PDA

View Full Version : ஒவ்வொரு முறையும்..!!



umakarthick
26-03-2009, 01:29 PM
நான் சிகரெட் பிடிப்பதை என் அம்மாவிடம்
சொல்லி விடுவாய் என்று சொன்னாய்
பரவாயில்லை சொல் அப்படியே உனக்கு
என்னை பிடிப்பதையும் சொல் என்றால்
வெட்கப் பட்டு ஓடி விடுகிறாய்
இப்படித்தான் தப்பித்துக் கொள்கிறேன் ஒவ்வொரு முறையும்..!!

அக்னி
26-03-2009, 01:36 PM
தப்பித்துக் கொள்ளத்தான்
தனக்குத்தானே கொள்ளியா...

பாராட்டுக்கள் சொல்லத் தோன்றவில்லை.
ஏனென்றால், இப்போதுதான் இந்தக் கொள்ளியை என்னிடமிருந்து தள்ளிவிட்டிருக்கின்றேன்..

கருவைத் தவிர்த்துப் பார்த்தால்,
கவிதை கவர்கின்றது...

umakarthick
30-03-2009, 02:06 PM
பாராட்டுக்கள் சொல்லத் தோன்றவில்லை.
// கவிதை தான் இது மற்ற படி யாரையும் என்கரேஜ் பண்ணலை :)

samuthraselvam
31-03-2009, 08:42 AM
இப்படித்தான் தப்பித்துக் கொள்கிறேன் ஒவ்வொரு முறையும்..!!

தப்பிக்கவில்லை....
சிக்கிக்கொள்கிறீர்கள்.....
பின் சிக்கல் வந்து கொல்லும்....

umakarthick
03-06-2009, 01:09 PM
ஹி ஹி ஒரு பேச்சுக்கு எழுதினா விட மாட்டீங்களே :)

கா.ரமேஷ்
04-06-2009, 07:18 AM
தபூ சங்கர் அவர்களின் கவிதை வரிகளிலும் இதை போலவே படித்ததாக ஞாபகம்.... எப்படி இருந்தாலும் அந்த காதல் அழகு...

umakarthick
05-06-2009, 07:41 AM
அது நான் என்ன எழுதினாலும் அவரும் எழுதிடுறார்பா..முடிஞ்சா அந்த கவிதையை கொடுக்கவும் இங்கே :)

அமரன்
08-06-2009, 05:58 PM
சிகரெட்டை விடக் காதல் பிடிக்கிறது.

தப்பித்'தேன்' கசக்கிறது.

ஆமாம் எதிலிருந்து தப்பித்தீர்கள்?

umakarthick
07-08-2009, 08:04 AM
சிகரெட்டை விடக் காதல் பிடிக்கிறது.

தப்பித்'தேன்' கசக்கிறது.

ஆமாம் எதிலிருந்து தப்பித்தீர்கள்?

மாட்டி கொள்வதிலிருந்து

இளசு
07-08-2009, 08:29 PM
எனக்கும் புகை ( இப்போது) பகை!

அதை விலக்கிப் பார்த்தால்
கவிதை சுகந்தமாய் மணக்கிறது!

தபூசங்கர் நினைவாடினால், கவிதை வெற்றி!


வாழ்த்துகள் உமாகார்த்திக்.


( அக்னி - அண்ணன் மகிழ்கிறேன் உன் பதிவால்..)