PDA

View Full Version : இணய வேகத்தை அதிகரிக்கthangamani80
29-03-2009, 11:51 AM
நண்பர்களே இணய வேகத்தை அதிகரிக்க ஏதேனும் இலவச மென்பொருள் உள்ளதா?

அன்புரசிகன்
29-03-2009, 12:50 PM
எதுக்கெல்லாம் இலவசம் அதிகம் என்று இல்லையா நண்பரே...

அப்படி ஒன்றும் இதுவரை நான் கேட்டறியவும் இல்லை. இருக்கவும் மாட்டாது. இணையங்களில் அப்படிப்பட்ட மென்பொருட்கள் இருந்தாலும் அவை வெறும் பணப்பறிப்புக்களாகத்தான் இருக்குமேயன்றி வேறேதுமல்ல.

உங்கள் சேவை வழங்குனர்கள் எதை மட்டுப்படுத்துகிறார்களோ அந்தளவு இணைய வேகம் தான் உங்களுக்கு கிட்டும்... அதற்கு மேல் ஏற்ற இறக்கங்களை வழங்குனர்களின் வழங்கி அனுமதிக்காது...

விகடன்
29-03-2009, 01:20 PM
வேணுமென்றால் வகை 6 இனை சேர்ந்த 10/100 கேபிளை உபயோகித்து கிடைக்கும் இணைய வேகத்தின் அளவை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஓவியன்
29-03-2009, 01:33 PM
விராடன் கூறியது போல, கிடைக்கும் வேகத்தினை முழுமையாகப் பாவிக்கும் விதங்களை செயற்படுத்துவது மட்டுமே நாம் செய்ய வேண்டியதென்று நம்புகிறேன்...

thangamani80
30-03-2009, 09:18 AM
நண்பர்களே நான் கேட்பது இணயசேவை வழங்கும் நிறுவனம் கூறிய வேகத்தை விட குறைவாகவே கிடைக்கிறது.தற்பொழுது MODEM BOOSTER என்னும் மென்பொருள் பயன்படுத்தி வருகிறேன்.வேறு மென்பொருள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டேன் முதலில் முழு விபரம் தெரிவிக்காமைக்கு வருந்துகிறேன்.

praveen
30-03-2009, 09:34 AM
நண்பர்களே நான் கேட்பது இணயசேவை வழங்கும் நிறுவனம் கூறிய வேகத்தை விட குறைவாகவே கிடைக்கிறது.தற்பொழுது MODEM BOOSTER என்னும் மென்பொருள் பயன்படுத்தி வருகிறேன்.வேறு மென்பொருள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டேன்.

எப்போதும் அதே வேகத்தில் கிடைக்காது, மேலும் பிராட் பேண்ட் தவிர மற்றவைகளில் அதன் கணக்ட் செய்த வேகத்தில் அளவு கிடைப்பது மிக அபூர்வமே.

பொதுவாக பிராட்பேண்ட் 512 Kbpsஎன்றால் (512-5%) 486 Kbps வரை கிடைக்கப்பெறலாம். விதிவிலக்காக சில சேவைகள் முழுவேகமும் தரும். (உ,தா தமிழ்நாட்டில் ஏர்டெல் பிராட்பேண்ட்)

டயல் அப் கனக்சன் என்றால் 40 Kbps என்றால் (25 Kbps) தான் கிடைக்கும்.

மொபைல் போன் மூலம் என்றால் 114 or 230 kbps என்று கணக்ட் ஆனலும் 40 or 70 கிடைப்பதே அபூர்வம், இதை விட குறைந்த வேகத்திலே தான் கிடைக்கும். மேலும் GSM என்றால் படு கேவலமாகவும் CDMA என்றும் கேவலமாகவும் இனைய தொடர்ச்சி இருக்கும்.

பிராட்பேண்ட் தவிர மற்றவற்றில் (மேலே சொன்ன இரண்டில்) இனைய வேகம் + எப்போதும் இனையத்துடன் ஒன்றினைந்து (சிங்கரனைசேசன்) இருப்பது சாத்தியமில்லை. எனவே வாய்ஸ் சாட் அல்லது வீடியோ சாட் ரிமோட் டெஸ்க் டாப் போன்ற வற்றிற்கு பிராட் பேண்ட் தான் பெஸ்ட்

உங்கள் சர்வீஸ் புரவைடர் சொன்னபடி ஸ்பீடு இல்லை என்றால் அவருக்கு எழுத்து மூலம் கடிதம் தந்து அந்த மாத பில் தொகை கட்ட முடியாது அல்லது கிடைத்த சதவீத அடிப்படையில் பணம் கட்டுவதாக சொல்லுங்கள், நிச்சயம் விடிவு கிடைக்கும்,

அப்படியில்லை என்றால் ஆளை மாற்றுங்கள். எல்லா இடத்திலும் ஒன்றிற்கு மேற்பட்டவர் சர்வீஸ் கொடுப்பார்கள் தானே.

thangamani80
30-03-2009, 09:43 AM
நன்றி அன்புரசிகன் விராடன் ஓவியன் praveen

விகடன்
30-03-2009, 10:38 AM
தங்கமணி அவர்களே
மன்றத்தில் சற்ற்று வித்தியாசப்படுத்திக் காண்பிக்க விரும்பும் பதிவுகளிற்கு, சாதாரண எழுத்து அளவை விட ஓரளவு சற்று பெரிதாக பதியலாம். அதைவிடுத்து இவ்வாறு மன்றத்தில் அதி இராட்சத அளவில் சாதாரண ஓர் விடயத்திற்ற்கு பின்னூட்டங்கள் இடுவது மன்றத்தின் அழகை குறைப்பது போல் உள்ளது.

