிறேன். ஆனால் என்னுடைய மவுஸின் உணர்வு திறன் மிகவும் ஷார்ப்பாக இருப்பதால்,

அருகில் வேறு எதனையாவது தொட்டுவிட்டால், உடனே கம்ப்யூட்டரை இயக்கத்திற்குக் கொண்டு வந்து விடுகிறது. இதனைத் தடுக்க முடியுமா? நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன்.

- சி. குமரேசன், பொள்ளாச்சி

பதில்: Start கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் Mouse என்று டைப் செய்திடவும். பின்னர் என்டர் தட்டவும். இப்போது உங்களுக்கு மவுஸ் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் Hardware டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

கீழாக Properties என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Power Management என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இந்த டேப் இல்லை என்றால், விண்டோவின் கீழாக Change Settings என்று இருக்கும் பட்டனில் கிளிக் செய்திடவும்.

இங்கு Allow this device to wake the computer என்று இருப்பதில் டிக் அடையாளத்தினை எடுத்து விடவும். இனி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் மவுஸ் தொல்லை கொடுக்காது. இப்படியே எந்த சாதனமும் உறங்கும் கம்ப்யூட்டரை எழுப்பாமல் அமைக்கலாம்.

கேள்வி: வேர்டில் டாகுமெண்ட்களை அமைக்கையில், என் பெயரினை, வேர்ட் தானாக அமைத்திடுமா? என் நண்பர் அனுப்பும் வேர்ட் டாகுமெண்ட்களில் இது போல் உள்ளது. இதனை எப்படி செட் செய்வது?

- கா. சுந்தர வள்ளி, சென்னை

பதில்: கம்ப்யூட்டர் உங்கள் பெயரில் அமைக்கப் பட்டிருந்தால், தாராளமாக அமைக்கலாம். அதாவது, சிஸ்டம் இன்ஸ்டால் செய்கையில் கம்ப்யூட்டர் உரிமையாளரின் பெயர் அல்லது யூசர் அக்கவுண்ட்டில் உங்கள் பெயர் இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, கடிதங்களை டாகுமெண்ட்டாக அமைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் அனுப்புபவர் முகவரியில் உங்கள் பெயர் இருக்க வேண்டும் எனில் இதன் மூலம் அமைக்கலாம். முதலில் நீங்கள் இணைக்க விரும்பும் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள்.

எங்கு உங்கள் பெயர் இருக்க வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு சென்று நிறுத்துங்கள். அடுத்து, இன்ஸெர்ட் மெனுவில் இருந்து, பீல்ட் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் பீல்ட் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

இங்கு காணப்படும் கேடகிரீஸ் லிஸ்ட்டில், யூசர் இன்பர்மேஷன் என்பதனைத் தேர்ந்த்டுக்கவும். இனி, பீல்டு நேம்ஸ் லிஸ்ட்டில், யூசர் நேம் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி இந்த இடத்தில், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் யூசரின் பெயர், தானாக அமைக்கப்படும். யூசரின் பெயரை மாற்றினால், இதுவும் தானாகவே மாறும்.

கேள்வி: உண்மையாகக் கூறுங்கள். இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு, பத்திரிக்கைகள் கூறும் அளவிற்கா வளர்ந்துவிட்டது. இரண்டாம் நிலை நகரங்களில், இன்டர்நெட் வளர்ச்சி, கம்ப்யூட்டர் பரவிய அளவிற்குப் பரவவில்லை என்பதே என் கருத்து. உங்கள் பதில் என்ன?

- என். சேஷாத்ரிநாதன், சென்னை

பதில்: பல விஷயங்களை இணைத்து உங்கள் கேள்வி உள்ளது. அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக இதற்கான பதிலைத் தருகிறேன். கம்ப்யூட்டர் வளர்ந்த அளவிற்கு இன்டர்நெட் வளரவில்லை என்பது உண்மை.

ஏனென்றால், கம்ப்யூட்டர் மற்றும் சார்ந்த பொருட்களின் விலை குறைந்ததைப் போல, இன்டர்நெட் கட்டணம் குறைக்கப்படவில்லை. ஆனால் மத்திய அரசு, கிராமங்களில் இன்டர்நெட் பயன்பாட்டினை ஊக்குவிக்க, பல சலுகைத் திட்டங்களை வழங்கி வருகிறது.

இது போன்ற திட்டங்கள் இருப்பது மக்கள் அறியும் பட்சத்தில், நிச்சயம் இன்டர்நெட் பயன்பாடும் அதிகரிக்கும். அண்மையில் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி, சராசரியாக, இந்திய இன்டர்நெட் பயனாளர் ஒருவர், வாரத்திற்கு 3.5 மணி நேரம் பயன்படுத்துகிறார்.

எனவே, நாளொன்றுக்கு 26 நிமிடங்கள். வார இறுதி நாட்களில் இது 12% குறைகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாகவே, வார இறுதியில் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் 12% அதிக இன்டர்நெட் போக்கு வரத்து உள்ளது.

நன்றி.தினமலர்

நூர்
05-11-2010, 12:37 PM
http://img.dinamalar.com/data/uploads/E_1288671944.jpeg

நவம்பர் 01,2010,

கேள்வி: என் நண்பரின் கம்ப்யூட்டரில், மவுஸின் வழக்கமான கர்சருக்குப் பதிலாக, கண் சிமிட்டும் கர்சர் ஒன்றைப் பார்த்தேன். இதனை எப்படி தேர்ந்தெடுப்பது? அல்லது புரோகிராமாகக் கிடைக் கிறதா? என் ஆசையை நிறைவேற்ற பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- தி. ஷண்முக நாதன், திருப்புவனம்

பதில்: மவுஸின் வழக்கமான கர்சருக்குப் பதிலாக, பல வகை கர்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இதற்கு வழி காட்டும் முன் சில எச்சரிக்கைகளைத் தருகிறேன். இந்த கர்சர்கள் பெரும்பாலும் அனிமேஷன் எனப்படும் அசைந்திடும் வரைகலை உருவங்கள்தான்.

ஆனால், இவற்றின் மூலம் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்கள் இயங்குவதாகத் தகவல்கள் உள்ளன. ஆசையே அழிவிற்குக் காரணம் என்பதை எண்ணி, இந்த வகை ஆசைகளுக்குத் தடை போடுவதே நல்லது.

மேலும், இவை அனிமேஷன் வகை பைல்கள் என்பதால், உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரியில் எப்போதும் சற்று அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும்.


சரி, உங்கள் ஆசைக்குச் சரியான தீர்வு தரும் இணைய தளத்தைப் பார்ப்போம். இந்த வகை கர்சர்களைத் தரும் புரோகிராம் ஒன்று, பாதுகாப்பான, மால்வேர் புரோகிராம் எதுவும் இல்லாத தளம் ஒன்றில் உள்ளது.

www.download.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இங்கு (Cursor FX) கர்சர் எப் எக்ஸ் என்ற புரோகிராம் தேடி எடுத்து டவுண்லோட் செய்திடவும். டவுண்லோட் செய்து முடித்த பின்னர், இதனை இன்ஸ்டால் செய்திடவும்.

இன்ஸ்டால் செய்து முடித்தவுடன், இந்த புரோகிராமினைக் காண கண்ட்ரோல் பேனல் செல்லவும். இதில் My Cursors என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது மவுஸ் கர்சராகப் பயன்படுத்த என்ன என்ன கர்சர்கள் உள்ளன என்று காட்டப்படும்.

இதில் எந்த கர்சர் உங்களுக்குப் பிடிக்கிறதோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனை வழக்கமான கர்சருக்குப் பதிலாக அமைத்திட Activate என்பதில் கிளிக் செய்திடவும். இந்த கர்சர்கள் இயங்குவதில், சில கூடுதல் செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். Trails என்பதில் கிளிக் செய்து இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.


கூடுதலாக சிறிய அளவில் ஆடியோ இசையைக் கூட இதில் வெளிப்படுமாறு செய்திடலாம். ஆனால் அதற்குக் கட்டணம் செலுத்தி இந்த புரோகிராமை விலைக்கு வாங்க வேண்டும்.

கேள்வி: தமிழில் ஆவணம் ஒன்றை, நண்பரிடமிருந்து மின்னஞ்சல் வழியாகப் பெற்று படிக்க முற்படுகையில், அது வெறும் கட்டங்களாகக் காட்சி அளித்தது. நண்பரிடம் இது குறித்துக் கேட்கையில், அது யூனிகோட் எழுத்து முறை என்றும், அது என்னுடைய கம்ப்யூட்டரில் இல்லையா என்றும் கேட்டார். பின்னர் அதனை பி.டி.எப். ஆக மாற்றி அனுப்பினார். யூனிகோட் எழுத்து முறை என்பது என்ன?

