PDA

View Full Version : புயல்ஐரேனிபுரம் பால்ராசய்யா
30-03-2009, 04:35 AM
சுந்தரின் அண்ணனுக்கு அவன் மனைவி மீது சந்தேகம். காரணம், அவனைவிட அவன் மனைவி ரொம்ப அழகு.

சுந்தருக்கு திருமண ஆலோசனை வந்தபோது, தன் அண்ணனின் நிலைமை தனக்கு வந்துவிடக்கூடாதென்று தன்னைவிட சுமாரான பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது எனத் தீர்மானித்தான்.

மூன்றே மாதங்களில் அவன் நினைத்ததுபோல் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான்.

திருமணம் முடிந்த மறுநாள் சுந்தரின் அலுவலகத்தில் பணிபுரியும் பார்வதி வந்திருந்தாள்.

நேற்றைக்குத்தான் எஙன அக்கா பொண்ணுக்கு காது குத்து. அதனாலதான் உன் கல்யாணத்துக்கு என்னால வரமுடியல, தப்பா நெனச்சுடாத! என்று, குழைய குழைய பேசி விட்டு தன்னிடமிருந்த கிப்டை அவனிடம் தந்துவிட்டுப் புறப்பட்டாள்.

அதுவரை அமைதியாக இருந்த சுந்தரின் மனைவி கேட்டாள்.

அந்தப் பொண்ணு உங்ககிட்ட பேசின விதம் எனக்குக் கொஞ்சமும் புடிக்கல, நீங்க கொஞ்சம் அழகா இருக்கிறதுனால எப்படியெல்லாம் பார்க்கிறா! சுந்தர் மீது அவன் மனைவிக்கு சந்தேகப் புயல் மையம் கொள்ள, வெகு தூரத்துக்கு அடித்துச் சுழற்றியது அவள் பேச்சு

விகடன்
30-03-2009, 05:03 AM
குற்றம் காண்பதெல்லாம் அவரவர் நடத்தையைப் பொறுத்தது.ஆரம்பத்திலேயே இப்படியாயின் அவன் குடும்ப வாழ்க்கை விளங்கியது போலத்தான்.

இப்ப முடிவாக எதைத்தான் செய்யலாம்?? திருமணம் முடிக்காமல் இருப்போரிற்கு அறிவுரையாக ஏதாவது சொல்ல வேண்டுமே. அதைவிடுத்து மதில் மேல் பூனை போன்ற நிலையிலேயே அவர்களை விட்டு விடுவது அழகல்லவே :D

அன்புரசிகன்
30-03-2009, 05:52 AM
தான் நினைப்பதை மற்றவர் செய்யும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். சந்தேகப்பேர்வழிகளுக்கு சாட்டையடி... வாழ்த்துக்கள் ஐ.பா.ரா....இப்ப முடிவாக எதைத்தான் செய்யலாம்?? திருமணம் முடிக்காமல் இருப்போரிற்கு அறிவுரையாக ஏதாவது சொல்ல வேண்டுமே. அதைவிடுத்து மதில் மேல் பூனை போன்ற நிலையிலேயே அவர்களை விட்டு விடுவது அழகல்லவே :D
ஏனையா மதில்ல ஏறிநிக்கிறியள்... ஏறுறது தான் ஏறுறியள் ஒரு கோபுரத்தில ஏறி நிற்கிறது. தள்ளியாவது நாம விழுத்திடுவமில்லே..........

அமரன்
30-03-2009, 08:09 AM
மனங்களை வெல்லுவதே வெற்றியின் முக்கியபடி.

ஆழமான கதை. பாராட்டுகள் ஐபாரா

விகடன்
30-03-2009, 08:31 AM
கோபுரத்தில் ஏறுவதை பற்றிக் கவலை இல்லை அன்பு. ஆனால் என்னைத் தள்ளி விழுத்துவதென்றால் நீருந்தானே ஏறவேண்டும் அதே கோபுரத்தில்.

முதலில் அது நடக்குமா? அப்படி நடந்தாலும் கோபுரம் தாங்குமா???

சுகந்தப்ரீதன்
31-03-2009, 02:06 PM
தாயைப்போல பிள்ளைங்கிற மாதிரி... புருசனை மாதிரி பொண்டாட்டின்னு சொல்லலாம் போலிருக்கு..!! இல்ல ரெண்டுபேரும் ஒரேமாதிரி சந்தேகப்படுறாங்களே அதை சொன்னேன்...!!

புயல் அடிக்க ஆரம்பிச்சா நாணல வளைஞ்சிக் கொடுக்க கத்துக்கனும்..எதுத்து நின்னா புட்டுக்கினு போய்டும் வாழ்க்கை...!! (இது என்னோட அனுபவமல்ல... வெறும் அட்வைஸ் மட்டும்தான் விராடரே..)

குட்டிக்கதைக்கு என் வாழ்த்துக்கள்... ராசைய்யா அண்ணா...!!

அறிஞர்
31-03-2009, 02:13 PM
சந்தேகம் எழுந்தால்.. என்றும் குடும்பத்தில் புயல் தான்...
புரிந்துக்கொள்தலே.. முக்கியம்..
அருமை ராசைய்யா..

த.ஜார்ஜ்
31-03-2009, 03:28 PM
தாழ்வு மனப்பான்மையாலே பெரும்பான்மையான சந்தேகங்கள் உருவாகின்றன என்று சொல்லாமல் சொல்கிறீர்களா. பேஷ்..

சிவா.ஜி
31-03-2009, 03:32 PM
சந்தேகம் கொடுமையான வியாதி. தீர்க்கும் மருந்து நல்ல புரிந்துணர்வு.

அப்படி அமைந்த தம்பதிகள் புற அழகை பொருட்படுத்துவதேயில்லை.

சந்தேகப்பிராணிகளுக்கு ஒரு பாடமாய் அடித்திருக்கிறது இந்த புயல்.

வாழ்த்துகள் ஐ.பா,ரா.

பா.ராஜேஷ்
01-04-2009, 05:10 AM
சிறு கதையேனும் சற்றே சிந்திக்க வைத்த கதை.
சந்தேகத்தை ஆரம்பத்திலே கிள்ளி விடுவது நல்லது!
பாராட்டுக்கள் ஐ.பா,ரா.

samuthraselvam
01-04-2009, 07:06 AM
குட்டி கதையில் குடும்ப சந்தோசம் கெடாமல் பாதுகாப்பது எப்படி என்பதுக்கு சிறந்த உதாரணம் ...
சந்தேகம்... மனதைக் கெடுத்து அத்துடன் வாழ்க்கையையும் கெடுத்து விடும்... வெறும் புறத் தோற்றத்தை வைத்து வருவது கணவன் மனைவி நேசம் அல்ல... உள்ளுணர்வுகளை புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தமாதிரி நடத்தலே அன்யோன்னியமான நேசம்...

அருமையாய் எடுத்துக் காட்டும் கதை இது.... வாழ்த்துக்கள் அய்யா...

இளசு
01-04-2009, 08:47 PM
நெனச்சது ஒண்ணு... நடந்தது ஒண்ணு!

பாவம் அவன் நிலை!

கதைக்குப் பாராட்டுகள் ஐபாரா அவர்களே!