எனது வரிகள் உங்கள் மீது காயத்தை ஏற்படுத்தின் மன்னிக்க. ஆனால் இது போன்ற பெரிய அளவில் பதிவுகளை முடிந்தளவில் தவிர்க்க.

பா.ராஜேஷ்
31-03-2009, 05:48 AM
ட்யுன்அப் யுடிலிட்டி (www.tune-up.com) என்ற மென்பொருள் மூலம் தாங்கள் விருபுவது போல் வேகத்தை ஆப்டிமைஸ் செய்து கொள்ளலாம்.

thangamani80
01-04-2009, 01:05 PM
தகவலுக்கு நன்றி

tkpraj
03-04-2009, 04:30 AM
ட்யுன்அப் யுடிலிட்டி (www.tune-up.com) என்ற மென்பொருள் மூலம் தாங்கள் விருபுவது போல் வேகத்தை ஆப்டிமைஸ் செய்து கொள்ளலாம்.
பாருங்கள் ராஜேஷ்
தங்கமணி இலவச மென்பொருள் கேட்டுள்ளார்.


நண்பர்களே இணய வேகத்தை அதிகரிக்க ஏதேனும் இலவச மென்பொருள் உள்ளதா?

பா.ராஜேஷ்
03-04-2009, 05:02 AM
எனக்கு தெரிந்த வரையில் அவ்வகையான மென்பொருள் ஏதும் இல்லை நண்பரே. இருப்பினும் நான் குறிப்பிட்டதும் அவருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றுதான் குறிப்பிட்டேன். தவறாயின் மன்னிக்கவும்.

richard
23-11-2009, 07:47 PM
கம்புயடரில் உள்ள இணையம் வேகமாகவும், துரிதமாக செயல் பட

http://img156.imageshack.us/img156/4023/gpedit.jpg

1. முதலில் உங்களது கணினியில் Administrator கணக்கில் நுழையுங்கள்
2. start - மெனுவில் run சென்று அங்கே gpedit.msc என டைப் செய்து என்டர் செய்யுங்கள்
3. அங்கே "local computer policy" என்பவற்றை கிளிக் செய்யுங்கள்
4. அதனுல் வரும் "administrative templates" என்பதை தேர்வு செய்யுங்கள்
5. அதனுல் மீண்டும் "network branch" என்பதைனை கிளிக் செய்யுங்கள்
6. அங்கே "QoS Packet Scheduler" என்பதை தேர்தேடுங்கள்.
7. QoS Packet Scheduler தேர்ந்தெடுத்தவுடன் வலது புறம் வரும் சாளரத்தில் "limit reservable bandwidth" என்பதை இரு முறை கிளிக் செய்யுங்கள்.
8. புதியதாக தோன்றும் திரையயில் "enabled" என்பதை தேர்ந்தெடுங்கள். அதன் கீழே வரும் "Bandwidth limit %" 0 என மாற்றிக்கொள்ளுங்கள்.

http://img39.imageshack.us/img39/5930/increasenetowrkspeed.jpg

My computer- வலது கிளிக் செய்து வரும் செய்தி பெட்டியில் manage என கிளிக் செய்து வரும் Device manager-> என தேர்ந்தெடுக்குக்கொள்ளவும்.

அங்கே வரும் குறும்பெட்டியில் Ports என்பதை கிளிக் செய்து வரும் Communication Port என்பதில் இருமுறை கிளிக் செய்யவும்.

பின் வரும் கம்யுனிகேசன் ப்ராபர்ட்டிஸ்-ல் Port Setting: ற்கு வரவும்.
"Bits per second" என்பதில் 9600ல் இருந்து 128000 க்கு மாற்றவும். அதே போல்
"Flow control" என்பதில் Hardware. என மாற்றவும்.

மேற்கண்ட வழிமுறைகள் நமது கணினி போர்ட்களின் வேகத்தை அதிகரிக்கும்

பின் ரீஸ்டார்ட் செய்ய வேண்டுமாஎன்ற மெனு தோன்றினால் yes என்று கொடுத்து தேர்வு செய்யுங்கள்.

இனி கம்புயுட்டர் இனையம் துரிதமாக செயல் படும்

நாஞ்சில் த.க.ஜெய்
17-11-2010, 12:36 PM
பதிவும் பதிவுகளும் நன்று
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

Kalai_21
10-01-2011, 10:12 AM
பயனுள்ள தகவல்கள்......