- ஆர். நல்லசிவம், சென்னை


பதில்: யூனிகோட் என்பது பெரிய அளவில் உலக அளவிலான அனைத்து எழுத்துக்கள் மற்றும் சில குறியீடுகள் கொண்ட ஒரு கட்டமைப்பாகும். கம்ப்யூட்டரில் வெகு காலமாக ஆஸ்க்கி மற்றும் ஆன்ஸி குறியீட்டு முறைகளே பின்பற்றப்பட்டு வந்தன.

இவற்றைப் பயன்படுத்தி, 256 தனிக் குறியீடுகளே அமைத்துப் பயன்படுத்தி, கம்ப்யூட்டரில் காட்ட முடியும். உலக அளவில் அனைவரும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில், அவர்கள் மொழிகளுக்கான எழுத்துக்களை அமைக்கையில் இந்த முறை ஒத்துழைக்கவில்லை. இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டன.

ஏனென்றால் பல மொழிகளில் 256க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் இருக்கின்றன.
இந்த பிரச்னையைத் தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்டதுதான் யூனிகோட் கட்டமைப்பு. இந்த கட்டமைப்பில் ஒவ்வொரு எழுத்தும், குறியீடும் இரண்டு பைட்களில், அதாவது 16 பிட்களில் அமைக்கப்படுகின்றன.

இதனால் 65,536 தனிக் குறியீடுகளை அமைக்க முடியும். உலக அளவில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், மொழி ஆய்வாளர்கள் ஒரு குழுவாக அமைந்து உலக மொழிகள் அனைத்திற்கும் தனிக் குறியீடுகளை ஒரு பைலில் கொண்டு வந்தனர்.

இதுவே யூனிகோட் குறியீடு அமைப்பாகும். மேலும் சில வழிகளைக் கையாண்டு, இந்த தனிக் குறியீடுகளின் எண்ணிக்கையைப் பல லட்சமாக உயர்த்தவும் முடியும் என்று அறியப்படுகிறது.

தமிழ் உட்பட உலகின் அனைத்து மொழிகளும், யூனிகோட் கட்டமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. உங்கள் கம்ப்யூட்டரில் யூனிகோட் தமிழ் எழுத்துரு வேண்டும் எனில் ஏரியல் யூனிகோட் எம்.எஸ். என்ற பாண்ட் பைல் இருக்க வேண்டும்.

தமிழ் எழுத்துக்கள் லதா என்ற பெயரில் கிடைக்கும். இணையத்தில் தமிழ் யூனிகோட் தரக்கூடிய பைல்கள் நிறைய உள்ளன. இவற்றை டவுண்ட்லோட் செய்து, பாண்ட்ஸ் போல்டரில் போட்டு வைத்துக் கொண்டால், யூனிகோட் தமிழில் உருவாக்கப்பட்ட பைல்களை அந்த பாண்ட் வகைக்கு மாற்றிப் படித்துக் கொள்ளலாம்.

எக்ஸ்பி முதல் இப்போது வரும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வரை யூனிகோட் எழுத்துருக்களை சப்போர்ட் செய்கின்றன.

கேள்வி: நாங்கள் பலர் இப்போது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறிவிட்டோம். பல புது வசதிகளைப் பயன்படுத்துகிறோம். தங்கள் கணிப்பில், இதற்கான இமெயில் கிளையண்ட் புரோகிராமாக எதனை பரிந்துரை செய்கிறீர் கள்?

- ஆ. சி. கணேசன், திருவள்ளூர்

பதில்: பல இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் இதற்கென உள்ளன. இருப்பினும் இலவசமாகக் கிடைக்கும் இரண்டு புரோகிராம்கள் குறித்து இங்கு கூறுகிறேன்.

அவை விண்டோஸ் லைவ் மெயில் மற்றும் தண்டர்பேர்ட். விண்டோஸ் லைவ்மெயில் புரோகிராமினை இலவச மாக http://explore. live.com/windows-live-mail?os=other என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம். அடிப்படையில் இது அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸின் மேம்படுத்தப்பட்ட புரோகிராமாகும்.

விண்டோஸ் லைவ் மெயிலில், நம்முடைய மற்ற ஆன்லைன் இமெயில் அக்கவுண்ட்களை, ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ போன்றவற்றை இணைக்கலாம். இவ்வாறு அனைத்து இமெயில் அக்கவுண்ட்களையும் இதில் பார்க்கலாம். இதில் காலண்டர் ஒன்று இணைத்தே கிடைக்கிறது.

இதில் நடக்க இருக்கும் நிகழ்வுகளைக் குறித்து வைக்கலாம். ஆர். எஸ். எஸ். ரீடர் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் வைத்திருந்தால், அதனுடனும் இணைத்து, அதில் போட்டோக்கள் இருப்பின், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆன்லைன் இமெயில் அக்கவுண்ட்டிற்கு வரும் மெயில்களை, இதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் ட்ரைவில் பேக் அப் செய்து வைக்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இணைந்து பயன்படுத்த, இது ஒரு நம்பிக்கையான இமெயில் கிளையண்ட் புரோகிராமாகும். அடுத்ததாக, இதே போன்ற வசதிகளுடன் கூடிய புரோகிராம், தண்டர்பேர்ட் பதிப்பு 3 ஆகும். இதுவும் கிராஷ் ஆகாமல்,

நிலைத்து இயங்கக் கூடிய ஒரு புரோகிராம். பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் புதிய காண்டாக்ட் சேர்க்க அனுப்பு பவரின் பெயர் அருகே உள்ள ஸ்டாரை அழுத்தினால் மட்டும் போதும். பிரவுசர் இயங்குவது போல, டேப்களில் மெசேஜ்களைத் திறந்து காட்டும்.

மிகச் சிறப்பான ஒரு விஷயம் இதனைப் பொறுத்தவரை என்னவென்றால், உங்கள் கடிதத்தில் “attachment” என்ற சொல் இருந்து, நீங்கள் பைல் எதுவும் அட்டாச் செய்யப் படாமல், மெயிலை அனுப்பினால், உடனே ""பைல் அட்டாச் செய்திட மறந்துட்டீங் களா?'' என்று நினைவூட்டும்.

தானாகவே மொஸில்லா மேற் கொள்ளும் அப்டேட்களை இணைத்துக் கொண்டு, நிலையாக அனைத்து வசதிகளையும் தரும். இந்த இரண்டில் எது மிகச் சிறந்தது என்று கேட்கிறீர்களா? அதனை நீங்கள் தான் முடிவு செய்திட வேண்டும். இரண்டையும் இறக்கிப் பதிந்து, பயன்படுத்திப் பார்த்து முடிவு செய்திடுக.

கேள்வி: நான் தொடர்ந்து பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகிறேன். புதியதாக நான் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கும் கம்ப்யூட்டரில், பழைய கம்ப்யூட்டரில் உள்ள பயர்பாக்ஸ் பிரவுசருக்கான புக்மார்க்குகளை, புதிய கம்ப்யூட்டருக்கு மாற்றுவது எப்படி?

- டி. பிரதீப் குமார், கோவை

பதில்: மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர் அதிர்ஷ்டவசமாக, அதன் புக்மார்க்குகளை பேக் அப் செய்து, இன்னொரு கம்ப்யூட்டருக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வழியைக் கொண்டுள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள்.

Bookmarks மெனுவில் கிளிக் செய்திடவும். இதில் Organize Bookmarks என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது லைப்ரேரி விண்டோ தரப்படும். இதில் Import and Backup என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

அடுத்து Backup ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இதில் கிளிக் செய்தவுடன், உங்களுக்கு Bookmarks backup filename என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். நீங்கள் தயாரிக்கும் பேக் அப் பைலுக்கு ஒரு பெயர் கொடுக்கவும். இந்த பைலில் தான், உங்கள் புக் மார்க்குகள் அனைத்தும் சேவ் செய்யப்படும்.

