PDA

View Full Version : சேரி நாய் கோடீஸ்வரன்!



lenram80
24-03-2009, 12:42 PM
இருவர் பெருமை விண்ணில் பறந்தது!
சேரியில் கூட கோடீஸ்வரன் கொண்ட
இந்தியாவின் பெருமை காற்றில் பறந்தது!

அறிஞர்
24-03-2009, 03:46 PM
சேரி நாய் படத்தின் விளைவா....
--------
இருவர் பெருமை என்பது...
விருது பெற்ற இரு இந்தியரையா....
---
விண்ணில் பறந்தது.. ஒரு வகை... (இருவரின் புகழ்)
காற்றில் பறந்தது ஒரு வகை... (இந்தியாவின் மானம்)

இளசு
24-03-2009, 07:48 PM
வாங்க லெனின்..

கோபம் எப்போ வரும்?
கொஞ்சமாவது தப்பு நம் மேல் இருந்தால் வரும்..

சேரி நம் தப்பு
மதக்கலவரம் நம் தப்பு
தாஜ்மஹால் எதிரில் திருடல் நம் தப்பு
வெளிநாட்டுப் பயணி உடைமை கையாடல் நம் தப்பு
சிறுவரை ஊனப்படுத்தி பிச்சை வாங்க வைத்து வசூலிப்பது நம் தப்பு
மாஃபியா, துப்பாக்கி, வன்முறை நம் தப்பு..

எனக்கும் கோபம் வந்தது - படம் பார்த்து..
இதை நாமே படமாக்கி, நமக்குள் திரையிட்டுக்கொண்டால் கோபம் இத்தனை வந்திருக்காது..

அந்நியன் காட்சிப்படுத்திவிட்டான்..
இந்தியாவில் இருப்பதைத்தான் காட்டினான்..
ஆனால் அவன் காட்டியிருப்பது மட்டும்தான் இந்தியாவா?

படைப்பாளியைக் குறை சொல்ல எனக்கு முடியாது..
கோபம், ரோஷம் கொள்ள என்னால் முடியும்..

குறைகளைக் களைய முயல்வோமா??????????

( கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நடத்துபவர் - தம் பெருமை தக்கவைக்க
கழிவறைக் கதவில் தவறான விடை எழுதுவது மட்டும்
கற்பனை எனலாமா?)

aren
25-03-2009, 02:05 AM
எனக்கும் கோபம் வந்தது. அதனாலேயே படத்தை பார்க்கக்கூடாது என்றிருந்தேன்.

ஆனால் கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், அவர்கள் ஒன்றும் கற்பனையாக எதனையும் காட்டிவிடவில்லை என்பது உண்மையே.

படைபபளியானவன் ஒரு கருவை மட்டுமே எடுத்டுக்கொண்டு அதை மெருகேற்றி கதையாக கொண்டு வருவான். அதைப் பார்க்கும்பொழுது இந்தப் படத்தின் கரு ஒரு சேரியில் இருப்பவன் கோடீஸ்வரனாகிரான். அவன் எப்படி கோடீஸ்வரனாகிறான் என்பதே கதை.

இதனால் அவனை சுற்றி அதாவது சேரியைச் சுற்றியே கதையும் நகருகிறது.

நம் நாட்டில் இல்லாதது எதையும் காட்டவில்லை என்பதே என் கருத்து.

முதலில் இந்த சேரிகளை அகற்றுவதற்கு நாமும் அரசாங்கத்துடன் ஒத்துழைப்போம்,

ஜாக்
25-03-2009, 02:41 AM
என்னை பொறுத்தவரை படத்தின் எந்த ஒரு காட்சியும் மிகப்படுத்தியோ இல்லை இந்தியாவில் நடக்காததையோ காட்டிவிடவில்லை உண்மை எப்போதுமே வலிக்கத்தான் செய்யும்

நமது நாட்டின் உள்ள குறைகளை ஒரு அன்னியன் படம் எடுத்துகாட்டிவிட்டானே என்று வருத்தப்படுவத்துக்கு பதிலாக அந்த குறைகளாஈ எப்படி நிவர்த்தி செய்யலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து

சுகந்தப்ரீதன்
25-03-2009, 12:34 PM
இருவர் பெருமை விண்ணில் பறந்தது!
சேரியில் கூட கோடீஸ்வரன் கொண்ட
இந்தியாவின் பெருமை காற்றில் பறந்தது!கவிதை நறுக்கென்று இருக்கிறது... வாழ்த்துக்கள் லெனின் அண்ணா...!!:icon_b:

ஆனால் கடைசி வரிதான் சற்றே சறுக்கிக்கொண்டு செல்கிறது...!! பின்ன என்னவாம் இருந்தாதான பறக்கமுடியும்... இல்லாததைப் பற்றியெல்லாம் கற்பனை பண்ணி இருக்கீங்க... ஓ... கவிதைக்கு கற்பனைத்தானே முக்கியம்.. அப்படித்தானே அண்ணா??:icon_rollout:

lenram80
25-03-2009, 12:59 PM
கருத்திட்ட அறிஞர், இளசு, ஆரென், ஜாக், சுகந்தப்ரீதன் - நன்றி....

