PDA

View Full Version : நெட்வேர்க்கிங்கை சுயமாக கற்க முடியுமா?எப்படி?



shibly591
30-03-2009, 05:41 AM
வணக்கம்...

நண்பர்களே ஒரு சிறு சந்தேகம்...தீர்த்து வையுங்கள்...

விரைவில் எனக்கு கிடைக்கவிருக்கும் தொழில் கணணி நெட்வேர்க்கிங்குடன் மறைமுக தொடர்பு கொண்டது.என்னால் விண்டோஸ் நெட்வேர்க்கிங்கை புத்தகங்களின் உதவியுடன் தனியாக கற்க முடியுமா? எப்படியான புத்தகங்கள்?ஏதாவது லிங்க் இருப்பின் தெரியப்படுத்தவும்..

நன்றிகள்

அன்புரசிகன்
30-03-2009, 06:08 AM
முயன்றால் முடியாதது எதுவுமில்லை. ஆனால் இந்த முயற்சிக்கு சிறப்பு தேவை உண்டு. அது தான் செய்முறை. வெறுமனே புத்தகத்தினை படித்தால் பரிச்சியம் வராது. அதனுடன் அடிபடவேண்டும். ஒருவிடையத்தினை புதிதாக யார்துணையுடனுமில்லாது கண்டுபிடித்தால் வாழ்க்கையில் அதனை மறக்கமாட்டீர்கள். வெறுமனே எட்டிநின்று பார்த்தால் முடியாது தான்.

நான் பெரிதாக இதில் விற்பன்னர் இல்லை. அலுவலக மேற்பார்வையாளருக்கு டவுட் வந்தால் இணைய உதவிகள் மூலம் களைய முயல்வென். அவ்வளவே... இந்த இணைய சுட்டி நான் அடிக்கடி பார்ப்பது. புத்தகங்கள் நம் மன்றத்திலுள்ள ஜாம்பவான்கள் தருவார்கள்....
http://www.comptechdoc.org/independent/networking/guide/
கணினி வலையமைப்பின் அடிப்படையை இந்த தளத்திலிருந்து படிக்கலாம்.

கூகிளில் தேடிப்பாருங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்ததிலும் அதிகம் கிட்டும்.

shibly591
30-03-2009, 06:30 AM
மிக்க நன்றி நண்பரே.....

coimbatoresathish
30-03-2009, 03:36 PM
நண்பரே, இப்புத்தகங்கள் சிறிது உதவும் என்று நினைக்கிறேன்.. லிங்க் ஐ சொடுக்கவும். ஒன்று (http://coimbatoresathish.googlepages.com/HomeNetworkingForDummies.pdf) இரண்டு (http://coimbatoresathish.googlepages.com/NETWORKSDesignandManagement.pdf)