அடுத்து, சேவ் கிளிக் செய்திட பைல் உருவாகும். இதனை காப்பி எடுத்து வைத்துக் கொள்ளவும். இதிலிருந்து புக்மார்க்கு களை இன்னொரு கம்ப்யூட்டருக்கு எடுத்துச் செல்ல, அந்த கம்ப்யூட்டரில் பயர்பாக்ஸ் திறந்து, Bookmarks மெனு கிளிக் செய்து, Organize Bookmarks மெனு ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

லைப்ரேரி விண்டோ கிடைக்கும். இதில் Import and Backup என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். Restore என்பதில் கிளிக் செய்து, Choose File...... என்பதில் கிளிக் செய்திடவும்.

இப்போது Select a bookmarks backup என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த டயலாக் பாக்ஸில், நீங்கள் சேவ் செய்து வைத்த புக்மார்க் பைலைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் open என்பதில் கிளிக் செய் திடவும்.

இப்போது Revert Bookmarks என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் ஓகே பட்டன் கிளிக் செய்து, லைப் ரேரி விண்டோ வினை மூடவும். எடுத்து, சேவ் செய்து கொண்டு வந்த புக்மார்க்கு கள் அனைத் தும், புதிய கம்ப்யூட்டரில், பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைக்கும்.

நன்றி.தினமலர்.

நூர்
09-11-2010, 09:27 AM
நவம்பர் 08,2010.

http://img.dinamalar.com/data/uploads/E_1289205417.jpeg

கேள்வி: கேப்ஸ் லாக் போன்ற பட்டன்கள் இயக்கப் படுகையில், பீப் ஒலி எழுப்பும் வசதியினை எப்படி அமைப்பது? அத்துடன் அப்போது பிளாஷ் போன்று திரையில் ஏற்பட வேண்டும் எனில் என்ன செய்திட வேண்டும்?

–டி. நிரஞ்சன் விநாயகம், சென்னை

பதில்: இந்த வசதியினை அமைப்பது குறித்து அடிக்கடி நினைவு படுத்த வேண்டியுள்ளது. இருப்பினும் இந்த முறை பிளாஷ் அமைப்பது குறித்தும் பார்க்கலாம்.

1. Start பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Settings, Control Panel எனச் செல்லவும். (எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் ஸ்டார்ட் மற்றும் கண்ட்ரோல் பேனல் எனச் செல்லவும்) அதன் பின்னர் Accessibility Options ஐகான் மீது கிளிக் செய்து திறக்கவும்.

2. Keyboard tab டேப் தேர்ந்தெடுத்து, அதன் பின் “Use Toggle Keys” என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். அவ்வளவு தான்! இனி இந்த டாகிள் கீக்களை அழுத்தினால் பீப் ஒலி கிடைக்கும்.

இனி, திரை அதிர்வது குறித்து.

1. Accessibility Options திரையில் Sound tab என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் “Use SoundSentry” என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

2. அடுத்து செட்டிங்ஸ் என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி “Warning for windowed programs” என்ற கீழ்விரி மெனுவில் “Flash active window” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ப்ராப்பர்ட்டி அண்ட் செட்டிங்ஸ் திரை விலகும் வரை ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

அடுத்து உங்களுக்குப் பிரியமான வேர்ட் ப்ராசசரைத் திறந்து கேப்ஸ் லாக் கீயை அழுத்திப் பார்த்து நீங்கள் விரும்பியது கிடைத்துவிட்டதா எனப் பார்க்கவும்.

கேள்வி: நான் அனுப்பிய மின்னஞ்சல் கடிதம் ஒன்றை, பெறுபவர் அதனைப் படித்து விட்டார் என்று அறிய என்னவகையான செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்?

–கா. சூரியப் பிரகாஷ், கோவை

பதில்: நீங்கள் கேட்பது, மின்னஞ்சல் தொகுப்புகளில் உள்ள “read receipt” என்னும் வசதி பற்றி. இது நமக்கு நம் அஞ்சல் அலுவலகங்கள் தரும் பதிவுத்தபாலுக்கான அக்னாலட்ஜ்மெண்ட் கார்ட் போல. இதன் மூலம் நீங்கள் அனுப்பிய மெயில்,

யாருக்கு அனுப்பப்பட்டதோ, அவரால் திறந்து படிக்கப்பட்டது என அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்த வசதியினை அனைத்து இமெயில் சேவை தரும் நிறுவனங்களும் தருவதில்லை. இதனால் தனிநபர் உரிமை பாதிக்கப் படுவதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, யாஹூ, ஜிமெயில் மற்றும் ஹாட்மெயில் ஆகிய பிரபல இமெயில் நிறுவனங்கள் இந்த வசதியைத் தருவதில்லை. இன்கிரெடிமெயில் இந்த வசதியைத் தருகிறது. விண்டோஸ் மெயில் சர்வர் (முன்னால் அவுட்லுக்) இதனைத் தங்கள் மெயில் விண்டோவில், டூல்ஸ் மெனுவில் தருகிறது.


இதனைக் காட்டிலும் ஒரு நல்ல வழியைச் சொல்லட்டுமா! உங்கள் கடிதத்திலேயே, கடிதம் பெறுபவருக்கு, இதனைப் பெற்று படித்ததற்கான பதில் அஞ்சலை அனுப்பினால் மகிழ்ச்சி அடைவேன் என்ற குறிப்பினை அனுப்பவும். உங்கள் அன்பான குறிப்பை உணர்ந்து, அஞ்சலைப் பெறுபவர் நிச்சயம் பதிலளிப்பார்.

கேள்வி: டேட்டா பைல்களை ஸ்டோர் செய்திட, அதிக லேயர்கள் கொண்ட டிவிடி இருப்பதாகக் கேள்விப் பட்டேன். அதனைப் பற்றிய தகவல்களையும், பைல்களைக் காத்திட இந்த டிவிடிக்கள் பயனளிக்குமா என்றும் விளக்கவும்.

–எஸ். ÷ஷாபா தேவி, மதுரை


பதில்: டேட்டா பைல்களைப் பாதுகாப்பாக வைத்திட, டிவிடி எனப் பார்க்கையில் கோல்டு டிவிடியை (இது தங்கம் அல்ல, ஒரு வகையான டிவிடி) அனைவரும் பரிந்துரைக்கின்றனர். சோதனை செய்து பார்த்ததில் இது 15 ஆண்டுகளுக்கு தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என அறியப்பட்டுள்ளது.


ஆனால், எந்த வகை டிவிடி என்றாலும் அதில் ஏறத்தாழ 4.7 கிகா பைட் அளவிலான தகவல்களையே பதிய முடியும். மேலும் மேலும் அழித்து எழுதுவது முடியாது. இதனால், இறுதியாக பேக் அப் செய்தது தேவையில்லை என்றால், உடனே நம் பைல்கள் அடுத்தவர் பார்வைக்குச் செல்லாமல் இருக்க, அவற்றை சுக்கு நூறாக உடைப்பதுதான் ஒரே வழி.

டேட்டா ஸ்டோரேஜ் என்று வருகையில், எந்த வகை டிவிடி என்பது முக்கியமல்ல. எழுதிய பின் அவற்றை எப்படி பாதுகாப்பாக வைக்கிறோம் என்பதுதான் மிக முக்கியம். உலர்ந்த சீதோஷ்ண நிலையில் தான் அவற்றை வைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு வைத்திருக்கும் வரை பிரச்னை எதுவுமில்லை. உங்கள் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க மற்ற சில வழிகளும் உள்ளன. மெமரி கார்ட் இதில் ஒரு வகை. இவை டிவிடிக்களைக் காட்டிலும் அதிக அளவில் டேட்டா கொள்ளக் கூடியவை. இவற்றையும் முன்பு கூறிய படி உலர் சீதோஷ்ணத்தில் வைத்திட வேண்டும்.

இன்னொரு வழி, கம்ப்யூட்டருக்குள் வைத்திடாமல் தனியே வைத்து இயக்கும் ஹார்ட் டிஸ்க்குகளாகும். இப்போது இவை டெரா பைட் அளவுகளில் கிடைப்பதில், மிகப் பெரிய அளவில் பைல்களைப் பதிந்து வைக்கலாம்.

மற்றவற்றுடன் ஒப்பிடுகையில், பைல்களின் கொள்ளளவு அடிப்படையில், இதற்கு செலவழிக்கும் பணம் குறைவுதான். இதனை இந்த டிஸ்க் வரும் ஒரிஜினல் பாக்ஸில் வைத்துப் பாதுகாப்பதே நல்லது.

ஆனால் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். எந்த ஸ்டோரேஜ் வகை என்றாலும், அவை எந்த சூழ்நிலையிலும் பிரச்னைக் குள்ளாகி, நம் டேட்டா பைல்களைத் திரும்பத் தராத நிலைக்குத் தள்ளப் படலாம். எனவே கவனமாகவே, பல முன்னெச்சரிகை நடவடிக்கைகளுடன் இவற்றைக் கொள்ள வேண்டும்.

