PDA

View Full Version : கவிதையும் விளக்கமும்!!



umakarthick
25-03-2009, 12:33 PM
1.

கருமேகம் சூழ்ந்து
காற்றும் கூட குளிர்ந்து
பொழுது கொஞ்சம் சாய
புத்தி மெல்ல மயங்க
முதல் துளிக்கு ஏங்கி
அண்ணாந்து வான் பார்க்கையில்
ஏமாற்றிச் செல்கிறது
ஏதோ நினைத்துக்கொண்ட மழை.

-கார்த்திகா

2.
வரிசையாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
நாய் பொம்மைகளில்
குழந்தை விளையாடி விட்டு
வைத்துச் சென்ற
பொம்மையின் முகத்தில் மட்டும்
கூடுதல் சிரிப்பு.


3.
அம்மாவின் கை பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை.
சீராகப் போய்க் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது.

4.
குளிர்பதன வோல்வோ பஸ்ஸில் இருந்து
வெளியேற முடியாமல்
கண்ணாடிகளில் முட்டி முட்டி
தடுமாறிக் கொண்டிருக்கிறது
பட்டாம்பூச்சி.
சிக்னலில் பஸ் நின்றபோது
திறக்க முடியாத ஜன்னலில்
செய்தித்தாள் வாங்கச சொல்லி
கண்ணாடியை தட்டுகிறான்
சிறுவன்.

- முகுந்த நாகராஜன்(2,3,4)


மேல் உள்ள கவிதைகளுக்கும் விளக்கம் தேவையில்லை..படித்த இடங்கள்

http://www.veenaapponavan.blogspot.com/
http://www.uyirmmai.com

nandabalan
11-04-2009, 02:05 AM
முதல் இரண்டாவது கடைசி வெகு அருமை.

அறிஞர்
15-04-2009, 08:14 PM
நல்ல கவிதைகள்.. நன்றி கார்த்திக்..

vairabharathy
16-04-2009, 08:22 AM
மெழுகுவர்த்தி

தனக்காக அல்ல...
தன் இறப்புக்குப் பின்
இவ்வறை
இருட்டாகுமேயென
இத்தாய் அழுகிறாள்...

ஆமாம்...
வெண்ணிலாவை
விழுங்கிக் கொண்டிருக்கிறது
இச்சு10ரிய சுடர்...

எந்த
இராமன் சந்தேகித்தான்
இக்குலமகள்
தீக்குளிக்கிறாள்...

அய்யகோ!
இது
வளர்பிறையேயில்லா
வஞ்சிக்கப்பட்ட நிலவோ...

என்ன வியப்பு...
இந்த உடல்
எரிவதற்காக
எழுந்து நிற்கிறதே...

இது
இல்லறக் கடலின்
கலங்கரை விளக்கம்...

தன்
வேர்வையிலேயே
வேரூன்றியெரியும்
விருட்சம்...

சட்டம் வந்தும்
'சதி" ஒழியவில்லை
இந்த ரதி
எரிகிறாளே
என்ன நியாயம்..?
அழுகின்ற
இவ்வொற்றை நரம்பு
ஜுவனின்
அழகான கண்களெங்கே..?

மீண்டும்
'இருட்டறையில்
ஓர்
துயரச் சம்பவம்...!"

மெழுகுவர்த்தி !

நான்
அதிகம் நேசிக்கும்
அஃறிணையில்
இதுவும் ஒன்று...!

தேய்மானத்திலும்
ஓர்
நம்பிக்கைத்
தீர்மானம் காட்டும்...

தன்னையே
அர்ப்பணிக்கும்
இன்னொரு
தாய்...

இதோ
தன்
உடலையிழந்தவாறு
ஆவியாகும்
சுடர் தேவிக்கு
இக்கவித்துளி
என்
கண்ணீர் அஞ்சலி...





http://my picture