PDA

View Full Version : 2r யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது

ரங்கராஜன்
27-03-2009, 06:41 PM
gg35135y31y1

அமரன்
27-03-2009, 09:39 PM
தக்ஸ்..

சடக்கென்ற திருப்பங்கள் இராது என்று பொய் சொல்லி விட்டீங்களே..

ஆரம்பத்தில் ஊட்டியை வருணிக்கத் தொடங்கி சடக்கென்று ஒடித்து நிகழ்காலத்துக்கு வந்து

இளஞ்சோடியைக் கண்முன் நிறுத்தி..

கண்காணித்த ஜோடிக்கண்களை இளஞ்சோடி என தலைப்பின் மூலம் நினைக்க வைத்து..

ஒரு கட்டத்தில் பழச்சாறு என்றும், இளஞ்சோடி அ ஆ நினைவுகள் என்றும் நினைக்க வைத்து..

போட்டுக் குதப்பி சுவைபட தடல் புடல் விருந்து படைத்து விட்டீர்களே.

பாராட்டுகள்..

ஆதவா
28-03-2009, 02:22 AM
நல்லா இருக்குடா தம்மு!@

ரொம்ப அருமையாக சுவாரசியமாக கதை போகிறது. எந்த வெட்டு குத்து கொலை, மூளை தெறிப்பு இல்லாமல்.... :)

இளஞ்சோடிகளாகவே நினைத்து அந்த பருவ வாயிலாகவே படித்து வந்ததால் தீடீரென்று கூப்பிடும் அவர்களது மகனும் இளம் வாய்ஸில் பேசுவதாகவே படித்தேன்... ட்ரைவர் 'அய்யா கோவிச்சுக்குவாங்க' என்று சொல்லும் பொழுதே ஏதோ ஒன்று இருக்கலாம் என்று நினைத்தேன்..

ஊட்டியில் கை கோர்த்து நடந்தால் யாரும் ஒருமாதிரியாக பார்க்கமாட்டார்கள் தக்ஸ்... அது எத்தனை வயதானவர்களாக இருந்தாலும்....

தேனுக்குள் பழம்நிலவு!@!

ரங்கராஜன்
28-03-2009, 03:33 AM

நன்றி அமரன்

நான் பொய் எதுவும் சொல்லவில்லை தலைவா, இதை திடுக்கிடும் திருப்பம் என்று சொல்வதை விட படிக்கும் வாசகன் புரிந்துக் கொண்ட விதம் என்று சொல்லலாம், முதலில் இருந்து வந்த வார்த்தைகளால் நீங்கள் ஒன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அதே பிம்பத்துடன் பார்க்கையில் கடைசியில் அந்த பிம்பம் பொய்யாகிறது, இதுக்கு வாசகனின் அடுத்த இந்த காட்சியாக இருக்குமோ என்ற கெஸ்ஸிங் தான் காரணம். அதுவும் உங்களை போல கதாசிரியருக்கு அந்த உணர்வு வருவது ஆச்சர்யம் இல்லை, அதனால் தான் உங்களுக்கு இந்த குழப்பமும், குதப்பல்களும் தெரிகிறது.

விமர்சனத்திற்கு நன்றி

ரங்கராஜன்
28-03-2009, 03:46 AM

நன்றி டா

கதை நீ முன்பே கெஸ் பண்ணினியா, ஆம் என்றால் நான் தோற்றுவிட்டேன், இல்லை என்றால் நான் ஜெயித்துவிட்டேன். நன்றி டா தொடரு உன்னுடைய விமர்சனங்களை

samuthraselvam
28-03-2009, 04:24 AM
திருப்பமெ இல்லைன்னு சொல்லிட்டு டக்குன்னு 25 வருசதுக்கு முன்னாடி போய்டீங்க... இதுக்கு பேர் என்னவாம்.... நல்ல இருக்கு.. பாசம் என்பது எப்பொதும் மாறாது.... காலங்கல் கடந்தாலும் காதல் என்றும் மாறாது... சூப்பர்

ஆதவா
28-03-2009, 04:29 AM
நன்றி அமரன்

நான் பொய் எதுவும் சொல்லவில்லை தலைவா, இதை திடுக்கிடும் திருப்பம் என்று சொல்வதை விட படிக்கும் வாசகன் புரிந்துக் கொண்ட விதம் என்று சொல்லலாம், முதலில் இருந்து வந்த வார்த்தைகளால் நீங்கள் ஒன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அதே பிம்பத்துடன் பார்க்கையில் கடைசியில் அந்த பிம்பம் பொய்யாகிறது, இதுக்கு வாசகனின் அடுத்த இந்த காட்சியாக இருக்குமோ என்ற கெஸ்ஸிங் தான் காரணம். அதுவும் உங்களை போல கதாசிரியருக்கு அந்த உணர்வு வருவது ஆச்சர்யம் இல்லை, அதனால் நான் உங்களுக்கு இந்த குழப்பமும், குதப்பல்களும் தெரிகிறது.