இதனால் கலவரம் அடைய வேண்டாம். சற்று கவனத்துடன் இவற்றைப் பயன்படுத்தவும், எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும், சமாளித்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தகவல். ஒன்றிற்கு இரண்டாக சேமித்து வைப்பதுவும், அடிக்கடி அவற்றைச் சோதனை செய்து, அவை தொடர்ந்து சரியாக உள்ளனவா என்று உறுதி செய்து கொள்வதும் தேவை.

கேள்வி: போட்டோஷாப் சாப்ட்வேருக்குப் பதிலாக, இலவச இமேஜ் எடிட்டர் புரோகிராம் உள்ளதா? என் நிறுவனத்தில் பயன்படுத்தும் வகையில் உள்ளதைக் கூறவும்.

–டி.பாலாஜி, தேவி வீடியோஸ், சென்னை


பதில்: இணையத்தில் பல இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனாலும் அடோப் போட்டோ ஷாப் புரோகிராமில் உள்ள அனைத்தும் கிடைக்குமா என்பது சந்தேகமே. இருப்பினும் அண்மையில் நான் இணையத்தில் கண்டு பயன்படுத்திய புரோகிராம் ஒன்று பற்றிக் கூறுகிறேன். அதனைப் பயன்படுத்திப் பாருங்கள்.


அதன் பெயர் GIMP. இது ஓர் இமேஜ் எடிட்டிங் புரோகிராம். போட்டோ மற்றும் படங்களை எடிட் செய்திடவும், டச் அப் செய்திடவும் உதவுகிறது. இதனைப் பொறுத்தவரை உள்ள சிறப்பம்சம், இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற விளக்கக் குறிப்புகள், அதன் தளத்திலேயே இலவசமாகக் கிடைக்கின்றன.

அத்துடன் அவை Beginner, Intermediate, Expert, Photo Editing, Web, and Scripting எனப் பல்வேறு நிலைகளில் இதனைப் பயன்படுத்து வோருக்கென தரப்பட்டுள்ளன. இந்த புரோகிராம் மற்றும் குறிப்புகளுக்கு நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி http://www.gimp.org.

கேள்வி: திடீரென என் விண்டோஸ் எக்ஸ்பி டாஸ்க்பாரில் இரு கோடுகள் மேலாகத் தெரிகின்றன. இது திடீரென ஏன் தோன்றியுள்ளது? வைரஸ் காரணமா? என்ன செய்திட வேண்டும் எனக் கூறவும்.

–நீ. மதிவாணன், காரைக்கால்

பதில்: பல எக்ஸ்பி பயனாளர்கள் அண்மையில் இதனைக் குறிப்பிட்டுக் கேட்டுள்ளனர். இது வைரஸால் அல்ல. இதன் பொருள் உங்கள் டாஸ்க் பார் லாக் செய்யப்படவில்லை என்பதே. இதனை மிக எளிதாகச் சரி செய்து விடலாம். டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Lock the Taskbar என்றுள்ளதன் எதிரே சிறிய டிக் ஒன்றை ஏற்படுத்தவும். இனி கோடுகள் கிடைக்காது.

கேள்வி: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அலுவலகத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்டு பயன்படுத்தி வருகிறோம். இதில் பழைய எக்ஸ்பியில் இருந்தது போல் டாஸ்க்பாரினை அமைக்க முடியுமா? வழி காட்டவும்.

–கே. சிவநேசன், வேளாண்துறை அலுவலகம், விழுப்புரம்.

பதில்: உங்களுக்கு விண்டோஸ் எக்ஸ்பி பிடித்திருந்தால், அதன் பல அம்சங்களை மீண்டும் வைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 வழி தருகிறது. இங்கு டாஸ்க்பாருக்கு வழி பார்ப்போம். டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் ஆப்ஷன் பட்டியலில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் Taskbar and Start Menu Properties என்ற விண்டோவில், Taskbar என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். Use small icons என்னும் பாக்ஸில் செக் செய்திடவும். Taskbar buttons என்பதில் உள்ள பட்டனில் கிளிக் செய்தவுடன், Never combine என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து ஓகே அல்லது அப்ளை என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் விருப்பப்படி, விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்பில், விண்டோஸ் எக்ஸ்பியில் இருப்பது போன்ற டாஸ்க்பார் கிடைக்கும். இதில் கூடுதலாக, விண்டோஸ் 7 சிறப்பம்சமும் கிடைக்கும். இங்குள்ள பட்டன்கள் மேலாக, உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், திறந்திருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் சிறிய படங்கள் கிடைக்கும். எக்ஸ்பியில் அவற்றின் பெயர்கள் மட்டுமே காட்டப்பட்டு வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நன்றி.தினமலர்

நூர்
29-11-2010, 09:25 AM
நவம்பர் 15,2010

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் வைத்து இயக்குகையில், அதன் ஸ்டார்ட் மெனுவில் ரன் என்று ஒரு பிரிவு இருக்கும். இப்போது விஸ்டாவில் இல்லை. ஏன்? இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்?

–ஆ. சங்கரலிங்கம், திண்டுக்கல்

பதில்: இந்த கேள்வியை அனுப்பிய சங்கரலிங்கத்திற்கு நன்றி. நிச்சயமாய் இது பலரின் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வி என எங்களுக்குத் தெரியும். உங்களின் நீண்ட கடிதம் பதிலை எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினைத் தந்தது. சரி, விஷயத்திற்கு வருவோம்!

விஸ்டா ரன் பிரிவை விட்டுவிடவில்லை. எப்போது இது வேண்டும் என்றாலும் Win + R கீகளைத் தட்டுங்கள். அதெல்லாம் தெரியாது, எனக்கு ஸ்டார்ட் மெனுவில் தான் வேண்டும் என நீங்கள் ஒரு மாதிரியாக எழுதி பயமுறுத்தி உள்ளீர்கள் – ஜஸ்ட் பார் எ ஜோக். இதனையும் கொண்டு வந்துவிடலாம்.

முதலில், ஸ்டார்ட் பட்டையில் ரைட் கிளிக் செய்திடவும். பின் ப்ராப்பர்ட்டீஸ் என்னும் பிரிவில் இடது கிளிக் செய்திடுங்கள். ஒரு கட்டம் பாப் அப் ஆகி திரையில் காட்டப்படும். இதுதான் உங்கள் டாஸ்க் பார் மற்றும் ஸ்டார்ட் மெனு ப்ராப்பர்ட்டீஸ் (Taskbar and Start menu Properties) பாக்ஸ். இதில் நான்கு டேப்கள் இருப்பதனைப் பார்க்கலாம்.

ஸ்டார்ட் மெனு (Start Menu) டேப்பில் இடது கிளிக் செய்திடவும். பின்னர் ஸ்டார்ட் மெனு பட்டன் கிளிக் இடவும். இதில் கஸ்டமைஸ் (Customize) என்பதில் மீண்டும் இடது கிளிக் செய்திடவும். இன்னொரு பெட்டி பாப் அப் ஆகும். இதன் தலையில் கஸ்டமைஸ் ஸ்டார்ட் மெனு (Customize Start Menu) என இருக்கும்.

இந்த டயலாக் பாக்ஸில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டி ருக்கும். இதில் ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லவும். அங்கு என்று தரப்பட்டுள்ள இடத்தில் கர்சரை நிறுத்தி, அதன் அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளத் தினை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறினால், டாஸ்க் பார் அண்ட் ஸ்டார்ட் மெனு ப்ராப்பர்ட்டீஸ் பாக்ஸ் இன்னும் இருப்பதனைப் பார்க்கலாம்.

இதில் அப்ளை (Apply) என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் இங்கே ஓகேயில் இடது கிளிக் செய்து வெளியேறவும். இனி ரன் கட்டளை, உங்கள் ஸ்டார்ட் மெனுவில் உங்கள் முன்னால், உங்களால் பயன்படுத்தப் பட தயாராக இருக்கும். சரியா சங்கரலிங்கம். இந்த தகவல்களைத் தரும் வகையில் நீண்ட கடிதம் எழுதியதற்கு மீண்டும் நன்றி.

கேள்வி: நான் இரண்டு புரோகிராம்களை அடிக்கடி பயன்படுத்தி வருகிறேன். இவற்றிற்கான கீ போர்ட் ஷார்ட்கட் கீகளை நானே அமைக்க முடியுமா?

