PDA

View Full Version : கனவிலா...? நனவிலா....?



செல்வா
29-03-2009, 06:38 AM
ஒரு இறகுக் கூட்டிலிருந்து பறந்து வந்த
இன்னொரு இறகு நான்
காற்றின் விசையால்
கனவுகளினூடு மேலேயும்
நனவுகளினூடு கீழேயும்
மிதந்து கொண்டிருந்தேன்...
மாறும் காற்றுகளால்
மேலே... கீழே ...கீழே ....மேலே ...
சுழன்று....
நிலை குலைந்து தொலைந்தேன்....
இன்னும் மிதந்து கொண்டுதானிருக்கிறேன்......
மேலா.... கீழா...?
கனவிலா ... நனவிலா..?
இருக்குமிடம் தெரியாமலேயே...

சுகந்தப்ரீதன்
29-03-2009, 10:41 AM
இறகு கூட்டிலிருந்து பறந்து வந்த இறகு சிறகானால் இந்தநிலை மாறிவிடும்... அதுவரை நனவோட்டத்தின் திசையில் சற்று கீழேயும்... கனவோட்டத்தில் சற்று மேலேயும் மாறி மாறி பறக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிடுகிறது இறகுகளுக்கு...!!

விரைவில் இறகுகள் சிறகுகளாய் பலம்பெற்று நிலையாய் வலம்வர என் வாழ்த்துக்கள் செல்வா...!!:icon_b:

அமரன்
30-03-2009, 08:13 AM
அதெல்லாம் உனக்குத் தேவை இல்லை செல்வா. உன்பக்கம் காத்து அடிக்கிறதல்லவா. தூற்றிக்கொள்.
வாழ்த்துகள்.

சிவா.ஜி
30-03-2009, 06:26 PM
ரொம்ப நாளைக்கப்புறமா மன்றத்துல செல்வாவோட ஒரு பதிவு. அதுவும் தத்துவக்கவிதையாக.

வெறும் இறகா மட்டுமிருந்தா திசையை தேர்ந்தெடுக்கிற உரிமை காற்றுக்குத்தான். சுபி சொன்னதைப்போல சிறகாகிவிட்டால்....அமரன் சொன்னதைப்போல தூற்றிக்கொள்ளலாம்.

சிறகா மாற வாழ்த்துகள் செல்வா.

அறிஞர்
30-03-2009, 07:11 PM
இறகு சிறகுடன் இணைந்திருக்கும்பொழுது..
மதிப்பு தனிதான்....
வாழ்த்துக்கள் செல்வா..

இளசு
31-03-2009, 08:57 PM
வாழ்க்கை என்னும் நதி..
நாம் நீந்துகிறோமா?
இல்லை..
கரையில் நின்று கவனித்துக்கொண்டிருக்கிறோம்..
நதி கடந்து, கடந்து.. நடந்து..நடந்து..
கடலில் கலந்து மறையும் வரை...
வெறுமே கவனித்தபடி மட்டுமே...
''இருக்கிறோம்''...

இல்லையா செல்வா?

காற்றில் இறகாய் மிதந்தபடியே..
இயங்குகிறோம்..
இயக்குகிறோம் இல்லை!

வாழ்க்கை பற்றிய பார்வைகளில் இது ஒன்று..

விரக்தி என்னும் கையறு நிலையிலும்
முக்தி என்னும் பற்றறு நிலையிலும்
வரும் பார்வை...

நீ எந்த நிலை?

செல்வா
01-04-2009, 05:21 PM
வாழ்த்துக்கள் செல்வா...!!:icon_b:
ஹா...ஹா... சுகந்தன் இதே வாழ்த்தை நான் உனக்கும் சொல்லிக் கொள்கிறேன் :)
வாழ்த்துக்களுக்கு நன்றி சுகந்தா....


