PDA

View Full Version : கங்குலிக்கு அடிமேல் அடி! : பறிபோனது நைட் ரைடர்ஸ் கேப்டன் பதவி



பா.ராஜேஷ்
26-03-2009, 06:44 AM
கோல்கட்டா நைட் ரைடர்ஸ் (ஐ.பி.எல்.,) அணியின் கேப்டன் பதவி யிலிருந்து சவுரவ் கங்குலி நீக்கப்பட்டார். ஐ.பி.எல்., சார்பில் 2வது கட்ட "டுவென்டி-20' கிரிக் கெட் தொடர் தென் ஆப்ரிக் காவில் வரும் ஏப்ரல் 18 ம் தேதி துவங் குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளுள் "கோல்கட்டா நைட் ரைடர்ஸ்' அணியும் ஒன்று. இதன் உரிமையாளராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளார். அணியின் கேப்டனாக சவுரவ் கங்குலி இருந்தார். கங்குலிக்கும், அணியின் பயிற்சியாளரான ஆஸ்திரேலியாவின் ஜான் புக்கானனுக்கும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கேப்டன் பதவியில் இருந்து கங்குலியை நீக்க வேண்டும் என புக்கானன் விரும்புவதாக செய்திகள் வெளியாகின.


சுழற்சி முறை: இந்நிலை யில், நேற்று கோல் கட்டாவில் ஜான் புக்கானன், சவுரவ் கங்குலி இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.


அப்போது புக்கானன் கூறுகையில், ""அணியில் கங்குலி, மெக்கலம் (நியூசி.,), கெய்ல் (வெ. இண்டீஸ்), ஹாட்ஜ் (ஆஸி.,) என நான்கு கேப்டன்கள் உள்ளனர். இந்நிலையில் அணிக்கு நிரந்தர கேப்டன் தேவை யில்லை என முடிவு செய்தேன். இது குறித்து நானும், கங்குலி யிடம் ஆலோசனை நடத்தினேன். இனி ஒவ்வொரு போட்டிக்கும் சுழற்சி முறையில் ஒருவர் அணியை வழிநடத்து வார்,'' என்றார். கங்குலிக்கும், தனக்கும் மோதல் இல்லை என்பதை விளக்கும் விதமாக பேட்டியின் இடையே," கங்குலி கோல்கட்டாவின் ராஜா' என அவரை புகழ்ந்தார் புக்கானன்.


கங்குலி பெருந்தன்மை: புக்கானன் முடிவை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி. இது குறித்து அவர் கூறுகையில்,""அணியின் பயிற்சியாளர் புக்கானன் முடிவு எனக்கு வருத்தம் அளிக்கவில்லை. சுழற்சி முறையில் கேப்டன்களை தேர்வு செய்வது என்பது புதிய முறை. புக்கானன் இம்முடிவை எடுத்து உள்ளார். இது அவரது விருப்பம். என்னை பொறுத்த வரை, தொடரில் சிறப்பாக ஆடி ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்,'' என்றார்.

~~~~~~~~~~~~~~~~~
நன்றி: தினமலர்
~~~~~~~~~~~~~~~~~

மன்மதன்
26-03-2009, 08:15 AM
வெல்டன் கங்குலி..!!

பூமகள்
26-03-2009, 08:25 AM
கிரேட் கங்குலி...!!

பகிர்ந்தமைக்கு நன்றிகள் பா.ராஜேஷ் அவர்களே.

தாமரை
26-03-2009, 08:32 AM
நியூஸை இப்படி பாருங்களேன்..

இந்த வருடத்தோட கங்கூலி ஐ.பி.எல் இல் இருந்தும் ஓய்வு. கொல்கத்தா க்னைட் ரைடர்ஸூக்கு புதிய கேப்டன் யார்?