–தெ. மாறன், பழநி.

பதில்: நீங்கள் பயன்படுத்தும் எந்த ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் ஷார்ட்கட் கீகளை அமைக்கலாம். உங்களுக்கான எடுத்துக்காட்டாக WinRAR புரோகி ராமினை இங்கு பார்ப்போம். இதற்கான ஷார்ட்கட் கீ அமைக்க, முதலில் ஸ்டார்ட் பட்டன் சென்று, அதன் மீது இடது கிளிக் செய்திடவும்.

அடுத்து ஆல் புரோகிராம்ஸ் (All Programs) கிளிக் செய்திடவும். இப்போது ஸ்டார்ட் மெனு திறக்கப்படும். இங்கு WinRAR சென்று அதன் மீது ரைட் கிளிக் செய்திடலாம். இங்கு திறக்கப்படும் பாப் அப் பெட்டியில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இங்கும் ஒரு பாக்ஸ் பாப் அப் ஆகும்.

இதில் பாதியில் ஒரு வரி இருக்கும். அதில் Shortcut key எனத் தரப்பட்டு, அருகே None என இருக்கும். இதன் வலது பக்கம், ஒரு நெட்டுக் கோடு மின்னிடும். உங்கள் ஷார்ட்கட் கீக்கு ஒரு சொல் அல்லது ஒரு எழுத்தைக் கொடுக்கவும்.

இங்கு WinRAR புரோகிராமிற்கு W எனத் தரலாமா! இதை அமைத்தவுடன் கம்ப்யூட்டர் தானாக Ctrl + Alt என்ற கீகளை அமைக்கும். அடுத்து மின்னிக் கொண்டிருந்த கோடு, நீங்கள் டைப் செய்த சொல்லின் வலது பக்கம் இருக்கும்.

இதன் பின்னர் Apply என்பதில் இடது கிளிக் செய்து, அதன் பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து நீங்கள் WinRAR புரோகிராம் தேவைப்படும்போதெல்லாம், Ctrl + Alt+W அழுத்தினால் போதும்.

கேள்வி: நான் சென்ற வாரம் ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் வாங்கியுள்ளேன். இதனைப் பயன்படுத்தி, என் கம்ப்யூட்டரின் சி ட்ரைவில் உள்ளதை அப்படியே காப்பி எடுக்க விரும்புகிறேன். இதற்கான வழிகளைச் சொல்லவும்.

–என்.கண்மணி ராஜன், திருப்பூர்

பதில்: நீங்கள் கேட்பது ஒரு டிஸ்க்கின் இமேஜ் அல்லது மிர்ரர் தயார் செய்வது ஆகும். பொதுவாக விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டு, ட்ரைவ் எதனையும் அணுக முடியாத நிலையில் பயன்படுத்த இது போல டிஸ்க்கின் மொத்த பைல்களையும் அப்படியே காப்பி எடுப்பது உண்டு.

நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவதாக எழுதி உள்ளீர்கள். அதில் ஹோம் எடிஷனா அல்லது புரபஷனல் எடிஷனா என்று குறிப்பிடவில்லை. ஏனென்றால், ஹோம் எடிஷனில் பேக் அப் சாப்ட்வேர் எதுவும் தரப்படவில்லை.

எனவே ஹோஸ்ட் (Ghost) போன்ற பேக் அப் சாப்ட்வேர் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும். புரபஷனல் எனில், கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
முதலில் Start>All Programs>System Tools எனச் செல்லவும். இங்கிருந்து உங்கள் பேக் அப் எங்கு ஸ்டோர் ஆக வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து Backup and Restore திறக்கப்படும். இங்கு பேக் அப் திரை காட்டப்படும். இதில் Back up Computer என்பதில் கிளிக் செய்திடவும். பாதுகாப்பிற்கென கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு, உங்கள் தகவல்களை எங்கு ஸ்டோர் செய்திட வேண்டும் என்பதனைத் தரவும்.

அடுத்து தரப்படும் கேள்விகளுக்கான பதில்களைத் தந்த பின், டிஸ்க் முழுமையாக, நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஸ்டோர் ஆகும். இடத்தினை எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவாகக் கொள்ளலாம். அல்லது கம்ப்யூட்டரின் இன்னொரு ட்ரைவில் ஸ்டோர் செய்து பின் மாற்றிக் கொள்ளலாம்.

விஸ்டா சிஸ்டத்தில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பைல்கள் பேக் அப் ஆகும்படி செட் செய்திடலாம். ஆனால் சிஸ்டம் பைல்கள் ஆகாது. விண்டோஸ் 7 எந்த பைல்களையும் பேக் அப் செய்திடும் வசதியைக் கொண்டுள்ளது.

கேள்வி: யு ட்யூப் விடீயோ பைல்களை டவுண்லோட் செய்திடும் வசதி கொண்ட பல புரோகிராம்கள் குறித்து எழுதியுள்ளீர்கள். டவுண்லோட் செய்திடுகையில், நமக்கு ஏற்ற பார்மட்டில் பதியும் வசதிக்கு என்ன செய்வது?

– ஆ.ஸ்நேகா ஸ்டாலின், சென்னை.

பதில்: அண்மையில் நான் பார்த்த இணைய தளம் ஒன்றில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. www.downloadtube.org என்ற முகவரி யில் உள்ளது இந்த தளம்.

சிறந்த வசதிகளைத் தருவதாக இது உள்ளது. சில தளங்களில் தேவையற்ற பிரிவுகள் தரப்பட்டு, டவுண்லோட் செய்திடும் ஆசையே விட்டுப் போகும் அளவிற்கு இருக்கும். இதில் நாம் விரும்பும் வசதிகள் மட்டும் தரப்பட்டுள்ளன. செயல்முறை மிக எளிது.

நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும், இணைய பக்கத்தின் முகவரியினை காப்பி செய்து, இந்த தளத்தில் இட வேண்டும்.

அடுத்த வசதி தான் கேக் மீது இடப்படும் சாக்லேட் கோலம் போல. இங்கு நீங்கள் விரும்பும் பார்மட்டில் அதனை டவுண்லோட் செய்திடலாம். வழக்கமாக யு–ட்யூப் தளத்தில் வீடியோ பைல்கள் எப்.எல்.வி.(‘FLV’ பார்மட்டில் அமைக்கப் பட்டிருக்கும்.

இவற்றை டவுண்லோட் செய்தவுடன், எப்.எல்.வி. பிளேயர் ஒன்றில் தான் இயக்க முடியும். ஆனால் இந்த தளத்தில் எம்பி4, உங்கள் போன், ஐ பாட் போன்றவற்றில் இயங்கும் வண்ணம் டவுண்லோட் செய்திடுகை யிலேயே மாற்றிப் பதிந்து கொள்ளலாம். முகவரி அமைத்து, தேவையான பார்மட் அமைத்தவுடன் Convert and Download என்பதில் கிளிக் செய்திடவும்.

அடுத்து ஈணிதீணடூணிச்ஞீ என்ற பட்டனில் கிளிக் செய்தவுடன், நீங்கள் விரும்பிய வீடியோ கிளிப்பிங் நிமிடங்களில் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும்.

கேள்வி: இணையப் பக்கம் அல்லது இமெயில் லிங்க் ஒன்றில் கிளிக் செய்திடுகையில், அந்த தளம் சில வேளைகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரிலும் சில வேளைகளில் பயர்பாக்ஸிலும் திறக்கப்படுகிறது. பயர்பாக்ஸ் பிரவுசரில் எப்போதும் திறக்கப்படும்படி எப்படி அமைப்பது?

–கா. ஞானப்பிரகாசம், காரைக்கால்

பதில்: இது மிக எளிது. எந்த பிரவுசரில் அது திறக்கப்பட வேண்டும் என்பதனை, நீங்கள் உங்கள் கம்ப்யூட்டருக்குச் சொல்ல வேண்டும். அது எப்படி என்று இங்கு பார்ப்போம். பயர்பாக்ஸ் பிரவுசரை மாறா நிலையில் உள்ள பிரவுசராக மாற்ற:பயர்பாக்ஸ் திறந்து டூல்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் பாப் அப் மெனுவில் அட்வான்ஸ்டு டேப் திறக்கவும். அடுத்து செக் நியூ பட்டன் கிளிக் செய்து பயர்பாக்ஸ் உங்கள் மாறா நிலை பிரவுசராக ஏற்கனவே அமைக்கப் பட்டுள்ளதா எனப் பார்க்கவும். அமைக்கப்படவில்லை எனில், பயர்பாக்ஸ் பிரவுசரை அமைக்க உங்களுக்கு ஆப்ஷன் தரப்படும்.