இதோ என் பங்குக்கு...
வன்முறை எந்த நாட்டில் இல்லை? வறுமை எந்த நாட்டில் இல்லை? பிரிவினைவாதம் எந்த நாட்டில் இல்லை? ஒரு மாதம் சம்பளம் இல்லை என்றால், தெருவுக்கு வந்து விடும் மக்கள் வளர்ந்த நாடுகளில் கூட இருக்கிறர்கள். அமெரிக்காவில் இல்லாத உள் நாட்டு துப்பாக்கிச் சண்டையா? இவ்வளவு ஏன்? சூறாவளி கத்ரினா வந்த போது,
மக்களை ஒரு இடத்தில் மொத்தமாக கூடாரத்தில் இருக்க வைத்த போது, இங்கே கற்பழிப்பு நடந்திருக்கிறது.

மனிதன் எங்கெல்லாம் இருக்கிறானோ, அங்கெல்லாம் தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்தியாவை சொர்க்க பூமி என்று சொல்ல வரவில்லை.
நீங்கள் எல்லோரும் சொல்வது போல, நம் நாட்டில் நடப்பதை அப்படியே காட்டிவிட்டதற்காக ஒரு பிரிட்டிஸ்காரன் பெருமை படலாம். நாம் எப்படி பெருமை படுவது? இந்த படத்தில் கதாநாயகன் வெல்வது தான் கற்பனையே ஒழிய, அவன் சின்ன வயது வாழ்க்க முறையில்
கற்பனை இல்லை. எனவே, இந்த படத்டை பார்த்த போது, ஒரு திரைப் படம் பார்க்கிறோம் என்ற நினைவே போய்,இந்தியர்கள் எல்லோரும் மூன்றாம் தர வாழ்க்கையை வாழ்கிறோம் என்ற நினைப்பே வந்த்து.

உயர் மட்ட அரசியல் வாதி தவிர, "இந்தியனாய் பிறந்ததற்கும் இருப்பதற்கும் பெருமை கொள்வோம்" என்ற வாசகம் உண்மையிலே சரியா?
வெளிநாடுகளில் ஒரு குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு கிடக்கிற வசதிகள் அதே நேரத்தில் நமது நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கிறதா? மருத்துவம், உணவு, உள்கட்டமைப்பு வசதிகள் (மின்சாரம், போக்குவரத்து...) வேலைவாய்ப்பு போன்றவற்றில் நாம் எங்கே இருக்கிறோம்?

கணிப்பொறி துறையை விட்டுவிட்டால் இந்தியர்களில் எவ்வளவு சதவீதம் நல்ல துறைகளில் வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள்?
வெளிநாடுகளில் என்ன படித்தாலும் வேலை. அதனால் பொறியியல் படிக்க வேண்டியது கட்டாயம் இல்லை. ஆனால், இந்தியாவில்
தொழில் துறை படிப்புகள் படித்தே ஆகவேண்டும். அதனால் தன் இந்தியர்களுக்கு வெளி நாடுகளில் வாய்ப்பு. இதுவும் எத்தனை நாள் போகும் என்று தெரியவில்லை.

உண்மையை காட்டி விட்டானே என்ற கோபம் ஒரு பக்கம், என்று இந்த நிலை மாறும் என்ற ஆதங்கம் மறு பக்கம்...

என்றைக்கு தான் இந்தியன் என்பதில் உண்மையிலே பெருமை படப் போகிறோம்? கைடெக் சிடி வாக் பில்லேனியர் - எப்போது வரும்?
வரும் நாளை எதிர்பார்த்து.. அடுத்த தேர்தல் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் 120 கோடி சேரி நாய் கோடிஸ்வரரர்கள்.

ஜாக்
25-03-2009, 01:46 PM
அமைதி அமைதி லெனின்:)

உண்மையை காட்டி விட்டானே என்ற கோபம் ஒரு பக்கம், என்று இந்த நிலை மாறும் என்ற ஆதங்கம் மறு பக்கம்....
நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆதங்கமே உங்களை இந்த அளவுக்கு சூடேத்தி இருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கும் அந்த ஆதங்கம் இருக்கு லெலின் ஆனால் என்னுடைய வெளிப்பாடு வேறு மாதிரி இருக்கிறது

ஏங்க உங்க வீடு சுத்தமாக இல்லை என்று ஒருவர் கேட்டால் நமது வீட்டை சுத்தம் செய்யாமல் எல்லோருடைய வீடும் அசுத்தமாக இருக்கு அவங்கல கேட்ப்பதை விட்டுடு என்னை வந்து கேட்க்கிராயே என்று பதில் சொன்னால் அதுக்கு என்ன அர்த்தம்



என்றைக்கு தான் இந்தியன் என்பதில் உண்மையிலே பெருமை படப் போகிறோம்? கைடெக் சிடி வாக் பில்லேனியர் - எப்போது வரும்?.
என் வீடு அழுக்காக பாழடைந்துதான் இருக்கிறது ஒத்து கொள்கிறேன் இருந்தாலும் இந்திய வீட்டு மைந்தன் என்று சொல்லி கொள்ள பெருமை படுகிறேன் காலம் மாறும் உங்கள் எண்ணம் ஈடேரும் நாள் வெகு தூரம் இல்லை நம்பிக்கையோடு அதற்க்கான செயல்பாட்டில் இறங்குவோம் நண்பரே