PDA

View Full Version : சடங்கு!!!



umakarthick
25-03-2009, 12:31 PM
சடங்கான அன்னிக்கு மாரியக்கா
குச்சிக்குள்ளேயும் மஞ்சத் தண்ணிக்கும்
உட்கார மாட்டேன்னு பெருஞ்சண்டை போட்டா

புதுப்பிள்ளைய காத்துக்கருப்பேதும் அண்டிருக்கும்ன்னு
சொல்லி முட்டை ஓதி பேயோட்ட வந்த
கருப்பனையும் அடிச்சி விரட்டிபுட்டா

பிரவு கலியாணமாகி மெட்ராசு போனவ
அவ மவ சடங்கு கழிக்க ஊருக்கு வந்தா

தெருவ வளைச்சு பந்தல் போட்டு
மவள குத்த உட்கார வச்சு முத தண்ணிய
ஊத்தும் போது மாரியக்கா முவத்துல
எந்த சலனமும் இல்லை
அவ மவளும் அடம்புடிக்கல!!


எங்க ஊர் வழக்கில் ஒரு கவிதை..கவிதைன்னு இதை சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் இந்த மாதிரி விஷயங்களை சொல்ல இந்த வடிவும் தான் ஏதுவாயிருக்கிறது

பிரவு- பிறகு
குச்சி -ஓலைக்குடிசை

சுகந்தப்ரீதன்
25-03-2009, 02:30 PM
வழக்கு மொழியில் கவிதை நன்றாகவே இருக்கிறது கார்த்திக்..!!

சடங்குகளும் சம்பிரதாயங்களும் காலஓட்டத்துல கரைஞ்சு போகும்கிறதுக்கு நீங்க சொன்ன விசயம் ஒரு எடுத்துக்காட்டு...!! இப்ப அதையாவது செய்யுறாங்க... கொஞ்ச காலம் போனா அதையும் நிறுத்திடுவாங்க... அப்பவும் மறக்காம வழக்குமொழியில நீங்க ஒரு கவிதையை வழங்கணும் சரியா...??

அமரன்
26-03-2009, 07:18 AM
ஸ்தானம் மாறும் போது மனமும் மாறுகிறது.

ஒரு கட்டத்தில் தப்பென்றுபடுவது இன்னொரு கட்டத்தில் சரியெனப் படுகிறது. ஒரு சமயம் தேவையில்லையென ஆவது இனொருசமயம்தேவை ஆகுது.

இந்தக் கவிதையில் சடங்கு தேவையா என்பதை விட இந்த நிலைப்பாட்டு மாற்றம் மேலோங்கி வெளிப்படுவதாதப் படுகிறது.

விதம் விதமாகப் பூத்தாலும் வேர் முடிச்சுகளில் மாற்றம் நிகழ்வதில்லை. மாரியக்கா சொல்லுறதும் அதைத்தான்.

புதிதாய் ஒன்றைச் சந்திக்கும் போது பழகிப்பார்க்கத்தான் அதிகம் ஆசை எழும். அந்த மாதிரித்தான் மாரியக்கா மகளின் நிலையை காண்கிறேன். விடயத்தை முழுமையாக அறிந்திருந்தால் அவளும் முரண்டு பிடித்திருப்பாள்?!

பாராட்டுகள் உமாகார்த்திக்.

பூமகள்
26-03-2009, 07:24 AM
தன் மகள் திருமணத்துக்கு தயார் என்று தம்பட்டம் அடிக்கும் செயலாகவும்...

தாய்மாமன் சீர் வரிசையை இம்முறையில் வசூலிக்கும் வழியாகவும்...

குழந்தையின் விருப்பமோ வெறுப்போ அறியாமலேயே

நடந்து கொண்டு தான் இருக்கின்றன இவ்வகை சடங்குகள்...

பின் புலத்தில் இருக்கும் கலாச்சாரம்.... பிற்போக்காகவே தோன்றுகின்றது பல நேரம்...

இயற்கையின் நிகழ்வை.... ஊரறியச் செய்வது என்ன நியாயமென மனம் குமைகிறது சில நேரம்....

இயல்பாக இருத்தலிலேயே சமத்துவம் இருப்பதாக புலனாகிறது...

சடங்குகள் காணாது போகட்டும்..

--

வட்டார வழக்கில் அமைந்த கவிதை... கவிதைக் கரு சுமந்த செய்தி பொட்டியில் அறையும் நிஜம்...

பாராட்டுகள் கார்த்திக்.. :)

umakarthick
30-03-2009, 02:04 PM
வழக்கு மொழியில் கவிதை நன்றாகவே இருக்கிறது கார்த்திக்..!!

சடங்குகளும் சம்பிரதாயங்களும் காலஓட்டத்துல கரைஞ்சு போகும்கிறதுக்கு நீங்க சொன்ன விசயம் ஒரு எடுத்துக்காட்டு...!! இப்ப அதையாவது செய்யுறாங்க... கொஞ்ச காலம் போனா அதையும் நிறுத்திடுவாங்க... அப்பவும் மறக்காம வழக்குமொழியில நீங்க ஒரு கவிதையை வழங்கணும் சரியா...??