இன்னொரு வழியும் உள்ளது. Control Panel செல்லவும். அங்கு Add/Remove Programs என்பதில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவின் இடது பக்கத்தில் Set Program Access and Defaults என்று இருக்கும்.

இங்கு Custom என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வும். இங்கு வலது பக்கம் உள்ள இரண்டு அம்புக் குறி அடையாளத்தில் கிளிக் செய்திடவும். Choose a default Web browser என்ற தலைப்பின் கீழ் Mozilla Firefox என்பதில் கிளிக் செய்திடவும்.

பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி பயர்பாக்ஸ் உங்கள் மாறா நிலையில் உள்ள( Default) பிரவுசராக இருக்கும். எந்த இணைய லிங்க்குகளில் கிளிக் செய்தாலும், அது பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கப்படும்.

நன்றி.தினமலர்

நூர்
29-11-2010, 09:49 AM
http://img.dinamalar.com/data/uploads/E_1290444489.jpeg

நவம்பர் 22,2010

கேள்வி: நான் டெக்னிக்கல் டாகுமெண்ட்ஸ் அதிகம் எழுதுபவன். வழக்கமாக, வாக்கியங்களின் முதல் எழுத்துத் தானாக, கேப்பிடல் எழுத்தில் அமைவதை நிறுத்திவிடுவேன். வேர்ட் 2010 தொகுப்பில் இதனை எப்படி மேற்கொள்வது என்று விளக்கவும்.

–பழ. செல்லப்பன், காரைக்குடி

பதில்: முன்பு நீங்கள் எப்படி மற்ற வேர்ட் தொகுப்புகளில் இந்த தடையை உருவாக்கினீர்களோ, அதே போல இப்போதும் அமைக்கலாம்.

1. ரிப்பனில் “File” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

2. மைக்ரோசாப்ட் ஆபீஸ் பேக் ஸ்டேஜ் வியூ தோன்றும். இதில் “Options” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். (அல்லது மேலே குறிப்பிட்ட 1 மற்றும் 2ல் உள்ள செயல்பாட்டிற்குப் பதிலாக Alt + T அழுத்திப் பின் எழுத்து கீ O அழுத்தவும்.

3. இனி, “Word Options” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இடது புறம் உள்ள “Proofing” என்பதில் கிளிக் செய்திடவும்.

4. வலதுபுறம் உள்ள பிரிவில் “AutoCorrect options” என்பதன் கீழாக உள்ள “AutoCorrect options” பட்டனில் கிளிக் செய்திடவும்.

5. நிறைய டேப்கள் கொண்ட “AutoCorrect” டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

6. “AutoCorrect” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.

7. இதில் “Capitalize first letter of sentences” என்ற வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் ஏற்கனவே உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து, அதனை நீக்கவும். பின்னர் கிடைக்கும் அனைத்து ஓகே பட்டன்களிலும் கிளிக் செய்து வெளியேறவும். இனி, மீண்டும் வேர்ட் 2010 திறந்து இயக்குகையில்,

உங்கள் டெக்னிக்கல் டாகுமெண்ட் மட்டுமின்றி, வேறு எந்த டாகுமெண்ட்டிலும், வேர்ட் தானாக, வாக்கியத்தின் முதல் எழுத்தினைக் கேப்பிடல் எழுத்தாக மாற்றி அமைக்காது.

கேள்வி: என் கம்ப்யூட்டரை நான் இல்லாதபோது வேறு யாரேனும் பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதை எப்படி அறிவது?

– என். லஷ்மி பிரபா, மதுரை

பதில்: நல்ல கேள்வி. பலரின் மனதில் அரித்துக் கொண்டிருக்கும் சந்தேகம் நீக்கும் கேள்வி. அலுவலகங்களில், வீடுகளில் நம் பயன்பாட்டிற்கென உள்ள கம்ப்யூட்டர்களை, நாம் அங்கு இல்லாத போது, மற்றவர் பயன்படுத்தும் நிகழ்வுகள் நிச்சயம் ஏற்படலாம். இதனை எப்படி அறிவது?

இதற்கு விண்டோஸ் இயக்கத்தில் வழி தரப்பட்டுள்ளது. இதனை நமக்குக் காட்டும் வசதியின் பெயர் Event Viewer ஆகும். எக்ஸ்பி முதல் இன்றைய விண்டோஸ் 7 வரை இது தரப்பட்டுள்ளது. எக்ஸ்பியில் ஸ்டார்ட், ரன் அழுத்தி, eventvwr.msc என டைப் செய்திடவும்.

விஸ்டாவிலும், விண்டோஸ் 7லும், சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும். உடன், எப்போது எந்த நேரத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் காட்டப்படும். இதில் முதலில் தரப்படும் விஷயங்கள் நமக்குப் புரியாது. இறுதியாகப் பயன்படுத்தியவர் பெயர், கம்ப்யூட்டர் பெயர் காட்டப்படும். அதனைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி, கம்ப்யூட்டரில் நடக்கும் நிகழ்வுகளை, Application, Security,, மற்றும் System என மூன்று லாக் பைல்களில் அமைத்து வைத்துக் கொள்கிறது.

விஸ்டாவில் இவை அனைத்தும் Windows Logs என்ற பிரிவில் வைக்கப்படுகின்றன. விண்டோஸ் 7 சிஸ்டம் Setupமற்றும் Forwarded Events எனவும் இவற்றைக் கொள்கிறது. உங்களுடைய நோக்கத்திற்கு System log என்பதுதான் தேவை. இடது புறம் உள்ள System என்பதில் கிளிக் செய்தால்,

கம்ப்யூட்டரில் ஏற்பட்ட நிகழ்வுகளின் பட்டியல் கிடைக்கும். இங்கு நீங்கள் கம்ப்யூட்டரை விட்டு நகன்ற தேதி, நேரம் அடிப்படையில் உள்ள நிகழ்வுகளைக் கண்டு, யார் பயன்படுத்தி இருப்பார்கள் எனப் பார்க்கலாம். அத்துடன் யார் அதிக நேரம் பயன்படுத்தினார்கள் என்றும் கவனிக்கலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்தி வருகிறேன். வெப்சைட்டுக்கான பெயர் டைப் செய்கையில், ஒவ்வொரு எழுத்திற்கும், ஒரு குரூப் வெப்சைட் பெயர் கிடைக்கும். இப்போது முழுவதும் டைப் செய்த பின்னரே, தளம் கிடைக்கிறது. இதற்கென்ன காரணம்? மீண்டும் எப்படி பழைய முறையில் இணைய தளப் பெயர்களைப் பெறலாம்?

–டி. காமராஜ் கார்த்தி, சிவகாசி

பதில்: உங்கள் பிரவுசரில் ஆட்டோ கம்ப்ளீட் (Auto Complete) என்ற வசதி எப்படியோ நிறுத்தப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன். இந்த வசதிதான், நீங்கள் அட்ரஸ் பாரில், இணைய தள முகவரியினை டைப் செய்கையில், எழுத்துக்களை வாங்கிக் கொண்டு தன் நினைவகத்தில் உள்ள, நீங்கள் ஏற்கனவே பார்த்த இணைய தள முகவரிகளுடன் ஒப்பிட்டு, இணையாக உள்ளவற்றைப் பட்டியலிடுகிறது. இந்த வசதியினை மீண்டும் எப்படி ஏற்படுத்துவது என்று பார்ப்போம்.

மேலாக, பிரவுசரின் வலது மூலையில் உள்ள Tools என்பதில் கிளிக் செய்திடவும். பின் அங்கிருந்து, Internet Options என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில், Content என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

இங்கு Auto Complete என்னும் பிரேம் கிடைக்கும். இதில் Settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Use Auto complete for என்று தலைப்பிட்டு, கீழாக இணைய முகவரி, படிவம், யூசர் பெயர் ஆகிய பிரிவுகள் இருக்கும்.

எந்த வகைகளில் உங்களுக்கு ஆட்டோ கம்ப்ளீட் வசதி வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுத்து அமைத்து வெளியேறவும். மீண்டும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து இயக்கினால், நீங்கள் இணைய தள முகவரிகளை அமைக்கையில், முன்பு அமைத்த தள முகவரிகள் பட்டியலாகக் காட்டப்படும். அதிலிருந்து உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறக்கும்போது, ஹோம் பேஜ் வெப்சைட்டுக்குப் பதிலாக, நான் இறுதியாகப் பார்த்த வெப்சைட் திறக்கப்பட வேண்டும். இதற்கு என்ன செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்.