அதெல்லாம் உனக்குத் தேவை இல்லை செல்வா. உன்பக்கம் காத்து அடிக்கிறதல்லவா. தூற்றிக்கொள்.
வாழ்த்துகள்.
என்பக்கம் காத்து அடிக்குதுண்ணு நான் பாட்டுக்கு போய்ட்டுருந்தா காற்று என்னைத் தூற்றிவிடக்கூடாது அல்லவா...?
அதான் கொஞ்சம் யோசனை இடையில் ;)


ரொம்ப நாளைக்கப்புறமா மன்றத்துல செல்வாவோட ஒரு பதிவு. அதுவும் தத்துவக்கவிதையாக.
சிறகா மாற வாழ்த்துகள் செல்வா.
உண்மைதான் அண்ணா ரொம்ப நாள் ஆச்சு... எல்லாரும் நம்மை மறந்திரக் கூடாதுணு தான் எழுதியது இது... :)
ஹா..ஹா....
தத்துவக் கவிதையா :eek::eek::eek: நீங்க சொன்னாச் சரிதான் :D:D வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா...


இறகு சிறகுடன் இணைந்திருக்கும்பொழுது..
மதிப்பு தனிதான்....
வாழ்த்துக்கள் செல்வா..

எல்லா இறகும் ஒரு நாள் சிறகிலிருந்து பிரிந்து தானே ஆக வேண்டியிருக்கிறது.
வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா...



விரக்தி என்னும் கையறு நிலையிலும்
முக்தி என்னும் பற்றறு நிலையிலும்
வரும் பார்வை...
நீ எந்த நிலை?
நீங்க கேட்டப்புறம் தான் எந்த நிலைனு யோசிச்சேன்...?
ஞாபகம் வரலியே.... :D:D
நீண்ட பின்னூட்டம் மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா.... :)

அமரன்
22-04-2009, 09:42 AM
நீங்க கேட்டப்புறம் தான் எந்த நிலைனு யோசிச்சேன்...?
ஞாபகம் வரலியே.... :D:D
நீண்ட பின்னூட்டம் மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா.... :)

ஒரு சைக்கிளை எடுத்துக்கோ..
அப்படியே காத்தாடா பழைய பக்கங்கள் போ..
"ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே" பாடல் கேட்கும்.

ஓவியன்
12-06-2009, 07:49 AM
இறகு,
மேலோ, கீழோ..
கனவிலோ, நனவிலோ..

எங்கிருந்தாலும் பரவாயில்லை,
என்றும் தன்னிலை மாறாது
ஆதி இறகுக் கூட்டின்,
பெருமை காத்தலே
காலத்தின் தேவை....!!

நிறைய சிந்திக்க வைத்த கவிதைக்கு,
மனதார்ந்த வாழ்த்துகள் செல்வா...!! :icon_b:

நாகரா
19-06-2009, 11:39 AM
ஒரு இறகுக் கூட்டிலிருந்து பறந்து வந்த
இன்னொரு இறகு நான்
காற்றின் விசையால்
கனவுகளினூடு மேலேயும்
நனவுகளினூடு கீழேயும்
மிதந்து கொண்டிருந்தேன்...
மாறும் காற்றுகளால்
மேலே... கீழே ...கீழே ....மேலே ...
சுழன்று....
நிலை குலைந்து தொலைந்தேன்....
இன்னும் மிதந்து கொண்டுதானிருக்கிறேன்......
மேலா.... கீழா...?
கனவிலா ... நனவிலா..?
இருக்குமிடம் தெரியாமலேயே...

கூட்டிலிருந்து கழிந்ததில்
கூடியிருந்த ஞாபகம் விழிக்க
அஞ்ஞான நிலை குலைதல் போய்
மெய்ஞ்ஞானத் துரிய நிலை!
(துரியம் = உறக்கம், நனவு, கனவு கடந்த அதீத விழிப்பு)

அருமையான குறியீட்டுக் கவிதைக்கு வாழ்த்துக்கள் செல்வா

இறகுக் கூடு = மனிதம் இறைமையோடு கூடியிருந்த ஒருமை நிலை
பறந்து வருதல் = ஒருமை நிலையை விட்டு நழுவல்
நிலை குலைதல் = ஒருமை நிலையை முற்றிலும் மறத்தல்

கவிஞனை ஊடகமாய்ப் பயன்படுத்திப் பாயும் கவிதை வகைகளில் உமது இக்கவிதையும் ஒன்று!

lenram80
08-07-2009, 02:52 PM
அது தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். போகும் இடல் தெரியாமல் போகும் வாழ்க்கைக்கு ஒரு GPS வேண்டாம். பின் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும்.

வாழ்த்துக்கள் செல்வா