விமர்சனத்திற்கு நன்றி

இதுதான் எனக்கும் ஏற்பட்டது!!!

ரங்கராஜன்
28-03-2009, 04:40 AM
திருப்பமெ இல்லைன்னு சொல்லிட்டு டக்குன்னு 25 வருசதுக்கு முன்னாடி போய்டீங்க... இதுக்கு பேர் என்னவாம்.... நல்ல இருக்கு.. பாசம் என்பது எப்பொதும் மாறாது.... காலங்கல் கடந்தாலும் காதல் என்றும் மாறாது... சூப்பர்

நன்றி பாசமலரே

இந்த மாதிரி காதல் எல்லாருக்கும் வாய்பதில்லை, கோடியில் ஒருத்தருக்கு தான் இந்த மாதிரி உண்மையான காதலும், இந்த மாதிரி வசதியான வாழ்க்கையும், வயதானலும் அதே அன்னியூன்யமும், முக்கியமாக பெற்றோற்களை புரிந்துக் கொள்ளும் பசங்களும் கிடைக்கிறார்கள்.......... நன்றி டா

ஆதவா
28-03-2009, 04:40 AM
திருப்பமெ இல்லைன்னு சொல்லிட்டு டக்குன்னு 25 வருசதுக்கு முன்னாடி போய்டீங்க... இதுக்கு பேர் என்னவாம்.... நல்ல இருக்கு.. பாசம் என்பது எப்பொதும் மாறாது.... காலங்கல் கடந்தாலும் காதல் என்றும் மாறாது... சூப்பர்

இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன் போகவில்லை..

தம்மூவின் கதை ஆரம்பத்திலிருந்தே முதியவர் காதலிலிருந்தான் தொடங்குகிறது. அவர்களது இளமை, வயதை மறைத்திருக்கிறது. அது கதையின் இறுதியில் வெளிப்படுகிறது,

நம் வாசிப்பு அவர்களை இளஞ்சோடிகளினிடமிருந்து தொடங்கி அது பொய்யாகிப் போவதுதான் கதையின் அடிநாதம்.. உண்மையைச் சொல்லப்போனால் கதையின் கருவில் எந்த புதுமையுமில்லை. அதைக் கொண்டு போய் சேர்க்கும் விதத்தில்தான் இருக்கிறது புதுமையே!!

திடுக்கிடும் திருப்பங்கள் என்பது நீங்கள் எதிர்பார்த்திராத முடிவு... தெளிவான கதையோட்டத்தில் இருக்கும்... மேலும் கதையில் ஒரு முடிச்சு இருக்கும். அதை அவிழ்க்கும் பொழுது அந்த திருப்பத்தை உணர்வீர்கள். இந்த கதையைப் பொருத்தவரையில் எந்த முடிச்சும் இல்லை.... வாசிப்பனுபவம் மட்டுமே!!!

samuthraselvam
28-03-2009, 04:53 AM

சொன்னது மிகவும் சரி தான் அண்ணா...!

பா.ராஜேஷ்
28-03-2009, 05:17 AM
இயல்பான கதை. அருமையான வர்ணனைகள். நல்ல முடிச்சு, கதை மிக நன்று நண்பரே!

கா.ரமேஷ்
28-03-2009, 06:42 AM
அருமையான கதை....! வாழ்த்துக்கள் தோழரே...!

SathyaThirunavukkarasu
28-03-2009, 08:36 AM
நன்றி என்போன்ற வாசகர்களையும்மகிழ்வித்தற்கு, இதுபோன்றகதைகளையும் அடிக்கடி எழுதவும். மனதை வருடிசெல்கிறது

அமரன்
28-03-2009, 09:21 AM
நன்றி அமரன்

நான் பொய் எதுவும் சொல்லவில்லை தலைவா, இதை திடுக்கிடும் திருப்பம் என்று சொல்வதை விட படிக்கும் வாசகன் புரிந்துக் கொண்ட விதம் என்று சொல்லலாம், முதலில் இருந்து வந்த வார்த்தைகளால் நீங்கள் ஒன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அதே பிம்பத்துடன் பார்க்கையில் கடைசியில் அந்த பிம்பம் பொய்யாகிறது, இதுக்கு வாசகனின் அடுத்த இந்த காட்சியாக இருக்குமோ என்ற கெஸ்ஸிங் தான் காரணம். அதுவும் உங்களை போல கதாசிரியருக்கு அந்த உணர்வு வருவது ஆச்சர்யம் இல்லை, அதனால் தான் உங்களுக்கு இந்த குழப்பமும், குதப்பல்களும் தெரிகிறது.