–சி. சம்பந்த மூர்த்தி, திண்டுக்கல்

பதில்: உங்கள் கேள்வியைப் படித்தவுடன் ஆஹா! இது ஒரு அருமையான ஏற்பாடே என்று வியக்கத் தோன்றியது. உங்கள் கேள்விக்கு நன்றி. பயர்பாக்ஸ் பிரவுசர்

திறக்கும்போது, மூன்று விஷயங்களைக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. உங்களுடைய ஹோம் பேஜ், காலியாக இருக்கும் தளம் அல்லது இறுதியாக மூடுகையில் இருந்த தளம் கொண்ட ஒரு டேப் (அல்லது டேப்கள்). இது எப்படி என்று பார்ப்போம்.


உங்கள் பிரவுசரின் மேல் பகுதிக்குச் செல்லுங்கள். திரையின் குறுக்கே செல்லும் பட்டையில் பைல், எடிட் எனப் பல மெனுக்களுக்கான தலைப்புகள் உள்ளனவா!

இதில் Tools என்பதில் கிளிக் செய்திடவும். கீழ் விரி பட்டியலில் Options என்பதில் கிளிக் செய்க. இங்கு ஒரு பாக்ஸ் பாப் அப் ஆகும். இதில் குறுக்காக, ஏழு டேப்கள் கிடைக்கும். முதலில் உள்ள General என்ற டேப்பில் கிளிக்கிடவும்.

கீழாக When Firefox starts என்று இருக்கும் இடம் வரை செல்லவும். மேலும் கீழுமாக உள்ள அம்புக் குறிகளில் ஒன்றில் கிளிக் செய்திடவும். இதில் மூன்று ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இவற்றில் Show my windows and tabs from last time என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் ஓகே கிளிக் செய்திடவும். அவ்வளவுதாங்க!

அடுத்த முறை நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசர் திறக்கையில், மூடும்போது இருந்த தளம் அல்லது தளங்களுடன் பயர்பாக்ஸ் உங்களை வரவேற்கும். மறந்துறாதீங்க! உங்க கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்க வேண்டும். இதைச் சொல்ல வாய்ப்பளித்தற்கு நன்றி.

கேள்வி: சீனாவில் மொபைல் போன்களில் ஒரு வைரஸ் பரவி, இன்னும் கண்டறியப்படாமல் உள்ளது எனக் கேள்விப் பட்டேன். இது இந்தியாவிற்கும் வருமா?

–இராச. இளங்கோவன், கோவை

பதில்: ஏறத்தாழ பத்து லட்சம் மொபைல் போன்களுக்கு மேல் ஒருவித வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஷாங்காய் டெய்லி என்னும் சீன நாளிதழ் செய்தி வெளி யிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இதே போன்ற ஒரு மால்வேர் வைரஸ் ரஷ்யாவில் மொபைல் போன்களைத் தாக்கியது.

ஏறத்தாழ அதே போன்ற தாக்குதலை, இந்த வைரஸ் சீனாவில் ஏற்படுத்தியுள்ளது. போனில் போலியான ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்கான லிங்க் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்தவுடன், வைரஸ் போனில் செயல்பட்டு, சிம் குறித்த தனிநபர் தகவல்களை, ஹேக்கர்களின் சர்வருக்கு அனுப்புகிறது.

இந்த தகவல்கள் கிடைத்தவுடன், அதில் உள்ள அட்ரஸ் புக்கில் உள்ள முகவரிகளுக்கு, பணம் பறிக்கும் வகையிலான எஸ்.எம்.எஸ். செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 கோடி யுவான் சீனப் பணம் ஹேக்கர்களின் வெப்சைட்டுக்குச் செல்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சீன அரசு இந்த வைரஸ் எங்கிருந்து வருகிறது என்பதை அறிய படாத பாடு பட்டுக் கொண்டி ருக்கிறது. ஆனால் அனைத்து முயற்சி களையும் இந்த வைரஸ் ஏமாற்றிக் கொண்டு பணம் சம்பாதித்துக் கொண்டுள்ளது. அடுத்த படியாக அதிகம் மொபைல் பயன்படுத்தும் நம் நாட்டிற்கும் இது வரலாம் என அஞ்சப்படுகிறது.

நன்றி.தினமலர்

நூர்
29-11-2010, 10:02 AM
http://img.dinamalar.com/data/uploads/E_1290937843.jpeg

நவம்பர் 29,2010

கேள்வி: நீங்கள் எழுதும்போதும், மொபைல் போன் விளம்பரங்களிலும் 3ஜி என்று சொல்கின்றனர். நீங்கள் எழுதிய கட்டுரையிலும் பல தகவல்கள் இருந்தன. இந்த 3ஜி என்பதன் விளக்கம் என்ன? 4ஜி உள்ளதா? அன்பு கூர்ந்து தெளிவாக விளக்கவும்.

-நீ. ஷண்முகப் பிரியா, மதுரை

பதில்: நல்ல கேள்வி தான். தொலை தொடர்பு பிரிவில், போன்கள் வடிவமைக்கப்பட்டதில், அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில், முதல் (Generation) தலைமுறை, இரண்டாம் தலைமுறை என அழைக்கப்பட்டன. இப்போது நான்காம் தலைமுறை போன்கள் வந்துவிட்டன.

இந்தியாவிற்கு மூன்றாம் தலைமுறை போன்கள் வரத் தொடங்கி விட்டன.முதல் தலைமுறை போன்கள் 1980ல் வந்தன. இவை ஏ.எம். மற்றும் எப்.எம். ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்தின.

டிஜிட்டல் வழி தொடர்புகள் இவை மூலம் ஏற்படவில்லை. 1991ல் இரண்டாம் தலைமுறை போன்கள், முதலில் பின்லாந்தில் வந்தன. இவை டிஜிட்டல் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தின. டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் இணைய இணைப்பு இருந்தாலும், வேகம் மிக மெதுவாகவே இருந்தது. ஜப்பானில் முதன் முதலாக,

2001ஆம் ஆண்டில் 3ஜி போன் வெளிவந்தது. நெட்வொர்க் செயல்பாட்டின் வேகம் அதிகமானது. இன்டர்நெட் இணைப்பில் இருக்கையிலேயே, போன் வழி பேசவும்

முடிந்தது. 4ஜி போன்கள் அண்மைக் காலத்தில் வெளியாகி, மிக அதிகமான வேகத்தில் இயங்கி வருகின்றன. பிராட்பேண்ட் இணைப்பைக் காட்டிலும் அதிகமான வேகத்தில், இன்டர்நெட் இணைப்பைத் தந்து வருகின்றன.

கேள்வி: என் நண்பர் இடது கைப் பழக்கம் உள்ளவர். அவருக்கு மவுஸை இடம் மாற்றிக் கொடுத்திருக்கிறோம். அதே போல பட்டன் இயங்கும் நிலையையும் மாற்றிக் கொடுக்க முடியுமா? அல்லது இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கென தனி மவுஸ் விற்பனை செய்கிறார்களா?

-நி. முத்துஸ்வாமி, ராஜபாளையம்

பதில்:மவுஸின் பட்டன்கள் இயக்கத்தினை மாற்றி அமைத்து செட் செய்திடலாம். இதற்கென தனியான மவுஸ் இல்லை. விண்டோஸ் இயக்கத்தில், இடது மவுஸ் பட்டன் தேர்ந்தெடுப்பதற்கும், இருமுறை கிளிக் செய்தால் புரோகிராமினை இயக்குவதற்கும் பயன்படுகிறது.

இது இடது கைப் பழக்கம் உள்ளவர் களுக்குச் சற்று ஏமாற்றமாகவும், எரிச்சலாகவும் இருக்கும். இவர்கள் விரும்பும் வகையில், பட்டன்களின் இயக்கத்தினை மாற்றி அமைக்கலாம். அதாவது, இடது மவுஸ் பட்டன் இயக்கத்தினை வலது மவுஸ் பட்டனுக்கும், வலதை இடதிற்கும் மாற்றி அமைக்கலாம்.

1. முதலில் கண்ட்ரோல் பேனலில், மவுஸ் ஐகான் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள். பல டேப்கள் கொண்ட விண்டோ கிடைக்கும். “Mouse Properties” என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Buttons” என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

“Switch primary and secondary buttons” என்று இருப்பதில் செக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும். இனி, உங்கள் நண்பருக்கேற்ற வகையில் மவுஸ் இயங்கும்.