பாண்டிங்க் விளையாடாத நிலையில், அனுபவமும் ஆளுமையும் இல்லாத இந்திய வீரர்கள் இல்லாத காரணத்தினால், ஆளாளுக்கு சில வாய்ப்புகள் வழங்கப்பட்டு புதிய கேப்டன் தேர்ந்தெடுக்கப்படுவார்.

xavier_raja
26-03-2009, 11:56 AM
கங்குலி மற்ற வீரர்களுக்கு ஓர் மிகசிறந்த உதாரணமாக என்றும் திகழுந்துள்ளார் என்பதற்கு இது மற்றுமோர் சான்று. அவர் காலத்தில்தான் இந்திய அணி ஓர் எழுச்சி மிக்க காப்டைனை சந்தித்து. களத்தில் புலி..

tkpraj
26-03-2009, 01:10 PM
வங்கப்புலிக்கு இதெல்லாம் சாதாரணம்
கேப்டன் பதவி இருந்தான் என்ன இல்லாவிட்டால் என்ன?
அவருடைய பேட்டிங் பதில் சொன்னால் போதும்.

ஓவியன்
26-03-2009, 01:15 PM
கங்குலிக்கும் சாருக்ஹானுக்கும் முன்பிருந்த உறவில் சிறு விரிசல் எனவும் ஒரு செய்தித் தளம் கூறியிருந்தது, எது எவ்வாறாக இருப்பினும் செல்வண்ணா கூறிய கருத்துக்களிற்கே சாத்தியம் அதிகமானது, பொண்டிங் இல்லாத நிலையில் கங்குலிக்கு பின் மெக்கலமா அல்லது ஹெய்லா என்று தீர்மானிக்க இந்தப் சுழற்சித் தலைமைத்துவம் உதவும்...

பரஞ்சோதி
26-03-2009, 03:47 PM
என்ன கொடுமை கங்குலி.

இது சரிப்பட்டு வராது. கல்கத்தா புலிக்கே கல்தாவா?

அறிஞர்
26-03-2009, 04:19 PM
பல கேப்டன்கள் இருந்தால் பிரச்சனைதான்....

ஜாக்
27-03-2009, 02:41 AM
பல கேப்டன்கள் இருந்தால் பிரச்சனைதான்....
மிக சரி

ஒரு முதலாளிக்கு எத்தனை தொழிலாளி வேண்டுமானால் இருக்கலாம்

ஆனால்

ஒரு தொழிலாளிக்கு ஒரு முதலாளி இருந்தால்தான் நிர்வாகம் சிறக்கும்

aren
27-03-2009, 07:02 AM
அதே மாதிரி ஒரு கோச்சுக்குப் பதிலாக நான்கு கோச்சுகளையும் சேர்க்கலாமா?

இது ஒரு பைத்தியக்காரத்தனம். ஒரு அணியை சிறப்பாக நடத்திட ஒரு தலைமை வேண்டும். பலர் தலைவராக இருந்தால் சரியாக வராது.

அமரன்
27-03-2009, 09:02 AM
பல கேப்டன்கள் இருந்தால் பிரச்சனைதான்....


மிக சரி

ஒரு முதலாளிக்கு எத்தனை தொழிலாளி வேண்டுமானால் இருக்கலாம்

ஆனால்

ஒரு தொழிலாளிக்கு ஒரு முதலாளி இருந்தால்தான் நிர்வாகம் சிறக்கும்

ஒரு நேரத்தில்தானே... மிகச்சரி.

பா.ராஜேஷ்
01-04-2009, 05:27 AM
ஆனால் இன்று மீண்டும் கங்குலி தான் காப்டன் என்று ஷாருக்கான் அறிவித்து விட்டாரே!

ஆ.ஜெயஸ்ரீ
01-04-2009, 05:51 AM
திறமை இருப்பதாக கருதி அறிவித்து இருப்பாரோ!

பரஞ்சோதி
01-04-2009, 08:25 AM
மிக சரி

ஒரு முதலாளிக்கு எத்தனை தொழிலாளி வேண்டுமானால் இருக்கலாம்

ஆனால்

ஒரு தொழிலாளிக்கு ஒரு முதலாளி இருந்தால்தான் நிர்வாகம் சிறக்கும்


நன்றி ஜாக், மிக அருமையாக சொல்லியிருக்கீங்க. :icon_b:

இங்கே சொல்லியதோடு விடாமல் ஷாருக்கிடமும் சொல்லிட்டீங்க போலிருக்குதே :)

நேசம்
01-04-2009, 01:49 PM
கங்குலியிடம் கொடுப்பது சரியானது.