வேணும்னு சொல்றீங்க வேண்டாம்னு சொல்றீங்களா சடங்கு ?? :)

umakarthick
30-03-2009, 02:04 PM
நன்றி மலர்(பூமகள்) நலமா???

umakarthick
30-03-2009, 02:04 PM
நன்றி அமரன் என் கண் முன்னே நடந்த நிழச்சி இது :)

பூமகள்
31-03-2009, 02:46 AM
நன்றி மலர்(பூமகள்) நலமா???
பூமகள் நலம்.. :)

கார்த்திக்.. நலமா?
நிறைய படைப்புகள்.. கலக்கல் தான்.. அசத்து அசத்து கார்த்திக். :)

வசீகரன்
31-03-2009, 05:10 AM
குழந்தையின் விருப்பமோ வெறுப்போ அறியாமலேயே

நடந்து கொண்டு தான் இருக்கின்றன இவ்வகை சடங்குகள்...

பின் புலத்தில் இருக்கும் கலாச்சாரம்.... பிற்போக்காகவே தோன்றுகின்றது பல நேரம்...

இயற்கையின் நிகழ்வை.... ஊரறியச் செய்வது என்ன நியாயமென மனம் குமைகிறது சில நேரம்....

இயல்பாக இருத்தலிலேயே சமத்துவம் இருப்பதாக புலனாகிறது...

சடங்குகள் காணாது போகட்டும்..


ஆம்........ இன்னும் சங்கு... சாங்கியம்..... சம்சாரம்ன்னுகிட்டு
நம்ம நாட்டில் இதற்கெல்லாம்
நிச்சயமாக ஒரு கட்டுப்பாடுகள் கிடயவே கிடையாது................
இதற்கெல்லாம் ஒரு விழா தேவைதானா..............
கொஞ்சம் யோசித்து பாருங்கள் மக்கா.......

வழக்காடல் வரிகளில் கவியமைத்து தொகுத்துள்ள நண்பர் கார்த்திக்
அவர்களுக்கு பாராட்டுக்கள்.....

umakarthick
03-06-2009, 01:12 PM
நன்றி வசீகரன்

ஓவியா
03-06-2009, 11:45 PM
இங்கு ஐரோப்பாவில் இதுபோல் சடங்குக்கு 5***** ஹால் எடுத்து, மக்களை கூப்பிட்டு தட்டு தட்டா சப்பாட்டை கொடுத்து, சேலை கொடுத்து .... அப்படி இப்படீனு என்று செலவு சும்மா தண்ணியாட்டம் ஓடுது.

மைக் செட், பெண் அலங்காரம், விடுதி வடிவமைப்பு என்று இதில் கறையும் பணம்.. ஊஞ்சலில் வைத்து தாலாட்டுவது அப்படி இப்படி என்று அப்பாடா பல ஆயிரங்கள் செலவகும்.

அதிலேயும் சுமாரா ஆயிரம்பேருக்கு மேல் வருவாங்கள் என்று மார்த்தட்டி கணக்கு எடுக்கறாங்க.

நான் விமர்ச்னமாக செய்தேனா இல்ல அவர்கள் சிறப்பாக செய்தார்களா என்று அலசல் வேறு.

பெண் பிள்ளைகளோ எனக்கு முன்பா உனக்கு முன்பா என்று 10 வயதிலே தோழிகளுடன் ஏக்கங்களை பரிமாறிக்கொள்கின்றன!!

காரணம் இல்லாமல் தோரணங்கள்.

சரி சம்பிரதாயமென்றாலும் இப்படி ஆடம்பரமாகவா செய்ய வேண்டுமென்று கேட்க தோன்றுகிறது.


காலம் எப்படியெல்லாம் மாறிவிட்டது, மரியாக்காவின் அறியாமையா இல்லை அவள் பிள்ளையின் தேர்ச்சியா!!! சிறப்பான கவிதை. :icon_b:

கா.ரமேஷ்
04-06-2009, 06:46 AM
சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா என்பதில் இல்லை வாழ்க்கை ... ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித மன மாற்றம் வித்தியாசமாகத்தான் படுகிறது.ஒருவயதில் பிடிக்காதது இன்னொரு வயதில் பிடித்து போவதுதான் வாழ்க்கையின் எதார்த்தம்.

நல்ல வழக்கு மொழி கவிதை தொடருங்கள்...

lenram80
08-07-2009, 03:37 PM
இளைஞிக்கும் (அவளே) தாய்க்கும் உள்ள மன வேறுபாடு 180 டிகிரி!

எனக்குத் தெரிந்து எத்தனையோ சம்பரதாயங்கள் எங்கள் ஊரிலே காணாமல் போய்விட்டன. இந்த சடங்கும் ஓர் நாள்....

உமாகார்த்திக்கு - என் கன்னிக் கிராமியத் தமிழின் (மஞ்சள் நீராட்டு) வாழ்த்த்துகள்!!

ambulimama
08-07-2009, 04:11 PM
அழகான கிராமியக் கவி தந்த கார்த்திக்குக்கு வாழ்த்துக்கள் ..