கேள்வி: விண்டோஸ் சிஸ்டம் வரத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று படித்தேன். இந்த சிஸ்டம் வரத் தொடங்கிய நாள்முதல், தன் உருவாக்கத்தில், ஏற்படுத்திய சாதனைகள் என்ன என்று சுருக்கமாக விளக்குங்கள்.

-கா. சிவஞானம், திருத்தணி

பதில்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்ட வரலாற்றில், சாதனை படைத்தது சில மட்டுமே. விண்டோஸ் பதிப்பு 1 மற்றும் 2 அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.

ஆனால் பதிப்பு 3, அனைத்து நாடுகளிலும், மக்களைச் சென்றடைந்து பயன்படுத்தப் பட்டது. விண்டோஸ் மீது மக்களுக்கு ஒரு மோகத்தினை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் பல வேலைகள், விஜிஏ கிராபிக்ஸ், ட்ரூ டைப் பாண்ட்ஸ் என அதிசயப்படத் தக்கவைக்கும் விஷயங்கள் கிடைத்தன.


அடுத்த சாதனை விண்டோஸ் 95. டாஸ் மீது தன் இயக்கத்தினை மேற்கொள்ளாமல், டாஸ் மற்றும் விண்டோஸ் இணைந்ததாக உருவாக்கப்பட்டு இயங்கியது. ஸ்டார்ட் மெனு, டாஸ்க் பார், ப்ளக் அண்ட் பிளே போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதுவித செயல்பாட்டினைத் தந்தன. அடுத்த தொகுப்பு விண்டோஸ் எக்ஸ்பி. இன்றும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்.

டாஸ் இல்லாமல், தன் இயக்கத்திற்கு டாஸ் துணை இல்லாமல் வெளிவந்த சிஸ்டம். முன் வந்த சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில் நிலையானதாகவும், சற்று பாதுகாப்பானதாகவும் இருந்தது.


விண்டாஸ் 7 தொகுப்பு அடுத்த சாதனை. விஸ்டா கொடுத்த அடியிலிருந்து, சரியான பயனுடன் எழ வேண்டும் என்ற வேகத்துடன் உருவாக்கப்பட்டு, தற்போது மெல்ல மெல்ல அனைத்து மக்களும் விரும்பும் தொகுப்பாக உருவாகி வருகிறது.


இந்த வரிசையில் அடுத்த சாதனையாக, மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் போன் 7 தொகுப்பினைக் கூறலாம். மைக்ரோசாப்ட், மொபைல் போனுக்கென வடிவமைத்த முந்தைய சிஸ்டங்களின் தோல்வியை முழுவதுமாக மறக்கச் செய்து மக்கள் விரும்பும் சிஸ்டமாக இது உருவாகி வருகிறது.

கேள்வி: நான் விண் ஆர்.ஏ.ஆர். அன்ஸிப் பயன்படுத்துகிறேன். சில வேளைகளில் இதன் மூலம் ஸிப் செய்த பைல்களை அன்ஸிப் செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது. கூடுதலாக இன்னொரு அன்ஸிப் புரோகிராமினைப் பயன்படுத்தலாமா? எதனை நீங்கள் பரிந்துரை செய்வீர்கள்?

-எஸ். கே. பத்மா ஜெயராஜ், சென்னை.

பதில்: ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் போல, ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அன்ஸிப் சாப்ட்வேர் தொகுப்புகள் இருப்பது தவறில்லை. அது நல்லதும் கூட.

ஆர்.ஏ.ஆர். புரோகிராம் நன்றாகச் செயல்படும் புரோகிராம் தான். இதனைப் போலவே பிரபலமான இன்னொரு புரோகிராம், அனைவரும் அறிந்த விண் ஸிப் (Winzip) புரோகிராம் ஆகும். புதிதாக ஒன்றை உங்களுக்குச் சொல்வதென்றால்,

7zip புரோகிராமினைப் பரிந்துரைக்கலாம். இதனை http://www.7zip.org/ என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இது பல பார்மட்டுகளில் ஸிப் செய்யப்பட்ட பைல்களைப் பிரித்துத் தருகிறது. zip, gzip, tar, 7z, rar, iso, msi, cab or dmg போன்ற பார்மட்டுகளில் உள்ளவற்றைப் பிரித்துத் தருகிறது.

இந்த புரோகிராம், விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைந்து செயல்படுவதால், எளிதாக இதனை இயக்கலாம். அதாவது பைல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கையில் கிடைக்கும் மெனுவில் இந்த புரோகிராம் பிரிவு ஒன்று இருக்கும். அதில் கிளிக் செய்து ஸிப் மற்றும் அன்ஸிப் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

மிக அதிகமான எண்ணிக்கையில் ஸிப் பைல்களைப் பிரித்து, பைல்களைப் பெற வேண்டும் எனில், ExtractNow என்னும் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். இதனை http://www.extractnow.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.

கேள்வி: வேர்ட் பயன்படுத்துகையில், ஏற்கனவே செட் செய்யப்பட்ட மார்ஜின் நமக்குக் கிடைக்கிறது. இதனை மாற்ற வேண்டும் எனில் என்ன செய்திட வேண்டும். நான் விண்டோஸ் எக்ஸ்பியில்,வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன்.

-கா. சிவப்பிரகாசம், தேனி.

பதில்:வேர்ட் தொகுப்பு, டாகுமெண்ட்டிற்கான மார்ஜின்களை மாற்றுவதற்கு மிக எளிய வழிகளைத் தருகிறது. (இங்கு தரப்படும் குறிப்பு வேர்ட் 97 தொடங்கி, வேர்ட் 2003 வரை உள்ள தொகுப்புகளில் பயன்படுத்தலாம்.)


1. முதலில் டாகுமெண்ட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர் File மெனு சென்று Page Setup ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உடன் வேர்ட், Page Setup டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

2. இதில் உள்ள Margin டேப்பினைத் தேர்ந்தெடுங்கள்.

3. Top, Bottom, Left, மற்றும் Right என உள்ள மார்ஜின்களை மாற்றவும். மாற்றுகையில் வலது கீழாகக் காட்டப்படும் கட்டத்தில் உங்கள் ஆவணத்தில் என்ன வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என சிறிய படம் காட்டப்படும்.

4. பின்னர் Apply To என்ற கீழ்விரி பட்டியலில் Whole Document என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் நீங்கள் குறிப்பிட்ட பாரா அல்லது பிரிவினை மட்டும் தேர்ந்தெடுத்து, மார்ஜினை அதற்கு மட்டும் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுடைய ஆவணத்தில், ஒவ்வொரு பகுதிக்கும், அதன் தனித்துவத்தினைக் காட்ட வெவ்வேறு மார்ஜின் வைத்துக் கொள்ளலாம்.

கேள்வி: வேர்டில் பிரிண்ட் எடுக்கையில், குறிப்பிட்ட பைலின் சம்மரி இன்பர்மேஷனை பிரிண்ட் செய்திட முடியுமா? வழி காட்டவும்.

-வி.எம். ராஜேந்திரன், மதுரை

பதில்: வேர்ட் டாகுமெண்ட் களுக்கான சம்மரி இன்பர்மேஷன் குறித்து அறிந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி. டாகுமெண்ட் ஒன்றை, வேர்ட் சேவ் செய்திடுகை யில், டாகுமெண்ட் டை சேவ் செய்வது டன், டாகுமெண்ட் குறித்த தகவல்களையும் சேவ் செய்கிறது.

டாகுமெண்ட் பிரிண்ட் செய்யப் படுகையில், இந்த தகவல்கள் அச்சிடப் படுவதில்லை. இதனையும் அச்சிட வேண்டும் எனில், கீழ்க்காணும் கட்டளைகளைத் தர வேண்டும்.

File மெனுவிலிருந்து Print தேர்ந்தெடுக்கவும். இப்போது பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

இங்கு Print What என்ற கீழ்விரி பெட்டி கிடைக்கும். இதில் Document Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து அச்செடுக்கவும்.

நன்றி.தினமலர்.

tami
02-02-2012, 06:04 AM
நண்பர்களே, என்னிடம் சில movie clips உண்டு, அதை delete பண்ணும்போது delete ஆகவில்லை
access is denied என்று வருகிறது, clips மஞ்சள் கலரில் உள்ளது மட்டும் delete ஆகவில்லை,
அதை எப்படி delete பண்ணுவது.