விமர்சனத்திற்கு நன்றி

குழப்பமா.. என்ன இது புதுக்குழப்பம்.:rolleyes:
எங்கம்மா சொல்வாங்க. பல்முளைக்காத வயசுல தனக்குத் தன் பாட்டி சோற்றை தான் சப்பிக் குதப்பி விட்டு கையிலெடுத்து ஊட்டுவார் என்று. எளிதான சமிபாட்டுக்கு இது பேருதவியாக இருக்கும். அந்த மாதிரி எளிய உணவாக விருந்து படைத்துட்டீங்க என்ற அர்த்தத்தில் சொன்னேன் தக்ஸ்.

ரங்கராஜன்
28-03-2009, 10:42 AM

ஓ அந்த அர்த்தமா அமரன், நான் நினைத்தேன் கதையின் வரும் சீன்கள் உங்களை குழப்பிவிட்டது என்று.

ஆனால் நீங்கள் குதப்பல்னா விருந்துக்கு சொன்ன விளக்கம் அருமை அமரன், நான் சற்றும் எதிர்பார்க்காதது.

தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கும் .........தக்ஸ்

சிவா.ஜி
29-03-2009, 05:27 PM
தக்ஸோட கேமரா...காட்சிகளை ரொம்ப அழகா படம்பிடிச்சிருக்கு. இளம் தம்பதிகளின் சேட்டை, மழைத்தூறலின் சில்லிப்பு எல்லாத்தையும் கண்டும் உணர்ந்ததையும் போல இருந்தது.

உன்னோட கூர்ந்து பார்த்து உள்வாங்கிக்கற திறமை நல்லா வெளிப்பட்டிருக்கு தக்ஸ்.

இளம் தம்பதியராய் சித்தரித்துவிட்டு, கபால்ன்னு ஒரு ட்விஸ்ட்...தக்ஸ் பிராண்ட்.

நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்களின் கதையை வாசிக்கும்போது மனதுக்கு நிறைவாய் இருக்கிறது. ஸ்பெஷலா...இன்னும் மூணு வருஷத்துல சில்வர்ஜூப்லி கொண்டாடப்போற எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

வாழ்த்துகள் தக்ஸ்.

ரங்கராஜன்
31-03-2009, 10:06 AM
நன்றி சிவா அண்ணா

நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்களின் கதையை வாசிக்கும்போது மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.

இந்த ஒரு வாக்கியம் போதும் அண்ணா, கதையை நான் படைத்த நோக்கமே அதுதான், உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் கோடி

xavier_raja
31-03-2009, 10:24 AM
ஆனால் நீங்கள் இந்த கதையை ஆரம்பித்தவுடன் எனக்கு புரிந்துவிட்டது.. அவர்கள் வயதான ஜோடியாகத்தான் இருப்பார்கள் என்று.. என்ன செய்வது அனுபவம் பேசுகிறது.

ரங்கராஜன்
31-03-2009, 11:04 AM
ஆனால் நீங்கள் இந்த கதையை ஆரம்பித்தவுடன் எனக்கு புரிந்துவிட்டது.. அவர்கள் வயதான ஜோடியாகத்தான் இருப்பார்கள் என்று.. என்ன செய்வது அனுபவம் பேசுகிறது.

ம்ம்ம் உங்கள் அனுபவத்தின் மீது எனக்கு கோபம்..........பின்ன என்னுடைய மடியில் கைவைத்து விட்டதே ஹா ஹா........ நன்றி ராஜா அவர்களே

தாமரை
31-03-2009, 11:13 AM
பென்சோட பேசனீங்களா என்ன?

ரங்கராஜன்
02-04-2009, 05:19 PM
இந்த கதை யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது, என்னுடைய கதை முதல் முறையாக வெளி வந்து இருக்கிறது சந்தோஷமாக இருக்கிறது.

நன்றி பூமகள்,

உங்கள் கதையை அனுப்பினீர்கள் என்றால் கண்டிப்பாக போடுவாங்க

இந்த வார்த்தையின் பலன் தான் இப்போ இந்த கதை யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது. நன்றியை தவிர வேறு வார்த்தைகள் என்னிடம் இல்லை......... ரொம்ப நன்றி பூமகள்

ஆதவா
02-04-2009, 06:02 PM
வாழ்த்துகள்டா மாப்ள!!!

நீ எத்தனை அனுப்பினாலும் போடுவாய்ங்க..!!!!!

