PDA

View Full Version : இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஸ்பெஷல் பிரின்டிங்



பா.ராஜேஷ்
26-03-2009, 06:19 AM
வெப் பேஜ் ஒன்றை பிரிண்ட் செய்கையில் ஹெடரும் புட்டரும் பிரிண்ட் ஆவது நமக்கு எரிச்சலைத்தான் கொடுக்கும் என்பது உண்மை. ஏனென்றால் அது நமக்குத் தேவை இல்லையே. ஆனால் இதனை நமக்குத் தேவையான ஒன்றாக மாற்றி பிரிண்ட் செய்தால் அது நமக்கு வசதியாகத்தான் இருக்கு. எனினும் இங்கு இதனை முழுமையாக எப்படி நீக்கலாம் என்பதனையும் அதனை எப்படி பயன்படுத்தலான் என்பதனையும் பார்க்கலாம். ஹெடர் மற்றும் புட்டரை எப்படி அச்சிலிருந்து நீக்கலாம் என்று பார்க்கலாம்.


1. Print Preview விற்கு முதலில் செல்லவும். இங்கு உள்ள Turn headers and footers on or off,"என்ற ஐகானில் கிளிக் செய்திடவும்.

http://img.dinamalar.com/data/more_pic_gallery/cmalarnews_98470705748.jpg

2. இதை நிரந்தரமாக நீக்க Page Setupஆப்ஷன் ஐகானில் கிளிக் செய்திடவும். இங்கு ஒரு டயலாக் விண்டோ கிடைக்கும்.

http://img.dinamalar.com/data/more_pic_gallery/cmalarnews_814455748.jpg

3. இங்கு ஹெடர் மற்றும் புட்டர் என்ற பிரிவுகளில் நீளமான செவ்வக டெக்ஸ்ட் பாக்ஸ் கிடைக்கும். இதில் உள்ள டெக்ஸ்ட்டை நீக்கிவிட்டால் எப்போதும் ஹெடரும் புட்டரும் அச்சாகாது.

http://img.dinamalar.com/data/more_pic_gallery/cmalarnews_71706789732.jpg

4.இதனை உங்கள் விருப்பப்படி அமைக்க பல வழிகள் உள்ளன. அவற்றை இங்கு பட்டியலிடுகிறேன். &w விண்டோவின் தலைப்பு அச்சாகும்.

http://img.dinamalar.com/data/more_pic_gallery/cmalarnews_89483278990.jpg


&u இணையப் பக்கத்தின் முகவரி


(URL)அச்சாகும்.


&d சுருக்கமாக தேதி அச்சாகும்.


&Dதேதி விரிவாக அச்சில் கிடைக்கும்.


&t நேரம் வழக்கமான கடிகாரத்தில் உள்ளது போல அச்சாகும்.


&T24மணி நேர பார்மட்டில் நேரம் அச்சாகும்.


&pஅந்த பக்க எண் கிடைக்கும்.


&P மொத்த பக்க எண்கள் அச்சடிக்கப்படும்


&b அடுத்த டெக்ஸ்ட் வலது பக்கம் அலைன் ஆகும்.


&b[TEXT]&b : டெக்ஸ்ட்டைங்சி என்ற குறியிட்டிற்குள்ளாக அமைத்தால் அது டெக்ஸ்ட்டை மையப்படுத்தும்.


&&: ஒரு ஆம்பர்ஸன்ட் (-) அடையாளம் அச்சாகும்.


இந்த குறியீடுகளை உங்கள் வசதிப்படி டெக்ஸ்ட்டுடன் இணைத்தால் நமக்கு வசதியான வாசகங்கள் தகவல்களோடு பிரிண்ட் ஆகும். எடுத்துக்காட்டாக I printed these &P pages on &d at &t என அமைத்தால் I printed these 23 pages on 3/26/ 2009 at 11:48amஎன்ற டெக்ஸ்ட் பிரிண்ட் ஆகும்.





====================================
நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்
====================================