ரங்கராஜன்
02-04-2009, 06:21 PM
வாழ்த்துகள்டா மாப்ள!!!

நீ எத்தனை அனுப்பினாலும் போடுவாய்ங்க..!!!!!

நன்றி டா மச்சி

நல்லா இருக்குனு முதல் முறையா நீ சொன்ன கதை இதுனு நினைக்கிறேன், உன் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது.......... தாங்க் யூ. நம்ம எப்ப ஊட்டி போலாம், நம்ம பிளான் ஞாபகம் இருக்கா

அறிஞர்
02-04-2009, 08:25 PM
இரட்டை வாழ்த்துக்கள் தக்ஸ்...
---------------
கதை சூப்பர்... மனசு இளமையாக இருந்தால், என்றும் இளமைதான்.
--------
யூத் விகடனில் வெளியானது.. மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

பூமகள்
03-04-2009, 02:00 AM
தக்ஸ்..

எனக்கு நன்றி சொல்ல என்ன இருக்கிறது... உண்மையான திறமைசாலிகளுக்கு எங்கும் வரவேற்பு கட்டாயம் இருக்கும்.. இந்த உண்மையைச் சொன்னதற்கா இத்தனை நன்றிகள்??

ரொம்ப மகிழ்ச்சியான செய்தி...

உங்களது அத்தனை கதைகளையும் சிரமம் பார்க்காது அனுப்பி வையுங்கள்.. பரிசீலனைக்குப் பின் கட்டாயம் அனைத்தும் வெளிவரும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை..

மனம் நிறைந்துவிட்டது தக்ஸ்.. இன்னும் நீங்கள் எட்ட இருக்கும் உயரம் அனேகம் பாக்கி இருக்கிறது.. இது முதல் படி தான்.. மேன்மேலும் முன்னேறுங்கள்.

அளவில்லா மகிழ்ச்சியோடு என் அன்பான வாழ்த்துகள் தக்ஸ்... :)

ஆதவா
03-04-2009, 02:00 AM
நன்றி டா மச்சி

நல்லா இருக்குனு முதல் முறையா நீ சொன்ன கதை இதுனு நினைக்கிறேன், உன் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது.......... தாங்க் யூ. நம்ம எப்ப ஊட்டி போலாம், நம்ம பிளான் ஞாபகம் இருக்கா

டேய்.. அது கொடைக்கானல்டா!!! ப்ளானையே மாத்திறான் பாரு!!!

சரி, ஊட்டியோ கொடைக்கானலோ, மே இடையில் சென்றால் ஃப்ளர்வர் ஷோவையும் கையோடு பார்த்துவிட்டு வரலாம்!!!

கொஞ்சம் ப்ளான் பண்ணலாம்.

samuthraselvam
03-04-2009, 04:08 AM
வாழ்த்துக்கள் அண்ணா...!
ரொம்ப சந்தோசமா இருக்குண்ணா...

திறமை இருந்தால் அதற்கு கண்டிப்பாக அங்கிகாரம் கிடைக்கும். அதுவே உங்களுக்கும் கிடைத்திருக்கிறது....

விரைவில் தங்களுடைய கதைகள் அனைத்தையும் அனைவரும் புத்தக வடிவில் வாங்கிப் படிக்க என் வாழ்த்துக்கள்.....

இளைமை விகடனுக்கு அனுப்பி வைக்க அண்ணாவுக்கு யோசனை சொன்ன பூ அக்காவுக்கு என் நன்றிகள்....

natesh_raj_1980
10-04-2009, 05:49 AM
கதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

நட்டு

Mano.G.
10-04-2009, 06:52 AM
கதையை இன்னமும் வாசிக்க வில்லை,
கண்டிப்பாக இன்று வாசித்துவிடுவேன்.
இருந்தாலும் யூத்ஃபுல் விகடனில் வெளியானது என பார்த்து
முதலில் வாழ்த்திவிடுவோம் என்று வாழ்த்திவிட்டேன்.

தம்பி தாக்ஸ் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்

மனோ.ஜி

மன்மதன்
10-04-2009, 01:18 PM
வாழ்த்துகள் தக்ஸ்...!
அடுத்த கதை எப்போ... கொடைக்கானலில் எழுதுவீங்கன்னு நினைக்கிறேன்.. நல்லா போடுறீங்க ப்ளான்..
யாரெல்லாம் போறீங்கப்பா..

ரங்கராஜன்
18-06-2010, 12:32 PM
நன்றி மம்மி

இப்போ ம்மமி சென்னைக்கு வந்துவிட்டார்............. சோ நானும் மம்மியும் சேர்ந்து தான் கொடைக்கானல் போகப்போறோம்.........யாரு வரது கையை தூக்குங்கோ